Select Page

கட்டுருபன்கள்


திருக்குற்றாலக் குறவஞ்சி - நூல் முழுமையும் இங்கே சொடுக்கவும் திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்களில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 1
ஆக்க 1
ஆக்கம் 1
ஆக்கிக்கொண்டேனே 1
ஆக 2
ஆகடியம் 1
ஆகம் 1
ஆகாசகங்கை 1
ஆகாசமார்க்கம் 1
ஆகாது 1
ஆகாதோ 1
ஆகி 2
ஆகிய 1
ஆகில் 1
ஆகு 1
ஆகு_வாகனத்தார்க்கும் 1
ஆங்கு 1
ஆச்சுது 1
ஆச்சுதே 1
ஆசார 3
ஆசை 8
ஆசைகொண்டாய் 1
ஆசைகொண்டார் 2
ஆசைகொண்டு 1
ஆசைகொண்டேன் 1
ஆசைப்பட்டு 1
ஆசையால் 1
ஆசையானேன் 1
ஆசையினால் 1
ஆட்கடியன் 1
ஆட்கொண்டார் 1
ஆட்டவேண்டாமோ 1
ஆட்டுவிக்கும் 1
ஆட 9
ஆடக 1
ஆடல் 1
ஆடவர் 1
ஆடி 2
ஆடிக்கொள்வார் 1
ஆடிக்கொள்வேனடா 1
ஆடிய 1
ஆடில் 1
ஆடினளே 2
ஆடு 2
ஆடுகிறாய் 1
ஆடும் 8
ஆடுமோ 1
ஆண்டவர் 1
ஆண்டவனை 2
ஆண்டு 1
ஆண்டு-தன்னில் 1
ஆண்பிள்ளை 1
ஆணாகி 1
ஆணையால் 1
ஆத்துமம் 1
ஆதி 1
ஆதிநாள் 1
ஆதியரும் 1
ஆதினத்து 1
ஆந்தை 1
ஆந்தையும் 1
ஆபரணம் 1
ஆம்பல் 1
ஆம்பலும் 1
ஆமே 1
ஆய் 1
ஆயிர 1
ஆயிரம் 3
ஆயினாளே 1
ஆயினும் 1
ஆயுதங்கள் 1
ஆர் 14
ஆர்க்கவே 1
ஆர்க்கும் 1
ஆர 3
ஆரணம் 1
ஆராலும் 1
ஆரிய 1
ஆரியங்காவா 1
ஆரியநாட்டான் 1
ஆரியநாட்டினர் 1
ஆரியநாட்டு 1
ஆரியநாடு 5
ஆரியநாடே 4
ஆரியம் 1
ஆரும் 3
ஆரூர் 1
ஆரோ 1
ஆலடிப்பற்றும் 1
ஆலயம் 3
ஆலவட்டம் 1
ஆலா 1
ஆலாவும் 2
ஆவர் 1
ஆவல் 1
ஆவி 2
ஆவிதான் 1
ஆவியாவி 1
ஆவையோ 1
ஆழி 1
ஆளாய் 1
ஆளி 1
ஆற்றாமல் 1
ஆற்றாமல்போன 1
ஆற்றில் 1
ஆற்றுக்கால் 1
ஆற்றை 1
ஆற 1
ஆறாத 1
ஆறு 5
ஆறுதலை 1
ஆறே 1
ஆறை 1
ஆன் 1
ஆன 2
ஆனது 2
ஆனவர் 1
ஆனால் 1
ஆனான் 1
ஆனேனிலையே 1
ஆனை 6
ஆனை_வாகனத்தானை 1

ஆ (1)

ஆ என்று ஒருக்கால் இரு கால் உதைப்பள் அதுக்கு கிடந்து கொதிக்குது என் பேய் மனம் – குற்-குறவஞ்சி:2 330/4

மேல்

ஆக்க (1)

ஆக்க பொறுத்தவர் ஆற பொறார்களோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 396/2

மேல்

ஆக்கம் (1)

ஆக்கம் வருகுது பார் வெள்ளச்சி அம்மே – குற்-குறவஞ்சி:2 203/2

மேல்

ஆக்கிக்கொண்டேனே (1)

திங்கள்கொழுந்தையும் தீக்கொழுந்து ஆக்கிக்கொண்டேனே
சங்கக்குழையாரை சங்க மறுகினில் கண்டு இரு – குற்-குறவஞ்சி:2 74/2,3

மேல்

ஆக (2)

அருள் கண் பார்வையால் என் அங்கம் தங்கம் ஆக
உருக்கிப்போட்டார் கண்டவுடனே தான் – குற்-குறவஞ்சி:2 52/1,2
நல்ல மேற்குலத்தான் இந்த நல் நகர் தலத்தான் ஆக
வல்லியே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே – குற்-குறவஞ்சி:2 207/3,4

மேல்

ஆகடியம் (1)

ஆகடியம் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான் – குற்-குறவஞ்சி:2 65/1

மேல்

ஆகம் (1)

ஆகம் எல்லாம் பசந்தேனே பெற்ற அன்னை சொல்லும் கசந்தேனே – குற்-குறவஞ்சி:2 55/3

மேல்

ஆகாசகங்கை (1)

அன்னை தயவுடை ஆகாசகங்கை அடுக்களை காண புறப்படும் நேர்த்தி போல் – குற்-குறவஞ்சி:2 266/3

மேல்

ஆகாசமார்க்கம் (1)

ஆற்றை நான் கடத்திவிட்டால் ஆகாசமார்க்கம் ஓட – குற்-குறவஞ்சி:2 341/1

மேல்

ஆகாது (1)

பிறந்தாலும் பேராசை ஆகாது அஃது அறிந்தும் – குற்-குறவஞ்சி:2 89/3

மேல்

ஆகாதோ (1)

அடியேன் சகியாய் இருக்கையிலே அது நான் பயின்றால் ஆகாதோ
கொடியே மதுரம் பழுத்து ஒழுகு கொம்பே வம்பு பொருத முலை – குற்-குறவஞ்சி:2 72/2,3

மேல்

ஆகி (2)

அரி கூட அயன் ஆகி அரன் ஆகி அகலாத – குற்-குறவஞ்சி:2 406/1
அரி கூட அயன் ஆகி அரன் ஆகி அகலாத – குற்-குறவஞ்சி:2 406/1

மேல்

ஆகிய (1)

செஞ்சொல் மா முனி ஏகிய நாடு செங்கண்மால் சிவன் ஆகிய நாடு – குற்-குறவஞ்சி:2 159/3

மேல்

ஆகில் (1)

புரிநூலின் மார்பன் இவன் அயன் என்பார் அயன் ஆகில்
பொங்கு அரவம் ஏது தனி சங்கம் ஏது என்பார் – குற்-குறவஞ்சி:2 17/1,2

மேல்

ஆகு (1)

ஆகு_வாகனத்தார்க்கும் தோகை_வாகனர்க்கும் – குற்-குறவஞ்சி:2 185/2

மேல்

ஆகு_வாகனத்தார்க்கும் (1)

ஆகு_வாகனத்தார்க்கும் தோகை_வாகனர்க்கும் – குற்-குறவஞ்சி:2 185/2

மேல்

ஆங்கு (1)

பின்னும் ஆங்கு அவர் மூரலை வென்று பிரியும் காலத்தில் பெண்மையை வெல்ல – குற்-குறவஞ்சி:2 157/3

மேல்

ஆச்சுது (1)

வைபவம் ஆச்சுது தானே – குற்-குறவஞ்சி:2 324/4

மேல்

ஆச்சுதே (1)

நித்திரை-தான் ஒரு சத்துரு ஆச்சுதே மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/2

மேல்

ஆசார (3)

காசு பறித்திடும் வேசையர் ஆசார கண்ணிக்குள்ளே படும் காமுகர் போலவும் – குற்-குறவஞ்சி:2 301/2
ஆசார ஈன துலுக்கன் குதிரை அடி ஒட்டு பாறை அடி ஒட்டினால் போலும் – குற்-குறவஞ்சி:2 301/3
ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசார கள்ளர் போல் நாரை திரியுது – குற்-குறவஞ்சி:2 302/1

மேல்

ஆசை (8)

பவளமலைதனில் ஆசை படர்ந்து ஏறி கொழுந்துவிட்டு பருவமாகி – குற்-குறவஞ்சி:1 4/2
கனக தம்புரு கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/1
அரம்பை தேச வில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் பிறர் – குற்-குறவஞ்சி:2 34/1
வரைப்பெண்ணுக்கு ஆசை பூண்டு வளர் சங்க மறுகினூடே – குற்-குறவஞ்சி:2 78/3
நல் நகர் திருக்குற்றாலநாதர் மேல் ஆசை பூண்டு – குற்-குறவஞ்சி:2 86/1
ஆசை சொல கூடாது கண்டாய் சகியே – குற்-குறவஞ்சி:2 105/2
வங்கார பவனி ஆசை பெண்களுக்குள்ளே – குற்-குறவஞ்சி:2 233/2
அடிக்கொரு நினைவு ஏன் சிங்கா ஆசை பேய் உனை விடாது – குற்-குறவஞ்சி:2 317/3

மேல்

ஆசைகொண்டாய் (1)

பசந்ததோர் பசப்பும் கண்டாய் பரமர் மேல் ஆசைகொண்டாய்
நிசம் தரும் திருக்குற்றால நிரந்தரமூர்த்தி உன்-பால் – குற்-குறவஞ்சி:2 82/2,3

மேல்

ஆசைகொண்டார் (2)

கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே – குற்-குறவஞ்சி:2 80/2
கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும் ஆசைகொண்டார் மானே – குற்-குறவஞ்சி:2 80/2

மேல்

ஆசைகொண்டு (1)

ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மான் என்பார் விளையாடாள் பாடாள் வாடாமாலை சூடாள் காண் என்பார் – குற்-குறவஞ்சி:2 57/1

மேல்

ஆசைகொண்டேன் (1)

நல் நகரில் ஈசருக்கு நான்தானோ ஆசைகொண்டேன் மானே பல – குற்-குறவஞ்சி:2 80/1

மேல்

ஆசைப்பட்டு (1)

தான் ஆசைப்பட்டு முன் கொண்ட கொக்கு எல்லாம் தரிகொண்டுதில்லை நரி கொண்டுபோச்சுது – குற்-குறவஞ்சி:2 289/2

மேல்

ஆசையால் (1)

ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்ன பேட்டை – குற்-குறவஞ்சி:2 308/3

மேல்

ஆசையானேன் (1)

சலுகைக்காரர்க்கு ஆசையானேன் இப்போது – குற்-குறவஞ்சி:2 89/4

மேல்

ஆசையினால் (1)

வேலான கண்ணியர் ஆசையினால் கீழும் மேலும் திரிந்திடும் வேடிக்கைக்காரர் போல் – குற்-குறவஞ்சி:2 302/2

மேல்

ஆட்கடியன் (1)

ஆட்கடியன் போல் குறைந்தாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/2

மேல்

ஆட்கொண்டார் (1)

ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சிலபேர் சகியே – குற்-குறவஞ்சி:2 99/2

மேல்

ஆட்டவேண்டாமோ (1)

பெட்டக பாம்பை பிடித்து ஆட்டவேண்டாமோ சிங்கி இந்த – குற்-குறவஞ்சி:2 385/1

மேல்

ஆட்டுவிக்கும் (1)

ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார் நல் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 338/2

மேல்

ஆட (9)

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்று ஆட இடை – குற்-குறவஞ்சி:2 40/1
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்து ஆட இரு – குற்-குறவஞ்சி:2 40/2
கொங்கை கொடும் பகை வென்றனம் என்று குழைந்து குழைந்து ஆட மலர் – குற்-குறவஞ்சி:2 40/3
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டு ஆட குழல் – குற்-குறவஞ்சி:2 41/1
சூடக முன்கையில் வால் வளை கண்டு இரு தோள் வளை நின்று ஆட புனை – குற்-குறவஞ்சி:2 42/1
மந்தர முலைகள் ஏசல் ஆட மகர குழைகள் ஊசலாட – குற்-குறவஞ்சி:2 46/1
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட – குற்-குறவஞ்சி:2 48/2
இரு பந்து குதிகொண்டு ஆட இரு பந்து முலைகொண்டு ஆட
ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும் – குற்-குறவஞ்சி:2 48/2,3
ஒரு பந்து கைகொண்டு ஆட ஒரு செப்பில் ஐந்து பந்தும் – குற்-குறவஞ்சி:2 48/3

மேல்

ஆடக (1)

ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்து பந்து ஆடினளே – குற்-குறவஞ்சி:2 42/4

மேல்

ஆடல் (1)

ஆடல் வளை வீதியிலே அங்கணர் முன் போட்ட சங்கம் அரங்குவீட்டில் – குற்-குறவஞ்சி:2 114/1

மேல்

ஆடவர் (1)

அம் நலார் மொழி-தன்னை பழித்தது என்று ஆடவர் மண்ணில் மூடும் கரும்பு – குற்-குறவஞ்சி:2 157/1

மேல்

ஆடி (2)

நல் நவவீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடி
பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய் – குற்-குறவஞ்சி:1 2/2,3
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழி கெண்டையாள் – குற்-குறவஞ்சி:2 33/2

மேல்

ஆடிக்கொள்வார் (1)

பாடிக்கொள்வார் எவர் ஆடிக்கொள்வார் எவர் சிங்கி நீதான் – குற்-குறவஞ்சி:2 395/1

மேல்

ஆடிக்கொள்வேனடா (1)

பாடிக்கொண்டால் போதும் ஆடிக்கொள்வேனடா சிங்கா – குற்-குறவஞ்சி:2 395/2

மேல்

ஆடிய (1)

நாடகம் ஆடிய தோகை மயில் என நல் நகர் வீதியிலே அணி – குற்-குறவஞ்சி:2 42/3

மேல்

ஆடில் (1)

கலந்து ஆடில் கழிநீராய் தொலைந்து ஓடும் பாபம் – குற்-குறவஞ்சி:2 173/2

மேல்

ஆடினளே (2)

ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்து பந்து ஆடினளே – குற்-குறவஞ்சி:2 42/4
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொன் பந்துகொண்டு ஆடினளே – குற்-குறவஞ்சி:2 43/4

மேல்

ஆடு (2)

நீடு மலை மயில் ஆடு மலை மதி சூடு மலை திரிகூடமலை குற – குற்-குறவஞ்சி:2 121/4
பின்னான தம்பியார் ஆடு மயிலையும் பிள்ளை குறும்பால் பிடித்துக்கொண்டு ஏகினார் – குற்-குறவஞ்சி:2 290/2

மேல்

ஆடுகிறாய் (1)

காந்தியாட்டம் ஆடுகிறாய் வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 64/4

மேல்

ஆடும் (8)

தெரிகொண்டு வித்தை ஆடும் சித்தரை எதிர்கொண்டாளே – குற்-குறவஞ்சி:2 48/4
ஆடும் இரு குழை தோடும் ஒரு குழல் காடும் இணை விழி சாடவே – குற்-குறவஞ்சி:2 121/1
ஆடும் அரவு ஈனும் மணி கோடி வெயில் எறிக்கும் – குற்-குறவஞ்சி:2 137/1
செல் இனங்கள் முழவு கொட்ட மயில் இனங்கள் ஆடும்
திரிகூடமலை எங்கள் செல்வ மலை அம்மே – குற்-குறவஞ்சி:2 148/1,2
கூர் வளம் பாடி ஆடும் குறவஞ்சி கொடியே கேளாய் – குற்-குறவஞ்சி:2 193/2
தார் ஆடும் குன்றி வடத்தை ஒதுக்கி தட மார்பு இறுக தழுவ வந்தால் அவள் – குற்-குறவஞ்சி:2 331/1
வார் ஆடும் கொங்கைக்கு சந்தனம் பூசாள் மறுத்து நான் பூசினும் பூசலாகாது என்பாள் – குற்-குறவஞ்சி:2 331/2
கண்டாடி துள்ளாடி கள் ஆடும் தும்பியை போல் – குற்-குறவஞ்சி:2 354/3

மேல்

ஆடுமோ (1)

வெட்டவெளியிலே கோடிப்பாம்பு ஆடுமோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 385/2

மேல்

ஆண்டவர் (1)

ஆண்டவர் குற்றாலர் சந்நிதி பெண்கள் – குற்-குறவஞ்சி:2 366/1

மேல்

ஆண்டவனை (2)

பனக அணி பூண்டவனை பக்தர்களை ஆண்டவனை
அனவரத தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 405/1,2
அனவரத தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன் – குற்-குறவஞ்சி:2 405/2

மேல்

ஆண்டு (1)

அன்பாய் வடகுண பாலில் கொல்லத்து ஆண்டு ஒரு நானூற்றிருபத்துநாலில் – குற்-குறவஞ்சி:2 197/1

மேல்

ஆண்டு-தன்னில் (1)

நல் நகர் குற்றாலம்-தன்னில் எங்கும் நாட்டும் எண்ணூற்றெண்பத்தேழு ஆண்டு-தன்னில்
பன்னக மா முனி போற்ற தமிழ் பாண்டியனார் முதல் சிற்றொடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/1,2

மேல்

ஆண்பிள்ளை (1)

பெண்பிள்ளை மேல் பொருது ஆண்பிள்ளை ஆவையோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/4

மேல்

ஆணாகி (1)

ஆணாகி பெண் விரகம் ஆற்றாமல்போன சிங்கன் – குற்-குறவஞ்சி:2 347/1

மேல்

ஆணையால் (1)

அண்ட கோடிகளை ஆணையால் அடக்கி – குற்-குறவஞ்சி:2 115/13

மேல்

ஆத்துமம் (1)

இ தனுவில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம் – குற்-குறவஞ்சி:1 6/3

மேல்

ஆதி (1)

ஆதி மறை சொன்னவனை அனைத்து உயிர்க்கும் முன்னவனை – குற்-குறவஞ்சி:2 409/1

மேல்

ஆதிநாள் (1)

ஆதிநாள் சுந்தரர்க்கு தூதுபோனவர் முன்னே – குற்-குறவஞ்சி:2 88/1

மேல்

ஆதியரும் (1)

கவனசித்தர் ஆதியரும் மவுனயோகியரும் – குற்-குறவஞ்சி:2 170/1

மேல்

ஆதினத்து (1)

ஆதினத்து மலைகள் எல்லாம் சீதனமா கொடுத்தோம் – குற்-குறவஞ்சி:2 151/2

மேல்

ஆந்தை (1)

மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சு நன்று அம்மே – குற்-குறவஞ்சி:2 204/2

மேல்

ஆந்தையும் (1)

வெள்ளை புறாவும் சகோரமும் ஆந்தையும் மீன்கொத்திப்புள்ளும் மரங்கொத்திப்பட்சியும் – குற்-குறவஞ்சி:2 268/1

மேல்

ஆபரணம் (1)

பணி ஆபரணம் பூண்ட பார்த்திபன் வந்தான் – குற்-குறவஞ்சி:2 227/2

மேல்

ஆம்பல் (1)

அவிழும் நறை பூம் கடப்பம் தாமரையும் ஈன்று ஒரு கோட்டு ஆம்பல் ஈன்று – குற்-குறவஞ்சி:1 4/3

மேல்

ஆம்பலும் (1)

அடி இணை மலரும் செவ் வாய் ஆம்பலும் சிவப்பினாளை – குற்-குறவஞ்சி:1 7/1

மேல்

ஆமே (1)

பாதம் நோமே நொந்தால் மனம் பேதம் ஆமே
பாதம் நோக நிற்பது ஏது பாவம் இனி – குற்-குறவஞ்சி:2 351/1,2

மேல்

ஆய் (1)

சந்திரரும் சூரியரும் வந்து இறங்கும் வாசல் கண்டு ஆய் மானே – குற்-குறவஞ்சி:2 79/4

மேல்

ஆயிர (1)

ஆயிர பேரியும் தென்காசியும் சுற்றி – குற்-குறவஞ்சி:2 277/3

மேல்

ஆயிரம் (3)

பந்தடிக்கும் பாவனையை பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே – குற்-குறவஞ்சி:2 44/4
ஆயிரம் கொக்குக்கு கண்ணியை வைத்து நான் அப்பாலே போய் ஒருமிப்பாய் இருக்கையில் – குற்-குறவஞ்சி:2 314/1
மா இரும் காகங்கள் ஆயிரம் பட்டு மறைத்து விறைத்து கிடப்பது போலவே – குற்-குறவஞ்சி:2 314/2

மேல்

ஆயினாளே (1)

தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/4

மேல்

ஆயினும் (1)

எக்குறி ஆயினும் இமைப்பினில் உரைக்கும் – குற்-குறவஞ்சி:2 115/40

மேல்

ஆயுதங்கள் (1)

கைக்கான ஆயுதங்கள் கொண்டு சில்லிக்கோல் எடுத்து கண்ணி சேர்த்து – குற்-குறவஞ்சி:2 250/3

மேல்

ஆர் (14)

மை ஆர் விழியார் கண்டால் மயங்காரோ – குற்-குறவஞ்சி:2 51/2
மேனி ஆர் அழகு தோற்ற மின்_அனார் விழுந்த பேரை – குற்-குறவஞ்சி:2 59/3
பார் ஆர் பல முகமும் பட்சி நிரை சாயுது ஐயே – குற்-குறவஞ்சி:2 269/4
ஆர் அணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய் அபிஷேகப்பேரி கணக்கன்பற்றிலும் – குற்-குறவஞ்சி:2 273/4
கொந்து ஆர் புயத்தான் இராக்கதப்பெருமாள் குற்றாலநாதன் முன் உற்ற சகோதரன் – குற்-குறவஞ்சி:2 282/3
ஆர் மேல் வருகின்ற துன்பமும் நீக்கி அடங்கார் குறும்பும் அடக்கியே தென்காசி – குற்-குறவஞ்சி:2 283/1
கண்ணி கொண்டுவாடா பண்ணவர் குற்றாலர் கார் ஆர் திரிகூட சாரலிலே வந்து – குற்-குறவஞ்சி:2 288/1
மட்டு ஆர் குழலி-தன் சாயலை காட்டும் மயூரமே அவள் மா மலர் தாள் நடை காட்டாதது என்ன விகாரமே – குற்-குறவஞ்சி:2 309/2
பொங்கம் எலாம் செய்யும் உங்கள் போகம் எலாம் ஆர் அறிவார் – குற்-குறவஞ்சி:2 332/2
அத்தனையும் குடித்துப்போட்டு ஆர் பிறகே தொடர்ந்தாளோ – குற்-குறவஞ்சி:2 346/4
சேண் ஆர் பெரும் தெருவில் சிங்கியை முன் தேடிவைத்து – குற்-குறவஞ்சி:2 347/3
கொத்து ஆர் குழலார்க்கு வித்தாரமாக – குற்-குறவஞ்சி:2 356/1
விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர் – குற்-குறவஞ்சி:2 369/2
விரித்து மடித்தது ஆர் சிங்கி விரித்து மடித்தது ஆர் – குற்-குறவஞ்சி:2 369/2

மேல்

ஆர்க்கவே (1)

தெய்வநாயகன் வந்தனன் என சின்னம் எடுத்தெடுத்து ஆர்க்கவே – குற்-குறவஞ்சி:2 12/4

மேல்

ஆர்க்கும் (1)

ஆர்க்கும் பயம் இல்லை தோணின காரியம் – குற்-குறவஞ்சி:2 358/1

மேல்

ஆர (3)

கை ஆர சூடகம் இட்டு மின்னாரை வெல்ல கண்ணில் ஒரு நாடகம் இட்டு – குற்-குறவஞ்சி:2 31/1
ஆர மா முலை மின்னார் அவரவர் அல்குல் தேர்கள் அலங்காரம் செய்ய – குற்-குறவஞ்சி:2 154/2
ஆர தனத்தை படம் கொண்டு மூடி அசைத்து நின்றாள் அதை யானை கொம்பு என்று நான் – குற்-குறவஞ்சி:2 329/1

மேல்

ஆரணம் (1)

காரண மறை ஆரணம் படித்தவர் கருதிய பெருமானார் – குற்-குறவஞ்சி:2 112/2

மேல்

ஆராலும் (1)

அயிரையும் தேளியும் ஆராலும் கொத்தியே – குற்-குறவஞ்சி:2 277/4

மேல்

ஆரிய (1)

காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/4

மேல்

ஆரியங்காவா (1)

ஆரியங்காவா அருள் சொரிமுத்தே – குற்-குறவஞ்சி:2 223/9

மேல்

ஆரியநாட்டான் (1)

மாரி நீர் வளர் தென் ஆரியநாட்டான்
கன்னி மா பழுத்து கதலி தேன் கொழித்து – குற்-குறவஞ்சி:2 115/6,7

மேல்

ஆரியநாட்டினர் (1)

நாரிபங்காளர் தென் ஆரியநாட்டினர் மன்மதா எங்கள் – குற்-குறவஞ்சி:2 71/3

மேல்

ஆரியநாட்டு (1)

காராடும்கண்டர் தென் ஆரியநாட்டு உறை காரிய பூவையை ஆரிய பாவையை – குற்-குறவஞ்சி:2 331/4

மேல்

ஆரியநாடு (5)

கன்னல்_வேளுக்கு வில்லாக ஓங்கும் கடவுள் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 157/4
மை கணாள் குழல்வாய்மொழி பாகர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 158/4
வஞ்சி பாகர் திரிகூடநாதர் வசந்த ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 159/4
நாதம் மூன்று உருவான குற்றாலநாதர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 160/4
ஏங்க காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரியநாடு எங்கள் நாடே – குற்-குறவஞ்சி:2 161/4

மேல்

ஆரியநாடே (4)

தேரின் மாரன் வசந்தன் உலாவும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 154/4
தேரை சூழ்ந்திட கார்காலம் வெல்லும் திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 155/4
தாழை சோறிட வாழை குருத்திடும் சந்திரசூடர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 156/4
தேட காண்பது நல் அறம் கீர்த்தி திருக்குற்றாலர் தென் ஆரியநாடே – குற்-குறவஞ்சி:2 162/4

மேல்

ஆரியம் (1)

கொங்கணம் ஆரியம் குச்சலர் தேசமும் – குற்-குறவஞ்சி:2 115/31

மேல்

ஆரும் (3)

தென் ஆரும் சித்ரசபையை எங்கள் சின்னணஞ்சாத்தேவன் செப்போடு மேய்ந்த – குற்-குறவஞ்சி:2 196/3
கார் ஆரும் செங்குள மேலப்பாட்டப்பற்று காடுவெட்டிப்பற்று நீடுசுண்டைப்பற்று – குற்-குறவஞ்சி:2 272/1
சீர் ஆரும் பேட்டை குளமுடை காங்கேயன் ஸ்ரீகிருஷ்ணன்மேடு முனிக்குருகன்பேரி – குற்-குறவஞ்சி:2 272/2

மேல்

ஆரூர் (1)

திருவண்ணாமலை காஞ்சி திருக்காளத்தி சீகாழி சிதம்பரம் தென் ஆரூர் காசி – குற்-குறவஞ்சி:2 320/1

மேல்

ஆரோ (1)

இந்த சித்தர் ஆரோ வெகு – குற்-குறவஞ்சி:2 49/1

மேல்

ஆலடிப்பற்றும் (1)

மாரனேரிக்குளம் மத்தளம்பாறை வழிமறித்தான்குளம் ஆலடிப்பற்றும்
ஆர் அணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய் அபிஷேகப்பேரி கணக்கன்பற்றிலும் – குற்-குறவஞ்சி:2 273/3,4

மேல்

ஆலயம் (3)

தென்காசி ஆலயம் ஓங்க குறி செண்பகமாறற்கு சொன்ன பேர் நாங்கள் – குற்-குறவஞ்சி:2 197/2
ஆலயம் சூழ திருப்பணியும் கட்டி அன்னசத்திரம் கட்டி அப்பாலும் தென்காசி – குற்-குறவஞ்சி:2 278/1
தானைத்தலைவன் வயித்தியப்பன் பெற்ற சைவக்கொழுந்து தருமத்துக்கு ஆலயம்
சேனை சவரிப்பெருமாள் சகோதரன் செல்வன் மருதூர் வயித்தியப்பனுடன் – குற்-குறவஞ்சி:2 279/1,2

மேல்

ஆலவட்டம் (1)

அனக திருமுத்தின் சிவிகை கவிகை பொன் ஆலவட்டம் நிழற்றவே – குற்-குறவஞ்சி:2 11/2

மேல்

ஆலா (1)

ஆலா படுக்கவே போனேன் – குற்-குறவஞ்சி:2 323/2

மேல்

ஆலாவும் (2)

ஆலாவும் கொக்கும் அருகே வருகுது ஆசார கள்ளர் போல் நாரை திரியுது – குற்-குறவஞ்சி:2 302/1
ஆலாவும் கோல மயிலும் படுத்தேன் – குற்-குறவஞ்சி:2 323/3

மேல்

ஆவர் (1)

திக்குமே உடையர் ஆவர் செக மகராசி நீயே – குற்-குறவஞ்சி:2 222/2

மேல்

ஆவல் (1)

ஆவல் சேர் காம வேட்டை ஆசையால் அன்ன பேட்டை – குற்-குறவஞ்சி:2 308/3

மேல்

ஆவி (2)

பார தனத்தை திறந்துவிட்டாள் கண்டு பாவியேன் ஆவி மறந்துவிட்டேன் உடன் – குற்-குறவஞ்சி:2 329/3
ஆவி சோருது உனை ஆவியாவி கட்ட – குற்-குறவஞ்சி:2 352/3

மேல்

ஆவிதான் (1)

பார்க்க பொறுக்குமோ பாவி என் ஆவிதான் சிங்கி முன்னே – குற்-குறவஞ்சி:2 396/1

மேல்

ஆவியாவி (1)

ஆவி சோருது உனை ஆவியாவி கட்ட – குற்-குறவஞ்சி:2 352/3

மேல்

ஆவையோ (1)

பெண்பிள்ளை மேல் பொருது ஆண்பிள்ளை ஆவையோ மன்மதா – குற்-குறவஞ்சி:2 70/4

மேல்

ஆழி (1)

கை வல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை காக்கவே – குற்-குறவஞ்சி:2 12/2

மேல்

ஆளாய் (1)

ஆளாய் அழகனுமாய் யாரை எங்கே கண்டாளோ – குற்-குறவஞ்சி:2 344/3

மேல்

ஆளி (1)

ஆளி போல் பாய்ந்து சுரும்பு இசை கேட்கும் திரிகூடத்து அமலர் நாட்டில் – குற்-குறவஞ்சி:2 253/1

மேல்

ஆற்றாமல் (1)

விண் நீர் புனைந்தார் விரக வெம்மைக்கு ஆற்றாமல்
கண்ணீர் நறும் புனலா கை வளையே செய் கரையா – குற்-குறவஞ்சி:2 109/2,3

மேல்

ஆற்றாமல்போன (1)

ஆணாகி பெண் விரகம் ஆற்றாமல்போன சிங்கன் – குற்-குறவஞ்சி:2 347/1

மேல்

ஆற்றில் (1)

கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டு கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே – குற்-குறவஞ்சி:1 5/4

மேல்

ஆற்றுக்கால் (1)

வாவி-தொறும் நின்று சிங்கன் வேட்டையாடி வட அருவி ஆற்றுக்கால் வடகால் தென்கால் – குற்-குறவஞ்சி:2 303/3

மேல்

ஆற்றை (1)

ஆற்றை நான் கடத்திவிட்டால் ஆகாசமார்க்கம் ஓட – குற்-குறவஞ்சி:2 341/1

மேல்

ஆற (1)

ஆக்க பொறுத்தவர் ஆற பொறார்களோ சிங்கா – குற்-குறவஞ்சி:2 396/2

மேல்

ஆறாத (1)

ஆறாத சனங்கள் பசியாற்றும் இந்த கையே – குற்-குறவஞ்சி:2 220/1

மேல்

ஆறு (5)

பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக்கு ஒழித்து புயம் நால் மூன்றாய் – குற்-குறவஞ்சி:1 2/3
தலையிலே ஆறு இருக்க மாமிக்காக தாங்கு கடல் ஏழு அழைத்த திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:1 5/1
அஞ்சு தலைக்குள் ஆறு தலை வைத்தார் எனது மனதில் – குற்-குறவஞ்சி:2 84/1
முது கங்கை ஆறு சிவமதுகங்கை ஆறே – குற்-குறவஞ்சி:2 167/2
ஆறு நாள் கூடி ஒரு கொக்கு பட்டது அகப்பட்ட கொக்கை அவித்து ஒரு சட்டியில் – குற்-குறவஞ்சி:2 291/2

மேல்

ஆறுதலை (1)

அஞ்சுதலைக்கு ஒர் ஆறுதலை வையார் – குற்-குறவஞ்சி:2 84/2

மேல்

ஆறே (1)

முது கங்கை ஆறு சிவமதுகங்கை ஆறே – குற்-குறவஞ்சி:2 167/2

மேல்

ஆறை (1)

ஆறை அழகப்ப பூபாலன் கட்டளை அன்பன் திருமலைக்கொழுந்து-தன் கட்டளை – குற்-குறவஞ்சி:2 284/1

மேல்

ஆன் (1)

ஆன் ஏறும் செல்வர் திரிகூடநாதர் அணி நகர் வாழ் – குற்-குறவஞ்சி:2 212/1

மேல்

ஆன (2)

ஆன துறை அயன் உரைத்த தானம் அறியாமல் – குற்-குறவஞ்சி:2 166/1
ஆன சடைத்தம்பிரான்பிச்சை கட்டளை அப்பால் மலைநாட்டார் கட்டளை பற்று எல்லாம் – குற்-குறவஞ்சி:2 285/4

மேல்

ஆனது (2)

வேகம் உனக்கு ஆனது என்ன வெண்ணிலாவே – குற்-குறவஞ்சி:2 65/4
என்னில் ஆனது நான் சொன்னேன் இனி உனது இச்சைதானே – குற்-குறவஞ்சி:2 86/4

மேல்

ஆனவர் (1)

சிவனுமாய் அரி அயனும் ஆனவர் கவன மால் விடைஅதனில் ஏறியே – குற்-குறவஞ்சி:2 6/2

மேல்

ஆனால் (1)

குலவித்தை குறியே ஆனால் குறவஞ்சி குறைவைப்பாயோ – குற்-குறவஞ்சி:2 198/2

மேல்

ஆனான் (1)

தூதுவந்த நளன் ஆனான் கன்னிமாடம் துலங்கு தமயந்தி அவள் ஆயினாளே – குற்-குறவஞ்சி:2 348/4

மேல்

ஆனேனிலையே (1)

கிள்ளைமொழி கேட்க ஒரு கிள்ளை ஆனேனிலையே – குற்-குறவஞ்சி:2 297/4

மேல்

ஆனை (6)

அடுத்த ஒரு புலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்த விதான சேலையும் – குற்-குறவஞ்சி:2 8/3
ஆனை பெருக்கமும் குதிரை பெருக்கமும் அவனி முழுதினும் நெருங்கவே – குற்-குறவஞ்சி:2 13/2
ஆனை_வாகனத்தானை வானுலகில் இருத்தும் – குற்-குறவஞ்சி:2 185/1
சேனை மகபதி வாசல் ஆனை பெறும் பிடிக்கும் – குற்-குறவஞ்சி:2 187/1
பல்லக்கு ஏறும் தெருவில் ஆனை நடத்தி மணி – குற்-குறவஞ்சி:2 227/1
ஆனை குத்தி சாய்த்த திறலாளர் திருக்குற்றாலர் – குற்-குறவஞ்சி:2 292/1

மேல்

ஆனை_வாகனத்தானை (1)

ஆனை_வாகனத்தானை வானுலகில் இருத்தும் – குற்-குறவஞ்சி:2 185/1

மேல்