Select Page

சித்தர் பாடல்கள் – சொற்கள் – எண்ணிக்கை

நூல் பாக்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
1. அகத்தியர் 49 196 1724 0 12 1736
2. அகப்பேய்ச் சித்தர் 90 360 962 0 1 963
3. அழுகணிச் சித்தர் 201 781 3010 0 14 3024
4. ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர் 32 128 357 0 4 361
5. இடைக்காட்டுச் சித்தர் 132 287 1813 2 8 1823
6. இராம தேவர் 10 40 340 0 4 344 7. உரோமரிஷி ஞானம் 13 52 457 0 3 460 8. ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் 34 68 421 0 4 425 9. கஞ்சமலைச் சித்தர் 26 102 400 0 0 400 10. கடுவெளிச் சித்தர் 35 140 558 0 6 564 11. கடேந்திரநாதர் என்ற விளையாட்டுச் சித்தர் 34 107 735 0 3 738 12. கருவூரார் 31 124 1141 0 5 1146 13. கல்லுளிச் சித்தர் 67 266 1121 0 11 1132 14. காகபுசுண்டர் 161 612 5115 0 62 5177 15. காயக் கப்பல் 3 33 124 0 2 126 16. காரைச் சித்தர் 28 112 1001 0 2 1003 17. குதம்பைச் சித்தர் 247 742 2433 0 14 2447 18. கொங்கணச் சித்தர் 111 224 1718 0 5 1723 19. கைலாயக் கம்பளிச் சட்டை முனி 203 811 7387 0 10 7397 20. சங்கிலிச் சித்தர் 36 144 587 0 2 589 21. சட்டை முனி ஞானம் 6 24 202 0 1 203 22. சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் 35 70 343 0 1 344 23. சதோகநாதர் என்ற யோகச் சித்தர் 42 84 419 0 2 421 24. சிவவாக்கியர் 550 2200 12289 8 42 12339 25. சூரியானந்தர் 13 52 434 0 3 437 26. தடங்கண் சித்தர் 11 44 367 0 17 384 27. திரிகோணச் சித்தர் 90 180 872 2 7 881 28. திருமூலர் 11 43 360 0 12 372 29. திருவள்ளுவ ஞானம் 20 80 457 0 5 462 30. பட்டினத்துச் சித்தர் ஞானம் 101 404 1930 0 9 1939 31. பத்திரகிரியார் 233 466 2531 2 19 2552 32. பாம்பாட்டிச் சித்தர் 129 516 2737 0 22 2759 33. புண்ணாக்குச் சித்தர் 20 60 206 0 0 266 34. மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் 33 66 544 0 11 555 35. வகுளி நாதர் என்ற மௌனச் சித்தர் 12 48 232 0 6 238 36. வால்மீகிச் சூத்திரம் 16 64 560 0 5 565 மொத்தம் 9730 55887 14 334 56235

மொத்தம் தனிச்சொற்கள் 20050

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மாது_ஓர்_பாகன்)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மாது_ஓர்_பாகன் (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மாது, ஓர், பாகன் (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

விளக்கம்

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். வயங்கு_இழை, ஆய்_இழை, கண்_நுதல், கார்_வண்ணன் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே
கணக்கிடப்படும். காட்டாக, ஆயிழை என்பது ஆய் இழை என்று பிரிக்கப்பட்டு ஆராய்ந்த அணிகலன் என்பதைக் குறிக்கும்.
ஆனால் இது அன்மொழித்தொகையாக ஆராய்ந்த இழைகளை அணிந்த பெண்ணைக் குறிக்கும். இதனை ஆயிழை என்று
கொண்டால் இதிலுள்ள ஆய், இழை என்ற சொற்கள் கணக்கில் கொள்ளப்படா. எனவே இது ஆய்_இழை என்று கொள்ளப்படும்.
இப்போது இது ஆய்_இழை, ஆய், இழை என்று மூன்றனிலும் கணக்கிடப்படும்.
இந்தச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் ஆய், இழை ஆகிய இரண்டுமே.
எனவே ஆய்_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், ஆய், இழை ஆய்_இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

மங்கை (3)
மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் – சிவவாக்கியர்:24 108/3

மங்கை_பங்கரோடு (1)
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4

பங்கரோடு (1)
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தொறும், கொல், மன், மின்,
கண்(ஏழன் உருபு) போன்றது.
நாள்-தொறும், அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள்
இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

-தொறும் (4)
சென்று சென்றிடம்-தொறும் சிறந்த செம்பொன் அம்பலம் – சிவவாக்கியர்:24 421/1
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
நினைக்கும் நினைவு-தொறும் நிறைந்த பரிபூரணத்தை – பத்திரகிரி:31 113/1

இல்-தொறும் (1)
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2

சென்றிடம்-தொறும் (1)
சென்று சென்றிடம்-தொறும் சிறந்த செம்பொன் அம்பலம் – சிவவாக்கியர்:24 421/1

துறை-தொறும் (1)
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3

நினைவு-தொறும் (1)
நினைக்கும் நினைவு-தொறும் நிறைந்த பரிபூரணத்தை – பத்திரகிரி:31 113/1

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் நூலின் பெயரும் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பகுதியின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் பகுதியில்
அச் சொல் இடம்பெறும் நூற்பாவின் எண்ணும், அந் நூற்பாவில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

சென்றாலும் (3)
எங்ஙனம் சென்றாலும் – அகப்பேய்:2 42/4
பரத்தில் சென்றாலும் அகப்பேய் – அகப்பேய்:2 51/1
காசி ராமேச்சுரம் கால் நோவ சென்றாலும்
ஈசனை காணுவையோ குதம்பாய் – குதம்பை:17 184/1,2

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

அஞ்சும் (22)
ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/4
அஞ்சும் மூணும் எட்டதாம் அநாதியான மந்திரம் – சிவவாக்கியர்:24 18/1
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே – சிவவாக்கியர்:24 24/1
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே – சிவவாக்கியர்:24 24/1
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 24/4
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அ எழுத்து உளே – சிவவாக்கியர்:24 101/2
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும் – சிவவாக்கியர்:24 105/2
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சும் தாம் இறந்துபோனதே – சிவவாக்கியர்:24 154/4
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும் – சிவவாக்கியர்:24 219/1
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும் – சிவவாக்கியர்:24 219/1
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும் – சிவவாக்கியர்:24 219/1
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும் – சிவவாக்கியர்:24 219/1
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்து உளே இருப்பதும் -சிவவாக்கியர்:24 219/2
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்து உளே இருப்பதும் – சிவவாக்கியர்:24 219/2
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்து உளே இருப்பதும் – சிவவாக்கியர்:24 219/2
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 219/3
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 219/3
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 219/4
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 219/4
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 300/4
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 303/3
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/2