Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தகு 1
தகைமையினால் 1
தகையும் 1
தங்கள் 1
தங்களின் 1
தட்பம் 1
தடம் 2
தடவி 1
தடவினார் 1
தண் 9
தண்டலையில் 1
ததைவன 1
தந்த 1
தந்து 2
தந்தையும் 1
தம் 5
தம்பியர் 1
தமர 1
தமியேனது 1
தமிழ் 3
தமிழாகரன் 1
தயாபரனே 1
தரு 5
தருக 1
தலமாய் 1
தலை 1
தலைவனும் 1
தவழ் 2
தவிர்ந்தோமே 1
தவிராத 1
தழல் 4
தழலின் 1
தழுவாமல் 1
தளர் 1
தளவு 1
தளிர் 2
தளிர்த்த 1
தறுகண் 1
தன் 2
தன்-பால் 1
தன்னால் 1
தன்னொடும் 1
தன 1
தனக்கு 2
தனி 9
தனையே 1

தகு (1)

நயம் கொள தகு புகழ் நந்தி கச்சி சூழ் – நந்திக்-:2 8/2

மேல்

தகைமையினால் (1)

ஆவி நம்பாலது ஆகும் தகைமையினால்
செம் மால் ஐ நந்தி சிறுகுடிநாட்டு அன்னமே – நந்திக்-:2 99/2,3

மேல்

தகையும் (1)

தகையும் நுண் இடை அதிர தன பாரம் அவற்றோடு – நந்திக்-:2 70/3

மேல்

தங்கள் (1)

தங்கள் கோன் அங்கநாடன் சந்திர குல பிரகாசன் – நந்திக்-:2 39/2

மேல்

தங்களின் (1)

புன்னைகளும் பிச்சிகளும் தங்களின் மகிழ்ந்து பொன் பவள வாய் திறந்து பூ சொரியும் காலம் – நந்திக்-:2 101/2

மேல்

தட்பம் (1)

வான் உறை மதியில் புக்கது உன் தட்பம் மறி கடல் புக்கது உன் பெருமை – நந்திக்-:2 109/5

மேல்

தடம் (2)

தடம் கை பூபாலன் மேல் தண் கோவை பாடி – நந்திக்-:2 92/3
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/3

மேல்

தடவி (1)

உள் திரையின் செங்கழுநீர் இலஞ்சி மாடே ஒண் பொழிலில் சண்பகத்தார் தடவி ஒடி – நந்திக்-:2 74/1

மேல்

தடவினார் (1)

சந்தனம் என்று ஆரோ தடவினார் பைந்தமிழை – நந்திக்-:2 104/2

மேல்

தண் (9)

குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை – நந்திக்-:2 4/1
வாழி நந்தி தண்
நீழல் வெண்குடை – நந்திக்-:2 21/2,3
வனையும் வடவேங்கடத்தார் தண் சாரலின் வார் புனமே – நந்திக்-:2 33/4
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே – நந்திக்-:2 35/4
ஒழியா வண் கை தண் அருள் நந்தி-தன் ஊர்மட்டோ – நந்திக்-:2 43/3
தண் செங்கோல் நந்தி தனி குடை கீழ் வாழாரின் – நந்திக்-:2 72/3
தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா – நந்திக்-:2 74/2
தடம் கை பூபாலன் மேல் தண் கோவை பாடி – நந்திக்-:2 92/3
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் – நந்திக்-:2 107/2

மேல்

தண்டலையில் (1)

தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா – நந்திக்-:2 74/2

மேல்

ததைவன (1)

திறல் உடையன தொடை புகழ்வன திகழ் ஒளியன புகழ் ததைவன
நறு மலர் அணி அணி முடியன நய பர நின திரு புயமதே – நந்திக்-:2 7/3,4

மேல்

தந்த (1)

சேர சோழரும் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த
வீர மா மத கரி இவை பரி இவை இரவலர் கவர்வாரே – நந்திக்-:2 27/3,4

மேல்

தந்து (2)

மெல்கு தொண்டையும் தந்து அருள்கிலன் விடை மணியொடும் விடியாத – நந்திக்-:2 59/3
பூவையும் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே – நந்திக்-:2 79/3

மேல்

தந்தையும் (1)

வந்தோர்க்கு தந்தையும் நீ – நந்திக்-:2 1/30

மேல்

தம் (5)

தம் இன் முத்தம் கொள நோக்கி சற்றே நகைக்கும் வேழமுகன் – நந்திக்-:1 1/3
விண்ட வேந்தர் தம் நாடும் வீர திருவும் எம் கோனை – நந்திக்-:2 5/3
தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் – நந்திக்-:2 42/3
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே – நந்திக்-:2 82/4
தம் ஆவி தாம் உடையர் அல்லரே சாகாமே – நந்திக்-:2 99/4

மேல்

தம்பியர் (1)

தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் – நந்திக்-:2 82/2

மேல்

தமர (1)

வழியாம் தமர கடல் வட்டத்து ஒரு வண் கோவே – நந்திக்-:2 43/4

மேல்

தமியேனது (1)

தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம் – நந்திக்-:2 48/3

மேல்

தமிழ் (3)

தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் – நந்திக்-:2 42/3
தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா – நந்திக்-:2 74/2
தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் – நந்திக்-:2 107/2

மேல்

தமிழாகரன் (1)

கலியை தீர்க்கும் தமிழாகரன் நந்தி – நந்திக்-:2 115/3

மேல்

தயாபரனே (1)

நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/4

மேல்

தரு (5)

தரு வாணி ஆண்மை இறை சாரும் உரு ஆணி – நந்திக்-:1 4/2
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் – நந்திக்-:2 17/1
பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல் – நந்திக்-:2 17/1
நிதி தரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையிவை உடை நந்தி – நந்திக்-:2 17/3
தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே – நந்திக்-:2 44/4

மேல்

தருக (1)

அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று – நந்திக்-:1 1/2

மேல்

தலமாய் (1)

மண் தலமாய் அம்பரமாய் மாருதமாய் வார் புனலாய் – நந்திக்-:2 1/1

மேல்

தலை (1)

தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் – நந்திக்-:2 82/2

மேல்

தலைவனும் (1)

ஏனோர்க்கு தலைவனும் நீ – நந்திக்-:2 1/31

மேல்

தவழ் (2)

பிறை தவழ் செம் சடை பிறங்கல் நாரணன் – நந்திக்-:2 66/1
மழை தவழ் கொடி போல – நந்திக்-:2 83/2

மேல்

தவிர்ந்தோமே (1)

தையல் உறவு தவிர்ந்தோமே வையம் – நந்திக்-:2 108/2

மேல்

தவிராத (1)

சிவனை முழுதும் மறவாத சிந்தையான் செய முன் உறவு தவிராத நந்தி ஊர் – நந்திக்-:2 97/1

மேல்

தழல் (4)

தரு கோதை நினைந்து அயர்வேன் மெலிய தழல் வீசுவதோ குளிர் மா மதியே – நந்திக்-:2 44/4
மிடல் ஏறிய கோதை நினைந்து அயர்வாள் மெலிய தழல் வீசும் இ மா மதியே – நந்திக்-:2 55/4
தேன் உறு மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் அடைந்தது உன் தேகம் – நந்திக்-:2 109/3
தேன் உறை மலராள் அரியிடம் புகுந்தாள் செம் தழல் புக்கது உன் மேனி – நந்திக்-:2 109/7

மேல்

தழலின் (1)

செம் தழலின் சாற்றை பிழிந்து செழும் சீத – நந்திக்-:2 104/1

மேல்

தழுவாமல் (1)

ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய் – நந்திக்-:2 104/3,4

மேல்

தளர் (1)

தார் வட்ட கிளி மருவும் சொல் பகர் தளர் இடை தையல் வஞ்சிக்கு இன்று – நந்திக்-:2 54/1

மேல்

தளவு (1)

தளவு கண்டால் அன்ன வெள் நகையால் தமியேனது உள்ளம் – நந்திக்-:2 48/3

மேல்

தளிர் (2)

மலர் சூழல் அமர்ந்து இனிய வண்டு ஆர்க்கும் காலம் வரி குயில்கள் மாவில் இளம் தளிர் கோதும் காலம் – நந்திக்-:2 56/1
வேர் ஊரும் மேனி வியன் தளிர் ஊரும் விசயனுக்கு – நந்திக்-:2 110/2

மேல்

தளிர்த்த (1)

காஅர் தளிர்த்த கான கொன்றையின் – நந்திக்-:2 23/8

மேல்

தறுகண் (1)

திண் தறுகண் மா தொழுத பாவைமார்க்கு செங்கோலன் அல்லையோ நீ செப்பட்டே – நந்திக்-:2 74/4

மேல்

தன் (2)

தினையும் விளைந்தது வாழி தன் மீறு தெள்ளாற்று நள்ளார் – நந்திக்-:2 33/2
தேயம் ஆர் புகழ் தேசபண்டாரி தன்
பாயல் மேல் வரல் பார்த்து நின்றாளுக்கே – நந்திக்-:2 88/3,4

மேல்

தன்-பால் (1)

தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால்
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் – நந்திக்-:2 53/1,2

மேல்

தன்னால் (1)

பரடு திறப்ப தன்னால் பல் கடை – நந்திக்-:2 23/6

மேல்

தன்னொடும் (1)

பட குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பார் அறிய – நந்திக்-:2 65/3

மேல்

தன (1)

தகையும் நுண் இடை அதிர தன பாரம் அவற்றோடு – நந்திக்-:2 70/3

மேல்

தனக்கு (2)

மயிலை_அன்னாள் தனக்கு – நந்திக்-:2 52/4
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் – நந்திக்-:2 53/1

மேல்

தனி (9)

ஒரு பெரும் தனி குடை நீழல் – நந்திக்-:2 1/43
சின ஏறு செம் தனி கோல் நந்தி இன வேழம் – நந்திக்-:2 2/2
வெம் சாயல் மறைத்த தனி குடையான் விடை மண் பொறி ஓலை விடேல் விடுகே – நந்திக்-:2 11/4
பார்க்கு ஒன்று செம் தனி கோல் பைம் தார் நந்தி பல்லவர் கோன் தண் அருள் யாம் படைத்த ஞான்றே – நந்திக்-:2 35/4
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ – நந்திக்-:2 54/2
பார்வட்ட தனி மத யானை படை உடையாய் பல்லவர் அடல் ஏறே – நந்திக்-:2 54/4
அறம் பெருகும் தனி செங்கோல் மாயன் தொண்டை அம் கனி போல் சிவந்து திரு முகத்து பூத்து – நந்திக்-:2 60/1
தண் செங்கோல் நந்தி தனி குடை கீழ் வாழாரின் – நந்திக்-:2 72/3
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் – நந்திக்-:2 114/2

மேல்

தனையே (1)

சரம் பற்றிய சாபம் விடும் தனையே – நந்திக்-:2 112/4

மேல்