Select Page

நம்பி அகப்பொருள் – சொற்கள் – எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
1079 4861 88 50 4999
தனிச்சொற்கள் : 2314

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (அம்_சில்_ஓதி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = நேர்_இழை (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = நேர், இழை (2) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 3 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, மின் இடை மகளிர் என்ற தொடரில் மின், இடை ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக் கொள்ளப்படும். மின்னிடை கூறினாள் என்றவிடத்தில் இங்கு மின்னிடை என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது. எனவே இச் சொல் மின்_இடை எனக்கொள்ளப்படுகிறது. இங்கு மின், இடை, மின்_இடை ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். மின்_இடை என்பது தனிச் சொல்லாகவும், மின், இடை ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும்.
எனவே மின்_இடை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், மின், இடை, மின்_இடை என்ற மூன்று சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

இடை (2)
ஓதற்கு அகன்றோன் ஒழிந்து இடை மீண்டு – நம்பிஅகப்பொருள்:1 92/1
மின்_இடை வேற்றுமை கண்டு தாய் வினாவுழி – நம்பிஅகப்பொருள்:3 8/1

மின் (1)
மின்_இடை வேற்றுமை கண்டு தாய் வினாவுழி – நம்பிஅகப்பொருள்:3 8/1

மின்_இடை (1)
மின்_இடை வேற்றுமை கண்டு தாய் வினாவுழி – நம்பிஅகப்பொருள்:3 8/1

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

இடம்தொறும் என்ற சொல் இடம்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், இடம்-தொறும் என்பது
தனிச்சொல்லாகவும், -தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும்.
இடம்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், இடம்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

இடம்-தொறும் (2)
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2

-தொறும் (2)
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2
ஏற்றன கூறுப இடம்-தொறும் இடம்-தொறும் – நம்பிஅகப்பொருள்:5 13/2

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் அதிகாரத்தின் பெயர் குறுகிய அளவில் கொடுக்கப்படும். அதனை
அடுத்து அந்த அதிகாரத்தில் அச் சொல் இடம்பெறும் இயலின் எண் கொடுக்கப்படும். அடுத்து அந்த இயலில்
அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு நூற்பாவின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

மகிழ்ச்சி (9)
பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழி கலங்கல் – நம்பிஅகப்பொருள்:2 7/2
வரு வழி கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று – நம்பிஅகப்பொருள்:2 53/4
உள்ளம் மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 4/3
தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பல் என – நம்பிஅகப்பொருள்:3 20/1
கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி – நம்பிஅகப்பொருள்:4 3/1
கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி என்று – நம்பிஅகப்பொருள்:4 3/1,2
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி என்று – நம்பிஅகப்பொருள்:4 3/2
பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி என்று – நம்பிஅகப்பொருள்:4 3/2
வருவழி கலங்கல் வந்துழி மகிழ்ச்சி என்று – நம்பிஅகப்பொருள்:4 10/4

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.