நளவெண்பாவில் உள்ள சொற்கள்/சீர்-தளைகள் எண்ணிக்கை
இத் தொடரடைவு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப்பட்ட நளவெண்பா நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. பாடல் எண்கள் அந்நூலில் உள்ளவாறே உள்ளன. பார்வை – கழகப்புலவர் செல்லூர்க்கிழார் திரு.செ.ரெ.இராமசாமிப் பிள்ளை எழுதிய உரையுடன் கூடிய நளவெண்பா நூல். புலியூர்க்கேசிகன் வெளியிட்டுள்ள உரையிலுள்ளவாறு பெரும்பாலான பாடல் எண்கள் அமையும்.
பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரி சொற்கள் |
கட்டு ருபன்கள் |
அடைவுச் சொற்கள் |
தனிச் சொற்கள் |
|
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 427 | 1708 | 9364 | 64 | 110 | 9538 | 4175 |
சீர்கள் | |||
---|---|---|---|
நாள் | மலர் | காசு | பிறப்பு |
65 (15.2%) | 95 (22.2%) | 114 (26.7%) | 153 (35.8%) |
தேமா | புளிமா | கூவிளம் | கருவிளம் |
1617 (27.0%) | 516 (8.6%) | 270 (4.5%) | 113 (1.9%) |
தேமாங்காய் | புளிமாங்காய் | கூவிளங்காய் | கருவிளங்காய் |
889 (14.9%) | 650 (10.9%) | 1260 (21.1%) | 663 (11.1%) |
தளைகள் | |||
இயற்சீர்வெண் | வெண்சீர்வெண் | ||
2516 (42.1%) | 3462 (57.9%) |
விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை
சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2
1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன. சொல்லின் பகுதிகள்
அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
ஆய்_இழையார் என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் ஆய், இழையார் ஆகிய இரண்டும். எனவே ஆய்_இழையார் என்ற சொல்லுக்குரிய
நிகழ்விடங்கள் ஆய், ஆய்_இழையார், இழையார் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
எ.காட்டு
ஆய் (4)
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள 21/3
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள 33/1
அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய் – நள 156/1
அவ்வளவில் ஆதி பெரு வழியில் ஆய் வணிகன் – நள 312/1
ஆய்_இழையார் (2)
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள 21/3
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள 33/1
இழையார் (3)
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள 21/3
தேரின் துகளை திருந்து_இழையார் பூ குழலின் – நள 29/1
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள 33/1
2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின்,
கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும்
ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
எ.காட்டு
கொண்-மின் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், கொண்-மின், -மின் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும். கொண் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.
கொண்-மின் (1)
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள 285/2
-மின் (3)
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள 285/2
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள 358/3
தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப – நள 359/3
3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.
4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
இன்று (14)
இடைநின்ற காலம் போல் இன்று – நள 107/4
இரவு அளித்தான் அல்லனோ இன்று – நள 117/4
யாமம் கரி ஆக இன்று – நள 118/4
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று
தவிர்ந்ததே போல் அரற்றி சாம்புகின்ற-போதே – நள 124/2,3
இவளை பணையம் தா இன்று – நள 229/4
இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார் – நள 235/3
நின்று உருகு வார் கண்ணி நீர் நோக்கி இன்று இங்கு – நள 236/2
இன்று துயில இறைவனுக்கே என்றனது – நள 276/2
காதல் அன்பு மிக்காளை கார் இருளில் கைவிட்டு இன்று
ஏதிலன் போல் போகின்றேன் யான் – நள 285/3,4
வன் துயரால் போய் ஆவி மாள்கின்றேன் இன்று உன் – நள 301/2
சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும் – நள 345/2,3
இரவு அகற்றி வந்தாய்-கொல் இன்று – நள 356/4
இறவாத ஏந்து_இழையாள் இன்று பறி பீறி – நள 372/2
இன்று உன்னை காண்பதோர் ஆதரவால் யான் இங்ஙன் – நள 385/1
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.
எ.காட்டு
பிடிக்க (2)
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க – நள 259/2
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை – நள 259/2,3