முத்தொள்ளாயிரத்தில் உள்ள சொற்கள்/சீர்-தளைகள் எண்ணிக்கை
பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச் சொற்கள் |
தனிச் சொற்கள் |
||
மொத்தம் | 109 | 436 | 2306 | 30 | 29 | 2365 | 1426 |
சீர்கள் | |||
---|---|---|---|
நாள் | மலர் | காசு | பிறப்பு |
16 (14.7%) | 33 (30.3%) | 35 (32.1%) | 25 (22.9%) |
தேமா | புளிமா | கூவிளம் | கருவிளம் |
402 (26.3%) | 154 (10.1%) | 164 (10.7%) | 116 (7.6%) |
தேமாங்காய் | புளிமாங்காய் | கூவிளங்காய் | கருவிளங்காய் |
244 (16.0%) | 142 (9.3%) | 170 (11.1%) | 134 (8.8%) |
தளைகள் | |||
இயற்சீர்வெண் | வெண்சீர்வெண் | ||
836 (54.8%) | 690 (45.2%) |
விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை
சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2
1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
இரு_தலை_கொள்ளியின் என்ற சொல்லுக்குரிய பிரிசொற்கள் இரு, தலை, கொள்ளியின் ஆகிய மூன்றும். எனவே இரு_தலை_கொள்ளியின் என்ற சொல்லுக்குரிய
நிகழ்விடங்கள் இரு, தலை, கொள்ளியின் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
எ.காட்டு
இரு (2)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள் 29/3
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு – முத்தொள் 100/2
கொள்ளியின் (1)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள் 29/3
தலை (6)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள் 29/3
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக – முத்தொள் 51/1
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை – முத்தொள் 66/2
தலை படுப தார் வேந்தர் மார்பு – முத்தொள் 87/4
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து – முத்தொள் 96/1
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் – முத்தொள் 107/1
2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
எ.காட்டு
என்-கொல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், என்-கொல், -கொல் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.
என்-கொல் (1)
என்-கொல் இவர் அறிந்தவாறு – முத்தொள் 6/4
-கொல் (3)
என்-கொல் இவர் அறிந்தவாறு – முத்தொள் 6/4
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள் 7/2
என்னை-கொல் கைம்மாறு இனி – முத்தொள் 53/4
3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் காதையின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தக் காதையில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண் கொடுக்கப்படும். காதையின் பெயர்கள் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
அடி (4)
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே – முத்தொள் 47/3
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் – முத்தொள் 72/1
அடி மிசையே காணப்படும் – முத்தொள் 91/4
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி
பூமி மிதியா பொருள் – முத்தொள் 97/3,4
கதவு (3)
கண்டு உலாஅம் வீதி கதவு – முத்தொள் 2/4
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி – முத்தொள் 8/2
கண்ணார காண கதவு – முத்தொள் 24/4
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.
எ.காட்டு
யான் (9)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான்
திண் தேர் வளவன் திறத்து – முத்தொள் 27/3,4
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து – முத்தொள் 28/2
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ – முத்தொள் 31/3
உரையாயோ யான் உற்ற நோய் – முத்தொள் 38/4
என் காண்பேன் என் அலால் யான் – முத்தொள் 61/4
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள் 72/2
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் – முத்தொள் 85/1
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் – முத்தொள் 85/1
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு – முத்தொள் 85/2