Select Page

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 408 7337 32 26 7395 3382

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, அஞ்சுபடையோன் என்ற சொல் திருமாலைக் குறிக்கும். ஆனால் அஞ்சுபடையோன் என்பதில் அஞ்சு, படையோன் என்பன தனித்தனிச் சொற்கள். இதனை ஒரு சொல்லாகக் கொண்டால் அஞ்சு, படையோன் ஆகிய சொற்களின் எண்ணிக்கையில் இது சேராது. எனவே இது
அஞ்சு_படையோன் என்று கொள்லப்படும். இப்போது இது அஞ்சு_படையோன் என்று ஒரு சொல்லாகவும், அஞ்சு, படையோன் ஆகிய சொற்களின் எண்ணிக்கையிலும் சேர்க்கப்படும். இதற்குரிய பிரிசொற்கள் அஞ்சு, படையோன் ஆகிய இரண்டும். எனவே அஞ்சு_படையோன் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள்
அஞ்சு, படையோன், அஞ்சு_படையோன் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

மகள் (4)
கயல் பாய் குரம்பு அணை பெரும் பணை தமிழ் மதுரை காவலன் மகள் வருகவே
கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 55/4
கான் ஒழுகு தட மலர் கடி பொழில் கூடல் வளர் கவுரியன் மகள் வருகவே
கற்பகாடவியில் கடம்பாடவி பொலி கயல் கண் நாயகி வருகவே – மீனாட்சிபிள்ளை:6 57/4
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ்
எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் – மீனாட்சிபிள்ளை:10 94/3
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன்
ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ – மீனாட்சிபிள்ளை:10 100/1

மலர் (18)
————— ————— ———————————————
—————— ———————————
பிழியும் நறை கற்பகம் மலர்ந்த பிரச மலர் பூந்துகள் மூழ்கும்
பிறை கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆட தேன் அருவி – மீனாட்சிபிள்ளை:9 89/3
சொல்_கொடியோடு மலர்_கொடி கொய்து தொடுத்த விரை தொடையும்
சுந்தரி தீட்டிய சிந்துரமும் இரு துங்க கொங்கைகளின் – மீனாட்சிபிள்ளை:9 91/1
உருகிய பசும்பொன் அசும்ப வெயில் வீசு பொன் ஊசலை உதைந்து ஆடலும்
ஒண் தளிர் அடிச்சுவடு உற பெறும் அசோகு நறவு ஒழுகு மலர் பூத்து உதிர்வது உன் – மீனாட்சிபிள்ளை:10 95/1
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன்
ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ – மீனாட்சிபிள்ளை:10 100/1

மலர்_மகள் (1)
ஒல்கும் கொடி சிறு மருங்குற்கு இரங்கி மெல் ஓதி வண்டு ஆர்த்து எழ பொன்
ஊசலை உதைந்து ஆடும் அளவின் மலர்_மகள் அம்மை உள் அடி கூன் பிறை தழீஇ – மீனாட்சிபிள்ளை:10 100/1

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின்,
கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும்
ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

தொழும்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தொழும்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (3)
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும்
அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப – மீனாட்சிபிள்ளை:2 22/2
அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து
அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் – மீனாட்சிபிள்ளை:6 53/1
கொன் செய்த செழு மணி திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும்
குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய் கூந்தல் அம் கற்றை சுற்றும் – மீனாட்சிபிள்ளை:10 101/1

தொழும்-தொறும் (1)
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும்
அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப – மீனாட்சிபிள்ளை:2 22/2

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

ஆடுகவே (4)
பொன்_கொடி இமய மட கொடி வைகை புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே – மீனாட்சிபிள்ளை:9 91/4
பொன்_கொடி இமய மட கொடி வைகை புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே – மீனாட்சிபிள்ளை:9 91/4
புள் உறை பூம் பொழில் மதுரை துரைமகள் புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே – மீனாட்சிபிள்ளை:9 92/4
புள் உறை பூம் பொழில் மதுரை துரைமகள் புது நீர் ஆடுகவே பொருநை துறையொடு குமரி துறையவள் புது நீர் ஆடுகவே – மீனாட்சிபிள்ளை:9 92/4