கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொகுட்டு 1
பொங்கும் 1
பொடிபடுத்தி 1
பொதி 1
பொதும்பும் 1
பொதுவில் 1
பொதுளிய 2
பொய்கை 1
பொரு 4
பொருட்டே 1
பொருது 1
பொருநை 1
பொருப்பு 1
பொருள் 4
பொருளையும் 1
பொலம் 1
பொலி 1
பொலிந்தன 1
பொலிந்தோய் 3
பொலியும் 1
பொழிந்து 1
பொழில் 1
பொழிலே 1
பொழுதைக்கு 1
பொறி 1
பொறையாற்றும் 1
பொன் 23
பொன்மலை 1
பொன்னொடும் 1
பொகுட்டு (1)
சேய் இதழ் விரிக்கும் பொன் பொகுட்டு அம்புயம் – மதுரைக்கலம்பகம்:2 47/2
பொங்கும் (1)
தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும்
பண் முத்தமிழ்க்கு ஒர் பயனே சவுந்தரபாண்டியனே – மதுரைக்கலம்பகம்:2 45/3,4
பொடிபடுத்தி (1)
துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/3
பொதி (1)
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4
பொதும்பும் (1)
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1
பொதுவில் (1)
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
பொதுளிய (2)
பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும் – மதுரைக்கலம்பகம்:2 1/60
வரி அளி பொதுளிய இதழியொடு அமரர் மடந்தையர் நீல வனம் புக்கு இருந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/1
பொய்கை (1)
தட மலர் பொய்கை தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 47/5
பொரு (4)
பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5
புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3
சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ – மதுரைக்கலம்பகம்:2 83/1
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2
பொருட்டே (1)
செம்மாப்புறூஉம் திறம் பெறல் பொருட்டே – மதுரைக்கலம்பகம்:2 1/68
பொருது (1)
கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1
பொருநை (1)
விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை
தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/17,18
பொருப்பு (1)
கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1
பொருள் (4)
அவன் அவள் அது எனும் அவைகளில் ஒரு பொருள்
இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை – மதுரைக்கலம்பகம்:2 1/21,22
ஒண் பொருள் கிடையாது ஒழியினும் ஒழிக – மதுரைக்கலம்பகம்:2 1/63
பொருள் நான்கு ஒருங்கு ஈன்ற பொன் மாட கூடல் – மதுரைக்கலம்பகம்:2 2/1
நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3
பொருளையும் (1)
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4
பொலம் (1)
பொலம் கொண்ட வரி வளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 7/4
பொலி (1)
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
பொலிந்தன (1)
மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன
மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2,3
பொலிந்தோய் (3)
செம்பொன் மதில் தமிழ் கூடல் திருநகரம் பொலிந்தோய் கேள் – மதுரைக்கலம்பகம்:2 1/8
புவனமாய் பொலிந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/38
மின் நுழை மருங்குல் பொன்னொடும் பொலிந்தோய்
துரியம் கடந்த துவாத சாந்த – மதுரைக்கலம்பகம்:2 102/25,26
பொலியும் (1)
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
பொழிந்து (1)
பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம் – மதுரைக்கலம்பகம்:2 1/19
பொழில் (1)
செல் இட்ட பொழில் மதுரை தேவர் மணம் தடாதகாதேவிக்கு அன்று – மதுரைக்கலம்பகம்:2 77/1
பொழிலே (1)
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4
பொழுதைக்கு (1)
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2
பொறி (1)
கரும் பொறி சுரும்பர் செவ்வழி பாட – மதுரைக்கலம்பகம்:2 47/1
பொறையாற்றும் (1)
போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1
பொன் (23)
அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும் – மதுரைக்கலம்பகம்:2 1/7
பொன் பூத்து அலர்ந்த கொன்றை பீர் பூப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/50
கரும் சினை வேம்பு பொன் முடி சூடி – மதுரைக்கலம்பகம்:2 1/51
பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி – மதுரைக்கலம்பகம்:2 1/55
பொன் மலர் பொதுளிய சில் மலர் பழிச்சுதும் – மதுரைக்கலம்பகம்:2 1/60
பொருள் நான்கு ஒருங்கு ஈன்ற பொன் மாட கூடல் – மதுரைக்கலம்பகம்:2 2/1
மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2
தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16
புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண் – மதுரைக்கலம்பகம்:2 12/1
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
அறம் தந்த பொன் பொலி கூடல் பிரான் வெற்பில் அம் பொன் படாம் – மதுரைக்கலம்பகம்:2 16/1
அம் மென் மருங்கு ஒசிய ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/4
அழகு எறிக்கும் பூண் முலையீர் ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/5
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/3
அள்ளும் கொடி மதில் பொன் கூடல் வெள்ளியரங்கத்துமே – மதுரைக்கலம்பகம்:2 37/4
கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து – மதுரைக்கலம்பகம்:2 45/1
சேய் இதழ் விரிக்கும் பொன் பொகுட்டு அம்புயம் – மதுரைக்கலம்பகம்:2 47/2
பாண்மகற்கு அலர் பொன் பலகை நீட்டும் – மதுரைக்கலம்பகம்:2 47/3
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1
இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம் – மதுரைக்கலம்பகம்:2 57/3
திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2
பொன்மலை (1)
பொன்மலை கிடப்ப வெள்ளி வெற்பு உகந்தாய்க்கு – மதுரைக்கலம்பகம்:2 47/10
பொன்னொடும் (1)
மின் நுழை மருங்குல் பொன்னொடும் பொலிந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/25