Select Page

கட்டுருபன்கள்


துஞ்சாது (1)

செம் சேவடிக்கு அடிமைசெய்யார் போல் துஞ்சாது
எறி திரை கரும் கடல் ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 44/2,3

மேல்

துஞ்சி (1)

மனனிடை துஞ்சி வாயிடை போந்து – மதுரைக்கலம்பகம்:2 102/2

மேல்

துஞ்சும் (1)

தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3

மேல்

துட்ட (2)

நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3
துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/3

மேல்

துடைக்கும் (1)

பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2

மேல்

துணங்கைக்கு (1)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4

மேல்

துணி (1)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10

மேல்

துதிசெய்து (1)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4

மேல்

துதித்திடும் (1)

சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே – மதுரைக்கலம்பகம்:2 81/4

மேல்

தும்மலும் (1)

சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/2

மேல்

துயர் (1)

பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2

மேல்

துயிலாள் (1)

ஆடாள் மஞ்சனமும் தேடாள் அஞ்சனமும் அயிலாள் அன்னமுமே துயிலாள் இன்னமுமே – மதுரைக்கலம்பகம்:2 59/4

மேல்

துயிலும் (2)

தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3
சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

துரந்தன (1)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன
புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை அறிந்து ஒரு தாளம் வழங்க புகுந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7,8

மேல்

துரந்தாலும் (1)

தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3

மேல்

துரியம் (1)

துரியம் கடந்த துவாத சாந்த – மதுரைக்கலம்பகம்:2 102/26

மேல்

துவக்கா (1)

மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்கா
கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும் – மதுரைக்கலம்பகம்:2 97/1,2

மேல்

துவக்கும் (1)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1

மேல்

துவாத (1)

துரியம் கடந்த துவாத சாந்த – மதுரைக்கலம்பகம்:2 102/26

மேல்

துவைப்ப (1)

இன்னியம் துவைப்ப சங்கம் ஏங்கிட செழியர் ஈன்ற – மதுரைக்கலம்பகம்:2 60/1

மேல்

துழாய் (4)

பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/3
மண் துழாய் உண்டாற்கு கண் மலரோடு ஒண் மவுலி – மதுரைக்கலம்பகம்:2 2/3
தண் துழாய் பூத்த தடம் – மதுரைக்கலம்பகம்:2 2/4
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3

மேல்

துறை (2)

குண்டு நீர் பட்டத்து ஒண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/7
வண் தமிழ் கடலின் தண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/8

மேல்

துறையும் (1)

தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/18

மேல்