ஓட (1)
புந்தி தடத்து புல களிறு ஓட பிளிறு தொந்தி – மதுரைக்கலம்பகம்:1 1/1
ஓடு (3)
நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1
நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1
பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/2
ஓடும் (1)
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3
ஓதனமே (1)
அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/4
ஓயின் (1)
கள்ள திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம் – மதுரைக்கலம்பகம்:2 36/3
ஓர் (14)
ஊன் வலையில் அகப்பட்டார்க்கு உட்படாய் நின் புயத்து ஓர்
மீன் வலை கொண்டதும் ஒருத்தி விழி வலையில் பட்டு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/35,36
நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர்
திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர் – மதுரைக்கலம்பகம்:2 3/2,3
ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3
ஈரித்த தென்றல் இளவாடை திங்கள் என்று ஓர்
பேரிட்ட மும்மை பிணியோ தணியாவால் – மதுரைக்கலம்பகம்:2 31/1,2
அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து – மதுரைக்கலம்பகம்:2 32/1
நடம் கொண்டது ஓர் வெள்ளிமன்று ஏறுதும் இன்று நாளையிலே – மதுரைக்கலம்பகம்:2 33/4
கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர்
ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே – மதுரைக்கலம்பகம்:2 39/1,2
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர்
மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/3,4
கேளார் புரம் செற்ற வில் நாரி தோய கிளர்ந்து உற்றது ஓர்
தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொல கேண்-மினோ – மதுரைக்கலம்பகம்:2 61/1,2
கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே – மதுரைக்கலம்பகம்:2 64/1
வல் இட்ட குறியினொடும் வளை இட்ட குறி உளது ஓர் வடிவுதானே – மதுரைக்கலம்பகம்:2 77/4
முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே – மதுரைக்கலம்பகம்:2 86/4
அன்று அருள் சுரந்தது ஒன்றோ சென்றது ஓர்
வலியாற்கு அருள்வதூஉம் நோக்கி – மதுரைக்கலம்பகம்:2 87/17,18
காதலனாய் மற்று உனக்கு ஓர் காதலியாய் நிற்பது ஒரு காட்சிதானே – மதுரைக்கலம்பகம்:2 95/4
ஓலம் (1)
நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1
ஓவமேயன்னாள் (1)
ஓவமேயன்னாள் உயிர் விற்று பெண் பழி கொள் – மதுரைக்கலம்பகம்:2 29/3