கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நீ 5
நீக்காது 1
நீக்கி 1
நீங்க 1
நீங்காது 1
நீசன் 1
நீத்து 1
நீத 1
நீப 1
நீர் 5
நீர்க்குமிழி 1
நீர்த்துறை 1
நீரானை 1
நீலி 1
நீழல் 4
நீற்றை 1
நீறாக்க 1
நீறு 1
நீறுபட்ட 1
நீறும் 1
நீ (5)
கைகைக்கு கான் நடந்த காகுத்தன் பொறையினும் நீ
வைகைக்கு மண் சுமந்த வண்மை மிக பெரிது அன்றோ – கச்சிக்-:2 1/21,22
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/2
கோதுடைய மன சிலையை குழைத்து அன்பின் நெகிழ்வித்தல் ஐய முன் நாள் குருகு உய்ய உபதேசம் கூறிய நீ எனக்கு உரைத்தால் குறைமட்டாமே – கச்சிக்-:2 14/4
அத்த நீ அளித்த மாந்தழை அரிவைக்கு ஆருயிர் அளித்த காரணத்தால் – கச்சிக்-:2 89/2
தாளம் இரண்டு என்னும் முலை திரு_அனையாய் தளரேல் தரணி புகழ் கச்சி நகர் தலைவனை நீ புணரும் – கச்சிக்-:2 90/1
நீக்காது (1)
தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3
நீக்கி (1)
தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர் – கச்சிக்-:2 82/3
நீங்க (1)
ஆறாத மும்மை மல பிணி நீங்க நல் ஆற்றின் உய்ப்பர் – கச்சிக்-:2 55/2
நீங்காது (1)
வேத வித்தே மிக வேசறுவேற்கு விரைந்து அருள் நீங்காது
அவி தேன் சுரர் உண் கச்சி வாழ் அன்பர்க்கு அண்ணியனே – கச்சிக்-:2 61/3,4
நீசன் (1)
கம்மாளன் நீசன் கடையன் பொதுவன் என்பேன் – கச்சிக்-:2 77/3
நீத்து (1)
கோவணம் நீத்து தீ வணம் பூத்து அ – கச்சிக்-:2 40/23
நீத (1)
மால் வரை மங்கை மணாள நீத
கொன்றை தொடை அணி கோனே பசுபதி – கச்சிக்-:2 1/105,106
நீப (1)
மாது உமையாள் பனிமலையில் வளர்ந்தாள் நின் மதலையரில் கயமுகத்தோன் வர முனிவன் வேண்ட வடவரை ஏட்டில் பாரதப்போர் வரைந்தான் நீப
போது அலங்கல் அணி குமரன் குன்று-தொறும் பேர் உவகை பூப்ப மேவி புனித விளையாட்டு அயர்ந்தான் கச்சி அமர் புண்ணிய நீ கயிலை மேரு – கச்சிக்-:2 14/1,2
நீர் (5)
அம்பு ஒன்றால் புணரி நீர் சுவறச்செய் ஆற்றலினும் – கச்சிக்-:2 1/27
கொண்ட வளை நீர் கச்சி கோமானே பண்டு உனது – கச்சிக்-:2 16/2
உள்ளம் கலங்க ஓங்கு நீர் அழைத்து – கச்சிக்-:2 40/17
திரம் தரும் ஏகம்பவாணரை நீர் என்-கொல் சேர்கிலிரே – கச்சிக்-:2 43/4
தெரிந்து ஆர் மலர் தடத்தின் தெள் நீர் துலைக்கோல் – கச்சிக்-:2 93/1
நீர்க்குமிழி (1)
தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால் – கச்சிக்-:2 10/2
நீர்த்துறை (1)
கதம் மிகுந்து எழும் அத்தி நீர்த்துறை பெடை பிரிந்தில கம்புளே கவலை கூர உஞற்றி மேவுறும் நறை சொரிந்து இலகு அம்பு உளே – கச்சிக்-:2 96/2
நீரானை (1)
நீரானை செம் சடையின் நெற்றி உற்ற நெருப்பானை பொருப்பானை சகத்திர சீர் – கச்சிக்-:2 22/3
நீலி (1)
மகவு ஆய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் வரமைந்தன் ஒரு மாதின் வழி நின்ற திருடன் – கச்சிக்-:2 12/3
நீழல் (4)
நாடும் தொண்டர் மகிழ்வு எய்த நறு மா நீழல் அமர்ந்தானை – கச்சிக்-:2 27/1
மாவின் நீழல் வதிந்து அருள்வார் கச்சி வாழும் இன்பம் மருவு களியரேம் – கச்சிக்-:2 30/1
மன்றில் ஆடிய குழக மா நீழல் வாழ் மணியே – கச்சிக்-:2 45/4
மா நீழல் நல்லார் – கச்சிக்-:2 46/1
நீற்றை (1)
நீற்றை புனைந்தவர் திரு கச்சி போன்ற தலம் நேர்தரும் சத்தி எமதே – கச்சிக்-:2 78/4
நீறாக்க (1)
அரியானை அடல் அவுணர் புரம் நீறாக்க அழல் ஊற்று நகையானை அரனை வேழ – கச்சிக்-:2 53/2
நீறு (1)
கார் ஆனை தோல் உரித்த கறுப்பினானை களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை – கச்சிக்-:2 22/1
நீறுபட்ட (1)
கலக்கு_அரிய பகை புரங்கள் நீறுபட்ட கச்சி ஏகம்பர் மேன்மை – கச்சிக்-:2 9/3
நீறும் (1)
துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கை சூலமும் செம்பொன் – கச்சிக்-:2 91/2