&1. அகத்தியம் – மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்
@1 நன்னூல் உரை – மயிலைநாதர். (பெயரியல், 16ஆம் சூத்திர உரை) – மேற்கோள்
#
கன்னித் தென்கரைக்-கண் பழந்தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குட-பால் இரு புறச் சையத்து
உடன் உறைபு பழகும் தமிழ் திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடு நில ஆட்சி
அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடன் இருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையின் சொல் நயம் உடையவும்
@2 இதே சூத்திரம் – தெய்வச் சிலையார் – தொல். உரை
** (சொல் எச்சம்., 4ஆம் சூத்திர உரை) மேற்கோள்
#1
கன்னித் தென்கரைக் கடல் பழந்தீபம்
கொல்லம் கூபகம் சிங்களம் என்னும்
எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்
கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம்
குடகம் குன்றகம் என்பன குட-பால்
இரு புறச் சையத்து உடன் உறையு புகூஉம்
தமிழ் திரி நிலங்களும்
முடி நிலை மூவர் இடு நில ஆட்சியின்
அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள்
பதின்மரும் உடன் இருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல் நயம் உடையவும்
@3 யாப்பருங்கலம் – எழுத்தோத்து, விருத்தியுரை
#1
இயற்பெயர் சார்த்தி எழுத்து அளபு எழினே
இடியற்பாடு இல்லா எழுத்து ஆனந்தம்
@4 (தொல்.,சொல்.,வேற்றுமையியல், 63,-தெய்வச் சிலையார் உரை மேற்கோள்)
#1
மற்றுச் சொல் நோக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பது முற்றியன் மொழியே
@5 தொல், பொருள், செய்யுளியல், 117, இளம்பூரணர், உரைமேற்கோள்
#1
அராகம் தாமே நான்காய் ஒரோவொன்று
வீதலும் உடைய மூ_இரண்டு அடியே
#2
ஈர் அடி ஆகும் இழிபிற்கு எல்லை
#3
தரவே எருத்தம் அராகம் கொச்சகம்
மடக்கியல் வகையோடு ஐந்து உறுப்பு உடைத்தே
#4
கொச்சக வகையின் எண்ணொடு விராஅய்
அடக்கியல் இன்றி அடங்கவும் பெறுமே
@6 தொல்.,பொருள்.,செய்யுளியல், இளம்பூரணர் உரை மேற்கோள்
#1
இரு-வயின் ஒத்தும் ஒவ்வா இயலினும்
தெரி இழை மகளிரொடு மைந்தரிடை வரூஉம்
கலப்பே ஆயினும் புலப்பே ஆயினும்
ஐந்திணை மரபின் அறிவரத் தோன்றிப்
பொலிவொடு புணர்ந்த பொருள் திறம் உடையது
கலி எனப்படூஉம் காட்சித்து ஆகும்
@7 மயிலை நாதர் – நன்னூல் உரை மேற்கோள்
#1
பெயரினும் வினையினும் மொழி முதல் அடங்கும்
#2
வயிர ஊசியும் மயன் வினை இரும்பும்
செயிர் அறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்
தமக்கு அமை கருவியும் தாம் ஆமவை போல்
உரைத் திறம் உணர்த்தலும் உரையது தொழிலே
#3
பலவின் இயைந்தவும் ஒன்று எனப்படுமே
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய
#4
ஏழ் இயல் முறையது எதிர்முக வேற்றுமை
வேறு என விளம்பான் பெயரது விகாரம் என்று
ஓதிய புலவனும் உளன் ஒரு வகையான்
இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்
#5
வினை நிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்
பெயர்கொள வருதலும் பெயர்ப் பயனிலையே
#6
ஆலும் ஆனும் ஓடு ஒடுவும்
சாலும் மூன்றாம் வேற்றுமைத் தனுவே
செய்வோன் காரணம் செயத்தகு கருவி
எய்திய தொழில் முதல் இயைபு உடைத்ததன் பொருள்
#7
ஆறன் உருபே அது ஆது அவ்வும்
வேறு ஒன்று உரியதைத் தனக்கு உரியதை என
இரு பால் கிழமையின் மருவுற வருமே
ஐம்பால் உரிமையும் அதன் தற்கிழமை
#8
மற்றுச் சொல் நோக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பன முற்றியல் மொழியே
#9
காலமொடு கருத வரினும் ஆரை
மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்றே
#10
முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்
முற்றுச் சொல் என்று முறைமையின் திரியா
#11
காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
பெயர் கொள்ளும் அது பெயரெச்சம்மே
#12
காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
வினை கொள்ளும் அது வினையெச்சம்மே
#13
எனைத்து முற்று அடுக்கினும் அனைத்தும் ஒரு பெயர் மேல்
நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே
வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலப்பல அடுக்கினும் முற்றும் மொழிப்படிய
#14
உலக வழக்கமும் ஒரு முக்காலமும்
நிலைபெற உணர்தரும் முதுமறை நெறியான்
#15
அசை நிலை இரண்டினும் பொருள் மொழி மூன்றினும்
இசைநிறை நான்கினும் ஒரு மொழி தொடரும்
#16
கண்டு பால் மயங்கும் ஐயக் கிளவி
நின்றோர் வருவோர் என்று சொல் நிகழக்
காணா வையமும் பல்லோர் படர்க்கை
@8 யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை
#1
களவினும் கற்பினும் கலக்கம் இல்லாத்
தலைவனும் தலைவியும் பிரிந்தகாலைக்
கையறு துயரமொடு காட்சிக்கு அவாவி
எவ்வமொடு புணர்ந்து நனி மிகப் புலம்பப்
பாடப்படுவோன் பதியொடும் நாட்டொடும்
உள்ளுறுத்து இறினே உயர் கழி ஆனந்தப்
பையுள் என்று பழித்தனர் புலவர்
**
&2 அவிநயம் – மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்
@1 வீரசோழியம் – உரையாசிரியர் மேற்கோள்
** சொல்லதிகாரம் வேற்றுமைப் படலம் 6-ஆம் காரிகை உரை
#1
ஆலும் ஆனும் மூன்றேன் உருபே
#2
** யாப்பதிகாரம் 19-ஆம் காரிகை உரை
ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்க வரினும் அப் பாற்படுமே
@2 யாப்பருங்கலக் காரிகை உரையாசிர்- குணசாகரர்
** (யாப்பருங்கலக்காரிகை 23-ஆம் காரிகை உரை மேற்கோள்)
#1
தத்தம் பா இனத்து ஒப்பினும் குறையினும்
ஒன்றொன்று ஒவ்வா வேற்றுமை வகையால்
பாத் தம் வண்ணம் மேலா ஆகின்
பண் போல் விகற்பம் பா இனத்து ஆகும்
#2
குறட்பா இரண்டு அவை நால் வகைத் தொடையான்
முதல் பாத் தனிச்சொலின் அடி மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா
** (யா காரிகை – 44-ஆம் காரிகையுரை மேற்கோள்)
#3
முன்னிலை நெடிலும் ஆவும் மாவும்
னம் மிகப் புணரும் இயங்கு திணையான
@3 யாப்பருங்கல உரையாசிரியர் – மேற்கோள்
** யாப்பருங்கலம் எழுத்தோத்து உரை மேற்கோள்
#1
அ இ உ எ ஒ இவை குறிய மற்றை ஏழ்
நெட்டெழுத்தாம் நேரப்படுமே
#2
குற்றெழுத்துத் தொண்ணூற்றைந்து ஆகும்
நூற்றொடு முப்பத்துமூன்று நெடிலாம்
#3
இருநூற்றிருபத்தெட்டு விரிந்தன
உயிரே வன்மை மென்மை இடைமை
#4
வல்லெழுத்து ஆறோடு எழு வகையிடத்தும்
உகரம் அரையாம் யகரமோடு இயையின்
இகரமும் குறுகும் என்மனார் புலவர்
#5
அக்கேனமாய் தம் தனிநிலை புள்ளி
ஒற்று இப்பால ஐந்தும் இதற்கே
#6
அளபெடை தனி இரண்டு அல் வரி ஐ ஔ
உளதாம் ஒன்றரை தனியுமை ஆகும்
#7
ஆய்தமும் யவ் அவ்வொடு வரினே
ஐ என் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும்
#8
உவ்வொடு வ ல வரின் ஔ இயல்பு ஆகும்
#9
நெடிய குறிய உயிர்மெய் உயிரும்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூ உயிர்க்குறுக்கமோடு அம் அசைக்கு எழுத்தே
#10
அளபு எழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும்
அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர்
#11
உயிரளபெடையும் குறுகிய உயிரின்
இகர உகரமும் தளை தபின் ஒற்றாம்
#12
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும்
** யாப்பருங்கலம் அசையோத்து உரை மேற்கோள்
#13
நேர் அசை ஒன்றே நிரை அசை இரண்டு அலகு
ஆகும் என்ப அறிந்திசினோரே
#14
நேர் ஓர் அலகு நிரை இரண்டு அலகு
நேர்பு மூன்று அலகு நிரைபு நான்கு அலகு என்று
ஓதினார் புலவர் உணருமாறே
#15
கடையும் இடையும் இணையும் ஐ_இரட்டியும்
** யாப்பருங்கலம் சீரோத்து உரை மேற்கோள்
#16
ஈர் அசைச் சீர் நான்கு இயற்சீர் மூ அசை
இயற்சீர் எட்டனுள் அல்லன விரவினும்
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி
#17
ஈர் அசைச் சீர் பின்முன்னா வைத்து உறழ்ந்து
மாறியக்கால் நால் அசைச் சீர் பதினாறு ஆம்
#18
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி
#19
முதல் இடை நுனிநாப் பல் இதழ் மூக்கு இவை
வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்
#20
உரிமை இயற்சீர் மயங்கியும் பா நான்கு
இருமை வேறு இயல் வெண்பா ஆகியும்
வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற
இயற்சீர் ஆகா என்மனார் புலவர்
#21
நிரை இறு நால் அசை வஞ்சியுள்ளால்
விரவினும் நேர் ஈற்று அல்லவை இயலா
#22
நேர் நடு இயல வஞ்சி உரிச்சீர்
ஆசிரியத்து இயல் உண்மையும் உடைய
** யாப்பருங்கலம் தளையோத்து உரை மேற்கோள்
#23
ஈர் அசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே
** யாப்பருங்கலம் அடியோத்து பத்து உரை மேற்கோள்
#24
இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும்
நால் சீர் அடியான் பாப் பிற மூன்றே
#25
எல்லா அடியினும் இனப் பா நால் சீர்
அல்லா மேல் அடிய பாவினுக்கு இயலா
#26
ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும்
என்று இ முறையே பாவின் சிறுமை
தத்தம் குறிப்பினவே தொடையின் பெருமை
** யாப்பருங்கலம் தொடையோத்து உரை மேற்கோள்
#27
மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும்
அளபெடை இனம்பெறத் தொடுப்பது அளபெடை
#28
ஒரூஉத் தொடை
இரு சீர் இடைவிடில் என்மனார் புலவர்
#29
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை
#30
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை
#31
மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரால்
இயங்கினும் தளை வகை இன்னனம் ஆகும்
** யாப்பருங்கலம் செய்யுளியல் உரை மேற்கோள்
#32
வெண்பா தாழிசை வெண்துறை விருத்தம் என்று
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப
#33
ஏந்திசைச் செப்பல் இசையன ஆகி
வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே
#34
முச் சீர் அடியான் இறுதலும் நேர் நிரை
அச் சீர் இயல்பின் அசையின் இறுதியாம்
#35
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
#36
குறட்பா இரண்டு அவை நால் வகைத் தொடையாய்
முதல் பாத் தனிச்சொலின் அடி மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா
#37
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி நடப்பது இன்னிசை வெண்பா
#38
தொடை மிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா
#39
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை
#40
அடி மூன்று ஆகி வெண்பாப் போல
இறுவதாயின் வெள் ஒத்தாழிசை
#41
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும் இரண்டும் சீர் தபின் வெண்துறை
#42
மூன்றும் நான்கும் அடி-தொறும் தனிச்சொல்
கொளீஇய எல்லாம் வெளிவிருத்தம்மே
#43
தன்-பால் உறுப்புத் தழுவிய மெல்லிய
இன்பா அகவ இசையதை இன்னுயிர்க்கு
அன்பா அறைந்த ஆசிரியம் என்ப
#44
ஏ ஐச் சொல்லின் ஆசிரியம் இறுமே
ஓ ஈ ஆயும் ஒரோவழி ஆகும்
#45
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று
உன்னவும் பெறூஉம் நிலைமண்டிலமே
#46
ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி
நிற்பது நேரிசை ஆசிரியம்மே
#47
இடை பல குறைவது இணைக்குறள் ஆகும்
#48
கொண்ட அடி முதலாய் ஒத்து இறுவது
மண்டிலம் ஒத்து இறின் நிலைமண்டிலமே
#49
ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என் என் கிளவியை ஈறாகப் பெறும்
அன்ன பிறவும் அ நிலைமண்டிலமே
#50
நால் சீர் அடி நான்கு அகத்தொடை நடந்தவும்
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும்
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும்
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தும்
தன் சீர்ப் பாதியின் அடி முடிவு உடைத்தாய்
அந்தத் தொடை இவை அடியா நடப்பின்
குறையா உறுப்பினது துறை எனப்படுமே
#51
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும்
குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும்
#52
ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி
ஏந்திய துள்ளல் இசையது கலியே
#53
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம் என
முத் திறத்தான் வரும் கலிப்பா என்ப
#54
விட்டிசை முதல் பாத் தரவு அடி ஒத்தாங்கு
ஒட்டிய மூன்றிடைத் தாழிசை அதன் பின்
மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம்
ஆசிரியத்தொடு வெள்ளை அறுதல் என்று
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே
#55
உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர்
நிரைத்த அடியான் நீர்த் திரை போல
அசை அடி பெறின் அவை அம்போதரங்கம்
#56
குறில்-வயின் நிரை அசை கூட்டிய வாராது
அடி அவண் பெறினே வண்ணகம் ஆகும்
#57
கலியொடு கொண்டு தன் தளை விரவா
இறும் அடி வரினே வெண்கலி ஆகும்
#58
தரவே ஆகியும் இரட்டியும் தாழிசைச்
சிலவும் பலவும் மயங்கியும் பா வேறு
ஒத்தாழிசைக்கலிக்கு ஒவ்வா உறுப்பின
கொச்சகக்கலிப்பா ஆகும் என்ப
#59
ஈற்றடி மிக்கு அளவு ஒத்தன ஆகிப்
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்
#60
ஐம் சீர் நான்கு அடி கலித்துறை ஆகும்
#61
நால் சீர் நால் அடி வருவதாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத்தம்மே
#62
தூங்கல் இசையாய்த் தனிச்சொல் சுரிதகம்
தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய்
எஞ்சா வகையது வஞ்சிப் பாவே
#63
இரு சீர் நால் அடி மூன்று இணைந்து இறுவது
வஞ்சித் தாழிசை தனி வரின் துறையே
#64
ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்கு அடி வரினும் அப் பாற்படுமே”
** யாப்பருங்கலம் ஒழிபியல் உரை மேற்கோள்
#65
தனியே
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது
இறுதியும் வஞ்சியும் என்ப
#66
தனியே
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது
இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப
#67
எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து
ஒழுக்கலும் அடி தொடை தளை அழியாமை
வழுக்கு_இல் வகையுளி சேர்தலும் உரித்தே
#68
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி
#69
உயிரளபெடையும் குறுகிய உயிரின்
இகர உகரமும் தளை தபின் ஒற்று ஆம்
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும்
** இனி ஒரு சாரார் அகத்திணை புறத்திணை அகப்புறத் திணை
** என மூன்றா யடங்குமென்ப ஆமாறு அவிநயத்துட் காண்க
#70
முற்செய் வினையது முறையா உண்மையின்
ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து
காட்சி ஐயம் தெரிதல் தேற்றல் என
நான்கு இறந்தவட்கு நாணும் மடனும்
அச்சமும் பயிர்ப்பும் அவற்கும்
உயிர்த்து அகத்து அடக்கிய
அறிவு நிறைவும் ஓர்ப்பும் தேற்றமும்
மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தின்
மெய்யுறு வகையும் உள் அல்லது உடம்படாத்
தமிழியல் வழக்கம் எனத் தன் அன்பு மிகை பெருகிய
களவு எனப்படுவது கந்தருவமணமே
@4 நன்னூல் உரையாசிர் மயிலைநாதர் மேற்கோள்
** எழுத்தியல் 13-ஆம் சூத்திர உரை – மேற்கோள்
#0
ஆற்றலுடை உயிர் முயற்சியின் அணு இயைந்து
ஏற்றன ஒலியாய்த் தோன்றுதல் பிறப்பே
** நன்னூல் எழுத்தியல் உரை மேற்கோள்
#1
வன்மையொடு ரஃகான் ழஃகான் ஒழிந்தாங்கு
அல் மெய் ஆய்தமோடு அளபு எழும் ஒரோவழி
#2
பதினெண் மெய்யும் அதுவே மவ்வொடு
ஆய்தமும் அளபு அரை தேய்தலும் உரித்தே
#3
ஙகரம் மொழிக்கு முதலாகுமோ எனின்
க ச த ப நவ்வே ஆதியும் இடையும்
ட ற இடை ண ன ர ழ ல ள இடை கடையே
ஞ ந ம ய வவ்வே மூன்று இடம் என்ப
** நன் – பதவியல் நான்கு உரை மேற்கோள்
#4
அவைதாம்
பெயர்ச்சொல் என்றா தொழிற்சொல் என்றா
இரண்டின் பாலாய் அடங்குமன் பயின்றே
** நன் – பெயர் 7 உரை மேற்கோள்)
#5
அழிதூஉ வகையும் அவற்றின் பாலே
காலம் அறி தொழில் கருத்தினோ பாலே
** (நன் – வினை 1 உரை மேற்கோள்)
#6
காலம் அறி தொழில் கருத்தினோடு இயையப்
பால் வகை-தோறும் படுமொழி வேறே
@5 பன்னிருபாட்டியலில் அவிநய நூலிலிருந்து சில சூத்திரங்கள்
#1
உணவே அமுதம் விடமும் ஆகும்
#2
அந்தச் சாதிக்கு அந்தப் பாவே
தந்தனர் புலவர் தவிர்ந்தனர் வரையார்
#3
வெள்ளையும் அகவலும் விருத்தமும் கலியும்
வஞ்சியும் எஞ்சா மங்கலம் பொருந்தும்
#4
வெள்ளை அகவல் விருத்தம் கலியே
வஞ்சி என்று இவை மங்கலப் பாவே
#5
காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொல் நெறிப் புலவரும் உளரே
#6
பாலன் யாண்டே ஏழ் என மொழிப
#7
மீளி யாண்டே பத்தியை-காறும்
#8
மறவோன் யாண்டே பதினான்கு ஆகும்
#9
திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்
#10
பதினாறு எல்லை காளைக்கு யாண்டே
#11
அத் திறம் இறந்த முப்பதின்-காறும்
விடலைக்கு ஆகும் மிகினே முதுமகன்
#12
நீடிய நாற்பத்தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப
#13
சிற்றில் பாவை கழங்கம் மனையே
பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே
பைம் புனலாட்டே பொழில் விளையாட்டே
நன் மது நுகர்தல் இன்ன பிறவும்
அவரவர்க்கு உரிய ஆகும் என்ப
#14
வேந்தர் கடவுளர் விதிநூல் வழி உணர்
மாந்தர் கலிவெண்பாவிற்கு உரியர்
#15
நாலு வருணமும் மேவுதல் உரிய
உலாப்புறச் செய்யுள் என்று உரைத்தனர் புலவர்
@6 நேமிநாத உரையாசிரியர்
** சொல்லதிகாரம் நான்காம் சூத்திர உரை – மேற்கோள்
#1
ஒருவன் ஒருத்தி பலர் என்று மூன்றே
உயர்திணை மருங்கில் படர்க்கைப்-பாலே
ஒன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை
அன்றி அனைத்தும் அஃறிணைப்-பால
@7 நவநீதப் பாட்டியலின் பழைய உரை
** 91-ஆம் செய்யுள் உரை
** அவிநயனார் கலாவியல் என்னும் பெயருடன்
#1
செவித்திறம் கொள்ளாது தெரியும்காலைத்
தானே நம்பி மகனே மாணி
ஆசான் என்று அவரில் ஒருவர் இழுக்கு_இலைக்
குற்றம் வகுத்து உடன் பாடாமல் சொல்லின்
வென்றியும் பெறுமே
#2
அவை புகு நெறியே ஆயும்காலை
வாயிலின் நிரைத்துக் கூறப் புகும்காலை
இருவரும் புகாஅர் ஒருவர் முன் புகின்
புக்கவன் தொலையும் உய்த்து எனும் உண்மையின்
இருவரும் கூடி ஒருங்குடன் பட்ட
தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர் என்ப
** அவிநயம் முற்றும்
&3 அவிநயம் – தி.வே.கோபாலையர் பதிப்பு
** இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்
** பொருளதிகாரம் – செய்யுளியல் பிற்சேர்க்கை
@1
** அசைக்கு உறுப்பாவன
#1
நெடிய குறிய உயிர்மெய் உயிரும்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூ உயிர்க்குறுக்கமோடு ஆம் அசைக்கு எழுத்தே
** அசைவகைகள்
#2
நேர் அசை ஒன்றே நிரை இரண்டு அலகு
ஆகும் என்ப அறிந்திசினோரே
#3
கடையும் இடையும் இணையும் ஐ இரட்டியும்
#4
நேர்பு மூன்று அலகு நிரைபு நான்கு அலகு என்று
ஓதினார் புலவர் உணருமாறே
** சீர் வகைகள்
#5
ஈர் அசைச் சீர் நான்கு இயற்சீர் மூ அசையின்
இயற்சீர் எட்டினுள் அல்லன விரவினும்
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி
** ஓரசைச்சீர்
#6
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி
** நாலசைச்சீர்
#7
ஈர் அசைச் சீர் பின்முன்னா வைத்து உறழ்ந்து
மாறியக்கால் நால் அசைச் சீர் பதினாறு ஆகும்
** ஆசிரியத்தளை
#8
ஈர் அசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே
** பாவடிகளின் சீர் வரையறை
#9
இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும்
#10
நால் சீர் அடியான் பாப் பிற மூன்றே
#11
எல்லா அடியினும் இனப் பா நால் சீர்
அல்லா மெல்லடி பாவினுக்கு இயலா
** முரண்தொடை
#12
மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும்
** இயைபுத்தொடை
#13
இறுவாய் ஒப்பின் அஃது இயைபு என மொழிப
** அளபெடைத்தொடை
#14
அளபெடை இனம்பெறத் தொடுப்பது அளபெடை
** ஒரூஉத்தொடை
#15
ஒரூஉத்தொடை
இரு சீர் இடையிடின் என்மனார் புலவர்
** செந்தொடை
#16
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை
** இரட்டைத்தொடை
#17
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை
** தொடைகளுக்குப் புறனடை
#18
மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரான்
இயங்கினும் தளை வகை இன்னன ஆகும்
** பாவும் பாவினமும்
#19
வெண்பா தாழிசை வெண்துறை விருத்தம் என்று
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப
** வெண்பா யாப்பு
#20
ஏந்திசைச் செப்பல் இசையன ஆகி
வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே
** வெண்பா ஈற்றடி
#21
முச் சீர் அடியான் இறுதலும் நேர் நிரை
அச் சீர் இயல்பின் அசையின் இறுதியாம்
** குறள் வெண்பா
#22
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
#23
ஐம்பெரும் தொடையின் இனக் குறள் விகற்பம்
செந்தொடை விகற்பொடு செயிர் தீர் ஈர் அடி
** சிந்தியல் வெண்பா
#24
நேரிசைச் சிந்தும் இன்னிசைச் சிந்தும் என்று
ஈர் அடி முக்கால் இரு வகைப்படுமே
** நேரிசை வெண்பா
#25
குறட்பா இரண்டு அவை நால் வகைத் தொடையாய்
முதல் பாத் தனிச்சொலின் அ மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா
** இன்னிசை வெண்பா
#26
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி நடப்பது இன்னிசை வெண்பா
** பஃறொடை வெண்பா
#27
தொடை மிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா
** வெள்ளொத்தாழிசை
#28
அடி மூன்று ஆகி வெண்பாப் போல
இறுவதாயின் வெள் ஒத்தாழிசை
** வெண்துறை
#29
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும் இரண்டும் சீர் தபின் வெண்துறை
** வெளிவிருத்தம்
#30
மூன்றும் நான்கும் அடி-தொறும் தனிச்சொல்
கொளீஇய எல்லாம் வெளிவிருத்தம்மே
** ஆசிரியப்பா
#31
தன்-பால் உறுப்புத் தழுவிய மெல்லிய
இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க்கு
அன்பா அறைந்த ஆசிரியம் என்ப
#32
ஏ ஐச் சொல்லின் ஆசிரியம் இறுமே
ஓ ஈ ஆயும் ஒரோவழி ஆகும்
#33
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று
உன்னவும் பெறூஉம் நிலைமண்டிலமே
** நேரிசை ஆசிரியம்
#34
ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி
நிற்பது நேரிசை ஆசிரியம்மே
** இணைக்குறள் ஆசிரியம்
#35
இடை பல குறைவது இணைக்குறள் ஆகும்
** நிலைமண்டில ஆசிரியம்
#36
ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என் என் கிளவியை ஈறாகப் பெறும்
அன்ன பிறவும் அ நிலைமண்டிலமே
** அடிமறி மண்டில ஆசிரியம்
#37
கொண்ட அடி முதலாய் ஒத்து இறுவது
மண்டிலம் ஒத்து இறின் நிலைமண்டிலமே
** ஆசிரியத்துறை
#38
நால் சீர் அடி நான்கு அந்தாதி நடந்தவும்
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும்
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும்
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தவும்
தன் சீர் பாதியின் அடி முடிவு உடைத்தாய்
அந்தத் தொடை இவை அடியா நடப்பின்
குறையா உறுப்பினது துறை எனப்படுமே
** ஆசிரிய விருத்தம்
#39
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும்
குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும்
** கலிப்பா இலக்கணம்
#40
ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி
ஏய்ந்த துள்ளல் இசையது கலியே
** கலிப்பா வகை
#41
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம் என
முத் திறத்தான் வரும் கலிப்பா என்ப
** நேரிசை ஒத்தாழிசை
#42
விட்டிசை முதல் பா தரவு அடி ஒத்தாங்கு
ஒட்டிய மூன்றிடைத் தாழிசை அதன் பின்
மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம்
ஆசிரியத்தோடு வெள்ளை இறுதல் என்று
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே
** அம்போதரங்க ஒத்தாழிசை
#43
உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர்
நிரைத்த அடியான் நீர்த் திரை போல
அசை அடி வரின் அவை அம்போதரங்கம்
** வண்ணக ஒத்தாழிசை
#44
குறில்-வயின் நிரை அசை கூடிய அடி பெறினே
வண்ணகம் ஆகும்
** வெண்கலி
#45
கலி ஒலி கொண்டு தன் தளை விரவா
இறும் அடி வரினே வெண்கலி ஆகும்
** கொச்சகக்கலி
#46
தரவே ஆகியும் இரட்டியும் தாழிசை
சிலவும் பலவும் மயங்கியும் பல்வேறு
ஒத்தாழிசைக்கலிக்கு ஒவ்வா உறுப்பின
கொச்சகக்கலிப்பா ஆகும் என்ப
** கலித்தாழிசை
#47
ஈற்றடி மிக்கு அளவு ஒத்தன ஆகி
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்
** கலித்துறை
#48
ஐம் சீர் நான்கு அடி கலித்துறை ஆகும்
** கலிவிருத்தம்
#49
நால் சீர் நால் அடி வருவதாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத்தம்மே
** வஞ்சிப்பா
#50
தூங்கல் இசையாய்த் தனிச்சொல் சுரிதகம்
தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய்
எஞ்சாது அமைவது வஞ்சிப்பாவே
** வஞ்சித்தாழிசையும் துறையும்
#51
இரு சீர் நால் அடி மூன்று இணைந்து இறுவது
வஞ்சித் தாழிசை தனி வரின் துறையே
** தளை சிதைவுழிப்படும் இலக்கணம்
#52
உயிரளபெடையும் குறுகிய உயிரின்
இகர உகரமும் தளை தபின் ஒற்றாம்
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும்
#53
அளபு எழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும்
அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர்
** சீர் மயக்கம்
#54
உரிமையின் இயற்சீர் மயங்கியும் பா நான்கு
இருமை வேறு இயல் வெண்பா ஆகியும்
வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற
இயற்சீர் ஆகா என்மனார் புலவர்
#55
நிரை இறு நால் அசை வஞ்சியுள் அல்லால்
விரவினும் நேர் ஈற்று அல்லவை நில்லா
#56
நேர் நடு இயலா வஞ்சி உரிச்சீர்
ஆசிரியத்து இயல் உண்மையும் உடைய
** பாவின் சிறுமை பெருமை
#57
ஒன்றும் இரண்டும் மூன்றும் ஈர்_இரண்டும்
என்று இ முறையே பாவின் சிறுமை
தம் குறிப்பினவே தொடையின் பெருமை
** வெண் செந்துறை
#58
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை
** கூன் ஆமாறு
#59
தனியே,
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது
இறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப
** குறிப்பிசை – வகையுளி
#60
எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து
ஒழுக்கலும் அடியொடு தளை சிதையாமை
வழுக்கு_இல் வகையுளி சேர்த்தலும் உரித்தே
** பாப்போலி
#61
ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்கடி வரினும் அப் பாற்படுமே
** அடிவரையறை இல்லன
#62
செயிர் தீர் செய்யுள் தெரியும்காலை
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும்
ஓர் அடியானும் ஒரேவிடத்து இயலும்
#63
அவைதாம்
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆக்கின என்ப அறிந்திசினோரே
**
&4 காக்கைபாடினியம் – மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்.
@1 யாப்பருங்கல விருத்தி யுரைகாரார் மேற்கோள்
#1
தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்காயனார் பகுத்துப் பன்னினார் நல் யாப்புக்
கற்றார் மதிக்கும் கலைக் காக்கைபாடினியார்
சொற்றார் தம் நூலுள் தொகுத்து
@2 யாப்பருங்கலக் காரிகை – குணசாகரர் உரை – மேற்கோள்
#1
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம்
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு
அப் பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும்
#2
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே
#3
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும்
ஆகுந என்ப அறிந்திசினோரே
#4
குன்று கூதிர் பண்பு தோழி
விளி இசை முத்து உறழ் என்று இவை எல்லாம்
தெளிய வந்த செந்துறைச் செந்துறை
#5
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்ப வகையது வெண்தளை ஆகும்
#6
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றிக்
கலக்கும் தளை எனக் கண்டிசினோரே
#7
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும்
#8
வெண்சீர் இறுதியின் நேர் அசை பின்வரின்
வெண்சீர் வெண்தளை ஆகும் என்ப
#9
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வரக்
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும்
#10
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின்
பந்தம் எனப் பெயர் பகரப்படுமே
#11
இரு சீர் குறளடி சிந்தடி முச் சீர்
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப
#12
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு
ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே
#13
இரண்டு முதலா எட்டு ஈறாகத்
திரண்ட சீரான் அடி முடிவு உடைய
இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும்
சிறந்த அல்ல செய்யுளுள்ளே
#14
ஒரு தொடை ஈர் அடி வெண்பாச் சிறுமை
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து
வருவன ஆசிரியம்_இல் என மொழிப
வஞ்சியும் அப் பா வழக்கின ஆகும்
#15
நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுதல் இலவே
#16
உரைப்போர் குறிப்பினை நீக்கிப் பெருமை
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே
#17
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாது ஆவது செந்தொடை தானே
#18
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர்க் கொடை கொள்ளப்படுமே
#19
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும்
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா
#20
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா
நடையது பஃறொடை நாமம்கொளலே
#21
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் எனப் பெயர் வேண்டப்படுமே
#22
அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்
#23
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு
நிற்பதுதானே நிலைமண்டிலமே
#24
என் என் கிளவி ஈறாப் பெறுதலும்
அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற
நிற்கவும் பெறூஉம் நிலைமண்டிலமே
#25
உரைப்போர் குறிப்பின் உணர் வகை இன்றி
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள்
மதிக்கப்படாதன மண்டில யாப்பே
#26
தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி
#27
நீர்த் திரை போல நிரலே முறைமுறை
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை
விட்டு இசை விரியத் தொடுத்துச் சுரிதகம்
தாங்கித் தழுவும் தரவினோடு ஐந்தும்
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம்
#28
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின்
வெண்பா இயலது வெண்கலி ஆகும்
#29
அந்தடி மிக்குப் சிலபலவாய் அடி
தம்தமுள் ஒப்பன தாழிசை ஆகும்
#30
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும்
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாகியும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும்
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும்
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய்
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பின்
கிடக்கை முறையில் கிழமையதாயும்
தரவொடு தாழிசை அம்போதரங்கம்
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி
இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும்
#31
ஐம் சீர் அடியின் அடித்தொகை நான்மையோடு
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை
#32
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை
ஈர்_இரண்டு ஆகி இயன்றன யாவையும்
காரிகை சார்ந்த கலிவிருத்தம்மே
#33
குறளடி நான்கு அவை கூடின ஆகி
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்
#34
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும்
#35
இ உ இரண்டின் குறுக்கல் தளை தப
நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும்
#36
உயிரளபு ஏழும் உரைத்த முறையான்
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே
#37
ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி
வேறு அலகு எய்தும் விதியின ஆகும்
@3 வீரசோழிய உரை – பெருந்தேவனார் மேற்கோள்
#1
உரைத்த பாவினுக்கு ஒத்த அடிகள்
வகுத்துரை பெற்றி அன்றிப் பிறவும்
நடக்கும் மாண நடத்தையுள்ளே
@4 பேராசிரியர், தொல் – (பொருள் – செய்யுளியல்) உரை – மேற்கோள்
#1
வெண்சீர் ஒன்றின் வெண்தளை கொளாஅல்
#2
வெண்சீர் ஒன்றினும் வெண்தளை ஆகும்
இன்சீர் விரவிய காலையான
@5 யாப்பருங்கல விருத்தியுரை – மேற்கோள்
#1
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமையொடு ஆய்தம்
இ உ ஐ என மூன்றன் குறுக்கமொடு
அப் பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும்
#2
ஆய்தமும் ஒற்றும் அளபு எழு நின்றுழி
வேறு அலகு எய்தும் விதியின ஆகும்
#3
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப
நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும்
#4
உயிரளபு ஏழும் உரைத்த முறையான்
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே
#5
தனி அசை என்றா இணை அசை என்னா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே
#6
நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணை அசை ஆதல் இல என மொழிப
#7
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு
எய்தும் இணை அசை என்றிசினோரே
#8
ஒரோ அகையினால் ஆகிய ஈர் அசைச்
சீர் இயற்சீர் எனச் செப்பினர் புலவர்
#9
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்
#10
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள்
அந்தம் தனி அசை வெள்ளை அல்லன
வஞ்சிக் கிழமை வகைப்பட்டனவே
#11
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும்
மயக்க முறைமையின் நால் வகைப் பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்
#12
உரிச்சீர் விரவலாயும் இயற்சீர்
நடக்குன ஆசிரியத்தொடு வெள்ளை
அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே
#13
நால் அசையால் நடை பெற்றன வஞ்சியுள்
ஈர் ஒன்று இணைதலும் ஏனுழி ஒன்றுசென்று
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும்
ஆகுன என்ப அறிந்திசினோரே
#14
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
இணை உள ஆசிரியத்தன ஆகா
#15
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்ப வகையது வெண்தளை ஆகும்
#16
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றிக்
கலக்கும் தளை எனக் கண்டிசினோரே
#17
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும்
#18
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வரக்
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும்
#19
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின்
பந்தம் எனப் பெயர் பகரப்படுமே
#20
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தானே
#21
இரு சீர் குறளடி சிந்தடி முச் சீர்
அளவடி நால் சீர் அறு சீர் அதனின்
இழிபு நெடிலடி என்றிசினோரே
#22
சிந்தடி குறளடி என்றா இரண்டும்
வஞ்சிக் கிழமை வகைப்பட்டனவே
#23
ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும்
நால் சீர் அடியால் நடைபெற்றனவே
#24
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே
#25
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இனச் செய்யுள் எல்லா அடியினும் நடக்கும்
#26
ஒரு தொடை ஈர் அடி வெண்பாச் சிறுமை
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து
வருவன ஆசிரியம் இல் என மொழிப
வஞ்சியும் அப் பா வழக்கின ஆகும்
#27
நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுதல் இலவே
#28
உரைப்போர் குறிப்பினை அன்றிப் பெருமை
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே
#29
தொடை எனப்படுவது அடை வகை தெரியின்
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின்
நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும்
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே
#30
மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின்
இரணத் தொடை என்று எய்தும் பெயரே
#31
செம்பகை அல்லா மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை ஆகும்
#32
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே
#33
வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை
என்று இ முறையின் எண்ணிய மும்மையும்
தத்தம் பெயரால் தழுவும் பெயரே
#34
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி
அறைந்த உறுப்பின் அகறல் இன்றி
விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும்
#35
சிந்தடியானே இறுதலும் அவ் அடி
அந்தம் அசைச் சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளை வழக்கியல் தானே
#36
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர்க் கொடை கொள்ளப்படுமே
#37
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும்
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா
#38
தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம்
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இதன் பெயர் இன்னிசை என்றிசினோரே
#39
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா
நடையது பஃறொடை நாமம்கொளலே
#40
ஒரு விகற்பு ஆகித் தனிச்சொல் இன்றியும்
இரு விகற்பு ஆகித் தனிச்சொல் இன்றியும்
தனிச்சொல் பெற்றுப் பல விகற்பு ஆகியும்
தனிச்சொல் இன்றிப் பல விகற்பு ஆகியும்
அடியடி-தோறும் ஒரூஉத் தொடை அடைநவும்
என ஐந்து ஆகும் இன்னிசை தானே
#41
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும்
#42
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி
வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின்
தன் பா இனங்களில் தாழிசை ஆகும்
#43
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி
ஒன்றும் இரண்டும் மொழி சீர்ப்படுதவும்
வெண்துறை நாமம் விதிக்கப்படுமே
#44
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் எனப் பெயர் வேண்டப்படுமே
#45
அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்
#46
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி
இடைப்பால் முதல் ஈறு என்று இவை தம்முள்
மதிக்கப்படாதன மண்டில யாப்பே
#47
அடித்தொகை நான்கு பெற்று அந்தத் தொடை மேல்
கிடப்பது நால் சீர்க் கிழமையது ஆகி
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின்
அடிப் பெறின் ஆசிரியத் துறை ஆகும்
#48
அளவடி ஐம் சீர் நெடிலடி தம்முள்
உறழத் தோன்றி ஒத்த தொடையாய்
விளைவதும் அப் பெயர் வேண்டப்படுமே
#49
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய்
விளைகுவது அப் பா இனத்து உள விருத்தம்
#50
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல்
கலிச் சொல் பொருள் எனக் கண்டிசினோரே
#51
வெண்கலி ஒத்தாழிசைக்கலி கொச்சகம்
என்று ஒரு மூன்றே கலி என மொழிப
#52
தரவே தாழிசை தனிநிலை சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி
#53
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும்
துன்னும் இடத்துத் துணிந்தது போல் இசை
தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே
#54
தத்தமில் ஒத்துத் தரவின் அகப்பட
நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை
#55
ஆங்கு என் கிளவி அடையாத் தொடைபட
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல்
#56
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள்
ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும்
#57
நீர்த் திரை போல நிரலே முறைமுறை
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை
விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்
தாங்கித் தழுவும் தரவினோடு ஏனவும்
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம்
#58
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின்
வெண்பா இயலது வெண்கலி ஆகும்
#59
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும்
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும்
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும்
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய்
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்புக்
கிடக்கை முறையில் கிழமையதாயும்
தரவொடு தாழிசை அம்போதரங்கம்
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி
இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும்
#60
அந்தடி மிக்குப் பலசிலவாய் அடி
தம்தமில் ஒன்றிய தாழிசை ஆகும்
#61
ஐம் சீர் முடிவின் அடித்தொகை நான்மையோடு
எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை
#62
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத்தம்மே
#63
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை
வஞ்சி எனப்பெயர் வைக்கப்படுமே
#64
ஒன்றின நான்மை உடையதாய்க் குறளடி
வந்தன வஞ்சித் துறை எனல் ஆகும்
#65
குறளடி நான்கு இவை கூடின ஆகி
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்
#66
உணர்த்திய பாவினுக்குள் ஒத்த அடிகள்
வகுத்து உரை பெற்றியும் அன்றிப் பிறவும்
நடக்குன ஆண்டை நடைவகையுள்ளே
#67
உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும்
மறுக்கப்படாத மரபின ஆகியும்
எழுவாய் இடமா அடிப் பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே
#68
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் எனக்
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே
@6
** காக்கைபாடினியார் கூறும் தமிழ் நூல் வழங்கும் எல்லை
** இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் – உரைப்பாயிரத்தில்
#1
வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று
அ நான்கு எல்லை அக-வயின் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்
**
&5 காக்கைபாடினியம் – தி வே கோபாலையர் பதிப்பு
** இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்
** பொருளதிகாரம் – செய்யுளியல் பிற்சேர்க்கை
@1
**பாயிரம்
#1
வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும்
வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று
இ நான்கு எல்லை அக-வயின் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்
**அசைக்கு உறுப்பாவன
#2
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமையொடு ஆய்தம்
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு
அப் பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும்
** அசைவகைகள்
#3
தனி அசை என்றா இணை அசை என்றா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே
** அசை ஆகாதன
#4
நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணை அசை ஆகுதல் இல என மொழிப
** இயற்சீர்
#5
ஒரோஒ அசையினால் ஆகிய ஈர் அசைச்
சீஇர் இயற்சீர் என்னப்படுமே
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்
** மூவசைச்சீர்
#6
மூ அசையான் முடிவு எய்திய எட்டினுள்
அந்தம் தனிச் சீர் நான்கு அசை வெள்ளை
அல்லன வஞ்சிக் கிழமை வகைப்பட்டனவே
** நாலசைச்சீரும் ஓரசைச்சீரும்
#7
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசைச்
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே
** ஆசிரியத்தளை
#8
இயற்சீர் இரண்டும் தலைப்பெயல் தம்முள்
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும்
** வெண்தளை
#9
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்ப நடையது வெண்தளை ஆகும்
#10
உரிச்சீர் அதனுள் உரைத்தமை அன்றிக்
கலக்கும் தளை எனக் கண்டிசினோரே
** கலித்தளை
#11
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வரக்
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும்
** வஞ்சித்தளை
#12
தன் சீர் இரண்டும் தலைப்பெயல் தம்முள் ஒத்து
ஒன்றினும் ஒன்றாது ஒழுகினும் வஞ்சியின்
பந்தம் எனப் பெயர் பகரப்படுமே
** நாலசைச்சீர் தளைபெறுதல்
#13
உரைச் சீர் தளை வகைக்கு எய்தும் பெயரது
நிரை நேர் இறுதி நால் அசைச் சீர்கள்
** ஓரசைச்சீர் தளைபெறுதல்
#14
ஓர் அசைப் பொதுச் சீர் தளை வகை தெரியின்
ஈர் அசைச் சீர்த் தளைக்கு எய்தும் என்ப
#15
ஓர் அசைப் பொதுச் சீர் ஒன்றாதாயினும்
வெண்தளை ஒன்றியது ஆசிரியத் தளையே
** அடிவகை
#16
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தாமே
** அடிகளின் பெயர்விளக்கம்
#17
இரு சீர் குறளடி சிந்தடி முச் சீர்
அளவடி நால் சீர் அறு சீர் அதனின்
இழிவு நெடிலடி என்றிசினோரே
** வஞ்சிப்பாவின் அடி
#18
சிந்தடி குறளடி என்றா இரு திறமும்
வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே
** ஏனைய பாக்களின் அடி
#19
ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும்
நால் சீர் அடியால் நடைபெற்றனவே
#20
சிந்தும் குறளும் வருதலும் அவ் வழி
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே
** பா இனங்களின் அடி
#21
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இசைச் செயுள் எல்லா அடியினும் நடக்கும்
** தொடை இலக்கணம்
#22
தொடை எனப்படுவது அடை வகை தெரியின்
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின்
நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி
அடியொடு அடியிடை யாப்புற நிற்கும்
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே
** தொடையால் பெயரிடுதல்
#23
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே
** முரண்தொடை
#24
மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின்
இரணத் தொடை என்று எய்தும் பெயரே
** செந்தொடை
#25
செம்பகை இல்லா மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை ஆகும்
** பாவினம்
#26
வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை
என்று இ முறையின் எண்ணிய மும்மையும்
தத்தம் பெயரால் தழுவும் பெயரே
** வெண்பா
#27
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி
மறைந்த உறுப்பின் அகறல் இன்றி
விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும்
** #28
சிந்தடியானே இறுதலும் அவ் வழி
அந்தம் அசைச் சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளை வழக்கியல் தானே
** குறள்வெண்பா
#29
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர்க் கொடை கொள்ளப்படுமே
** நேரிசை வெண்பா
#30
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது
இரண்டு துணியாய் இடைதனில் போழ்ந்து
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா
** இன்னிசை வெண்பா
#31
தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம்
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இதன் பெயர் இன்னிசை என்றிசினோரே
** பஃறொடை வெண்பா
#32
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா
நடையது பஃறொடை நாமம்கொளலே
** வெண்தாழிசை
#33
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி
வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின்
தன் பா இனங்களின் தாழிசை ஆகும்
** வெண்துறை
#34
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி
ஒன்றும் இரண்டும் ஒழி சீர்ப்படுநவும்
வெண்துறை நாமம் விதிக்கப்படுமே
** வெளிவிருத்தம்
#35
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் எனப் பெயர் வேண்டப்படுமே
** இணைக்குறள் ஆசிரியம்
#36
அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்
** அடிமறி மண்டிலம்
#37
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி
இடைப்பால் முதல் ஈறு என்று இவை தம்முள்
மதிக்கப்படாதன மண்டில யாப்பே
** ஆசிரியத்துறை
#38
அடித்தொகை நான்கு பெற்று அந்தத் தொடை மேல்
கிடப்பது நால் சீர்க் கிழமையது ஆகி
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின்
அடிப் பெறின் ஆசிரியத் துறை ஆகும்
#39
அளவடி ஐம் சீர் நெடிலடி தம்முள்
உறழத் தோன்றி ஒத்த தொடையாய்
விளைவதும் அப் பெயர் வேண்டப்படுமே
** ஆசிரிய விருத்தம்
#40
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய்
விளைகுவது அப் பா இனத்துள் விருத்தம்
** கலிப்பா
#41
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி
எடுத்து உயிர் துள்ளல் இசையன ஆதல்
கலிச் சொல் பொருள் எனக் கண்டிசினோரே
** கலிப்பாவகை
#42
வெண்கலி ஒத்தாழிசைக்கலி கொச்சகம்
என்று ஒரு மூன்றே கலி என மொழிப
** வெண்கலி
#43
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின்
வெண்பா இயலது வெண்கலி ஆகும்
** ஒத்தாழிசைக்கலி
#44
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி
** தரவு
#45
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும்
துன்னும் இடத்துத் துணிந்தது போல் இசை
தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே
** தாழிசை
#46
தத்தமில் ஒத்துத் தரவின் அகப்பட
நிற்பன மூன்றும் நிரந்த தாழிசையே
** தனிச்சொல்
#47
ஆங்கு என் கிளவி அடையாத் தொடைபட
நீங்கி நிற்கும் நிலையது தனிச்சொல்
** சுரிதகம்
#48
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள்
ஒன்றாகி அடி ஒத்த இறுதி வருவது
சுழியம் எனப் பெயர்ச் சுரிதகம் என்ப
** அம்போதரங்கம்
#49
நீர்த் திரை போல நிரலே முறைமுறை
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை
விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம்
தாக்கித் தழுவும் தரவினொடு ஏனவும்
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம்
** கொச்சகம்
#50
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும்
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும்
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும்
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய்
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்புக்
கிடக்கை முறைமையின் கிழமையதாயும்
தரவொடு தாழிசை அம்போதரங்கம்
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை இன்றி
இடைநிலை வெண்பாச் சிலபல சேர்ந்து
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும்
** கலித்தாழிசை
#51
அந்தடி மிக்குப் பலசிலவாய் அடி
தம்தமில் ஒன்றிய தாழிசை ஆகும்
** கலித்துறை
#52
ஐம் சீர் முடிவின் அடித்தொகை நான்மையொடு
எஞ்ச முடிந்தன எல்லாம் கலித்துறை
** கலிவிருத்தம்
#53
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத்தம்மே
** வஞ்சிப்பா
#54
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை
வஞ்சி எனப் பெயர் வைக்கப்படுமே
** வஞ்சித்தாழிசை
#55
குறளடி நான்கு இவை கூடினவாயின்
முறைமையின் அவ் வகை மூன்று அணைந்து ஒன்றி
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்
** வஞ்சித்துறை
#56
ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி
வந்தன வஞ்சித் துறை எனல் ஆகும்
** அலகிடும் முறையும் வேறுபாடும்
#57
உயிரளபு ஏழும் உரைத்த முறையான்
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே
#58
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப
நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும்
#59
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு
எய்தும் இணை அசை என்றிசினோரே
#60
ஆய்தமும் ஒற்றும் அளபு எழூஉ நிற்புழி
வேறு அலகு எய்தும் விதியின ஆகும்
** சீர் மயக்கம்
#61
இயற்சீர் உரிச்சீர் எனும் இரு சீரும்
மயக்கம் உண்மையின் நால் வகைப் பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்
#62
உரிச்சீர் விரவலாயும் இயற்சீர்
நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை
அந்தம் கனியா இயற்சீர் கலியொடு
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே
#63
நால் அசையால் நடை பெற்றன வஞ்சியுள்
ஈர் ஒன்று இணைதலும் ஏனுழி ஒன்றுசென்று
வஞ்சிக்கு உரைத்தன ஆதலும்
ஆகுந என்ப அறிந்திசினோரே
** ஆசிரியப்பாவுக்கு ஆகாத சீர்கள்
#64
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
இணை உள ஆசிரியத்தன ஆகா
** பாக்களின் சிறுமை பெருமை
#65
ஒரு தொடை ஈர் அடி வெண்பாச் சிறுமை
#66
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து
வருவன ஆசிரியம் இல் என மொழிப
#67
வஞ்சியும் அப் பா வழக்கின ஆகும்
#68
நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுதல் இலவே
#69
உரைப்போர் குறிப்பினை அன்றிப் பெருமை
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே
** வெண்செந்துறை
#70
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும்
** கூன்ஆமாறும் வருமிடமும்
#71
உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும்
மறுக்கப்படாத மரபின ஆகியும்
எழுவாய் இடமா அடிப் பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே
#72
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் எனக்
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே
** புறனடை
#73
உணர்த்திய பாவினுள் ஒத்த அடிகள்
வகுத்து உரை பெற்றியும் அன்றிப் பிறவும்
நடக்குந ஆண்டை நடை வகையுள்ளே
**
&6 காக்கை பாடினியம் தொகுப்பு – இரா. இளங்குமரன்
** 1 உறுப்பியல்
@1 எழுத்து
#1
** அசைக்கு உறுப்பாம் எழுத்தின் வகை
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம்
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு
அப் பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும்
** – யா. வி. 2. மேற் – யா. கா. 4. மேற்
#2
** ஆய்தமும் ஒற்றும் அலகுபெறும் இடம்
ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி
வேறு அலகு எய்தும் விதியின ஆகும்
** -யா. வி. 3 மேற்.- யா. கா. 36 மேற்.
#3
** இகர உகரங்களுக்குச் சிறப்பு விதி
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப
நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும்
** -யா. வி. 4, 94. மேற்.- யா. கா. 36. மேற்.
#4
** உயிரளபெடைக்குச் சிறப்பு விதி
உயிரளபு ஏழும் உரைத்த முறையான்
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே
** -யா. வி. 4 மேற். – யா. கா. 36 மேற்.
@2 அசை
#5
** அசைகளின் பெயரும் தொகையும்
தனி அசை என்றா இணை அசை என்னா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே
** -யா. வி. 5 மேற்.
#6
** இணையசை ஆகாதவை
நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணை அசை ஆதல் இல என மொழிப
** -யா. வி. 8 மேற்.
#7
** ஐகாரத்திற்குச் சிறப்பு விதி
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு
எய்தும் இணை அசை என்றிசினோரே
** -யா. வி. 8 மேற்.
@3 சீர்
#8
** இயற்சீர் இன்னதென்பது
ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசைச்
சீர் இயற்சீர் எனச் செப்பினர் புலவர்
** -யா. வி. 11 மேற்.
#9
** இயற்சீருக்கு மேலுமொரு பெயர்
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்
** -யா. வி. 11 மேற்.
#10
** வெண்பா உரிச்சீரும் வஞ்சி உரிச்சீரும்
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள்
அந்தத் தனி அசை வெள்ளை அல்லன
வஞ்சிக் கிழமை வகைப்பட்டனவே
** -யா. வி. 11 மேற்.
#11
** இயற்சீரும் உரிச்சீரும் வரும் இடங்கள்
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும்
மயக்க முறைமையின் நால் வகைப் பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்
** -யா. வி. 11 மேற்.
#12
** இயற்சீர் உரிச்சீர் வருமிடங்களுக்கு ஒரு சிறப்பு விதி
உரிச்சீர் விரவலாயும் இயற்சீர்
நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை
அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே
** -யா. வி. 11 மேற்.
#13
** இணைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் ஆசிரியத்துள் வாராமை
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
இணை உள ஆசிரியத்தன ஆகா
** -யா. வி. 16 மேற்.
#14
** நாலசைச்சீரும் ஓரசைச்சீரும்
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே
** -யா.வி. 13 மேற். – யா. கா. 6 மேற்.
#15
** நாலசைச்சீர் செய்யுளில் வருமாறு
நால் அசையால் நடைபெற்றன வஞ்சியுள்
ஈர் ஒன்றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்று
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும்
ஆகுந என்ப அறிந்திசினோரே
** -யா. வி. 15 மேற். – யா. கா. 8 மேற்.
@4 தளை
#16
** ஆசிரியத்தளை
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும்
** -யா. வி. 18, 21 மேற். – யா. கா. 10 மேற்.
#17
** இயற்சீர் வெண்தளை
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்
விகற்ப நடையது வெண்தளை ஆகும்
** -யா. வி. 18, 21 மேற். -யா. கா. 10 மேற்.
#18
** வெண்சீர் வெண்தளை
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றிக்
கலக்கும் தளை எனக் கண்டிசினோரே
** -யா. வி. 21 மேற். – யா. கா. 10 மேற்.
#19
** கலித்தளை
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வரக்
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும்
** -யா. வி. 21 மேற்.- யா. கா. 10 மேற்.
#20
** வஞ்சித் தளைகள்
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின்
பந்தம் எனப் பெயர் பகரப்படுமே
** -யா. வி. 21. மேற். – யா. கா. 10 மேற்.
@5 அடி
#21
** அடியின் வகை
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தானே
** யா. வி. 16 மேற்.
#22
** அடி அளவு
இரு சீர் குறளடி சிந்தடி முச் சீர்
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப
** -யா. வி. 24 மேற். – யா. கா. 12.
#23
** கழிநெடிலடிக்கு மேலும் ஓர் அளவு
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு
ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே
** -யா. கா. 12 மேற்.
#24
** எண் சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள்
இரண்டு முதலா எட்டு ஈறாகத்
திரண்ட சீரான் அடி முடிவு உடைய
இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும்
சிறந்த அல்ல செய்யுளுள்ளே
** -யா. வி. 24 மேற். – யா. கா. 13 மேற்.
#25
** வஞ்சிப்பாவிற்கு வரும் அடிவகை
சிந்தடி குறளடி என்றா இரண்டும்
வஞ்சிக் கிழமை வகைப்பட்டனவே
** யா. வி. 16 மேற்.
#26
** அகவல் வெள்ளை கலி ஆகிய பாக்களுக்கு வரும் அடி
ஆசிரியம் வெண்பாக் கலியொடு மும்மையும்
நால் சீர் அடியால் நடைபெற்றனவே
** யா. வி. 27 மேற்.
#27
** மேலதற்கொரு சிறப்பு விதி
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே
** யா. வி. 27 மேற்.
#28
** பாவினங்களுக்கு வரும் அடிவகை
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இனச் செய்யுள் எல்லா அடியினும் நடக்கும்
** யா. வி. 28 மேற்.
#29
** பாக்களின் அடிச்சிறுமை
ஒரு தொடை ஈர் அடி வெண்பாச் சிறுமை
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து
வருவன ஆசிரியம் இல் என மொழிப
வஞ்சியும் அப் பா வழக்கின ஆகும்
** -யா. வி. 32 மேற். – யா. கா. 14 மேற்.
#30
** கலிப்பாவின் அடிச்சிறுமை
நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுதல் இலவே
** -யா. வி. 32 மேற். – யா. கா. 14 மேற்.
#31
** பாக்களின் அடிப்பெருமை
உரைப்போர் குறிப்பினை அன்றிப் பெருமை
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே
** -யா. வி. 32 மேற். – யா. கா. 14 மேற்.
@6 தொடை
#32
** தொடை இன்ன தென்பது
தொடை எனப்படுவது அடை வகை தெரியின்
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின்
நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும்
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே
** யா. வி. 33 மேற்.
#33
** அடிமோனை அடியெதுகைத் தொடைகள்
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால்
நெறிப்பட வந்தன நேரப்படுமே
** – பாட வேறுபாடு சிறுகாக்கை பாடினியார்
** -யா. வி. 37 மேற்.
#34
** எதுகைக்கு மேலும் ஒரு சிறப்புவிதி
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும்
வரன்முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே
** – பாட வேறுபாடு – கையகனார்
** யா. வி. 37 மேற்.
#35
** முரண் தொடை
மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின்
இரணத் தொடை என்று எய்தும் பெயரே
** யா.கா.40 மேற். – யா.வி.38
#36
** இயைபுத்தொடை
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே
** தொல் செய் 95
#37
** அளபெடைத்தொடை
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை
** சிறுகாக்கை பாடினியார் – யா. வி. 41 மேற்.
#38
** இணைத்தொடை
இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே
** யா.வி. 42 மேற்.
#39
** பொழிப்புத் தொடையும் ஒரூஉத் தொடையும்
ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ
** யா.வி 48 மேற்.
#40
** மேற்கதுவாய்த் தொடையும் கீழ்க்கதுவாய்த் தொடையும்
முடிவதன் முதல் அயல் கதுவாய் கீழ் மேல்
** யா.வி 47 மேற்.
#41
** கூழைத் தொடையும் முற்றுத் தொடையும்
மூன்று வரின் கூழை நான்கு வரின் முற்றே
** யா.வி 45 மேற்.
#42
** இரட்டைத் தொடை
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை
** அவிநயனார். யா.வி. 51 மேற்.
#43
** அந்தாதித் தொடை
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை
முந்தா இசைப்பின் அஃது அந்தாதித் தொடையே
** யா.வி 52 மேற்.
#44
** செந்தொடை
செம்பகை அல்லா மரபினதாம் தம்முள்
ஒன்றா நிலையது செந்தொடை ஆகும்
** யா.வி. 50 மேற்.
#45
** ஒரு செய்யுளில் தொடையும் அடியும் பல விரவிவரின்
** அவற்றை வழங்குமாறு
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே
** யா.வி. 53 மேற்.
** 2 செய்யுளியல்
@7 வெண்பாவும் அதன் வகையும்
#46
** வெண்பா இன்ன தென்பது
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி
அறைந்த உறுப்பின் அகறல் இன்றி
விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும்
** யா.வி. 57 மேற்.
#47
** வெண்பாவின் ஈற்றடி
சிந்தடியானே இறுதலும் அவ் அடி
அந்தம் அசைச் சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளை வழக்கியல் தானே
** யா.வி. 57 மேற்.
#48
** குறள் வெண்பா
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர்க் கொடை கொள்ளப்படுமே
** -யா. வி. 57 மேற். – யா. கா. 23 மேற்.
#49
** சிந்தியல் வெண்பா
தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம்
** தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
** குறளின் பெயர்க் கொடை கொள்ளப்படுமே
** என்று இவர் கூறியமைகொண்டு இந்நூற்பா யாக்கப்பெற்றது
#50
** நேரிசை வெண்பா
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும்
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா
** -யா. வி. 60 மேற். – யா. கா. 23 மேற்.
#51
** இன்னிசை வெண்பா
தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம்
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இயற்பெயர் இன்னிசை என்றிசினோரே
** யா.வி. 61 மேற்.
#52
** பஃறொடை வெண்பா
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா
நடையது பஃறொடை நாமம்கொளலே
** -யா. வி. 62 மேற். – -யா. கா. 24 மேற்.
#53
** வெண்பாவின் இனம்
வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை
என்று இ முறையின் எண்ணிய மும்மையும்
தத்தம் பெயரால் தழுவும் பெயரே
** யா.வி.56 மேற்.
#54
** குறள்வெண் செந்துறை
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும்
** யா.வி. 63 மேற்.
#55
** குறட்டாழிசை
அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளும் தாழிசைக் குறளே
** யா. வி 64 மேற்.
#56
** வெளிவிருத்தம்
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் எனப் பெயர் வேண்டப்படுமே
** -யா. வி. 68 மேற். – யா. கா. 27 மேற்.
#57
** வெண்துறை
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும் இரண்டும் சீர் தப வரினும்
வெண்துறை என்னும் விதியின ஆகும்
** யா.வி 67 மேற்.
** பாட வேறுபாடு
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி
ஒன்றும் இரண்டும் மொழி சீர்ப்படுதவும்
வெண்துறை நாமம் விதிக்கப்படுமே
#58
** வெண்தாழிசை
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி
வெண்பாப் புரைய இறுவது வெள்ளையின்
தன் பா இனங்களில் தாழிசை ஆகும்
** யா.வி. 66 மேற்.
@8 ஆசிரியப்பாவும் அதன் வகையும்
#59
** நேரிசை ஆசிரியப்பா
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே
** சிறுகாக்கை பாடினியார் – யா.வி 71 மேற்.
#60
** நிலைமண்டில ஆசிரியப்பா
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு
நிற்பது தானே நிலைமண்டிலமே
** -யா. கா. 28 மேற்.
#61
** நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஈறு
என் என் கிளவி ஈறாப் பெறுதலும்
அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற
நிற்கவும் பெறூஉம் நிலைமண்டிலமே
** -யா. கா. 28 மேற்.
#62
** அடிமறிமண்டில ஆசிரியப்பா
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள்
மதிக்கப்படாதது மண்டில யாப்பே
** -யா. வி. 73 மே. – யா. கா. 28 மேற்
#63
** இணைக்குறள் ஆசிரியப்பா
அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்
** -யா. வி. 72 மேற். -யா. கா. 28 மேற்.
#64
** ஆசிரியப்பாவின் இனம் – ஆசிரியவிருத்தம்
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய்
விளைகுவது அப் பா இனத்து உள விருத்தம்
** யா.வி. 77 மேற்.
#65
** ஆசிரியத்துறை
அடித்தொகை நான்கு பெற்று அந்தத் தொடை மேல்
கிடப்பது நால் சீர்க் கிழமையது ஆகி
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின்
அடிப் பெறின் ஆசிரியத் துறை ஆகும்
** யா.வி.76 மேற்.
#66
** ஆசிரியத்துறைக்கு மேலும் ஒரு விதி
அளவடி ஐம் சீர் நெடிலடி தம்முள்
உறழத் தோன்றி ஒத்த தொடையாய்
விளைவதும் அப் பெயர் வேண்டப்படுமே
** யா.வி.76 மேற்.
#67
** ஆசிரியத் தாழிசை
அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே
** சிறுகாக்கை பாடினியார் – யா. வி. 75 மேற்.
@9 கலிப்பாவும் அதன் வகையும்
#68
** கலிப்பா இன்னதென்பது
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல்
கலிச் சொல் பொருள் எனக் கண்டிசினோரே
** யா.வி. 76 மேற்.
#69
** கலிப்பாவின் வகை
வெண்கலி ஒத்தாழிசைக்கலி கொச்சகம்
என்று ஒரு மூன்றே கலி என மொழிப
** யா.வி. 79 மேற்.
#70
** வெண்கலிப்பா, கலிவெண்பா
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின்
வெண்பா இயலது வெண்கலி ஆகும்
** -யா. வி. 85 மேற். – யா. கா. 31 மேற்.
#71
** ஒத்தாழிசைக் கலிப்பா
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி
** -யா. வி. 82 மேற். – யா. கா. 30 மேற்.
#72
** தரவு இன்ன தென்பது
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும்
துன்னுமிடத்துத் துணிந்தது போல் இசை
தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே
** யா.வி. 82 மேற்.
#73
** (தாழிசை இன்ன தென்பது)
தத்தமில் ஒத்துத் தரவின் அகப்பட
நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை
** யா.வி. 82 மேற்.
#74
** தனிச்சொல் இன்னதென்பது
ஆங்கு என் கிளவி அடையாத் தொடைபட
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல்
** யா.வி. 82 மேற்.
#75
** சுரிதகம் இன்னதென்பது
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள்
ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும்
** யா.வி. 83 மேற்.
#76
** அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
நீர்த் திரை போல நிரலே முறைமுறை
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை
விட்டு இடை விரியத் தொடுத்துச் சுரிதகம்
தாங்கித் தழுவும் தரவினோடு ஐந்தும்
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம்
** -யா. வி. 83 மேற். – யா. கா. 30 மேற்.
#77
** வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
அச் சொலப்பட்ட உறுப்போடு அராக அடி
வைத்த நடையது வண்ணகம் ஆகும்
** யா. கா. 31 மேற்.
#78
** கொச்சகக் கலிப்பா
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும்
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும்
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும்
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய்
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்புக்
கிடக்கை முறையில் கிழமையதாயும்
தரவொடு தாழிசை அம்போதரங்கம்
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி
இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும்
** -யா. வி. 86 மேற்.
#79
** கலிப்பாவும் அதன் இனமும் – கலிவிருத்தம்
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத்தம்மே
** -யா. வி. 89 மேற். -யா. கா. 33 மேற்.
#80
**கலித்துறை
ஐம் சீர் அடியின் அடித்தொகை நான்மையோடு
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை
** -யா. வி. 88 மேற். – யா. கா. 33 மேற்.
#81
** கலித்தாழிசை
அந்தடி மிக்குப் பலசிலவாய் அடி
தம்தமில் ஒப்பன தாழிசை ஆகும்
** -யா. வி. 87 மேற். – யா. கா. 33 மேற்.
@10 வஞ்சிப்பாவும் அதன் வகையும்
#82
** வஞ்சிப்பா இன்னதென்பது
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை
வஞ்சி எனப் பெயர்வைக்கப்படுமே
** யா.வி. 90 மேற்.
#83
** வஞ்சி விருத்தம்
முச் சீர் நால் அடி ஒத்தவை வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே
** சிறுகாக்கை பாடினியார் – யா.வி 92 மேற்.
#84
** வஞ்சித்துறை
ஒன்றின நான்மை உடையதாய்க் குறளடி
வந்தன வஞ்சித் துறை எனலாகும்
#85
** வஞ்சித் தாழிசை
குறளடி நான்கு இவை கூடின ஆகி
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்
** -யா. வி. 91 மேற்.
@11 மருட்பா
#86
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும்
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ
** ஈற்றடி ஒன்றும் தொல்காப்பியனார் வாக்கு – தொல்.செய்.109
** 3 பொதுவியல்
@12 தனிச்சொல்
#87
உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும்
மறுக்கப்படாத மரபின ஆகியும்
எழுவாய் இடமாய் அடிப் பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே
** யா.வி. 94 மேற்.
#88
** வஞ்சிப்பாவில் தனிச்சொல் வருதற்கு மேலும் ஒரு விதி
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் எனக்
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே
** யா.வி. 94 மேற்.
@13 புறநடை
#89
உணர்த்திய பாவினுக்கு ஒத்த அடிகள்
வகுத்து உரை பெற்றியும் அன்றிப் பிறவும்
நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே
** யா.வி. 98 மேற்.
** கீழ்க்கண்டவற்றுக்கு நூற்பாக்கள் இல்லை.
@14 பொருள்கோள்
@15 விகாரம்
@16 குறிப்பிசை
@17 வகையுளி
@18 வனப்பு
@19 வண்ணம்
** காக்கைபாடினியமும் அதற்குப் புலவர் இராமு.இளங்குமரன்
** சிற்றுரையும் முற்றும்.
&7 சங்கயாப்பு – மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்.
@1 யாப்பருங்கல விருத்தி யுரைகாரர் மேற்கோள்
** ** (அடியோத்து, 32 உரை மேற்கோள்)
#1
அகரம் முதலா ஔகாரம் ஈறா
இசையொடு புணர்ந்த ஈர்_ஆறும் உயிரே
#2
ககரம் முதலா னகரம் ஈறா
இவை ஈர்_ஒன்பதும் மெய் என மொழிப
#3
குறில் ஓர் ஐந்தும் அறிவுறக் கிளப்பின்
அ இ உ எ ஒ எனும் இவையே
#4
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ எனும்
ஏழும் நெட்டெழுத்து என்றல் இயல்பே
#5
கண்ணிமை கைந்நொடி என்று இவை இரண்டும்
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை
#6
வன்மை என்ப க ச ட த ப ற
#7
மென்மை என்ப ங ஞ ண ந ம ன
#8
இடைமை என்ப ய ர ல வ ழ ள
#9
அவைதாம்,
புள்ளியொடு நிற்றல் இயல்பு என மொழிப
புள்ளி இல் காலை உயிர்மெய் ஆகும்
#10
அரைநொடி அளவின அறு_மூ உடம்பே
#11
அரைநொடி என்பது யாது என மொழியின்
நொடி தரக்கூடிய இரு விரல் இயைபே
#12
குற்றியலிகரமும் குற்றியலுகரமும்
மற்று அவை தாமே புள்ளி பெறுமே
#13
நேர் நால் வகையும் நெறியுறக் கிளப்பின்
நெடிலும் குறிலும் தனியே நிற்றலும்
அவற்றின் முன்னர் ஒற்றொடு நிற்றலும்
இவைதாம் நேர் அசைக்கு எழுத்தின் இயல்பே
#14
இணைக் குறில் குறில் நெடில் இணைந்தும் ஒற்று அடுத்தும்
நிலைக்கு உரி மரபின் நிரை அசைக்கு எழுத்தே
#15
அகவல் என்பது ஆசிரியப்பாவே
#16
ஏழடி இறுதி ஈர் அடி முதலா
ஏறிய வெள்ளைக்கு இயைந்த அடியே
மிக்கடி வருவது செய்யுட்கு உரித்தே
மூ அடிச் சிறுமை பெருமை ஆயிரம்
ஆகும் ஆசிரியத்தின் அளவே
#17
முந்திய மோனை எதுகை அளபெடை
அந்தம் இல் முரணே செந்தொடை இயைபே
பொழிப்பே ஒரூஉவே இரட்டை என்னும்
இயல்படு தொடைகள் இவை முதலாகப்
பதின்மூவாயிரத்து அறுநூறு அன்றியும்
தொண்ணூற்றொன்பது என்று எண்ணினர் புலவர்
#18
வல்லொற்றுத் தொடர்ச்சியும் மெல்லொற்றுத் தொடர்ச்சியும்
இடையொற்றுத் தொடர்ச்சியும் முறை பிறழ்ந்து இயலும்
#19
செப்பல் ஓசை வெண்பா ஆகும்
#20
ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும்
ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா
#21
வெண்சீர் வெண்தளையான் வரும் யாப்பை
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்
#22
இயற்சீர் வெண்தளையான் வரும் யாப்பைத்
தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்
#23
வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்
#24
கொச்சகம் வெண்கலி ஒத்தாழிசை என
முத் திறம் ஆகும் கலியின் பகுதி
** இவற்றுள் 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24
** ஆகியவை கோபாலையர் தொகுப்பிலும் உள்ளன.
**
&8 சிறுகாக்கைபாடினியம் – ** மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்
@1 தொல் – பொருள் – செய்யுளியல் ஒன்றாம் சூத்திர உரை – பேராசிரியர்
#1
வட திசை மருங்கின் வடுகு வரம்பாகத்
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும்
வரை மருள் புணரியொடு கரை பொருது கிடந்த
நாட்டு இயல் வழக்கம் நான்மையின் கடைக்-கண்
யாப்பினது இலக்கணம் அறைகுவன் முறையே
@2 யாப்பருங்கலம் – விருத்தியுரைகாரர் மேற்கோள்
#1
குறிய நெடிய உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூ உயிர்க் குறுக்கமும் ஆம் அசைக்கு எழுத்தே
#2
தனி நெடில் ஆகியும் தனிக் குறில் ஆகியும்
ஒற்றொடு வந்தும் நேர் அசை ஆகும்
#3
குறில் இணை ஆகியும் குறில் நெடில் ஆகியும்
ஒற்றொடு வந்தும் நிரை அசை ஆகும்
#4
இடையும் கடையும் இணையும் ஐ எழுத்தே
#5
ஈர் அசை ஆகிய மூ அசைச் சீர்தான்
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி
#6
நடுவு நேர் இயலா வஞ்சி உரிச்சீர்
உரிமை உடைய ஆசிரியத்துள்ளே
#7
இயற்சீர் ஒன்றா நிலையது வெண்தளை
உரிச்சீர் அதனில் ஒன்றுதல் இயல்பே
#8
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய நிலைமை
ஆசிரியத்தளை ஆகும் என்ப
#9
வெண்சீர் இறுதி நிரை வரின் கலித்தளை
வஞ்சி வகைமை வரைவின்று ஆகும்
#10
வஞ்சி அல்லா மூ வகைப் பாவும்
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை
#11
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால்
நெறிப்பட வந்தன நேரப்படுமே
#12
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை
#13
ஒன்றிய தொடையொடும் விகற்பம் தன்னொடும்
ஒன்றாது கிடப்பது செந்தொடை ஆமே
#14
பல் வகைத் தொடை ஒரு பாவினுள் தொடுப்பின்
சொல்லிய முதல் தொடை சொல்லினர் கொளலே
#15
பாவே தாழிசை துறையே விருத்தம் என
நால் வகைப் பாவும் நானான்கு ஆகும்
#16
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி வருவன இன்னிசை வெண்பா
#17
தொடை பல தொடுப்பன பஃறொடை வெண்பா
#18
அடி மூன்று ஆகி வெண்பாப் போல
இறுவன மூன்றே வெள் ஒத்தாழிசை
#19
நான்கும் மூன்றும் அடி-தொறும் தனிச்சொல்
தோன்ற வருவன வெளிவிருத்தம்மே
#20
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே
#21
இடையிடை சீர் தபின் இணைக்குறள் ஆகும்
#22
கொண்ட அடி முதலாய் ஒத்து இறுவது
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர்
#23
அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே
#24
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம்
முறைமைய நால் அடி விருத்தம் ஆகும்
#25
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
வருவன எல்லாம் தாழிசைக் கலியே
#26
சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர்
நீர்த் திரை போல நெறிமையின் சுருங்கி
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ
அளவின எல்லாம் அம்போதரங்கம்
#27
அந்த அடி மிக்கு அல்லா அடியே
தம்தமுள் ஒப்பன கலித்தாழிசையே
#28
நால் சீர் நால் அடி கலிவிருத்தம்மே
#29
எஞ்சா இரு சீர் நால் அடி மூன்று எனில்
வஞ்சித் தாழிசை தனி வரில் துறையே
#30
மூச் சீர் நால் அடி ஒத்தவை வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே
#31
தனிச்சொல் என்பது அடி முதல் பொருளொடு
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே
**
&9 சிறுகாக்கைபாடினியம் – தி வே கோபாலையர் பதிப்பு
** இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்
** பொருளதிகாரம் – செய்யுளியல் பிற்சேர்க்கை
@1
** தற்சிறப்புப்பாயிரம்
#1
வட திசை மருங்கின் வடுகு வரம்பாகத்
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும்
வரை மருள் புணரியொடு கரை பொருது கிடந்த
நாட்டு இயல் வழக்கம் நான்மையின் நெறிக்-கண்
யாப்பினது இலக்கணம் அறைகுவன் முறையே
** அசைக்கு உறுப்பாவன
#2
குறிய நெடிய உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூ உயிர்க் குறுக்கமும் ஆம் அசைக்கு எழுத்தே
** அசைகள்
#3
தனி நெடில் ஆகியும் தனிக் குறில் ஆகியும்
ஒற்றொடு வருவது நேர் அசை ஆகும்
#4
குறில் இணை ஆகியும் குறில் நெடில் ஆகியும்
ஒற்றொடு வந்தும் நிரை அசை ஆகும்
#5
இடையும் கடையும் இணையும் ஐ எழுத்தே
** சீர்கள்
#6
ஈர் அசை ஆகிய மூ அசைச் சீர்தாம்
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி
** வெண்தளை
#7
இயற்சீர் ஒன்றா நிலையது வெண்தளை
உரிச்சீர் அதனில் ஒன்றுவது இயல்பே
** ஆசிரியத்தளை
#8
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய நிலைமை
ஆசிரியத்தளை ஆகும் என்ப
** கலித்தளை
#9
வெண்சீர் இறுதி நிரை வரின் கலித்தளை
** வஞ்சித்தளை
#10
வஞ்சி வகைமை வரம்பின்று ஆகும்
** பாக்களின் அடிகளுக்குச் சீர் வரையறை
#11
வஞ்சி அல்லா மூ வகைப் பாவும்
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை
** தொடை
#12
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே
#13
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால்
நெறிப்பட வந்தன நேரப்படுமே
** தொடையால் பெயரிடுதல்
#14
பல் வகைத் தொடை ஒரு பாவினுள் தொடுப்பின்
சொல்லிய முதல் தொடை சொல்லினர் கொளலே
** அளபெடைத்தொடை
#15
சொல்லிசை அளபு எழ நிற்பது அளபெடை
** செந்தொடை
#16
ஒன்றிய தொடையொடும் விகற்பம் தன்னொடும்
ஒன்றாது கிடப்பது செந்தொடை ஆகும்
** பாவும் பாவினமும்
#17
பாவே தாழிசை துறையே விருத்தம் என
நால் வகைப் பாவும் நானான்கு ஆகும்
** இன்னிசை வெண்பா
#18
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி வருவன இன்னிசை வெண்பா
** பஃறொடை வெண்பா
#19
தொடை பல தொடுப்பன பஃறொடை வெண்பா
** வெள்ளொத்தாழிசை
#20
அடி மூன்று ஆகி வெண்பாப் போல
இறுவன மூன்றே வெள் ஒத்தாழிசை
** வெளி விருத்தம்
#21
நான்கும் மூன்றும் அடி-தொறும் தனிச்சொல்
தோன்ற வருவன வெளிவிருத்தம்மே
** நேரிசை ஆசிரியம்
#22
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே
** இணைக்குறள் ஆசிரியம்
#23
இடையிடை சீர் தபின் இணைக்குறள் ஆகும்
** அடிமறி மண்டில ஆசிரியம்
#24
கொண்ட அடி முதலாய் ஒத்து இறுவது
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர்
** ஆசிரிய ஒத்தாழிசை
#25
அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே
** ஆசிரிய விருத்தம்
#26
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம்
முறையே நால் அடி விருத்தம் ஆகும்
** நேரிசை ஒத்தாழிசைக்கலி
#27
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
வருவன எல்லாம் தாழிசைக் கலியே
** அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி
#28
சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர்
நீர்த் திரை போல நெறிமையின் சுருங்கி
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ
அளவின எல்லாம் அம்போதரங்கம்
** கலித்தாழிசை
#29
அந்த அடி மிக்கு அல்லா அடியே
தம்தமுள் ஒப்பன கலித்தாழிசையே
** கலிவிருத்தம்
#30
நால் சீர் நால் அடி கலிவிருத்தம்மே
** வஞ்சித்தாழிசையும் துறையும்
#31
எஞ்சா இரு சீர் நால் அடி மூன்று எனின்
வஞ்சித் தாழிசை தனி வரின் துறையே
** வஞ்சி விருத்தம்
#32
மூச் சீர் நால் அடி ஒத்தன வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே
** ஆசிரியப்பாவிற்கு ஏற்கும் வஞ்சிச்சீர்கள்
#33
நடுவு நேர் இயலா வஞ்சி உரிச்சீர்
உரிமை உடைய ஆசிரியத்துள்ளே
** கூன்ஆமாறு
#34
தனிச்சொல் என்பது அடி முதல் பொருளொடு
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே
**
&10 நத்தத்தனார் இயற்றி நத்தத்தம் (அடிநூல்)
** மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்
@1 குணசாகரர் (யா. காரிகை உரை மேற்கோள்)
#1
அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும்
#2
வெண்பா விரவினும் கடிவரை இன்றே
#3
ஐம் சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும்
வெண்பா யாப்பிற்கு உரிய அல்ல
@2 யாப்பருங்கல உரையாசிரியர் மேற்கோள்
#1
யாப்பு எனப்படுவது யாது என வினவின்
தூக்கும் தொடையும் அடியும் இ மூன்றும்
நோக்கிற்று என்ப நுணங்கியோரே
#2
பா என மொழியினும் தூக்கினது பெயரே
#3
தனி நெடில் தனிக் குறில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நேர் அசை என்ப
#4
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நிரை அசை என்ப
#5
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் இலவே
வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே
#6
நால் சீர் கொண்டது நேரடி அதுவே
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப
#7
ஆசிரியப்பா வெண்பா கலி என
மூ வகைப் பாவும் நேரடிக்கு உரிய
#8
வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே
வெண்பா விரவினும் கடிவரை இன்றே
#9
ஆசிரியப்பாவின் சிறுமைக்கு எல்லை
மூ அடி ஆகும் பெருமை ஆயிரம்
ஈர் அடி முதலா ஒன்று தலை சிறந்து
ஏழ் அடி-காறும் வெண்பாட்டு உரிய
வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉவே
கைக்கிளை அங்கதம் கலி இயல் பாட்டே
தத்தம் குறிப்பின அளவு என மொழிப
#10
முதல் எழுத்து ஒன்றின் மோனை ஆகும்
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்
அவ் இரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய
#11
பொருளினும் மொழியினும் முரணுதல் முரணே
#12
இறு சீர் ஒன்றின் இயைபு எனப்படுமே
#13
அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும்
#14
ஒன்றாது ஆவது செந்தொடைக்கு இயல்பே
#15
சீர் முழுது ஒன்றின் இரட்டை ஆகும்
#16
முதல் சீர்த் தோற்றம் அல்லது ஏனை
விகற்பம் கொள்ளார் அடி இறந்து வரினே
#17
ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே
கொச்சகக்கலியொடு கலி மூன்று ஆகும்
#18
உரையும் நூலும் அடி இன்றி நடப்பினும்
வரைவு இலை என்ப வயங்கியோரே
#19
வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு
ஆம் உரை மூன்றும் அன்ன என்ப
#20
தானே அடி முதல் பொருள்பெற வருவது
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே
#21
வஞ்சி ஆயின் இறுதியும் வரையார்
#22
கலித்தளை அடி-வயின் நேர் ஈற்று இயற்சீர்
நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா
#23
குன்றியும் தோன்றியும் பிறிதுபிறிது ஆகியும்
ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம்
அசையும் சீரும் அடியும் எல்லாம்
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே
#24
சீர் ஆகு இடனும் உரி அசை உடைய
நேர் ஈற்று இயற்சீர் அவ்-வயின் ஆன
**
&11 நத்தத்தம் – தி. வே. கோபாலையர் பதிப்பு
** இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்
** பொருளதிகாரம் – செய்யுளியல் பிற்சேர்க்கை
@1 யாப்பின் இலக்கணம்
#1
யாப்பு எனப்படுவது யாது என வினவின்
தூக்கும் தொடையும் அடியும் இ மூன்றும்
நோக்கிற்று என்ப நுணங்கியோரே
** நேர் அசை
#2
தனி நெடில் தனிக் குறில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நேர் அசை என்ப
** நிரை அசை
#3
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நிரை அசை என்ப
** அசை சீர்ஆமாறு
#4
சீர் ஆகு இடனும் உரி அசை உடைய
நேர் ஈற்று இயற்சீர் அல்வழியான
** நேர்அடி இலக்கணம்
#5
நால் சீர் கொண்டது நேரடி ஆம் என்ப
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப
** நேரடிபெறும் பாக்கள்
#6
ஆசிரியப்பா வெண்பா கலி என
மூ வகைப் பாவும் நேரடிக்கு உரிய
** முரண்தொடை
#7
பொருளினும் மொழியினும் முரணுதல் முரணே
** இயைபுத்தொடை
#8
இறு சீர் ஒன்றின் இயைபு எனப்படுமே
** அளபெடைத் தொடை
#9
அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும்
** செந்தொடை
#10
ஒன்றாது ஆவது செந்தொடைக்கு இயல்பே
** இரட்டைத் தொடை
#11
சீர் முழுதும் ஒன்றின் இரட்டை ஆகும்
** தொடையாற் பெயரிடுதல்
#12
முதல் சீர்த் தோற்றம் அல்லது ஏனை
விகற்பம் கொள்ளார் அடி இறந்து வரினே
** பாவுக்குச் சீர் உரிமை
#13
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் இலவே
வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே
** பா மயக்கம்
#14
வஞ்சி விரவினும் ஆசிரியம் உரித்தே
வெண்பா விரவினும் கடிவரை இன்றே
** பாக்களின் அடிவரையறை
#15
ஆசிரியப்பாவின் சிறுமைக்கு எல்லை
மூ அடி ஆகும் பெருமை ஆயிரம்
#16
ஈர் அடி முதலா ஒன்று தலை சிறந்து
ஏழ் அடி-காறும் வெண்பாட்டு உரிய
#17
வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉவே
கைக்கிளை மயக்கம் கலிவெண்பாட்டே
தத்தம் குறிப்பின் அளவு என மொழிப
** மோனை
#18
முதல் எழுத்து ஒன்றின் மோனை ஆகும்
** எதுகை
#19
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்
** கிளை எழுத்துக்கள்
#20
ஆ இரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய
** கூன்ஆமாறு
#21
தானே அடி முதல் பொருள்பெற வருவது
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே
#22
வஞ்சி இறுதியும் வரையார் என்ப
** வகையுளி
#23
குன்றியும் தோன்றியும் பிறிதுபிறிது ஆகியும்
ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம்
அசையும் சீரும் அடியும் எல்லாம்
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே
** அடிவரையறை இல்லன
#24
உரையும் நூலும் அடி இன்றி நடப்பினும்
வரைவு இலை என்ப வயங்கியோரே
வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு
ஆம் முறை மூன்றும் அன்ன என்ப
**
&12 பல்காயம் – மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்
@1 யாப்பருங்கல விருத்தியுரை (எழுத்தோத்து 1-ஆம் சூத்திர உரை) மேற்கோள்
#1
தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்காயனார் பகுத்துப் பன்னினார் நல் யாப்புக்
கற்றார் மதிக்கும் கலைக் காக்கைபாடினியார்
சொற்றார் தம் நூலுள் தொகுத்து
@2 குணசாகரர் – யாப்பருங்கலக்காரிகை உரை மேற்கோள்
#1
முதல் எழுத்து ஒன்றின் மோனை எதுகை
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா
அது ஒழித்து ஒன்றின் ஆகும் என்ப
#2
இயற்சீர் நேர் இறல் தன் தளை உடைய
கலிக்கு இயல்பு இலவே காணும்காலை
வஞ்சியுள்ளும் வாரா ஆயினும்
ஒரோவிடத்து ஆகும் என்மனார் புலவர்
#3
வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே
வெண்பா விரவினும் கடிவரை இலவே
#4
அடி முதல் பொருளைத் தான் இனிது கொண்டு
முடிய நிற்பது கூன் என மொழிப
#5
வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே
அசை கூன் ஆகும் என்மனார் புலவர்
@3 யாப்பருங்கல விருத்தியுரைகாரர் – மேற்கோள்
#1
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
தமிழ் இயல் வரைப்பின் தாம் இனிது விளங்க
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
எழுத்து அசை சீர் தளை அடி தொடை தூக்கொடு
இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசினோரே
#2
தூக்கும் பாட்டும் பாவும் ஒன்று என
நோக்கிற்று என்ப நுணங்கியோரே
#3
உயிர் ஈர்_ஆறே மெய் மூ_ஆறே
அ மூ_ஆறும் உயிரோடு உயிர்ப்ப
இருநூற்றொருபத்தாறு உயிர்மெய்யே
#4
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை
அளபெடை மூன்று என்று அறையல் வேண்டும்
#5
எழு வகை இடத்தும் குற்றியலுகரம்
வழு இன்றி வரூஉம் வல் ஆறு ஊர்ந்தே
#6
யகரம் முதல் வரின் உகரம் ஒழிய
இகரமும் குறுகும் என்மனார் புலவர்
#7
தற்சுட்டு ஏவல் குறிப்பு இவை அல்வழி
முற்றுத் தனிக் குறில் முதல் அசை ஆகா
#8
நெடில் குறில் தனியாய் நின்றும் ஒற்று அடுத்தும்
குறில் இணை குறில் நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும்
நடைபெறும் அசை நேர் நிரை நால்_இரண்டே
#9
அசையே இரண்டும் மூன்றும் தம்முள்
இசையே வருவன சீர் எனப்படுமே
#10
ஈர்_இரண்டு ஆகியும் ஒரோவிடத்து இயலும்
#11
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே
#12
நால் அசைச் சீரும் ஒரோவிடத்து இயலும்
பாவொடு பாவினம் பயிலல் இன்றி
#13
ஓசையின் ஒன்றி வரினும் வெண் சீரும்
ஆசிரிய அடியுள் குறுகும் என்ப
#14
அகவலுள் தன் சீர் வெண் சீர் ஒருங்கு
புகலின் கலியுடன் பொருந்தும் என்ப
#15
வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே
#16
இயற்சீர் இறுதி நேர் உற்ற காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப
#17
ஆசிரியத்தொடு வெள்ளையும் கலியும்
நேரடி தன்னால் நிலைபெற நிற்கும்
#18
வஞ்சி விரவல் ஆசிரிய உரித்தே
வெண்பா விரவினும் கடிவரை இன்றே
#19
ஆயிரம் இறுதி மூ அடி இழிபா
ஆசிரியப்பாட்டின் அடித்தொகை அறிப
ஈர் அடி முதலா ஏழ் அடி-காறும்
திரிபு இல வெள்ளைக்கு அடித்தொகை தானே
#20
முதல் எழுத்து அளவு ஒத்து அயல் எழுத்து ஒன்றுவது
எதுகை அதன் வழி இயையவும் பெறுமே
#21
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா
அது ஒழித்து ஒன்றின் ஆகும் என்ப
#22
இவ் இரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய
#23
சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே
#24
இயைபே இறு சீர் ஒன்றும் என்ப
#25
அளபெடைத் தொடைக்கே அளபெடை ஆகும்
#26
மோனை எதுகை முரணே அளபெடை
ஏனைச் செந்தொடை இயைபே பொழிப்பே
ஒரூஉவே இரட்டை ஒன்பதும் பிறவும்
வருவன விரிப்பின் வரம்பு இல என்ப
#27
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாது ஆவது செந்தொடை தானே
#28
முழுவதும் ஒன்றின் இரட்டை ஆகும்
#29
விகற்பம் கொள்ளாது ஓசையின் அமைதியும்
முதல்-கண் அடி-வயின் முடிவது ஆகும்
#30
உரையொடு நூல் இவை அடி இல நடப்பினும்
வரைவு இல என்ப வாய்மொழிப் புலவர்
#31
மொழி பிசி முதுசொல் மூன்றும் அன்ன
#32
செயிர் தீர் செய்யுள் தெரியும்காலை
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும்
#33
ஒரோ அடியானும் ஒரோவிடத்து இயலும்
#34
அவைதாம்
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆக்கின என்ப அறிந்திசினோரே
#35
அடியினில் பொருளைத் தான் இனிது கொண்டு
முடிய நிற்பது கூன் என மொழிப
வஞ்சிக்கு இறுதியும் ஆகும் அதுவே
அசை கூன் ஆகும் என்மனார் புலவர்
#36
இயற்சீர் நேர் இறல் தன் தளை உடைய
கலிக்கு இயல்பு இலவே காணும்காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப
@4 பன்னிரு பாட்டியல்
#1
இரண்டு பொருள் புணர் இருபத்தெழு வகைச்
சீரிய பாட்டே தாரகை மாலை
#2
எப்பொருளேனும் இருபத்தெழு வகை
செப்பிய நெறியது செந்தமிழ் மாலை
#3
மூ_இரண்டேனும் இரு_நான்கேனும்
சீர் வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
அறு சீர்க் குறியது நெடியது எண் சீராம்
#4
அறு சீர் எண் சீர் அடி நான்கு ஒத்து அங்கு
இறுவது தாண்டகம் இரு_முச் சீர் அடி
குழியது திரு நால் சீரே
**
&13 பல்காயம் – ** தி வே கோபாலையர் பதிப்பு
** இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்
** பொருளதிகாரம் – செய்யுளியல் பிற்சேர்க்கை
@1 யாப்பு உறுப்புக்கள்
#1
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
தமிழ் இயல் வரைப்பின் தாம் இனிது விளங்க
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
எழுத்து அசை சீர் தளை அடி தொடை தூக்கோடு
இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசினோரே
** அசைகள்
#2
குறில் நெடில் தனியாய் நின்றும் ஒற்று அடுத்தும்
குறில் இணை குறில் நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும்
நடைபெறும் அசை நேர் நிரை அசை நால்_இரண்டே
** சீர்
#3
அசையே இரண்டும் மூன்றும் தத்தமில்
இசைய வருவன சீர் எனப்படுமே
#4
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே
#5
நால் அசைச் சீரும் ஒரோவிடத்து இயலும்
பாவொடு பாவினம் பயிலல் இன்றி
** நேரடி
#6
ஆசிரியத்தொடு வெள்ளையும் கலியும்
நேரடி தன்னான் நிலைபெற நிற்கும்
** எதுகை
#7
முதல் எழுத்து அளவு ஒத்து அயல் எழுத்து ஒன்றுவது
எதுகை அதன் வழி இயையவும் பெறுமே
** மோனை எதுகை விரி
#8
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை
முதல் எழுத்து அளவொடு ஒத்தது முதலா
அஃது ஒழித்து ஒன்றில் ஆகும் என்ப
#9
இவ் இரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய
** முரண் தொடை
#10
சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே
** இயைபுத்தொடை
#11
இயைபே இறு சீர் ஒன்றும் என்ப
** அளபெடைத்தொடை
#12
அளபெடைத் தொடைக்கே அளபெடை ஆகும்
** செந்தொடை
#13
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாது ஆவது செந்தொடை ஆகும்
** இரட்டைத்தொடை
#14
முழுவதின் ஒன்றின் இரட்டை ஆகும்
** தொடையால் பெயரிடுதல்
#15
விகற்பம் கொள்ளாது ஓசையின் அமைதியும்
முதல்-கண் அடி வரின் முடிவது ஆகும்
** விட்டிசை
#16
தற்சுட்டு ஏவல் குறிப்பு இவை அல்வழி
முற்றுத் தனிக் குறில் முதல் அசை ஆகா
** சீர் மயக்கம்
#17
ஓசையின் ஒன்றி வரினும் வெண் சீரும்
ஆசிரிய அடியின் குறுகும் என்ப
#18
அதனுள் தன் சீர் வெண் சீர் ஒருங்கு
புகலின் கலியுள் பொருந்தும் என்ப
#19
வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே
#20
இயற்சீர் இறுதி நேர் உற்ற காலை
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப
** அடிமயக்கம்
#21
வஞ்சி விரவல் ஆசிரியம் உடைத்தே
வெண்பா விரவினும் கடிவரை இன்றே
** அடிவரையறை
#22
ஆயிரம் இறுதி மூ அடி இழிபா
ஆசிரியப் பாட்டின் அடித்தொகை அறிப
#23
ஈர் அடி முதலா ஏழ் அடி-காறும்
திரிபு இல வெள்ளைக்கு அடித்தொகை தானே
** கூன் ஆமாறு
#24
அடியினில் பொருளைத் தான் இனிது கொண்டு
முடிய நிற்பது கூன் என மொழிப
#25
வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே
அசை கூன் ஆகும் என்மனார் புலவர்
** அடிவரையறை இல்லன
#26
உரையொடு நூல் இவை அடி இல நடப்பினும்
வரைவு இல என்ப வாய்மொழிப் புலவர்
மொழி பிசி முதுசொல் மூன்றும் அன்ன
**
&14 மயேச்சுரம் – மயேச்சுவரர் (பேராசிரியர்) இலக்கண நூல்
** மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்
@1 யாப். விருத்தியுரை – மயேச்சுவரர் பெயரால் காட்டப்பட்ட சூத்திரங்கள்
#1
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர்க் குறுக்கமும்
நேர்தல் இலவே உயிரளபெடையும்
#2
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும்
ர ட ரு டு வடிவாக விடுவாரும் உளர்
#3
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும்
ர ட ரு டுப் போல ஒரு விரல் நேரே
#4
விரல் இடையிட்டன அசைச் சீர் நால் அசை
விரல் வரை இடையினும் மானம் இல்லை
#5
விரல் இடையிட்டன வா ட ரு வெ டி வரின்
நிரல்பட எழுதி அலகு பெறுமே
#6
ஏவல் குறிப்பே தற்சுட்டு அல் வழி
யாவையும் தனிக்குறில் முதல் அசை ஆகா
சுட்டினும் வினாவினும் உயிர் வருகாலை
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே
#7
இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும்
நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும்
#8
நேரும் நிரையும் சீராய் வருதலும்
சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும்
யாவரும் அறிவர் நால் வகைப் பாவினும்
#9
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் சேரா
நிரை இற நிற்ற நால் அசை எல்லாம்
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே
#10
நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
வரைதல் வேண்டும் ஆசிரியம் மருங்கின்
#11
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய எல்லாம்
ஆசிரியத்தளை என்மனார் புலவர்
#12
இயற்சீர் ஒன்றா நிலையது வெண்தளை
உரிச்சீர் அதனுள் ஒன்றுதல் இயல்பே
#13
நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின்
யாவரும் அறிப ஆசிரியத்தளை
#14
வேறுபட வரின் இது வெண்தளை வெண்சீர்
ஆறு அறி புலவர்க்கு ஒன்றினும் அதுவே
#15
வெண்சீர்ப் பின்னர் நிரை வரும்காலைக்
கண்டனர் புலவர் கலித்தளை ஆக
#16
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை
எஞ்சிய வரினும் வஞ்சித் தளையே
#17
இரு சீர் அடியும் முச் சீர் அடியும்
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே
#18
பொருளினும் சொல்லினும் முரணத் தொடுப்பின்
முரண் என மொழிப முந்தையோரே
#19
பெற்ற அடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற அடியும் ஈற்று அயல் அடியும்
ஒன்றும் இரண்டும் நின்ற அதன் சீர்
கண்டன குறையின் வெண் துறை ஆகும்
#20
ஈற்று அயல் குறைந்த நேர் அசை இணையாம்
ஏற்ற அடியின இடை பல குறைந்தன
#21
எவ் அடியானும் முதல் நடுவு இறுதி
அவ் அடி பொருள்கொளின் மண்டில யாப்பே
#22
ஒத்த அடியின நிலைமண்டிலமே
#23
என் எனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித்
துன்னவும் பெறூஉம் நிலைமண்டிலமே
என் என்று இறுதல் வரைநிலை இன்றே
அல்லா ஒற்றினும் அதனின் இறுதி
நில்லா அல்ல நிற்பது வரையார்
#24
ஒத்த ஒரு பொருள் மூ அடி முடியின் அஃது
ஒத்தாழிசையாம் உடன் மூன்று அடுக்கின்
#25
எண் சீர் அளபு ஈற்று அயல் அடி குறைநவும்
ஐம் சீர் அடியினும் பிறவினும் இடை ஒன்ற
வந்த தொடையாய் அடி நான்கு ஆகி
உறழக் குறைநவும் துறை எனப்படுமே
#26
தளை கலி தட்டன தன் சீர் வெள்ளை
களையுந இன்றிக் கடை அடி குறையின
விரவரல் இல்லா வெண்கலி ஆகும்
#27
கூறிய உறுப்பில் குறைபாடு இன்றித்
தேறிய இரண்டு தேவபாணியும்
தரவே குறையினும் தாழிசை ஒழியினும்
இரு வகை முத் திறத்து எண்ணே நீங்கினும்
ஒருபோகு என்ப உணர்ந்திசினோரே
#28
ஐம் சீர் நால் சீர் அடி நான்கு ஆயின்
எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும்
#29
இரு சீர் நால் அடி மூன்று இணைந்து ஒன்றி
வருவது வஞ்சித்தாழிசை தனி நின்று
ஒரு பொருள் முடிந்தது துறை என மொழிப
#30
தன் சீர் நிலையின் தளை தம தழீஇய
இன்பா என்ப இயல்பு உணர்ந்தோரே
ஏனையவை விரவின் இடை எனப்படுமே
தான் இடை இல்லது கடை எனப்படுமே
#31
வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சி என
நுண் பா உணர்ந்தோர் நுவலும்காலை
இரண்டு மூன்று நான்கும் இரண்டும்
திரண்ட வடியின சிறுமைக்கு எல்லை
** (யாப்பருங்கலம் செய்யுளியல் நாற்பதாம் சூத்திரம் விருத்தியுரை)
#32
நேரும் நிரையும் சீராய் இறுதலும்
சீரும் தளையும் சிதைவுழிக் கொளலும்
யாவரும் உணர்வர் யா வகைப் பாவினும்
@2 பேராசிரியர் பெயரினால் மேற்கோள் காட்டப்பட்ட சூத்திரங்கள்
#1
நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும்
கடிவரை இலவே நேர் அசைத் தோற்றம்
#2
குறிலும் நெடிலும் குறில் முன் நிற்பவும்
நெறியின் ஒற்று அடுத்து நிரை அசை ஆகும்
#3
இரு சீர் அடியும் முச் சீர் அடியும்
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே
#4
அல்லாப் பாவின் அடி வகை தெரியின்
#5
பேணு பொருள் முடிபே பெருமைக்கு எல்லை
காணும்காலை கலி அலங்கடையே
#6
கலி உறுப்பு எல்லாம் கட்டளை உடைமையின்
நெறியின் வழி நிறுத்தல் வேண்டும்
கொச்சகக்கலி-வயின் குறித்த பொருள் முடிவாம்
தாழிசை பலவும் தழுவுதல் முடிபே
#7
அடுத்த அடி இரண்டு யா வகைப் பாவினும்
தொடுத்து வழங்கலில் தொடை எனப்படுமே
#8
அளபு எழுந்து யாப்பின் அஃது அளபெடைத் தொடையே
#9
ஒரு சீர் அடி முழுதும் வருவது இரட்டை
#10
ஒத்தாழிசை துறை விருத்தம் எனப் பெயர்
வைத்தார் பா இனம் என்ன வகுத்தே
#11
மூ அடி ஆகியும் நால் அடி ஆகியும்
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும்
கடிவரைவு இல்லா அடி-தொறும் தனிச்சொல்
திருத்தகு நிலைய விருத்தம் ஆகும்
#12
இயற்சீர்த்து ஆகியும் அயல் சீர் விரவியும்
தன் தளை தழுவியும் பிற தளை தட்டும்
அகவல் ஓசையது ஆசிரியம்மே
#13
ஏ என்று இறுவது ஆசிரியத்து இயல்பே
ஓ ஆ இறுதியும் உரிய ஆசிரியம்
நின்றது ஆதி நிலைமண்டிலத்துள்
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே
அல்லா ஒற்றும் அகவலின் இறுதி
நில்லா அல்ல நிற்பன வரையார்
#14
ஆறு முதலா எண் சீர்-காறும்
கூறும் நான்கு அடி ஆசிரியவிருத்தம்
#15
சீரின் கிளந்த தன் தளை தழுவி
நேர் ஈற்று இயற்சீர் சேராது ஆகித்
துள்ளல் ஓசையின் தள்ளாது ஆகி
ஓதப்பட்ட உறுப்பு வேறு பலவாய்
ஏதம் இல்லன கலி எனப்படுமே
#16
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம்
முத் திறத்து அடங்கும் எல்லாக் கலியும்
#17
தரவு ஒன்று ஆகித் தாழிசை மூன்றாய்த்
தனிச்சொல் இடைக் கிடந்து சுரிதகம் தழுவ
வைத்த மரபினது ஒத்தாழிசைக்கலி
#18
தரவின் அளவின் சுரிதகம் அயல் பா
விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை
#19
வண்ணகத்து இயற்கை திண்ணிதின் கிளப்பின்
தரவொடு தாழிசை தலை அளவு எய்தித்
தாழிசைப் பின்னர்த் தனிநிலை எய்திப்
பேரெண் இட்ட எண்ணுடைத்து ஆகிச்
சிற்றெண் வழியால் அராக அடி நான்கும்
கீழளவு ஆகப் பேரளவு எட்டாச்
சீர் வகை நான்கு முதல் பதின்மூன்றா
நேரப்பட்ட இடை நடு எனைத்தும்
சீர் வகை முறைமையின் அராகம் பெற்றும்
அம்போதரங்கத்து அராக அடி இன்றி
மடக்கடி மேலே முச் சீர் எய்திக்
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி
அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும்
உடைப் பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி
விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும்
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப
#20
அந்தாதித் தொடையினும் அடி நடை உடைமையும்
முந்தையோர் கண்ட முறைமை என்ப
#21
தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும்
தனிச்சொல் பலவாய் இடையிடை நடந்தவும்
ஒத்தாழிசைக்கலி உறுப்பில் பிறழ்ந்தவும்
வைத்த வழி முறையால் வண்ணக இறுவாய்
மயங்கி வந்தவும் இயங்கு நெறி முறையின்
கொச்சகக்கலி எனக் கூறினர் புலவர்
#22
அடி பல ஆகியும் கடை அடி சீர் மிகின்
கடிவரை இல்லை கலித்தாழிசையே
#23
தூங்கல் ஓசை நீங்காது ஆகி
நால் சீர் நிரம்பா அடி இரண்டு உடைத்தாய்
மேல் சீர் ஓதிய ஐம் சீர் பெற்றுச்
சுரிதக ஆசிரியம் உரியதனில் அடுத்து
வந்ததாயின் வஞ்சிப்பாவே
#24
பாவும் இனமும் மேவிய அன்றி
வேறுபட நடந்தும் கூறுபட வரினும்
ஆறு அறி புலவர் அறிந்தனர் கொளலே
**
&15 மயேச்சுரம் – தி வே கோபாலையர் பதிப்பு
** இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர்
** பொருளதிகாரம் – செய்யுளியல் பிற்சேர்க்கை
@1
** நேர் அசை
#1
நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும்
கடிவரை இலவே நேர் அசைத் தோற்றம்
** நிரையசை
#2
குறிலும் நெடிலும் குறில் முன் நிற்பவும்
நெறியின் ஒற்று அடுத்தும் நிரை அசை ஆகும்
** நேர்புஅசை நிரைபுஅசை
#3
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும்
மேவ ஓடிய விடுவாரும் உளர்
#4
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும்
ஆட்டுருப் போல ஒரு விரல் நேரே
#5
விரல் இடையிட்டன அசைச் சீர் நால் அசை
விரல் வரை இடையினும் மானம் இல்லை
#6
விரல் இடையிட்டன வா ட ரு வெ டி வரின்
நிரல்பட எழுதி அலகு பெறுமே
** சீர்வகை
#7
இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும்
நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும்
#8
நேரும் நிரையும் சீராய் வருதலும்
சீரும் தளையும் சிதைவழிக் கொளலும்
யாவரும் உரைப்பர் யா வகைப் பாவினும்
** ஆசிரியத்தளை
#9
ஈர் அசை இயற்சீர் ஒன்றியது எல்லாம்
ஆசிரியத்தளை என்மனார் புலவர்
** வெண்தளை
#10
இயற்சீர் ஒன்றா நிலையது வெண்தளை
உரிச்சீர் அதனுள் ஒன்றுதல் இயல்பே
** இயற்சீர்த்தளைகள்
#11
நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின்
யாவரும் அறிவர் ஆசிரியத்தளை
#12
வேறுபட வரின் அது வெண்தளை வெண்சீர்
ஆறு அறி புலவர்க்கு ஒன்றினும் அதுவே
** கலித்தளை
#13
வெண்சீர்ப் பின்னர் நிரை வருகாலைக்
கண்டனர் புலவர் கலித்தளை ஆக
** வஞ்சித்தளை
#14
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை
எஞ்சிய வரினும் வஞ்சித் தளையே
** தொடை
#15
அடுத்த அடி இரண்டு யா வகைப் பாவினும்
தொடுத்து வழங்கலின் தொடை எனப்படுமே
** வஞ்சிப்பாவின் அடி
#16
இரு சீர் அடியும் முச் சீர் அடியும்
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே
** ஏனைய பாக்களின் அடி
#17
வஞ்சி
அல்லாப் பாவினுள் அடி வகை தெரியின்
எல்லாம் நால் சீர் அல் அடி இயலா
#18
இறுதியும் அயலும் இடையும் முச் சீர்
பெறுதியும் வரையார் வெள்ளை முதல் மூன்றும்
** முரண்தொடை
#19
பொருளினும் சொல்லினும் முரணத் தொடுப்பின்
முரண் என மொழிப முந்தையோரே
** அளபெடைத்தொடை
#20
அளபு எழுந்து யாப்பின் அஃது அளபெடைத் தொடையே
** இரட்டைத்தொடை
#21
ஒரு சீர் அடி முழுதும் வருவது இரட்டை
** பாவினம்
#22
ஒத்தாழிசை துறை விருத்தம் எனப் பெயர்
வைத்தார் பா இனம் என்ன வகுத்தே
** வெள்ளொத்தாழிசை
#23
ஈர் அடி முக்கால் இசைகொள நடந்து
மூன்றுடன் அடுக்கித் தோன்றின் ஒத்தாழிசை
** வெண்துறை
#24
பெற்ற அடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற அடியும் ஈற்று அயல் அடியும்
ஒன்றும் இரண்டும் நின்ற அதன் சீர்
கண்டன குறையின் வெண் துறை ஆகும்
** வெளிவிருத்தம்
#25
மூ அடி ஆகியும் நால் அடி ஆகியும்
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும்
கடிவரைவு இல்லா அடி-தொறும் தனிச்சொல்
திருத்தகு நிலைய விருத்தம் ஆகும்
** ஆசிரியப்பா
#26
இயற்சீர்த்து ஆகியும் அயல் சீர் விரவியும்
தன் தளை தழுவியும் பிற தளை தட்டும்
அகவல் ஓசையது ஆசிரியம்மே
** ஆசிரியப்பாவின் இறுதி
#27
ஏ என்று இறுவது ஆசிரியத்து இயல்பே
ஓ ஆ இறுதியும் உரிய ஆசிரியம்
#28
நின்றது ஆதி நிலைமண்டிலத்துள்
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே
#29
அல்லா ஒற்றும் அடி வரின் இறுதி
நில்லா அல்ல நிற்பன வரையார்
** ஆசிரியப்பா வகை
#30
ஈற்று அயல் குறைந்த நேர் அசை இணையாம்
ஏற்ற அடியின இடை பல குறைந்தன
#31
ஒத்த அடியின நிலைமண்டிலமே
#32
எவ் அடியானும் முதல் நடுவு இறுதி
அவ் அடி பொருள்கொளின் மண்டில யாப்பே
** நிலைமண்டிலத்தின் இறுதி
#33
என் என் அசைச்சொலும் பிறவும் ஒன்றித்
துன்னவும் பெறூஉம் நிலைமண்டிலமே
#34
என் என்று இறுதல் வரைநிலை இன்றே
அல்லா ஒன்றினும் அதனினும் இறுதி
நில்லா அல்ல நிற்பன வரையார்
** ஆசிரிய ஒத்தாழிசை
#35
ஒத்த ஒரு பொருள் மூ அடி முடியின் அஃது
ஒத்தாழிசையாம் உடன் மூன்று அடுக்கின்
** ஆசிரியத்துறை
#36
எண் சீர் அடி ஈற்று அயல் அடி குறைநவும்
ஐம் சீர் அடியினும் பிறவினும் இடை ஒன்ற
வந்த தொடையாய் அடி நான்கு ஆகி
உறழக் குறைநவும் துறை எனப்படுமே
** ஆசிரிய விருத்தம்
#37
ஆறு முதலா எண் சீர்-காறும்
கூறும் நான்கு அடி ஆசிரியவிருத்தம்
** கலிப்பா
#38
சீரின் கிளந்த தன் தளை தழுவி
நேர் ஈற்று இயற்சீர் நேராது ஆகித்
துள்ளல் ஓசையின் தள்ளாது ஆகி
ஓதப்பட்ட உறுப்பு வேறு பலவாய்
ஏதம் இல்லன கலி எனப்படுமே
** கலிப்பாவகை
#39
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம்
முத் திறத்து அடங்கும் எல்லாக் கலியும்
** ஒத்தாழிசைக்கலி
#40
தரவு ஒன்று ஆகித் தாழிசை மூன்றாய்த்
தனிச்சொல் இடை கிடந்து சுரிதகம் தழுவ
வைத்த மரபினது ஒத்தாழிசைக்கலி
** சுரிதகம்
#41
தரவின் அளவின் சுரிதகம் அயல் பா
விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை
** வண்ணகம்
#42
வண்ணகத்து இயற்கை திண்ணிதின் கிளப்பின்
தரவொடு தாழிசை தலை அளவு எய்திப்
பேரெண் இட்ட எண்ணுடைத்து ஆகிச்
சிற்றெண் வழியா அராக அடி நான்கு
கீழளவு ஆகப் பேரளவு எட்டாச்
சீர் வகை நான்கு முதல் பதின்மூன்றா
நேரப்பட்ட இடை நடு எனைத்தும்
சீர் வகை முறைமையின் அராகம் பெற்று
அம்போதரங்கத்து அராக அடி இன்றி
மடக்கடி மேலே முச் சீர் எய்திக்
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி
அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும்
உடைப் பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி
விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும்
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப
#43
அந்தாதித் தொடையினும் அடி நடை உடைமையும்
முந்தையோர் கண்ட முறைமை என்ப
** வெண்கலி
#44
கலி ஒலி கொண்டு தன் தளை விரவா
இறும் அடி வரினே வெண்கலி ஆகும்
** ஒருசார் வெண்கலி
#45
தளை கலி தட்டன தன் சீர் வெள்ளை
களையுந இன்றிக் கண்ட அடி குறையுந
விரவரவு இல்லா வெண்கலி ஆகும்
** கொச்சகக்கலி
#46
தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும்
தனிச்சொல் பலவாய் இடையிடை நடந்தவும்
ஒத்தாழிசைக்கலி உறுப்பில் பிறழ்ந்தவும்
வைத்த வழி முறையால் வண்ணக இறுவாய்
மயங்கி வந்தவும் இயங்கு நெறி முறையின்
கொச்சகக்கலி எனக் கூறினர் புலவர்
** கலித்தாழிசை
#47
அடி பல ஆகியும் கடை அடி சீர் மிகின்
கடிவரை இல்லை கலித்தாழிசையே
** கலித்துறை – கலி விருத்தம்
#48
ஐம் சீர் நால் சீர் அடி நான்கு ஆயின்
எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும்
** வஞ்சிப்பா
#49
தூங்கல் ஓசை நீங்காது ஆகி
நால் சீர் நிரம்பா அடி இரண்டு உடைத்தாய்
மேல் சீர் ஓதிய ஐம் சீர் பெற்றுச்
சுரிதக ஆசிரியம் உரியதனில் அடுத்து
வந்ததாயின் வஞ்சிப்பாவே
** வஞ்சித் தாழிசை – துறை
#50
இரு சீர் நால் அடி மூன்று இணைந்து ஒன்றி
வருவது வஞ்சித்தாழிசை தனி நின்று
ஒரு பொருள் முடிந்தது துறை என மொழிப
** பாவின் தலைஇடைகடை வகைகள்
#51
தன் சீர் நிலையின் தளை தபத் தழீஇய
இன்பா என்ப இயல்பு உணர்ந்தோரே
#52
ஏனவே விரவின் இடை எனப்படுமே
#53
தான் இடை இல்லது கடை எனப்படுமே
** சீர்தளை சிதைவுழி நிகழ்வன
#54
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர்க் குறுக்கமும்
நேர்தல் இலவே உயிரளபெடையும்
** விட்டிசை
#55
ஏவல் குறிப்பே தற்சுட்டு அல் வழி
யாவையும் தனிக்குறில் முதல் அசை ஆகா
#56
சுட்டினும் வினாவினும் உயிர் வருகாலை
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே
** சீர்வரையறை
#57
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் நேரா
#58
நிரையின் நின்ற நால் அசை எல்லாம்
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே
#59
நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
வரைதல் வேண்டும் ஆசிரியம் மருங்கின்
** அடிவரையறை
#60
ஐ_இருநூறு அடி ஆசிரியம் வஞ்சிச்
செய்யுள் நடப்பினும் சிறப்பு உடைத்து என்ப
#61
பேணும் பொருள் முடிபே பெருமைக்கு எல்லை
காணும்காலைக் கலி அலங்கடையே
#62
கலி உறுப்பு எல்லாம் கட்டளை உடைமையின்
நெறியின் முறை வழி நிறுத்தல் வேண்டும்
#63
கொச்சகக்கலி-வயின் குறித்த பொருள் முடிவாம்
தாழிசை பலவும் தழுவுதல் முடிபே
** பாவின் போலி
#64
பாவும் இனமும் மேவிய அன்றி
வேறுபட நடந்தும் கூறுபட வரினும்
ஆறு அறி புலவர் அறிந்தனர் கொளலே
**
*