&7 சங்கயாப்பு – மயிலை சீனி வேங்கடசாமி – மறைந்துபோன தமிழ் நூல்கள்.
@1 யாப்பருங்கல விருத்தி யுரைகாரர் மேற்கோள்
** ** (அடியோத்து, 32 உரை மேற்கோள்)
#1
அகரம் முதலா ஔகாரம் ஈறா
இசையொடு புணர்ந்த ஈர்_ஆறும் உயிரே
#2
ககரம் முதலா னகரம் ஈறா
இவை ஈர்_ஒன்பதும் மெய் என மொழிப
#3
குறில் ஓர் ஐந்தும் அறிவுறக் கிளப்பின்
அ இ உ எ ஒ எனும் இவையே
#4
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ எனும்
ஏழும் நெட்டெழுத்து என்றல் இயல்பே
#5
கண்ணிமை கைந்நொடி என்று இவை இரண்டும்
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை
#6
வன்மை என்ப க ச ட த ப ற
#7
மென்மை என்ப ங ஞ ண ந ம ன
#8
இடைமை என்ப ய ர ல வ ழ ள
#9
அவைதாம்,
புள்ளியொடு நிற்றல் இயல்பு என மொழிப
புள்ளி இல் காலை உயிர்மெய் ஆகும்
#10
அரைநொடி அளவின அறு_மூ உடம்பே
#11
அரைநொடி என்பது யாது என மொழியின்
நொடி தரக்கூடிய இரு விரல் இயைபே
#12
குற்றியலிகரமும் குற்றியலுகரமும்
மற்று அவை தாமே புள்ளி பெறுமே
#13
நேர் நால் வகையும் நெறியுறக் கிளப்பின்
நெடிலும் குறிலும் தனியே நிற்றலும்
அவற்றின் முன்னர் ஒற்றொடு நிற்றலும்
இவைதாம் நேர் அசைக்கு எழுத்தின் இயல்பே
#14
இணைக் குறில் குறில் நெடில் இணைந்தும் ஒற்று அடுத்தும்
நிலைக்கு உரி மரபின் நிரை அசைக்கு எழுத்தே
#15
அகவல் என்பது ஆசிரியப்பாவே
#16
ஏழடி இறுதி ஈர் அடி முதலா
ஏறிய வெள்ளைக்கு இயைந்த அடியே
மிக்கடி வருவது செய்யுட்கு உரித்தே
மூ அடிச் சிறுமை பெருமை ஆயிரம்
ஆகும் ஆசிரியத்தின் அளவே
#17
முந்திய மோனை எதுகை அளபெடை
அந்தம் இல் முரணே செந்தொடை இயைபே
பொழிப்பே ஒரூஉவே இரட்டை என்னும்
இயல்படு தொடைகள் இவை முதலாகப்
பதின்மூவாயிரத்து அறுநூறு அன்றியும்
தொண்ணூற்றொன்பது என்று எண்ணினர் புலவர்
#18
வல்லொற்றுத் தொடர்ச்சியும் மெல்லொற்றுத் தொடர்ச்சியும்
இடையொற்றுத் தொடர்ச்சியும் முறை பிறழ்ந்து இயலும்
#19
செப்பல் ஓசை வெண்பா ஆகும்
#20
ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும்
ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா
#21
வெண்சீர் வெண்தளையான் வரும் யாப்பை
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்
#22
இயற்சீர் வெண்தளையான் வரும் யாப்பைத்
தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்
#23
வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்
#24
கொச்சகம் வெண்கலி ஒத்தாழிசை என
முத் திறம் ஆகும் கலியின் பகுதி
** இவற்றுள் 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24
** ஆகியவை கோபாலையர் தொகுப்பிலும் உள்ளன.
**
*