1. வீரசோழியம் – உரையாசிரியர் மேற்கோள்
2. யாப்பருங்கலக் காரிகை – குணசாகரர் உரை மேற்கோள்
3. யாப்பருங்கலம் எழுத்தோத்து உரை மேற்கோள்
4. நன்னூல் உரை – மயிலைநாதர் மேற்கோள்
5. பன்னிருபாட்டியலில் அவிநய நூலிலிருந்து சில சூத்திரங்கள்
6. நேமிநாத உரையாசிரியர் – மேற்கோள்
7. நவநீதப் பாட்டியலின் பழைய உரை >
@1 வீரசோழியம் – உரையாசிரியர் மேற்கோள்
** சொல்லதிகாரம் வேற்றுமைப் படலம் 6-ஆம் காரிகை உரை
#1
ஆலும் ஆனும் மூன்றேன் உருபே
#2
** யாப்பதிகாரம் 19-ஆம் காரிகை உரை
ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்க வரினும் அப் பாற்படுமே
@2 யாப்பருங்கலக் காரிகை உரையாசிர்- குணசாகரர்
** (யாப்பருங்கலக்காரிகை 23-ஆம் காரிகை உரை மேற்கோள்)
#1
தத்தம் பா இனத்து ஒப்பினும் குறையினும்
ஒன்றொன்று ஒவ்வா வேற்றுமை வகையால்
பாத் தம் வண்ணம் மேலா ஆகின்
பண் போல் விகற்பம் பா இனத்து ஆகும்
#2
குறட்பா இரண்டு அவை நால் வகைத் தொடையான்
முதல் பாத் தனிச்சொலின் அடி மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா
** (யா காரிகை – 44-ஆம் காரிகையுரை மேற்கோள்)
#3
முன்னிலை நெடிலும் ஆவும் மாவும்
னம் மிகப் புணரும் இயங்கு திணையான
@3 யாப்பருங்கல உரையாசிரியர் – மேற்கோள்
** யாப்பருங்கலம் எழுத்தோத்து உரை மேற்கோள்
#1
அ இ உ எ ஒ இவை குறிய மற்றை ஏழ்
நெட்டெழுத்தாம் நேரப்படுமே
#2
குற்றெழுத்துத் தொண்ணூற்றைந்து ஆகும்
நூற்றொடு முப்பத்துமூன்று நெடிலாம்
#3
இருநூற்றிருபத்தெட்டு விரிந்தன
உயிரே வன்மை மென்மை இடைமை
#4
வல்லெழுத்து ஆறோடு எழு வகையிடத்தும்
உகரம் அரையாம் யகரமோடு இயையின்
இகரமும் குறுகும் என்மனார் புலவர்
#5
அக்கேனமாய் தம் தனிநிலை புள்ளி
ஒற்று இப்பால ஐந்தும் இதற்கே
#6
அளபெடை தனி இரண்டு அல் வரி ஐ ஔ
உளதாம் ஒன்றரை தனியுமை ஆகும்
#7
ஆய்தமும் யவ் அவ்வொடு வரினே
ஐ என் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும்
#8
உவ்வொடு வ ல வரின் ஔ இயல்பு ஆகும்
#9
நெடிய குறிய உயிர்மெய் உயிரும்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூ உயிர்க்குறுக்கமோடு அம் அசைக்கு எழுத்தே
#10
அளபு எழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும்
அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர்
#11
உயிரளபெடையும் குறுகிய உயிரின்
இகர உகரமும் தளை தபின் ஒற்றாம்
#12
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும்
** யாப்பருங்கலம் அசையோத்து உரை மேற்கோள்
#13
நேர் அசை ஒன்றே நிரை அசை இரண்டு அலகு
ஆகும் என்ப அறிந்திசினோரே
#14
நேர் ஓர் அலகு நிரை இரண்டு அலகு
நேர்பு மூன்று அலகு நிரைபு நான்கு அலகு என்று
ஓதினார் புலவர் உணருமாறே
#15
கடையும் இடையும் இணையும் ஐ_இரட்டியும்
** யாப்பருங்கலம் சீரோத்து உரை மேற்கோள்
#16
ஈர் அசைச் சீர் நான்கு இயற்சீர் மூ அசை
இயற்சீர் எட்டனுள் அல்லன விரவினும்
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி
#17
ஈர் அசைச் சீர் பின்முன்னா வைத்து உறழ்ந்து
மாறியக்கால் நால் அசைச் சீர் பதினாறு ஆம்
#18
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி
#19
முதல் இடை நுனிநாப் பல் இதழ் மூக்கு இவை
வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்
#20
உரிமை இயற்சீர் மயங்கியும் பா நான்கு
இருமை வேறு இயல் வெண்பா ஆகியும்
வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற
இயற்சீர் ஆகா என்மனார் புலவர்
#21
நிரை இறு நால் அசை வஞ்சியுள்ளால்
விரவினும் நேர் ஈற்று அல்லவை இயலா
#22
நேர் நடு இயல வஞ்சி உரிச்சீர்
ஆசிரியத்து இயல் உண்மையும் உடைய
** யாப்பருங்கலம் தளையோத்து உரை மேற்கோள்
#23
ஈர் அசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே
** யாப்பருங்கலம் அடியோத்து பத்து உரை மேற்கோள்
#24
இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும்
நால் சீர் அடியான் பாப் பிற மூன்றே
#25
எல்லா அடியினும் இனப் பா நால் சீர்
அல்லா மேல் அடிய பாவினுக்கு இயலா
#26
ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும்
என்று இ முறையே பாவின் சிறுமை
தத்தம் குறிப்பினவே தொடையின் பெருமை
** யாப்பருங்கலம் தொடையோத்து உரை மேற்கோள்
#27
மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும்
அளபெடை இனம்பெறத் தொடுப்பது அளபெடை
#28
ஒரூஉத் தொடை
இரு சீர் இடைவிடில் என்மனார் புலவர்
#29
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை
#30
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை
#31
மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரால்
இயங்கினும் தளை வகை இன்னனம் ஆகும்
** யாப்பருங்கலம் செய்யுளியல் உரை மேற்கோள்
#32
வெண்பா தாழிசை வெண்துறை விருத்தம் என்று
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப
#33
ஏந்திசைச் செப்பல் இசையன ஆகி
வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே
#34
முச் சீர் அடியான் இறுதலும் நேர் நிரை
அச் சீர் இயல்பின் அசையின் இறுதியாம்
#35
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
#36
குறட்பா இரண்டு அவை நால் வகைத் தொடையாய்
முதல் பாத் தனிச்சொலின் அடி மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா
#37
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி நடப்பது இன்னிசை வெண்பா
#38
தொடை மிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா
#39
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை
#40
அடி மூன்று ஆகி வெண்பாப் போல
இறுவதாயின் வெள் ஒத்தாழிசை
#41
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும் இரண்டும் சீர் தபின் வெண்துறை
#42
மூன்றும் நான்கும் அடி-தொறும் தனிச்சொல்
கொளீஇய எல்லாம் வெளிவிருத்தம்மே
#43
தன்-பால் உறுப்புத் தழுவிய மெல்லிய
இன்பா அகவ இசையதை இன்னுயிர்க்கு
அன்பா அறைந்த ஆசிரியம் என்ப
#44
ஏ ஐச் சொல்லின் ஆசிரியம் இறுமே
ஓ ஈ ஆயும் ஒரோவழி ஆகும்
#45
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று
உன்னவும் பெறூஉம் நிலைமண்டிலமே
#46
ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி
நிற்பது நேரிசை ஆசிரியம்மே
#47
இடை பல குறைவது இணைக்குறள் ஆகும்
#48
கொண்ட அடி முதலாய் ஒத்து இறுவது
மண்டிலம் ஒத்து இறின் நிலைமண்டிலமே
#49
ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என் என் கிளவியை ஈறாகப் பெறும்
அன்ன பிறவும் அ நிலைமண்டிலமே
#50
நால் சீர் அடி நான்கு அகத்தொடை நடந்தவும்
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும்
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும்
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தும்
தன் சீர்ப் பாதியின் அடி முடிவு உடைத்தாய்
அந்தத் தொடை இவை அடியா நடப்பின்
குறையா உறுப்பினது துறை எனப்படுமே
#51
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும்
குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும்
#52
ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி
ஏந்திய துள்ளல் இசையது கலியே
#53
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம் என
முத் திறத்தான் வரும் கலிப்பா என்ப
#54
விட்டிசை முதல் பாத் தரவு அடி ஒத்தாங்கு
ஒட்டிய மூன்றிடைத் தாழிசை அதன் பின்
மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம்
ஆசிரியத்தொடு வெள்ளை அறுதல் என்று
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே
#55
உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர்
நிரைத்த அடியான் நீர்த் திரை போல
அசை அடி பெறின் அவை அம்போதரங்கம்
#56
குறில்-வயின் நிரை அசை கூட்டிய வாராது
அடி அவண் பெறினே வண்ணகம் ஆகும்
#57
கலியொடு கொண்டு தன் தளை விரவா
இறும் அடி வரினே வெண்கலி ஆகும்
#58
தரவே ஆகியும் இரட்டியும் தாழிசைச்
சிலவும் பலவும் மயங்கியும் பா வேறு
ஒத்தாழிசைக்கலிக்கு ஒவ்வா உறுப்பின
கொச்சகக்கலிப்பா ஆகும் என்ப
#59
ஈற்றடி மிக்கு அளவு ஒத்தன ஆகிப்
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்
#60
ஐம் சீர் நான்கு அடி கலித்துறை ஆகும்
#61
நால் சீர் நால் அடி வருவதாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத்தம்மே
#62
தூங்கல் இசையாய்த் தனிச்சொல் சுரிதகம்
தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய்
எஞ்சா வகையது வஞ்சிப் பாவே
#63
இரு சீர் நால் அடி மூன்று இணைந்து இறுவது
வஞ்சித் தாழிசை தனி வரின் துறையே
#64
ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்கு அடி வரினும் அப் பாற்படுமே”
** யாப்பருங்கலம் ஒழிபியல் உரை மேற்கோள்
#65
தனியே
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது
இறுதியும் வஞ்சியும் என்ப
#66
தனியே
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது
இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப
#67
எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து
ஒழுக்கலும் அடி தொடை தளை அழியாமை
வழுக்கு_இல் வகையுளி சேர்தலும் உரித்தே
#68
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி
#69
உயிரளபெடையும் குறுகிய உயிரின்
இகர உகரமும் தளை தபின் ஒற்று ஆம்
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும்
** இனி ஒரு சாரார் அகத்திணை புறத்திணை அகப்புறத் திணை
** என மூன்றா யடங்குமென்ப ஆமாறு அவிநயத்துட் காண்க
#70
முற்செய் வினையது முறையா உண்மையின்
ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து
காட்சி ஐயம் தெரிதல் தேற்றல் என
நான்கு இறந்தவட்கு நாணும் மடனும்
அச்சமும் பயிர்ப்பும் அவற்கும்
உயிர்த்து அகத்து அடக்கிய
அறிவு நிறைவும் ஓர்ப்பும் தேற்றமும்
மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தின்
மெய்யுறு வகையும் உள் அல்லது உடம்படாத்
தமிழியல் வழக்கம் எனத் தன் அன்பு மிகை பெருகிய
களவு எனப்படுவது கந்தருவமணமே
@4 நன்னூல் உரையாசிர் மயிலைநாதர் மேற்கோள்
** எழுத்தியல் 13-ஆம் சூத்திர உரை – மேற்கோள்
#0
ஆற்றலுடை உயிர் முயற்சியின் அணு இயைந்து
ஏற்றன ஒலியாய்த் தோன்றுதல் பிறப்பே
** நன்னூல் எழுத்தியல் உரை மேற்கோள்
#1
வன்மையொடு ரஃகான் ழஃகான் ஒழிந்தாங்கு
அல் மெய் ஆய்தமோடு அளபு எழும் ஒரோவழி
#2
பதினெண் மெய்யும் அதுவே மவ்வொடு
ஆய்தமும் அளபு அரை தேய்தலும் உரித்தே
#3
ஙகரம் மொழிக்கு முதலாகுமோ எனின்
க ச த ப நவ்வே ஆதியும் இடையும்
ட ற இடை ண ன ர ழ ல ள இடை கடையே
ஞ ந ம ய வவ்வே மூன்று இடம் என்ப
** நன் – பதவியல் நான்கு உரை மேற்கோள்
#4
அவைதாம்
பெயர்ச்சொல் என்றா தொழிற்சொல் என்றா
இரண்டின் பாலாய் அடங்குமன் பயின்றே
** நன் – பெயர் 7 உரை மேற்கோள்)
#5
அழிதூஉ வகையும் அவற்றின் பாலே
காலம் அறி தொழில் கருத்தினோ பாலே
** (நன் – வினை 1 உரை மேற்கோள்)
#6
காலம் அறி தொழில் கருத்தினோடு இயையப்
பால் வகை-தோறும் படுமொழி வேறே
@5 பன்னிருபாட்டியலில் அவிநய நூலிலிருந்து சில சூத்திரங்கள்
#1
உணவே அமுதம் விடமும் ஆகும்
#2
அந்தச் சாதிக்கு அந்தப் பாவே
தந்தனர் புலவர் தவிர்ந்தனர் வரையார்
#3
வெள்ளையும் அகவலும் விருத்தமும் கலியும்
வஞ்சியும் எஞ்சா மங்கலம் பொருந்தும்
#4
வெள்ளை அகவல் விருத்தம் கலியே
வஞ்சி என்று இவை மங்கலப் பாவே
#5
காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொல் நெறிப் புலவரும் உளரே
#6
பாலன் யாண்டே ஏழ் என மொழிப
#7
மீளி யாண்டே பத்தியை-காறும்
#8
மறவோன் யாண்டே பதினான்கு ஆகும்
#9
திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்
#10
பதினாறு எல்லை காளைக்கு யாண்டே
#11
அத் திறம் இறந்த முப்பதின்-காறும்
விடலைக்கு ஆகும் மிகினே முதுமகன்
#12
நீடிய நாற்பத்தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப
#13
சிற்றில் பாவை கழங்கம் மனையே
பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே
பைம் புனலாட்டே பொழில் விளையாட்டே
நன் மது நுகர்தல் இன்ன பிறவும்
அவரவர்க்கு உரிய ஆகும் என்ப
#14
வேந்தர் கடவுளர் விதிநூல் வழி உணர்
மாந்தர் கலிவெண்பாவிற்கு உரியர்
#15
நாலு வருணமும் மேவுதல் உரிய
உலாப்புறச் செய்யுள் என்று உரைத்தனர் புலவர்
@6 நேமிநாத உரையாசிரியர்
** சொல்லதிகாரம் நான்காம் சூத்திர உரை – மேற்கோள்
#1
ஒருவன் ஒருத்தி பலர் என்று மூன்றே
உயர்திணை மருங்கில் படர்க்கைப்-பாலே
ஒன்றன் படர்க்கை பலவற்றுப் படர்க்கை
அன்றி அனைத்தும் அஃறிணைப்-பால
@7 நவநீதப் பாட்டியலின் பழைய உரை
** 91-ஆம் செய்யுள் உரை
** அவிநயனார் கலாவியல் என்னும் பெயருடன்
#1
செவித்திறம் கொள்ளாது தெரியும்காலைத்
தானே நம்பி மகனே மாணி
ஆசான் என்று அவரில் ஒருவர் இழுக்கு_இலைக்
குற்றம் வகுத்து உடன் பாடாமல் சொல்லின்
வென்றியும் பெறுமே
#2
அவை புகு நெறியே ஆயும்காலை
வாயிலின் நிரைத்துக் கூறப் புகும்காலை
இருவரும் புகாஅர் ஒருவர் முன் புகின்
புக்கவன் தொலையும் உய்த்து எனும் உண்மையின்
இருவரும் கூடி ஒருங்குடன் பட்ட
தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர் என்ப
** அவிநயம் முற்றும்
*