Select Page

அவிநயம் – தி.வே.கோபாலையர் பதிப்பு

@1
** அசைக்கு உறுப்பாவன

#1
நெடிய குறிய உயிர்மெய் உயிரும்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூ உயிர்க்குறுக்கமோடு ஆம் அசைக்கு எழுத்தே
** அசைவகைகள்

#2
நேர் அசை ஒன்றே நிரை இரண்டு அலகு
ஆகும் என்ப அறிந்திசினோரே

#3
கடையும் இடையும் இணையும் ஐ இரட்டியும்

#4
நேர்பு மூன்று அலகு நிரைபு நான்கு அலகு என்று
ஓதினார் புலவர் உணருமாறே
** சீர் வகைகள்

#5
ஈர் அசைச் சீர் நான்கு இயற்சீர் மூ அசையின்
இயற்சீர் எட்டினுள் அல்லன விரவினும்
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி
** ஓரசைச்சீர்

#6
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி
** நாலசைச்சீர்

#7
ஈர் அசைச் சீர் பின்முன்னா வைத்து உறழ்ந்து
மாறியக்கால் நால் அசைச் சீர் பதினாறு ஆகும்
** ஆசிரியத்தளை

#8
ஈர் அசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே
** பாவடிகளின் சீர் வரையறை

#9
இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும்

#10
நால் சீர் அடியான் பாப் பிற மூன்றே

#11
எல்லா அடியினும் இனப் பா நால் சீர்
அல்லா மெல்லடி பாவினுக்கு இயலா
** முரண்தொடை

#12
மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும்
** இயைபுத்தொடை

#13
இறுவாய் ஒப்பின் அஃது இயைபு என மொழிப
** அளபெடைத்தொடை

#14
அளபெடை இனம்பெறத் தொடுப்பது அளபெடை
** ஒரூஉத்தொடை

#15
ஒரூஉத்தொடை
இரு சீர் இடையிடின் என்மனார் புலவர்
** செந்தொடை

#16
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை
** இரட்டைத்தொடை

#17
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை
** தொடைகளுக்குப் புறனடை

#18
மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரான்
இயங்கினும் தளை வகை இன்னன ஆகும்
** பாவும் பாவினமும்

#19
வெண்பா தாழிசை வெண்துறை விருத்தம் என்று
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப
** வெண்பா யாப்பு

#20
ஏந்திசைச் செப்பல் இசையன ஆகி
வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே
** வெண்பா ஈற்றடி

#21
முச் சீர் அடியான் இறுதலும் நேர் நிரை
அச் சீர் இயல்பின் அசையின் இறுதியாம்
** குறள் வெண்பா

#22
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே

#23
ஐம்பெரும் தொடையின் இனக் குறள் விகற்பம்
செந்தொடை விகற்பொடு செயிர் தீர் ஈர் அடி
** சிந்தியல் வெண்பா

#24
நேரிசைச் சிந்தும் இன்னிசைச் சிந்தும் என்று
ஈர் அடி முக்கால் இரு வகைப்படுமே
** நேரிசை வெண்பா

#25
குறட்பா இரண்டு அவை நால் வகைத் தொடையாய்
முதல் பாத் தனிச்சொலின் அ மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா
** இன்னிசை வெண்பா

#26
ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல்
இன்றி நடப்பது இன்னிசை வெண்பா
** பஃறொடை வெண்பா

#27
தொடை மிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா
** வெள்ளொத்தாழிசை

#28
அடி மூன்று ஆகி வெண்பாப் போல
இறுவதாயின் வெள் ஒத்தாழிசை
** வெண்துறை

#29
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி
ஒன்றும் இரண்டும் சீர் தபின் வெண்துறை
** வெளிவிருத்தம்

#30
மூன்றும் நான்கும் அடி-தொறும் தனிச்சொல்
கொளீஇய எல்லாம் வெளிவிருத்தம்மே
** ஆசிரியப்பா

#31
தன்-பால் உறுப்புத் தழுவிய மெல்லிய
இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க்கு
அன்பா அறைந்த ஆசிரியம் என்ப

#32
ஏ ஐச் சொல்லின் ஆசிரியம் இறுமே
ஓ ஈ ஆயும் ஒரோவழி ஆகும்

#33
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று
உன்னவும் பெறூஉம் நிலைமண்டிலமே
** நேரிசை ஆசிரியம்

#34
ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி
நிற்பது நேரிசை ஆசிரியம்மே
** இணைக்குறள் ஆசிரியம்

#35
இடை பல குறைவது இணைக்குறள் ஆகும்
** நிலைமண்டில ஆசிரியம்

#36
ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என் என் கிளவியை ஈறாகப் பெறும்
அன்ன பிறவும் அ நிலைமண்டிலமே
** அடிமறி மண்டில ஆசிரியம்

#37
கொண்ட அடி முதலாய் ஒத்து இறுவது
மண்டிலம் ஒத்து இறின் நிலைமண்டிலமே
** ஆசிரியத்துறை

#38
நால் சீர் அடி நான்கு அந்தாதி நடந்தவும்
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும்
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும்
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தவும்
தன் சீர் பாதியின் அடி முடிவு உடைத்தாய்
அந்தத் தொடை இவை அடியா நடப்பின்
குறையா உறுப்பினது துறை எனப்படுமே
** ஆசிரிய விருத்தம்

#39
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும்
குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும்
** கலிப்பா இலக்கணம்

#40
ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி
ஏய்ந்த துள்ளல் இசையது கலியே
** கலிப்பா வகை

#41
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம் என
முத் திறத்தான் வரும் கலிப்பா என்ப
** நேரிசை ஒத்தாழிசை

#42
விட்டிசை முதல் பா தரவு அடி ஒத்தாங்கு
ஒட்டிய மூன்றிடைத் தாழிசை அதன் பின்
மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம்
ஆசிரியத்தோடு வெள்ளை இறுதல் என்று
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே
** அம்போதரங்க ஒத்தாழிசை

#43
உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர்
நிரைத்த அடியான் நீர்த் திரை போல
அசை அடி வரின் அவை அம்போதரங்கம்
** வண்ணக ஒத்தாழிசை

#44
குறில்-வயின் நிரை அசை கூடிய அடி பெறினே
வண்ணகம் ஆகும்
** வெண்கலி

#45
கலி ஒலி கொண்டு தன் தளை விரவா
இறும் அடி வரினே வெண்கலி ஆகும்
** கொச்சகக்கலி

#46
தரவே ஆகியும் இரட்டியும் தாழிசை
சிலவும் பலவும் மயங்கியும் பல்வேறு
ஒத்தாழிசைக்கலிக்கு ஒவ்வா உறுப்பின
கொச்சகக்கலிப்பா ஆகும் என்ப
** கலித்தாழிசை

#47
ஈற்றடி மிக்கு அளவு ஒத்தன ஆகி
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்
** கலித்துறை

#48
ஐம் சீர் நான்கு அடி கலித்துறை ஆகும்
** கலிவிருத்தம்

#49
நால் சீர் நால் அடி வருவதாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத்தம்மே
** வஞ்சிப்பா

#50
தூங்கல் இசையாய்த் தனிச்சொல் சுரிதகம்
தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய்
எஞ்சாது அமைவது வஞ்சிப்பாவே
** வஞ்சித்தாழிசையும் துறையும்

#51
இரு சீர் நால் அடி மூன்று இணைந்து இறுவது
வஞ்சித் தாழிசை தனி வரின் துறையே
** தளை சிதைவுழிப்படும் இலக்கணம்

#52
உயிரளபெடையும் குறுகிய உயிரின்
இகர உகரமும் தளை தபின் ஒற்றாம்
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும்

#53
அளபு எழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும்
அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர்
** சீர் மயக்கம்

#54
உரிமையின் இயற்சீர் மயங்கியும் பா நான்கு
இருமை வேறு இயல் வெண்பா ஆகியும்
வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற
இயற்சீர் ஆகா என்மனார் புலவர்

#55
நிரை இறு நால் அசை வஞ்சியுள் அல்லால்
விரவினும் நேர் ஈற்று அல்லவை நில்லா

#56
நேர் நடு இயலா வஞ்சி உரிச்சீர்
ஆசிரியத்து இயல் உண்மையும் உடைய
** பாவின் சிறுமை பெருமை

#57
ஒன்றும் இரண்டும் மூன்றும் ஈர்_இரண்டும்
என்று இ முறையே பாவின் சிறுமை
தம் குறிப்பினவே தொடையின் பெருமை
** வெண் செந்துறை

#58
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை
** கூன் ஆமாறு

#59
தனியே,
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது
இறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப
** குறிப்பிசை – வகையுளி

#60
எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து
ஒழுக்கலும் அடியொடு தளை சிதையாமை
வழுக்கு_இல் வகையுளி சேர்த்தலும் உரித்தே
** பாப்போலி

#61
ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்கடி வரினும் அப் பாற்படுமே
** அடிவரையறை இல்லன

#62
செயிர் தீர் செய்யுள் தெரியும்காலை
அடியின் நீட்டத்து அழகுபட்டு இயலும்
ஓர் அடியானும் ஒரேவிடத்து இயலும்

#63
அவைதாம்
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆக்கின என்ப அறிந்திசினோரே
*