Select Page

அகத்தியம் – மயிலை சீனி வேங்கடசாமி

1. நன்னூல் உரை – மயிலைநாதர் – மேற்கோள்

2. தெய்வச் சிலையார் – தொல். உரை மேற்கோள்

3. யாப்பருங்கலம் – எழுத்தோத்து, விருத்தியுரை மேற்கோள்

4. தெய்வச் சிலையார் -தொல். சொல். வேற்றுமையியல்
63- உரை மேற்கோள்


5. இளம்பூரணர் – தொல். செய்யுளியல் – உரை மேற்கோள்

6. இளம்பூரணர் – தொல். செய்யுளியல் – உரை மேற்கோள்

7. நன்னூல் உரை – மயிலைநாதர் – மேற்கோள்

8. யாப்பருங்கலம் – ஒழிபியல் – விருத்தியுரை மேற்கோள்


@1 நன்னூல் உரை – மயிலைநாதர். (பெயரியல், 16ஆம் சூத்திர உரை) – மேற்கோள்

#
கன்னித் தென்கரைக்-கண் பழந்தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குட-பால் இரு புறச் சையத்து
உடன் உறைபு பழகும் தமிழ் திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடு நில ஆட்சி
அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடன் இருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையின் சொல் நயம் உடையவும்

@2 இதே சூத்திரம் – தெய்வச் சிலையார் – தொல். உரை
** (சொல் எச்சம்., 4ஆம் சூத்திர உரை) மேற்கோள்

#1
கன்னித் தென்கரைக் கடல் பழந்தீபம்
கொல்லம் கூபகம் சிங்களம் என்னும்
எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்
கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம்
குடகம் குன்றகம் என்பன குட-பால்
இரு புறச் சையத்து உடன் உறையு புகூஉம்
தமிழ் திரி நிலங்களும்
முடி நிலை மூவர் இடு நில ஆட்சியின்
அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள்
பதின்மரும் உடன் இருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல் நயம் உடையவும்

@3 யாப்பருங்கலம் – எழுத்தோத்து, விருத்தியுரை

#1
இயற்பெயர் சார்த்தி எழுத்து அளபு எழினே
இடியற்பாடு இல்லா எழுத்து ஆனந்தம்

@4 (தொல்.,சொல்.,வேற்றுமையியல், 63,-தெய்வச் சிலையார் உரை மேற்கோள்)

#1
மற்றுச் சொல் நோக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பது முற்றியன் மொழியே

@5 தொல், பொருள், செய்யுளியல், 117, இளம்பூரணர், உரைமேற்கோள்

#1
அராகம் தாமே நான்காய் ஒரோவொன்று
வீதலும் உடைய மூ_இரண்டு அடியே

#2
ஈர் அடி ஆகும் இழிபிற்கு எல்லை

#3
தரவே எருத்தம் அராகம் கொச்சகம்
மடக்கியல் வகையோடு ஐந்து உறுப்பு உடைத்தே

#4
கொச்சக வகையின் எண்ணொடு விராஅய்
அடக்கியல் இன்றி அடங்கவும் பெறுமே

@6 தொல்.,பொருள்.,செய்யுளியல், இளம்பூரணர் உரை மேற்கோள்

#1
இரு-வயின் ஒத்தும் ஒவ்வா இயலினும்
தெரி இழை மகளிரொடு மைந்தரிடை வரூஉம்
கலப்பே ஆயினும் புலப்பே ஆயினும்
ஐந்திணை மரபின் அறிவரத் தோன்றிப்
பொலிவொடு புணர்ந்த பொருள் திறம் உடையது
கலி எனப்படூஉம் காட்சித்து ஆகும்

@7 மயிலை நாதர் – நன்னூல் உரை மேற்கோள்

#1
பெயரினும் வினையினும் மொழி முதல் அடங்கும்

#2
வயிர ஊசியும் மயன் வினை இரும்பும்
செயிர் அறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்
தமக்கு அமை கருவியும் தாம் ஆமவை போல்
உரைத் திறம் உணர்த்தலும் உரையது தொழிலே

#3
பலவின் இயைந்தவும் ஒன்று எனப்படுமே
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய

#4
ஏழ் இயல் முறையது எதிர்முக வேற்றுமை
வேறு என விளம்பான் பெயரது விகாரம் என்று
ஓதிய புலவனும் உளன் ஒரு வகையான்
இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்

#5
வினை நிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்
பெயர்கொள வருதலும் பெயர்ப் பயனிலையே

#6
ஆலும் ஆனும் ஓடு ஒடுவும்
சாலும் மூன்றாம் வேற்றுமைத் தனுவே
செய்வோன் காரணம் செயத்தகு கருவி
எய்திய தொழில் முதல் இயைபு உடைத்ததன் பொருள்

#7
ஆறன் உருபே அது ஆது அவ்வும்
வேறு ஒன்று உரியதைத் தனக்கு உரியதை என
இரு பால் கிழமையின் மருவுற வருமே
ஐம்பால் உரிமையும் அதன் தற்கிழமை

#8
மற்றுச் சொல் நோக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பன முற்றியல் மொழியே

#9
காலமொடு கருத வரினும் ஆரை
மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்றே

#10
முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்
முற்றுச் சொல் என்று முறைமையின் திரியா

#11
காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
பெயர் கொள்ளும் அது பெயரெச்சம்மே

#12
காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
வினை கொள்ளும் அது வினையெச்சம்மே

#13
எனைத்து முற்று அடுக்கினும் அனைத்தும் ஒரு பெயர் மேல்
நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே
வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலப்பல அடுக்கினும் முற்றும் மொழிப்படிய

#14
உலக வழக்கமும் ஒரு முக்காலமும்
நிலைபெற உணர்தரும் முதுமறை நெறியான்

#15
அசை நிலை இரண்டினும் பொருள் மொழி மூன்றினும்
இசைநிறை நான்கினும் ஒரு மொழி தொடரும்

#16
கண்டு பால் மயங்கும் ஐயக் கிளவி
நின்றோர் வருவோர் என்று சொல் நிகழக்
காணா வையமும் பல்லோர் படர்க்கை

@8 யாப்பருங்கலம், ஒழிபியல், விருத்தியுரை

#1
களவினும் கற்பினும் கலக்கம் இல்லாத்
தலைவனும் தலைவியும் பிரிந்தகாலைக்
கையறு துயரமொடு காட்சிக்கு அவாவி
எவ்வமொடு புணர்ந்து நனி மிகப் புலம்பப்
பாடப்படுவோன் பதியொடும் நாட்டொடும்
உள்ளுறுத்து இறினே உயர் கழி ஆனந்தப்
பையுள் என்று பழித்தனர் புலவர்
**
*