Select Page

பாடல் 134 – அறவிலை வணிகன்

பொதிகை மலைச் சாரலை ஒட்டிய அந்தச் சிற்றூர் வெகுவிரைவில் வரவிருக்கும் இரவை எதிநோக்கியிருந்தது. மலைச் சரிவில் மேய்ந்து திரும்பிய பசுக்கூட்டங்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்தன. அவற்றை ஓட்டிவந்த இடையர்கள் அவற்றை ஊரை ஒட்டி இருந்த அவற்றுக்குரிய தொழுக்களில் அடைத்தனர்....

பாடல் 121 – பொதுநோக்கு ஒழி

பறம்பு நாட்டை ஆளும் பாரிமன்னனின் மிக நெருங்கிய நண்பராயிருந்தும் கபிலருக்குப் பாரியினிடத்தில் வெகுநாட்கள் தங்கியிருக்க மனமில்லை. பாரி மிகச் சிறந்த வள்ளல்தான். இருப்பினும் தான் பாரிக்கு மட்டுமா உரித்தானவன் – தமிழ்நாட்டுக்கே உரித்தானவன் என்ற இறுமாப்பு கபிலருக்கு உண்டு....

பாடல் 94 – நீர்த்துறைப் பெருங்களிறு

ஔவைப்பாட்டிக்கு ஒரே களைப்பாக இருந்தது. இந்த ஏறு வெயிலில் அவர் அதியமானின் அவைக்குச் சென்றுகொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் தகடூரை அடைந்துவிடுவார். அதியமானின் அவையில் பல சிற்றரசர்கள், அமைச்சர்கள், ஆலோசனைக்குழுவினர் போன்ற முக்கியமான மதிப்பிற்குரியவர்கள்...

பாடல் 86 – புலி தங்கிய குகை

பெரும்பாலும் குடிசைகளே உள்ள அந்தச் சிறிய ஊரில் முன்றே தெருக்கள் இருந்தன. அவற்றுள் நடுவில் இருந்த தெருவின் கோடியில் ஓர் அம்மன் கோவில் சிறிய அளவில் இருந்தது. அம்மன் சிலைக்கருகே ஒரு நெடிய வேல் நட்டுக்குத்தாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கோவில் திண்ணையோரத்துக் கற்பலகையில்...