Select Page

பாடல் 191 – நரை இல ஆகுதல்

“வேந்தனைப் பார்க்கும் ஆவல் மிகுந்துகொண்டே செல்கிறது”, வெளித் திண்ணையில் காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்து, மனைவி கொடுத்த செம்பிலிருந்த நீரைப் பருகிய பிசிராந்தையார், மேல்துண்டால் மீசையைத் துடைத்தவாறே கூறினார். “ஏன் சென்ற மாதம்தானே மதுரைசென்று மன்னனைக் கண்டு அறிவுரை...

பாடல் 189 – செல்வத்துப் பயன்

மதுரையில் வடக்குஆவணத்தெருவில் இருந்த ஒரு பெரிய மாளிகையினின்றும் மாணவர்கள் பாடம் பயிலும் ஓசை பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அது கணக்காயனாரின் மாளிகை. அவர் ஒரு பெரும் புலவர். அவரது மகன் கீரன், நல் கீரன் என்ற அடைபொழியுடன் நக்கீரன் என்று அழைக்கப்பட்டார். தனது புலமையால்...

பாடல் 185 – சாகாடு உகைப்போன்

தொண்டைமான் இளந்திரையன் தன் அரண்மனைக்குள் பரபரப்பாக இயங்கிக்-கொண்டிருந்தான். மன்னனே பரபரப்பாக இருந்தால், அவனைச் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? எள் என்றால் எண்ணெயாக இயங்கிக்கொண்டிருந்தனர் எல்லா எடுபிடிகளும். அரண்மனை மட்டுமல்ல, காஞ்சி மா நகரமே...

பாடல் 184 – யானை புக்க புலம்

ஆந்தையாரின் வீடே அமைதியாக இருந்தது. அவர் வீட்டின் உள்திண்ணையில் தூணில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்து தீவிர சிந்தனைவயப்பட்டிருந்தார். அப்படி அவர் இருக்கும்போது வீட்டில் யாரும் வாய்திறந்து பேசமாட்டார்கள். எல்லாம் ‘குசுகுசு’-தான். காரணம் ஆந்தையாரது சிந்தனை தடைபட்டுப்போகக்...

பாடல் 183 கற்றல் நன்றே

மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடுகள்தோறும் வாசலில் பெரிய பெரிய கோலங்கள் வரைந்திருந்தனர். வாசல்நிலைகளில் மாவிலைத் தோரணங்களையும், மலர்ச் சரங்களையும் தொங்கவிட்டிருந்தனர். நகரின் நான்கு தெருக்களிலும் முரசுகளை முழங்கியவண்ணம் யானைகளில் வீரர்கள்...

பாடல் 182 – உண்டால் அம்ம இவ்வுலகம்

பாண்டிய மன்னரின் அரண்மனையே மிக்க பரபரப்புடன் இயங்கிக்கொண் டிருந்தது. மன்னர் பெருவழுதி அங்குமிங்கும் நடைபோட்டுக்கொண்டு பார்ப்போரிடம் பலவித ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். காரணம், அன்று மதிய உணவுக்குப் பின்னர் இளவரசன் இளம்பெருவழுதி கடாரம் நோக்கிக் கப்பலில் பயணம்...