என்னே தமிழின் இளமை
வீட்டுக்குள் வேகமாக நுழைந்த அவர், தன் மூத்த மகனின் பெயரைச் சொல்லிக்கொண்டே உரத்த குரலில் அவனை அழைத்தார். ஒவ்வோர் அறையாகச் சென்று தேடியும் பார்த்தார். அடுப்படியிலிருந்து முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டே வந்த அவரது மனைவி, “என்ன தேடுறீங்க?” என்று நிதானமாகக் கேட்டாள்....
என்னே தமிழின் இளமை
ஆக்கி முடிந்தவுடன் ஒரு பெரிய தட்டில், இரண்டு பெரிய அகப்பைச் சோற்றை அள்ளிப்போட்டாள் அவள். சோற்றில் ஆவி பறந்தது. வாயைக் குவித்துக்கொண்டு ‘பூ பூ’’ வென்று ஊதிச் சூட்டைக் குறைத்தாள். சின்னத் தூக்குப்போணியைத் திறந்து கொஞ்சம் நெய்சேர்த்துப் பிசைந்துவிட்டாள். பின்பு அதனை...
என்னே தமிழின் இளமை
ஒழுகுகின்ற கண்ணீரைத் தன் சட்டையால் துடைத்துக்கொண்டே உள்ளே நுழையும் தன் மகனை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் அந்த அன்னை. அவள் கேட்டாள், “என்ன நடந்துச்சு? யாராச்சும் அடிச்சாங்களா?” இன்னும் விசும்பல் குறையாத சிறுவன் தலையைமட்டும் ஆட்டினான். “யாரு? அந்த தடிப்பய சிவனாண்டியா?”...
என்னே தமிழின் இளமை
தன் சட்டையின் மடிநிறைய என்னத்தையோ கட்டிக்கொண்டு மேனி முழுக்க சேறும் சகதியுமாய்த் தன் முன் வந்து நிற்கும் தன் மகனை வியப்புடன் பார்த்தாள் அவள். “என்னடா? எங்க போயிருந்த? கம்மாய்க்கா?” என்று வினவினாள் அவள். “ஆமாம்மா, கொள்ள மீனு! புடிச்சிட்டு வந்தேன்” என்றான் அந்தச்...
என்னே தமிழின் இளமை
அந்த மேனிலைப்பள்ளியின் மாலை வகுப்புகள் முடிந்து மணி அடித்து ஓயக்கூட இல்லை. அவன் அவசரம் அவசரமாகத் தன் முதுகுப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். “என்ன அப்படி அவசரம் இன்னிக்கி?” என்று கேட்டான் அடுத்து இருந்தவன். “இன்னக்கி எங்க campus-ல pot luck dinner. அம்மாவுக்கு உதவி...
என்னே தமிழின் இளமை
அன்று வெள்ளிக்கிழமை. அவன் அலுவலகத்துக்குப் புறப்படும்போதே அவள் அடிபோட்டாள். மாலையில் சீக்கிரம் வந்துவிடவேண்டுமென்றும், வரும்போது, மறக்காமல் – சாக்குப்போக்குச் சொல்லக்கூடாது – மறக்காமல் மல்லிகைப் பூ வாங்கிவரவேண்டும் என்றும். அவன் அலுவலகத்துக்குச் சென்ற கொஞ்ச நேரத்தில்...