Select Page

28 – மூச்சுவிடமாட்டேன்

“கீர, கீர, கீரேஏஏஏஏய்” என்ற கீரைக்காரியின் குரல் தெருமுனையிலிருந்து இலேசாகக் கேட்டது. சமையலறையில் இருந்த அவள் அவசரம் அவசரமாக வேலையை முடிக்கத் தொடங்கினாள். ‘இன்னிக்கி அரைக்கீர வாங்கிக் கடையணும்’ என்று தனக்குள் சொன்னவாறு வாசலுக்கு வரத் தயாரானாள். அதற்குள் வாசலுக்கு...

27. இம்மென்றால்

”கீர, கீர, கீரேய், அரைக்கீர, தண்டங்கீர, மொளகுதக்காளி, பொன்னாங் கண்ணீஈஈஈஈஈஈ” என்ற நீண்ட ஒலியைக் கேட்டு வாசலுக்கு வந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. கொரோனா தொற்றுநோய் காரணமாக அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால், காலை பதினொரு மணிவரை மதியச் சாப்பாடு பற்றி...

26 – அவல் உப்புமா

அன்றைய நாள் கடைசிப் பாட வகுப்பில் இருந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. பரணர் எழுதிய ஒரு புறநானூற்றுப் பாடலை நடத்திக்கொண்டே வந்தவளுக்குத் திடீரென்று மனத்துக்குள் ஒரு கேள்வி தோன்றியது. அதற்கு விடையும் தெரியவில்லை. தமக்கு முந்தி யாராவது ஒரு மாணவி அந்தக் கேள்வியைக்...

25 – நிலா நிலா ஓடி வா

அன்றைக்கு விடுமுறை. முழுநிலவு நாள்கூட – அதாவது பௌர்ணமி. வீட்டில் தனது அலுவலகக் கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்தான் அவன். அவளோ ஏதோ பாடங்களுக்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். அவனுக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது....

24 – சாடு

அந்தப் பெண்கள் கல்லூரியில் வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்ததும், அதுவரை வெளியில் வாசலில் நின்றுகொண்டிருந்த தமிழ்ப்பேராசிரியை வகுப்புக்குள் நுழைந்தார். கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த மாணவியர், தம் சத்தத்தை நிறுத்திவிட்டு, எழுந்து நின்றனர். அவர்களைக் கையமர்த்தியவாறு,...

23 – போர் மாடு

யானைமலை ஒத்தக்கடையை நோக்கி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவன் நீதிமன்றம் அருகே வந்தபோது, சடக்கென்று வேகத்தைக் குறைந்து வண்டியை ஓரங்கட்டினான். காரணம் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் அவனுடைய நண்பன் நின்றுகொண்டிருந்ததுதான். இவன் வண்டியை நிறுத்தியதைப்...