அகம்-படவிளக்கவுரை
0. கடவுள் வாழ்த்து பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார். #0 மரபு மூலம் கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் 5 கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே...