கட்டுரைகள், சங்கச்சொல்வளம், பொது
சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு) நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83...