Select Page

பெத்லகேம் குறவஞ்சி நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

இந்தத் தொடரடைவுக்காகப் பயன்படுத்தபட்ட நூல்கள்

1. பெத்லகேங் குறவஞ்சி – தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயகம் சாஸ்திரியாரவர்கள் இயற்றியது. மேற்படி கனம் சாஸ்திரியார் பரம்பரை தஞ்சை E.வேதபோதகம் பிள்ளை வெளியிட்டது Third Edition – 1938

2. பெத்லகேங் குறவஞ்சி – கிறிஸ்தவ இலக்கியநூல் வரிசை- 5. கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (CLS) MADRAS 3 – Second edition, 1964

3. பெத்லகேம் குறவஞ்சி – உரையுடன் உரையாசிரியர்: சே.சுந்தரராசன் – முல்லை நிலையம் சென்னை – 17 முதற்பதிப்பு 2022

அடிகள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 3222 24282 32 116 24430 11805

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, பாவத்தை நாசம் செய்பவர் என்ற பொருள்படும் பவநாசர் என்பதில் பவ, நாசர் என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் பவநாசர் என்பது ஒரே சொல்லாய் பாவத்தை நாசம் செய்பவர் என்பதைக் குறிக்கும். இது பவ_நாசர் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் பவ, நாசர் ஆகிய இரண்டும். எனவே பவ_நாசர் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் பவ, நாசர், பவ_நாசர் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

பவ (4)

நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி – பெத்ல-குற:8 63/1
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3
பவ வினை பேய்கள் படுத்திய துயரோ – பெத்ல-குற:39 550/2
வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு – பெத்ல-குற:54 712/3

பவ_நாசன்னா (1)
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3

நாசன்னா (1)
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

ஆலையங்கள்-தோறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், ஆலையங்கள்-தோறும், -தோறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். இதன் முலம் தோறும் என்று வரக்கூடிய மற்ற இடங்களும் பெறப்படும்.

ஆலையங்கள்-தோறும் (1)
ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் – பெத்ல-குற:17 167/3

-தோறும் (5)
ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் – பெத்ல-குற:17 167/3
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் – பெத்ல-குற:28 410/7
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2
நாள்-தோறும் புகழ் படைத்த கிறிச்2தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

வந்தனர் (4)
————– ———— —————- ——————–
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர்
நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/1,2

வந்தனரே (2)
பவனி வந்தனரே கேருபின் – பெத்ல-குற:9 77/1
பவனி வந்தனரே – பெத்ல-குற:9 77/2

வந்தனளே (4)
திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/8
அஞ்சியும் இறைஞ்சு குறவஞ்சி இதோ வந்தனளே – பெத்ல-குற:22 348/2
சிங்கி வந்தனளே விசுவாச – பெத்ல-குற:23 350/1
சிங்கி வந்தனளே – பெத்ல-குற:23 350/2

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

வந்தனர் (4)
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர்
நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/1,2