இத்தொகுப்பிலுள்ள பாடல்கள்
1.மகாகவி பாரதியார் கவிதைகள் – ஏ.கே.கோபாலன் வெளியீடு (1980)
2. தமிழ் இணையக் கல்விக் கழகம் இணையதளத்தில் உள்ள பாரதியார் கவிதைகள் – வானவில் பிரசுரம்
3. https://www.projectmadurai.org இணையதளத்திலுள்ள சி. சுப்ரமணிய பாரதியார் என்ற பெயரிலுள்ள பாடல்கள்
ஆகியவற்றினின்றும் தெரிவுசெய்யப்பட்டவை.
| எண் | பெரும் பகுப்பு | உட் தலைப்புகள் |
அடிகள் | சொற்கள் | கட்டு ருபன்கள் |
அடைவுச் சொற்கள் |
|---|---|---|---|---|---|---|
| 1. | தேசீய கீதங்கள் | 53 | 1616 | 9482 | 48 | 9530 |
| 2. | தோத்திரப் பாடல்கள் | 78 | 1825 | 11365 | 8 | 11373 |
| 3. | வேதாந்தப் பாடல்கள் | 25 | 338 | 2326 | 1 | 2327 |
| 4. | பல்வகைப் பாடல்கள் | 11 | 380 | 2247 | 0 | 2247 |
| 5. | தனிப் பாடல்கள் | 24 | 588 | 3788 | 4 | 3792 |
| 6. | சுயசரிதை | 2 | 460 | 4150 | 4 | 4154 |
| 7. | கண்ணன் பாட்டு | 23 | 710 | 4723 | 1 | 4724 |
| 8. | பாஞ்சாலி சபதம் | 5 | 1437 | 10915 | 6 | 10921 |
| 9. | குயில் பாட்டு | 9 | 744 | 4000 | 4 | 4004 |
| 10. | வசன கவிதை | 8 | 1051 | 4829 | 0 | 4829 |
| 11. | பிற்சேர்க்கை | 29 | 509 | 3344 | 5 | 3349 |
| மொத்தம் | — | 9658 | 61169 | 81 | 61250 |
நூலில் தனிச்சொற்கள்: : 22368
விளக்கம்
சொற்கள் :- words between spaces
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த இரண்டனின் கூட்டுத்தொகை
சொல் = செல்-மின் (1)
கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 2
1. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
எ.காட்டு
கேள்மினோ என்ற சொல் கேள்-மினோ எனக் குறிக்கப்படுகிறது. இதில், கேள்-மினோ என்பது தனிச்சொல்லாகவும்,-மினோ என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும். கேள்-மினோ என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், கேள்-மினோ, -மினோ என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
2. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் காண்டத்தின் பெயர் குறுகிய அளவில் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தக் காண்டத்தில் அச் சொல் இடம்பெறும் காதையின் எண் கொடுக்கப்படும். அடுத்து அக் காதையில் அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.
3. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
வீரரும் (2)
வீரரும் அவர் இசை விரித்திடு புலவரும் – தேசீய:32 1/18
ராமனும் வேறு உள இரும் திறல் வீரரும்
/நல் துணைபுரிவர் வானக நாடுறும் – தேசீய:32 1/112,113
வீழ்வோம் (1)
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் – தேசீய:1 5/4
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.
எ.காட்டு
நிகர்த்த (6)
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் – தோத்திர:53 1/1
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் – தோத்திர:53 1/1
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம் – தோத்திர:55 3/2
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மை குழல் பற்றி இழுக்கிறான் இந்த – பாஞ்சாலி:5 272/2
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே – குயில்:7 1/74
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)