Select Page

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு

தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்

0.காப்பு பாயிரம்
1.தெய்வப் பெயர்த் தொகுதி
2.மக்கள் பெயர்த் தொகுதி
3.விலங்கின் பெயர்த் தொகுதி
4.மரப் பெயர்த் தொகுதி
5.இடப் பெயர்த் தொகுதி
6.பொருள் பெயர்த் தொகுதி
7.செயற்கைப் பெயர்த் தொகுதி
8.பண்பு பற்றிய பெயர்த் தொகுதி

@0 காப்பு பாயிரம்


#0
** காப்பு
ஏர் ஆசிரியநிகண்டு என்னும் ஈரைந்துஒன்று
சீர் ஆர் தொகுதியதாச் செப்புதற்கே ஒராரைச்
சேரானைச் சேர்ந்தாரைச் சேரும் வினை அகற்றும்
கார் ஆனை மாமுகன் தாள் காப்பு

#1
** பாயிரம்
கன்னி உமை பாலனைத் தெய்வானை வள்ளி பங்காளனைச் சேவல்கொடிக்
கந்தனைத் தென்பழனி முருகனைச் சிந்தையில் கருதி அன்பொடு பணிந்தே
முன் உள திவாகரம் பிங்கல நிகண்டு சீர்முந்து காங்கேயன் உரிச்சொல்
முறைபெறு கயாதரம் பகரும் அகராதி இவை முற்றும் ஒன்றாய்த் திரட்டி
இந் நிலந்தனில் உள்ளோர் எவரும் அறியும்படிக்கு எண்ணி ஆசிரியத்தினால்
இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன்
மன்னு செஞ்சிச் சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும்
மாநகர்க்கு அதிபன் உயர் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே

#2
எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது
விலங்கு இட்டு நாலாவது மரங்கள் ஐந்தாவது இடம் இருமூன்று பலபொருள் பின்
நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல்
நவின்ற பத்து ஒலி ஒழிபு பதினொன்று எனும் தொகுதி நாட்டித் திவாகரம் போல்
மண்ணுளோர் அறியப் பகுத்தனன் கைலையான் வடிவெடுத்து ஐந்தெழுத்தின்
மந்திர உபதேசம் செய் ஞானப்பிரகாச குரு வனச மலர் அடி சூடுவேன்
வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர்
வளம் பரவும் ஊற்றங்கால் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே

#3
** அவையடக்கம்
வாமதேவன் கங்கைவேணியன் கூற்றினை மயங்கிட உதைத்த பாதன்
மலைமாதுகேள்வன் தன் விடையினுக்கு ஒட்டகம் வரிய நடை காட்டியது போல்
பூமிகொழுநன் திருமடந்தைகேள்வன் தனது பொன் நிறக் கருடனுக்கு
புன் மசகம் மிக்கதோர் பறவை காட்டியது போல் பொல்லாத கரிய காகம்
நாமகள்கணவன் வேதக்கடவுள் புரவி எனும் நரை ஓதிமம்தனக்கு
நல் புனல் பிரித்து அமுதம் உண்டு காட்டியது போல் நான்மறையும் ஆறு அங்கமும்
தோம்இல் பல நூலும் தெரிந்தவர்தமக்கு யான் தொகுதி ஆசிரியத்தினால்
சொல்லிய நிகண்டின் உரை அறி நன்னூல் முறைமையும் தோன்றிட வகுத்தவாறே
** பாயிரம் முற்றிற்று

@1 முதலாவது தெய்வப் பெயர்த் தொகுதி


#1
** சிவன் – 87
சங்கரன் சம்பு சதாசிவன் உமாபதி தாணுவே பூதநாதன்
சந்திரசேகரன் நீலகண்டன் ஈமத்துஆடி தற்பரன் பேயொடுஆடி
அங்கணன் பசுபதி அரன் சிவன் உருத்திரன் அழலாடி பாண்டரங்கன்
அந்திவண்ணன் பகவன் நந்திநம்பன் சோதி அமலன் ஆனந்தன் ஆதி
மங்கைபாகன் சுடலையாடி அரவுஆபரணன் மழுவாளி கைலையாளி
மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன்
கங்காதரன் கறைமிடற்றுஅண்ணல் ஐம்முகன் காலகாலன் கிரிஈசன்
கங்காளன் முத்தன் நித்தன் பரமன் ஆலமர்கடவுள் நீறுஅணிகடவுளே

#2
** சிவன் – 87 ( தொடர்ச்சி)
பெருமான் புராந்தகன் காமாரி அந்தணன் பிறைசூடி நாதன் நக்கன்
பிஞ்ஞகன் பித்தன் கபாலி கண்ணுதல் மூர்த்தி பேச அரிய ஞானமூர்த்தி
கருணாலயன் கொன்றைசூடி முன்னோன் அந்தகாரி அழலேந்தி ஒளி
முக்கணன் விமலன் குன்றைவில்லி திரியம்பகன் கரியுரித்தோன் புராரி
பரன் ஏற்றுவாகனன் சடையோன் மகேச்சுரன் பாய் புலித்தோலுடையான்
பரசுபாணி பினாகபாணி இறையோன் சூலபாணி ஈசன் அனாதி
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே
அமரர் பணி ஈசுரற்கு இனிய பெயர் இன்னமும் அனந்தம் உண்டு அபிதானமே

#3
** விஷ்ணு – 58
கரியவன் கேசவன் மாதவன் நாரணன் கண்ணன் மாயோன் முகுந்தன்
காகுத்தன் அச்சுதன் சாரங்கபாணி கமலக்கண்ணன் மேகவண்ணன்
வரதன் மதுசூதனன் வாமனன் கோவிந்தன் வனமாலி உலகளந்தோன்
வாசுதேவன் சக்கராயுதன் சீதரன் வைகுந்தநாதன் நெடியோன்
பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி
பஞ்சாயுதன் வலவன் நாரசிங்கன் பதுமநாபனே உலகமுண்டோன்
அரிய அரவணைச்செல்வன் விண்டு திரிவிக்கிரமன் அரிதுயில்அமர்ந்தமூர்த்தி
அனந்தசயனன் பூவைவண்ணன் ஆதிவராகன் ஆயிரம் பெயர் அண்ணலே

#4
** விஷ்ணு – 58 ( தொடர்ச்சி) பலராமன் – 13
அலகைமுலையுண்டவன் சக்கிரி பரந்தாமன் ஆழ்கடல்துயில்கின்றவன்
ஐவர்துவன் உவணம்ஊர்தி காவற்கடவுள் ஆயன் சனார்த்தனனுடனே
வலிய தேவகிமைந்தன் உந்திபூத்தோன் பின்னைமணமகன் பூமிகொழுநன்
வல்லவன் படியிடந்தோன் அயன்தந்தை குறள்வடிவன் ஐம்பத்தெட்டுமே
இலகு திருமாலுக்கு இயன்ற தொல்பெயர் இன்னமும் இயம்புவர் அனந்தம் என்றே
ஏககுண்டலன் அலாயுதன் நீலாம்பரன் இரேவதிக்கொழுநன் முசலி
பலதேவனோடு அனந்தன் காமபாலன் பனந்தாமன் அச்சுதன்முனோன்
பலராமன் வெள்ளை இப்பதின்மூன்று நாமமும் பலபத்திரன் நாமம் ஆமே

#5
** பிரமன் – 33 மதன் – 29
வேதன் பிதாமகன் வாணிகேள்வன் வரன் விரிஞ்சன் இரணியகருப்பன்
விதியிறை சயம்பு அன்னவூர்தி அயன் மறையவன் விதாதா பிதா படைப்போன்
போதன் சதானந்தன் நான்முகன் மான்மகன் பூமகன் பரமேட்டி
மண்பொதுத்தந்தை ஞானி வானவர்முதுவன் எண்கணன் புகழ்ஆரணன் திசைமுகன்
ஓதிமம் உயர்த்தவன் குரவன் மால்உந்திவந்தோன் கமலயோனி பகவன்
உயர் அனந்தன் பிரமன் முப்பத்துமூன்று பெயர் உருவிலி அனங்கன்
இரதிகாதலன் சித்தசன் மனோசன் அங்கசன் வேள் கருப்புவிலி சம்பராரி
கந்தர்ப்பன் மாரன் வசந்தன் மன்மதன் ஐங்கணைக்கிழவன் வில்லிமகனே

#6
** மதன் – 29 ( தொடர்ச்சி) அவன் தம்பி – 1 இரதியின் தங்கை – 1
** மதன்வில், கணை நாண்
மதிசகன் மகரகேதனன் மதிக்குடையோன் மனோபவன் வேனிலாளி
மனோபு திருமான்மகன் பூவாளி பூமான் வயங்கு தென்றல்தேரினன்
அதிர் ஆழிமுரசினன் மதனன் மோகன் காமன் அபிதானம் இருபதுஒன்பான்
அடர் காமன் மகிழ் தம்பியே சாமன் ஆம் இரதியவள் தங்கை தேவதாரி
கதியுடை தேவர் மேல் பூவில் மானிடரின் மேல் கருப்புவில் இராக்கதர்கள் மேல்
காமுறும் இருப்புவில் வண்டு நாண் பூட்டு கணை கஞ்சமலர் சூதமலர் வான்
பொதி அவிழ் அசோகமலர் முல்லைமலர் நீலமலர் பொரு பஞ்சபாணம் அன்றிப்
போற்றும் மல்லிகை நெய்தல் மறுகணை இரண்டுடன் புகலில் ஏழ் பாணமாமே

#7
** பஞ்ச பாணம்
மாறில் உன்மத்தமொடு மதனம் சமோகமே மருவு சந்தாபம் அத்துடன்
வசீகரணம் ஐந்தும் மலர்க்கணைப் பெயர் ஆம் வகுப்பரிய சுப்பிரயோகம்
வீறும் விப்பிரயோகமே சோகம் மோகம் விலக்கரிய மரணம் ஐந்தும்
விளம்பிய மலர்க்கணை அவத்தையின் பேராம் விதித்த சுப்பிரயோகமே
கூறிடில் சொல்லும் நினைவும் விப்பிரயோகம் குணம் வெய்துயிர்த்து இரங்கல்
குத்திடும் சோகம் அது துய்ப்பவை தெவிட்டல் மெய் கொதித்தே வெதுப்புவருதல்
பேறுடைய மோகமே அழுதல் மொழி பலபல பிதற்றல் மரணத்தின் குணம்
பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே

#8
** விநாயகன் முருகன்
முக்கணன் பாசாங்குசத்தன் விநாயகன் மோதக்கரன் ஐங்கரன்
மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன்
முக்கணன்மைந்தன் ஒற்றைக்கொம்பன் ஏரம்பன் முந்து கணபதியின் பெயர்
முருகன் குகன் குமரன் மயிலூர்தி சேந்தன் அறுமுகன் விசாகன் சுவாமி
மிக்க குழகன் கடம்பன் கார்த்திகேயன் அறுமீன்காதலன் சிலம்பன்
வேலுடைக்கடவுள் ஆசான் மாயன்மருகன் செவ்வேள் காங்கேயன் சூர்பகை
தக்க புலவன் செட்டி தேவர்சேனாபதி சங்கரன்புதல்வன் வானோர்தலைவன்
உயர் வள்ளிகேள்வன் தாருகாரி சரவணபகவன் கந்தவேளே

#9
** முருகன் ( தொடர்ச்சி) வயிரவன்
கங்கைமகன் ஆறுஇருபுயன் சேவலங்கொடிக்கடவுள் வரைபகவெறிந்தோன்
கெளரிதனையன் குறிஞ்சிக்கிழவன் என்பதும் காட்டுமே சேயின் பெயர்
அங்கிவிழிவந்தவன் சிம்புளானோன் சடையன் ஆனைமுகவற்குஇளையவன்
அம்பிகைமகன் பத்திரைகேள்வன் முக்கணன் வில்லி அவிர் செக்கர்வான்நிறத்தன்
பொங்கிய குரோதன் உக்கிரன் வீரபத்திரன் பொருவில் சிறுவிதி
மகத்தைப் பொருது அழித்தவனும் ஆம் கேத்திரபாலன் காரி போற்றும் கோழிக்கொடியினோன்
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன்
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே

#10
** ஐயனார் – 12 குபேரன் – 14
காரி ஆரியன் அறங்காப்பவன் யோகி பூரணை புட்கலைப் பெண் இருவர்
கணவன் புறத்தவன் செண்டாயுதன் கரிய கடல்வண்ணன் நெடிய சாத்தன்
ஓரி அரகரபுத்திரன் வெள்ளைவாரணம்ஊர்தி ஒருபத்துஇரண்டும் ஐயன்
உற்ற பிங்கலன் இருநிதிக்கிழவன் மந்திரி உருத்திரர்க்கினியதோழன்
சீரகத்தாரினன் வச்சிரவணன் வடதிசைத்தலைவன் அளகையாளி
செறிபுருடவாகனன் மரகதன் புட்பகத்தேரோன் இயக்கர்வேந்தர்
பேருலவு தனதன் கின்னரர்பிரான் என்னவே பெரும் ஏழிரண்டு பெயரும்
பெரும் செல்வம் நீங்காக் குபேரன் அபிதானமாய்ப் பேசினர் தமிழ்ப்புலவரே

#11
**எமன் – 17 இந்திரன் – 38
தண்டதரன் மறலி நடுவன் கூற்று வைவைச்சுதன் பாசகரன் மடங்கல்
சமன் எருமைஊர்தி செங்கோல்கடவுள் அந்தகன் தருமன் அரி தென்திசைக்கோன்
சண்டன் இயமன் காலன் நமன் ஒருபதேழ் பெயர் சதக்கிருதி போகி நேமி
சக்கிரி வலாரி கோபதி வச்சிரபாணி ஐந்தருநாதன் வேள்விநாதன்
அண்டர்கோன் சசிநாயகன் பாகசாதனன் ஆகண்டலன் சுநாசி
அரிய கெளசிகன் கரியவன் பொன்நகர்க்கிறைவன் ஆயிரம்கண்ணன் மகவான்
மண்டிய புரந்தரன் புனிதன் விண்முழுதாளி வாசவன் புலவன்
மேகவாகனன் புருகூதன் ஆன்மருப்புயானையான் மருத நல் நிலக்கடவுளே

#12
** இந்திரன்-38 ( தொடர்ச்சி), அவன் மகன் -1, இந்திராணி -4, தெய்வப்பெண்,
** அமரர், அமரர் மாதர் -3
வரைசிறகுஅரிந்தோன் புரோகிதன் காண்டாவனன் தழல்இடிக்கொடியினன்
மகிழ்வேந்தன் உச்சியில் சிரவம் நல்பரியினன் மருத்துவன் துச்சவனொடு
தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம்
சசி புலோமசை இந்திராணி அயிராணி சுந்தரி இந்திரன்மனைவி நாமம்
அரமகள் அரம்பை சுரர்மகள் அமரர்மாதர் பெயர் ஆம் சூர் அணங்கு இரண்டும்
ஆன தெய்வப்பெண் பொதுப்பெயர் விண்ணவர் அமரர் வானவர் இலேகர்
திரள் விபுதர் அண்டவர் ஆதித்தர் சுரர் ஐயர் புத்தேளிர் கடவுளர் இமையவர்
தீர்த்தர் பண்ணவர் பகவர் அமுதர் பங்கவர் உம்பர் தேவர் மேலோரும் ஆமே

#13
** உமை -21, திருமகள் – 18, வாணி
அமலை அம்பிகை கெளரி தேவி தருமச்செல்வி அயிராணி சத்தி நாரி
அபினை காமக்கோட்டி மலைமாது சங்கரி ஆரியை உருத்திரை பரை
இமையவதி சாம்பவி நீலி சிவை மருதவி இலங்கு பார்ப்பதி உமையவட்கு
எழுமூன்று பெயர் தாக்கணங்கு பூமகள் கமலை இந்திரை பொன் இளையாள் செய்யாள்
அமுதிற்பிறந்தவள் அரிபிரியை சீதேவி ஆக்கமா பதுமை விமலை
அருள் இலக்குமி பொருட்செல்வி பொறி கோகனகை அறுமூன்று திருமகள் பேர்
கமழ் பனுவலாட்டி பாரதி வாணி பூர்வாகினி இசைமடந்தை காயத்திரி
ஞானமூர்த்தி நாமகள் உலகமாதா கலைச்சி வாக்கின்செல்வியே

#14
** வாணி ( தொடர்ச்சி), கங்கை – 7, தருமதேவதை – 8
பரவும் வெண்கமலை துய்யாள் வெள்ளைமேனியாள் பரமாது சாவித்திரி
பகரும் அபிராமி அயன்மனைவி பெயர் சானவி பகீரதி மந்தாகினி
வரநதியுடன் வெகுளி திரிபதகை சுரநதி வளம் குலவு விமலை கங்கை
வடுகி வயிரவன்அன்னை மூதணங்கே மோடி மாரியொடு கொற்றி சூரி
கருதில் ஏழும் காடுகாள் பெயர் இயக்கி மரகதவல்லி அருகனை
முடி கவித்த பகவதிஅம்மை பூகமர் நிழல் வஞ்சி கழியா வரத்தின் மூர்த்தி
தெரியில் அம்பிகை அம்பாலிகை பரமசுந்தரி சிறந்த இருநான்கு பெயரும்
சீர்பெறும் தருமதேவதை என்று உரைத்தனர் செந்தமிழ்ப் புலமையோரே

#15
**காளி – 27, இடாகினி, காளியின் ஏவற்பெண்
தாருகவிநாசினி கெளரி கெளமாரி சாமுண்டி சண்டிகை குண்டலினி
சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி
சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை
சொல்லரிய சிங்கவாகனி வல் அணங்கு ஐயை தோன்றும் அலகைக்கொடியினாள்
ஏர் உலவு தேவி பத்திரை மாயை காளி பெயர் இருபதிற்றுஏழு வலவை
ஏற்ற சூர்மகள் மிக்க மாயவள் ஒருமூன்று இடாகினிப் பெயர் சன்மினி
தார் உலவு வஞ்சப்பெண் ஓர் இரண்டே காளிதன் ஏவல்செய்யும் அவள் பேர்
தகும் என்று நாடிப் பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ்ப் புலமையோரே

#16
** துர்க்கை – 29, மூதேவி
விந்தை பகவதி கன்னி குமரி நாராயணி விமலை பாலைக்கிழத்தி
விசயை கொற்றவை செளரி கெளரி எண்தோளி வீரச்செல்வி வாள்கைக்கொண்டாள்
அந்தரி கபாலி சண்டிகை சூலி நீலி யாமிநி நெடிய காத்திரி விறல்
ஐயை செயமகள் இரும்கலைஊர்தி ஒளிர் சக்கராயுதி பண்ணம்பணத்தி
வந்து பொரு மகுடசங்காரி மாலுக்கு இளைய மாது சுந்தரி துர்க்கை பேர்
வகுக்கில் இருபத்தொன்பதாம் கலதி தெளவை துயர் வைத்திடும் கொண்டல் அணங்கு
செந்திருவினுக்கு மூத்தாள் கழுதைவாகினி சீர்கேடி ஏகவேணி
சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே

#17
** தெய்வம், தானவர், மாவலி, வித்யாதரர், கந்தருவர், பூதகணம்
அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர்
அசுரதரன் அவுணர் கண்டகர் தைத்தியர் ஆன அதிதிபுதல்வர் தகுவர்
கணஞ்செறி நிசாசரரும் ஒக்கும் நிசிசரர் இராக்கதர் நிருதரோடு சாலக்
கடங்கடர் அரக்கர் பிசிதாசனர் நிசாசரர் கருது தானவரும் ஆகும்
வணங்கும் மா வலியவன் நாமம் வயிரோசனன் மருவும் விஞ்சையர் கேசரர்
வைத்திய வித்தியாதரர் பெயர் இரண்டாம் வீணைவல்லவர் கின்னரர் தந்திரர்
இணங்கு கந்திருவர் பெயர் ஆம் கூளி குறள் பாரிடம் சாதகத்தின் உடனே
எண்ணிய கிருத்திமம் பூதகணம் ஆம் என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே

#18
** பேய் – 19, பதின்காற்று
கடி கூளி மயல் மருள் சோகு வேதாளம் கணம் பிரேதம் கணங்கு
கழுது வெறி பாசம் வியந்தரம் மண்ணை அலகையினொடு பசாசு சாவு
நெடிய குணபாசி அழனொடு பத்தொன்பது நிகழ்த்திடும் பேயின் பெயர்
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும்
கொடிய சினமும் தரும் கிருதரன் இமைத்தலும் குலவு ரோமம் புளகமும்
கொடுத்திடும் கூர்மன் ஓட்டமும் இளைப்பும் தரும் கோதிலாத் தேவதத்தன்
தொடு கந்தரச் சுழிச் சந்திடைச் சமானன் துலங்கும் துயில் உதானன்
சொல்லும் இதயத்துள் பிராணன் அபானன் நிலை சொற்ற புச்சலத்தே

#19
** பதின்காற்று (தொடர்ச்சி, ஐந்து அக்கினி, முத்தீ, தழலிறை
** காற்றின் பொது/ சிறப்புப் பெயர்
இருந்திடும் வியானன் உடல் எங்கும் வியாபித்திடும் இயம்பிய தனஞ்செயனும்
எங்கும் ஊதப் பணித் தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர்
விரிந்த தூமம் காரகம் தீவனம் சடம் வெகுளி பஞ்சஅக்கினிப் பேர்
விளம்ப அரிய தெக்கணாக்கினி ஆகவன்னீயம் வீறு காருகபத்தியம்
திருந்து முத்தீப் பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது
தீபவதி வாயுசுகன் வீதிகோத்திரன் மிக்க செந்தழற்கு இறைவன் பெயர்
பரந்த சுனன் ஆசுகன் சலனன் பமானனே பிரபஞ்சனன்
பற்று காலிலி சமரம் சமீரணன் வலி பரிசனம் கம்பம் உடனே

#20
** காற்றின் பொது/ சிறப்புப் பெயர்-35 ( தொடர்ச்சி)
வாதம் வளி கால் உலவை மாருதம் மருத்து மால் வாடை ஒலி கோடை பவனம்
வாங்கூழ் அரி கோதை ஊதை அநிலம் கொண்டல் வாயு மால் பிலன் உயிர்ப்பு
கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர்
கோடை மேல்காற்றினொடு கொண்டல் கீழ்க்காற்று என்பர் கூதிர் உடன் ஊதை இருபேர்
தீதுஇலாக் குளிர் பனிக்காற்று என்பர் வாடையும் வடந்தையும் செப்பிடுங்கால்
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே
ஓதும் மந்தாநிலம் தென்றலின் பெயர் என்பர் உயர் சூறைவளி சாரிகை
ஓங்கு சுழல்காற்று வரு சூறையின் பெயர் என்று உரைத்தனர் தமிழ்ப்புலவரே

#21
** நெருப்பின் பொது / சிறப்புப்பெயர், விளக்கு தீக்கடைக்கோல், தீப்பொறி
தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல்
சிகி அரி கனல் கனலி அங்கி அங்காரகன் செஞ்சுடர் தனஞ்செயன் அழல்
பாவகன் சாதவேதா ஞெகிழி தேயு இறை பார்வையொளி எழுநா
பாயு மசவாகனன் ஆரல் சேர்ந்தார்க்கொல்லி பரவு தென்கீழ்த்திசைக்கோன்
மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர்
மிக்க தாவம் காட்டு எரிப்பெயர் உறகையே மிகும் அனல்திரளின் பெயர்
தீவிகை தீபம் ஒளி சுடர் விளக்கின் பெயர் சிறந்த தீக்கடைகோல் பெயர்
செப்பிடில் அரணி ஞெலிகோல் இரண்டாம் தீப்பொறிப் பெயர் புலிங்கம் ஆமே

#22
** நறும்புகை-3, வெண்புகை-4, தீத்திரள்-7, தீக்கடவுள்-1, அவர் மனைவி-2
** கரி-4, சாம்பல்-3, கடைக்கொள்ளி-5 யாகத்தீ -5
வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர்
மிக்க தூமம் தூபம் ஆவி அரி நான்குமே வெண்புகைப் பெயர் கடையனல்
வடவை ஊழித்தீ மடங்கல் வடவாமுகம் வடவானலம் தீத்திரள்
வடவாமுகாக்கினியொடு எழுபெயர் பாவகன் வகுத்த தீக்கடவுள் பெயர்
கடவுள் மனையாள் சுதை சுவாகா எனும் பெயர் கனல் ஒழுங்கு அது சுவாலை
கந்துள் இருந்தை அசி நல்லம் ஒரு நான்குமே கரி பூதியுடன் வெண்பலி
அடலை சாம்பல் பெயர் ஞெகிழி இந்தனம் முளரி அலாதமுடன் உற்கை ஐந்தும்
ஆம் கடைக்கொள்ளி இந்தனம் ஞெகிழி இடுகலம் அக்கி இட்டமும் ஆகுமே

#23
** புனல்-53, புனற்கு அரசன் வாகனம் -1
அயம் சலம் பாணி உதகம் சலிலம் அம்புதம் அப்பு கவந்தம் புனல்
அளகம் அமுதம் காண்டம் நாரம் நீரம் தோயம் ஆலம் வருணம் சீவனம்
பயம் புட்கரம் கமலம் வார் வனம் புவனம் மழை பயசு கம் சம்பரம் கோ
பானியம் வாரி அறல் கீலாலம் சீகரம் பரந்திடும் சீதம் மேகம்
வயம் சிந்து கனவிரதம் மாரி ஆலாலம் உடன் வளர் கீல் அமிது அடி சீவன்
மயம் கயம் தடாமுகம் ஏழேழும் ஒன்றுமே மாற்ற அரிய நீரின் பெயர்
இயம்பு பாதம் கசம் என்பதும் அதன் பெயர் இரும் புனற்கு அரசன் ஏறும்
எழிலான வாகனம் மகரம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே

#24
** சூரியன் – 52
அருணன் உதயன் பதங்கன் சுடரவன் மித்திரன் ஆதித்தன் முளரிநண்பன்
அருக்கன் மார்த்தாண்டன் விரோசனன் விருச்சிகன் ஆயிரம்கதிரோன் வெய்யோன்
விரவிய திவாகரன் பாற்கரன் சண்டன் விளங்கு தினகரன் ஆதவன்
வேந்தன் எழுபரியினன் பகலவன் சான்றோன் வியத்தன் நீள் தபனன்
பரிதி விண்மணி இரவி எல்லை என்றூழ் பனிப்பகை தரணி அலரி சவிதா
பானு வெஞ்சுடர் கனலி அனலி இருள்வலி சோதி பகர் அண்டயோனி எல்லு
தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு
திகழ் அரி இனன் சூரன் ஐம்பத்திரண்டும் சிறந்த சூரியன் நாமமே

#25
** சந்திரன்-35, விண்மீன் -9
அலவன் குபேரன் சுதாகரன் நிசாசரன் அம்புலி களங்கன் சசி
அமுதகிரணன் குழுதநண்பன் உடுபதி சோமன் ஆலோன் குரங்கி அல்லோன்
நிலவு தானவன் இந்து வேந்தன் மதி கலையோன் நிசாபதி விது தண்சுடர்
நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன்
உலவிய பசுங்கதிர் பனிக்கதிர் இராக்கதிர் உடன் கலாநிதி மாமன்
என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம்
கலை பிறை நிரம்பலின் பெயர் ஆம் தமிழ்ப்புலவர் கண்டபம் ஒளி தாள் சிதம்
கணம் உடு சுக்கை தாரகை உற்கை ஒன்பதும் கருதில் விண்மீன் ஆகுமே

#26
** செவ்வாய்-16, புதன்-18, வியாழன்
மங்கலன் அழலவன் உலோகிதன் நிலமகன் வறியவன் அரத்தன் உதிரன்
வக்கிரன் குருதி தழலோன் ஆரல் செந்தீவண்ணன் குசன் பெளமன் அன்றி
அங்காரகன் சேய் உடன் பத்தும் ஆறுமே ஆகும் செவ்வாயின் பெயர்
அனுவழி மேதை மால் பச்சை புலவன் புந்தி அருணன் கணக்கன் அறிஞன்
தங்கு கிழவன் சிந்தைகூரியன் தூதுவன் சாமன் புசலே பண்டிதன்
செளமனே தேர்ப்பாகன் மதிமகன் ஒன்பதொடு சாற்று ஒன்பதும் புதன் பேர்
மங்காச் சிகண்டிசன் அமைச்சன் அரசன் தேவமந்திரி ஆண்டளப்பான்
மறையவன் சீவன் குரு பிரகற்பதி பொன் வரும் பெயர் வியாழம் ஆமே

#27
** வியாழன்-12 (தொடர்ச்சி), வெள்ளி-14, சனி-13, இராகு-2, கேது-6
பீதகன் ஆசான் எனும் பெயருமே சொலும் பேசரிய அசுரர்மந்திரி
பிருகு பார்க்கவன் மழைக்கோள் பளிங்கு உசனன் பெருத்த சுங்கன் கவி புகர்
கோதுஇலாச் சுக்கிரன் காப்பியன் பண்டிதன் குலவு சீதன் சல்லியன்
கூறு பதினான்குமே வெள்ளியின் பெயர் ஆம் கொடும் கதிர்மகன் கீழ்மகன்
ஓதும் அந்தன் காரி கரியவன் மேற்கோள் உடன் பங்கு செளரி நீலன்
உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம்
தீது உறு கரும்பாம்பு தமமே இராகு ஆம் செம்பாம்பு கொடியன் சிகி
திங்களின்பகை என்பர் கேது ஆம் அது அலால் சேடன் அனந்தன் ஆமே

#28
** இராசிகன் பன்னிரண்டு
மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம்
வண்குடை ஏறு கோ விடை இடபம் ஆம் சவைமகள் விழவு தண்டு இரட்டை
கையிலி யாழ் பாட்டவள் மிதுனம் ஆம் குளிர் நள்ளி களவன் அலவன் ஞண்டு
கர்க்கடகம் ஆம் புலி அரி ஆளி மா சிங்கம் ஆம் கன்னி முலை அரிவை பெண் ஆம்
பொய்இல்லாத துலை தூக்கு வணிகன்நிறை கட்டளை பொருந்து கோல் இவை துலாம் ஆம்
போந்த தேளொடு தெறுக்கால் விருச்சிகம் ஆம் பொரும் சிலை வில் கொடுமரம்
எய்திடும் சாபம் உயர் தனு ஆம் சுறா கலை இயம்பும் ஆம் மகரம் குடம்
இடங்கர் சால் கும்பம் ஆம் மயிலை மச்சம் கயல் இலங்கு மீன் மீனம் ஆமே

#29
** இராசி வீதிகள்
மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன
விளம்பிடில் அப் பெயர்க்கு அப் பெயர் அனைத்தும் ஆம் வீதி மூன்று ஓதிடும்கால்
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி
நவிலும் மீன் ஆடு அரிவை துலை நான்கு இராசியும் நண்ணிடுதல் இடப வீதி
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி
செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள்
பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும்
பின்னுமோ மதி தெரிந்திடும்காலை இராவினது பெயர் சனி வாலி ஆமே

#30
** பரிதியின் வட்டம்-8, பரிவட்டம்-3, வெயில்-5
** காலை-5, பகல்-4, உச்சி-5, மாலை-3, இரவு-8
அரி தீவிரம் கரம் பரிதி கதிர் கிரணம் விசயம் கோவொடு இருநான்கு பேர்
ஆம் பரிதிவட்டம் ஊர்கோள் மூடு வட்டம் மூன்று ஆன பரிவட்டப் பெயர்
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து
வளர் காலை புலரி உதயம் காதல் வைகறை வண்பொழுது விடியல் பெயர்
உரை திவா அல்கல் எல்லொடு வான் இ நான்குமே ஒண் பகல்பொழுதின் பெயர்
உருமம்கொல் மத்தியானம் நண்பகல் நடுப்பகல் உச்சி அப் பொழுது ஐந்து பேர்
வரைகொள் சாயம் சந்தி அந்தி ஒரு மூன்றுமே மாலை அம் பொழுதின் பெயர்
மையல் இரசனி கங்குல் யாமினி விபாவரி மாலை நிசி எல்லும் இரவே

#31
** இருள்-15, சாமம்-1. காலைப்பொழுது-12, நாழிகை -5
சொல்லிய இராப்பொழுதின் நாமம் எட்டுடன் அல்கல் சொல் எமம் அல்லும் ஆகும்
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி
அல்லும் நத்தம் தமம் கச்சளம் கருவரி அந்தகாரம் புகலும்
மூவைந்தும் இருளின் பெயர் அத்தயாமம் சாம நாமம் ஆம் போது பாணி
வெல்வை அமயம் செவ்வி காலை கொன் பொழுது பதம் மிகுமாலை அமைதி வேலை
மிக்க பன்னிரண்டுமே காலைப் பொதுப்பெயர் விகலை துடி கலை மூன்றுமே
கல்வியுடையோர் சொலும் கால நுட்பம் விகலை கடிகை பதமுடன் இருத்தை
கன்னலொடு ஐந்துமே நாழிகைப்பெயர் எனக் கட்டுரைத்தனர் புலவரே

#32
** அசுபதி-10, பரணி-11, கார்த்திகை-12, உரோகிணி, மிருகசீரிடம்
இரலை ஐப்பசி புரவி யாழ் ஏறு தலைநாள் இயம்பு பரி வாசி சென்னி
எழில் மருத்துவன்நாளொடு ஈரைந்தும் அச்சுவினியின் பெயர் தாழி பூதம்
தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு
தராசு பதினொன்றுமே பரணியின் பெயர் அளகு தழலொடு அறுவாய் அளக்கர்
எரியின்நாள் ஆரல் அறுமீன் நாடன் நாவிதன் இறால் வாணன் அங்கி பத்தும்
இரண்டுமே கார்த்திகை பண்டி பார் சதி சகடு இலங்கு தேர் வையம் அயன்நாள்
உருள் விமானம் கோணம் உற்று அறியும் ஊற்றால் உரோணியே உரோகிணிப் பேர்
ஓதும் மதிநாள் மகம் சிரம் பாலை மார்கழி உற்ற மான்தலையின் உடனே

#33
** மிருகசீரிடம் (தொடர்ச்சி)-11, திருவாதிரை-3
** புனர்பூசம்-7, பூசம்-4, ஆயிலியம்-4, மகம்-8, பூரம் -3
இந்திரன் மதி மாள்கு பேராளன் நரிப்புறம் இனிய மும்மீன் மிருகசீரிடப்
பெயர் பதினொன்று செங்கையுடன் மூதிரை ஈசர்தினம் ஆதிரைப் பேர்
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம்
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன்
அந்தம் உள கொடிறு காற்குளம் நான்கு பெயர் பூசம் அரவின்நாள் கெளவை ஆயில்
ஆயிலியம் நான்கு பெயர் மாசி கொடுநுகம் வேள்வி அதிரும் வாய்க்கால் வேட்டுவன்
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன்
உலவு கடை இடையெழும்சனி துர்க்கை பகவதிக்கு உரியநாள் பூரம் ஆமே

#34
** உத்திரம்-4, அத்தம்-7, சித்திரை-10, சோதி-8, விசாகம்-6, அனுடம்-6
பங்குனியுடன் கடையெழும் சனி பாற்குனி பரிதிநாள் உத்திரப் பேர்
பரவிய கெளத்துவம் களிறு கைம்மீன் நவ்வி பழுதுஇலா காமரத்தொடு
அங்கிநாள் ஐவிரல் என்னும் எழு பெயர் அத்தம் அறுவை நெய் பயறு தச்சன்
ஆடை நேர்வான் சுவை துவட்டநாள் நடுநாள் அறைந்த மீன் இவைகள் பத்தும்
தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள்
சாற்று தீபம் விளக்கு பதுமம் எட்டும் தழைத்திடும் சோதி மிகவும்
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம்
புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே

#35
** கேட்டை-6, மூலம்-7, பூராடம்-5, உத்திராடம்-4,
** திருவோணம்-5, அவிட்டம்-5, சதயம்-4, பூரட்டாதி -4
சேட்டை வல்லாரை துளங்குஒளி இந்திரநாள் வேதி செந்தழல் கேட்டை நாமம்
சிலை குருகு கொக்கு அன்றில் அசுரநாள் ஆனியொடு தேட்கடையோடு மூலம்
ஓட்டும் முற்குளமோடு உடை குளம் மாரி நீர்நாள் உவந்த பூராடப் பெயர்
உயர் கடைக்குளம் ஆனி ஆடி விச்சுவநாள் உரைக்கும் உத்திராட நாமம்
தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம்
செப்பு புள் பறவை ஆவணி காக்கை வசுநாள் செழித்திடும் அவிட்டப் பெயர்
கூட்டு சுண்டன் செக்கு வருணன்நாள் போருடன் குன்று சதயத்தின் நாமம்
கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே

#36
** உத்திரட்டாதி-4, இரேவதி-8, பனி-4, வானவில் -2
** கீழ்-1, கூதிர்-3, அரைநாள்-2
பெருகு பூரட்டாதி நாமம் மன்னவன் முரசு பிற்கொழுங்கோல் அறிவன்நாள்
பெரும் உத்திரட்டாதி நான்கு பெயர் சூலம் பெருந்தோணி பஃறி நாவாய்
இரவிநாள் புருடநாள் கடைமீன் குறித்த தொழு எட்டும் இரேவதிப் பேர்
இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர்
விரவும் இந்திரவில்லு வான்இடும்வில் என விளம்பிடும் வானவில் பேர்
மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும்
தெரி குளிர் பனிக்காலமும் வச்சிரநாள் ஆம் சிறந்த அரைநாளினுடனே
சேர்ந்த பாநாளும் இரு நாள் ஆகும் என்று பெயர் செப்பினர் தமிழ்ப்புலவரே

#37
** அருந்ததி-5, விடிமீன் -1, பக்கம்-5, திதி-2, மேல்-6, மாத்திரை -7
சாலி மடவரல் வசிட்டன்தேவி வடமீன் தழைத்த அ நாள்மீன்
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும்
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக
கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக
சீலமுடன் ஐந்து கூறு ஆகும் முதல் நந்தை பத்திரை சயை இருத்தை வினவில்
செப்பு பூரணை ஐந்து பக்கம் ஆம் பக்கமே திதி எனும் பெயர் அது ஆகும்
வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர்
வல்லை பிறை ஒல்லை சிறுவரை இலேசம் கணம் மாத்திரைப் பொழுது ஆகுமே

#38
** ஆகாயம்-20, முகில்-27, இடி-10
அண்டம் வெளி அம்பரம் குண்டலம் புட்கரம் அனந்தம் மீ ககனம் வானம்
அந்தரம் விசும்பு விண் கோ குடில் மங்குல் ஆசினி நாகம் மாகம் வேணி
கண்டிடாக் காயம் வியோமமுடனே நபம் கம் உம்பர் இடம் இருபதும்
காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல்
கொண்டல் சீமுதம் விசும்பு கார் மேகமும் கொண்மூ விண்ணோடு மழை வான்
குயின் கந்தரம் பயோதரம் மாரி சலதரம் குளிர் சீதம் மஞ்சு மால் செல்
விண்டு தாராதரம் முகில் இருபத்தேழ் பெயர் விளம்பும் ஒலி அசனி உருமு
விண்ணேறு செல் இகுளி சதகோடி அனலேறு வெடி கோ மடங்கல் இடியே

#39
** மழை-14, விடாமழை-2, பெருமழை-1, மழைவிடல் -3
** ஆலங்கட்டிமழை-4, மழைத்துளி-5, திவலை-6 மின்னல் -7
மாரி துளி பெயல் ஆலி தூவல் உதகம் சிதர் வருடம் உறை புயலை திவலை
வானமொடு சீகரம் தூறல் ஈறேழு மழையின் பெயர் பனித்தல் சோனை
சாரும் விடாமழைப் பெயர் பெருமழைப் பெயர் சாற்றில் ஆசாரம் ஆகும்
தலையல் ஒரு மாதகம் தூறலொடு மூன்றும் மழைதான் பெய்து விடுதல் பெயர்
பேர் உள கனோபலம் சுரை ஆலி கரகம் பெருத்த ஆலங்கட்டி ஆம்
பெயல் ஆடி தளி உறை தமி துளியின் நாமம் ஆம் பிதிர் தூவல் சிதர் சீகரம்
சீர் உலவு துமிதமுடன் சிகரம் ஆறும் ஆம் திவலை கனருசி தடித்து திகழ்
வித்துரு சம்பை சபலை சஞ்சலை ஒளி சிறந்த மினல் ஏழு ஆகுமே

#40
** பருவம்-6, பூரணை, அமாவாசை, நிகழ்காலம், பருவகாலம்
** பருவம், காலத்தின் பொது
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும்
கருதில் ஆவணி முதல் இரண்டிரண்டாத் திங்கள் காட்டு பருவத்தின் பெயர்
பூரணை பெளமனும் மதி உவாவின் பெயர் பெருமதியோடு இரவி கூட்டம்
போற்று அமாவாசியின் பெயர் வேலை என்பதும் புகலும் நிகழ்காலப் பெயர்
ஏர்பெறு நவம் சரற்காலமே கார்காலம் இளவேனில் முது ஆதவம்
எனப்படும் கோடை சுசி சம் மூன்றுமே கொடிய வேனிற்கு இயன்ற நாமம்
பாரின் மிசை ஆனியம் இருது பருவங்கள் ஆம் பருவமுடன் ஊழி ஆண்டு
பரவு காலத்தின் பொதுப்பெயர் உறையுளும் பகரில் அதன் நாமம் ஆமே

#41
** வாரம், நாள், முன்னைநாள், மாதம், வருடம்
** யுகம் முடிவு, வாழ்நாள், பிரமன் வாழ்நாள், பின்னைநாள்
வாசம் வாரம் கிழமை ஆம் பகல் அல்கலொடு வைகல் ஆனியம் உயர் திவா
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும்
பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம்
பெயர் ஆயனம் வற்சரம் சமை ஆண்டு என்ப பேசும் நான்கும் வருடம் ஆம்
ஓசை உள பருவமும் அதன் பெயர் அயனமே ஓர் ஆண்டினில் பாதி ஆம்
ஊழியும் மடங்கலும் யுகம் முடிவின் அபிதானம் உறை ஆயுள் ஆயு வாழ்நாள்
ஆசுஇலாக் கற்பமே மலர் அயன் வாழ்நாள் அறைந்திடும் பின்றை பிற்றை
ஆகுமே பின்னை என்று ஓதிடும் பெயர் என அறைந்தனர் தமிழ்ப்புலவரே
** முதலாவது தெய்வப்பெயர்த் தொகுதி முற்றும்

@2 இரண்டாவது மக்கட்பெயர்த் தொகுதி


#1
** முனிவர்-23, குறுமுனி-3, சப்தமுனிவர்-7, துரோணர்-4
அறவர் மாதவர் கடிந்தோர் உயர்ந்தார் முனைவர் அறிஞர் தாபதர் பண்ணவர்
அருந்தவர் தவத்தோர் தபோதனர் இலிங்கிகள் ஐயர் இருடிகள் யோகிகள்
உறுவர் அந்தணர் படிவர் மெய்யர் பெரியோர் துறந்தோர் கடந்தோர் சார்பிலோர்
ஒழியாத இருபத்துமூன்று முனிவோர்தமக்கு உரிய பெயர் கும்பயோனி
குறுமுனி அகத்தியன் பெயர் மலையமுனியும் ஆம் கோதமன் பிருகு அத்திரி
கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர்
மறை பெரும் கொடியினன் கும்பசம்பவன் வளமை மன்னு பாரத்துவாசன்
வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே

#2
** சைவ சமயத்தார்-7, மால் சமயத்தார்-7, புத்த சமயத்தார்-4, சமண முனிவர்-4
பரவு செளமியர் திகம்பரர் சமணரே யோகர் பாசுபதர் காளாமுகர்
பகர் உமாவிரதியர் சைவசமயத்துளோர் பாகவதர் வைகாநசர்
அருகர் வைணவர் சமணர் அமணர் ஆசியரே அழி மால்சமயத்துளோர்
ஆன சீவகர் தேரர் சாக்கியர் பெளத்தரே ஆம் புத்தசமயத்துளோர்
திருநாமம் வேறுசமயத்துளோர் நாமமும் செப்பியே கண்டுகொள்க
சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன
வரும் நாமம் நான்குமே சமணமுனிவோர் பெயர் மற்று அவரில் எண்மர் நீரில்
வானில் உயர் பூவினில் நினைந்துழி ஒதுங்கி நெடு வாழ்நாள் இருப்போர்களே

#3
** எப்பொருட்கும் இறைவன்-24, மூத்தோர்-11, சிறந்தோர்-5, உயர்ந்தோர்-1
ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன்
ஆதி தானு கொழுநன் நாதன் நாயகன் மன்னன் ஆண்டகை பெருந்தகையுடன்
ஏதம்இல் இறை அரசு நம்பி பேராளன் இயம்பு கோன் மீளி காந்தன்
எனும் அறுநான்குமே எப்பொருட்கும் இறைவன் இலகு தீருநாமம் ஈசன்
ஓது கோமான் அடிகள் ஐயன் அத்தன் குரவன் உரவோன் சுவாமி பெருமான்
உறை இறைவன் ஆசான் எனும் பத்தும் ஒன்றுமே ஒப்பரிய முத்தோர் பெயர்
தீதுஇல் அண்ணல் குரிசில் ஏந்தலே தோன்றலொடு செம்மலே பெருமைதன்னால்
சிறந்தோர்கள் பெயர் உலகமே உயர்ந்தோர் எனச் செப்பினர் தமிழ்புலவரே

#4
** அறிஞர்-13, கற்றோர்-16, கலைஞர்-1, ஓத்துரைப்போர்-1, ஆசிரியர்-5, மாணாக்கர்-1
சான்றவர் உரவரே ஆன்றவர் ஆரியர் தகுதியோர் ஆய்ந்தோர் நலோர்
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்னத்
தோன்று பதின்மூன்றுமே அறிஞர்தம் பெயர் கவிஞர் சொற்புலவர் முதுவர் மூத்தோர்
துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர்
ஏன்ற புதர் விற்பனர் கலைஞர் சங்கம் சாடு எனப்படும் கற்றோர் பெயர்
இனிமைபெறு கலைஞரே கவிவல்லோர் ஆம் கணக்காயரே ஓத்துரைப்போர்
ஊன்று தேசிகன் ஈசன் ஆசான் பணிக்கன் உவாத்தி ஆசிரியன் பேர்
ஓதும் மாணாக்கனே கற்போன் எனப் பெயர் உரைத்தனர் தமிழ்ப்புலவரே

#5
** வீட்டுமன்-7, தருமன்-8, துரியோதனன்-7, கர்ணன் -5
தரணி புகழ் கங்கைதனயன் தாலகேதனன் சந்தனன்சிறுவன் விரதன்
தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர்
விரி குவளையந்தாமன் முரசுயர்த்தோன் மெய்ம்மைவிரதன் தனம் மேவு செம்மல்
மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே
வரு தருமன் நாமம் சுயோதனன் காந்தாரிமைந்தன் அரவக்கொடியினன்
மன்னர்மன்னவன் வணங்காமுடியினன் வலம்புரிமாலையன் செழித்த
திருதராட்டிரன்மதலை துரியோதனன் பெயர் சீர் இரவிசேய் அங்கர்கோன்
செறி கவசகுண்டலன் கானீனன் நீள் கச்சைசேர்கொடியினன் கன்னனே

#6
** கர்ணன் (தொடர்ச்சி)-2, வீமன்-7, விசயன்-15, குருகுலத்தரசர்- 3
மன்னு கொடையாளியும் செளரியும் அவன் பெயர் மடங்கலின்கொடியோன் வெய்யோன்
மாருதி கதாயுதன் வீறுகோதரன் வாயுமைந்தன் இடும்பிகொழுநன்
என்னும் எழு பெயருமே வீமன் விசயன் பார்த்தன் இந்திரன்மதலை போரில்
எதிர்இல் காண்டீபன் தனஞ்செயன் பற்குனன் இயம்பு மாதவிநாயகன்
பன்னிய சுவேதவாகனன் வானரக்கொடிபடைத்தவன் சவ்வியசாசி
பகர் கிருட்டினன் கிருட்டினர்க்கு இனிய தோழன் பரந்த காண்டவனாரியே
துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர்
தொகு பரதர் கெளரவர் பெளரவர் எனும் பெயர் சொலில் குருகுலத்து அரசரே

#7
** சேரன்-19, சோழன் – 17
கொல்லிவெற்பன் பொறையன் வானவன் குட்டுவன் கொங்கன் உதியன் பூழியன்
கோதை பொருநைத்துறைவன் மலையமான் சேரமான் குடநாடன் வஞ்சிவேந்தன்
வில்லவன் கேரளன் பனைமாலைபுனைஅண்ணல் வில்கொடியினன் சேரலன்
மிக்க வானவரம்பன் ஒன்று ஒழிய இருபதும் விளம்புமே சேரன் பெயர்
சொல்லும் அகளங்கன் அபயன் கோழிவேந்தன் துலங்கு நீர்நாடன் வளவன்
சூரியன் சென்னி பொன்னித்துறைவன் நேரியன் சொல் கிள்ளியொடு செம்பியன்
கொல்லும் புலிக்கொடிக்குஇறை ஆத்திமாலையன் கோன் நேரிவெற்பன்
இரவிகுலத்தோன்றல் அகண்டன் ஈரெட்டுமே சோழன் குறித்த கேசவனும் ஆமே

#8
** பாண்டியன்-17, முதலேழு / இடையேழு / கடையேழு வள்ளல்கள்
வழுதி கூடற்குஇறைவன் மீனவன் பஞ்சவன் மாறன் வேம்பின்கண்ணியன்
மதிகுலன் கைதவன் கெளரியன் தமிழ்நாடன் வண்புனல் குமரிசேர்ப்பன்
செழியன் வைகைத்துறைவன் மீனம் உயர் கொடியினன் தென்னவன் பொதியவெற்பன்
செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே
அளவுஇலாச் சகரன் சகாரி செம்பியன் நிருதி அணி நளன் துந்துமாரன்
அறை விராடன் எழுவர் அக்குரன் சந்தன் அந்திமான் சந்திமான்
பழுதுஇல் சிசுபாலனொடு கன்னன் எழுவர்கள் ஓரி பயின் மலையன் எழிலி நள்ளி
பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே

#9
** பிராமணார்-20, பிரமசாரி-2, அந்தணர் தொழில் -7
அய்யர் வேதியர் இருபிறப்பாளர் பூசுரர் ஆய்ந்தவர் தொழுகுலத்தோர்
அந்தணர் முனிவர் மறையோர் உயர்ந்தோர் வேள்வியாளர் முப்புரிநூலினோர்
மெய்யர் அறுதொழிலாளர் செந்தீவளர்ப்பவர் வேதபாரகர் விப்பிரர்
மிக்க பண்ணவர் நூலோர் ஆதிவருணத்தர் விளம்பிடும் பார்ப்பார் பெயர்
துய்ய பிரமச்சாரியின் பெயர் வன்னியும் துவசனும் கூறும் இப்பால்
சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று
எய்தும் இத் தொழில் ஆறும் அந்தணர்க்கு உரியவாம் ஏற்றலும் அவர்கள் கடனாம்
என்னவே செந்தமிழை ஆராய்ந்து மலையத்து இருந்தவன் இயம்பினானே

#10
** அரசன்-25, அவன் தொழில்-6, சதுரங்கசேனை, அறுவகைத் தானை
புரவலன் கொற்றவன் பார்த்திவன் காவலன் பூபாலன் வேந்தன் மன்னன்
பொருநன் முதல்வன் தலைவன் இறைவனே பெருமான் புகழ் பூபன் நிருபன் அண்ணல்
குரிசில் பூபதி தராபதி மன்னர்பதி தோன்றல் கோ ஏந்தல் பதி சக்கிரி
குறித்த ஐஐந்தும் அரசன் பெயர் ஓதலே குணத்து ஈதல் வேட்டல் அன்றி
பரிவினொடு பார் புரந்திடல் படைக்கலம் அவை பயிற்றல் போர்புரிதல் ஆறும்
பார்த்திவர்கள் தொழில் இரத கரி பரி பதாதியே பரவு சதுரங்கசேனை
அரிய சதுரங்கசேனைக்குள் பதாதியை அகற்றி வேல் வில் வாளினை
ஆன தேர் கரி பரியுடன் கூட்டியே மொழியில் அறுவகைத் தானை ஆமே

#11
** ஐம்பெருங் குழுக்கள், ஐவகைச் சுற்றம், எண்பேராயம்
** பதினெண்மர், அரண் – அரசு
தேற்றும் மந்திரிமார் புரோகிதர் சாரணர் சேனாபதியர் தூதர் என்னச்
செப்பு குழு ஐந்து மருத்துவக் கலைவலோர் சீரிய மடைத்தொழிலினோர்
சாற்று அந்தணாளர் அடுத்த நட்பாளர் தங்கிய நிமித்தகாரர்
சார்ந்த சுற்றங்கள் ஓர் ஐந்து கடைகாப்பாளர் தாழ்வுஇலாக் கருமவிதிகள்
மாற்றரும் காரணச்சுற்றம் நகர்மாக்களோடு வன் படைத்தலைவர் இவுளி மறவர்
வாரணவீரர் காரணத்தியல்பர் என வைத்த பேராயம் எட்டும்
தோற்றும் அப்பாலில் பகுத்த பதினெண்மரும் துங்க மலை காடு நிலம் நீர்
சூழ்ந்த அரண் நான்கும் படைத்தது அரசு ஆம் எனச் சொற்றனர் தமிழ்ப்புலவரே

#12
** அறநிலையறம், அறநிலைப்பொருள், அறநிலையின்பம்
** மறநிலையறம், மறநிலைப்பொருள், மறநிலையின்பம்
தெய்வம் அறுசமயம் நாற்குடிமுறை ஒழுக்கம் இவை செங்கோலின் முறைசெலுத்தல்
செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற
பொய்யில் பொருளே அறநிலைப்பொருள் குலம் அன்பு புகல் வாய்மை செல்வம் ஒத்து
பொருந்திடும் துய்த்தல் அறநிலையின்பம் நிறைமீட்டல் பொங்கு பகைதெறுதல் அன்றிச்
செய்ய செஞ்சோறு உதவியோர்க்கு உயிரை ஈனமது செய்திடுதல் மறநிலையறம்
திறைகொடு அமர்கொடு சூதின் வெற்றிகொடு தவறு செய்வோர் தண்டனைக் கொடுவரும்
வெய்யபொருள் மறநிலைப்பொருள் வேண்டுபொருள் ஈதல் விடைதழுவல் வலிதிற்கொளல்
மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே

#13
** கொற்றவர்கள் ஏறு, சக்கரவர்த்திகள் அறுவர், நிமித்திகன், கரிப்பாகர், பரிப்பாகர்
** மடையர், கணக்கர்தம் வழியினுள்ளோர், பரிவாரம்
குடி படை அமைச்சு இனிய நட்பு அரண் கூழ் எனக் கொண்ட வகை ஆறும் உடையோன்
கொற்றவர்கள் ஏறு எனப்படும் அரிச்சந்திரன் குலவு முசுகுந்தன் நளன்
முடிகொள் சரன் கார்த்தவீரியன் புரூரவன் மொழி சக்கரவர்த்தி அறுவர்
முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர்
படிஇலா தேர் ஆள்கர் வாதுவர் களிற்றுடைப் பாகர் பாகு என்றும் பெயர்
பண்ணுவர் மாதுவர் மாவலோர்தம் பெயர் பானசிகர் கூவியர் உடன்
கடிய வாலுவருமே மடையர் காவிதியர் கணக்கர்தம் வழியினுள்ளோர்
கருது பரியாள் ஆமே பரிவாரம் என்று கலைகற்றவர் இயம்பினாரே

#14
** குறுநில மன்னர், அவர் கொடி, படைத் தலைவர், மந்திரத் தலைவர்
** தேர்ப் பாகர், ஒற்றர், தூதர், மருத்துவர்
ஆட்டர் குறும்பர் புரோசர் குறுநிலமன்னர் ஆம் வேளிர் என்று பெயர்
அவர் கொடி கேழல் பெரும் படைத்தலைவர் அபிதானமே பொருநர் என்றும் ஆம்
வாட்டம்இல் அமைச்சர் தேர்ச்சித் துணைவர் குரவர் நூல்வல்லவர் உழையர் சூழ்வோர்
மந்திரர் ஆமாத்தியர் முதுவர் முன்னவர் எண்ணர் மந்திரத்தலைவர் பெயர் ஆம்
ஓட்டு சாரதி சூதன் வலவனே தேர்ப்பாகன் ஒற்றரே சாரர் வேவர்
உலவு சாரணர் வழியுரைப்போருடன் பண்புரைப்போர்கள் வினையுரைப்போர்
சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன்
சொலும் பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர் எனச் சொற்றனர் தமிழ்ப்புலவரே

#15
** வைசியர், குலம், தொழில், பண்பு
மன்னர் பின்னவர் இளங்கோக்கள் எட்டியர் இப்பர் வைசியர்கள் விப்பர் பரதர்
வரு சிலேட்டிகள் பசுக்காவலர் விருச்சிகர் வணிகர் முத்தொழில் நாயகர்
உன்னிடபர் விலைஞரே செட்டிகள் பொதுப்பெயர் ஓதில் அவர் குலம் மூன்று அவற்று
ஓங்கு கோவலர் இப்பர் கோவைசியர் பெயர் பரதரொடு நாய்கர் எட்டியர் இவை
மன்னு தனவைசியர் மேழியர் உழவர் காராளர் வளமை வேளர் நான்கும்
வாய்த்த பூவைசியர் ஓதல் வேட்டல் உதவி வாணிபம் உழவு கோக்காத்திடல்
என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல்
இறுவது அஞ்சாமை பெறுவது தெரிதல் காலமுடன் இடனறிதல் வைசியர் பண்பே

#16
** வேளாளர், தொழில், குயவர், செக்கார், கொல்லர் பொதுப்பெயர்
காராளர் பின்னவர் சதுர்த்தர் மண்மகள் புதல்வர் களமர் சூத்திரர் ஏரினர்
கருது உழவர் வளநர் வாழ்க்கைத் தொழில் வினைஞரே காட்டும் வேளாளர் நாமம்
சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலைச் செய்திடுதல் கோக்காத்திடல்
செப்பும் அவர் தொழில் கும்பகாரர் குலாலர் செறிந்த வேட்கோவல் மற்றும்
பேர் ஆன மட்பகைஞர் குயவர் சக்கிரியும் ஆம் பேசு சக்கிரி நந்திகள்
பிறங்கு செக்கார் பெயர் துவட்டர் வித்தகர் ஆவர் பேணரும் சிற்பியருடன்
ஆராயும் வினைஞர் கம்மியர் கொல்லர் தபதியர் அக்கசாலையர் புனைந்தோர்
அறிஞர் அற்புதர் யவனர் கண்ணுளர் கண்ணாளர்க்கு அடுத்த பொது நாமம் ஆமே

#17
** கொல்லர், தச்சர், தட்டார், கன்னார், சித்திரக்காரர்
** சிற்பாசாரியர் முத்தங்கோப்பார்
தப்புஇலா மனுவர் கருமார் கொல்லர்தம் பெயர் தபதியர் மரவினைஞரே
தச்சர் பெயர் மயனும் ஆம் செங்கொல்லருடன் அக்கசாலையர் சென்னகாரர்
பொற்பு உடைய பொற்கொல்லர் பொன்வினைஞர் தட்டார் பொருந்திடும் பொன்செய்புலவர்
பொருளினை உருக்கு தட்டார் கலம்தருநரே பொரு பணித் தட்டார் பெயர்
செப்பு கண்ணுவர் கஞ்சகாரர் கன்னார் பெயர் சிற்பர் ஓவியர்கள் மோகர்
சித்திரக்காரர் பெயர் ஓவியர் மொழிந்திடும் சிற்பநூலாளர் உடனே
வைப்பு மண்ணீட்டாளர் என்னும் இரு பெயரும் வகுத்த சிற்பாசாரியர்
மணிகள் குயிலுநர் என்று உரைத்தனர் முத்தம் கோக்கும் மரபினர்கள் அபிதானமே

#18
** கூட்டம், பெண்கள் கூட்டம், தேவராளன், தேவராட்டி
** வல்லோர், சோனகர், ஆரியர்
சங்கம் கணம் தொகுதி சவை அவை குழாம் குழு சமவாயம் மிக்க கூட்டம்
சமூகம் தளம் கோட்டி சமுதாயமொடு திரள் சாற்றும் ஒரு பத்துநான்கும்
இங்கு இவை திரண்டோர்கள் அனைவர்க்கும் உரிய பெயர் எழிலான ஓரை பொய்தல்
இனிய கெடவரல் பண்ணை ஆயம் ஓர் ஐந்தும் இயம்பரிய பெண்கள் கூட்டம்
பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே
புனை தேவராளன் வகுத்த சாலினி தேவராட்டியைப் போற்றும் நாமம்
எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர்
யவனர் சோனகர் பெயர் மிலேச்சர்கள் மிலைச்சர் இரண்டும் ஆரியர் நாமமே

#19
** வண்ணார், நாவிதர், கள் விலைஞர், உறைகாரர், துன்னர்
** நெய்வார், உப்புவாணிகர், ஊன் விலைஞர்
ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார்
ஏனாதி சிரையர் பெருமஞ்சிகர் சீமங்கிலியர் என்ப மயிர்வினை நாவிதர்
சாரும் சவுண்டிகர் துவசர் படுவர் கள்பிழியர் தம்முடன் பழசர் ஐந்தும்
தக்க கள்விலைஞர் பெயர் காரோடர் முச்சியர் சாற்றிய இரண்டு பெயரும்
போர் அங்க உறைகாரர் பொல்லரே துன்னர் பொருந்தரே வேதகாரர்
போற்று காருகரே நெய்வார் உமண் அளவரொடு புகல் உப்பர் கழியர் நான்கும்
நீர் கொண்ட உப்பு வாணிகர் சூனர் ஊன்விலைஞர் நீங்கரும் வேதனைசெய்வோர்
நிகழ அருந்து ஊன் ஆட்டு வாணிகன் பெயர் என்று நெறியோர் இயம்பினாரே

#20
** கூவநூலோர், சங்கறுப்போர், மீகாமன், தோல்வினைஞர், செம்மார், சண்டாளர்
** தோற்கருவிமாக்கள், நரப்புக்கருவிமாக்கள், மெய்க்காப்பாளர்
உல்லியர் கூவநூலோர் வளைபோழ்நர் ஊர்ந்திடும் சங்கறுப்போர்
உவர்ச்சனே சிப்பி நீகான் நீரளப்போன் உரைக்கும் மாலுமியன் மூன்றும்
சொல்லும் மீகாமன் அபிதானம் பறம்பரே தோல்வினைஞர் நாமம் அன்றி
தோற்றுன்னர் என்பர் செம்மார் பெயர் குணுங்கர் வினைசூழ் கொலைஞர் கலைஞர் வங்கர்
புல்லு மாதங்கர் கெளண்டர் கனகதர் இழிஞர் புலைஞரே நீசர் பத்தும்
புகன்ற சண்டாளர் பெயர் யவனரே இயவர் பொருந்து தோற்கருவிமாக்கள்
நல்லிசைக் குயிலுவர் உடன் குழலர் மெல்லிய நரம்புடைக் கருவிமாக்கள்
நாமம் ஆம் காவலர் மெய்க்காப்பாளர் அபிதானம் நாட்டு கஞ்சுகியும் ஆமே

#21
** கூத்தர், கழைக்கூத்தர், தமிழ்க்கூத்தர், கடிகைமாக்கள், பாணர், புகழ்வோர்
நாடகர் நிருத்தர் கோடியர் பொருநர் வினையர் நடரொடு கண்ணுளர் வயிரியர்
நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர்
ஆடல்பெரு வாயிலோரே தமிழ்க்கூத்தர் பெயர் ஆய்ந்த பாவலர் நாவலர்
ஆன பாட்டகர் வண்டர் கவிகள் வந்திகள் பனுவலாளர் நாகரிகர் எட்டர்
தேடரிய புலவர் கற்றோர் கடிகைமாக்கள் பெயர் செயிரியர் மதங்கர் சூதர்
சென்னியர் இன்னிசைக்காரர் பண்ணவர் பரணர் செறியும் மாகதர் வயிரியர்
பாடிவரு பாணர் இவை பாடல்வல்லோர் பெயர் பகுத்த பாகதர் பூகதர்
பயிலும் வேதாளிகர் சூதர் வந்திகரொடு படிப்பவர் புகழ்வோர்களே

#22
** சுற்றத்தார், பகைவர்
பரிசனம் கிளை ஒக்கல் சுற்றம் விருந்து இகுளை பண்பினம் கடும்பு நள்ளி
பாசனம் கூளி கேள் நண்பு நட்பு தொடர்பு பந்தம் குடும்பம் துணை
விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர்
வேண்டும் உறவு ஐஐந்து பெயரும் ஒன்னார் மன்னார் விட்டார் உள்ளார் விரும்பார்
அரிகள் அடையார் நண்ணார் பொற்றார் நள்ளார் செறுநர் அமரரே தெவ்வர் மற்றார்
அடரும் இகலோர் எதிர்ந்தோர் முனைந்தோர் மாற்றலார் புல்லார் வேண்டார் ஒல்லார்
மருவலார் ஒட்டலார் பற்றலார் தரியலார் மாணார் அமித்திரர் பற்சாரர்
மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே

#23
** நட்புடன் சார்ந்தவர், அயலார், புதியவர், தனிமை, உடனிகழ்வார்
உள்ளினர் புள்ளினர் பசைந்தார் அடைந்தார் மித்திரர் ஒன்றினர் துன்றினர் புரிந்தார்
ஒட்டினர் விரும்பினர் திருந்தினர் பொருந்தினர் ஒல்லுநர் கலந்தார் விழைந்தார்
நள்ளுநர் கண்ணுநர் காதலித்தார் தொடர்ந்தார் நயந்தார் நல்லவர் வேண்டினார்
நண்ணினார் கூட்டம் வேட்டாருடன் பேட்டார் நவின்ற இருபத்தாறுமே
விள்ளரிய நட்பு உடன் சார்ந்தவர்க்கு உரிய பெயர் வினவில் வம்பலர் ஏதிலார்
வெய்ய நொதுமலர் என்பது அயலவர்க்கு உரிய பெயர் வீறும் அதிதியர் வம்பலர்
தள்ளரும் பூருவர் புதியவர்க்கு உரிய பெயர் சாற்றில் ஒரு மூன்று ஆகும்
தமி தனிமையின் பெயர் ஏமி உடன் நிகழ்வார் தமக்கு உரிய நாமம் ஆமே

#24
** கொடையாளன், இரப்போன், வழிச்செல்வோன்
** அறிவில்லான், கொலையாளி, திண்ணியன்
வள்ளல் உபகாரி புரவலன் வேள்வியாளன் வழங்கும் தியாகி வேளான்
மகிழ் ஈகையாளன் உயர் கோதை என்று ஓதிடும் மலிந்த கொடையாளன் பெயர்
எள்ளரிய இரவலன் பரிசிலாளன் தீனன் யாசகன் இரப்போன் பெயர்
இலங்கிய வழிச்செல்வோனே பதிகனொடு பரதன் என்று பெயர் இழுதை மூடன்
தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை
சாற்று செடியன் மண்ணை நாசனன் சிதடன் அஞர் சாரும் அறிவில்லோன் பெயர்
விள்ளரிய காதகன் சாருகன் கொலையாளி மேவு பெயர் வண்டன் மிண்டன்
மீளி விறலோன் வியவன் வயவன் வீரன் மள்ளன் மிக்க திண்ணியன் நாமம் ஆமே

#25
** தானைத்தலைவர், ஏவல்செய்வோர், தாயத்தார்
** அடிமையோர் தொழில்செய்வோர், வாயில்காப்போர்
வீரர் கூளியர் பொருநர் மறவர் மானவர் மள்ளர் வில்லுழவர் சூரர் பண்பர்
விடலை கலி படர் சல்லி ஏறாளர் செருநருடன் விறல் அபயர் தருகணாளர்
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர்
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள்
சாருமே தம் குடித் தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள்
தஞ்சம் தொறு தொண்டு தொத்து தொழும்புடன் தயவுகூர் ஆள் விருத்தி
சீர் அடிமையோர் பெயர் தொழுவர் கம்மியர் தொழில்செய்வோர் பெயர் அது ஆகும்
செப்பு துயரற்றோர்கள் வாயில்காப்போர் பெயர் திருவாயிலாளர் ஆமே

#26
** குறளன், செவிடு, முடம், கூன், ஊமை, குருடன், பேடி, அலி
** அச்சமுடையோன், காமமிக்கோன், சதுரர், நாகரிகர்
சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம்
செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம்
அந்தகன் சிதடன் உடன் தரிசனமூடன் குருடன் ஆம் பேடி பெண்டகனுடன்
ஆண்பெண்அலாதவன் சண்டன் புஞ்சகன் அலி ஐந்து பெயர் ஆகுமே
பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க
பீரு ஓர் ஆறுமே அச்சமுடையோன் பெயர் பேசு இடங்கழி பல்லவர்
நைந்திடும் படிறர் பரத்தர் விடர் தூர்த்தர் நயந்திடும் காமம்மிக்கோர்
தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே

#27
** தோழன், அவன் முன்னிலை, தோழி, அவள் முன்னிலை
** துணைவன், துணைவி, அசதி, பதினாறாட்டைப் பெண்
சம்மதன் காதலன் சேடனே துணைவன் சகாயனே சிலதன் நண்பன்
சங்காத்தியே இணங்கன் பாங்கன் எலுவனொடு தண்டாமல் வரு கிளைஞனே
செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர்
சிலதி சகி பாங்கி இணங்கி காதலி துணைவி சேடியே இருளை சேணி
மெய் மருவு தோழி அபிதானம் இவள் முன்னிலை விளம்பிடில் ஏடி எல்லாள்
வீறு தோழன் கணவன் இருவரும் துணைவன் ஆம் மிகு தோழியும் தலைவியும்
சொல்முறை துணைவி ஆம் கூளி குட்டினி குறளி துட்டையே படுவி குண்டம்
தொழுத்தையே அசதி உடன் உவதி ஈரெட்டு ஆண்டு சூழ்ந்திடும் பெண் ஆகுமே

#28
** கீழ்மக்கள், திருடர், தரித்திரர்
பூரியர் கனிட்டர் கல்லார் கயவர் பேதையர் பொறியிலார் முசுடர் மூர்க்கர்
புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர்
கோரர் கலர் பதகர் புல்லவர் புல்லர் சிறுமையர் கொடியர் தேரார் கண்டகர்
குறுநீசர் முறையிலார் இருபதிற்றெட்டும் குணித்த கீழ்மக்கள் நாமம்
சோரர் கரவடர் கபடர் தேனர் பட்டிகள் பித்தர் செய் கரவர் புரையோர் கள்வர்
சொற்றிடும் திருடர் பெயர் வறியர் ஆதுலர் மிடியர் துன்று கிஞ்சினர் பேதையர்
ஓரும் இன்மையர் இலம்பாட்டோர் இல்லோர் ஏழையோர் நல்கூர்ந்தோர்
வச்சயர் உடன் ஊறுகணாளர் ஈராறும் தரித்திரற்கு ஓதும் அபிதானம் ஆமே

#29
** வள்ளல், ஊன்தின்போன், நிருவாணி, மந்தன், கரியவன், வஞ்சகன்
** காருணியன், கடினன், ஏவுவோன், வேகமுடையோன், உரியவன்
** புகழாளன், நோயுற்றோன், கிராமியன், ஆயத்தமானோன்
** குறிகொள்வோன், லமிலான், வேதனைசெய்வோன்
வரைவு அற தான் கொடுப்போன் வள்ளியோன் ஆம் வகுக்கில் ஊன்தின்போன் பெயர்
மன்னு உகள் கூளியர் நிருவாணி நக்கன் ஆம் மந்தன் ஆம் கூர்மையில்லோன்
கரியவன் கள்வன் ஆம் வஞ்சகன் நிகாதன் ஆம் காருணியன் அருளுளோன் ஆம்
கற்கசன் கடினன் ஆம் வியவன் ஆம் ஏவுவோன் கவனன் ஆம் வேகமுடையோன்
உரியவன் கிழவன் ஆம் இயவுள் புகழாளன் ஆம் உல்லாபன் ஆம் மிகவும்
நோயுற்றொழிந்தோன் கிராமியன் ஆம் கிராமம் உற்றோன் பெயர் உரைத்திடுங்கால்
பரவு சன்னத்தன் ஆம் ஆயத்தமானோன் பராயணன் குறிகொள்வோன் ஆம்
பகர் குலீனன் ஆம் குலமிலோன் அருந்துதன் ஆம் படிக்குள் வேதனைசெய்வோனே

#30
** ஆண், ஆண் பொது, பெண், பெண் பொது, ஆண் பெண் சிறப்புப் பெயர்
பொருவிலாக் காளை பூமான் குமரன் ஆடவன் போற்று மகன் மைந்தன் ஆடூஉ
புருடனாய் வாழ்வானோடு எட்டும் ஆண் பெயர் மாந்தர் புகலில் ஆண்மக்கள் பொதுவாம்
அரிவை காரிகை தையல் மாது சுந்தரி வனிதை அங்கனை பெதும்பை பாவை
ஆடவள் ஆட்டி மடவரல் ஏழை தளிரியல் அணங்கு மகடூஉ மடந்தை
தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல்
செய்ய மடவாள் காந்தை மகள் இளம்பிடி பிரியை சேரும் மானினி பிணாள் பெண்டு
உரிய ஆறைந்துடன் நாலுமே பெண் பெயர் உயர் மாதர் பெண்கள் பொதுவாம்
உறு நம்பி ஆண் ஆகும் நங்கை பெண் ஆம் இவர்க்கு ஓதும் நாமம் சிறப்பே

#31
** ஏழு பருவ மங்கையர், அவர்தம் அகவை
** மூத்தாள், கன்னி, தலைவி, அருகர், தவமாது
பேதை பெதும்பையுடன் மங்கை மடந்தை பிரி அரிவை தெரிவை மற்று அப்
பேரிளம்பெண் ஏழுபருவம் ஆண்டு ஏழுடன் பின்பு பன்னொன்று பன்மூன்று
ஓது பத்தொன்பது ஐயைந்து முப்பத்தொன்று உரைத்த நாற்பான் இயம்பும்
ஓங்கிய விருத்தை மூத்தாள் பெயர் தருணியுடன் உயர் வாலை குமரி கன்னி
ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி
பெருமாட்டி கோமாட்டி பத்தும் தலைவி அடிகள் கோமாளும் ஒக்கும்
நீதிசேர் அருகர் தவமாதினுக்கு உரிய பெயர் நெறி உள கெளந்தி கன்னி
நிகழ் ஒளவை அம்மையொடு கந்தி என்றே புலவர் நேயத்து இயம்பினாரே

#32
** கானீனன், கோளகன், குண்டகன், அனுலோமன்
** பிரதிலோமன் அந்தராளன் விராத்தியன்
கன்னியில் பெறு மகன் கானீனன் வேட்கையொடு கைமை பெற்றோன் கோளகன்
கணவன் பிழைத்து வேறொருவர் புணர்ந்து பெறு காளை பெயர் குண்டகன்
உன்னும் அந்தணர் அரசர் வளளிகர் வேளாளர் என்று ஓதும் ஒரு நாற்குலத்தில்
உயர்ந்த குலத்து ஆண் இழி குலப் பெண்ணுடன் கூடிய வகையில் பெற்ற புதல்வன்
இந் நிலத்து அனுலோமன் மேற்குலப் பெண் இழிகுலத்து ஆணுடன் கூடியே
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இவ் இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும்
அன்ன பெண்ணோடு ஆணும் மாறியே கூடி அவர் அன்புடன் அளித்த புதல்வன்
அந்தராளன் விராத்தியன் என்று குலம் நான்கு அறைந்தனர் தமிழ்ப்புலவரே

#33
** வேசை, கூத்தி, தொண்டி, கைம்மை, மலடி, வண்ணாமகள், தம்பதி
பாடினி மதங்கி பாட்டினி விறலி பாடன்மகள் பாணன்மகள் பாடுவிச்சி
பரத்தை பொதுமகள் பொருட்பெண்டு பெறுபவைகொள்வோள் பயனிலாள் வரவின்மாது
நாடரும் கணிகை விலைமகள் சூளை வேசை பெயர் நாடகக் கணிகை கூத்தி
நடினியே ஆடல்மடவார் பெயர் தாசியுடன் நண்ணும் அடியாள் தொண்டி பேர்
வாடியே நூல் இழந்தாளொடு கலன்கழிமடந்தையே கயினி கைம்மை
மாசுபெறு விதவை அமங்கலை ஓர் ஐந்து பெயர் மம்மையே வந்தி என்ன
கூடிய இரண்டுமே மலடி பெயர் வண்ணமகள் கோலம்செய் மாதின் பெயர்
குன்றாத தம்பதி இரட்டை ஆண்பெண் என கூறிடும் பெயர் ஆகுமே

#34
** குறிஞ்சிநில மக்கள், அந்நிலமாதர், தலைவன், கடவுள்
** பாலைநில மக்கள், மாதர், தலைவன், கடவுள், புளிஞர், வேடர்
குறவர் கானவர் புனவர் மள்ளர் இறவுளரொடு குன்றவர் குறிஞ்சிமாக்கள்
குறத்தியர் கொடிச்சியர் புனத்தியர் அந்நில மாதர் குலவு வெற்பன் சிலம்பன்
மறுவில் கானகநாடன் அந்நிலத் தலைவன் வழுத்திடும் கடவுள் செவ்வேள்
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள்
செறிதரும் எயிற்றியர் மறத்தியர் பேதையர் செப்பும் அந்நில மாதரார்
தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை
விறல் சேர்கிறாதர் குன்றவர் குறவர் புளினர் பெயர் வில்லுழவர் சவரர் மறவர்
வியாதர் வனசரர் கொலைஞர் எயினர் மாகுலர் சிலவர் வேடர் கூளியரும் ஆமே

#35
** முல்லைநில மாக்கள், மாதர், தலைவன், கடவுள்,
** மருதநில மாக்கள், மாதர், தலைவன், கடவுள்
குடவர் பொதுவர்கள் அண்டர் அமுதர் ஆன்வல்லவர் கோபாலர் பாலர் விந்தர்
கோவலர்களுடன் ஆயர் தொறுவர் இடையர்கள் இண்டர் கோதுஇலா முல்லை மாக்கள்
மட நடைத் தொறுவியர் குடத்தியர் இடைச்சியர் மன்னும் ஆய்ச்சியர் பொதுவியர்
மகளிர் கானகநாடனே குறும்பொறைநாடன் வரும் அண்ணல் தோன்றல் இறைவன்
கடவுள் நெடுமால் விளைஞர் உழவர் மேழியர் கிளைஞர் கம்பளர் தொழுவர் மள்ளர்
கடையர் சிறுவர்கள் சிலதர் களமர் மருதத்தினோர் கருது உழத்தியர் சிலதியர்
உடன் இசையும் ஆற்றுக் காலாட்டியர் கடைச்சியர் உரைக்கும் அந்நிலை மாதரார்
ஊரன் மகிழ்நன் கிழவனே தலைவன் அந்நிலத்து உறை கடவுள் இந்திரன் ஆமே

#36
** நெய்தல்நில மக்கள், மாதர், தலைவன்
** கடவுள், மனிதர், மக்கள் திரள்
பரதர் பரதவர் கடலர் வலையர் திமிலர்கள் நுளையர் பயில் கழியர் சலவர் என்ன
பகர்ந்த இருநான்குமே நெய்தல்நில மாக்கள் பரத்தியர் குறத்தியர் உடன்
விரவிய வலைச்சியர் குழைச்சியர் நுளைச்சியர் விரும்பும் நிலமாதர் கொண்கன்
மெல்லம்புலம்பன் கடற்சேர்ப்பனே துறைவன் வியநிலத் தலைவன் அன்றி
வருணனே கடவுள் இம்முறை ஐந்து திணையினும் வகுத்த பெயர் கண்டுகொள்க
மக்கள் மானவர் மணோர் மைந்தர் மானிடர் மாக்கள் மாந்தர் மானுடர் மாண்டையர்
தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர்
செப்பு மன்பதை பஞ்ஞீல் எனும் இரண்டே மக்கள்திரளினுக்கு உரிய பெயரே

#37
** காலாள், மூதறிவாளர், வல்லோன், எண்மணம்,
** எண்வகைக் குறைபாடுடையோர், ஏழு தாதுக்கள்
முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர்
மொழிந்திடும் வலவை வல்லாளனொடு வல்லுநன் மூன்றுமே வல்லோன் பெயர்
மற்றும் மாட்டார் பெயர் வல்லார் எனப்படும் வகுத்த ஆண் பெண் பெயர் எலாம்
மருவும் மணியில் பண்பில் உவமையொடு ஒட்டினில் வந்தவழிக் கண்டுகொள்க
பற்றும் அசுரம் தெய்வம் ஆரிடம் இராக்கதம் பயில் பிரமம் இனிய
பிரசாபத்தியம் காந்தருவம் நீள் பசாசத்துடன் பகரும் மணம் இருநான்கு அதாம்
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் எனச் சொல்லும் எட்டாம்
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே

#38
** பாட்டன், தந்தை, அண்ணன், தம்பி, மாமன், மருகன், சகலன்
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும்
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன்
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன்
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர்
பேதம்இல் இளவல் அனுசன் கனிட்டன் பின்பிறந்தோன் பொருந்து இளையவன்
பின்தோன்றல் எம்பின் பின்னோன் பின்னவன் பேசு பெயர் ஒன்பதும் தம்பி ஆம்
மாதுலன் மாமன் அம்மான் ஆகும் மணவாளன் மருகன் மருமகன் நாமம் ஆம்
மருவும் ஓர் குடியினில் கொண்டவன் சகலன் ஆம் மலையமுனி சொற்றதாமே

#39
** தாய், செவிலி, தமக்கை, தங்கை, மனைவி, மாமி
தன்னை மொய்த்தாய் அன்னை அவ்வை ஈன்றாள் ஆயி தம்மனையோடு அம்மை மாதா
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை
உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர்
ஒக்கும் இம்மூவரும் தவ்வை ஆம் எங்கை இளையாள் தங்கை பின்னவள் பெயர்
பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம்
பயிலும் மணமகள் உரிமை தலைவி தலைமகள் காந்தை பகரும் மனை களம் விருந்தம்
மன்னும் இல்லே இலாள் மனையாள் குடும்பினி வாழ்க்கையின் துணைவியுடனே
வல்லவி கிழத்தி நாலாறும் மனையாள் பெயர் மாமியார் அத்தை ஆமே

#40
** கணவன், மகன், மருமான் – மருகன்
வரன் கணவன் நாயகன் கொண்கன் வேட்டோன் கண்டன் வல்லவன் பத்தா தவன்
மணமகன் தலைமகன் காதலன் காந்தன் வரும் கேள்வன் நண்பன் பதி
விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே
மிக்க புருடன் பெயர் மதலை சந்ததி தோன்றல் வீறுசெய் செம்மல் எச்சம்
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன்
புத்திரன் காதலன் குட்டனே நந்தனன் புதல்வனே தநயன் நேயன்
தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான்
சீறிய புறங்கடை வழித்தோன்றல் மருகன் சிறப்புடைய பேர் அது ஆமே

#41
** மகள், இருபாற்பொது, இருபாற்பொதுப்பன்மை
** இளையோன், இளமை, காதலன், காதலி
சிறுவி புத்திரி புதல்வி தநயை பந்தனை ஐயை செப்பு சுதை வசுதையுடனே
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும்
குறிய குறுமக்களொடு மகார் சிறார் என்னவே கூறிடும் பலர் பன்மை
குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன்
திறல் உவாவினன் மழவன் இளவல் ஈராறும் திருந்து இளமையுற்றோன் பெயர்
சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று
அறையும் எண் பெயர் இளமை கணவன் நண்பு தவனம் மூவரும் காதலன் ஆம்
இனிய மனைவி மகள் தோழி அம்மூவரும் அடுத்த காதலியும் ஆமே

#42
** படை, படைவகுப்பு, கொடிப்படை, படையெழுச்சி,
** படையழைத்தல், படையறுதல்
பலம் தளம் சேனை அநீகம் தண்டம் வாகினி பதாகினி பதாதி யூகம்
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம்
சொலும் பரிகலம் கீதம் நாலைந்தும் மிக்க படை தோன்றிய நிதானமும் பேர்
சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே சொற்றிடும் படைவகுப்பே
தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர்
தங்கு பேரணி பின்னணிப் பெயர் ஊக்கமுடன் ஆக்கமே படையெழுச்சி
இலங்கிய அறைகூவல் சிலைவளைத்திடுதல் இரண்டுமே படையழைத்தல்
இயம்பும் அறைபடுதல் அறைபோதல் கீழறுதல் இவை ஏற்று படையறுதல் ஆமே

#43
** பதாதி, சேனாமுகம், அக்குரோணி
** வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை
** தும்பை, வாகை, வாகைப்பூ
கரி மூன்று தேர் பத்து வாவு பரி நூறு காலாள் ஆயிரம் பதாதி
கணித்த தொகை மும்மடி சேனாமுகம் சேனாமுகம் குமுதமொடு தக்கணம்
பெருகு வாகினி பிரளயம் சமுத்திரம் மேல் பெருத்த சங்கனி கமணிகம்
பேசும் மும்மடி கொண்டது அக்குரோணி என்று பெயர் பெற்ற தொகை மற்றும் வெட்சி
நிரை கவர்தல் அந்நிரையை மீட்டல் கரந்தை நேரார்மீது சேறல் வஞ்சி
நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல்
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி
புரிவதே வாகை வெண் பூழையும் வெற்றி அம் பூ என்று இயம்பினாரே

#44
** உடம்பு, வடிவு, கால், கால் கரடு, கணைக்கால், முழங்கால்
உடல் சடம் கூடு தாபரம் காத்திரம் அத்துவொடு உறுப்பு குரம்பை பிண்டம்
உயிர்நிலை புறம் தேகம் மேனி மூர்த்தம் படிவம் உருவம் கடம் பூசியம்
சடலம் களேபரம் காயம் புணர்ப்பு சரீரம் மெய் யாக்கை ஆகம்
தனு விக்கிரகம் பூச்சி புதை பூகை அங்கம் ஆதாரம் வடிவொடு புற்கலம்
படுமே உடம்பினது நாமம் முப்பதிநான்கு படலம் உருவம் சட்டகம்
படிவம் மேனி இவை ஐந்தும் வடிவின் பெயர் பதம் சரணம் அடி அங்கிரி
கடிய தாள் சலனம் கழல் பாதம் எட்டும் ஆம் கால் கால் கரட்டின் பெயர்
கண்ட பரடு ஆம் கணைக்கால் சங்கம் ஆம் முழங்கால் முந்து சாநு ஆமே

#45
** தொடை, அல்குல், இடை, மருங்கு – பக்கம், வயிறு, கொப்பூழ், தேமல்
வாமம் குரங்கு சோகம் கவான் ஊரே வடிவுடை முருக்கம் ஆறும்
வலிய தொடையின் பெயர் கடிதடம் நிதம்பமே வாய்த்த அகல் அல்குலின் பேர்
ஆம் அரை நுசுப்பு நடு மத்திமம் ஆங்கு அத்துடன் அழகிய மருங்குல் ஒக்கம்
ஆறும் இடையின் பெயர் ஒக்கலை எனும் பெயர் அது மருங்கின் பக்கம் ஆம்
தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும்
சொலும் வயிற்றின் பெயர் இலஞ்சியே இதலையொடு சொலும் போகில் உந்தி நாபி
நாமம் ஓர் ஐந்துமே கொப்பூழ் சுணங்கு பொறி நவில் உத்தி துத்தி திதலை
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே

#46
** ஆண்குறி, பெண்குறி, மார்பு, முலை, முலைக்கண்,
** கை உள்ளங்கை, கைரேகை
கோசம் இலிங்கம் ஆண்குறி யோனி அறை பகம் குய்யமே பெண்குறிப் பேர்
கூறரிய மருமம் நெஞ்சு ஆகமே அகலம் குறித்த உரம் மார்பின் பெயர்
பேசு நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குருக்கண்
பெருமைபெறு கொங்கை சுவர்க்கம் பறம்புடன் பெருத்த குயம் முலையின் பெயர்
சூசுகம் சூதம் சிலீமுகம் முலைக்கண் ஆம் தோள் கரம் பாணி அத்தம்
சொற்ற கைத்தலம் மிக்க நாமம் ஓர் ஆறும் துலங்கிடும் கையின் பெயர்
மாசறு குடங்கையுடன் அங்கையும் அகங்கையும் மன்னும் உள்ளங்கை ஆகும்
வரை இறை இரண்டுமே கை உறுப்பு ஆம் என்று மா முனி இயம்பினாரே

#47
** விரல், நகம், மணிக்கட்டு, முழங்கை, தோள், கழுத்து,
** மிடறு, முதுகு, குதம், பிடர், தோளின்மேல்
கரசாய்கை அங்குலி இரண்டும் விரல் ஆம் நகம் காருகமொடு உகிர் ஆம்
மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு
ஒரு மூன்று பெயருமே தோள் ஆம் களம் கண்டமொடு கந்தரம் கிரீவம்
உயர் கில்லம் ஐந்தும் கழுத்து ஆம் மிடற்றினுக்கு உரிய பெயர் அணல் ஆம் புறம்
வெரினோடு வெந் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம்
வெய்ய குதம் ஆசனம் பவனமுடனே எச்சம் மேவு வாய் புட்டம் ஆமே
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும்
மருவு நிகலம் சுவல் செகில் என்னும் மூன்றுமே வலிய தோள்மேல் ஆகுமே

#48
** பின்புறம், முகம், உதடு, பல், சிரிப்பு, உண்ணாக்கு நாக்கு
ஆய்ந்த பிடவம் பிறக்கு பிறகு பிற்பரம் ஆம் பின்புறத்தின் பெயர்
ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர்
வாய்ந்த பாலிகை அதரம் இதழ் முத்தம் ஓட்டம் வளம்கூர் உதட்டின் பெயர்
மற்றும் மேல்உதடு ஓட்டம் ஆம் கீழ்உதட்டிற்கு வரும் நாமம் அதரம் என்று ஆம்
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர்
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர்
தேர்ந்த கீழ்வாய்ப் புறப்பெயர் அணரி அண்ணம் அணல் சிறிய உண்ணாக்கு அண்ணம் ஆம்
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே

#49
** மேல்வாய், மூக்கு, கன்னம், காது, கண், கண்மணி, இமை
வடிவுபெறு தட்டமே தாடி மேல்வாயின் வகுத்த பெயர் ஒன்றிரண்டாம்
வளர் கோணம் நாசி துண்டம் கந்தவகம் ஆக்கிராணம் மூக்கு ஐந்து பெயர் ஆம்
கொடிறு கவுள் கன்னம் கபோலம் பலாசம் கொடிச்சி ஆறும் கதுப்பு ஆம்
குழை கேள்வி கோத்திரம் செவி கன்னமொடு காது கொண்ட பெயர் அள்ளும் ஆகும்
நெடிய விழி அம்பகம் தாரை நோக்கு சக்கு நேத்திரம் பார்வை நயனம்
நீண்ட நாட்டம் திட்டி அக்கம் விலோசனம் நிகழ்த்திய உலோசனம் கோ
உடனுறு திருக்கு திருட்டி ஈரெட்டுமே ஒப்பரிய கண்ணின் பெயர்
ஒளி பெருகு தாரை கண்மணி ஆம் விளிம்பு என்பது ஒன்று கண் இமை ஆகுமே

#50
** தலை, புருவம், நெற்றி, கழலை, கோழை, பிணம், உடற்குறை
சிகரம் முடி மத்தகம் சேகரம் கம் மூர்த்தம் சிரம் உச்சி உத்தமாங்கம்
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர்
புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும்
புருவம் குளம் பாலம் முண்டம் இலாடம் பொருந்து மத்தகம் அளிகமே
அகலு நுதல் கும்பம் பனிச்சை நெற்றிப் பெயர் அரலையே கழலைப் பெயர்
ஐயொடு காசம் என்பது கோழையின் பெயர் அழனம் குணுங்கு குணபம்
மிகுதிபெறு சவம் நீள் பிரேதம் களேபரம் விளம்பு பிணம் ஆறே பெயர்
மிக்க யூபம் கவந்தம் மட்டை மூன்று பெயர் மிகும் உடற்குறை ஆகுமே

#51
** ஆண்மயிர், பெண்மயிர், இளம்காளையர், மயிர், மயிர்முடி
உளை குடுமி தொங்கல் சிகை பங்கி குழல் கார் குஞ்சி ஓரி நவிர் பித்தை தளைகள்
உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால்
வளர் குந்தளம் கோதை குரல் சுரியல் குருள் அளகம் மராட்டம் விலோதம் குழல்
வரு கூரல் கூந்தல் பரிசாரம் கதுப்பு அழகம் வைத்த பதினேழ் பெண்மயிர்
குளிர் சுரியல் கேசம் கதுப்பு அளகம் ஒரு நான்கு குலவு இளம்காளையர்க்கு
கூறிடும் சிகை சிமிலி சிமையமொடு சிக்கமே குடுமி சூளிகையும் அப் பேர்
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை
மில்லமொடு பந்தம் என வந்த ஓர் ஒன்பதும் மிகுத்த மயிர்முடி நாமமே

#52
** வளரும் மயிர், மயிர்க்குழற்சி, தொங்கல் மயிர்
** உடற்செறி மயிர், பிறமயிர், நரை மயிர், சடை, உச்சி
கொந்தளம் அளகம் இரு பெயருமே வளரும்மயிர் குந்தளம் விலோதம்
மயிர்க்குழற்சி ஆம் இரண்டு பெயர் குறைவுஅறா மயிர் குஞ்சி கூந்தல் பனிச்சையுடனே
ஐந்து பெயரும் முடிக்கீழ் விட்ட தொங்கல் மயிர் அறையும் உரோமம் சிரோந்தம்
ஆகிய இரண்டுமே உடலினில் செறியும் மயிர் அபிதானம் ஓரி பங்கி
உந்திய உரோமம் உளை கேசம் மராட்டம் ஓர் ஆறுமே பிறமயிர்ப் பேர்
ஆகுமே சரை பலிதம் இரண்டுமே பேசிடில் பின்னரிய நரையின் பெயர்
வந்திடும் கோடீரம் வேணி சடிலம் பின்னல் மன்னு சடை நான்கே பெயர்
வாய்த்த நவிரம் சுடிகை சூளி ஒரு மூன்றும் வழங்கு உச்சி அபிதானமே

#53
** உயிர், உறுப்பு, தழும்பு, எலும்பு, சந்து, கபாலம்
** இந்திரியம், ஐம்புலன்கள், பஞ்சேந்திரியங்கள்
அழிவுஇல் இயமானன் பசு புற்கலன் சீவன் ஆவி ஆன்மா சேதனன்
ஆதன் பிராணன் உயிர் அபிதானம் அணுவும் ஆம் அவயம் சினை காத்திரம்
வழுஇல் சித்திரம் அங்கமே உறுப்பு ஆம் கச்சை வசி வடு சுவடு அங்கிதம்
வன் சேக்கையே தழும்பு ஆம் ஏலும் பேர் என்பு மதவங்கம் அத்தி அக்கு ஆம்
கழியும் உடல் முழுவென்பு கங்காளம் ஆகும் களேபரம் உடல் எலும்பு ஆம்
கந்து மொழி மூட்டு கொழுந்து இனவை சந்து ஆம் கபாலம் வெண்தலையோடு அது ஆம்
விழைவாயில் பொறி கரணம் இடு கந்தம் இந்திரியம் வினவில் ஓர் ஐந்தாம் சுவை
மிகு பரிசம் ஓசை ஒளி நாற்றம் அறிகருவி நா மெய் செவி கண் மூக்கு ஆகுமே
** இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதி முற்றும்

@3 மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி


#1
** சிங்கம், ஆளியானை, புலி, கரடி
அரி வயப்புலி வயப்போத்து மிருகாபதி யாளி வாளரி கோளரி
அறுகு கண்டீரவம் கேசரி மடங்கல் பஞ்சானனம் பூட்கை சீயம்
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம்
புழைக்கை அறுகு ஆளியொடு பூட்கை ஒரு நான்குமே புனர் ஆளியானையின் பேர்
வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல்
வல்லுமா வயமா வியாக்கிரம் சாத்தூலம் வல்லியம் புண்டரீகம்
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு
பாய் குடாவடி உளியம் ஏலுவுடன் புனர இவை பகர்ந்த ஏழும் கரடியே

#2
** யானை, ஆண்யானை, பெண்யானை
உம்பல் கரி கயம் ஆம்பல் வாரணம் மதாவளம் ஒருத்தல் வேழம் போதகம்
உயர் வல்விலங்கு குஞ்சரம் வழுவை மாதங்கமொடு கருணி இபம் எறும்பி
தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா
தோல் அத்தி பகடு சரம் ஒற்பவம் புகர்முகம் சுண்டாலி பூட்கை நாகம்
கும்பி பிறமறி தந்தி சிந்தூரம் கறையடி கொட்டுமா மதமா கைம்மா
குடம்பி களபம் கடவை மாதிரம் மருண்மா குலாவும் இருண்மா புழைக்கை
வெம்பு நால்வாய் யானை நாமம் நாற்பத்தெட்டு வீறு மதகரி களிறுடன்
மெய்த்தந்தி ஆண் ஆகும் வடவை அத்தினி கருணி மிக்க பிடி பெட்டை ஆமே

#3
** உதவிசெய் யானை, யானைக்கன்று, யானைத்திரள்,
** பிறந்த நிலத்தாற் பெயர்பெறும் யானை, யானைத்தலை,
** யானைக் கொம்பு, துதிக்கை, துதிக்கையின் நுனி, உமிழ்நீர்
உதவிசெய்து இனத்தினைக் காய்கின்ற கரி மதகயம் அத்துடன் யூதநாதன்
ஓங்கு துடியடி முனி கயம் கயந்தலை களபம் ஒப்புஇல் போதகம் ஓர் ஆறும்
பிதிரக் கரிக்கன்றின் நாமம் கடகம் ஆகும் பெருங்கரித் திரளின் பெயர்
பேசு கிரிசரம் நதிசரம் வனசரம் கரி பிறந்திடும் நிலத்தின் பெயர்
மதகம் மத்தகமொடு குடம் கும்பம் நான்குமே வனக்கரி சிரசின் பெயர்
மருப்பு எயிறு கோடு கிம்புரி தந்தம் ஓர் ஐந்தும் வாரணக் கொம்பின் பெயர்
கதம் உடைய கொண்டை தொண்டை தொண்டலம் துதிக்கை புட்கரம் கைநுனை
கருதிய விலாழியொடு மதுவரம் கை உமிழ்நீர் கடைக்கண் நிரியாணம் ஆமே

#4
** யானை மதம், முதுகு, வால், வால்நுனை, பல்அடி, தாள், முன்கால், பின்கால்
** காது, காதின் அடி, மதச்சுவடு, கதுப்பு, கொம்பின் நடு, நோய், துயிலிடம், படுகுழி
மண்டிய கடம் கடாம் கறை தானம் ஒரு நாலும் மதம் ஆகும் முதுகு மஞ்சு ஆம்
வால் தாலவட்டம் ஆம் வால்நுனை வேசகம் வளர் பல்அடி கரீரம்
கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும்
கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம்
கொண்ட மதம் அளிகள் அடி கடம் ஆகும் குலாவிய புள் கதுப்பு ஆம்
கொடும்பியொடு பிருதுமானம் கொம்பின் நடு ஆம் குறித்த நோய் பாகலம் அது ஆம்
தண்டம் ஆம் சென்றவழி சேவகம் கூடகம் சாற்று கரி துயிலிடம் அது ஆம்
தகும் பயம்பொடு வாரி யானை படுகுழி அது ஆம் தமிழ்முனி உரைத்த பெயரே

#5
** யானை கட்டும் விலங்கு, கழுத்துக் கயறு, அங்குசம், சாணம், கனவு, முகபடாம்,
** நெற்றிப் பட்டம், தவிசு, மெத்தை, கட்டுத்தறி, கச்சை, தங்குமிடம், துயிலிடம்
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம்
புரசை கவடே தூசி மூன்றும் கழுத்தில் பொருந்திய கயிற்றின் பெயர்
தோட்டி அங்குசம் நீள் சாணம் கணிச்சியொடு சொற்பனமே குடோரி
சூழி மந்தனம் இரண்டே முகபடாம் பெயர் துலங்கு ஓடை பட்டம் ஆகும்
காட்டு தவிசோடு பலகாரம் இலகடம் கச்சை கரி மேல் மெத்தை ஆம்
கந்து வெளில் கணையம் ஆளானம் ஒரு நான்குமே கரி கட்டுதறியின் பெயர்
ஈட்டு கரி மணிகண்டம் கச்சை ஆம் மால்கரி இணங்கு கூடத்தின் பெயர்
எழில் வாரி ஒளி ஆலயம் மூன்றும் ஆம் குளகொடிரை கவர்முனம் வாரி இடமே

#6
** குதிரை, சேரன் குதிரை, பாண்டியன் குதிரை
** சோழன் குதிரை, குறுநில மன்னர் குதிரை
குந்தம் மண்டிலம் வாசி இவுளி உத்தரி அயம் கோடை பாய்மா துரங்கம்
குரகதம் துரங்கதம் கிள்ளை அத்திரி உன்னி கோணம் வயமா கொய்யுளை
கந்துகம் புரவி பரி சடிலம் சயிந்தவம் கற்கி அரி தூசி வாகம்
கந்திருவம் அச்சுவம் கோடகம் கொக்கு மா கடிய துரகம் பத்திரி
உந்து கனவட்டமொடு பாடலம் கோரம் நலமுள வடவையுடன் முப்பதேழ்
உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா
வந்த கனவட்டமே வழுதிமா கோரமே வளவன்மா கந்துகம்தான்
மன்னு குறுநிலமன்னர் ஊர்ந்திடும் மா என வகுத்து உரைத்தனர் வல்லோரே

#7
** குதிரைக் குளம்பு, பிடரிமயிர், கலணை, அங்கவடி
** நெடுமயிர், கடிவாளம், உமிழ்நீர், சம்மட்டி, குதிரைக் கயிறு
குரமொடு குரச்சை என வரும் பெயர் இரண்டுமே குதிரைக்குளம்பின் பெயர்
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர்
பருமம் மாக்கருவி படை பண் பல்லணம் ஐந்துமே பகர் கலணை பரவும் பேர்
படி கச்சம் ஓர் இரண்டு அங்கவடி நாமம் மருங்கு அணியும் நெடுமயிர் உளை
உரிய கலியம் கலினம் இருள் கறுழ் கடிவாளம் நான்கு பரியின் வாயின்
உமிழ்நீர் விலாளி மத்திகை கோல் இரண்டுமே ஒத்த சம்மட்டியின் பெயர்
மருவு பரி வாய்வட்டம் வற்கம் வடிகயிறும் வன் குசை கசை கயிறும் ஆம்
மதி கவனம் புரவி செலும் மார்க்கம் மா திகம் வம்பாரி வருக்கம் ஆமே

#8
** குதிரை நடை, குதிரைப்பந்தி, குதிரை வையாளி வீதி
** ஒட்டகம், பன்றி
மல்லகதி வானரகதி வியாக்கிரகதி மயூரகதி விடையின்கதி
வைத்த ஓர் ஐந்து கதி புரவிநடையின் பெயர் மந்திரம் பணை சாலை முன்
எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும்
நல்ல கனகதம் அயவணம் தாசோகமுடன் நனிய நெடுங்கழுத்தல்
நாடில் அத்திரி இரவணம் கரபம் இருமூன்று நாமம் ஒட்டகம் வருக்கம்
வல்லுளி குரோடம் அரி சூகரம் கோணி கருமா மோழன் கேழல் மோழல்
வளர் இருளி எறுழி ஏனம் கனலி பூதாரம் வன்களிறு பன்றி ஆமே

#9
** பன்றி, முள்ளம்பன்றி, முள்ளம்பன்றியின் முள்,
** மருட்டுப் பன்றி, மான், கலை, புல்வாய், கவரிமான்
கைம்மா முழக்கோட்டுமாவோடு ஆறுமூன்றுமே காட்டும் அப் பன்றியின் பேர்
காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே
சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம்
துடர் மருட்டுப்பன்றி கிரி குடி கரிட்டியொடு துய்ய போத்திரி கோலம் ஆம்
நம் மானின் நாமம் குரங்கம் மறி உழை சூனம் நவ்வி சாரங்கம் மிருகம்
நாட்ட அருணம் மாளை ஏணம் பிணை பன்னொன்றுமே நவிற்று இரலை கருமான் புல்வாய்
இம்மூன்றுடன் வச்சியம் கலை மருப்பிகலை இரலை புல்வாயின் பெயர்
எகினம் ஏதிமம் மானமா பட்டம் ஒரு நான்கும் எழில் கவரிமான் ஆகுமே

#10
** மான் மயிர், மரை, குரங்கு, கருங்குரங்கு, பெண் குரங்கு, முசு, கீரி
உலவிடும் கவரி சாமரை சவரி மூன்றுமே உறு கவரிமான் மயிர் பேர்
உன்னு கானக்குதிரை ஆவிதம் இரண்டுமே ஒளியாத மரையின் பெயர்
வலிமுகம் நிரந்தரம் கோடரம் வானரம் மந்தி பிலவங்கம் கவி
மற்கடம் கீசம் அரி யூகம் நாகம் கடுவன் அவன் கோகிலம் கானவன்
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம்
கூறிய கருங்குரங்கு ஆம் மந்தி யூகம் இருபேருமே பெண்குரங்கு ஆம்
கலை கள்வன் ஓரி கோலாங்கூலம் மைம்முகம் கடிகொள் முசு ஐந்து பெயர் ஆம்
கலை அவற்று ஒன்றாம் தீர்வை நகுலத்துடன் காத்திரம் கீரி ஆமே

#11
** நரி, ஓரி, நாய், ஆண்நாய், பெண்நாய், செந்நாய்
** கழுதை, கோவேறு கழுதை
ஒண்டன் சனுக்கை இகலன் சம்பு கொம்பை ஊளனே பூரிமாயு
எரி சிறுகாலன் குரோட்டு நரி நாமம் ஒரு பத்து இகலன் ஓரியின் பேர்
சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன்
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன்
அண்டிய நராரி குரைமுகன் அக்கன் கூரன் அறுமூன்றும் நாய் உச்சியும்
ஆண் முடுவல் எனும் பெண்நாய் கொக்கு அண்டிகம் செந்நாய் விருகமும் பேர்
கண்ட வாலேயம் வேசரி கத்தபம் கோகு காளவாய் அத்திரி கரனும்
கழுதை ஆம் கோவேறுகழுதை அத்திரியுடன் கருது வேசரி ஆகுமே

#12
** கத்தூரி, நாவி, முயல், பூனை, அணில், உடும்பு, பச்சோந்தி, பல்லி
நானம் துருக்கமொடு மான்மதம் நரந்தம் அ நான்கு பெயர் கத்தூரி ஆம்
நாவியின் பெயர் மறுவி ஆம் சயம் வயம் சசம் நவிற்றும் ஒரு மூன்றும் முயல் ஆம்
பூனை அலவன் பவனம் மாற்சாலம் விடருகம் பூச்சை பாக்கன் விலாளம்
பூசை மண்டலியொடு பூஞை இற்புலி ஆம் பொருந்தான் விலாளம் வெருகு ஆம்
ஊனம்இல் வரிப்புறம் இலுதை வெளில் அணில் ஆம் உடும்பு தடி முசலி கோதா
ஒரு மூன்றும் ஆம் முசலி சாய்தனம் சரடி ஓத்தி தண்டு ஓதி ஓமான்
ஈனம் மிகும் ஒளி கோம்பி ஒன்பதொடுதான் காமரூபி பச்சோந்தி ஆகும்
இல்கோகிலம் கெவுளி புள்ளி பொந்து ஒரு நான்கு இசைத்த பெயர் பல்லி ஆமே

#13
** பாம்பு, சாரைப் பாம்பு, கருவழலைப் பாம்பு, மண்டலிப் பாம்பு
** கண்குத்திப் பாம்பு, நாகம், பறவை நாகம், பெரும்பாம்பு
பன்னகம் பணி உரகம் நாகம் புயங்கம் அரி பாந்தள் அரவு அகி கஞ்சுகி
பவனாசனம் கூடபதம் மாசுணம் போகி பரவு காலிலி சக்கிரி
தன்னுடன் விட தரி காகோதரம் காத்திரி தந்தசூகம் கட்செவி
சர்ப்பம் அரி தம்பிஞ்சம் அங்கதம் கும்பீனசம் வியாளம் மராளம்
என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர்
இராசமுடன் அந்தம் ஆம் கருவழலையின் பெயர் இயம்பு மண்டலி கோளகம்
உன்னு கண்கொத்தி ஆம் மாலுதாசனன் நாகம் மூர்க்கன் ஆம் பறவைநாகம்
முதிர் குக்குடச்சர்ப்பம் ஆம் பெரும்பாம்பு ஆகும் மொழி மாசுணம் பாந்தளே

#14
** பாம்பின் படம், படப்பொறி, பாம்பின் பல், நஞ்சு, நாக்கைப்பாம்பு
** அட்டை, தேள், பெருச்சாளி, வெள்ளெலி
பை பணம் இரண்டுமே பாம்பின் படம் படப்பொறி உத்தி துத்தி ஆகும்
பன்னரிப தட்டமே நஞ்சுகால் பல் ஆம் பகர்ந்த காளம் கரளமே
வெய்ய நீலம் காளகூடம் கடு சிங்கி விடம் ஆலகாலத்துடன்
வீறு கள்ளம் காரி பத்துமே நஞ்சு ஆம் மிகுந்த பூநாகம் நாங்கூழ்
எய்திய இரண்டும் நாக்கைப்பாம்பின் நாமம் ஆம் ஏற்ற உரு அட்டையின் பேர்
எண்ணிய விடம் தெறுக்கால் பற்பலம் துட்டன் இசையளி விருச்சிகம் இவை
துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் முடிகம் துந்துரு விருந்துரும்பன்
சொல் ஆகு ஐந்தும் பெருச்சாளி விருடம் துலங்கு வெள்ளெலி ஆமே

#15
** எலி, அகழ்எலி, காரெலி, மூஞ்சூறு, மூட்டை, சிலந்தி, எறும்பு
** கறையான், இந்திரகோபம் – தம்பலப்புழு, புழு, உலண்டு
பாய் சிகரி ஆகுவே அகளவன் இம்மூன்றும் பகர்ந்த அகழெலி விருப்பன்
பண்பார் கருப்பை காரெலி சுவவு சுண்டன் பசுப்பில் சூரன் சுந்தரி
ஒயில் ஒரு மூன்றும் மூஞ்சூறு மூட்டைப் பெயர் உரைத்திடும் குடவன் ஒன்றே
உலூதி காவானியே ஒள்ளிய சிலம்பி இவை ஒரு மூன்றுமே சிலந்தி
ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம்
ஆளலே சிதலை செல் என்ப கறையான் பெயர் ஆம் தம்பலப்புழுப் பேரே
இந்திரகோபம் உதையம் சோனம் இயானம் இவை நான்கு கிருமி கீடம்
இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே

#16
** பசுவின் பொது, பெண் பசு, ஓரீற்றுப் பசு, பலவீற்றுப் பசு
** மலட்டுப் பசு, குணமிலாப் பசு, தெய்வப் பசு, பாலுள பசு, நற்பசு
பெற்றம் குடம் சுட்டு நிரை ஆவோடு ஆன் பசு பெருகு கோ சுரபி தேனு
பேசு பத்தும் பொதுப்பெயர் கபிலை சுரை சுரபி பெரிய சேதா கோமளம்
குற்றம்இல் குரம் தேனு நாடில் ஓர் ஏழும் குறித்திடும் பெண்பசுப் பேர்
கூறும் புனிற்றாவுடன் கிட்டி ஆகும் குலாவிய ஓர்ஈற்றுப்பசு
வற்சலமுடன் கன்னவற்சம் இரு பெயருமே வாய்த்த பலஈற்றுப்பசு
வச்சை மலடுற்ற பசு ஆம் குணமிலாப்பசு மன்னு சுதை என்று பெயர் ஆம்
உற்ற தேனு கபிலை தெய்வப்பசுப் பெயர் ஆங்கு பாலுளபசுப் பேர்
ஒப்பரிய பாசல் ஆம் மருவு பத்திரை என்ப ஒன்று நற்பசு ஆகுமே

#17
** எருது, இடபம், பொதி எருது, பேர் எருது
** எருதின் முரிப்பு, எருதின் கூட்டம், சேங்கன்று
பாறல் புல்லம் கொண்டை செவிடை இறால் பூணில் பாண்டில் பெற்றம் கொட்டியம்
பகரும் மூரி தகளை ஆனேறு கோ பதி பூண்டில் பதினைந்து பெயரும் எருது ஆம்
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும்
இடபம் ஆம் கொட்டியம் தூர்வகம் தூரியம் மூன்று இவை பொதி எருத்தின் பெயர்
வீறுடைய தூரியம் பகடு பேர்எருது ஆம் விளங்கு குடி மிடல் அக்கு உடன்
வீங்கு திமில் நான்கும் ஏற்றின் திரள்முரிப்பு ஆம் விளம்பரிய நிரையினம் உடன்
கூறு காலேயம் தேனு காவி கோதனம் கொட்டம் ஏழ் கூட்டம் ஆகும்
கொற்றி வசு வற்சலம் தன்னமோடு அகனம் இவை சேங்கன்றின் நாமம் ஆமே

#18
** பசுவின் முலை, முலைமடி, எருமை, எருமைஆண்
** மலட்டெருமை, காட்டா, ஆட்டின் பொது
சுரை ஆவின்முலை ஆம் செருத்தம் ஆபீனம் சுரப்புடைய மடியின் பெயர்
தோராத மேயினம் மயிடம் கவரி சாத்தா துலங்கு காரான் சயிரியம்
தெரி கராசம் கடமை மூரி ஒன்பதும் எருமை திகழ் பூணி பகடு போத்து
சேர்ந்த மூன்றும் கடா மைமை மலடு ஆம் இனி செப்பில் ஆமா கவையமே
உரைகொள் காட்டாப் பெயர் மறி மை கொறி தகர் கிடா உதள் வரிடை கொச்சை மேடம்
உடுவே செம்மறி பள்ளை வெள்ளை அருமை புருவையொடு மொத்தை அசை மேழகம்
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே
சொற்ற ஆட்டின் பொதுப்பெயர் இவற்றின் பகுதி தோன்றிடச் சொல்லுவோமே

#19
** செம்மறியாடு, செம்மறிஆண் ஆடு, வெள்ளாடு, வெள்ளாட்டின் ஆண்
** வெள்ளாட்டுமறி, வரையாடு, ஆட்டுக்குட்டி, ஆடு கட்டும் கயறு
செம்மறிப் பெயர் துரிவை மறி கொறி துருவாடு திகழ் உரு பிரம் ஆறும் ஆம்
திண்ணகம் தகர் கிடா ஏழகம் மேழகம் செம்பளம் ஓர் ஆறும் அவ் ஆண்
மெம்மருவு சாகளம் கொற்சை வற்காலி சகம் வெள்ளை சாகம் வெள்ளாடு
விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம்
இ மறிப் பெயர் வெள்ளை வருடை சரபம் பகர் இரண்டு வரையாட்டின் பெயர்
எழிலான பள்ளை சாகளமும் ஆம் குட்டிக்கு இடும் பொதுப்பெயர் உரைக்கில்
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணிக் கயறு
தோளம் தொழுவம் வேலி ஆனிலை எனக் கண்ட பெயர் பட்டி ஆமே

#20
** பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்
** தயிர்கடைத்தறி, தயிர்மத்து, சாணம்
அமுதம் பயம் பயசு கீரம் இ நான்குமே அன்புடைய பாலின் பெயர்
அளை மொழை ததி பெருகு எனச் சொன்ன நான்குமே அழகுகூர் தயிரின் பெயர்
கமழும் மச்சிகை அளை அருப்பம் முசிர் தக்கிரம் காலசேயம் மதிதம் மோர் பெயர்
கவினமே அவ்வியம் தனதம் நவநீதம் கடைந்திட்ட வெண்ணெய்ப் பெயர்
சமையம் நேயம் கிருதம் ஆச்சியம் துப்பு அவி தணிந்த இழுதும் சேரவே
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே
நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அப் பேர்
நெறிகொள் புண்ணியசாந்தம் என்னும் ஒரு பெயருமே நீதியுள சாணம் ஆகுமே

#21
** விலங்கின் கூட்டம், கொம்பிலா விலங்கு, கொம்பு,
** வால், வாலின் கீழிடம், தோல், கொழுப்பு
தேடிய கணம் குலம் சாலமே யூகம் வியூகம் விருந்தம் ஆறும்
திரள் விலங்கின் பெயர் குமரமே கொம்பிலாத் திரமுள விலங்கின் பெயர்
கோடு சிருங்கம் விசானம் வயிரம் மருப்பு உலவை ஆம்பல் கொம்பு இரலை ஆம்
கூலம் வாலுதி தோகை வேசகம் கடை இலாங்கூலம் வால் ஆறே பெயர்
கேடுஇல் வெருகம் தட்டு வால்கீழிடப் பெயர் கிளர்த்த அரிய புரணி பச்சை
கிருத்திமம் போர்வை உரி தொக்கு துருத்தி அதள் கிடையாத ஒலியல் சருமம்
கூடிய துவக்கு உரிவை பிளிறு வடகம் தோல் குறித்த பதினான்கு பெயர் ஆம்
கோளம் விழுக்கு விளர் இருளும் நிணம் ஐந்து பெயர் கொண்டது கொழுப்பு ஆகுமே

#22
** ஊன், ஆவின்,இறைச்சி, உதிரம், மூளை, நரம்பு
** ஈரல், குடல், சூல், மா, உள்மாசு. வழும்பு, முடை
புண் புலால் புலவு தசை தடி தூவு வள்ளுரம் புளிதம் விடக்கு இறைச்சி
புறணி பிசிதம் பன்னிரண்டும் ஊன் வள்ளுரம் புகலும் ஆவின் இறைச்சி
திண் குருதி சுடுவன் நெய்த்தோர் சோரி சோணிதம் செந்நீர் புண்ணீர் புலால்நீர்
செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ்
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர்
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர்
ஒண் சினை கரு பீள் கருப்பமே வயாவு சூல் உருப்பு மலம் மாசு உபமலம்
உள்ளின்மாசு ஆம் வழும்பே வழுக்கு ஆம் பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே

#23
** மயில், மயிலின்குரல், மயிலின்சிகை, மயிலிறகின் அடிமுள்
** மயிற்சிறகு, அன்னம்
சிகி பிணிமுகம் தோகை ஞமலி ஏகாரம் சிகாவளம் மயூரம் நவிரம்
சிகண்டி கேகயம் மஞ்ஞை உகரம் கலாபம் மயில் செப்பு பன்மூன்று ஆகும்
அகவலே ஏங்கலுடன் ஆவல் இ மூன்றுமே அ மயில்குரலின் பெயர்
அனந்தரம் மயூரம் விரிசிகை ஆகும் இறகு அதனின் அடிமுள் முருந்து எனும் பேர்
தொகு கலாபம் கூழை சந்திராங்கம் தூவி தோகை சரணம் சிகண்டம்
தொங்கலே கூந்தல் இறகு ஒருபதும் பீலி ஆம் தூவியே சிறகின் பெயர்
மிகுதிசேர் எகினம் ஓதிமம் மராளத்தினொடு மிக்க செங்கால் பிணிமுகம்
விகங்கம் வக்கிராங்கமே நீருறை அஞ்சனம் ஓதிமம் வினவிடில் அன்னம் ஆமே

#24
** கருடன், கழுகு, பருந்து, காக்கை, அண்டங்காக்கை
** நீர்க்காக்கை, ஆந்தை
ககபதி பன்னகவயிரி உவணம் புள்ளரசன் இகல் காதிவரு தார்க்கியன் உடன்
கலுழன் வயினன் வயினதேயன் ஓர் எட்டுமே கருடன் உவணம் சகுந்தம்
திகழ் பவணை எருவை புண்டரம் ஐந்துமே கழுகு சீரிய தரிஞ்சமன் தன்
சேனமே பாரசிகை பாறு கங்கத்தொடு திருந்திய பருந்து நாற்பேர்
மகிழ் கொடி துரோணம் கரும்பிள்ளை புட்டகம் வாயசம் பலி அரிட்டம்
வாசி கரடம் காரி காகம் பன்னொன்றுமே வான் காக்கை காலோலமே
இகழ்வுஇல் அண்டங்காக்கை அற்கமொடு காரண்டம் இனிய நீர்க்காக்கை பொற்கண்
இருடி கூன் பிங்கலை சகோரம் கின்னரம் என இயம்பு பேர் ஆந்தை ஆமே

#25
** வஞ்சிறைப் பறவை, எண்காற் பறவை, சிம்புட் பறவை, கண்டபேரண்டம்
** சக்கரவாகம், கோட்டான், கூகை, அசுணப்புள்
வருடை வாருண்டகம் சிம்புள் அம்பரவாணம் வஞ்சிறைப்பறவையின் பேர்
மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம்
இருதலைப்புள் பெருங்குருகுடன் யானைஉண்குருகு என இயம்பும் மூன்றும்
எழிலான கண்டபேரண்டன் ஆம் நேமிப்புள் ஏற்ற கோகம் சகோரம்
பரவும் ஒரு மூன்றுமே சக்கரவாகப்புள் ஆம் பயில் குரால் குடிஞை கூகை
பண்புள்ள நிசாசரி எனக் குலவு நான்கும் பகர்ந்திடும் கோட்டான் பெயர்
தெரி பெரும்புள்ளோடு கவுசிகம் இரண்டுமே செப்பும் ஊமன் கூகை ஆம்
செவிப்புள் இசையறிபறவை கேகயப்புள் இவை சிறந்த அசுணப்புள் ஆமே

#26
** கரும்புறா, மாடப்புறா, புறாப்பொது, காடை, சிவல், கவுதாரி, காடன்
** பகண்டை, வானம்பாடி, தலையிலாக்குருவி, ஊர்க்குருவி
கரும்புறவின் நாமமே பாராவதத்தொடு கபோதம் மாடப்புறாப் பேர்
காளபதம் ஆம் களரவம் தூதுணத்தொடு கபோதம் புறாப்பொதுப் பேர்
திருந்து காடைப் பெயர் குறும்பூள் கவுஞ்சலம் சேர்ந்த பூல் இதல் கோரசம்
செய்ய சிவலின் பெயர் கவுதாரி நாமமே சிரவம் இதல் புல் மூன்றும் ஆம்
வரைந்த காடன் பெயர் கட்டி கண்டனும் ஆகும் மண்ணிய பகண்டை சில்லை
வளர் சாத்தம் கலிங்கம் கம்புள் மூன்று பெயர் வாய்த்த வானம்பாடி ஆம்
பொருந்திய மழைக்குயில் தலையிலாக்குருவி ஆம் போற்று சண்டம் கலிங்கம்
புலிங்கம் குலிங்கம் சடகம் ஐந்து பெயருமே புகலும் ஊர்க்குருவி ஆமே

#27
** சகோரம், செம்போத்து, குயில், நாகணவாய்ப்புள்
** கிளி, கருங்கிளி, கரிக்குருவி, வலியன்
குக்கில் செம்போத்து சகோரமும் அதன் பெயர் கோகிலம் காளகண்டம்
கோரகை பிகத்தினொடு பரபுட்டம் ஐந்துமே கோதுஇலாக் குயிலின் பெயர்
தக்க நாகணவாய்ப்புள்ளே பூவை சாரிகை சாற்றிய இரண்டு பெயர் ஆம்
தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும்
மிக்க கிளியின் பெயர் வந்திகையும் ஆம் விளம்பு கீரம் கிள்ளையே
மேவிய கருங்கிளி காரி கண்டங்காரி வீறு கயவாய் கஞ்சனம்
கக்குவன் சுழன் வயான் ஏழும் கரிக்குருவி உலவு பாரத்துவாசன்
உயர் கிகினி கஞ்சனம் கஞ்சரீடம் வயவன் ஓங்கு வலியான் ஆகுமே

#28
** கோழி, சேவல், கானங்கோழி, சம்பங்கோழி, சாதகப்புள்
** பொய்யாப்புள், சிச்சிலி நிலாமுகி, வெளவால், சிள்வீடு
ஆண்டலைப்புள் குருகு வாரணம் காலாயுதம் சவுண்டம் குக்குடம்
அழகினொடு சேவல் இருநான்குமே கோழி இதன் ஆண் சேவல் சாவல் ஆகும்
நீண்ட காதம்பம் நிலங்கு பூழ் இரு பெயர் நிகழ்த்து கானங்கோழி ஆம்
நிகர்இலாக் கம்புள் சம்பங்கோழி நாமமே நெடிய சாரங்கம் குகம்
பூண்ட பெயர் சாதகப்புள் சலாங்கு என்னப் பொய்யாப்புள் ஆம் தித்திரி
பொன்வாய்ப்புள் கவுதம் விச்சுளி சிச்சிலிப் பெயர் போத்தையொடு சாரம் இரு பெயர்
தூண்டிய நிலாமுகி ஆலாலம் அஞ்சலி துரிஞ்சிலொடு வாவல் வெளவால்
சொல் சிதடி சிமிலி சில்லிகை சில்லை நான்குமே சிறத்த சிள்வீடு ஆகுமே

#29
** ஆண்முதலை, நீர்நாய், நண்டு, ஆண்நண்டு,
** தவளை, சங்கு, வலம்புரிச்சங்கு, சலஞ்சலம், நத்தை
கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம்
கற்கடகம் நள்ளி நொண்டு அலவன் நண்டு எட்டும் ஆம் களவன் அலவன் அவற்றுள் ஆண்
சரிசவம் தேரை மண்டுகம் மரை நுணலை அரி சாற்றும் நீகம் தவளையே
தப்பாத நுண்மணலில் மூழ்கி மறையும் தவளை தளர்வுஇலா நந்தியுடனே
சுரிமுகம் கம்பு பணிலம் கோடு வாரணம் சுத்தி வளை நாகு வண்டு
சொல்லிய இடம்புரி சங்கு பத்து ஆகும் துலங்கிய வலம்புரிச் சங்கு
உரிய கொக்கரை ஆம் சலஞ்சலம் சங்கினில் உயர்ச்சி ஆம் கருது நந்து நாகு
ஒண் சுரிமுகங்கள் என வரும் மூன்று பெயருமே ஊர்கின்ற நத்தை ஆமே

#30
** கிளிஞ்சல், முத்தின்கிளிஞ்சல், இடம்புரி, வலம்புரி,
** சலஞ்சலம், பாஞ்சசன்னியம், புரவிக்கரு, கரு, விலங்கின்பொது
இறல் எருந்து ஏரல் ஒரு மூன்றும் கிளிஞ்சில் ஆம் இப்பியே சிப்பி சுத்தி
என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம்
சூழுற வீற்றிருக்கன்றதே இடம்புரி இடம்புரி ஓர் ஆயிரம் நெருங்கி
உறைவது வலம்புரி வலம்புரி ஓர் ஆயிரத்து உள்ளது சலஞ்சலம்தான்
பெறு சலஞ்சலம் ஆயிரத்தினை சூழ்ந்திடப் பெற்றதே பாஞ்சசன்னியம்
பெருகு சவலே புரவியின் கரு பகிரண்ணல் பேசு சினை மற்று அக் கரு
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும்
திரள் விலங்கின்பொதுப் பெயர் என்று கற்றோர் சிறப்புடன் இயம்பினாரே
** மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி முற்றும்

@4 நான்காவது மரப் பெயர்த் தொகுதி


#1
** கரும்பு, வாழை, வாழைத்தண்டு, கமுகு, பாக்கு,
** கூந்தற்கமுகு, பலா, ஈரப்பலா, தென்னை, பன்னாடை
கன்னல் கழை இக்குடன் வேழம் ஒரு நான்கும் கரும்பு கதலியொடு அரம்பை
காட்டு பெயர் வாழை அப்பண வாழையது தண்டு கந்தி பூகம் சருந்தம்
பன்னரும் பூகதம் பாகதம் பாக்கம் பசும் கமுகு இருமூன்று பேர்
பாகு கோலம் துவர்க்காய் மூன்று பெயருமே பாக்கு அடைக்காயும் ஆகும்
மன்னு கூந்தற்கமுகு தாலம் ஆலம் பனசம் வருக்கை பாகல் பலவு இவை
வன் பலாவின் பெயர் ஈரப்பலாவே வளங்கொள் ஆசினி ஆகும்
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம்
திகழ் சூழி நாரி நெய்யரி மூன்று பெயருமே சேந்த பன்னாடை ஆமே

#2
** மாமரம், புளிமா, தேமா, மாவடு, மாதளை
** தாதுமாதளை, நாரத்தை, எலுமிச்சை, நெல்லி
மாதி சூதம் கொக்கு மாழை சைகாரமுடன் மாந்தி ஆம்பரம் ஏழுமே
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமாப் பெயர் தேமாப் பெயர்
சூதமொடு சேதாரம் ஆமிரமும் ஆகும் துலங்கு வடியுடனே வகிர்
சொல்லும் மாவின் வடு கழுமுள் மாதளை மாதுளங்கம் மாதுளம் இரண்டாம்
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும்
தழைத்திடும் நரந்தம் நாரந்தமொடு நாரமே சாற்று நாரத்தைப் பெயர்
மோது எலும்பிச்சை சம்பீரம் சதாபலம் முருக்கு அருணமோடு இலஞ்சம்
முதிர் சம்பம் இகுசமுடன் எழுபெயர் ஆம் நெல்லி மொழியில் ஆமலகம் ஆமே

#3
** கற்பகம் – ஐந்தரு, கற்பகத் தருவிற் படர்கொடி,
** அகில், சந்தனம், குங்குமம், மகிழ், பாதிரி
சந்தானம் அரிசந்தனம் பாரிசாதம் மந்தாரமொடு கற்பகம் எனும்
தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அக் கற்பகப் பேர்
கொந்து ஏறு கற்பகத்து உலவி வளரும் கொடி கோதுஇலா காமவல்லி
குலவு துடி காகதுண்டம் பூளில் கருவொடு கூறும் ஒரு நான்கு அகில் பெயர்
சந்து ஆரம் மலையசம் சந்திரதிலகம் சாந்து சாந்தம் படீரம் ஏழும்
சந்தனமரப் பெயர் மரவம் துருக்கமே சார்ந்த குங்குமமரப் பேர்
அந்த வகிளத்துடன் இலஞ்சி கேசரம் மூன்றும் ஆகும் மகிழின் பெயர்
அணிகொள் புன்காலி பாடலம் ஓர் இரண்டு பெயர் ஆந்த பாதிரி ஆகுமே

#4
** நாணல், பிரம்பு, திரள் கோரை, வாட்கோரை, விளல்புல்,
** வெள்ளரி, கக்கரி, ஊமத்தை, சிறுபூளை, வழுதிலை, நீர்முள்ளி
சரவணம் காசை சரம் அன்றி சிவேதையும் சாற்றரிய நாணலின் பெயர்
சாதி வேத்திரமுடன் சூரல் இம்மூன்றும் தழைத்திடும் பிரம்பின் பெயர்
எருவை பஞ்சாய் திரட்புல்லுடன் சாயாப்புல் என வரும் கோரைப் பெயர்
ஈட்டிய செருந்தி வாட்கோரையின் பெயர் விரணம் என்பது விழல்புலின் பேர்
உருவாருகம் வெள்ளரிப் பெயர் வாலுங்கி ஒன்றுமே கக்கரிப் பேர்
உன்மத்து உமத்தை மதமத்தையே ஊமத்தை உழிஞை சிறுபூளைப் பெயர்
மருகத்தி வங்கம் வழுதுணை வழுதிலைப் பெயர் பேசில் வங்கணமும் ஆகும்
பெற்றி உள முண்டகம் கண்டல் நீர்முள்ளியின் பெயர் விரிநீலியும் ஆமே

#5
** தாழை, வஞ்சி, ஏலம், புன்கு, நொச்சி, பராய்மரம்,
** வெட்பாலை, நாவல், குழிநாவல்
மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை
மன்னு கத்திகை தாழையின் பெயர் வானிரம் வஞ்சுளம் சேனவஞ்சி
துடி ஆஞ்சி ஏலம் இரு பெயர் ஆலம் தந்தம் துலங்கு காஞ்சனம் இலஞ்சி
சொல்லிய தகாந்தம் ஓர் ஐந்து பெயர் புன்கு இந்திர சுரியமொடு சிந்துவாரம்
நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே
நீண்ட பசு நா மூன்றுமே பராயின் பெயர் நெருங்கு கிரிமல்லிகையுடன்
குடசம் வெட்பாலையின் பெயர் சம்பு எனும் பெயர் கொண்டதே நாவல் அன்றிக்
குழிநாவலின் பெயர் சாதேவம் என்னக் குறித்தனர் தமிழ்ப்புலவரே

#6
** ஞாழல், குருக்கத்தி, சதுரக்கள்ளி, செம்பரத்தை, ஒட்டை – ஓடை
** கஞ்சா, வெட்சி, நறுவிலி, மகரவாழை, மெளவல்
நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன்
நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம்
எறியும் வச்சிரம் வச்சிராங்கமொடு கண்டீர்வம் என்ப சதுரக்கள்ளி பேர்
இயம்பு மந்தாரமே செம்பரத்தைப் பெயர் எண்ணிய உலவை ஒட்டை
வெறிகொள் கஞ்சம் குல்லை கஞ்சா இரண்டு பெயர் வினவிடும் செச்சை குல்லை
மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும்
நறுவிலிப் பெயர் மருகு மகரவாழைப் பெயர் நலமுடைய மெளவல் குளவி
நாட்டிய இரண்டுமே மெளவல் மல்லிகைக்கு உரிய நாமம் என்று ஓதினாரே

#7
** சுண்டில், வறட்சுண்டில், துளசி, தும்பை, பிரண்டை, சிந்தி, கழற்சிக்கொடி
** கழற்சிக்காய், கள்ளி, கற்றாழை, காஞ்சொறி, பாலை, கருவிளம், காக்கணம்
சுச்சிலே சுண்டிலின் பெயர் வறட்சுண்டிலே சொல்லில் சமங்கை ஆகும்
துழாய் வனம் குல்லை துளபம் துளசி நாற்பெயர் துரோணமே தும்பைப் பெயர்
வச்சிரவல்லியினொடு கிரிட்டி இரண்டுமே வைக்கும் பிரண்டைப் பெயர்
வந்திகை சிலந்தி சீவனி அமுதவல்லியும் மதித்திடும் சீந்திப் பெயர்
கச்சூரமே கழல் பெயர் கழற்காயே களங்கு முழல் கழலும் ஆகும்
கள்ளியே அரலையொடு குமரி கற்றாழை ஆம் கண்டூரி காஞ்சொறிப் பேர்
நச்சிய சீவந்தி சீவனி பறலி பட்டிகை நான்குமே பாலைப் பெயர்
நண்ணு கருவிளம் உய்கை கன்னி காக்கணம் என நவின்றனர் தமிழ்ப்புலவரே

#8
** கருங்காலி, செங்கருங்காலி, காயா, குரா, துரிஞ்சில்,
** ஆச்சா, ஆயில், அழிஞ்சில், இலந்தை, இலந்தைப்பழம்
கதிரம் என்பது கருங்காலி ஆம் செங்கருங்காலி சிறுமாரோட்டம் ஆம்
காசை அஞ்சனி பூவை அல்லி புன்காலியே காயாவின் நாமம் ஆகும்
முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமரப் பேர்
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர்
அதிரா மராமரம் சாலமா ஆ சுள்ளி ஆச்சாமரத்தின் பெயர்
ஆயிலே ஆயிலின் பெயர் செம்மரத்துடன் அங்கோலமே அழிஞ்சில்
வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை
மற்று அதன் கனி கோலமொடு கொண்டை எனவே வகுத்தனர் தமிழ்ப்புலவரே

#9
** ஆல், அரசு, மரலி – இத்தி, பனை, இளம்பனை, இலுப்பை, எட்டி
வடமரம் தொன்மரம் பழுமரம் காய்மரம் வளர் கோளி மறி ஆலம் ஆல்
மரப்பெயர் நியக்குரோதம் அத்துடன் எட்டாம் மராமரம் போதி கணவம்
அடர் குஞ்சராசனம் திருமரம் சுவலை பணை அச்சுவதம் பிப்பிலம்
அடுத்த ஒன்பதும் அரசின் நாமம்ஆம் சுவைகோலி அறை இரந்தரி இரத்தியொடு
மறலி நான்கு பெயர் தாளி தாலம் பெண்ணே உற்ற நீலம் கருந்தாளொடு
புற்பதி போந்தை பனை நாலிரண்டு பேர் உரை இளம்பனை போந்தை ஆம்
நெடுமை சேர் அட்டி குலிகம் அத்துடன் மதூகமே நிலைபெறும் இலுப்பைப் பெயர்
நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே

#10
** அத்தி, கோங்கு, கடம்பு, வேங்கை, கடுக்காய்,
** கொன்றை, வன்னி, அசோகு
உதும்பரம் கோளி அதம் அதவு அத்தி நான்கு பெயர் உன்னரிய துருமோற்பலம்
உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம்
கதம்பம் விசாலம் இன்புளி இந்துமாரமொடு காட்டு பிரியகம் ஓர் ஏழும்
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும்
இதம்பெறு வேங்கை அரிதகி பத்தியம் கடு எனப்படும் கடுமரப் பேர்
இதழி தாமம் கடுக்கையுடன் மதலையும் இயம்பரிய கொன்றையின் பேர் :
விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர்
மிகு செயலை பிண்டி காகோளி அசோகு என விளம்பிடும் பெயர் ஆகுமே

#11
** மூங்கில், குமிழ், வில்வம், விளா, வேம்பு, மருது
காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல்
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி
ஆம்பல் கிரி பாசு வெதிர் கிளை விண்டு நெடி ஓங்கல் அரி சபம் பாண்டில் வேழம்
அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம்
கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே
குறிக்கும் வில்வப் பெயர் கவித்தம் விளவொடு வெள்ளில் கூறிய விளாவின் பெயர்
வேம்பு பிசுமந்தம் சருப்பதோபத்திரம் விளம்பிய மருட்டினி இம்பம்
மேவும் மாலகம் ஐந்து பெயர் அருச்சுனம் மருது மிக்க பூதவம் ஆகுமே

#12
** தருப்பை, வெற்றிலை, வெற்றிலைக்கொடி, சேம்பு,
** கீரை, சிறுகீரை, பாகல், சுரை, பீர்க்கு, பெரும்பீர்க்கு
குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பைப் பெயர்
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலைப் பேர்
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அவ் இலைக்கொடிப் பேர்
ஏற்ற சானகி சகுடமே சேம்பின் அபிதானம் இனிய சானகி கீரை ஆம்
பசும் சிறுகீரை சாகம் சில்லி சாகினி பகர் மேகநாதனும் பேர்
பாகலின் பெயர் காரவல்லியொடு கூலம் பயின்றிடும் சுரையின் பெயர்
ஒசிந்திடும் தும்பி அலாபமுடன் மல்லை மூன்று உற்ற பீர்ங்கோலமே
ஓது பீர்க்கின் பெயர் படலிகை பெரும்பீர்க்கு உயர்ந்த பாடலியும் ஆமே

#13
** மல்லிகை, முல்லை, சிறுசண்பகம், இருவாட்சி, பிச்சி,
** அலரி, வெட்டுவேர், விளாமிச்சம்வேர்
மாலிகை புருண்டி மாலதி மெளவல் வீசு தலி மல்லிகை அணங்கும் ஆகும்
மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதி என வழங்கு பெயர் முல்லை ஆமே
கோலம் ஆர் சாதி மாலதி இரணம் ஆகும் குறித்த சிறுசண்பகப் பேர்
குலவு மாலதி மெளவல் மயிலையொடு அனங்கமே கூறும் இருவாட்சிப் பேர்
மேல் எழும் கருமுகை பித்திகை இரண்டும் விளம்ப அரிய பிச்சிப் பெயர்
மேவு கவிரம் கணவீரம் அத்துடன் கரவீரம் இலகும் அலரி அயமும் ஆகும்
மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர்
முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே

#14
** கருங்குவளை, செங்கழுநீர், செவ்வல்லி, வெள்ளல்லி, குமுதம்
** அல்லியின் பொதுப் பெயர், கொடிவள்ளை, நீர்க்குளிரி
பைங்குவளை காவி நீலோற்பலம் குவலயம் பானலொடு இந்தீவரம்
பண்புடைய நீலம் ஓர் ஏழும் கருங்குவளை பரவு கல்லாரம் அத்துடன்
செங்குவளை உற்பலம் அரத்தம் ஒரு நான்கும் சிறந்த செங்கழுநீர் நறும்
சேதாம்பல் கோபம் செவ்வாம்பல் செங்குமுதம் மொழி திகழ் அரக்காம்பல் ஐந்தும்
தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும்
தம் குமுதம் ஆம் குமுதம் ஆம்பல் கயிரவம் ஆம் தயங்கு அல்லியின் பொதுப்பேர்
பொங்கு குவலயம் நெய்தல் சமிதமும் அதன் பெயர் போற்று கொடிவள்ளையின் பேர்
புகலும் நாளிகம் ஆகும் நீர்க்குளிரியின் பெயர் பொருந்து கல்லாரம் ஆமே

#15
** கிழங்கு, வேர், முளை, குருத்து, வெண்குருத்து
** தளிர், மரக்கன்று, இலை
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர்
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால்
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து
பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும்
நன் மரக்கன்று பன்னம் தகடு தண்ணடை நலம்கொள் பாசடை தமாலம்
ஓலை சதனம் சதம் பத்திரம் தழை சாகமொடு பலாசம் குழை அடை
உயர் தலம் கிசலையம் பதினாறு பெயரும் இலை உலவையும் உரைக்கலாமே

#16
** அரும்பு, பூ, பூவிதழ், பூந்தேன், அகவிதழ்,
** புறவிதழ், பூங்கொத்து, பூந்தாது
முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம்
முகிழ் நனை சாலகம் சாலிகை பதினைந்தும் மொக்குளும் அரும்பின் பெயர்
தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர்
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர்
இகழ்வரிய மடலும் ஏடும் தோடுமே பூவிதழ் பெயர் மகரந்தமே
இனிய பூந்தேன் பெயர் அல்லி அகஇதழ் ஆகும் இசை புல்லி புறஇதழ் பேர்
புகலும் மஞ்சரி கொந்து கொத்து துடர்ச்சி துணர் பூங்கொத்தின் நாமம் ஆகும்
புகல் கொங்கு கோசரம் கேசரம் சீதரம் இவை பூந்தாதின் நாமம் ஆமே

#17
** தாதிற்றூள், பழம்பூ, தொடர்ப்பூ, விரிந்தபூ, வாகைப்பூ
** முப்பூ, மலர்தல், காய், பழம், தோல், விதை
தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர்
கோதுஇல் அகமலராம் விரிந்தபூ வாகை ஆம் கொடை பயில் வெற்றி உள பூ
கோட்டுப்பூ நீர்ப்பூ கொடிப்பூ வருக்கம் ஆம் கூறும் முப்பூவின் பெயர்
நீதியுடன் விள்ளல் அலர்தல் விரிதல் வெடிதல் நெகிழ்தல் ஊதல் புலர்தல்
நீள் பூ மலர்ச்சியின் பெயர் ஆம் வடு பிஞ்சு நிகழ் பசுங்காய் தீவுளி
தீதுஇல் கனி பாலை பலம் எனவாம் பழப் பெயர் சிதள் என்ப தோலின் பெயர்
சேர்ந்த பரல் காள் கொட்டை விதை வீசம் என்னத் தெரிந்த பெயர் வித்து ஆகுமே

#18
** தாமரை, தாமரை இதழ், தாமரைக்காய்,
** தாமரைக்கொட்டை, சுருள்
புண்டரிகம் நளினம் சரோசம் அரவிந்தம் அம்போருகம் கோகனகம்
அம்புயம் முளரி மாலுந்தி இண்டை திருமாதகம் பூபங்கயம் திருமலர்
வண்டுழு சரோருகம் கஞ்சம் வனசம் கமலம் வாரிசம் பங்கேருகம்
மணம் உலவு சலசம் குசேசயம் சதபத்திரம் வளர் பற்மமோடு பதுமம்
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு
மொழி இராசீவம் இரு பெயர் அதன் இதழ் பெயர் முதிர்காய் வராடகம் பெயர்
விண்ட பூ உள் கொட்டை கன்னிகை பொகுட்டு ஆம் விரித்திடும் சுருளின் பெயர்
விசுவுடன் வளைவு ஆம் தடம் தாமரைக்கு என விளம்பினர் தமிழ்ப்புலவரே

#19
** துவரை, அவரை, கொள், காராமணி, உளுந்து, கடலை, முதிரை, கம்பு,
** சோளம், செந்தினை, பசுந்தினை, கோதுமை, வரகு
ஆடகி எனும் பெயர் துவரை சிக்கடி சிம்மை அவரையின் பெயர் உலத்தம்
ஆன கொள்ளின் பெயர் இதை கூலம் இவை காராமணி உளுந்தின் பெயர்
மாடம் மஞ்சூரம் ஆம் கடலை முற்கம் பயறு மற்று இவை எல்லாம் முதிரை ஆம்
வளர் கவலை செந்தினை புல்லுடன் மூன்றுமே மாசிலா கம்பின் பெயர்
தேடு சோளப் பெயர் சொன்னலும் இருங்கும் ஆம் தினை ஏனல் செந்தினைப் பேர்
செப்பிய பசுந்தினையும் ஏனலாம் இறடியும் சேந்த கங்கும் கறங்கும்
கூடிய கருந்தினைப் பெயர் சாமை என்பதும் கூறில் அதன் நாமம் ஆமே
கோதும்பை கோதி ஆம் தோரை ஆம் ராகியுடன் கோத்திரம் வரகு ஆகுமே

#20
** எள், அதன் காய், இளம்எள், பருத்தி, ஆமணக்கு, அரிசி, தவிடு, பதர், வேயரிசி
** பயிர், கதிர், இளங்கதிர், இளஞ்சூல், நெற்பயிர், செந்நெல், மலைநெல், குளநெல்
எண்ணும் நூவும் திலமும் எள்ளினது பெயர் கவ்வை எள் காயின் நாமம் அன்றி
இளம்எள்ளின் பெயர் குளிகை பன்னல் கார்ப்பாசமே எழில்கூர் பருத்தி சித்திரம்
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம்
நவில் அரிசி நாமம் அந்தரி தவிடு பதடி பதர் நாமம் வேயரிசி தோரை
மண்ணில் விளை பைங்கூழ் பசும்புல் இரு பெயருமே வன் பயிரின் நாமம் கதிர்
மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம்
வண்ண வரி சாலி யவை சொல் அலரும் நெற்பயிர் வன் சாலி விரிகி செந்நெல்
மலைநெல் ஐவனம் ஆகும் மிக்க குளநெற்பயிர் மதித்த நீர்வாரம் ஆமே

#21
** மாலை, பிணையல், வாசிகை, நுதலணிமாலை, வாகைமாலை
தொடலை கத்திகை பிணையல் அணியல் வாசிகை தெரியல் சுக்கை மஞ்சரி அலங்கல்
சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம்
படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர்
பகுத்திடில் பிணையல் பின்னியமாலை சிகழிகை படலை கூர் ஒரு மூன்றுமே
இடும் வாசிகைப் பெயர் இலம்பகம் துடலை உடனே கண்ணி சூட்டு நான்கும்
இலகு நுதலணிமாலை கோத்தமலர் தானும் ஆம் எழில் பெறும் கன்னமீதில்
அடையும் அப் பூப் பெயர் கன்னபுரம் ஆம் கொடையில் அடு படையில் மிக்க குடியில்
ஆய்ந்திடும் கல்வி கேள்வியில் வெற்றிகொடு மவுலி அணிமாலை வாகை ஆமே
** நான்காவது மரப் பெயர்த்தொகுதி முற்றும்

@5 ஐந்தாவது இடப்பெயர்த் தொகுதி


#1
** பூமி, உலகின் பொதுப் பெயர்
அவனி காசினி உலகு மேதினி சகம் பார் அளக்கர் சக்கரம் நீருடை
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம்
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி
பவனம் வசுமதி வசுந்தரை வசுதை நாடு அகம் பாத்திமம் தரை கோத்திரை
பாரி மண் மகி இம்பர் கூ அகலுள் பிரிதிவை பரிந்த கோ சாந்தை கண்டம்
குவலையம் நிலம் புலம் திரை பூமியின் பெயர் குறிக்கில் ஒன்று ஒழி அறுபதாம்
கோதுஇல் உலகின் பொதுப்பெயர் புவனம் நாடு பொழில் குளிர் தலம் புடவி ஆமே

#2
** மலை
பூதரம் சயிலம் சிலம்பு சிமையம் சிகரி பொங்கர் அரி கல் இறும்பு
பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம்
வேதண்டம் நாகம் தராதரம் சையம் விலங்கல் ஓங்கல் அடுக்கல்
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல்
மானிறை பருப்பதம் நகம் பதலை பர்வதம் வளர் கிரி குறும்பு கான்
ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி
ஓதி உள அன்பதிற்றொன்பதும் மலைப்பெயர் உணர்கின்ற உருப்பு ஆகுமே

#3
** நாடு, உறையூர்ம் மதுரைம் கருர், காஞ்சி, அவந்தி, காசி, கடாரம்
** சிங்களம், மிதிலை, அயோத்தி, காவிரிப்பூம்பட்டினம்
பாடி தண்ணடை உலகு இராச்சியம் பொழில் சம்புதம் கண்டம் ஆசு கோட்டம்
பைதிரம் சும்மை நீவரம் ஏணி மண்டலம் பகர் ஒலியல் அழுவம் அகலுள்
கூடு தேயம் அத்துடன் பதினெட்டு நாமமும் கூறரிய நாட்டின் பெயர்
கோழி உறையூர் கூடல் மதுரை கருவூர் வஞ்சி குலவிடும் கச்சி காஞ்சி
நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி
நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை
நாடு கோசலை கோலம் விஞ்சு சாகேதமொடு நவில் அனுதையே அயோத்தி
நல் காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினத்து உரிய நாமம் ஆமே

#4
** ஊர்ப்பொது, சிற்றூர், மலை செறிந்த ஊர்
பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை
பூண்டி தண்ணடை மடப்பம் பேடு பூரியம் புரி வேலி அகரம் நகரம்
பாக்கம் குரிச்சி கோட்டம் கருவடம் சேர்வு பட்டினம் சும்மை வாழ்க்கை
பாழி சம்வாகம் கிராமம் குறும்பு நகர் பள்ளி வைப்பு உறையுள் கோட்டம்
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம்
அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே
பார்க்கில் ஒன்பதும் ஊர்ப்பொதுப் பெயர் இவற்றினுள் பள்ளியே பட்டி நொச்சி
பயின்ற சிற்றூர்ப் பெயர் மலை செறிந்திடும் ஊர் பகர்ந்திடில் கேடகம் ஆமே

#5
** மலையுடன் யாறு சூழ்ந்த ஊர், மன்னர் வைகும் ஊர், முல்லை நிலத்து ஊர்
** நெய்தல் நிலத்து ஊர், குறிஞ்சி நிலத்து ஊர், பாலை நிலத்து ஊர்
** மருத நிலத்து ஊர்
மலையுடன் ஆறு சூழ் ஊர் கருவடம் வீதி மதில் கோபுரங்கள் மன்னர்
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல்
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர்
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம்
குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம்
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம்
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம்
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே

#6
** கடல், கடற்கடவுள்
பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம்
பாருடை சமுத்திரம் சக்கரம் சலநதி பயோதரம் வெள்ளம் நரலை
அரலை அலை ஆழி அரி அத்தி அம்பரம் அம்புராசி சலராசி உந்தி
அளக்கர் ஆர்கலி உததி வாருதி மகோததி அன்னவம் புணரி குரவை
வருணம் மணியாகரம் வாராகரம் சிந்து வரி உவா வீரை உப்பு
வாரி சாகரம் நேமி சலதி திரை ஓதம் கராலையம் மகராலையம்
விரிநீர் வேலாவலையம் ஆரல் பாராவாரம் மிகு கார்கோள் ஆறொன்பதும்
வியன் கடல் சலபதி முன்னீரரசன் சலநதி விரும்பு கேள்வன் வருணனே

#7
** கடற்றிரை, கடற்கரை, மலையாறு, முல்லைக் கான்யாறு, குமரி
** வைகை, வாணி, கங்கை, பொருனை, காவிரி, கவுதமை, கோதாவரி
ஓதமொடு புணரி சீகரம் வேலை நான்குமே ஒலி கடல் திரையின் பெயர்
உலவு பாராவாரம் வேலை இரண்டுமே ஓங்கிய கடற்கரைப் பேர்
காதிவரும் அருவியே மலையாற்றின் நாமம் கடிந்த கான்யாற்றின் நாமம்
கலுழியுடன் ஒலியலே உலவையே உயவை ஆம் கன்னியே குமரியின் பேர்
வேதவதியே வைகை ஆனியே வாணி ஆம் விமலையே கங்கையின் பேர்
மேவு பொருணைப் பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர்
கோதையே சவுதமை நதிக்கு உரிய நாமம் குலாவிய விருத்த கங்கை
கோதாவிரிக்கு உரிய நாமம் ஆம் செந்தமிழ்க் குருமுனி உரைத்த பெயரே

#8
** நல்லநீர், பன்னீர், வெந்நீர், ஊருணி, நீர்ச்சுழி, சேற்றின்குமிழி, நீர்க்குமிழி
** கருமணல், வெண்மணல், மணற்குன்று, நுண்மணல், நுரை, சேறு
நாரமே நானம் இவை நல்லநீரின் பெயர் நறுமலர்ச் சலமே பன்னீர்
நாமம் புழுங்குநீர் வெங்குரம்பம் புலவர் நாடு செங்கீரை வெந்நீர்
ஊர் உளார் உண்ணும் நீர் ஊருணி எனும் பெயர் உந்தியே சுரியை நீரின்
உள்ள சுழியின் பெயர் சேற்றினில் எழும் குமிழி ஒக்குமே கொப்புள் பொகுடு
நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி
நிகர்க்கும் அறல் கருமணல் வாலூகம் வெண்மணல் நிறை புளினமே மணற்குன்று
ஊரும் அதர் அயிர் எக்கர் அகிர் நான்கும் நுண்மணல் உரைத்த பேனம் கம்பலம்
ஓர் இரண்டு என்ப நுரை நொதி உளல் அருவருப்புறு சேற்றின் நாமம் ஆமே

#9
** மோக்கம் – மோட்சம், தெய்வலோகம், நரகலோகம்
சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி
சித்தி பஞ்சமகதி நிர்வாணம் பரகதி தெளியமும் அபவருக்கம்
நவிலரிய பதின்மூன்று பெயருமே மோக்கம் ஆம் நாகம் விசும்பு வானம்
நண்ணிய சுவந்தானம் அமருலகு பொன்னுலகு நாட்டம் துறக்கம் உம்பர்
உவணை புத்தேளுலகு வியனுலகு கற்பகம் அத்தொடு விமானம் சுவர்க்கம்
உயர்நிலம் மேலுலக பதினேழுமே தெய்வலோகம் ஆம் நரகலோகம்
பவனமொடு பாதலம் கீழுலகு ஆம் பிலம் பாதாளலோகம் அன்றிப்
பகரில் வீழுங்கதியும் ஆம் என்று மலையமுனி பண்புடன் இயம்பினாரே

#10
** தேவர்கோயில், அரண்மனை, அரசிருக்கை, அரசியிருக்கை
** புனைகலனிருக்கை, வீடு, சிற்றில்
சினகரம் கோட்டம் நிலையம் பாழி பள்ளி நகர் சிகரம் ஆலையம் மந்திரம்
செய்தியம் தளி எனக் கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர்
அனைய குலம் மாளிகை சாலை பவனம் கோயில் அரண்மனை நிலையம் மன்னர்
ஆலையப் பெயர் கந்தவாரம் அந்தப்புரம் அவர் மனைவி உறையும் இல்லம்
புனை கலன் இருக்கையின் பெயர் பண்டசாலை ஆம் புக்கில் பதி வசதி மாடம்
புரையுளே உறையுள் இல்லம் பாத்தி இல்லொடு பொருந்தும் மந்திரம் இடவகை
மனை அகம் சேர்வு பதினான்குமே வீடு ஆம் வயங்கிய சமத்தம் ஓமம்
மண்டபம் ஒன்றாம் குரம்பையொடு கூரை என வந்த பெயர் சிற்றில் ஆமே

#11
** திசை, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, நிலம், விச்சாதரர் உலகம்
திசை விசும்பு ஆசை அம்பரம் வம்பல் மாதிரம் திகை புலம் ககுபமுடனே
கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர்
இசையும் பிராசி ஐந்திரி புருவம் குணக்கு ஏற்ற கீழ்த்திசை கிழக்கு ஆம்
இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம்
வசைஇல் வாருணிம் குடக்கு மேக்கு பிச்சிமம் அத்தொடு பிரத்தியக்கம்
வகுத்த மேற்கு ஆம் உதக்கு உசதி உத்தரம் மன்னு பிங்கலம் வடக்கு ஆம்
அசையா திணை வேலி மா பூ நிலப்பெயர் ஆம் சேணியோடு செடியும்
அழிவுஇல் விச்சாதர உலகம் ஆம் என்றே அருந்தவன் இயம்பினானே

#12
** மதில், கோட்டைமதில், மதிலுறுப்பு – கொத்தளம்
வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை
வேணகை வரைப்பு தகைப்பு பிரகாரம் விளங்கும் எயில் ஓதை இஞ்சி
சாலம் அரண் ஆரல் சுற்று உவளகம் பந்தமொடு சக்கரமே அகப்பா
சாற்று சிறைகாப்பு என மதித்த மூவொன்பதும் சாரும் நீள் மதிலின் பெயர்
கோலம் ஆர் கோட்டை மதிலின் பெயர் பிரகாரம் ஆம் குறி நாஞ்சில் உறை ஞாயில்
கோசம் விதப்பு பதப்பாடு தோணி பொறி குறைபடா மதிலுறுப்பு
மேல் இசையும் நரலை எந்திரம் எனப் பன்னொன்றும் வீறுசேர் கொத்தளத்தின்
மேவு பெயர் ஆம் என்று பொதியப் பொறுப்பில் உறை வேதியன் இயம்பினானே

#13
** அழி, ஆழ்வாரி, கோபுரம், முனிவர், உறைவிடம், அரசரிருக்கை
** குதிர், புற்று, புற்றாஞ்சோறு, கல்விபயிலிடம்
பரிகம் கிடங்கு அகழி உடு ஓடை கேணி பாம்புரி அகப்பா சிக்கிரி
பகரும் அகழின் பெயர் உரை வாரி கற்பரப்பு அடுக்கம் உள் உயர்ந்த மேடை
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுரப் பேர்
செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும்
அருமுனிவர் உறைவிடம் பூரிமம் வேத்தவை அத்தாணி அரசர் அரண் நான்கு
அரசர்கள் இருப்பிடம் புகல் என்ப குதிர் ஆகும் அது அலால் வன்மீகமே
கருது புற்று ஆகும் அதன் சோறே குறும்பி ஆம் கைவலோர் நாவலோர்கள்
கல்வி பயிலும் களம் கழகம் எனும் நாமம் ஆரம் கல்லூரி என்றும் ஆமே

#14
** முகடு, வேயுள், வேயாமாடம், தாழ்வாரம், சுவர், முடுக்கு, முற்றம்
** அடுப்பு, மடைப்பள்ளி, அறச்சாலை, ஓதும்பள்ளி, வீட்டிறப்பு, பீடம்
விடங்கம் மஞ்சே முகடு வேயுளே வேய்தல் வேயாமாடமே மண்ணீடு
மிக்க சோபானம் ஆரோகணம் தாழ்வாரம் வீறு ஆன பித்திகை சுவர்
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான்
முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று
அடைந்த நான்கும் அடுப்பு ஆம் பாகசாலை அடுக்களை அட்டில் ஒரு மூன்றாம்
மடைப்பள்ளியின் பெயர் சாலையே அறச்சாலை ஆகும் விளம்பில்
இடம் கொளும் அறப்புறம் ஓதிடும் பள்ளி ஆம் இறை வளவி வீட்டு இறப்பின் பெயர்
ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே

#15
** ஆறு, திரை, ஆழ்நீர், நிறைநீர், நீந்துநீர், கலங்கிய நீர்
** உவர்நீர், வெள்ளநீர், ஓட்டநீர், தெளிவுநீர்
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை
சொல் உந்தி ஓணமே தடினி ஈராறும் தொகுத்த ஆற்றின் பொதுப்பேர்
அறல் சீகரம் தரங்கம் சுலோலம் வீரை அலை சிகரம் ஏழ் திரைப் பேர்
அழுவமே குன்று கெம்பீரம் கயம் அத்துடன் ஆழநீர் நான்கே பெயர்
நிறைநீர் வழாறொடு பிராறும் வாரியும் ஆகும் நீந்துநீர்ப் பெயர் ஆகதம்
நிகழ் ஆவிலம் கலுழியே கலங்கியநீர் நினைக்கில் உறை உவர் நீர்ப்பெயர்
பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர்
பேசு கோலம் கொழுந்து ஓட்டநீர் தெளிவுநீர் பெயர் சற்சலம் எனல் ஆகுமே

#16
** சேறு, பொல்லாத நிலம், ஊறல், செய்கரை
** நீர்த்துறை, புனற்கரை, ஆற்றிடைக்குறை
அள்ளல் குழை சேதகம் கொள்ளம் குழம்பு காலாழ் செதும்பு பங்கம்
அளறு தொய்யல் பூழி அசறு செய்யல் தொளி அன்றியும் அளக்கர் கும்பி
தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம்
சூம் அசும்பு அங்கணம் பொல்லாத நிலமும் ஆம் தோன்று அசும்பு உறவி அஃகி
கொள்ளும் ஊறல் பெயர் குலை சேதி இரண்டும் குரம்பு செய்கரைப் பெயர்
கூடும் துரைப் பெயர் புகார் அதோமுகம் அருவி கூடல் கயவாய் கழிமுகம்
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை
தன் பெயர் அரங்கம் துருத்தியோடு இலங்கை இவை தகும் ஆற்றிடைக்குறைக்கே

#17
** உயுத்தகளம், சுடுகாடு, வேடர்தெரு, அக்கசாலையர் தெரு
** மன்னவர் தெரு, ஆயர் தெரு
அடுகளம் விளாகம் பறந்தலை மொய் களரி ஆகவபூமியே படுகளம்
அமர்க்களம் செங்களம் பொருகளம் போர்க்களம் அலைத்திடும் செருக்களம் உடன்
கடிகரம் செம்பளம் பதினான்கு பெயருமே காட்டிய உயுத்தகளம் ஆம்
காளவனம் இடுகாடு வனம் மயானம் புறங்காடு பிதிர்வனம் எரிவனம்
சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர்
சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான்
வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு
வாடை ஆபீரம் சிரேணி செடியினுடன் வல்லியும் ஆயர்தெருவே

#18
** முச்சந்தி, நாற்சந்தி, சந்து, மச்சு, பலகணி, கோபுரவாசல்
** அதன் கதவிற் புகும் வழி, அதனிடைச்சார்ந்த திண்ணை
** அதன் வாயிற்படிச் சுருள்
அந்தி வரி கவலை அரி கோடகம் அத்தொடு சீருலகம் ஆறும் முச்சந்தி என்று
ஆகும் சிருங்காடகம் அத்தொடு சதுக்கமே ஆகும் நாற்சந்தியின் பேர்
சந்தும் சதுக்கம் ஆம் பாங்கு பரிவொடு கலவி தளம் மச்சின் அபிதானம் ஆம்
சாலேகம் வாதாயனம் குறுங்கண் சாலை சாளரம் சாலம் நூழை
வந்த காலதர் சாலகம் பலகணிப் பெயர் வாரியொடு கோட்டி இரு பேர்
மன்னு கோபுரவாயில் கதவினில் புகும் வழி நாமமே அதவு என்று ஆம்
அந்த வழியிடை சார்ந்த திண்ணை அளிந்தம் என்று ஆம் சிறப்புடைய வாயில்
வரும் படிச்சுருள் அகத்தினகம் ஆம் என்றே அறைந்தனர் தமிழ்ப்புலவரே

#19
** கண்துயிலிடம், விலங்கு துயிலிடம், உலைக்களம்,
** ஓமகுண்டம், உழுதொழில் வளைப்பு, உழவு, குடிசை, கூடு
சட்டகம் பாழி அரி உறையுள் கண்படை பள்ளி சயனம் கிடக்கை அமளி
தளிமமொடு குளை சேக்கை பாயல் பரியங்கம் அணை சையம் நீள் கட்சி ஆய்வே
பட்டம் என வந்த பத்தொன்பதும் கழறிடில் பரவு கண்துயில் இடப் பேர்
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று
ஓட்டிய இவ் ஒன்பதும் விலங்கு துயிலிடம் உறைவி ஒன்றும் உலைக்களப் பேர்
ஓமகுண்டம் தித்தி வேள்வி ஆகும் தொடுப்பு உழவர்தம் தொழில் வளைப்பு ஆம்
கட்டுறும் தொடவையே தொய்யலும் உழவு ஆகும் கலிந்த குடில் குடிசை ஆகும்
கட்சி பஞ்சரம் உறை குடம்பை குயிலாயமொடு கன கூண்டு கூடு ஆகுமே

#20
** இடம், பக்கம், நடு, முதல்
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல்
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல்
படி தேயம் உள்ளுறை வசதி பாடு அருகு அத்தம் அதவு தாபரம் வகை உளி
நிலை பதி நிசாதனம் மரு இல் ஐம்பத்திரண்டும் நிகழும் இடத்தின் பெயர்
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும்
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே

#21
** தோட்டம், சலதாரை, கூப்பிடு தூரம், காத-தூர ம்
** யோசனை – தூரம், திசை, கற்படை
தொடுப்பு ஆம் கோட்டம் கடம் படப்பையினுடன் துடவை தொய்யில் அடவை கூவம்
சொல்லும் இருநான்குமே தோட்டம் புராலொடு சுருங்கை சலதாரைப் பெயர்
கடவை நடவையின்னுடன் எல்லை குரோசமே காணரும் கூப்பிடின் பெயர்
காவதம் காதம் என்று ஓது பெயர் புகை எனக் கருதும் யோசனையின் பெயர்
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர்
இடம் இரு சுருங்கையே கற்படையின் அபிதானம் என்று மலையப்பொருப்பில்
இனிதுடன் வீற்றிருக்கின்ற முனி தமிழினான் இத்திறம் இயம்பினானே

#22
** ஈண்டு, ஆண்டு, இவண், உவண், ஏகாந்தம், யாங்கு, எவ்விடம், இருப்பிடம்
** ஒதுக்கிடம், வெளியிடம், புகுவிடம், மண்கலஞ்சுடுமிடம், அரங்கு, ஞாங்கர்
ஈண்டு என்பது இவ்விடம் ஆண்டு என்பது அவ்விடம் இம்பர் இவண் உம்பர் உவண் ஆம்
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர்
வேண்டிய பிறப்பிடம் உறைவிடம் ஆகரம் விளம்பும் இருப்பிடப் பேர்
மிகவே ஒதுக்கிடம் துச்சில் ஒருசிறை கோட்டம் வேற்றிடம் அயலிடப் பேர்
பூண்ட வெள்ளிடை விரியல் வயலுடன் மூன்றுமே போற்றும் வெளியிடப் பேர்
புக்கிடம் புகுமிடப் பேர் சுள்ளை சூளையே பெரு மண்கலம்சுடுமிடம்
தாண்டவம் புரியிடம் வட்டாடும் இடம் உடன் சமர் இடம் அரங்கு எனும் பேர்
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு எனச் சாற்றினர் தமிழ்ப்புலவரே

#23
** வாவி, எந்திரவாவி, கிணறு
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி
பண்ணை ஏல்வை ஓடை கோட்டகம் குண்டம் பயம்பு உவளகம் கிடங்கு
வட்டம் கயம் பலம் சலதரம் இலஞ்சி வலையம் படுகர் ஆவி நளினி
மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை
குட்டம் முப்பத்தாறும் வாவி இலவந்திகை கூறில் எந்திரவாவி ஆம்
கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர்
** ஐந்தாவது இடப்பெயர்த்தொகுதி முற்றும்

@6 ஆறாவது பொருட்பெயர்த் தொகுதி


#1
** பொன், பொற்காசு
மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம்
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை
ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை
அராகம் விருத்தி கூள் இரணியம் பிசி ஏமம் ஆடகம் அனந்தம் ஈழம்
தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல்
செந்தாது சாமிகரம் தொடுக்கம் சாமி திரவியம் காரம் உடனே
பேசு சாம்பூனதம் சாதரூபம் பூதி பீலி காணம் கலியாணம்
பெருகு பொன் நாமம் ஒன்று ஒழி அறுபது ஆம் பொன் பெருங்காசு காணம் ஆமே

#2
** பஞ்சலோகம், ஏழுலோகம், நவமணி, கடவுள்மணி, மாணிக்கம், மரகதம்
** வைரம், வைடூரியம், நீலம், முத்து, முத்தின்திரட்சி, பவளம்
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும்
போற்றி தரா உடன் கஞ்சம் இவை கூடியே புகலும் எழுவகை உலோகம் ஆம்
மன்னும் நவமணி கடவுள்மணி இவற்றின் பெயர் வரும் நிதி நிதானங்கள் ஆம்
மாமணி செம்மணி பதுமராகம் கவுத்துவம் வைத்த மாணிக்கப் பெயர்
உன்னரிய பச்சை அரி மரகதப்பெயர் வச்சிரம் ஓங்கு வயிரத்தின் பெயர்
ஓளி வாலவாயமே வயிடூரியப் பெயர் உற்ற மணி நீலப் பெயர்
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி
துப்பு அரத்தம் துவர் பிரவாளம் வித்துருமம் துகிர் பவளம் ஆறு பெயரே

#3
** தெய்வமணி, இருநிதி, சந்திரகாந்தம், சூரியகாந்தம்
** காந்தக்கல், காவிக்கல், பளிங்கு, மணி
சாற்றிய சலாகை அரதனம் அகன்மணிப் பெயர் சங்கநிதி சங்கின் வடிவு ஆம்
தரு பத்மநிதி தூய தாமரையின் வடிவம் இத்தன்மையாம் இருநிதிப் பேர்
தோற்றிய நிதானம் ஆம் சந்திரன் ஒளியில் தண்ணீர் சொரியும் மணி சந்திரகாந்தம்
சூரியன் ஒளியினில் தீ கால் சலாகையே சூரியகாந்தம் சிறந்த
வேற்று இரும்பினை வாங்கும் காந்தக்கல்லின் பெயர் விதித்த சும்பு ஆம் இயம்பும்
வீறு கரிகம் தாது செங்கல் காவிக்கல் ஆம் மிக்க படிகம் பருக்கை
ஏற்ற காழ் மூன்றும் பளிங்கினுக்கு உரிய பெயர் இலகு மணியின் பொதுப்பேர்
எழில் மனவு காசு வசு மாடு எனப் புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே

#4
** வெள்ளி, செம்பு, இரும்பு, எஃகு, வெண்கலம், தரா
** காரீயம் ஈயத்தின் பொது, பித்தளை
இரசதம் தாரம் வெண்தாது கவிகள் தபுதம் இரதனம் வெண்பொன் வெள்ளி
ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம்
கருது செம்பு ஆறு பெயர் அகி அயம் சொன்னல் கருந்தாது நீள் கரும்பொன்
கருங்கொல் பராசு இரும்பு எழு பெயர் சத்தி ஆம் காணரிய எஃகின் பெயர்
மருவரிய உறை கஞ்சம் வெண்கலம் இரண்டு பெயர் மதுகம் தராவின் பெயர்
வங்கமும் சீருளும் வெள்ளீயத்தின் பெயர் நாகமே வந்த காரியப் பெயர்
தெரிதரும் பத்திரம் சீசமே சீசு சிறந்த ஈயப்பொதுப் பேர்
செப்பின் மாயாபுரி ஆரகூடமே இரதி சேந்த பித்தளை ஆகுமே

#5
** சோறு, பாயசம், விண்ணோர் ஊண், குழம்பு, பொதிசோறு, கஞ்சி
ஓதனம் பொம்மல் போனகம் மிதவை அயினி துற்று உண்டி நிமிரல்
பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம்
புன்கம் அசனம் சரு துப்பு புழுக்கல் வல்சி
முப்பத்திரண்டும் துலங்கிடு சோற்றின் பெயர்
பாயசம் பாற்சோறு பதுமகம் விருள் பருக்கை
ஊணின் பெயர் பாகே குழம்பின் பெயர்
தோட்கோப்பு வழியூண் தரித்த பொதிசோற்றின் பெயர்
வாகு பீடம் காடி சாற்றரிய கஞ்சி ஆமே

#6
** கள்
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை
மட்டு வெறி சாதி பிரசம் தேப்பி தொண்டி தேம் மந்திரம் தணியல் அரியல்
படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி
பாவி அரி ஆசவம் சேறு களி அளி சுண்டி பாடலி சுலோகி ஆம்பல்
வெடி ஞாளி மாதவம் சாலி மட்டம் தமியம் வேரி மகாந்தம் மாரி
விளம்பி சிக்கம் பிசுணி யாளி கல்லியம் நேமி விகுணி மது காம அரிட்டம்
கொடுமறவி அங்கதம் காதகம் வாணிதம் கொங்கு அருப்பம் பிரேயம்
குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும்
** ஆறாவது பொருட்பெயர்த் தொகுதி முற்றும்

@7 ஏழாவது செயற்கைப் பெயர்த் தொகுதி


#1
** மணி முடி, முடிமாலை, முடியுறுப்பு, சுட்டி
** பட்டம், குண்டலம், கரதணி, பதக்கம்
சுடிகை சேகரம் மவுலி மகுடம் கிரீடம் துலங்கு பசு மடை கண்டிகை
சூடிகை வகுத்த ஒன்பதும் மணிமுடிப் பெயர் தொகுத்த சிரமாலையின் பேர்
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர்
வடிவுகூர் ஓடை பட்டம் குண்டலப் பெயர் வழங்குமே குழை மிஞ்சிகை
வன் கடிப்பிணை குணுக்கு கம்பியோடு அமி வல்லிகை குதம்பை தோடு என்று
உடைய பெயர் ஏழுமே காதணி உரத்தின் மிசை ஓங்கிய பதக்கப் பெயர்
உலவிய பெரும்பூண் மதாணி கண்டிகைமாலை உடன் ஆரம் நான்கும் ஆமே

#2
** வில், மாயோன்வில், ஈசன்வில், நாண், அம்பு
தடி சிந்துவாரம் சராசனம் கார்முகம் சாபம் துரோணம் சிலை
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே
நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன்
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர்
தொடை குணம் வடம் பூரி சிஞ்சினி நரம்பு நாண் சூழ் பூட்டு நாரி ஆவா
தொகு நாணின் நாமம் ஈரைந்து குதை விற்குதை தொடு சிலீமுகம் விசிமுகம்
கடிய சரம் வாளி வண்டு அத்திரம் சாயகம் கணை தோணி பாணமேவே
கதிரம் ஏ ஆசுகம் பகழி பல்லம் கோல் அக்கம் புங்கம் அம்பு ஆகுமே

#3
** கைவாள், சுவரகழ்கத்தி, மூக்கரிகத்தி, கணையம், ஈட்டி, சிறுசவளம்
** பெருஞ்சவளம், கழுமுள், கைவேல், இருப்புமுள், நாராசம், பீண்டிபாலம்
கண்டமே கைப்பிடி வாளினுக்கு உரிய பெயர் கன்னம் என்பது சுவர்அகழ்கத்தி
குளிர் இலை ஓர் இரண்டுமே மூக்குஅரிகத்தி எழுவொடு பரிகம்
கொண்ட பெயரே கணையம் விட்டேறு சொல்லரிய கூர்மைசேர் ஈட்டி பெயர்
குந்தம் கழுக்கடை கள் சிறிய சவளப் பெயர் குந்தம் உடனே தோமரம்
மண்டிய பெருஞ்சவளம் வல்லை அப்பெயர் கழுமுள் வைக்கும் கழுக்கடைப் பேர்
வளம் மேவு கப்பணம் தோமரம் இரண்டுமே மன்னு கைவேலின் பெயர்
கண்ட நல் தாறுவே இருப்புமுள் அன்றிச் சலாகை நாராசமும் பேர்
சாற்று பீலித்தண்டு பிண்டிபாலப் பெயர் தானென்றும் என்றும் ஆமே

#4
** சுழல்படை, வாள் ஆயுதப்பொது, படைஉறை
** கைவிடுபடை, கைவிடாப்படை, கூர்மை, நுனி
நெடிய சுழல்படை வட்டம் அரிய பாராவளை நிகழ்த்திய இரண்டே பெயர்
நீள் உவணி நவிர் கோணம் அரிகண்டமே கண்டகம் கத்தி நிகர்க்கும் அப்பேர்
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம்
படைக்கலம் சாதனம் முற்கரம் கொலைசெய்யப்படும் ஆயுதப்பொதுப் பெயர்
தடறு படையுறை கூடு புட்டில் ஒரு நான்குமே கருதும் ஆயுதஉறைப் பேர்
கைவிட்டபடை அத்திரம் பெயர் சத்திரம் கைவிடாப்படையின் பெயர்
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும்
வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனிப் பெயர் வனப்புடைய முனையும் ஆமே

#5
** புடவை, துகில்
தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை
தூரியம் புட்டகம் காளகம் காடகம் துகில் சம்படம் கப்படம்
கோசிகம் கோடிகம் சீரை அம்பரம் நீவி கூறை உடை ஆடை படாம்
குலாவிய உடுக்கை ஆசாரம் கலிங்கம் குறித்திடும் பஞ்சி பாரி
வாசம் வத்திரம் வட்டம் ஆறுகம் சேலை ஆவரணம் அக்காரம் உடனே
வாசனம் சாதனம் இலக்காரம் வகம் என வரும் புடவை ஆறேழ் பெயர்
பேசு பட்டு ஏடகம் வேதிகம் கத்திகை பெருகு ஒலியல் இடையல் விரியல்
பெருமைசேர் புங்கமொடு பங்கமும் துகில் என்பர் பெற்றி உள நூல் வல்லோரே

#6
** பட்டாடை, பட்டாடையின் விகற்பம், நல்லாடை, நற்பணித்தாசு
** சித்திரப்புடவை, மேற்போர்வை, முந்தானை, கொசகம், காசம், உத்தரிகம்
ஆகுமே அம்பரம் கோசிகம் பாளிதம் அறைந்த பட்டாடை முப்பேர்
அன்றியும் காம்பு நேத்திரம் எனும் இரண்டுமே அதின் விகற்பத்தின் பெயர்
நாகமொடு தூரிகம் கருள் பாரி சில்லிகை நயந்த நல்லாடை பெயர்
நற்பணி இடும் தூசு தேவாங்கம் என்று பெயர் நவில் சித்திரப்புடவையே
கோகமொடு தூசு அரிகம் பொத்தகம் பட்டிகை கொணர்ந்த சித்திர தூரிகம்
கூறும் மீக்கோள் உறை இரண்டும் மேல்போர்வை ஆம் கோதுஇல் முந்தானைப் பெயர்
தோகை ஆம் கோசகப் பெயர் நீவி கோசகம் சொல்லுமே காசப் பெயர்
சொலில் உத்தரிகம் உடன் உத்தாரசங்கம் ஏறீடு என்பர் சொற்புலவரே

#7
** கிழி, தலையணை, மெத்தை, முலைக்கச்சு, அதன் விடு தலைப்பு
** அத்தவாளம், சும்மாடு, கூடாரம், சட்டை
உரு அறிய எழுது படமே கிழி எனும் பெயர் உவதானமே தலையணைக்கு
உள்ள பெயர் தளிமம் அணை தவிசு குளையே மெத்தை ஓங்கும் வட்டுடை வம்பு வார்
வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம்
ஒரு மூன்றுமே விடுதலைப்பு ஆம் அத்தவாளம் வடகம் உலாசம்
தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர்
தயங்கிய படங்கு சீரைக்குடில் இரண்டுமே தக்க கூடாரம் ஆகும்
பொருவுஇல் கஞ்சுளிஅங்கி மெய்ப்பை குப்பாயம் வார் பொருவில் காஞ்சுளி கஞ்சுகம்
புனை வாரணம் மா சட்டை ஆம் மெத்தையும் புகலில் தன் நாமம் ஆமே

#8
** வயிரச்சங்கிலி பூணநூல், தோளணி – வாகுவலயம், மோதிரம்
** அரைஞாண், அரைப்பட்டிகை, கழல், சதங்கை, பாதகிண்கிணி, காலணிப்பொது
புனையும் வயிரச்சங்கிலிக்கு உரிய நாமம் புகன்றிடில் சங்கிலி அது ஆம்
பூணநூல் உபவீதம் ஆம் வாகுவலையம் புகழ்ந்த கேயூரம் உடனே
இனிமைசேர் அங்கதம் தோளணிப் பெயர் இலச்சினை ஆழி நேமி வித்தம்
ஏற்ற விரலணி ஐந்தும் மோதிரம் பகரில் இரதனம் என்பது அரைஞாண் பெயர்
மனவொடு அத்து எனும் அரைப்பட்டிகைப் பெயர் பொழியும் வன் கொடையில் வீரத்தினால்
மன்னும் ஆடவர் அணிந்திடுவதே கழல் ஆம் வயங்கு காலணி மணிவடம்
வினவிடில் சிறுமணி இரண்டும் சதங்கை ஆம் மிகு பாத கிண்கிணிப் பேர்
வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே

#9
** திரு – தெய்வவுத்தி, தலைப்பாளை, தலைக்கோலம், நுதலணி, கொப்பு
** தோடு, பொன்னோலை, செவிமலர், கொடி, மணிவடம், வளை
திருவினது பெயர் உத்தி ஆம் தொய்யகம் செப்பிய தலைப்பாளை ஆம்
திகழ் பிஞ்ஞகம் பிற தலைச்கோலம் நாமம் ஆம் சிறிய நுதலணியின் பெயர்
மருவு புல்லகம் உடன் இலம்பகம் சூட்டு வந்திகை நான்கும் ஆகும் இப்பால்
வாளி கொப்பின் பெயர் தாடங்கமே தோடு மாழை கொந்தளம் இரண்டும்
பெருகு பொன்னோலையின் பெயர் செவிமலர்ப் பெயர் பிறித்த கன்னாவதங்கம்
பெரும் சூட்டு வள்ளிகை இரண்டும் கொடிப் பெயர் பிறங்கு முலைவடப் பேர்
சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை
சவியும் ஆம் சரி குருகு கன்று சூடகம் வண்டு சங்கு தொடி வளை ஆகுமே

#10
** பிள்ளைக்கைவளை, கங்கணம், மேகலை, பதினான்குமணிக் கோவை
** எண்மணிக்கோவை, பதினாறுமணிக் கோவை, பதினெண்மணிக்கோவை
** முப்பத்திரண்டுமணிக் கோவை, சிலம்பு, பாதகடகம் – பாடகம், கைச்சரி, கால்சரி
** கிண்கிணிமாலை, ஆபரணத்தொங்கல்
காட்டு பீடிகைப் பெயர் பிள்ளைக்கைவளை கடகமொடு கடையம் ஒளிர் கண்டிகை
கங்கணத்தின் பெயர் மேகலைப் பெயர் காஞ்சி காள் கலாபம் பருமம் ஓர்
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும்
ஈரெட்டினும் கலாபம் பருமம் மூவாறு எண்ணான்கு விரிசிகை அது ஆம்
பூட்டு தழை ஞெகிழி பரிபுரம் அரவம் நூபுரம் புனை சிலம்பு அரியும் ஆகும்
பொரு பாதகடமே பாடகம் கால்கைமிசை பூண்ட சரியே பரியகம்
சூட்டு தாரும் குரலம் என்ப கண்கிணிமாலை சொல் சதங்கைக்கும் ஆம்
தொங்கல் மதலிகை உத்தி என்று முப்பெயருமே தொடர்புடைய தூக்கம் ஆமே

#11
** சரிமணிக்கோவை, கடைப்புணர்வு, கிம்புரி, கல்லழுத்து – குழிவட்டம்
** ஆபரணப்பொது, அணியிடும்கலன், பண்டாரம்
காணரும் சரிமணிக்கோவையின் பெயரே கலாபமொடு தோகை ஆகும்
கையில் உடன் பூட்டு மடை மூன்றுமே பூணின் கடைப்புணர்வின் அபிதானம் ஆம்
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரிப் பெயர் வயிரமும் புரக்கும்
பெருங்கல் அழுத்தும் குழிவட்டமே கேவணம் பெயர் வள்ளி பணி ஆரம் நாண்
பூண் அணி புலன் கலன் அணிகலம் பூடணம் போற்று கலனே பன்னொன்றும்
பொன்னினும் மணியினும் செய்யும் ஆபரணப்பொதுப் பேர் கடிப்பம் உடனே
சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை
செப்பு அணிஇடும்கலப் பெயர் பண்டாரம் ஆம் செறிந்த கோசம் தண்டமே
** ஏழாவது செயற்சைப் பெயர்த் தொகுதி முற்றும்

@8 எட்டாவது பண்பு பற்றிய பெயர்த்தொகுதி


#1
** வட்டம், திரட்சி, வளைவு
மல்லை தட்டு சக்கரம் சில்லி நேமி வலையம் திகிரி பாண்டில் கடகம்
மண்டிலம் பருதி கோளகை ஆழி கொம்மை வளையம் விருத்தம் பாலிகை
சொல்லும் வட்டப் பெயர் பதினேழு கணை கட்டி சோகம் பிழம்பு முத்தை
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம்
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம்
போற்றிய திரட்சி ஓர் இருபத்துமூன்று பெயர் புகலரிய வளையின் பெயர்
நல்ல தட்டு கோடல் வக்கிரம் கோணல் கூன் நண்ணிய வளாவல் வாங்கல்
நாட்டு வணர் கோட்டம் குலாவல் குடிலம் கோண்வி நல் பன்னிரெண்டும் ஆமே

#2
** நுண்மை, நிறைதல்
நுட்பம் இறை நுனி கயவு சன்னம் குணுங்கு அயிர் நுணுங்கு ஆய்தல் கூர்மை நொய்வு
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மைப் பெயர்
மொழி மதம் கன்னி பாரம் தெவுளல் பெருகல் முற்றிய கமம் கண்டம் மந்தம்
புட்கரம் கெழுமல் பூரணம் மலிதல் மல்கல் குணைதல் பொங்குதல் ஆர்தல் விம்மல்
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல்
நட்புள திளைத்தல் உயர் தும்பலே தொங்கலொடு நடவிய துவன்றல் மலிரல்
நாடில் இருபத்தேழும் நிறைதலின் பெயர் என்று நாட்டினர் தமிழ்ப்புலவரே

#3
** குறைதல், அளத்தல், பாதி, எல்லாம்
அருகல் ஊனம் குன்றல் எஞ்சல் ஈனம் சிங்கல் அவிதல் கயம் அஃகல் சிறுகல்
அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என
அரிய பதினேழுமே குறைதலின் பெயர் அளவையொடு கடன் கச்சம் மூன்றும்
ஓங்கிய அளத்தலின் பெயர் பங்கு பாகம் அத்துடன் பால் அருத்தம் அத்தம்
தரு கூறு பகல் பாதியின் பெயர் அகண்டம் சத்தம் அகலம் சாருவம்
சதலம் நிகிலங்களோடு யாவும் இயாவையும் தக்க முடியவும் அடையவும்
வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன
வந்த மூவைந்தும் எல்லாம் என்றும் பெயராய் மதித்தனர் தமிழ்ப்புலவரே

#4
** வெள்ளை, சிவப்பு, பச்சை
சுப்பிரம் வால் பால் குருத்து நரை பாண்டு சுவேதம் விளர் வெண்மை குருகு
சுசி வெளில் வாருணம் காரி சீனம் சுதை சுக்கிலம் தவளம் விசிதம்
செப்பு அருச்சுனம் வெள்ளி வெள்ளை எழுமூன்று பெயர் சேதம் குருதி அத்து
சேய் ஆ பூவல் பாடலம் கிஞ்சுகம் சிந்தூரம் சேது சேப்பு
துப்பு அரத்தம் குலிகம் மஞ்சிட்டு உலோகிதம் அவரி இராகம் அரக்கு
சோணம் அருணம் செக்கர் செம்மையொடு சேந்து நல் சுவணம் இருபத்தைந்துமே
தப்புஇலா வரு சிவப்பின் பெயர் பசுமை அரி சாமளம் பாசு பைமை
சாமம் அரிதம் பலாசம் பைத்து அரித்து எனச் சாற்று பத்தும் பச்சையே

#5
** கருமை, பொன்னிறம், புகர், மாசு, நிறம்
கருமை அசிதம் காரி காளிமை காரளம் காளம் நீலம் களங்கம்
காளிமம் கருள் மா களம் காரோடு அஞ்சனம் கறை மாயம் மால் இருள் மணி
பெருமை பெறும் நல்லம் கருப்பு மூவேழு பெயர் பீதம் புலம் புற்கலம்
பீதகம் அரித்திரம் பிங்கலம் பொன்னிறம் பேசிய பசப்பும் ஆகும்
அரிய கபிலம் குரால் புகர் புன்மை பன்மை நிறம் ஆம் கறை களங்கம் மலினம்
அழுக்கு மலம் நீள் கசடு கபிகம் ஏழ் மாசு ஆகும் அரி வரு புகர் இராகம்
குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை
கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே

#6
** அழகு, பேரழகு, வடிவு, வண்ணம்
ஏர் மயம் சுந்தரம் சவி காள் அணங்கு பொன் எழில் அந்தம் நவ்வி நோக்கு
இராமம் கவின் குழகம் வாமம் மணி அணி கோலம் யாணர் காரிகை விடங்கம்
சீர் குலம் பத்திரம் காமர் கட்டளை பாணி சித்திரம் பாங்கு தொட்டில்
தேன் செழுமை வரி பூ வனப்பு வண்ணம் கந்தி தேசிகம் வடிவு சொக்கு
சார்வு வனம் அற்புதம் பொற்பு மதன் மாழை கேழ் சந்தம் நலம் நல்கு செவ்வி
தளிமம் வகு பெண்மை மஞ்சு நோக்கு சேடு தகை மாதர் மாண்பு மருகல்
ஆரியை பேதை அலம் அம்மை ஐ ஒப்பு மா சாரு அம் என எழுபதும்
அழகு ஆம் விசித்திரம் பேரழகு சின்னம் வடிவு ஆம் சந்தம் வண்ணம் ஆமே

#7
** கட்டழகு, இளமை, முதுமை
பொற்பு அலங்காரம் கை அணி காமர் கோலம் பொருந்து சிங்காரம் ஏழும்
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை
நற்பருவம் விளரி விளா மண்ணை யெளவனம் விளவு நவ்வி குருகு இளை சேய் உயர்
நாகு தருணம் புருவை கயம் விளைச்சு கொம்மை நன் மழவு குழவு சேடு
சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல்
சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம்
ஒப்பு அரிய பீரு பசப்பு நிறமே பசலை உயர் கொன்றை புரையினுடனே
ஓங்கிய எழுங்கு வெளிறு ஆம் எண் கணமே உரைத்தனர் தமிழ்ப்புலவரே

#8
** பெருமை, சிறுமை
பாடு பரி பணை யாளி மோடு தடம் மூரி வான் பகரும் மால் வீறு வடவை
பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம்
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு
தாடு பின் கதழ்வு தரு மன்று மம் கயவு தடவு விரல் விதை அனெந்தை ‘
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன்
தேடரிய ஞெள்ளலொடு பெருமை எழுபது பெயர் சிறிது கணு வறிது தன்னம்
சின்னம் இறை ஒட்டில் சுதனம் அற்பம் கன்று சிறுமை இட்டிமை ஆகுமே

#9
** மிகுதி, நீளம்
அதிகம் நனி அமலை அறுசனி கட்டு வெள்ளை கூர் அலை ஊக்கம் கொள்ளை வெள்ளம்
ஆற்றல் களி கடி இறப்பு சிறப்பு பெருகல் ஆரை நகம் பிறங்கல்
புதுமை சண்டம் கடுமை துப்பு தவம் கழு பல பூரி பிறும்பு மறவு
பொம்மல் எற்றந்து ஆம் தாவு மீக்கோள் மிகப்பு பெருக்கம் விறம்பு
மதம் மலிதல் கணை பொங்கல் மருதல் ஒக்கம் பொக்கம் மறல் கஞறல் கதழ்வு மிஞ்சல்
மல்கலே அமறல் உகப்பு உருப்பு சால மருவிய உறுகல் உடனே
சிதைவுஇலா மிகுதி ஆறொன்பது ஆம் கொடி நெடுமை தீர்தல் பரி வார்தல் நெய்தல்
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே

#10
** உயர்ச்சி தூரம் பக்கம் இவற்றின் பெயார்
புரை உவப்பு சிகரம் மேடு மிசை சேண் உந்தி புங்கம் உத்துங்கம் உச்சம்
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி
பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்பு உடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல்
பயில் போதலே ஞெள்ளல் ஏந்தல் எழுச்சியொடு பரவிய பிறங்கல் என்ன
தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன்
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர்
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன்
அடுக்கல் உழி சாமீபம் என்னும் ஈரொன்பது அபிமானமும் பக்கம் ஆமே

#11
** கோபம், முன்கோபம், பெருஞ்சினம், தணியாக் கோபம்
சினம் வெகுளி காரம் கலாம் கன்றல் விழிவு செற்றம் வெறுத்தல் கைதல்
செயிர் கதம் கதழ்வு சயிலாசலம் உருத்தல் சிலைத்தல் இளைத்தல் சீற்றம்
முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன
மொழி கோபம் இருபதுடன்ஆறு பெயர் கொந்தலே முதிர் பொங்கல் கொம்பல்
கனிதல் முன்கோபம் ஓர் ஐந்து பெயர் முரணுதல் காய்தல் உடற்றல் சீறல்
கடிகி வெய்துறல் உளரல் முனவல் பகைத்தலொடு கரு தீவிரம் விடைத்தல்
இனைய ஒரு பத்தும் பெருஞ்சினப் பெயர் வயிரம் வேரம் சலம் காவம் நான்கு
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே

#12
** குற்றம், வருத்தம்
காசு நவை தவறு புரை கரில் ஊறு வண்டு புகர் கசறு கறை பழுது போக்கு
கவடு பங்கம் தீது கோது செயிர் வலம் கழிப்பு பழிப்பு குறை
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை
மறு தீங்கு துகள் இன்னல் அவ்வம் ஏதம் தொழுவு வழுவும் இழிவு அரில் இழுக்கு ஓர்
ஏசு மானம் கடவை மிறை கொழிப்பு களவு பொல்லாங்கும் ஆம் மை ஐம்பான்
இரண்டுமே குற்றம் ஆம் கவர்வு ஆகுலம் அணங்கே உடன் வயா கசிவு நோவே
பேசில் இறை உயவு அனுக்கம் சமழம் பிறங்கிய நொசிவு அழுங்கல் ஆய்வு
பெருகிய உயங்கு அயர்வு என்னும் ஒரு பதினைந்து பெயரும் வருத்தம் ஆமே

#13
** அகலம், நெருங்கல், மிடைதல், உள்ளது சிறத்தல்
அங்கண் வியன் கால் சேண் ஆன்றல் வயம் ஆய்வு நளி அகலுள் இவர்தல் படர்தல்
அயர்தலே பாழி இவை பன்மூன்றும் அகலம் கண்ணடையும் வியலிடமும் அப்பேர்
துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம்
துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல்
பொங்கிய திறங்கல் நளிர் பவர்தல் மிண்டல் செற்றல் பொதுளல் பயிறல் கவைத்தல்
புகல் ஆழி அருகல் செறிதல் கஞறல் அறுகலொடு போந்த எழுநான்கு இரண்டும்
தங்கிய நெருங்கலின் பெயர் தைத்தலொடு ததைத்தலே மிடைதல் பெயர்
தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே

#14
** ஓளி, ஒளிசெயல், ஒளிமழுங்குதல்
வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி
மின் பிரகாசம் தேசு மிளிர் நீள் அலரி உடன் விளங்கும் ஒளி பதினெண்
எல் ஒளிறு கடி கானல் அவிர்தல் ஆறுதல் பாடல் இலகல் சுடர் நிமிர்தல்
இலங்குதல் ஒடித்தல் காள் கோழ் கெழு விளங்குதல் இமைத்தல் கிளர் செடி நகுதல்
சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை
துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும்
நல் ஒளிசெயல் பெயர் மழுங்கல் மாசுதல் மடங்கல் நவில் அழுங்குதல் புல்லெனல்
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே
** எட்டாவது பண்பு பற்றிய தொகுதி முற்றும்
******