கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாங்கு 1
யாப்பு 1
யாம் 2
யாமத்து 2
யாமும் 1
யார்க்கு 1
யான் 9
யானும் 1
யானை 22
யானையும் 1
யானோ 1
யாங்கு (1)
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/2
யாப்பு (1)
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் – முத்தொள்:53/2
யாம் (2)
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக – முத்தொள்:66/1
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு – முத்தொள்:90/4
யாமத்து (2)
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள்:29/2,3
தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/2,3
யாமும் (1)
கதவம் கொண்டு யாமும் தொழ – முத்தொள்:74/4
யார்க்கு (1)
யார்க்கு இடுகோ பூசல் இனி – முத்தொள்:57/4
யான் (9)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான்
திண் தேர் வளவன் திறத்து – முத்தொள்:27/3,4
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து – முத்தொள்:28/2
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ – முத்தொள்:31/3
உரையாயோ யான் உற்ற நோய் – முத்தொள்:38/4
என் காண்பேன் என் அலால் யான் – முத்தொள்:61/4
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள்:72/2
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் – முத்தொள்:85/1
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் – முத்தொள்:85/1
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு – முத்தொள்:85/2
யானும் (1)
கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர் – முத்தொள்:69/3
யானை (22)
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு – முத்தொள்:13/3
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே – முத்தொள்:15/3
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் – முத்தொள்:17/1
செம் கண் மா கோதை சின வெம் களி யானை
திங்கள் மேல் நீட்டும் தன் கை – முத்தொள்:19/3,4
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை – முத்தொள்:22/3
அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி – முத்தொள்:36/1
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி – முத்தொள்:40/3
சேனை அறிய கிளவேனோ யானை
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி – முத்தொள்:42/2,3
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே – முத்தொள்:43/3
நல் யானை கோ கிள்ளி நாடு – முத்தொள்:43/4
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி – முத்தொள்:56/1
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை – முத்தொள்:61/1
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/3
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் – முத்தொள்:70/3
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் – முத்தொள்:74/3
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை
மாறன் வழுதி மணவா மருள் மாலை – முத்தொள்:76/2,3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் – முத்தொள்:84/3
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் – முத்தொள்:87/3
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் – முத்தொள்:94/1
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் – முத்தொள்:95/1,2
பல் யானை அட்ட களத்து – முத்தொள்:104/4
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் – முத்தொள்:106/1
யானையும் (1)
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும்
புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே – முத்தொள்:104/2,3
யானோ (1)
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் – முத்தொள்:58/2,3