Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்சுக 2
கிஞ்சுக_வாயவள் 1
கிடக்கின்றேனை 1
கிடத்தியால் 1
கிடந்த 1
கிடந்தனையை 1
கிடந்தாள் 1
கிடந்து 8
கிடந்தும் 1
கிடந்தேனை 2
கிடந்தோன் 1
கிடப்ப 1
கிடப்பது 1
கிடப்பன 1
கிடப்பு 2
கிடப்பேற்கு 1
கிடப்பேனுக்கு 1
கிடப்பேனை 5
கிடாஅய் 1
கிண்ணம் 1
கிராத 1
கிருமி 1
கில்லேனே 1
கிழவோன் 1
கிழவோனே 1
கிழித்திட 1
கிழியீடு 1
கிள்ளாய் 3
கிளர் 1
கிளர்கின்ற 1
கிளரும் 1
கிளவி 1
கிளி 3
கிளியும் 1
கிளியே 3
கிளை 1
கிற்பன் 1
கிற்ற 1
கிற்றிலேன் 1
கிறி 4
கிறியும் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கிஞ்சுக (2)

கிராத வேடமொடு கிஞ்சுக_வாயவள் – திருவா:2/15
கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன் – திருவா:19 5/1
மேல்


கிஞ்சுக_வாயவள் (1)

கிராத வேடமொடு கிஞ்சுக_வாயவள்
விராவு கொங்கை நல்_தடம் படிந்தும் – திருவா:2/15,16
மேல்


கிடக்கின்றேனை (1)

இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/3,4
மேல்


கிடத்தியால் (1)

வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 7/7,8
மேல்


கிடந்த (1)

நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு – திருவா:1/60
மேல்


கிடந்தனையை (1)

மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே – திருவா:5 33/1
மேல்


கிடந்தாள் (1)

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே – திருவா:7 1/7
மேல்


கிடந்து (8)

ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன் நின்று உழைத்தனனே – திருவா:6 45/4
சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும் – திருவா:11 17/2
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண் – திருவா:24 5/2
புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே – திருவா:32 6/2
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே – திருவா:37 2/2,3
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே – திருவா:45 9/4
படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும் – திருவா:51 11/1
மேல்


கிடந்தும் (1)

நெக்குநெக்கு உள் உருகிஉருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் – திருவா:27 8/1
மேல்


கிடந்தேனை (2)

வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல – திருவா:5 22/1
மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட – திருவா:10 17/2
மேல்


கிடந்தோன் (1)

போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை – திருவா:23 8/1
மேல்


கிடப்ப (1)

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று – திருவா:1/84,85
மேல்


கிடப்பது (1)

பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 3/4
மேல்


கிடப்பன (1)

நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய் – திருவா:3/109
மேல்


கிடப்பு (2)

கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 9/4
மேல்


கிடப்பேற்கு (1)

பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு
கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு – திருவா:40 9/1,2
மேல்


கிடப்பேனுக்கு (1)

விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய் கிடப்பேனுக்கு
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை – திருவா:31 8/2,3
மேல்


கிடப்பேனை (5)

தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை – திருவா:31 2/2,3
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை
திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே – திருவா:41 4/2,3
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி – திருவா:41 7/3
கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி – திருவா:41 10/2,3
தோலின் பாவைக்கூத்தாட்டு ஆய் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற – திருவா:50 3/2,3
மேல்


கிடாஅய் (1)

நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇ – திருவா:3/109,110
மேல்


கிண்ணம் (1)

கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன் – திருவா:5 92/2
மேல்


கிராத (1)

கிராத வேடமொடு கிஞ்சுக_வாயவள் – திருவா:2/15
மேல்


கிருமி (1)

ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும் – திருவா:4/14
மேல்


கில்லேனே (1)

கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே – திருவா:5 33/4
மேல்


கிழவோன் (1)

கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும் – திருவா:3/19
மேல்


கிழவோனே (1)

ஒலிதரு கைலை உயர் கிழவோனே – திருவா:2/146
மேல்


கிழித்திட (1)

வேனில் வேள் கணை கிழித்திட மதி சுடும் அது-தனை நினையாதே – திருவா:5 40/1
மேல்


கிழியீடு (1)

கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு – திருவா:40 9/2
மேல்


கிள்ளாய் (3)

கோல்_தேன் மொழி கிள்ளாய் கோது_இல் பெருந்துறை கோன் – திருவா:19 7/1
இன் பால் மொழி கிள்ளாய் எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 8/1
ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால் – திருவா:19 9/1
மேல்


கிளர் (1)

கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை – திருவா:31 10/3
மேல்


கிளர்கின்ற (1)

இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும் – திருவா:36 4/2
மேல்


கிளரும் (1)

கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை – திருவா:8 18/1
மேல்


கிளவி (1)

கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் – திருவா:35 4/1
மேல்


கிளி (3)

வண்ண கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ – திருவா:7 4/2
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை – திருவா:8 18/1
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் – திருவா:35 4/1
மேல்


கிளியும் (1)

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடை தொன்மை – திருவா:10 18/2,3
மேல்


கிளியே (3)

ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன் – திருவா:19 1/1
இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே
ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும் – திருவா:19 6/1,2
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன் – திருவா:19 10/1
மேல்


கிளை (1)

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
மேல்


கிற்பன் (1)

ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே – திருவா:5 41/4
மேல்


கிற்ற (1)

கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை – திருவா:5 34/1
மேல்


கிற்றிலேன் (1)

ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே – திருவா:5 41/4
மேல்


கிறி (4)

கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே – திருவா:5 32/4
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன் – திருவா:8 6/1
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 8/4
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன் – திருவா:35 4/1
மேல்


கிறியும் (1)

கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை – திருவா:41 10/2

மேல்