Select Page


யாதினுக்கு (1)

அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன் – தேவா-சுந்:148/1
மேல்


யாது (3)

அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:136/3
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:138/3
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:142/3
மேல்


யாதும் (11)

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:340/4
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:341/4
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/4
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/4
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/4
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:346/4
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:347/4
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/4
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/4
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:350/4
மேல்


யாரை (9)

அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:239/4
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:240/4
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:241/4
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:242/4
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:243/4
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:244/4
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:245/4
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:246/4
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:247/4
மேல்


யாரையும் (1)

ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா – தேவா-சுந்:338/3
மேல்


யாவர் (1)

யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன் – தேவா-சுந்:801/2
மேல்


யாவர்க்கும் (4)

கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண் – தேவா-சுந்:386/3
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-சுந்:872/2
மேல்


யாவராகில் (1)

ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
மேல்


யாவராலும் (1)

யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே – தேவா-சுந்:65/2
மேல்


யாழ் (2)

யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:79/4
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/2
மேல்


யாழ்செய்யும் (1)

பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
மேல்


யாழ்செயும் (2)

வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/2
மேல்


யாழை (1)

யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் – தேவா-சுந்:719/1
மேல்


யான் (6)

வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான்
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/3,4
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/2
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி – தேவா-சுந்:527/2
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:557/3
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/3
மேல்


யானும் (1)

ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
மேல்


யானே (10)

எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:383/4
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:384/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/4
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:387/4
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:388/4
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:389/4
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:390/4
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:391/4
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:392/4
மேல்


யானை (20)

கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள் – தேவா-சுந்:62/1
யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:181/4
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார் – தேவா-சுந்:544/2
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை – தேவா-சுந்:581/2
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன் – தேவா-சுந்:812/2
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1017/3
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே – தேவா-சுந்:1023/2
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து – தேவா-சுந்:1025/2
மேல்


யானைகள் (1)

மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள்
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:440/3,4
மேல்


யானையின் (5)

மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி – தேவா-சுந்:124/1
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர் – தேவா-சுந்:508/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல் – தேவா-சுந்:835/2
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/3

மேல்