Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குச்சரர் 1
குசைத்தலை 1
குஞ்சரம் 1
குஞ்சி 2
குட்டம் 1
குட 1
குடர் 4
குடர்கள் 1
குடரும் 1
குடரொடு 2
குடி 2
குடிக்கும் 1
குடித்து 1
குடிபோனது 1
குடியான் 1
குடுமி 1
குடை 13
குடையின் 1
குடையினை 1
குடையுள் 1
குணத்தர் 1
குணத்து 1
குணிப்பு 1
குத்தர் 1
குதட்டிரே 1
குதம்பையுமாம் 1
குதலை 2
குதிர்வயிறீ 1
குதிரை 3
குதிரையின் 1
குந்தம் 1
குந்தமும் 1
குந்தமுமே 1
குந்தளரை 1
கும்பங்களிலே 1
கும்பத்து 1
கும்பிட்டு 4
கும்பிட்டே 1
குமண்டையிட்டே 1
குமரி 1
குமிலம் 1
குமிழ்கள் 1
குமிழி 1
குமுறு 1
குயிற்றிய 1
குரக்கு 1
குரகத 1
குரகதம் 1
குரங்கினங்கள் 1
குரத்தால் 1
குரல் 1
குரல்கள் 1
குருக்கர் 1
குருட்டு 1
குருடு 1
குருதி 25
குருதிக்கு 1
குருதியின் 4
குருதியும் 1
குருமி 1
குருவின் 1
குரை 4
குரைப்பன 1
குல 12
குல_துங்கன் 1
குலங்கள் 1
குலத்தின் 1
குலத்து 5
குலதியொடு 1
குலதீபன் 1
குலம் 5
குலமகள்-தன் 1
குலமகளிர் 1
குலமகனை 1
குலமும் 1
குலாவவே 1
குலிங்கர் 1
குலுங்க 1
குலைதர 1
குலைந்த 2
குலைந்து 1
குலைந்தோர்-தம்மை 1
குலோத்தமன் 1
குலோத்துங்க 1
குவடு 3
குவடும் 2
குவலயத்தோர் 1
குவலயம் 2
குவி 2
குவித்தருளியே 1
குவிப்ப 1
குவிப்பது 1
குவை 1
குழப்பி 1
குழல் 4
குழலின் 1
குழவி 4
குழவிக்கு 1
குழவிய 1
குழற 1
குழறி 1
குழறியும் 1
குழாம் 1
குழிசியுள் 1
குழிவுற்று 1
குழை 1
குழைத்து 1
குழையில் 1
குழையிலே 1
குளப்பு 1
குளம் 2
குளிக்கும் 1
குளித்த 2
குளிப்ப 1
குளியீரே 1
குளிர் 2
குளிர்ந்த 1
குளிர 1
குளிரவைத்து 1
குளிறு 1
குற்றீரே 1
குறள் 1
குறி 3
குறித்து 3
குறியாக 1
குறியால் 1
குறியிலே 1
குறியும் 2
குறியை 1
குறு 2
குறுகலர்கள் 1
குறுகலும் 1
குறுகி 1
குறை 2
குறைத்தலை 3
குறையாத 1
குறையாது 1
குறையுடலம் 1
குறையும் 1
குன்றி 2
குன்றின் 1
குன்று 4
குனிதலின் 1
குனிப்ப 1
குனிப்பன 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

குச்சரர் (1)

கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே – கலிங்:331/2

மேல்

குசைத்தலை (1)

பாலாறு குசைத்தலை பொன்முகரி பழவாறு படர்ந்து எழு கொல்லி எனும் – கலிங்:367/1

மேல்

குஞ்சரம் (1)

கொண்டது ஆயிரம் குஞ்சரம் அல்லவோ – கலிங்:386/2

மேல்

குஞ்சி (2)

நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த நெடும் குஞ்சி சிரத்தை தன் இனம் என்று எண்ணி – கலிங்:112/1
குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து – கலிங்:468/1

மேல்

குட்டம் (1)

குருதி குட்டம் இத்தனையும் கோலும் வேலும் குந்தமுமே – கலிங்:508/1

மேல்

குட (1)

குட திசை புக கடவு குரகத ரதத்து இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல் – கலிங்:251/1

மேல்

குடர் (4)

இ வண்ணத்த இரு திறமும் தொழுது இருப்ப எலும்பின் மிசை குடர் மென் கச்சின் – கலிங்:153/1
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே – கலிங்:156/2
அற்ற தோள் இவை அலைப்ப பார் உவை அறாத நீள் குடர் மிதப்ப பார் – கலிங்:166/1
மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே – கலிங்:578/1

மேல்

குடர்கள் (1)

குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே – கலிங்:446/2

மேல்

குடரும் (1)

குருதியும் குடரும் கலந்து அட்ட வெம் கூழ் தெறித்து ஒரு கண் குருடு ஆனவும் – கலிங்:147/2

மேல்

குடரொடு (2)

உரி மிசை அ கரியின் குடரொடு கட்செவி இட்டு ஒரு புரி இட்டு இறுக புனையும் உடுக்கையளே – கலிங்:126/2
கொற்ற வாள் மறவர் ஓச்ச குடரொடு தலையும் காலும் – கலிங்:518/1

மேல்

குடி (2)

குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும் – கலிங்:151/2
மடிகின்றன குடி கெடுகின்றனம் இனி வளைகின்றன படை பகை என்றே – கலிங்:372/2

மேல்

குடிக்கும் (1)

குடியான் என்று தான் குடிக்கும் கூத்தி பேய்க்கு வாரீரே – கலிங்:574/2

மேல்

குடித்து (1)

இ கரி தலையின் வாயின்-நின்று உதிர நீர் குடித்து உரும் இடித்து என – கலிங்:163/1

மேல்

குடிபோனது (1)

ஆதவம் பருகும் என்று நின்ற நிழல் அங்கு நின்று குடிபோனது அ – கலிங்:81/1

மேல்

குடியான் (1)

குடியான் என்று தான் குடிக்கும் கூத்தி பேய்க்கு வாரீரே – கலிங்:574/2

மேல்

குடுமி (1)

திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற-மினோ – கலிங்:69/2

மேல்

குடை (13)

ஓரிரண்டு திரு குலமும் நிலைபெற வந்து ஒரு குடை கீழ் கடலும் திக்கும் – கலிங்:12/1
பொரு களத்திலே முடி கவித்தவன் புவி கவிப்பது ஓர் குடை கவித்ததும் – கலிங்:204/2
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் – கலிங்:205/2
முடியின் மேல் முடி நிரைத்து வருகின்றது எனவே முறை செய் மன்னவர்கள் பொன் குடை கவித்து வரவே – கலிங்:287/2
வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே – கலிங்:300/2
தங்கள் பொன் குடை சாமரம் என்று இவை தாங்கள் தம் கரத்தால் பணி மாறவே – கலிங்:325/2
குடை நிரைத்தலின் தழை நெருக்கலின் கொடி விரித்தலின் குளிர் சதுக்கம் ஒத்து – கலிங்:345/1
இடையிடை அரசர்கள் இடு குடை கவரிகள் இவை கடல் நுரை எனவே – கலிங்:397/1
குருதியின் நதி வெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே – கலிங்:410/1
குறு மோடீ நெடு நிணமாலாய் குடை கலதீ கூரெயிறீ நீலி – கலிங்:504/1
பௌவம் அடங்க வளைந்த குடை பண்டித சோழன் மலர் கழலில் – கலிங்:532/1
நாற்கடலை கவித்த குடை நர_துங்கன் அமுதம் எழ – கலிங்:542/1
விழுந்த தவள குடை மின்னும் வெள்ளி கலமா கொள்ளீரே – கலிங்:559/2

மேல்

குடையின் (1)

மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு – கலிங்:317/1

மேல்

குடையினை (1)

கொற்ற குடையினை பாடீரே குலோத்துங்க சோழனை பாடீரே – கலிங்:533/2

மேல்

குடையுள் (1)

குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும் – கலிங்:202/2

மேல்

குணத்தர் (1)

குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே – கலிங்:332/2

மேல்

குணத்து (1)

அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல் – கலிங்:123/1

மேல்

குணிப்பு (1)

குவடு பற்றியது அவன் அடல் படை அது குணிப்பு அரிது எனலுமே – கலிங்:462/2

மேல்

குத்தர் (1)

குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே – கலிங்:332/2

மேல்

குதட்டிரே (1)

மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே – கலிங்:578/1

மேல்

குதம்பையுமாம் (1)

கொண்டு அணியின் குதம்பையுமாம் கோத்து அணியின் மணி வடமாம் – கலிங்:132/2

மேல்

குதலை (2)

விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை – கலிங்:25/1
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே – கலிங்:131/2

மேல்

குதிர்வயிறீ (1)

மறிமாடீ குதிர்வயிறீ கூழ் அட வாரீர் கூழ் அட வாரீரே – கலிங்:504/2

மேல்

குதிரை (3)

குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை
தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே – கலிங்:253/1,2
நெடும் குதிரை மிசை கலணை சரிய பாய்ந்து நிண சேற்றில் கால் குளிப்ப நிரையே நின்று – கலிங்:476/1
படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின் – கலிங்:476/2

மேல்

குதிரையின் (1)

உலை என குதிரையின் உதிரமே சொரி-மினோ – கலிங்:520/2

மேல்

குந்தம் (1)

பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் – கலிங்:499/1

மேல்

குந்தமும் (1)

குந்தமும் பகழியும் கோல்களும் வேலுமாம் – கலிங்:523/1

மேல்

குந்தமுமே (1)

குருதி குட்டம் இத்தனையும் கோலும் வேலும் குந்தமுமே
கருவி கட்டு மாட்டாதீர் கரைக்கே இருந்து குளியீரே – கலிங்:508/1,2

மேல்

குந்தளரை (1)

குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை – கலிங்:206/1

மேல்

கும்பங்களிலே (1)

கும்பங்களிலே முகந்து எடுத்து குளிரவைத்து கொள்ளீரே – கலிங்:556/2

மேல்

கும்பத்து (1)

கொதித்த கரியின் கும்பத்து குளிர்ந்த தண்ணீர்-தனை மொண்டு – கலிங்:582/1

மேல்

கும்பிட்டு (4)

கொடுத்த சிரம் கொற்றவையை பரவுமாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ – கலிங்:111/2
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே – கலிங்:156/2
ஆனை மணியினை தாளம் பிடித்து கும்பிட்டு அடிப்பாணர் என பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:469/2
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே – கலிங்:503/2

மேல்

கும்பிட்டே (1)

குன்று குனிப்பன போல் களத்து கும்பிட்டே நடமிட்டனவே – கலிங்:585/2

மேல்

குமண்டையிட்டே (1)

என்று களித்து குமண்டையிட்டே ஏப்பமிட்டு பருத்து நின்ற – கலிங்:585/1

மேல்

குமரி (1)

கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும் – கலிங்:150/2

மேல்

குமிலம் (1)

திரைகள் திசைமலையோடு அடர்ந்தன திமில குமிலம் எலாம் விளைந்தவே – கலிங்:447/2

மேல்

குமிழ்கள் (1)

எங்கும் உள பைம் குமிழ்கள் எங்கும் உள செங்குமுதம் எங்கும் உள செங்கயல்களே – கலிங்:295/2

மேல்

குமிழி (1)

களம் அடைய காட்டுதற்கு முடிவது அன்று கவிழும் மத கரி சொரிய குமிழி விட்டு – கலிங்:503/1

மேல்

குமுறு (1)

கொண்ட ஆயிரம் கொடி நுடங்கவே குமுறு வெம் புலிக்கொடி குலாவவே – கலிங்:293/2

மேல்

குயிற்றிய (1)

நிரை மணி பல குயிற்றிய நெடு முடி மிசை விதிப்படி – கலிங்:265/1

மேல்

குரக்கு (1)

குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும் – கலிங்:151/2

மேல்

குரகத (1)

குட திசை புக கடவு குரகத ரதத்து இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல் – கலிங்:251/1

மேல்

குரகதம் (1)

வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே – கலிங்:251/2

மேல்

குரங்கினங்கள் (1)

அணிகொண்ட குரங்கினங்கள் அலை கடலுக்கு அ பாலை – கலிங்:96/1

மேல்

குரத்தால் (1)

பட்ட புரவி கவி குரத்தால் பாகுவலயம் சாத்தீரே – கலிங்:513/1

மேல்

குரல் (1)

பகடு இடந்து கொள் பசும் குருதி இன்று தலைவீ பலிகொள் என்ற குரல் எண் திசை பிளந்து மிசைவான் – கலிங்:114/1

மேல்

குரல்கள் (1)

அவைக்கும் உரல்கள் என குரல்கள் அவிந்த முரசம் கொள்ளீரே – கலிங்:525/2

மேல்

குருக்கர் (1)

குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே – கலிங்:332/2

மேல்

குருட்டு (1)

காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:569/2

மேல்

குருடு (1)

குருதியும் குடரும் கலந்து அட்ட வெம் கூழ் தெறித்து ஒரு கண் குருடு ஆனவும் – கலிங்:147/2

மேல்

குருதி (25)

அவர் நிணத்தொடு அ குருதி நீர் குழைத்து அவர் கரும் தலை சுவர் அடுக்கியே – கலிங்:99/2
பரிவு இருத்தி அலகிட்டு பசும் குருதி நீர் தெளித்து நிண பூ சிந்தி – கலிங்:108/1
வல் எரியின் மிசை எரிய விடுவராலோ வழி குருதி நெய்யாக வார்ப்பராலோ – கலிங்:110/2
பகடு இடந்து கொள் பசும் குருதி இன்று தலைவீ பலிகொள் என்ற குரல் எண் திசை பிளந்து மிசைவான் – கலிங்:114/1
அரிந்த தலை உடன் அமர்ந்தே ஆடு கழை அலை குருதி புனலின் மூழ்கி – கலிங்:118/1
செ வண்ண குருதி தோய் சிறு பூத தீபக்கால் கட்டில் இட்டே – கலிங்:153/2
விழுந்து கொழும் குருதி புனல் என்று வெறுங்கை முகந்து முகந்து – கலிங்:169/1
வலியினில் குருதி உண்க என அளித்த அவனும் வாதராசனை வலிந்து பணிகொண்ட அவனும் – கலிங்:193/2
கதிர் சுடர் விளக்கு ஒளி கறுத்து எரியுமாலோ கால முகில் செம் குருதி கால வருமாலோ – கலிங்:222/2
ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வருமாலோ ஊறு புனல் செம் குருதி நாற வருமாலோ – கலிங்:224/2
கலிங்கர் குருதி குருதி கலிங்கம் அடைய அடைய – கலிங்:302/1
கலிங்கர் குருதி குருதி கலிங்கம் அடைய அடைய – கலிங்:302/1
குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே – கலிங்:446/2
புண் தரு குருதி பாய பொழிதரு கடமும் பாய – கலிங்:456/1
அ மலையோ இ மலையும் என்ன தெவ்வர் அழி குருதி நதி பரக்க அறுக்கும் போழ்தில் – கலிங்:465/2
குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து – கலிங்:468/1
படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின் – கலிங்:476/2
சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள் – கலிங்:480/1
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின் – கலிங்:499/2
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே – கலிங்:503/2
பண்ணையாக குருதி மடு பாய்ந்து நீந்தி ஆடிரே – கலிங்:507/2
குருதி குட்டம் இத்தனையும் கோலும் வேலும் குந்தமுமே – கலிங்:508/1
ஆழ்ந்த குருதி மடு நீந்தி அங்கே இனையாது இங்கு ஏறி – கலிங்:509/1
வெம்பும் குருதி பேர் ஆற்றில் வேண்டும் தண்ணீர் வேழத்தின் – கலிங்:556/1
சோரும் களிற்றின் வாலதியால் சுழல அலகிட்டு அலை குருதி
நீரும் தெளித்து கலம் வைக்க நிலமே சமைத்து கொள்ளீரே – கலிங்:557/1,2

மேல்

குருதிக்கு (1)

அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசையின் – கலிங்:129/1

மேல்

குருதியின் (4)

குருதியின் நதி வெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே – கலிங்:410/1
குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே – கலிங்:446/2
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:493/2
எழுதிய சிலையவர் செறி கடல் விழும் அவை இது என வழி குருதியின் விழுவன சில – கலிங்:588/2

மேல்

குருதியும் (1)

குருதியும் குடரும் கலந்து அட்ட வெம் கூழ் தெறித்து ஒரு கண் குருடு ஆனவும் – கலிங்:147/2

மேல்

குருமி (1)

தத்து நீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர் பொன் – கலிங்:198/1

மேல்

குருவின் (1)

சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை – கலிங்:157/1

மேல்

குரை (4)

குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும் – கலிங்:202/2
குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை – கலிங்:253/1
குவி கை கொடு அரசர் சுற்றிய குரை கழல் அபயன் முத்து அணி – கலிங்:267/1
குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே – கலிங்:446/2

மேல்

குரைப்பன (1)

கொல் தலம் பெறு கூழ் இலம் எங்களை கொள்வதே பணி என்று குரைப்பன – கலிங்:137/2

மேல்

குல (12)

குல நான்கும் காத்து அளிக்கும் குலதீபன் வாழ்க என்றே – கலிங்:6/2
அண்டம் உறு குல கிரிகள் அவள் ஒருகால் இரு காதில் – கலிங்:132/1
இந்த நில குல பாவை இவன்-பால் சேர என்ன தவம் செய்திருந்தாள் என்ன தோன்றி – கலிங்:206/2
எவ்வளவும் திரிபுவனம் உளவாய் தோன்றும் எவ்வளவும் குல மறைகள் உளவாய் நிற்கும் – கலிங்:207/1
வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே – கலிங்:210/1
கொற்ற வெண்குடை கவிப்ப மிசை கொண்டு கவரி குல மதி புடை கவித்த நிலவு ஒத்துவரவே – கலிங்:282/2
வாழி சோழ குல சேகரன் வகுத்த இசையின் மதுர வாரி எனலாகும் இசைமாது அரிது எனா – கலிங்:285/1
நீல மா மணி சிவிகை வெள்ளமும் நித்தில குல கவிகை வெள்ளமும் – கலிங்:292/1
மறை மொழிந்தபடி மரபின் வந்த குல திலகன் வண்டை நகர் அரசனே – கலிங்:341/2
அந்தரம் ஒன்று அறியாத வட கலிங்கர் குல வேந்தன் அனந்தபன்மன் – கலிங்:375/1
சோழ குல_துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர் சென்று அமர் தொடங்குக எனவே – கலிங்:393/2
வசையில் வய புகழ் வாழ்த்தினவே மனு குல தீபனை வாழ்த்தினவே – கலிங்:591/2

மேல்

குல_துங்கன் (1)

சோழ குல_துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர் சென்று அமர் தொடங்குக எனவே – கலிங்:393/2

மேல்

குலங்கள் (1)

அக்கிரி குலங்கள் விடும் அங்குலியின் நுண் திவலை அ செழியர் அஞ்சி விடும் அ – கலிங்:298/1

மேல்

குலத்தின் (1)

போம் அளவும் அவர் அருகே இருந்துவிட்டு போகாத நரி குலத்தின் புணர்ச்சி காண்-மின் – கலிங்:478/2

மேல்

குலத்து (5)

அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல் – கலிங்:123/1
அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல் – கலிங்:123/1
அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல் – கலிங்:123/1
இருள் முழுதும் அகற்றும் விதுகுலத்தோன் தேவி இகல் விளங்கு தபன குலத்து இராசராசன் – கலிங்:234/1
தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே – கலிங்:238/2

மேல்

குலதியொடு (1)

அது-கொல் என அலறா விழுந்தனர் அலதி குலதியொடு ஏழ் கலிங்கரே – கலிங்:450/2

மேல்

குலதீபன் (1)

குல நான்கும் காத்து அளிக்கும் குலதீபன் வாழ்க என்றே – கலிங்:6/2

மேல்

குலம் (5)

வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் – கலிங்:152/2
இவன் எமக்கு மகன் ஆகி இரவி குலம் பாரிக்க தகுவன் என்றே – கலிங்:237/2
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே – கலிங்:287/1
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே – கலிங்:289/2
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ – கலிங்:494/2

மேல்

குலமகள்-தன் (1)

குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே – கலிங்:236/2

மேல்

குலமகளிர் (1)

நடை வய பரி இரதம் ஒட்டகம் நவநிதி குலமகளிர் என்று – கலிங்:459/1

மேல்

குலமகனை (1)

குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே – கலிங்:236/2

மேல்

குலமும் (1)

ஓரிரண்டு திரு குலமும் நிலைபெற வந்து ஒரு குடை கீழ் கடலும் திக்கும் – கலிங்:12/1

மேல்

குலாவவே (1)

கொண்ட ஆயிரம் கொடி நுடங்கவே குமுறு வெம் புலிக்கொடி குலாவவே – கலிங்:293/2

மேல்

குலிங்கர் (1)

கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே – கலிங்:331/2

மேல்

குலுங்க (1)

தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு தடம் புயங்கள் குலுங்க நக்கே – கலிங்:376/2

மேல்

குலைதர (1)

உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர
உரும் இடிப்பன வட அனல் உள என ஒலி முகில் கட கரிகளும் இடையவே – கலிங்:350/3,4

மேல்

குலைந்த (2)

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கலவி மடவீர் கழல் சென்னி – கலிங்:63/1
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ – கலிங்:63/2

மேல்

குலைந்து (1)

காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:62/2

மேல்

குலைந்தோர்-தம்மை (1)

கோப்பு எலாம் குலைந்தோர்-தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே – கலிங்:262/2

மேல்

குலோத்தமன் (1)

ஈரிரண்டு படைத்து உடைய இரவி குலோத்தமன் அபயன் வாழ்க என்றே – கலிங்:12/2

மேல்

குலோத்துங்க (1)

கொற்ற குடையினை பாடீரே குலோத்துங்க சோழனை பாடீரே – கலிங்:533/2

மேல்

குவடு (3)

குவடு பற்றியது அவன் அடல் படை அது குணிப்பு அரிது எனலுமே – கலிங்:462/2
அ குவடும் அ கடலும் வளைந்து வெய்யோன் அத்தமன குவடு அணையும் அளவில் சென்றே – கலிங்:463/2
முது குவடு இப்படி இருக்கும் என்ன நிற்கும் முனை களிற்றோர் செரு களத்து முந்து தங்கள் – கலிங்:502/1

மேல்

குவடும் (2)

எ குவடும் எ கடலும் எந்த காடும் இனி கலிங்கர்க்கு அரண் ஆவது இன்றே நாளும் – கலிங்:463/1
அ குவடும் அ கடலும் வளைந்து வெய்யோன் அத்தமன குவடு அணையும் அளவில் சென்றே – கலிங்:463/2

மேல்

குவலயத்தோர் (1)

கொற்றவர் கோன் வாள் அபயன் அறிய வாழும் குவலயத்தோர் கலை அனைத்தும் கூற ஆங்கே – கலிங்:174/1

மேல்

குவலயம் (2)

கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால் – கலிங்:180/2
குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை – கலிங்:206/1

மேல்

குவி (2)

குவி கை கொடு அரசர் சுற்றிய குரை கழல் அபயன் முத்து அணி – கலிங்:267/1
கடல் கலிங்கம் எறிந்து சயத்தம்பம் நாட்டி கட கரியும் குவி தனமும் கவர்ந்து தெய்வ – கலிங்:471/1

மேல்

குவித்தருளியே (1)

தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே – கலிங்:253/2

மேல்

குவிப்ப (1)

புரம் எரி மடுத்த பொழுது அது இது என திகிரி புகை எரி குவிப்ப வயிரா – கலிங்:252/1

மேல்

குவிப்பது (1)

கரம் எரி மடுத்து அரசர் கரம் எதிர் குவிப்பது ஒரு கடவரை-தனை கடவியே – கலிங்:252/2

மேல்

குவை (1)

இவையும் இவையும் மணி திரள் இனைய இவை கனக குவை
இருளும் வெயிலும் எறித்திட இலகும் மணி மகர குழை – கலிங்:335/1,2

மேல்

குழப்பி (1)

எண்ணெய் போக வெண் மூளை என்னும் களியால் மயிர் குழப்பி
பண்ணையாக குருதி மடு பாய்ந்து நீந்தி ஆடிரே – கலிங்:507/1,2

மேல்

குழல் (4)

சுரி குழல் அசைவுற அசைவுற துயில் எழு மயில் என மயில் என – கலிங்:23/1
திருகி செருகும் குழல் மடவீர் செம்பொன் கபாடம் திற-மினோ – கலிங்:50/2
ஒக்க செருகும் குழல் மடவீர் உம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:74/2
வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1

மேல்

குழலின் (1)

வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து – கலிங்:66/1

மேல்

குழவி (4)

திரு வயிற்றிற்று ஒரு குழவி திரு நாமம் பரவுதுமே – கலிங்:3/2
எயிற்கு அழுத்தும் நிண கொடியும் இளம் குழவி பசும் தலையும் எங்கும் தூக்கி – கலிங்:106/2
திங்களின் இளம் குழவி செம்மல் இவன் என்றும் செய்ய பரிதி குழவி ஐயன் இவன் என்றும் – கலிங்:238/1
திங்களின் இளம் குழவி செம்மல் இவன் என்றும் செய்ய பரிதி குழவி ஐயன் இவன் என்றும் – கலிங்:238/1

மேல்

குழவிக்கு (1)

கொல் வாய் ஓரி முழவாக கொள்ளிவாய்ப்பேய் குழவிக்கு
நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் – கலிங்:119/1,2

மேல்

குழவிய (1)

அட்டம் இட்ட நெடும் கழை காணில் என் அன்னை அன்னை என்று ஆலும் குழவிய
ஒட்டல் ஒட்டகம் காணில் என் பிள்ளையை ஒக்கும் ஒக்கும் என்று ஒக்கலை கொள்வன – கலிங்:142/1,2

மேல்

குழற (1)

முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற
கழுத்தே கிட்ட மணம் திரியா கஞ்சி ஆக வாரீரே – கலிங்:567/1,2

மேல்

குழறி (1)

குழறி தரு கருநாடியர் குறுகி கடை திற-மின் – கலிங்:43/2

மேல்

குழறியும் (1)

உரையில் குழறியும் உடலில் பதறியும் ஒருவர்க்கொருவர் முன் முறையிட்டே – கலிங்:374/1

மேல்

குழாம் (1)

விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே – கலிங்:404/2

மேல்

குழிசியுள் (1)

கொலையினுள் படு கரி குழிசியுள் கூழினுக்கு – கலிங்:520/1

மேல்

குழிவுற்று (1)

அரவொடு திக்கயம் அப்பொழுது பரித்த இடத்து அடியிட உள் குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில் – கலிங்:124/1

மேல்

குழை (1)

இருளும் வெயிலும் எறித்திட இலகும் மணி மகர குழை
உவையும் உவையும் இலக்கணம் உடைய பிடி இவை உள் பகடு – கலிங்:335/2,3

மேல்

குழைத்து (1)

அவர் நிணத்தொடு அ குருதி நீர் குழைத்து அவர் கரும் தலை சுவர் அடுக்கியே – கலிங்:99/2

மேல்

குழையில் (1)

விலையிலாத வடம் முலையில் ஆட விழி குழையில் ஆட விழை கணவர் தோள் – கலிங்:42/1

மேல்

குழையிலே (1)

அஞ்சியே கழல் கெட கூடலில் பொருது சென்று அணி கடை குழையிலே விழ அடர்த்து எறிதலால் – கலிங்:32/1

மேல்

குளப்பு (1)

அளப்பரிய குளப்பு கால் அகப்பைகளாக கொள்ளீரே – கலிங்:548/2

மேல்

குளம் (2)

குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை – கலிங்:253/1
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே – கலிங்:503/2

மேல்

குளிக்கும் (1)

உழப்பி வரு முகில் முழக்கி அலை கடல் குளிக்கும் முகில்களும் இடக்கவே – கலிங்:356/2

மேல்

குளித்த (2)

குளித்த போழ்து கைப்பிடித்த கூர் மழுக்கள் ஒக்குமே – கலிங்:431/2
மார்பிடையில் குளித்த பகழியை வார் சிலையில் தொடுத்து விடுவரே – கலிங்:436/2

மேல்

குளிப்ப (1)

நெடும் குதிரை மிசை கலணை சரிய பாய்ந்து நிண சேற்றில் கால் குளிப்ப நிரையே நின்று – கலிங்:476/1

மேல்

குளியீரே (1)

கருவி கட்டு மாட்டாதீர் கரைக்கே இருந்து குளியீரே – கலிங்:508/2

மேல்

குளிர் (2)

குடை நிரைத்தலின் தழை நெருக்கலின் கொடி விரித்தலின் குளிர் சதுக்கம் ஒத்து – கலிங்:345/1
கோதாவரி நதி மேல் ஆறொடு குளிர் பம்பா நதியொடு சந்த பேர் – கலிங்:369/1

மேல்

குளிர்ந்த (1)

கொதித்த கரியின் கும்பத்து குளிர்ந்த தண்ணீர்-தனை மொண்டு – கலிங்:582/1

மேல்

குளிர (1)

உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக – கலிங்:303/1

மேல்

குளிரவைத்து (1)

கும்பங்களிலே முகந்து எடுத்து குளிரவைத்து கொள்ளீரே – கலிங்:556/2

மேல்

குளிறு (1)

குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும் – கலிங்:202/2

மேல்

குற்றீரே (1)

தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே – கலிங்:526/2

மேல்

குறள் (1)

கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும் – கலிங்:150/2

மேல்

குறி (3)

தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:26/2
பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் பாய் புலி குறி பொறித்து அது மறித்த பொழுதே – கலிங்:178/2
சதுரர்கள் மணி அகலத்து மருப்பு அவை சயமகள் களப முலை குறி ஒத்ததே – கலிங்:417/2

மேல்

குறித்து (3)

இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில் – கலிங்:28/1
அ நிலத்தின் மேல் வெம்மையை குறித்து அல்லவோ நிலத்து அடி இடாததே – கலிங்:84/2
விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின் – கலிங்:87/1

மேல்

குறியாக (1)

குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து – கலிங்:468/1

மேல்

குறியால் (1)

ஈ கதுவும் குறியால் உய்ந்து இருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும் – கலிங்:219/2

மேல்

குறியிலே (1)

கோப்பு எலாம் குலைந்தோர்-தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே – கலிங்:262/2

மேல்

குறியும் (2)

உங்கள் குறியும் வட கலிங்கத்து உள்ள குறியும் உமக்கு அழகே – கலிங்:226/1
உங்கள் குறியும் வட கலிங்கத்து உள்ள குறியும் உமக்கு அழகே – கலிங்:226/1

மேல்

குறியை (1)

முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல் – கலிங்:47/1

மேல்

குறு (2)

கூடும் இளம்பிறையில் குறு வெயர் முத்து உருள கொங்கை வடம் புரள செங்கழுநீர் அளக – கலிங்:62/1
குறு மோடீ நெடு நிணமாலாய் குடை கலதீ கூரெயிறீ நீலி – கலிங்:504/1

மேல்

குறுகலர்கள் (1)

குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை – கலிங்:253/1

மேல்

குறுகலும் (1)

குட திசை புக கடவு குரகத ரதத்து இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல் – கலிங்:251/1

மேல்

குறுகி (1)

குழறி தரு கருநாடியர் குறுகி கடை திற-மின் – கலிங்:43/2

மேல்

குறை (2)

துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் – கலிங்:165/1
தேவர் எலாம் குறை இரப்ப தேவகி-தன் திரு வயிற்றில் வசுதேவற்கு – கலிங்:233/1

மேல்

குறைத்தலை (3)

கொக்கரித்து அலகை சுற்ற மற்று இவை குறைத்தலை பிணம் மிதப்ப பார் – கலிங்:163/2
அற்ற குறைத்தலை என்று விசும்பை அதுக்கும் எயிற்றினவே – கலிங்:170/2
குறைத்தலை துணி கொல்லன் எஃகு எறி கூடம் ஒத்தமை காண்-மினோ – கலிங்:497/2

மேல்

குறையாத (1)

கலத்தில் கொள்ள குறையாத கலங்கள் பெருக்கி கொள்ளீரே – கலிங்:560/2

மேல்

குறையாது (1)

வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை – கலிங்:467/1

மேல்

குறையுடலம் (1)

கொடுத்த சிரம் கொற்றவையை பரவுமாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ – கலிங்:111/2

மேல்

குறையும் (1)

வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி – கலிங்:466/1

மேல்

குன்றி (2)

மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி – கலிங்:258/1
வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும் – கலிங்:368/1

மேல்

குன்றின் (1)

நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் – கலிங்:181/2

மேல்

குன்று (4)

கொள்ளி கொண்டு இரண்டே முழை உட்புகின் குன்று தோன்றுவ போல விழிப்பன – கலிங்:138/2
எளியன் என்றிடினும் வலிய குன்று அரணம் இடிய நம் படைஞர் கடிது சென்று – கலிங்:340/1
குன்று இவை செரு தொழில் பெறாது நெடு நாள் மெலிவு கொண்டபடி கண்டும் இலையோ – கலிங்:390/2
குன்று குனிப்பன போல் களத்து கும்பிட்டே நடமிட்டனவே – கலிங்:585/2

மேல்

குனிதலின் (1)

புவி புரந்து அருள்செயும் சயதரன் ஒருமுறை புணரி மேல் அணைபட பொருவில் வில் குனிதலின்
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ – கலிங்:494/1,2

மேல்

குனிப்ப (1)

தடித்தனம் என தலை தடித்தனம் என பல தனி பனை குனிப்ப எனவே – கலிங்:228/1

மேல்

குனிப்பன (1)

குன்று குனிப்பன போல் களத்து கும்பிட்டே நடமிட்டனவே – கலிங்:585/2

மேல்