கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீ 1
மீட்டால் 1
மீட்டு 1
மீண்டபடி 1
மீண்டான் 1
மீண்டு 6
மீண்டும் 2
மீதலத்து 1
மீது 8
மீதே 4
மீள் 1
மீள 3
மீளும் 1
மீளும்-கொல் 1
மீன் 3
மீன 1
மீனின் 1
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்
மீ (1)
வண் தமிழ்வாணர் பிழைத்த வான் குடி போல் தீ தழல் மீ
மண்டு கொடும் சுரத்து ஓர் மாடு இருந்து பண்டை உள – நள:311/1,2
மீட்டால் (1)
வெம் கலி வாய் நின்று உலகம் மீட்டால் போல் மங்கையை வெம் – நள:306/2
மீட்டு (1)
மோட்டு வயிற்று அரவு முன் தோன்ற மீட்டு அதனை – நள:298/2
மீண்டபடி (1)
தான் அணுகி மீண்டபடி சாற்றவே தேன் முரலும் – நள:97/2
மீண்டான் (1)
விற்கும் மகளிர்-பால் மீண்டான் போல் நிற்கும் – நள:228/2
மீண்டு (6)
நீண்ட முகில் தடுத்து நின்றாற்கு மீண்டு அமரர் – நள:14/2
மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில் – நள:84/2
மென் மொழியும் சென்று உரைத்தான் மீண்டு – நள:98/4
போய் ஒரு கால் மீளும் புகுந்து ஒரு கால் மீண்டு ஏகும் – நள:283/1
விதியிலே போந்தாளை மீண்டு – நள:328/4
மீண்டு ஓர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை – நள:369/1
மீண்டும் (2)
ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கி மீண்டும்
குழியில் படு கரி போல் கோமான் கிடந்தான் – நள:71/2,3
வேத மொழி வாணன் மீண்டும் சுயம்வரத்தை – நள:371/1
மீதலத்து (1)
போக்கினேன் என்று உரைத்தான் பூதலத்து மீதலத்து
வாக்கில் நேர் இல்லாத மன் – நள:13/3,4
மீது (8)
தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு – நள:28/3
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம் – நள:61/2
உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது
வெள்ள வாள் நீர் சோர விட்டு – நள:92/3,4
மா நீர் நெடும் கயத்து வள்ளை கொடி மீது
தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள் – நள:155/1,2
வீரன் அகல செறுவின் மீது ஓடி குங்குமத்தின் – நள:176/1
மீது ஆடி வாளை வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன் – நள:216/3
அந்த நெடும் சுரத்தின் மீது ஏக ஆங்கு அழலும் – நள:267/1
மண்ணின் மீது என்றனை நின் வன் தாளால் ஒன்று முதல் – நள:342/1
மீதே (4)
சோர் குழலின் மீதே சொரிவது எவன் மாரன் – நள:117/2
விரிகின்ற மெல் அமளி வெண் நிலவின் மீதே
சொரிகிற கார் இருள் போல் சோரும் புரி குழலை – நள:128/1,2
மீதே சிலை உயர்ந்த வேந்து – நள:143/4
பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும் – நள:318/2
மீள் (1)
வீமன் திருநகர்க்கே மீள் என்றான் விண்ணவர் முன் – நள:243/3
மீள (3)
என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த – நள:69/2
விழுந்திருக்கும் தன் உடம்பை மீள செழும் தரள – நள:127/2
மழை மேலும் வாள் ஓடி மீள விழை மேலே – நள:175/2
மீளும் (1)
போய் ஒரு கால் மீளும் புகுந்து ஒரு கால் மீண்டு ஏகும் – நள:283/1
மீளும்-கொல் (1)
மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று – நள:47/3
மீன் (3)
வெள்ளம் போய் வேகின்ற மென் தளிர் போல் பிள்ளை மீன்
புள் அரிக்கும் நாடன் திருமடந்தை பூ வாளி – நள:102/2,3
மீன் பொதிந்து நின்ற விசும்பு என்பது என்-கொலோ – நள:111/3
வெள் வாளை காளை மீன் மேதி குலம் எழுப்ப – நள:153/1
மீன (1)
வானும் தேர் வீதி மறி கடலும் மீன
கொடி ஆடை வையம் எல்லாம் கோதண்ட சாலை – நள:112/2,3
மீனின் (1)
விட கதிர் வேல் காளை இவன் கண்டாய் மீனின்
தொடக்கு ஒழிய போய் நிமிர்ந்த தூண்டில் மடல் கமுகின் – நள:149/1,2