கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கெசன் 1
கெட்ட 3
கெட்டது 5
கெட்டன 1
கெட்டனம் 1
கெட்டனர் 2
கெட்டாய் 1
கெட்டார் 1
கெட்டால் 1
கெட்டு 3
கெட்டேம் 1
கெட்டேன் 6
கெட 59
கெடல் 1
கெடா 1
கெடாத 1
கெடாது 3
கெடாமல் 1
கெடாமே 1
கெடுக்கலுற்றாய் 1
கெடுக்கும் 2
கெடுத்தது 4
கெடுத்தவட்கு 1
கெடுத்தனை 2
கெடுத்திடல் 1
கெடுத்து 5
கெடுத்துளோரும் 1
கெடுத்தேன் 1
கெடுதல் 3
கெடுப்பல் 1
கெடுப்பவர் 1
கெடும் 3
கெடுவர் 1
கெடுவன 1
கெடுவாய் 2
கெடுவார்கள் 1
கெடுவீர் 1
கெடுவேன் 1
கெடுவேனே 1
கெண்டை 7
கெண்டையும் 1
கெந்தமாதன் 1
கெந்தமாதனன் 1
கெவனொடு 1
கெவாக்கன் 1
கெழீஇ 1
கெழீஇய 2
கெழு 56
கெழுந்தகைக்கு 1
கெழுமி 3
கெழுமு 3
கெழுவா 1
கெழுவு 3
தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்
கெசன் (1)
நவை அறு பனசன் தாரன் கெசன் நளன் சமீரன் நண்பாம் – யுத்4-மிகை:42 41/3
கெட்ட (3)
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என – சுந்:12 26/1
கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு – யுத்3:29 14/1
கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப முன்பு தாம் – யுத்4-மிகை:41 273/1
கெட்டது (5)
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – சுந்:11 26/3
கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும் – யுத்1:2 12/2
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது இங்கு – யுத்2-மிகை:15 39/2
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம் – யுத்4:34 16/3
கெட்டது இன்று இனி தென்புலம் கேடு வந்து எய்தி – யுத்4-மிகை:41 37/1
கெட்டன (1)
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை – யுத்3:26 9/3
கெட்டனம் (1)
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார் – யுத்4:37 103/3
கெட்டனர் (2)
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் – சுந்:6 54/4
கெட்டனர் என்பது கேளலை என்னா – யுத்3:20 19/3
கெட்டாய் (1)
கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம் – ஆரண்:13 8/1
கெட்டார் (1)
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – பால:13 8/2
கெட்டால் (1)
தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ வண்மை தக்கோர் – யுத்1:8 18/4
கெட்டு (3)
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர் – அயோ:4 29/3
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – ஆரண்:1 33/4
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – யுத்2:15 170/2
கெட்டேம் (1)
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – சுந்:11 25/3
கெட்டேன் (6)
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ – அயோ:3 95/2
ஆற்றேன் ஆற்றேன் அது கெட்டேன் அறுத்தான் அறுத்தான் என் மூக்கை – ஆரண்-மிகை:7 1/1
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும் – கிட்:16 15/2
கெட்டேன் நீ உயிர் கேதத்தால் – சுந்:5 47/1
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – யுத்1:4 124/4
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன்
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – யுத்4:38 24/3,4
கெட (59)
சந்திரன் ஒளி கெட தழைப்ப தண் நிலா – பால:3 44/4
முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா – பால:5 108/3
கெட கருவறுத்தனென் இனி சுவை கிடக்கும் – பால:7 33/2
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை – பால:14 13/2
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – பால:14 13/3
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – பால:18 14/1
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட
கூடுகெனோ அவன் குணங்கள் வீணையில் – பால:19 31/2,3
ஓவியம் சுவை கெட பொலிவது ஓர் உருவொடே – பால:20 22/2
அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – பால:22 39/3
மாலை மால் கெட வணங்குதும் மகிழ்ந்தே – பால-மிகை:0 2/2
கடி கெட அமரர்கள் கதிரும் உட்கிட – பால-மிகை:7 14/2
வெம் குல புலன் கெட வீடு நண்ணினார் – அயோ:1 16/3
சுற்றமும் கெட சுடு துயர் கடல் விழ துணிந்தாய் – அயோ:2 82/4
பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் – அயோ:3 13/3
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப – அயோ:4 112/2
புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம் – அயோ:4 117/1
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – அயோ:4 186/2
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – அயோ:4 211/2
துன்ன_அரும் துயர் கெட தூய கோசலை – அயோ:11 86/3
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன் – அயோ:11 96/1
முன்னையர் முறை கெட முடித்த பாவியை – அயோ:12 55/1
வெயில் விரி கனக குன்றத்து எழில் கெட விலகு சோதி – அயோ-மிகை:8 4/1
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – ஆரண்:4 25/2
திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம் – ஆரண்:11 28/1
பரப்பும் இருள் குறும்பு எறித்த பகல் ஒளியும் கெட துரந்து பருவ மேகத்து – ஆரண்-மிகை:10 2/2
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட
தீ பொடித்தன விழி தேவர் நாட்டினும் – கிட்:7 16/2,3
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட
கருடனை பொருவின் கால மாரியே – கிட்:10 21/3,4
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கிட்:17 17/4
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – சுந்:1 28/3
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – சுந்:2 197/1
முந்து அனங்க வசந்தன் முகம் கெட
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே – சுந்:6 26/3,4
இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார் – சுந்:7 16/3
வள்ளல் கடலை கெட நீக்கி மருந்து வவ்வி – சுந்-மிகை:1 5/3
விலங்கினர் உயிர் கெட விலக்கி மீள்கலாது – யுத்1:2 20/1
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – யுத்1:5 69/3
இருள் கெட சென்றன இரவி போல்வன – யுத்1:6 46/4
ஏதம் கெட வந்து இரவு ஓட்டிலையோ – யுத்1-மிகை:3 19/4
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட
முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற – யுத்2:15 41/1,2
மாலினார் கெட வாகையே – யுத்2:16 112/3
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – யுத்2:16 143/4
காலிடை கடல் என சிந்தி கை கெட
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – யுத்2:16 298/3,4
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – யுத்2:16 337/3
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – யுத்2:17 65/1
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – யுத்2:17 65/2
திறம் கெட ஒழுக்கம் குன்ற தேவரும் பேண தக்க – யுத்2:17 65/3
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – யுத்2:17 65/4
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – யுத்2:17 66/1
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – யுத்2:17 66/3
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – யுத்2:19 21/2
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 26/1
துயில் கெட கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை – யுத்3:21 31/4
முறை கெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின் – யுத்3:26 5/1
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – யுத்3:26 18/4
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – யுத்3:26 72/1
விறல் கெட சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர் – யுத்3:30 18/3
பிமரம் கெட அவர்-தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய – யுத்3-மிகை:31 28/3
படை உக இமையவர் பருவரல் கெட வந்து – யுத்4:37 87/1
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் தம் – யுத்4:38 19/3
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – யுத்4:42 14/4
கெடல் (1)
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – அயோ:2 21/4
கெடா (1)
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – யுத்2:17 71/3
கெடாத (1)
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – யுத்2:16 2/1
கெடாது (3)
மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று – பால-மிகை:11 34/3
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல் – அயோ:2 52/2
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை – யுத்3:26 9/3
கெடாமல் (1)
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – யுத்3:24 62/1
கெடாமே (1)
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல் – யுத்4:32 41/3
கெடுக்கலுற்றாய் (1)
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – யுத்1:12 37/4
கெடுக்கும் (2)
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – பால:12 24/1
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – யுத்2:15 127/4
கெடுத்தது (4)
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – ஆரண்:13 69/4
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/3,4
வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்தது உன் வெகுளி என்றான் – யுத்1:12 27/4
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா – யுத்1:13 14/3
கெடுத்தவட்கு (1)
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – பால:7 40/4
கெடுத்தனை (2)
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும் – யுத்2:16 78/2
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – யுத்2:19 226/4
கெடுத்திடல் (1)
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – யுத்1:3 26/4
கெடுத்து (5)
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர் – அயோ:2 83/1
கேடு அகல் படியினை கெடுத்து கேடு இலா – அயோ-மிகை:1 8/1
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால் – கிட்:3 56/2
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய் – யுத்1:3 24/1
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – யுத்2:19 239/3
கெடுத்துளோரும் (1)
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 61/4
கெடுத்தேன் (1)
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – சுந்:3 119/2
கெடுதல் (3)
களித்தவர் கெடுதல் திண்ணம் சனகியை கபடன் வவ்வி அன்று – கிட்-மிகை:16 5/1
கீழ்மையோர் சொல்-கொடு கெடுதல் நேர்தியோ – யுத்1:4 10/3
செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால் – யுத்1:4 70/2
கெடுப்பல் (1)
பாங்குற நட்டு வாலி பருவரல் கெடுப்பல் என்னா – யுத்4-மிகை:41 236/2
கெடுப்பவர் (1)
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான் – பால:8 21/4
கெடும் (3)
எ திருக்கும் கெடும் என்பதை எண்ணா – பால:5 118/3
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – யுத்1:9 52/2
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/4
கெடுவர் (1)
தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ – ஆரண்:11 31/2
கெடுவன (1)
வெறுமைகள் கெடுவன விழி குழி கழுதுகள் – யுத்2:18 131/4
கெடுவாய் (2)
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கிட்:10 56/4
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை பாவி எ தேவரும் பகர்தற்கு – யுத்1:3 24/1,2
கெடுவார்கள் (1)
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – யுத்2:19 256/2
கெடுவீர் (1)
சென்று சேனையை உற்றனன் சிறை சிறை கெடுவீர்
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – யுத்3:31 35/1,2
கெடுவேன் (1)
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – அயோ:4 64/3
கெடுவேனே (1)
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – யுத்3:22 204/4
கெண்டை (7)
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – பால:10 18/2
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த – பால:21 9/1
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கிட்:1 25/2
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கிட்:13 58/2
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கிட்:15 43/2
கெண்டை தடம் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள் – யுத்2:17 87/4
கின்னரர் முதலோர் பாட முகத்திடை கிடந்த கெண்டை
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான் – யுத்3:25 1/3,4
கெண்டையும் (1)
கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த – அயோ:1 54/4
கெந்தமாதன் (1)
கெவனொடு கெவாக்கன் தூம்பன் கேசரி கெந்தமாதன்
தவன் உறு சரபன் சாம்பன் சுடேணன் சம்பாதி நீலன் – யுத்4-மிகை:42 41/1,2
கெந்தமாதனன் (1)
கெந்தமாதனன் இடும்பன் வன் ததிமுகன் கிளர – யுத்3:22 175/2
கெவனொடு (1)
கெவனொடு கெவாக்கன் தூம்பன் கேசரி கெந்தமாதன் – யுத்4-மிகை:42 41/1
கெவாக்கன் (1)
கெவனொடு கெவாக்கன் தூம்பன் கேசரி கெந்தமாதன் – யுத்4-மிகை:42 41/1
கெழீஇ (1)
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என – யுத்3:24 66/2
கெழீஇய (2)
கீண்டன தகர்ந்து பின்னை பொடியொடும் கெழீஇய அன்றே – கிட்:11 82/4
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – யுத்2:16 159/2
கெழு (56)
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – பால:2 19/2
திரை கெழு பயோததி துயிலும் தெய்வ வான் – பால:5 9/1
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும் – பால:5 109/4
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/4
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை – பால:14 62/3
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான் – பால:18 12/2
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு – பால:19 43/1
இசை கெழு வசு என்று ஓதும் இவர் பெயர் இவர்கள்-தம்முள் – பால-மிகை:8 3/2
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – அயோ:1 54/1
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – அயோ:1 81/2
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும் – அயோ:2 42/1
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர் – அயோ:3 96/2
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/4
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – அயோ:5 42/2
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – அயோ:7 9/2
இயம் கெழு தானையர் இறுத்த மா திறை – அயோ:11 53/1
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய – அயோ:11 53/3
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – ஆரண்:6 114/3
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – ஆரண்:7 67/1
தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும் – ஆரண்:12 27/1
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – ஆரண்:12 58/3
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – ஆரண்:12 63/4
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கிட்:12 4/2
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கிட்:13 30/1
போர் கெழு வீரரே குழுமி போகின்றார் – கிட்:14 19/2
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர் – கிட்:17 4/1
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – சுந்:1 15/4
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க – சுந்:3 79/2
தளம் கெழு கற்பக முகிழும் தண் துறை – சுந்:4 40/1
ஏர் கெழு கதியும் சாரி பதினெட்டும் இயல்பின் எண்ணி – சுந்:8 13/1
போர் கெழு படையும் கற்ற வித்தக புலவர் போரில் – சுந்:8 13/2
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும் – சுந்:8 13/3
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – சுந்:8 13/4
குடை கெழு மன்னன் இல் கொண்டு போயினான் – சுந்:12 24/4
நீர் கெழு வேலை நிமிர்ந்தார் – சுந்:13 45/1
தார் கெழு தானை சமைந்தார் – சுந்:13 45/2
போர் கெழு மாலை புனைந்தார் – சுந்:13 45/3
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
குலம் கெழு காவல குரங்கின் தங்குமோ – யுத்1:2 20/3
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும் – யுத்1:5 15/2
தார் கெழு தானையின் அளவும் தன்மையும் – யுத்1:5 15/3
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – யுத்1:5 15/4
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – யுத்1:12 45/3
பொலம் கெழு சீதைக்கேயோ பொரு வலி இராமற்கேயோ – யுத்1:13 23/3
சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் – யுத்1-மிகை:11 6/4
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/4
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு
கடலொடு பொருதது கரியொடு கரி என – யுத்2:18 132/3,4
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – யுத்3:22 17/2
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – யுத்3:28 20/3
வீடணன் அமலனை விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல் – யுத்3:28 21/1
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – யுத்3:28 26/2
விராதனும் கரனும் மானும் விறல் கெழு கவந்தன்-தானும் – யுத்4:41 42/1
ஊர் கெழு கூவல் வீழ்ந்த உயிர் பசு எடாது போவோர் – யுத்4-மிகை:41 76/3
வார் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் – யுத்4-மிகை:41 76/4
வளம் கெழு கயிலை ஈசன் மலர் அயன் மறைகள் நான்கும் – யுத்4-மிகை:41 297/1
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து செய்ய – யுத்4-மிகை:42 30/2
கெழுந்தகைக்கு (1)
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ – ஆரண்:14 26/3
கெழுமி (3)
கிளையும் அந்தர மிசை கெழுமி ஆர்ப்பு உற – பால:5 103/2
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – சுந்:3 84/3,4
கிளர் பெரும் படை கடல் கெழுமி போந்ததால் – யுத்2-மிகை:16 18/4
கெழுமு (3)
தளிர்த்தன கிளர்ந்த மேனி தாமரை கெழுமு செந்தேன் – ஆரண்:13 136/1
நெடிது அடைய குடர் கெழுமு நிணத்தாள் – ஆரண்:14 46/2
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கிட்:3 15/4
கெழுவா (1)
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா – யுத்2:19 266/3
கெழுவு (3)
வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு – பால:20 9/1
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர் – ஆரண்:12 38/1
ஊன்முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியை சீறி – யுத்4-மிகை:41 247/3