| | |
| #276 மருதம்
பரணர் | #276 மருதம் பரணர் |
| நீள் இரும்
பொய்கை இரை வேட்டு எழுந்த | நீள் இரும் பொய்கை இரை
வேட்டு எழுந்த |
| வாளை வெண்
போத்து உணீஇய நாரை தன் | வாளை வெண் போத்து
உணீஇய நாரை தன் |
| அடி அறிவுறுதல்
அஞ்சி பைபய | அடி அறிவுறுதல் அஞ்சி
பைபய |
| கடி இலம்
புகூஉம் கள்வன் போல | கடி இலம் புகூஉம்
கள்வன் போல |
| சாஅய்
ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு | சாஅய் ஒதுங்கும் துறை
கேழ் ஊரனொடு |
| ஆவது ஆக இனி
நாண் உண்டோ | ஆவது ஆக இனி நாண்
உண்டோ |
| வருக தில் அம்ம
எம் சேரி சேர | வருக தில் அம்ம எம்
சேரி சேர |
| அரி வேய்
உண்கண் அவன் பெண்டிர் காண | அரி வேய் உண்கண் அவன்
பெண்டிர் காண |
| தாரும்
தானையும் பற்றி ஆரியர் | தாரும் தானையும் பற்றி
ஆரியர் |
| பிடி பயின்று
தரூஉம் பெரும் களிறு போல | பிடி பயின்று தரூஉம்
பெரும் களிறு போல |
| தோள் கந்து ஆக
கூந்தலின் பிணித்து அவன் | தோள் கந்து ஆக
கூந்தலின் பிணித்து அவன் |
| மார்பு கடி
கொள்ளேன் ஆயின் ஆர்வு_உற்று | மார்பு கடி கொள்ளேன்
ஆயின் ஆர்வு_உற்று |
| இரந்தோர்க்கு
ஈயாது ஈட்டியோன் பொருள் போல் | இரந்தோர்க்கு ஈயாது
ஈட்டியோன் பொருள் போல் |
| பரந்து
வெளிப்படாது ஆகி | பரந்து வெளிப்படாது
ஆகி |
| வருந்துக தில்ல
யாய் ஓம்பிய நலனே | வருந்துக தில்ல யாய்
ஓம்பிய நலனே |
| | |
| #277 பாலை
கருவூர் நன்மார்பன் | #277 பாலை கருவூர்
நன்மார்பன் |
| தண் கதிர்
மண்டிலம் அவிர் அற சாஅய் | தண் கதிர் மண்டிலம்
அவிர் அற சாஅய் |
| பகல் அழி
தோற்றம் போல பையென | பகல் அழி தோற்றம் போல
பையென |
| நுதல் ஒளி
கரப்பவும் ஆள்வினை தரும்-மார் | நுதல் ஒளி கரப்பவும்
ஆள்வினை தரும்-மார் |
| தவல் இல்
உள்ளமொடு எஃகு துணை ஆக | தவல் இல் உள்ளமொடு
எஃகு துணை ஆக |
| கடையல் அம்
குரல வாள் வரி உழுவை | கடையல் அம் குரல வாள்
வரி உழுவை |
| பேழ் வாய்
பிணவின் விழு பசி நோனாது | பேழ் வாய் பிணவின்
விழு பசி நோனாது |
| இரும் பனம்
செறும்பின் அன்ன பரூஉ மயிர் | இரும் பனம் செறும்பின்
அன்ன பரூஉ மயிர் |
| சிறு கண் பன்றி
வரு_திறம் பார்க்கும் | சிறு கண் பன்றி
வரு_திறம் பார்க்கும் |
| அத்தம் ஆர்
அழுவத்து ஆங்கண் நனம் தலை | அத்தம் ஆர் அழுவத்து
ஆங்கண் நனம் தலை |
| பொத்து உடை
மரத்த புகர் படு நீழல் | பொத்து உடை மரத்த
புகர் படு நீழல் |
| ஆறு செல்
வம்பலர் அசையுநர் இருக்கும் | ஆறு செல் வம்பலர்
அசையுநர் இருக்கும் |
| ஈரம் இல் வெம்
சுரம் இறந்தோர் நம்_வயின் | ஈரம் இல் வெம் சுரம்
இறந்தோர் நம்_வயின் |
| வாரா அளவை
ஆய்_இழை கூர் வாய் | வாரா அளவை ஆய்_இழை
கூர் வாய் |
| அழல் அகைந்து
அன்ன காமர் துதை மயிர் | அழல் அகைந்து அன்ன
காமர் துதை மயிர் |
| மனை உறை கோழி
மறன் உடை சேவல் | மனை உறை கோழி மறன் உடை
சேவல் |
| போர் புரி
எருத்தம் போல கஞலிய | போர் புரி எருத்தம்
போல கஞலிய |
| பொங்கு அழல்
முருக்கின் ஒண் குரல் மாந்தி | பொங்கு அழல்
முருக்கின் ஒண் குரல் மாந்தி |
| சிதர்
சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் | சிதர் சிதர்ந்து
உகுத்த செவ்வி வேனில் |
| வந்தன்று அம்ம
தானே | வந்தன்று அம்ம தானே |
| வாரார் தோழி
நம் காதலோரே | வாரார் தோழி நம்
காதலோரே |
| | |
| #278 குறிஞ்சி | #278 குறிஞ்சி |
| குண கடல்
முகந்த கொள்ளை வானம் | குண கடல் முகந்த
கொள்ளை வானம் |
| பணை கெழு
வேந்தர் பல் படை தானை | பணை கெழு வேந்தர் பல்
படை தானை |
| தோல் நிரைத்து
அனைய ஆகி வலன் ஏர்பு | தோல் நிரைத்து அனைய
ஆகி வலன் ஏர்பு |
| கோல் நிமிர்
கொடியின் வசி பட மின்னி | கோல் நிமிர் கொடியின்
வசி பட மின்னி |
| உரும் உரறு
அதிர் குரல் தலைஇ பானாள் | உரும் உரறு அதிர்
குரல் தலைஇ பானாள் |
| பெரு மலை
மீமிசை முற்றின ஆயின் | பெரு மலை மீமிசை
முற்றின ஆயின் |
| வாள் இலங்கு
அருவி தாஅய் நாளை | வாள் இலங்கு அருவி
தாஅய் நாளை |
| இரு வெதிர் அம்
கழை ஒசிய தீண்டி | இரு வெதிர் அம் கழை
ஒசிய தீண்டி |
| வருவது மாதோ
வண் பரி உந்தி | வருவது மாதோ வண் பரி
உந்தி |
| நனி பெரும்
பரப்பின் நம் ஊர் முன்துறை | நனி பெரும் பரப்பின்
நம் ஊர் முன்துறை |
| பனி பொரு மழை
கண் சிவப்ப பானாள் | பனி பொரு மழை கண்
சிவப்ப பானாள் |
| முனி படர் அகல
மூழ்குவம்-கொல்லோ | முனி படர் அகல
மூழ்குவம்-கொல்லோ |
| மணி மருள் மேனி
ஆய் நலம் தொலைய | மணி மருள் மேனி ஆய்
நலம் தொலைய |
| தணிவு அரும்
துயரம் செய்தோன் | தணிவு அரும் துயரம்
செய்தோன் |
| அணி கிளர் நெடு
வரை ஆடிய நீரே | அணி கிளர் நெடு வரை
ஆடிய நீரே |
| | |
| #279 பாலை
இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் | #279 பாலை இருங்கோன்
ஒல்லையாயன் செங்கண்ணனார் |
| நட்டோர்
இன்மையும் கேளிர் துன்பமும் | நட்டோர் இன்மையும்
கேளிர் துன்பமும் |
| ஒட்டாது
உறையுநர் பெருக்கமும் காணூஉ | ஒட்டாது உறையுநர்
பெருக்கமும் காணூஉ |
| ஒரு பதி
வாழ்தல் ஆற்றுப தில்ல | ஒரு பதி வாழ்தல்
ஆற்றுப தில்ல |
| பொன் அவிர்
சுணங்கொடு செறிய வீங்கிய | பொன் அவிர் சுணங்கொடு
செறிய வீங்கிய |
| மென் முலை
முற்றம் கடவாதோர் என | மென் முலை முற்றம்
கடவாதோர் என |
| நள்ளென்
கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து | நள்ளென் கங்குலும்
பகலும் இயைந்து_இயைந்து |
| உள்ளம் பொத்திய
உரம் சுடு கூர் எரி | உள்ளம் பொத்திய உரம்
சுடு கூர் எரி |
| ஆள்வினை
மாரியின் அவியா நாளும் | ஆள்வினை மாரியின்
அவியா நாளும் |
| கடறு உழந்து
இவணம் ஆக படர் உழந்து | கடறு உழந்து இவணம் ஆக
படர் உழந்து |
| யாங்கு
ஆகுவள்-கொல் தானே தீம் தொடை | யாங்கு ஆகுவள்-கொல்
தானே தீம் தொடை |
| விளரி நரம்பின்
நயவரு சீறியாழ் | விளரி நரம்பின் நயவரு
சீறியாழ் |
| மலி பூ பொங்கர்
மகிழ் குரல் குயிலொடு | மலி பூ பொங்கர் மகிழ்
குரல் குயிலொடு |
| புணர் துயில்
எடுப்பும் புனல் தெளி காலையும் | புணர் துயில்
எடுப்பும் புனல் தெளி காலையும் |
| நம் உடை
மதுகையள் ஆகி அணி நடை | நம் உடை மதுகையள் ஆகி
அணி நடை |
| அன்ன மாண்
பெடையின் மென்மெல இயலி | அன்ன மாண் பெடையின்
மென்மெல இயலி |
| கையறு
நெஞ்சினள் அடைதரும் | கையறு நெஞ்சினள்
அடைதரும் |
| மை ஈர் ஓதி
மாஅயோளே | மை ஈர் ஓதி மாஅயோளே |
| | |
| #280 நெய்தல்
அம்மூவனார் | #280 நெய்தல்
அம்மூவனார் |
| பொன் அடர்ந்து
அன்ன ஒள் இணர் செருந்தி | பொன் அடர்ந்து அன்ன
ஒள் இணர் செருந்தி |
| பன் மலர்
வேய்ந்த நலம் பெறு கோதையள் | பன் மலர் வேய்ந்த நலம்
பெறு கோதையள் |
| திணி மணல்
அடைகரை அலவன் ஆட்டி | திணி மணல் அடைகரை
அலவன் ஆட்டி |
| அசையினள்
இருந்த ஆய் தொடி குறு_மகள் | அசையினள் இருந்த ஆய்
தொடி குறு_மகள் |
| நலம் சால் விழு
பொருள் கலம் நிறை கொடுப்பினும் | நலம் சால் விழு பொருள்
கலம் நிறை கொடுப்பினும் |
| பெறல்
அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து | பெறல் அரும்-குரையள்
ஆயின் அறம் தெரிந்து |
| நாம் உறை தேஎம்
மரூஉ பெயர்ந்து அவனொடு | நாம் உறை தேஎம் மரூஉ
பெயர்ந்து அவனொடு |
| இரு நீர்
சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் | இரு நீர் சேர்ப்பின்
உப்பு உடன் உழுதும் |
| பெரு_நீர்
குட்டம் புணையொடு புக்கும் | பெரு_நீர் குட்டம்
புணையொடு புக்கும் |
| படுத்தனம்
பணிந்தனம் அடுத்தனம் இருப்பின் | படுத்தனம் பணிந்தனம்
அடுத்தனம் இருப்பின் |
| தருகுவன்-கொல்லோ
தானே விரி திரை | தருகுவன்-கொல்லோ தானே
விரி திரை |
| கண் திரள்
முத்தம் கொண்டு ஞாங்கர் | கண் திரள் முத்தம்
கொண்டு ஞாங்கர் |
| தேன் இமிர்
அகன் கரை பகுக்கும் | தேன் இமிர் அகன் கரை
பகுக்கும் |
| கானல் அம்
பெரும் துறை பரதவன் எமக்கே | கானல் அம் பெரும் துறை
பரதவன் எமக்கே |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| #281 பாலை
மாமூலனார் | #281 பாலை மாமூலனார் |
| செய்வது
தெரிந்திசின் தோழி அல்கலும் | செய்வது தெரிந்திசின்
தோழி அல்கலும் |
| அகலுள் ஆண்மை
அச்சு அற கூறிய | அகலுள் ஆண்மை அச்சு அற
கூறிய |
| சொல் பழுது
ஆகும் என்றும் அஞ்சாது | சொல் பழுது ஆகும்
என்றும் அஞ்சாது |
| ஒல்கு இயல் மட
மயில் ஒழித்த பீலி | ஒல்கு இயல் மட மயில்
ஒழித்த பீலி |
| வான் போழ் வல்
வில் சுற்றி நோன் சிலை | வான் போழ் வல் வில்
சுற்றி நோன் சிலை |
| அம் வார்
விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் | அம் வார் விளிம்பிற்கு
அமைந்த நொவ்வு இயல் |
| கனை குரல்
இசைக்கும் விரை செலல் கடும் கணை | கனை குரல் இசைக்கும்
விரை செலல் கடும் கணை |
| முரண் மிகு
வடுகர் முன் உற மோரியர் | முரண் மிகு வடுகர்
முன் உற மோரியர் |
| தென் திசை
மாதிரம் முன்னிய வரவிற்கு | தென் திசை மாதிரம்
முன்னிய வரவிற்கு |
| விண் உற ஓங்கிய
பனி இரும் குன்றத்து | விண் உற ஓங்கிய பனி
இரும் குன்றத்து |
| ஒண் கதிர்
திகிரி உருளிய குறைத்த | ஒண் கதிர் திகிரி
உருளிய குறைத்த |
| அறை இறந்து
அவரோ சென்றனர் | அறை இறந்து அவரோ
சென்றனர் |
| பறை அறைந்து
அன்ன அலர் நமக்கு ஒழித்தே | பறை அறைந்து அன்ன அலர்
நமக்கு ஒழித்தே |
| | |
| #282 குறிஞ்சி
தொல் கபிலன் | #282 குறிஞ்சி தொல்
கபிலன் |
| பெரு மலை
சிலம்பின் வேட்டம் போகிய | பெரு மலை சிலம்பின்
வேட்டம் போகிய |
| செறி மடை
அம்பின் வல் வில் கானவன் | செறி மடை அம்பின் வல்
வில் கானவன் |
| பொருது தொலை
யானை வெண் கோடு கொண்டு | பொருது தொலை யானை வெண்
கோடு கொண்டு |
| நீர் திகழ்
சிலம்பின் நன் பொன் அகழ்வோன் | நீர் திகழ் சிலம்பின்
நன் பொன் அகழ்வோன் |
| கண் பொருது
இமைக்கும் திண் மணி கிளர்ப்ப | கண் பொருது இமைக்கும்
திண் மணி கிளர்ப்ப |
| வை நுதி வான்
மருப்பு ஒடிய உக்க | வை நுதி வான் மருப்பு
ஒடிய உக்க |
| தெண் நீர் ஆலி
கடுக்கும் முத்தமொடு | தெண் நீர் ஆலி
கடுக்கும் முத்தமொடு |
| மூவேறு தாரமும்
ஒருங்குடன் கொண்டு | மூவேறு தாரமும்
ஒருங்குடன் கொண்டு |
| சாந்தம்
பொறை_மரம் ஆக நறை நார் | சாந்தம் பொறை_மரம் ஆக
நறை நார் |
| வேங்கை
கண்ணியன் இழிதரும் நாடற்கு | வேங்கை கண்ணியன்
இழிதரும் நாடற்கு |
| இன் தீம்
பலவின் ஏர் கெழு செல்வத்து | இன் தீம் பலவின் ஏர்
கெழு செல்வத்து |
| எந்தையும்
எதிர்ந்தனன் கொடையே அலர் வாய் | எந்தையும் எதிர்ந்தனன்
கொடையே அலர் வாய் |
| அம்பல் ஊரும்
அவனொடு மொழியும் | அம்பல் ஊரும் அவனொடு
மொழியும் |
| சாய் இறை
திரண்ட தோள் பாராட்டி | சாய் இறை திரண்ட தோள்
பாராட்டி |
| யாயும் அவனே
என்னும் யாமும் | யாயும் அவனே என்னும்
யாமும் |
| வல்லே வருக
வரைந்த நாள் என | வல்லே வருக வரைந்த
நாள் என |
| நல் இறை மெல்
விரல் கூப்பி | நல் இறை மெல் விரல்
கூப்பி |
| இல் உறை
கடவுட்கு ஓக்குதும் பலியே | இல் உறை கடவுட்கு
ஓக்குதும் பலியே |
| | |
| #283 பாலை
மதுரை மருதன் இளநாகனார் | #283 பாலை மதுரை
மருதன் இளநாகனார் |
| நன் நெடும்
கதுப்பொடு பெரும் தோள் நீவிய | நன் நெடும் கதுப்பொடு
பெரும் தோள் நீவிய |
| நின் இவண்
ஒழிதல் அஞ்சிய என்னினும் | நின் இவண் ஒழிதல்
அஞ்சிய என்னினும் |
| செலவு
தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி | செலவு தலைக்கொண்ட பெரு
விதுப்பு உறுவி |
| பல் கவர்
மருப்பின் முது மான் போக்கி | பல் கவர் மருப்பின்
முது மான் போக்கி |
| சில் உணா தந்த
சீறூர் பெண்டிர் | சில் உணா தந்த சீறூர்
பெண்டிர் |
| திரி வயின்
தெவுட்டும் சேண் புல குடிஞை | திரி வயின் தெவுட்டும்
சேண் புல குடிஞை |
| பைதல் மென்
குரல் ஐது வந்து இசைத்-தொறும் | பைதல் மென் குரல் ஐது
வந்து இசைத்-தொறும் |
| போகுநர்
புலம்பும் ஆறே ஏகுதற்கு | போகுநர் புலம்பும் ஆறே
ஏகுதற்கு |
| அரிய ஆகும்
என்னாமை கரி மரம் | அரிய ஆகும் என்னாமை
கரி மரம் |
| கண் அகை இளம்
குழை கால் முதல் கவினி | கண் அகை இளம் குழை
கால் முதல் கவினி |
| விசும்புடன்
இருண்டு வெம்மை நீங்க | விசும்புடன் இருண்டு
வெம்மை நீங்க |
| பசும் கண்
வானம் பாய் தளி பொழிந்து என | பசும் கண் வானம் பாய்
தளி பொழிந்து என |
| புல் நுகும்பு
எடுத்த நன் நெடும் கானத்து | புல் நுகும்பு எடுத்த
நன் நெடும் கானத்து |
| ஊட்டு_உறு
பஞ்சி பிசிர் பரந்து அன்ன | ஊட்டு_உறு பஞ்சி
பிசிர் பரந்து அன்ன |
| வண்ண மூதாய்
தண் நிலம் வரிப்ப | வண்ண மூதாய் தண் நிலம்
வரிப்ப |
| இனிய ஆகுக
தணிந்தே | இனிய ஆகுக தணிந்தே |
| இன்னா நீப்பின்
நின்னொடு செலற்கே | இன்னா நீப்பின்
நின்னொடு செலற்கே |
| | |
| #284 முல்லை
இடைக்காடனார் | #284 முல்லை
இடைக்காடனார் |
| சிறியிலை
நெல்லி காய் கண்டு அன்ன | சிறியிலை நெல்லி காய்
கண்டு அன்ன |
| குறு விழி கண்ண
கூரல் அம் குறு முயல் | குறு விழி கண்ண கூரல்
அம் குறு முயல் |
| முடந்தை வரகின்
வீங்கு பீள் அருந்துபு | முடந்தை வரகின் வீங்கு
பீள் அருந்துபு |
| குடந்தை அம்
செவிய கோள் பவர் ஒடுங்கி | குடந்தை அம் செவிய
கோள் பவர் ஒடுங்கி |
| இன் துயில்
எழுந்து துணையொடு போகி | இன் துயில் எழுந்து
துணையொடு போகி |
| முன்றில் சிறு
நிறை நீர் கண்டு உண்ணும் | முன்றில் சிறு நிறை
நீர் கண்டு உண்ணும் |
| புன்_புலம்
தழீஇய பொறை முதல் சிறுகுடி | புன்_புலம் தழீஇய பொறை
முதல் சிறுகுடி |
| தினை கள் உண்ட
தெறி கோல் மறவர் | தினை கள் உண்ட தெறி
கோல் மறவர் |
| விசைத்த
வில்லர் வேட்டம் போகி | விசைத்த வில்லர்
வேட்டம் போகி |
| முல்லை படப்பை
புல்வாய் கெண்டும் | முல்லை படப்பை
புல்வாய் கெண்டும் |
| காமர்
புறவினதுவே காமம் | காமர் புறவினதுவே
காமம் |
| நம்மினும் தான்
தலைமயங்கிய | நம்மினும் தான்
தலைமயங்கிய |
| அம் மா அரிவை
உறைவு இன் ஊரே | அம் மா அரிவை உறைவு
இன் ஊரே |
| | |
| #285 பாலை
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் | #285 பாலை
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் |
| ஒழிய செல்-மார்
செல்ப என்று நாம் | ஒழிய செல்-மார் செல்ப
என்று நாம் |
| அழி படர்
உழக்கும் அவல நெஞ்சத்து | அழி படர் உழக்கும் அவல
நெஞ்சத்து |
| எவ்வம் இகந்து
சேண் அகல வை எயிற்று | எவ்வம் இகந்து சேண்
அகல வை எயிற்று |
| ஊன் நசை
பிணவின் உறு பசி களைஇயர் | ஊன் நசை பிணவின் உறு
பசி களைஇயர் |
| காடு தேர் மட
பிணை அலற கலையின் | காடு தேர் மட பிணை அலற
கலையின் |
| ஓடு குறங்கு
அறுத்த செந்நாய் ஏற்றை | ஓடு குறங்கு அறுத்த
செந்நாய் ஏற்றை |
| வெயில் புலந்து
இளைக்கும் வெம்மைய பயில் வரி | வெயில் புலந்து
இளைக்கும் வெம்மைய பயில் வரி |
| இரும் புலி
வேங்கை கரும் தோல் அன்ன | இரும் புலி வேங்கை
கரும் தோல் அன்ன |
| கல் எடுத்து
எறிந்த பல் கிழி உடுக்கை | கல் எடுத்து எறிந்த
பல் கிழி உடுக்கை |
| உலறு குடை
வம்பலர் உயர் மரம் ஏறி | உலறு குடை வம்பலர்
உயர் மரம் ஏறி |
| ஏறு வேட்டு
எழுந்த இனம் தீர் எருவை | ஏறு வேட்டு எழுந்த
இனம் தீர் எருவை |
| ஆடு செவி
நோக்கும் அத்தம் பணை தோள் | ஆடு செவி நோக்கும்
அத்தம் பணை தோள் |
| குவளை உண்கண்
இவளும் நம்மொடு | குவளை உண்கண் இவளும்
நம்மொடு |
| வரூஉம் என்றனரே
காதலர் | வரூஉம் என்றனரே காதலர் |
| வாராய் தோழி
முயங்குகம் பலவே | வாராய் தோழி
முயங்குகம் பலவே |
| | |
| #286 மருதம்
ஓரம்போகியார் | #286 மருதம்
ஓரம்போகியார் |
| வெள்ளி விழு
தொடி மென் கருப்பு உலக்கை | வெள்ளி விழு தொடி மென்
கருப்பு உலக்கை |
| வள்ளி நுண் இடை
வயின்_வயின் நுடங்க | வள்ளி நுண் இடை
வயின்_வயின் நுடங்க |
| மீன் சினை அன்ன
வெண் மணல் குவைஇ | மீன் சினை அன்ன வெண்
மணல் குவைஇ |
| காஞ்சி நீழல்
தமர் வளம் பாடி | காஞ்சி நீழல் தமர்
வளம் பாடி |
| ஊர்
குறு_மகளிர் குறு_வழி விறந்த | ஊர் குறு_மகளிர்
குறு_வழி விறந்த |
| வராஅல்
அருந்திய சிறு சிரல் மருதின் | வராஅல் அருந்திய சிறு
சிரல் மருதின் |
| தாழ் சினை
உறங்கும் தண் துறை ஊர | தாழ் சினை உறங்கும்
தண் துறை ஊர |
| விழையா உள்ளம்
விழையும் ஆயினும் | விழையா உள்ளம்
விழையும் ஆயினும் |
| என்றும்
கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு | என்றும் கேட்டவை
தோட்டி ஆக மீட்டு ஆங்கு |
| அறனும்
பொருளும் வழாமை நாடி | அறனும் பொருளும் வழாமை
நாடி |
| தன் தகவு உடைமை
நோக்கி மற்று அதன் | தன் தகவு உடைமை நோக்கி
மற்று அதன் |
| பின் ஆகும்மே
முன்னியது முடித்தல் | பின் ஆகும்மே
முன்னியது முடித்தல் |
| அனைய பெரியோர்
ஒழுக்கம் அதனால் | அனைய பெரியோர்
ஒழுக்கம் அதனால் |
| அரிய பெரியோர்
தெரியும்_காலை | அரிய பெரியோர்
தெரியும்_காலை |
| நும்மோர்
அன்னோர் மாட்டும் இன்ன | நும்மோர் அன்னோர்
மாட்டும் இன்ன |
| பொய்யொடு
மிடைந்தவை தோன்றின் | பொய்யொடு மிடைந்தவை
தோன்றின் |
| மெய் யாண்டு
உளதோ இ உலகத்தானே | மெய் யாண்டு உளதோ இ
உலகத்தானே |
| | |
| #287 பாலை
குடவாயிற்கீரத்தனார் | #287 பாலை
குடவாயிற்கீரத்தனார் |
| தொடி அணி
முன்கை தொகு விரல் குவைஇ | தொடி அணி முன்கை தொகு
விரல் குவைஇ |
| படிவ நெஞ்சமொடு
பகல் துணை ஆக | படிவ நெஞ்சமொடு பகல்
துணை ஆக |
| நோம்-கொல்
அளியள் தானே தூங்கு நிலை | நோம்-கொல் அளியள் தானே
தூங்கு நிலை |
| மரை ஏறு
சொறிந்த மா தாள் கந்தின் | மரை ஏறு சொறிந்த மா
தாள் கந்தின் |
| சுரை இவர்
பொதியில் அம் குடி சீறூர் | சுரை இவர் பொதியில்
அம் குடி சீறூர் |
| நாள்_பலி மறந்த
நரை கண் இட்டிகை | நாள்_பலி மறந்த நரை
கண் இட்டிகை |
| புரிசை மூழ்கிய
பொரி அரை ஆலத்து | புரிசை மூழ்கிய பொரி
அரை ஆலத்து |
| ஒரு தனி நெடு
வீழ் உதைத்த கோடை | ஒரு தனி நெடு வீழ்
உதைத்த கோடை |
| துணை புறா
இரிக்கும் தூய் மழை நனம் தலை | துணை புறா இரிக்கும்
தூய் மழை நனம் தலை |
| கணை கால் அம்
பிணை ஏறு புறம் நக்க | கணை கால் அம் பிணை ஏறு
புறம் நக்க |
| ஒல்கு நிலை
யாஅத்து ஓங்கு சினை பயந்த | ஒல்கு நிலை யாஅத்து
ஓங்கு சினை பயந்த |
| அல்கு_உறு வரி
நிழல் அசையினம் நோக்க | அல்கு_உறு வரி நிழல்
அசையினம் நோக்க |
| அரம்பு வந்து
அலைக்கும் மாலை | அரம்பு வந்து
அலைக்கும் மாலை |
| நிரம்பா நீள்
இடை வருந்துதும் யாமே | நிரம்பா நீள் இடை
வருந்துதும் யாமே |
| | |
| #288 குறிஞ்சி
விற்றூற்று மூதெயினனார் | #288 குறிஞ்சி
விற்றூற்று மூதெயினனார் |
| செல்-மதி
சிறக்க நின் உள்ளம் நின் மலை | செல்-மதி சிறக்க நின்
உள்ளம் நின் மலை |
| ஆரம் நீவிய அம்
பகட்டு மார்பினை | ஆரம் நீவிய அம் பகட்டு
மார்பினை |
| சாரல் வேங்கை
படு சினை புது பூ | சாரல் வேங்கை படு சினை
புது பூ |
| முருகு முரண்
கொள்ளும் உருவ கண்ணியை | முருகு முரண் கொள்ளும்
உருவ கண்ணியை |
| எரி தின்
கொல்லை இறைஞ்சிய ஏனல் | எரி தின் கொல்லை
இறைஞ்சிய ஏனல் |
| எவ்வம் கூரிய
வைகலும் வருவோய் | எவ்வம் கூரிய வைகலும்
வருவோய் |
| கனி முதிர்
அடுக்கத்து எம் தனிமை காண்டலின் | கனி முதிர் அடுக்கத்து
எம் தனிமை காண்டலின் |
| எண்மை செய்தனை
ஆகுவை நண்ணி | எண்மை செய்தனை ஆகுவை
நண்ணி |
| கொடியோர்
குறுகும் நெடி இரும் குன்றத்து | கொடியோர் குறுகும்
நெடி இரும் குன்றத்து |
| இட்டு ஆறு
இரங்கும் விட்டு ஒளிர் அருவி | இட்டு ஆறு இரங்கும்
விட்டு ஒளிர் அருவி |
| அரு வரை
இழிதரும் வெரு வரு படாஅர் | அரு வரை இழிதரும் வெரு
வரு படாஅர் |
| கயம் தலை மந்தி
உயங்கு பசி களைஇயர் | கயம் தலை மந்தி உயங்கு
பசி களைஇயர் |
| பார்ப்பின்
தந்தை பழ சுளை தொடினும் | பார்ப்பின் தந்தை பழ
சுளை தொடினும் |
| நனி நோய்
ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து | நனி நோய் ஏய்க்கும்
பனி கூர் அடுக்கத்து |
| மகளிர்
மாங்காட்டு அற்றே துகள் அற | மகளிர் மாங்காட்டு
அற்றே துகள் அற |
| கொந்தொடு
உதிர்த்த கதுப்பின் | கொந்தொடு உதிர்த்த
கதுப்பின் |
| அம் தீம் கிளவி
தந்தை காப்பே | அம் தீம் கிளவி தந்தை
காப்பே |
| | |
| #289 பாலை
எயினந்தை மகன் இளங்கீரனார் | #289 பாலை எயினந்தை
மகன் இளங்கீரனார் |
| சிலை ஏறட்ட கணை
வீழ் வம்பலர் | சிலை ஏறட்ட கணை வீழ்
வம்பலர் |
| உயர் பதுக்கு
இவர்ந்த ததர் கொடி அதிரல் | உயர் பதுக்கு இவர்ந்த
ததர் கொடி அதிரல் |
| நெடு நிலை
நடுகல் நாள் பலி கூட்டும் | நெடு நிலை நடுகல் நாள்
பலி கூட்டும் |
| சுரன் இடை
விலங்கிய மரன் ஓங்கு இயவின் | சுரன் இடை விலங்கிய
மரன் ஓங்கு இயவின் |
| வந்து வினை
வலித்த நம்_வயின் என்றும் | வந்து வினை வலித்த
நம்_வயின் என்றும் |
| தெருமரல்
உள்ளமொடு வருந்தல் ஆனாது | தெருமரல் உள்ளமொடு
வருந்தல் ஆனாது |
| நெகிழா மென்
பிணி வீங்கிய கை சிறிது | நெகிழா மென் பிணி
வீங்கிய கை சிறிது |
| அவிழினும்
உயவும் ஆய் மட தகுவி | அவிழினும் உயவும் ஆய்
மட தகுவி |
| சேண் உறை
புலம்பின் நாள் முறை இழைத்த | சேண் உறை புலம்பின்
நாள் முறை இழைத்த |
| திண் சுவர்
நோக்கி நினைந்து கண் பனி | திண் சுவர் நோக்கி
நினைந்து கண் பனி |
| நெகிழ் நூல்
முத்தின் முகிழ் முலை தெறிப்ப | நெகிழ் நூல் முத்தின்
முகிழ் முலை தெறிப்ப |
| மை அற விரிந்த
படை அமை சேக்கை | மை அற விரிந்த படை அமை
சேக்கை |
| ஐ மென் தூவி
அணை சேர்பு அசைஇ | ஐ மென் தூவி அணை
சேர்பு அசைஇ |
| மையல் கொண்ட
மதன் அழி இருக்கையள் | மையல் கொண்ட மதன் அழி
இருக்கையள் |
| பகு வாய் பல்லி
படு-தொறும் பரவி | பகு வாய் பல்லி
படு-தொறும் பரவி |
| நல்ல கூறு என
நடுங்கி | நல்ல கூறு என நடுங்கி |
| புல்லென்
மாலையொடு பொரும்-கொல் தானே | புல்லென் மாலையொடு
பொரும்-கொல் தானே |
| | |
| #290 நெய்தல்
நக்கீரர் | #290 நெய்தல் நக்கீரர் |
| குடுமி
கொக்கின் பைம் கால் பேடை | குடுமி கொக்கின் பைம்
கால் பேடை |
| இரும் சேற்று
அள்ளல் நாள்_புலம் போகிய | இரும் சேற்று அள்ளல்
நாள்_புலம் போகிய |
| கொழு மீன்
வல்சி புன் தலை சிறாஅர் | கொழு மீன் வல்சி புன்
தலை சிறாஅர் |
| நுண் ஞாண் அம்
வலை சேவல் பட்டு என | நுண் ஞாண் அம் வலை
சேவல் பட்டு என |
| அல்கு_உறு
பொழுதின் மெல்கு இரை மிசையாது | அல்கு_உறு பொழுதின்
மெல்கு இரை மிசையாது |
| பைதல் பிள்ளை
தழீஇ ஒய்யென | பைதல் பிள்ளை தழீஇ
ஒய்யென |
| அம் கண் பெண்ணை
அன்பு உற நரலும் | அம் கண் பெண்ணை அன்பு
உற நரலும் |
| சிறு பல் தொல்
குடி பெரு_நீர் சேர்ப்பன் | சிறு பல் தொல் குடி
பெரு_நீர் சேர்ப்பன் |
| கழி சேர்
புன்னை அழி பூ கானல் | கழி சேர் புன்னை அழி
பூ கானல் |
| தணவா நெஞ்சமொடு
தமியன் வந்து நம் | தணவா நெஞ்சமொடு தமியன்
வந்து நம் |
| மணவா முன்னும்
எவனோ தோழி | மணவா முன்னும் எவனோ
தோழி |
| வெண் கோட்டு
யானை விறல் போர் குட்டுவன் | வெண் கோட்டு யானை
விறல் போர் குட்டுவன் |
| தெண் திரை
பரப்பின் தொண்டி முன்துறை | தெண் திரை பரப்பின்
தொண்டி முன்துறை |
| சுரும்பு உண
மலர்ந்த பெரும் தண் நெய்தல் | சுரும்பு உண மலர்ந்த
பெரும் தண் நெய்தல் |
| மணி ஏர் மாண்
நலம் ஒரீஇ | மணி ஏர் மாண் நலம்
ஒரீஇ |
| பொன் நேர்
வண்ணம் கொண்ட என் கண்ணே | பொன் நேர் வண்ணம்
கொண்ட என் கண்ணே |
| | |
| | |
| | |
| | |
| | |
| | |
| #291 பாலை பாலை
பாடிய பெரும் கடுங்கோ | #291 பாலை பாலை பாடிய
பெரும் கடுங்கோ |
| வானம் பெயல்
வளம் கரப்ப கானம் | வானம் பெயல் வளம்
கரப்ப கானம் |
| உலறி இலை இல ஆக
பல உடன் | உலறி இலை இல ஆக பல
உடன் |
| ஏறு உடை ஆயத்து
இனம் பசி தெறுப்ப | ஏறு உடை ஆயத்து இனம்
பசி தெறுப்ப |
| கயன் அற வறந்த
கோடையொடு நயன் அற | கயன் அற வறந்த
கோடையொடு நயன் அற |
| பெரு வரை
நிவந்த மருங்கில் கொடு வரி | பெரு வரை நிவந்த
மருங்கில் கொடு வரி |
| புலியொடு
பொருது சினம் சிறந்து வலியோடு | புலியொடு பொருது சினம்
சிறந்து வலியோடு |
| உரவு களிறு
ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல் | உரவு களிறு ஒதுங்கிய
மருங்கில் பரூஉ பரல் |
| சிறு பல்
மின்மினி கடுப்ப எ வாயும் | சிறு பல் மின்மினி
கடுப்ப எ வாயும் |
| நிறைவன
இமைக்கும் நிரம்பா நீள் இடை | நிறைவன இமைக்கும்
நிரம்பா நீள் இடை |
| எருவை இரும்
சிறை இரீஇய விரி இணர் | எருவை இரும் சிறை
இரீஇய விரி இணர் |
| தாது உண்
தும்பி முரல் இசை கடுப்ப | தாது உண் தும்பி முரல்
இசை கடுப்ப |
| பரியினது
உயிர்க்கும் அம்பினர் வெருவர | பரியினது உயிர்க்கும்
அம்பினர் வெருவர |
| உவலை சூடிய
தலையர் கவலை | உவலை சூடிய தலையர்
கவலை |
| ஆர்த்து உடன்
அரும் பொருள் வவ்வலின் யாவதும் | ஆர்த்து உடன் அரும்
பொருள் வவ்வலின் யாவதும் |
| சாத்து இடை
வழங்கா சேண் சிமை அதர | சாத்து இடை வழங்கா
சேண் சிமை அதர |
| சிறியிலை
நெல்லி தீம் சுவை திரள் காய் | சிறியிலை நெல்லி தீம்
சுவை திரள் காய் |
| உதிர்வன தாஅம்
அத்தம் தவிர்வு இன்று | உதிர்வன தாஅம் அத்தம்
தவிர்வு இன்று |
| புள்ளி அம்
பிணை உணீஇய உள்ளி | புள்ளி அம் பிணை உணீஇய
உள்ளி |
| அறு மருப்பு
ஒழித்த தலைய தோல் பொதி | அறு மருப்பு ஒழித்த
தலைய தோல் பொதி |
| மறு மருப்பு
இளம் கோடு அதிர கூஉம் | மறு மருப்பு இளம் கோடு
அதிர கூஉம் |
| சுடர் தெற
வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு | சுடர் தெற வருந்திய
அரும் சுரம் இறந்து ஆங்கு |
| உள்ளினை வாழிய
நெஞ்சே போது என | உள்ளினை வாழிய நெஞ்சே
போது என |
| புலம் கமழ்
நாற்றத்து இரும் பல் கூந்தல் | புலம் கமழ் நாற்றத்து
இரும் பல் கூந்தல் |
| நல் எழில் மழை
கண் நம் காதலி | நல் எழில் மழை கண் நம்
காதலி |
| மெல் இறை பணை
தோள் விளங்கும் மாண் கவினே | மெல் இறை பணை தோள்
விளங்கும் மாண் கவினே |
| | |
| #292 குறிஞ்சி
கபிலர் | #292 குறிஞ்சி கபிலர் |
| கூறாய் செய்வது
தோழி வேறு உணர்ந்து | கூறாய் செய்வது தோழி
வேறு உணர்ந்து |
| அன்னையும்
பொருள் உகுத்து அலமரும் மென் முறி | அன்னையும் பொருள்
உகுத்து அலமரும் மென் முறி |
| சிறு குளகு
அருந்து தாய் முலை பெறாஅ | சிறு குளகு அருந்து
தாய் முலை பெறாஅ |
| மறி
கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி | மறி கொலைப்படுத்தல்
வேண்டி வெறி புரி |
| ஏதில் வேலன்
கோதை துயல்வர | ஏதில் வேலன் கோதை
துயல்வர |
| தூங்கும் ஆயின்
அதூஉம் நாணுவல் | தூங்கும் ஆயின் அதூஉம்
நாணுவல் |
| இலங்கு வளை
நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து | இலங்கு வளை நெகிழ்ந்த
செல்லல் புலம் படர்ந்து |
| இரவின் மேயல்
மரூஉம் யானை | இரவின் மேயல் மரூஉம்
யானை |
| கால் வல்
இயக்கம் ஒற்றி நடுநாள் | கால் வல் இயக்கம்
ஒற்றி நடுநாள் |
| வரை இடை
கழுதின் வன் கை கானவன் | வரை இடை கழுதின் வன்
கை கானவன் |
| கடு விசை
கவணின் எறிந்த சிறு கல் | கடு விசை கவணின்
எறிந்த சிறு கல் |
| உடு உறு
கணையின் போகி சாரல் | உடு உறு கணையின் போகி
சாரல் |
| வேங்கை விரி
இணர் சிதறி தேன் சிதையூஉ | வேங்கை விரி இணர்
சிதறி தேன் சிதையூஉ |
| பலவின்
பழத்துள் தங்கும் | பலவின் பழத்துள்
தங்கும் |
| மலை கெழு நாடன்
மணவா_காலே | மலை கெழு நாடன்
மணவா_காலே |
| | |
| #293 பாலை
காவன்முல்லை பூதனார் | #293 பாலை காவன்முல்லை
பூதனார் |
| இலை ஒழித்து
உலறிய புன் தலை உலவை | இலை ஒழித்து உலறிய
புன் தலை உலவை |
| வலை வலந்து
அனைய ஆக பல உடன் | வலை வலந்து அனைய ஆக பல
உடன் |
| சிலம்பி
சூழ்ந்த புலம் கெடு வைப்பின் | சிலம்பி சூழ்ந்த புலம்
கெடு வைப்பின் |
| துகில் ஆய்
செய்கை பா விரிந்து அன்ன | துகில் ஆய் செய்கை பா
விரிந்து அன்ன |
| வெயில் அவிர்பு
நுடங்கும் வெவ்வெம் களரி | வெயில் அவிர்பு
நுடங்கும் வெவ்வெம் களரி |
| குயில் கண்
அன்ன குரூஉ காய் முற்றி | குயில் கண் அன்ன குரூஉ
காய் முற்றி |
| மணி காசு அன்ன
மால் நிற இரும் கனி | மணி காசு அன்ன மால்
நிற இரும் கனி |
| உகாஅ மென் சினை
உதிர்வன கழியும் | உகாஅ மென் சினை
உதிர்வன கழியும் |
| வேனில் வெம்
சுரம் தமியர் தாமே | வேனில் வெம் சுரம்
தமியர் தாமே |
| செல்ப என்ப
தோழி யாமே | செல்ப என்ப தோழி யாமே |
| பண்பு இல்
கோவலர் தாய் பிரித்து யாத்த | பண்பு இல் கோவலர் தாய்
பிரித்து யாத்த |
| நெஞ்சு அமர்
குழவி போல நொந்து நொந்து | நெஞ்சு அமர் குழவி போல
நொந்து நொந்து |
| இன்னா மொழிதும்
என்ப | இன்னா மொழிதும் என்ப |
| என்
மயங்கினர்-கொல் நம் காதலோரே | என் மயங்கினர்-கொல்
நம் காதலோரே |
| | |
| #294 முல்லை
கழார்க்கீரன் எயிற்றியார் | #294 முல்லை
கழார்க்கீரன் எயிற்றியார் |
| மங்குல் மா மழை
விண் அதிர்பு முழங்கி | மங்குல் மா மழை விண்
அதிர்பு முழங்கி |
| துள்ளு பெயல்
கழிந்த பின்றை புகை உற | துள்ளு பெயல் கழிந்த
பின்றை புகை உற |
| புள்ளி நுண்
துவலை பூ அகம் நிறைய | புள்ளி நுண் துவலை பூ
அகம் நிறைய |
| காதலர் பிரிந்த
கையறு மகளிர் | காதலர் பிரிந்த கையறு
மகளிர் |
| நீர் வார்
கண்ணின் கருவிளை மலர | நீர் வார் கண்ணின்
கருவிளை மலர |
| துய் தலை
பூவின் புதல் இவர் ஈங்கை | துய் தலை பூவின் புதல்
இவர் ஈங்கை |
| நெய் தோய்த்து
அன்ன நீர் நனை அம் தளிர் | நெய் தோய்த்து அன்ன
நீர் நனை அம் தளிர் |
| இரு வகிர்
ஈருளின் ஈரிய துயல்வர | இரு வகிர் ஈருளின்
ஈரிய துயல்வர |
| அவரை பைம் பூ
பயில அகல் வயல் | அவரை பைம் பூ பயில
அகல் வயல் |
| கதிர் வார்
காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச | கதிர் வார் காய் நெல்
கட்கு இனிது இறைஞ்ச |
| சிதர் சினை
தூங்கும் அற்சிர அரைநாள் | சிதர் சினை தூங்கும்
அற்சிர அரைநாள் |
| காய் சின
வேந்தன் பாசறை நீடி | காய் சின வேந்தன்
பாசறை நீடி |
| நம் நோய் அறியா
அறன் இலாளர் | நம் நோய் அறியா அறன்
இலாளர் |
| இ நிலை களைய
வருகுவர்-கொல் என | இ நிலை களைய
வருகுவர்-கொல் என |
| ஆனாது எறிதரும்
வாடையொடு | ஆனாது எறிதரும்
வாடையொடு |
| நோனேன் தோழி
என் தனிமையானே | நோனேன் தோழி என்
தனிமையானே |
| | |
| #295 பாலை
மாமூலனார் | #295 பாலை மாமூலனார் |
| நிலம் நீர்
அற்று நீள் சுனை வறப்ப | நிலம் நீர் அற்று நீள்
சுனை வறப்ப |
| குன்று கோடு
அகைய கடும் கதிர் தெறுதலின் | குன்று கோடு அகைய
கடும் கதிர் தெறுதலின் |
| என்றூழ் நீடிய
வேய் படு நனம் தலை | என்றூழ் நீடிய வேய்
படு நனம் தலை |
| நிலவு நிற
மருப்பின் பெரும் கை சேர்த்தி | நிலவு நிற மருப்பின்
பெரும் கை சேர்த்தி |
| வேங்கை வென்ற
வெருவரு பணை தோள் | வேங்கை வென்ற வெருவரு
பணை தோள் |
| ஓங்கல் யானை
உயங்கி மதம் தேம்பி | ஓங்கல் யானை உயங்கி
மதம் தேம்பி |
| பல் மர ஒரு
சிறை பிடியொடு வதியும் | பல் மர ஒரு சிறை
பிடியொடு வதியும் |
| கல் உடை அதர
கானம் நீந்தி | கல் உடை அதர கானம்
நீந்தி |
| கடல் நீர்
உப்பின் கணம் சால் உமணர் | கடல் நீர் உப்பின்
கணம் சால் உமணர் |
| உயங்கு பகடு
உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து | உயங்கு பகடு உயிர்ப்ப
அசைஇ முரம்பு இடித்து |
| அகல் இடம்
குழித்த அகல் வாய் கூவல் | அகல் இடம் குழித்த
அகல் வாய் கூவல் |
| ஆறு செல்
வம்பலர் அசை விட ஊறும் | ஆறு செல் வம்பலர் அசை
விட ஊறும் |
| புடையல் அம்
கழல் கால் புல்லி குன்றத்து | புடையல் அம் கழல் கால்
புல்லி குன்றத்து |
| நடை அரும்
கானம் விலங்கி நோன் சிலை | நடை அரும் கானம்
விலங்கி நோன் சிலை |
| தொடை அமை பகழி
துவன்று நிலை வடுகர் | தொடை அமை பகழி துவன்று
நிலை வடுகர் |
| பிழி ஆர்
மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் | பிழி ஆர் மகிழர் கலி
சிறந்து ஆர்க்கும் |
| மொழிபெயர்
தேஎம் இறந்தனர் ஆயினும் | மொழிபெயர் தேஎம்
இறந்தனர் ஆயினும் |
| பழி தீர் மாண்
நலம் தருகுவர் மாதோ | பழி தீர் மாண் நலம்
தருகுவர் மாதோ |
| மாரி
பித்திகத்து ஈர் இதழ் புரையும் | மாரி பித்திகத்து ஈர்
இதழ் புரையும் |
| அம் கலுழ்
கொண்ட செம் கடை மழை கண் | அம் கலுழ் கொண்ட செம்
கடை மழை கண் |
| மணம் கமழ்
ஐம்பால் மடந்தை நின் | மணம் கமழ் ஐம்பால்
மடந்தை நின் |
| அணங்கு
நிலைபெற்ற தட மென் தோளே | அணங்கு நிலைபெற்ற தட
மென் தோளே |
| | |
| #296 மருதம்
மதுரை பேராலவாயார் | #296 மருதம் மதுரை
பேராலவாயார் |
| கோதை இணர
குறும் கால் காஞ்சி | கோதை இணர குறும் கால்
காஞ்சி |
| போது அவிழ்
நறும் தாது அணிந்த கூந்தல் | போது அவிழ் நறும் தாது
அணிந்த கூந்தல் |
| அரி மதர் மழை
கண் மாஅயோளொடு | அரி மதர் மழை கண்
மாஅயோளொடு |
| நெருநையும்
கமழ் பொழில் துஞ்சி இன்றும் | நெருநையும் கமழ்
பொழில் துஞ்சி இன்றும் |
| பெரு நீர் வையை
அவளொடு ஆடி | பெரு நீர் வையை அவளொடு
ஆடி |
| புலரா மார்பினை
வந்து நின்று எம்_வயின் | புலரா மார்பினை வந்து
நின்று எம்_வயின் |
| கரத்தல் கூடுமோ
மற்றே பரப்பில் | கரத்தல் கூடுமோ மற்றே
பரப்பில் |
| பன் மீன்
கொள்பவர் முகந்த இப்பி | பன் மீன் கொள்பவர்
முகந்த இப்பி |
| நார் அரி
நறவின் மகிழ் நொடை கூட்டும் | நார் அரி நறவின் மகிழ்
நொடை கூட்டும் |
| பேர் இசை
கொற்கை பொருநன் வென் வேல் | பேர் இசை கொற்கை
பொருநன் வென் வேல் |
| கடும் பகட்டு
யானை நெடும் தேர் செழியன் | கடும் பகட்டு யானை
நெடும் தேர் செழியன் |
| மலை புரை நெடு
நகர் கூடல் நீடிய | மலை புரை நெடு நகர்
கூடல் நீடிய |
| மலிதரு கம்பலை
போல | மலிதரு கம்பலை போல |
| அலர் ஆகின்று
அது பலர் வாய் பட்டே | அலர் ஆகின்று அது பலர்
வாய் பட்டே |
| | |
| #297 பாலை
மதுரை மருதன் இளநாகனார் | #297 பாலை மதுரை
மருதன் இளநாகனார் |
| பானாள்
கங்குலும் பெரும் புன் மாலையும் | பானாள் கங்குலும்
பெரும் புன் மாலையும் |
| ஆனா நோயொடு அழி
படர் கலங்கி | ஆனா நோயொடு அழி படர்
கலங்கி |
| நம்_வயின்
இனையும் இடும்பை கைம்மிக | நம்_வயின் இனையும்
இடும்பை கைம்மிக |
| என்னை ஆகுமோ
நெஞ்சே நம்_வயின் | என்னை ஆகுமோ நெஞ்சே
நம்_வயின் |
| இரும் கவின்
இல்லா பெரும் புன் தாடி | இரும் கவின் இல்லா
பெரும் புன் தாடி |
| கடுங்கண் மறவர்
பகழி மாய்த்து என | கடுங்கண் மறவர் பகழி
மாய்த்து என |
| மருங்குல்
நுணுகிய பேஎம் முதிர் நடுகல் | மருங்குல் நுணுகிய
பேஎம் முதிர் நடுகல் |
| பெயர் பயம் படர
தோன்று குயில் எழுத்து | பெயர் பயம் படர தோன்று
குயில் எழுத்து |
| இயைபுடன்
நோக்கல் செல்லாது அசைவுடன் | இயைபுடன் நோக்கல்
செல்லாது அசைவுடன் |
| ஆறு செல்
வம்பலர் விட்டனர் கழியும் | ஆறு செல் வம்பலர்
விட்டனர் கழியும் |
| சூர் முதல்
இருந்த ஓமை அம் புறவின் | சூர் முதல் இருந்த ஓமை
அம் புறவின் |
| நீர் முள் வேலி
புலவு நாறு முன்றில் | நீர் முள் வேலி புலவு
நாறு முன்றில் |
| எழுதி அன்ன
கொடி படு வெருகின் | எழுதி அன்ன கொடி படு
வெருகின் |
| பூளை அன்ன
பொங்கு மயிர் பிள்ளை | பூளை அன்ன பொங்கு
மயிர் பிள்ளை |
| மதி சூழ்
மீனின் தாய் வழிப்படூஉம் | மதி சூழ் மீனின் தாய்
வழிப்படூஉம் |
| சிறுகுடி மறவர்
சே கோள் தண்ணுமைக்கு | சிறுகுடி மறவர் சே
கோள் தண்ணுமைக்கு |
| எருவை சேவல்
இரும் சிறை பெயர்க்கும் | எருவை சேவல் இரும்
சிறை பெயர்க்கும் |
| வெரு வரு கானம்
நம்மொடு | வெரு வரு கானம்
நம்மொடு |
| வருவல் என்றோள்
மகிழ் மட நோக்கே | வருவல் என்றோள் மகிழ்
மட நோக்கே |
| | |
| #298 குறிஞ்சி
மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார் | #298 குறிஞ்சி மதுரை
பண்ட வாணிகன் இளந்தேவனார் |
| பயம் கெழு
திருவின் பல் கதிர் ஞாயிறு | பயம் கெழு திருவின்
பல் கதிர் ஞாயிறு |
| வயம் தொழில்
தரீஇயர் வலன் ஏர் விளங்கி | வயம் தொழில் தரீஇயர்
வலன் ஏர் விளங்கி |
| மல்கு கடல்
தோன்றி ஆங்கு மல்கு பட | மல்கு கடல் தோன்றி
ஆங்கு மல்கு பட |
| மணி மருள் மாலை
மலர்ந்த வேங்கை | மணி மருள் மாலை
மலர்ந்த வேங்கை |
| ஒண் தளிர்
அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை | ஒண் தளிர் அவிர் வரும்
ஒலி கெழு பெரும் சினை |
| தண் துளி அசை
வளி தைவரும் நாட | தண் துளி அசை வளி
தைவரும் நாட |
| கொன்று சினம்
தணியாது வென்று முரண் சாம்பாது | கொன்று சினம் தணியாது
வென்று முரண் சாம்பாது |
| இரும் பிடி
தொழுதியின் இனம் தலைமயங்காது | இரும் பிடி தொழுதியின்
இனம் தலைமயங்காது |
| பெரும் பெயல்
கடாஅம் செருக்கி வள மலை | பெரும் பெயல் கடாஅம்
செருக்கி வள மலை |
| இரும் களிறு
இயல்வரும் பெரும் காட்டு இயவின் | இரும் களிறு இயல்வரும்
பெரும் காட்டு இயவின் |
| ஆர் இருள்
துமிய வெள் வேல் ஏந்தி | ஆர் இருள் துமிய வெள்
வேல் ஏந்தி |
| தாழ் பூ கோதை
ஊது வண்டு இரீஇ | தாழ் பூ கோதை ஊது
வண்டு இரீஇ |
| மென் பிணி
அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் | மென் பிணி அவிழ்ந்த
அரைநாள் இரவு இவண் |
| நீ வந்ததனினும்
இனிது ஆகின்றே | நீ வந்ததனினும் இனிது
ஆகின்றே |
| தூவல் கள்ளின்
துனை தேர் எந்தை | தூவல் கள்ளின் துனை
தேர் எந்தை |
| கடி உடை வியல்
நகர் ஓம்பினள் உறையும் | கடி உடை வியல் நகர்
ஓம்பினள் உறையும் |
| யாய்
அறிவுறுதல் அஞ்சி பானாள் | யாய் அறிவுறுதல் அஞ்சி
பானாள் |
| காவல்
நெஞ்சமொடு காமம் செப்பேன் | காவல் நெஞ்சமொடு காமம்
செப்பேன் |
| யான் நின்
கொடுமை கூற நினைபு ஆங்கு | யான் நின் கொடுமை கூற
நினைபு ஆங்கு |
| இனையல் வாழி
தோழி நம் துறந்தவர் | இனையல் வாழி தோழி நம்
துறந்தவர் |
| நீடலர் ஆகி
வருவர் வல்லென | நீடலர் ஆகி வருவர்
வல்லென |
| கங்குல் உயவு
துணை ஆகிய | கங்குல் உயவு துணை
ஆகிய |
| துஞ்சாது உறைவி
இவள் உவந்ததுவே | துஞ்சாது உறைவி இவள்
உவந்ததுவே |
| | |
| #299 பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் | #299 பாலை எயினந்தை
மகனார் இளங்கீரனார் |
| எல்லையும்
இரவும் வினை_வயின் பிரிந்த | எல்லையும் இரவும்
வினை_வயின் பிரிந்த |
| முன்னம் முன்
உறுபு அடைய உள்ளிய | முன்னம் முன் உறுபு
அடைய உள்ளிய |
| பதி மறந்து
உறைதல் வல்லுநம் ஆயினும் | பதி மறந்து உறைதல்
வல்லுநம் ஆயினும் |
| அது மறந்து
உறைதல் அரிது ஆகின்றே | அது மறந்து உறைதல்
அரிது ஆகின்றே |
| கடு வளி எடுத்த
கால் கழி தேக்கு இலை | கடு வளி எடுத்த கால்
கழி தேக்கு இலை |
| நெடு விளி
பருந்தின் வெறி எழுந்து ஆங்கு | நெடு விளி பருந்தின்
வெறி எழுந்து ஆங்கு |
| விசும்பு கண்
புதைய பாஅய் பல உடன் | விசும்பு கண் புதைய
பாஅய் பல உடன் |
| அகல் இடம்
செல்லுநர் அறிவு கெட தாஅய் | அகல் இடம் செல்லுநர்
அறிவு கெட தாஅய் |
| கவலை கரக்கும்
காடு அகல் அத்தம் | கவலை கரக்கும் காடு
அகல் அத்தம் |
| செய்பொருள்
மருங்கின் செலவு தனக்கு உரைத்து என | செய்பொருள் மருங்கின்
செலவு தனக்கு உரைத்து என |
| வைகு நிலை
மதியம் போல பையென | வைகு நிலை மதியம் போல
பையென |
| புலம்பு கொள்
அவலமொடு புது கவின் இழந்த | புலம்பு கொள் அவலமொடு
புது கவின் இழந்த |
| நலம் கெழு திரு
முகம் இறைஞ்சி நிலம் கிளையா | நலம் கெழு திரு முகம்
இறைஞ்சி நிலம் கிளையா |
| நீரொடு பொருத
ஈர் இதழ் மழை கண் | நீரொடு பொருத ஈர் இதழ்
மழை கண் |
| இகுதரு தெண்
பனி ஆகத்து உறைப்ப | இகுதரு தெண் பனி
ஆகத்து உறைப்ப |
| கால் நிலை
செல்லாது கழி படர் கலங்கி | கால் நிலை செல்லாது
கழி படர் கலங்கி |
| நா
நடுக்கு_உற்ற நவிலா கிளவியொடு | நா நடுக்கு_உற்ற நவிலா
கிளவியொடு |
| அறல் மருள்
கூந்தலின் மறையினள் திறல் மாண்டு | அறல் மருள் கூந்தலின்
மறையினள் திறல் மாண்டு |
| திருந்துக மாதோ
நும் செலவு என வெய்து_உயிரா | திருந்துக மாதோ நும்
செலவு என வெய்து_உயிரா |
| பருவரல்
எவ்வமொடு அழிந்த | பருவரல் எவ்வமொடு
அழிந்த |
| பெரு விதுப்பு
உறுவி பேது உறு நிலையே | பெரு விதுப்பு உறுவி
பேது உறு நிலையே |
| | |
| #300 நெய்தல்
உலோச்சனார் | #300 நெய்தல்
உலோச்சனார் |
| நாள் வலை
முகந்த கோள் வல் பரதவர் | நாள் வலை முகந்த கோள்
வல் பரதவர் |
| நுணங்கு மணல்
ஆங்கண் உணங்க பெய்ம்-மார் | நுணங்கு மணல் ஆங்கண்
உணங்க பெய்ம்-மார் |
| பறி கொள்
கொள்ளையர் மறுக உக்க | பறி கொள் கொள்ளையர்
மறுக உக்க |
| மீன் ஆர்
குருகின் கானல் அம் பெரும் துறை | மீன் ஆர் குருகின்
கானல் அம் பெரும் துறை |
| எல்லை தண்
பொழில் சென்று என செலீஇயர் | எல்லை தண் பொழில்
சென்று என செலீஇயர் |
| தேர் பூட்டு
அயர ஏஎய் வார் கோல் | தேர் பூட்டு அயர ஏஎய்
வார் கோல் |
| செறி தொடி
திருத்தி பாறு மயிர் நீவி | செறி தொடி திருத்தி
பாறு மயிர் நீவி |
| செல் இனி
மடந்தை நின் தோழியொடு மனை என | செல் இனி மடந்தை நின்
தோழியொடு மனை என |
| சொல்லிய அளவை
தான் பெரிது கலுழ்ந்து | சொல்லிய அளவை தான்
பெரிது கலுழ்ந்து |
| தீம் ஆயினள்
இவள் ஆயின் தாங்காது | தீம் ஆயினள் இவள்
ஆயின் தாங்காது |
| நொதுமலர் போல
பிரியின் கதுமென | நொதுமலர் போல பிரியின்
கதுமென |
| பிறிது ஒன்று
ஆகலும் அஞ்சுவல் அதனால் | பிறிது ஒன்று ஆகலும்
அஞ்சுவல் அதனால் |
| சேணின் வருநர்
போல பேணா | சேணின் வருநர் போல
பேணா |
| இரும் கலி
யாணர் எம் சிறுகுடி தோன்றின் | இரும் கலி யாணர் எம்
சிறுகுடி தோன்றின் |
| வல் எதிர்
கொண்டு மெல்லிதின் வினைஇ | வல் எதிர் கொண்டு
மெல்லிதின் வினைஇ |
| துறையும்
மான்றன்று பொழுதே சுறவும் | துறையும் மான்றன்று
பொழுதே சுறவும் |
| ஓதம் மல்கலின்
மாறு ஆயினவே | ஓதம் மல்கலின் மாறு
ஆயினவே |
| எல்லின்று
தோன்றல் செல்லாதீம் என | எல்லின்று தோன்றல்
செல்லாதீம் என |
| எமர் குறை கூற
தங்கி ஏமுற | எமர் குறை கூற தங்கி
ஏமுற |
| இளையரும்
புரவியும் இன்புற நீயும் | இளையரும் புரவியும்
இன்புற நீயும் |
| இல் உறை நல்
விருந்து அயர்தல் | இல் உறை நல் விருந்து
அயர்தல் |
| ஒல்லுதும்
பெரும நீ நல்குதல் பெறினே | ஒல்லுதும் பெரும நீ
நல்குதல் பெறினே |
| | |