| | |
| #176 மருதம்
மருதம் பாடிய இளங்கடுங்கோ | #176 மருதம் மருதம்
பாடிய இளங்கடுங்கோ |
| கடல் கண்டு
அன்ன கண் அகன் பரப்பின் | கடல் கண்டு அன்ன கண்
அகன் பரப்பின் |
| நிலம் பக
வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் | நிலம் பக வீழ்ந்த வேர்
முதிர் கிழங்கின் |
| கழை கண்டு அன்ன
தூம்பு உடை திரள் கால் | கழை கண்டு அன்ன தூம்பு
உடை திரள் கால் |
| களிற்று செவி
அன்ன பாசடை மருங்கில் | களிற்று செவி அன்ன
பாசடை மருங்கில் |
| கழு நிவந்து
அன்ன கொழு முகை இடையிடை | கழு நிவந்து அன்ன கொழு
முகை இடையிடை |
| முறுவல்
முகத்தின் பன் மலர் தயங்க | முறுவல் முகத்தின் பன்
மலர் தயங்க |
| பூத்த தாமரை
புள் இமிழ் பழனத்து | பூத்த தாமரை புள்
இமிழ் பழனத்து |
| வேப்பு நனை
அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு | வேப்பு நனை அன்ன
நெடும் கண் நீர் ஞெண்டு |
| இரை தேர்
வெண்_குருகு அஞ்சி அயலது | இரை தேர் வெண்_குருகு
அஞ்சி அயலது |
| ஒலித்த பகன்றை
இரும் சேற்று அள்ளல் | ஒலித்த பகன்றை இரும்
சேற்று அள்ளல் |
| திதலையின்
வரிப்ப ஓடி விரைந்து தன் | திதலையின் வரிப்ப ஓடி
விரைந்து தன் |
| நீர் மலி மண்
அளை செறியும் ஊர | நீர் மலி மண் அளை
செறியும் ஊர |
| மனை நகு வயலை
மரன் இவர் கொழும் கொடி | மனை நகு வயலை மரன்
இவர் கொழும் கொடி |
| அரி மலர்
ஆம்பலொடு ஆர் தழை தைஇ | அரி மலர் ஆம்பலொடு ஆர்
தழை தைஇ |
| விழவு ஆடு
மகளிரொடு தழூஉ அணி பொலிந்து | விழவு ஆடு மகளிரொடு
தழூஉ அணி பொலிந்து |
| மலர் ஏர்
உண்கண் மாண் இழை முன்கை | மலர் ஏர் உண்கண் மாண்
இழை முன்கை |
| குறும் தொடி
துடக்கிய நெடும் தொடர் விடுத்தது | குறும் தொடி துடக்கிய
நெடும் தொடர் விடுத்தது |
| உடன்றனள்
போலும் நின் காதலி எம் போல் | உடன்றனள் போலும் நின்
காதலி எம் போல் |
| புல் உளை
குடுமி புதல்வன் பயந்து | புல் உளை குடுமி
புதல்வன் பயந்து |
| நெல் உடை நெடு
நகர் நின் இன்று உறைய | நெல் உடை நெடு நகர்
நின் இன்று உறைய |
| என்ன கடத்தளோ
மற்றே தன் முகத்து | என்ன கடத்தளோ மற்றே
தன் முகத்து |
| எழுது எழில்
சிதைய அழுதனள் ஏங்கி | எழுது எழில் சிதைய
அழுதனள் ஏங்கி |
| அடித்து என
உருத்த தித்தி பல் ஊழ் | அடித்து என உருத்த
தித்தி பல் ஊழ் |
| நொடித்து என
சிவந்த மெல் விரல் திருகுபு | நொடித்து என சிவந்த
மெல் விரல் திருகுபு |
| கூர் நுனை
மழுகிய எயிற்றள் | கூர் நுனை மழுகிய
எயிற்றள் |
| ஊர் முழுதும்
நுவலும் நின் காணிய சென்மே | ஊர் முழுதும் நுவலும்
நின் காணிய சென்மே |
| | |
| #177 பாலை
செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் | #177 பாலை செயலூர்
இளம் பொன்சாத்தன் கொற்றனார் |
| தொல் நலம்
சிதைய சாஅய் அல்கலும் | தொல் நலம் சிதைய சாஅய்
அல்கலும் |
| இன்னும் வாரார்
இனி எவன் செய்கு என | இன்னும் வாரார் இனி
எவன் செய்கு என |
| பெரும் புலம்பு
உறுதல் ஓம்பு-மதி சிறு கண் | பெரும் புலம்பு உறுதல்
ஓம்பு-மதி சிறு கண் |
| இரும் பிடி தட
கை மான நெய் அருந்து | இரும் பிடி தட கை மான
நெய் அருந்து |
| ஒருங்கு
பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் | ஒருங்கு பிணித்து
இயன்ற நெறி கொள் ஐம்பால் |
| தேம் கமழ் வெறி
மலர் பெய்ம்-மார் காண்பின் | தேம் கமழ் வெறி மலர்
பெய்ம்-மார் காண்பின் |
| கழை அமல்
சிலம்பின் வழை தலை வாட | கழை அமல் சிலம்பின்
வழை தலை வாட |
| கதிர் கதம்
கற்ற ஏ கல் நெறி இடை | கதிர் கதம் கற்ற ஏ கல்
நெறி இடை |
| பைம் கொடி
பாகல் செம் கனி நசைஇ | பைம் கொடி பாகல் செம்
கனி நசைஇ |
| கான மஞ்ஞை கமம்
சூல் மா பெடை | கான மஞ்ஞை கமம் சூல்
மா பெடை |
| அயிர் யாற்று
அடைகரை வயிரின் நரலும் | அயிர் யாற்று அடைகரை
வயிரின் நரலும் |
| காடு இறந்து
அகன்றோர் நீடினர் ஆயினும் | காடு இறந்து அகன்றோர்
நீடினர் ஆயினும் |
| வல்லே வருவர்
போலும் வெண் வேல் | வல்லே வருவர் போலும்
வெண் வேல் |
| இலை நிறம் பெயர
ஓச்சி மாற்றோர் | இலை நிறம் பெயர ஓச்சி
மாற்றோர் |
| மலை மருள் யானை
மண்டு அமர் ஒழித்த | மலை மருள் யானை மண்டு
அமர் ஒழித்த |
| கழல் கால்
பண்ணன் காவிரி வட_வயின் | கழல் கால் பண்ணன்
காவிரி வட_வயின் |
| நிழல் கயம்
தழீஇய நெடும் கால் மாவின் | நிழல் கயம் தழீஇய
நெடும் கால் மாவின் |
| தளிர் ஏர் ஆகம்
தகைபெற முகைந்த | தளிர் ஏர் ஆகம் தகைபெற
முகைந்த |
| அணங்கு உடை வன
முலை தாஅய நின் | அணங்கு உடை வன முலை
தாஅய நின் |
| சுணங்கு இடை
வரித்த தொய்யிலை நினைந்தே | சுணங்கு இடை வரித்த
தொய்யிலை நினைந்தே |
| | |
| #178 குறிஞ்சி
பரணர் | #178 குறிஞ்சி பரணர் |
| வயிரத்து அன்ன
வை ஏந்து மருப்பின் | வயிரத்து அன்ன வை
ஏந்து மருப்பின் |
| வெதிர் வேர்
அன்ன பரூஉ மயிர் பன்றி | வெதிர் வேர் அன்ன பரூஉ
மயிர் பன்றி |
| பறை கண் அன்ன
நிறை சுனை பருகி | பறை கண் அன்ன நிறை
சுனை பருகி |
| நீலத்து அன்ன
அகல் இலை சேம்பின் | நீலத்து அன்ன அகல் இலை
சேம்பின் |
| பிண்டம் அன்ன
கொழும் கிழங்கு மாந்தி | பிண்டம் அன்ன கொழும்
கிழங்கு மாந்தி |
| பிடி மடிந்து
அன்ன கல் மிசை ஊழ் இழிபு | பிடி மடிந்து அன்ன கல்
மிசை ஊழ் இழிபு |
| யாறு சேர்ந்து
அன்ன ஊறு நீர் படாஅர் | யாறு சேர்ந்து அன்ன
ஊறு நீர் படாஅர் |
| பைம் புதல் நளி
சினை குருகு இருந்து அன்ன | பைம் புதல் நளி சினை
குருகு இருந்து அன்ன |
| வண் பிணி
அவிழ்ந்த வெண் கூதாளத்து | வண் பிணி அவிழ்ந்த
வெண் கூதாளத்து |
| அலங்கு குலை
அலரி தீண்டி தாது உக | அலங்கு குலை அலரி
தீண்டி தாது உக |
| பொன் உரை
கட்டளை கடுப்ப காண்வர | பொன் உரை கட்டளை
கடுப்ப காண்வர |
| கிளை அமல்
சிறுதினை விளை குரல் மேய்ந்து | கிளை அமல் சிறுதினை
விளை குரல் மேய்ந்து |
| கண் இனிது
படுக்கும் நன் மலை நாடனொடு | கண் இனிது படுக்கும்
நன் மலை நாடனொடு |
| உணர்ந்தனை
புணர்ந்த நீயும் நின் தோள் | உணர்ந்தனை புணர்ந்த
நீயும் நின் தோள் |
| பணை கவின்
அழியாது துணை புணர்ந்து என்றும் | பணை கவின் அழியாது
துணை புணர்ந்து என்றும் |
| தவல் இல்
உலகத்து உறைஇயரோ தோழி | தவல் இல் உலகத்து
உறைஇயரோ தோழி |
| எல்லையும்
இரவும் என்னாது கல்லென | எல்லையும் இரவும்
என்னாது கல்லென |
| கொண்டல் வான்
மழை பொழிந்த வைகறை | கொண்டல் வான் மழை
பொழிந்த வைகறை |
| தண் பனி
அற்சிரம் தமியோர்க்கு அரிது என | தண் பனி அற்சிரம்
தமியோர்க்கு அரிது என |
| கனவினும்
பிரிவு அறியலனே அதன்_தலை | கனவினும் பிரிவு
அறியலனே அதன்_தலை |
| முன் தான் கண்ட
ஞான்றினும் | முன் தான் கண்ட
ஞான்றினும் |
| பின் பெரிது
அளிக்கும் தன் பண்பினானே | பின் பெரிது அளிக்கும்
தன் பண்பினானே |
| | |
| #179 பாலை கோடி
மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | #179 பாலை கோடி
மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் |
| விண் தோய்
சிமைய விறல் வரை கவாஅன் | விண் தோய் சிமைய விறல்
வரை கவாஅன் |
| வெண் தேர்
ஓடும் கடம் காய் மருங்கில் | வெண் தேர் ஓடும் கடம்
காய் மருங்கில் |
| துனை எரி பரந்த
துன் அரும் வியன் காட்டு | துனை எரி பரந்த துன்
அரும் வியன் காட்டு |
| சிறு கண் யானை
நெடும் கை நீட்டி | சிறு கண் யானை நெடும்
கை நீட்டி |
| வான் வாய்
திறந்தும் வண் புனல் பெறாஅது | வான் வாய் திறந்தும்
வண் புனல் பெறாஅது |
| கான் புலந்து
கழியும் கண் அகன் பரப்பின் | கான் புலந்து கழியும்
கண் அகன் பரப்பின் |
| விடு வாய் செம்
கணை கொடு வில் ஆடவர் | விடு வாய் செம் கணை
கொடு வில் ஆடவர் |
| நன் நிலை
பொறித்த கல் நிலை அதர | நன் நிலை பொறித்த கல்
நிலை அதர |
| அரம்பு கொள்
பூசல் களையுநர் காணா | அரம்பு கொள் பூசல்
களையுநர் காணா |
| சுரம் செல
விரும்பினிர் ஆயின் இன் நகை | சுரம் செல
விரும்பினிர் ஆயின் இன் நகை |
| முருந்து என
திரண்ட முள் எயிற்று துவர் வாய் | முருந்து என திரண்ட
முள் எயிற்று துவர் வாய் |
| குவளை
நாள்_மலர் புரையும் உண்கண் இ | குவளை நாள்_மலர்
புரையும் உண்கண் இ |
| மதி ஏர் வாள்
நுதல் புலம்ப | மதி ஏர் வாள் நுதல்
புலம்ப |
| பதி பெயர்ந்து
உறைதல் ஒல்லுமோ நுமக்கே | பதி பெயர்ந்து உறைதல்
ஒல்லுமோ நுமக்கே |
| | |
| #180 நெய்தல்
கருவூர் கண்ணம்பாளனார் | #180 நெய்தல் கருவூர்
கண்ணம்பாளனார் |
| நகை நனி
உடைத்தால் தோழி தகை மிக | நகை நனி உடைத்தால்
தோழி தகை மிக |
| கோதை ஆயமொடு
குவவு மணல் ஏறி | கோதை ஆயமொடு குவவு
மணல் ஏறி |
| வீ ததை கானல்
வண்டல் அயர | வீ ததை கானல் வண்டல்
அயர |
| கதழ் பரி திண்
தேர் கடைஇ வந்து | கதழ் பரி திண் தேர்
கடைஇ வந்து |
| தண் கயத்து
அமன்ற ஒண் பூ குவளை | தண் கயத்து அமன்ற ஒண்
பூ குவளை |
| அரும்பு
அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி | அரும்பு அலைத்து
இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
| பின்னு புறம்
தாழ கொன்னே சூட்டி | பின்னு புறம் தாழ
கொன்னே சூட்டி |
| நல் வரல் இள
முலை நோக்கி நெடிது நினைந்து | நல் வரல் இள முலை
நோக்கி நெடிது நினைந்து |
| நில்லாது
பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே | நில்லாது பெயர்ந்தனன்
ஒருவன் அதற்கே |
| புலவு நாறு
இரும் கழி துழைஇ பல உடன் | புலவு நாறு இரும் கழி
துழைஇ பல உடன் |
| புள் இறைகொண்ட
முள் உடை நெடும் தோட்டு | புள் இறைகொண்ட முள்
உடை நெடும் தோட்டு |
| தாழை மணந்து
ஞாழலொடு கெழீஇ | தாழை மணந்து ஞாழலொடு
கெழீஇ |
| படப்பை நின்ற
முட தாள் புன்னை | படப்பை நின்ற முட தாள்
புன்னை |
| பொன் நேர் நுண்
தாது நோக்கி | பொன் நேர் நுண் தாது
நோக்கி |
| என்னும்
நோக்கும் இ அழுங்கல் ஊரே | என்னும் நோக்கும் இ
அழுங்கல் ஊரே |
| | |
| | |
| | |
| | |
| | |
| #181 பாலை
பரணர் | #181 பாலை பரணர் |
| துன் அரும்
கானமும் துணிதல் ஆற்றாய் | துன் அரும் கானமும்
துணிதல் ஆற்றாய் |
| பின் நின்று
பெயர சூழ்ந்தனை ஆயின் | பின் நின்று பெயர
சூழ்ந்தனை ஆயின் |
| என் நிலை உரைமோ
நெஞ்சே ஒன்னார் | என் நிலை உரைமோ நெஞ்சே
ஒன்னார் |
| ஓம்பு அரண்
கடந்த வீங்கு பெரும் தானை | ஓம்பு அரண் கடந்த
வீங்கு பெரும் தானை |
| அடு போர்
மிஞிலி செரு வேல் கடைஇ | அடு போர் மிஞிலி செரு
வேல் கடைஇ |
| முருகு உறழ்
முன்பொடு பொருது களம் சிவப்ப | முருகு உறழ் முன்பொடு
பொருது களம் சிவப்ப |
| ஆஅய் எயினன்
வீழ்ந்து என ஞாயிற்று | ஆஅய் எயினன் வீழ்ந்து
என ஞாயிற்று |
| ஒண் கதிர்
உருப்பம் புதைய ஓராங்கு | ஒண் கதிர் உருப்பம்
புதைய ஓராங்கு |
| வம்ப புள்ளின்
கம்பலை பெரும் தோடு | வம்ப புள்ளின் கம்பலை
பெரும் தோடு |
| விசும்பு இடை
தூர ஆடி மொசிந்து உடன் | விசும்பு இடை தூர ஆடி
மொசிந்து உடன் |
| பூ விரி அகன்
துறை கணை விசை கடு நீர் | பூ விரி அகன் துறை கணை
விசை கடு நீர் |
| காவிரி
பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி | காவிரி பேரியாற்று
அயிர் கொண்டு ஈண்டி |
| எக்கர் இட்ட
குப்பை வெண் மணல் | எக்கர் இட்ட குப்பை
வெண் மணல் |
| வைப்பின் யாணர்
வளம் கெழு வேந்தர் | வைப்பின் யாணர் வளம்
கெழு வேந்தர் |
| ஞாலம் நாறும்
நலம் கெழு நல் இசை | ஞாலம் நாறும் நலம்
கெழு நல் இசை |
| நான்மறை முது
நூல் முக்கண்_செல்வன் | நான்மறை முது நூல்
முக்கண்_செல்வன் |
| ஆலமுற்றம்
கவின் பெற தைஇய | ஆலமுற்றம் கவின் பெற
தைஇய |
| பொய்கை சூழ்ந்த
பொழில் மனை மகளிர் | பொய்கை சூழ்ந்த பொழில்
மனை மகளிர் |
| கை செய் பாவை
துறை_கண் இறுக்கும் | கை செய் பாவை துறை_கண்
இறுக்கும் |
| மகர நெற்றி
வான் தோய் புரிசை | மகர நெற்றி வான் தோய்
புரிசை |
| சிகரம் தோன்றா
சேண் உயர் நல் இல் | சிகரம் தோன்றா சேண்
உயர் நல் இல் |
| புகாஅர் நன்
நாட்டதுவே பகாஅர் | புகாஅர் நன் நாட்டதுவே
பகாஅர் |
| பண்டம் நாறும்
வண்டு அடர் ஐம்பால் | பண்டம் நாறும் வண்டு
அடர் ஐம்பால் |
| பணை தகை தடைஇய
காண்பு இன் மென் தோள் | பணை தகை தடைஇய காண்பு
இன் மென் தோள் |
| அணங்கு சால்
அரிவை இருந்த | அணங்கு சால் அரிவை
இருந்த |
| மணம் கமழ்
மறுகின் மணல் பெரும் குன்றே | மணம் கமழ் மறுகின்
மணல் பெரும் குன்றே |
| | |
| #182 குறிஞ்சி
கபிலர் | #182 குறிஞ்சி கபிலர் |
| பூ கண் வேங்கை
பொன் இணர் மிலைந்து | பூ கண் வேங்கை பொன்
இணர் மிலைந்து |
| வாங்கு அமை
நோன் சிலை எருத்தத்து இரீஇ | வாங்கு அமை நோன் சிலை
எருத்தத்து இரீஇ |
| தீம் பழ பலவின்
சுளை விளை தேறல் | தீம் பழ பலவின் சுளை
விளை தேறல் |
| வீளை அம்பின்
இளையரொடு மாந்தி | வீளை அம்பின் இளையரொடு
மாந்தி |
| ஓட்டு இயல்
பிழையா வய நாய் பிற்பட | ஓட்டு இயல் பிழையா வய
நாய் பிற்பட |
| வேட்டம் போகிய
குறவன் காட்ட | வேட்டம் போகிய குறவன்
காட்ட |
| குளவி தண்
புதல் குருதியொடு துயல் வர | குளவி தண் புதல்
குருதியொடு துயல் வர |
| முளவு_மா
தொலைச்சும் குன்ற நாட | முளவு_மா தொலைச்சும்
குன்ற நாட |
| அரவு எறி
உருமோடு ஒன்றி கால்வீழ்த்து | அரவு எறி உருமோடு
ஒன்றி கால்வீழ்த்து |
| உரவு மழை
பொழிந்த பானாள் கங்குல் | உரவு மழை பொழிந்த
பானாள் கங்குல் |
| தனியை வந்த ஆறு
நினைந்து அல்கலும் | தனியை வந்த ஆறு
நினைந்து அல்கலும் |
| பனியொடு
கலுழும் இவள் கண்ணே அதனால் | பனியொடு கலுழும் இவள்
கண்ணே அதனால் |
| கடும் பகல்
வருதல் வேண்டும் தெய்ய | கடும் பகல் வருதல்
வேண்டும் தெய்ய |
| அதிர் குரல்
முது கலை கறி முறி முனைஇ | அதிர் குரல் முது கலை
கறி முறி முனைஇ |
| உயர் சிமை
நெடும் கோட்டு உகள உக்க | உயர் சிமை நெடும்
கோட்டு உகள உக்க |
| கமழ் இதழ் அலரி
தாஅய் வேலன் | கமழ் இதழ் அலரி தாஅய்
வேலன் |
| வெறி அயர்
வியன் களம் கடுக்கும் | வெறி அயர் வியன் களம்
கடுக்கும் |
| பெரு வரை
நண்ணிய சாரலானே | பெரு வரை நண்ணிய
சாரலானே |
| | |
| #183 பாலை
கருவூர் கலிங்கத்தார் | #183 பாலை கருவூர்
கலிங்கத்தார் |
| குவளை உண்கண்
கலுழவும் திருந்து_இழை | குவளை உண்கண் கலுழவும்
திருந்து_இழை |
| திதலை அல்குல்
அம் வரி வாடவும் | திதலை அல்குல் அம் வரி
வாடவும் |
| அத்தம் ஆர்
அழுவம் நம் துறந்து அருளார் | அத்தம் ஆர் அழுவம் நம்
துறந்து அருளார் |
| சென்று சேண்
இடையர் ஆயினும் நன்றும் | சென்று சேண் இடையர்
ஆயினும் நன்றும் |
| நீடலர் என்றி
தோழி பாடு ஆன்று | நீடலர் என்றி தோழி
பாடு ஆன்று |
| பனி துறை
பெரும் கடல் இறந்து நீர் பருகி | பனி துறை பெரும் கடல்
இறந்து நீர் பருகி |
| குவவு திரை
அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு | குவவு திரை அருந்து
கொள்ளைய குடக்கு ஏர்பு |
| வயவு பிடி
இனத்தின் வயின்_வயின் தோன்றி | வயவு பிடி இனத்தின்
வயின்_வயின் தோன்றி |
| இரும் கிளை
கொண்மூ ஒருங்குடன் துவன்றி | இரும் கிளை கொண்மூ
ஒருங்குடன் துவன்றி |
| காலை
வந்தன்றால் காரே மாலை | காலை வந்தன்றால் காரே
மாலை |
| குளிர் கொள்
பிடவின் கூர் முகை அலரி | குளிர் கொள் பிடவின்
கூர் முகை அலரி |
| வண்டு வாய்
திறக்கும் தண்டா நாற்றம் | வண்டு வாய் திறக்கும்
தண்டா நாற்றம் |
| கூதிர்
அற்சிரத்து ஊதை தூற்ற | கூதிர் அற்சிரத்து ஊதை
தூற்ற |
| பனி அலை
கலங்கிய நெஞ்சமொடு | பனி அலை கலங்கிய
நெஞ்சமொடு |
| வருந்துவம்
அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே | வருந்துவம் அல்லமோ
பிரிந்திசினோர் திறத்தே |
| | |
| #184 முல்லை
மதுரை மருதன் இளநாகனார் | #184 முல்லை மதுரை
மருதன் இளநாகனார் |
| கடவுள் கற்பொடு
குடிக்கு விளக்கு ஆகிய | கடவுள் கற்பொடு
குடிக்கு விளக்கு ஆகிய |
| புதல்வன் பயந்த
புகழ் மிகு சிறப்பின் | புதல்வன் பயந்த புகழ்
மிகு சிறப்பின் |
| நன்னராட்டிக்கு
அன்றியும் எனக்கும் | நன்னராட்டிக்கு
அன்றியும் எனக்கும் |
| இனிது
ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் | இனிது ஆகின்றால்
சிறக்க நின் ஆயுள் |
| அரும் தொழில்
முடித்த செம்மல் உள்ளமொடு | அரும் தொழில் முடித்த
செம்மல் உள்ளமொடு |
| சுரும்பு இமிர்
மலர கானம் பிற்பட | சுரும்பு இமிர் மலர
கானம் பிற்பட |
| வெண் பிடவு
அவிழ்ந்த வீ கமழ் புறவில் | வெண் பிடவு அவிழ்ந்த
வீ கமழ் புறவில் |
| குண்டை கோட்ட
குறு முள் கள்ளி | குண்டை கோட்ட குறு
முள் கள்ளி |
| புன் தலை
புதைத்த கொழும் கொடி முல்லை | புன் தலை புதைத்த
கொழும் கொடி முல்லை |
| ஆர் கழல் புது
பூ உயிர்ப்பின் நீக்கி | ஆர் கழல் புது பூ
உயிர்ப்பின் நீக்கி |
| தெள் அறல்
பருகிய திரி மருப்பு எழில் கலை | தெள் அறல் பருகிய திரி
மருப்பு எழில் கலை |
| புள்ளி அம்
பிணையொடு வதியும் ஆங்கண் | புள்ளி அம் பிணையொடு
வதியும் ஆங்கண் |
| கோடு உடை கையர்
துளர் எறி வினைஞர் | கோடு உடை கையர் துளர்
எறி வினைஞர் |
| அரியல்
ஆர்கையர் விளை மகிழ் தூங்க | அரியல் ஆர்கையர் விளை
மகிழ் தூங்க |
| செல் கதிர்
மழுகிய உருவ ஞாயிற்று | செல் கதிர் மழுகிய
உருவ ஞாயிற்று |
| செக்கர் வானம்
சென்ற பொழுதில் | செக்கர் வானம் சென்ற
பொழுதில் |
| கல் பால்
அருவியின் ஒலிக்கும் நல் தேர் | கல் பால் அருவியின்
ஒலிக்கும் நல் தேர் |
| தார் மணி பல
உடன் இயம்ப | தார் மணி பல உடன்
இயம்ப |
| சீர் மிகு
குருசில் நீ வந்து நின்றதுவே | சீர் மிகு குருசில் நீ
வந்து நின்றதுவே |
| | |
| #185 பாலை
பாலைபாடிய பெருங்கடுங்கோ | #185 பாலை பாலைபாடிய
பெருங்கடுங்கோ |
| எல் வளை ஞெகிழ
சாஅய் ஆய்_இழை | எல் வளை ஞெகிழ சாஅய்
ஆய்_இழை |
| நல் எழில் பணை
தோள் இரும் கவின் அழிய | நல் எழில் பணை தோள்
இரும் கவின் அழிய |
| பெரும் கையற்ற
நெஞ்சமொடு நம் துறந்து | பெரும் கையற்ற
நெஞ்சமொடு நம் துறந்து |
| இரும்பின் இன்
உயிர் உடையோர் போல | இரும்பின் இன் உயிர்
உடையோர் போல |
| வலித்து
வல்லினர் காதலர் வாடல் | வலித்து வல்லினர்
காதலர் வாடல் |
| ஒலி கழை நிவந்த
நெல் உடை நெடு வெதிர் | ஒலி கழை நிவந்த நெல்
உடை நெடு வெதிர் |
| கலி கொள்
மள்ளர் வில் விசையின் உடைய | கலி கொள் மள்ளர் வில்
விசையின் உடைய |
| பைது அற
வெம்பிய கல் பொரு பரப்பின் | பைது அற வெம்பிய கல்
பொரு பரப்பின் |
| வேனில்
அத்தத்து ஆங்கண் வான் உலந்து | வேனில் அத்தத்து
ஆங்கண் வான் உலந்து |
| அருவி ஆன்ற
உயர் சிமை மருங்கில் | அருவி ஆன்ற உயர் சிமை
மருங்கில் |
| பெரு விழா
விளக்கம் போல பல உடன் | பெரு விழா விளக்கம்
போல பல உடன் |
| இலை இல மலர்ந்த
இலவமொடு | இலை இல மலர்ந்த
இலவமொடு |
| நிலை உயர்
பிறங்கல் மலை இறந்தோரே | நிலை உயர் பிறங்கல்
மலை இறந்தோரே |
| | |
| #186 மருதம்
பரணர் | #186 மருதம் பரணர் |
| வானம் வேண்டா
வறன் இல் வாழ்க்கை | வானம் வேண்டா வறன் இல்
வாழ்க்கை |
| நோன் ஞாண்
வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் | நோன் ஞாண் வினைஞர்
கோள் அறிந்து ஈர்க்கும் |
| மீன் முதிர்
இலஞ்சி கலித்த தாமரை | மீன் முதிர் இலஞ்சி
கலித்த தாமரை |
| நீர் மிசை
நிவந்த நெடும் தாள் அகல் இலை | நீர் மிசை நிவந்த
நெடும் தாள் அகல் இலை |
| இரும் கயம்
துளங்க கால் உறு-தொறும் | இரும் கயம் துளங்க
கால் உறு-தொறும் |
| பெரும் களிற்று
செவியின் அலைக்கும் ஊரனொடு | பெரும் களிற்று
செவியின் அலைக்கும் ஊரனொடு |
| எழுந்த கௌவையோ
பெரிதே நட்பே | எழுந்த கௌவையோ பெரிதே
நட்பே |
| கொழும் கோல்
வேழத்து புணை துணை ஆக | கொழும் கோல் வேழத்து
புணை துணை ஆக |
| புனல் ஆடு
கேண்மை அனைத்தே அவனே | புனல் ஆடு கேண்மை
அனைத்தே அவனே |
| ஒண் தொடி
மகளிர் பண்டை யாழ் பாட | ஒண் தொடி மகளிர் பண்டை
யாழ் பாட |
| ஈர்ம் தண்
முழவின் எறி குணில் விதிர்ப்ப | ஈர்ம் தண் முழவின் எறி
குணில் விதிர்ப்ப |
| தண் நறும்
சாந்தம் கமழும் தோள் மணந்து | தண் நறும் சாந்தம்
கமழும் தோள் மணந்து |
| இன்னும்
பிறள்_வயினானே மனையோள் | இன்னும் பிறள்_வயினானே
மனையோள் |
| எம்மொடு
புலக்கும் என்ப வென் வேல் | எம்மொடு புலக்கும்
என்ப வென் வேல் |
| மாரி அம்பின்
மழை தோல் பழையன் | மாரி அம்பின் மழை தோல்
பழையன் |
| காவிரி
வைப்பின் போஒர் அன்ன என் | காவிரி வைப்பின் போஒர்
அன்ன என் |
| செறி வளை
உடைத்தலோ இலனே உரிதினின் | செறி வளை உடைத்தலோ
இலனே உரிதினின் |
| யாம் தன்
பகையேம் அல்லேம் சேர்ந்தோர் | யாம் தன் பகையேம்
அல்லேம் சேர்ந்தோர் |
| திரு நுதல்
பசப்ப நீங்கும் | திரு நுதல் பசப்ப
நீங்கும் |
| கொழுநனும்
சாலும் தன் உடன் உறை பகையே | கொழுநனும் சாலும் தன்
உடன் உறை பகையே |
| | |
| #187 பாலை
மாமூலனார் | #187 பாலை மாமூலனார் |
| தோள் புலம்பு
அகல துஞ்சி நம்மொடு | தோள் புலம்பு அகல
துஞ்சி நம்மொடு |
| நாள் பல நீடிய
கரந்து உறை புணர்ச்சி | நாள் பல நீடிய கரந்து
உறை புணர்ச்சி |
| நாண் உடைமையின்
நீங்கி சேய் நாட்டு | நாண் உடைமையின் நீங்கி
சேய் நாட்டு |
| அரும் பொருள்
வலித்த நெஞ்சமொடு ஏகி | அரும் பொருள் வலித்த
நெஞ்சமொடு ஏகி |
| நம் உயர்வு
உள்ளினர் காதலர் கறுத்தோர் | நம் உயர்வு உள்ளினர்
காதலர் கறுத்தோர் |
| தெம் முனை
சிதைத்த கடும் பரி புரவி | தெம் முனை சிதைத்த
கடும் பரி புரவி |
| வார் கழல்
பொலிந்த வன்கண் மழவர் | வார் கழல் பொலிந்த
வன்கண் மழவர் |
| பூ தொடை
விழவின் தலை நாள் அன்ன | பூ தொடை விழவின் தலை
நாள் அன்ன |
| தரு மணல்
ஞெமிரிய திரு நகர் முற்றம் | தரு மணல் ஞெமிரிய திரு
நகர் முற்றம் |
| புலம்பு
உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு | புலம்பு உறும்-கொல்லோ
தோழி சேண் ஓங்கு |
| அலந்தலை
ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் | அலந்தலை ஞெமையத்து ஆள்
இல் ஆங்கண் |
| கல் சேர்பு
இருந்த சில் குடி பாக்கத்து | கல் சேர்பு இருந்த
சில் குடி பாக்கத்து |
| எல் விருந்து
அயர ஏமத்து அல்கி | எல் விருந்து அயர
ஏமத்து அல்கி |
| மனை உறை கோழி
அணல் தாழ்பு அன்ன | மனை உறை கோழி அணல்
தாழ்பு அன்ன |
| கவை ஒண் தளிர
கரும் கால் யாஅத்து | கவை ஒண் தளிர கரும்
கால் யாஅத்து |
| வேனில்
வெற்பின் கானம் காய | வேனில் வெற்பின் கானம்
காய |
| முனை எழுந்து
ஓடிய கெடு நாட்டு ஆரிடை | முனை எழுந்து ஓடிய
கெடு நாட்டு ஆரிடை |
| பனை வெளிறு
அருந்து பைம் கண் யானை | பனை வெளிறு அருந்து
பைம் கண் யானை |
| ஒண் சுடர்
முதிரா இளம் கதிர் அமையத்து | ஒண் சுடர் முதிரா இளம்
கதிர் அமையத்து |
| கண்படு பாயல்
கை ஒடுங்கு அசை நிலை | கண்படு பாயல் கை
ஒடுங்கு அசை நிலை |
| வாள் வாய்
சுறவின் பனி துறை நீந்தி | வாள் வாய் சுறவின் பனி
துறை நீந்தி |
| நாள் வேட்டு
எழுந்த நயன் இல் பரதவர் | நாள் வேட்டு எழுந்த
நயன் இல் பரதவர் |
| வைகு கடல்
அம்பியின் தோன்றும் | வைகு கடல் அம்பியின்
தோன்றும் |
| மை படு மா மலை
விலங்கிய சுரனே | மை படு மா மலை
விலங்கிய சுரனே |
| | |
| #188 குறிஞ்சி
வீரை வௌவௌயன் தித்தனார் | #188 குறிஞ்சி வீரை
வௌவௌயன் தித்தனார் |
| பெரும் கடல்
முகந்த இரும் கிளை கொண்மூ | பெரும் கடல் முகந்த
இரும் கிளை கொண்மூ |
| இருண்டு உயர்
விசும்பின் வலன் ஏர்பு வளைஇ | இருண்டு உயர்
விசும்பின் வலன் ஏர்பு வளைஇ |
| போர்ப்பு_உறு
முரசின் இரங்கி முறை புரிந்து | போர்ப்பு_உறு முரசின்
இரங்கி முறை புரிந்து |
| அறன் நெறி
பிழையா திறன் அறி மன்னர் | அறன் நெறி பிழையா
திறன் அறி மன்னர் |
| அரும் சமத்து
எதிர்ந்த பெரும் செய் ஆடவர் | அரும் சமத்து எதிர்ந்த
பெரும் செய் ஆடவர் |
| கழித்து எறி
வாளின் நளிப்பன விளங்கும் | கழித்து எறி வாளின்
நளிப்பன விளங்கும் |
| மின் உடை
கருவியை ஆகி நாளும் | மின் உடை கருவியை ஆகி
நாளும் |
| கொன்னே
செய்தியோ அரவம் பொன் என | கொன்னே செய்தியோ அரவம்
பொன் என |
| மலர்ந்த வேங்கை
மலி தொடர் அடைச்சி | மலர்ந்த வேங்கை மலி
தொடர் அடைச்சி |
| பொலிந்த ஆயமொடு
காண்_தக இயலி | பொலிந்த ஆயமொடு
காண்_தக இயலி |
| தழலை
வாங்கியும் தட்டை ஓப்பியும் | தழலை வாங்கியும் தட்டை
ஓப்பியும் |
| அழல் ஏர் செயலை
அம் தழை அசைஇயும் | அழல் ஏர் செயலை அம்
தழை அசைஇயும் |
| குற_மகள்
காக்கும் ஏனல் | குற_மகள் காக்கும்
ஏனல் |
| புறமும்
தருதியோ வாழிய மழையே | புறமும் தருதியோ வாழிய
மழையே |
| | |
| #189 பாலை
கயமனார் | #189 பாலை கயமனார் |
| பசும் பழ
பலவின் கானம் வெம்பி | பசும் பழ பலவின் கானம்
வெம்பி |
| விசும்பு கண்
அழிய வேனில் நீடி | விசும்பு கண் அழிய
வேனில் நீடி |
| கயம் கண் அற்ற
கல் ஓங்கு வைப்பின் | கயம் கண் அற்ற கல்
ஓங்கு வைப்பின் |
| நாறு உயிர் மட
பிடி தழைஇ வேறு நாட்டு | நாறு உயிர் மட பிடி
தழைஇ வேறு நாட்டு |
| விழவு படர்
மள்ளரின் முழவு எடுத்து உயரி | விழவு படர் மள்ளரின்
முழவு எடுத்து உயரி |
| களிறு
அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் | களிறு அதர்ப்படுத்த
கல் உயர் கவாஅன் |
| வெம் வரை
அத்தம் சுட்டி பையென | வெம் வரை அத்தம்
சுட்டி பையென |
| வயலை அம்
பிணையல் வார்ந்த கவாஅன் | வயலை அம் பிணையல்
வார்ந்த கவாஅன் |
| திதலை அல்குல்
குறு_மகள் அவனொடு | திதலை அல்குல்
குறு_மகள் அவனொடு |
| சென்று பிறள்
ஆகிய அளவை என்றும் | சென்று பிறள் ஆகிய
அளவை என்றும் |
| படர் மலி
எவ்வமொடு மாதிரம் துழைஇ | படர் மலி எவ்வமொடு
மாதிரம் துழைஇ |
| மனை மருண்டு
இருந்த என்னினும் நனை மகிழ் | மனை மருண்டு இருந்த
என்னினும் நனை மகிழ் |
| நன்னராளர் கூடு
கொள் இன் இயம் | நன்னராளர் கூடு கொள்
இன் இயம் |
| தேர் ஊர்
தெருவில் ததும்பும் | தேர் ஊர் தெருவில்
ததும்பும் |
| ஊர் இழந்தன்று
தன் வீழ்வு உறு பொருளே | ஊர் இழந்தன்று தன்
வீழ்வு உறு பொருளே |
| | |
| #190 நெய்தல்
உலோச்சனார் | #190 நெய்தல்
உலோச்சனார் |
| திரை உழந்து
அசைஇய நிரை வளை ஆயமொடு | திரை உழந்து அசைஇய
நிரை வளை ஆயமொடு |
| உப்பின் குப்பை
ஏறி எல் பட | உப்பின் குப்பை ஏறி
எல் பட |
| வரு திமில்
எண்ணும் துறைவனொடு ஊரே | வரு திமில் எண்ணும்
துறைவனொடு ஊரே |
| ஒரு தன்
கொடுமையின் அலர் பாடும்மே | ஒரு தன் கொடுமையின்
அலர் பாடும்மே |
| அலமரல் மழை கண்
அமர்ந்து நோக்காள் | அலமரல் மழை கண்
அமர்ந்து நோக்காள் |
| அலையல் வாழி
வேண்டு அன்னை உயர் சிமை | அலையல் வாழி வேண்டு
அன்னை உயர் சிமை |
| பொதும்பில்
புன்னை சினை சேர்பு இருந்த | பொதும்பில் புன்னை
சினை சேர்பு இருந்த |
| வம்ப நாரை இரிய
ஒரு நாள் | வம்ப நாரை இரிய ஒரு
நாள் |
| பொங்கு வரல்
ஊதையொடு புணரி அலைப்பவும் | பொங்கு வரல் ஊதையொடு
புணரி அலைப்பவும் |
| உழை கடல்
வழங்கலும் உரியன் அதன்_தலை | உழை கடல் வழங்கலும்
உரியன் அதன்_தலை |
| இரும் கழி
புகாஅர் பொருந்த தாக்கி | இரும் கழி புகாஅர்
பொருந்த தாக்கி |
| வய சுறா
எறிந்து என வலவன் அழிப்ப | வய சுறா எறிந்து என
வலவன் அழிப்ப |
| எழில் பயம்
குன்றிய சிறை அழி தொழில | எழில் பயம் குன்றிய
சிறை அழி தொழில |
| நிரை மணி புரவி
விரை நடை தவிர | நிரை மணி புரவி விரை
நடை தவிர |
| இழுமென் கானல்
விழு மணல் அசைஇ | இழுமென் கானல் விழு
மணல் அசைஇ |
| ஆய்ந்த பரியன்
வந்து இவண் | ஆய்ந்த பரியன் வந்து
இவண் |
| மான்ற மாலை
சேர்ந்தன்றோ இலனே | மான்ற மாலை
சேர்ந்தன்றோ இலனே |
| | |
| | |
| | |
| | |
| | |
| #191 பாலை
ஒரோடோகத்து கந்தரத்தனார் | #191 பாலை ஒரோடோகத்து
கந்தரத்தனார் |
| அத்த பாதிரி
துய் தலை புது வீ | அத்த பாதிரி துய் தலை
புது வீ |
| எரி இதழ்
அலரியொடு இடைப்பட விரைஇ | எரி இதழ் அலரியொடு
இடைப்பட விரைஇ |
| வண் தோட்டு
தொடுத்த வண்டு படு கண்ணி | வண் தோட்டு தொடுத்த
வண்டு படு கண்ணி |
| தோல் புதை
சிரற்று அடி கோல் உடை உமணர் | தோல் புதை சிரற்று அடி
கோல் உடை உமணர் |
| ஊர் கண்டு அன்ன
ஆரம் வாங்கி | ஊர் கண்டு அன்ன ஆரம்
வாங்கி |
| அரும் சுரம்
இவர்ந்த அசைவு இல் நோன் தாள் | அரும் சுரம் இவர்ந்த
அசைவு இல் நோன் தாள் |
| திருந்து
பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர் | திருந்து பகட்டு
இயம்பும் கொடு மணி புரிந்து அவர் |
| மடி விடு
வீளையொடு கடிது எதிர் ஓடி | மடி விடு வீளையொடு
கடிது எதிர் ஓடி |
| ஓமை அம் பெரும்
காட்டு வரூஉம் வம்பலர்க்கு | ஓமை அம் பெரும் காட்டு
வரூஉம் வம்பலர்க்கு |
| ஏமம் செப்பும்
என்றூழ் நீள் இடை | ஏமம் செப்பும் என்றூழ்
நீள் இடை |
| அரும் பொருள்
நசைஇ பிரிந்து உறை வல்லி | அரும் பொருள் நசைஇ
பிரிந்து உறை வல்லி |
| சென்று வினை
எண்ணுதி ஆயின் நன்றும் | சென்று வினை எண்ணுதி
ஆயின் நன்றும் |
| உரைத்திசின்
வாழி என் நெஞ்சே நிரை முகை | உரைத்திசின் வாழி என்
நெஞ்சே நிரை முகை |
| முல்லை
அருந்தும் மெல்லிய ஆகி | முல்லை அருந்தும்
மெல்லிய ஆகி |
| அறல் என
விரிந்த உறல் இன் சாயல் | அறல் என விரிந்த உறல்
இன் சாயல் |
| ஒலி இரும்
கூந்தல் தேறும் என | ஒலி இரும் கூந்தல்
தேறும் என |
| வலிய கூறவும்
வல்லையோ மற்றே | வலிய கூறவும் வல்லையோ
மற்றே |
| | |
| #192 குறிஞ்சி
பொதும்பில்கிழான் வெண்கண்ணனார் | #192 குறிஞ்சி
பொதும்பில்கிழான் வெண்கண்ணனார் |
| மதி இருப்பு
அன்ன மாசு அறு சுடர் நுதல் | மதி இருப்பு அன்ன மாசு
அறு சுடர் நுதல் |
| பொன் நேர்
வண்ணம் கொண்டன்று அன்னோ | பொன் நேர் வண்ணம்
கொண்டன்று அன்னோ |
| யாங்கு
ஆகுவள்-கொல் தானே விசும்பின் | யாங்கு ஆகுவள்-கொல்
தானே விசும்பின் |
| எய்யா வரி வில்
அன்ன பைம் தார் | எய்யா வரி வில் அன்ன
பைம் தார் |
| செம் வாய் சிறு
கிளி சிதைய வாங்கி | செம் வாய் சிறு கிளி
சிதைய வாங்கி |
| பொறை
மெலிந்திட்ட புன் புற பெரும் குரல் | பொறை மெலிந்திட்ட புன்
புற பெரும் குரல் |
| வளை சிறை
வாரணம் கிளையொடு கவர | வளை சிறை வாரணம்
கிளையொடு கவர |
| ஏனலும் இறங்கு
பொறை உயிர்த்தன பானாள் | ஏனலும் இறங்கு பொறை
உயிர்த்தன பானாள் |
| நீ வந்து
அளிக்குவை எனினே மால் வரை | நீ வந்து அளிக்குவை
எனினே மால் வரை |
| மை படு
விடர்_அகம் துழைஇ ஒய்யென | மை படு விடர்_அகம்
துழைஇ ஒய்யென |
| அருவி தந்த
அரவு உமிழ் திரு மணி | அருவி தந்த அரவு உமிழ்
திரு மணி |
| பெரு வரை
சிறுகுடி மறுகு விளக்கு_உறுத்தலின் | பெரு வரை சிறுகுடி
மறுகு விளக்கு_உறுத்தலின் |
| இரவும்
இழந்தனள் அளியள் உரவு பெயல் | இரவும் இழந்தனள்
அளியள் உரவு பெயல் |
| உரும் இறைகொண்ட
உயர் சிமை | உரும் இறைகொண்ட உயர்
சிமை |
| பெரு மலை நாட
நின் மலர்ந்த மார்பே | பெரு மலை நாட நின்
மலர்ந்த மார்பே |
| | |
| #193 பாலை
மதுரை மருதன் இளநாகனார் | #193 பாலை மதுரை
மருதன் இளநாகனார் |
| கான் உயர்
மருங்கில் கவலை அல்லது | கான் உயர் மருங்கில்
கவலை அல்லது |
| வானம் வேண்டா
வில் ஏர் உழவர் | வானம் வேண்டா வில் ஏர்
உழவர் |
| பெரு நாள்
வேட்டம் கிளை எழ வாய்த்த | பெரு நாள் வேட்டம்
கிளை எழ வாய்த்த |
| பொரு_களத்து
ஒழிந்த குருதி செம் வாய் | பொரு_களத்து ஒழிந்த
குருதி செம் வாய் |
| பொறித்த போலும்
வால் நிற எருத்தின் | பொறித்த போலும் வால்
நிற எருத்தின் |
| அணிந்த போலும்
செம் செவி எருவை | அணிந்த போலும் செம்
செவி எருவை |
| குறும் பொறை
எழுந்த நெடும் தாள் யாஅத்து | குறும் பொறை எழுந்த
நெடும் தாள் யாஅத்து |
| அரும் கவட்டு
உயர் சினை பிள்ளை ஊட்ட | அரும் கவட்டு உயர்
சினை பிள்ளை ஊட்ட |
| விரைந்து வாய்
வழுக்கிய கொழும் கண் ஊன் தடி | விரைந்து வாய்
வழுக்கிய கொழும் கண் ஊன் தடி |
| கொல் பசி முது
நரி வல்சி ஆகும் | கொல் பசி முது நரி
வல்சி ஆகும் |
| சுரன் நமக்கு
எளிய-மன்னே நன் மனை | சுரன் நமக்கு
எளிய-மன்னே நன் மனை |
| பன் மாண்
தங்கிய சாயல் இன் மொழி | பன் மாண் தங்கிய சாயல்
இன் மொழி |
| முருந்து ஏர்
முறுவல் இளையோள் | முருந்து ஏர் முறுவல்
இளையோள் |
| பெரும் தோள்
இன் துயில் கைவிடுகலனே | பெரும் தோள் இன்
துயில் கைவிடுகலனே |
| | |
| #194 முல்லை
இடைக்காடனார் | #194 முல்லை
இடைக்காடனார் |
| பேர் உறை தலைஇய
பெரும் புலர் வைகறை | பேர் உறை தலைஇய பெரும்
புலர் வைகறை |
| ஏர் இடம்படுத்த
இரு மறு பூழி | ஏர் இடம்படுத்த இரு
மறு பூழி |
| புறம்
மாறுபெற்ற பூவல் ஈரத்து | புறம் மாறுபெற்ற பூவல்
ஈரத்து |
| ஊன் கிழித்து
அன்ன செம் சுவல் நெடும் சால் | ஊன் கிழித்து அன்ன
செம் சுவல் நெடும் சால் |
| வித்திய
மருங்கின் விதை பல நாறி | வித்திய மருங்கின்
விதை பல நாறி |
| இரலை நன் மான்
இனம் பரந்தவை போல் | இரலை நன் மான் இனம்
பரந்தவை போல் |
| கோடு உடை
தலைக்குடை சூடிய வினைஞர் | கோடு உடை தலைக்குடை
சூடிய வினைஞர் |
| கறங்கு பறை
சீரின் இரங்க வாங்கி | கறங்கு பறை சீரின்
இரங்க வாங்கி |
| களை கால் கழீஇய
பெரும் புன வரகின் | களை கால் கழீஇய பெரும்
புன வரகின் |
| கவை கதிர்
இரும் புறம் கதூஉ உண்ட | கவை கதிர் இரும் புறம்
கதூஉ உண்ட |
| குடுமி நெற்றி
நெடு மா தோகை | குடுமி நெற்றி நெடு மா
தோகை |
| காமர் கலவம்
பரப்பி ஏமுற | காமர் கலவம் பரப்பி
ஏமுற |
| கொல்லை உழவர்
கூழ் நிழல் ஒழித்த | கொல்லை உழவர் கூழ்
நிழல் ஒழித்த |
| வல் இலை
குருந்தின் வாங்கு சினை இருந்து | வல் இலை குருந்தின்
வாங்கு சினை இருந்து |
| கிளி கடி
மகளிரின் விளி பட பயிரும் | கிளி கடி மகளிரின்
விளி பட பயிரும் |
| கார்-மன்
இதுவால் தோழி போர் மிக | கார்-மன் இதுவால் தோழி
போர் மிக |
| கொடுஞ்சி
நெடும் தேர் பூண்ட கடும் பரி | கொடுஞ்சி நெடும் தேர்
பூண்ட கடும் பரி |
| விரி உளை நன்
மான் கடைஇ | விரி உளை நன் மான்
கடைஇ |
| வருதும் என்று
அவர் தெளித்த போழ்தே | வருதும் என்று அவர்
தெளித்த போழ்தே |
| | |
| #195 பாலை
கயமனார் | #195 பாலை கயமனார் |
| அரும் சுரம்
இறந்த என் பெரும் தோள் குறு_மகள் | அரும் சுரம் இறந்த என்
பெரும் தோள் குறு_மகள் |
| திருந்து வேல்
விடலையொடு வரும் என தாயே | திருந்து வேல்
விடலையொடு வரும் என தாயே |
| புனை மாண்
இஞ்சி பூவல் ஊட்டி | புனை மாண் இஞ்சி பூவல்
ஊட்டி |
| மனை மணல்
அடுத்து மாலை நாற்றி | மனை மணல் அடுத்து மாலை
நாற்றி |
| உவந்து இனிது
அயரும் என்ப யானும் | உவந்து இனிது அயரும்
என்ப யானும் |
| மான் பிணை
நோக்கின் மட நல்லாளை | மான் பிணை நோக்கின் மட
நல்லாளை |
| ஈன்ற நட்பிற்கு
அருளான் ஆயினும் | ஈன்ற நட்பிற்கு
அருளான் ஆயினும் |
| இன் நகை
முறுவல் ஏழையை பல் நாள் | இன் நகை முறுவல் ஏழையை
பல் நாள் |
| கூந்தல் வாரி
நுசுப்பு இவர்ந்து ஓம்பிய | கூந்தல் வாரி நுசுப்பு
இவர்ந்து ஓம்பிய |
| நலம் புனை
உதவியும் உடையன்-மன்னே | நலம் புனை உதவியும்
உடையன்-மன்னே |
| அஃது
அறிகிற்பினோ நன்று-மன் தில்ல | அஃது அறிகிற்பினோ
நன்று-மன் தில்ல |
| அறுவை தோயும்
ஒரு பெரும் குடுமி | அறுவை தோயும் ஒரு
பெரும் குடுமி |
| சிறு பை
நாற்றிய பல் தலை கொடும் கோல் | சிறு பை நாற்றிய பல்
தலை கொடும் கோல் |
| ஆகுவது அறியும்
முதுவாய் வேல | ஆகுவது அறியும்
முதுவாய் வேல |
| கூறுக மாதோ
நின் கழங்கின் திட்பம் | கூறுக மாதோ நின்
கழங்கின் திட்பம் |
| மாறா வரு பனி
கலுழும் கங்குலில் | மாறா வரு பனி கலுழும்
கங்குலில் |
| ஆனாது துயரும்
எம் கண் இனிது படீஇயர் | ஆனாது துயரும் எம் கண்
இனிது படீஇயர் |
| எம் மனை
முந்துற தருமோ | எம் மனை முந்துற தருமோ |
| தன் மனை
உய்க்குமோ யாது அவன் குறிப்பே | தன் மனை உய்க்குமோ
யாது அவன் குறிப்பே |
| | |
| #196 மருதம்
பரணர் | #196 மருதம் பரணர் |
| நெடும் கொடி
நுடங்கும் நறவு மலி பாக்கத்து | நெடும் கொடி நுடங்கும்
நறவு மலி பாக்கத்து |
| நாள்
துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் | நாள் துறைப்பட்ட
மோட்டு இரு வராஅல் |
| துடி கண்
கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி | துடி கண் கொழும் குறை
நொடுத்து உண்டு ஆடி |
| வேட்டம் மறந்து
துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி | வேட்டம் மறந்து
துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி |
| ஆம்பல் அகல்
இலை அமலை வெம் சோறு | ஆம்பல் அகல் இலை அமலை
வெம் சோறு |
| தீம் புளி
பிரம்பின் திரள் கனி பெய்து | தீம் புளி பிரம்பின்
திரள் கனி பெய்து |
| விடியல் வைகறை
இடூஉம் ஊர | விடியல் வைகறை இடூஉம்
ஊர |
| தொடுகலம் குறுக
வாரல் தந்தை | தொடுகலம் குறுக வாரல்
தந்தை |
| கண் கவின்
அழித்ததன் தப்பல் தெறுவர | கண் கவின் அழித்ததன்
தப்பல் தெறுவர |
| ஒன்றுமொழி
கோசர் கொன்று முரண் போகிய | ஒன்றுமொழி கோசர்
கொன்று முரண் போகிய |
| கடும் தேர்
திதியன் அழுந்தை கொடும் குழை | கடும் தேர் திதியன்
அழுந்தை கொடும் குழை |
| அன்னிமிஞிலியின்
இயலும் | அன்னிமிஞிலியின்
இயலும் |
| நின் நல
தகுவியை முயங்கிய மார்பே | நின் நல தகுவியை
முயங்கிய மார்பே |
| | |
| #197 பாலை
மாமூலனார் | #197 பாலை மாமூலனார் |
| மா மலர் வண்ணம்
இழந்த கண்ணும் | மா மலர் வண்ணம் இழந்த
கண்ணும் |
| பூ நெகிழ்
அணையின் சாஅய தோளும் | பூ நெகிழ் அணையின்
சாஅய தோளும் |
| நன்னர் மாக்கள்
விழைவனர் ஆய்ந்த | நன்னர் மாக்கள்
விழைவனர் ஆய்ந்த |
| தொல் நலம்
இழந்த துயரமொடு என்னதூஉம் | தொல் நலம் இழந்த
துயரமொடு என்னதூஉம் |
| இனையல் வாழி
தோழி முனை எழ | இனையல் வாழி தோழி முனை
எழ |
| முன்னுவர்
ஓட்டிய முரண் மிகு திருவின் | முன்னுவர் ஓட்டிய
முரண் மிகு திருவின் |
| மறம் மிகு தானை
கண்ணன்_எழினி | மறம் மிகு தானை
கண்ணன்_எழினி |
| தேம் முது
குன்றம் இறந்தனர் ஆயினும் | தேம் முது குன்றம்
இறந்தனர் ஆயினும் |
| நீடலர் யாழ
நின் நிரை வளை நெகிழ | நீடலர் யாழ நின் நிரை
வளை நெகிழ |
| தோள் தாழ்பு
இருளிய குவை இரும் கூந்தல் | தோள் தாழ்பு இருளிய
குவை இரும் கூந்தல் |
| மடவோள் தழீஇய
விறலோன் மார்பில் | மடவோள் தழீஇய விறலோன்
மார்பில் |
| புன் தலை
புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு | புன் தலை புதல்வன்
ஊர்பு இழிந்து ஆங்கு |
| கடும் சூல் மட
பிடி தழீஇய வெண் கோட்டு | கடும் சூல் மட பிடி
தழீஇய வெண் கோட்டு |
| இனம் சால்
வேழம் கன்று ஊர்பு இழிதர | இனம் சால் வேழம் கன்று
ஊர்பு இழிதர |
| பள்ளி கொள்ளும்
பனி சுரம் நீந்தி | பள்ளி கொள்ளும் பனி
சுரம் நீந்தி |
| ஒள் இணர்
கொன்றை ஓங்கு மலை அத்தம் | ஒள் இணர் கொன்றை ஓங்கு
மலை அத்தம் |
| வினை
வலியுறூஉம் நெஞ்சமொடு | வினை வலியுறூஉம்
நெஞ்சமொடு |
| இனையர் ஆகி நம்
பிரிந்திசினோரே | இனையர் ஆகி நம்
பிரிந்திசினோரே |
| | |
| #198 குறிஞ்சி
பரணர் | #198 குறிஞ்சி பரணர் |
| கூறுவம்-கொல்லோ
கூறலம்-கொல் என | கூறுவம்-கொல்லோ
கூறலம்-கொல் என |
| கரந்த காமம்
கைந்நிறுக்க அல்லாது | கரந்த காமம்
கைந்நிறுக்க அல்லாது |
| நயந்து நாம்
விட்ட நன் மொழி நம்பி | நயந்து நாம் விட்ட நன்
மொழி நம்பி |
| அரைநாள்
யாமத்து விழு மழை கரந்து | அரைநாள் யாமத்து விழு
மழை கரந்து |
| கார் விரை
கமழும் கூந்தல் தூ வினை | கார் விரை கமழும்
கூந்தல் தூ வினை |
| நுண் நூல் ஆகம்
பொருந்தினள் வெற்பின் | நுண் நூல் ஆகம்
பொருந்தினள் வெற்பின் |
| இள மழை சூழ்ந்த
மட மயில் போல | இள மழை சூழ்ந்த மட
மயில் போல |
| வண்டு வழி படர
தண் மலர் வேய்ந்து | வண்டு வழி படர தண்
மலர் வேய்ந்து |
| வில்
வகுப்பு_உற்ற நல் வாங்கு குடைச்சூல் | வில் வகுப்பு_உற்ற நல்
வாங்கு குடைச்சூல் |
| அம் சிலம்பு
ஒடுக்கி அஞ்சினள் வந்து | அம் சிலம்பு ஒடுக்கி
அஞ்சினள் வந்து |
| துஞ்சு ஊர்
யாமத்து முயங்கினள் பெயர்வோள் | துஞ்சு ஊர் யாமத்து
முயங்கினள் பெயர்வோள் |
| ஆன்ற கற்பின்
சான்ற பெரியள் | ஆன்ற கற்பின் சான்ற
பெரியள் |
| அம் மா அரிவையோ
அல்லள் தெனாஅது | அம் மா அரிவையோ அல்லள்
தெனாஅது |
| ஆஅய் நன்
நாட்டு அணங்கு உடை சிலம்பில் | ஆஅய் நன் நாட்டு
அணங்கு உடை சிலம்பில் |
| கவிரம் பெயரிய
உரு கெழு கவாஅன் | கவிரம் பெயரிய உரு
கெழு கவாஅன் |
| ஏர் மலர் நிறை
சுனை உறையும் | ஏர் மலர் நிறை சுனை
உறையும் |
| சூர்_மகள் மாதோ
என்னும் என் நெஞ்சே | சூர்_மகள் மாதோ
என்னும் என் நெஞ்சே |
| | |
| #199 பாலை
கல்லாடனார் | #199 பாலை கல்லாடனார் |
| கரை பாய் வெண்
திரை கடுப்ப பல உடன் | கரை பாய் வெண் திரை
கடுப்ப பல உடன் |
| நிரை கால்
ஒற்றலின் கல் சேர்பு உதிரும் | நிரை கால் ஒற்றலின்
கல் சேர்பு உதிரும் |
| வரை சேர்
மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து | வரை சேர் மராஅத்து ஊழ்
மலர் பெயல் செத்து |
| உயங்கல் யானை
நீர் நசைக்கு அலமர | உயங்கல் யானை நீர்
நசைக்கு அலமர |
| சிலம்பி வலந்த
வறும் சினை வற்றல் | சிலம்பி வலந்த வறும்
சினை வற்றல் |
| அலங்கல் உலவை
அரி நிழல் அசைஇ | அலங்கல் உலவை அரி
நிழல் அசைஇ |
| திரங்கு மரல்
கவ்விய கையறு தொகுநிலை | திரங்கு மரல் கவ்விய
கையறு தொகுநிலை |
| அரம் தின் ஊசி
திரள் நுதி அன்ன | அரம் தின் ஊசி திரள்
நுதி அன்ன |
| திண் நிலை
எயிற்ற செந்நாய் எடுத்தலின் | திண் நிலை எயிற்ற
செந்நாய் எடுத்தலின் |
| வளி முனை
பூளையின் ஒய்யென்று அலறிய | வளி முனை பூளையின்
ஒய்யென்று அலறிய |
| கெடு மான்_இன
நிரை தரீஇய கலையே | கெடு மான்_இன நிரை
தரீஇய கலையே |
| கதிர் மாய்
மாலை ஆண் குரல் விளிக்கும் | கதிர் மாய் மாலை ஆண்
குரல் விளிக்கும் |
| கடல் போல்
கானம் பிற்பட பிறர் போல் | கடல் போல் கானம்
பிற்பட பிறர் போல் |
| செல்வேம் ஆயின்
எம் செலவு நன்று என்னும் | செல்வேம் ஆயின் எம்
செலவு நன்று என்னும் |
| ஆசை உள்ளம்
அசைவு இன்று துரப்ப | ஆசை உள்ளம் அசைவு
இன்று துரப்ப |
| நீ செலற்கு
உரியை நெஞ்சே வேய் போல் | நீ செலற்கு உரியை
நெஞ்சே வேய் போல் |
| தடையின மன்னும்
தண்ணிய திரண்ட | தடையின மன்னும் தண்ணிய
திரண்ட |
| பெரும் தோள்
அரிவை ஒழிய குடாஅது | பெரும் தோள் அரிவை
ஒழிய குடாஅது |
| இரும் பொன்
வாகை பெருந்துறை செருவில் | இரும் பொன் வாகை
பெருந்துறை செருவில் |
| பொலம் பூண்
நன்னன் பொருது களத்து ஒழிய | பொலம் பூண் நன்னன்
பொருது களத்து ஒழிய |
| வலம் படு
கொற்றம் தந்த வாய் வாள் | வலம் படு கொற்றம் தந்த
வாய் வாள் |
| களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரல் | களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரல் |
| இழந்த நாடு
தந்து அன்ன | இழந்த நாடு தந்து அன்ன |
| வளம் பெரிது
பெறினும் வாரலென் யானே | வளம் பெரிது பெறினும்
வாரலென் யானே |
| | |