கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொரிந்தது 1
சொரிய 1
சொரியாது 1
சொரியும் 1
சொரிவது 1
சொரூப 5
சொல் 19
சொல்ல 1
சொல்லப்பட்ட 2
சொல்லல் 1
சொல்லலும் 2
சொல்லாது 2
சொல்லாதே 2
சொல்லாய் 1
சொல்லி 2
சொல்லிய 3
சொல்லியும் 1
சொல்லில் 2
சொல்லின் 1
சொல்லினள் 1
சொல்லு-மின் 1
சொல்லுதல் 4
சொல்லும் 1
சொல்லும்-காலை 1
சொல்லுவேன் 1
சொல்வுழி 1
சொல 3
சொலப்பட்ட 1
சொலப்படுமே 1
சொலல் 1
சொலிவிட்டனர் 1
சொற்படு 1
சொன்ன 3
சொன்னாய் 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சொரிந்தது (1)
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும் – மணி:15/28,29
சொரிய (1)
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய
உருவு கொண்ட மின்னே போல – மணி:6/8,9
சொரியாது (1)
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது – மணி:8/50,51
சொரியும் (1)
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி:28/122
சொரிவது (1)
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி:6/7
சொரூப (5)
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி:29/276
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி:29/278
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி:29/281
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி:29/303
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி:29/304
சொல் (19)
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி:4/85
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி:4/122,123
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி:5/80
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி:11/81
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் – மணி:13/90
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும் – மணி:16/83
தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல் – மணி:18/132
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் – மணி:20/71
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி:21/142
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி:24/127
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி:24/128
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி:25/99
சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு – மணி:27/166
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி:28/146
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி:29/160
சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி:30/24
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல் – மணி:30/68
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி:30/69
சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி:30/206
சொல்ல (1)
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி:27/287
சொல்லப்பட்ட (2)
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி – மணி:24/120
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் – மணி:30/60
சொல்லல் (1)
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் – மணி:30/236
சொல்லலும் (2)
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி:12/70
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் – மணி:21/145
சொல்லாது (2)
அன்னுவயம் சொல்லாது குடத்தின்-கண்ணே – மணி:29/390
சொல்லாது குடத்தின்-கண்ணே பண்ணப்படுதலும் – மணி:29/457
சொல்லாதே (2)
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையை காட்டுதல் – மணி:29/386,387
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம் – மணி:29/452
சொல்லாய் (1)
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப – மணி:18/127
சொல்லி (2)
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி:3/158
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி:21/35
சொல்லிய (3)
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி:24/136
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி:30/77
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி:30/199
சொல்லியும் (1)
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி:12/54
சொல்லில் (2)
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி:24/128
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி:30/69
சொல்லின் (1)
சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல் – மணி:27/72
சொல்லினள் (1)
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி:28/91
சொல்லு-மின் (1)
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி:24/51
சொல்லுதல் (4)
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி:12/70
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் – மணி:13/90
சொல்லுதல் மூல பகுதி சித்தத்து – மணி:27/206
பிரிவை தலைதடுமாறா சொல்லுதல்
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் – மணி:29/461,462
சொல்லும் (1)
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும்
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி:16/83,84
சொல்லும்-காலை (1)
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை
எதிர் காலம் என இசைக்கப்படுமே – மணி:30/165,166
சொல்லுவேன் (1)
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி:21/145,146
சொல்வுழி (1)
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி:24/82,83
சொல (3)
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல
சித்திராபதி தான் சிறு நகை எய்தி – மணி:18/85,86
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி:23/34,35
பிறர் சொல கருதல் இ பெற்றிய அளவைகள் – மணி:27/77
சொலப்பட்ட (1)
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் – மணி:27/219
சொலப்படுமே (1)
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய் – மணி:27/141,142
சொலல் (1)
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி:30/239
சொலிவிட்டனர் (1)
சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர்
நாம சாதி குணம் கிரியைகள் – மணி:29/49,50
சொற்படு (1)
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி:27/121
சொன்ன (3)
சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி:27/17,18
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி:29/282
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி:29/289
சொன்னாய் (1)
நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை – மணி:16/112