Select Page

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கெட்ட (1)

கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி:16/8

TOP


கெட்டது (1)

இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி:25/191,192

TOP


கெட (7)

பூருவ தேயம் பொறை கெட வாழும் – மணி:9/13
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி:11/69
நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி:11/74
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி:12/102
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி:12/120,121
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி:28/132
தன்னிடை விசேடம் கெட சாதித்தல் – மணி:29/290

TOP


கெடா (1)

பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி:30/223

TOP


கெடாதாய் (1)

பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய்
பண்ணுநர் இன்றி பண்ணப்படாதாய் – மணி:30/38,39

TOP


கெடாது (1)

பயற்று தன்மை கெடாது கும்மாயம் – மணி:27/185

TOP


கெடாதோ (1)

தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் – மணி:30/238

TOP


கெடு (1)

கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி:25/192

TOP


கெடுக்கும் (4)

தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி:7/83
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி:10/66,67
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும்
பாதபங்கய மலை பரசினர் ஆதலின் – மணி:12/108,109
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி:15/53,54

TOP


கெடுக (4)

இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி:5/91
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி:14/9
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி:19/130
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி:21/9

TOP


கெடுத்தது (3)

யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி:19/153,154
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி:25/192,193
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன – மணி:29/325

TOP


கெடுத்ததும் (1)

மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி:28/80

TOP


கெடுத்தலின் (1)

விசேடம் கெடுத்தலின் விபரீதம் – மணி:29/302

TOP


கெடுத்தனை (1)

இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை
வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி:17/48,49

TOP


கெடுத்து (1)

ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி:0/66

TOP


கெடுத்தோய் (1)

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் – மணி:5/100

TOP


கெடுத்தோன் (1)

மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி:29/10

TOP


கெடுதல் (1)

உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி:29/283

TOP


கெடுதலும் (2)

ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி:24/66,67
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி:29/9,10

TOP


கெடுப்ப (1)

உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி:9/37

TOP


கெடும் (2)

அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி:6/185
வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி:27/268,269

TOP


கெடுமோ (1)

தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் – மணி:30/238

TOP


கெழு (15)

இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி:0/32
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி:0/96
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி:1/27
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி:2/9
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி:3/78
உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி:4/28
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி:4/39
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி:4/51
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி:19/54
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி:19/122
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி:19/127
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள் – மணி:23/6
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி:25/14
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி:25/101
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் – மணி:26/3

TOP


கெழு_தகை (1)

கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி:25/14

TOP