# 1 திருமால் – பாடியவர், பண் அமைத்தவர் பெயர் தெரியவில்லை. | # 1 திருமால் |
| |
ஆயிரம் விரித்த
அணங்கு உடை அரும் தலை | ஆயிரமாய்ப் படம்
விரித்த அச்சந்தரும் அரிய தலைகளும் |
தீ உமிழ்
திறலொடு முடி மிசை அணவர | சினமாகிய தீயை
உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் மேல் கவித்துநிற்க, |
மா உடை மலர்
மார்பின் மை இல் வால் வளை மேனி | திருமகள்
வீற்றிருக்கும் அகன்ற மார்பினைக்கொண்டும், குற்றமில்லாத வெண்மையான சங்கினைப்
போன்ற மேனியுடனும், |
சேய் உயர் பணை
மிசை எழில் வேழம் ஏந்திய | மிக உயர்ந்த மூங்கில்
கோலின் உச்சியில் அழகிய யானைக்கொடியை உயர்த்தியபடியும், |
வாய் வாங்கும்
வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை 5 | கூர்மை செய்யப்பட்ட
வளைந்த கலப்பைப் படையினைக் கொண்டும், ஒற்றைக் குழையை உடைய பலதேவனாகவும்
விளங்குகிறாய்! |
எரி மலர்
சினைஇய கண்ணை பூவை | எரிகின்ற
நெருப்பைப்போன்ற தாமரை மலரை வென்ற கண்களையுடையவன்! காயாம்பூவின் |
விரி மலர்
புரையும் மேனியை மேனி | மலர்ந்த மலரைப் போன்ற
மேனியினன்! அந்த மேனியில் |
திரு
ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் | திருமகள் நிறைந்து
உறையும் மார்பினையுடையவன்! அந்த மார்பில் |
தெரி மணி
பிறங்கும் பூணினை மால் வரை | தெரிந்தெடுத்துத்
தொடுத்த மணிகள் ஒளிவீசும் பூணை அணிந்திருப்பவன்! நீல மலையைச் சூழ்ந்து |
எரி திரிந்து
அன்ன பொன் புனை உடுக்கையை
10 | தீப்பிழம்பு
சுற்றினாற் போன்ர பொன்னாற் செய்த ஆடையை அணிந்திருப்பவன்! |
சேவல் அம்
கொடியோய் நின் வல_வயின் நிறுத்தும் | கருடச்சேவல்
வரையப்பட்ட அழகிய கொடியினையுடையவனே! உன் வலப்பக்கத்தில் இருப்போர்கள் |
ஏவல் உழந்தமை
கூறும் | ஓதுகின்ற உன்
பெருமைகளைக் கூறுகின்றன, |
நா வல் அந்தணர்
அரு மறை பொருளே | நாவன்மை மிக்க
அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்! |
| (மூலம் சிதைந்துள்ளது
– பொருள் தெளிவாக இல்லை) |
இணை பிரி அணி
துணி பணி எரி புரைய | இணை பிரி அணி துணி பணி
எரி புரைய |
விடர் இடு
சுடர் படர் பொலம் புனை வினை மலர் 15 | விடர் இடு சுடர் படர்
பொலம் புனை வினை மலர் |
நெரி கிடர் எரி
புரை தன மிகு தன முரண் மிகு | நெரி கிடர் எரி புரை
தன மிகு தன முரண் மிகு |
கடல் தரு
மணியொடும் முத்து யாத்த நேர்_அணி | கடல் தரு மணியொடும்
முத்து யாத்த நேர்_அணி |
நெறி செறி
வெறி_உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் | நெறி செறி வெறி_உறு
முறல் விறல் வணங்கு அணங்கு வில் |
தார் அணி துணி
மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் | தார் அணி துணி மணி
வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் |
எரி வயிர நுதி
எறி படை எருத்து மலை இவர் நவையினில் 20 | எரி வயிர நுதி எறி படை
எருத்து மலை இவர் நவையினில் |
துணி படல் இல
மணி வெயில் உறழ் எழில் நக்கு | துணி படல் இல மணி
வெயில் உறழ் எழில் நக்கு |
இமை இருள் அகல
முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் | இமை இருள் அகல முறு
கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் |
மலர் இலகின
வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி | மலர் இலகின வளர்
பரிதியின் ஒளி மணி மார்பு அணி |
மணம் மிக நாறு
உருவின விரை வளி மிகு கடு விசை | மணம் மிக நாறு உருவின
விரை வளி மிகு கடு விசை |
உடு உறு தலை
நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை
25 | உடு உறு தலை நிரை இதழ்
அணி வயிறு இரிய அமரரை |
போரெழுந்து
உடன்று இரைத்து உரைஇய தானவர் | போரெழுந்து உடன்று
இரைத்து உரைஇய தானவர் |
சிரம் உமிழ்
புனல் பொழிபு இழிந்து உரம் | சிரம் உமிழ் புனல்
பொழிபு இழிந்து உரம் |
உதிர்பு
அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை | உதிர்பு அதிர்பு அலம்
தொடா அமர் வென்ற கணை |
| |
பொருவேம்
என்றவர் மதம் தப கடந்து | உன்னோடு போரிடுவோம்
என்று வந்த அவுணரின் வலிமை கெடும்படி அவரை வென்று, |
செரு மேம்பட்ட
செயிர் தீர் அண்ணல் 30 | போரில் மேன்மையடைந்த
குற்றமற்ற அண்ணலே! |
இருவர் தாதை
இலங்கு பூண் மாஅல் | காமன், சாமன் ஆகிய
இருவருக்குத் தந்தையே! ஒளிவிடும் பூண்களை அணிந்த திருமாலே! |
தெருள நின்
வரவு அறிதல் | விளக்கமாக உன்
பிறப்பினை அறிதல் |
மருள் அறு
தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே | மயக்கம் தீர்ந்த
தெளிவினையுடைய முனிவர்க்கும் அரிதேயாகும்! |
அன்ன மரபின்
அனையோய் நின்னை | அப்படிப்பட்ட மரபினைச்
சேர்ந்த அத்தகையவனாகிய உன்னை |
இன்னன் என்று
உரைத்தல் எமக்கு எவன் எளிது
35 | இன்ன தன்மையுடையவன்
என்று சொல்வது எமக்கு எப்படி எளிதாகும்? |
அருமை நற்கு
அறியினும் ஆர்வம் நின்_வயின் | உன் தகுதிகளின்
அருமையை நன்றாக அறிந்திருப்பினும், உன் மேலிட்ட ஆர்வம் |
பெருமையின்
வல்லா யாம் இவண் மொழிபவை | மிக அதிகமாக
இருப்பதால் வலிமையில்லாதனவாக நாம் இங்கே கூறுபவை |
மெல்லிய எனாஅ
வெறாஅது அல்லி அம் | சிறுமையுடையன் என்று
வெறுக்காமல், அல்லி மலரில் வீற்றிருக்கும் அழகிய |
திரு_மறு_மார்ப
நீ அருளல் வேண்டும் | திருமகளாகிய மறுவினை
மார்பில் கொண்டவனே! நீ எமக்குத் திருவருள் புரிய வேண்டும். |
விறல் மிகு
விழு சீர் அந்தணர் காக்கும் 40 | ஆற்றல் மிகுந்த
மேன்மையான சிறப்பினைக் கொண்ட அந்தணர்கள் காக்கும் |
அறனும்
ஆர்வலர்க்கு அருளும் நீ | அறமும், உன்
அன்பர்களுக்கு அருள்கின்ற திருவருளும் நீ! |
திறன் இலோர்
திருத்திய தீது தீர் கொள்கை | திறனில்லாதவர்களைத்
திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய |
மறனும்
மாற்றலர்க்கு அணங்கும் நீ | மறப்பண்பும், உன்னை
மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ! |
அம் கண்
வானத்து அணி நிலா திகழ்தரும் | அழகிய இடமான வானத்தில்
அழகான நிலவொளியாய்த் திகழும் |
திங்களும் தெறு
கதிர் கனலியும் நீ 45 | திங்களும்,
சுட்டுப்பொசுக்கும் கதிர்களையுடைய சூரியனும் நீ! |
ஐம் தலை உயிரிய
அணங்கு உடை அரும் திறல் | ஐந்து தலைகளை
உருவாக்கிக்கொண்டு, அச்சத்தைத்தரும் வெல்லமுடியாத திறமையும் |
மைந்து உடை
ஒருவனும் மடங்கலும் நீ | வலிமையும் உடைய
ஒருவனாகிய ஈசனும், ஊழிக்காலத்தீயும் நீ! |
நலம் முழுது
அளைஇய புகர் அறு காட்சி | நலம் என்று கூறப்படுவன
அனைத்தும் பொருந்திய குற்றமற்ற அறிவைத் தரும் |
புலமும்
பூவனும் நாற்றமும் நீ | வேதமும்,
பூவின்மேலுள்ளோனாகிய நான்முகனும், பூவின் நாற்றம் போன்ற நான்முகனின்
படைப்புத்தொழிலும் நீ! |
வலன் உயர்
எழிலியும் மாக விசும்பும் 50 | வலமாக உயர்ந்தெழும்
மேகமும், மேலிடமாகிய விசும்பும், |
நிலனும் நீடிய
இமயமும் நீ | இந்த நிலவுலகும்,
அதில் நெடிதுயர்ந்து நிற்கும் இமயமும் நீ! |
அதனால் | அதனால் |
இன்னோர் அனையை
இனையையால் என | இப்படிப்பட்டவரைப்
போன்றவன், இன்ன தன்மையினன் என்று கூறும்படியாக |
அன்னோர் யாம்
இவண் காணாமையின் | அப்படிப்பட்டவரை நாம்
இங்கு காணாததால், |
பொன் அணி நேமி
வலம் கொண்டு ஏந்திய 55 | பொன்னால் செய்யப்பட்ட
அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய், |
மன் உயிர்
முதல்வனை ஆதலின் | உலகத்து உயிர்களுக்கு
முதல்வனாக இருப்பதனால் |
நின்னோர் அனையை
நின் புகழோடும் பொலிந்தே | உனக்கு நீயே
ஒப்பாவாய்! உன் புகழோடும் பொலிவுற்று – |
நின் ஒக்கும்
புகழ் நிழலவை | உன்னைப் போன்றே
ஒளிவீசும் புகழினைக் கொண்டுள்ளாய்! |
பொன் ஒக்கும்
உடையவை | பொன்னைப் போன்ற
ஒளியுள்ள ஆடையினைக் கொண்டுள்ளாய்! |
புள்ளின்
கொடியவை புரி வளையினவை
60 | கருடக்கொடியைக்
கொண்டுள்ளாய்! வலப்பக்கம் முறுக்குண்ட சங்கினைக் கொண்டுள்ளாய்! |
எள்ளுநர்
கடந்து அட்ட இகல் நேமியவை | இகழும் பகைவரைச்
சென்று அழித்த வலிமை மிக்க சக்கரத்தைக் கொண்டுள்ளாய்! |
மண்_உறு மணி
பாய் உருவினவை | தூய்மை செய்யப்பட்ட
நீலமணியின் ஒளி பாயும் உருவத்தைக் கொண்டுள்ளாய்! |
எண் இறந்த
புகழவை எழில் மார்பினவை | எண்ணிலடங்காப்
புகழினைக் கொண்டுள்ளாய்! எழிலான மார்பினைக் கொண்டுள்ளாய்! |
ஆங்கு | அவ்விடத்தில் |
காமரு
சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை 65 | உன்னை விரும்பும்
அடியார்களோடும் சேர்ந்து உன் அடியவராம் |
யாம் இயைந்து
ஒன்றுபு வைகலும் பொலிக என | யாமும் பொருந்தி
ஒன்றுபட்டு ‘நாளும் சிறப்புற்றிருக்க’ என்று |
ஏமுறு
நெஞ்சத்தேம் பரவுதும் | இன்பம் நிறைந்த
உள்ளத்தினராய்த் தொழுது போற்றுவோம், |
வாய்மொழி புலவ
நின் தாள் நிழல் தொழுதே | வேதங்களை உரைத்தருளிய
புலவனே! உன் காலடி நிழலைத் தொழுது – |
| |
# 2 திருமால் – பாடியவர்: கீரந்தையார் | # 2 திருமால் |
பண் அமைத்தவர்
: நன்னாகனார் பண் : பண்ணுப்பாலையாழ் | |
| |
தொன் முறை
இயற்கையின் மதியொ ———— | தொன்றுதொட்டு வரும்
இயற்கையின்படி ——- |
——————–
——————– —– மரபிற்று
ஆக | ——————–
——————– —– மரபாகக்
கொண்டு |
பசும்_பொன்
உலகமும் மண்ணும் பாழ்பட | பசிய பொன்மயமான
தேவருலகமும், இந்த மண்ணுலகமும் பாழாய்ப்போக, |
விசும்பில் ஊழி
ஊழ்_ஊழ் செல்ல | வானமும் இல்லாதுபோய்,
ஊழிக்காலம் இவ்வாறு தோன்றியும் ஒடுங்கியும் செல்ல, |
கரு வளர்
வானத்து இசையின் தோன்றி
5 | அதன்பின், கரு
வளர்வதற்காக, வானத்தின் ஒலியிலிருந்து தோன்றி |
உரு அறிவாரா
ஒன்றன் ஊழியும் | எந்த உருவமும்
காணப்படாத முதல் ஊழிக்காலமும், |
உந்து வளி
கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் | பொருள்களை இயக்கும்
காற்று தோன்றி மேலெழுந்த முறை முறையான இரண்டாம் ஊழியும், |
செம் தீ சுடரிய
ஊழியும் பனியொடு | சிவந்த தீ தோன்றி
ஒளிவிட்ட மூன்றாம் ஊழியும், குளிர்ச்சி உண்டாகி |
தண் பெயல்
தலைஇய ஊழியும் அவையிற்று | குளிர்ந்த மழை
பெய்யத்தொடங்கிய நான்காம் ஊழியும், அவைகளுக்குள் |
உள் முறை
வெள்ளம் மூழ்கி ஆர் தருபு 10 | பின்பு தொன்மையில்
வெள்ளத்தில் மூழ்கிக் கரைந்து கிடந்து |
மீண்டும் பீடு
உயர்பு ஈண்டி அவற்றிற்கும் | மீண்டும் தம்
சிறப்பாற்றலால் செறிந்து திரண்டு, இந்த நான்கிற்கும் |
உள்ளீடு ஆகிய
இரு நிலத்து ஊழியும் | உள்ளீடாகிய பெரிய
நிலம் தோன்றிய ஐந்தாம் ஊழியும், |
நெய்தலும்
குவளையும் ஆம்பலும் சங்கமும் | நெய்தல், குவளை,
ஆம்பல், சங்கம் |
மை இல் கமலமும்
வெள்ளமும் நுதலிய | குற்றமற்ற தாமரை,
வெள்ளம் ஆகிய பேரெண்களால் |
செய் குறி
ஈட்டம் கழிப்பிய வழிமுறை 15 | குறிக்கப்பட்ட
காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர் |
கேழல் திகழ்வர
கோலமொடு பெயரிய | பன்றியின் சிறப்பான
கோலத்தின் பெயரைக் கொண்ட |
ஊழி ஒரு வினை
உணர்த்தலின் முதுமைக்கு | வராக கற்பம் என்னும்
இந்த ஊழிக்காலம் உனது ஒரு திருவிளையாடலை உணர்த்துவதால், உனது பழைமைக்குள்ளான |
ஊழி யாவரும்
உணரா | ஊழிகள் யாராலும்
அறியப்படாதன; |
ஆழி முதல்வ
நின் பேணுதும் தொழுது | சக்கரப்படையை உடைய
முதல்வனே! உன்னைப் போற்றி வணங்குகிறோம். |
நீயே வளையொடு
புரையும் வாலியோற்கு அவன்
20 | நீதான், சங்கின்
நிறத்தைப் போன்ற வெண்மையான நிறமுடைய பலதேவனுக்கு, அவனுடைய |
இளையன்
என்போர்க்கு இளையை ஆதலும் | இளையவன் என்று
சொல்வோர்க்கு இளையவன் ஆகி இருப்பதுவும், |
புதை இருள்
உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு | எதனையும் மறைக்கும்
இருள் நிற ஆடையை உடைய, பொன்னாலான பனைக்கொடியானாகிய பலதேவனுக்கு |
முதியை
என்போர்க்கு முதுமை தோன்றலும் | முற்பட்டவன் ஆவாய்
என்போர்க்கு முதியவனாக இருப்பதுவும், |
வடு இல்
கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த | குற்றமற்ற
கொள்கையினையுடைய ஞானிகள் ஆராய்ந்த |
கெடு இல்
கேள்வியுள் நடு ஆகுதலும் 25 | தீமை இல்லாத
கேள்வியாகிய வேதத்தினுள் அவற்றின் நடுவான |
இ நிலை தெரி
பொருள் தேரின் இ நிலை | இந்த நிலையிலான
தெரிந்துள்ள உண்மைகளை ஆராய்ந்துபார்த்தால், இந்த நிலையெல்லாம் |
நின் நிலை
தோன்றும் நின் தொல் நிலை சிறப்பே | உன்னிடத்துத் தோன்றும்
உன் தொன்மையான நிலையின் சிறப்பேயாகும்; |
ஓங்கு உயர்
வானின் வாங்கு வில் புரையும் | ஓங்கி உயர்ந்த
வானத்தில் தோன்றும் வளைந்த வானவில்லைப் போன்ற |
பூண் அணி கவைஇய
ஆர் அணி நித்தில | பலநிறப் பூணாகிய
அணிகள் அகத்திடப்பட்ட, நிறைந்த அழகான முத்துக்களால் ஆன |
நித்தில மதாணி
அ தகு மதி மறு 30 | நித்தில மதாணி என்னும்
அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று |
செய்யோள்
சேர்ந்த நின் மாசு இல் அகலம் | சிவந்த நிறத்தவளான
திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு; |
வளர் திரை
மண்ணிய கிளர் பொறி நாப்பண் | எழுகின்ற அலைகளால்
கழுவித் தூய்மையாக்கப்பட்ட, ஒளிவிடும் புள்ளிகளை நடுவிலே கொண்ட, |
வை வால்
மருப்பின் களிறு மணன் அயர்பு | கூரிய வெண்மையான
கொம்புகளால் பன்றிவடிவ வராகத்தில் நிலவுலகை எடுத்து அவளை மணம் செய்து |
புள்ளி நிலனும்
புரைபடல் அரிது என | ஒரு புள்ளி அளவு
நிலம்கூட வருந்துவதில்லை என்று |
உள்ளுநர்
உரைப்போர் உரையொடு சிறந்தன்று 35 | எண்ணிப்பார்த்து
உரைப்போரின் புகழுரைகளோடு உன் செயலும் சிறந்து விளங்கும். |
ஒடியா உள்ளமொடு
உருத்து ஒருங்கு உடன் இயைந்து | வலிமைகெடாத
உள்ளத்தோடு, சினங்கொண்டு, ஒருங்கே ஒன்று சேர்ந்து, |
இடி எதிர்
கழறும் கால் உறழ்பு எழுந்தவர் | இடிக்கு எதிராய்
முழங்கும் முழக்கத்தோடு, காற்றைப் போன்ற வலிமையுடன் போருக்கு எழுந்தவரின் |
கொடி அறுபு
இறுபு செவி செவிடு படுபு | கொடிகள் அற்று
விழவும், செவிகள் செவிடாகிப் போகவும், |
முடிகள் அதிர
படிநிலை தளர | மணிமுடிகள் அதிரவும்,
அவர்கள் நின்ற நிலை தளர்ந்துபோகுமாறு |
நனி முரல் வளை
முடி அழிபு இழிபு
40 | மிகுந்து ஒலிக்கின்ற
சங்கினால், தலைகள் வலிமை அழிந்து கீழே விழுந்து, |
தலை இறுபு
தாரொடு புரள | தலை அற்றனவாய்
மாலையோடு புரளும்வகையில், |
நிலை தொலைபு
வேர் தூர் மடல் | தமது நிலை கெட்டு,
வேரும் தூரும் மடலும் |
குருகு பறியா
நீள் இரும் பனை மிசை | குருத்தும்
பறிக்கப்படாத உயர்ந்த கரிய பனைகளின் உச்சியிலிருக்கும் |
பல பதினாயிரம்
குலை தரை உதிர்வ போல் | பல பதினாயிரம் குலைகள்
நிலத்தில் உதிர்வது போல் |
நில்லாது ஒரு
முறை கொய்பு கூடி 45 | ஏதும் தத்தம் உடலின்
மேல் நில்லாவண்ணம் ஒருமுறையிலேயே கொய்யப்பெற்று, |
ஒருங்கு
உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு | ஒருசேர, உருண்டு,
பிளந்து, நொறுங்குண்டு, உருண்டோடிச் சிதறிக் |
அளறு சொரிபு
நிலம் சோர | குருதிச் சேற்றைச்
சொரிந்து நிலத்தில் சோர்ந்து கிடக்க, |
சேரார் இன்
உயிர் செகுக்கும் | உன்னைச் சேராதவராகிய
அவுணரின் இனிய உயிரை அழிக்கும் வல்லமை படைத்தது, |
போர் அடு
குரிசில் நீ ஏந்திய படையே | போரில் பகைவரைக்
கொல்லும் குரிசிலே! நீ ஏந்திய சக்கராயுதப்படை; |
ஒன்னார் உடங்கு
உண்ணும் கூற்றம் உடலே 50 | பகைவரை ஒருசேர
அழிக்கும் கூற்றுவனைப் போன்றது அந்த சக்கரப்படை; |
பொன் ஏர்பு
அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே | பொன்னைப் போல
ஒளிவிடும் நெருப்பின் கொழுந்துதான் அதன் நிறம்; |
நின்னது திகழ்
ஒளி சிறப்பு இருள் திரு மணி | உன்னுடைய
பிரகாசிக்கும் ஒளி, சிறப்புடைய நீலத் திருமணியினுடையது; |
கண்ணே புகழ்
சால் தாமரை அலர் இணை பிணையல் | கண்களோ, புகழ் பெற்ற
தாமரை மலர்கள் இரண்டினைப் பிணைத்ததாகும்; |
வாய்மை வயங்கிய
வைகல் சிறந்த | வாய்மையோ தப்பாமல்
ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த |
நோன்மை நாடின்
இரு நிலம் யாவர்க்கும் 55 | பொறுமையை நோக்கினால்
அது இந்த பெரிய நிலவுலகம்; எல்லாருக்கும் |
சாயல் நினது
வான் நிறை என்னும் | அருளும் உனது அருளோ
நிறைந்த மேகம்; என்று கூறுகின்றது |
நா வல் அந்தணர்
அரு மறை பொருளே | நாவன்மை கொண்ட
அந்தணர்களின் வேதத்தின் பொருள்; |
அவ்வும்
பிறவும் ஒத்தனை உவ்வும் | இங்குக் கூறிய அந்தப்
பொருள்களையும், வேறு பிற பொருள்களையும் போன்றிருக்கின்றாய்; இவைகளுக்கிடையிலும் |
எ வயினோயும்
நீயே | வேறு எந்த இடத்திலும்
இருக்கிறாய் நீயே! |
செ வாய்
உவணத்து உயர் கொடியோயே 60 | சிவந்த வாயையுடைய
கருடனை உயர்த்திய கொடியில் வைத்திருப்பவனே! |
கேள்வியுள்
கிளந்த ஆசான் உரையும் | வேதங்களில் தேர்ந்த
ஆசானின் மந்திரமொழிகளும், |
படிநிலை
வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் | படிப்படியாக
உயர்ந்துகொண்டே செல்லும் வேள்விச்சாலையில் யாகபலிக்காக ஆடுகளைக் கொண்டுபோவதும், |
புகழ் இயைந்து
இசை மறை உறு கனல் முறை மூட்டி | புகழ் பொருந்த
இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி, |
திகழ் ஒளி ஒண்
சுடர் வளப்பாடு கொளலும் | திகழும் ஒளியையுடைய
பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும், ஆகிய இம்மூன்று செயல்களும் |
நின் உருபுடன்
உண்டி
65 | முறையே, உன் உருவமும்,
உன் உணவும், |
பிறர்
உடம்படுவாரா | பிறரும்
ஏற்றுக்கொள்ளும்படியான |
நின்னொடு புரைய | உனது பெருமைக்குப்
பொருந்தும்படி |
அந்தணர் காணும்
வரவு | அந்தணர்கள் போற்றிக்
காணும் உன்னுடைய தோற்றப்பொலிவின் சிறப்பும் ஆகும். |
வாயடை அமிர்தம்
நின் மனத்து அகத்து அடைத்தர | தேவர்களின் உணவான
அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே, |
மூவா மரபும்
ஓவா நோன்மையும் 70 | மூப்படையாத
முறைமையும், ஒழியாத ஆற்றலும், |
சாவா மரபின்
அமரர்க்கா சென்ற நின் | இறவாத மரபையுடைய
அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன; |
—————
மரபினோய் நின் அடி | —————
மரபினை உடையவனே! உனது திருவடியினை, |
தலை உற
வணங்கினேம் பல் மாண் யாமும் | தலை நிலத்தில் பட
வணங்கினோம், பலமுறை யாமும்; |
கலி இல்
நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் | மனக்கலக்கம் இல்லாத
நெஞ்சினேமாய், போற்றினோம், வாழ்த்தினோம், |
கடும்பொடும்
கடும்பொடும் பரவுதும் 75 | சுற்றத்தார் பலரோடும்
புகழ்ந்து வேண்டுகிறோம் – |
கொடும்பாடு
அறியற்க எம் அறிவு எனவே | பொய்யை
மெய்யெனக்கொள்ளும் மயக்கத்தை அறியாமல் போவதாக எம் அறிவு என்று- |
| |
# 3 திருமால் – பாடியோர் ; கடுவன் இளவெயினனார் | # 3 திருமால் |
பண் அமைத்தவர்
: பெட்டாகனார் பண் ;
பண்ணுப்பாலையாழ் | |
| |
மாஅயோயே
மாஅயோயே | திருமாலே! திருமாலே! |
மறுபிறப்பு
அறுக்கும் மாசு இல் சேவடி | மீண்டும் பிறப்பதை
ஒழிக்கின்ற மாசற்ற சிவந்த திருவடிகளையும், |
மணி திகழ்
உருபின் மாஅயோயே | நீல மணி போன்ற
திருமேனியையும் உடைய திருமாலே! |
தீ வளி
விசும்பு நிலன் நீர் ஐந்தும் | நெருப்பு, காற்று,
வானம், நிலம், நீர் ஆகிய ஐந்தும் |
ஞாயிறும்
திங்களும் அறனும் ஐவரும் 5 | ஞாயிறும், திங்களும்,
வேள்வி முதல்வனும், ஏனைய கோள்களான புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐவரும், |
திதியின்
சிறாரும் விதியின் மக்களும் | திதியின்
சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும், |
மாசு இல்
எண்மரும் பதினொரு கபிலரும் | மாசற்ற வசுக்கள்
எட்டுப்பேரும், பதினொரு கபிலர் எனப்படும் உருத்திரர்களும், |
தா_மா_இருவரும்
தருமனும் மடங்கலும் | அசுவினி, தேவர் ஆகிய
இருவரும், இயமனும், கூற்றுவனும், |
மூ_ஏழ் உலகமும்
உலகினுள் மன்பதும் | மூன்று ஏழேழு
உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும், |
மாயோய் நின்
வயின் பரந்தவை உரைத்தேம் 10 | மாயவனே!
உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம், |
மாயா வாய்மொழி
உரைதர வலந்து | அழிவற்ற வேதங்கள்
சொன்னபடி விரிவாக, |
வாய்மொழி ஓடை
மலர்ந்த | வேதங்களாகிய ஓடையில்
மலர்ந்த |
தாமரை பூவினுள்
பிறந்தோனும் தாதையும் | தாமரைப் பூவினில்
பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும், |
நீ என
பொழியுமால் அந்தணர் அரு மறை | நீயே என்று கூறுகின்றன
அந்தணரின் வேதங்கள். |
ஏஎர் வயங்கு
பூண் அமரரை வௌவிய அமிழ்தின்
15 | அழகு விளங்கும்
பூண்களைக் கொண்ட தேவரிடத்திலிருந்து கவர்ந்துகொள்ளப்பட்டு வந்த அமிழ்தத்தால் |
பயந்தோள்
இடுக்கண் களைந்த புள்ளினை | தன்னைப் பெற்ற தாயான
விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனை ஊர்தியாகக் கொண்டிருக்கிறாய்! |
பயந்தோள்
இடுக்கண் களைந்த புள்ளின் | தன்னைப் பெற்ற தாயான
விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனின் |
நிவந்து ஓங்கு
உயர் கொடி சேவலோய் நின் | சேவலை மிக ஓங்கி
உயர்ந்த கொடியில் கொண்டுள்ளோய்! உன் |
சேவடி தொழாரும்
உளரோ அவற்றுள் | சிவந்த அடிகளைத்
தொழாதவரும் இருக்கின்றாரோ? அந்தச் சேவடிக்குள் |
கீழ் ஏழ்
உலகமும் உற்ற அடியினை
20 | கீழேயுள்ள ஏழு
உலகங்களும் ஒரு பாதத்தை வைத்திருக்கிறாய்! |
தீ செம்
கனலியும் கூற்றமும் ஞமனும் | உலகத்தைத் தீய்த்து
அழிக்கும் சிவந்த ஊழித்தீயும், கூற்றுவனும், இயமனும், |
மாசு இல்
ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் | மாசற்ற ஆயிரம்
கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும் |
ஊழி ஆழி-கண்
இரு நிலம் உரு கெழு | ஊழிக் காலத்துக்
கடலின்கண் மூழ்கிய பெரிய நிலத்தை அச்சம்பொருந்திய |
கேழலாய்
மருப்பின் உழுதோய் எனவும் | பன்றியாகிக் கொம்பால்
உழுது மேலே எடுத்து வந்தவனே என்றும், |
மா விசும்பு
ஒழுகு புனல் வறள அன்ன 25 | பெரிய வானத்திலிருந்து
நிற்காமல் வழிகின்ற மழைநீர் வறண்டுபோகும்படி, அன்னத்தின் |
சேவலாய் சிறகர்
புலர்த்தியோய் எனவும் | சேவலாய்ச் சிறகுகளால்
உலரச் செய்தவனே என்றும், |
ஞாலத்து
உறையுள் தேவரும் வானத்து | இந்த ஞாலத்தில்
வாழ்கின்ற முனிவர்களும், வானுலகின் |
நால் எண்
தேவரும் நயந்து நின் பாடுவோர் | நால்வகை எண்ணிக்கையான
மொத்தம் முப்பத்திமூன்று தேவர்களும் விரும்பி உன்னைப் பாடுவார், |
பாடும் வகையே
எம் பாடல் தாம் அ | அது அவரின் முன்னோர்
பாடும் வகையே, எமது பாடல் தாமும் அப்படிப் |
பாடுவார்
பாடும் வகை
30 | பாடுவார் பாடும்
வகையே! |
கூந்தல்
என்னும் பெயரொடு கூந்தல் | கூந்தல்மா என்ற குதிரை
வடிவத்தோடு வந்த கேசி என்பவனின் |
எரி சினம்
கொன்றோய் நின் புகழ் உருவின கை | எரிகின்ற சினத்தைக்
கொன்றவனே! உன் புகழைப் போன்றன உன் கைகள்; |
நகை அச்சாக நல்
அமிர்து கலந்த | அவுணர்களின்
மகிழ்ச்சியே அவர்களுக்கு அச்சமாக மாற, தேவர்களுக்கு நல்ல அமிழ்தத்தை வழங்கிய |
நடுவுநிலை
திறம்பிய நயம் இல் ஒரு கை | நடுவுநிலைமையிலிருந்து
தவறிய நலமில்லாத ஒரு கை; |
இரு கை
மாஅல்
35 | இரு கைகளைக் கொண்ட
மாலே! |
மு கை முனிவ
நால் கை அண்ணல் | மூன்று கைகளைக் கொண்ட
முனிவனே! நான்கு கைகளைக் கொண்ட அண்ணலே! |
ஐம் கைம் மைந்த
அறு கை நெடுவேள் | ஐந்து கைகளைக் கொண்ட
கணபதியே! ஆறு கைகளைக் கொண்ட நெடுவேளே! |
எழு கையாள எண்
கை ஏந்தல் | ஏழு கைகளைக் கொண்டவனே!
எட்டுக் கைகளைக் கொண்ட ஏந்தலே! |
ஒன்பதிற்று தட
கை மன் பேராள | ஒன்பது பெரிய கைகளைக்
கொண்ட புகழ் நிலைபெற்ற பேராளனே! |
பதிற்று கை
மதவலி நூற்று கை ஆற்றல் 40 | பத்துக் கைகளைக் கொண்ட
மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே! |
ஆயிரம் விரித்த
கைம் மாய மள்ள | ஆயிரமாக விரித்த
கைகளைக் கொண்ட மாயத்தில் வல்ல மள்ளனே! |
பதினாயிரம் கை
முதுமொழி முதல்வ | பதினாயிரம் கைகளைக்
கொண்ட வேத முதல்வனே! |
நூறு_ஆயிரம் கை
ஆறு அறி கடவுள் | நூறாயிரம் கைகளைக்
கொண்ட அறுவகை நெறிகளையும் அறிந்த கடவுளே! |
அனைத்தும் அல்ல
பல அடுக்கல் ஆம்பல் | இவை அனைத்தும் மட்டும்
அல்ல, பலவாக அடுக்கப்பட்ட ஆம்பல்களின் எண்ணிக்கையில் கைகளைக் கொண்டுள்ளாய், |
இனைத்து என எண்
வரம்பு அறியா யாக்கையை
45 | இந்த அளவிளானது என்ற
எண் வரம்பு அறியாத உடல்களைக் கொண்டுள்ளவனே! |
நின்னை புரை
நினைப்பின் நீ அலது உணர்தியோ | உனக்கு ஒப்பாக
யாரையாவது நினைத்தால் அது நீ அல்லாமல் வேறு யாரையேனும் அறிவாயோ? |
முன்னை மரபின்
முதுமொழி முதல்வ | அநாதிக் காலமாய் வரும்
மரபினையுடைய வேதத்திற்கு முதல்வனே! |
நினக்கு
விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் | உனக்காக விரிந்து
அகன்ற ஆகமங்கள் அனைத்திலும் |
வலியினும்
மனத்தினும் உணர்வினும் எல்லாம் | ஆற்றலாலும்,
மனத்தாலும், உணர்வினாலும், இவை எல்லாம் சேர்ந்தும் |
வனப்பு வரம்பு
அறியா மரபினோயே
50 | உன் வனப்பின்
எல்லையைக் காணமுடியாதபடியான தன்மையினை உடையவனே! |
அணி நிழல்
வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் | அழகிய குளிர்ச்சியோடு
விளங்கும் ஒளியாகிய பதினாறு கலைகளாகிய இனிய கதிர்களையுடைய |
பிறை வளர் நிறை
மதி உண்டி | பிறைகளாகி வளர்கின்ற
நிறைத்திங்களான உணவினையும், |
அணி மணி பைம்
பூண் அமரர்க்கு முதல்வன் நீ | அழகிய மணிகளால் செய்த
பசிய பூண்களையும் உடைய தேவர்களுக்கு முதல்வன் நீ! |
திணி நிலம்
கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி | மண் செறிந்த உலகத்தை
நீ அளந்த பொழுது மனம் மாறுபட்டு, மயங்கி இடம் பெயர்ந்து ஓடி, |
நின் அஞ்சி
கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55 | உனக்கு அஞ்சிக்
கடலுக்குள் தம்மை ஒளித்துக்கொண்ட, கட்டவிழ்ந்து மலர்ந்த குளிர்ந்த மாலையினையுடைய |
அன்னவர் பட
அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ | அப்படிப்பட்டவர் உட்பட
எல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ! |
அதனால் பகைவர்
இவர் இவர் நட்டோர் என்னும் | அதனால், பகைவர் இவை,
நண்பர் இவர் என்னும் |
வகையும் உண்டோ
நின் மரபு அறிவோர்க்கே | வேறுபாடு உண்டோ, உன்
இயல்பினை அறிவோர்க்கு? |
ஆயிர அணர் தலை
அரவு வாய் கொண்ட | உயர்த்தப்பட்ட ஆயிரம்
தலைகளைக் கொண்ட ஆதிசேடனாகிய பாம்பினைத் தன் வாயில் கொண்ட |
சேவல்
ஊர்தியும் செம் கண் மாஅல் 60 | உன் ஊர்தியான கருடச்
சேவலும், ‘சிவந்த கண்களையுடைய திருமாலே, |
ஓ என கிளக்கும்
கால_முதல்வனை | எனைக் காத்தருள்க’
என்று ‘ஓ’-வென்று கதறுகின்ற, காலங்களைக் கடந்து நிற்கும் முதல்வனே! |
ஏஎ இன
கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் | சாமவேதம்
இப்படிப்பட்டவன் என்று கூறுவதால் அப்படி இருத்தலை நன்கு அறிந்தோம்; |
தீயினுள் தெறல்
நீ பூவினுள் நாற்றம் நீ | தீயினுள் சுடுகின்ற
கடுமை நீ! பூவினுள் கமழ்கின்ற மணம் நீ! |
கல்லினுள்
மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ | கற்களுக்குள்
மாணிக்கக் கல் நீ! சொற்களுள் வாய்மை நீ! |
அறத்தினுள்
அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ 65 | அறநெறிகளில் அன்பாக
இருப்பவன் நீ! மறத்தினில் ஆற்றலாக இருப்பவன் நீ! |
வேதத்து மறை நீ
பூதத்து முதலும் நீ | வேதங்களுள் மந்திரச்
சொல் நீ! பூதங்களுள் முதன்மையான வானமும் நீ! |
வெம் சுடர்
ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ | வெம்மையான சுடராகிய
ஞாயிற்றின் ஒளியும் நீ! குளிர் திங்களின் குளிர்ச்சியும் நீ! |
அனைத்தும் நீ
அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் | எல்லாப்பொருளும் நீ!
அப் பொருள்களின் உட்பொருளாக இருப்பவனும் நீ! எனவே, |
உறையும்
உறைவதும் இலையே உண்மையும் | நீ தங்குமிடம்
என்பதுவும், உன்னிடத்துத் தங்குவது என்பதுவும் இல்லை! உனக்கு உள்ள தன்மையாக, |
மறவியில்
சிறப்பின் மாயம்-மார் அனையை 70 | மறதியுடையார் உன்னைச்
சிறப்பித்துக் கூறியவை பொய்யுரைகள், நீ அப்படிப்பட்டவன்! |
முதல் முறை இடை
முறை கடை முறை தொழிலில் | முதலிலும், இடையிலும்,
இறுதியிலும், முறையே படைப்பு, காத்தல், அழித்தல் என்ற தொழில்களைச்
செய்யும்பொருட்டு |
பிறவா பிறப்பு
இலை பிறப்பித்தோர் இலையே | நீ பிறவாத பிறப்பு
இல்லை, உன்னைப் பிறப்பிக்கும்படி செய்தோரும் இல்லை; |
பறவா பூவை
பூவினோயே | பறக்காத பூவாகிய
காயாம்பூவின் நிறத்தவனே! |
அருள் குடை ஆக
அறம் கோல் ஆக | உன் திருவருளே
வெண்கொற்றக்குடையாக, அறமே செங்கோலாக, |
இரு நிழல்
படாமை மூ_ஏழ் உலகமும்
75 | வேறு இரண்டாவதான
குடைநிழல் படாதபடி, மூன்று கூறுகளான இருபத்தியொரு உலகங்களும் |
ஒரு நிழல்
ஆக்கிய ஏமத்தை மாதோ | உனது ஒரு குடை நிழலின்
கீழ் ஆக்கிய இனிய காவலினை உடையவன் நீ! |
பாழ் என கால்
என பாகு என ஒன்று என | பாழ் என்ற
புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள்
ஐந்தும், ஒன்றாவதான ஓசையும், |
இரண்டு என
மூன்று என நான்கு என ஐந்து என | இரண்டாவதான
தொடுவுணர்ச்சியாகிய ஊறும், மூன்றாவதான ஒளியும், நான்காவதான சுவையும், ஐந்தாவதான
நாற்றமும், |
ஆறு என ஏழு என
எட்டு என தொண்டு என | ஆறாவதான மனத்தைச்
சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும், ஒன்பதாவதான
மூலப்பகுதியும், |
நால் வகை ஊழி
எண் நவிற்றும் சிறப்பினை 80 | நால்வகை
ஊழியின்போதும், இந்த எண்களால் கூறப்படும் பெருமையினையுடையவனே! |
செம் கண் காரி
கரும் கண் வெள்ளை | சிவந்த கண்ணும் கரிய
மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே! |
பொன் கண் பச்சை
பைம் கண் மாஅல் | பொன்னிறக் கண்ணையும்
பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே! |
இட வல குட அல
கோவல காவல | ஆய்ச்சியர்க்கு இடமும்
வலமும் ஆடியவனே! குடக் கூத்தாடுபவனே! கலப்பைப் படை உள்ளவனே! கோவலனே காவலனே! |
காணா மரப நீயா
நினைவ | காணப்படாத இயல்பினனே!
அன்பரின் நீங்காத நினைவிலுள்ளவனே! |
மாயா மன்ன உலகு
ஆள் மன்னவ 85 | அழியாத
நிலைபேறுடையவனே! உலகினை ஆளும் மன்னவனே! |
தொல் இயல் புலவ
நல் யாழ் பாண | தொன்மை இயல்புகளை
அறிந்தவனே! நல்ல முறையில் யாழிசைக்கும் பாணனே! |
மாலை செல்வ
தோலா கோட்ட | துளசி மாலை அணிந்த
செல்வனே! தோல்வியினை அறியாத சங்கினை உடையவனே! |
பொலம் புரி ஆடை
வலம்புரி வண்ண | பொன்னாற் செய்த
ஆடையினையும், வலம்புரிச் சங்கைப் போன்ற நிறத்தையும் கொண்டவனே! |
பருதி வலவ பொரு
திறல் மல்ல | சக்கரத்தை வலக்கையில்
ஏந்தியிருப்பவனே! மற்போரில் ஆற்றலுள்ள மல்லனே! |
திருவின் கணவ
பெரு விறல் மள்ள
90 | திருமகளின் கணவனே!
பேராற்றல் கொண்ட மள்ளனே! |
மா நிலம் இயலா
முதல் முறை அமையத்து | இந்தப் பெரிய உலகம்
இயங்காத ஆதி ஊழியின் காலத்தின் |
நாம வெள்ளத்து
நடுவண் தோன்றிய | அச்சந்தரும் அந்த
வெள்ளத்து நடுவில் தோன்றிய, |
வாய்மொழி
மகனொடு மலர்ந்த | வேதத்தை உரைக்கும்
மகனாகிய பிரம்மனைக் கொண்டு மலர்ந்த, |
தாமரை பொகுட்டு
நின் நேமி நிழலே | உந்தித் தாமரைப்
பொகுட்டை உடையவனே! உன் சக்கரப்படையே உலகுக்கு நிழல் ஆவது. |
| |
# 4 திருமால் – பாடியவர் : கடுவன் இளவெயினனார் | # 4 திருமால் |
பண் அமைத்தவர்
: பெட்டாகனார் பண் :
பண்ணுப்பாலையாழ் | |
| |
ஐந்து இருள் அற
நீக்கி நான்கினுள் துடைத்து தம் | ஐந்து பொறிகளால்
உண்டாகும் மயக்கமாகிய இருளை முற்றிலும் நீக்கி, நான்கு குணங்களால் உள்ளத்தைத்
தூயதாக்கி, தம்மைத் |
ஒன்று
ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி | தியானமாகிய ஒரே
நெறியில் செலுத்திய உன் அன்பர்கள் உன்னைத் தொழுது போற்றி |
நின் புகழ்
விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்கு | உன்னுடைய புகழை
விரித்துக் கூறினர், சொல்லப்போனால் அவை உனக்கு |
இறும்பூது
அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும் | பெருமகிழ்ச்சி
தருவதாகாது என்பதனை நன்கு அறிவோம். ஆயினும் |
நகுதலும் தகுதி
ஈங்கு ஊங்கு நின் கிளப்ப 5 | நீ
சிரிப்பதற்கேற்றவற்றை இங்கும், அங்கும் நாங்கள் உன்னைப்பற்றிக் கூற |
திரு மணி திரை
பாடு அவிந்த முந்நீர் | அழகிய நீலமணி,
அலைகளின் ஓசை அடங்கிய கடல், |
வரு மழை இரும்
சூல் மூன்றும் புரையும் மா மெய் | பெய்யப்போகும் மழை
கொண்டிருக்கும் கரிய முதிர்ந்த மேகம், ஆகிய மூன்றையும் போன்றது உன் கரிய மேனி; |
மாஅ மெய்யொடு
முரணிய உடுக்கையை | அந்தக் கரிய மேனியோடு
மாறுபட்ட பொன்னிற ஆடையை உடையவனே! |
நோனார் உயிரொடு
முரணிய நேமியை | பகைவருடைய உயிரோடு
மாறுபட்ட சக்கரப்படையையுடையவனே! |
செயிர் தீர்
செம் கண் செல்வ நின் புகழ 10 | சினம் தீர்ந்த சிவந்த
கண்ணையுடைய செல்வனே! பிரகலாதன் உன்னைப் புகழ, |
புகைந்த
நெஞ்சின் புலர்ந்த சாந்தின் | பொறாமைத் தீயால்
புகைந்துபோன நெஞ்சினோடும், புலர்ந்த சந்தனத்தோடும், |
பிருங்கலாதன்
பல_பல பிணி பட | இரணியன் அந்தப்
பிரகலாதனைப் பலவாறு பிணிபடுமாறு |
வலந்து_உழி
மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து | கட்டிப்போட்ட பொழுது,
மிகுந்த துன்பமெய்தியதால் ஊக்கம் குன்றிய நடுக்கத்துடன், |
அலர்ந்த
புகழோன் தாதை ஆகலின் | அந்த விரிந்த
புகழையுடையவன், இவ்வாறு செய்பவன் தந்தை என்பதால் |
இகழ்வோன் இகழா
நெஞ்சினன் ஆக நீ இகழா
15 | அவ்வாறு இகழ்பவனை
இகழாத நெஞ்சினனாய் இருக்க, நீ இகழ்ந்து |
நன்றா நட்ட
அவன் நன் மார்பு முயங்கி | உன்னுடன் நன்றாக
நட்புப்பாராட்டிய பிரகலாதனின் நல்ல மார்பினைத் தழுவி, |
ஒன்றா நட்டவன்
உறு வரை மார்பின் | உன்னிடம் ஒன்றாத
உறவுகொண்டவனின் பெரிய மலை போன்ற மார்பில் |
படிமதம் சாம்ப
ஒதுங்கி | படிந்திருந்த செருக்கு
அழியும்படியாக அவன்மேல் பாய்ந்து, |
இன்னல்
இன்னரொடு இடி முரசு இயம்ப | துன்பத்தைக் காட்டும்
தீயசகுனங்களுடன் இடியைப் போன்ற முரசு ஒலிக்க, |
வெடி படா ஒடி
தூண் தடியொடு 20 | வெடிபட்டு ஒடிந்துபோன
தூணின் துண்டங்களோடு, |
தடி தடி பல பட
வகிர் வாய்த்த உகிரினை | இரணியனின் தசைத்
துண்டங்களும் பலவாகக் கலந்து விழும்படி அவனது மார்பினை வகிர்த்ந நகத்தினை
உடையவனே! |
புருவத்து கரு
வல் கந்தரத்தால் | முற்காலத்தில்,
உன்னுடைய கருமையான, வலிய கழுத்தால் |
தாங்கி இ உலகம்
தந்து அடிப்படுத்ததை நடுவண் | தாங்கிப் பிடித்து
இந்த உலகத்தைக் கடலுக்குள்ளிருந்து வெளிக்கொணர்ந்து நீ நிலைநிறுத்தியது, உலகின்
நடுவில் |
ஓங்கிய பலர்
புகழ் குன்றினோடு ஒக்கும் | ஓங்கி
உயர்ந்திருக்கும், பலரும் புகழும் மேருமலையைப் போன்ற சிறப்பினை உடையது |
நின்
வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள 25 | அனைத்தையும்
அழிக்கவல்ல உன் வெம்மையும், அனைத்தையும் தெளிவுறுத்தும் உன் ஒளியும் ஞாயிற்றில்
இருக்கின்றன; |
நின் தண்மையும்
சாயலும் திங்கள் உள | அனைவர்க்கும் அருளும்
உன் குளிர்நோக்கும், மென்மையும் திங்களிடத்தில் இருக்கின்றன; |
நின்
சுரத்தலும் வண்மையும் மாரி உள | அனைவர்க்கும்
அருள்சுரக்கும் இயல்பும், கொடைத்தன்மையும் மழையினிடத்தில் இருக்கின்றன; |
நின்
புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள | அனைவரையும் காக்கும்
இயல்பும், பொறுமையும் பூமியினிடத்தில் இருக்கின்றன; |
நின் நாற்றமும்
ஒண்மையும் பூவை உள | உன் மணமும் ஒளியும்
பூவில் உள்ளன; |
நின் தோற்றமும்
அகலமும் நீரின் உள 30 | உனது வெளிப்பாடும்,
பரப்பும் கடலினிடத்தில் உள்ளன; |
நின் உருவமும்
ஒலியும் ஆகாயத்து உள | உன் உருவமும் ஒலியும்
ஆகாயத்தில் உள்ளன; |
நின் வருதலும்
ஒடுக்கமும் மருத்தின் உள | உன் பிறப்பும்,
மறைதலும் காற்றினில் உள்ளன; |
அதனால் இவ்வும்
உவ்வும் அவ்வும் பிறவும் | அதனால்,
இங்கிருப்பவையும், நடுவிலிருப்பவையும், அங்கிருப்பவையும், பிறவும் |
ஏமம் ஆர்த்த
நின் பிரிந்து | தமக்குப் பாதுகாவலாக
அமைந்த உன்னிடத்திலிருந்து பிரிந்து |
மேவல் சான்றன
எல்லாம்
35 | உன்னையே
சார்ந்திருப்பன எல்லாமே! |
சேவல் ஓங்கு
உயர் கொடியோயே | கருடச் சேவல்
வரையப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியினை உடையவனே! |
சேவல் ஓங்கு
உயர் கொடி | கருடச் சேவல்
வரையப்பட்ட ஓங்கி உயர்ந்த கொடியுடன், |
நின் ஒன்று
உயர் கொடி பனை | உனக்குரியதாக
சிறந்துயர்ந்த கொடி பனைக்கொடி, |
நின் ஒன்று
உயர் கொடி நாஞ்சில் | உனக்குரியதாக
சிறந்துயர்ந்த கொடி கலப்பைக்கொடி, |
நின் ஒன்று
உயர் கொடி யானை 40 | உனக்குரியதாக
சிறந்துயர்ந்த கொடி யானைக்கொடி, |
நின் ஒன்றா
உயர் கொடி ஒன்று இன்று | உனக்கே சிறப்பாய்
உயர்ந்த கொடியை மற்றக் கொடிகள் ஒத்தல் இல்லை, |
விடம் உடை
அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் | நஞ்சை உடைய பாம்பின்
உடலையும், உயிரையும் உண்ணும் கருடன், |
அவன் மடி மேல்
வலந்தது பாம்பு | அவனது வயிற்றின் மேல்
பட்டியும் பாம்பு, |
பாம்பு தொடி
பாம்பு முடி மேலன | அந்தப் பாம்பே அவனது
தோள்வளையுமாகும், அந்தப் பாம்புகளே அவன் தலையின் திருமுடி மேல் உள்ளன, |
பாம்பு பூண்
பாம்பு தலை மேலது 45 | பாம்புகளே அவன்
அணிந்திருக்கும் பூண்கள் எல்லாம், பாம்புதான் அவன் தலையின் மேல் அணியும் சூட்டு
என்ற அணியும், |
பாம்பு சிறை
தலையன | பாம்புகளே அவன்
சிறகுகளில் அணியப்படுவன, |
பாம்பு படிமதம்
சாய்த்தோய் பசும் பூணவை | பாம்பின் பகையின்
செருக்கை அழித்தவனே! பொன் அணிகலன் அணிந்த உன் |
கொடி மேல்
இருந்தவன் தாக்கு இரையது பாம்பு | கொடியில் இருக்கும்
கருடன் தாக்குகின்ற இரையும் பாம்பே! |
கடு நவை
அணங்கும் கடுப்பும் நல்கலும் | மிகவும் துன்பம்
உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும், |
கொடுமையும்
செம்மையும் வெம்மையும் தண்மையும் 50 | கொடுமையும்,
செம்மையும், வெம்மையும், தண்மையும் |
உள்_வழி உடையை
இல்_வழி இலையே | உள்ளவரிடம் நீயும் அக்
குணங்களை உடையவன், இவை இல்லாதவரிடம் நீயும் அவற்றை இல்லாதவனாகவே இருக்கிறாய், |
போற்றார்
உயிரினும் போற்றுநர் உயிரினும் | உன்னைப் போற்றாதவரின்
உயிரிடத்திலும், போற்றுவாருடைய உயிரிடத்திலும் |
மாற்று
ஏமாற்றல் இலையே நினக்கு | முறையே மாற்றுதலும்
காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு |
மாற்றோரும்
இலர் கேளிரும் இலர் எனும் | பகைவரும் இலர்,
நண்பரும் இலர் என்ற கூற்றில் |
வேற்றுமை இன்று
அது போற்றுநர் பெறினே 55 | முரண்பாடு இல்லை, அதனை
ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால்; |
மனக்கோள்
நினக்கு என வடிவு வேறு இலையே | அன்பர்கள்
மனத்திற்கொண்ட வடிவத்தைத்தவிர உனக்கென வடிவு வேறு இல்லை; |
கோள் இருள்
இருக்கை ஆய் மணி மேனி | எப்பொருளையும்
மறைத்துக்கொள்ளும் இருளின் இருப்பிடம் போன்ற அழகிய நீலமணி போன்ற திருமேனியில் |
நக்கு அலர்
துழாஅய் நாறு இணர் கண்ணியை | சிரித்து மலர்ந்த
துளசியின் நறுமணம் கமழும் கொத்தாலான தலைமாலையை உடையவனே! |
பொன்னின்
தோன்றிய புனை மறு மார்ப | பொன்னைப் போல்
தோன்றும் புகழ்பெற்ற மறுவையுடைய மார்பனே! |
நின்னில்
தோன்றிய நிரை இதழ் தாமரை 60 | உன்னுடைய உந்தியில்
தோன்றிய வரிசையான இதழ்களையுடைய தாமரையைப் |
அன்ன நாட்டத்து
அளப்ப அரியவை | போன்ற கண்களுடன்
அளப்பதற்கு அரியவனாய் இருக்கிறாய்! |
நின்னின்
சிறந்த நின் தாள் இணையவை | உன்னிலும் சிறந்தவை
உனது இரு தாளிரண்டும்! |
நின்னில்
சிறந்த நிறை கடவுளவை | உன்னிடத்தில் சிறந்த
நிறைவான கடவுள்பண்பை உடையவன்! |
அன்னோர் அல்லா
வேறும் உள அவை | அத்தன்மை அல்லாத வேறு
பண்புகளும் உன்னிடத்தில் உள்ளன; அவை |
நின் ஓர் அன்
ஓர் அந்தணர் அருமறை
65 | உன்னையே ஒத்த
உணர்வதர்கு அரிய அந்தணரின் அருமறைப் பொருளாக உள்ளன. |
அழல் புரை குழை
கொழு நிழல் தரும் பல சினை | தீக் கொழுந்தைப் போன்ற
தளிரையும், மிகுதியான நிழலைத் தரும் பல கிளைகளையும் கொண்ட |
ஆலமும்
கடம்பும் நல் யாற்று நடுவும் | ஆலமரத்தின் கீழும்,
கடம்பமரத்திலும், நல்ல ஆற்றிடைக்குறையிலும், |
கால் வழக்கு
அறு நிலை குன்றமும் பிறவும் | காற்றின் போக்கைத்
தடுத்து நிறுத்தும் உயந்த நிலையினையுடைய குன்றங்களிலும், பிற இடங்களிலும், |
அவ்வவை மேவிய
வேறு_வேறு பெயரோய் | அந்தந்த இடங்களில்
பொருந்திய வேறுவேறு பெயர்களையுடையவனே! |
எ வயினோயும்
நீயே நின் ஆர்வலர்
70 | எந்த இடத்திலும்
இருப்பவன் நீயே! உன் அன்பர்களின் |
தொழுத கை
அமைதியின் அமர்ந்தோயும் நீயே | தொழுத கைகளின்
நிலையில் அமர்ந்தவனும் நீயே! |
அவரவர்
ஏவலாளனும் நீயே | அவரவரின் வேண்டுதலைச்
செய்யும் ஏவலாளனும் நீயே! |
அவரவர் செய்
பொருட்கு அரணமும் நீயே | அவரவர் செய்கின்ற அறம்
முதலிய பொருள்களுக்குக் காவலும் நீயே! |
| |
# 5 செவ்வேள் – பாடியவர் : கடுவன் இளவெயினனார் | # 5 செவ்வேள் |
பண் அமைத்தவர்
: கண்ணாகனார் பண் : பண்ணுப்பாலையாழ் | |
| |
பாய் இரும் பனி
கடல் பார் துகள் பட புக்கு | பரந்த பெரிய குளிர்ந்த
கடலில் உள்ள பாறைகள் தூள்தூளாகும்படி புகுந்து, |
சேய் உயர்
பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி | மிகவும் உயர்ந்த
பிணிமுகம் என்னும் யானையின் மீதேறிப் போர்செய்து, |
தீ அழல்
துவைப்ப திரிய விட்டெறிந்து | நெருப்பின் கொழுந்து
போல் ஆரவாரிக்குபடி உன் வேலைச் சுழற்றி விட்டெறிந்து, |
நோய் உடை
நுடங்கு சூர் மா முதல் தடிந்து | பிறரைத்
துன்புறுத்தும் இயல்பினையுடைய அசைந்தாடும் சூரபத்மனாகிய மா மரத்தைனை அடியோடு
சாய்த்து |
வென்றியின்
மக்களுள் ஒருமையொடு பெயரிய
5 | வெற்றியையுடைய புண்ணிய
மக்கள், பாவ மக்கள் என்ற பெயர்களுள் புண்ணிய மக்கள் என்ற பெயரைப் பெற்ற |
கொன்று உணல்
அஞ்சா கொடு வினை கொல் தகை | பிற உயிர்களைக் கொன்று
உண்பதற்கு அஞ்சாத கொடிய செயல்களையுடைய கொல்லக்கூடிய தகுதிபடைத்த |
மாய அவுணர்
மருங்கு அற தபுத்த வேல் | மாயம் செய்வதில் வல்ல
அவுணரின் குலம் அழியும்படியாகக் கெடுத்த வேலினால், |
நாவல் அம் தண்
பொழில் வட பொழில் ஆயிடை | இந்த நாவலந்தீவு
எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில்
உள்ள |
குருகொடு பெயர்
பெற்ற மால் வரை உடைத்து | கிரவுஞ்சம் என்கிற
பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து |
மலை
ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை 10 | அந்தமலையினில் வழிகளை
அமைத்த ஆறு மெல்லிய தலைகளை உடையவனே! |
மூ_இரு கயந்தலை
மு_நான்கு முழவு தோள் | ஆறு மென்மையான
தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும், |
ஞாயிற்று ஏர்
நிற தகை நளினத்து பிறவியை | ஞாயிறு எழுகின்ற
போதுள்ள நிறம் போன்ற அழகினையும் கொண்ட, தாமரையின் மேல் பிறப்பினை உடைய,
பெருமானே! |
காஅய் கடவுள்
சேஎய் செவ்வேள் | உலகத்தை அழிக்கும்
கடவுளான சிவனின் மகனே! செவ்வேளே! |
சால்வ தலைவ என
பேஎ விழவினுள் | சான்றாண்மையுடையவனே!
தலைவனே! என்று அச்சந்தரும் வெறியாட்டு விழாவில் |
வேலன் ஏத்தும்
வெறியும் உளவே 15 | வேலன் புகழ்ந்துபாடும்
வெறியாட்டுப் பாடல்களும் உள்ளன; |
அவை வாயும்
அல்ல பொய்யும் அல்ல | அவை உண்மையானவையும்
அல்ல; பொய்யானவையும் அல்ல; |
நீயே
வரம்பிற்று இ உலகம் ஆதலின் | உன்னையே வரம்பாகக்
கொண்டது இந்த உலகம், எனவே |
சிறப்போய்
சிறப்பு இன்றி பெயர்குவை | சிறந்து விளங்குபவனே!
இப் பண்புகள் உன் உண்மைப் புகழுக்குக் குறைவுள்ளதாதலால் அந்தச் சிறப்பினின்றும்
நீ நீங்கிவிடுவாய்! |
சிறப்பினுள்
உயர்பு ஆகலும் | சிறப்புகளில்
உயர்ந்தவர் ஆகுவதும், |
பிறப்பினுள்
இழிபு ஆகலும் 20 | பிறப்பினில் இழிந்த
நிலை அடைதலும் உடைய |
ஏனோர் நின்
வலத்தினதே | உன்னை அல்லாத பிற
உயிர்கள் உன் ஆணைக்குட்பட்டவை; |
ஆதி அந்தணன்
அறிந்து பரி கொளுவ | பிரம்மதேவன்
செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த, |
வேத மா பூண்
வைய தேர் ஊர்ந்து | வேதங்களாகிய குதிரைகள்
பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி, |
நாகம் நாணா மலை
வில் ஆக | வாசுகி என்ற பாம்பினை
நாணாகக் கொண்டு, மேரு மலையே வில்லாக, |
மூ வகை ஆர்
எயில் ஓர் அழல் அம்பின் முளிய
25 | பொன், வெள்ளி, இரும்பு
ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால்
வேகும்படியும், |
மாதிரம் அழல
எய்து அமரர் வேள்வி | திக்கெல்லாம்
பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின் |
பாகம் உண்ட
பைம் கண் பார்ப்பான் | அவியுணவை உண்ட பசிய
கண்ணையுடைய சிவபெருமான் |
உமையொடு
புணர்ந்து காம வதுவையுள் | உமாதேவியோடு புணர்ந்த
காமநுகர்ச்சிக்கான திருமண நாளில் |
அமையா
புணர்ச்சி அமைய நெற்றி | கைவிட முடியாத
புணர்ச்சியை அடைய, நெற்றியில் |
இமையா
நாட்டத்து ஒரு வரம் கொண்டு 30 | இமைக்காத கண்ணையுடைய
சிவபெருமானிடம், இந்திரன் ஒரு வரத்தைப் பெற்று |
விலங்கு என
விண்ணோர் வேள்வி முதல்வன் | ‘உன் புணர்ச்சியால்
உண்டான கருவை அழிப்பாயாக’ என்று வேண்ட, அந்த விண்ணவரின் வேள்வியின் முதல்வனான |
விரி கதிர் மணி
பூணவற்கு தான் ஈத்தது | விரிந்த கதிர்களையுடைய
மணிகளைப் பூண்டிருக்கும் இந்திரனுக்கு, தான் கொடுத்த வரம் |
அரிது என
மாற்றான் வாய்மையன் ஆதலின் | செய்வதற்கு அரியது
என்று எண்ணி அதனை மாற்றாதவனாய், அவன் வாய்மையைப் போற்றுபவனாதலால் |
எரி கனன்று ஆனா
குடாரி கொண்டு அவன் உருவு | நெருப்பு கனன்று
தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு அந்தக் கருவின்
உருவத்தைப் |
திரித்திட்டோன்
இ உலகு ஏழும் மருள 35 | பல கண்டங்களாகச்
சிதைத்துக் கொடுத்துவிட்டான், இந்த உலகம் ஏழும் மருண்டுபோக, |
கரு பெற்று
கொண்டோர் கழிந்த சேய் யாக்கை | இந்திரனிடமிருந்து
இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை, |
நொசிப்பின் ஏழ்
உறு முனிவர் நனி உணர்ந்து | எதிர்காலத்தை உணரும்
ஆற்றல் பெற்ற ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து, |
வசித்ததை
கண்டம் ஆக மாதவர் | பிளவுபட்டதைத்
துண்டங்களாக, அம் முனிவர்களின் |
மனைவியர்
நிறை_வயின் வசி தடி சமைப்பின் | மனைவியர், தம்
கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால் |
சாலார் தானே
தரிக்க என அவர் அவி
40 | அமைவுடையவராகமாட்டார்
என்று எண்ணி, ‘தீயே அவற்றைத் தாங்குவதாக’ என்று அந்த முனிவர்கள் வேள்வியுணவாக, |
உடன் பெய்தோரே
அழல் வேட்டு அ அவி | ஒன்றாகச் சேர்த்துப்
போட்டார் தீயினால் வேள்வி செய்து; அந்த வேள்வி அவியைக் |
தடவு நிமிர்
முத்தீ பேணிய மன் எச்சில் | குண்டங்களில் எழுந்த
முத்தீயும் உண்ணுவதால் சேர்ந்த பெருமைக்குரிய எச்சத்தை, |
வட_வயின்
விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் | வானத்தில்
வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள் |
கடவுள் ஒரு
மீன் சாலினி ஒழிய | கடவுள் கற்பினையுடைய
ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய |
அறுவர்
மற்றையோரும் அ நிலை அயின்றனர் 45 | அறுவராகிய ஏனையோரும்
அப்பொழுதே உண்டனர்; |
மறு அறு
கற்பின் மாதவர் மனைவியர் | குற்றமற்ற
கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர் |
நிறை_வயின்
வழாஅது நின் சூலினரே | தம் கற்பில்
குறைவுபடாது உன்னைக் கருக்கொண்டனர்; |
நிவந்து ஓங்கு
இமயத்து நீல பைம் சுனை | உயர்ந்து ஓங்கிய
இமயத்திலுள்ள நீலப்பூக்களைக் கொண்ட பசிய சரவணம் என்ற சுனையில் |
பயந்தோர் என்ப
பதுமத்து பாயல் | உன்னைப்
பெற்றெடுத்தனர் என்பர், தாமரைப்பூவாகிய படுக்கையில், |
பெரும் பெயர்
முருக நின் பயந்த ஞான்றே 50 | பெரிய புகழினை உடைய
முருகனே! உன்னை இவ்வாறு பெற்ற பொழுதே |
அரிது அமர்
சிறப்பின் அமரர்_செல்வன் | கிட்டுவதற்கு அரிய,
பிறரும் விரும்பும் சிறப்பினை உடைய தேவர் கோமான் |
எரி உமிழ்
வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என | தீயை உமிழும்
வச்சிரப்படையைக் கொண்டு, பகைமை கொண்டு வந்து வெட்டினானாக, |
அறு வேறு
துணியும் அறுவர் ஆகி | முன்னர் ஆறு வேறு
துண்டுகளும் ஆறு வடிவம் ஆகி, |
ஒருவனை வாழி
ஓங்கு விறல் சேஎய் | பின்னர் ஒரே உருவம்
உடையவனானாய்! ஓங்குகின்ற வெற்றியை உடைய குமாரதெய்வமே! |
ஆரா உடம்பின்
நீ அமர்ந்து விளையாடிய 55 | வளராத உடம்பினையுடைய
நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப் |
போரால் வறும்
கைக்கு புரந்தரன் உடைய | போரில் உன்னுடைய
வெறும் கைகளுக்கே அந்த இந்திரன் தோற்றோட, |
அல்லல் இல்
அனலன் தன் மெய்யின் பிரித்து | துன்பமில்லாத
தீக்கடவுள் தன் உடலிலிருந்து பிரித்து |
செல்வ வாரணம்
கொடுத்தோன் வானத்து | வளப்பமான கோழிச்
சேவலைக் கொடியாகக் கொடுத்தான், வானுலகத்தில் |
வளம் கெழு
செல்வன் தன் மெய்யின் பிரித்து | வளம் பொருந்திய
செல்வத்தையுடைய இந்திரன் தன் உடலிலிருந்து பிரித்து |
திகழ் பொறி
பீலி அணி மயில் கொடுத்தோன் 60 | ஒளிதிகழும்
புள்ளிகளையுடைய தோகையால் அழகு பெற்ற மயிலாகக் கொடுத்தான், |
திருந்து கோல்
ஞமன் தன் மெய்யின் பிரிவித்து | திருந்திய
செங்கோலையுடைய இயமன் தன் உடம்பிலிருந்து பிரித்து |
இரும் கண் வெள்
யாட்டு எழில் மறி கொடுத்தோன் | கரிய கண்ணையுடைய
வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்; |
ஆஅங்கு அவரும்
பிறரும் அமர்ந்து படை அளித்த | அவ்வாறு, அவர்களும்,
பிறரும் மகிழ்ந்து உனக்குப் படைகளாக அளித்த, |
மறியும்
மஞ்ஞையும் வாரண சேவலும் | வெள்ளாட்டுக்
குட்டியும், மயிலும், கோழிச் சேவலும், |
பொறி வரி
சாபமும் மரனும் வாளும்
65 | இலச்சினையிடப்பட்ட
வரிகளையுடைய வில்லும், தோமரமும், வாளும், |
செறி இலை
ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் | செறிவான இலையைக் கொண்ட
ஈட்டியும், கோடரியும், குந்தாலியும் |
தெறு கதிர்
கனலியும் மாலையும் மணியும் | சுடுகின்ற
கதிர்களையுடைய மழுப்படையும், மாலையும், மணிகளும், |
வேறு_வேறு
உருவின் இ ஆறு இரு கை கொண்டு | வேறுவேறு உருவினையுடைய
இந்தப் பன்னிரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு |
மறு இல்
துறக்கத்து அமரர்_செல்வன்-தன் | குற்றமற்ற வானுலகில்
வாழும் தேவர் கோமானாகிய இந்திரனின் – |
பொறி வரி
கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் 70 | தாமரைப் பூவின்
புள்ளிகளையுடைய பொகுட்டுடனான இளம்பருவத்திலேயே – புகழின் எல்லையைக் கடந்தவனே! |
நின் குணம்
எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை | உன் குணமாகிய அருளைத்
தம்மிடம் ஏற்றிருப்பாராய், உன் அறத்தைத் தாமும் மேற்கொண்டோராய் இல்லாதவரும் |
மன் குணம்
உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை | நிலைபெற்ற நல்ல
குணங்களையுடையோராய், பெரும் தவத்தினை மேற்கொண்டோராய், உன்னை வணங்குபவராய்
இல்லாதவரும் |
செறு தீ
நெஞ்சத்து சினம் நீடினோரும் | கொல்லுகின்ற தீய
நெஞ்சத்தில் சினத்தை நீட்டித்திருப்போரும், |
சேரா அறத்து
சீர் இலோரும் | அறநெறியில் சேராத
சீர்மைகெட்டோரும், |
அழி தவ
படிவத்து அயரியோரும் 75 | அழிந்துபோன தவ வடிவோடு
உன்னை மறந்துபோனவர்களும், |
மறுபிறப்பு இல்
எனும் மடவோரும் சேரார் | மறுபிறப்பு என்பது
இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் உன்னை ஒருபோதும் அடையமாடார்கள்; |
நின் நிழல்
அன்னோர் அல்லது இன்னோர் | உன் திருவடி நிழலை
மேற்கூறியவரை அன்றி பிறர் |
சேர்வார்
ஆதலின் யாஅம் இரப்பவை | சேர்வாராதலால், நாம்
வேண்டிக்கேட்டுக்கொள்பவை |
பொருளும்
பொன்னும் போகமும் அல்ல நின் பால் | பொருளும், பொன்னும்,
போகமும் அல்ல, உன்னிடம் |
அருளும்
அன்பும் அறனும் மூன்றும் 80 | அருளும், அன்பும்
அறனும் ஆகிய மூன்றனையுமே! |
உருள் இணர்
கடம்பின் ஒலி தாரோயே | உருளாகப் பூக்கும்
கொத்துக்களையுடைய கடம்பின் செழுமையான மாலையை அணிந்தவனே! |
| |