கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சூட்டி 3
சூட்டு 2
சூடக 1
சூடகம் 2
சூடகமும் 1
சூடி 2
சூடிய 2
சூடுக 1
சூடுதும் 1
சூடும் 1
சூதர் 1
சூதரும் 1
சூர் 3
சூர்த்து 1
சூரிய 1
சூரும் 1
சூல் 2
சூலத்து 1
சூலம் 1
சூலி 1
சூழ் 22
சூழ்தர 3
சூழ்தரல் 1
சூழ்தரும் 1
சூழ்ந்த 2
சூழ்ந்தன 1
சூழ்போக 1
சூழ்போகி 1
சூழ்போகிய 1
சூழ 2
சூழி 1
சூழும் 1
சூள் 2
சூறை 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சூட்டி (3)
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி
பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – புகார்:10/133,134
புட்கை சேனை பொலிய சூட்டி
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – வஞ்சி:25/147,148
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில் – வஞ்சி:29/10,11
சூட்டு (2)
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – மது:23/48
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் – வஞ்சி:27/26
சூடக (1)
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் – வஞ்சி:27/184
சூடகம் (2)
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – புகார்:6/92
பாடகம் பதையாது சூடகம் துளங்காது – வஞ்சி:28/71
சூடகமும் (1)
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – மது:12/116
சூடி (2)
பார்ப்பன வாகை சூடி ஏற்புற – மது:23/72
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி – வஞ்சி:24/94
சூடிய (2)
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – மது:22/87
வாகை தும்பை வட திசை சூடிய
வேக யானையின் வழியோ நீங்கு என – வஞ்சி:27/221,222
சூடுக (1)
வெட்சி சூடுக விறல் வெய்யோனே – மது:12/167
சூடுதும் (1)
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – வஞ்சி:25/149
சூடும் (1)
மதியின் வெண் தோடு சூடும் சென்னி – மது:12/54
சூதர் (1)
சூதர் மாதகர் வேதாளிகரொடு – புகார்:5/48
சூதரும் (1)
சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த – வஞ்சி:26/75
சூர் (3)
சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும் – புகார்:6/51
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை – மது:20/50
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – வஞ்சி:24/50
சூர்த்து (1)
சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – புகார்:5/84
சூரிய (1)
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – புகார்:9/59
சூரும் (1)
அரவும் சூரும் இரை தேர் முதலையும் – மது:13/7
சூல் (2)
சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – புகார்:10/105
பத்தி கேவண பசும் பொன் குடை சூல்
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் – மது:16/118,119
சூலத்து (1)
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – மது:11/73
சூலம் (1)
வளை உடை கையில் சூலம் ஏந்தி – மது:12/60
சூலி (1)
சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – மது:12/68
சூழ் (22)
சூழ் வினை சிலம்பு காரணமாக – புகார்:0/58
சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி – புகார்:3/11
தாழி குவளை சூழ் செங்கழுநீர் – புகார்:5/192
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/129
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – புகார்:10/83
கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் – புகார்:10/112
மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் – புகார்:10/146
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – புகார்:10/218
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய – மது:11/84
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து – மது:12/24
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – மது:14/62
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – மது:16/4
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு – மது:20/72
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – மது:22/81
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே – வஞ்சி:24/30
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – வஞ்சி:25/7
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – வஞ்சி:26/81
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன் – வஞ்சி:26/218
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே – வஞ்சி:28/84
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – வஞ்சி:28/190
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – வஞ்சி:29/193
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் – வஞ்சி:30/160
சூழ்தர (3)
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – புகார்:7/229
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர
நரை விரைஇய நறும் கூந்தலர் – மது:20/25,26
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – மது:23/87,88
சூழ்தரல் (1)
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் – புகார்:6/158
சூழ்தரும் (1)
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/129
சூழ்ந்த (2)
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – மது:20/100
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து – வஞ்சி:28/47
சூழ்ந்தன (1)
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – வஞ்சி:28/62
சூழ்போக (1)
அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற – மது:21/9
சூழ்போகி (1)
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி
கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் – மது:13/183,184
சூழ்போகிய (1)
மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – மது:13/160
சூழ (2)
ஓவிய எழினி சூழ உடன் போக்கி – புகார்:6/169
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ
மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – மது:15/206,207
சூழி (1)
சூழி யானை சுடர் வாள் செம்பியன் – புகார்:7/235
சூழும் (1)
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/125
சூள் (2)
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/34
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – புகார்:7/221
சூறை (1)
ஆறு எறி பறையும் சூறை சின்னமும் – மது:12/40