கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊக்க 1
ஊக்கத்து 2
ஊகமும் 1
ஊங்கணோர் 1
ஊசல் 7
ஊசலாடும் 1
ஊசியும் 1
ஊட்ட 3
ஊட்டலும் 1
ஊட்டி 4
ஊட்டிய 5
ஊட்டும் 4
ஊட 1
ஊடல் 4
ஊடலும் 1
ஊடினீர் 1
ஊண் 5
ஊத 2
ஊது 5
ஊது_உலை 5
ஊதும் 2
ஊமும் 2
ஊர் 44
ஊர்_கோட்டம் 1
ஊர்_அகத்து 1
ஊர்க்கின்ற 1
ஊர்க்கு 1
ஊர்களும் 1
ஊர்காண் 1
ஊர்சூழ்வரியும் 1
ஊர்தி 1
ஊர்தியை 1
ஊர்ந்த 3
ஊர்ந்தாய் 2
ஊர்ந்தாற்கு 2
ஊர்ந்து 1
ஊர்ந்தோன் 1
ஊர்வோன் 2
ஊரலும் 1
ஊரவும் 1
ஊரார் 1
ஊரீர் 1
ஊருநர் 3
ஊரும் 2
ஊரே 1
ஊழ் 2
ஊழ்வினை 8
ஊழி 8
ஊழி-தொறு 4
ஊழி-தோறு 1
ஊழியோடு 1
ஊழிஊழி 1
ஊறின 1
ஊன் 3
ஊன்_ஊண் 1
ஊன்றி 1
ஊன்றிய 2
ஊன்று 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஊக்க (1)
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க
கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி – வஞ்சி:29/163,164
ஊக்கத்து (2)
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – புகார்:5/95
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – புகார்:6/8
ஊகமும் (1)
கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – மது:15/208
ஊங்கணோர் (1)
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின் – வஞ்சி:28/134
ஊசல் (7)
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – வஞ்சி:29/162
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல்
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/165,166
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல்
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – வஞ்சி:29/166,167
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல்
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/170,171
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல்
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – வஞ்சி:29/171,172
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல்
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/175,176
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல்
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – வஞ்சி:29/176,177
ஊசலாடும் (1)
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – புகார்:7/40
ஊசியும் (1)
ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும்
சென்று எறி சிரலும் பன்றியும் பணையும் – மது:15/213,214
ஊட்ட (3)
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – மது:21/51
மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – வஞ்சி:26/244,245
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து – வஞ்சி:30/75
ஊட்டலும் (1)
வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும்
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – மது:23/212,213
ஊட்டி (4)
மயிர் கண் முரசமொடு வான் பலி ஊட்டி
இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ – புகார்:5/88,89
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி – புகார்:6/81,82
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – மது:19/31
ஒரு பகல் எல்லை உயிர் பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – வஞ்சி:27/130,131
ஊட்டிய (5)
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய
பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என – புகார்:0/35,36
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி – புகார்:6/82
பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – மது:16/5
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – மது:22/112
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – மது:22/146
ஊட்டும் (4)
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – புகார்:0/57
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – புகார்:10/171
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – மது:13/168
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – மது:14/27
ஊட (1)
கோவலன் ஊட கூடாது ஏகிய – புகார்:8/15
ஊடல் (4)
உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – புகார்:4/68
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப – புகார்:6/75
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து – மது:16/134
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – வஞ்சி:27/59
ஊடலும் (1)
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து – புகார்:6/109
ஊடினீர் (1)
ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை – புகார்:8/123
ஊண் (5)
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – புகார்:7/135
புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து – புகார்:10/15
கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – மது:15/57
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – வஞ்சி:26/245
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – வஞ்சி:30/189
ஊத (2)
மழலை தும்பி வாய் வைத்து ஊத
அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – புகார்:4/16,17
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – புகார்:6/177
ஊது (5)
ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – புகார்:4/59
ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – மது:13/45
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – மது:18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/14
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – மது:22/152
ஊது_உலை (5)
ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – புகார்:4/59
ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – மது:13/45
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – மது:18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/14
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – மது:22/152
ஊதும் (2)
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – புகார்:7/134
கோவலர் ஊதும் குழலின் பாணியும் – வஞ்சி:27/241
ஊமும் (2)
கூனும் குறளும் ஊமும் செவிடும் – புகார்:5/118
கூனும் குறளும் ஊமும் கூடிய – மது:20/24
ஊர் (44)
கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர்
நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – புகார்:0/14,15
இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – புகார்:0/67
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – புகார்:1/52
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – புகார்:3/128
உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – புகார்:4/79
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – புகார்:4/87
வான் ஊர் மதியமும் பாடி பின்னர் – புகார்:6/37
வாணன் பேர் ஊர் மறுகு இடை நடந்து – புகார்:6/54
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர்
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – புகார்:7/36,37
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர்
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – புகார்:7/40,41
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – புகார்:7/44
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – புகார்:7/48
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – புகார்:7/107
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர்
மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – புகார்:7/130,131
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர்
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – புகார்:7/134,135
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/138
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/11
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு – புகார்:10/153
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – புகார்:10/264
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – மது:11/32
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால் – மது:11/143
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – மது:12/11
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – மது:12/12
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – மது:12/137
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – மது:12/156
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – மது:14/6
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – மது:14/217
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – மது:15/167
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – மது:16/146
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – மது:16/150
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற – மது:16/207
புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும் – மது:17/118
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – மது:18/6
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – மது:18/53
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – மது:19/3
ஒல்லென் ஒலி படைத்தது ஊர்
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – மது:19/34,35
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர்
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – மது:20/68,69
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – மது:22/144
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – மது:22/146
தங்கால் என்பது ஊரே அ ஊர்
பாசிலை பொதுளிய போதி மன்றத்து – மது:23/75,76
மடந்தை பொருட்டால் வருவது இ ஊர்
அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை – வஞ்சி:24/95,96
பெற்றி உடையது இ ஊர்
என்று யாம் – வஞ்சி:24/127,128
தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை – வஞ்சி:26/239
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – வஞ்சி:30/109
ஊர்_கோட்டம் (1)
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/11
ஊர்_அகத்து (1)
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – புகார்:10/264
ஊர்க்கின்ற (1)
ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – புகார்:7/156
ஊர்க்கு (1)
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – புகார்:9/51
ஊர்களும் (1)
உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும்
பொங்கழி ஆலை புகையொடும் பரந்து – புகார்:10/150,151
ஊர்காண் (1)
ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – புகார்:0/75
ஊர்சூழ்வரியும் (1)
ஊர்சூழ்வரியும் சீர்சால் வேந்தனொடு – புகார்:0/79
ஊர்தி (1)
வான ஊர்தி ஏறினள்-மாதோ – மது:23/199
ஊர்தியை (1)
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – மது:12/44
ஊர்ந்த (3)
ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – புகார்:7/156
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – புகார்:7/160
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – புகார்:7/161
ஊர்ந்தாய் (2)
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – புகார்:7/160
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – புகார்:7/161
ஊர்ந்தாற்கு (2)
மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ – மது:17/37
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – மது:17/43
ஊர்ந்து (1)
உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – வஞ்சி:27/27
ஊர்ந்தோன் (1)
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி – வஞ்சி:30/141
ஊர்வோன் (2)
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன்
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன் – மது:22/29,30
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை – வஞ்சி:26/215
ஊரலும் (1)
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் – புகார்:10/117
ஊரவும் (1)
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும்
அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும் – மது:15/98,99
ஊரார் (1)
இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல் – புகார்:9/48
ஊரீர் (1)
ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என – மது:23/161
ஊருநர் (3)
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – புகார்:5/55
காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர்
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – மது:22/12,13
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர்
வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – வஞ்சி:26/198,199
ஊரும் (2)
காடும் நாடும் ஊரும் போகி – மது:23/65
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – வஞ்சி:24/124
ஊரே (1)
தங்கால் என்பது ஊரே அ ஊர் – மது:23/75
ஊழ் (2)
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – புகார்:6/137
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – புகார்:10/92
ஊழ்வினை (8)
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – புகார்:0/57
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – புகார்:7/226
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப – புகார்:10/4
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – மது:16/217
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப – மது:20/71
ஊழ்வினை வந்த கடை – மது:23/28
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – வஞ்சி:27/59
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின் – வஞ்சி:27/70
ஊழி (8)
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – புகார்:7/124
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – புகார்:7/125
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – வஞ்சி:25/182
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – வஞ்சி:26/124
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – வஞ்சி:26/246
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – வஞ்சி:27/139
ஊழியோடு ஊழி உலகம் காத்து – வஞ்சி:28/185
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – வஞ்சி:30/145
ஊழி-தொறு (4)
ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – மது:11/16
ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – மது:11/16
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – வஞ்சி:25/182
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – வஞ்சி:27/139
ஊழி-தோறு (1)
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – வஞ்சி:30/145
ஊழியோடு (1)
ஊழியோடு ஊழி உலகம் காத்து – வஞ்சி:28/185
ஊழிஊழி (1)
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – வஞ்சி:25/91,92
ஊறின (1)
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – புகார்:6/78
ஊன் (3)
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும் – புகார்:5/27
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – வஞ்சி:26/243
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – வஞ்சி:30/189
ஊன்_ஊண் (1)
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – வஞ்சி:30/189
ஊன்றி (1)
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை – மது:15/44,45
ஊன்றிய (2)
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன் – மது:22/30
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – வஞ்சி:25/136
ஊன்று (1)
கான படமும் காழ் ஊன்று கடிகையும் – மது:14/173