கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐ 1
ஐந்தன் 1
ஐந்தின் 1
ஐந்து 5
ஐந்துடன் 1
ஐந்தும் 4
ஐம்புலத்து 1
ஐம்புலனும் 1
ஐயத்தின் 1
ஐயப்படாஅது 1
ஐயப்படும் 1
ஐயப்பாடு 1
ஐயம் 1
ஐயுறவும் 1
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில்அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஐ (1)
ஐ உணர்வு எய்திய-கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – குறள் 36:4
ஐந்தன் (1)
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு – குறள் 35:3
ஐந்தின் (1)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு – குறள் 3:7
ஐந்து (5)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – குறள் 3:5
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13:6
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74:8
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள் 99:3
ஐந்துடன் (1)
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64:2
ஐந்தும் (4)
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் – குறள் 28:1
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – குறள் 68:5
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் – குறள் 94:9
ஐம்புலத்து (1)
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள் 5:3
ஐம்புலனும் (1)
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1
ஐயத்தின் (1)
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள் 36:3
ஐயப்படாஅது (1)
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தொடு ஒப்ப கொளல் – குறள் 71:2
ஐயப்படும் (1)
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் – குறள் 96:8
ஐயப்பாடு (1)
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள் 59:7
ஐயம் (1)
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – குறள் 85:5
ஐயுறவும் (1)
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – குறள் 51:10