| | |
| # 26 குன்ற
குறவன் பத்து | # 26 குன்ற குறவன்
பத்து |
| # 251 | # 251 |
| குன்ற குறவன்
ஆர்ப்பின் எழிலி | குன்றத்தின் குறவர்கள்
கொண்டாடினால், மேகங்கள் |
| நுண் பல் அழி
துளி பொழியும் நாட | நுண்ணிய பலவான மிகுந்த
துளிகளைப் பெய்யும் நாட்டினனே! |
| நெடு வரை
படப்பை நும் ஊர் | நெடிய மலையிடத்துள்ள
தோட்டங்களையுடைய உமது ஊரிலிருந்து |
| கடு வரல் அருவி
காணினும் அழுமே | வேகமாக வரும்
அருவிநீரைக் கண்டாலும் இவள் அழுகின்றாள். |
| # 252 | # 252 |
| குன்ற குறவன்
புல் வேய் குரம்பை | குன்றத்தின்
குறவர்களின் புல் வேய்ந்த குடிசையினை, |
| மன்று ஆடு இள
மழை மறைக்கும் நாடன் | தோட்டத்தின் நடுவில்
அசைவாடும் இளமையான வெண்மேகங்கள் மறைக்கும் நாட்டினன் |
| புரையோன் வாழி
தோழி விரை பெயல் | உயர்ந்தவன், வாழ்க,
தோழியே! வீசியடிக்கும் மழையையும் |
| அரும் பனி
அளைஇய கூதிர் | பொறுத்தற்கரிய
குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின் |
| பெரும் தண்
வாடையின் முந்து வந்தனனே | பெரிதான குளிர்ந்த
வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான். |
| | |
| # 253 | # 253 |
| குன்ற குறவன்
சாந்த நறும் புகை | குன்றத்துக் குறவன்
எழுப்பும் சந்தனக்கட்டைகளின் நறிய புகை |
| தேம் கமழ்
சிலம்பின் வரை_அகம் கமழும் | தேன் மணம் கமழ்கின்ற
மலைச் சரிவின் பக்க இடங்களிலெல்லாம் மணம்பரப்பும் |
| கானக நாடன்
வரையின் | கானக நாடன் மணம்பேச
வந்தால்தான் |
| மன்றலும்
உடையள்-கொல் தோழி யாயே | திருமணத்தைப் பற்றி
யோசிப்பாள் போலும், தோழியே! எமது தாய்! |
| # 254 | # 254 |
| குன்ற குறவன்
ஆரம் அறுத்து என | குன்றத்தின் குறவன்
சந்தனமரத்தை அறுத்ததினால் |
| நறும் புகை
சூழ்ந்து காந்தள் நாறும் | அதன் நறுமணம்
நாடெல்லாம் சூழ்ந்து காந்தள் மலர்களின் மணத்தோடு சேர்ந்து மணக்கும் – |
| வண்டு இமிர்
சுடர் நுதல் குறு_மகள் | வண்டுகள் ஒலிக்கும்
ஒளியுடைய நெற்றியையுடையவளே! |
| கொண்டனர்
செல்வர் தம் குன்று கெழு நாட்டே | கூட்டிக்கொண்டு
செல்வார் – தம் குன்றுகளைப் பொருந்திய
நாட்டுக்கு. |
| | |
| # 255 | # 255 |
| குன்ற குறவன்
காதல் மட_மகள் | குன்றத்துக் குறவனின்
அன்புக்குரிய இளமையான மகள், |
| வரை அர_மகளிர்
புரையும் சாயலள் | மலையிலிருக்கும் தெய்வ
மகளிரைப் போன்ற சாயலையுடையவள், |
| ஐயள் அரும்பிய
முலையள் | மென்மையானவள்,
அரும்பிவரும் முலைகளைக் கொண்டவள், |
| செய்ய வாயினள்
மார்பினள் சுணங்கே | சிவந்த வாயினை
உடையவள், மார்பினில் அழகுத்தேமலைக் கொண்டவள். |
| # 256 | # 256 |
| குன்ற குறவன்
காதல் மட_மகள் | குன்றத்துக் குறவனின்
அன்புக்குரிய இளமையான மகள், |
| வண்டு படு
கூந்தல் தண் தழை கொடிச்சி | வண்டுகள் மொய்க்கும்
கூந்தலையுடையவள், குளிர்ச்சியான தழையுடையை அணிந்திருக்கும் குறிஞ்சிப்பெண், |
| வளையள் முளை
வாள் எயிற்றள் | வளைகளை
அணிந்திருப்பவள், முளையைப்போன்ற கூர்மையான பற்களைக் கொண்டவள், |
| இளையள் ஆயினும்
ஆர் அணங்கினளே | இளையவள் என்றாலும்
கண்டாரைப் பெரிதும் வருத்துபவள். |
| | |
| # 257 | # 257 |
| குன்ற குறவன்
கடவுள் பேணி | குன்றத்துக் குறவன்,
கடவுளை வழிபட்டு |
| இரந்தனன் பெற்ற
எல் வளை குறு_மகள் | இரந்து வேண்டிப் பெற்ற
ஒளிவிடும் வளையல்களைக் கொண்ட சிறுமகள், |
| ஆய் அரி நெடும்
கண் கலிழ | அழகிய செவ்வரிகளையுடைய
நீண்ட கண்கள் கலங்கி நீர்விட, |
| சேயதால் தெய்ய
நீ பிரியும் நாடே | மிகவும் தொலைவிலுள்ளதே
நீ பிரிந்து செல்லும் நாடு. |
| # 258 | # 258 |
| குன்ற குறவன்
காதல் மட_மகள் | குன்றத்துக் குறவனின்
அன்புக்குரிய இளமையான மகள், |
| அணி மயில் அன்ன
அசை நடை கொடிச்சியை | அழகான மயில் போன்ற
அசைவாடும் நடையையுடைய குறிஞ்சிப் பெண்ணை, |
| பெரு வரை நாடன்
வரையும் ஆயின் | பெரிய மலையைச்
சேர்ந்தவன் மணம்பேச வருவானாயின் |
| கொடுத்தனெம்
ஆயினோம் நன்றே | அவனுக்குக்
கொடுத்துவிடுதலே நன்றாகும், |
| இன்னும் ஆனாது
நன்_நுதல் துயரே | இன்னும் குறையவில்லை
நல்ல நெற்றியையுடையவளின் பிரிவுத் துயரம். |
| | |
| # 259 | # 259 |
| குன்ற குறவன்
காதல் மட_மகள் | குன்றத்துக் குறவனின்
அன்புக்குரிய இளமையான மகள் |
| மன்ற வேங்கை
மலர் சில கொண்டு | ஊர்ப்பொதுவில் உள்ள
வேங்கை மரத்தின் மலர்களில் சிலவற்றைக் கொண்டு |
| மலை உறை கடவுள்
குலமுதல் வழுத்தி | மலையில் வாழும்
கடவுளான தங்களின் குலதெய்வத்தை வாழ்த்தி, |
| தேம் பலி செய்த
ஈர் நறும் கையள் | இனிய பலியுணவைப்
படைத்த ஈரமுள்ள நறிய கையினையுடையவள், |
| மலர்ந்த
காந்தள் நாறி | மலர்ந்த காந்தளைப் போல
மணம்வீசி, |
| கலிழ்ந்த
கண்ணள் எம் அணங்கியோளே | கலங்கி அழும்
கண்களையுடையவள் என்னைப் பெரிதும் வருத்தியவள். |
| # 260 | # 260 |
| குன்ற குறவன்
காதல் மட_மகள் | குன்றத்துக் குறவனின்
அன்புக்குரிய இளமையான மகளான |
| மென் தோள்
கொடிச்சியை பெறற்கு அரிது தில்ல | மென்மையான தோள்களைக்
கொண்ட அந்தக் குறிஞ்சிப்பெண்ணை இனிப் பெறுவது மிகவும் அரியது, |
| பைம் புற படு
கிளி ஒப்பலர் | பச்சையான
முதுகினையுடைய, தினைக்கதிரில் வீழும் கிளிகளை இனி விரட்டமாட்டார்; |
| புன்_புல
மயக்கத்து விளைந்தன தினையே | புன்செய்ப் பகுதியாகப்
பதப்படுத்திய நிலத்தில் விளைந்துநிற்கின்றன தினைப்பயிர்கள். |
| | |
| # 27 கேழ பத்து | # 27 கேழ பத்து |
| # 261 | # 261 |
| மென் தினை
மேய்ந்த தறுகண் பன்றி | மென்மையான தினைப்
பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி |
| வன் கல்
அடுக்கத்து துஞ்சும் நாடன் | வன்மையான பாறைகள்
கொண்ட மலைச்சரிவின் இடுக்கில் உறங்கும் நாட்டினன் |
| எந்தை அறிதல்
அஞ்சி-கொல் | எம் தந்தை
தெரிந்துகொள்வானோ என்று அஞ்சியோ என்னமோ, |
| அதுவே மன்ற
வாராமையே | அதுவாகத்தான்
இருக்கவேண்டும், வராமல் நின்றுபோனதற்குக் காரணம். |
| # 262 | # 262 |
| சிறுதினை
மேய்ந்த தறுகண் பன்றி | சிறுதினைப் பயிரை
மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி |
| துறுகல்
அடுக்கத்து துணையொடு வதியும் | குத்துக்கல்லையுடைய
மலைச்சரிவின் இடுக்கில் தன் துணையோடு படுத்திருக்கும் |
| இலங்கு மலை
நாடன் வரூஉம் | ஒளிரும் மலை நாட்டினன்
மணம்பேச வருவதுதான் |
| மருந்தும்
அறியும்-கொல் தோழி அவன் விருப்பே | என் நோய்க்கு
மருந்தாகும் என்பதனை அறியுமோ தோழி! அவனது காதல்? |
| | |
| # 263 | # 263 |
| நன் பொன் அன்ன
புனிறு தீர் ஏனல் | நல்ல பொன்னைப் போன்று
நிறமுள்ள இளமை தீர்ந்து முற்றிய தினைக் கதிரைப் |
| கட்டளை அன்ன
கேழல் மாந்தும் | பொன் உரைக்கும்
கல்லைப் போன்று கருமைநிறங்கொண்ட காட்டுப்பன்றி வயிறு நிரம்ப உண்ணும் |
| குன்று கெழு
நாடன் தானும் | குன்றுகளைச் சேர்ந்த
நாட்டுக்குரியவனும் |
| வந்தனன்
வந்தன்று தோழி என் நலனே | வந்துவிட்டான்,
வந்துவிட்டது தோழி! எனைவிட்டுப் பிரிந்துசென்ற என் அழகு. |
| # 264 | # 264 |
| இளம் பிறை அன்ன
கோட்ட கேழல் | இளம்பிறையைப் போன்ற
கொம்பினையுடைய காட்டுப்பன்றி |
| களங்கனி அன்ன
பெண்_பால் புணரும் | களங்கனியைப் போன்ற தன்
பெண்பன்றியினைப் புணர்ந்திருக்கும் |
| அயம் திகழ்
சிலம்ப கண்டிகும் | சுனைகள் திகழும்
மலைச்சரிவினைச் சேர்ந்தவனே! காண்பாயாக! |
| பயந்தன மாதோ நீ
நயந்தோள் கண்ணே | பசந்துபோயிருக்கின்றன
நீ விரும்பியவளின் கண்கள். |
| | |
| # 265 | # 265 |
| புலி கொல்
பெண்_பால் பூ வரி குருளை | புலியால் கொல்லப்பட்ட
பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை, |
| வளை வெண்
மருப்பின் கேழல் புரக்கும் | வளைந்த வெண்மையான
கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும் |
| குன்று கெழு
நாடன் மறந்தனன் | குன்றினைச் சேர்ந்த
நாட்டினன் மறந்துவிட்டான், |
| பொன் போல்
புதல்வனோடு என் நீத்தோனே | பொன்னைப் போல்
போற்றற்குரிய தன் புதல்வனோடு என்னையும் நீங்கிச் சென்றுவிட்டான். |
| # 266 | # 266 |
| சிறு கண் பன்றி
பெரும் சின ஒருத்தலொடு | சிறிய கண்களைக் கொண்ட
பன்றியின் மிகுந்த சினத்தையுடைய ஆணானது |
| குறு கை இரும்
புலி பொரூஉம் நாட | குட்டையான
முன்னங்கால்களையுடைய பெரிய புலியுடன் போரிடும் நாட்டுக்குரியவனே! |
| நனி நாண்
உடைமையம் மன்ற | மிகுந்த நாணவுணர்ச்சி
உடையவர்கள் நாங்கள் உறுதியாக, |
| பனி பயந்தன நீ
நயந்தோள் கண்ணே | அதனால் வெளியிற் சொல்ல
முடியாமல் கண்ணீரை விடுகின்றன நீ விரும்பியவளின் கண்கள். |
| | |
| # 267 | # 267 |
| சிறு கண் பன்றி
பெரும் சின ஒருத்தல் | சிறிய கண்களைக் கொண்ட
பன்றியின் மிகுந்த சினத்தையுடைய ஆணானது |
| துறுகல்
அடுக்கத்து வில்லோர் மாற்றி | குத்துக்கல்லையுடைய
மலைச்சரிவின் இடுக்கில் வில்லுடன் காவல்காப்போரை ஏமாற்றி, |
| ஐவனம் கவரும்
குன்ற நாடன் | ஐவன நெல்லைக் கவர்ந்து
உண்ணும் குன்றங்களுள்ள நாட்டினன் |
| வண்டு படு
கூந்தலை பேணி | வண்டுகள் மொய்க்கும்
கூந்தலை அன்புடன் தடவிக்கொடுத்துப் |
| பண்பு இல
சொல்லும் தேறுதல் செத்தே | பண்பற்ற பல சொற்களைச்
சொல்வான், நீ அதை நம்புவாய் என்று எண்ணி – |
| # 268 | # 268 |
| தாஅய் இழந்த
தழு வரி குருளையொடு | தாயை இழந்த,
நெருக்கமான வரிகளைத் தன் மேனியில் கொண்ட குட்டியுடன் |
| வள மலை
சிறுதினை உணீஇய கானவர் | வளமையான மலையில்
சிறுதினையை உண்டுவிட்டு, குறவர்களின் |
| வரை ஓங்கு உயர்
சிமை கேழல் உறங்கும் | மலையில் ஓங்கியெழும்
உயர்ந்த உச்சியில் காட்டுப்பன்றி உறங்கும் |
| நன் மலை நாடன்
பிரிதல் | நல்ல மலநாடன் பிரிந்து
செல்வது |
| என் பயக்கும்மோ
நம் விட்டு துறந்தே | என்ன பயனைத் தருமோ?
நம்மைத் தனியே விட்டுவிட்டுத் துறந்து – |
| | |
| # 269 | # 269 |
| கேழல் உழுது என
கிளர்ந்த எருவை | கிழங்குகளை எடுக்கக்
காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல் |
| விளைந்த
செறுவில் தோன்றும் நாடன் | நன்றாக விளைந்த
நெல்வயலைப் போலத் தோன்றும் நாட்டினையுடையவன், |
| வாராது அவண்
உறை நீடின் நேர் வளை | திரும்பி வராமல்
அங்கேயே தங்கியிருப்பதை நீட்டித்தால், செம்மையான வளைகளை அணிந்த |
| இணை_ஈர்_ஓதி நீ
அழ | இரு பிரிவுகளையுடைய
வழவழப்பான கூந்தலையுடையவளே! நீ அழும்படி |
| துணை நனி
இழக்குவென் மடமையானே | உனக்குத் துணையாக
இருப்பதை மிகவும் நான் இழப்பேன், உங்களைச் சேர்த்துவைத்த என் மடத்தனத்தால்- |
| # 270 | # 270 |
| கிழங்கு அகழ்
கேழல் உழுத சிலம்பில் | கிழங்குகளை எடுக்கக்
காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிடும் மலைச் சரிவில் |
| தலை விளை
கானவர் கொய்தனர் பெயரும் | முதல் விளைச்சலைக்
குறவர்கள் கொய்துகொண்டு செல்லும் |
| புல்லென்
குன்றத்து புலம்பு கொள் நெடு வரை | புன்மையான குன்றிலுள்ள
தனிமையுற்றுக் கிடக்கும் நெடிய மலைப்பகுதியைக் |
| காணினும்
கலிழும் நோய் செத்து | கண்டாலும் கண்கலங்கி
நீர் உகுக்கும் நோயினையுடையவளாவாய் என்று எண்ணி |
| தாம் வந்தனர்
நம் காதலோரே | தாமே வந்துவிட்டார்
நம் காதலர். |
| | |
| # 28 குரக்கு
பத்து | # 28 குரக்கு பத்து |
| # 271 | # 271 |
| அவரை அருந்த
மந்தி பகர்வர் | அவரையை நிறையத் தின்ற
குரங்கு, பொருள்களின் விலைகூறி விற்பவரின் |
| பக்கின்
தோன்றும் நாடன் வேண்டின் | பையைப் போன்று
தோன்றும் நாட்டினையுடையவன் பெண்கேட்டு வந்தால் |
| பல் பசு
பெண்டிரும் பெறுகுவன் | பல பசுக்களையும்,
பெண்டிரையும் பெறக்கூடிய தகுதியையுடையவன், |
| தொல் கேள்
ஆகலின் நல்குமால் இவட்கே | நீண்ட காலமாக
உறவுவைத்திருந்தவன் என்ற முறையில் நீர் கேட்பதைத் தருவான் இவளுக்காக. |
| # 272 | # 272 |
| கரு விரல்
மந்தி கல்லா வன் பறழ் | கரிய விரலையுடைய
குரங்கின், இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டி, |
| அரு வரை தீம்
தேன் எடுப்பி அயலது | ஏறுதற்கரிய மலையில்
இனிய தேனை எடுத்து (தேனீக்கள் கொட்டியதால்), அருகிலிருக்கும் |
| உரு கெழு
நெடும் சினை பாயும் நாடன் | அச்சம் பொருந்திய
நீண்ட மரக்கிளைக்குத் தாவும் நாட்டினையுடையவன் |
| இரவின் வருதல்
அறியான் | இரவு நேரத்தில் வருவதை
அறியமாட்டான், |
| வரும்_வரும்
என்ப தோழி யாயே | ஆனால் பேச்சுவாக்கில்
“வரும் வரும்” என்கிறாள் தோழி! நம் தாய். |
| | |
| # 273 | # 273 |
| அத்த செயலை
துப்பு உறழ் ஒண் தளிர் | நெடுவழியில் உள்ள
அசோகின் பவளம் போன்ற ஒளிவிடும் தளிரைப் |
| புன் தலை மந்தி
வன் பறழ் ஆரும் | புல்லிய தலையைக் கொண்ட
குரங்கின் வலிய குட்டி நிறையத் தின்னும் |
| நன் மலை நாட நீ
செலின் | நல்ல மலையைச்
சேர்ந்தவனே! நீ பிரிந்து சென்றால் |
| நின் நயத்து
உறைவி என்னினும் கலிழ்மே | உன்னையே விரும்பி
இருக்கும் இவள் என்னைக்காட்டிலும் கலங்கிக் கண்ணீர்விடுவாள். |
| # 274 | # 274 |
| மந்தி கணவன்
கல்லா கடுவன் | மந்தியின் கணவனான,
ஒன்றையும் கற்றுக்கொள்ளாத ஆண்குரங்கு |
| ஒண் கேழ் வய
புலி குழுமலின் விரைந்து உடன் | ஒளிரும் நிறத்தையுடைய
வலிமையான புலி உறுமுவதால் வேகமாகத் தன் பெண்குரங்கையும் கூட்டிக்கொண்டு |
| குன்று உயர்
அடுக்கம் கொள்ளும் நாடன் | குன்றில் உள்ள உயரமான
சரிவின் இடுக்கத்தைச் சென்றடையும் நாட்டையுடையவன் |
| சென்றனன் வாழி
தோழி என் | பிரிந்து சென்றான்,
வாழ்க தோழியே! என் |
| மென் தோள்
கவினும் பாயலும் கொண்டே | மென்மையான தோள்களின்
அழகையும், கண்களின் உறக்கத்தையும் தன்னுடன் எடுத்துக்கொண்டு – |
| | |
| # 275 | # 275 |
| குரங்கின்
தலைவன் குரு மயிர் கடுவன் | குரங்குகளின் தலைவனான,
நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு |
| சூரல் அம் சிறு
கோல் கொண்டு வியல் அறை | பிரம்பின் அழகிய சிறிய
கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும் |
| மாரி மொக்குள்
புடைக்கும் நாட | மழைநீர்க் குமிழிகளை
அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே! |
| யாம் நின்
நயந்தனம் எனினும் எம் | நான் உன்னை
விரும்புகிறேன், எனினும், எனது |
| ஆய் நலம்
வாடுமோ அருளுதி எனினே | அழகிய பெண்மை நலம்
வாடிப்போகுமோ, நீயும் என்மீது அன்புசெலுத்தினால்? |
| # 276 | # 276 |
| மந்தி காதலன்
முறி மேய் கடுவன் | பெண்குரங்கின்
காதலனான, இளந்தளிர்களை மேயும் ஆண்குரங்கு |
| தண் கமழ் நறை
கொடி கொண்டு வியல் அறை | குளிர்ச்சியுள்ள
மணங்கமழும் நறைக்கொடியினைக் கொண்டு அகன்ற பாறையில் படிந்திருக்கும் |
| பொங்கல் இள மழை
புடைக்கும் நாட | பொங்கிவரும் நுரை
போன்ற வெண்மையான மேகத்தினை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே! |
| நயவாய் ஆயினும்
வரைந்தனை சென்மோ | நீ
விரும்பவில்லையெனினும், இவளை மணந்துகொண்டு கூட்டிச் செல், |
| கல் முகை
வேங்கை மலரும் | பாறைகளின்
வெடிப்புகளில் வளர்ந்திருக்கும் வேங்கை மரம் பூவிடும் |
| நன் மலை நாடன்
பெண்டு என படுத்தே | நல்ல மலைக்கு
உரியவனின் மனைவி என்று சொல்லப்படும் வகையில். |
| | |
| # 277 | # 277 |
| குறவர்
முன்றில் மா தீண்டு துறுகல் | குறவரின் வீட்டு
முற்றத்தில் இருக்கும் விலங்குகள் தம் முதுகைத் தேய்த்துக்கொள்ளும்
குத்துக்கல்லில் |
| கல்லா மந்தி
கடுவனோடு உகளும் | எதனையும்
கற்றுக்கொள்ளாத பெண்குரங்கு தன் ஆண்குரங்கோடு குதித்து விளையாடும் |
| குன்ற நாட நின்
மொழிவல் என்றும் | குன்றத்தைச் சேர்ந்த
நாட்டவனே! உனக்கு ஒன்று கூறுவேன். எப்பொழுதும் |
| பயப்ப நீத்தல்
என் இவள் | பசந்துபோகும்படி
பிரிந்துசெல்லுதல் என்னத்துக்காகவோ? இவளின் |
| கயத்து வளர்
குவளையின் அமர்த்த கண்ணே | குளத்தில் வளரும்
குவளை மலர் போன்ற ஒன்றோடொன்று எதிர்நிற்கும் கண்கள் – |
| # 278 | # 278 |
| சிலம்பின்
வெதிரத்து கண்விடு கழை கோல் | மலைச் சரிவிலிருக்கும்
மூங்கிலின், கணுக்கள் விட்டுக் கழையாக வளர்ந்திருக்கும் கோலின் மேல் |
| குரங்கின் வன்
பறழ் பாய்ந்தன இலஞ்சி | குரங்கின் வலிய
குட்டித் தாவியதாக, குளத்தில் |
| மீன் எறி
தூண்டிலின் நிவக்கும் நாடன் | மீனுக்காக எறியப்படும்
தூண்டிலைப் போல, அந்த மூங்கிற்கழை வளைந்து நிமிரும் நாட்டினைச் சேர்ந்தவன் |
| உற்றோர் மறவா
நோய் தந்து | அனுபவிப்போர்
மறக்கமாட்டாத நோயினைத் தந்து, |
| கண்டோர் தண்டா
நலம் கொண்டனனே | காணுவோர் கண்டது
போதுமென்று கண்களை விலக்கிக்கொள்ளாத அழகினைக் கவர்ந்துகொண்டான். |
| | |
| # 279 | # 279 |
| கல் இவர் இற்றி
புல்லுவன ஏறி | வேரினால் பாறையைப்
பற்றிக்கொண்டு உயரும் இத்தி மரத்தில் கையில் கிடைப்பதைப் பிடித்துக்கொண்டு ஏறி |
| குளவி மேய்ந்த
மந்தி துணையோடு | காட்டு மல்லிகையை
மேய்ந்த பெண்குரங்கு தன் துணைவனோடு |
| வரை மிசை
உகளும் நாட நீ வரின் | மலை மேல் குதித்து
விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே! நீ எம் ஊருக்கு வந்தால், |
| கல் அகத்தது
எம் ஊரே | பாறைகளுக்கு நடுவே
உள்ளது எம்முடைய ஊர்; |
| அம்பல் சேரி
அலர் ஆங்கட்டே | சும்மாவே
கிசுகிசுக்கும் சேரியில் பலரறியப் பழிசுமத்தும் இடமும் அங்கு உண்டு. |
| # 280 | # 280 |
| கரு விரல்
மந்தி கல்லா வன் பார்ப்பு | கரிய விரலையுடைய
குரங்கின், இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டி, |
| இரு வெதிர்
ஈர்ம் கழை ஏறி சிறு கோல் | பெரிய மூங்கிலின்
பச்சையான கழையில் ஏறி நீலாவுக்கு நேரே ஆடுவது, சிறிய கோலால் |
| மதி புடைப்பது
போல தோன்றும் நாட | நிலவினை அடிப்பது
போலத் தோன்றும் நாட்டைச் சேர்ந்தவனே! |
| வரைந்தனை நீ என
கேட்டு யான் | இவளை மணந்துகொண்டாய்
நீ எனக் கேட்டு, நான் |
| உரைத்தனென்
அல்லனோ அஃது என் யாய்க்கே | முன்பேயே
சொல்லிவிட்டேன் அல்லவா! அதனை எனது தாய்க்கு. |
| | |
| # 29 கிள்ளை
பத்து | # 29 கிள்ளை பத்து |
| # 281 | # 281 |
| வெள்ள வரம்பின்
ஊழி போகியும் | பல கோடிக்கணக்கான
ஊழிக்காலம் சென்றாலும் |
| கிள்ளை வாழிய
பலவே ஒள் இழை | கிளியே நீ வாழ்க
பல்லாண்டு! ஒளிரும் அணிகலன்களை அணிந்த, |
| இரும் பல்
கூந்தல் கொடிச்சி | கரிய பலவான
கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண் |
| பெரும் தோள்
காவல் காட்டிய அவ்வே | தன் பெரிய தோள்களால்
காக்கும் காவலுக்குக் காரணமானாய்! |
| # 282 | # 282 |
| சாரல் புறத்த
பெரும் குரல் சிறுதினை | மலைச் சாரலை அடுத்த
பெரிய கதிர்களைக் கொண்ட சிறுதினையைக் காத்துப் |
| பேர் அமர் மழை
கண் கொடிச்சி கடியவும் | பெரிய செழுமையான
குளிர்ந்த கண்களையுடைய குறிஞ்சிப்பெண் விரட்டிவிடவும், |
| சோலை சிறு கிளி
உன்னு நாட | சோலையிலுள்ள சிறிய
கிளி விடாமல் கதிரைக் கொத்தித்தின்னும் நாடனே! |
| ஆர் இருள்
பெருகின வாரல் | மிகவும் அதிகமான இருள்
பெருகிவருவதால், வரவேண்டாம், |
| கோட்டு_மா
வழங்கும் காட்டக நெறியே | கொம்புகளையுடைய
யானைகள் நடமாடும் காட்டுக்குள்ளான வழியில் – |
| | |
| # 283 | # 283 |
| வன்கண் கானவன்
மென் சொல் மட_மகள் | கொடும் சொற்களைக்
கொண்ட குறவனின் மென்மையான சொற்களைக் கொண்ட இளைய மகள், |
| புன்_புல
மயக்கத்து உழுத ஏனல் | புன்செய்ப் பகுதியாகப்
பதப்படுத்திய நிலத்தில் உழுத தினைப் புனத்தில் |
| பைம் புற சிறு
கிளி கடியும் நாட | பச்சையான
முதுகினையுடைய சிறிய கிளிகளை விரட்டும் நாட்டினனே! |
| பெரிய கூறி
நீப்பினும் | பெற்றோர் வாய்மையுடைய
உறுதிமொழிகள் பலவற்றைக் கூறி விலக்கினாலும், |
| பொய் வலை
படூஉம் பெண்டு தவ பலவே | காதலரின் பொய்மொழிகளான
வலையில் விழும் பெண்கள் மிகவும் அதிகமானோர். |
| # 284 | # 284 |
| அளிய தாமே செ
வாய் பைம் கிளி | இரங்கத்தக்கனவாம்,
சிவந்த வாயினையுடைய பசிய கிளிகள்! |
| குன்ற குறவர்
கொய் தினை பைம் கால் | குன்றத்தின் குறவர்கள்
கொய்துவிட்ட தினைப் பயிரின் பசிய தண்டுகளையுடைய |
| இருவி நீள்
புனம் கண்டும் | கதிரறுத்த வெறும்
தட்டைகள் நீண்டிருக்கும் புனத்தைக் கண்டபின்னரும் |
| பிரிதல் தேற்றா
பேர் அன்பினவே | அப் புனத்தைவிட்டுப்
பிரிந்துசெல்லத் துணியாத பெரிய அன்பினை உடையவை. |
| | |
| # 285 | # 285 |
| பின் இரும்
கூந்தல் நன் நுதல் குற_மகள் | பின்னப்பெற்ற கரிய
கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய குறமகள் |
| மென் தினை
நுவணை உண்டு தட்டையின் | மென்மையான் தினையின்
மாவினை உண்டபடியே தட்டை என்னும் கருவியை ஓங்கி முழக்கி, |
| ஐவன சிறு கிளி
கடியும் நாட | ஐவன நெல் கதிரை
உண்ணும் சிறிய கிளிகளை விரட்டிவிடும் நாட்டினனே! |
| வீங்கு வளை
நெகிழ பிரிதல் | செறிவுற்ற வளைகள்
நெகிழ்ந்துபோகும்படியாகப் பிரிந்து செல்லுதல் |
| யாங்கு
வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே | எப்படி உன்னால்
முடிகிறது, இங்கு இவளைத் துறந்து – |
| # 286 | # 286 |
| சிறுதினை கொய்த
இருவை வெண் கால் | சிறுதினையைக் கொய்து
விட்டுப்போன கதிரறுத்த தாளின் வெள்ளிய அடிப்பகுதியில் |
| காய்த்த அவரை
படு கிளி கடியும் | காய்த்த அவரையில்
வந்து படியும் கிளிகளை ஓட்டும் |
| யாணர் ஆகிய நன்
மலை நாடன் | தொடர்ந்த
புதுவரவினையுடைய நல்ல மலை நாட்டினன் |
| புகர் இன்று
நயந்தனன் போலும் | ஏதோ குற்றம் செய்ய
இன்று விரும்பினான் போலும்! |
| கவரும் தோழி
என் மாமை கவினே | மாறுபட்டுத்
தோன்றுகிறது தோழி! என் மாநிற மேனியழகு! |
| | |
| # 287 | # 287 |
| நெடு வரை
மிசையது குறும் கால் வருடை | நீண்ட மலையின்
உச்சியில் உள்ளது குட்டையான கால்களையுடைய வரையாட்டைப் பார்த்து, |
| தினை பாய்
கிள்ளை வெரூஉம் நாட | தினைக் கதிரில் வந்து
வீழும் கிளிகள் வெருளும் நாட்டினனே! |
| வல்லை மன்ற
பொய்த்தல் | வல்லவனாய்
இருக்கிறாய், உறுதியாக நீ, பொய் பேசுவதில், |
| வல்லாய் மன்ற
நீ அல்லது செயலே | வல்லவன் அல்லவனாயும்
இருக்கிறாய், உறுதியாக, நீ நல்லது அல்லாததைச் செய்வதில். |
| # 288 | # 288 |
| நன்றே செய்த
உதவி நன்று தெரிந்து | நன்றாகச் செய்த
உதவியை, நன்றாக உணர்ந்து |
| யாம் எவன்
செய்குவம் நெஞ்சே காமர் | நாம் என்ன கைம்மாறு
செய்யலாம் நெஞ்சே! அழகிய |
| மெல் இயல்
கொடிச்சி காப்ப | மென்மையான இயல்பினைக்
கொண்ட இந்தக் குறிஞ்சிப்பெண் காவல்காக்க, |
| பல் குரல் ஏனல்
பாத்தரும் கிளியே | பல கதிர்களைக் கொண்ட
தினைப்புனத்தின் மேல் பரவித்திரியும் இக் கிளிகள் – |
| | |
| # 289 | # 289 |
| கொடிச்சி இன்
குரல் கிளி செத்து அடுக்கத்து | இந்தக் குறிஞ்சி
பெண்ணின் இனிய குரலைக் கிளியின் குரலாக எண்ணி, மலைச் சரிவிலிருக்கும் |
| பைம் குரல்
ஏனல் படர்தரும் கிளி என | பசிய கதிர்களையுடைய
தினைப்புனத்தில் வந்து படர்கின்றன கிளிகள் என்று |
| காவலும்
கடியுநர் போல்வர் | காவலையும்
நிறுத்திவிடுவார்கள் போலிருக்கிறது, |
| மால் வரை நாட
வரைந்தனை கொண்மோ | பெரிய மலைகளின்
நாட்டவனே! சீக்கிரம் மணந்துகொண்டு செல்வாயாக. |
| # 290 | # 290 |
| அறம் புரி
செங்கோல் மன்னனின் தாம் நனி | அறத்தைப் புரியும்
செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும் |
| சிறந்தன போலும்
கிள்ளை பிறங்கிய | சிறந்தன போலும் இந்தக்
கிளிகள், சுடர்விடும் |
| பூ கமழ்
கூந்தல் கொடிச்சி | பூக்கள் மணக்கும்
கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால் |
| நோக்கவும்
படும் அவள் ஒப்பவும் படுமே | கனிவுடன் பார்க்கவும்
படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே! |
| | |
| # 30 மஞ்ஞை
பத்து | # 30 மஞ்ஞை பத்து |
| # 291 | # 291 |
| மயில்கள் ஆல
குடிஞை இரட்டும் | மயில்கள் களிப்புடன்
ஆட, பேராந்தைகள் இரட்டை இரட்டையாய்க் குரல் எழுப்பும் |
| துறுகல்
அடுக்கத்ததுவே பணை தோள் | குத்துக்கல்லை உடைய
மலைச்சரிவின் இடுக்கத்தில் உள்ளதுவே, பருத்த தோள்களையும், |
| ஆய் தழை
நுடங்கும் அல்குல் | அழகிய தழையுடை
அசைவாடும் அல்குலையும் கொண்ட |
| காதலி உறையும்
நனி நல் ஊரே | என் காதலி வாழும்
மிகவும் நல்ல ஊர். |
| # 292 | # 292 |
| மயில்கள் ஆல
பெரும் தேன் இமிர | மயில்கள் களித்தாட,
கூட்டமான வண்டினங்கள் ஒலிக்க, |
| தண் மழை தழீஇய
மா மலை நாட | குளிர்ந்த மேகங்கள்
சூழ்ந்த பெரிய மலை நாட்டினனே! |
| நின்னினும்
சிறந்தனள் எமக்கே நீ நயந்து | உமக்கு இவள் சிறந்தவள்
என்பதைக் காட்டிலும் எனக்கு அவள் சிறந்தவள், நீ மிகவும் விரும்பி |
| நன் மனை அரும்
கடி அயர | நம் நல்ல வீட்டில்
சிறப்பான மணவிழா நடைபெற |
| எம் நலம்
சிறப்ப யாம் இனி பெற்றோளே | என்னுடைய நலமும்
சிறக்க, நான் இப்போது பெற்ற இளையவள். |
| | |
| # 293 | # 293 |
| சிலம்பு கமழ்
காந்தள் நறும் குலை அன்ன | மலைச் சரிவில்
கமழ்கின்ற காந்தளின் நறிய பூங்கொத்தினைப் போன்ற |
| நலம் பெறு
கையின் என் கண்புதைத்தோயே | அழகினைக் கொண்ட கையால்
என் கண்களைப் பொத்துகின்றவளே! |
| பாயல் இன் துணை
ஆகிய பணை தோள் | என் படுக்கைக்கு இனிய
துணையாகிய பருத்த தோள்களையும், |
| தோகை மாட்சிய
மடந்தை | மயில் போன்ற
மாட்சிமையையும் கொண்ட பெண் |
| நீ அலது உளரோ
என் நெஞ்சு அமர்ந்தோரே | உன்னை அன்றி வேறு
உள்ளார்களோ என் நெஞ்சில் அமர்ந்தவர்கள்? |
| # 294 | # 294 |
| எரி மருள்
வேங்கை இருந்த தோகை | தீச்சுடர் போன்ற
வேங்கை மலர்களிடையே இருந்த மயிலானது |
| இழை அணி
மடந்தையின் தோன்றும் நாட | அணிகலன்கள் அணிந்த
பெண்ணைப் போலத் தோன்றும் நாட்டினனே! |
| இனிது
செய்தனையால் நுந்தை வாழியர் | இனியது செய்தாய்! உன்
தந்தை வாழ்வாராக! |
| நன் மனை வதுவை
அயர இவள் | நல்ல வீட்டில் மணவிழா
நடைபெற, இவளின் |
| பின் இரும்
கூந்தல் மலர் அணிந்தோயே | பின்னலிட்ட கரிய
கூந்தலில் பூச் சூடிவிட்டாய்! |
| | |
| # 295 | # 295 |
| வருவது-கொல்லோ
தானே வாராது | திரும்பி வருமோ
அதுவாக? வராமல் |
| அவண் உறை
மேவலின் அமைவது-கொல்லோ | அங்கேயே தங்குவதை
விரும்பியதால் நிலையாக இருந்துவிடுமோ? |
| புனவர்
கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை | தினைப்புனத்தார்
கொளுத்திய நெருப்புக்கு அஞ்சிப் புகலிடம் தேடியோடும் மயில், |
| இருவி இருந்த
குருவி வருந்து_உற | கதிர் அறுத்த மொட்டைத்
தாளின் மீது இருந்த குருவி வருந்தும்படியாக, |
| பந்து ஆடு
மகளிரின் படர்தரும் | பந்தாடும் மகளிரைப்
போன்று குதித்துக் குதித்துச் செல்லும் |
| குன்று கெழு
நாடனொடு சென்ற என் நெஞ்சே | குன்றுகளைச் சேர்ந்த
நாட்டினனோடு சென்ற என் நெஞ்சம் – |
| # 296 | # 296 |
| கொடிச்சி
காக்கும் பெரும் குரல் ஏனல் | குறிஞ்சிப் பெண்
காக்கும் பெரிய கதிர்களைக் கொண்ட தினையை |
| அடுக்கல் மஞ்ஞை
கவரும் நாட | மலைகளில் வாழும் மயில்
கவர்ந்துசெல்லும் நாட்டினனே! |
| நடுநாள்
கங்குலும் வருதி | நடுயாமத்தில்
நள்ளிருளில் வருகின்றாய், |
| கடு மா
தாக்கின் அறியேன் யானே | கொடிய விலங்குகள்
தாக்கினால் என்ன நேருமோ? அறியேன் நான். |
| | |
| # 297 | # 297 |
| விரிந்த வேங்கை
பெரும் சினை தோகை | மலர்ந்த வேங்கை
மரத்தின் பெரிய கிளையில் இருக்கும் ஆண்மயில் |
| பூ கொய்
மகளிரின் தோன்றும் நாட | பூ கொய்யும் மகளிரைப்
போல் தோன்றும் நாட்டினனே! |
| பிரியினும்
பிரிவது அன்றே | நீ பிரிந்து
சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை, |
| நின்னொடு மேய
மடந்தை நட்பே | உன்னோடு
விரும்பிக்கொண்ட அந்த மடந்தையின் நட்பு. |
| # 298 | # 298 |
| மழை வரவு அறியா
மஞ்ஞை ஆலும் | மலர்ந்த வேங்கை
மரத்தின் பெரிய கிளையில் இருக்கும் ஆண்மயில் |
| அடுக்கல் நல்
ஊர் அசை நடை கொடிச்சி | பூ கொய்யும் மகளிரைப்
போல் தோன்றும் நாட்டினனே! |
| தான் எம்
அருளாள் ஆயினும் | நீ பிரிந்து
சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை, |
| யாம் தன்
உள்ளுபு மறந்தறியேமே | உன்னோடு
விரும்பிக்கொண்ட அந்த மடந்தையின் நட்பு. |
| | |
| # 299 | # 299 |
| குன்ற நாடன்
குன்றத்து கவாஅன் | குன்றுகளையுடைய
நாட்டினனின் குன்றிலுள்ள மலையுச்சிச் சரிவில் உள்ள |
| பைம் சுனை
பூத்த பகு வாய் குவளையும் | புதிய நீரைக் கொண்ட
சுனையில் பூத்த திறந்த வாயையுடைய குவளையும், |
| அம் சில் ஓதி
அசை நடை கொடிச்சி | அழகிய சிலவான
கூந்தலையுடைய அசைகின்ற நடையையுடைய குறிஞ்சிப்பெண்ணின் |
| கண் போல்
மலர்தலும் அரிது இவள் | கண்ணைப் போல் மலர்வது
அரியது, இவளின் |
| தன் போல் சாயல்
மஞ்ஞைக்கும் அரிதே | மேனியைப் போன்ற
சாயலைக் கொள்வது மயிலுக்கும் அரியது. |
| # 300 | # 300 |
| கொடிச்சி
கூந்தல் போல தோகை | இந்தக் குறிஞ்சிப்
பெண்ணின் கூந்தலைப் போல, ஆண்மயில் |
| அம் சிறை
விரிக்கும் பெரும் கல் வெற்பன் | தன் அழகிய சிறகுகளை
விரிக்கும் பெரிய பாறைகளைக் கொண்ட மலைநாட்டினன் |
| வந்தனன்
எதிர்ந்தனர் கொடையே | வந்தானாக, அவனுக்கு
எதிர்கொண்டு சென்றனர் மகள்கொடைக்காக, |
| அம் தீம் கிளவி
பொலிக நின் சிறப்பே | அழகிய இனிய பேச்சினை
உடையவளே! பொலிவுற்று விளங்குக உன்னுடை பெண்மைச் சிறப்பு. |
| | |