Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 389
கை-கண் 1
கை_காய்த்திய 1
கை_மான் 1
கை_எறிந்து 1
கைஇ 1
கைக்கிளை 1
கைக்கு 1
கைக்கொண்டன்றும் 1
கைக்கொண்டு 2
கைக்கொள்பு 1
கைசேர்த்த 1
கைதூவலை 1
கைதூவா 2
கைதூவாளே 1
கைதூவானே 1
கைதூவு 1
கைதை 9
கைதையும் 1
கைதொழாஅ 1
கைதொழு 2
கைதொழுது 11
கைதொழும் 1
கைதொழூஉ 5
கைந்நிறுக்க 1
கைந்நிறுத்த 1
கைந்நீவி 2
கைநிமிர்ந்து 1
கைநீவி 2
கைப்ப 2
கைப்பட்டோரே 1
கைப்படுக்கப்பட்டாய் 2
கைப்படுத்தேம் 1
கைப்படுத்தேன் 1
கைப்பற்றி 1
கைப்பற்றும் 1
கைப்பொருள் 3
கைபரிந்து 1
கைபிணி 1
கைபுணர்ந்து 1
கைபெயரா 1
கைம் 8
கைம்_மகவோடும் 1
கைம்_மா 2
கைம்_மாவை 1
கைம்_மான் 2
கைம்மாறு 1
கைம்மாறுவார் 1
கைம்மிக்கு 3
கைம்மிக 22
கைம்மிகின் 1
கைம்முற்றல 1
கைம்மை 3
கைமாறி 1
கைமிக 1
கைய 4
கையகத்தது 1
கையகத்ததுவே 1
கையகத்து 2
கையகப்பட்டமை 1
கையகப்படுவது 1
கையது 11
கையதை 8
கையர் 12
கையவன் 1
கையழிந்து 1
கையள் 6
கையற்ற 5
கையற்றனை 2
கையற்று 7
கையற 13
கையறவு 4
கையறு 17
கையறுபு 4
கையன் 2
கையாய் 1
கையால் 5
கையாள 1
கையாற்றுள் 1
கையாறு 5
கையான் 3
கையிகந்து 1
கையிடூஉ 1
கையில் 2
கையின் 24
கையினர் 1
கையினும் 1
கையினை 1
கையும் 6
கையுளும் 1
கையுறை 4
கையே 2
கையை 2
கையொடு 3
கைவண் 13
கைவண்மையும் 1
கைவண்மையே 3
கைவண்மையையே 1
கைவல் 15
கைவலம் 1
கைவலித்தல் 1
கைவழி 1
கைவள் 4
கைவளம் 1
கைவிட்டனரே 1
கைவிட்டு 9
கைவிட்டோர்க்கு 1
கைவிட 1
கைவிடு 1
கைவிடுகலனே 1
கைவிடுதல் 1
கைவிளக்கு 1
கைவினை 4

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கை (389)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை/மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 5,6
கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை/நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 108,109
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை/அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 109,110
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை/ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 110,111
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை/மார்பொடு விளங்க ஒரு கை – திரு 111,112
மார்பொடு விளங்க ஒரு கை/தாரொடு பொலிய ஒரு கை – திரு 112,113
தாரொடு பொலிய ஒரு கை/கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 113,114
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை/பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 114,115
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை/நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 115,116
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை/வான்_அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 116,117
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
வைகல்_வைகல் கை கவி பருகி – பொரு 158
வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை/வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 171,172
கை புனை செப்பம் கடைந்த மார்பின் – சிறு 53
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை/நாடா நல் இசை நல் தேர் செம்பியன் – சிறு 81,82
கழல் தொடி தட கை காரியும் நிழல் திகழ் – சிறு 95
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை/துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு – சிறு 105,106
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை/பல் இய கோடியர் புரவலன் பேர் இசை – சிறு 124,125
வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 136
செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் – சிறு 167
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப – சிறு 192
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் – பெரும் 71
உடம்பிடி தட கை ஓடா வம்பலர் – பெரும் 76
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை/உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 170,171
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று – பெரும் 177
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர் – பெரும் 223
கணம்_கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் – பெரும் 234
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட – பெரும் 304
கை புனை குறும் தொடி தத்த பைபய – பெரும் 334
நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும் – பெரும் 436
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த – பெரும் 437
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை/கொண்டி உண்டி தொண்டையோர் மருக – பெரும் 453,454
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை/வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை – பெரும் 471,472
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை/நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 2,3
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என – முல் 34
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 49
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய – முல் 70
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை – முல் 75
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை/முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து – முல் 75,76
தொடி தோள் கை துடுப்பு ஆக – மது 34
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 218
வன் கை வினைஞர் அரி_பறை இன் குரல் – மது 262
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர் – மது 319
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை_எறிந்து – மது 419
வான வண் கை வளம் கெழு செல்வர் – மது 442
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை/மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் – மது 593,594
வலி கெழு தட கை தொடியொடு சுடர்வர – மது 720
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 36
கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 147
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி – குறி 163
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு – பட் 224
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண் – மலை 63
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – மலை 107
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி – மலை 112
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ – மலை 204
புள் கை போகிய புன் தலை மகாரோடு – மலை 253
கை கோள் மறந்த கரு விரல் மந்தி – மலை 311
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 362
கை பிணி விடாஅது பைபய கழி-மின் – மலை 383
தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை/ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே – மலை 399,400
பிடி கை அன்ன செம் கண் வராஅல் – மலை 457
இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய – மலை 576
விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/3
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் – நற் 22/7
என் கை கொண்டு தன் கண் ஒற்றியும் – நற் 28/1
தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும் – நற் 28/2
நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் – நற் 29/8
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 36/1
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை – நற் 50/4
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி – நற் 57/4
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் – நற் 57/6
கணையர் கிணையர் கை புனை கவணர் – நற் 108/4
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி – நற் 110/2
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – நற் 114/12
பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை/ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி – நற் 141/8,9
வன் கை இடையன் எல்லி பரீஇ – நற் 169/7
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை/அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை – நற் 194/4,5
மை அணல் எருத்தின் முன்பின் தட கை/வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் – நற் 198/9,10
கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/8
மட பிடி தழீஇய தட கை வேழம் – நற் 202/4
கண் உறு விழுமம் கை போல் உதவி – நற் 216/3
கை புனை சிறு நெறி வாங்கி பையென – நற் 222/3
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற் 228/6
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1
கை கவர் முயக்கம் மெய் உற திருகி – நற் 240/3
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் – நற் 267/4
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி – நற் 285/3
வன் கை பரதவர் இட்ட செம் கோல் – நற் 303/9
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் – நற் 304/8
பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப – நற் 317/2
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் – நற் 318/6
கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை – நற் 350/7
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/9
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் – நற் 355/2
கை இடை வைத்தது மெய் இடை திமிரும் – நற் 360/8
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/11
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை/கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த – குறு 31/4,5
பிடி பசி களைஇய பெரும் கை வேழம் – குறு 37/2
கான யானை கை விடு பசும் கழை – குறு 54/3
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் – குறு 58/4
ஓவாது ஈயும் மாரி வண் கை/கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி – குறு 91/5,6
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன – குறு 111/4
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே – குறு 117/6
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை – குறு 141/5
காமம் நெரிதர கை நில்லாதே – குறு 149/6
மட பிடி தட கை அன்ன பால் வார்பு – குறு 198/3
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்து – குறு 198/6
கடனும் பூணாம் கை நூல் யாவாம் – குறு 218/2
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் – குறு 237/3
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை – குறு 282/4
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/2
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து – குறு 307/7
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே – குறு 308/7
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி – குறு 319/3
மட பிடி தழீஇ தட கை யானை – குறு 332/4
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம் – குறு 342/1
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல் – குறு 360/5
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 360/6
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1
யானை கை மடித்து உயவும் – குறு 388/6
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – ஐங் 60/4
கை புனை நறும் தார் கமழும் மார்பன் – ஐங் 182/2
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – ஐங் 216/1
குறு கை இரும் புலி பொரூஉம் நாட – ஐங் 266/2
பொறி வரி தட கை வேதல் அஞ்சி – ஐங் 327/1
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/2
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/3
நோன் புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12
ஈத்து கை தண்டா கை கடும் துப்பின் – பதி 15/36
ஈத்து கை தண்டா கை கடும் துப்பின் – பதி 15/36
காணுநர் கை புடைத்து இரங்க – பதி 19/26
கலிழும் கருவியொடு கை உற வணங்கி – பதி 24/26
கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ – பதி 26/8
வளை கை மகளிர் வள்ளை கொய்யும் – பதி 29/2
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/36
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து – பதி 31/3
பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் – பதி 36/5
வென்றி ஆடிய தொடி தோள் மீ கை/எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 40/12,13
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள் – பதி 43/4
வண் கை வேந்தே நின் கலி மகிழானே – பதி 43/36
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப – பதி 48/8
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார் – பதி 49/6
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் – பதி 49/10
தாங்குநர் தட கை யானை தொடி கோடு துமிக்கும் – பதி 51/29
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/34
நல் அமர் கடந்த நின் செல் உறழ் தட கை/இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய – பதி 52/10,11
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி – பதி 53/19
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை/ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/10,11
புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர் – பதி 58/15
அரியல் ஆர்கை வன் கை வினைஞர் – பதி 62/16
பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி – பதி 76/6
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9
கொன்று அமர் கடந்த வெம் திறல் தட கை/வென் வேல் பொறையன் என்றலின் வெருவர – பதி 86/2,3
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/23
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை/வார்ந்து புனைந்து அன்ன ஏந்து குவவு மொய்ம்பின் – பதி 90/33,34
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை/நகை அச்சாக நல் அமிர்து கலந்த – பரி 3/32,33
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை/இரு கை மாஅல் – பரி 3/34,35
இரு கை மாஅல் – பரி 3/35
மு கை முனிவ நால் கை அண்ணல் – பரி 3/36
மு கை முனிவ நால் கை அண்ணல் – பரி 3/36
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் – பரி 3/37
எழு கையாள எண் கை ஏந்தல் – பரி 3/38
ஒன்பதிற்று தட கை மன் பேராள – பரி 3/39
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/40
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/40
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ – பரி 3/42
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே – பரி 4/71
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றி – பரி 6/66
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46
கை புதைஇயவளை – பரி 7/54
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
இடு துனி கை ஆறா என் துயர் கூர – பரி 8/78
கனவின் தொட்டது கை பிழை ஆகாது – பரி 8/103
எம் கை பதுமம் கொங்கை கய முகை – பரி 8/115
கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின் – பரி 9/35
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று – பரி 10/46
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர – பரி 10/126
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என – பரி 11/42
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க – பரி 11/107
கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்ல – பரி 11/116
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/59
கை ஊழ் தடுமாற்றம் நன்று – பரி 17/46
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ – பரி 18/17
போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் – பரி 18/34
புரி நெகிழ்ப்பார் போன்றன கை/அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே – பரி 18/37,38
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் – பரி 19/41
கை போல் பூத்த கமழ் குலை காந்தள் – பரி 19/76
கொடி இயலார் கை போல் குவிந்த முகை – பரி 20/98
கை புனை தாரினர் கண்ணியர் – பரி 24/11
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே – கலி 7/6
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/5
கவவு கை விட பெறும் பொருள் திறத்து – கலி 14/18
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை – கலி 18/9
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை/ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – கலி 18/9,10
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/4
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது – கலி 33/7
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே – கலி 34/24
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல் – கலி 40/11
கடு விசை கவணையில் கல் கை விடுதலின் – கலி 41/10
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 42/29
தகையவர் கை செறித்த தாள் போல காந்தள் – கலி 43/8
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/2
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே – கலி 65/21
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை/வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ – கலி 68/8,9
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு – கலி 77/23
கவழம் அறியா நின் கை புனை வேழம் – கலி 80/6
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி – கலி 84/3
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட – கலி 84/20
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/36
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் – கலி 84/39
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/20
கை புனை முக்காழ் கயம் தலை தாழ – கலி 86/2
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் – கலி 86/7
ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை/முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த – கலி 92/42,43
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட – கலி 92/45
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை/ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா – கலி 92/50,51
பிரியா கவி கை புலையன் தன் யாழின் – கலி 95/10
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று – கலி 95/25
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/22
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் – கலி 101/18
செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை – கலி 103/30
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி – கலி 106/23
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் – கலி 106/32
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/15
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி – கலி 110/18
நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு – கலி 115/11
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
கை உளே மாய்ந்தான் கரந்து – கலி 142/36
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி – கலி 142/38
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை – அகம் 8/2
கை கவியா சென்று கண் புதையா குறுகி – அகம் 9/21
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ – அகம் 9/23
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் – அகம் 11/10
வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/6
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/16
படியோர் தேய்த்த பல் புகழ் தட கை/நெடுவேள் பேண தணிகுவள் இவள் என – அகம் 22/5,6
செல் சமம் கடந்த வில் கெழு தட கை/பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன் – அகம் 25/19,20
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை – அகம் 26/17
செவிலி கை என் புதல்வனை நோக்கி – அகம் 26/18
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய – அகம் 37/14
வறும் கை காட்டிய வாய் அல் கனவின் – அகம் 39/23
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4
கொடு மடி உடையர் கோல் கை கோவலர் – அகம் 54/10
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும் – அகம் 57/8
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/4
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/5
பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி – அகம் 73/15
வானவன் மறவன் வணங்கு வில் தட கை/ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/15,16
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர் – அகம் 79/1
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய – அகம் 88/5
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – அகம் 88/9
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை/கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை – அகம் 93/19,20
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
கை ஆடு வட்டின் தோன்றும் – அகம் 108/17
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை/தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் – அகம் 111/8,9
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/8
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/19
கொய் சுவல் புரவி கை கவர் வயங்கு பரி – அகம் 124/10
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப – அகம் 129/11
தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும் – அகம் 138/12
கை பூண் பகட்டின் வருந்தி – அகம் 140/14
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் – அகம் 142/3
பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை/கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் – அகம் 148/1,2
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 149/4
கை விடு சுடரின் தோன்றும் – அகம் 153/18
வில் கெழு தட கை வெல் போர் வானவன் – அகம் 159/15
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு – அகம் 164/1
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை – அகம் 167/11
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே – அகம் 171/15
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன் – அகம் 172/6
இரும் பிடி தட கை மான நெய் அருந்து – அகம் 177/4
சிறு கண் யானை நெடும் கை நீட்டி – அகம் 179/4
கை செய் பாவை துறை-கண் இறுக்கும் – அகம் 181/19
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை – அகம் 187/20
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் – அகம் 202/4
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் – அகம் 207/10
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை/வலம் படு வென்றி வாய் வாள் சோழர் – அகம் 213/20,21
கை விரல் கவ்வும் கல்லா காட்சி – அகம் 215/8
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி – அகம் 238/14
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து – அகம் 272/1
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/7
வரை இடை கழுதின் வன் கை கானவன் – அகம் 292/10
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி – அகம் 295/4
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து – அகம் 305/7
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும் – அகம் 307/10
ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை/வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த – அகம் 312/11,12
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் – அகம் 329/12
வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து – அகம் 333/11
பெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்து – அகம் 334/5
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர – அகம் 337/13
பல் செரு கடந்த செல் உறழ் தட கை/கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ – அகம் 342/9,10
கை மாண் தோணி கடுப்ப பையென – அகம் 344/5
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/11
கை தலை வைத்த மையல் விதுப்பொடு – அகம் 347/14
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை/கல் ஊர் பாம்பின் தோன்றும் – அகம் 349/12,13
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே – அகம் 356/7
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும் – அகம் 357/8
நரை மூதாளர் கை பிணி விடுத்து – அகம் 366/10
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு – அகம் 373/8
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின் – அகம் 379/15
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை/தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர – அகம் 386/12,13
இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர் – அகம் 389/11
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை/குன்று புகு பாம்பின் தோன்றும் – அகம் 391/12,13
தாழ் பெரும் தட கை தலைஇய கானத்து – அகம் 392/1
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி – புறம் 3/13
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே – புறம் 6/20
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை/புலவு நாற்றத்த பைம் தடி – புறம் 14/11,12
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து – புறம் 19/10
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய – புறம் 21/7
கரும் கை கொல்லன் அரம் செய் அம் வாய் – புறம் 36/6
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து – புறம் 36/7
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே – புறம் 54/14
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி – புறம் 59/2
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் – புறம் 61/8
எஃகு விளங்கு தட கை இயல் தேர் சென்னி – புறம் 61/13
குருதி செம் கை கூந்தல் தீட்டி – புறம் 62/3
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 63/12
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த – புறம் 68/15
குறும் தொடி கழித்த கை சாபம் பற்றி – புறம் 77/4
கவி கை மள்ளன் கைப்பட்டோரே – புறம் 81/5
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை/வழு இல் வன் கை மழவர் பெரும – புறம் 90/10,11
வழு இல் வன் கை மழவர் பெரும – புறம் 90/11
களம் பட கடந்த கழல் தொடி தட கை/ஆர்கலி நறவின் அதியர் கோமான் – புறம் 91/2,3
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு – புறம் 96/2
கை_மான் கொள்ளுமோ என – புறம் 96/8
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் – புறம் 102/6
வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/4
வளை கை விறலியர் படப்பை கொய்த – புறம் 140/3
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ – புறம் 150/8
இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப – புறம் 170/5
இரும்பு பயன் படுக்கும் கரும் கை கொல்லன் – புறம் 170/15
கரும் கை கொல்லனை இரக்கும் – புறம் 180/12
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி – புறம் 188/3
கை உள்ளது போல் காட்டி வழி நாள் – புறம் 211/11
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – புறம் 243/3
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் – புறம் 246/6
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 253/5
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் – புறம் 254/4
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி – புறம் 258/5
கை உள போலும் கடிது அண்மையவே – புறம் 260/11
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/12
வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ – புறம் 279/8
கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக – புறம் 284/6
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய – புறம் 302/6
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் – புறம் 337/2
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை/பாரி பறம்பின் பனி சுனை போல – புறம் 337/5,6
இரும் பனை அன்ன பெரும் கை யானை – புறம் 340/7
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/8
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 352/5
கை பெய்த நீர் கடல் பரப்ப – புறம் 362/12
கை கொண்டு பிறக்கு நோக்காது – புறம் 363/13
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய – புறம் 367/4
கரும் கை யானை கொண்மூ ஆக – புறம் 369/2
தொடி உடை தட கை ஓச்சி வெருவார் – புறம் 370/23
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை/புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும – புறம் 371/19,20
தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை/கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் – புறம் 378/3,4
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை/திருந்து தொழில் பல பகடு – புறம் 387/10,11
பொரு களிற்று அடி வழி அன்ன என் கை/ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ – புறம் 392/4,5
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/10
வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன் – புறம் 394/3
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20
TOP


கை-கண் (1)

தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண்/தந்தார் யார் எல்லாஅ இது – கலி 84/31,32
TOP


கை_காய்த்திய (1)

காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9
TOP


கை_மான் (1)

கை_மான் கொள்ளுமோ என – புறம் 96/8
TOP


கை_எறிந்து (1)

கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை_எறிந்து/கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப – மது 419,420
TOP


கைஇ (1)

கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை_எறிந்து – மது 419
TOP


கைக்கிளை (1)

கன்னிமை கனியா கைக்கிளை காம – பரி 11/136
TOP


கைக்கு (1)

போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய – பரி 5/56
TOP


கைக்கொண்டன்றும் (1)

காடு கைக்கொண்டன்றும் இலனே காலை – புறம் 257/7
TOP


கைக்கொண்டு (2)

நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு/பொருது சினம் தணிந்த செரு புகல் ஆண்மை – பதி 55/18,19
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் – புறம் 33/8
TOP


கைக்கொள்பு (1)

அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு/குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர் – மலை 287,288
TOP


கைசேர்த்த (1)

சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கைசேர்த்த/நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/3,4
TOP


கைதூவலை (1)

அளியொடு கைதூவலை/அதனால் – கலி 50/17,18
TOP


கைதூவா (2)

உடையோர் பான்மையின் பெரும் கைதூவா/வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த – நற் 90/2,3
பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் – கலி 81/11
TOP


கைதூவாளே (1)

ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே/உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த – புறம் 334/7,8
TOP


கைதூவானே (1)

உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/11
TOP


கைதூவு (1)

கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10
TOP


கைதை (9)

கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை – குறி 83
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை/வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் – நற் 163/8,9
கைதை அம் கானல் துறைவன் மாவே – நற் 163/12
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் – நற் 178/5
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் – நற் 349/3
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு – குறு 304/7
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே – அகம் 100/18
கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் – அகம் 170/9
கைதை அம் படு சினை கடும் தேர் விலங்க – அகம் 210/12
TOP


கைதையும் (1)

புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும் – கலி 127/2
TOP


கைதொழாஅ (1)

பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ/காணலென்-கொல் என வினவினை வரூஉம் – புறம் 260/6,7
TOP


கைதொழு (2)

கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய – அகம் 115/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற – அகம் 125/14
TOP


கைதொழுது (11)

அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது/பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல் 10,11
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது/பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 609,610
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது/மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 43,44
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது/ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி – குறி 209,210
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் – நற் 102/4
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு – நற் 300/2
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது/பல் ஊழ் மறுகி வினவுவோயே – ஐங் 390/1,2
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது/உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ – அகம் 138/9,10
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி – அகம் 240/8
பாடுநர் போல கைதொழுது ஏத்தி – புறம் 226/3
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது – புறம் 306/4
TOP


கைதொழும் (1)

கைதொழும் மரபின் எழு மீன் போல – நற் 231/2
TOP


கைதொழூஉ (5)

கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 252
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி – பெரும் 463
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி – மது 694
செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச – மலை 201
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழி-மின் – மலை 360
TOP


கைந்நிறுக்க (1)

கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது – அகம் 198/2
TOP


கைந்நிறுத்த (1)

காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அகம் 113/5
TOP


கைந்நீவி (2)

கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி/நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து – பரி 10/49,50
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி/யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – கலி 81/33,34
TOP


கைநிமிர்ந்து (1)

தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/2
TOP


கைநீவி (2)

தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி/வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் – பதி 53/17,18
கன்றி அதனை கடியவும் கைநீவி/குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/31,32
TOP


கைப்ப (2)

கல்லா இளைஞர் கவளம் கைப்ப/கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 36,37
கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர் – மது 659
TOP


கைப்பட்டோரே (1)

கவி கை மள்ளன் கைப்பட்டோரே – புறம் 81/5
TOP


கைப்படுக்கப்பட்டாய் (2)

கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான் – கலி 65/16
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை – கலி 93/15
TOP


கைப்படுத்தேம் (1)

மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம்/மெய் வளம் பூத்த விழை_தகு பொன் அணி – பரி 18/18,19
TOP


கைப்படுத்தேன் (1)

காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் – கலி 98/7
TOP


கைப்பற்றி (1)

செல்வு-உறு திண் தேர் கொடும் சினை கைப்பற்றி/பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி – கலி 85/18,19
TOP


கைப்பற்றும் (1)

மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்/மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம் – கலி 62/2,3
TOP


கைப்பொருள் (3)

கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை – பெரும் 40
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு – அகம் 109/11
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி – புறம் 313/2
TOP


கைபரிந்து (1)

கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும் – பதி 83/1
TOP


கைபிணி (1)

கடிய கூறி கைபிணி விடாஅ – அகம் 32/12
TOP


கைபுணர்ந்து (1)

கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப – நற் 163/4
TOP


கைபெயரா (1)

ஐது அமை பாணி இரீஇ கைபெயரா/செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் – அகம் 98/17,18
TOP


கைம் (8)

ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் – பரி 3/37
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள – பரி 3/41
கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர் – பரி 6/33
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை – பரி 11/52
கைம்_மகவோடும் காதலவரொடும் – பரி 15/47
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என – புறம் 320/3
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன – புறம் 368/3
TOP


கைம்_மகவோடும் (1)

கைம்_மகவோடும் காதலவரொடும் – பரி 15/47
TOP


கைம்_மா (2)

இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன – புறம் 368/3
TOP


கைம்_மாவை (1)

புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை/வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/52,53
TOP


கைம்_மான் (2)

கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர் – பரி 6/33
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என – புறம் 320/3
TOP


கைம்மாறு (1)

அம்ம வாழி தோழி கைம்மாறு/யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/1,2
TOP


கைம்மாறுவார் (1)

கயம் படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார்/வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/50,51
TOP


கைம்மிக்கு (3)

கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு/உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/9,10
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்கு/அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின் – அகம் 47/8,9
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு/இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் – அகம் 128/7,8
TOP


கைம்மிக (22)

செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 153
நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக/கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/6,7
காமம் கைம்மிக கையறு துயரம் – நற் 185/2
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும் – நற் 236/1
காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு – நற் 313/5
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின் – நற் 336/2
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு – குறு 63/2
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக/வட புல வாடைக்கு அழி மழை – குறு 317/5,6
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின் – கலி 46/23
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக/இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/7,8
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
ஆயர்_மகனையும் காதலை கைம்மிக/ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ – கலி 107/24,25
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/22
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/16
அம்ம வாழி தோழி கைம்மிக/கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் – அகம் 141/1,2
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக/காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின் – அகம் 143/1,2
காமம் கைம்மிக உறுதர – அகம் 258/14
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து – அகம் 266/8
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக/என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் – அகம் 297/3,4
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக/சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை – அகம் 302/12,13
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும் – அகம் 325/4
TOP


கைம்மிகின் (1)

காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ – நற் 39/3
TOP


கைம்முற்றல (1)

கைம்முற்றல நின் புகழே என்றும் – புறம் 53/8
TOP


கைம்மை (3)

கைம்மை உய்யா காமர் மந்தி – குறு 69/2
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர – புறம் 25/12
கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய – புறம் 261/17
TOP


கைமாறி (1)

வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி/கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான் – கலி 65/15,16
TOP


கைமிக (1)

நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக/பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா – கலி 85/26,27
TOP


கைய (4)

நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய/கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர – முல் 14,15
வேங்கை அம் படு சினை பொருந்தி கைய/தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி – நற் 379/4,5
அள் இலை பலவின் கனி கவர் கைய/கல்லா மந்தி கடுவனோடு உகளும் – அகம் 378/20,21
நில மிசை புரளும் கைய வெய்து_உயிர்த்து – புறம் 44/4
TOP


கையகத்தது (1)

கையகத்தது அது பொய் ஆகாதே – புறம் 101/8
TOP


கையகத்ததுவே (1)

கொடிச்சி கையகத்ததுவே பிறர் – நற் 95/9
TOP


கையகத்து (2)

நிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்த – அகம் 386/6
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன் – புறம் 260/18
TOP


கையகப்பட்டமை (1)

கையகப்பட்டமை அறியாய் நெருநை – அகம் 256/9
TOP


கையகப்படுவது (1)

கையகப்படுவது பொய் ஆகாதே – புறம் 58/23
TOP


கையது (11)

கையது கேளா அளவை ஒய்யென – பொரு 152
பாணன் கையது பண்பு உடை சீறியாழ் – நற் 30/2
பாணர் கையது பணி தொடை நரம்பின் – பதி 57/7
கையது எவன் மற்று உரை – கலி 117/5
கையது கணிச்சியொடு மழுவே மூவாய் – அகம் 0/5
உண்ணா மருங்குல் இன்னோன் கையது/பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே – அகம் 337/9,10
கையது கடன் நிறை யாழே மெய்யது – புறம் 69/1
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது/போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ – புறம் 82/3,4
கையது வேலே காலன புனை கழல் – புறம் 100/1
துடியன் கையது வேலே அடி புணர் – புறம் 285/2
பாணன் கையது தோலே காண்வர – புறம் 285/4
TOP


கையதை (8)

வந்தனர் வாழி தோழி கையதை/செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன் – நற் 212/7,8
களிறு பெறு வல்சி பாணன் கையதை/வள் உயிர் தண்ணுமை போல – நற் 310/9,10
யாரையோ என பெயர்வோள் கையதை/கதுமென உருத்த நோக்கமோடு அது நீ – பதி 52/24,25
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து – பரி 21/8
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய – கலி 85/6
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6
ஏனல் அம் சிறுதினை சேணோன் கையதை/பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி – அகம் 73/14,15
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை/கூர் வாள் குவி முகம் சிதைய நூறி – அகம் 144/14,15
TOP


கையர் (12)

தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி – முல் 56
சிலை உடை கையர் கவலை காப்ப – மது 312
இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 552
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/3
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய – குறு 221/2
அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி – பதி 62/11
அம்பு உடை கையர் அரண் பல நூறி – அகம் 69/16
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/13
புலாஅல் கையர் பூசா வாயர் – அகம் 265/18
படை உடை கையர் வரு_திறம் நோக்கி – அகம் 337/8
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் – புறம் 173/8
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் – புறம் 296/2
TOP


கையவன் (1)

தேர் ஈயும் வண் கையவன்/வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் – கலி 42/21,22
TOP


கையழிந்து (1)

கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் – புறம் 240/12
TOP


கையள் (6)

நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய – முல் 14
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்/அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நற் 106/8,9
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என – நற் 306/3
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் – குறு 56/3
வளை உடை கையள் எம் அணங்கியோளே – குறு 119/4
தேம் பலி செய்த ஈர் நறும் கையள்/மலர்ந்த காந்தள் நாறி – ஐங் 259/4,5
TOP


கையற்ற (5)

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை – மலை 315
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் – நற் 272/8
காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான் – கலி 123/6
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து – அகம் 185/3
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே – புறம் 210/15
TOP


கையற்றனை (2)

எவன் கையற்றனை இகுளை சோழர் – அகம் 201/12
எவன் கையற்றனை இகுளை அவரே – அகம் 359/5
TOP


கையற்று (7)

இரவும் பகலும் மயங்கி கையற்று/மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 47,48
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று/ஆனா சிறுமையள் இவளும் தேம்பும் – குறி 25,26
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/17
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து – அகம் 174/8
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று/பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர – அகம் 373/5,6
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று/நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி – புறம் 113/5,6
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று/பெறாது பெயரும் புள் இனம் போல நின் – புறம் 209/9,10
TOP


கையற (13)

கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து – நற் 58/8
மாண் நலம் கையற கலுழும் என் – நற் 66/10
கையற வந்த மையல் மாலை – நற் 181/9
கையற துறப்போர் கழறுவ போல – நற் 243/7
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/3
காமம் காதலர் கையற விடினே – குறு 152/5
கையற நரலும் நள்ளென் யாமத்து – குறு 160/4
கையற வந்த பையுள் மாலை – குறு 391/6
காதலர் பிரிந்தோர் கையற நலியும் – ஐங் 223/3
கையற வீழ்ந்த மை இல் வானமொடு – ஐங் 235/1
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/2
கார் செய் காலையொடு கையற பிரிந்தோர் – ஐங் 451/1
உடையை ஆகி இல்லோர் கையற/நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் – புறம் 55/18,19
TOP


கையறவு (4)

கங்குலும் கையறவு தந்தன்று – நற் 152/8
காம கணிச்சியால் கையறவு வட்டித்து – பரி 10/33
கடவது அன்மையின் கையறவு உடைத்து என – புறம் 38/15
பிறர் கையறவு தான் நாணுதலும் – புறம் 157/2
TOP


கையறு (17)

கடவுள் வழங்கும் கையறு கங்குலும் – மது 651
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் – நற் 71/9
காமம் கைம்மிக கையறு துயரம் – நற் 185/2
காலையும் பகலும் கையறு மாலையும் – குறு 32/1
கதிர் சினம் தணிந்த கையறு மாலை – குறு 387/2
கடும் பகல் வருதி கையறு மாலை – ஐங் 183/4
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக – ஐங் 477/3
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே – கலி 67/9
கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும் – கலி 130/10
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/20
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/17
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு – அகம் 71/7
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய் – அகம் 98/8
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க – அகம் 113/22
திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை – அகம் 199/7
கையறு நெஞ்சினள் அடைதரும் – அகம் 279/16
காதலர் பிரிந்த கையறு மகளிர் – அகம் 294/4
TOP


கையறுபு (4)

தேறா நெஞ்சம் கையறுபு வாட – நற் 345/8
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு அம் – ஐங் 152/3
காமர் நெஞ்சம் கையறுபு இனைய – அகம் 40/8
மையல் மாலை யாம் கையறுபு இனைய – புறம் 67/5
TOP


கையன் (2)

சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 183
சுவல் மிசை கோல் அசைத்த கையன் அயலது – கலி 101/40
TOP


கையாய் (1)

மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
TOP


கையால் (5)

இ வையை யாறு என்ற மாறு என்னை கையால்/தலை தொட்டேன் தண் பரங்குன்று – பரி 6/94,95
அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கி – பரி 8/88
கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ – கலி 39/43
கணை பொருது கவி வண் கையால்/கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து – புறம் 7/3,4
நரந்தம் நாறும் தன் கையால்/புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/8,9
TOP


கையாள (1)

எழு கையாள எண் கை ஏந்தல் – பரி 3/38
TOP


கையாற்றுள் (1)

கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/16
TOP


கையாறு (5)

காலை வருந்தும் கையாறு ஓம்பு என – குறு 48/2
தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் – கலி 24/8
கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன் – கலி 31/7
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல் – கலி 82/34
கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால் – கலி 147/48
TOP


கையான் (3)

நேமியும் வளையும் ஏந்திய கையான்/கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண் – பரி 13/9,10
தூங்கு கையான் ஓங்கு நடைய – புறம் 22/1
கரவு இல்லா கவி வண் கையான்/வாழ்க என பெயர் பெற்றோர் – புறம் 377/8,9
TOP


கையிகந்து (1)

பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து/அலர் ஆகின்றால் தானே மலர் தார் – அகம் 116/11,12
TOP


கையிடூஉ (1)

துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் – புறம் 158/24
TOP


கையில் (2)

தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில்/உகுவன போலும் வளை என் கண் போல் – கலி 33/18,19
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில்/சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல – கலி 143/33,34
TOP


கையின் (24)

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 40
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின்/சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என – சிறு 19,20
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின்/வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து – குறி 123,124
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின்/வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 577,578
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம் – நற் 344/3
முறம் செவி யானை தட கையின் தடைஇ – நற் 376/1
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்/ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – குறு 61/2,3
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை – குறு 255/3
நலம் பெறு கையின் என் கண்புதைத்தோயே – ஐங் 293/2
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/41
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் – கலி 25/9
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை – கலி 38/4
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் – கலி 54/13
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின்/முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே – கலி 78/25,26
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா – கலி 81/8
கொடிற்று புண் செய்யாது மெய் முழுதும் கையின்/துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும் – கலி 95/19,20
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார் – கலி 97/19
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ – அகம் 78/5
கையின் சுட்டி பையென எண்ணி – புறம் 257/9
கையின் வாங்கி தழீஇ – புறம் 274/6
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர – புறம் 360/14
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக – புறம் 388/8
TOP


கையினர் (1)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185
TOP


கையினும் (1)

கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி – பட் 70
TOP


கையினை (1)

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் – சிறு 231
TOP


கையும் (6)

ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118
கையும் காலும் தூக்க தூக்கும் – குறு 8/4
கையும் காலும் ஓய்வன ஒடுங்க – குறு 383/4
அடியும் கையும் கண்ணும் வாயும் – பரி 13/52
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என – கலி 83/18
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே – புறம் 214/5
TOP


கையுளும் (1)

இரப்போர் கையுளும் போகி – புறம் 235/11
TOP


கையுறை (4)

கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய – குறு 398/4
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து – கலி 82/12
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு – கலி 84/16
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக – அகம் 156/13
TOP


கையே (2)

அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே – புறம் 14/19
TOP


கையை (2)

கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/6
உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு – கலி 50/7
TOP


கையொடு (3)

கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/28
கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம் – கலி 115/3
பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய – புறம் 161/16
TOP


கைவண் (13)

கச்சியோனே கைவண் தோன்றல் – பெரும் 420
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த – நற் 390/3
கைவண் விராஅன் இருப்பை அன்ன – ஐங் 58/2
கைவண் மத்தி கழாஅர் அன்ன – ஐங் 61/3
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என – பரி 16/1
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 47/15
கடும் பரி புரவி கைவண் பாரி – அகம் 78/22
பாடுநர் தொடுத்த கைவண் கோமான் – அகம் 100/11
கால் இயல் நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 175/10
கொய் சுவல் புரவி கைவண் கோமான் – அகம் 270/8
கடல் அம் தானை கைவண் சோழர் – அகம் 369/13
கைவண் தோன்றல் ஐயம் உடையேன் – புறம் 43/12
கைவண் பாரி_மகளிர் என்ற என் – புறம் 202/15
TOP


கைவண்மையும் (1)

வளனும் ஆண்மையும் கைவண்மையும்/மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/15,16
TOP


கைவண்மையே (3)

கடவன் பாரி கைவண்மையே – புறம் 106/5
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே – புறம் 134/4
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/15
TOP


கைவண்மையையே (1)

அக்குரன் அனைய கைவண்மையையே/அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் – பதி 14/7,8
TOP


கைவல் (15)

கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 37
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த – நெடு 57
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து – நெடு 85
கைவல் வினைவன் தையுபு சொரிந்த – நற் 86/5
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ – நற் 94/4
கைவல் சீறியாழ் பாண நுமரே – ஐங் 472/1
கைவல் பாண எம் மறவாதீமே – ஐங் 473/5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச – பதி 41/6
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப – பதி 48/8
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/34
கடன் அறி மரபின் கைவல் பாண – பதி 67/3
கைவல் பாகன் பையென இயக்க – அகம் 230/12
கைவல் யானை கடும் தேர் சோழர் – அகம் 385/3
மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர் – புறம் 206/11
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க – புறம் 398/5
TOP


கைவலம் (1)

மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/18
TOP


கைவலித்தல் (1)

கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே – அகம் 76/13
TOP


கைவழி (1)

கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி – புறம் 149/3
TOP


கைவள் (4)

கைவள் ஓரி கானம் தீண்டி – குறு 199/3
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13
கைவள் ஈகை கடு மான் பேக – புறம் 143/6
கைவள் ஈகை கடு மான் கொற்ற – புறம் 168/17
TOP


கைவளம் (1)

கைவளம் இயைவது ஆயினும் – நற் 52/10
TOP


கைவிட்டனரே (1)

கைவிட்டனரே காதலர் அதனால் – புறம் 358/5
TOP


கைவிட்டு (9)

பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு – நற் 15/8
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8
புணை கைவிட்டு புனலோடு ஒழுகின் – குறு 222/3
முனை கைவிட்டு முன்னிலை செல்லாது – பதி 81/33
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு/எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது – கலி 5/17,18
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ – கலி 20/18
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் – கலி 78/5
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த – கலி 114/18
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும் – கலி 144/3
TOP


கைவிட்டோர்க்கு (1)

புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ – புறம் 357/7
TOP


கைவிட (1)

கலி கெழு கடவுள் கந்தம் கைவிட/பலி கண்மாறிய பாழ்படு பொதியில் – புறம் 52/12,13
TOP


கைவிடு (1)

கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும் – பரி 20/105
TOP


கைவிடுகலனே (1)

பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே – அகம் 193/14
TOP


கைவிடுதல் (1)

அவவு கைவிடுதல் அது மனும் பொருளே – கலி 14/19
TOP


கைவிளக்கு (1)

கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என் – கலி 142/43
TOP


கைவினை (4)

கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி – சிறு 257
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப – நற் 313/2
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார் – குறு 309/1
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் – கலி 85/3
TOP