Select Page

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கீண்டிட்ட (1)

உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட/ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/11,12
TOP


கீண்டு (2)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு/விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 298,299
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு/உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி – பரி 7/14,15
TOP


கீரை (1)

குப்பை கீரை கொய் கண் அகைத்த – புறம் 159/9
TOP


கீழ் (28)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் – மது 534
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி – நற் 328/1
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து – குறு 60/3
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/3
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை – பரி 3/20
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற – பரி 19/36
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி – கலி 34/10
முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு – கலி 34/14
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை – கலி 38/4
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா – கலி 39/13
மன்றல் வேங்கை கீழ் இருந்து – கலி 41/43
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ்/போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/40,41
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ்/ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/10,11
காஞ்சி கீழ் செய்தேம் குறி – கலி 108/63
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை – கலி 135/6
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை – கலி 135/9
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை – கலி 135/12
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் – கலி 136/13
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை – அகம் 356/1
குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல் – புறம் 33/5
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர் – புறம் 42/13
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
கீழ் நீரால் மீன் வழங்குந்து – புறம் 396/1
TOP


கீழ்_மடை (1)

கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர் – புறம் 42/13
TOP


கீழ்_மரத்து (1)

கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
TOP


கீழ்ந்து (1)

மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து/கடாஅ யானை முழங்கும் – பதி 94/8,9
TOP


கீழ்ப்பட்டாளோ (2)

புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/9
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/12
TOP


கீழ்ப்பட (1)

சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட/நீடிய வரம்பின் வாடிய விடினும் – குறு 309/2,3
TOP


கீழ்ப்படு (1)

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை – அகம் 171/12
TOP


கீழ்ப்பணிந்து (1)

வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து/நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு – பதி 75/4,5
TOP


கீழ்ப்பால் (1)

கீழ்ப்பால் ஒருவன் கற்பின் – புறம் 183/9
TOP


கீழ (2)

காழோர் இகழ் பதம் நோக்கி கீழ/நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 393,394
உவலை கூவல் கீழ/மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/3,4
TOP


கீழது (2)

கூழை நொச்சி கீழது என் மகள் – அகம் 275/17
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் – புறம் 6/5
TOP


கீழும் (4)

கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி – மலை 142
கீழும் மேலும் காப்போர் நீத்த – நற் 182/8
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது – புறம் 6/6
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து – புறம் 120/8
TOP


கீழோர் (1)

கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ – பரி 17/40
TOP


கீள்வது (1)

தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/3
TOP


கீறி (1)

பொதியில் முனிவன் புரை வரை கீறி/மிதுனம் அடைய விரி கதிர் வேனில் – பரி 11/11,12
TOP