Select Page

நொச்சி (4)

நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் – 2.மக்கள்பெயர்:2 43/6
அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே – 5.இடப்பெயர்:5 4/6
பார்க்கில் ஒன்பதும் ஊர்ப்பொது பெயர் இவற்றினுள் பள்ளியே பட்டி நொச்சி
பயின்ற சிற்றூர் பெயர் மலை செறிந்திடும் ஊர் பகர்ந்திடில் கேடகம் ஆமே – 5.இடப்பெயர்:5 4/7,8
வேலி அரணம் புரிசை வாரி கடகம் காவல் வேதி புரம் நொச்சி ஆரை – 5.இடப்பெயர்:5 12/1

மேல்

நொச்சில் (1)

நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே – 4.மரப்பெயர்:4 5/5

மேல்

நொசிவு (2)

நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/2
பேசில் இறை உயவு அனுக்கம் சமழம் பிறங்கிய நொசிவு அழுங்கல் ஆய்வு – 8.பண்புப்பெயர்:8 12/7

மேல்

நொண்டு (1)

கற்கடகம் நள்ளி நொண்டு அலவன் நண்டு எட்டும் ஆம் களவன் அலவன் அவற்றுள் ஆண் – 3.விலங்கின்பெயர்:3 29/2

மேல்

நொதி (1)

ஓர் இரண்டு என்ப நுரை நொதி உளல் அருவருப்புறு சேற்றின் நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 8/8

மேல்

நொதுமலர் (1)

வெய்ய நொதுமலர் என்பது அயலவர்க்கு உரிய பெயர் வீறும் அதிதியர் வம்பலர் – 2.மக்கள்பெயர்:2 23/6

மேல்

நொந்த (1)

நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி – 7.செயற்கைப்பெயர்:7 1/3

மேல்

நொய்வு (1)

நுட்பம் இறை நுனி கயவு சன்னம் குணுங்கு அயிர் நுணுங்கு ஆய்தல் கூர்மை நொய்வு
நொசிவு வஞ்சம் கிலம் கஞறு சிற்பம் சாயல் நுங்கு நுழை நூணை நுவணை – 8.பண்புப்பெயர்:8 2/1,2

மேல்

நொவ்வி (1)

நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி
நிகர்க்கும் அறல் கருமணல் வாலூகம் வெண்மணல் நிறை புளினமே மணற்குன்று – 5.இடப்பெயர்:5 8/5,6

மேல்