Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீகம் 1
நீகாரம் 1
நீகான் 1
நீங்கரும் 1
நீங்கல் 1
நீங்கா 1
நீசர் 1
நீட்டலும் 1
நீடு 2
நீண்ட 6
நீத்தம் 1
நீதிசேர் 1
நீதியுடன் 1
நீதியுள 1
நீந்துநீர் 1
நீபம் 1
நீர் 3
நீர்க்காக்கை 1
நீர்க்குளிரியின் 1
நீர்குண்டி 1
நீர்நாடன் 1
நீர்நாய் 1
நீர்நாள் 1
நீர்நிலை 1
நீர்ப்பூ 1
நீர்ப்பெயர் 1
நீர்ப்பேர் 1
நீர்முள்ளியின் 1
நீர்வாரம் 1
நீர்விட்டில் 1
நீர்வினைஞர் 1
நீரம் 1
நீரளப்போன் 1
நீரில் 1
நீரின் 2
நீரினில் 1
நீருடை 1
நீருறை 1
நீரேரி 1
நீல 1
நீலகண்டன் 1
நீலம் 5
நீலமலர் 1
நீலன் 1
நீலாம்பரன் 1
நீலி 2
நீலோற்பலம் 1
நீவரம் 1
நீவி 2
நீழல் 1
நீள் 21
நீளம் 1
நீளிடை 1
நீறுஅணிகடவுளே 1

நீகம் (1)

சரிசவம் தேரை மண்டுகம் மரை நுணலை அரி சாற்றும் நீகம் தவளையே – 3.விலங்கின்பெயர்:3 29/3

மேல்

நீகாரம் (1)

இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 36/4

மேல்

நீகான் (1)

உவர்ச்சனே சிப்பி நீகான் நீரளப்போன் உரைக்கும் மாலுமியன் மூன்றும் – 2.மக்கள்பெயர்:2 20/2

மேல்

நீங்கரும் (1)

நீர் கொண்ட உப்பு வாணிகர் சூனர் ஊன்விலைஞர் நீங்கரும் வேதனைசெய்வோர் – 2.மக்கள்பெயர்:2 19/7

மேல்

நீங்கல் (1)

துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் – 8.பண்புப்பெயர்:8 13/4

மேல்

நீங்கா (1)

பெரும் செல்வம் நீங்கா குபேரன் அபிதானமாய் பேசினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 10/8

மேல்

நீசர் (1)

புல்லு மாதங்கர் கெளண்டர் கனகதர் இழிஞர் புலைஞரே நீசர் பத்தும் – 2.மக்கள்பெயர்:2 20/5

மேல்

நீட்டலும் (1)

நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் – 1.தெய்வப்பெயர்:1 18/4

மேல்

நீடு (2)

நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி – 5.இடப்பெயர்:5 3/5
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/8

மேல்

நீண்ட (6)

நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன் – 1.தெய்வப்பெயர்:1 25/4
நீண்ட நாட்டம் திட்டி அக்கம் விலோசனம் நிகழ்த்திய உலோசனம் கோ – 2.மக்கள்பெயர்:2 49/6
நீண்ட காதம்பம் நிலங்கு பூழ் இரு பெயர் நிகழ்த்து கானங்கோழி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 28/3
நீண்ட பசு நா மூன்றுமே பராயின் பெயர் நெருங்கு கிரிமல்லிகையுடன் – 4.மரப்பெயர்:4 5/6
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/4
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 2/4

மேல்

நீத்தம் (1)

பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர் – 5.இடப்பெயர்:5 15/7

மேல்

நீதிசேர் (1)

நீதிசேர் அருகர் தவமாதினுக்கு உரிய பெயர் நெறி உள கெளந்தி கன்னி – 2.மக்கள்பெயர்:2 31/7

மேல்

நீதியுடன் (1)

நீதியுடன் விள்ளல் அலர்தல் விரிதல் வெடிதல் நெகிழ்தல் ஊதல் புலர்தல் – 4.மரப்பெயர்:4 17/5

மேல்

நீதியுள (1)

நெறிகொள் புண்ணியசாந்தம் என்னும் ஒரு பெயருமே நீதியுள சாணம் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 20/8

மேல்

நீந்துநீர் (1)

நிறைநீர் வழாறொடு பிராறும் வாரியும் ஆகும் நீந்துநீர் பெயர் ஆகதம் – 5.இடப்பெயர்:5 15/5

மேல்

நீபம் (1)

உயர் குயவு கன்னிகாரம் கோங்கு மூன்று பெயர் ஓதிடும் தூபம் நீபம்
கதம்பம் விசாலம் இன்புளி இந்துமாரமொடு காட்டு பிரியகம் ஓர் ஏழும் – 4.மரப்பெயர்:4 10/2,3

மேல்

நீர் (3)

தோற்றும் அப்பாலில் பகுத்த பதினெண்மரும் துங்க மலை காடு நிலம் நீர்
சூழ்ந்த அரண் நான்கும் படைத்தது அரசு ஆம் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 11/7,8
நீர் கொண்ட உப்பு வாணிகர் சூனர் ஊன்விலைஞர் நீங்கரும் வேதனைசெய்வோர் – 2.மக்கள்பெயர்:2 19/7
ஊர் உளார் உண்ணும் நீர் ஊருணி எனும் பெயர் உந்தியே சுரியை நீரின் – 5.இடப்பெயர்:5 8/3

மேல்

நீர்க்காக்கை (1)

இகழ்வுஇல் அண்டங்காக்கை அற்கமொடு காரண்டம் இனிய நீர்க்காக்கை பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 24/7

மேல்

நீர்க்குளிரியின் (1)

புகலும் நாளிகம் ஆகும் நீர்க்குளிரியின் பெயர் பொருந்து கல்லாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 14/8

மேல்

நீர்குண்டி (1)

நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே – 4.மரப்பெயர்:4 5/5

மேல்

நீர்நாடன் (1)

சொல்லும் அகளங்கன் அபயன் கோழிவேந்தன் துலங்கு நீர்நாடன் வளவன் – 2.மக்கள்பெயர்:2 7/5

மேல்

நீர்நாய் (1)

கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம் – 3.விலங்கின்பெயர்:3 29/1

மேல்

நீர்நாள் (1)

ஓட்டும் முற்குளமோடு உடை குளம் மாரி நீர்நாள் உவந்த பூராட பெயர் – 1.தெய்வப்பெயர்:1 35/3

மேல்

நீர்நிலை (1)

மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை – 5.இடப்பெயர்:5 23/4

மேல்

நீர்ப்பூ (1)

கோட்டுப்பூ நீர்ப்பூ கொடிப்பூ வருக்கம் ஆம் கூறும் முப்பூவின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/4

மேல்

நீர்ப்பெயர் (1)

நிகழ் ஆவிலம் கலுழியே கலங்கியநீர் நினைக்கில் உறை உவர் நீர்ப்பெயர்
பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர் – 5.இடப்பெயர்:5 15/6,7

மேல்

நீர்ப்பேர் (1)

பெறு பிரளையம் வாரி நீத்தம் பிரவாகம் பெருக்கு ஓதம் வெள்ள நீர்ப்பேர்
பேசு கோலம் கொழுந்து ஓட்டநீர் தெளிவுநீர் பெயர் சற்சலம் எனல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 15/7,8

மேல்

நீர்முள்ளியின் (1)

பெற்றி உள முண்டகம் கண்டல் நீர்முள்ளியின் பெயர் விரிநீலியும் ஆமே – 4.மரப்பெயர்:4 4/8

மேல்

நீர்வாரம் (1)

மலைநெல் ஐவனம் ஆகும் மிக்க குளநெற்பயிர் மதித்த நீர்வாரம் ஆமே – 4.மரப்பெயர்:4 20/8

மேல்

நீர்விட்டில் (1)

நெடிய நீர்குண்டி ஒரு மூன்று பெயரே நொச்சில் நீர்விட்டில் புக்கின்னுடனே – 4.மரப்பெயர்:4 5/5

மேல்

நீர்வினைஞர் (1)

ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார் – 2.மக்கள்பெயர்:2 19/1

மேல்

நீரம் (1)

அளகம் அமுதம் காண்டம் நாரம் நீரம் தோயம் ஆலம் வருணம் சீவனம் – 1.தெய்வப்பெயர்:1 23/2

மேல்

நீரளப்போன் (1)

உவர்ச்சனே சிப்பி நீகான் நீரளப்போன் உரைக்கும் மாலுமியன் மூன்றும் – 2.மக்கள்பெயர்:2 20/2

மேல்

நீரில் (1)

வரும் நாமம் நான்குமே சமணமுனிவோர் பெயர் மற்று அவரில் எண்மர் நீரில்
வானில் உயர் பூவினில் நினைந்துழி ஒதுங்கி நெடு வாழ்நாள் இருப்போர்களே – 2.மக்கள்பெயர்:2 2/7,8

மேல்

நீரின் (2)

மயம் கயம் தடாமுகம் ஏழேழும் ஒன்றுமே மாற்ற அரிய நீரின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 23/6
ஊர் உளார் உண்ணும் நீர் ஊருணி எனும் பெயர் உந்தியே சுரியை நீரின்
உள்ள சுழியின் பெயர் சேற்றினில் எழும் குமிழி ஒக்குமே கொப்புள் பொகுடு – 5.இடப்பெயர்:5 8/3,4

மேல்

நீரினில் (1)

நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/5

மேல்

நீருடை (1)

அவனி காசினி உலகு மேதினி சகம் பார் அளக்கர் சக்கரம் நீருடை
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம் – 5.இடப்பெயர்:5 1/1,2

மேல்

நீருறை (1)

விகங்கம் வக்கிராங்கமே நீருறை அஞ்சனம் ஓதிமம் வினவிடில் அன்னம் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 23/8

மேல்

நீரேரி (1)

மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை – 5.இடப்பெயர்:5 23/4

மேல்

நீல (1)

ஓளி வாலவாயமே வயிடூரிய பெயர் உற்ற மணி நீல பெயர் – 6.பொருள்பெயர்:6 2/6

மேல்

நீலகண்டன் (1)

சந்திரசேகரன் நீலகண்டன் ஈமத்துஆடி தற்பரன் பேயொடுஆடி – 1.தெய்வப்பெயர்:1 1/2

மேல்

நீலம் (5)

துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி – 1.தெய்வப்பெயர்:1 31/2
வெய்ய நீலம் காளகூடம் கடு சிங்கி விடம் ஆலகாலத்துடன் – 3.விலங்கின்பெயர்:3 14/3
மறலி நான்கு பெயர் தாளி தாலம் பெண்ணே உற்ற நீலம் கருந்தாளொடு – 4.மரப்பெயர்:4 9/5
பண்புடைய நீலம் ஓர் ஏழும் கருங்குவளை பரவு கல்லாரம் அத்துடன் – 4.மரப்பெயர்:4 14/2
கருமை அசிதம் காரி காளிமை காரளம் காளம் நீலம் களங்கம் – 8.பண்புப்பெயர்:8 5/1

மேல்

நீலமலர் (1)

பொதி அவிழ் அசோகமலர் முல்லைமலர் நீலமலர் பொரு பஞ்சபாணம் அன்றி – 1.தெய்வப்பெயர்:1 6/7

மேல்

நீலன் (1)

ஓதும் அந்தன் காரி கரியவன் மேற்கோள் உடன் பங்கு செளரி நீலன்
உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 27/5,6

மேல்

நீலாம்பரன் (1)

ஏககுண்டலன் அலாயுதன் நீலாம்பரன் இரேவதிக்கொழுநன் முசலி – 1.தெய்வப்பெயர்:1 4/6

மேல்

நீலி (2)

இமையவதி சாம்பவி நீலி சிவை மருதவி இலங்கு பார்ப்பதி உமையவட்கு – 1.தெய்வப்பெயர்:1 13/3
அந்தரி கபாலி சண்டிகை சூலி நீலி யாமிநி நெடிய காத்திரி விறல் – 1.தெய்வப்பெயர்:1 16/3

மேல்

நீலோற்பலம் (1)

பைங்குவளை காவி நீலோற்பலம் குவலயம் பானலொடு இந்தீவரம் – 4.மரப்பெயர்:4 14/1

மேல்

நீவரம் (1)

பைதிரம் சும்மை நீவரம் ஏணி மண்டலம் பகர் ஒலியல் அழுவம் அகலுள் – 5.இடப்பெயர்:5 3/2

மேல்

நீவி (2)

கோசிகம் கோடிகம் சீரை அம்பரம் நீவி கூறை உடை ஆடை படாம் – 7.செயற்கைப்பெயர்:7 5/3
தோகை ஆம் கோசக பெயர் நீவி கோசகம் சொல்லுமே காச பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/7

மேல்

நீழல் (1)

கூதிர் உலவிய நீழல் வேற்றம் சதாகதி குறித்த காற்று ஏழ்ஐந்து பேர் – 1.தெய்வப்பெயர்:1 20/3

மேல்

நீள் (21)

வேந்தன் எழுபரியினன் பகலவன் சான்றோன் வியத்தன் நீள் தபனன் – 1.தெய்வப்பெயர்:1 24/4
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் – 1.தெய்வப்பெயர்:1 33/3
செறி கவசகுண்டலன் கானீனன் நீள் கச்சைசேர்கொடியினன் கன்னனே – 2.மக்கள்பெயர்:2 5/8
பிரசாபத்தியம் காந்தருவம் நீள் பசாசத்துடன் பகரும் மணம் இருநான்கு அதாம் – 2.மக்கள்பெயர்:2 37/6
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
மிகுதிபெறு சவம் நீள் பிரேதம் களேபரம் விளம்பு பிணம் ஆறே பெயர் – 2.மக்கள்பெயர்:2 50/7
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
தோட்டி அங்குசம் நீள் சாணம் கணிச்சியொடு சொற்பனமே குடோரி – 3.விலங்கின்பெயர்:3 5/3
நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 9/8
கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் – 4.மரப்பெயர்:4 10/4
நீள் பூ மலர்ச்சியின் பெயர் ஆம் வடு பிஞ்சு நிகழ் பசுங்காய் தீவுளி – 4.மரப்பெயர்:4 17/6
நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை – 5.இடப்பெயர்:5 3/6
நீரினில் குமிழியே புற்புதம் பெளவம் நுரை நீள் மொக்குள் கொப்புள் நொவ்வி – 5.இடப்பெயர்:5 8/5
சாற்று சிறைகாப்பு என மதித்த மூவொன்பதும் சாரும் நீள் மதிலின் பெயர் – 5.இடப்பெயர்:5 12/4
தளிமமொடு குளை சேக்கை பாயல் பரியங்கம் அணை சையம் நீள் கட்சி ஆய்வே – 5.இடப்பெயர்:5 19/2
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் – 5.இடப்பெயர்:5 20/6
கருது செம்பு ஆறு பெயர் அகி அயம் சொன்னல் கருந்தாது நீள் கரும்பொன் – 6.பொருள்பெயர்:6 4/3
நீண்ட கோடகம் ஐந்தும் மணிமுடி உறுப்பு ஆகும் நீள் சுடிகை சுட்டியின் பேர் – 7.செயற்கைப்பெயர்:7 1/4
நீள் உவணி நவிர் கோணம் அரிகண்டமே கண்டகம் கத்தி நிகர்க்கும் அப்பேர் – 7.செயற்கைப்பெயர்:7 4/2
அழுக்கு மலம் நீள் கசடு கபிகம் ஏழ் மாசு ஆகும் அரி வரு புகர் இராகம் – 8.பண்புப்பெயர்:8 5/6
மின் பிரகாசம் தேசு மிளிர் நீள் அலரி உடன் விளங்கும் ஒளி பதினெண் – 8.பண்புப்பெயர்:8 14/2

மேல்

நீளம் (1)

சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/8

மேல்

நீளிடை (1)

தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் – 8.பண்புப்பெயர்:8 10/5

மேல்

நீறுஅணிகடவுளே (1)

கங்காளன் முத்தன் நித்தன் பரமன் ஆலமர்கடவுள் நீறுஅணிகடவுளே – 1.தெய்வப்பெயர்:1 1/8

மேல்