Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கணம் 1
தெக்கணாக்கினி 1
தெங்கொடு 1
தெண்டிரை 1
தெய்வதம் 1
தெய்வப்பசு 1
தெய்வப்பெண் 1
தெய்வப்பெயர் 1
தெய்வம் 3
தெய்வலோகம் 1
தெய்வவிரதன் 1
தெய்வஆண் 1
தெய்வானை 1
தெரி 6
தெரிகாலை 1
தெரிதரும் 2
தெரிதல் 1
தெரிந்த 2
தெரிந்தவர்தமக்கு 1
தெரிந்தவழி 1
தெரிந்திடும்காலை 1
தெரியல் 2
தெரியில் 1
தெரியின் 1
தெரிவை 2
தெரு 3
தெவ்வர் 1
தெவிட்டல் 2
தெவுளல் 1
தெள்ளி 1
தெளிந்த 1
தெளியமும் 1
தெளிவுநீர் 1
தெற்கு 1
தெற்பை 1
தெறுக்கால் 2
தென் 1
தென்கீழ்த்திசைக்கோன் 1
தென்திசை 1
தென்திசைக்கோன் 1
தென்பழனி 1
தென்றல் 1
தென்றல்தேரினன் 1
தென்றலின் 1
தென்னவன் 1
தென்னை 1

தெக்கணம் (1)

இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4

மேல்

தெக்கணாக்கினி (1)

விளம்ப அரிய தெக்கணாக்கினி ஆகவன்னீயம் வீறு காருகபத்தியம் – 1.தெய்வப்பெயர்:1 19/4

மேல்

தெங்கொடு (1)

தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் – 4.மரப்பெயர்:4 1/7

மேல்

தெண்டிரை (1)

பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம் – 5.இடப்பெயர்:5 6/1

மேல்

தெய்வதம் (1)

அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர் – 1.தெய்வப்பெயர்:1 17/1

மேல்

தெய்வப்பசு (1)

உற்ற தேனு கபிலை தெய்வப்பசு பெயர் ஆங்கு பாலுளபசு பேர் – 3.விலங்கின்பெயர்:3 16/7

மேல்

தெய்வப்பெண் (1)

ஆன தெய்வப்பெண் பொதுப்பெயர் விண்ணவர் அமரர் வானவர் இலேகர் – 1.தெய்வப்பெயர்:1 12/6

மேல்

தெய்வப்பெயர் (1)

அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர்
அசுரதரன் அவுணர் கண்டகர் தைத்தியர் ஆன அதிதிபுதல்வர் தகுவர் – 1.தெய்வப்பெயர்:1 17/1,2

மேல்

தெய்வம் (3)

எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது – 8.பண்புப்பெயர்:0 2/1
தெய்வம் அறுசமயம் நாற்குடிமுறை ஒழுக்கம் இவை செங்கோலின் முறைசெலுத்தல் – 2.மக்கள்பெயர்:2 12/1
பற்றும் அசுரம் தெய்வம் ஆரிடம் இராக்கதம் பயில் பிரமம் இனிய – 2.மக்கள்பெயர்:2 37/5

மேல்

தெய்வலோகம் (1)

உயர்நிலம் மேலுலக பதினேழுமே தெய்வலோகம் ஆம் நரகலோகம் – 5.இடப்பெயர்:5 9/6

மேல்

தெய்வவிரதன் (1)

தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 5/2

மேல்

தெய்வஆண் (1)

விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம் – 3.விலங்கின்பெயர்:3 19/4

மேல்

தெய்வானை (1)

கன்னி உமை பாலனை தெய்வானை வள்ளி பங்காளனை சேவல்கொடி – 8.பண்புப்பெயர்:0 1/1

மேல்

தெரி (6)

தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/7
தெரி குளிர் பனிக்காலமும் வச்சிரநாள் ஆம் சிறந்த அரைநாளினுடனே – 1.தெய்வப்பெயர்:1 36/7
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/4
தெரி கராசம் கடமை மூரி ஒன்பதும் எருமை திகழ் பூணி பகடு போத்து – 3.விலங்கின்பெயர்:3 18/3
தெரி பெரும்புள்ளோடு கவுசிகம் இரண்டுமே செப்பும் ஊமன் கூகை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/7
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர் – 5.இடப்பெயர்:5 13/3

மேல்

தெரிகாலை (1)

தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை – 2.மக்கள்பெயர்:2 34/6

மேல்

தெரிதரும் (2)

தெரிதரும் பத்திரம் சீசமே சீசு சிறந்த ஈயப்பொது பேர் – 6.பொருள்பெயர்:6 4/7
தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் – 8.பண்புப்பெயர்:8 10/5

மேல்

தெரிதல் (1)

இறுவது அஞ்சாமை பெறுவது தெரிதல் காலமுடன் இடனறிதல் வைசியர் பண்பே – 2.மக்கள்பெயர்:2 15/8

மேல்

தெரிந்த (2)

தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 41/2
சேர்ந்த பரல் காள் கொட்டை விதை வீசம் என்ன தெரிந்த பெயர் வித்து ஆகுமே – 4.மரப்பெயர்:4 17/8

மேல்

தெரிந்தவர்தமக்கு (1)

தோம்இல் பல நூலும் தெரிந்தவர்தமக்கு யான் தொகுதி ஆசிரியத்தினால் – 8.பண்புப்பெயர்:0 3/7

மேல்

தெரிந்தவழி (1)

தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான் – 2.மக்கள்பெயர்:2 40/7

மேல்

தெரிந்திடும்காலை (1)

பின்னுமோ மதி தெரிந்திடும்காலை இராவினது பெயர் சனி வாலி ஆமே – 1.தெய்வப்பெயர்:1 29/8

மேல்

தெரியல் (2)

தொடலை கத்திகை பிணையல் அணியல் வாசிகை தெரியல் சுக்கை மஞ்சரி அலங்கல் – 4.மரப்பெயர்:4 21/1
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 9/8

மேல்

தெரியில் (1)

தெரியில் அம்பிகை அம்பாலிகை பரமசுந்தரி சிறந்த இருநான்கு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 14/7

மேல்

தெரியின் (1)

தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர் – 2.மக்கள்பெயர்:2 36/7

மேல்

தெரிவை (2)

தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் – 2.மக்கள்பெயர்:2 30/5
பேதை பெதும்பையுடன் மங்கை மடந்தை பிரி அரிவை தெரிவை மற்று அ – 2.மக்கள்பெயர்:2 31/1

மேல்

தெரு (3)

சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான் – 5.இடப்பெயர்:5 17/6
வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு – 5.இடப்பெயர்:5 17/7
வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு
வாடை ஆபீரம் சிரேணி செடியினுடன் வல்லியும் ஆயர்தெருவே – 5.இடப்பெயர்:5 17/7,8

மேல்

தெவ்வர் (1)

அரிகள் அடையார் நண்ணார் பொற்றார் நள்ளார் செறுநர் அமரரே தெவ்வர் மற்றார் – 2.மக்கள்பெயர்:2 22/5

மேல்

தெவிட்டல் (2)

குத்திடும் சோகம் அது துய்ப்பவை தெவிட்டல் மெய் கொதித்தே வெதுப்புவருதல் – 1.தெய்வப்பெயர்:1 7/6
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல் – 8.பண்புப்பெயர்:8 2/6

மேல்

தெவுளல் (1)

மொழி மதம் கன்னி பாரம் தெவுளல் பெருகல் முற்றிய கமம் கண்டம் மந்தம் – 8.பண்புப்பெயர்:8 2/4

மேல்

தெள்ளி (1)

தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் – 5.இடப்பெயர்:5 16/3

மேல்

தெளிந்த (1)

செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 8/4

மேல்

தெளியமும் (1)

சித்தி பஞ்சமகதி நிர்வாணம் பரகதி தெளியமும் அபவருக்கம் – 5.இடப்பெயர்:5 9/2

மேல்

தெளிவுநீர் (1)

பேசு கோலம் கொழுந்து ஓட்டநீர் தெளிவுநீர் பெயர் சற்சலம் எனல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 15/8

மேல்

தெற்கு (1)

இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4

மேல்

தெற்பை (1)

குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பை பெயர் – 4.மரப்பெயர்:4 12/1

மேல்

தெறுக்கால் (2)

போந்த தேளொடு தெறுக்கால் விருச்சிகம் ஆம் பொரும் சிலை வில் கொடுமரம் – 1.தெய்வப்பெயர்:1 28/6
எண்ணிய விடம் தெறுக்கால் பற்பலம் துட்டன் இசையளி விருச்சிகம் இவை – 3.விலங்கின்பெயர்:3 14/6

மேல்

தென் (1)

இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4

மேல்

தென்கீழ்த்திசைக்கோன் (1)

பாயு மசவாகனன் ஆரல் சேர்ந்தார்க்கொல்லி பரவு தென்கீழ்த்திசைக்கோன்
மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/4,5

மேல்

தென்திசை (1)

வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே – 5.இடப்பெயர்:5 21/5

மேல்

தென்திசைக்கோன் (1)

சமன் எருமைஊர்தி செங்கோல்கடவுள் அந்தகன் தருமன் அரி தென்திசைக்கோன்
சண்டன் இயமன் காலன் நமன் ஒருபதேழ் பெயர் சதக்கிருதி போகி நேமி – 1.தெய்வப்பெயர்:1 11/2,3

மேல்

தென்பழனி (1)

கந்தனை தென்பழனி முருகனை சிந்தையில் கருதி அன்பொடு பணிந்தே – 8.பண்புப்பெயர்:0 1/2

மேல்

தென்றல் (1)

திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே – 1.தெய்வப்பெயர்:1 20/6

மேல்

தென்றல்தேரினன் (1)

மனோபு திருமான்மகன் பூவாளி பூமான் வயங்கு தென்றல்தேரினன்
அதிர் ஆழிமுரசினன் மதனன் மோகன் காமன் அபிதானம் இருபதுஒன்பான் – 1.தெய்வப்பெயர்:1 6/2,3

மேல்

தென்றலின் (1)

ஓதும் மந்தாநிலம் தென்றலின் பெயர் என்பர் உயர் சூறைவளி சாரிகை – 1.தெய்வப்பெயர்:1 20/7

மேல்

தென்னவன் (1)

செழியன் வைகைத்துறைவன் மீனம் உயர் கொடியினன் தென்னவன் பொதியவெற்பன் – 2.மக்கள்பெயர்:2 8/3

மேல்

தென்னை (1)

தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் – 4.மரப்பெயர்:4 1/7

மேல்