கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எஃகம் 1
எஃகின் 1
எக்கர் 1
எகினம் 3
எகினமே 1
எகினன் 1
எங்கணும் 1
எங்கும் 2
எங்கை 1
எங்ஙன் 1
எச்சம் 3
எஞ்சல் 1
எட்டர் 1
எட்டாம் 2
எட்டாவது 1
எட்டிமரம் 1
எட்டியர் 3
எட்டுடன் 1
எட்டும் 11
எட்டுமே 4
எடுத்த 1
எண் 2
எண்கணன் 1
எண்காற்பறவை 1
எண்கு 1
எண்கோவை 1
எண்ணர் 1
எண்ணரும் 1
எண்ணான்கு 1
எண்ணான்குமே 1
எண்ணி 1
எண்ணிய 3
எண்ணிரண்டு 1
எண்ணும் 2
எண்தோளி 2
எண்பத்து 1
எண்மர் 1
எதிர் 1
எதிர்ந்தோர் 1
எதிர்இல் 1
எந்திரம் 1
எந்திரவாவி 1
எந்தை 1
எந்நாளும் 1
எப்பொருட்கும் 1
எம்பின் 1
எமம் 1
எய் 1
எய்திடல் 1
எய்திடும் 1
எய்திய 1
எய்தும் 1
எயில் 2
எயிற்றியர் 1
எயிறு 2
எயினர் 2
எரி 3
எரித்தல் 1
எரிப்பெயர் 1
எரியின்நாள் 1
எரிவனம் 1
எரிவை 1
எருத்தம் 1
எருத்தின் 1
எருது 1
எருந்து 1
எருமை 1
எருமைஊர்தி 1
எருவை 3
எல் 2
எல்லாம் 2
எல்லாள் 1
எல்லிரை 1
எல்லு 1
எல்லும் 1
எல்லை 3
எல்லொடு 1
எல்வை 1
எலாம் 1
எலி 1
எலும்பிச்சை 1
எலும்பு 1
எலுவனொடு 1
எவ்விடம் 1
எவரும் 1
எழில் 10
எழில்கூர் 2
எழிலான 4
எழிலி 2
எழு 5
எழுங்கு 1
எழுச்சியொடு 1
எழுதி 1
எழுது 1
எழுநா 1
எழுநான்கு 2
எழுபது 2
எழுபதும் 1
எழுபரியினன் 1
எழுபெயர் 2
எழும் 2
எழுமூன்று 2
எழுமூன்றுமே 1
எழுவகை 1
எழுவர் 2
எழுவர்கள் 1
எழுவொடு 1
எள் 1
எள்ளரிய 1
எள்ளினது 1
எற்றந்து 1
எறியும் 1
எறும்பி 1
எறும்பு 1
எறுழி 1
என்ப 11
என்பது 12
என்பதும் 6
என்பர் 10
என்பு 2
என்று 42
என்றும் 5
என்றூழ் 2
என்றே 6
என்ன 12
என்னவே 3
என்னும் 12
என 44
எனப்படும் 5
எனல் 1
எனவாம் 1
எனவே 1
எனும் 33
எஃகம் (1)
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் – 7.செயற்கைப்பெயர்:7 4/3
எஃகின் (1)
கருங்கொல் பராசு இரும்பு எழு பெயர் சத்தி ஆம் காணரிய எஃகின் பெயர் – 6.பொருள்பெயர்:6 4/4
எக்கர் (1)
ஊரும் அதர் அயிர் எக்கர் அகிர் நான்கும் நுண்மணல் உரைத்த பேனம் கம்பலம் – 5.இடப்பெயர்:5 8/7
எகினம் (3)
எகினம் ஏதிமம் மானமா பட்டம் ஒரு நான்கும் எழில் கவரிமான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 9/8
மிகுதிசேர் எகினம் ஓதிமம் மராளத்தினொடு மிக்க செங்கால் பிணிமுகம் – 3.விலங்கின்பெயர்:3 23/7
கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம் – 3.விலங்கின்பெயர்:3 29/1
எகினமே (1)
மா பொதுப்பெயர் எகினமே சிஞ்சம் மாழை புளிமா பெயர் தேமா பெயர் – 4.மரப்பெயர்:4 2/2
எகினன் (1)
சண்டையிடு ஞமலி எகினன் புரோகதி ஞாளி சாரமேயன் சுணங்கன் – 3.விலங்கின்பெயர்:3 11/3
எங்கணும் (1)
எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 18/7
எங்கும் (2)
இருந்திடும் வியானன் உடல் எங்கும் வியாபித்திடும் இயம்பிய தனஞ்செயனும் – 1.தெய்வப்பெயர்:1 19/1
எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 19/2
எங்கை (1)
ஒக்கும் இம்மூவரும் தவ்வை ஆம் எங்கை இளையாள் தங்கை பின்னவள் பெயர் – 2.மக்கள்பெயர்:2 39/4
எங்ஙன் (1)
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/2
எச்சம் (3)
மிக்க புருடன் பெயர் மதலை சந்ததி தோன்றல் வீறுசெய் செம்மல் எச்சம்
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் – 2.மக்கள்பெயர்:2 40/4,5
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 41/2
வெய்ய குதம் ஆசனம் பவனமுடனே எச்சம் மேவு வாய் புட்டம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 47/6
எஞ்சல் (1)
அருகல் ஊனம் குன்றல் எஞ்சல் ஈனம் சிங்கல் அவிதல் கயம் அஃகல் சிறுகல் – 8.பண்புப்பெயர்:8 3/1
எட்டர் (1)
ஆன பாட்டகர் வண்டர் கவிகள் வந்திகள் பனுவலாளர் நாகரிகர் எட்டர்
தேடரிய புலவர் கற்றோர் கடிகைமாக்கள் பெயர் செயிரியர் மதங்கர் சூதர் – 2.மக்கள்பெயர்:2 21/4,5
எட்டாம் (2)
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம்
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/7,8
மரப்பெயர் நியக்குரோதம் அத்துடன் எட்டாம் மராமரம் போதி கணவம் – 4.மரப்பெயர்:4 9/2
எட்டாவது (1)
நண்ணும் ஏழாவது செயற்கை எட்டாவது நயந்த பண்பு ஒன்பது செயல் – 8.பண்புப்பெயர்:0 2/3
எட்டிமரம் (1)
நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே – 4.மரப்பெயர்:4 9/8
எட்டியர் (3)
மன்னர் பின்னவர் இளங்கோக்கள் எட்டியர் இப்பர் வைசியர்கள் விப்பர் பரதர் – 2.மக்கள்பெயர்:2 15/1
ஓங்கு கோவலர் இப்பர் கோவைசியர் பெயர் பரதரொடு நாய்கர் எட்டியர் இவை – 2.மக்கள்பெயர்:2 15/4
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர்
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள் – 2.மக்கள்பெயர்:2 25/3,4
எட்டுடன் (1)
சொல்லிய இராப்பொழுதின் நாமம் எட்டுடன் அல்கல் சொல் எமம் அல்லும் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 31/1
எட்டும் (11)
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் – 1.தெய்வப்பெயர்:1 33/7
சாற்று தீபம் விளக்கு பதுமம் எட்டும் தழைத்திடும் சோதி மிகவும் – 1.தெய்வப்பெயர்:1 34/6
இரவிநாள் புருடநாள் கடைமீன் குறித்த தொழு எட்டும் இரேவதி பேர் – 1.தெய்வப்பெயர்:1 36/3
வாரணவீரர் காரணத்தியல்பர் என வைத்த பேராயம் எட்டும்
தோற்றும் அப்பாலில் பகுத்த பதினெண்மரும் துங்க மலை காடு நிலம் நீர் – 2.மக்கள்பெயர்:2 11/6,7
புருடனாய் வாழ்வானோடு எட்டும் ஆண் பெயர் மாந்தர் புகலில் ஆண்மக்கள் பொதுவாம் – 2.மக்கள்பெயர்:2 30/2
கடிய தாள் சலனம் கழல் பாதம் எட்டும் ஆம் கால் கால் கரட்டின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 44/7
தோம்இல் உதரம் குக்கி மோடு வயின் வயிறு அகடு துத்தமே சரடம் எட்டும்
சொலும் வயிற்றின் பெயர் இலஞ்சியே இதலையொடு சொலும் போகில் உந்தி நாபி – 2.மக்கள்பெயர்:2 45/5,6
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும்
இடபம் ஆம் கொட்டியம் தூர்வகம் தூரியம் மூன்று இவை பொதி எருத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 17/3,4
தத்தை சுகம் வன்னி அரி கீரம் சுவாகதம் சாருவே கிள்ளை எட்டும்
மிக்க கிளியின் பெயர் வந்திகையும் ஆம் விளம்பு கீரம் கிள்ளையே – 3.விலங்கின்பெயர்:3 27/4,5
கற்கடகம் நள்ளி நொண்டு அலவன் நண்டு எட்டும் ஆம் களவன் அலவன் அவற்றுள் ஆண் – 3.விலங்கின்பெயர்:3 29/2
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும்
விலகரும் பக்கம் ஆம் நள்ளு நாப்பண் பிரமம் மிகும் மத்தி மையம் நாவொடு – 5.இடப்பெயர்:5 20/6,7
எட்டுமே (4)
மிக்க பொறையன் குந்திபுதல்வன் உதிட்டிரன் மிகு பாண்டுமகன் எட்டுமே
வரு தருமன் நாமம் சுயோதனன் காந்தாரிமைந்தன் அரவக்கொடியினன் – 2.மக்கள்பெயர்:2 5/4,5
நாமம் ஓர் எட்டுமே கூத்தர் வேழம்பரே நண்ணிய கழைக்கூத்தர் பேர் – 2.மக்கள்பெயர்:2 21/2
நாட்டும் வந்திகை வரி திதனியோடு எட்டுமே நலமுறும் தேமல் ஆமே – 2.மக்கள்பெயர்:2 45/8
கலுழன் வயினன் வயினதேயன் ஓர் எட்டுமே கருடன் உவணம் சகுந்தம் – 3.விலங்கின்பெயர்:3 24/2
எடுத்த (1)
எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/8
எண் (2)
அறையும் எண் பெயர் இளமை கணவன் நண்பு தவனம் மூவரும் காதலன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 41/7
ஓங்கிய எழுங்கு வெளிறு ஆம் எண் கணமே உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 7/8
எண்கணன் (1)
மண்பொதுத்தந்தை ஞானி வானவர்முதுவன் எண்கணன் புகழ்ஆரணன் திசைமுகன் – 1.தெய்வப்பெயர்:1 5/4
எண்காற்பறவை (1)
மாற்றரிய சரபம் துரோணம் எண்காற்பறவை வளர் சம்பரம் சிம்புள் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 25/2
எண்கு (1)
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு
பாய் குடாவடி உளியம் ஏலுவுடன் புனர இவை பகர்ந்த ஏழும் கரடியே – 3.விலங்கின்பெயர்:3 1/7,8
எண்கோவை (1)
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் – 7.செயற்கைப்பெயர்:7 10/3
எண்ணர் (1)
மந்திரர் ஆமாத்தியர் முதுவர் முன்னவர் எண்ணர் மந்திரத்தலைவர் பெயர் ஆம் – 2.மக்கள்பெயர்:2 14/4
எண்ணரும் (1)
எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது – 8.பண்புப்பெயர்:0 2/1
எண்ணான்கு (1)
ஈரெட்டினும் கலாபம் பருமம் மூவாறு எண்ணான்கு விரிசிகை அது ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 10/4
எண்ணான்குமே (1)
மறவர் வட்கார் துன்னார் செற்றார் எண்ணான்குமே வண் பகைவர் நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 22/8
எண்ணி (1)
இ நிலந்தனில் உள்ளோர் எவரும் அறியும்படிக்கு எண்ணி ஆசிரியத்தினால் – 8.பண்புப்பெயர்:0 1/5
எண்ணிய (3)
எண்ணிய கிருத்திமம் பூதகணம் ஆம் என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 17/8
எண்ணிய விடம் தெறுக்கால் பற்பலம் துட்டன் இசையளி விருச்சிகம் இவை – 3.விலங்கின்பெயர்:3 14/6
இயம்பு மந்தாரமே செம்பரத்தை பெயர் எண்ணிய உலவை ஒட்டை – 4.மரப்பெயர்:4 6/4
எண்ணிரண்டு (1)
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3
எண்ணும் (2)
எண்ணும் நூவும் திலமும் எள்ளினது பெயர் கவ்வை எள் காயின் நாமம் அன்றி – 4.மரப்பெயர்:4 20/1
மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம் – 4.மரப்பெயர்:4 20/6
எண்தோளி (2)
சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை – 1.தெய்வப்பெயர்:1 15/3
விசயை கொற்றவை செளரி கெளரி எண்தோளி வீரச்செல்வி வாள்கைக்கொண்டாள் – 1.தெய்வப்பெயர்:1 16/2
எண்பத்து (1)
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே – 1.தெய்வப்பெயர்:1 2/7
எண்மர் (1)
வரும் நாமம் நான்குமே சமணமுனிவோர் பெயர் மற்று அவரில் எண்மர் நீரில் – 2.மக்கள்பெயர்:2 2/7
எதிர் (1)
பொருவரிய உழிஞை எதிர் பொருவதே தும்பை போர்க்களந்தன்னில் வெற்றி – 2.மக்கள்பெயர்:2 43/7
எதிர்ந்தோர் (1)
அடரும் இகலோர் எதிர்ந்தோர் முனைந்தோர் மாற்றலார் புல்லார் வேண்டார் ஒல்லார் – 2.மக்கள்பெயர்:2 22/6
எதிர்இல் (1)
எதிர்இல் காண்டீபன் தனஞ்செயன் பற்குனன் இயம்பு மாதவிநாயகன் – 2.மக்கள்பெயர்:2 6/4
எந்திரம் (1)
மேல் இசையும் நரலை எந்திரம் என பன்னொன்றும் வீறுசேர் கொத்தளத்தின் – 5.இடப்பெயர்:5 12/7
எந்திரவாவி (1)
குட்டம் முப்பத்தாறும் வாவி இலவந்திகை கூறில் எந்திரவாவி ஆம் – 5.இடப்பெயர்:5 23/5
எந்தை (1)
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் – 2.மக்கள்பெயர்:2 38/2
எந்நாளும் (1)
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 11/8
எப்பொருட்கும் (1)
எனும் அறுநான்குமே எப்பொருட்கும் இறைவன் இலகு தீருநாமம் ஈசன் – 2.மக்கள்பெயர்:2 3/4
எம்பின் (1)
பின்தோன்றல் எம்பின் பின்னோன் பின்னவன் பேசு பெயர் ஒன்பதும் தம்பி ஆம் – 2.மக்கள்பெயர்:2 38/6
எமம் (1)
சொல்லிய இராப்பொழுதின் நாமம் எட்டுடன் அல்கல் சொல் எமம் அல்லும் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 31/1
எய் (1)
காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே – 3.விலங்கின்பெயர்:3 9/2
எய்திடல் (1)
மிக்கவே இலக்கம் எய்திடல் மாறுநெறி துய்த்தல் மிக்க மறநிலை இன்பமே – 2.மக்கள்பெயர்:2 12/8
எய்திடும் (1)
எய்திடும் சாபம் உயர் தனு ஆம் சுறா கலை இயம்பும் ஆம் மகரம் குடம் – 1.தெய்வப்பெயர்:1 28/7
எய்திய (1)
எய்திய இரண்டும் நாக்கைப்பாம்பின் நாமம் ஆம் ஏற்ற உரு அட்டையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 14/5
எய்தும் (1)
எய்தும் இ தொழில் ஆறும் அந்தணர்க்கு உரியவாம் ஏற்றலும் அவர்கள் கடனாம் – 2.மக்கள்பெயர்:2 9/7
எயில் (2)
நெருங்கியே திருண்டிடுதல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி அது வளைத்தல் – 2.மக்கள்பெயர்:2 43/6
வேணகை வரைப்பு தகைப்பு பிரகாரம் விளங்கும் எயில் ஓதை இஞ்சி – 5.இடப்பெயர்:5 12/2
எயிற்றியர் (1)
செறிதரும் எயிற்றியர் மறத்தியர் பேதையர் செப்பும் அந்நில மாதரார் – 2.மக்கள்பெயர்:2 34/5
எயிறு (2)
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் – 2.மக்கள்பெயர்:2 48/5
மருப்பு எயிறு கோடு கிம்புரி தந்தம் ஓர் ஐந்தும் வாரண கொம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 3/6
எயினர் (2)
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள் – 2.மக்கள்பெயர்:2 34/4
வியாதர் வனசரர் கொலைஞர் எயினர் மாகுலர் சிலவர் வேடர் கூளியரும் ஆமே – 2.மக்கள்பெயர்:2 34/8
எரி (3)
தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல் – 1.தெய்வப்பெயர்:1 21/1
எரி சிறுகாலன் குரோட்டு நரி நாமம் ஒரு பத்து இகலன் ஓரியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/2
சொல்லிய வயங்கல் கதிர் எரி குலவல் கொடுவாளி துளங்குதல் இலங்கல் பிறபை – 8.பண்புப்பெயர்:8 14/5
எரித்தல் (1)
துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும் – 8.பண்புப்பெயர்:8 14/6
எரிப்பெயர் (1)
மிக்க தாவம் காட்டு எரிப்பெயர் உறகையே மிகும் அனல்திரளின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 21/6
எரியின்நாள் (1)
எரியின்நாள் ஆரல் அறுமீன் நாடன் நாவிதன் இறால் வாணன் அங்கி பத்தும் – 1.தெய்வப்பெயர்:1 32/5
எரிவனம் (1)
காளவனம் இடுகாடு வனம் மயானம் புறங்காடு பிதிர்வனம் எரிவனம்
சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/4,5
எரிவை (1)
ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம் – 6.பொருள்பெயர்:6 4/2
எருத்தம் (1)
வரையாத சுவல் கையில் எருத்தம் நீள் சிறுபுறம் வைத்த பிடர் நான்கும் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 47/7
எருத்தின் (1)
இடபம் ஆம் கொட்டியம் தூர்வகம் தூரியம் மூன்று இவை பொதி எருத்தின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 17/4
எருது (1)
பகரும் மூரி தகளை ஆனேறு கோ பதி பூண்டில் பதினைந்து பெயரும் எருது ஆம் – 3.விலங்கின்பெயர்:3 17/2
எருந்து (1)
இறல் எருந்து ஏரல் ஒரு மூன்றும் கிளிஞ்சில் ஆம் இப்பியே சிப்பி சுத்தி – 3.விலங்கின்பெயர்:3 30/1
எருமை (1)
தெரி கராசம் கடமை மூரி ஒன்பதும் எருமை திகழ் பூணி பகடு போத்து – 3.விலங்கின்பெயர்:3 18/3
எருமைஊர்தி (1)
சமன் எருமைஊர்தி செங்கோல்கடவுள் அந்தகன் தருமன் அரி தென்திசைக்கோன் – 1.தெய்வப்பெயர்:1 11/2
எருவை (3)
செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ் – 3.விலங்கின்பெயர்:3 22/4
திகழ் பவணை எருவை புண்டரம் ஐந்துமே கழுகு சீரிய தரிஞ்சமன் தன் – 3.விலங்கின்பெயர்:3 24/3
எருவை பஞ்சாய் திரட்புல்லுடன் சாயாப்புல் என வரும் கோரை பெயர் – 4.மரப்பெயர்:4 4/3
எல் (2)
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து – 1.தெய்வப்பெயர்:1 30/3
எல் ஒளிறு கடி கானல் அவிர்தல் ஆறுதல் பாடல் இலகல் சுடர் நிமிர்தல் – 8.பண்புப்பெயர்:8 14/3
எல்லாம் (2)
மாடம் மஞ்சூரம் ஆம் கடலை முற்கம் பயறு மற்று இவை எல்லாம் முதிரை ஆம் – 4.மரப்பெயர்:4 19/3
வந்த மூவைந்தும் எல்லாம் என்றும் பெயராய் மதித்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 3/8
எல்லாள் (1)
மெய் மருவு தோழி அபிதானம் இவள் முன்னிலை விளம்பிடில் ஏடி எல்லாள்
வீறு தோழன் கணவன் இருவரும் துணைவன் ஆம் மிகு தோழியும் தலைவியும் – 2.மக்கள்பெயர்:2 27/5,6
எல்லிரை (1)
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் – 4.மரப்பெயர்:4 12/2
எல்லு (1)
பானு வெஞ்சுடர் கனலி அனலி இருள்வலி சோதி பகர் அண்டயோனி எல்லு
தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு – 1.தெய்வப்பெயர்:1 24/6,7
எல்லும் (1)
மையல் இரசனி கங்குல் யாமினி விபாவரி மாலை நிசி எல்லும் இரவே – 1.தெய்வப்பெயர்:1 30/8
எல்லை (3)
பரிதி விண்மணி இரவி எல்லை என்றூழ் பனிப்பகை தரணி அலரி சவிதா – 1.தெய்வப்பெயர்:1 24/5
எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி – 3.விலங்கின்பெயர்:3 8/3
கடவை நடவையின்னுடன் எல்லை குரோசமே காணரும் கூப்பிடின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/3
எல்லொடு (1)
உரை திவா அல்கல் எல்லொடு வான் இ நான்குமே ஒண் பகல்பொழுதின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 30/5
எல்வை (1)
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
எலாம் (1)
மற்றும் மாட்டார் பெயர் வல்லார் எனப்படும் வகுத்த ஆண் பெண் பெயர் எலாம்
மருவும் மணியில் பண்பில் உவமையொடு ஒட்டினில் வந்தவழி கண்டுகொள்க – 2.மக்கள்பெயர்:2 37/3,4
எலி (1)
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் – 1.தெய்வப்பெயர்:1 33/7
எலும்பிச்சை (1)
மோது எலும்பிச்சை சம்பீரம் சதாபலம் முருக்கு அருணமோடு இலஞ்சம் – 4.மரப்பெயர்:4 2/7
எலும்பு (1)
கழியும் உடல் முழுவென்பு கங்காளம் ஆகும் களேபரம் உடல் எலும்பு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/5
எலுவனொடு (1)
சங்காத்தியே இணங்கன் பாங்கன் எலுவனொடு தண்டாமல் வரு கிளைஞனே – 2.மக்கள்பெயர்:2 27/2
எவ்விடம் (1)
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/2
எவரும் (1)
இ நிலந்தனில் உள்ளோர் எவரும் அறியும்படிக்கு எண்ணி ஆசிரியத்தினால் – 8.பண்புப்பெயர்:0 1/5
எழில் (10)
எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது – 8.பண்புப்பெயர்:0 2/1
எழில் மருத்துவன்நாளொடு ஈரைந்தும் அச்சுவினியின் பெயர் தாழி பூதம் – 1.தெய்வப்பெயர்:1 32/2
எழில் வாரி ஒளி ஆலயம் மூன்றும் ஆம் குளகொடிரை கவர்முனம் வாரி இடமே – 3.விலங்கின்பெயர்:3 5/8
எகினம் ஏதிமம் மானமா பட்டம் ஒரு நான்கும் எழில் கவரிமான் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 9/8
ஏறு நறை கூளி அக்கம் புங்கவம் குத்தம் எழில் வையம் நந்தி எட்டும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
இலகு நுதலணிமாலை கோத்தமலர் தானும் ஆம் எழில் பெறும் கன்னமீதில் – 4.மரப்பெயர்:4 21/6
எழில் மண்டிலம் நேமி பொறை அசலை விபுலை தலம் அகலிடம் பாடி வையம் – 5.இடப்பெயர்:5 1/2
எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/8
ஏர் மயம் சுந்தரம் சவி காள் அணங்கு பொன் எழில் அந்தம் நவ்வி நோக்கு – 8.பண்புப்பெயர்:8 6/1
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் – 8.பண்புப்பெயர்:8 8/6
எழில்கூர் (2)
துன்னிய கிரீடி வீபற்சு மூவைந்தும் ஆண்டு எழில்கூர் அருச்சுனன் பேர் – 2.மக்கள்பெயர்:2 6/7
இளம்எள்ளின் பெயர் குளிகை பன்னல் கார்ப்பாசமே எழில்கூர் பருத்தி சித்திரம் – 4.மரப்பெயர்:4 20/2
எழிலான (4)
எழிலான வாகனம் மகரம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 23/8
இங்கு இவை திரண்டோர்கள் அனைவர்க்கும் உரிய பெயர் எழிலான ஓரை பொய்தல் – 2.மக்கள்பெயர்:2 18/3
எழிலான பள்ளை சாகளமும் ஆம் குட்டிக்கு இடும் பொதுப்பெயர் உரைக்கில் – 3.விலங்கின்பெயர்:3 19/6
எழிலான கண்டபேரண்டன் ஆம் நேமிப்புள் ஏற்ற கோகம் சகோரம் – 3.விலங்கின்பெயர்:3 25/4
எழிலி (2)
காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல் – 1.தெய்வப்பெயர்:1 38/4
பழுதுஇல் சிசுபாலனொடு கன்னன் எழுவர்கள் ஓரி பயின் மலையன் எழிலி நள்ளி – 2.மக்கள்பெயர்:2 8/7
எழு (5)
அங்கிநாள் ஐவிரல் என்னும் எழு பெயர் அத்தம் அறுவை நெய் பயறு தச்சன் – 1.தெய்வப்பெயர்:1 34/3
கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 1/6
என்னும் எழு பெயருமே வீமன் விசயன் பார்த்தன் இந்திரன்மதலை போரில் – 2.மக்கள்பெயர்:2 6/3
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/6
கருங்கொல் பராசு இரும்பு எழு பெயர் சத்தி ஆம் காணரிய எஃகின் பெயர் – 6.பொருள்பெயர்:6 4/4
எழுங்கு (1)
ஓங்கிய எழுங்கு வெளிறு ஆம் எண் கணமே உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 7/8
எழுச்சியொடு (1)
பயில் போதலே ஞெள்ளல் ஏந்தல் எழுச்சியொடு பரவிய பிறங்கல் என்ன – 8.பண்புப்பெயர்:8 10/4
எழுதி (1)
கூறு ஐந்து வரி எழுதி வரிமுறையில் ஓரொன்று கூட்டி வாசிக்கில் மூன்று ஆக – 1.தெய்வப்பெயர்:1 37/4
எழுது (1)
உரு அறிய எழுது படமே கிழி எனும் பெயர் உவதானமே தலையணைக்கு – 7.செயற்கைப்பெயர்:7 7/1
எழுநா (1)
பாவகன் சாதவேதா ஞெகிழி தேயு இறை பார்வையொளி எழுநா
பாயு மசவாகனன் ஆரல் சேர்ந்தார்க்கொல்லி பரவு தென்கீழ்த்திசைக்கோன் – 1.தெய்வப்பெயர்:1 21/3,4
எழுநான்கு (2)
என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/5
புகல் ஆழி அருகல் செறிதல் கஞறல் அறுகலொடு போந்த எழுநான்கு இரண்டும் – 8.பண்புப்பெயர்:8 13/6
எழுபது (2)
குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் – 6.பொருள்பெயர்:6 6/8
தேடரிய ஞெள்ளலொடு பெருமை எழுபது பெயர் சிறிது கணு வறிது தன்னம் – 8.பண்புப்பெயர்:8 8/7
எழுபதும் (1)
ஆரியை பேதை அலம் அம்மை ஐ ஒப்பு மா சாரு அம் என எழுபதும்
அழகு ஆம் விசித்திரம் பேரழகு சின்னம் வடிவு ஆம் சந்தம் வண்ணம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 6/7,8
எழுபரியினன் (1)
வேந்தன் எழுபரியினன் பகலவன் சான்றோன் வியத்தன் நீள் தபனன் – 1.தெய்வப்பெயர்:1 24/4
எழுபெயர் (2)
வடவாமுகாக்கினியொடு எழுபெயர் பாவகன் வகுத்த தீக்கடவுள் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/4
முதிர் சம்பம் இகுசமுடன் எழுபெயர் ஆம் நெல்லி மொழியில் ஆமலகம் ஆமே – 4.மரப்பெயர்:4 2/8
எழும் (2)
மேல் எழும் கருமுகை பித்திகை இரண்டும் விளம்ப அரிய பிச்சி பெயர் – 4.மரப்பெயர்:4 13/5
உள்ள சுழியின் பெயர் சேற்றினில் எழும் குமிழி ஒக்குமே கொப்புள் பொகுடு – 5.இடப்பெயர்:5 8/4
எழுமூன்று (2)
எழுமூன்று பெயர் தாக்கணங்கு பூமகள் கமலை இந்திரை பொன் இளையாள் செய்யாள் – 1.தெய்வப்பெயர்:1 13/4
செப்பு அருச்சுனம் வெள்ளி வெள்ளை எழுமூன்று பெயர் சேதம் குருதி அத்து – 8.பண்புப்பெயர்:8 4/3
எழுமூன்றுமே (1)
விரும்பு துணைவன் கிழவன் மணவாளன் நல் கொழுநன் மிகு தலைவன் எழுமூன்றுமே
மிக்க புருடன் பெயர் மதலை சந்ததி தோன்றல் வீறுசெய் செம்மல் எச்சம் – 2.மக்கள்பெயர்:2 40/3,4
எழுவகை (1)
போற்றி தரா உடன் கஞ்சம் இவை கூடியே புகலும் எழுவகை உலோகம் ஆம் – 6.பொருள்பெயர்:6 2/2
எழுவர் (2)
அறை விராடன் எழுவர் அக்குரன் சந்தன் அந்திமான் சந்திமான் – 2.மக்கள்பெயர்:2 8/6
பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே – 2.மக்கள்பெயர்:2 8/8
எழுவர்கள் (1)
பழுதுஇல் சிசுபாலனொடு கன்னன் எழுவர்கள் ஓரி பயின் மலையன் எழிலி நள்ளி – 2.மக்கள்பெயர்:2 8/7
எழுவொடு (1)
குளிர் இலை ஓர் இரண்டுமே மூக்குஅரிகத்தி எழுவொடு பரிகம் – 7.செயற்கைப்பெயர்:7 3/2
எள் (1)
எண்ணும் நூவும் திலமும் எள்ளினது பெயர் கவ்வை எள் காயின் நாமம் அன்றி – 4.மரப்பெயர்:4 20/1
எள்ளரிய (1)
எள்ளரிய இரவலன் பரிசிலாளன் தீனன் யாசகன் இரப்போன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/3
எள்ளினது (1)
எண்ணும் நூவும் திலமும் எள்ளினது பெயர் கவ்வை எள் காயின் நாமம் அன்றி – 4.மரப்பெயர்:4 20/1
எற்றந்து (1)
பொம்மல் எற்றந்து ஆம் தாவு மீக்கோள் மிகப்பு பெருக்கம் விறம்பு – 8.பண்புப்பெயர்:8 9/4
எறியும் (1)
எறியும் வச்சிரம் வச்சிராங்கமொடு கண்டீர்வம் என்ப சதுரக்கள்ளி பேர் – 4.மரப்பெயர்:4 6/3
எறும்பி (1)
உயர் வல்விலங்கு குஞ்சரம் வழுவை மாதங்கமொடு கருணி இபம் எறும்பி
தும்பி தந்தாவளம் தம்போலம் களிறு தூங்கல் வயமா மந்தமா – 3.விலங்கின்பெயர்:3 2/2,3
எறும்பு (1)
ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 15/5
எறுழி (1)
வளர் இருளி எறுழி ஏனம் கனலி பூதாரம் வன்களிறு பன்றி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 8/8
என்ப (11)
பெயர் ஆயனம் வற்சரம் சமை ஆண்டு என்ப பேசும் நான்கும் வருடம் ஆம் – 1.தெய்வப்பெயர்:1 41/4
ஏனாதி சிரையர் பெருமஞ்சிகர் சீமங்கிலியர் என்ப மயிர்வினை நாவிதர் – 2.மக்கள்பெயர்:2 19/2
ஆளலே சிதலை செல் என்ப கறையான் பெயர் ஆம் தம்பலப்புழு பேரே – 3.விலங்கின்பெயர்:3 15/6
ஒப்பரிய பாசல் ஆம் மருவு பத்திரை என்ப ஒன்று நற்பசு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 16/8
எறியும் வச்சிரம் வச்சிராங்கமொடு கண்டீர்வம் என்ப சதுரக்கள்ளி பேர் – 4.மரப்பெயர்:4 6/3
தீதுஇல் கனி பாலை பலம் எனவாம் பழ பெயர் சிதள் என்ப தோலின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/7
ஓர் இரண்டு என்ப நுரை நொதி உளல் அருவருப்புறு சேற்றின் நாமம் ஆமே – 5.இடப்பெயர்:5 8/8
அரசர்கள் இருப்பிடம் புகல் என்ப குதிர் ஆகும் அது அலால் வன்மீகமே – 5.இடப்பெயர்:5 13/6
சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் – 5.இடப்பெயர்:5 17/5
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 20/8
சூட்டு தாரும் குரலம் என்ப கண்கிணிமாலை சொல் சதங்கைக்கும் ஆம் – 7.செயற்கைப்பெயர்:7 10/7
என்பது (12)
வெய்ய நொதுமலர் என்பது அயலவர்க்கு உரிய பெயர் வீறும் அதிதியர் வம்பலர் – 2.மக்கள்பெயர்:2 23/6
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும் – 2.மக்கள்பெயர்:2 41/2
ஒளி பெருகு தாரை கண்மணி ஆம் விளிம்பு என்பது ஒன்று கண் இமை ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 49/8
ஐயொடு காசம் என்பது கோழையின் பெயர் அழனம் குணுங்கு குணபம் – 2.மக்கள்பெயர்:2 50/6
உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா – 3.விலங்கின்பெயர்:3 6/6
ஈட்டிய செருந்தி வாட்கோரையின் பெயர் விரணம் என்பது விழல்புலின் பேர் – 4.மரப்பெயர்:4 4/4
கதிரம் என்பது கருங்காலி ஆம் செங்கருங்காலி சிறுமாரோட்டம் ஆம் – 4.மரப்பெயர்:4 8/1
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர் – 4.மரப்பெயர்:4 12/3
ஈண்டு என்பது இவ்விடம் ஆண்டு என்பது அவ்விடம் இம்பர் இவண் உம்பர் உவண் ஆம் – 5.இடப்பெயர்:5 22/1
ஈண்டு என்பது இவ்விடம் ஆண்டு என்பது அவ்விடம் இம்பர் இவண் உம்பர் உவண் ஆம் – 5.இடப்பெயர்:5 22/1
கண்டமே கைப்பிடி வாளினுக்கு உரிய பெயர் கன்னம் என்பது சுவர்அகழ்கத்தி – 7.செயற்கைப்பெயர்:7 3/1
ஏற்ற விரலணி ஐந்தும் மோதிரம் பகரில் இரதனம் என்பது அரைஞாண் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 8/4
என்பதும் (6)
கெளரிதனையன் குறிஞ்சிக்கிழவன் என்பதும் காட்டுமே சேயின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 9/2
இயம்பு பாதம் கசம் என்பதும் அதன் பெயர் இரும் புனற்கு அரசன் ஏறும் – 1.தெய்வப்பெயர்:1 23/7
போற்று அமாவாசியின் பெயர் வேலை என்பதும் புகலும் நிகழ்கால பெயர் – 1.தெய்வப்பெயர்:1 40/4
கூடிய கருந்தினை பெயர் சாமை என்பதும் கூறில் அதன் நாமம் ஆமே – 4.மரப்பெயர்:4 19/7
குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் – 5.இடப்பெயர்:5 5/5
கூபமே கூவல் அசும்பு துரவு என்பதும் கூறும் கிணற்றின் பெயர் – 5.இடப்பெயர்:5 23/6
என்பர் (10)
பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 7/8
கோடை மேல்காற்றினொடு கொண்டல் கீழ்க்காற்று என்பர் கூதிர் உடன் ஊதை இருபேர் – 1.தெய்வப்பெயர்:1 20/4
தீதுஇலா குளிர் பனிக்காற்று என்பர் வாடையும் வடந்தையும் செப்பிடுங்கால் – 1.தெய்வப்பெயர்:1 20/5
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே – 1.தெய்வப்பெயர்:1 20/6
ஓதும் மந்தாநிலம் தென்றலின் பெயர் என்பர் உயர் சூறைவளி சாரிகை – 1.தெய்வப்பெயர்:1 20/7
திங்களின்பகை என்பர் கேது ஆம் அது அலால் சேடன் அனந்தன் ஆமே – 1.தெய்வப்பெயர்:1 27/8
தோற்றுன்னர் என்பர் செம்மார் பெயர் குணுங்கர் வினைசூழ் கொலைஞர் கலைஞர் வங்கர் – 2.மக்கள்பெயர்:2 20/4
இசைந்த பொட்டு புழுவின் நாமமே புழுவில் உலண்டு என்பர் கோற்புழு ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 15/8
பெருமைசேர் புங்கமொடு பங்கமும் துகில் என்பர் பெற்றி உள நூல் வல்லோரே – 7.செயற்கைப்பெயர்:7 5/8
சொலில் உத்தரிகம் உடன் உத்தாரசங்கம் ஏறீடு என்பர் சொற்புலவரே – 7.செயற்கைப்பெயர்:7 6/8
என்பு (2)
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 37/8
வன் சேக்கையே தழும்பு ஆம் ஏலும் பேர் என்பு மதவங்கம் அத்தி அக்கு ஆம் – 2.மக்கள்பெயர்:2 53/4
என்று (42)
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே – 1.தெய்வப்பெயர்:1 2/7
சீர்பெறும் தருமதேவதை என்று உரைத்தனர் செந்தமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 14/8
தகும் என்று நாடி பகுத்தே வகுத்தனர்கள் தண்டமிழ் புலமையோரே – 1.தெய்வப்பெயர்:1 15/8
எண்ணிய கிருத்திமம் பூதகணம் ஆம் என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 17/8
ஓங்கு சுழல்காற்று வரு சூறையின் பெயர் என்று உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 20/8
என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம் – 1.தெய்வப்பெயர்:1 25/6
பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும் – 1.தெய்வப்பெயர்:1 29/7
சேர்ந்த பாநாளும் இரு நாள் ஆகும் என்று பெயர் செப்பினர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 36/8
ஆகுமே பின்னை என்று ஓதிடும் பெயர் என அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 41/8
சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று
எய்தும் இ தொழில் ஆறும் அந்தணர்க்கு உரியவாம் ஏற்றலும் அவர்கள் கடனாம் – 2.மக்கள்பெயர்:2 9/6,7
கருது பரியாள் ஆமே பரிவாரம் என்று கலைகற்றவர் இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 13/8
ஆட்டர் குறும்பர் புரோசர் குறுநிலமன்னர் ஆம் வேளிர் என்று பெயர் – 2.மக்கள்பெயர்:2 14/1
சூட்டும் வித்தகர் என்று வரும் நாமம் நான்குமே தூதர் மாமாத்திரருடன் – 2.மக்கள்பெயர்:2 14/7
மணிகள் குயிலுநர் என்று உரைத்தனர் முத்தம் கோக்கும் மரபினர்கள் அபிதானமே – 2.மக்கள்பெயர்:2 17/8
நிகழ அருந்து ஊன் ஆட்டு வாணிகன் பெயர் என்று நெறியோர் இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 19/8
மகிழ் ஈகையாளன் உயர் கோதை என்று ஓதிடும் மலிந்த கொடையாளன் பெயர் – 2.மக்கள்பெயர்:2 24/2
இலங்கிய வழிச்செல்வோனே பதிகனொடு பரதன் என்று பெயர் இழுதை மூடன் – 2.மக்கள்பெயர்:2 24/4
உன்னும் அந்தணர் அரசர் வளளிகர் வேளாளர் என்று ஓதும் ஒரு நாற்குலத்தில் – 2.மக்கள்பெயர்:2 32/3
அந்தராளன் விராத்தியன் என்று குலம் நான்கு அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 32/8
சேய் குழவி குட்டன் குழந்தையொடு அளந்தை அருள் சேர் பிள்ளை மழவு மகவு என்று
அறையும் எண் பெயர் இளமை கணவன் நண்பு தவனம் மூவரும் காதலன் ஆம் – 2.மக்கள்பெயர்:2 41/6,7
பேசும் மும்மடி கொண்டது அக்குரோணி என்று பெயர் பெற்ற தொகை மற்றும் வெட்சி – 2.மக்கள்பெயர்:2 43/4
புரிவதே வாகை வெண் பூழையும் வெற்றி அம் பூ என்று இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 43/8
வரை இறை இரண்டுமே கை உறுப்பு ஆம் என்று மா முனி இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 46/8
மற்றும் மேல்உதடு ஓட்டம் ஆம் கீழ்உதட்டிற்கு வரும் நாமம் அதரம் என்று ஆம் – 2.மக்கள்பெயர்:2 48/4
வச்சை மலடுற்ற பசு ஆம் குணமிலாப்பசு மன்னு சுதை என்று பெயர் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 16/6
திரள் விலங்கின்பொது பெயர் என்று கற்றோர் சிறப்புடன் இயம்பினாரே – 3.விலங்கின்பெயர்:3 30/8
நாட்டிய இரண்டுமே மெளவல் மல்லிகைக்கு உரிய நாமம் என்று ஓதினாரே – 4.மரப்பெயர்:4 6/8
வதரி கோற்கொடி கோலி இரத்தி குல்வலி என்று வரும் ஐந்து பெயர் இலந்தை – 4.மரப்பெயர்:4 8/7
பகரில் வீழுங்கதியும் ஆம் என்று மலையமுனி பண்புடன் இயம்பினாரே – 5.இடப்பெயர்:5 9/8
மேவு பெயர் ஆம் என்று பொதிய பொறுப்பில் உறை வேதியன் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 12/8
முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று
அடைந்த நான்கும் அடுப்பு ஆம் பாகசாலை அடுக்களை அட்டில் ஒரு மூன்றாம் – 5.இடப்பெயர்:5 14/4,5
அந்தி வரி கவலை அரி கோடகம் அத்தொடு சீருலகம் ஆறும் முச்சந்தி என்று
ஆகும் சிருங்காடகம் அத்தொடு சதுக்கமே ஆகும் நாற்சந்தியின் பேர் – 5.இடப்பெயர்:5 18/1,2
மன்னு கோபுரவாயில் கதவினில் புகும் வழி நாமமே அதவு என்று ஆம் – 5.இடப்பெயர்:5 18/6
அந்த வழியிடை சார்ந்த திண்ணை அளிந்தம் என்று ஆம் சிறப்புடைய வாயில் – 5.இடப்பெயர்:5 18/7
பாதை பட்டம் சேவகம் சேக்கை போத்துடன் பண்ணை படம் ஓரி செப்பு என்று
ஓட்டிய இ ஒன்பதும் விலங்கு துயிலிடம் உறைவி ஒன்றும் உலைக்கள பேர் – 5.இடப்பெயர்:5 19/4,5
காவதம் காதம் என்று ஓது பெயர் புகை என கருதும் யோசனையின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/4
இடம் இரு சுருங்கையே கற்படையின் அபிதானம் என்று மலையப்பொருப்பில் – 5.இடப்பெயர்:5 21/7
வன் கடிப்பிணை குணுக்கு கம்பியோடு அமி வல்லிகை குதம்பை தோடு என்று
உடைய பெயர் ஏழுமே காதணி உரத்தின் மிசை ஓங்கிய பதக்க பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 1/6,7
நற்பணி இடும் தூசு தேவாங்கம் என்று பெயர் நவில் சித்திரப்புடவையே – 7.செயற்கைப்பெயர்:7 6/4
தொங்கல் மதலிகை உத்தி என்று முப்பெயருமே தொடர்புடைய தூக்கம் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 10/8
நாடில் இருபத்தேழும் நிறைதலின் பெயர் என்று நாட்டினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 2/8
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 11/8
என்றும் (5)
படிஇலா தேர் ஆள்கர் வாதுவர் களிற்றுடை பாகர் பாகு என்றும் பெயர் – 2.மக்கள்பெயர்:2 13/5
அவர் கொடி கேழல் பெரும் படைத்தலைவர் அபிதானமே பொருநர் என்றும் ஆம் – 2.மக்கள்பெயர்:2 14/2
கல்வி பயிலும் களம் கழகம் எனும் நாமம் ஆரம் கல்லூரி என்றும் ஆமே – 5.இடப்பெயர்:5 13/8
சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே – 7.செயற்கைப்பெயர்:7 3/8
வந்த மூவைந்தும் எல்லாம் என்றும் பெயராய் மதித்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 3/8
என்றூழ் (2)
பரிதி விண்மணி இரவி எல்லை என்றூழ் பனிப்பகை தரணி அலரி சவிதா – 1.தெய்வப்பெயர்:1 24/5
மருவும் ஒளி எல் ஆதபம் கோடை என்றூழ் வருத்தம் மிகு வெயில் ஐந்து – 1.தெய்வப்பெயர்:1 30/3
என்றே (6)
இலகு திருமாலுக்கு இயன்ற தொல்பெயர் இன்னமும் இயம்புவர் அனந்தம் என்றே
ஏககுண்டலன் அலாயுதன் நீலாம்பரன் இரேவதிக்கொழுநன் முசலி – 1.தெய்வப்பெயர்:1 4/5,6
எழிலான வாகனம் மகரம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 23/8
நிகழ் ஒளவை அம்மையொடு கந்தி என்றே புலவர் நேயத்து இயம்பினாரே – 2.மக்கள்பெயர்:2 31/8
அழிவுஇல் விச்சாதர உலகம் ஆம் என்றே அருந்தவன் இயம்பினானே – 5.இடப்பெயர்:5 11/8
ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 14/8
வரும் படிச்சுருள் அகத்தினகம் ஆம் என்றே அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 18/8
என்ன (12)
சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன
வரும் நாமம் நான்குமே சமணமுனிவோர் பெயர் மற்று அவரில் எண்மர் நீரில் – 2.மக்கள்பெயர்:2 2/6,7
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்ன
தோன்று பதின்மூன்றுமே அறிஞர்தம் பெயர் கவிஞர் சொற்புலவர் முதுவர் மூத்தோர் – 2.மக்கள்பெயர்:2 4/2,3
தேற்றும் மந்திரிமார் புரோகிதர் சாரணர் சேனாபதியர் தூதர் என்ன
செப்பு குழு ஐந்து மருத்துவ கலைவலோர் சீரிய மடைத்தொழிலினோர் – 2.மக்கள்பெயர்:2 11/1,2
மாசுபெறு விதவை அமங்கலை ஓர் ஐந்து பெயர் மம்மையே வந்தி என்ன
கூடிய இரண்டுமே மலடி பெயர் வண்ணமகள் கோலம்செய் மாதின் பெயர் – 2.மக்கள்பெயர்:2 33/6,7
பரதர் பரதவர் கடலர் வலையர் திமிலர்கள் நுளையர் பயில் கழியர் சலவர் என்ன
பகர்ந்த இருநான்குமே நெய்தல்நில மாக்கள் பரத்தியர் குறத்தியர் உடன் – 2.மக்கள்பெயர்:2 36/1,2
பூண்ட பெயர் சாதகப்புள் சலாங்கு என்ன பொய்யாப்புள் ஆம் தித்திரி – 3.விலங்கின்பெயர்:3 28/5
குழிநாவலின் பெயர் சாதேவம் என்ன குறித்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 5/8
சேர்ந்த பரல் காள் கொட்டை விதை வீசம் என்ன தெரிந்த பெயர் வித்து ஆகுமே – 4.மரப்பெயர்:4 17/8
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/6
வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன
வந்த மூவைந்தும் எல்லாம் என்றும் பெயராய் மதித்தனர் தமிழ்ப்புலவரே – 8.பண்புப்பெயர்:8 3/7,8
பயில் போதலே ஞெள்ளல் ஏந்தல் எழுச்சியொடு பரவிய பிறங்கல் என்ன
தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் – 8.பண்புப்பெயர்:8 10/4,5
முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன
மொழி கோபம் இருபதுடன்ஆறு பெயர் கொந்தலே முதிர் பொங்கல் கொம்பல் – 8.பண்புப்பெயர்:8 11/3,4
என்னவே (3)
பேருலவு தனதன் கின்னரர்பிரான் என்னவே பெரும் ஏழிரண்டு பெயரும் – 1.தெய்வப்பெயர்:1 10/7
என்னவே செந்தமிழை ஆராய்ந்து மலையத்து இருந்தவன் இயம்பினானே – 2.மக்கள்பெயர்:2 9/8
குறிய குறுமக்களொடு மகார் சிறார் என்னவே கூறிடும் பலர் பன்மை – 2.மக்கள்பெயர்:2 41/3
என்னும் (12)
ஏர் ஆசிரியநிகண்டு என்னும் ஈரைந்துஒன்று – 8.பண்புப்பெயர்:0 0/1
அங்கிநாள் ஐவிரல் என்னும் எழு பெயர் அத்தம் அறுவை நெய் பயறு தச்சன் – 1.தெய்வப்பெயர்:1 34/3
என்னும் எழு பெயருமே வீமன் விசயன் பார்த்தன் இந்திரன்மதலை போரில் – 2.மக்கள்பெயர்:2 6/3
என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல் – 2.மக்கள்பெயர்:2 15/7
வைப்பு மண்ணீட்டாளர் என்னும் இரு பெயரும் வகுத்த சிற்பாசாரியர் – 2.மக்கள்பெயர்:2 17/7
மருவு நிகலம் சுவல் செகில் என்னும் மூன்றுமே வலிய தோள்மேல் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 47/8
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் – 3.விலங்கின்பெயர்:3 8/4
என்னும் எழுநான்கு பெயர் பாம்பு துண்டம் அத்துடன் இராசலம் சாரையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 13/5
நெறிகொள் புண்ணியசாந்தம் என்னும் ஒரு பெயருமே நீதியுள சாணம் ஆகுமே – 3.விலங்கின்பெயர்:3 20/8
என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம் – 3.விலங்கின்பெயர்:3 30/2
அடுக்கல் உழி சாமீபம் என்னும் ஈரொன்பது அபிமானமும் பக்கம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 10/8
பெருகிய உயங்கு அயர்வு என்னும் ஒரு பதினைந்து பெயரும் வருத்தம் ஆமே – 8.பண்புப்பெயர்:8 12/8
என (44)
வெடி நறை குய் என மொழிந்த ஒரு மூன்றுமே மிகு நறும்புகையின் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 22/1
கன்னலொடு ஐந்துமே நாழிகைப்பெயர் என கட்டுரைத்தனர் புலவரே – 1.தெய்வப்பெயர்:1 31/8
விரவும் இந்திரவில்லு வான்இடும்வில் என விளம்பிடும் வானவில் பேர் – 1.தெய்வப்பெயர்:1 36/5
வாய்த்த திவசம் தினம் ஏல்வை எல்வை என வந்த ஒன்பது நாள் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 41/2
ஆகுமே பின்னை என்று ஓதிடும் பெயர் என அறைந்தனர் தமிழ்ப்புலவரே – 1.தெய்வப்பெயர்:1 41/8
சிறந்தோர்கள் பெயர் உலகமே உயர்ந்தோர் என செப்பினர் தமிழ்புலவரே – 2.மக்கள்பெயர்:2 3/8
ஓதும் மாணாக்கனே கற்போன் என பெயர் உரைத்தனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 4/8
வாரணவீரர் காரணத்தியல்பர் என வைத்த பேராயம் எட்டும் – 2.மக்கள்பெயர்:2 11/6
சூழ்ந்த அரண் நான்கும் படைத்தது அரசு ஆம் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 11/8
குடி படை அமைச்சு இனிய நட்பு அரண் கூழ் என கொண்ட வகை ஆறும் உடையோன் – 2.மக்கள்பெயர்:2 13/1
சொலும் பிடகர் ஆயுள்வேதியர் மருத்துவர் என சொற்றனர் தமிழ்ப்புலவரே – 2.மக்கள்பெயர்:2 14/8
ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி – 2.மக்கள்பெயர்:2 31/5
குன்றாத தம்பதி இரட்டை ஆண்பெண் என கூறிடும் பெயர் ஆகுமே – 2.மக்கள்பெயர்:2 33/8
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் – 2.மக்கள்பெயர்:2 37/7
மில்லமொடு பந்தம் என வந்த ஓர் ஒன்பதும் மிகுத்த மயிர்முடி நாமமே – 2.மக்கள்பெயர்:2 51/8
மன்னு குறுநிலமன்னர் ஊர்ந்திடும் மா என வகுத்து உரைத்தனர் வல்லோரே – 3.விலங்கின்பெயர்:3 6/8
குரமொடு குரச்சை என வரும் பெயர் இரண்டுமே குதிரைக்குளம்பின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 7/1
தோளம் தொழுவம் வேலி ஆனிலை என கண்ட பெயர் பட்டி ஆமே – 3.விலங்கின்பெயர்:3 19/8
அளை மொழை ததி பெருகு என சொன்ன நான்குமே அழகுகூர் தயிரின் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 20/2
இருடி கூன் பிங்கலை சகோரம் கின்னரம் என இயம்பு பேர் ஆந்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 24/8
இருதலைப்புள் பெருங்குருகுடன் யானைஉண்குருகு என இயம்பும் மூன்றும் – 3.விலங்கின்பெயர்:3 25/3
பண்புள்ள நிசாசரி என குலவு நான்கும் பகர்ந்திடும் கோட்டான் பெயர் – 3.விலங்கின்பெயர்:3 25/6
ஒண் சுரிமுகங்கள் என வரும் மூன்று பெயருமே ஊர்கின்ற நத்தை ஆமே – 3.விலங்கின்பெயர்:3 29/8
எருவை பஞ்சாய் திரட்புல்லுடன் சாயாப்புல் என வரும் கோரை பெயர் – 4.மரப்பெயர்:4 4/3
நண்ணு கருவிளம் உய்கை கன்னி காக்கணம் என நவின்றனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 7/8
மிகு செயலை பிண்டி காகோளி அசோகு என விளம்பிடும் பெயர் ஆகுமே – 4.மரப்பெயர்:4 10/8
மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதி என வழங்கு பெயர் முல்லை ஆமே – 4.மரப்பெயர்:4 13/2
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து – 4.மரப்பெயர்:4 15/3
தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர் – 4.மரப்பெயர்:4 17/1,2
விசுவுடன் வளைவு ஆம் தடம் தாமரைக்கு என விளம்பினர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 18/8
செய்தியம் தளி என கூறிய பன்னொன்றுமே தேவர் உறை கோயிலின் பேர் – 5.இடப்பெயர்:5 10/2
மண்டபம் ஒன்றாம் குரம்பையொடு கூரை என வந்த பெயர் சிற்றில் ஆமே – 5.இடப்பெயர்:5 10/8
சாற்று சிறைகாப்பு என மதித்த மூவொன்பதும் சாரும் நீள் மதிலின் பெயர் – 5.இடப்பெயர்:5 12/4
மேல் இசையும் நரலை எந்திரம் என பன்னொன்றும் வீறுசேர் கொத்தளத்தின் – 5.இடப்பெயர்:5 12/7
பட்டம் என வந்த பத்தொன்பதும் கழறிடில் பரவு கண்துயில் இட பேர் – 5.இடப்பெயர்:5 19/3
காவதம் காதம் என்று ஓது பெயர் புகை என கருதும் யோசனையின் பெயர் – 5.இடப்பெயர்:5 21/4
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே – 5.இடப்பெயர்:5 22/8
எழில் மனவு காசு வசு மாடு என புலவோர் எடுத்த இந்நான்கும் ஆமே – 6.பொருள்பெயர்:6 3/8
வாசனம் சாதனம் இலக்காரம் வகம் என வரும் புடவை ஆறேழ் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 5/6
அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என
அரிய பதினேழுமே குறைதலின் பெயர் அளவையொடு கடன் கச்சம் மூன்றும் – 8.பண்புப்பெயர்:8 3/2,3
சாமம் அரிதம் பலாசம் பைத்து அரித்து என சாற்று பத்தும் பச்சையே – 8.பண்புப்பெயர்:8 4/8
ஆரியை பேதை அலம் அம்மை ஐ ஒப்பு மா சாரு அம் என எழுபதும் – 8.பண்புப்பெயர்:8 6/7
சேய் என வகுத்த ஒரு நான்கு பெயர் தூரம் ஆம் சிறை புடை மருங்கு ஞாங்கர் – 8.பண்புப்பெயர்:8 10/6
துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும் – 8.பண்புப்பெயர்:8 14/6
எனப்படும் (5)
எனப்படும் கோடை சுசி சம் மூன்றுமே கொடிய வேனிற்கு இயன்ற நாமம் – 1.தெய்வப்பெயர்:1 40/6
ஏன்ற புதர் விற்பனர் கலைஞர் சங்கம் சாடு எனப்படும் கற்றோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 4/5
கொற்றவர்கள் ஏறு எனப்படும் அரிச்சந்திரன் குலவு முசுகுந்தன் நளன் – 2.மக்கள்பெயர்:2 13/2
மற்றும் மாட்டார் பெயர் வல்லார் எனப்படும் வகுத்த ஆண் பெண் பெயர் எலாம் – 2.மக்கள்பெயர்:2 37/3
இதம்பெறு வேங்கை அரிதகி பத்தியம் கடு எனப்படும் கடுமர பேர் – 4.மரப்பெயர்:4 10/5
எனல் (1)
பேசு கோலம் கொழுந்து ஓட்டநீர் தெளிவுநீர் பெயர் சற்சலம் எனல் ஆகுமே – 5.இடப்பெயர்:5 15/8
எனவாம் (1)
தீதுஇல் கனி பாலை பலம் எனவாம் பழ பெயர் சிதள் என்ப தோலின் பெயர் – 4.மரப்பெயர்:4 17/7
எனவே (1)
மற்று அதன் கனி கோலமொடு கொண்டை எனவே வகுத்தனர் தமிழ்ப்புலவரே – 4.மரப்பெயர்:4 8/8
எனும் (33)
மன்னு செஞ்சி சீர்மை சூழ் தொண்டை வள நாட்டில் வாய்த்த ஊற்றங்கால் எனும்
மாநகர்க்கு அதிபன் உயர் பாவாடை வாத்தியார் மைந்தன் ஆண்டிப்புலவனே – 8.பண்புப்பெயர்:0 1/7,8
நவின்ற பத்து ஒலி ஒழிபு பதினொன்று எனும் தொகுதி நாட்டி திவாகரம் போல் – 8.பண்புப்பெயர்:0 2/4
நாமகள்கணவன் வேதக்கடவுள் புரவி எனும் நரை ஓதிமம்தனக்கு – 8.பண்புப்பெயர்:0 3/5
கடவுள் மனையாள் சுதை சுவாகா எனும் பெயர் கனல் ஒழுங்கு அது சுவாலை – 1.தெய்வப்பெயர்:1 22/5
பீதகன் ஆசான் எனும் பெயருமே சொலும் பேசரிய அசுரர்மந்திரி – 1.தெய்வப்பெயர்:1 27/1
மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும் – 1.தெய்வப்பெயர்:1 36/6
செப்பு பூரணை ஐந்து பக்கம் ஆம் பக்கமே திதி எனும் பெயர் அது ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 37/6
வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர் – 1.தெய்வப்பெயர்:1 37/7
வலிய வின்னூலாளி எனும் நான்கு பெயரும் வரும் துரோணாச்சாரியே – 2.மக்கள்பெயர்:2 1/8
எனும் அறுநான்குமே எப்பொருட்கும் இறைவன் இலகு தீருநாமம் ஈசன் – 2.மக்கள்பெயர்:2 3/4
உறை இறைவன் ஆசான் எனும் பத்தும் ஒன்றுமே ஒப்பரிய முத்தோர் பெயர் – 2.மக்கள்பெயர்:2 3/6
தொகு பரதர் கெளரவர் பெளரவர் எனும் பெயர் சொலில் குருகுலத்து அரசரே – 2.மக்கள்பெயர்:2 6/8
தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே – 2.மக்கள்பெயர்:2 26/8
செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 27/3
செப்பு மன்பதை பஞ்ஞீல் எனும் இரண்டே மக்கள்திரளினுக்கு உரிய பெயரே – 2.மக்கள்பெயர்:2 36/8
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் – 2.மக்கள்பெயர்:2 38/4
ஆறும் இடையின் பெயர் ஒக்கலை எனும் பெயர் அது மருங்கின் பக்கம் ஆம் – 2.மக்கள்பெயர்:2 45/4
ஆண் முடுவல் எனும் பெண்நாய் கொக்கு அண்டிகம் செந்நாய் விருகமும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 11/6
தக்க எழு பெயருமே நெய் தயிர் கடைந்திடும் தறி வெளில் எனும் பெயர் ஆமே – 3.விலங்கின்பெயர்:3 20/6
அனந்தரம் மயூரம் விரிசிகை ஆகும் இறகு அதனின் அடிமுள் முருந்து எனும் பேர் – 3.விலங்கின்பெயர்:3 23/4
சந்தானம் அரிசந்தனம் பாரிசாதம் மந்தாரமொடு கற்பகம் எனும்
தருக்கள் ஓர் ஐந்தின் நல் கா உடன் தேவுமே சாற்றும் அ கற்பக பேர் – 4.மரப்பெயர்:4 3/1,2
குடசம் வெட்பாலையின் பெயர் சம்பு எனும் பெயர் கொண்டதே நாவல் அன்றி – 4.மரப்பெயர்:4 5/7
ஆடகி எனும் பெயர் துவரை சிக்கடி சிம்மை அவரையின் பெயர் உலத்தம் – 4.மரப்பெயர்:4 19/1
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம் – 5.இடப்பெயர்:5 5/4
ஊர் உளார் உண்ணும் நீர் ஊருணி எனும் பெயர் உந்தியே சுரியை நீரின் – 5.இடப்பெயர்:5 8/3
கல்வி பயிலும் களம் கழகம் எனும் நாமம் ஆரம் கல்லூரி என்றும் ஆமே – 5.இடப்பெயர்:5 13/8
ஏகாந்தம் ஒருவந்தம் ஆம் அன்றி யாண்டு யாங்கு எங்ஙன் எவ்விடம் எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/2
தாண்டவம் புரியிடம் வட்டாடும் இடம் உடன் சமர் இடம் அரங்கு எனும் பேர் – 5.இடப்பெயர்:5 22/7
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி – 7.செயற்கைப்பெயர்:7 1/3
அன்றியும் காம்பு நேத்திரம் எனும் இரண்டுமே அதின் விகற்பத்தின் பெயர் – 7.செயற்கைப்பெயர்:7 6/2
உரு அறிய எழுது படமே கிழி எனும் பெயர் உவதானமே தலையணைக்கு – 7.செயற்கைப்பெயர்:7 7/1
மனவொடு அத்து எனும் அரைப்பட்டிகை பெயர் பொழியும் வன் கொடையில் வீரத்தினால் – 7.செயற்கைப்பெயர்:7 8/5
வீறு பரிபுரம் எனும் பாதசாலம் காலில் மிக்க பொது அணிகளாமே – 7.செயற்கைப்பெயர்:7 8/8

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)