Select Page

ஞாங்கர் (1)

பாழி நிலம் இல் பள்ளி ஞாங்கர்
நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர் – 4.அவனி :4 272/8,9
மேல்

ஞாங்கரும் (2)

விட்டேறு அரணம் ஞாங்கரும் வேலே – 6.அநுபோக :6 472/2
படைக்கலமும் ஞாங்கரும் ஓர் மரமும் வேலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1082/1
மேல்

ஞாட்பு (1)

ஞாட்பு பூசல் ஆயோதனம் அடல் அமர் – 6.அநுபோக :6 372/3
மேல்

ஞாட்பும் (2)

கனமே அடையும் ஞாட்பும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 463/1
சீரும் கனமும் குருவும் ஞாட்பும்
பாரம் ஆகும் பரமும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 484/1,2
மேல்

ஞாட்பே (1)

சமரும் பாரமும் களமும் ஞாட்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 561/1
மேல்

ஞாதியர் (1)

தாயத்தார் ஞாதியர் தம் குடி தமரே – 5.ஆடவர் :5 177/1
மேல்

ஞாபகம் (2)

ஞாபகம் செம்பொருள் நடையின் எப்பொருளும் – 3.ஐயர் :3 51/1
ஞாபகம் பிசி இவை நற்பொருள் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 300/1
மேல்

ஞாயில் (1)

ஞாயில் எந்திரம் நாஞ்சில் கோசம் – 4.அவனி :4 183/1
மேல்

ஞாயிறு (1)

அருணன் சூரன் ஞாயிறு சவிதா – 2.வானவர் :2 118/8
மேல்

ஞாயிறும் (3)

மதியும் ஞாயிறும் பஞ்சாயுதனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/8
நல் ஒளி பெயரும் ஞாயிறும் பகலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 195/1
நல் ஒளி பெயரும் ஞாயிறும் பானு – 10.ஒருசொல்பல்பொருள்:10 796/1
மேல்

ஞாலம் (1)

நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம்
அசலை பூவலயம் அளக்கர் மண்டலம் – 4.அவனி :4 1/7,8
மேல்

ஞாலமும் (1)

ஞாலமும் கூந்தல்கமுகும் நாவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 600/1
மேல்

ஞாழல் (1)

நாகம் பலினி ஞாழல் ஆகும் – 9.மரப்பெயர் :9 33/1
மேல்

ஞாளி (3)

கல்லியம் சுமாலி ஞாளி தேமும் – 6.அநுபோக :6 45/13
சுனகன் புரோகதி குரைமுகன் ஞாளி
சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே – 8.மாப்பெயர் :8 201/3,4
நாயும் கள்ளும் ஞாளி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 562/1
மேல்

ஞாளிஊர்தி (1)

சித்தன் ஞாளிஊர்தி கபாலி – 2.வானவர் :2 23/3
மேல்

ஞான்று (1)

ஆங்கு தெய்ய என ஏ ஞான்று
அந்தில் ஓரும் இனைய இடைச்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 345/2,3
மேல்

ஞானத்து (1)

நான்முகன் கிழத்தி ஞானத்து இறைவி – 2.வானவர் :2 66/4
மேல்

ஞானம் (7)

சரியை கிரியை யோகம் ஞானம் என்று – 2.வானவர் :2 10/1
நாடக காட்சி ஞானம் சீலம் கொடி – 2.வானவர் :2 101/1
ஞானம் தவம் மேன்மை நல் அருள் மோனம் – 3.ஐயர் :3 30/1
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல் – 3.ஐயர் :3 31/2
புத்தி ஞானம் அறிவு என புகல்வர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 8/3
ஆகமம் ஞானம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 309/1
வலி மார்பு ஊக்கம் ஞானம் திடம் உரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 172/1
மேல்

ஞானமும் (2)

மிகுதியும் பரித்தலும் ஞானமும் பொறையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 123/2
சிதம் வான்மீனும் வெளுப்பும் ஞானமும்
ஆகும் சயமுறப்படலும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 488/1,2
மேல்

ஞானமூர்த்தி (1)

ஞானமூர்த்தி நம்பன் பகவன் – 2.வானவர் :2 2/24
மேல்

ஞானன் (1)

அனந்தன் ஞானன் அன்னம்உயர்த்தோன் – 2.வானவர் :2 64/11
மேல்

ஞானாவரிணியம் (1)

ஞானாவரிணியம் தரிசனாவரிணியம் – 3.ஐயர் :3 118/1
மேல்