Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 2
சேக்கை 6
சேகண்டி 1
சேகரமும் 2
சேகிலி 1
சேகு 1
சேகும் 2
சேட்டன் 1
சேட்டை 3
சேட்டையும் 1
சேடர் 1
சேடன் 5
சேடி 3
சேடியும் 1
சேடு 1
சேடும் 3
சேடே 1
சேண் 3
சேணியும் 1
சேணும் 1
சேணே 1
சேத்து 1
சேத்தும் 1
சேதகம் 2
சேதம் 1
சேதனன் 1
சேதா 1
சேதாம்பல் 2
சேதாரம் 1
சேதித்தல் 1
சேதிமம் 1
சேதுவும் 2
சேந்தன் 1
சேந்தும் 1
சேப்பும் 1
சேம்பு 1
சேம்பும் 1
சேமம் 1
சேமமும் 2
சேமரம் 2
சேய் 3
சேய்மையும் 1
சேயே 1
சேர் 4
சேர்த்தி 1
சேர்தல் 1
சேர்ந்த 5
சேர்ந்தது 1
சேர்ந்தோர் 1
சேர்ப்பன் 1
சேர்பு 1
சேர்விடம் 1
சேர்வு 1
சேர்வும் 1
சேர 1
சேரன் 1
சேரனும் 1
சேரன்ஊர்மா 1
சேரார் 1
சேரி 4
சேரியும் 2
சேரின் 1
சேரும் 1
சேலை 1
சேவகம் 1
சேவகமும் 1
சேவல் 3
சேவலங்கொடியோன் 1
சேவலும் 1
சேவும் 1
சேற்று 2
சேறல் 1
சேறும் 10
சேறே 2
சேனம் 1
சேனாபதி 1
சேனாபதியர் 1
சேனாமுகம் 1
சேனாமுகமே 1
சேனை 3
சேனைகாப்போரும் 1
சேனையும் 5

சே (2)

பாறல் சே விடை பாண்டில் பெற்றம் – 8.மாப்பெயர் :8 160/1
குதிரை எருது புல்வாய் சே எனல் – 8.மாப்பெயர் :8 252/1
மேல்

சேக்கை (6)

சேவகம் சாலை சேக்கை அது துயில்இடம் – 4.அவனி :4 239/1
பாயல் சேக்கை பள்ளி தளிமம் – 4.அவனி :4 260/2
சேக்கை விலங்கின் சேர் துயில் இடமே – 4.அவனி :4 261/2
நகலம் தனம் குயம் சேக்கை கொம்மை – 5.ஆடவர் :5 291/2
வடு வசி கச்சை சேக்கை அங்கிதம் – 5.ஆடவர் :5 356/1
சயனமும் முலையும் சேக்கை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 547/1
மேல்

சேகண்டி (1)

எறிமணி சேகண்டி – 6.அநுபோக :6 161/1
மேல்

சேகரமும் (2)

சிரமும் கம்மும் சேகரமும் சென்னியும் – 5.ஆடவர் :5 336/1
சூடிகை சுடிகை சேகரமும் சொல்லும் – 6.அநுபோக :6 67/1
மேல்

சேகிலி (1)

கதலி அரம்பை கவரே சேகிலி
திரணபதி ஓசை வாழையின் பெயரே – 9.மரப்பெயர் :9 109/1,2
மேல்

சேகு (1)

சாரம் வயிரம் கலை அரி சேகு எனல் – 9.மரப்பெயர் :9 147/2
மேல்

சேகும் (2)

பகையும் சேகும் பறையும் மதுவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/7
மானின்ஏறும் கல்வியும் சேகும்
காலநுட்பமும் நூலும் கலை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 282/3,4
மேல்

சேட்டன் (1)

முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே – 5.ஆடவர் :5 185/2
மேல்

சேட்டை (3)

சேட்டை என்ன விளம்புவர் – 2.வானவர் :2 96/2
அன்னை செவிலி தெளவை சேட்டை
முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் – 5.ஆடவர் :5 188/1,2
சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் – 6.அநுபோக :6 583/1
மேல்

சேட்டையும் (1)

கிளந்த இந்திரன்நாள் சேட்டையும் கேட்டை – 2.வானவர் :2 164/2
மேல்

சேடர் (1)

சேடர் கிணகர் என்பதும் செப்பும் – 5.ஆடவர் :5 150/1
மேல்

சேடன் (5)

அனந்தன் போகவதிக்குஇறை சேடன் – 2.வானவர் :2 145/1
மழவன் குமரன் மைந்தன் சேடன்
இளவல் முருகன் காளை இளைஞன் என்ப – 5.ஆடவர் :5 200/1,2
சிலதன் எலுவன் சேடன் நண்பன் – 5.ஆடவர் :5 202/1
சேடன் அனந்தன் என்றிசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 82/3
அனந்தனும் ஓர் சாதி பெயரும் சேடன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 549/2
மேல்

சேடி (3)

சிலதி பாங்கி சேடி இணங்கி – 5.ஆடவர் :5 208/1
சேடி ஏவலில் சிறந்தவள் பெயரே – 5.ஆடவர் :5 210/1
சிலதியும் விஞ்சையர் சேரியும் சேடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 550/1
மேல்

சேடியும் (1)

சேணியும் விஞ்சைப்பதியும் சேடியும்
யாணர்நகரும் வித்தியாதரர் இடம் – 2.வானவர் :2 115/1,2
மேல்

சேடு (1)

நன்றி சேடு நன்மை நன்று ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 31/2
மேல்

சேடும் (3)

சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/7
நனியும் பணையும் விறலும் சேடும்
பீடும் கதழ்வும் பெருமை பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/8,9
வழியும் சேடும் சேர்வும் திரளே – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/4
மேல்

சேடே (1)

திரட்சி அழகு நன்று பெருமையும் சேடே – 10.ஒருசொல்பல்பொருள்:10 551/1
மேல்

சேண் (3)

சிகரம் மலையம் சேண் முகடு ஆகும் – 4.அவனி :4 51/2
உவப்பு புரை சேண் உன்னதம் துங்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/1
மலையும் அதன் சேண் முகடும் சிரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 506/1
மேல்

சேணியும் (1)

சேணியும் விஞ்சைப்பதியும் சேடியும் – 2.வானவர் :2 115/1
மேல்

சேணும் (1)

சேணும் நீளமும் சேய்மையும் தூரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 461/1
மேல்

சேணே (1)

உயரமும் நீளமும் அகலமும் சேணே – 10.ஒருசொல்பல்பொருள்:10 552/1
மேல்

சேத்து (1)

உறுப்பும் கருத்தும் ஐயமும் சேத்து எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 554/2
மேல்

சேத்தும் (1)

பூவலும் படீரமும் சேத்தும் அரக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/3
மேல்

சேதகம் (2)

அளறு பூழி அளக்கர் சேதகம்
அசறு பங்கம் அள்ளல் குழை தொளி – 4.அவனி :4 159/1,2
சேறும் செந்நிறமும் சேதகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 553/1
மேல்

சேதம் (1)

வழுவு சிதைவு மங்குதல் சேதம்
அழிவு சிந்துதல் நந்துதல் முரிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 154/1,2
மேல்

சேதனன் (1)

பசு உயிர் சீவன் புற்கலன் சேதனன்
அணு இயமானன் ஆதன் செந்து – 2.வானவர் :2 220/1,2
மேல்

சேதா (1)

தேனு சுரை பத்திரை கபிலை சேதா
ஆவே சுரபி ஆன் பசு ஆகும் – 8.மாப்பெயர் :8 148/2,3
மேல்

சேதாம்பல் (2)

சேதாம்பல் அரக்காம்பல் செவ்வாம்பல் செங்குமுதம் – 9.மரப்பெயர் :9 370/1
வெள்ளாம்பல் சேதாம்பல் என்று இரு விகற்பம் – 9.மரப்பெயர் :9 374/1
மேல்

சேதாரம் (1)

ஆமிரம் சககாரம் சேதாரம் தேமா – 9.மரப்பெயர் :9 59/1
மேல்

சேதித்தல் (1)

சேதித்தல் கொய்தல் அறுத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 387/2
மேல்

சேதிமம் (1)

சினகரம் சேதிமம் சிதேந்திரம் கோட்டம் – 4.அவனி :4 217/1
மேல்

சேதுவும் (2)

சேதுவும் அணையும் குரம்பும் குலையும் – 4.அவனி :4 163/1
விடயமும் சேதுவும் மெத்தையும் சயனமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
மேல்

சேந்தன் (1)

சேந்தன் குறிஞ்சிக்கிழவன் செட்டி – 2.வானவர் :2 18/4
மேல்

சேந்தும் (1)

செக்கரும் செம்மையும் சேந்தும் பாடலமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/4
மேல்

சேப்பும் (1)

அத்தும் அருணமும் அரத்தமும் சேப்பும்
சோணமும் குருதியும் துவரும் சிந்தூரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/1,2
மேல்

சேம்பு (1)

சாகினி சேம்பு சகுடம் ஆகும் – 9.மரப்பெயர் :9 272/1
மேல்

சேம்பும் (1)

கீரைத்திரளும் சேம்பும் சாகினி – 10.ஒருசொல்பல்பொருள்:10 460/1
மேல்

சேமம் (1)

சேமம் நவநிதி – 2.வானவர் :2 79/1
மேல்

சேமமும் (2)

சிறையும் அரணும் சேமமும் செயலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 67/1
இரவும் சேமமும் ஏமாப்பும் மயக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 201/2
மேல்

சேமரம் (2)

அழிஞ்சில் சேமரம் அங்கோலம் ஆகும் – 9.மரப்பெயர் :9 81/1
எகினே சேமரம் ஆண்மரம் என்ப – 9.மரப்பெயர் :9 124/1
மேல்

சேய் (3)

சேய் இவை செவ்வாய் சிறந்த பெயரே – 2.வானவர் :2 138/5
புத்திரன் பிறங்கடை எச்சம் சேய் மைந்தன் – 5.ஆடவர் :5 195/4
சிறுவனும் நீளமும் சேய் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 555/2
மேல்

சேய்மையும் (1)

சேணும் நீளமும் சேய்மையும் தூரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 461/1
மேல்

சேயே (1)

சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் – 2.வானவர் :2 18/2
மேல்

சேர் (4)

சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே – 2.வானவர் :2 16/3
சேக்கை விலங்கின் சேர் துயில் இடமே – 4.அவனி :4 261/2
கற்பகம் சேர் கொடி காமவல்லி – 9.மரப்பெயர் :9 3/1
சலஞ்சலமும் ஒளி சேர் சங்கும் பணிலம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 735/1
மேல்

சேர்த்தி (1)

மீட்டு ஒரு பேரின் விரைந்து அதில் சேர்த்தி
ஊரும் பேரும் ஒருங்கே பறித்து – 6.அநுபோக :6 270/2,3
மேல்

சேர்தல் (1)

சிவயோகம் சேர்தல் தியானம் ஆகும் – 3.ஐயர் :3 114/2
மேல்

சேர்ந்த (5)

செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும் – 0.பாயிரம்:0 2/10
ஊரொடு சேர்ந்த சோலை வனம் என்ப – 9.மரப்பெயர் :9 192/1
மலையொடு சேர்ந்த சோலை ஆராமம் – 9.மரப்பெயர் :9 193/1
செய்குன்று சேர்ந்த சோலை தோப்பு ஆகும் – 9.மரப்பெயர் :9 195/1
பதியொடு சேர்ந்த பைம்பொழில்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 782/1
மேல்

சேர்ந்தது (1)

சித்திரமாளிகை சேர்ந்தது ஓர் உறுப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 165/2
மேல்

சேர்ந்தோர் (1)

சேர்ந்தோர் மித்திரர் பெயர் என செப்புவர் – 5.ஆடவர் :5 221/3
மேல்

சேர்ப்பன் (1)

மெல்லன் புலம்பன் தண்கடல் சேர்ப்பன்
துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன் – 4.அவனி :4 155/1,2
மேல்

சேர்பு (1)

மனை நகர் சேர்பு வசதி அகம் இல் – 4.அவனி :4 219/1
மேல்

சேர்விடம் (1)

அம்பரம் சேர்விடம் துயில்இடம் ஆகும் – 4.அவனி :4 260/4
மேல்

சேர்வு (1)

சேரி மண்டிலம் சேர்வு குப்பம் – 4.அவனி :4 28/3
மேல்

சேர்வும் (1)

வழியும் சேடும் சேர்வும் திரளே – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/4
மேல்

சேர (1)

சேர உரைப்பன் தெள்ளிதின் தெரிந்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 524/2
மேல்

சேரன் (1)

மலையன் மலையமான் சேரன் பெயரே – 5.ஆடவர் :5 20/6
மேல்

சேரனும் (1)

உடும்பும் குழலும் காற்றும் சேரனும்
ஒழுங்கும் இயமும் கோதை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 424/2,3
மேல்

சேரன்ஊர்மா (1)

பாடலம் என்பது சேரன்ஊர்மா – 8.மாப்பெயர் :8 142/1
மேல்

சேரார் (1)

பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார்
தெவ்வர் அடையலர் தரியலர் தெறுநர் – 5.ஆடவர் :5 222/4,5
மேல்

சேரி (4)

பாடி என்பது சேரி ஆகும் – 4.அவனி :4 26/1
சேரி மண்டிலம் சேர்வு குப்பம் – 4.அவனி :4 28/3
சேரி என்ப சிரேணியும் அதற்கே – 4.அவனி :4 198/2
வாசிகை என்பது வைசியர் சேரி – 4.அவனி :4 200/1
மேல்

சேரியும் (2)

சிலதியும் விஞ்சையர் சேரியும் சேடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 550/1
வடகாற்றும் சேரியும் ஓர் மருந்தும் வாடை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1019/1
மேல்

சேரின் (1)

செந்தழல் என்னும் தீ கணம் சேரின்
தேசம் போக்குதல் செல்வத்தை பிரித்தல் – 6.அநுபோக :6 251/2,3
மேல்

சேரும் (1)

சேரும் கடிகையும் அளவையும் நாழி – 10.ஒருசொல்பல்பொருள்:10 693/2
மேல்

சேலை (1)

சம்படம் பட்டி சாடி சேலை
மடியே சீரை வட்டுடை கோசிகம் – 6.அநுபோக :6 172/6,7
மேல்

சேவகம் (1)

சேவகம் சாலை சேக்கை அது துயில்இடம் – 4.அவனி :4 239/1
மேல்

சேவகமும் (1)

வலியும் சேவகமும் வம்பும் மறமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 909/2
மேல்

சேவல் (3)

கொடி சேவல் ஆகும் – 2.வானவர் :2 20/2
வழாஅ ஆணின் பெயர் சேவல் ஆகும் – 8.மாப்பெயர் :8 90/2
கோழியும் அன்னமும் சேவல் ஆகும் – 8.மாப்பெயர் :8 260/1
மேல்

சேவலங்கொடியோன் (1)

சேவலங்கொடியோன் தேவ சேனாபதி – 2.வானவர் :2 18/12
மேல்

சேவலும் (1)

ஓரியும் சேவலும் விலங்கின் ஆண் பெயர் – 8.மாப்பெயர் :8 245/4
மேல்

சேவும் (1)

பகடும் சேவும் ஒருத்தலும் தகரும் – 8.மாப்பெயர் :8 245/2
மேல்

சேற்று (2)

கொப்புள் பொகுட்டு சேற்று எழு குமிழி – 4.அவனி :4 161/1
சேற்று எழு மொக்குளும் மலையும் பங்கய – 10.ஒருசொல்பல்பொருள்:10 861/1
மேல்

சேறல் (1)

படர்தல் சேறல் ஒடுங்கல் தீர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 447/1
மேல்

சேறும் (10)

கலவை சேறும் காலேக வண்ணமும் – 6.அநுபோக :6 206/1
ஓதும் சேறும் உற்சவம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 280/2
அளமும் சேறும் அளக்கர் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 74/2
நரகமும் சேறும் அளறு என நவில்வர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 75/1
யானையும் நரகமும் சேறும் கும்பி – 10.ஒருசொல்பல்பொருள்:10 365/1
ககனமும் சங்கும் சேறும் காடும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 378/1
சேறும் ஒழுக்கமும் காவலும் செய்யல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 542/1
சேறும் செந்நிறமும் சேதகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 553/1
இன்பமும் சேறும் தொய்யல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 659/1
சேறும் துகிலும் இடரும் பங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 717/1
மேல்

சேறே (2)

இசைந்த இருபத்தொன்றும் சேறே – 4.அவனி :4 159/6
நொளிலும் ஊழிலும் அருவருப்பு உறு சேறே – 4.அவனி :4 160/1
மேல்

சேனம் (1)

பாறு சேனம் கங்கம் பருந்தே – 8.மாப்பெயர் :8 18/1
மேல்

சேனாபதி (1)

சேவலங்கொடியோன் தேவ சேனாபதி
பாவகி ஆசான் கலைஅறிபுலவன் – 2.வானவர் :2 18/12,13
மேல்

சேனாபதியர் (1)

மந்திரியர் புரோகிதர் சேனாபதியர்
தந்திர தூதர் சாரணர் என்று இவர் – 5.ஆடவர் :5 44/1,2
மேல்

சேனாமுகம் (1)

சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் – 6.அநுபோக :6 542/1
மேல்

சேனாமுகமே (1)

பதாதி மும்மடி சேனாமுகமே – 6.அநுபோக :6 541/1
மேல்

சேனை (3)

சேனை நியமம் கடைத்தெரு என்ப – 4.அவனி :4 192/2
சேனை நியமம் சிறகு ஞெள்ளல் – 4.அவனி :4 193/2
சேனை பகுதி பாடி பலம் படை – 6.அநுபோக :6 400/3
மேல்

சேனைகாப்போரும் (1)

மந்திரிப்பெயரும் சேனைகாப்போரும்
மறவரும் மயிர்வினைஞரும் ஏனாதியர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 206/1,2
மேல்

சேனையும் (5)

காடும் சேனையும் வெளியும் ககனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 228/1
சேனையும் ஊரும் ஓர் ஆறு எண்ணும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 236/2
படுக்கையும் சேனையும் கலப்பையும் படையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 729/2
பழமும் கிழங்கும் காயும் சேனையும்
நிறையும் பேறும் பலம் என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 763/1,2
சேனையும் மேற்கட்டியும் செப்பல் வேண்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/2
மேல்