தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
0.காப்பு
1.தேவப் பெயர்த் தொகுதி
2.மக்கள் பெயர்த் தொகுதி
3.விலங்கின் பெயர்த் தொகுதி
4.மரப் பெயர்த் தொகுதி
5.இடப் பெயர்த் தொகுதி
6.பல் பொருள் பெயர்த் தொகுதி
7.செயற்கை வடிவின் பெயர்த் தொகுதி
8.பண்புப் பெயர்த் தொகுதி
9.செயல் பற்றிய பெயர்த் தொகுதி
10.ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
11.ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி
12.பல் பெயர்க்கொரு பெயர்த் தொகுதி
காங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு
** அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது * 1858
@0 காப்பு
#1
** காப்பு
சொல்லும் திவாகரமும் சூடாமணி முதலா
கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள்
அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இவ் உரிச்சொல்
இன்று இசைக்க ஏகபரன் காப்பு
@1 தெய்வப் பெயர்த் தொகுதி
** சிவன் பெயர்
#1
சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன்
ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை
வெற்பன் விடையன் விமலன் உருத்திரன்
நல் பன்னகப்பூணினான்
** 12 பெயர்கள்
#2
காலகாலன் நீலகண்டன் கபாலி திரி
சூலதரன் சடையன் சோமதரன் ஆலமுண்டோன்
நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன்
ஆறானனன்தாதையாம்
** 13 பெயர்கள்
#3
அரவன் புராரி வரன் நக்கன் ஆதி
பரமன் பரசுதரன் பித்தன் அரனே
கிரியைவளைத்தோன் கிரிசன் கிரீசன்
வரி உழுவைத்தோலுடுத்தவன்
** 13 பெயர்கள்
#4
ஐந்துமுகத்தோன் அழலாடி அண்டர் எலாம்
உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திடும் தந்தி
உரியன் பினாகி உமாபதி மாதேவன்
பர அரிய பூதபதி
** 8 பெயர்கள்
#5
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும்
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர்க்
கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன்
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம்
** 9 பெயர்கள்
#6
** உமையின் பெயர்
ஆரியை ஐயை அயிராணி அம்பிகை
நாரி பரை அமலை நாயகி சார் இமய
வல்லி சிவை சாம்பவி மாதா உருத்திரை
வெல்லும் விமலை உமை
** 14 பெயர்கள்
#7
** காளியின் பெயர்
தாருகன்காய்ந்தாள் பைரவி சாமுண்டி
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில்
ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்
காளி இவை காளியின் பேர
** 7 பெயர்கள்
#8
** துர்க்கையின் பெயர்
இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி
சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி
வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை
ஐயை அடல் ஆரியையுமாம்
** 10 பெயர்கள்
#9
** விநாயகன் பெயர்
அங்குசபாசதரன் ஆகுவாகனன்
ஐங்கரத்தோன் ஆறு நிகர் மும்மதத்தன் கங்கை தரு
மைந்தன் இரு மருப்பு மாமுகன் நால்வாயன் ஒற்றைத்
தந்தனுடன் ஏரம்பன்தான்
** 9 பெயர்கள்
#10
பால் புரை நீற்றான்மகன் பார்ப்பதிமைந்தன்
மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன்
முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை
இன்னே விநாயகன் பேராம்
** 8 பெயர்கள்
#11
** கந்தன் பெயர்
ஆறிரண்டுதோளான் அயிலான் மயிலூர்தி
ஆறுமுகத்தான் அமரர்க்காய்ச் சீற உணர்
போர்தடிந்தான் தாரகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான்
சூர்தடிந்தான் ஈசன்சுதன்
** 9 பெயர்கள்
#12
முருகன் விசாகன் முருகு செவ்வேள் மாயோன்
மருகன் குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன்
கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பின்
மங்கைமகன் கந்தன் பேராம்
** 12 பெயர்கள்
#13
** மாலின் பெயர்
நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர்
கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன்
ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன்
மாயன் உலகளந்தான் மால்
** 14 பெயர்கள்
#14
** செந்திருவின் பெயரும் மன்மதன் பெயரும்
தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி
மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம்
மன்மதனன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு
வில் மதனன் வில் பகழி வேள்
** 5, 5 பெயர்கள்
#15
காமன் இரதிபதி சம்பரசூதனன்
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்
மைந்தன் மகரக்கொடியோன் மனோபவன் அம்
பைந்துடையோன் கந்தர்ப்பனாம்
** 10 பெயர்கள்
#16
** மூதேவியின் பெயர்
கேட்டை கெடலணங்கு கேடுள்ளாள் மூதேவி
சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை
கர்த்தபத்துவாகனியாள் காகக்கொடிப்பரித்தாள்
அத்தமகட்கே மூத்தாளாம்
** 10 பெயர்கள்
#17
** பிரமன் பெயர்
பிரமன் பிதாமகன் நான்முகன் போதன்
இரணியகருப்பன் இறை சூதன் பரமேட்டி
தாதா விரிஞ்சன் அயன் சம்பு சதானந்தன்
வேதா விதாதா விதி
** 15 பெயர்கள்
#18
** நாமகள் பெயரும் பொன்னுலகின் பெயரும்
நாமகள் பாரதி வாணி கலைமகள்
பூமகன்தேவியாம் பொன்னுலகின் நாமம்
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம்
விரி துறக்கம் மேலுலகம் விண்
** 4, 8 பெயர்கள்
#19
** இந்திரன் பெயர்
மகவான் புரந்தரன் வச்சிரபாணி
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி
அந்தரநாதன் அயிராபதப்பாகன்
இந்திரன் வானோர்க்கிறை
** 9 பெயர்கள்
#20
** அமரர் பெயர்
அமுதாசனர் விபுதர் ஆதித்தர் விண்ணோர்
இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர்
வரர் தானவர்பகைவர் பொன்னுலகில்வாழ்நர்
சுரர் வானவர் சுவர்க்கத்தோர்
** 14 பெயர்கள்
#21
** அசுரர் அரக்கர் பெயர்கள்
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர்
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனி
கரப்போர் நிருதர் நிசாசரர் கார்வண்ணர்
அரக்கர் பிசிதாசனர்
** 4, 5 பெயர்கள்
#22
** பூதம் பேய் பெயர்கள்
ஆய குறள் கூளி பாரிடம் பூதம்
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம்
வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு
ஓதும் பிரேதம் பிணம்
** 3, 14 பெயர்கள்
#23
** குபேரன் பெயர்
நிறைசெல்வன் புட்பகத்தோன் மிக்க நிதியோன்
குறைவில் தனன் கூற்றை உதைத்த இறைவற்கு
அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான்
குபேரன் அளகையார்கோன்
** 7 பெயர்கள்
#24
** இயமன் வருணன் பெயர்கள்
சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று
நமன் நடுவன் காலன் தருமன் இயமன்
வல நதிகேள்வன் வருணபகவான்
சலபதி பாசதரன்
** 9, 3 பெயர்கள்
#25
** நதி கங்கை பெயர்கள்
தீபவதி சிந்து உததி துனி தடினி
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர்
பாகீரதி விமலை கங்கை திரிபதகை
நாகாலயத்தோர் நதி
**8 , 4 பெயர்கள்
#26
** புனல் பெயர்
வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம்
நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம்
பயம் உதகம் பானீயம் அம் கமலம் பாணி
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம்
** 21 பெயர்கள்
#27
வார் வருணம் மேகம் அலர் ஆலமே அளகம்
சீவனீயம் அம்புதம் புட்கரம் சீவனம்
சம்பரம் காண்டம் கனரசம் கோ அறல்
அம் புனலின் நாமங்களாம்
** 15 பெயர்கள்
#28
** எரி பெயர்
சாதவேதாவே தபனன் தனஞ்சயன்
சோதி உதாசனனே தூமகேது
சுசியே சுவலனே சித்திரபானு
வசு அரி அவ் வாயு சகன்
** 12 பெயர்கள்
#29
** எரி காற்று பெயர்கள்
கனல் தீ தழல் அழல் பாவகன் வன்னி
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால்
ஊதை பவனன் உயிர்ப்பு ஒலி வங்கூழ் சலனன்
வாதம் வளி மாருதம்
** 9, 11 பெயர்கள்
#30
கந்தவகனே சமீரன் சதாகதி
கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு
அரி மாபலனே காற்றாம்
** 12 பெயர்கள்
#31
** ஆகாயம் மழை பெயர்கள்
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில்
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் சீமுதம்
வார் புயல் மை மாரி மழை
** 8, 13 பெயர்கள்
#32
** சூரியன் பெயர்கள்
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன்
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி
உதயன் ஆதித்தன் தினகரன் பானு
கதிரவன் சூரியனாம் காண்
** 14 பெயர்கள்
#33
** சந்திரன் பெயர்
அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன்
குமுதச்சகாயன் குபேரன் இமகரன்
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி
சந்திரன் சோமன் சசி
** 14 பெயர்கள்
#34
** செவ்வாய் புதன் பெயர்கள்
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன்
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல்
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன்
அவ்வாய் கணக்கன் மால் ஆம்
** 8, 6 பெயர்கள்
#35
** வியாழன் வெள்ளி சனி பெயர்கள்
அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி
சுரர்குரு ஆகும் வியாழன் மருவு புகர்
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி
மைக் காரி மந்தன் சனி
** 6, 6, 2 பெயர்கள்
#36
** மேடம் இடபம் மிதுனம் கர்க்கடகம் பெயர்கள்
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை
ஏறு விடை மூரி இடபமாம் தேறும் யாழ்
தண்டு விழவு சவை இரட்டையாம் மிதுனம்
நண்டு நள்ளி கர்க்கடகமாம்
** 3, 3, 5, 2 பெயர்கள்
#37
** சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனு பெயர்கள்
கொலை அரி யாளி கொடும்புலி சிங்கம்
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்காம் துலை நிறை
தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால்
தாக்கும் சிலை வில் தனு
** 3, , 3, 1, 2 பெயர்கள்
#38
** மகரம் கும்பம் மீனம் பெயர்கள் இராசியின் பெயர்
வடி மீன் கலை சுறா மானே மகரம்
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை
வன்மீன் சலசர மச்சம் இவை மீனம்
எல் ஓரை ராசி இவையாம்
** 4, 3, 4, 2 பெயர்கள்
#39
** விண்மீன் திக்கு பெயர்கள்
தாரகை சோதி தாரை தாராகணம்
ஏர் ஒளி சுக்கை உடு விண்மீனின் பேராம்
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம்
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு
** 7, 8 பெயர்கள்
#40
** தினம் பகல் இரவு பெயர்கள்
எல்லுத் திவசம் தினம் திவாவாம் பகல்
எல்லி விபாவரி யாமினி அல்லே
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம்
இரவின் பெயராம் இவை
** 2, 1, 9 பெயர்கள்
#41
** இடி மின் பெயர்கள்
வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடிய
சஞ்சலம் சம்பை சபலை கனருசி
மிஞ்சு தடித்தும் இவை மின்
** 5, 7 பெயர்கள்
** தெய்வப்பெயர்த் தொகுதி முற்றும்
@2 மக்கட்பெயர்த் தொகுதி
#1
** முனிவர் பெயர்
ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர்
பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர்
கனிமூலசாகாசனர் கோபங்காய்ந்தோர்
முனிவர் அறவோர் மொழி
** 10 பெயர்கள்
#2
** பார்ப்பார், அரசன் பெயர்
மறையவர் வேதியர் வையகத்தேவர்
அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன்
நரபதி கொற்றவன் வேந்தன் அரசன்
புரவலன் கோ பூபதி
** 5, 7 பெயர்கள்
#3
** வைசியர் சூத்திரர் பெயர்
ஒத்த பொருள்செய்வோர் அயனுருவில்வந்தோர்
முத்தொழிலோர் மொய் தனத்தோர் வைசியர் மெத்தும்
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்
தொழிலுடையோர் சூத்திரரேயாம்
** 5, 2 பெயர்கள்
#4
** மனிதர் புருடர் பெண் பெயர்
நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள்
புருடரே ஆடவர் ஆடூஉ அரிவை பிணா
அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள்
மங்கை மடந்தை பெண் பேர்
** 4, 2, 9 பெயர்கள்
#5
** பெரியோர் கீழோர் பெயர்
ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர்
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர்
புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார்
கல்லார் கயவர் கீழோர்
** 6, 8 பெயர்கள்
#6
** வேடர் ஆயர் பெயர்
குறவர் சவரர் புளினர் கிராதர்
மறவர் எயினர் விராதர் விறல் வேடர்
கானவர் அண்டர் போதுவரே கோபாலர்
ஆன் இடையர் ஆயர் பெயராம்
** 7, 5 பெயர்கள்
#7
** குழுவின் பெயர்
சவை தொகுதி சங்கம் கணம் சமவாயம்
அவை சமுதாயம் கதம்பம் நிவகமே
கோட்டி நிகாயம் சயம் சஞ்சயம் சமுகம்
கூட்டம் திரள் குழுவாய்த் கொள்
** 16 பெயர்கள்
#8
** வீரர் பெயர்
வீரர் மறவர் வயவர் மிகு மள்ளர்
தீரர் அபயர் செருத்தொழிலோர் சூரர்
பொருநர் அயிலுழவர் போகா விறலோர்
செருநரே மீளி எனச் செப்பு
** 12 பெயர்கள்
#9
** போரின் பெயர்
அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல்
சமர் எதிர்த்தல் சங்கரம் தாக்கல் சமிதி
செரு வெஞ்சமம் சங்கிராமம் திறல் ஆர்ப்பு
இரணம் சமீரம் போராம்
** 18 பெயர்கள்
#10
** பகைவர் பெயர்
துன்னாதார் தெவ்வர் அடங்காதார் மாற்றலர்
இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னார்
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர்
பற்றார் பரர் பகைவராம்
** 15 பெயர்கள்
#11
** உறவின் பெயர்
குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம்
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர்
பற்றாயர் பந்தம் விருந்தம் தொடர் ஒக்கல்
உற்றார் கிளைஞர் உறவு
** 18 பெயர்கள்
#12
** பிதா தாய் மகன் பெயர்
தாதை பிதா ஐயன் அப்பன் அத்தன் தந்தை
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய்
சந்ததி தோன்றல் தனையன் சேய் புத்திரன்
மைந்தன் புதல்வன் மகன்
** 5, 4, 7 பெயர்கள்
#13
** கணவன் மனைவி பெயர்
கணவன் பதி காந்தன் காதலன் நண்பன்
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன்
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி
சொல் தேவி காதலியாய்ச் சொல்
** 8, 6 பெயர்கள்
#14
** பேடி குறள் கூன் பிண்டமில்லா உறுப்பு
பேடி கிலீபம் அலி சண்டன் பெண்டகன்
நீடு குறள் வாமனம் ஆகும் கோடிய
கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா
ஊன் பிண்டம்இல்லா உறுப்பு
** 4, 1, 2, 1 பெயர்கள்
#15
** உடம்பின் பெயர்
புரம் கடம் விக்கிரகம் புற்கலம் தேகம்
குரம்பை உடல் மேனி பிண்டம் நிரம்பு உருவம்
மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம்
காத்திரம் மெய் காயம் உடம்பாம்
** 18 பெயர்கள்
#16
** சீவன் மனது அறிவு தெளிவு பெயர்கள்
வந்துபோம் ஆவி பிராணன் உயிர் சீவன்
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம்
போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம்
தேற்றம் துணிவு தெளிவு
** 3, 4, 5, 2 பெயர்கள்
#17
** தலை முதுகு தாடி தேமல் பெயர்கள்
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம்
வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல்
தேமொழியார் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு
ஆம் என்று உரைப்பர் அறிந்தோர்
** 4, 1, 2, 4 பெயர்கள்
#18
** ஆண் மயிர் பெண் மயிர் பெயர்கள்
பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை
இங்கு இவையாம் ஆண்மயிர் பெண்மயிர் கொங்கார்
குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி
சுருள் அளகம் குந்தளமாய்ச் சொல்
** 6, 9 பெயர்கள்
#19
** நாக்கு பல் மூக்கு கண் நெற்றி பெயர்கள்
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு
மூக்கின் பேர் நாசி துண்டமாம் நோக்கம்
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின்
பெயர் நுதல் நெற்றியின் பேர்
** 2, 3, 2, 6, 1 பெயர்கள்
#20
** வயிறு கொப்பூழ் முலை மார்பு கை பெயர்கள்
வயிறு உதரம் உந்தி நாபியாம் கொப்பூழ்
குயம் முலை அம்மம் தனம் கொங்கை பயோதரம்
மொய் கதிர்ப் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு
கை புயம் தோள் அத்தம் கரம்
** 1, 2, 5, 3, 4 பெயர்கள்
#21
** விரல் நகம் கழுத்து செவி உதடு பெயர்கள்
விரல் அங்குலியாம் உகிர் நகம் ஆகும்
சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம்
களமாம் செவி கன்னம் காதாம் இதழ் என்று
உளதாம் உதட்டின் பெயர்
** 1, 1, 3, 2, 1 பெயர்கள்
#22
** தாள் முழந்தாள் தொடை அரை இடை பெயர்கள்
சரணம் பதம் பாதம் தாள் முழந்தாள் சானு
திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம்
அல்குல் நடுவு நுசுப்பு மருங்கு இவை
ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர்
** 3, 1, 3, 2, 3 பெயர்கள்
** இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி முற்றும்
@3 விலங்கின் பெயர்த்தொகுதி
#1
** சிங்கத்தின் பெயர்
முடங்குளை கோளரி கேசரி சிங்கம்
அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே
பஞ்சானனம் அரி கண்டீரவம் வயப்போத்து
அஞ்சா நகாயுதமே ஆம்
** 11 பெயர்கள்
#2
** புலியின் பெயர்
வெருஇல் வியாக்கிரம் திவ்வியம் சார்த்தூலம்
வரி உழுவை வேங்கை வயமா மிருகாரி
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு
புண்டரிகம் என்பர் புலி
** 12 பெயர்கள்
#3
** யானையின் பெயர்
தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல்
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு
போதகம் வாரணம் தந்தி உவா களிறு
மாதங்கம் நாகம் கைம்மா
** 19 பெயர்கள்
#4
** குதிரையின் பெயர்
குரகதம் வாசி குதிரை இவுளி
துரகம் புரவி துரங்கம் பரி அரி
கோடகம் வற்கச் சயிந்தவம் கந்திருவம்
ஆடல் வயம் மா அயம்
** 15 பெயர்கள்
#5
** பன்றியின் பெயர்
கருமாவே கேழல் எறுழி கோலம் சூ
கரம் ஏனம் கோணி வசாகம் புரோட்டம் அரி
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி
போர்த்தரும் பன்றியின் பேர்
** 15 பெயர்கள்
#6
** குரங்கின் பெயர்
பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம்
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன்
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி
கானவன் யூகம் கவி
** 14 பெயர்கள்
#7
** கரியகுரங்கு, முசு, கழுதை ஒட்டகம் உடும்பு பெயர்கள்
கரியகுரங்கு யூகம் முசு கோலாங்கூலம்
கரமொடு வாலேபம் கழுதை கரபம்
இரவணம் தாசோகம் ஒட்டகமாம் ஒட்டை
உரம் மிகு கோதா உடும்பு
** 1, 1, 3, 3, 1 பெயர்கள்
#8
** கரடி இரலை பெயர்கள்
வெண்பல்ல வல்லூகம் வேக உளியம் எலு
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு
கவை நெடும் கோட்டுக் கலை புல்வாய் நவ்வி
இவையாம் இரலையின் பேர்
** 7, 5, 3 பெயர்கள்
#9
** மான், நரி, ஆமா பெயர்கள்
அருணம் உழை சாரங்கம் ஏணம் குரங்கம்
மிருகம் மறி மான் இகலன் சிருகாலன்
கோமாயு சம்புகம் பூரி குரோட்டம் நரி
ஆமாவின் பேர் கவையம் ஆம்
** 7, 6, 1 பெயர்கள்
#10
** ஆவின் பெயர்
தேனுவும் பெற்றமும் கோவும் செழும் பசுவும்
ஆனும் சுரபியும் மாவாகு மானேறு
இடபம் விடை எருது கோபதி புல்லம்
திட மூரி புங்கவஞ் சே
** 6, 8 பெயர்கள்
#11
** கருவழலை கீரி அண்டங்காக்கை நிலாமுகி பெயர்கள்
கருதும் இராசமாநாகம் கருவழலை
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை
காலோலமே அண்டங்காக்கை நிலாமுகி
பாலார் சகோரம் எனப் பார்
** 1, 2, 1, 1 பெயர்கள்
#12
** சிள்வீடு காடை நீர்ப்பட்சி பெயர்கள்
சில்லிகை சில்லை நெடில் சிமிலி சிள்வீடு
ஒல்லிய காடை குறும்பூழே சொல்லிடில்
உன்னம் கிராமமாம் உற்குரோசத்தினொடு
கின்னரம் நீர்ப்பட்சி எனக் கேள்
** 4, 1, 4 பெயர்கள்
#13
** ஓந்தி கருப்பைஎலி ஆகு அணில் பெயர்கள்
கோம்பி சரடம் காமரூபி கொடு முசலி
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம்
வேக எலி கருப்பை வெவ் இரும்பன் மூடிகம் நல்
ஆகு வெளில் அணிலேயாம்
** 5, 1, 1, 1 பெயர்கள்
#14
** எருமை செம்மறியாடு வெள்ளாடு பெயர்கள்
கரு மயிடம் கவரி கார் மேதி காரா
எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை
ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை
சாகளம் சாகம் வெள்ளாடு
** 4, 3, 4 பெயர்கள்
#15
** முயல் நாய் பெயர்கள்
தக்க அயமும் அசமும் முயல் சுணங்கன்
குக்கன் எகின் சாரமேயன் சுனகன் மிக்க சுவா
கோளிரை தேரும் எகினம் கொடு முடுவல்
ஞாளி ஞமலி இவை நாய்
** 2, 10 பெயர்கள்
#16
** பாம்பின் பெயர்
வெஞ்சினக் காத்திரவேயம் விடதரம்
கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ்
கூடபதம் சக்கிரி கும்பீநசம் அரி
ஆடும் பவனாசனம்
** 10 பெயர்கள்
#17
** பாம்பின் பெயர் (தொடர்ச்சி)
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்த
சூகம் அகி மாசுணம் சர்ப்பம் போகி
உரகமே சிம்மதம் பன்னகம் பாந்தள்
அரவு வியாளம் பாம்பு ஆம்
** 15 பெயர்கள்
#18
** பாம்பின் பெயர் (தொடர்ச்சி), நஞ்சு படம்
கோலம் மராளம் கவைநா கூறில் அதன்பாலாம்
ஆலமுடன் கரளம் காரியே நீலம்
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம்
படம் பை விரிந்த பணம்
** 3, 8, 2 பெயர்கள்
#19
** மரை முள்மா பூனை கவரிமா பெயர்கள்
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும்
தாவும் எய்யே முள்மா சல்லியம் மேவிய
மீன் கவர் மார்ச்சாரம் வெருகு விலாளம் பூனை
வான் கவரிமாச் சவரி ஆம்
** 1, 2, 3, 1 பெயர்கள்
#20
** கருடன் மயில் குயில் பெயர்கள்
ககபதி நாகாசனனே கலுழன்
இகல் வயினதேயன் கருடன் சிகியே
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி
குயிலாம் பிகம் கோகிலம்
** 4, , 2 பெயர்கள்
#21
** வண்டு கிளி பெயர்கள்
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி
அரி அறுகால் ஞிமிறு கழுது பிரமரம்
கள்ளூண் சாரங்கம் சுரும்பு இவை வண்டாம் அரி
கிள்ளை சுகம் தத்தை கிளி
** 14, 4 பெயர்கள்
#22
** அன்னம் புறவு பருந்து பெயர்கள்
சிறை அஞ்சம் வக்ராங்கம் சீர் விகங்கம் நீரில்
உறை எகினம் ஓதிமம் அன்னம் புறவு
திருந்தும் பாராவதம் தீதில் கபோதம்
பருந்து சேனம் கங்கம் பாறு
** 5, 2, 3 பெயர்கள்
#23
** சக்கரவாகம் ஊர்க்குருவி செம்போத்து
** வெண்குருகு பூவை பெயர்கள்
சக்கரவாகம் கோகம் சக்கரம் நேமிப்புள்
தக்க சகடம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கிலாம்
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம்
அம் பூவை சாரிகையே ஆம்
** 3, 2, 1, 2, 1 பெயர்கள்
#24
** கோழி கொக்கு ஆந்தை காக்கை பெயர்கள்
குக்குடம் வாரணம் கோழி சரணாயுதம்
கொக்கு பலாகம் புதா போதா பொற்கண்
இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை
கரடம் கொடி காக்கை ஆம்
** 3, 3, 4, 2 பெயர்கள்
#25
** மீன் ஆமை முதலை நண்டு கறையான் பெயர்கள்
மச்சம் சகுலி சலசரம் மீன் ஆகும்
கச்சபம் ஆமை கரா முதலை நெய்த்த
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி
தெளியும் கறையான் சிதல்
** 3, 1, 1, 4, 1 பெயர்கள்
** மூன்றாவது விலங்கின்பெயர்த்தொகுதி முற்றும்
@4 மரப்பெயர்த் தொகுதி
#1
** மரம் இலந்தை அதன் கனி கொடி பெயர்கள்
தரு விடபி பாதவம் பூருகம் சாதி
துருமம் அகமம் தாரு சாலம் மரமாம்
எழில் இலந்தை கோற்கோடியின் கனிதான் கோலம்
கொழு மலர் வல்லி கொடி
** 9, 1, 1, 1 பெயர்கள்
#2
** சோலை காடு பெயர்கள்
வண்டு அமர் சோலை மலர்ப் பொழில் ஆராமம்
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம்
கானகம் ஆரணியம் காடு
** 5, 7 பெயர்கள்
#3
** இலை முகை பெயர்கள்
தலம் அடை பன்னம் பலாசம் சதனம்
இலை சதம் பத்திரம் என்பர் கலிகை
முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு
முகிழம் அரும்பு முகை
** 7, 8 பெயர்கள்
#4
** கிழங்கு வேர் கொப்பு தளிர் பெயர்கள்
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர்
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல்
பொங்கர் சினை சாய்கை கொப்பு முறி பல்லவம்
அம் கிசலையம் தளிர்ப் பேர்
** 1, 4, 8, 3 பெயர்கள்
#5
** பூ பூங்கொத்து குலை பழம் பெயர்கள்
மணம் மலி பூவே மலர் போது அலராம்
துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணரே
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு
பலம் காய் கனியாம் பழம்
** 3, 5, 1, 3 பெயர்கள்
#6
** கதிர் தோல் கொட்டை முளை
** அங்குரித்தல் குருத்து பெயர்கள்
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல்
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம்
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும்
பாலார் குருத்து பயின்
** 1, 1, 2, 1, 1 பெயர்கள்
#7
** நாற்றம் மது பெயர்கள்
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம்
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர்
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு
மட்டு மகரந்தம் மது
** 10, 8 பெயர்கள்
#8
** நொச்சி குளநெல் கோரை செந்நெல் கரும்பு பெயர்கள்
வளர் நொச்சியாம் சிந்துவாரம் நீர்வாரம்
குள நெல் எருவை சாய் கோரை கள கனம்
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி
கன்னல் இக்கு வேழம் கரும்பு
** 1, 1, 3, 3, 3 பெயர்கள்
#9
** எருக்கு ஆத்தி முருக்கு குருக்கத்தி
** வேம்பு மகிழ் பாதிரி பெயர்கள்
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி
முருக்குக் கவிர் கிஞ்சுகம் ஆகும் குருக்கத்தி
மாதவி ஆம் நிம்பம் வேம்பு மகிழ் வகுளம்
பாதிரி பாடலமே ஆம்
** 1, 2, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
#10
** அரசு மருது மா பலா சுரபுன்னை மாதளை பெயர்கள்
அரசு திருமரம் பிப்பிலம் போதி
மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும்
சூதம் பனசம் பலா சுரைபுன்னை வழை
மாதுளங்கம் ஆம் மாதளை
** 3, 1, 2, 1, 1, 1 பெயர்கள்
#11
** பனை நாவல் கடம்பு கமுகு புன்னை தேக்கு பெயர்கள்
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல்
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம்
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு
** 2, 1, 2,1, 2, 1 பெயர்கள்
#12
** தெங்கு வாழை தாழை கொன்றை கோங்கு பெயர்கள்
தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு
வாழை கதலி மடல் கைதை தாழை
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை
கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு
** 2, 1, 1, 3, 1 பெயர்கள்
#13
** அகில் அத்தி புன்கு இலவு ஈந்து அலரி பெயர்கள்
அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி
தகைசேரும் காஞ்சனம் புன்கு நிகர்இல்
இலவம் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம்
அலரி கரவீரம் ஆம்
** 1, 2, 1, 1, 1, 1 பெயர்கள்
#14
** அசோகு குருந்து வெட்பாலை சந்தனம் பெயர்கள்
பிரமதருவாம் பலாசம் செயலை
அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர்க்
குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை
சந்தனம் ஆரம் சாந்தம் சந்து
** 2, 1, 1, 3 பெயர்கள்
#15
** கடு நெல்லி தான்றி வில்வம் விளவு ஆல் அழிஞ்சி பெயர்கள்
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம்
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம்
மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம்
ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம்
** 1, 1, 1, 2, 1, 1, 1 பெயர்கள்
#16
** தேவதாரு குரா ஆச்சா நீர்வஞ்சி ஏலம் பெயர்கள்
சுரதுருமம் தேவதாரு துணர்ப் பூம்
குராமரம் கோட்டம் ஆம் ஆச்சா மராமரம்
சாலம் வானீரம் நீர்வஞ்சி ஆஞ்சியோடு
ஏலம் ஆம் என்பர் துடி
** 1,1, 2, 1, 2 பெயர்கள்
#17
** இஞ்சி மிளகு திப்பிலி இருப்பை காயா பெயர்கள்
கா மலி ஆத்திரதம் இஞ்சி கறி மரிசம்
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம்
அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம்
கட்டரும் பூவை காயா
** 1, 2, 1, 4, 1 பெயர்கள்
#18
** மல்லி சண்பகம் இருவாட்சி முல்லை அவுரி பெயர்கள்
மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்தியோடு
எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம்
மாலதியே முல்லை மௌவல் தளவு ஊதிகை
நீலி நிகழ் அவுரி ஆம்
** 1, 2, 1, 4, 1 பெயர்கள்
#19
** மூங்கில் பெயர்கள்
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல்
காம்பு திகிரி கழை
** 22 பெயர்கள்
#20
** வள்ளை சேம்பு ஆம்பல்
** செங்குவளை கருங்குவளை பெயர்கள்
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம்
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம்
செங்குவளை இந்தீவரம் பானல் நீலமுடன்
பைம் குவளை நீலோற்பலம்
#21
** நந்தியாவர்த்தம் கொவ்வை செம்பரத்தை பெயர்கள்
வலம்புரி நந்தியாவர்த்தமே ஆகும்
குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும்
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் எனக்
கொண்டார் பெரியோர் குறி
** 1, 1, 1 பெயர்கள்
#22
** தாமரை பெயர்கள்
முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி
தண் தாமரை சலசம் வாரிசம் புண்டரிகம்
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம்
அம் கமலம் கோகனகம் ஆம்
** 13 பெயர்கள்
** நாலாவது மரப்பெயர்த்தொகுதி முற்றும்
@5 இடப்பெயர்த்தொகுதி
#1
** பூமி பெயர்கள்
அவனி பொழில் பார் அகலிடம் வையம்
புவனி புவி புடவி பூமி குவலயம்
ஞாலம் தரை தாரணி காசினி படி
தாலம் தரணி தலம்
** 17 பெயர்கள்
#2
** பூமி பெயர்கள் (தொடர்ச்சி)
வசுந்தரை பூ உலகு மண் கு நிலனே
வசுமதி சாந்தை வசுதை அசலை
உகமே மகி பொறை கோவே விபுலை
சகம் மேதினி தாத்திரி
** 18 பெயர்கள்
#3
** மலை பெயர்கள்
இரவி பருப்பதம் விண்டு நகம் மா
திரம் ஓதிமம் இறும்பு நாகம் தராதரம்
குத்திரம் பொச்சை சிலோச்சயம் கோத்திரம்
அத்திரி வேதண்டம் ஆம்
** 15 பெயர்கள்
#4
** மலை பெயர்கள் (தொடர்ச்சி)
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூ
தரம் அசலம் குன்று சைலம் கிரி கல்
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல்
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு
** 18 பெயர்கள்
#5
** சமுத்திரம் பெயர்கள்
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம்
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி
பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி
கார் ஆழி வாரி கடல்
** 18 பெயர்கள்
#6
** சமுத்திரம் பெயர்கள் (தொடர்ச்சி)
சலராசி தோயம் நதி அம்பரம் உப்பு
சலநிதியே உததி சிந்து சலதி
அளப்பரிய வெள்ளம் நதிபதி வீரை
அளக்கர் சமுத்திரமே ஆம்
** 13 பெயர்கள்
#7
** கிணறு, வயல் வரம்பு வரம்பருகு பாழ்நிலம் பெயர்கள்
செழு நீர்க் கிணறு ஆகும் கூவல் செறு செய்
கழனி பழனம் வயல் ஆம் பழைய
வரம்பு ஆம் குரம்பு வரம்பருகாம் கங்கு
கரம்பே உவர் ஆம் களர்
** 1, 4, 1, 1, 3 பெயர்கள்
#8
** கரை திரை குமிழி நுரை பெயர்கள்
கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்
லோலம் தரங்கம் அலை திரை வேலையில்
தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம்
பொங்கு நுரை என்றே புகல்
** 5, 3, 1, 1 பெயர்கள்
#9
** கைலாயம் மேரு பெயர்கள்
சைலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலைக்
கைலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார்
ஆலையம் பொன்னசலம் மேரு அமரர்க்காய்
வேலை விடமுண்டான்றன்வில்
** 3, 3 பெயர்கள்
#10
** இமயம் பொதியமலை பெயர்கள்
இமயம் மலையரசன் ஈசன்றன்பாகத்து
உமையாளைப் பெற்ற உரவோன் சிமயப்
பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு
மதி தமிழீந்தான்மலை
** 2, 3 பெயர்கள்
#11
** ஐந்து நிலம் உயரம் பள்ளம் பெயர்கள்
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை
நெய்தல் இவை ஐந்து நிலம் ஆகும் மை தீர்
நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும்
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம்
** 5, 4, 3 பெயர்கள்
#12
** சுடுகாடு குயவர்சூளை நிலப்பிளப்பு பெயர்கள்
ஈமம் மயானம் சுடலை சுடுகாடு
தூமம் மிகு சுள்ளை தொல் குயவர்தாம் மட்
கலம் சுடு சூளை கமரும் விடரும்
நிலப்பிளப்பு என்றே நிகழ்த்து
** 3, 1, 2 பெயர்கள்
#13
** துன்னர்க்கரிய இடம் கல் நெருங்கும் இடம்
** வெளி பக்கம் நடு பெயர்கள்
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம்
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம்
நள் இடை நாப்பண் நடு
** 2, 1, 1, 1, 3 பெயர்கள்
#14
** கீழுலோகம் நாகலோகம் நரகம் பெயர்கள்
வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம்
படர் நாகலோகம் பவனம் கடிய
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம்
நரகு நிரையம் நரகம்
** 1, 1, 6
#15
** வழி
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு
வதி இடவை மார்க்கம் வகுந்து பதமே
சரி கடறு தாரி இயவை நடவை
வரி சுரம் வட்டை வழி
** 19
#16
** தெரு அம்பலம் சந்தி அங்காடி
தெருவே மறுகு திகழ் வீதி ஞெள்ளல்
மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை
பூவணிச் சந்தி சிருங்காடகம் சதுக்கம்
ஆவணம் அங்காடி ஆம்
** 3, 2, 3, 1
#17
** மதில் கதவு நகரம்
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல்
கதவு அரணம் தோட்டி வாரி புதவு
அரரம் கபாடம் காப்பு நகரம்
புரம் நகரி ஆகும் புரி
** 5, 7, 3
#18
** வீடு திண்ணை முற்றம்
நகர் மாளிகை குலம் மாடம் பவனம்
அகம் மனை வீடு புக்கில்லம் புகல் ஆகும்
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம்
முன்றில் உயர் முற்றமே ஆம்
** 8, 1, 2
#19
** குளம்
இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம்
வட்டம் தடாகம் நளினி மலர்ப் பொய்கை
குட்டம் கிடங்கு குளம்
** 16
#20
** ஏகாந்தம் அரசன் மனை
நிசனம் தனியே நிர்ச்சனம் ஏகாந்தம்
நிசம் ஆம் ஒருவந்தம் வேறிடம் வசையில்லா
அந்தர்ப்புரம் கந்தவாரம் அரசனுடை
சந்தமனை வாழும் தலம்.
** 5, 2
** ஐந்தாவது இட ப்பெயர்த்தொகுதி முற்றும்
@6 பலபொருட்பெயர்த்தொகுதி
#1
** பொன் பெயர்கள்
சாமீகரம் சாதரூபம் தமனியம்
மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம்
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம்
புனை பூரி சந்திரம் பொன்
** 13 பெயர்கள்
#2
** வெள்ளி செம்பு பித்தளை வெண்கலம் பெயர்கள்
தாரம் இரசதம் வெள்ளி களதவுதம்
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம்
ஆரகூடத்தோடு இரதி ஆம் பித்தளை
ஆர் வெண்கலம் கஞ்சம் ஆம்
** 3, 2, 2, 1 பெயர்கள்
#3
** இரும்பு ஈயம் தரா பளிங்கு
** சந்திரகாந்தம் சூரியகாந்தம் பெயர்கள்
இரும்பு அயம் கொல்லே இடும் சீருள் ஈயம்
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும்
சும்பகம் சந்திரகாந்தம் சுடும் தீக்கல்
பம்பு சுடர்க்காந்தம் பார்
** 2, 1,1,1,1,1 பெயர்கள்
#4
** சங்கு முத்து பவளம் பெயர்கள்
வலம்புரி கோடு வளை கம்பு நத்து
சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு
வித்துருமம் வில் பவளம் ஆம்
** 7, 3, 3 பெயர்கள்
#5
** நவமணிகள் பெயர்கள்
மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி
பூணும் வைடூரியம் வைரம் பேணும்
பவளமே கோமேதகம் புருடராகம்
நவமணியின் நாமங்கள் ஆம்
#6
** சோறு பெயர்கள்
இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம்
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம்
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ்
அடிசில் மிசை சரு சோறு ஆம்
** 18 பெயர்கள்
** ஆறாவது பலபொருட்பெயர்த்தொகுதி முற்றும்.
@7 செயற்கைவடிவப் பெயர்த்தொகுதி
#1
** வில் அம்பு பெயர்கள்
கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம்
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம்
அம்பு கணை கோல் சாயகம்
** 7, 10 பெயர்கள்
#2
** வில் அம்பு பெயர்கள் (தொடர்ச்சி)
சித்திரப் புங்கம் சிலீமுகமே கங்க
பத்திரம் மார்க்கணம் ஏவு ஆகும் அத்திரம்
வெய்ய விசிகமே ஆசுகம் சீர்ச் சரம்
எய்யும் கதிரமும் ஆம் என்
** 10 பெயர்கள்
#3
** வேல் தண்டு சதுரங்கம் சேனை
ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகு ஆம்
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை
தானை கடகம் தந்திரம்
** 4, 1, 4, 5 பெயர்கள்
#4
** சூலம் மழு சக்கரம் வச்சிரம் வாள் பெயர்கள்
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி
மிக்க மழு ஆழி நேமி இவை சக்கரம் ஆம்
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள்
அம் கரவாளம் கட்கம் ஆம்
** 2, 2, 2, 2, 3 பெயர்கள்
#5
** சீலை பெயர்கள்
மடி துகில் கோசிகம் காழகம் சேலை
புடவை கலிங்கம் தூசு படம் ஆடை
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம்
பட்டு உடை சீலை எனப் பார்
** 17 பெயர்கள்
#6
** ஆபரணம் முடி வளை தோடு பெயர்கள்
அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும்
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை
அம் குழை குண்டலம் தோடு ஆம்
** 4, 4, 3, 2 பெயர்கள்
#7
** தோளணி மோதிரம் கோவைமணி பெயர்கள்
கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர்
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி
ஏழ்கோவை மேகலை எண்கோவை காஞ்சி இதின்
நீழ்கோவையே கலபம் ஆம்
** 2, 1, 1, 1, 1 பெயர்கள்
#8
** மாலை பெயர்கள்
தொங்கல் பிணையல் தொடை வாசிகை சிகழி
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை
தேம் என் தெரியல் ஒலியலே கத்திகை
தாமம் நறு மாலை தார்
** 14 பெயர்கள்
#9
** சிலம்பு காலணி சதங்கை பாடகம் பெயர்கள்
பரிபுரம் நூபுரம் பைம்பொன் ஞெகிழி
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும்
பாதசாலம் காலணி கிண்கிணி சதங்கை
பாதகடகம் பாடகம்
** 3, 1, 1, 1 பெயர்கள்
** செயற்கைவடிவப்பெயர்த்தொகுதி முற்றும்
@8 பண்பு பற்றிய பெயர்த்தொகுதி
#1
** இலங்குதல் ஒளி பெயர்கள்
இலங்குதல் மின்னல் ஒளிர்தல் நகுதல்
துலங்கல் அலங்கல் விளங்கல் நலம் கோள்
படர் ஒளி தேயு கரம் கதிர் வில் வாள்
சுடர் கிரணம் சோதி எனச் சொல்
** 6, 8 பெயர்கள்
#2
** அன்பு இளமை பெயர்கள்
ஈரமும் நேயமும் பாசமும் காதலும்
வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம்
குழவும் மழவும் தருணமும் நாகும்
எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம்
** 5, 4 பெயர்கள்
#3
** இன்பம் நல்லொழுக்கம் செல்வம் பெயர்கள்
சுகம் நன்மை இன்பம் மகிழ்வு பிரியம்
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகு சரிதை
நல்லொழுக்கம் சீலம் ஆம் சாரித்திரம் என்பர்
செல்வம் விபவம் திரு
** 6, 3, 2 பெயர்கள்
#4
** அநித்தம் நித்தம் இப்போழ்து பெயர்கள்
அநிதம் அநித்தம் அவிரதம் என்றும்
அநவரதம் சந்ததம் நித்தம் அனாரதம்
எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை
இப்போழ்து என இயம்பலாம்
** 1, 6, 2 பெயர்கள்
#5
** துயரம் பெயர்கள்
கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை
வாதை அரந்தை வயா வருத்தம் வேதனை
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை
துன்பம் அஞர் துக்கம் துயர்
** 18 பெயர்கள்
#6
** அகலம் நீளம் உயரம் கனம் பெயர்கள்
மேய விசாலம் விரிவு வியல் அகலம்
ஆயமும் ஆய்தமும் நீளம் ஆம் மீ உயரம்
நேரும் சிகரம் நிமிர்தல் நிவப்பு உச்சம்
சீர் கனம் பாரம் எனச் செப்பு
** 3, 2, 5, 1 பெயர்கள்
#7
** செருக்கு அதிகம் எல்லாம் பெயர்கள்
மதம் களி மத்தம் அபிமானம் செருக்கு
அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே
சகலம் நிகலம் முழுதும் அகண்டம்
அகிலம் எலாம் முற்றும் ஆம்
** 4, 4, 6 பெயர்கள்
#8
** நடுக்கம் ஆடல் சஞ்சலம் பெயர்கள்
அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனித்தல்
விதிர்ப்பு துளங்கல் விதலை வெதிர்ப்பு
கலித்தல் கம்பித்தல் ஆலுதல் ஆடல்
சலித்தல் என்ப சஞ்சலமே ஆம்
** 9, 1, 1 பெயர்கள்
#9
** உவமை பெயர்கள்
இணைதல் பொருவல் கடுத்தல் நிகர்த்தல்
துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம்
மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்
கான பெயர் என்னலாம்
** 15 பெயர்கள்
#10
** வலி வளைவு நினைத்தல் தியானம் பெயர்கள்
உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம்
குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற
உள்ளுதல் சிந்தித்தல் ஊழ்த்தல் நினைத்தல் உனல்
கொள்ளும் தியானம் குறி
** 5, 2, 4, 1 பெயர்கள்
#11
** பிராந்தி சந்தேகம் புதுமை பெயர்கள்
ஊகம் விகற்பம் பிரமம் பிராந்தி சந்
தேகம் ஐயம் கடுத்தல் சங்கையே ஆகும்
நவமும் நவீனமும் நூதனமும் வம்பும்
அவம்இல் புதுமையின் பேர்
** 2, 3, 4 பெயர்கள்
#12
** முன்பு பின்பு அன்பு பயம் பெயர்கள்
முன்பு பரம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம்
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு
தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம்
பயங்கரம் அச்சம் பயம்
** 5, 4, 5, 2 பெயர்கள்
#13
** நிறைதல் குறைவு மரபு பெயர்கள்
நிறைதல் கமம் பூரணம் மகிழ்வு பூரம்
குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம்
மரபு தகுதி பால் மாலை நீர் பெற்றி
பரிசு கிழமை படி
** 4, 3, 8 பெயர்கள்
#14
** வெளுப்பு பெயர்கள்
பாண்டுரம் கவுரம் சுவேதம் சிதம் தவளம்
பாண்டரம் பால் வெண்மை அரிச்சுனம் பாண்டு
சுசி அவதாரம் சுதை சுப்பிரம் கம்
விசிதம் வெளிறு வெளுப்பு
** 17 பெயர்கள்
#15
** பெருமை பொலிவு சிறுமை பெயர்கள்
பெருமை தடம் மால் கயம் நளி பீடு
குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு
ஆகும் சிறுமை இலேசு தனு இலகு
தோகம் அணு அற்பம் துடி
** 6, 2, 8 பெயர்கள்
#16
** கருமை செம்மை பெயர்கள்
கருமை கறை அசிதம் காளிமம் காளம்
இருள் நீலம் காழகம் சாமம் அருணத்தி
னோடு அரத்தம் சோணம் உலோகிதம் கிஞ்சுகம்
பாடலம் செம்மை எனப் பார்
** 8, 6 பெயர்கள்
#17
** பச்சை பொன்மை சாயல் பெயர்கள்
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை
அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம்
அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம்
குரு நிறம் சாயல் எனக் கொள்
** 4, 2, 10 பெயர்கள்
#18
** குற்றம் குரூரம் பெயர்கள்
மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம்
சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம்
கோரம் சண்டம் குரூரம் ஆம்
** 17 2 பெயர்கள்
#19
** மெய் பொய் நல்வினை தீவினை பெயர்கள்
மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம்
பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம்
மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை
பாவம் கொடும் பாதகம்
** 5, 4, 2, 2 பெயர்கள்
#20
** கைதவம் தேற்றம் பழமை பெயர்கள்
சாற்று கலி கூடம் சடம் மாயம் கைதவம் .
தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும்
தொன்மை புராணம் புராதனம் தொன்று புதி
தன்மை பழமையின் பேர் ஆம்
** 4, 2, 5 பெயர்கள்
#21
** நெருங்குதல் பெயர்கள்
துதைதல் நிபிடம் நிரந்தரம் துன்றல்
பொதுளல் துவன்றல் திணுங்கல் அதிகம்
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்பல்
அடைதல் நெருங்குதலே ஆம்
** 13 பெயர்கள்
#22
** வெற்றி தோற்றிடல் கோறல் சினம் பெயர்கள்
போற்று சயம் விசயம் வென்றி அடல் வெற்றியே
தோற்றல் உருத்தல் மலர்தல் ஆம் தோற்றிடல்
கோறல் செகுத்தல் அழித்தல் கதம் கோபம்
சீறலே சீற்றம் சினம்
** 4, 3, 2, 4 பெயர்கள்
** பண்புபற்றிய பெயர்த்தொகுதி முற்றிற்று
@9 செயல்பற்றிய பெயர்த்தொகுதி
#1
** செய்தொழில் அயர்தல் படைத்தல் பெயர்கள்
செயல் விதி கன்மம் கருமமே செய்தொழில்
அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம்
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல்
ஒட்டலுடன் படைத்தல் ஆம்
** 4, 3, 5 பெயர்கள்
#2
** வந்தனை தழுவல் பெயர்கள்
வந்தனை காணல் வணங்கல் பணிதலே
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தித்
தொழுதலே தெண்டன் தொடர்ந்து முயங்கல்
தழுவுதல் விள்ளல் எனச் சாற்று
** 7, 2 பெயர்கள்
#3
** வதுவை கேளிக்கை பெயர்கள்
வதுவை கைப்பற்றல் மணம்செய்தல் கல்யாணம்
விதியுளி வேட்டல் விவாகம் புது மன்றல்
தொடலை விலாசனை வண்டல் கிரீடை
கெடவரலும் கேளிக்கை ஆம்
** 7, 5 பெயர்கள்
#4
** ஓடல் தேடல் தாங்குதல் பெயர்கள்
ஓடல் இரிதல் உடைதல் முரிதல் ஆம்
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல்
பரித்தல் பொறுத்தல் சுமத்தல் எடுத்தல்
தரித்தல் இவை தாங்குதலே ஆம்
** 3, 3, 5 பெயர்கள்
#5
** புசித்தல் எச்சில் பெயர்கள்
அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல்
மிசைதல் உணல் துய்த்தல் மாந்தல் புசித்தலே
மிச்சில் மிசை சேடம் மிக்கதாம் மேலுள்ள
எச்சில் உச்சிட்டம் எனலாம்
** 8, 3 பெயர்கள்
#6
** வெட்டல் சுடுதல் பெயர்கள்
காதல் எறிதல் துமித்தல் துணித்தலே
பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல்
வெட்டல் அரிதல் அறுத்தல் விடுவாய்செய்தல்
சுட்டல் எரித்தல் சுடல்
** 11, 2 பெயர்கள்
#7
** அவிழ்த்தல் பிணைத்தல் அழுங்குதல் உரிஞ்சல் பெயர்கள்
தணித்தலே தீர்த்தல் விரித்தல் அவிழ்த்தல்
பிணித்தல் ஆம் கட்டல் தொடுத்தல் பிணைத்தல்
அரங்கல் அழுங்கல் அழுங்குதல் ஆகும்
உரிஞ்சல் உராய்ப்போதல் ஆம்
** 3, 3, 2, 1 பெயர்கள்
#8
** விழா வழிபாடு வேள்வி விளையாட்டு பெயர்கள்
விழாவாம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி
வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி
பண்ணை கெடவரல் ஓரையே பொய்தல் இவை
வெண்ணகையார் விளையாட்டு ஆம்
** 2, 3, 2, 1 பெயர்கள்
#9
** வறுமை கொடை கொடுத்தல் முயற்சி பெயர்கள்
இன்மையாம் ஒற்கம் இலம்பாடு இவை வறுமை
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே
தாளாண்மையாம் முயற்சி தாள்
** 3, 4, 2, 1 பெயர்கள்
** ஒன்பதாவது செயல்பற்றிய பெயர்த்தொகுதி முற்றும்
@10 ஒலிபற்றிய பெயர்த்தொகு,தி
#1
** வார்த்தை பன்னுதல் பெயர்கள்
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம்
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல்
புகறல் நுவறல் அறைதல் இசைத்தல்
பகர்தல் இவை பன்னுதலே ஆம்
** 8, 6 பெயர்கள்
#2
** பரவல் ஆடல் பெயர்கள்
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல்
பழிச்சல் பரசல் பரவுத் தொழில் பேர் ஆம்
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை
கூடும் படிகமும் கூறு
** 8, 5 பெயர்கள்
#3
** மழலை பழிமொழி பெயர்கள்
மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல்
மிழலை நிரம்பா விழை சொல் பழிமொழியே
அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம்
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு
** 5, 7 பெயர்கள்
#4
** பொய்ச்சொல் மறைச்சொல் பெயர்கள்
குஞ்சம் குறளை கொடுவாயே குண்டியம்
விஞ்சு பிசுனம் விரி தொடுப்பு துஞ்சு பொய்ச்சொல்
ஆசில் இடக்கரடக்கலுடன் கூதனம்
பேசின் மறைச்சொல் பெயர்
** 6, 2 பெயர்கள்
#5
** கொண்டாடல் பலரறிசொல் நயச்சொல்
** பயனில்மொழி பெயர்கள்
கொண்டாடல் மெச்சல் குலாவலே பாராட்டு
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம்
பயனில்மொழி ஆம் பகர்
** 3, 1, 1, 1 பெயர்கள்
#6
** கூறியதுகூறல் நகைச்சொல் விடாதுரைத்தல் பெயர்கள்
கூறியதுகூறல் குறிக்கில் புனருத்தி
ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார்
மிக்குச் சிரித்துவிளம்பல் விடாதுரைத்தல்
கத்தல் பிதற்றலாய்க் காண்
** 1, 2, 2 பெயர்கள்
#7
** தேவர் இழிசனர் பெரியோர் மொழி
** ஆரியமொழி, பொதுமொழி திசைச்சொல் பெயர்கள்
சங்கதம் தேவச்சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம்
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர்
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது
சொல் தேசிகம் திசைச்சொல் ஆம்
** 1, 1, 1, 1, 1, 1 பெயர்கள்
#8
** வினாவல் விடை வினாவிடை உபசாரம் பெயர்கள்
வினாவல் கடாவல் விடை உத்தரமே
வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின்
சல்லாபம் சொல் முகமன் சன்மானம் இன்னயம்
எல்லாம் உபசாரம் என்
** 1, 1, 1, 3 பெயர்கள்
#9
** ஒலி ஒலித்தல் பெயர்கள்
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை
அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பு ஒலி
கலித்தல் துவைத்தல் அரற்றல் இரங்கல்
ஒலித்தல் இரட்டலும் ஆம் ஓர்
** 10, 5 பெயர்கள்
#10
** பேரொலி பெயர்கள்
திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி
குமுதம் உரற்றல் குமுறல் தமரம் ஆம்
கலகம் குமிலம் களகளம் பூசல்
வலு பேரொலிக்கு ஆம் வழக்கு
** 12 பெயர்கள்
#11
** அநுகரணத்தொனி பெயர்கள்
அம்மெனல் ஒல்லெனல் ஆர்ந்திட்டு இழுமெனல்
கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல்
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும்
சொல்லில் அநுகரணத் தொனி
** 9 பெயர்கள்
#12
** உபயசத்தம் பெயர்கள்
கடகடெனலோடு கலகலெனல் சாலப்
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல்
இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் எனத்
திட்டமுறச் சொன்னார் தெளிந்து
** 5 பெயர்கள்
#13
** பறவைச் சத்தம் விலங்கின் தொனி
** சீலை இலை எழுப்பும் சத்தம் பூணின் ஒலி
துழனி கலகலஞ் சொல் பறவைச் சத்தம்
கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின்
அஞ்சத்தஞ் சீலை இலையாலன் மருமராஞ்சம்
சிஞ்சிதம் பூணின் சிலை
** 2, 1, 1, 1 பெயர்கள்
#14
** மந்தஇசை சமன் இசை வல்லிசை பெயர்கள்
மந்தரம் காகுளி மந்தஇசைப் பேரே
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன்
ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம்
பேசின் ஒலிப் பேதமாய்ப் பேண்
** 2, 2, 2 பெயர்கள்
#15
** இசைப்பாட்டு இசைக்குழல் பெயர்கள்
கந்தருவம் காந்தாரம் காமரம் பண் கீதம்
வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு
ஆம்பலுடன் வாரி அரியதொரு வங்கியமும்
தேம் கொள் இசைக்குழலாய்ச் செப்பு
** 9, 3 பெயர்கள்
#16
** கலை ஞானம் ஐம்பா பெயர்கள்
ஊதியம் சால்பே உறுதி வித்தை விஞ்சை கலை
மேதையே புந்தி மிகு ஞானம் தீதில்லா
வெண்பா அகவல் விரி கலிப்பா வஞ்சிப்பா
ஒண்பா மருட்பா ஐம்பா
** 5, 2, 5 பெயர்கள்
#17
** நூல் மறை ஆகமம் பெயர்கள்
நூலே பனுவல் நுவல் கல்வி தந்திரம்
மேலாகும் வேதம் விரி சுருதி நான்மறைப்பேர்
ஆகமம் ஈசன் அருள்வாக்கு அமலவுரை
பாகமுளார் போற்றும் பயன்
** 3, 2, 2 பெயர்கள்
#18
** புகழ் மிகுபுகழ் ஆசி பெயர்கள்
இசை ஒளி ஏற்றம் கியாதம் சுலோகம்
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ்
சீரோடு கீர்த்தி திகழும் மிகுபுகழ்
ஆர் ஆசி வாழ்த்து பல்லாண்டு
** 7, 2, 2 பெயர்கள்
#19
** பல்பொருள் தொடர்பின் இனப்பொருள் தொடர்பின் பெயர்கள்
படலம் சருக்கம் பரிச்சேதம் காண்டம்
இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுறப்
பல்பொருள்கள் வைப்பாம் படரின் இனப்பொருட்கள்
சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து
** 5, 2 பெயர்கள்
#20
** பாட்டு வெண்பா அகவல் பெயர்கள்
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு
நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும்
வெண்பா முதற்பா வெள்ளை விளங்கு அகவல்
பண்பு ஆகும் ஆசிரியம் பார்
** 7, 2, 1 பெயர்கள்
#21
** பாயிரம் உதாரணம் சபதவிசை பெயர்கள்
பதிகம் புனைந்துரை பாயிரம் ஆகும்
இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரணப் பேர்
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம்
எஞ்சில் சபதவிசை
** 2, 2, 4 பெயர்கள்
#22
** வசனம் உறுதிச்சொல் பெயர்கள்
பாசுரம் வார்த்தை பகர் வலந்தம் வாசகம்
தேசாரும் வாக்குத் திகழ் வசனம் கூசக்
கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று
அழிபின்று உரைத்தார் அறிந்து
** 5, 2 பெயர்கள்
#23
** சொற்பழித்தல் முதுசொல்
** தன் மேம்பாட்டுச்சொல் பெயர்கள்
அறைகூறல் சொற்பழித்தல் ஆமே முதுசொல்
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே
தன்மேம்பாட்டுச்சொல் தானாக நெடுமொழி
மன்னி வியப்பின் வரும்
** 1, 2, 1 பெயர்கள்
#24
** அசை பெயர்கள்
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம்
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ
மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின்
ஆம் ஆங்கு ஈது எல்லாம் அசை
** 27 பெயர்கள்
#25
** வியங்கோள் அசை உரை அசை முன்னிலை அசை பெயர்கள்
மாவே வியங்கோள் வரும் அசை ஆம் அம்ம உரை
மேவு அசை என்றே விளம்புவார் பாவார்
இக மியா மோ மதி யா இத்தை யாழ
பகர் முன்னிலை அசையாய்ப் பார்
** 1, 1, 7 பெயர்கள்
** பத்தாவது ஒலிபற்றிய பெயர்த்தொகுதி முற்றும்
@11 ஒருபொருட் பலபெயர்த் தொகுதி
#1
** அரி கோ பெயர்கள்
அரி பன்றி தேரை கிளி பச்சை சிங்கம்
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ
கோ இறை திக்குக் கிரணம் சலம் குலிசம்
ஆ மலை கண் பார் சுவர்க்கம் அம்பு
** 13, 11 பெயர்கள்
#2
** தலம் குயம் வில் கரி சிலம்பு பெயர்கள்
இலையும் நிலமும் தலம் கொடுவாளும்
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும்
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று
அரி நூபுரம் ஒலியே ஆம்
** 2, 2, 2, 3, 3 பெயர்கள்
#3
** சயம் அயில் படர் விழிவு சடை பெயர்கள்
சயம் அயிர் பானு கூட்டம் விசயம்
அயில் வேலும் கூர்மையும் ஆகும் துயரமே
போகலே உள்ளல் படரே விழிவு கெடல்
சாதல் வேர் வேணி சடை
** 4, 2, 3, 2, 2 பெயர்கள்
#4
** ஆழி பாழி தாழை ஒலியல் பெயர்கள்
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம்
பாழி பெருமை குகை வலியே தாழை ஆம்
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல்
தொங்கல் ஒலியல் எனச் சொல்
** 3, 3, 2, 4 பெயர்கள்
#5
** கவிகை படை ஆலம் உறழ்தல் தாலம் பெயர்கள்
குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர்
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம்
ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தலே
தாலம் ஆம் பெண்ணை தலம்
** 2, 2, 2, 2, 2 பெயர்கள்
#6
** கந்தம் கந்தரம் கழை கறை சிறை பெயர்கள்
கந்தம் மணம் கிழங்கு மேகம் முழை கழுத்து,
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி
கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம்
சிறை ஆகும் காவல் சிறகு
** 2, 3, 2, 4, 2 பெயர்கள்
#7
** நேமி விறல் கரம் கறுப்பு பெயர்கள்
கடல் வட்டம் தேர்க்கால் கழை விண்டு பூமி
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம்
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கைப் பேர்
கருமை வெகுளி கறுப்பு
** 7, 2, 4, 2 பெயர்கள்
#8
** கடி மடி இறும்பு கூம்பல் பெயர்கள்
கடியே புதுமை மணம் இன்பம் காவல்
கடிதல் விரைவு அச்சம் காலம் மடி வயிறு
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும்
கூம்பல் ஒடுங்கல் குமிழ்
** 8, 2, 2, 2 பெயர்கள்
#9
** வளம் மணம் நளி தளிமம் சாகம் அத்தம் பெயர்கள்
வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம்
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான்
மெத்தை அழகு விரி தேக்கு சாகம் ஆடு
அத்தம் கரம் ஒருநாள் ஆம்
** 2, 2, 3, 2, 2, 2 பெயர்கள்
#10
** பிரமம் கொம்மை செம்மை பெயர்கள்
பிரமம் கடவுள் நடு ஓர்புராணம்
விரி மந்திரம் முத்தி வேதம் மருள் தவம்
கொம்மை இளமை குயம் வட்டம் சுந்தரம்
செம்மை பெருமை சிவப்பு
** 8, 4, 2 பெயர்கள்
#11
** தட்டை சினை பட்டம் வல் மாலை பெயர்கள்
தட்டை ஆம் கீசகம் தத்தை கடிகருவி
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு
சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது
மாலை நோய் மாலை மதி
** 2, , 5, 1 பெயர்கள்
#12
** உளை அளை பிளிறல் இழை குழை பெயர்கள்
உளையே புரவிமயிர் கூந்தல் ஓசை
அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே
இழையே அணிகலன் நூலும் அதன் பேர்
குழை சேறு குண்டலமும் கூறு
** 3, 2, 1, 2, 2 பெயர்கள்
#13
** தனபதி வனம் அணங்கு பெயர்கள்
தனபதி சோமன் குபேரன் ஆம் காணில்
வனம் மாமை கானும் துழாயும் கனமார்
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம்
கொலை தெய்வப்பெண் அணங்காய்க் கூறு
** 2, 3, 8 பெயர்கள்
#14
** மல்லல் சிலை தரணி குலம் பெயர்கள்
மல்லல் வளமும் வலியும் ஆம் கல்லுடன்
வில்லும் சிலையாய் விளம்புவர் செல்லும்
தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி
குலம் ஆகும் இல்லம் குடி
** 2, 1, 3, 2 பெயர்கள்
#15
** வாமம் தாமம் ஏமம் பயோதரம் அரவம் பெயர்கள்
வாமம் அழகும் குறளோடு இடம் ஒளி
தாமம் அலங்கல் உடல் ஒழுங்கு ஆம் ஏமம்
பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை
அரவம் ஒலி நாகம் ஆம்
** 4, 3, 2, 2, 2 பெயர்கள்
#16
** அம்பரம் கோடு ககம் கழுது பெயர்கள்
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் ஆகும்
கொம்பு கரை பணிலம் கோடு என்பர் அம்பு
பறவை ககமே பரண் காவல் பேயோடு
அறுபதமும் கழுதே ஆம்
** 3, 3, 2, 4 பெயர்கள்
#17
** அத்தி ஆரம் நகம் புண்டரிகம் பெயர்கள்
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஆகும்
கொத்து ஆத்தி சாந்தம் குளிர் மாலை முத்தாரம்
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம்
தாமரை சார்த்தூலம் ஆம்
** 3, 4, 4, 2 பெயர்கள்
# 18
** வச்சிரம் வம்பு வாரணம் பெயர்கள்
வச்சிரம் ஆகும் வயிரம் குலிசம் இவை
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம்
மெத்து தடை சங்கு மெய்க்கவசம் கோழியுடன்
அத்தி கடல் வாரணமே ஆம்
** 2, 2, 2, 6 பெயர்கள்
#19
** தானம் சாரங்கம் வையம் பாணி பெயர்கள்
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன்
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு
சாரங்கம் வையம் சதியும் பெருந்தேரும்
பாரும் கை நீர் பாணி ஆம்
** 5, 2, 3, 2 பெயர்கள்
#20
** இரவி பரவல் திகிரி தட்டு பெயர்கள்
இரவி அருக்கன் பருப்பதம் ஆம் என்பர்
பரவல் துதித்தல் விளம்பல் பரத்தலே
முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி
தட்டம் முறம் வட்டம் தவறு
** 2, 3, 4, 3 பெயர்கள்
#21
** சலம் புவனம் தக்கணம் கவி பொழில் பெயர்கள்
சலம் முதிர்கோபம் சலனம் சலம் புவனம்
நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம்
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே
புவி என்று இவை ஆம் பொழில்
** 3, 2, 2, 2, 2 பெயர்கள்
#22
** புட்கரம் எஃகு கண்டகம் பெயர்கள்
ஆனைத்துதிக்கைநுனி குருகு ஓர்தீவம்
வானம் கமலம் வசி பாணி மா தீர்த்தம்
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை
முள் கண்டகம் ஆம் மொழி
** 8, 2, 3 பெயர்கள்
#23
** சிந்து மதலை கதலி பொறி வெறி பெயர்கள்
உததி நதி சிந்து மரக்கலமும் தூணும்
மதலை இரும் துவசம் வாழை கதலி
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும்
வெறி ஆகும்: பாசம் விரை
** 2, 2, 2, 3, 2 பெயர்கள்
#24
** கருமை கன்னல் திமிரம் ஒழிதல் தகை பெயர்கள்
கருமை வலி பெருமை கன்னல் கடிகை
கரகம் திமிரம் இருளும் நரகும்
ஒழிதலே நீத்தலும் சாதலும் ஆம் என்பர்
அழகு பெருமை தகை ஆம்
** 2, 2, 2, 2, 2 பெயர்கள்
#25
** களங்கம் அங்கணம் ஆசு வேலை வாள் பிண்டம் பெயர்கள்
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு
முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும்
மாக் கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி
யாக்கை திரள் பிண்டம் எனலாம்
** 2, 2, 2, 2, 2, 2 பெயர்கள்
#26
** குளம் களம் கும்பம் தனம் பெயர்கள்
குளம் ஆம் சருக்கரை குட்டமொடு நெற்றி
களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம்
குடம் கரிமத்தகம் கும்பம் ஆம் என்பர்
தடம் கொங்கை வித்தம் தனம்
** 3, 4, 2, 2 பெயர்கள்
#27
** வாரம் தண்ணடை பூவை சிகி பெயர்கள்
வாரம் கருணை கரை பங்கு பச்சிலையும்
ஊரும் ஆம் தண்ணடை நாகணப்புள் காரிகை
காயாமரம் இவை பூவை சிகி சேது
தீயொடு மஞ்ஞை தெளி
** 3, 2, 3, 3 பெயர்கள்
#28
** நாகம் துப்பு கமலம் பெயர்கள்
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம்
வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம்
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை
அப்பு கமலம் எனலாம்
** 7, 3, 2 பெயர்கள்
#29
** அருத்தம் பவித்திரம் இருள் அரசு பெயர்கள்
அருத்தமே பாதி தனமும் பயனும்
கருத்தும் பவித்திரம் தூய்மை தப்பை
இருள் அந்தகாரம் நரகம் சுறுப்பே
அரசு மன் பிப்பிலமே ஆம்
** 4, 2, 3, 2 பெயர்கள்
#30
** முடலை சுவல் பாடி வெளில்
முடலை திரட்சி முருகு வலி ஆம்
பிடர் முதுகு மேடு சுவலே தடம் பாடி
தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில்
யானைத்தறி வெளிலே ஆம்
** 3, 3, 3, 3, 5 பெயர்கள்
#31
** பண்ணை கருவி நடலை பெயர்கள்
மருதநிலம் கழனி வாவியுடன் பொய்தல்
வரு பட்டம் பண்ணைப் பெயராம் கருவி
தொடர்பு படை கவசம் சூழ் கொண்டல் ஈட்டம்
நடலை பொய் வஞ்சனையும் ஆம்
** 5, 5, 2 பெயர்கள்
#32
** ஞானம் கானம் மறை மா
ஞானம் அறிவு பனுவலும் ஆம் என்பர்
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர்
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி
சிறை வண்டு சூதம் திரு
** 2, 3, 2, 4 பெயர்கள்
#33
** மாடம் மழை கூடம் சேடன் கவனம் பெயர்கள்
மாடம் உழுந்து இல்லம் மழையே குளிர்ச்சி புயல்
கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன்
புவிதாங்குஅரவம் இளையோன் ஞெலுவன்
கவனம் சடுதி கதி
** 2, 2, 2, 3 2 பெயர்கள்
#34
** சீதை மேதை கோதை ஆற்றல் பெயர்கள்
சீதை பொன்னாங்காணி படைச்சால் அரிதேவி
மேதை புதன் இறைச்சி வீழ் கள்ளு கோதையே
தோற்கட்டுச் சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு
ஆற்றல் பொறை முயற்சி ஆம்
** 3, 3, 6, 2 பெயர்கள்
#35
** பகவன் பகல் மகரம் புகல் வேந்தன் பெயர்கள்
பகவன் சிவன் மாயன் பங்கயன் புத்தன்
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே
பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி
வேந்தன் வியாழன் இறை
** 4, 3, 2, 3, 2 பெயர்கள்
#36
** சிகரி மகம் வசி திங்கள் சிக்கம் பெயர்கள்
சிகரி எலி கோபுரம் நாரை சிலம்பு
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை
திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி
தங்கு சிறை சீப்பும் தகும்
** 4, 2, 2, 2, 4 பெயர்கள்
#37
** சங்கம் பங்கு வங்கம் நேயம் பெயர்கள்
சங்கம் கணைக்கால் சவை சங்கு நெற்றி எண்
பங்கு முடம் பாதி பகர் சனி ஆம் வங்கமே
ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம்
நேயமே நெய் அன்பு நேர்
** 5, 3, 4, 2 பெயர்கள்
#38
** தூங்கல் வேங்கை ஞாங்கர் கொக்கு பக்கம் பெயர்கள்
தூங்கலே யானை நிருத்தம் துயில் சோம்பு
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர்
கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம்
பக்கம் திதி அருகு பார்
** 4, 2, 2, 3, 2 பெயர்கள்
#39
** மாரி காரி பத்திரி அத்திரி பெயர்கள்
மாரி பிணி கள்ளு வடுகி புயல் மழை
காரி சனி வடுகன் காளம் சீர் ஆரியன்
பத்திரி வாசி சரம் பறவை காளி இலை
அத்திரி தாசோகம் அம்பு
** 5, 4, 5, 2 பெயர்கள்
#40
** படி வெடி நகை பெயர்கள்
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி
வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும்
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு
மிகு சிரிப்பினோடு இகழ்ச்சி ஆம்
** 5, 4, 7 பெயர்கள்
#41
** மானம் பானல் துஞ்சல் அஞ்சல் பெயர்கள்
மானம் அளவு இலச்சை மானம் அரில் பெருமை
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர்
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம்
அஞ்சலே தோல்வி பயம்
** 5, 2, 4, 2 பெயர்கள்
#42
** பிதா சம்பு குரு பொன் பெயர்கள்
பெருநாரை ஈசன் பிரமன் பிதாவே
அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ்
நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன்
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ
** 3, 3, 5, 4 பெயர்கள்
#43
** தூரியம் கள் வடவை பெயர்கள்
எருது நல் ஆடை எறிபடை கைவேல்
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள்
விள்ளும் மது களவு ஆம் விரி வடவை ஊழித்தீ
கொள்ளும் பிடி மயிடம் கூறு
** 6, 2, 3 பெயர்கள்
#44
** விபூதி தாறு சொல் பெயர்கள்
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம்
வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப
வில்லின் குதையும் மரக்குலையும் எல்லையும் ஆம்
சொல் உரையும் நெல்லும் துணி
** 5, 3, 2 பெயர்கள்
#45
** உலகம் உலகு சரணம் கரணம் பெயர்கள்
வியன் உலகம் பூமி வியோமம் உயர்ந்தோர்
உயரும் கனம் நாடு திக்கே உலகு
சரணம் அடைபுகல் தாள் கரணம் கூத்துப்
பெரும் கல்வி ஐம்பொறியின் பேர்
** 3, 3, 2, 3 பெயர்கள்
#46
** உரம் சிரம் புரம் நளிர் பகை பெயர்கள்
உரமே வலி ஞானம் ஊக்கம் அகலம்
சிரமே நெடுங்காலம் சென்னி புரமே
நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு
பகை வெறுப்பு ஆகும் பகர்
** 4, 2, 2, 2, 1 பெயர்கள்
#47
** கம் புந்தி புள் தூ காண்டம் பெயர்கள்
கம் தலை வாயு பிரமன் சலம் வெண்மை
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும்
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர்
சாயகம் காண்டம் எனச் சாற்று
** 5, 2, 2, 2, 4 பெயர்கள்
#48
** பலாசு பாடலம் அருச்சுனம் அருணம் பெயர்கள்
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பா
டலம் சிவப்பு பாதிரியும் ஆகும் நலம் சேர்
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும்
அருணம் சிவப்பும் மான் ஆம்
** 2, 2, 2, 2 பெயர்கள்
#49
** காயம் ஆயம் பயிர் வயல் பெயர்கள்
காயம் உடல் மாகம் பெருங்காயம் நெய் கரிப்பு
ஆயமே மாதர்சபையுடன் ஆதாயம்
பயிரே பறவைஇசை நெற்பயிர் பைங்கூழ்
வயலே வெளி பழனம் ஆம்
** 5, 2, 3, 2 பெயர்கள்
#50
** உப்பு செப்பம் இச்சை அச்சம் பெயர்கள்
உப்பே இனிமை உவர் கடலும் வண்டலும்
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே
இச்சையே பொய்த்தல் இடித்தலோடு அஞ்ஞானம்
அச்சம் அகத்தி அஞ்சல் ஆம்
** 5, 3, 3, 2 பெயர்கள்
#51
** கடவுள் கடம் மடல் மனை பெயர்கள்
கடவுள் தே நன்மை கடம் புரம் காடு
குடம் கயிறு தந்திதன்கூட்டம் மடலே
பனையேடு பூவின் இதழ் ஒருசெய்யுள்
மனை வீடூ காதலியும் ஆம்
** 2, 5, 3, 2 பெயர்கள்
#52
** வலம்புரி மந்திரம் துண்டம் அண்டம் பெயர்கள்
நந்தியாவர்த்தமுடன் நந்து வலம்புரி
மந்திரம் ஆம் கோயில் மறை வாசிப்பந்தியே
துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும்
அண்டம் ஆகாயம் முட்டை ஆம்
** 2, 3, 4 2 பெயர்கள்
#53
** இறை பெயர்கள்
இறை அரசன் ஊழித்தீ இறகு கடன் சிறுமை
இறையென்னுமேவல் உயர்ச்சி குடியிறையே
பிரமன் சிவன் மூத்தோன் பருமை வருத்தமுட
வரு வீட்டு இறப்பு எனவே வைத்து
** 14 பெயர்கள்
#54
** வெள்ளை வெள்ளி வினா நள் ஓதனம் எச்சம் பெயர்கள்
வெள்ளை வெண்பா வெள்ளாடு சங்கு பலதேவன்
வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம்
உச்சிப்பொழுது நடு ஓதனம் உண்டி.
எச்சம் மகன் யாகம் இசை
** 4, 1, 1, 3, 1, 2 பெயர்கள்
#55
** விடல் விபரீதம் படு ஆனகம் வானம் பெயர்கள்
விடல் குற்றம் சாதல் விடுதல் விபரீதம்
தொடு வியப்பு வேற்றுமையாய்ச் சொல்வர் படு கள்ளே
ஆனகம் தம்பட்டம் துந்துமி தேவதரு
வானம் மழை வானாய் வாழ்த்து
** 3, 2, 1, 3, 2 பெயர்கள்
#56
** ஈழம் பாழி நாழி புணை இரட்டை பெயர்கள்
ஈழம் பொன் சிங்களம் கள் இலங்கை
பாழி குகை சயனம் பாழியே நாழி
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில்
இரட்டை மிதுனம் இரட்டி
** 4, 3, 3, 2, 1 பெயர்கள்
#57
** செச்சை சிச்சிலி சிதை முச்சில் பாடி பாடம் பெயர்கள்
செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும்
சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம்
பாடி கவசம் படை நகரம் பாடியே
பாடம் தெரு பாடம் ஆம்
** 3, 1, 1, 1, 4, 2 பெயர்கள்
#58
** பாசு பனிச்சை இகலன் பெட்பு
** கோசிகம் செம்மணி சாலேயம் பெயர்கள்
பாசு வேய் பச்சை பனிச்சை மயிர்ச்சுருள் ஆம்
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே
சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம்
சாலேயம் நெல்விளைதானம்
** 2, 1, 1, 1, 2, 1, 1 பெயர்கள்
#59
** ஆடல் வாடல் அணை விரதம் கத்தை பெயர்கள்
ஆடல் அசைதல் குழித்தல் அடல் செய்தல்
வாடல் மெலிதல் மரித்தல் அணை தேடரிய
மெத்தை வரம்பு விரதம் தவம் ஆணை
கத்தை கழுதையுடன் கத்து
** 4, 2, 2, 2, 2 பெயர்கள்
#60
** கற்றார் களை பெற்றார் பேடு
** சுற்று சூதவம் சுளிவு சோபனம் பெயர்கள்
கற்றார் அறிஞர் களை அயர்வு குற்றம்
பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில்
சூதவம் வண்டு சுளிவு சினம் சோபனமே
ஓது சுபம் வாழ்த்து அழகாய் ஓது
** 1, 2, 2, 2, 1, 1, 1, 3 பெயர்கள்
#61
** வாணி மத்திரிப்பு தூணி கௌவை
** அரில் தேயு அதள் பெயர்கள்
வாணி சொல் நாமகளே மத்திரிப்புக் கோபமே
தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள்
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான்
தேயு நெருப்பு அதள் தோல் செப்பு
** பதினோராவது ஒருபொருட்பலபெயர்த்தொகுதி முற்றும்.
@12 பலபொருட்கூட்டத்தொருபெயர்த்தொகுதி
#1
** ஏகம் இருமை பெயர்கள்
கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான்
வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள்
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று
ஆகும் இருமை அறி
** 1, 2 பெயர்கள்
#2
** இருசுடர் ஈரெச்சம் இருவகைத் தோற்றம்
** இருபொருள் இருமரபு பெயர்கள்
இருசுடர் சூரியன் சந்திரனே ஆகும்
பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம்
சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம்
மரபு இரண்டே தாய் தந்தை ஆம்
** 2, 2, 2, 2 பெயர்கள்
#3
** மூன்றிடம் மும்மூர்த்தி முக்காலம் பெயர்கள்
முன்னிலை தன்மை படர்க்கை இவை மூன்றிடம்
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே
சாலும் நிகழ்வு எதிர்வும்தான்
** 3, 3, 3 பெயர்கள்
#4
** முக்குணம் முக்குற்றம் முச்சுடர் பெயர்கள்
இராசதம் சாத்துவிதம் தாமதம் ஆம் என்று
விராவு குணம் மூன்று ஆகும் மெய்க் காமம் உரை வெகுளி
சொல் மயக்கம் முக்குற்றம் சூரியனும் சந்திரனும்
முன் எரியும் முச்சுடர்கள் ஆம்
** 3, 3, 3 பெயர்கள்
#5
** முத்தமிழ் முத்தொழில் முந்நூல் பெயர்கள்
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும்
அயர்வுஇல் சிருட்டித்தலுடன் வீய்த்தல் இயலுடனே
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல்
ஆக்கு புடைநூல் முந்நூல் ஆம்
** 3, 3, 3 பெயர்கள்
#6
** முப்பிணி மூவைசியர் முப்பொறி பெயர்கள்
வாதமுடன் பித்தம் வரு சேடம் முப்பிணியே
ஓது தனவைசியர் பூவைசியர் தீதிலாக்
கோவைசியர் மூன்றும் வைசியர் மனம் வாக்கு
காயம் பொறி மூன்றும் காண்
** 3, 3, 3 பெயர்கள்
#7
** நாற்கவி நான்கு நூற்பொருள் பெயர்கள்
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம்
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும்
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும்
திறம்பாத நூற்பொருளாய்த் தேறு
** 4, 4 பெயர்கள்
#8
** நாற்பதவி அங்கம் நால் பெயர்கள்
சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம்
நாலாம் பதவி என நவில்வார் மேலான
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர்
இசைத்தார் முன்னூலில் ஓர்ந்து
** 4, 4 பெயர்கள்
#10
** நான்கு சொல் நான்கு படைவகுப்பு
பெயரும் வினையும் இடையும் உரியும்
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே
உண்டையோடு ஒட்டு யூகம் படைவகுப்பு
கொண்டதொரு நான்காய்க் குறி
** 4, 4 பெயர்கள்
#11
** ஐவகை வினா பெயர்கள்
அறியான்வினாவல் அறிவொப்புக்காண்டல்
குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல்
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா
ஐவகையாம் என்றே அறி
** 5 பெயர்கள்
#12
** அரியின் ஆயுதம் அரன் முகம் பெயர்கள்
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இவ் ஐந்தும்
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே
தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம்
வில் சேர் அகோரம் விரி
** 5, 5 பெயர்கள்
#13
** நாடுபடு திரவியங்கள் ஐந்து
** நகர்படு திரவியங்கள் ஐந்து பெயர்கள்
கன்னல் சிறுபயறு கதலியுடன் செவ்விளநீர்
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன்
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும்
திண்ணம் நகர்ப்பொருளாய்ச் செப்பு
** 5, 5 பெயர்கள்
#14
** கான்படு திரவியங்கள் ஐந்து
** கடல்படு திரவியங்கள் ஐந்து பெயர்கள்
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால்
கானின் திரவியமாய்க் கட்டுரைப்பர் மேவியுறும்
உப்பு தரளம் உயர் சங்குடன் கவடி
துப்பும் கடற்பொருளாய்ச் சொல்
** 5, 5 பெயர்கள்
#15
** எழுத்துத்தானம் ஐந்து
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சாக்
கோலும் பேர் முன்னெழுத்துக் கொண்டாதி சாலில்
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும்
நவை ஆகும் என்றே நவில்
** 5 பெயர்கள்
#16
** அகில் கூட்டு ஐந்து அக்கினி ஐந்து
சந்தனம் கர்ப்பூரம் தாவில் எரிகாசு ஏலம்
வந்த தேனோடு அகிலின் கூட்டாம் ஐந்தும்
காமம் இராகம் சடம் தீபனம் கோபம்
வேம் அங்கி ஐந்தாய் விதி
** 5, 5 பெயர்கள்
#17
** அங்கம் ஐந்து அரசர் குழு ஐந்து
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும்
விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர்
மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம்
ஐந்தும் அரசர் குழு ஆம்
** 5, 5 பெயர்கள்
#18
** கைத்தொழில் ஐந்து நிலம் ஐந்து பெயர்கள்
எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல்
பண் வீணைவாசித்தல் பஞ்சதொழில் எண் கைக்காம்
பாலை குறிஞ்சி மருதமுடன் நெய்தல் முல்லை
சாலும் நிலம் ஐந்து எனவே சாற்று
** 5, 5 பெயர்கள்
#19
** பட்சி ஐந்து ஐம்பொறி பெயர்கள்
வல்லீறொடு ஆந்தை மயில் கோழி காக்கை
எல்லாரும் பட்சி ஐந்தே என்னலாம் சொல்லும்
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை
பொய்இல் பொறி என்றே புகல்
** 5, 5 பெயர்கள்
#20
** ஐம்புலன் யாகம் ஐந்து பெயர்கள்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஓதும்
இவை ஐம்புலனாய் இயம்பு நவையில்லா
யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம்
ஆகும் பிதிர் மானுடம்
** 5, 5 பெயர்கள்
#21
** அறுதொழில் அறுசமயம் பெயர்கள்
வரைவு தொழில் வித்தை வாணிகமே சிற்பம்
உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும்
மாவிரதம் காளாமுகம் சைவம் பாசுபதம்
வாமம் சமயம் ஆறாம்.
** 6, 6 பெயர்கள்
#22
** அறூபகை அறுகாலம் பெயர்கள்
காமம் குரோதம் உலோபம் மதம் மோகம்
ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம்
கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில்
ஆர் வேனில் ஆம் காலம் ஆறு
** 6, 6 பெயர்கள்
#23
** எழு பிறப்பு ஏழிசை பெயர்கள்
தேவர் விலங்கு மக்கள் செந்து மரம் புள் நீரில்
மேவுவன எழுபிறப்பாம் தாவில்
குரல் துத்தம் கைக்கிளை தாரம் விளரி இளி
மருவும் உழை இசை ஏழாம்
** 7, 7 பெயர்கள்
#24
** எழுகடல் எழுதாது பெயர்கள்
பால் தயிர் நெய் தேன் கருப்பஞ்சாறு நன்னீர் உப்பு
மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு
சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது
மிக்கதோர் ஏழாய் விதி
** 7, 7 பெயர்கள்
#27
** பெண் பருவம் ஏழு
பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை
மீதாம் அரிவை தெரிவையே ஓதுகின்ற
பேரிளம்பெண் ஏழாய்ப் பெறு பருவம் பெண்ணுக்கே
ஓரா இசைத்தார் உவந்து
** 7 பெயர்கள்
#28
** வார நாட்கள் ஏழு
உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற
வெற்றிபெறு புதனே வியாழம் ஆம் சொல் பெரிய
வெள்ளி சனி ஏழ் வாரம் என்றே விதித்தனரால்
ஒள்ளிய மூதுரையார் ஓர்ந்து
** 7 பெயர்கள்
#29
** அட்டாங்கயோகம் எட்டு
இயமம் நியமமே ஆதனத்தினோடு
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும்
பிரத்தியாகாரம் தியானம் தாரணை நேர் சமாதி
விரித்து அங்கயோகம் எட்டாய் வேண்டு
** 8 பெயர்கள்
#30
** அட்டநாகம் எட்டு
வாசுகியினோடு வளர் அனந்தன் தக்கனே
ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற
பதுமன் மகாபதுமன் கார்க்கோடகனும்
விதி அட்டநாகம் விளம்பு
** 8 பெயர்கள்
#31
** அட்டதிக்குப்பாலகர் எட்டு
இந்திரன் அங்கி யமன் நிருதி ஏர் வருணன்
முந்திய வாயு முதல் தனதன் இந்து சடை
ஈசானன் இங்கு இவர்தாம் அட்டதிக்குப்பாலகர் என்று
ஆசறு தொன்னூல் உரைக்கும் ஆய்ந்து
** 8 பெயர்கள்
#32
** நவரதம் பெயர்கள்
சிங்காரம் வீரியமும் சேரும் பெருநகையும்
இங்கார் கருணை இரௌத்திரமே பொங்கு குற்சை
சாந்தமோடு அற்புதமும் தங்கு பயம் தன்னோடு
சேர்ந்த இரதம் ஒன்பான் செப்பு
** 9 பெயர்கள்
#33
** நவக்கோள் பெயர்கள்
ஆதித்தன் ‘சோமன் அங்காரகன் புதனே
போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற
வெள்ளி சனி கேது மேவும் இராகும் இவை
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு
** 9 பெயர்கள்
#34
** நவதாளம் பெயர்கள்
அரிதாளமோடு அருமதாளம் சமதாளம்
பரி சயதாளம் விடதாளம் துருவமுடன்
சித்திரதாளம் படிமதாளம் நிவிர்தம் இவை
வைத்த நவதாள வழக்கு
** 9 பெயர்கள்
#35
** அங்கம் பத்து பெயர்கள்
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே
உலையா முரசு கொடி ஒண் செங்கோல் நிலையான
அங்கம் ஒரு பத்தாய் அருளினார் மேலோர்கள்
பங்கம் இன்றி நேரே பகர்ந்து
** 10 பெயர்கள்
#36
** தீதாம் குணம் பத்து பெயர்கள்
பொய்யினுடன் கோள் கோபம் போகாப் பயனிலசொல்
மையார் களவாடல் வறியதொழில் செய் கொலையே
ஓது கொலைநினைக்கை உறும் காமப் பற்று ஆசை
தீதாம் குணம் பத்தும் தேர்
** 10 பெயர்கள்
#37
** பத்து வாயு பெயர்கள்
பிராணன் அபானன் பிறங்கு சமானன் நாகன்
விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர்
கிருதரன் தேவதத்தன் கேடில் தனஞ்செயன்
ஒரு பத்து வாயு என ஓது
** 10 பெயர்கள்
#38
** துவர் பத்து பெயர்கள்
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு
மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய
முத்தக்காசோடு முறையான பத்துமே
வைத்த துவர் என்றே மதி
** 10 பெயர்கள்
#39
** பன்னிரண்டு இராசி பெயர்கள்
மேடம் இடபம் மிதுனம் மேலாகும் கர்க்கடகம்
பாடு அரி கன்னி துலாம் பாய் தேளே நீடும் ஒரு
வில் மகரம் கும்பம் மிளிர் மீனம் பன்னிரண்டும்
பன்னும் இராசி என்னும் பார்
** 12 பெயர்கள்
#40
** பதினான்கு விஞ்சை பெயர்கள்
மறை நான்கோடு ஆறு அங்கம் மீமாஞ்சை மற்றும்
உறு தருக்கமோடு புராணம் மறை நீதி
நூல் இங்கு இவைகள் நுவல் ஈரேழ் விஞ்சை என
மேலோர் உரைத்தார் வியந்து
** 4, 6, 1, 1, 1, 1 பெயர்கள்
#41
** பதினெண் புராணம் பெயர்கள்
மச்சியம் கூர்மம் வராகமுடன் வாமனம்
மெச்சு பிரமம் வைணவம் பாகவதம் இச்சைபெறு
சைவம் இலைங்கம் பௌடிகமே தாழ்வில்லாச்
செவ்வையுறு நாரதீயம் செப்பு
#42
** பதினெண் புராணம் பெயர்கள் (தொடர்ச்சி)
காரூடமே பிரமகைவர்த்தம் காந்தம்
பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும்
ஆக்கினேயம் பிரமாண்டம் பதுமம் மிவை
ஆக்கு பதினெண்புராணம் ஆம்
** 18 பெயர்கள்
#43
** பதினெண் கணம் பெயர்கள்
அமரரே சித்தர் அசுரர் தைத்தியர்
சமரார் கருடரே கின்னரர் அமைவுபெறா
நிருதருடன் கிம்புருடர் காந்தருவர் இயக்கர்
விருதுபெறு விஞ்சையரும் மேல்
#44
** பதினெண் கணம் பெயர்கள் (தொடர்ச்சி)
பூதர் பைசாசர் அந்தரர் மா முனிவர்
ஒது உரகர் ஆகாயர் ஒண் போகபூதலத்தோர்
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என
நன்னீர் செறி உலகின் நாட்டு
** 18 பெயர்கள்
#45
** பதினெண் பாடைகள் பெயர்கள்
அங்கம் அருணம் கலிங்கம் கௌசிகம்
பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணம்
கோசலம் சாவகம் சிங்களமும் சிந்துவுடன்
பேசுகின்ற சீனம் பிற
#46
** பதினெண் பாடைகள் பெயர்கள் (தொடர்ச்சி)
சோனகம் செல்வம் துன்று திராவிடம்
மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு
பப்பரம் வங்கம் மராடம் பதினெட்டாய்ச்
செப்பியதோர் பாடை எனத் தேர்
** 18 பெயர்கள்
#47
** இருபத்தேழு நட்சத்திரங்கள் பெயர்கள்
அச்சுவினி பரணி ஆரல் உரோகணியோடு
இச்சைபெறு மான்தலையே ஈசனாள் கொச்சையிலாப்
பிண்டியுடன் வண்டு பெரும் அரவினாள் மாசி
கொண்ட எலி உத்திரமாய்க் கொள்
#48
** இருபத்தேழு நட்சத்திரங்கள் பெயர்கள் (தொடர்ச்சி)
அத்தம் பயறு மருள் தீபமே முறமும்
சித்தமுறு பனையே கேட்டை சிலை பத்திபெறு
பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம்
சேர் பூரட்டாதி இன்னும் தேர்
#49
** இருபத்தேழு நட்சத்திரங்கள் பெயர்கள் (தொடர்ச்சி)
உத்திரட்டாதியுடன் கடையாம் ரேபதி
மெத்திய மூவொன்பான் விண்மீனாம் இத் தரையில்
உரிச்சொல் நிகண்டின் உறும் தொகுதி பன்னிரண்டும்
தெரித்து உணர்வார் தேசிகர் ஆவார்.
** பன்னிரண்டாவது முற்றிற்று
** ஆகத்தொகுதி பன்னிரண்டிற்கும் கூடிய வெண்பா 310