தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
@0 பாயிரம்
#1
தன் தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம்
களிறு வளர் பெருங்காடு ஆயினும்
ஒளி பெரிது சிறந்தன்று அளிய என் நெஞ்சே
#2
** சிறப்புப் பாயிரம்
இரும் கடல் உடுத்த இ மா நிலம் விளங்க
அரும் பொருள் தெரித்த அகன் தமிழ் வரைப்பின்
இயற்சொல் திரிசொல் இசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுட்கு அணிகலன் ஆதலின்
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி
தம் பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல்
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி
செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும்
தம் குறிப்பினவே இசைச்சொல் கிளவி
வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்தான் ஆகும்
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்
அ நால் சொல் திறம் அரில் தப முழுதும்
செங்கதிர் வரத்தால் திவாகரன் பயந்த
பிங்கல முனிவன் எனத் தன் பெயர் நிறீஇ
உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை
விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின்
வாஅன் வகையும் வானவர் வகையும்
வானினும் மண்ணினும் வழங்கல் வழாஅ
ஈனம்இல் ஐயர் இயல்புளி வகையும்
அவனி வகையும் ஆடவர் வகையும்
அவர் திறத்து அமைந்த அனுபோக வகையும்
அவயவத்து அடைத்த ஆனா இயல்பின்
பண்பின் செயலின் பகுதி வகையும்
மாப்பெயர் வகையும் மரப்பெயர் வகையும்
ஒரு சொல் பல் பொருள் ஒங்கிய வகையும் என்று
இருள் அற ஈர் ஐந்து ஆக்கி
மருள்அற வகுத்தனன் மதியினின் விரைந்தே
@1 வான் வகை
#1
** சுவர்க்கத்தின் பெயர்
பொன்னுலகும் துறக்கமும் புத்தேள் உலகும்
விண்ணுலகும் மேலைஉலகும் விசும்பும்
மன்னுலகும் நாகமும் கற்பமும் வானுலகும்
வியன்உலகும் தானமும் உவணையும் சுவவும்
சுரர் இடமும் உயர்நிலையும் சுவர்க்கப் பெயரே
** 16 பெயர்கள் 1
#2
** மேல் ஏழ் உலகத்தின் பெயர்
பூலோகம் புவலோகம் சுவர்க்கலோகம்
மாலோகம் தவலோகம் பிரமலோகம்
சிவலோகம் இத் திறத்த மேல் ஏழ் உலகே
** 7 பெயர்கள் 2
#3
** மோக்கம்
கேவலம் கைவலம் கதி சித்தி மோக்கம்
#4
** மற்றும் மோக்கம்
அமுதம் பரம் சிவம் முத்தியும் ஆகும்
** 8 பெயர்கள் 4
#5
** ஆகாயம்
வேணி விசும்பு வெளி உம்பர் இடம்
வானம் கோ விண் மண்டிலம் ஆசினி
மீ மாகம் கம் வியோமம் புட்கரம்
வான் ககனம் நாகம் மங்குல் குண்டலம்
அண்டம் உலகம் அம்பரம் குழை குடில்
அந்தரம் அகலம் ஆகாயப் பெயரே
** 27 பெயர்கள் 5
#6
** வெளி
வெடி வயல் வெள்ளிடை விடியலும் வெளியே
** 4 பெயர்கள் 6
#7
** பகிரண்டம்
அண்டாரண்டம் பகிரண்டம் ஆகும்
** 1 பெயர் 7
#8
** அண்ட கோளகை
கூடம் கடாகம் அண்டகோளகை
** 2 பெயர்கள் 8
#9
** அண்ட முகடு
மூதண்டம் அண்ட முகட்டின் பெயரே
** பெயர் 9
#10
** அண்டச்சுவர்
பித்திகை அண்டச்சுவரின் பெயரே
** 1 பெயர் 10
#11
** திக்கு
மாதிரம் திகை திசை வம்பல் விசும்பே
ஆசை புலமே உலகு கோ காட்டை
அரிதம் அம்பரம் ககுபம் அனைத்தும் இக்கே
** 13 பெயர்கள் 11
#12
** எண் திக்கு
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு
மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு என்று
ஆகத் திக்கு எட்டு ஆகும் என்ப
** 8 பெயர்கள்
#13
** கிழக்கு
குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி
கிழக்கின் பெயரே கீழ்த்திசையும் ஆகும்
** 5 பெயர்கள்
#14
** தெற்கு
அவாசி தக்கணம் யாமினியம் தெக்கு
சிவேதை தென் இவை தெற்கு எனலாகும்
** 6 பெயர்கள்
#15
** மேற்கு
மேக்கு பச்சிமம் குடக்கு இவை மேற்கே
#16
** மற்றும் மேற்கு
வாருணம் பிரத்தியக்கும் அதுவே
** 5 பெயர்கள்
#17
** வடக்கு
உதக்கே உதீசி உத்தரம் பிங்கலம்
வடக்கின் பெயரே மதி திசையும் ஆகும்
** 5 பெயர்கள்
#18
** திசை நாற் கோணம்
அந்தராளம் திசைநாற்கோணம் ஆகும்
** 1 பெயர்
#19
** எண் திசைப் பாலர்
இந்திரன் அக்கினி இயமன் நிருதி
வருணன் வாயு குபேரன் ஈசானன்
என்று ஆகும் எண்திசைப்பாலர் பெயரே
**8 பெயர்கள்
#20
** எண் திசை யானை
ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம்
அஞ்சனம் புட்பதந்தம் சார்வபூமம்
சுப்பிரதீபம் எண்திசையானைப் பெயரே
**8 பெயர்கள்
#21
** அட்டமாநாகம்
அனந்தன் வாசுகி தக்கன் கார்க்கோடகன்
பதுமன் மகாபதுமன் சங்கபாலன்
குளிகன் அட்டமாநாகப் பெயரே
** 8 பெயர்கள்
#22
** எண் திசை யோனி
கொடி புகை சிங்கம் நாய் இடபம் கழுதை
யானை காகம் இவை எண்திசையோனி
** 8 பெயர்கள்
#23
** காற்று
அனிலம் வங்கூழ் அரி பவமானன்
சமீரணன் மருத்து சதாகதி சலனன்
வாடை வளியே மாருதம் வாயு
கோதை வாதம் கூதை வேற்றலம்
கால் ஒலி பவனம் உயிர் கந்தவாகன்
பிரபஞ்சனன் மாபலனே பரிசனன்
ஆசுகன் கந்தவகன் ஊதை கால்இலி
விண்டு நீளை வந்து உலவை
கொண்டல் கோடை என்று இவை காற்றே
#24
** மற்றும் காற்று
நீலும் மாலும் நிழலியும் உயிர்ப்பும்
கூதிரும் என்றே கூறற்பாற்றே
** 39 பெயர்கள்
#25
** பனிக் காற்று
கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே
** 3 பெயர்கள்
#26
** வட காற்று
வாடை வடந்தை வடகாற்று ஆகும்
** 2 பெயர்கள்
#27
** மேல் காற்று
கோடை மேல்காற்றே
** 1 பெயர்
#28
** கீழ் காற்று
கொண்டல் கீழ்காற்றே
** 1 பெயர்
#29
** தென்றல்
மந்தாநிலமே மலயக்காலே
தென்கால் வசந்தன் தென்திசைத் தென்றல்
** 4 பெயர்கள்
#30
** சுழல் காற்று
சூறை வளியே சுழன்று எழு காற்றே
#31
** மற்றும் சுழல் காற்று
சூறாவளி சாரிகையும் சொல்லும்
** 4 பெயர்கள்
#32
** தச வாயுவின் வகை
பிராணன் அபானன் உதானன் வியானன்
சமானன் நாகன் கூர்மன் கிருகரன்
தேவதத்தன் தனஞ்சயன் என்றா
வாயு ஈர்ஐந்து ஆகும் இவைதாம்
** 10 பெயர்கள்
#33
** பிராணன் என்பது
இருதய மண்டலத்து இயங்கும் பிராணன்
#34
** அபானன என்பது
உச்சத்தலத்திடை நிற்பது அபானன்
#35
** உதானன் என்பது
நாபியின் நின்று அங்கு ஓவாதது உதானன்
#36
** வியானன் என்பது
வியானன் எங்கும் வியாபியா நிற்கும்
#37
** சமானன் என்பது
கந்தரசக்குழியில் சந்திடைச் சமானன்
#38
** நாகன் என்பது
முடக்கலும் நீட்டலும் கிளப்பதும் நாகன்
#39
** கூர்மம் என்பது
உரோமம் புளகித்து இமைப்பது கூர்மம்
#40
** கிருகரன் என்பது
கிருகரன் என்பது முகத்திடைக் கெழுமித்
தும்மலும் சினமும் வெம்மையும் விளைக்கும்
#41
** தேவதத்தன் என்பது
ஓட்டமும் இளைப்பும் வியர்ப்பும் தேவதத்தன்
#42
** தனஞ்சயன் என்பது
ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின்
உயிர் உடல் விடினும் தான் உடல் விடாஅது
ஒக்க நின்று அங்கு உடலினை வீக்கித்
தலை கிழித்து அகல்வது தனஞ்சயன் ஆகும்
#43
** சத்த மருத்துக்கள்
குணக்கும் தெற்கும் குடக்கும் வடக்கும்
மேலும் கீழும் பல யோனி உயிரும்
ஆகும் சத்தமருத்துப் பெயரே
** 7 பெயர்கள்
#44
** நெருப்பு
அழல் உதாசனன் அங்கி தேயு
தழல் வசு உதகவன் தனஞ்சயன் தழலி
கனலி எழுநா அனலி முளரி
அனல் எரி அழலி கனல் அரி கருநெறி
சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி
தூமகேது வன்னி சுவலன்
பாவகன் சித்திரபானு அங்காரகன்
ஞெகிழி தீ ஆரல் நெருப்பின் பெயரே
** 34 பெயர்கள்
#45
** வடவாக்கினி
வடவை தீத்திரள் மடங்கல் ஊழித்தீ
கடையனல் உத்தரம் வடவாக்கினிப் பெயர்
** 6 பெயர்கள்
#46
** விளக்கு
சுடரும் தீபமும் ஒளியும் விளக்கே
** 3 பெயர்கள்
#47
** அனல் பொறி
புலிங்கம் பொறியனல்
** 1 பெயர்
#48
** அனல் திரள்
உற்கம் அனல்திரள்
** 1 பெயர்
#49
** காட்டு எரி
தாவம் காட்டுஎரி வரைஅனலும் ஆகும்
** 2 பெயர்கள்
#50
** தீக்கடை கோல்
அரணி ஞெலிகோல் ஞெகிழி தீக்கடைகோல்
** 3 பெயர்கள்
#51
** புகை
தூமமும் அரியும் தூபமும் ஆவியும்
ஆகும் பெயரே புகை எனலாகும்
** 4 பெயர்கள்
#52
** நறும் புகை
நறை குய் வெடியே நறும்புகை ஆகும்
** 3 பெயர்கள்
#53
** அக்கினி தேவன்
சாதவேதா மைவாகனனே தீபதி
சித்திரபானு தனஞ்சயன்
தென்கீழ்த்திசையோன் தேயு வாயுசகன்
பாவகன் அக்கினிப்பண்ணவன் பெயரே
** 9 பெயர்கள்
#54
** அக்கினி தேவன் பாரி
பாரி சுவாகா தேவி ஆகும்
** 1 பெயர்
#55
** முத்தீ
காருகபத்தியம் ஆகவனீயம்
தக்கணாக்கினியம் மிக்க முத்தீயே
** 3 பெயர்கள்
#56
** பஞ்சாக்கினி
இராகம் வெகுளி காமம் சடமே
தீபனம் பஞ்சாக்கினியின் பெயரே
** 5 பெயர்கள்
#57
** நீர்
ஆலமும் சலமும் அம்மும் அறலும்
பாணியும் அப்பும் பயமும் உதகமும்
வயமும் அயமும் வாரியும் விகடியும்
புனலும் சலிலமும் புவனமும் அளகமும்
சீவனமும் பானீயமும் சிந்தும் ஆம் குசமும்
வருணமும் அம்பும் மழையும் கவந்தமும்
கீலாலமும் மேகமும் அகிலமும் தடியும்
நீரமும் தோயமும் வாரும் பதமும்
காரும் மாரியும் கமலமும் பயசும்
கயமும் சம்பரமும் கம்மும் புட்கரமும்
சதமும் வசியும் கோவும் காண்டமும்
கனவிரதமும் சீவனீயமும் அலரும்
நாரமும் அமுதமும் நீர் எனலாகும்
** 50 பெயர்கள் 57
#58
** மேகம்
மாரியும் மழையும் மஞ்சும் மாசும்
காரும் புயலும் கனமும் கொண்டலும்
வானும் தாராதரமும் மையும் சதமும்
சீவதமும் செல்லும் குயினும் சீமூதமும்
எழிலியும் கொண்மூவும் விளைவும் முகிலும்
விண்ணும் கந்தரமும் சலதரமும் விசும்பும்
மங்குலும் இளையும் மாலும் அம்புதமும்
விண்டுவும் என்று இவை மேகப் பெயரே
#59
** மற்றும் மேகம்
முதிரம் பயோதரம் கதம்பம் மெய்ப்பிரம்
அப்பிரம் ஆயமும் அப் பெயர்க்கு உரித்தே
** 35 பெயர்கள்
#60
** இடியேறு
வெடி ஒலி உருமு கோ விண்ணேறு அசனி
செல் இகுளி இடியேறு மடங்கலும் ஆகும்
** 9 பெயர்கள் 60
#61
** மின்னல்
சம்பை வித்துரு சபலை தடித்து
சஞ்சலை கனருசி தடி ஒளி மின்னல்
** 8 பெயர்கள் 61
#62
** மழை
மாரி வானம் வருடம் மழை எனல்
** 3 பெயர்கள் 62
#63
** பெரு மழை
ஆசாரம் பெரு மழை ஆகும் என்ப
** 1 பெயர்
#64
** விடா மழை
சோனையும் பனித்தலும் விடாது சொரிதல்
** 2 பெயர்கள் 64
#65
** தலைப் பெய் மழை
தளி உறை ஆலி தலையல் தலைப்பெயல்
#66
** மற்றும் தலைப் பெய் மழை
தலைப்பெயல் சோதகமும்
** 5 பெயர்கள் 66
#67
** ஆலாங் கட்டி
ஆலி கனோபலம் ஆலாங்கட்டி
#68
** மற்றும் ஆலாங் கட்டி
கரகமும் ஆகும் என்மனார் புலவர்
** 3பெயர் 68
#69
** மழைத் துவலை
சிதரம் பிதிரே சீகரம் சிதரே
தூவல் துமிதம் திவலையும் மழைத்
துவலையின் பெயர் எனச் சொல்லல் ஆகும்
** 7 பெயர்கள்
#70
** மழை விடல்
தூறலும் தலையலும் சோதகமும் மழைவிடல்
** 3 பெயர்கள்
#71
** ஏழு மேக வகை
சம்வர்த்தம் ஆவர்த்தம் புட்கலாவர்த்தம்
சங்காரித்தம் துரோணம் காளமுகி
நீலவருணம் ஏழ் மேகப் பெயரே
** 7 பெயர்கள்
#72
** அவற்றுள் ஏழு மழை வகை
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்று
எழு வகை மேகம் பொழி மாரி ஏழே
** 7 பெயர்கள்
#73
** வருணன்
சலபதி பாசதரன் நதிகேள்வன்
வரு புனல்செல்வன் வருணன் பெயரே
** 4 பெயர்கள்
#74
** வெள்ளம்
பிரளயம் நீத்தம் வாரி வெள்ளம்
#75
** மற்றும் வெள்ளம்
ஓதமும் பெருக்கும் ஆகலும் உரித்தே
** 5 பெயர்கள்
#76
** பனி
இமமும் துகினமும் மஞ்சும் நீகாரமும்
பனியின் பெயர் ஏமந்தமும் பகரும்
**5 பெயர்கள்
#77
** நிறை புனல்
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல்
** 3 பெயர்கள்
#78
** நீந்து புனல்
அகாதம் என்பது நீந்துபுனலே
** 1 பெயர்
#79
** தெளிந்த நீர்
சற்சலம் என்பது தெளிந்தநீரே
** 1 பெயர்
#80
** கலங்கல் நீர்
ஆவிலம் கலுழி உடம்பை கலங்கல் புனல்
** 3 பெயர்கள்
#81
** நீரோட்டம்
கோலம் என்பது கொடு நீரோட்டம்
** 1 பெயர்
#82
** நீர்த் திரை
அறலும் தரங்கமும் அலையும் கல்லோலமும்
புனலின் திரைக்குப் பொதுப் பெயர் ஆகும்
#83
** மற்றும் நீர்த் திரை
சிகரம் என்பதும் திரையின் பொதுவே
** 5 பெயர்கள்
#84
** நீர்க் குமிழி
கொப்புள் மொக்குள் புற்புதம் குமிழி
** 3 பெயர்கள்
#85
** ஆழ நீர்
அழுந்தும் குண்டும் கயமும் ஆழநீர்
** 3 பெயர்கள்
#86
** நீர்ச் சுழி
உந்தியும் சுரியலும் நீர்ச்சுழி ஆகும்
** 2 பெயர்கள்
#87
** நுரை
பேனமும் பேவும் நுரையின் பெயரே
** 2 பெயர்கள்
#88
** பரிவேடம்
ஊர்கோள் வட்டம் ஒளி கொள் மண்டிலம்
பரிதி விசயம் பரிவேடம் ஆகும்
** 5 பெயர்கள்
#89
** இந்திர வில்
வானவில் இந்திரவில் என வைப்பர்
** 1 பெயர்
#90
** காமகாண்டம்
இரட்டைவில் காமகாண்டம் ஆகும்
** 1 பெயர்
#91
** இருள்
அல்லு திமிரம் கருளே கருவரி
கச்சளம் அந்தகாரம் துவாந்தம்
நத்தம் தமமொடு துணங்கறல் இருளே
** 10 பெயர்கள்
#92
** பதினெண் கணம்
அமரர் சித்தர் அசுரர் தைத்தியர்
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர்
காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர்
பசாசர் அந்தரர் முனிவர் உரகர்
ஆகாயவாசியர் போகபூமியர் எனப்
பாகுபட்டன பதினெண்கணமே
** 18 பெயர்கள்
** முதலாவது வான்வகை முற்றிற்று
@2 வானவர் வகை
#1
** சுணபதி
ஏகதந்தன் இறைமகன் ஏரம்பன்
ஆகுவாகனன் ஐங்கரன் முக்கணன்
பார்ப்பதிபுதல்வன் பாசாங்குசதரன்
அத்திமுகத்தோன் அரிதிருமருகன்
தந்திக்கடவுள் தான மும்மதன்
கங்கைசுதன் விநாயகன் கணபதி பெயரே
** 14 பெயர்கள்
#2
** சிவன்
அரன் சிவன் அரூபி அனந்தன் உருத்திரன்
பரன் கறைமிடற்றோன் பார்ப்பதிகொழுநன்
காலகாலன் பசுபதி கண்ணுதல்
தாணு எண்குணன் சங்கரன் நந்தி
ஆதி சசிதரன் ஐம்முகன் பினாகி
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன்
முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி
நக்கன் சடையோன் நாயகன் சயம்பு
காமநாசன் பிதா கருணாலயன்
தேவதேவன் திரிபுராந்தகன்
மான்இடம்ஏந்தி பேயோடுஆடி
முத்தன் முதல்வன் சுத்தன் யோகி
வேதமுதல்வன் நாரிபாகன்
ஆல்அமர்கடவுள் பவனே அனாதி
நீலகண்டன் நிருத்தன் பூதேசன்
கங்காதரன் மழுஆளி கபாலி
அங்கணன் கைலை ஆளி கங்காளன்
அக்குஅரவுஆர்த்தோன் அழல்ஆடி தற்பரன்
நித்தன் நிமலன் நீறுஅணிகடவுள்
யானைஉரித்தோன் அமலன் ஆனந்தன்
வாமதேவன் மகேச்சுரன் சதாசிவன்
திரியம்பகன் விமலன் சந்திரசேகரன்
மால்அயற்குஅரியோன் நாதன் எண்தோளன்
ஞானமூர்த்தி நம்பன் பகவன்
வாமன் கிரீசன் வரன் உமாபதி
பூதபதி புண்ணியன் புலித்தோல்உடையோன்
மாதேவன் கொன்றைமாலையன் பித்தன்
ஈச்சுரன் நாசம்இல்லோன் இறைவன்
பாசுபதன் குன்றவில்லி பாண்டரங்கன்
ஈசன் பரமனும் எம் பிரான் பெயரே
#3
** மற்றும் சிவன்
அந்திவண்ணன் காமாரி புராரி
அந்தகாரி பர்க்கன் என்று அனந்தம் ஈசன் பெயர்
** 100 பெயர்கள்
#4
** சிவன் ஊர்தி கொடி
ஊர்தியும் கொடியும் இடபம் என்று உரைப்பர்
** 1 பெயர் 4
#5
** சிவன் படை
பரசும் சூலமும் பினாகவில்லும் படை
** 3 பெயர்கள் 5
#6
சிவன் எண் குணம்
பவம்இன்மை இறவின்மை பற்றுஇன்மை பெயர்இன்மை
உவமைஇன்மை ஒருவினைஇன்மை
குறைவுஇல்அறிவுஉடைமை கோத்திரம்இன்மை
என்று இறைவனிடத்தில் எண்குணம் இவையே
** 8 பெயர்கள் 6
#7
** சிவன் ஐம்முகம்
ஈசானம் தற்புருடம் அகோரம் வாமம்
சத்தியோசாதம் சங்கரன் ஐம்முகம்
** 5 பெயர்கள் 7
#8
** சிவன் இருப்பு முதலியவை
இருப்பது கைலை தரிப்பது கங்கை
முடிப்பது கொன்றை உடுப்பது சருமம்
#9
** சிவ பதம் நான்கு
தான் ஆள் உலகு இருத்தல் தன்பாடு இருத்தல்
தான் ஆம் பதம் பெறல் தான் ஆகுதல் என
நாலே சிவன்தன் நல் அருள் பதமே
** 4 பெயர்கள் 9
#10
** சிவ பூசை இயல்பு
சரியை கிரியை யோகம் ஞானம் என்று
இவை ஒரு நான்கும் சிவபூசை இயல்பே
** 4 பெயர்கள் 10
#11
** சிவாகம நூற் பயன்
தர்மம் அர்த்தம் காமம் மோக்கம் சிவாகமம்
** 4 பெயர்கள் 11
#12
** நந்தி
எருது விடை ஏறு இடபம் புங்கவம்
இறைவாகனம் சிவகணமுதல் நந்தி
** 7 பெயர்கள் 12
#13
** சிவன் அழித்த முப்புரம்
பொன்னினும் வெள்ளியினும் புகல்
இரும்பினும் அன்ன மும்மதில்
சிவன் அழித்த முப்புரமே
** 3 பெயர்கள் 13
#14
** உமை
ஆரியை காமக்கோட்டி அம்பிகை
நாரி சத்தி நாயகி கெளரி
தேவி சாம்பவி தருமச்செல்வி
மலைமகள் சங்கரி மாதா ஐயை
பரையே உருத்திரை பார்ப்பதி அந்தரி
நீலி கன்னி நிமலி குமரி
வேதமுதல்வி விமலை முக்கண்ணி
அமலை இமயவதி அயிராணி
சமயமுதல்வி தற்பரை மனோன்மணி
சிவை உமை அம்மை இரு நாமம் என்ப
#15
** மற்றும் உமை
அரன்இடத்தவள் சகம்ஈன்றவள் பவானி
எமது அன்னை புண்ணிய முதல்வி பெயரே
** 38 பெயர்கள் 15
#16
** கங்கை
வரநதி சுரநதி மந்தாகினி உமை
கரநதி தசமுகநதி கங்காநதி
சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே
** 7 பெயர்கள் 16
#17
** முப்பத்திரண்டு அறம்
ஆதுலர் சாலை ஓதுவார்க்கு உணவு அறு
சமயத்தோர்க்கு உண்டி பசுவிற்கு வாயுறை
சிறைச்சோறு ஐயநடை தின்பண்டம்
அறவைச்சோறு மகப்பெறுவித்தல்
மகவுவளர்த்தல் மகப்பால்வார்த்தல்
அறவைப்பிணம்சுடுதல் அறவைத்தூரியம்
சுண்ணம் நோய் மருந்து வண்ணார் நாவிதர்
கண்ணாடி காது ஓலை கண் மருந்து தலைக்கு எண்ணெய்
பெண்போகம் மற்றும் பிறர் துயர் காத்தல்
தண்ணீர்ப்பந்தர் மடம் தடம் காவே
ஆவுரிஞ்சுதறி விலங்கிற்கு உணவோடு
ஏறுவிடுத்தல் விலை கொடுத்து உயிர் விடுத்தல்
தன் நிலை உயர்ந்த கன்னிகாதானம்
இ நான்குஎட்டும் இறைவி செய் தருமம்
** 32 பெயர்கள் 17
#18
** அறுமுகக் கடவுள்
குமரன் தெய்வகுஞ்சரிமணாளன்
சிலம்பன் முருகன் சேயே செவ்வேள்
கடம்பன் சாமி கார்த்திகேயன்
சேந்தன் குறிஞ்சிக்கிழவன் செட்டி
காங்கேயன் கெளரிமைந்தன் கந்தன்
வேலன் வள்ளிகேள்வன் விசாகன்
தாருகாரி குகன் சரவணபவன்
மயில்வாகனனே வன்னிப்பூக்குமரன்
ஆறு இரு கரத்தோன் அரி இரு மருகன்
குழகன் கங்கைமைந்தன் குன்றுஎறிந்தோன்
அறுமீன்காதலன் அசுரன்தடிந்தோன்
சேவலங்கொடியோன் தேவ சேனாபதி
பாவகி ஆசான் கலைஅறிபுலவன்
அரன்மகன் யானை முகவற்கு இளையோன்
இனைய அறுமுகக்கடவுள் பெயரே
** 37 பெயர்கள் 18
#19
** அறுமுகக் கடவுள் ஊர்தி
ஆடும் யானையும் மயிலும் ஊர்தி
** 3 பெயர்கள் 19
#20
** அறுமுகக கடவுள் படை கொடி
அயில் வேல் அரும் படை
கொடி சேவல் ஆகும்
** 1, 1 பெயர்கள் 20
#21
** அறுமுகக் கடவுள் மாலை
நீபமும் செச்சையும் மாலை ஆகும்
** 2 பெயர்கள் 21
#22
** வீரபத்திரன்
உக்கிரன் அழற்கண்வந்தோன் உமைமகன்
முக்கணன் தக்கன் வேள்வி முனிந்தோன்
ஏகவீரியன் சடாதரன் வில்லி
ஈசன்மைந்தன் கணபதிக்கு இளையோன்
ஆயிரமுகத்தோன் சிம்புள் ஆனோன்
பத்திரைகேள்வன் வீரபத்திரன் பெயர்
** 13 பெயர்கள் 22
#23
** வைரவன் பெயர்
கஞ்சுகன் மூஇலைவேலோன் காரி
முத்தன் கேத்திர பாலன் நிருவாணி
சித்தன் ஞாளிஊர்தி கபாலி
வடுகன் இன்னவை வயிரவன் பெயரே
** 10 பெயர்கள் 23
#24
** வைரவன் ஊர்தி படை
வைரவன் ஊர்தி ஞமலி சூலம் படை
** 1,1 பெயர்கள் 24
#25
** ஐயனார்
சாதவாகனன் கோழிக்கொடியோன்
சாத்தன் வெள்ளையானைவாகனன்
காரி செண்டு ஆயுதன் கடல்நிறவண்ணன்
பூரணைகேள்வன் புட்கலைமணாளன்
ஆரியன் அறத்தைக்காப்போன் யோகி
அரிகரபுத்திரன் ஐயன் பெயரே
** 13 பெயர்கள் 25
#26
** ஐயனார் ஊர்தி கொடி
காரிஊர்தி காரிக்குதிரை
கோழிக்கொடியும் ஆகும் என்ப
** 1, 1 பெயர்கள் 26
#27
** மாகாளி
குமரி சண்டிகை குண்டலி நீலி
வலவை பைரவி கெளமாரி மாதரி
மாயை வீரி மதங்கி யாமளை
சூரி வேதாளி கங்காளி யோகினி
சூலி சாமுண்டி தாருகாரி
ஆரியை தேவி வல்லணங்கு ஐயை
அலகைக்கொடியாள் மாலினி முக்கண்ணி
பதுமை எண்தோளி பத்திரி ஆரணி
யாளிஊர்தி மாகாளி பெயரே
** 31 பெயர்கள் 27
#28
** மாகாளி ஊர்தி கொடி படை
ஊர்தி சிங்கம் உயர் கொடி அலகை
சூலம் படை எனச் சொல்லப்படுமே
** 1 ,1,1 பெயர்கள்
#29
** இடாகினி
வஞ்சனி மாயவள் வலவை இடாகினி
** 3 பெயர்கள்
#30
** யோகினி
சன்மினி சூர்மகள் யோகினிப் பெயரே
** 2 பெயர்கள்
#31
** யோகினி ஊர்தி கொடி
பேய் கொடி வாகனம் ஓரி ஆகும்
** 1, 1 பெயர்கள்
#32
** துர்க்கை
அந்தரி மகிடற்காய்ந்தாள் ஐயை
விந்தை அம்பணத்தி விசயை எண்தோளி
மாலுக்குஇளையாள் பகவதி சயமகள்
பாலைக்கிழத்தி வீரச்செல்வி
கெளரி காத்தியாயனி சக்கராயுதி
அமரி குமரி அருங் கலைஊர்தி
சமரி கன்னி சயை வாள்படையாள்
சூலி ஆரியை நீலி சண்டிகை
வெற்றி மேதித் தலைமிசை நின்றாள்
கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே
** 29 பெயர்கள்
#33
** துர்க்கையின் படை வாகனம்
கைவாள் படை வாகனம் கலை ஆகும்
** 1, 1 பெயர்கள்
#34
** காடுகாள்
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி
மாரி சூரி வடுகி மூதணங்கே
** 7 பெயர்கள்
#35
** சத்த மாதர்கள்
பிரமாணி நாராயணி மாயேசுரி
கெளமாரி வராகி உருத்திராணி
இந்திராணி என்று எழு வகை மாதர்
** 7 பெயர்கள்
#36
** சத்த மாதர்கள் ஊர்தி
அன்னம் ஏறு விடையே அலகை
மஞ்ஞை களிறு கலுழன் ஊர்தி
** 7 பெயர்கள்
#37
** சத்த மாதர்கள் படை
மறை தண்டு சூலம் பினாகம் எஃகம்
வச்சிரம் ஆழி வன் படை ஆகும்
** 7 பெயர்கள்
#38
** விட்டுணு நாராயணன்
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன்
சீதரன் பதுமநாபன் திருமால்
கொண்டல்வண்ணன் கோவிந்தன் முகுந்தன்
விண்டு வனமாலி வாமன் வாமனன்
திரிவிக்கிரமன் திருமறுமார்பன்
கேசவன் வரதன் முராரி அனந்தன்
காவல்கடவுள் காகுத்தன் அச்சுதன்
அரவணைச்செல்வன் அறிதுயில்அமர்ந்தோன்
சக்கராயுதனே சார்ங்கபாணி
தண் கடல்வண்ணன் சலசவிலோசனன்
உலகினைஅளந்தோன் உலகம்உண்டோன்
படிமுழுதுஇடந்தோன் அலகைமுலைஉண்டோன்
தாமோதரனே செளரி மதுசூதனன்
ஆதி பீதாம்பரனே வராகன்
திருமகள்பூமிகொழுநன் கண்ணன்
உவணஊர்தி உவணம்உயர்த்தோன்
பஞ்சாயுதன் பரந்தாமன் பகவன்
பூவைவண்ணன் புணரியில்துயின்றோன்
பிரமன்தந்தை பின்னைகேள்வன்
சங்கம்ஏந்தி நாரசிங்கன்
இருடிகேசன் தசாவதாரன்
குறளன் நெடுமால் வலவன் கரியோன்
உந்திபூத்தோன் நந்தகோபாலன்
வாசுதேவன் துளபமெளலியன்
அனந்தசயனன் வைகுந்தநாதன்
ஆயிரம்பெயரோன் அரி மால் என்று இவை
நாராயணன் திருநாமம் ஆகும்
#39
** மற்றும் விட்டுணு
அருந்தமன் என்பதும் ஆங்கு அவன் பெயரே
** 69 பெயர்கள் 39
#40
** நாராயணனின் விட்டுணுவின் ஊர்தி கொடி
ஊர்தி கருடன் ஒண் கொடியும் அதுவே
** 1, 1 பெயர்கள் 40
#41
** நாராயணனின் விட்டுணுவின் பஞ்சாயுதம்
சக்கரம் தனு வாள் தண்டு சங்கம்
பற்றலர் மேல் விடும் பஞ்சாயுதமே
** 5 பெயர்கள் 41
#42
** அவற்றுள் சக்கரம்
சக்கரம் சுதரிசனம்
** 1பெயர் 42
#43
** தனு
தனுவே சார்ங்கம்
** 1 பெயர் 43
#44
** வாள்
சய வாள் நாந்தகம்
** 1 பெயர் 44
#45
** தண்டு
தண்டு கெளமோதகி
** 1 பெயர் 45
#46
** சங்கு
சங்கு பாஞ்சசன்னியம் ஆகும்
** 1 பெயர் 46
#47
** அரியின் தசாவதாரம்
மச்சம் கூர்மம் வராகம் நரசிங்கம்
வாமனன் பரசுராமன் இராமன்
பலபத்திரனே கண்ணன் வரு கற்கி என்று
இவை ஒரு பத்தும் அரி அவதாரம்
** 10 பெயர்கள் 47
#48
** அன்றியும் மூவைந்து அவதாரம்
சனகன் சனந்தனன் சனாதன் சனற்குமாரன்
நரநாராயணன் கபிலன் இடபன்
நாரதன் அயக்கிரீவன் தத்தாத்திரேயன்
மோகினி வேள்வியின்பதியே வியாதன்
தன்வந்திரியே பெளத்தன் என்று ஆங்கு
இன்னம் மூவைந்தும் அரி அவதாரம்
** 15 பெயர்கள் 48
#49
** வெற்றிக் கலப்பைப்படையோன் ஒழியப்
புத்தன் என்று புகலப்படுமே
#50
** திருமகள்
பொருளின்செல்வி பொறி அரிப்பிரியை
மலர்மகள் இந்திரை மாவே இலக்குமி
கமலை ஆக்கம் பதுமை சீதேவி
தாக்கணங்கு இளையாள் தண் கடல்பிறந்தாள்
மால்திருமார்பினள் மா மறைத்தலைவி
செய்யாள் பூமகள் திருமகள் பெயரே
** 18பெயர்கள்
#51
** பலபத்திரன்
இரேவதிகொழுநன் குண்டலன் உரோகிணி
தனயன் நீலாம்பரன் அலாயுதன்
அச்சுதன் முன்னோன் காமபாலன்
அனந்தன் வெள்ளை காளிந்திமர்த்தனன்
பனந்துசன் முசலி கருந்துகில்உடையன்
பலதேவன் பலபத்திரன் பெயரே
** 14 பெயர்கள் 51
#52
** பலபத்திரன் படை கொடி
படையே கலப்பை கொடி பனை ஆகும்
** 1, 1 பெயர்கள் 52
#53
** காமன்
மால்மகன் மதனன் மகரக்கொடியோன்
வேனில்ஆளி வில்வேள் வசந்தன்
அங்கசன் அனங்கன் ஐங்கணைக்கிழவன்
திங்கள்குடையோன் தென்றல்தேரோன்
வனசன் வில்லி மோகன் மா மலர்க்கணையோன்
மதிசகன் இரதிகாந்தன் மாரன்
மனோபவன் மனோசன் மனோபு மன்மதன்
திருமகள்மைந்தன் சம்பரசூதனன்
உருவிலி கடல்முரசோன் கைதைச்சுரிகையன்
கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன்
கருப்புவில்லி காமன் பெயரே
** 32 பெயர்கள் 53
#54
** காமன் ஊர்தி கொடி
வாகனம் தென்றல் மகரம் கொடியே
** 1, 1 பெயர்கள் 54
#55
** காமன் வில் கணை
கழையே வில்லு கணை மலர் ஐந்தே
** 1, 1 பெயர்கள் 55
#56
** காமன் ஐங்கணை
வனசம் சூதம் அசோகம் முல்லை
குவளை காமன் கொலும் ஐங்கணையே
** 5 பெயர்கள் 56
#57
** அவற்றின் செயல்
உன்மத்தம் மதனம் மோகனம் சந்தாபம்
வசீகரணம் இவை மதன் கணைச் செயலே
** 5 பெயர்கள் 57
#58
** அவற்றின் அவத்தை
சுப்பிரயோகமும் விப்பிரயோகமும்
சோகமும் மோகமும் மரணமும் என்று இவை
ஆகும் மலர்க்கணை ஐந்தின் அவத்தை
** 5 பெயர்கள் 58
#59
** அவற்றுள் சுப்பிரயோகம் சொல்லா நினைவும்
#60
விப்பிரயோகம் வெய்து உயிர்த்து இரங்கல்
#61
சோகம் வெதுப்புத் துய்ப்பன தெவிட்டல்
#62
மோகம் அழுங்கலும் மொழி பல பிதற்றலும்
#63
மரணம் அயர்ப்பும் மயக்கமும் ஆகும்
#64
** பிரமன் பெயர்
அந்தணன் மலரோன் அயன் நான்முகத்தோன்
உந்தியில்வந்தோன் ஓதிமவாகனன்
பாரதிகொழுநன் படைப்போன் பகவன்
ஆரணன் இரணியகருப்பன் விரிஞ்சன்
வேதா விதாதா விதி சதானந்தன்
தாதா பிதாமகன் சம்பு மால்மகன்
எண்கணன் கமலயோனி பிரசாபதி
வேதன் கம் இறை சூதன் பரமேட்டி
திசைமுகன் வானவர் முதுவன் போதன்
வரனே குரவன் மண்பொதுத்தந்தை
அனந்தன் ஞானன் அன்னம்உயர்த்தோன்
இறைவன் மறையோன் பிரமன் பெயரே
** 39 பெயர்கள் 64
#65
** பிரமன் ஊர்தி படை கொடி
அன்னம் ஊர்தி அரும் படை பாசம்
மன்னிய கதை படை கொடி மறை ஆகும்
** 1, 2, 1 பெயர்கள்
#66
** நாமகளின் பெயர்
பாரதி துய்யாள் பனுவலாட்டி
வேதமுதல்வி பிராமி விமலை
வாணி வெள்ளைநிறத்தினள் வாக்காள்
நான்முகன் கிழத்தி ஞானத்து இறைவி
காயத்திரியே சாவித்திரியே
நல் பா மடந்தை நல் நூல் மடந்தை
உலக மாதா நா மகள் இசை மகள்
கலை மகள் வெண் தாமரை மகள் கண்ணாள்
தொலையா என் உயிர்த் துணைவி பெயரே
** 21 பெயர்கள் 66
#67
** நாமகள் ஊர்தி
ஊர்தி பூரம் ஆகும் என்ப
** 1 பெயர் 67
#68
** இந்திரன்
அமராவதியோன் ஆயிரம்கண்ணன்
சதமகன் கோபதி போகி சங்கிரந்தனன்
பாகசாதனன வச்சிரப்படையோன்
மேகவாகனன் விண்முழுதுஆளி
வாசவன் மகவான் வானவன் கெளசிகள்
ஆகண்டலன் அயிராவதன் வலாரி
புருகூதன் சக்கிரன் புரந்தரன் மருத்துவன்
மருதக்கிழவன் வரைசிறகுஅரிந்தோன்
அரி சசிவல்லவன் திருமலி சுவர்க்கன்
வேள்விநாயகன் புலவன் வேந்தன்
புரோகிதன் சுனாசி கரியவன் புனிதன்
காண்டாவனன் மால் வெள்ளைவாரணன்
தேவர்வேந்தன் பொன்நகர்ச்செல்வன்
ஐந்தருநாதன் இந்திரன் பெயரே
** 39 பெயர்கள் 68
#69
** இந்திரன் தேவி
சுந்தரி சசி அயிராணி புலோமசை
ஐந்தருச்செல்வி இந்திரன்தேவி பெயர்
** 5 பெயர்கள் 69
#70
** இந்திரன் மகன்
சயந்தன் இந்திரன்தன் மகன் ஆகும்
** 1 பெயர் 70
#71
** இந்திரன் நகர்
ஆங்கு அவன் திருநகர் அமராவதியே
** 1 பெயர் 77
#72
** இந்திரன் யானை
ஓங்கிய ஊர்தி வெள்ளை அயிராவதம்
** 1 பெயர் 72
#73
** இந்திரன் குதிரை
மெச்சிய பரிமா உச்சைச்சிரவம்
** 1 பெயர்
#74
** இந்திரன் படை கொடி
வச்சிரம் படையே வண் கொடி இடி ஆம்
** 1, 1 பெயர்கள்
#75
** இந்திரன் மண்டபம்
மண்டபம் சயந்தம்
** 1 பெயர்
#76
** இந்திரன் மாளிகை
மாளிகை வசந்தம்
** 1 பெயர்
#77
** இந்திரன் பண்டாரம்
பண்டாரப் பெயர் பகரில் சுதன்மம்
** 1 பெயர்
#78
** இந்திரன் நந்தனவனம்
அம் தண் கற்பகச்சோலை நந்தனவனம்
** 1 பெயர்
#79
** இந்திரன் சேமநிதி
சேமம் நவநிதி
** 1 பெயர்
#80
** இந்திரன் கோ
கோ காமதேனு
** 1 பெயர்
#81
** இந்திரன் உணவு
உணவு அது அமுதம்
** 1 பெயர்
#82
** இந்திரன் புனைவது
புனைவது கற்பகமலர்
** 1 பெயர்
#83
** இந்திரன் அணிவது
அணிவது சிந்தாமணி சூளாமணி
** 2 பெயர்கள்
#84
** நாடகத்து அரம்பையர்
மேனகை அரம்பை உருப்பசி திலோத்தமை
ஆன நால்வரும் நாடகத்து அரம்பையர்
** 4 பெயர்கள்
#85
** தேவர் பொது
வானவர் அமுதர் வரர் புத்தேளிர்
மேலவர் இமையவர் விண்ணவர் கடவுளர்
அமரர் புங்கவர் ஐயர் இலேகர்
விபுதர் தீர்த்தர் அசுரர்க்கு அமித்திரர்
உயர்நிலையோர் சுரர் உம்பர் புலவர்
அண்டர் முதல்வர் ஆதித்தர் சுவர்க்கர்
பொன் உலகுஉடையோர் தேவர் பொதுப்பெயர்
** 24 பெயர்கள் 85
#86
** தேவர் முப்பத்து மூவர்
ஆதித்தர் பன்னிருவர் அச்சுவினிகள் இருவர்
ஈசர் பதினொருவர் எண்மர் வசுக்கள்
ஆக முப்பத்துமூவர்தம் பெயரே
** 33 பெயர்கள்
#87
** ஆதித்தர் பன்னிருவர்
வைகத்தன் விவச்சுதன் வாசன் மார்த்தாண்டன்
பாற்கரன் இரவி உலோகப்பிரகாசன்
உலோகசாட்சி திரிவிக்கிரமன்
ஆதித்தன் திவாகரன் அங்கிசமாலி
ஆகச் சூரியர் பன்னிரண்டு என்ப
** 12 பெயர்கள்
#88
** ஏகாதச ருத்திரர் உருத்திரர் பதினொருவர்
மாதேவன் அரனே உருத்திரன் சங்கரன்
நீலலோகிதன் ஈசானன் விசயன்
வீமதேவன் பவோற்பவன் கபாலி
செளமியன் ஏகாதசருத்திரர் பெயர்
** 11 பெயர்கள்
#89
** அட்டவசுக்கள்
தரன் துருவன் சோமன் ஆபச்சைவன்
அனலன் அணிலன் பிரத்தியூசன்
பிரபாசன் அட்டவசுக்கள் பெயரே
** 8 பெயர்கள்
#90
** அச்சுவினிகள் இருவர்
அச்சுவினி தேவர் இருவர்தம் பெயரே
** 2 பெயர்கள்
#91
** கடவுளர் பொது
பண்ணவர் பகவர் தீர்த்தர் பட்டாரகர்
புங்கவர் என்பவும் கடவுளர் பொதுப் பெயர்
** 5 பெயர்கள்
#92
** தெய்வம்
சூரே அணங்கு கடவுள் தெய்வதம்
தேவு புத்தேள் இயவுள் தெய்வம் ஆகும்
** 7 பெயர்கள்
#93
** சுரர் மகவிர்
அரமகளிர் சூரரமகளிர் அரம்பையர்
சுரர்மகளிர் ஆம் எனச் சொல்லப்பெறுமே
** 3 பெயர்கள்
#94
** தெய்வப் பெண்
அணங்கு சூர் வஞ்சனை மாயவள் கன்னி
இணங்கிய தெய்வப்பெண் பெயர் ஆகும்
** 5 பெயர்கள்
#95
** மூதேவி
கழுதைஊர்தி காக்கைக்கொடியாள்
முகடி தெளவை கலதி மூதேவி
#96
** மற்றும் மூதேவி
சீர்கேடி கேட்டை கெடல் அணங்கு ஏகவேணி
சேட்டை என்ன விளம்புவர்
** 10 பெயர்கள் 96
#97
** மூதேவி ஊர்தி படை கொடி
வாகனம் கழுதை வன் படை துடைப்பம்
காகம் கொடி எனக் கழறல் வேண்டும்
** 1, 1, 1 பெயர்கள் 97
#98
** தரும தேவதை
மரகதவல்லி பூகநிழலினள்
பரமசுந்தரி இயக்கி பகவதி
அருகனைத்தரித்தாள் அறத்தின்செல்வி
தருமதேவதை அம்பாலிகை பெயரே
** 8 பெயர்கள் 98
#99
** அருகன்
புண்ணியன் எண்குணன் பொன்எயில்நாதன்
பண்ணவன் பட்டாரகனே முனைவன்
அசோகுஅமர்கடவுள் பகவன் முக்குடையோன்
அறஆழிவேந்தன் அரிஅணைச்செல்வன்
பூமிசைநடந்தோன் வரதன் சினேந்திரன்
ஆன பிறவும் அருகன் பெயரே
** 14 பெயர்கள் 99
#100
** அருகன் ஊர்தி படை
அருகன் ஊர்தி அம்புயம் படையே
** 1 பெயர் 100
#101
** அருகன் கொடி
நாடகக் காட்சி ஞானம் சீலம் கொடி
** 3 பெயர்கள் 101
#102
** புத்தன்
பார்மிசைநடந்தோன் பகவன் புங்கவன்
தருமன் சாந்தன் முனைவன் வாமன்
புனிதன் சினன் வரன் அறிவன் பிடகன்
போதிவேந்தன் புத்தன் பெயரே
** 13 பெயர்கள் 102
#103
** குபேரன்
இருநிதிக்கிழவன் இயக்கர்வேந்தன்
வடதிசைகத்தலைவன் நரவாகனனே
அளகைஆளி அதிதனச்செல்வன்
சீரகத்தாரோன் வைச்சிரவணனே
அரனுடைத்தோழன் கின்னரர்பிரானே
மரகதன் புட்பகஊர்தி பிங்கலன
மந்திரி தனபதி குபேரன்தன் பெயர்
** 15 பெயர்கள்
#104
** குபேரன் வாகனம்
நரவாகனமும் புட்பகத்தேரும்
அவன் வாகனம் ஆம் அறியுங்காலே
** 2 பெயர்கள் 104
#105
** இயமன்
இயமன் அரி அந்தகன் தென்திசைக்கிழவன்
சமனே சண்டன் சண்பன் தருமன்
நமனே மறலி தண்டதரனே
சைமினிநகரோன் வைதரணிநதியோன்
செங்கோல்கடவுள் நாசவன் நடுவன்
இங்கு இவை யமன் பெயர் கூற்றும் இசைக்கும்
** 17 பெயர்கள் 105
#106
** இயமன் ஊர்தி படை
எருமை ஊர்தி எறியும் ஒண் படை
தண்டு பாசம் தான் ஆகும்மே
** 1, 2 பெயர்கள் 106
#107
** காலன்
சண்டன் மறலி கூற்று சமனே
வந்த மடங்கல் கால் மறலும் இசைக்கும்
** 7 பெயர்கள்
#108
** காலன் படை
துணிக்கும் வெம் படை கணிச்சி ஆகும்
** 1 பெயர் 108
#109
** அசுரர்
தானவர் அவுணர் தயித்தியர் கண்டகர்
மேனி கரப்போர் தகுவர் கார்வண்ணர்
தேவர்பகைவர் திதிபுதல்வர் அசுரர்
** 9 பெயர்கள் 109
#110
** மாவலி
வயிரோசனனே மாவலி அவுணன்
** 1 பெயர் 110
#111
** நிருதர்
நிசாசரர் சாலகடங்கடர் நிருதர்
** 2 பெயர்கள் 111
#112
** அரக்கர
அரக்கர் இராக்கதர் யாதுதானவர்
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப
* 4 பெயர்கள்
#113
** கந்தருவர்
கந்தருவர் இயக்கர் யாழோர் காந்தருவர்
தந்திரர் கின்னரர் என்னச் சாற்றுவர்
** பெயர்கள் 113
#114
** வித்தியாதரர்
விஞ்சையர் கேசரர் வித்தியாதரர் பெயர்
** 2 பெயர்கள் 114
#115
**வித்தியாதரர் இடம்
சேணியும் விஞ்சைப்பதியும் சேடியும்
யாணர்நகரும் வித்தியாதரர் இடம்
** 4 பெயர்கள் 115
#116
** பூதம்
சாதகம் பாரிடம் குறள் கூளி சாரதம்
மகோதரம் கிருத்திமம் கணம் பூதப் பெயர்
** 8 பெயர்கள் 116
#117
** பேய்
கடி வேதாளம் கழுது கூளி
வெறியே அலகை பிசாசு மண்ணை
மயலே சோகு மருளே வியந்தரம்
பிரேதம் அழனே குணங்கு குணபாசி
பாசம் சாவு சவமே அள்ளை
குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும்
** 22 பெயர்கள் 117
#118
** சூரியன்
இரவி இனன் மணி என்றூழ் செஞ்சுடர்
பரிதி தேரோன் எல்லோன் பானு
சண்டன் அருக்கன் தபனன் ஆதவன்
அண்டயோனி ஆயிரம்கதிரோன்
கனலி திவாகரன் கனலோன் பாற்கரன்
அனலி ஒளியோன் அலரி மார்த்தாண்டன்
தினகரன் செங்கதிர் அரி திமிராரி
அருணன் சூரன் ஞாயிறு சவிதா
பகலே பர்க்கன் வெயிலோன் ஆதித்தன்
விரிச்சிகன் விரோசனன் விகர்த்தனன் மித்திரன்
வெய்யோன் கதிரோன் வெஞ்சுடர் சோதி
பகலவன் எல்லை பதங்கள் ஆதபன்
அழலவன் உதயன் இருள்வலி பொழுது
பகவன் சான்றோன் வேந்தன் தாபனன்
தரணி எல்லி சாயாபதியே
பகலோன் விண்மணி பனிப்பகை கதிரவன்
சுடரோன் மாலி சூரியன் பெயரே
** 64 பெயர்கள் 118
#119
** சூரிய மண்டிலம்
விசயம் என்பது வெங்கதிர் மண்டிலம்
** 1 பெயர் 119
#120
** சூரிய கிரணம்
கரமே தீவிரம் கோ கிரணம் கதிர்
** 4 பெயர்கள் 120
#121
** வெயில்
கோடை என்றூழ் எல் ஒளி வெயில் எனல்
#122
** மற்றும் வெயில்
ஆதவம் என்பதும் அப் பெயர்க்கு உரித்தே
** 5 பெயர்கள் 122
#123
** உதயம்
விடியல் வைகறை புலரி உதயம்
** 3 பெயர்கள்
#124
** கழிவு நாள்
கழிவுநாளே காலி வைகல்
** 2 பெயர்கள்
#125
** அந்தி
சந்தி மாலை சாயம் என்று இவை
அந்தியின் பெயர் கோதூளியும் ஆகும்
** 4 பெயர்கள்
#126
** நடுப் பகல்
மத்தியானம் நண்பகல் நடுப்பகல்
#127
** மற்றும் நடுப் பகல்
உச்சியும் உருமமும் அப் பெயர்க்கு உரித்தே
** 4 பெயர்கள்
#128
** சாமம்
யாமம் என்பது சாமம் ஆகும்
** 1 பெயர்
#129
** பகல்
எல்லு திவசம் தினம் திவாவும் பகல்
** 4 பெயர்கள்
#130
** அருக்கன் ஊர்தி
தனிக்கால் பொன்தேர் அருக்கன் ஊர்தி
** 2 பெயர்கள்
#131
** அருக்கன் தேர்ப் புரவி
ஒர் ஏழ் புரவி உடையன அதற்கே
** 1 பெயர்
#132
** அருக்கன் தேர்ப் பாகன்
ஆதித்தன்பாகன் அருணன் ஆகும்
** 1 பெயர்
#133
** சந்திரன்
இந்து சசி இமகிரணன் தண்சுடர்
உடுபதி தாராபதியே அம்புலி
அமுதகதிரோன் சீதன் குரங்கி
விது நிலவு அல்லோன் வேந்தன் தண்ணவன்
கலையோன் மதியே களங்கன் குபேரன்
ஆலோன் பனிக்கதிர் குமுதசகாயன்
அலவன் கலாநிதி நிசாகரன் நிசாபதி
இரவோன் இராக்கதிர் தானவன் சுதாகரன்
உடுவேந்தன் பிறை முயற்கூடு பசுங்கதிர்
சந்திரன் திங்கள் சோமன்தன் பெயரே
** 36 பெயர்கள்
#134
** நிலவு
நிலவின் பெயர் சந்திரிகை என்ப
** 1 பெயர் 134
#135
** பிறை நிரம்பல்
கலை பிறை நிரம்பல் கருதுங்காலே
** 1 பெயர் 135
#136
** சந்திரன் ஊர்தி
வெண்மதிஊர்தி விமானம் ஆகும்
** 1 பெயர் 136
#137
** இரவு
யாமம் நத்தம் யாமினி வகுஞ்சம்
சாமம் கங்குல் நிசா நிசி திமிரம்
எல்லியும் அல்லும் இரவின் பெயரே
** 11 பெயர்கள் 137
#138
** செவ்வாய்
அழலவன் பெளமன் அங்காரகனே
குருதி வக்கிரன் குசனே மங்கலன்
ஆரல் உதிரன் அரத்தன் அறிவன்
அழலே உலோகிதன் செந்தீவண்ணன்
சேய் இவை செவ்வாய் சிறந்த பெயரே
** 15 பெயர்கள் 138
#139
** புதன்
அருணன் கணக்கன் அறிஞன் சாமன்
மதிமகன் மேதை மால் தேர்ப்பாகன்
புந்தி தாதன் பச்சை புதனே
** 11 பெயர்கள் 139
#140
** வியாழன்
ஆசான் மந்திரி ஆண்டு அளப்பான் பொன்
பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன்
தேவமந்திரி சித்தன் சிகண்டிசன்
மேவிய அந்தணன் அரசனும் வியாழன்
** 13 பெயர்கள் 140
#141
** வெள்ளி
தைத்தியமந்திரி சல்லியன் சைத்தியன்
மழைக்கோன் சுங்கன் கவி புகர் பிரசுரன்
பார்க்கவன் சுக்கிரன் ஒள்ளியோன் பளிங்கு
காப்பியன் திதனே உசனன் வெள்ளியின் பெயர்
** 15 பெயர்கள் 141
#142
** சனி
கதிர்மகன் நீலன் சாவகன் காரி
முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன்
செளரி பங்கு சந்தில் சனிப் பெயர்
** 11 பெயர்கள் 142
#143
** இராகு
தமமே கரும்பாம்பே இராகு ஆகும்
** 2 பெயர்கள் 143
#144
** கேது
செம்பாம்பே சிகி கொடி கேது ஆகும்
** 3 பெயர்கள்
#145
** அனந்தன்
அனந்தன் போகவதிக்குஇறை சேடன்
** 2 பெயர்கள்
#146
** வாரம்
வாசரம் கிழமை வாரம் ஆகும்
** 2 பெயர்கள்
#147
** அச்சுவினி
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள்
புரவி மருத்துவநாள் அச்சுவினி
** 7 பெயர்கள்
#148
** பரணி
காடுகிழவோள் பூதம் அடுப்பு
தாழி பெருஞ் சோறு தருமன்நாள் முக்கூட்டு
போதகம் பரணிப் பெயர் தாசியும் ஆகும்
** 10 பெயர்கள்
#149
** கார்த்திகை
அறுமீன் அங்கிநாளே அளக்கர்
எரிநாள் அளகு இறால் நாவிதன் வாணன்
தழலே ஆரல் கார்த்திகைதன் பெயர்
** 10 பெயர்கள்
#150
** உரோகிணி
சகடு விமானம் சகியே ஊற்றால்
அயன்நாள் வையம் உரோகிணி ஆகும்
** 6 பெயர்கள்
#151
** மிருக சீரிடம்
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம்
மதிநாள் மும்மீன் பாலை வெய்யோன்
மிருகசீரிடம் ஐந்தானமும் விளம்பும்
** 9 பெயர்கள்
#152
** திருவாதிரை
அரன்நாள் செங்கை மூதிரை ஆதிரை
** 3 பெயர்கள்
#153
** புனர் பூசம்
அதிதிநாள் கழை ஆவணம் எரியே
புனர்தம் கரும்பு இவை புனர்பூசம் ஆகும்
** 6 பெயர்கள்
#154
** பூசம்
குருநாள் காற்குளம் கொடிறு வண்டு
புணர்தை ஆகும் பூசநாள் பெயரே
** 5 பெயர்கள்
#155
** ஆயிலியம்
அரவின்நாள் கெளவை ஆயில் ஆயிலியம்
** 3 பெயர்கள்
#156
** மகம்
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால்
ஆதிஎழுஞ்சனி பிதிர்நாள் மாகம்
மாசி எழுவாய் எழுஞ்சனி மகப் பெயர்
** 9 பெயர்கள்
#157
** பூரம்
இடையதுஎழுஞ்சனி எலியே தூர்க்கை
பகவதிநாள் கணை நாவிதன் பூரம்
** 6 பெயர்கள்
#158
** உத்தரம்
பங்குனி கடையதுஎழுஞ்சனி பாற்குனி
மானேறு கதிர்நாள் மாரிநாள் உத்தரம்
** 6 பெயர்கள்
#159
** அத்தம்
கைம்மீன் கைனி கனலிநாளே
ஐம்மீன் காமரம் களிறு இவை அத்தம்
** 6 பெயர்கள்
#160
** சித்திரை
நெய்மீன் அறுவை நேர்வான் பயறு
நடுநாள் துவட்டாநாளே தச்சன்
தெரியில் இன்னவை சித்திரைப் பெயரே
** 7 பெயர்கள்
#161
** சோதி
விளக்கே மரக்கால் வெறுநுகம் வீழ்க்கை
துளக்கம் காற்றின்நாளே சோதி
** 6 பெயர்கள்
#162
** விசாகம்
அனிலநாள் முற்றில் முறம் வைகாசி
சுளகு விசாகத் தொல் பெயர் ஆகும்
** 5 பெயர்கள்
#163
** அனுடம்
பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை
இனையவை மித்திரநாளும் அனுடம்
** 7 பெயர்கள்
#164
** கேட்டை
துளங்குஒளி வல்லாரை வேதி எரி அழல்
கிளந்த இந்திரன்நாள் சேட்டையும் கேட்டை
** 7 பெயர்கள்
#165
** மூலம்
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில்
முற்றும் ஆனி அசுரநாள் மூலம்
** 7 பெயர்கள்
#166
** பூராடம்
உடை குளம் முற்குளம் மாரி நீர்நாள்
புகலில் பூராடம் நீரும் புகலும்
** 5 பெயர்கள்
#167
** உத்திராடம்
ஆடி விச்சுவநாளே கடைக்குளம்
ஒதிய ஆனியோடு உத்திராடப் பெயரே
** 4 பெயர்கள்
#168
** திருவோணம்
சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம்
ஓணம் என்ப உலக்கையும் ஆகும்
** 5 பெயர்கள்
#169
** அவிட்டம்
காகப்புள்ளே வசுக்கள்நாளே
ஆவணி பறவை அவிட்டப் பெயரே
** 4 பெயர்கள்
#170
** சதயம்
குன்று வருணன்நாள் பெரும் செக்கு
சுண்டன் போர் இவை சதயநாளே
** 5 பெயர்கள்
#171
** பூரட்டாதி
புரட்டாதி முற்கொழுங்கோலே நாழி
உரைப்பர் பரதநாள் பூரட்டாதி
** 4 பெயர்கள்
#172
** உத்திரட்டாதி
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் நீபம்
உரை செயின் அறிவன்நாள் உத்திரட்டாதி
** 5 பெயர்கள்
#173
** இரேவதி
தொழுவே நாவாய் தோணி சூலம்
பஃறி புருடநாள் கடைமீன் இரேவதி
** 7 பெயர்கள்
#174
** அருந்ததி
அருந்ததி சாலி வடமீன் ஆகும்
** 2 பெயர்கள்
#175
** விடிமீன்
விடிமீன் பெயரே வெடி எனலாகும்
** 1 பெயர்
#176
** வான் மீன்
வான்மீன் பெயரே புச்சம் எனலாகும்
** 1 பெயர்
#177
** வான் மீனின் பொதுப் பெயர்
சிதமும் பம்மும் சுக்கையும் கணமும்
உடுவும் தாரகையும் ஒளியும் வான்மீனே
** 7 பெயர்கள் 177
#178
** இராசி
மேடமும் இடபமும் மிதுனமும் கடகமும்
சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும்
தனுவும் மகரமும் கும்பமும் மீனமும்
என்னும் பெயர் இவை ஈர்ஆறுள்ளும்
ஒப்புடை மிதுனம் ஒழித்து அல்லாதன
அப் பெயர்க்கு அப் பெயர் அனைத்தும் ஆகும்
** 12 பெயர்கள் 178
#179
** மிதுனம்
யாழே பாடவை இரட்டை சவைமகள்
விழவு தண்டொடு மிதுனம் ஆமே
** 6 பெயர்கள்
#180
** இராசி பொது
இல்லும் ஓரையும் பவனமும் இராசி
** 3 பெயர்கள்
#181
** சூரிய சந்திரர்க்கு உரிய திசை
கீழ்த்திசை அருக்கற்கும் வடதிசை சோமரற்கும்
சார்ச்சியாகச் சாற்றினர் புலவர்
#182
** மூவகை வீதி
மேடவீதி இடபவீதி
மிதுனவீதி என ஒரு மூன்றே அவைதாம்
இரு சுடர் முதலிய இயங்கும் நெறியே
** 3 பெயர்கள் 182
#183
** மேட வீதி
இடபம் சிங்கம் மிதுனம் கடகம்
இனைய நான்கும் மேடவீதி
** 4 பெயர்கள் 183
#184
** இடப வீதி
மீனம் மேடம் கன்னி துலாமும்
ஆன இடபவீதிக்கு அமைந்தன
** 4 பெயர்கள் 184
#185
** மிதுன வீதி
வில்லு மகரம் குடமே விருச்சிகம்
சொல்லிய மிதுனவீதித் துறையே
#186
இவற்றுள் சொன்ன இராசி தொகுத்த மாதங்கள்
மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே
** 4 பெயர்கள் 186
#187
** காலம்
போழ்தும் கொன்னும் பொழுதும் செவ்வியும்
ஏல்வையும் வேலையும் அமையமும் காலையும்
காலும் பதமும் காலம் ஆகும்
** 10 பெயர்கள்
#188
** காலநுட்பம்
கலையும் துடியும் கணமும் மாத்திரையும்
நொடியும் பிதிரும் நுட்பமும் திட்பமமும்
நிமிடமும் காலநுட்பம் ஆகும்
** 9 பெயர்கள்
#189
** கால விரைவு
கணமும் மாத்திரையும் காலவிரைவே
** 2 பெயர்கள்
#190
** நாழிகை
கடிகை விகலை கன்னல் இருத்தை
பதமே நாழி நாழிகை ஆகும்
** 6 பெயர்கள்
#191
** நாள்
அல்கல் திவா பகல் ஆனியம் திவசம்
ஏல்வை எல் வைகல் தினம் இவை நாளே
** 9 பெயர்கள்
#192
** முன்னை நாள்
நென்னலும் நெருனலும் முன்னைநாள் ஆகும்
** 2 பெயர்கள்
#193
** பின்னை நாள்
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும்
** 2 பெயர்கள்
#194
** திதி
திதியே பக்கம்
** 1 பெயர்
#195
** மாதம்
மதியே திங்கள் மாதம் ஆகும்
** 2 பெயர்கள்
#196
** ஒரு கலை வரு மதி நாள்
ஒரு கலை வரு மதி நாள் சினீவாலி
** 1 பெயர்
#197
** அமாவாசை
குகு அமாவாசை
** 1 பெயர்
#198
** முதல் பக்கம்
பக்கம் முதலது நந்தை ஆகும்
** 1 பெயர்
#199
** இரண்டாம் பக்கம்
பத்திரை என்பது இரண்டாம் பக்கம்
** 1 பெயர்
#200
** மூன்றாம் பக்கம்
மூன்றே சயை பக்கம்
** 1 பெயர்
#201
** நான்காம் பக்கம்
நான்கே இருத்தை
** 1 பெயர் 201
#202
** ஐந்தாம் பக்கம்
ஐந்தாம் பூரணை ஆகும்
** 1 பெயர் 202
#203
** பூரணை
அனுமதி பவ்வம் பூரணை இடை உவா
** 4 பெயர்கள் 203
#204
** கார்காலம்
நவம் கார்காலம்
** 1 பெயர் 204
#205
** கூதிர்காலம் கொடும் பனிக் காலம்
கூதிர்காலமும் கொடும் பனிக்காலமும்
இரண்டு காலமும் சிசிரம் ஆகும்
** 1 பெயர் 205
#206
** இள வேனில்
மாதவம் வசந்தம் மது இளவேனில்
** 3 பெயர்கள் 206
#207
** கொடிய வேனில்
கோடை சமம் சுசி கொடிய வேனில்
** 3 பெயர்கள் 207
#208
** பருவம்
பருவமும் இருதுவும் பகரில் ஒன்றே
#209
** அறுவகைப் பருவ காலம்
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு
இருமூன்று வகைப் பருவம்தானே
** 6 பெயர்கள் 209
#210
அவைதாம் ஆவணி முதலா இரண்டு இரண்டாக
மேவிய திங்கள் எண்ணினர் கொளலே
#211
** அறு வகை இருது
வசந்தம் கிரீடம் வருடம் சரமே
ஏமந்தம் சிசிரம் என இருது ஆறு ஆகும்
** 6 பெயர்கள் 211
#212
** அவை தாம் சித்திரை முதலாச் செல் மாதம்
இரண்டா வைத்தன எண்ணிக் கொள்க என்ப
#213
** ஆண்டு
ஆயனம் சமை அயனம் தெய்வதம்
வருடம் வற்சரம் ஆண்டின் பெயரே
** 6 பெயர்கள் 213
#214
** வாழ்நாள்
ஆயுகம் ஆயுள் வாழ்நாள் என்ப
** 2 பெயர்கள்
#215
** உக முடிவு
ஊழியும் மடங்கலும் உகமுடிவு ஆகும்
** 2 பெயர்கள் 215
#216
** நால் வகை உகம்
கிரேதா திரேதா துவாபரம் கலி என
ஒரு நான்கு என்ப உகத்தின் பெயரே
** 4 பெயர்கள் 216
#217
** அமுது
அமரியும் சுதையும் மருந்தும் அமுதே
** 3 பெயர்கள் 217
#218
** தெய்வ உணவு
சருவும் பலியும் நிவேத்தியமும் அமுதும்
அவியும் தெய்வஉணவு ஆகும்மே
** 5 பெயர்கள் 218
#219
** ஆலகால விடம்
காளகூடம் ஆலகாலவிடமே
** 1 பெயர் 219
#220
** ஆன்மா
பசு உயிர் சீவன் புற்கலன் சேதனன்
அணு இயமானன் ஆதன் செந்து
ஆவி பூதன் உறவி கூத்தன்
ஆன இன்னவை ஆன்மா ஆகும்
** 13 பெயர்கள் 220
** இரண்டாவது – வானவர் வகை முற்றிற்று
**
@3 ஐயர் வகை
#1
** இருடிகள்
முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர்
படிவர் உறுவர் பண்ணவர் ஐயர்
அறவோர் தபோதனர் அறிஞர் அந்தணர்
துறவோர் கடிந்தோர் மோனியர் யோகியர்
கோபம்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர்
தாபதர் இருடிகள்தம் பெயர் ஆகும்
** 20 பெயர்கள் 1
#2
** சத்த இருடிகள்
அகத்தியன் புலத்தியன் அங்கிரா கெளதமன்
வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று
இசைத்த இவர்தாம் ஏழ் இருடிகளே
** 7 பெயர்கள் 2
#3
** அகத்தியன்
குறுமுனி கும்பயோனி அகத்தியன்
** 2 பெயர்கள் 4
#4
** சைவதவப்பாலோர்
மாவிரதியரும் காளாமுகரும்
பாசுபதரும் சைவதவப்பாலோர்
** 3 பெயர்கள்
#5
** நாராயண சமயத்தார்
வைணவர் பாகவதர் நாராயணசமயத்தோர்
** 2 பெயர்கள்
#6
** சமணர்
சாவகர் அருகர் சமணர் அமணர்
** 3 பெயர்கள்
#7
** சமண் தவத்தோர்
ஆசீவகர் தாபதர் அத் தவத்தோரே
** 2 பெயர்கள்
#8
** புத்தர்
புத்தர் சாக்கியர் தேரர் பெளத்தர்
**3 பெயர்கள்
#9
** புத்த தவத்தோர்
வைத்த சீவகர் அத் தவத்தோரே
** 1 பெயர்
#10
** சடை முடியோர்
முனிவர் தாபதர் சடைமுடியோரே
** 2 பெயர்கள்
#11
** ஒருமை
ஒருமை என்பது இறை உணர்வு ஆகும்
** 1 பெயர்
#12
** ஒன்று
ஒன்று எனப்படுவது வீடுபெறலே
** 1 பெயர்
#13
** இருமை
இருமை என்பது இம்மையும் மறுமையும்
** 2 பெயர்கள்
#14
** இரு வினை
இருவினை புண்ணியம் பாவம் என்ப
** 2 பெயர்கள்
#15
** இருவகைத் தோற்றம்
இருவகைத்தோற்றம் சராசரம் என்ப
** 2 பெயர்கள்
#16
** இரு சுடர்
இருசுடர் இரவி மதியம் ஆகும்
** 2 பெயர்கள்
#17
** இரு மரபு
இருமரபு தாய்வழி தந்தைவழி என்ப
** 2 பெயர்கள் 17
#18
** இரு வகைக் கந்தம்
இருவகைக்கந்தம் நற்கந்தம் துர்க்கந்தம்
** 2 பெயர்கள் 18
#19
** இருவகை அறம்
இல்லறம் துறவறம் இருவகைஅறமே
** 2 பெயர்கள் 19
#20
** இருவகைப் பொருள்
கல்வியும் செல்வமும் இருவகைப்பொருளே
** 2 பெயர்கள் 20
#21
** இருவகைக் கூத்து
இருவகைக்கூத்து மார்க்கம் தேசிகம்
** 2 பெயர்கள் 21
#22
** மும்மை
மும்மை உம்மையும் இம்மையும் மறுமையும்
** 3 பெயர்கள் 22
#23
** முப் பொறி
மனமும் வாக்கும் காயமும் முப்பொறி
** 3 பெயர்கள் 28
#24
** முச் செயல்
படைத்தலும் காத்தலும் அழித்தலும் முச்செயல்
** 3 பெயர்கள் 24
#25
** முக் காலம்
இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் எனச்
சிறந்த காலம் மூன்று எனச் செப்புவர்
** 3 பெயர்கள் 25
#26
** மூவிடம்
முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம்
** 3 பெயர்கள் 26
#27
** முக் குற்றம்
காமம் வெகுளி மயக்கம் முக்குற்றம்
** 3 பெயர்கள் 27
#28
** மூவகை மொழி
பட்டாங்குபேசல் பழித்தல் புகழ்தல்
முட்டு இன்று ஆகும் மூவகைமொழியே
** 3 பெயர்கள் 28
#29
** முக் குணம்
சாத்துவிகம் இராசதம் தாமதம் முக்குணம்
** 3 பெயர்கள் 29
#30
** அவற்றுள் சாத்துவிக குணம்
ஞானம் தவம் மேன்மை நல் அருள் மோனம்
வாய்மை பொறை புலன்அடக்கல் சாத்துவிகம்
** 8 பெயர்கள்
#31
** இராசத குணம்
தானம் தவமே தருமம் பேணல்
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல்
ஈனம் இல்லா இராசத குணமே
** 8 பெயர்கள்
#32
** தாமத குணம்
நிறை பேர்உண்டி நீதிகேடு உறக்கம்
மறவி பொய் சோம்பு ஒழுக்கம்வழுவுதல்
கொலையே வஞ்சம் இவை தாமதகுணம்
** 9 பெயர்கள்
#33
** மூவகைத் தானம்
முதல் இடை கடை என மூவகைத்தானம்
** 3 பெயர்கள்
#34
** அவற்றுள் உத்தம தானம்
அறத்தின் ஈட்டி வரும் பொருள் புறத் துறைக்
குற்றம் மூன்றும் அறுத்த நல் தவர்க்குக்
கொள்கெனப் பணிந்து குறை இரந்து அவர்வயின்
உள்ளம் உவந்து ஈவது உத்தமதானம்
#35
** மத்திம தானம்
ஆதுலர் அந்தகர் உறுப்பறைகள் ஆதர்
மாதர்க்கு ஈவது மத்திமதானம்
** 5 பெயர்கள்
#36
** கடைப்படு தானம்
ஆர்வம் புகழே அச்சம் கைம்மாறு
காரணம் கண்ணோட்டம் கடப்பாடு என்று
இவை ஏழும் கடைப்படுதானம் என்ப
** 7 பெயர்கள்
#37
** மூவகைப் பாவ புண்ணிய வழக்கம்
செய்தல் செய்வித்தல் உடன்பாடு என்னா
வரு முறை பாவ புண்ணிய வழக்கம்
** 3 பெயர்கள்
#38
** மூவுலகு
பூமி அந்தரம் சுவர்க்கம் என்ன
வரு மூன்று உலகின் பெயர் என அறைவர்
** 3 பெயர்கள்
#39
** முச்சுடர்
திங்கள் வெய்யோன் அக்கினி என்று இவை
மூன்றும் சுடர் என மொழிகுவர் புலவர்
** 3 பெயர்கள்
#40
** திரிகடுகம்
திரிகடுகம் சுக்கு திப்பிலி மிளகு
** 3 பெயர்கள்
#41
** திரிபலை
திரிபலை நெல்லி கடுக்காய் தான்றி
** 3 பெயர்கள்
#42
** நாற் கதி
தேவகதி மிருககதி மக்கள்கதியே
மேவு நரககதி என நான்கே
** 4 பெயர்கள்
#43
** நால்வகை வேதம்
இருக்குவேதம் எசுருவேதம்
சாமவேதம் அதர்வணவேதம் என
நால்வகைவேதநாமம் ஆகும்
** 4 பெயர்கள்
#44
** நால்வகை இழிச் சொல்
குறளை கடுஞ்சொல் பயன்இல்சொல்லே
மருள்கொள்சொல் என இழிச்சொல் நான்கே
** 4 பெயர்கள்
#45
**ஆடவர் நாற்குணம்
அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னத்
தகும் இவை ஆடவர்நற்குணம் நான்கே
** 4 பெயர்கள்
#46
** பெண்கள் நாற்குணம்
நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்று இன்ன
மாண் இழையவர்க்கு வருங் குணம் நான்கே
** 4 பெயர்கள்
#47
** நால்வகைப் புண்ணியம்
தானம் கல்வி தவமே ஒழுக்கம்
நால்வகைப்புண்ணியநாமம் ஆகும்
** 4 பெயர்கள்
#48
** உயிர்த் தோற்றம் நால்வகை
குடல் போல் பையினும் முட்டையினும்
தோன்றியும் மெய்க்கண் வியர்வினும் மிக்க
நிலத்தினும் ஒக்க நால்வகைஉயிர்த்தோற்றம்மே
** 4 பெயர்கள்
#49
** நால்வகைப் புலமை
கவியே கமகன் வாதி வாக்கி என்று
இவை ஒரு நான்கும் புலமைக்கு இயல்பே
** 4 பெயர்கள்
#50
** அவற்றுள் கவியின் வகை
ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் எனப்
பாவகை பாடுவோன் கவி எனப்படுமே
** 1 பெயர்
#51
** கமகன் வகை
ஞாபகம் செம்பொருள் நடையின் எப்பொருளும்
காசு இன்று உரைப்போன் கமகன் ஆகும்
** 1 பெயர் 57
#52
** வாதி வகை
ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டி
தன் கோள் நிறீஇ பிறர் கோள் மறுப்போன்
மன்பதை மதித்த வாதி ஆகும்
** 1 பெயர் 52
#53
** வாக்கு வகை
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள்
கேட்க வேட்க இனியன கூறும் ஆற்றல்
உடையான் வாக்கி ஆகும்
** 1 பெயர் 53
#54
** ஆசுகவி வகை
கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில்
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி
#55
** மதுரகவி வகை
பொருளின் பொலிவும் சொல்லின் திறனும்
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து
அங்கு உருவகம் முதலா அலங்காரங்களை
உட்கொண்டு ஓசை பொலிவு உடைத்து ஆகி
உய்த்து உணர்வோர்தம் உள்ளங்கட்கு
மால் கடல் அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி
#56
** சித்திர கவி வகை
மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம்
ஏகபாதம் எழுகூற்றிருக்கை
காதைகரப்பே கரந்துறைப்பாட்டே
தூசங்கொளலே வாவன்ஞாற்றே
பாதமயக்கே பாவின்புணர்ப்பே
கூடசதுக்கம் கோமூத்திரியே
ஓர் எழுத்து இனத்தான் உயர்ந்த பாட்டே
ஒற்றுப் பெயர்த்த ஒரு பொருள் பாட்டே
சித்திரப்பாவே விசித்திரப்பாவே
விகற்பநடையே வினாவுத்தரமே
சருப்பதோபத்திரம் சார்ந்தஎழுத்தே
வருக்கமும் மற்றும் வடநூல் கடலுள்
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து நிறைத்து மிறைக் கவிப் பாட்டுத்
தெரித்துப் பாடுவது சித்திரகவியே
** 27 பெயர்கள் 56
#57
** வித்தார கவி வகை
மும்மணிக்கோவையும் பன்மணிமாலையும்
மறமும் கலிவெண்பாவும் மடல்ஊர்ச்சியும்
இயல் இசை நாடகம் இயன்ற பல் கவியும்
கூத்தும் கிரீடையும் பாடாண்டத்துறையும்
வகுத்தவகுப்பும் விருத்தக்கவிதையும்
விரித்துப் பாடுவது வித்தாரகவியே
* 12 பெயர்கள் 57
#58
** நாற் பொருள்
அறம் பொருள் இன்பம் வீடு
எனப் பொருள் நான்கே
** 4 பெயர்கள்
#59
** நால்வகைக் கேள்வி
கற்றல் கேட்டல் அவ்வழிநிற்றல்
ஒத்தல் நால்வகைக் கேள்வி ஆகும்
** 4 பெயர்கள்
#60
** நால் நிலம்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையே நால்வகை ஆகும்
** 4 பெயர்கள்
#61
** நால்வகைச் சேனை
யானை தேர் பரி காலாள் என்று இவை
நால்வகைத் தானை நாமம் ஆகும்
** 4 பெயர்கள்
#62
** நால்வகைப் பொன்
சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூநதம் இவை நால்வகைப்பொன்னே
** 4 பெயர்கள்
#63
** நால்வகைப் பூ
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு
புதர்ப்பூ என்று இவை நால்வகைப்பூவே
** 4 பெயர்கள்
#64
** நால்வகைப் புசிப்பு
உண்ப தின்ப நக்குவ பருகுவ
நால்வகைப்புசிப்பின் நாமம் ஆகும்
** 4 பெயர்கள்
#65
** நால்வகை ஊறுபாடு
குத்தல் வெட்டல் எய்தல் எறிதல்
நால்வகைஊறுபாடு என நவில்வா
** 4 பெயர்கள்
#66
** நால்வகை உபாயம்
சாமம் பேதம் தானம் தண்டம் என
நெறிபடும் உபாயம் நான்கு ஆகும்மே
** 4 பெயர்கள்
#67
** நால்வகை நிலை
பைசாசம் ஆலீடம் மண்டிலம் பிரத்தியாலீடம்
நால்வகைநிலை ஆகும்மே
** 4 பெயர்கள்
#68
** பஞ்ச பாதக வகை
கொலையே களவு கள் குருநிந்தை
பகரும் பொய்யுடன் பஞ்சபாதகமே
** 5 பெயர்கள்
#69
** ஐவகை வினா
அறியான்வினாவல் அறிவொப்புக்காண்டல்
ஐயம்அறுத்தல் அவன்அறிவுதான்கோடல்
மெய்அவற்குக்காட்டலோடு ஐவகைவினாவே
** 5 பெயர்கள் 69
#70
** பஞ்சாங்க வகை
திதியே வாரம் நாள் யோகம் கரணம் எனப்
பகரும் சோதிடப் பஞ்சாங்கம்மே
** 5 பெயர்கள் 70
#71
** பஞ்ச சயன வகை
மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாம் தூவி
பயிற்றும் தண் வீப்பாய் பஞ்சசயனம்
** 5 பெயர்கள் 7
#72
** பஞ்ச வாச வகை
தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய்
கர்ப்பூரம் என்று இவை கமழ் பஞ்சவாசம்
** 5 பெயர்கள் 72
#73
** பஞ்ச பூத வகை
நிலம் நீர் தேயு வாயு ஆகாயம் என்று
இவை புலன் அறிந்தோர் ஏத்தும் ஐம்பூதம்
** 5 பெயர்கள் 73
#74
** பஞ்ச புலன் பஞ்சேந்திரியங்கள்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும்
கருவி நா கண் மெய் செவி மூக்கே
** 5 பெயர்கள் 74
#75
** இந்திரியம்
கரணம் பொறி வாயில் கந்தம் இந்திரியம்
** 4 பெயர்கள் 75
#76
** ஐவகைக் குசல வித்தை
எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல்
பண்அமைந்தயாழினொடு குசலம் ஐந்தே
** 5 பெயர்கள் 76
#77
** ஐவகை மெய்க் குற்றம்
கொட்டாவி நெட்டை குறுகுறுப்பு கூன்கிடை
நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே
** 5 பெயர்கள் 77
#78
** ஐவகை விரை
கோட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம்
ஒட்டிய ஐந்தும் விரை என உரைப்பர்
** 5 பெயர்கள் 78
#79
** ஐவகைத் தந்தையார்
அரசன் தலைவன் தந்தை முன்னோன்
குரவனோடு ஐவரும் குறிப்பினில் தந்தை
** 5 பெயர்கள் 79
#80
** ஐம்பால் வகை
ஐம்பால் என்பது ஒருவன் ஒருத்தி
பலர் ஒன்று பல எனப் பகுத்தனர் புலவர்
** 5 பெயர்கள்
#81
** ஐவகை உணவு
கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல்
மெல்லல் என்று இவை ஐவகைஉணவே
** 5 பெயர்கள்
#82
** பஞ்ச சத்த கருவி
தோல் தொளை நரம்பு கஞ்சம் பாடல்
பல் பேத பஞ்சசத்தம் ஆகும்
** 5 பெயர்கள்
#83
** ஐவகை வேள்வி
கடவுள் பிரமம் பூதம் மானிடம்
தென்புலத்தார் என்று ஐவகைவேள்வி
** 5 பெயர்கள்
#84
** ஐவகைத் தாயர்
ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய்
செவிலித்தாய் என ஐவகைத்தாயர்
** 5 பெயர்கள்
#85
** கான்படு திரவியம் ஐந்து
அரக்கு இறால் இன் தேன் அணி மயில்பீலி
நாவி கான்படுதிரவியம் ஐந்தே
** 5 பெயர்கள்
#86
** கடல்படு திரவியம் ஐந்து
பவளம் முத்து சங்கு ஒக்கோலை
உப்பு கடல்படு திரவியம் ஐந்தே
** 5 பெயர்கள்
#87
** நாடுபடு திரவியம் ஐந்து
செந்நெல் செவ்விளநீர் சிறுபயறு
கன்னல் கதலி எனப் பெயர்பெற்ற
ஐந்தும் நல் நாட்டுஅமைந்த திரவியம்
** 5 பெயர்கள்
#88
** நகர்படு திரவியம் ஐந்து
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு காட்டு ஆனை
மண்ஆளும் வேந்தனோடு ஐந்து திரவியம்
** 5 பெயர்கள்
#89
** மலைபடு திரவியம் ஐந்து
அகில் கறி கோட்டமொடு தக்கோலம்
குங்குமம் ஐந்து மலைபடு திரவியம்
** 5 பெயர்கள்
#90
** ஆறு அங்கம்
மந்திரம் சூத்திர வியாகரணம் நிகண்டு
சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம்
என்றன வேதத்து ஆறு அங்கம் என்ப
** 6 பெயர்கள் 90
#91
** நல் நாட்டு அமைதி அறுவகை
செல்வம் விளையுள் பல்வளம் செங்கோல்
கொல் குறும்புஇன்மை கொடும் பிணிஇன்மை
என்று இவ் வகை ஆறும் நல் நாட்டு அமைதி
** 6 பெயர்கள் 91
#92
** போக பூமி அறுவகை
ஆதிஅரிவஞ்சம் நல்அரிவஞ்சம்
ஏமதவஞ்சம் ஏமவஞ்சம்
தேவகுருவம் உத்தரகுருவம் எனப்
போகபூமி அறுவகைப்படுமே
** 6 பெயர்கள்
#93
** உள் பகை ஆறு
காமம் குரோதம் மோகம் உலோபம்
மதம் மாச்சரியம் உள்பகை ஆறு என்ப
** 6 பெயர்கள்
#94
** அறுவகைச் சுவை
தித்தித்தல் கூர்த்தல் துவர்த்தல் கார்த்தல்
கைத்தல் புளித்தலோடு அறுவகைச்சுவையே
** 6 பெயர்கள் 94
#95
** அறுவகைப் புறச் சமயம்
உலகாயதம் புத்தம் சமணம் மீமாஞ்சை
பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம்
இவ் வகை ஆறும் புறச்சமயம் ஆகும்
** 6 பெயர்கள்
#96
** உள்சமயம் ஆறு
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம்
பாசுபதம் சைவம் என்று உள்சமயம் ஆறே
** 6 பெயர்கள்
#97
** பெரியோர் எழுவகைப் பெற்றி
அறமும் பொருளும் இன்பமும் அன்பும்
பொறுமையும் புகழும் மதிப்பும் என்று இவை
எழுவகைப்பெற்றி பெரியோர் இயல்பே
** 7 பெயர்கள் 97
#98
** எழுவகைத் தாது
இரதமும் உதிரமும் என்பும் தோலும்
தசையும் மூளையும் சுக்கிலமும் என்று இவை
எழுவகைத்தாது எனப் பெயர்பெறுமே
** 7 பெயர்கள் 98
#99
** எழுவகை நதி
கங்கை யமுனை நருமதை சரச்சுவதி
பொங்கு காவிரி குமரி கோதாவரி என்று
ஏழு பெரு வகை நதி என உரைப்பர்
** 7 பெயர்கள் 99
#100
** எழுவகை நரகம்
பெருங்களிற்றுவட்டம் பெருமணல்வட்டம்
எரிபரல்வட்டம் அரிபடைவட்டம்
புகையின்வட்டம் பெருங்கீழ்வட்டம்
இருளின்வட்டம் என எழுவகை நரகம்
** 7 பெயர்கள் 100
#101
** எழுவகைப் பிறப்பு
தேவும் மாவும் தாபரமும் பறவையும்
மேவிய மக்கள் ஊர்வ நீரனவும்
பேசில் எழுவகைப்பிறப்பு என மொழிப
** 7 பெயர்கள் 101
#102
** எழுவகை யோனி பேத விரிவு
அவற்றுள்
தேவர் ஈரேழ் மக்கள் ஒன்பான்
தாபரம் இருபான் ஊர்வன பன்னொன்று
நீரன விலங்கு புள் நிரல் பப்பத்தாம்
ஆக எண்பத்தினால் இலக்க பேதம்
மேவும் யோனி ஆம் என்று உரைப்பர்
#103
** அவற்றுள் தன்னை அறிந்தவர் அறியாதவர்
தன்னை அறிந்தவர் சாயுச்சியத்தர்
பின்னையர் மீண்டு பிறப்போர் என்ப
#104
** நாட்டு ஏழ் குற்றம்
வெட்டில் கிளியே நாவாய் ஏனம்
தொட்டியர் கள்வர் சோனைப் பெரும்புயல்
நட்ட நாட்டு ஏழ் குற்றம் ஆகும்
** 7 பெயர்கள் 104
#105
** அட்ட மூர்த்த வகை
பார் நீர் தேயு வாயு ஆகாயம்
சூரியன் சந்திரன் இயமானன் என்ன
ஆராய்ந்து உரைத்த அட்டமூர்த்தம்
** 8 பெயர்கள் 105
#106
** அட்டமாசித்தி
அணிமா மகிமா கரிமா இலகிமா
பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம்
என்று ஓதற்கு அரிய அட்டமாசித்தி
** 8 பெயர்கள்
#107
** அட்டாங்க யோகம்
இயமம் நியமம் ஆதனம் பிராணா
யாமம் பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி என்று அட்டாங்கயோகம்
** 8 பெயர்கள் 107
#108
** அவற்றுள் இயமம்
கொல்லா விரதம் மெய்ம்மை கூறல்
கள்ளாமை பிறர் பொருள் காதல் இன்மை
மெய்வகை இந்தியம் அடக்கலும் இயமம்
** 5 பெயர்கள்
#109
** நியமம்
தவமே செளசம் தத்துவ நூல் ஓர்தல்
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல்
நினையுங்காலை நியமம் ஆகும்
** 5 பெயர்கள்
#110
** ஆதனம்
பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சுவத்திகம் சுகாதனம் என்ப ஆதனம்
** 6 பெயர்கள்
#111
** பிராணாயாமம்
இரேசக பூரக கும்பகம் ஏற்றி
வாயுவை அடக்கல் பிராணாயாமம்
#112
** பிரத்தியாகாரம்
உரையாது உபாதியை நீக்கி உபாதியைப்
பிரியாது உள் நோக்கல் பிரத்தியாகாரம்
#113
** தாரணை
உற்று உயிர் பூதம் அனாதியில் ஒடுக்கி
தற்பரம் நாடுதல் தாரணை ஆகும்
#114
** தியானம்
அவமாம் புலத்தை அடக்கி மனாதி
சிவயோகம் சேர்தல் தியானம் ஆகும்
#115
** சமாதி
இந்துவும் பானுவும் விந்துவும் நாதமும்
சந்தியில் வைத்தல் சமாதி ஆகும்
#116
** எண்வகைக் காட்சி
அறம் ஐயப்படாமை அவா ஒன்று இன்மை
அறிவு உவர்ப்பு இன்மை மூடம் அறுத்தல்
அறப்பழி மறுத்தல் அழிந்தோரை நிறுத்தல்
அறத்தை விளக்கல் அறுசமயத்தோர்க்கு அன்பு
இவற்று இயல் ஆகும் எண்வகைக்காட்சி
** 8 பெயர்கள்
#117
** அருகன் எண் குணம்
அனந்தஞானம் அனந்ததரிசனம்
அனந்தவீரியம் அனந்தசுகமே
நாமம்இன்மை கோத்திரம்இன்மை
ஆயுஇன்மை அழியாஇயல்பு என்று
ஏயும் தகையவாம் அருகன் எண்குணமே
** 8 பெயர்கள்
#118
** எண் வகைக குற்றம்
ஞானாவரிணியம் தரிசனாவரிணியம்
வேதநீயம் மோகநீயம்
ஆயுநாமம் கோத்திரநாமம்
காயவந்தராயம் வாயுவந்தராயம் என்று
ஏயும் எண்வகைக்குற்றம் என்ப
** 8 பெயர்கள்
#119
** அட்ட மங்கலம்
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி
முரசு விளக்கு பதாகை இணைக்கயல்
அளவுஇல் சிறப்பின் அட்டமங்கலமே
** 8 பெயர்கள்
#120
** சிறப்பு இல்லா எண் வகைப் பெயர் எச்சம்
சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமையும் செவிடும்
மாவும் மருளும் என்ப மக்கட்கு
ஏயும் சிறப்புஇலா எண் பெயர் எச்சம்
** 8 பெயர்கள்
#121
** அட்ட கரி
இமயம் மந்தரம் கைலை விந்தம்
நிடதம் ஏமகூடம் நீலம் கந்தம் என்று
எண் வகை வெற்புக்கு இயன்ற பெயரே
** 8 பெயர்கள்
#122
** அட்ட கணிதம்
சங்கலிதம் விபகலிதம் குணனம்
பாகாரம் வர்க்கம் கனமூலம் எட்டே
** 8 பெயர்கள்
#123
** அட்ட பரிசம்
தட்டல் பற்றல் தடவல் தீண்டல்
குத்தல் வெட்டல் கட்டல் ஊன்றல்
எட்டும் உடம்பின் பரிசம் ஆகும்
** 8 பெயர்கள்
#124
** நவமணி
வைரம் முத்தம் மாணிக்கம் பவளம்
மரகதம் கோமேதகம் வைடூரியம்
நீலம் புருடராகம் என்ன
நானிலம் புகழும் நவமணிப் பெயரே
** 9 பெயர்கள்
#125
** நவ புண்ணியம்
எதிர்கொளல் பணிதல் இருத்தல் கால்கழுவல்
விரை மலர்தூவல் தூபம் விளக்கே
அறுசுவை உண்டி அமைந்தோர்க்கு உதவுதல்
புகழ்தல் நவபுண்ணியத்தின் நாமம் ஆகும்
** 9 பெயர்கள்
#126
** நவதாரணை
நாமதாரணை வச்சிரதாரணை
மாயாதாரணை சித்திரதாரணை
சத்ததாரணை வத்துத்தாரணை
சதுரங்கதாரணை செய்யுள்தாரணை
நிறைவு குறைவாகிய எண்பொருள் தாரணை
நவ தாரணையின் நாமம் ஆகும்
** 9 பெயர்கள் 126
#127
** நவ தாளம்
சமதாளம் அருமதாளம் அடதாளம்
படிமதாளம் சயதாளம்மே
மட்டியதாளம் விடதாளம் நிவிர்ததாளம்
துருவதாளம் என்ன
நவ தாளத்தின் நாமம் ஆகும்
** 9 பெயர்கள் 127
#128
** நாடக நவ ரதம்
சிருங்காரம் வீரியம் பெருநகை கருணை
இரெளத்திரம் குற்சை சாந்தம் அற்புதம் பயம்
நாடகத்து இயலும் நவரதம் ஆகும்
** 9 பெயர்கள் 128
#129
** சிற்பத் தொழிலின் பத்து உறுப்பு
கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்டசருக்கரையும் மெழுகும் என்று இவை
பத்தே சிற்பத்தொழிற்கு உறுப்பு ஆகும்
** 10 பெயர்கள் 129
#130
** உயிர் வேதனை பன்னிரண்டு
அனலும் சீதமும் வாதமும் அசனியும்
புனலும் ஆயுதமும் விடமும் மருந்தும்
பசியும் தாகமும் பிணியும் முனிவுஅறாமையும்
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே
** 12 பெயர்கள் 130
#131
** பதினெண் யாகங்கள்
சோதிட்டோமம் அங்கிட்டோமம்
உத்தியம் சோடசீ வாசபேயம்
அத்திராத்திரம் சோமயாகம்
சாதுர்மாசியம் பவுத்திரமேதம்
மணி புண்டரீகம் அங்கிசயனே
இராசசூயம் அச்சுவமேதம்
விச்சுவதித்து பிரமமேதம்
பிரணவமேதம் பாசுபந்தம் எனப்
பாற்படு பதினெண் யாகம் என்ப
** 18 பெயர்கள் 131
#132
** பதினெண் புராணங்கள்
மச்சம் கூர்மம் வராகம் வாமனம்
பதுமம் வைணவம் பாகவதம் பிரமம்
சைவம் இலிங்கம் பெளடியம் நாரதீயம்
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம்
மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமாண்டம்
பாற்படு பதினெண் புராணம் ஆகும்
** 18 பெயர்கள் 132
#133
** உபபுராணம் பதினெட்டு
நாரசிங்கம் சனற்குமாரம்
நாரதீயம் சிவதன்மம் துருவாசம்
நந்திகேச்சுரம் அவுசனம் காளிகம்
வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம்
காபிலம் மானவம் வாகிட்டலைங்கம்
சவுரம் மாரீசம் மானவம் என்னும்
ஈர்ஒன்பான் உபபுராணம் என்ப
** 18 பெயர்கள் 133
#134
** தரும நூல் பதினெட்டு
மனுவே அத்திரி விண்டு வாசிட்டம்
யமம் ஆபத்தம்பம் யாஞ்ஞவற்கியம்
பராசரம் ஆங்கீரசம் உசனம்மே
காத்தியாயனம் சமவர்த்தம் வியாசம்
பிரகற்பதி சங்கலிதம் சாதான்மம்
கெளதமம் தக்கம் ஈர்ஒன்பானும்
தருமநூலின் பெயர் எனச் சாற்றுவர்
** 18 பெயர்கள் 134
#135
** யாக்கையின் பதினெண் குற்றம்
பசியும் நீர்வேட்டலும் பயமும் வெகுளியும்
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும்
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும்
மதமும் இன்பமும் அதிசயமும் வியர்த்தலும்
கேதமும் கையறவும் என்று இவை
மாய யாக்கைக்குப் பதினெண்குற்றம்
இக் குற்றம் நீக்கியோர் வச்சிரகாயர்
** 18 பெயர்கள் 135
** மூன்றாவது ஐயர்வகை முற்றிற்று
@4 அவனி வகை
#1
** மண்ணுலகு
அவனி வையம் அகல்இடம் காசினி
புவனி புடவி பூதலம் பூமி
புவனம் படி புவி பொழிலே பூவே
சகம் மேதினி தரை தாலம் சாந்தை
யுகம் பார் தரணி உலோகம் தாரணி
தலம் நீர்வரைப்பு தராதலம் மகாதலம்
நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம்
அசலை பூவலயம் அளக்கர் மண்டலம்
பவனம் அகம் நடு பாலம் விபுலம்
கோத்திரை குவலயம் குவ்வே கோ நேமி
தாத்திரி வேலாவலயம் தரித்திரி
திணை மகி சக்கரம் பொறை நகம் பாரி
வசுந்தரை வசுமதி வசுதை மண்ணுலகே
#2
** மற்றும் மண்ணுலகு
பூதியம் அகிலம் புரையே பாரம் என்று
ஓதிய பிறவும் அப் பெயர்க்கு உரித்தே
** 62 பெயர்கள் 2
#3
** நவகண்டம்
வடபால்விதேகம் தென்பால்விதேகம்
கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம்
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம்
வடபால்பரதம் தென்பால்பரதம்
மத்திமகண்டம் என்ன வருபவை
நல் பெரு நாவலந்தீவின் நவகண்டம்
** 9 பெயர்கள் 3
#4
** பூ வலயம்
பூகோளம் பூகண்டம் பூவலயம் என்ப
** 2 பெயர்கள் 4
#5
** எழு தீவு
முதலது நாவலந்தீவே உடையது
இறலியின்தீவே கிரவுஞ்சத்தீவே
குசையின்தீவே இலவந்தீவே
தெங்கந்தீவே புட்கரத்தீவு என்று
ஏத்திய பெரும் தீவு ஏழிற்கும் பெயரே
** 7 பெயர்கள் 5
#6
** ஏழ் பொழில்
ஏழ் பெரும் தீவும் ஏழ்பொழில் எனப்படுமே
#7
** கீழ் ஏழ் உலகு
அதலம் விதலம் சுதலம் நிதலம்
தராதலம் ரசாதலம் பாதலஉலகம்
என்று இவை கீழ் ஏழ் உலகு எனப்படுமே
** 7 பெயர்கள் 7
#8
** நரகம்
நிரயமும் பவர்க்கமும் கும்பியும் புலவும்
ஊழ்த்தலும் அபரமும் அள்ளலும் அளறும்
அதோகதி பாவம் துவாந்தம் அருஞ்சிறை
இருளும் என்பது இவை நரகப் பெயர்
** 13 பெயர்கள் 8
#9
** எழு நரகங்கள்
கூடசாலம் கும்பிபாகம்
அள்ளல் அதோகதி ஆர்வம் பூதி
செந்து என்று ஏழும் தீ நரகப் பெயர்
** 7 பெயர்கள் 9
#10
** நாடு
பைதிரம் மண்டிலம் பாடி தேயம்
தண்ணடை நீவரம் கோட்டம் சனபதம்
சும்மை அகலுள் கண்டம் ஏணி என்று
இன்ன இராச்சியம் உலகு நாடு என்ப
** 14 பெயர்கள்
#11
** உலகின் பொதுப் பெயர்
புவனம் நாடு பொழில் தலம் புடவி
பவனம் இராச்சியம் உலகின் பொதுப்பெயர்
** 7 பெயர்கள்
#12
** காசி
காசி வாரணசி
** 1 பெயர்
#13
** காஞ்சி
கச்சி காஞ்சி
** 1 பெயர்
#14
** சிதம்பரம்
மன்றம் சிதம்பரம்
** 1 பெயர்
#15
** திருவாரூர்
கமலை திருவாரூர்
** 1 பெயர்
#16
** உறையூர்
கோழி உறையூர்
** 1 பெயர்
#17
** மதுரை
கூடல் மதுரை
** 1 பெயர்
#18
** கருவூர்
கருவூர் வஞ்சி
** 1 பெயர்
#19
** கடாரம்
காழகம் கடாரம்
** 1 பெயர்
#20
** சிங்களம்
ஈழம் சிங்களம்
** 1 பெயர்
#21
** மிதிலை
மிதிலை விதேகை
** 1 பெயர்
#22
** அவந்தி
அவந்தி உஞ்சை
** 1 பெயர்
#23
** அரித்துவாரம்
அரித்துவாரம் மாயாபுரியே
** 1 பெயர்
#24
** காவிரிப்பூம் பட்டினம்
காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினம்
** 2 பெயர்கள்
#25
** புரம்
புரி என் கிளவி புரம் என்று ஆகும்
** 1 பெயர் 25
#26
** சேரி
பாடி என்பது சேரி ஆகும்
** 1 பெயர் 26
#27
** முனைமேல் சென்றோர் உறைபதி
பாசறை முனை மேல் சென்றோர் உறைபதி
** 1 பெயர் 27
#28
** ஊர்
பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி
பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை
சேரி மண்டிலம் சேர்வு குப்பம்
காடு குடிக்காடு வேலி அகலுள்
வைப்பு கிராமம் வசதி அருப்பம்
ஆதரம் இல்லிடம் புகலிடம் புரமே
பாழி நத்தம் கோசரம் ஒக்கம்
உறையுள் இருக்கை ஊரின் பெயரே
** 32 பெயர்கள் 28
#29
** சிற்றூர்
பேடும் குடியும் பெரும் தண்ணடையும்
பட்டும் நொச்சியும் பள்ளியும் என்று இவை
சிற்றூர்தனக்குச் சிறந்த பெயரே
** 6 பெயர்கள் 29
#30
** நிலம்
மாவும் திணையும் வேலியும் நிலம் எனல்
#31
** மற்றும் நிலம்
பூவும் அப் பெயர் புகலப்பெறுமே
** 4 பெயர்கள் 31
#32
** வழி
அதரும் அயனமும் ஆறும் அடைவும்
பதவையும் வதியும் அத்தமும் மார்க்கமும்
கடவையும் கிறியும் நடையும் போக்கும்
இடவையும் தாரியும் தாரையும் இயவையும்
தெருவும் ஒழுக்கமும் செப்பமும் சுரமும்
சரியும் நெறியும் செலவும் தரங்கும்
பட்டமும் வனமும் காலும் பதமும்
வட்டையும் வகிரும் வாரியும் வழி எனல்
** 31 பெயர்கள் 32
#33
** அரு நெறி
அத்தமும் கடமும் சுரமும் அருநெறி
** 3 பெயர்கள் 33
#34
** யானை செல் வழி
தண்டம் யானை சென்ற வழியே
** 1 பெயர் 34
#35
** இழிந்து ஏறும் வழி
படுகர் என்பது இழிந்து ஏறும் வழி
** 1 பெயர்
#36
** சிறு வழி
விடங்கர் சிறுவழி
** 1 பெயர்
#37
** நீள் வழி
நீள்வழி அளக்கர்
** 1 பெயர்
#38
** கவர் வழி
கவலை கவர்வழியின் கட்டுரையாம்
** 1 பெயர்
#39
** முது வரம்பு வழி
மஞ்சில் முதிய வரம்பின் வழியே
** 1 பெயர்
#40
** புது வரம்பு வழி
மரிசி புதிய வரம்பின் வழியே
** 1 பெயர்
#41
** பள்ளம்
ஞெள்ளல் தாழ்வு படுகர் அவல் குழி
பள்ளம் இழிவு பயம்பு தாழ்நிலமே
** 8 பெயர்கள்
#42
** மேடு
உயர்நிலம் திடர் சுவல் ஓங்கல் திட்டை
மிசையே மோடு மேடு என்று ஆகும்
** 7 பெயர்கள்
#43
** சிறு திட்டை
பாறை மேடு முரம்பு பதுக்கை
ஆகும் உயர் சிறுதிட்டை அதன் பெயர்
** 4 பெயர்கள்
#44
** குப்பை மேடு
குப்பைமேடு குவை என்ப
கொம்மை திடர் என்றும் கூறப்படுமே
** 4 பெயர்கள்
#45
** நடு
நனந்தலை நாப்பண் மத்தியம் நள்ளு
ஒத்தல் நாவோடு அணவு வயங்கு இடை
நலம் திகழ் கூழை நடு என்று ஆகும்
** 9 பெயர்கள்
#46
** ஐந்திணை
குறிஞ்சி பாலை முல்லை மருதம்
நெய்தல் ஐந்தணைக்கு எய்திய பெயரே
** 5 பெயர்கள்
#47
** அவற்றுள் குறிஞ்சி நிலம்
புறணி துருக்கம் புறவம் வன்பால்
குறும்பொறை புறம்பணை குறிஞ்சி நிலப் பெயர்
** 6 பெயர்கள் 47
#48
** மலை
விலங்கல் சயிலம் விண்டு வெற்பு
சிலம்பு சிமயம் சிகரி சிலோச்சயம்
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம்
பருப்பதம் பதலை பறம்பு பாதவம்
அத்திரி நகமே அடுக்கல் நவிரம்
குத்திரம் குவடு கோத்திரம் குன்று
தாணு அசலம் சானு மேரு
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல்
பீலி திகிரி அரியே பிறங்கல்
மாதிரம் கல்லே வரையே பொகுட்டு
தரணி சிமிலம் சையம் பத்திரம்
வேதண்டம் இரவி மேதரம் சாரல்
பொற்றை நாகம் சிலை போதியும் மலைப் பெயர்
** 54 பெயர்கள் 48
#49
** சிறு மலை
குன்று பொற்றை குவடு குறும்பொறை
என்று இவை சிறுமலை இறும்பும் ஆகும்
** 5 பெயர்கள் 49
#50
** மலைப் பக்கம்
சாரல் சரி கடம் தடமே சானு
வாரம் நிதம்பம் இவை மலைப்பக்கம்
** 7 பெயர்கள் 50
#51
** மலை முகடு
குவடு கோடு கூடம் கொடுமுடி
சிகரம் மலையம் சேண் முகடு ஆகும்
** 7 பெயர்கள் 51
#52
** பாறை
அறையே பாறை
** 1 பெயர் 52
#53
** துறுகல்
பொறையே துறுகல்
** 1 பெயர் 53
#54
** விடர்
விடரே கல்லளை விடரின் பெயரே
** 2 பெயர்கள் 54
#55
** கற்பாழி
காண்டை கற்பாழி
** 1பெயர்
#56
** கீழ் அறை
பிலமே கீழ்அறை
** 1 பெயர் 56
#57
** மலை முழை
முடுக்கர் கந்தரம் பிலம் குகை குகரம்
கற்புழை நிகுஞ்சம் வங்கு மலைமுழையே
** 2 பெயர்கள்
#58
** பெருங்கல்
கேளிதம் பெருங்கல்
** 1 பெயர்
#59
** சிறு கல்
உபலம் சிறுகல்
** 1 பெயர்
#60
** திரண்ட கல்
உலங்கும் குண்டும் உலமும் திரண்டகல்
** 3 பெயர்கள்
#61
** எழு மலை
கைலை இமயம் மந்தரம் விந்தம் நிடதம்
ஏமகூடம் நீலகிரி ஏழ்மலை
** 7 பெயர்கள்
#62
** இமய மலை
பூதரம் ஆதிமலை பொன்மலை சிமயம்
ஏமந்தாசலம் இமயமலைப் பெயர்
#63
** மற்றும் இமய மலை
மேருவும் புள்ளியும் விளம்புவர் அதற்கே
** 7 பெயர்கள்
#64
** மக மேரு
தேவர்ஆலயம் பெருமலை வடமலை
மூவாமலை மந்தரம் பொன்மலை மகமேரு
** 6 பெயர்கள்
#65
** கைலாய கிரி
வெள்ளியங்கிரி சயிலாதி வேதண்டம்
கண்ணுதல்மலை நொடித்தான்மலை கைலாயம்
** 5 பெயர்கள்
#66
** பொதிய மலை
தென்மலை மலையம் தென்றல்வருமலை
** 2 பெயர்கள்
#67
** கொல்லி மலை
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும்
** 1 பெயர்
#68
** மலையரையன்
மலையரையன் கிரிராசன் இறை பாகத்து
உமையாள் பெற்ற உரவோன் இமவான்
** 3 பெயர்கள்
#69
** மலை மேல்துருக்கம்
அருப்பம் மலை மேல் துருக்கம் ஆகும்
** 1 பெயர்
#70
** மலைச் சாரல் வீழ் புனல்
அருவி மலைச் சாரல் வீழ் புனல் ஆகும்
** 1 பெயர்
#71
** அருவிப் புனல் வீழ் இடம்
அருவிப் புனல் வீழ் இடம் தூவானம் ஆகும்
** 1 பெயர்
#72
** மலைக் கணவாய்
மலையின் கணவாய்ப் பெயர் பூழை ஆகும்
** 1 பெயர்
#73
** தினைப் புனம்
எனலும் வளாகமும் தினைப்புனம் என்ப
** 2 பெயர்கள்
#74
** குறிஞ்சி நிலத்து ஊர்
குறும்பொறை சீறூர் சிறுகுடி குறிஞ்சிஊர்
** 3 பெயர்கள்
#75
** குறிஞ்சி நிலப் பறை
தொண்டகம் முருகுஇயம் துடி அ நிலப் பறை
** 3 பெயர்கள்
#76
** குறிஞ்சி நில மாக்கள்
கானவர் குறவர் அ நில மாக்கள்
** 2 பெயர்கள்
#77
** குறிஞ்சி நிலப் பெண்கள்
குறத்தியர் கொடிச்சியர் மறத்தியர் பெண்டிர்
** 3 பெயர்கள்
#78
** குறிஞ்சி நிலத் தலைமகன்
பொருநன் சிலம்பன் வெற்பன் தலைமகன்
** 3 பெயர்கள்
#79
** குறிஞ்சி நிலக் கடவுள்
கந்தன் அ நிலக் கடவுள் ஆகும்
** 1 பெயர்
#80
** பாலைத் திணை
மறுபுலம் செம்புலம் வன்பால் பாலை
** 3 பெயர்கள்
#81
** நிலப் பிளப்பு
விடரும் கமரும் விட்பும் நிலப்பிளப்பே
** 3 பெயர்கள்
#82
** பரல் அடுத்து உயர்நிலம்
பரல் அடுத்து உயர் நிலம் முரம்பே பதுக்கை
** 2 பெயர்கள்
#83
** பாலை நிலத்து ஊர்
முனையிடம் குறும்பு முது பாலை நிலத்து ஊர்
** 2 பெயர்கள்
#84
** பாலை நிலப் பறை
அ நிலப் பறை துடி ஆகும் என்ப
** 1 பெயர்
#85
** பாலை நில மாக்கள்
மறவர் எயினர் சவரர் கிராதர்
கானவர் குறவர் புளினர் வேடர்
** 7 பெயர்கள்
#86
** பாலை நிலப் பெண்கள்
எயிற்றியர் பேதையர் மறத்தியர் பெண்டிர்
** 3 பெயர்கள்
#87
** பாலை நிலத் தலைமகன்
விடலையும் காளையும் மீளியும் தலைமகன்
** 3 பெயர்கள்
#88
** பாலை நிலக் கடவுள்
பாலைக்கடவுள் துர்க்கை என்ப
** 1 பெயர்
#89
** முல்லைத் திணை
புறவம் புறம்பணை புறவணி முல்லை
** 3 பெயர்கள்
#90
** காடு
கானம் கடறு கான் காந்தாரம்
தாவம் புறவம் சங்கிரம் கட்சி
அடவி காண்டகம் விந்தம் கானகம்
கவனம் குறும்பொறை ஆரணியம் குப்பம்
கோட்டை அரணம் வல்லை துருக்கம்
உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை
கண்டகம் தில்லம் களரி முளரி
ககனம் அத்தம் வனம் காடு எனப் புகல்வா
** 33 பெயர்கள்
#91
** காட்டுத் துருக்கம்
அருப்பம் கோட்டை வல்லை ஆரணியம்
அரணமும் துருக்கமும் ஆகும் என்ப
** 5 பெயர்கள்
#92
** முல்லை நிலக் கான் யாறு
கலுழி உயவை முல்லைக் கான்யாறு
** 2 பெயர்கள்
#93
** பழங் கொல்லை
முதைப்புனம் பழங்கொல்லை
** 1 பெயர்
#94
** புதுக் கொல்லை
இதைப்புனம் புதுக்கொல்லை
** 1 பெயர்
#95
** மற்றும் அந்நிலம் முல்லை நிலம்
தில்லியம் என்னச் சொல்லுப அ நிலம்
#96
** முல்லை நிலத்து ஊர்
அ நிலத்து ஊர்ப் பெயர் பாடி என்ப
** 1 பெயர்
#97
** முல்லை நிலப் பறை
அ நிலப் பறை ஏறுகோள் பம்பை
** 2 பெயர்கள்
#98
** முல்லை நில மாக்கள்
இடையர் அண்டர் பொதுவர் கோபாலர்
குடவர் அமுதர் கோவலர் ஆயர்
தொறுவர் விந்தர் முல்லை நில மாக்கள்
** 10 பெயர்கள்
#99
** முல்லை நிலப் பெண்டிர்
இடைச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர்
** 4 பெயர்கள்
#100
** முல்லை நிலத் தலைவன்
கானகநாடன் குறும்பொறைநாடன்
தோன்றல் அண்ணல் முல்லைத்தலைவன்
** 4 பெயர்கள்
#101
** முல்லைக் கடவுள்
திருமால் அ நிலக் கடவுள் பெயரே
** 1 பெயர்
#102
** மருதத் திணை
பழனமும் தொடுவும் பணையும் மென்பாலும்
கழனியும் பண்ணையும் இவை மருதத்திணை
** 6 பெயர்கள்
#103
** யாறு
ஒலியல் உந்தி புனல் ஓணம் குடிஞை
சிந்து தீர்த்திகை தீபவதியே
தடினி ஆபதகை யாறு எனச் சாற்றுவர்
** 10 பெயர்கள்
#104
** யாற்றிடைக் குறை
இலங்கை அரங்கம் துருத்தி யாற்றிடைக்குறை
** 3 பெயர்கள்
#105
** வெண் மணல்
வாலுகம் வெண்மணல்
** 1 பெயர்
#106
** ருமணல்
அறல் நுண் கருமணல்
** 1 பெயர்
#107
** நுண் மணல்
அதரும் அயிரும் எக்கரும் நுண்மணல்
** 3 பெயர்கள்
#108
** புழுதி
பொடிமண் புழுதி
** 1 பெயர்
#109
** மணற் குன்று
புளினம் மணற்குன்றே
** 1 பெயர்
#110
** ஊறல்
அஃகம் உறவியும் அசும்பும் ஊறல்
** 3 பெயர்கள்
#111
** கங்கை
வான்நதி பகீரதி மந்தாகினியே
சானவி வரநதி சுரநதி விமலை
திரிபதகை தெய்வநதி கங்காநதி
** 9 பெயர்கள்
#112
** யமுனை
கதிரவன்புதல்வி காளிந்தி யமுனை
** 2 பெயர்கள்
#113
** சரச்சுவதி நதி
சோணை சரச்சுவதி
** 1 பெயர்
#114
** கெளதமை நதி
கெளதமை கோதை
** 1 பெயர்
#115
** நருமதை நதி
சோமன்புத்திரி இரேவை நருமதை
** 2 பெயர்கள்
#116
** காவிரி
பொன்னி காவிரி
** 1 பெயர்
#117
** பொருநை
பொருநை தண் பொருந்தம்
** 1 பெயர்
#118
** கன்னி நதி
கன்னி குமரி
** 1 பெயர்
#119
** ஆன் பொருநை நதி
ஆனி வானி ஆன்பொருநை
சூதநதி ஆன்பொருந்தம் ஆகும்
** 4 பெயர்கள்
#120
** வைகை நதி
வேகவதி வைகை
** 1 பெயர்
#121
** கோதாவரி
விமலை கோதாவரி
** 1 பெயர்
#122
** மருத நிலத்து ஊர்
மடப்பம் தண்ணடை மருத நிலத்து ஊர்
** 2 பெயர்கள்
#123
** மருத நிலப் பறை
அரி கிணை முரசம் பணை மருதப்பறை
** 4 பெயர்கள்
#124
** வயல்
கழனியும் புலமும் கைதையும் தடியும்
மருதமும் வரப்புளும் மாவும் செறுவும்
பண்ணையும் பானலும் பழனமும் விளையுளும்
பணையும் செய்யும் வயல் ஆகும்மே
** 14 பெயர்கள்
#125
** சிறு செய்
குண்டிலும் பாத்தியும் சிறுசெய் ஆகும்
** 2 பெயர்கள்
#126
** வரம்பு
மரிசும் கோடும் கூலமும் வரம்பே
** 3 பெயர்கள்
#127
** வரம்பு அருகு
கங்கும் மரிசும் வரம்பு அருகு ஆகும்
** 2 பெயர்கள்
#128
** செந் நெல் விளை நிலம்
செந்நெல் தருவது சாலேயம் ஆகும்
** 1 பெயர்
#129
** அனைத்தும் உண்டாகும் நன்னிலம்
நன்னிலம் உறாவரை நடைபெற்று இயலும்
** 1 பெயர்
#130
** பாழ் நிலம்
கரம்பு களரி பெரும் பாழ்நிலமே
** 2 பெயர்கள்
#131
** விளையா நிலம்
களரும் சவரும் விளையாநிலமே
** 2 பெயர்கள்
#132
** மருத நில மாக்கள்
களமர் உழவர் கடைஞர் சிலதர்
மள்ளர் மேழியர் மருதமாக்கள்
** 6 பெயர்கள்
#133
** மருத நிலப் பெண்கள்
உழத்தியர் கடைசியர் அ நிலப் பெண்டிர்
** 2 பெயர்கள்
#134
** மருத நிலத் தலைமகன்
மகிழ்நன் ஊரன் கிழவன் தலைமகன்
** 3 பெயர்கள்
#135
** மருத நிலக் கடவுள்
அ நிலக் கடவுள் அமரர்பதியே
** 1 பெயர்
#136
** நெய்தல் திணை
அருங் கடல் நெய்தல் நிலப் பெயர் ஆகும்
** 1 பெயா
#137
** கடல்
அம்பரம் ஆர்கலி அளக்கர் தோயம்
அம்புராசி மகராலயம் பரவை
சலதி பெளவம் மகோததி சலநிதி
வீரை வேலாவலயம் நீர் வெள்ளம்
வாரி வேலை வாருணம் புணரி
சிந்து முந்நீர் தொன்னீர் நரலை
சக்கரம் உந்தி சலராசி உப்பு
உததி சாகரம் சமுத்திரம் நேமி
நதிபதி பாராவாரம் பயோததி
வாரிதி வாரணம் வலயம் அத்தி
ஆழி பெருநீர் அலை உவாவே
உவரி சிந்துவாரம் ஓதம்
அரியே குரவை அழுவம் தெண்டிரை
கார்கோள் அனைத்தும் கடலின் பெயரே
** 50 பெயர்கள்
#138
** எழு கடல்
உப்பு தேன் இக்கு வெண் தயிர் நெய் பால்
அப்பு கடல் ஏழ் ஆகும் என்ப
** 7 பெயர்கள்
#139
** கழிமுகம்
அதோமுகம் புகாரோடு அழிவு கூடல்
கழிமுகம் என்றனர் காயலும் ஆகும்
#140
** மற்றும் கழிமுகம்
அருவியும் கயவும் கழிமுகம் என்ப
** 7 பெயர்கள்
#141
** கடல் திரை
ஓதம் புணரி சீகரம் வேலை
ஆகும் கடல் திரை அலையும் ஆகும்
** 5 பெயர்கள்
#142
** உவர்நீர்
உறை என்று உரைப்பது உவர்நீர் ஆகும்
** 1 பெயர்
#143
** கடற் கரை
வேலையும் பாராவாரமும் கடற்கரை
** 2 பெயர்கள்
#144
** தோணாமுகம்
தோணாமுகமே சூழ் கழி இருக்கை
** 1 பெயர்
#145
** உப்பளம்
அளமே கானல் அளக்கர் உவளகம்
கழிநிலம் உப்பளம் மரக்கால் கருதுப
** 6 பெயர்கள்
#146
** கழி
காயலும் முகமும் கழி எனப்படுமே
** 2 பெயர்கள் 146
#147
** உவர்த்தரை
இருணம் உவர்த்தரை
** 1 பெயர் 747
#148
** மணற் குவை
புளினம் மணற்குவை
** 1 பெயர் 149
#149
** உவர்க் களம்
உவளகம் உவர்க்களம்
** 1 பெயா 149
#150
** உப்பு அமைப்போர்
உமணர் அளவர் உப்பர் உப்பு அமைப்போர்
** 3 பெயர்கள்
#151
** நெய்தல் நிலத்து ஊர்
பாக்கம் பட்டினம் நெய்தல் நிலத்து ஊரே
** 2 பெயர்கள் 151
#152
** நெய்தல் நிலப் பறை _
சாபறை மீன்கோள்பறை நெய்தல்பறை
** 2 பெயர்கள் 152
#153
** நெய்தல் நில மாக்கள்
கடலர் திமிலர் சலவர் நுளையர்
பரதர் வலையர் அ நில மாக்கள்
** 6 பெயர்கள் 153
#154
** நெய்தல் நிலப் பெண்கள்
பரத்தியர் நுளைச்சியர் அ நிலப் பெண்டிர்
** 2 பெயர்கள் 154
#155
** நெய்தல் தலைமகன்
மெல்லன் புலம்பன் தண்கடல் சேர்ப்பன்
துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன்
** 5 பெயர்கள்
#156
** நெய்தல் நிலக் கடவுள்
அ நிலக் கடவுள் வருணன் ஆகும்
** 1 பெயர் 156
#157
** நீர்நிலை
இலைஞ்சி பண்ணை ஏல்வை குண்டம்
அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை
பட்டம் உடுவை பயம்பு படுகர்
கட்டம் தாங்கல் கோட்டகம் ஏரி
உவளகம் மடுவே ஓடை படுவே
தடமே வாவி தடாகம் ஆவி
சூழி கிடங்கு சலதரம் கேணி
பணை கயம் பல்வலம் நளினி இலந்தை
மூழி குழி குளம் நீர்நிலைப் பெயரே
** 37 பெயர்கள் 157
#158
** புனற் கரை வரம்பு
கூலமும் தீரமும் வாரமும் கோடும்
வார் புனற்கரைக்கும் வரம்புக்கும் பெயரே
** 4 பெயர்கள்
#159
** சேறு
அளறு பூழி அளக்கர் சேதகம்
அசறு பங்கம் அள்ளல் குழை தொளி
கொள்ளம் செய்யல் கும்பி குழம்பு
தொள்ளி சகதி தொய்யல் நுரம்பே
அசும்பு செதும்போடு அங்கணம் பூதி
இசைந்த இருபத்தொன்றும் சேறே
** 21 பெயர்கள்
#160
** அருவருப்பு உறு சேறு
நொளிலும் ஊழிலும் அருவருப்பு உறு சேறே
** 2 பெயர்கள்
#161
** சேற்றில் எழுங் குமிழி
கொப்புள் பொகுட்டு சேற்று எழு குமிழி
** 2 பெயர்கள்
#162
** ஊறல்
உறவி அசும்பு ஊற்று ஊறல்
** 3 பெயர்கள்
#163
** செய்கரை
சேதுவும் அணையும் குரம்பும் குலையும்
செய்கரை எனவே செப்பப்படுமே
** 4 பெயர்கள்
#164
** கிணறு
உறவியும் கூவலும் கூபமும் கிணறு எனல்
** 3 பெயர்கள்
#165
** ஊரில் உள்ளார் உண்ணும் நீர்
ஊருணி ஊருளோர் உண் நீர் ஆமே
** 1 பெயர்
#166
** சுடு காடு
ஈமம் மயானம் சுடலை சுடுநிலம்
இடுகாடு புறங்காடு பிதிர்வனம் சுடுகாடே
** 7 பெயர்கள்
#167
** சாம்பர்
அடலை வெண்பலி சாம்பர் ஆகும்
** 2 பெயர்கள்
#168
** பொடி
துகளும் நீறும் சுண்ணமும் குறுமலும்
சிதரும் பராகமும் சின்னமும் பிதிரும்
நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும்
பூதியும் தூளும் புழுதியும் அணுவும்
பொடியின் பெயர் எனப் புகலப்பெறுமே
** 16 பெயர்கள்
#169
** புற்று
வன்மீகம் புற்றே
** 1 பெயர்
#170
** புற்றாஞ் சோறு
குறும்பி அதன் சோறே
** 1 பெயர் 170
#171
** ஒதுக்கிடம்
துச்சில் ஒதுக்கிடம்
** 1பெயர் 171
#172
** வேறு இடம்
ஒருசிறை வேறு இடம்
** 1 பெயர் 172
#173
** பசும் புல் தரை
அரிதம் சாட்டுவலம் பசும்புல்தரையே
**2 பெயர்கள் 173
#174
** களர் நிலம்
களரே முதுநிலம்
** 1 பெயர் 174
#175
** யுத்தகளம்
களமே பறந்தலை போர்க்களம் களரி
ஆகவபூமி விளாகம் செருக்களம்
அடுகளம் செங்களம் அமர்க்களம் மொய்யே
படுகளம் யுத்தம்பண்ணும்களமே
** 12 பெயர்கள் 175
#176
** பிணம் படு நிலம்
பறந்தலை செம்புலம் பிணம்படுநிலமே
** 2 பெயர்கள் 176
#177
** பகைமேல் சென்றோர் உறை பதி
பாசறை முனைப்பதி பாடி பாளையம்
பாளி பகைமேல் சென்றோர் உறைபதி
#178
** மற்றும் பகைமேல் சென்றோர் உறைபதி
கேடகம் கடவை என்பவும் கிளக்கும்
** 7 பெயர்கள் 178
#179
** நகரத்தின் பொதுப் பெயர்
ஆலயம் நிகாயம் புரி ஆவாசம்
தாமம் சாதனம் தாவளம் சரணம்
பதியே பள்ளி பாழி பாடி
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம்
உறையுள் வசதி உசம் சம்வாகம்
குடமே வேசனம் கோட்டம் அகரம்
புரமே நகரப் பொதுப் பெயர் ஆகும்
** 25 பெயர்கள் 179
#180
** அகழ்
ஓடை கிடங்கு கேணி உடுவே
அகப்பா பரிகம் அகழி அகழ் எனல்
** 7 பெயர்கள் 180
#181
** மதில்
ஆரை புரிசை அரணம் சாலம்
வேலி பரவை உவளகம் இஞ்சி
ஓதை வேணகை எயில் சிறை கடகம்
துருக்கம் அகப்பா சுற்று காப்பு
வரைப்பு சக்கரம் வாரி காவல்
அரண் புறம் நொச்சி உரம் மதில் பெயரே
#182
** மற்றும் மதில்
ஆரல் பிரகாரம் பந்தமும் ஆகும்
** 28 பெயர்கள்
#183
** மதில் உறுப்பு
ஞாயில் எந்திரம் நாஞ்சில் கோசம்
விதப்பு நரலை பதப்பாடு தோணி
கொத்தளம் பொறி மதில்உறுப்பு எனக் கூறும்
** 10 பெயர்கள்
#184
** மதிலுள் உயர் நிலம்
அகப்பா பரிகம் மதில் உயர் நிலமே
** 2 பெயர்கள்
#185
** வாரியுள் உயர் நிலம்
பரிகை கற்பா வாரியுள் உயர் நிலம்
** 2 பெயர்கள்
#186
** ஆழ்வாரி நிலம்
ஓதை ஆழ்வாரிநிலம் என்று உரைக்கும்
** 1 பெயர்
#187
** கோபுர வாயில்
கோட்டியும் வாரியும் கோபுரவாயில்
#188
** மற்றும் கோபுர வாயில்
ஆத்தானமும் அரிகூடமும் அதுவே
** 4 பெயர்கள்
#189
** கோபுர வாயிவில் புகும் புழை
புதவே வாயில் புக்குறும் புழையே
** 1 பெயர்
#190
** கோபுர வாயிலில் திண்ணை
அவ்வழித் திண்ணை அளிந்தம் என்று ஆகும்
** 1 பெயர்
#191
** வதுவைத் திண்ணை
மணையே வேதிகை வதுவையின் திண்ணை
** 2 பெயர்கள்
#192
** கடைத் தெரு
ஆவணம் பீடிகை கூலம் அங்காடி
சேனை நியமம் கடைத்தெரு என்ப
** 6 பெயர்கள்
#193
** தெரு
விச்சை ஆவணம் வீதி மறுகு
சேனை நியமம் சிறகு ஞெள்ளல்
வாடை கோசு மார்க்கம் ஒலியல்
பாடகம் தெருவின் பெயர் ஆகும்மே
** 13 பெயர்கள்
#194
** மற்றும் தெரு
செப்பம் வேணி சிரேணியும் தெருவே
** 3 பெயர்கள்
#195
** சந்தி
அந்தியும் கவலையும் வரியும் அரியும்
கோடகமும் சிராகமும் சந்தி எனக் கூறுப
** 6 பெயர்கள்
#196
** முச்சந்தி
அந்தி முச்சந்தி
** 1 பெயர்
#197
** நாற்சந்தி
கோடகம் சிருங்காடகம் வரிசந்தி
சதுக்கம் என்று இவை நாற்சந்தி ஆகும்
** 4 பெயர்கள்
#198
** சேரி
பாடமும் வேணியும் வாடையும் முறியும்
சேரி என்ப சிரேணியும் அதற்கே
** 5 பெயர்கள்
#199
** அரசர் வீதி
பூரியம் அரசர் வீதியைப் புகலும்
** 1 பெயர்
#200
** வைசியர் சேரி
வாசிகை என்பது வைசியர் சேரி
** 1 பெயர்
#201
** இடைச்சேரி
ஆவிரம் வல்லியம் உவளகம் இடைச்சேரி
** 3 பெயர்கள்
#202
** வேடர் வீதி
பக்கணம் வேடர் வீதி ஆகும்
** 1 பெயர்
#203
** அக்கசாலையர் தெரு
அக்கசாலையர் தெரு ஆவேசனமே
** 1 பெயர்
#204
** அம்பலம்
பொதியில் மன்றம் பொது சபை அம்பலம்
** 4 பெயர்கள்
#205
** அரசர் கோயில்
மாளிகை சாலை மந்திரம் பவனம்
கோயில் என்ப குலமும் அதற்கே
** 5 பெயர்கள்
#206
** அரசிருக்கை
அத்தாணி பூரியம் ஆசாரம்மே
வேத்தவை என்பதோடு அரசிருப்பு என்ப
** 4 பெயர்கள்
#207
** சித்திரகூடம்
தெற்றி அம்பலம் சித்திரகூடம்
** 2 பெயர்கள்
#208
** மண்டபம்
மானமும் சமித்தமும் மண்டபம் ஆகும்
** 2 பெயர்கள்
#209
** மன்னன் தேவி இல்லம்
அந்தப்புரம் கந்தவாரம் அரண்மனை
என்ப மன்னர் இல் வாழ் கட்டே
** 3 பெயர்கள்
#210
** கோபுரம்
கூடம் சிகரி சிகரம் கோபுரம்
** 3 பெயர்கள்
#211
** மாடம்
மாடம் மாளிகை சூளிகை தெற்றி
** 3 பெயர்
#212
** உபரிகை
மேனிலை உபரிகை
** 1 பெயர்
#213
** நிலவறை
கீழ்நிலை நிலவறை
** 1 பெயர்
#214
** நாடகசாலை
நாடகசாலை நவாங்கம் ஆகும்
** 1 பெயர்
#215
** ஆடலிடம் வட்டாடிடம்
ஆடலிடமும் வட்டாடிடமும் அரங்கம்
** 1 பெயர்
#216
** பாடல் பயிலிடம்
பாடல் பயிலிடம் பட்டிமண்டபமே
** 1 பெயர்
#217
** தேவர் கோவில்
சினகரம் சேதிமம் சிதேந்திரம் கோட்டம்
நிலையம் மந்திரம் நிகேதனம் ஆலயம்
கோயில் நகரம் தளி தேவாலயம்
** 10 பெயர்கள்
#218
** மல் படை சூது கல்வி பயிலிடம்
மல்லும் படையும் சூதும் மற்றும்
கல்வி பயிலிடம் கழகம் ஆகும்
** 1 பெயர்
#219
** வீடு
மனை நகர் சேர்பு வசதி அகம் இல்
புரையுள் பாத்தி புக்கில் இல்லம்
பவனம் உறையுள் பதி மாடம் குலம்
இடவகை இல்இடம் இவை வீடு என்ப
** 17 பெயர்கள் 219
#220
** சிற்றில்
குரம்பை சிற்றில் குடில் குடிசை ஆகும்
** 3 பெயர் 220
#221
** வீட்டு இறப்பு
இறையும் வளவியும் இறப்பின் பெயரே
** 2 பெயர்கள் 221
#222
** முகடு
விடங்கமும் கொடைக்கையும் மஞ்சும் முகடே
** 3 பெயர்கள் 222
#223
** கல்லூரி
கல்வி சுற்றுவாரி கல்லூரி ஆகும்
** 2 பெயர்கள் 223
#224
** வேயுள்
வேயுள் வேய்தல் ஆகும் என்ப
** 1 பெயர் 224
#225
** தாழ்வாரம்
ஆரோகணம் சோபானம் தாழ்வாரம் ஆகும்
** 2 பெயர்கள் 225
#226
** முற்றம்
முன்றில் அங்கணம் முற்றம் ஆகும்
** 2 பெயர்கள் 226
#227
** நிலா முற்றம்
அரமியம் நிலாமுற்றம் ஆகும் என்ப
** 1 பெயர் 227
#228
** தூம்பு வாய்
அங்கணம் தூம்புவாய்
** 1 பெயர் 228
#229
** பொல்லாநிலம்
சகதி பொல்லாநிலம்
** 1 பெயர் 229
#230
** சலதாரை
சுருங்கும் புழலும் செலும் சலதாரை
#231
** மற்றும் சல தாரை
அங்கணம் என்றும் அறையல் ஆகும்
** 3 பெயர்கள் 231
#232
** நீர் தகை கதவு
ஓ என் கிளவி நீர்தகைகதவு எனல்
** 1 பெயர் 232
#233
** சாளர வாயில்
சாலேகம் வாதாயனம் சாலம் நுழையே
சாலகம் கால்அதர் சாளரவாயில்
** 6 பெயர்கள் 233
#234
** மனை வாயில்
துவாரம் வாரி தோட்டி உவளகம்
புகுதி கோட்டி புதவு கடை தடம்
அருநெறி தூம்பு சிதம் மனைவாயில் ஆகும்
** 12 பெயர்கள் 234
#235
** கதவு
ஓபு கிளர்வி உதைபு நிகுத்தை
காப்பு வாரி கபாடம் தோட்டி
** 8 பெயர்கள் 235
#236
** தாழ்
காழும் சீப்பும் கடிகையும் தாழ் ஆம்
** 3 பெயர்கள் 236
#237
** துறப்பு
அள்ளும் கொல்லும் பறலிகையும் வலிப்பற்றும்
பூட்டும் வீகமும் துறப்பு எனப் புகல்வர்
** 6 பெயர்கள் 237
#238
** யானைக் கூடம்
ஆலயம் ஒளியும் யானைக்கூடம்
** 2 பெயர்கள் 238
#239
** யானை துயில் இடம்
சேவகம் சாலை சேக்கை அது துயில்இடம்
** 3 பெயர்கள் 239
#240
** குதிரைப் பந்தி
மந்திரம் சாலை பணை லாயம் மாப் பந்தி
** 4 பெயர்கள் 240
#241
** தொழு
தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவே
தோழம் வேலி ஆனிலையும் சொல்லும்
** 6 பெயர்கள் 241
#242
** கல் படுத்த தரை
குட்டிமம் படுத்த தரை எனக் கூறுப
** 1 பெயர் 242
#243
** சுவர்த் தலம்
உவமாநிலம் பித்திகை சுவர்த்தலம் என்ப
** 2 பெயர்கள் 243
#244
** திண்ணை
திட்டை குறடு தெற்றி வேதிகை
திண்ணை மண்ணீடு என்றும் செப்புப
** 3 பெயர்கள் 244
#245
** அடுக்களை
அட்டில் மடைப்பள்ளி அடுக்களை ஆகும்
** 2 பெயர்கள்
#246
** அடுப்பு
காமரம் சுல்லி குமுதம் உத்தானம்
ஆன பிறவும் அடுப்பின் பெயரே
** 4 பெயர்கள்
#247
** அக்கினிட்டி
ஞெகிழி இந்தளம் நெருப்பு இடு கலமே
அனல்குவை இன்ன அக்கினிட்டிப் பெயர்
** 4 பெயர்கள்
#248
** கடைக் கொள்ளி
அலாதமும் இராதமும் ஞெகிழியும் கடைக்கொள்ளி
#249
** மற்றும் கடைக் கொள்வி
முளரியும் உற்கையும் மொழியப்பெறுமே
** 5 பெயர்கள்
#250
** வேள்விக் குண்டம்
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம்
** 2 பெயர்கள்
#251
** மண்கலம் சுடும் இடம்
சுள்ளை சூளை மண் கலம் சுடும் இடம்
** 2 பெயர்கள்
#252
** உலைக்களம்
உறவி என்பது உலைக்களம் ஆகும்
** 1 பெயர்
#253
** உலைமூக்கு
குருகு சிவை உலைமூக்கு எனக் கூறும்
** 2 பெயர்கள்
#254
** கரி
கந்துளும் இருந்தையும் நல்லமும் கரியே
** 3 பெயர்கள்
#255
** குதிர்
புகல் என் கிளவி குதிர் எனப் புகலும்
** 1 பெயர்
#256
** தவத்தோர் இருக்கும் இடம்
பாழி கரண்டை பள்ளி மடம் குகை
தாபதம் தவத்தோர்தம் இடம் ஆகும்
** 6 பெயர்கள்
#257
** கூடு
குடம்பை கட்சி குலாயம் கூடே
** 3 பெயர்கள்
#258
** பண்ணும் கூடு
பஞ்சரம் குலாயம் பண்ணும்கூடே
** 2 பெயர்கள்
#259
** கல்வி பயில் களம்
கழகம் பட்டிமம் கல்வி பயில் களம்
** 2 பெயர்கள்
#260
** துயில் இடம்
ஆய்வை கிடக்கை அணை பரியங்கம்
பாயல் சேக்கை பள்ளி தளிமம்
சாயல் தட்டம் தற்பம் சயனம்
அம்பரம் சேர்விடம் துயில்இடம் ஆகும்
** 14 பெயர்கள்
#261
** விலங்கு துயில் இடம்
பாழி பண்ணை பணை பட்டம் போத்து
சேக்கை விலங்கின் சேர் துயில் இடமே
** 6 பெயர்கள்
#262
** தோட்டம்
பாதவம் துடவை படப்பை தோட்டம்
#263
** மற்றும் தோட்டம்
ஆரமும் தொடுவும் அதன்பால் படுமே
** 5 பெயர்கள்
#264
** வேலி
வீர்தி காவல் வேலியின் பெயரே
** 2 பெயர்கள்
#265
** நுழை வாயில்
நூழை சுருங்கை நுழைவாயில் ஆகும்
** 2 பெயர்கள்
#266
** பரண்
பணவை இதணம் கழுது பரணே
** 3 பெயர்கள்
#267
** சுவரிறுக்கி
கடவை நடவை மடவை கவரிறுக்கி
** 3 பெயர்கள்
#268
** காத வழி
காவதம் என்பது காதவழியே
** 1 பெயர்
#269
** கூப்பிடுதூரம்
குரோசமும் எல்லையும் கூப்பிடுதூரம்
** 2 பெயர்கள்
#270
** யோசனை
யோசனை என்ப புகை எனப் புகலுவர்
** 1 பெயர்
#271
** கோழிப் பறவை அளவு
கிரவுஞ்சம் கோழிப் பறவை அளவு ஆகும்
** 1 பெயர் 271
#272
** இடம்
வாசம் பாடு மாடு கடை சிறை
சாதனம் பக்கம் தாபரம் வாய் புலம்
மருங்கு பாங்கு நத்தம் வைப்பு
மரு தலம் அடி வயின் மதர்வு களம் வழி
வளாகம் உழை பட்டி வகை திணை சூழல்
தலை இடம் அருகு தானம் கண் இடை
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி
பாழி நிலம் இல் பள்ளி ஞாங்கர்
நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர்
நியமம் வசதி நிகாயம் தேயம்
புடை அயல் மராட்டம் கோட்டம் கீழ் மேல்
மடம் இவை எல்லாம் இடம் எனப்படுமே
#273
** மற்றும் இடம்
காடு என் கிளவி இடனும் உடைத்தே
** 62 பெயர்கள் 273
#274
** சபை
சங்கமும் குழுவும் சமுகமும் அவையும்
கோட்டியும் தொகுதியும் கணமும் கூட்டமும்
சமவாயமும் பலர் செறி சபைப் பெயரே
** 9 பெயர்கள் 274
#275
** நால்வகை அரண்
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண்
வகை உறு சிறப்பின் நால் வகை அரணே
** 4 பெயர்கள் 275
#276
** வன்பால்
வன்பால் குறிஞ்சி பாலையும் ஆகும்
** 2 பெயர்கள் 276
#277
** மென்பால்
மென்பால் என் பெயர் மருதம் மேற்றே
** 1 பெயர் 277
#278
** சமப் பால்
முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே
** 2 பெயர்கள் 278
** நான்காவது அவனி வகை முற்றிற்று
@5 ஆடவர் வகை
#1
** பார்ப்பார்
அறவோர் பூசுரர் அறுதொழிலாளர்
இருபிறப்பாளர் எரிவளர்ப்போரே
ஆதிவருணர் வேதியர் அந்தணர்
வேள்வியாளர் மறையவர் விப்பிரர்
மேல்குலத்தோர் முன்குலத்தோர் ஐயர்
வேதபாரகர் முப்புரிநூலோர்
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெயர் ஆகும்
#2
** மற்றும் பார்ப்பார்
காரூகபத்தியம் ஆகவனீயம்
தக்கிணாக்கினியம் எனும் முத்தீ மரபினர்
** 18 பெயர்கள்
#3
** பிரமசாரி
மறையோர்தமக்குள் வன்னி எனும் பெயர்
பிரமசாரியின் பெயர் என்று ஆகும்
** 1 பெயர்
#4
** அந்தணர் அறு தொழில்
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் என்று இவை ஆறும்
ஆதிக் காலத்து அந்தணர் தொழிலே
** 6 பெயர்கள்
#5
** அந்தணர் மாலை கொடி
மாலை கமலம் மறை கொடி ஆகும்
** 1, 1 பெயர்கள்
#6
** அந்தணர்க்கு உரிய பொருள்
தருப்பையும் முஞ்சியும் சமித்தும் அவர்க்கே
** 3 பெயர்கள்
#7
** துரோணாசாரி
வேதக்கொடியோன் வின்னூலாளன்
பாரத்துவாசன் கும்பசன்னே
துரோணாசாரியின் தொல் பெயர் ஆகும்
** 4 பெயர்கள்
#8
** அரசர்
பார்த்திபர் இறைவர் காவலர் பதிகள்
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர்
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர்
முதல்வர் ஏந்தல் குரிசில் மகிபாலர்
தலைவர் அரசர்தம் பெயர் ஆகும்
** 17 பெயர்கள்
#9
** அரசர்க்கு ஆம் எண் வகை மாலை
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி உழிஞை தும்பை வாகை என்று
இத் தொடை எட்டும் அரசர்க்கு ஆமே
** 8 பெயர்கள்
#10
** அரசர்கள் படை கொடி
படை அறுவகைத் தானை கொடி சிங்கம் ஆகும்
** 1,1 பெயர்கள் 10
#11
** அறுவகைச் சக்கரவர்த்திகள்
அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவா
சகரன் கார்த்தவீரியன் என்று இவர்
அறுவகைச் சக்கரவர்த்திகள் என்ப
** 6 பெயர்கள் 11
#12
** வீட்டுமன்
சந்தனு முன் மைந்தன் தரு தெய்வ விரதன்
கங்கை தனையன் வீட்டுமன் காங்கேயன்
அங்கு அவன் பிரமசாரியும் ஆகும்
** 5 பெயர்கள் 12
#13
** குரு குலத்து அரசர்
பெளரவர் கெளரவர் பாரதர் என்ப
குருகுல மன்னர் கொள்கைப் பெயரே
** 3 பெயர்கள் 13
#14
** தருமபுத்திரன்
தருமமைந்தன் பொறையாளன் உதிட்டிரன்
முரசு உயர் கொடியோன் தருமன் பெயரே
** 2 பெயர்கள் 14
#15
** துரியோதனன்
மன்னர்மன்னவன் வணங்காமுடியோன்
பன்னகம்உயர்த்தோன் காந்தாரிசெம்மல் என்று
இன்னவை துரியோதனன் பெயர் என்ப
** 4 பெயர்கள் 15
#16
** கன்னன்
வெங் கதிர்மதலை மிகு கொடையாளன்
அங்கர்கோமான் கவசகுண்டலன்
கானீனன் கச்சைக்கொடியோன் பெயரே
** 6 பெயர்கள் 16
#17
** வீமன்
வாயுமைந்தன் கதாயுதன் மாருதி
கோளரிக்கொடியோன் இடும்பிகொழுநன்
விருகோதரன் இவை வீமன் பெயரே
** 6 பெயர்கள் 17
#18
** அருச்சுனன்
பற்குனன் கிரீடி பார்த்தன் வீபற்சு
சவ்வியசாசி விசயன் தனஞ்சயன்
சுவேதவாகனன் சுரேந்திரன்மைந்தன்
கிருட்டிணன் கிருட்டிணசகாயன் மாதவி
கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன்
ஆண் தொழில் மைந்தன் அருச்சுனன் பெயரே
** 15 பெயர்கள் 18
#19
** நகுல சாதேவர்
மத்திரைமைந்தர் அச்சுவினிமதலையர்
இரட்டையர் நகுல சாதேவர் நாமம்
** 3 பெயர்கள் 19
#20
** சேரன்
பூழியன் உதியன் கொங்கன் பொறையன்
வானவன் குட்டுவன் வானவரம்பன்
வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன்
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன்
பொருநைத்துறைவன் போந்தின்கண்ணியன்
மலையன் மலையமான் சேரன் பெயரே
** 17 பெயர்கள்
#21
** கொடி குதிரை
வில் கொடி புரவி பாடலம் ஆமே
** 1, 1 பெயர்கள்
#22
** சோழன்
சென்னி வளவன் செம்பியன் கிள்ளி
பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால்
கோழிவேந்தன் நேரிவெற்பன்
ஆரின்கண்ணியன் நேரியன் அபயன்
சூரியன் புனல்நாடன் சோழன் பெயரே
#23
**ன்மற்றும் சோழன்
கேசவன் என்பதும் ஆங்கு அவன் மேற்றே
** 15 பெயர்கள் 23
#24
** கொடி குதிரை
கொடியே வயப் புலி புரவி கோரம்
** 1, 1 பெயர்கள்
#25
** பாண்டியன்
செழியன் கூடல்கோமான் தென்னவன்
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன்
மலையப்பொருப்பன் வைகைத்துறைவன்
குமரிச்சேர்ப்பன் கோப் பாண்டியனே
** 13 பெயர்கள் 25
#26
** கொடி குதிரை
கயலே கொடி கனவட்டம் புரவி
** 1, 1 பெயர்கள்
#27
** சளுக்கு வேந்தர்
வேள்புலஅரசர் சளுக்குவேந்தர்
** 1 பெயர் 27
#28
** குறு நில மன்னர்
குறும்பர் புரோசர் குறுநிலமன்னர்
#29
** மற்றும் குறு நில மன்னர்
வேளிர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே
** 3 பெயர்கள் 29
#30
** தலை வள்ளல் எழுவர்
சகரன் காரி நளன் துந்துமாரி
நிருதி செம்பியன் விராடன் தலைவள்ளல்
** 7 பெயர்கள் 30
#31
** இடை வள்ளல் எழுவர்
அந்திமான் சிசுபாலன் அக்குரன் வக்கிரன்
சந்திமான் கன்னன் சந்தன் இடைவள்ளல்
** 7 பெயர்கள் 31
#32
** கடை வள்ளல் எழுவர்
பாரி எழிலி நள்ளி ஆய் மலையன்
ஓரி பேகன் இவர் கடைவள்ளல்
** 7 பெயர்கள் 32
#33
** அரசியல் ஆறு
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்ன
உடைய அரசியல் ஆறு என உரைப்பர்
** 6 பெயர்கள் 33
#34
** அரசர் அறுவகைத் தானை
வேஎல்தானை வாள்தானை வில்தானை
தேர்த்தானை பரித்தானை கரித்தானை என
அறுவகைத்தானை அரசர்க்கு என்ப
** 6 பெயர்கள் 34
#35
** அரசியல் ஆறு
அறநிலைஅறமும் மறநிலைஅறமும்
அறநிலைப்பொருளும் மறநிலைப்பொருளும்
அறநிலைஇன்பமும் மறநிலைஇன்பமும்
அறுவகைப்படுவது அரசியல் என்ப
** 6 பெயர்கள் 35
#36
** அறநிலை அறம்
வருணக் காப்பில் பிறழா நெறிநிலை
பெறுதற்கு உரித்தாய்ப் பேணும் பெற்றி
அறநிலைஅறம் என்று அறைந்தனர் புலவர்
#37
** மறநிலை அறம்
ஆன் நிரை மீட்டலும் அரும் பகை தெறுதலும்
மானம்இல் செஞ்சோற்று உதவி இலோரை
ஈனம் செய்தலும் மறநிலைஅறமே
** 3 பெயர்கள் 37
#38
** அறநிலைப் பொருள்
நெறி வழி நின்று நெறியால் உழந்து
பெறு பொருள் என்பது அறநிலைப்பொருளே
#39
** மறநிலைப் பொருள்
அமர் உழந்து கொண்டவும் அருந் திறை கொண்டவும்
தவறு செய் தமையோர் தண்டப் பொருளும்
கவர் சூதில் வென்றவும் மறநிலைப்பொருளே
** 4 பெயர்கள் 39
#40
** அறநிலை இன்பம்
ஒத்த குலமும் ஒத்த ஒழுக்கமும்
ஒத்த குணமும் ஒத்த ஆயுளும்
அத்தக உடையது அறநிலைஇன்பம்
** 4 பெயர்கள்
#41
** மறநிலை இன்பம்
ஏறுதழுவல் இலக்கம் எய்தல்
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல்
மாறு உடை நிலையின் மறநிலைஇன்பம்
** 4 பெயர்கள் 41
#42
** அரசர் அறு தொழில்
ஓதல் பொருதல் உலகுபுரத்தல்
ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில்
** 6 பெயர்கள் 42
#43
** செங்கோல் வேந்தன் எழுவகை நிலை
அறம் பொருள் இன்பம் இம்மை மறுமை
திறம்பாப் புகழே மதிப்பு என்று ஏழும்
பெருஞ் செங்கோலின் நெறியின் தன் நிலை
** 7 பெயர்கள்
#44
** அரசர்க்கு ஐம்பெருங் குழு
மந்திரியர் புரோகிதர் சேனாபதியர்
தந்திரத் தூதர் சாரணர் என்று இவர்
அந்தம்இல் அரசர்க்கு ஐம்பெருங்குழுவே
** 5 பெயர்கள்
#45
** அரசர்க்கு எண் வகைத் துணைவர்
கரணத்தியல்வோரும் கருமவதிகாரரும்
அகன்ற சுற்றமும் கடை காப்பாளரும்
நகர மாக்களும் நனி படைத் தலைவரும்
இவுளி மறவரும் யானை வீரரும்
அரசர்க்கு எண்பெருந்துணைவர் ஆகும்
** 8 பெயர்கள் 45
#46
** அரசர்க்கு ஐவகை உறுதிச் சுற்றம்
அடுத்த நட்பாளரும் அந்தணாளரும்
மடைத்தொழிலாளரும் மருத்துவக்கலைஞரும்
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு
உரைத்த ஐம் பேர் உறுதிச் சுற்றம்
** 5 பெயர்கள் 46
#47
** வேந்தர்க்குப் பதினெண் தொழில் புரிவோர்
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்குப்
படைத்த பதினெண் தொழிலுடைப் பாலோர்
#48
** வைசியர்
தாளாளர் இப்பர் தருமக்கிழவர்
வேளாளார்கள் இளங்கோக்கள் வைசியர் பொதுப்பெயர்
** 5 பெயர்கள்
#49
** வைசியர் முத்தொழில்
கோக்களைக்காத்தலும் அப் பொருள் ஈட்டலும்
ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தம் தொழிலே
** 3 பெயர்கள்
#50
** கோவைசியர்
ஒருகுலன் ஆகித் தொழில் வேறுபடுதலில்
தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில்
கோவலர் இப்பர் கோவர்த்தனர் எனச்
சீரிய பிறவும் கோவைசியர்க்கே
** 3 பெயர்கள்
#51
** தனவைசியர்
நாய்கர் எட்டியர் வணிகர் பரதர்
தாமும் பிறவும் தனவைசியர்க்கே
** 4 பெயர்கள்
#52
** பூவைசியர்
உழவர் மேழியர் காராளர் இளங்கோ
புகல் பூபாலர் பூவைசியர் பெயரே
** 5 பெயர்கள்
#53
** பூவைசியர் அறுதொழில்
ஓதல் வேட்டல் உபகாரம் அன்றியும்
வாணிகம் பசுக்காவல் உழவுத்தொழில் எனப்
புகன்றவை ஆறும் பூவைசியர் தொழிலே
** 6 பெயர்கள்
#54
** வணிகர் எண்குணம்
தனிமையாற்றல் முனிவிலனாதல்
இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல்
உறுவதுதெரிதல் இறுவதுஅஞ்சாமை
ஈட்டல் பகுத்தல் என்று இவை எட்டும்
வாட்டம்இல் சிறப்பின் வணிகர்தம் குணமே
** 8 பெயர்கள்
#55
** சூத்திரர்
பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர் வளமையார்
மன்னு முத்தொழிலர் மண்மகள்புதல்வர்
உழவர் ஏரினர் வாணர் காராளர்
வினைஞர் மேழியர் வேளாளர் என்று இவை
தொகுதி பெயர் எல்லாம் சூத்திரர் பெயரே
** 13 பெயர்கள்
#56
** வேளாளர் பத்துவகைத் தொழில்
ஆணைவழிநிற்றல் மாண்வினைதொடங்கல்
கைக்கடனாற்றல் கரிலகத்தின்மை
ஒக்கல்போற்றல் ஓவா முயற்சி
மன்னிறை தருதல் ஒற்றுமைகோடல்
திருந்திய ஒழுக்கம் விருந்து புறந்தருதல்
வேளாண்மாந்தர் செய்கை ஈரைந்தே
** 10 பெயர்
#57
** குரு
பட்டாரகன் பதி பண்ணவன் பகவன்
அத்தன் தீர்த்தன் ஆசான் அடிகள்
புங்கவன் தலைவன் சாமி ஈசன்
நாதன் இறைவன் கடவுள் கோமான்
குரவன் ஐயன் கோமான் குருவே
** 19 பெயர்கள்
#58
** ஆசாரியன்
ஓசன் பணிக்கன் உபாத்தி தேசிகன்
ஆசாரியன் பெயர் ஆகும் என்ப
** 4 பெயர்கள்
#59
** ஆயுள் வேதியர்
மாமாத்தியர் பிடகர் மருத்துவர்
ஆயுள் வேதியர்க்கு அபிதானம்மே
** 3 பெயர்கள்
#60
** குயவர்
குலாலர் வேட்கோவர் கும்பகாரர் குயவர்
** 3 பெயர்கள்
#61
** உப்புவாணிகர்
உமணர் அளவர் உப்பர் உப்பு அமைப்போர்
** 3 பெயர்கள்
#62
** கடிகை மாக்கள்
பெருநம்பிகளே மங்கலப்பாடகர்
கடிகைமாக்கள் எட்டரும் ஆகும்
** 3 பெயர்கள்
#63
** கம்மாளர்
கம்மியர் யவனர் ஓவியர் வித்தகர்
கம்மாளர் தபதியர் பொதுப்பெயர் கட்டுரை
** 5 பெயர்கள்
#64
** கொல்லர்
கருமர் மனுவர் கம்மியர் கொல்லர்
** 3 பெயர்கள்
#65
** தச்சன்
மரவினையாளன் தபதி தச்சன்
** 2 பெயர்கள்
#66
** தட்டார்
செங்கொல்லர் பொன்வினைசெய்வோர் தட்டார்
** 2 பெயர்கள்
#67
** மற்றும் தட்டார்
அக்கசாலையர் சொன்னகாரர்
** 2 பெயர்கள்
#68
** கன்னார்
கன்னுவர் கஞ்சகாரர் கன்னார்
** 2 பெயர்கள்
#69
** சிற்பாசாரியர்
கல்வினையர் சிற்பாசாரியர் கல்தொழிலோர்
** 2 பெயர்கள்
#70
** நரப்புக் கருவியாளர்
குயிலுவர் நரப்புக்கருவி கொளற்கு உரியோர்
** 1 பெயர்
#71
** தோல் கருவியாளர்
இயவர் தோல்கருவி இசைக்கும் மாக்கள்
** 1 பெயர்
#72
** மிலேச்சர்
மிலேச்சர் ஆரியர்
** 1 பெயர்
#73
** சோனகர்
யவனர் சோனகர்
** 1 பெயர்
#74
** சித்திரகாரர்
ஓவியர் சித்திரகாரர் ஆகும்
** 1 பெயர்
#75
** முத்தம் கோப்பார்
மணி குயிற்றுநர் முத்தம் கோப்பார் ஆகும்
** 1 பெயர்
#76
** வண்ணார்
காழியர் ஈரம்கொல்லியர் வண்ணார்
#77
** மற்றும் வண்ணார்
ஏகாலியர் தூசர் என்னலும் ஆகும்
** 4 பெயர்கள்
#78
** நாவிதன்
பெரு மஞ்சிகனே மயிர்வினைஞன் நாவிதன்
#79
** மற்றும் நாவிதன்
ஏனாதி சிரையன் மங்கலியனும் ஆகும்
** 5 பெயர்கள்
#80
** செக்கான்
சக்கிரி நந்தி செக்கான் ஆகும்
** 2 பெயர்கள்
#81
** சங்கு அறுப்போர்
ஒளி வளை போழ்நர் சங்கு அறுப்போரே
** 1 பெயர்
#82
** மீகாமன்
நீகான் மாலுமி மரக்கலன் மீகாமன்
** 3 பெயர்கள்
#83
** ஆட்டு வாணிகன்
சாபலன் ஆட்டுவாணிகன்தன் பெயர்
** 1 பெயர்
#84
** ஊன் வினைஞர்
சூனரே ஊன்வினைஞர் என்ப
** 1 பெயர்
#85
** தோல் வினைஞர்
பறம்பர் தோல்வினைஞர் பெயரது ஆகும்
** 1 பெயர்
#86
** உறைகாரர்
காரோடர் உறைகாரர்
** 1 பெயர்
#87
** துன்னர்
குயினர் பொல்லர் துன்னர் ஆகும்
** 2 பெயர்கள்
#88
** கள் விலைஞர்
பழையர் துவசர் படுவர் கள்விலைஞர்
** 3 பெயர்கள்
#89
** சண்டாளர்
குணுங்கர் புலைஞர் கீழோர் இழிஞர்
அணங்கு சண்டாளர்க்கு அபிதானம்மே
** 5 பெயர்கள்
#90
** பாணர்
சென்னியர் வைரியர் செயிரியர் மதங்கர்
இன்னிசைகாரர் பாணர் என்ப
** 5 பெயர்கள்
#91
** பாண் தொழில் 8ழ் மக்கள்
பண்டர் ஓவர் பாண்தொழில் கீழ் மக்கள்
** 2 பெயர்கள்
#92
** பாண் மகள்
பாடினி விறலி பாட்டி மதங்கி
பாடல் மகடூஉ பாண்மகள் பெயரே
** 5 பெயர்கள்
#93
** தேர்ப் பாகன்
சாரதி சூதன் வலவன் தேர்ப்பாகன்
** 3 பெயர்கள்
#94
** யானைப் பாகர்
ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர்
** 2 பெயர்கள்
#95
** பரிமா வடிப்போர்
வாதுவர் பரிமாவடிப்போர் பெயரே
** 1 பெயர்
#96
** மடையர்
வாலுவர் கூவியர் பானசிகர் மடையர்
#97
** மற்றும் மடையர்
பாசகர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே
** 4 பெயர்கள்
#98
** ஒற்றர்
சாரர் வேய் ஒற்றர் சாரணரும் ஆகும்
** 3 பெயர்கள்
#99
** கூத்தா
நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர்
கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர்
** 7பெயர்கள் 99
#100
** நாடகக் கணிகை
நாடகக்கணிகை நடியே கூத்தி
** 2 பெயர்கள் 100
#101
** தமிழ்க் கூத்தர்
வாயிலோர் தமிழ்க்கூத்தர்
** 1பெயர் 101
#102
** கழைக்கூத்தர்
வேழம்பர் கழைக்கூத்தர்
** 1 பெயர் 102
#103
** வெறியாட்டாளன்
வேலன் முருகன் வெறியாட்டாளன்
தேவராளன் படிமத்தவனே
** 4 பெயர்கள் 103
#104
** தேவராட்டி
சாலினி முதியாள் படிமத்தவளே
தேவராட்டி பெயர் எனச் செப்புவர்
** 3 பெயர்கள் 104
#105
** தூதர்
வினைஉரைப்போர் வழிஉரைப்போர்
உறுதியோர் அனைய பண்புஉரைப்போரும் தூதர்
** 4 பெயர்கள் 105
#106
** கொலையாளன்
காதகன் சாருகன் கடுங் கொலையாளன்
** 2 பெயர்கள் 106
#107
** வேதனை செய்வோன்
வேதனைசெய்வோன் பெயரே அருந்துதன்
** 1 பெயர் 107
#108
** ஆண்பால்
மானவன் மகனே ஆடூஉ மைந்தன்
ஆடவன் புமான் காளை ஆண்பால் பெயரே
** 7 பெயர்கள் 108
#109
** ஆண்பாலில் சிறந்தவன்
நம்பி என்பது நாமச் சிறப்பே
** 1 பெயர்
#110
** முதல்வன்
ஆதியும் நாதனும் முதல்வன் பெயரே
** 2 பெயர்கள்
#111
** உயர்ந்தோர்
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
** 1 பெயர்
#112
** பெருமையில் சிறந்தோன்
பெருமகன் மல்லன் தலைவன் பெருமான்
குரிசில் செம்மல் கோமான் கோவே
ஆண்டகை பொருநன் அண்ணல் ஓங்கல்
ஏந்தல் மீளி விடலை பெருந்தகை
** 15 பெயர்கள்
#113
** எப்பொருட்கும் தலைவன்
இறையே காரணன் இயவுள் தோன்றல்
அதிபன் தலைவற்கு அபிதானம்மே
** 5 பெயர்கள்
#114
** மந்திரியா
எண்ணர் நூலோர் அமைச்சர் மந்திரியர்
** 3 பெயர்கள்
#115
** மந்திரித் தலைவர்
மதுவர் குரவர் மூத்தோர் முன்னோர்
உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே
அமைச்சர் தேர்ச்சித்துணைவர் என்று ஆங்கு
இசைத்த மந்திரித் தலைவர்க்கு எய்தும்
** 9 பெயர்கள்
#116
** அவர் நட்பாளர்
இப் பெயர் அவர் நட்பாளர்க்கு எய்தும்
#117
** மந்திரி தந்திரியர்
ஏனாதி காவிதி அமாத்தியர் எனும் பெயர்
ஆனா மந்திரி தந்திரிக்கு ஆகும்
** 3 பெயர்கள்
#118
** கருமத் தலைவன்
வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு
உள்படு கருமத்தலைவற்கு ஒன்றும்
** 2 பெயர்கள்
#119
** போர்த் தலைவன்
பொருநர் என்ப பெரும் போர்த்தலைவர்
** 1 பெயர்
#120
** பரிவாரம்
பரியாளம் என்பது பரிவாரம் ஆகும்
** 1 பெயர்
#121
** ஒத்து உரைப்போர்
கணக்காயர் ஓத்துஉரைப்போர்
** 1 பெயர்
#122
** கலை வல்லோர்
கவிஞர் கலைவல்லோர்
** 1 பெயர்
#123
** புலமையோரர்
மேலோர் பண்டிதர் புலவர் ஆசிரியர்
புந்தியர் மேதையர் புலமையோரே
** 6 பெயர்கள்
#124
** அறிஞர்
ஆன்றோர் சான்றோர் அறிஞர்தம் பெயரே
** 2 பெயர்கள்
#125
** பாவலர்
கலைஞர் பாவலர்
** 1 பெயர்
#126
** கற்றோர்
விற்பனர் கற்றோர்
** 1 பெயர்
#127
** நாவலர்
கவிகள் புலவர் கவிஞர் நாவலர்
#128
** மற்றும் நாவலர்
சாரதி எனவும் சாடுவர் எனவும்
சூரியர் எனவும் சொல்லுவர் புலவர்
** 6 பெயர்கள்
#129
** மிக வல்லோர்
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர்
#130
** மற்றும் மிக வல்லோர்
எழுத்தாளர் என்பதும் எய்தும் அப் பெயர்க்கே
** 4 பெயர்கள்
#131
** அயலோர்
நொதுமலர் வம்பலர் அயலோர் ஆகும்
** 2 பெயர்கள்
#132
** புதியோர்
அதிதியர் வம்பலர் புதியோர் ஆகும்
** 2 பெயர்கள்
#133
** மூதறிவாளர்
முதுவர் மூதறிவாளர் ஆகும்
** 1 பெயர்
#134
** குறிக் கொள்வோர்
பாராயணரே குறிக்கொளாளர்
** 1 பெயர்
#135
** வல்லோன்
வலவை வல்லவன் வல்லுநன் வல்லோன்
** 3 பெயர்கள்
#136
** மாட்டார்
வல்லார் மாட்டாதார்
** 1பெயர் 136
#137
** நடுச் சொல்வோன்
கள்வன் என் கிளவி கரியன் நடுச்சொல்வோன்
** 2 பெயர்கள் 137
#138
** கொடையுளோன்
புரவலன் ஈகையாளன் தியாகி
உபகாரி வேளாளன் கொடையுளோன் பெயரே
** 5 பெயர்கள் 138
#139
** வள்ளியோன்
வள்ளல் கொடையோன் வள்ளியோன் பெயரே
** 3 பெயர்கள் 139
#140
** இரப்போர்
இரவலர் பரிசிலாளர் யாசகர் இரப்போர்
** 3 பெயர்கள் 140
#141
** புகழ்வோர்
பூகதர் மாகதர் வந்தியர் பப்புவர்
வேதாளியர் புகழ்விளம்புவோரே
** 5 பெயர்கள் 141
#142
** தூர்த்தர்
விடரே காமுகர் தூர்த்தர் பெயரே
** 2 பெயர்கள் 142
#143
** காதலித்தோர்
விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் நயந்தோர்
ஆதரித்தோர் காதலித்தோர் பெயரே
** 5பெயர்கள் 143
#144
** வல்லாளன்
வயவன் மீளி வல்லாளன்னே
** 2 பெயர்கள் 144
#145
** திண்ணியோன்
வியவன் வண்டன் வீரன் மிண்டன்
விறலோன் பொருநன் விடலை மள்ளன்
திறலோன் பண்ணவன் திண்ணியோன் பெயரே
** 10 பெயர்கள் 145
#146
** படைவீரர்
மறவர் கூளியர் மள்ளர் பொருநர்
இகலர் செருநர் வாளாளர் வாளுழவர்
படரே வீரர் படையாளர் ஆகும்
** 10 பெயர்கள் 146
#147
** கீழோர்
பல்லவர் கயவர் பதகர் நீசர்
புல்லர் பூரியர் புள்ளுவர் கையர்
கலரே தீயோர் கண்டகர் மூடர்
அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர்
வெளிறர் அற்பர் கீழோர் பெயரே
** 18 பெயர்கள்
#148
** அறிவிலான்
முழுமகன் சிதடன் மூடன் பேதை
இழுதை அஞ்ஞை ஆதன் ஏழை
மடமகன் குதலை அறிவிலான் பெயரே
** 10 பெயர்கள்
#149
** அடிமை
தொழும்பு தொண்டு தொத்து தாதர்
தொறுவே விருத்தி அடிமை ஆகும்
#150
** மற்றும் அடிமை
சேடர் கிணகர் என்பதும் செப்பும்
** 8 பெயர்கள்
#151
** கள்வர்
கரவடர் சோரர் புரையோர் கட்டோர்
கரவர் பட்டிகர் திருடர் கள்வர்
** 7 பெயர்கள்
#152
** அச்சம் உடையோன்
பீருவும் சிதனும் பீதனும் கரிதனும்
காதரனும் அச்சம்உடையோன் கட்டுரை
** 5 பெயர்கள்
#153
** வஞ்சனையாளன்
மாயன் நிகாதன் வஞ்சனையாளன்
** 2 பெயர்கள்
#154
** வேகம் உடையோன்
கவனன் சவனன் வேகம்உடையோன்
** 2 பெயர்கள்
#155
** கடினன்
கடினன் பெயரது கற்கசன் ஆகும்
** 1 பெயர்
#156
** வழிச் செல்வோன்
பதிகனும் பாந்தனும் படர் வழிச்செல்வோன்
#157
** மற்றும் வழிச் செல்வோன்
வியவன் என்பதும் ஆங்கு அவன் மேற்றே
** 3 பெயர்கள்
#158
** ஏவுவான்
வியவன் ஏவுவான்தன் பெயர் ஆகும்
** 1 பெயர்
#159
** தொழில் செய்வோர்
தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே
** 2 பெயர்கள்
#160
** தரித்திரர்
இல்லோர் ஆதுலர் வறியோர் ஏழையர்
நல்கூர்ந்தோரே பேதையர் தரித்திரர்
#161
** மற்றும் தரித்திரர்
அகிஞ்சனர் என்பதும் அப் பெயர் கிளத்துப
** 7 பெயர்கள்
#162
** வாயில காப்போர்
கடைகாவலர் வாயில்காப்போர் பெயரே
** 1 பெயர்
#163
** தசை தின்போன்
தசை நனி தின்போன் சாடிலி கூடிலி
** 2 பெயர்கள்
#164
** நோயுற்று ஒழிந்தோன்
உல்லாபன் நோயுற்றுஒழிந்தோன் பெயரே
** 1 பெயர்
#165
** மனோகரன்
சல்லாபன் மனோகரன்தன் பெயர் ஆகும்
** 1 பெயர்
#166
** புகழாளன்
இயவுள் புகழாளன்
** 1 பெயர்
#167
** குலம் உள்ளோர்
குலிஞர் என்ப குலம்உள்ளோரே
** 1 பெயர்
#168
** உரியோன்
கிழவன் உரியோன்
** 1 பெயர்
#169
** நிருவாணி
நக்கன் நிருவாணி
** 1 பெயர்
#170
** கூர்மை இல்லோன்
மந்தன் கூர்மைஇல்லோன் பெயரே
** 1 பெயர்
#171
** நாகரிகர்
சதுரர் காமுகர் நாகரிகர் ஆகும்
** 2 பெயர்கள்
#172
** கருணை உள்ளோன்
கருணைஉள்ளோன் காருண்ணியன் ஆகும்
** 1 பெயா
#173
** வரையாது கொடுப்போர்
வரையாதுகொடுப்போர் வள்ளியோர் ஆகும்
** 1 பெயர்
#174
** ஒர் குடியில் கொண்டோன்
சகலன் ஓர் குடியில் கொண்டோன் ஆகும்
** 1 பெயர்
#175
** சுற்றம்
கேளே ஒக்கல் கிளையே பந்தம்
கூளி கடும்பு குடும்பம் சுற்றம்
** 7 பெயர்கள்
#176
** உறவு
நண்பு தமர் உரியர் நட்பு நட்டோர்
என்று இவை பற்றினர் உறவு என இசைப்பர்
** 6 பெயர்கள்
#177
** தம் குடித் தமர்
தாயத்தார் ஞாதியர் தம் குடித் தமரே
** 2 பெயர்கள்
#178
** ஒரு குடி
ஒருகுடி என்பது உதரப் பிரிவினர்
** 1 பெயர்
#179
** வழித் தோன்றல்
வழியோன் வழித்தோன்றல் ஆகும்
** 1 பெயர்
#180
** பாட்டன்
தாதைதன் தாதை மூதாதை பாட்டன்
#181
** மற்றும் பாட்டன்
பிதாமகன் என்றும் பேசப்படுமே
** 3 பெயர்கள்
#182
** ஈன்றோன்
தாதையும் அத்தனும் தந்தையும் பிதாவும்
ஐயனும் ஈன்றோன்தன் பெயர் ஆகும்
** 5 பெயர்கள்
#183
** மாமன்
மாதுலன் அம்மான் மாமன் பெயரே
** 2 பெயர்கள்
#184
** மருமகன்
மருமான் பிறங்கடை ஓங்கல் மருமகன்
** 3 பெயர்கள்
#185
** மூத்தோன்
அண்ணன் தமையன் தம்முன் தோன்றல்
முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே
** 6 பெயர்கள்
#186
** இளையோன்
பின்னவன் இளவல் பின்தோன்றல் கனிட்டன்
எம்பியும் அனுசனும் இளையோன் பெயரே
** 6 பெயர்கள் 186
#187
** தாய்
அம்மை அன்னை ஆய் அவ்வை தம்மனை
தரு மோய் ஈன்றாள் தன்னை தாய் என்ப
** 8 பெயர்கள்
#188
** முன் பிறந்தாள்
அன்னை செவிலி தெளவை சேட்டை
முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர்
** 6 பெயர்கள்
#189
** பின் பிறந்தாள்
பின்னை கையை தங்கை பின்பிறந்தாள்
**3 பெயர்கள்
#190
** மைத்துனன்
சம்மதன் மைத்துனன்தன் பெயர் ஆகும்
** 1 பெயர்
#191
** மணவாளன்
கணவன் கொழுநன் காந்தன் கேள்வன்
மணமகன் காதலன் வல்லவன் உரியோன்
பதி தவன் கொண்கன் பத்தா துணைவன்
தலைமகன் தலைவன் மணவாளன்தன் பெயர்
#192
** மற்றும் மணவாளன்
கண்டன் வேட்டோன் வந்துழிக் கொளலே
** 17 பெயர்கள்
#193
** மணவாளனுக்கு உரிய பெயர்
நாயகன் என்பது நயந்த சொல் என்ப
#194
** மணமகள்
மணமகள் உரிமை வல்லவி தாரம்
துணைவி வாழ்க்கைத்துணை மணவாட்டி
பாரி இல்லாள் பன்னி விருந்தனை
இல்லவள் குடும்பினி களமே காந்தை
இல் மனை காதலி நாயகி பெண் பெயர்
** 18 பெயர்கள்
#195
** மைந்தன்
சந்ததி மதலை தனையன் காதலன்
நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல்
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன்
புத்திரன் பிறங்கடை எச்சம் சேய் மைந்தன்
** 18 பெயர்கள் 195
#196
** மகள்
புதல்வி சிறுமி புத்திரி தனையை
சுதை ஐயை பந்தனை மகள் பெயர் சொல்லும்
** 7 பெயர்கள் 196
#197
** பிள்ளை
குழவியும் குழந்தையும் மகவும் பிள்ளை
** 3 பெயர்கள்
#198
** மகன் மகள் என்னும் இருபாற்கும் பொது
எச்சம் என்பது இருபாற்கும் உரித்தே
** 1 பெயர்
#199
** பாலர்
மகார் குறுமாக்கள் சிறார் இவை பாலர்
** 3 பெயர்கள்
#200
** இளைஞன்
மழவன் குமரன் மைந்தன் சேடன்
இளவல் முருகன் காளை இளைஞன் என்ப
#201
** மற்றும் இளைஞன்
ஆடவன் உவாவும் அப் பெயர்க்கு உரித்தே
** 9 பெயர்கள்
#202
** தோழன்
சிலதன் எலுவன் சேடன் நண்பன்
பாங்கன் சகாயன் தோழன் பெயரே
** 6 பெயர்கள்
#203
** தோழன் முன்னில்ப் பெயர்
ஏடா என்ப தோழன் முன்னிலைப் பெயர்
** 1 பெயர்
#204
** சங்காத்தி
அருகன் சம்மதன் நண்பன் சங்காத்தி
** 3 பெயர்கள்
#205
** தலைமைப் பெண்
குரத்தி பெருமாட்டி ஆசாள் இறைவி
கோமகள் தலைவி அடிகள் ஐயை
சாமி அத்தை தலைமைப்பெண் பெயர்
** பெயர்கள்
#206
** பெண் மகளில் சிறந்தவள்
நங்கை என்பது நாமச் சிறப்பே
** 1 பெயர்
#207
** அருந்தவப் பெண்
பைம்மையும் கெளந்தியும் அருந்தவப்பெண் பெயர்
** 2 பெயர்கள்
#208
** தோழி
சிலதி பாங்கி சேடி இணங்கி
துணைவி இகுளை சகியே தோழி
** 7 பெயர்கள் 208
#209
** தோழி முன்னிலைப் பெயர்
ஏடி ஏலா தோழி முன்னிலைப்பெயர்
** 2 பெயர்கள்
#210
** ஏவலில் சிறந்தவள்
சேடி ஏவலில் சிறந்தவள் பெயரே
** 1 பெயர்
#211
** கைத்தாய்
தாதி செவிலி கோடாய் பின்னனை
காதலின் அமர்ந்த கைத்தாய் பெயரே
** 4 பெயர்கள்
#212
** கன்னி
குமரி அழிவுஇல் கன்னியைக் கூறும்
** 1 பெயர்
#213
** கோலம் புனை பெண்
கோலம்புனைபெண் வண்ணமகள் என்ப
** 1 பெயர்
#214
** நால் வகைப் பெண் பருவம்
வாலை தருணி பிரவிடை விருத்தை என்று
ஆய மடந்தையர்க்கு ஆம் பருவம் நான்கே
** 4 பெயர்கள்
#215
** முதியாள்
விருத்தை மூத்தாள் முதியாள் பெயரே
** 2 பெயர்கள்
#216
** எழுவகைப் பெண் பருவம்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம்பெண் என
மற்று இவை ஏழும் பொற்றொடி மாதர்க்கு
உருவம் பற்றிய பருவம் ஆண்டு ஏழோடு
பன்னொன்று பன்மூன்று பத்தொன்பஃதோடு
ஐஐந்து முப்பத்தொன்று எண் ஐந்தே
** 7 பெயர்கள்
#217
** மலடி
மலடி மைம்மை வந்தி ஆகும்
** 2 பெயர்கள்
#218
** கலன் கழி மகளிர்
கைம்மை கைனி விதவை கைம்பெண்
அமங்கலி கலன்கழிமகளிர் பெயரே
** 5 பெயர்கள்
#219
** பொது மகளிர்
விலைமகள் சூளை வேசி பரத்தை
கணிகை பொதுமகள் கட்டுரை என்ப
** 5 பெயர்கள்
#220
** பெண்
அரிவை அங்கனை மடந்தை ஆடவள்
தெரிவை மானினி சிறுமி இளம்பிடி
சுரிகுழல் மகடூஉ காந்தை மாது
வனிதை நல்லாள் காரிகை தளிர்இயல்
அணங்கு தையல் பெதும்பை பேதை
மடந்தை மங்கை மாயோள் பாவை என
விளம்பிய பிணாவும் பெண்பெயர் மேற்றே
** 25 பெயர்கள்
#221
** மித்திரர்
ஒல்லுநர் துன்னுநர் ஒன்றுநர் நேர்ந்தார்
நண்ணுநர் நள்ளுநர் நயந்தோர் மேவினர்
சேர்ந்தோர் மித்திரர் பெயர் எனச் செப்புவர்
** 9 பெயர்கள்
#222
** மாற்றலர்
ஒல்லார் நோனார் ஒன்றலர் நண்ணலர்
திருந்தலர் மேவலர் செற்றார் செறுநர்
இன்னார் கருதலர் எண்ணலர் நள்ளார்
பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார்
தெவ்வர் அடையலர் தரியலர் தெறுநர்
ஒட்டார் பகைஞர் அரிகள் என்று உரைக்கும்
இப் பெயர் பலவும் மாற்றலர் பெயரே
** 23 பெயர்கள்
#223
** ஆடவர்கூட்டம்
சவையும் பண்ணையும் சங்கமும் கோட்டியும்
அவையும் ஆடவர்கூட்டம் என்று ஆகும்
** 5 பெயர்கள்
#224
** மாதர் கூட்டம்
ஒரையும் பண்ணையும் ஆயமும் குழுவும்
தேறுங்காலை தெரிவையர்கூட்டம்
** 4 பெயர்கள்
#225
** மகளிர் விளையாட்டு
ஓரை பண்ணை கெடவரல் பொய்தல்
உண்டாட்டு கிரீடை உப்பு கேளி
வண்டல் அம் கோதை மகளிர்விளையாட்டே
** 9 பெயர்கள்
#226
** மக்கட் பரப்பு
மன்பதை பைஞ்ஞீலி மக்கட்பரப்பே
** 2 பெயர்கள்
#227
** மக்கள் பொதுப் பெயர்
மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர்
மனிதர் நரரே மக்கள் பொதுப் பெயரே
** 6 பெயர்கள்
#228
** குலம்
குடி திணை விழுப்பம் ஒழுக்கம் குலம் எனல்
** 4 பெயர்கள்
#229
** குலம் உள்ளோன்
குலம்உள்ளோன் பெயா குலீனன் ஆகும்
** 1 பெயர்
#230
** வேட்டோர்
நயந்தோர் காதலர் நகையுநர் நயவர்
விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் பெயரே
** 6 பெயர்கள் 230
#231
** குருடன்
அந்தகன் சிதடன் குருடன் ஆகும்
** 2 பெயர்கள் 231
#232
** முடவன்
பங்கு சூனியன் முடவன் ஆகும்
**2 பெயர்கள் 292
#233
** குறளன்
குஞ்சன் வாமனன் குறளன் பெயரே
#234
** மற்றும் குறளன்
சிந்தன் என்றும் செப்புவர் அதற்கே
** 3 பெயர்கள் 234
#235
** செவிடன்
வதிரன் செவிடன்
** 1 பெயர் 235
#236
** ஊமை
மூகையும் மூங்கையும் ஊமை ஆகும்
** 2 பெயர்கள் 236
#237
** கூனன்
கோணன் கூனன் ஆம் எனக் கூறுவர்
** 1 பெயர் 237
#238
** அலி
பேடன் நபுஞ்சகன் பேதை பெண்டகன்
ஆகும் சண்டன் அலி பெயர் ஆகும்
** 5 பெயர்கள் 238
#239
** கொண்டோற் பிழைத்துப் பெறும் மகன்
கொண்டோன் பிழைத்துப் பெறும் மகன் குண்டகன்
** 1 பெயர் 239
#240
** விதவை பெற்ற மதலை
விதவை பயந்த மதலை கோளகன்
** 1 பெயர் 240
#241
** கன்னியிற் பிறந்தோன்
கன்னியிற்பிறந்தோன் கானீனன் ஆகும்
** 1 பெயர் 241
#242
** உயர்ந்த ஆணும் இழிந்த பெண்ணும்
** கூடிப் பிறந்த பிள்ளைகள்
உயர்ந்த ஆணினும் இழிந்த பெண்ணினும்
வியந்த கூட்டத்தவர் அநுலோமர்
** 1 பெயர் 242
#243
** உயர்ந்த பெண்ணும் இழிந்த ஆணும்
** கூடிப் பிறந்த பிள்ளைகள்
உயர்ந்த பெண்ணினும் இழிந்த ஆணினும்
வியந்த கூட்டத்தவர் பிரதிலோமர்
** 1 பெயர் 2453
#244
** அதுலோமத்து ஆணும் பிரதிலோமப் பெண்ணும்
** கூடிப் பிறந்த பிள்ளைகள்
அநுலோம கூட்டத்து ஆணினும் அவ்வழி
பிரதிலோம குலப் பெண்ணினும் மிக்க
வியந்த கூட்டத்தவர் அந்தராளர்
** 1 பெயர் 244
#245
** அதுலோமப் பெண்ணும் பிரதிலோமத்து ஆணும்
** கூடிப் பிறந்த பிள்ளைகள்
பிரதிலோமர் குலத்து ஆணினும் பின்னர்
அநுலோமர் குலப் பெண்ணினும் அவ்வழி
வியந்த கூட்டத்தவர் விராத்தியர் ஆகும்
** 1 பெயர் 245
#246
** பேடி இலக்கண வகை
பேடி இலக்கணம் பேசுங்காலை
நச்சுப் பேசியும் நல் இசை ஓர்ந்தும்
அச்சு மாறியும் ஆண் பெண் ஆகியும்
கைத்தலம் ஒன்றைக் கடுக வீசியும்
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தும்
விலங்கியும் மிதித்தும் விழி வேறு ஆகியும்
துளங்கித் துளங்கிச் சுழன்று திரிந்தும்
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும்
பக்கம் பார்த்தும் பதுங்கித் திரிந்தும்
காரணம் இன்றிக் கதம் பல கொண்டும்
வார் அணி கொங்கையை வலிய நலிந்தும்
அசக்கியும் அழுதும் அயர்ந்து அருவருத்தும்
குறுக்கியும் கூட்டியும் கூர் விழி கொண்டும்
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும்
இரங்கிப் பேசியும் எல்லெல் என்றும்
இன்னன பிறவும் இயற்றுதல் இயல்பே
#247
** கரு
சினையும் பீளும் சூலும் வயாவும்
கருவின் பெயரே கருப்பமும் ஆகும்
** 5 பெயர்கள் 247
#248
** தோல்
உரிவை அதளே ஒலியல் புறணி
சருமம் வடகம் போர்வை பச்சை
துருத்தி துவக்கு கிருத்திமம் தோலே
** 11 பெயர்கள் 248
#249
** இரத்தம்
செந்நீர் சோரி நெய்த்தோர் செம்பால்
புண்ணீர் சுடுவல் புலால்நீர் சோணிதம்
உதிரம் குருதி கறை இரத்தப்பெயர்
** 11 பெயர்கள் 249
#250
** ஊன்
தசையும் தூவும் தடியும் விடக்கும்
புலையும் பிசிதமும் புலாலும் புண்ணும்
புரணியும் வள்ளுரமும் புலவும் ஊன் பெயர்
#251
** மற்றும் ஊன்
இற்றி இறைச்சி என்பவும் ஆகும்
** 13 பெயர்கள் 251
#252
** பிச்சு
ஊழை மூளை மாசு பிச்சு என்ப
** 3 பெயர்கள்
#253
** கருப்பம் பயில் இடம்
பைசந்தி பைங்குழி கருப்பம் பயில் இடம்
** 2 பெயர்கள் 253
#254
** ஈரல்
ஈருள் ஈரல்
** 1 பெயர்
#255
** செவ்வீரல்
இரத்தம் செவ்வீரல்
** 1 பெயர் 255
#256
** விழுக்கு
விளரும் நிணமும் கொழுப்பும் விழுக்கு என்ப
#257
** மற்றும் விழுக்கு
நெய்யும் வழும்பும் நிகழ்த்தப்பெறுமே
** 5 பெயர்கள் 257
#258
** வழும்பு
வழுக்கு வழும்பு ஆம்
** 1 பெயர்
#259
** மலக் குரம்பை
குடர் மலக்குரம்பை
** 1 பெயர் 259
#260
** மெய்ம் மலம்
மெய்ம்மலம் மாசு எனல்
** 1 பெயர் 260
#261
** உள் மலம்
உள்மலம் உபமலம்
** 1 பெயர் 261
#262
** இந்திரியம்
கந்தம் சுக்கிலம் இந்திரியம் ஆகும்
** 2 பெயர்கள்
#263
** குலை
உடலுள் மூகை குலை குண்டியும் ஆகும்
** 2 பெயர்கள் 263
#264
** முடை
பூதி ஊழ்த்தல் தசை புலவு முடை என்ப
** 4 பெயர்கள் 264
#265
** சோணிதம்
செம்பால் சோணிதம்
** 1 பெயர்
#266
** நரம்பு
நாடியும் சிரையும் மேதையும் நரம்பே
** 3 பெயர்கள்
#267
** எலும்பு
என்பு அத்தி அங்கம் களேவரம் எலும்பே
** 4 பெயர்கள்
#268
** கழி உடலின் முழு எலும்பு
கழி உடலின் முழு எலும்பு கங்காளம் ஆகும்
** 1 பெயர்
#269
** உடம்பு
ஆகம் காத்திரம் யாக்கை தனு உடல்
பூதியம் புணர்வு புகல் வியம் விம்மிதம்
தேகம் அங்கம் மூர்த்தம் சரீரம்
விக்கிரகம் பிண்டம் மேனி தொக்கு
காயம் குரம்பை கடம் மெய் சடம் புரம்
பூட்சி தாபரம் புற்கலம் உடம்பே
** 27 பெயர்கள்
#270
** வடிவம்
படிவம் உருவம் சட்டகம் மேனி
வண்ணமும் ஆகும் வடிவின் பெயரே
** 5 பெயர்கள்
#271
** கால்
பதமே பாதம் சரணம் கழல் கால்
#272
** மற்றும் கால்
சலன் அடி அங்கிரி தாளம் ஆகும்
** 8 பெயர்கள்
#273
** கரடு
பரடே மிசைத்திரள் கால்அடி கரடே
** 3 பெயர்கள்
#274
** கணைக் கால்
சங்கம் கணைக்கால்
** 1 பெயர்
#275
** முழந்தாள்
சானு முழந்தாள்
** 1 பெயர்
#276
** தொடை
குறங்கு வாமம் கவான் ஊரு தொடை
** 4 பெயர்கள்
#277
** அல்குல்
கடிதடம் நிதம்பம் அரையே அல்குல்
#278
** மற்றும் அல்குல்
வடிவு அகல் உபத்தமும் ஆகும் என்ப
** 6 பெயர்கள்
#279
** பிருட்டம்
பிருட்டம் சகனம் குய்யம் பாயுரு
** 3 பெயர்கள்
#280
** ஆண் குறி
இலிங்கமும் கோசமும் ஆண்குறி ஆகும்
** 2 பெயர்கள்
#281
** பெண் குறி
யோனியும் பகமும் பெண்குறி ஆகும்
#282
** மற்றும் பெண் குறி
பூப்பகமும் பொன்னும் சின்னமும் ஆகும்
** 5 பெயர்கள்
#283
** இடை
மத்திமம் நுசுப்பு இடை மருங்கும் ஆகும்
** 3 பெயர்கள்
#284
** மருங்கின் பக்கம்
ஒக்கலை மருங்கின்பக்கம் ஆகும்
** 1 பெயர்
#285
** கொப்பூழ்
இதலை இலைஞ்சி நாபி உந்தி
போகில் கொப்பூழ் ஆகும் என்ப
** 5 பெயர்கள்
#286
** மலம்
அமேத்தியம் மலம் ஆம்
** 1 பெயர்
#287
** சிறுநீர்
அமரி சிறுநீர் உவரியும் ஆகும்
** 2 பெயர்கள்
#288
** வயிறு
குக்கி துத்தம் மடி வயின் உதரம்
மோடு சடரம் அகடும் வயிறே
** 8 பெயர்கள்
#289
** மார்பு
அகலமும் உரமும் ஆகமும் மார்பே
#290
** மற்றும் மார்பு
மருமமும் நெஞ்சும் மற்று அதன் பெயரே
** 5 பெயர்கள்
#291
** முலை
பயோதரம் சுவர்க்கம் குருக்கண் அம்மம்
நகலம் தனம் குயம் சேக்கை கொம்மை
கொங்கை முலை எனக் கூறப்படுமே
#292
** மற்றும் முலை
பறம்பு என்று உரைப்பதும் அப் பெயர்ப் பாலே
** 11 பெயர்கள் 292
#293
** முலைக் கண்
சிலீமுகம் சூசுகம் ஈற்று முலைக்கண்ணே
** 2 பெயர்கள் 293
#294
** கை
கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே
** 5 பெயர்கள் 294
#295
** முழங்கை
கூர்ப்பரம் முழங்கை
** 1 பெயர் 295
#296
** மணிக்கட்டு
கிலுத்தம் மணிக்கட்டே
** 1 பெயர் 296
#297
** உள்ளங்கை
அங்கை குடங்கை அகங்கை உள்ளங்கை
** 3 பெயர்கள் 297
#298
** விரல்
அங்குலி விரல் ஆம்
** 1பெயர் 298
#299
** நகம்
உகிர் நகம் ஆகும்
** 1 பெயர் 299
#300
** தோள்
புயமும் மொய்ம்பும் வாகுவும் தோளே
** 3 பெயர்கள் 300
#301
** கமுக்கட்டு
வாகுமூலம் கைம்மூலம் கமுக்கட்டே
** 2 பெயர்கள் 301
#302
** தோள் மேல்
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல்
** 3 பெயர்கள் 302
#303
** கழுத்து
கிரீவம் களமே கில்லம் கந்தரம்
கண்டம் மிடறும் கழுத்து ஆகும்மே
** 6 பெயர்கள்
#304
** முதுகு
வெரிந் புறம் அபரம் வெந்நும் முதுகே
** 4 பெயர்கள் 304
#305
** பிடர்த் தலை
சுவலும் பிடரும் எருத்தமும் சிறுபுறமும்
கயிலும் நிமமும் பிடர்த்தலை ஆகும்
** 6 பெயர்கள் 305
#306
** கதுப்பு
கபோலம் கொடிறு அனு கவுள் கதுப்பு ஆகும்
** 4 பெயர்கள் 306
#307
** மோவாய்
தாடி கட்டம் மோவாய் ஆகும்
#308
** மற்றும் மோவாய்
கவுகம் தாழ்வாய் ஆம் எனச் செப்புவர்
** 4 பெயர்கள் 308
#309
** முகம்
ஆனனம் வதனம் துண்டம் வத்திரம் முகம்
** 4 பெயர்கள் 309
#310
** உதடு
பாலிகை முத்தம் வாய்இதழ் உதடே
** 3 பெயர்கள் 310
#311
** மேல் இதழ்
மேல்இதழ் ஓட்டம்
** 1 பெயர் 311
#312
** கீழ் இதழ்
கீழ்இதழ் அதரம்
** 1 பெயர் 312
#313
** அண்ணம்
அணரி அண்ணம்
** 1 பெயர் 313
#314
** பல்
எயிறும் தந்தமும் தசனமும் பல்லே
#315
** மற்றும் பல்
முறுவலும் நகையும் மூரலும் ஆகும்
** 6 பெயர்கள் 315
#316
** நகுதல்
நகுதற்கும் இவையே நாமம் என்ப
#317
** எயிறு
எயிற்றின் பெயரே விளிம்பு என இயம்பும்
** 1 பெயர் 317
#318
** நாக்கு
நாவே தாலு தாரம் சிகுவை
நாக்கு ஆம் எனவே நவிலப்படுமே
** 4 பெயர்கள் 318
#319
** வாய்
வைப்பு புலனிடம் பாங்கரும் வாய் எனல்
** 3 பெயர்கள் 319
#320
** உள் மிடறு
அணல் உள்மிடறே
** 1 பெயர்
#321
** உள்நாக்கு
அண்ணம் உள்நாக்கே
#322
** மற்றும் உள் நாக்கு
சிறுநாக்கு என்று செப்பலும் ஆகும்
** 2 பெயர்கள்
#323
** கீழ் வாய்ப் புறம்
அணல் கீழ்வாய்ப்புறம்
** 1 பெயர்
#324
** மேல் வாய்
அணரி அண்ணம் மேல்வாய்ப்புறமே
#325
** மற்றும் மேல் வாய்ப் புறம்
அணலே மேல்வாய் ஆகலும் உரித்தே
** 3 பெயர்கள்
#326
** மூக்கு
துண்டமும் நாசியும் கோணமும் மூக்கே
** 3 பெயர்கள்
#327
** செவி
காது கேள்வி அள்ளே சுருதி
கன்னம் செவியே சோத்திரம் ஆகும்
** 6 பெயர்கள்
#328
** கண்
திட்டி விலோசனம் நேத்திரம் நயனம்
தாரை அம்பகம் விழியே நாட்டம்
அக்கம் நோக்கு சக்கு திருட்டி
பார்வை கோ இன்னன பலவும் கண்ணே
** 14 பெயர்கள்
#329
** கண் மணி
தாரை கண்மணி
** 1 பெயர்
#330
** சுண் இமை
விளிம்பு இமை ஆகும்
** 1 பெயர்
#331
** புருவம்
புரூரம் பிருகுடி நுதல் இவை புருவம்
#332
** மற்றும் புருவம்
புதலும் புகுடியும் பீருவும் ஆகும்
** 6 பெயர்கள்
#333
** கழுத்தின் பின்குழி
பனிச்சை சூறை கழுத்தின் பின்குழி
** 2 பெயர்கள்
#334
** தொண்டைக் குழி
தொண்டை கில்லம் தொண்டைக்குழியே
** 2 பெயர்கள்
#335
** நெற்றி
நெற்றி முண்டகம் மத்தகம் நுதலே
அளிகம் பாலம் குளம் இலலாடம்
** 7 பெயர்கள்
#336
** தலை
சிரமும் கம்மும் சேகரமும் சென்னியும்
முடியும் உத்தமாங்கமும் நவிரமும்
உச்சியும் சிகரமும் முண்டம் மத்தகமும்
மூர்த்தமும் உவ்வியும் தலை என மொழிப
** 13 பெயர்கள்
#337
** குடுமி
சிமிலம் சிக்கம் சிகை சிமி குடுமி
** 4 பெயர்கள்
#338
** உச்சி
நவிரம் சுடிகை சூழி உச்சி
** 3 பெயர்கள்
#339
** ஆண்பால் மயிர்
குஞ்சி பித்தை ஓரி குழல் கார்
பங்கி கேசம் சுரியல் கதுப்பு
தளை நவிர் பிச்சம் சிகை ஆண்பால்மயிர்
** 13 பெயர்கள்
#340
** பெண்பால மயிர்
குழலே கூழை குந்தளம் கூந்தல்
அளகம் ஓதி ஐம்பால் கதுப்பு
சுருளொடு விலோதம் பரிசாரம் கேசம்
சுரியல் மராட்டம் கோதை குருள் என்று
இனைய பெண்பால்மயிர் குரல் கூரல்
** 18 பெயர்கள்
#341
** ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொது
கதுப்பே கேசம் சுரியல் குழல் ஆண்
மயிர்க்கும் பெண்பால் மயிர்க்கும் உரித்தே
** 4 பெயர்கள்
#342
** பெண் மயிர் முடி
கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம்
முச்சி சிகழிகை பெண்மயிர்முடிப் பெயர்
** 6 பெயர்கள்
#343
** மயிர்க் குழற்கி
குந்தளம் அளகம் விலோதம் மயிர்க்குழற்சி
** 3 பெயர்கள்
#344
** குழல் கொத்து
குந்தளம் என்பது குழல்கொத்து ஆகும்
** 1 பெயர்
#345
** ஐம்பால் முடி
கூந்தல் முடியே குழலொடு தொங்கல்
வாய்ந்த பனிச்சை வார் மயிர்ச் சுருள் என்று
ஏந்திழையார் முடிக்கு இயன்ற ஐம்பாலே
** 5 பெயர்கள்
#346
** பிற மயிர்
ஓரி பங்கி உளையே உரோமம்
கேசம் மராட்டம் பிறமயிரும் கிளத்துப
** 6 பெயர்கள்
#347
** செறி மயிர்ப் பரப்பு
சிரோந்தமும் உரோமமும் செறிமயிர்ப்பரப்பே
** 2 பெயர்கள்
#348
** ஆண்பால் மயிர் முடி
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை
மன்னும் சிகழிகை குழல் சுடிகை மெளலி
இன்னவை ஆண்பால்மயிர்முடிக்கு எய்தும்
** 9 பெயர்கள்
#349
** சடை
குடிலம் வேணி கோடீரம் சடிலம்
சடையின் பெயரே பின்னலும் சாற்றும்
** 5 பெயர்கள்
#350
** தலை மயிர்
தலைமயிர் சிரோருகம்
** 1 பெயர்
#351
** நரைமயிர்
சரை நரை ஆகும்
#352
** மற்றும் நரை மயிர்
பலிதம் என்பது நரைமயிர்ப் பண்பே
** 2 பெயர்கள்
#353
** உறுப்பு
அவயவம் காத்திரம் அங்கம் உறுப்பே
#354
** மற்றும் உறுப்பு
சினையே மூர்த்தம் என்று ஒருவழிச் சிவணும்
** 5 பெயர்கள்
#355
** சந்து
கந்தும் கொளுத்தும் மூட்டும் சந்து ஆம்
** 3 பெயர்கள்
#356
** உடல் தழும்பு
வடு வசி கச்சை சேக்கை அங்கிதம்
சுவடு செதுக்கை தழும்பு எனச் சொல்லுப
** 7 பெயர்கள்
#357
** இறை
பிறங்கு வரி பொறி வரை இறை ஆகும்
** 4 பெயர்கள்
#358
** தேமல்
துத்தி வசந்திகை திதலை சுணங்கே
உத்தி தேமல் திதனியும் உரைக்கும்
** 6 பெயர்கள்
#359
** கோழை
ஐயும் காசமும் அவை முதிர் கோழை
** 2 பெயர்கள்
#360
** கழலை
அரலை கழலை ஆகும் என்ப
** 1 பெயர்
#361
** பிணம்
அழனமும் சவமும் குணபமும் பிரேதமும்
பிணமே களேபரம் என்னும் பெயரே
** 5 பெயர்கள்
#362
** உடற்குறை
யூபமும் கவந்தமும் அட்டையும் உடற்குறை
** 3 பெயர்கள்
#363
** சிர மாலை
அழிதலை கரோடி சிரமாலை ஆகும்
** 2 பெயர்கள்
#364
** தலை ஒடு
கபாலம் வெண்டலை தலைஓடு என்ப
** 2 பெயர்கள்
#365
** பஞ்ச மல வகை
மலம் நீர் வாயு செந்நீர் கந்தம்
பஞ்சமலம் எனப் பகரல் ஆகும்
** 5 பெயர்கள்
#366
** இருபத்து ஐந்து தத்துவம்
ஐம்பெரும்பூதமும் அவை அறி வாயிலும்
ஐம்புலன் அறியும் அவற்று அறிவு ஐந்தும்
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று
ஆகிய கன்மேந்திரியம் ஐந்தும்
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கு
கரணம் இயமானனும் காயத்திற்கு அமைந்த
இருபத்துஐந்து தத்துவம் ஆகும்
** 25 பெயர்கள்
#367
** ஓர்அறிஉயிர்
உற்று அறி புலன் அது ஒன்றே உடைமையின்
மற்றைப் புல்லும் மரனும் ஓர்அறிவே
** 2 பெயர்கள்
#368
** ஈர் அறி உயிர்
உற்று அறி புலனும் நாவும் உடைமையின்
அட்டையும் நந்தும் போல்வ ஈர்அறிவே
** 2 பெயர்கள்
#369
** மூவறி உயிர்
உற்று அறி புலன் நா மூக்கும் உடைமையின்
முன்பெறு சிதல் எறும்பு ஆதி மூ அறிவே
** 2 பெயர்கள்
#370
** நால் அறி உயிர்
உற்று அறி புலன் நா மூக்கொடு கண்ணும்
பெற்ற வண்டு ஞெண்டு ஆதி நால் அறிவின
** 2 பெயர்கள்
#371
** ஐயறி உயிர்
உற்று அறி புலன் நா மூக்கொடு கண் செவி
மக்களும் மாவும் ஐயறிவினவே
** 2 பெயர்கள்
#372
** ஆறு அறி உயிர்
மனனோடு ஆறு அறிவினரே மக்கள்
ஒரு சார் விலங்கும் அது பெறற்கு உரித்தே
** 2 பெயர்கள்
#373
** இரு வகைத் தாது
இரு வகைத் தாது சுரோணிதம் சுக்கிலம்
** 2 பெயர்கள்
#374
** மூவடிவு
மூவடிவு பெண் ஆண் அலி என மொழிப
** 3 பெயர்கள்
#375
** முப்பிணி
முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம்
** 3 பெயர்கள்
#376
** எண் வகை மணம்
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம்
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம்
பைசாசம் இவை எண்வகை மணமே
** 8 பெயர்கள்
** ஐந்தாவது ஆடவர் வகை முற்றிற்று
@6 அநுபோக வகை
**
** 1 உணவின் வகை
#1
** சோறு
அன்னம் அயினி அடிசில் ஓதனம்
பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல்
புழுக்கல் மிதவை அமலை புற்கை
உணவு சரு பாளிதம் நிமிரல் வல்சி
அசனம் துற்று கவளம் உதரகம்
சொன்றி பாத்து கூழ் பதம் புகா சோறே
** 27 பெயர்கள்
#2
** கஞ்சி
கஞ்சி யவாகே காடி மோழை
** 3 பெயர்கள்
#3
** பால் சோறு
பாயசம் பால்சோறே
** 1 பெயர்
#4
** ததி உணவு
தயிரில் திமிரல் ததியின் உணவே
** 1 பெயர்
#5
** அவிழ்
பதம் அவிழ் ஆகும்
** 1 பெயர்
#6
** வழி உணவு
பொதி தோட்கோப்பு சம்பளம் வழிஉணவே
** 3 பெயர்கள்
#7
** பிட்டு
ஆவியும் வெந்தையும் பிட்டு எனலாகும்
** 2 பெயர்கள்
#8
** மோதகம்
மோதகம் இலட்டுகம்
** 1 பெயர்
#9
** அடை
அப்பம் அடையே
** 1 பெயர்
#10
** உக்காரி
அஃகுல்லி உக்காரி
** 1 பெயர்
#11
** பில்லடை
பில்லடை சஃகுல்லி
** 1 பெயர்
#12
** தினைமா
நுவணை தினைமா
** 1 பெயர்
#13
** நெல் மா
இடி நெல்மாவே
** 1 பெயர்
#14
** தோசை
கஞ்சம் தோசை
** 1 பெயர்
#15
** பூரிகை
நொலையல் பூரிகை
** 1 பெயர்
#16
** மா
பிண்டியும் அருப்பமும் பிட்டமும் நுவணையும்
என்று இவை மா எனல் இடியும் ஆகும்
** 5 பெயர்கள்
#17
** அப்ப வருக்கம்
அபூபம் கஞ்சம் இலையடை மெல்லடை
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம்
மண்டிகை பொள்ளலும் அப்பவருக்கம்
** 10 பெயர்கள்
#18
** சிற்றுண்டி
அப்பம் பிட்டோடு அஃகுல்லி இடி எனச்
செப்பிய எல்லாம் சிற்றுண்டி ஆகும்
** 4 பெயர்கள்
#19
** கறி வர்க்கம்
கறிவர்க்கம் கூட்டமை
** 1 பெயர்
#20
** கறி
கறி நீடாணம்
** 1 பெயர்
#21
** பொரியல்
கருனை பொரியல்
** 1 பெயர்
#22
** புளிங்கறி
துவையே புளிங்கறி
** 1 பெயர்
#23
** குழம்பு
ஆணம் குழம்பு ஆம்
** 1 பெயர்
#24
** பச்சடி
அவித்துவையல் பச்சடி
** 1 பெயர்
#25
** வறையல்
வறையல் ஒச்சை
** 1 பெயர்
#26
** பிண்ணாக்கு
மலாவகம் பிண்ணாக்கே
** 1 பெயர்
#27
** சூட்டிறைச்சி
சூசியம் படித்திரம் சூட்டிறைச்சி ஆகும்
**2 பெயர்கள்
#28
** மீன் முள் அரிந்திடும் கருவி
அயிரி மீன் முள் அரிந்திடும் கருவி
** 1 பெயர்
#29
** பால்
பயசு கீரம் அமிழ்து பயம் பாலே
** 4 பெயர்கள்
#30
** தயிர்
ததி அளை பெருகு தயிர் எனலாகும்
** 3 பெயர்கள்
#31
** நெய்
ஆதிரம் கிருதம் ஆச்சியம் இழுது
நேயம் துப்பு நெய் ஆகும்மே
#32
** மற்றும் நெய்
அவி ஆகாரமும் அதன் பெயர் பெறுமே
** 8 பெயர்கள்
#33
** வெண்ணெய்
ஐயம் கவீனம் நவநீதம் என
வெண்ணெய் விதந்து விளம்பப்படுமே
** 3 பெயர்கள்
#34
** மோர்
மதிதம் தக்கிரம் காலசேயம் மோரே
#35
** மற்றும் மோர்
அருப்பம் அளை முசர் மச்சிகையும் ஆகும்
** 7 பெயர்கள்
#36
** எண்ணெய்
தைலம் எண்ணெய் நேயமும் ஆகும்
** 2 பெயர்கள்
#37
** தேன்
பிரசமும் மதுவும் தேன் எனப் பேசுவர்
** 2 பெயர்கள்
#38
** குழம்பு
பாகு குழம்பு
** 1 பெயர்
#39
** செறி குழம்பு
செச்சை செறிகுழம்பு
** 1 பெயர்
#40
** கண்ட சருக்கரை
கண்டம் பாளிதம் கண்டசருக்கரை
** 2 பெயர்கள்
#41
** மணற் பாகு
கட்டியும் விசயமும் கன்னலும் மணற்பாகே
** 3 பெயர்கள்
#42
** சருக்கரை
குளம் அக்காரம் குடம் இவை சருக்கரை
** 3 பெயர்கள்
#43
** மற்றும் ஒர் வகைச் சருக்கரை
உண்டே அயிர் புல்லகண்டம் ஒரு விகற்பம்
** 3 பெயர்கள்
#44
** கற்கண்டு
கன்னல் கட்டி கற்கண்டு ஆகும்
** 2 பெயர்கள் 44
#45
** கள்
பாலி பிழியே படு மது தணியல்
சாலி ஆலி ஆலை சாறு
மாதவம் சாதி சுரையே மாரி
மதுவம் வேரி தொப்பி தேறல்
நறவு பிரசம் ஆம்பல் இரேயம்
தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம்
கெளவை சுவிகை சுலோகி சுண்டை
வெறியே அம்மியம் வாருணம் பானம்
அளியே மேதை முண்டகம் பாரி
மட்டு காலி சாயனம் காதம்
பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம்
குந்தி சொல்விளம்பி அருப்பம் களியே
கல்லியம் சுமாலி ஞாளி தேமும்
நாற்றம் வடி நறை மதுகரம் கள்ளே
#46
** மற்றும் கள்
பழையும் மந்திரமும் பகரப்படுமே
** 61 பெயர்கள் 46
#47
** கோல் தேன்
பிரசம் கோல்தேன்
** 1பெயர்
#48
** தேன் கூடு
இறால் தேன் கூடே
** 1 பெயர் 48
#49
** பல பண்டம்
பண்ணியம் வளமே பட்டம் பண்டம்
பண்ணிகாரம் கூலம் பலபண்டப்பெயர்
** 6 பெயர்கள் 49
#50
** அரும் பண்டம்
தாரம் என் கிளவி அரும்பண்டம் ஆகும்
** 1 பெயர் 50
#51
** எச்சில்
மிச்சில் உச்சிட்டம் எச்சில் ஆகும்
** 2 பெயர்கள் 51
#52
** உணவு
உணாவே வல்சி உண்டி ஓதனம்
அசனம் பதமே இரை ஆகாரம்
உறையே ஊட்டம் உணவு எனலாகும்
** 10 பெயர்கள் 52
#53
** பேர் உண்டி
பிரப்பு என்று உரைப்பது பேருண்டி ஆகும்
** 1 பெயர் 53
#54
** உண்பன
துற்றி உண்பன
** 1 பெயர்
#55
** தின்பன
திற்றி தின்பன
** 1 பெயர்
#56
** பருகுவன
பானமும் துவையும் பருகுவன ஆகும்
** 2 பெயர்கள்
#57
** அடிசில்
அடப்படுவது அடிசில்
** 1 பெயர்
#58
** புழுங்கல்
புழுக்குவது புழுங்கல்
** 1 பெயர்
#59
** தித்திப்பு
இழுமும் மதுரமும் இனிமையும் தேமும்
அமுதும் சுவையும் தித்திப்பு ஆகும்
** 6 பெயர்கள்
#60
** கைப்பு
கைத்தல் தித்தம் கைப்பு ஆகும்மே
** 2 பெயர்கள்
#61
** புளிப்பு
ஆமிலம் ஆம்பிரம் ஆகும் புளிப்பே
** 2 பெயர்கள்
#62
** காழ்த்தல்
கரிலே காயம் கடுகம் காழ்த்தல்
** 3 பெயர்கள்
#63
** துவர்ப்பு
துவர்ப்பே துவரம்
** 1 பெயர்
#64
** உ வர்த்தல்
உவர்த்தல் உவரே
** 1 பெயர்
** 2 பூணின் வகை
#65
** ஆபரணம்
பூண் அணி அணிகலம் பூடணம் வள்ளி
ஆய் இழை கலமும் ஆபரணம்மே
** 7 பெயர்கள்
#66
** மணிமுடி
மகுடம் கிரீடம் மெளலி மணிமுடி
#67
** மற்றும் மணிமுடி
சூடிகை சுடிகை சேகரமும் சொல்லும்
** 6 பெயர்கள்
#68
** முடி உறுப்பு ஐந்து
கோடகம் கிம்புரி முகுடம் தாமம்
பதுமம் முடிஉறுப்பு இவை ஐந்து ஆகும்
** 5 பெயர்கள்
#69
** முடி மாலை
பாடம் முடிமாலை கோடி கரோடி
** 3 பெயர்கள்
#70
** பதக்கம்
கண்டிகை மதாணி ஆரமும் பதக்கம்
** 3 பெயர்கள்
#71
** தோள் அணி
அங்கதம் கேயூரம் தோள்அணி ஆகும்
** 2 பெயர்கள்
#72
** குண்டலம்
குண்டலம் மஞ்சிகை குழை எனலாகும்
** 2 பெயர்கள்
#73
** காதணி
வல்லிகை கொட்டை கடிப்பம் காதணி
** 3 பெயர்கள்
#74
** குணுக்கு
கடிப்பிணை குணுக்கு ஆம்
** 1 பெயர்
#75
** தோடு
தாடங்கம் தோடே
** 1 பெயர்
#76
** கங்கணம்
வளையும் தொடியும் கடகமும் கங்கணம்
** 3 பெயர்கள்
#77
** கைவளை
சரியும் தொடியும் சூடகமும் சங்கும்
குருகும் வண்டும் கன்றும் கைவளை
** 7 பெயர்கள்
#78
** பிள்ளைக் கைவளை
பிள்ளைக்கைவளை பிடிகம் ஆகும்
** 1 பெயர்
#79
** சுட்டி
சுட்டி சுடிகை
** 1 பெயர்
#80
** பட்டம்
பட்டம் ஓடை
** 1 பெயர்
#81
** பாத கிண்கிணி
பரிபுரம் நூபுரம் பாதகிண்கிணியே
** 2 பெயர்கள்
#82
** சதங்கை
பாத சதங்கை சிறுமணி கிண்கிணி
** 2 பெயர்கள்
#83
** சிலம்பு
அரி தளை ஞெகிழி நூபுரம் சிலம்பே
#84
** மற்றும் சிலம்பு
அரவமும் சிலம்பின் அபிதானம்மே
** 5 பெயர்கள்
#85
** கால் சரி கைச் சரி
பரியகம் கால்சரி கைச்சரியும் ஆகும்
** 1 பெயர்
#86
** காலணி
பாதசாலம் காலணி ஆகும்
** 1 பெயர்
#87
** பாடகம்
பாத கடகம் பாடகம் ஆகும்
** 1 பெயர்
#88
** ஒசை செய் தளை
ஞெகிழம் குடச்சூல் ஓசை செய் தளை
** 2 பெயர்கள்
#89
** ஆடவர் கொடை வீரத்தால் அணிவது
ஆடவர் கொடையால் வீரத்தால் அணி
பாதத்து அணியே கழல் அணி என்ப
** 1 பெயர்
#90
** மாதர் இடை அணி
காஞ்சி மேகலை கலாபம் பருமம்
விரிசிகை மாதர் இடைஅணி எனப்படும்
அவற்றுள்
காஞ்சி எண் கோவை எழு கோவை மேகலை
கலாபம் நானான்கு பருமம் பதினெட்டு
விரிசிகை எண் நான்கு கோவை என்ப
** 5 பெயர்கள்
#91
** சரி மணிக் கோவை
கலாபம் தோரை சரிமணிக்கோவை
** 2 பெயர்கள்
#92
** அரைப் பட்டிகை
அத்தும் மனாவும் அரைப்பட்டிகையே
** 2 பெயர்கள்
#93
** அரை ஞாண்
இரதனம் அரைஞாண்
** 1 பெயர்
#94
** செவி மலர்ப் பூ
கன்னாவதஞ்சம் செவிமலர்ப்பூவே
** 1 பெயர்
#95
** ஆபரணத் தொங்கல்
தொங்கல் உத்தி மதலிகை தூக்கம்
** 3 பெயர்கள்
#96
** மோதிரம்
வீகம் ஆழி இலச்சினை மோதிரம்
** 3 பெயர்கள்
#97
** மணிவடம்
சரமே ஆரம் தாமம் மணிவடம்
** 3 பெயர்கள்
#98
** பூணு நால்
உபவீதம் பூணுநூல் என மொழிப
** 1 பெயர்
#99
** நுதல் அணி
இலம்பகம் புல்லகம் சூட்டு நுதல்அணி
** 3 பெயர்கள்
#100
** தெய்வ உத்தி
திரு தெய்வஉத்தி
** 1 பெயர்
#101
** தலைக் கோலம்
பங்குசம் பிஞ்ஞகம் பயில் தலைக்கோலம்
** 2 பெயர்கள்
#102
** தலைப் பாளை
தொய்யகம் என்பது தலைப்பாளை ஆகும்
** 1 பெயர்
#103
** கிம்புரி
தாங்கி கிம்புரி கோளகை பூணே
** 3 பெயர்கள்
#104
** பெருஞ்சூட்டு
பெருஞ்சூட்டு என்பது சிவளிகைப் பெயரே
** 1 பெயர்
#105
** சரப்பணி
சரப்பணி வயிரச் சங்கிலி ஆகும்
** 1 பெயர்
#106
** பேரணி
மதாணி ஆரம் பெரும்பூண் பேரணி
** 3 பெயர்கள்
#107
** பூண் கடைப் புணர்வு
கடையும் கயிலும் பூண் கடைப் புணர்வே
** 2 பெயர்கள்
#108
** மாதர் அணி வடம்
ஆரம் கண்டிகை தாமம் கோவை
மாலை இழை மாதர் அணி வடப் பெயரே
** 6 பெயர்கள்
** 3 இரத்தின வகை
#109
** மாணிக்கம்
மாமணி செம்மணி மாணிக்கம் பதுமராகம்
என்பதும் அப் பெயர்க்கு உரித்தே
** 3 பெயர்கள்
#110
** வைடூரியம்
வாலவாயம் வயிடூரியம் எனல்
** 1 பெயர்
#111
** வயிரம்
வச்சிரம் வயிரம்
** 1 பெயர்
#112
** மரகதம்
மரகதம் அரிமணி பச்சைமணியே
** 2 பெயர்கள்
#113
** நீல மணி
நீலமணிப் பெயர் மணி என நிகழ்த்துப
** 1 பெயர்
#114
** பவளம்
துப்பு பிரவாளம் துவர் துகிர் பவளம்
#115
** மற்றும் பவளம்
வித்துருமம் அரத்தம் என்னவும் விளம்புப
** 6 பெயர்கள்
#116
** முத்து
நித்திலம் ஆரம் தரளமும் முத்தே
** 3 பெயர்கள்
#117
** கடவுள் மணி
நிதியும் நிதானமும் கடவுள்மணிப் பெயர்
** 2 பெயர்கள்
#118
** மணிப் பொதுப் பெயர்
மனவும் காசும் மணியின் பொதுப் பெயர்
** 2 பெயர்கள்
#119
** ஐவகைத் தெய்வ மணி
சிந்தாமணி சூளாமணி சிமந்தகமணி
சூடாமணி கெளத்துவமணி என்று
இனையவை தெய்வமணி ஐந்து என்ப
** 5 பெயர்கள்
#120
** சங்க நிதி
சங்கநிதி சங்கின் வடிவினது ஆகும்
#121
** பதும நிதி
பதுமநிதி பதும வடிவினது ஆகும்
#122
** சந்திர காந்தம்
சந்திரகாந்தமணி நீர் கால்வது
#123
** சூரிய காந்தம்
சூரியகாந்தமணி தீச் சுடர்வது
#124
** இருப்புக் காந்தம்
இருப்புக்காந்தம் சம்பகம் என்ப
** 1 பெயர் 124
#125
** பளிங்கு
படிகம் பருக்கை காழ் உபலம் பளிங்கே
** 4 பெயர்கள் 125
#126
** வளை மணி
மனவும் அக்கும் வால் வளைமணியே
** 2 பெயர்கள் 126
#127
** செங்கல்
தாது செங்கல் காரிகமும் ஆகும்
** 2 பெயர்கள் 127
#128
** சிந்தூரம்
திலகம் என்பது சிந்தூரம் ஆமே
** 1 பெயர் 128
#129
** சாதிலிங்கம்
இங்குலிகம் சாதிலிங்கம் குலிகம்
** 2 பெயர்கள் 129
#130
** அகன் மணிப் பொதுப் பெயர்
அரதனம் சலாகை அகன்மணி ஆகும்
** 2 பெயர்கள் 130
** 4 உலோக வகை
#131
** பொன்
ஆடகம் வேங்கை அரி செந்தாது
காணம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம்
காரம் தொடுக்கம் கனகம் சாமீகரம்
ஈழம் சுவணம் இரணியம் ஏமம்
ஆசை செங்கொல் ஆக்கம் கோவம்
பீதகம் மாழை ஈகை சாக்கு
பந்தம் தமனியம் அத்தம் பூரி
சந்திரம் வித்தம் நிதியே வெறுக்கை
இந்த வகைப் பெயர் எல்லாம் பொன்னே
#132
** மற்றும் பொன்
அனந்தமும் வசுவும் அருத்தமும் பொருளும்
தனமும் பண்டமும் திரவியமும் அதற்கே
** 39 பெயர்கள் 132
#133
** வெள்ளி
தாரம் இரசிதம் களதெளதம் வெள்ளி
** 3 பெயர்கள் 133
#134
** செம்பு
தாமிரம் எருவை வடுவே சுற்பம்
உதும்பரம் சீருள் சீருணம் செம்பே
** 7 பெயர்கள்
#135
** வெள்ளீயம்
சீருளும் வங்கமும் வெள்ளீயம் ஆகும்
** 2 பெயர்கள்
#136
** காரீயம்
நாகம் காரீயம்
** 1 பெயர்
#137
** தரா
மதுகம் தரா ஆம்
** 1 பெயர்
#138
** துத்த நாகம்
நாகம் துத்தநாகம்
** 1 பெயர்
#139
** பித்தளை
இரதி மாயாபுரி ஆரகூடம் பித்தளை
** 3 பெயர்கள்
#140
** வெண்கலம்
கஞ்சம் உறை வெண்கலம் ஆகும்மே
** 2 பெயர்கள்
#141
** இரும்பு
கருங்கொல் அகியம் கருந்தாது அயிலும்
இரும்பின் பெயரே அயமும் என்ப
** 5 பெயர்கள்
#142
** உலோகக் கட்டி
மாழை சுவணம் வங்காரம் தகணை
ஆடகம் உலோகக்கட்டி ஆகும்
** 5 பெயர்கள்
#143
** பஞ்சலோகம்
தமனியம் இரும்பு தாமிரம் ஈயம்
இரசிதம் பஞ்சலோகம் என்ப
** 5 பெயர்கள்
#144
** நவலோகங்கள்
இரதி மதுகம் நாகம் கஞ்சம் என்று
உரை செய் நாலுடன் நவலோகம்மே
** 9 பெயர்கள்
#145
** பண்டாரம்
கோசம் தண்டம் பண்டாரம் ஆகும்
** 2 பெயர்கள்
#146
** பொற் கலன் இருக்கை
பொற்கலன் இருக்கை பொற்பண்டாரம்
** 1 பெயர்
#147
** உண்கலம்
தாலம் தட்டம் தளிகை பாசனம் உண்கலம்
** 4 பெயர்கள் 147
#148
** வட்டில்
கரகமும் கோரமும் வள்ளமும் சகடமும்
சிகரமும் சாகையும் வட்டில் பெயரே
** 6 பெயர்கள் 148
#149
** சிறு வட்டில்
கிண்ணமும் வள்ளமும் சிறுவட்டில் பெயரே
#150
** மற்றும் சிறு வட்டில்
கிராணம் என்பதும் சிறுவட்டில் பெயரே
** 3 பெயர்கள் 150
#151
** நாழிகை வட்டில்
கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில்
** 2 பெயர்கள் 151
#152
** கண்ணாடி
புளகம் அத்தம் ஆடி படிமக்கலம்
ஒளிவட்டம் கஞ்சனை தருப்பணம் கண்ணாடி
#153
** மற்றும் கண்ணாடி
ஆதரிசனம் உருவம்காட்டி கஞ்சனமும் ஆகும்
** 10 பெயர்கள் 153
#154
** படிக்கம்
படியகம் படிக்கம்
** 1 பெயர் 154
#155
** கலசப் பானை
கஞ்சனை கலசப்பானை ஆகும்
** 1 பெயர்
#156
** துடுப்பு
கசிதம் துடுப்பு
** 1பெயர்
#157
** நெய்த் துடுப்பு
சுருவை நெய்த்துடுப்பே
** 1பெயர் 157
#158
** சட்டுவம்
தவ்வி சிலகம் தறுவி சட்டுவம்
** 3 பெயர்கள் 158
#159
** கைம் மணி
படலிகை வட்டம் பகரில் கைம்மணி
** 2 பெயர்கள் 159
#160
** பெரு மணி
பெருமணி கண்டைமணி யானைமணி என்ப
** 2 பெயர்கள் 160
#161
** எறி மணி
எறிமணி சேகண்டி
** 1 பெயர்
#162
** தூப மணி
தூபமணி கைம்மணி
** 1 பெயர் 162
#163
** தாளம்
கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம்
** 4 பெயர்கள் 163
#164
** கிண்கிணி மாலை
குரலே தார் இவை கிண்கிணி மாலை
** 2 பெயர்கள் 164
#165
** காளம்
காகளம் காளம்
** 1 பெயர் 165
#166
** சிறு சின்னம்
பீலி சிறுசின்னம்
** 1 பெயர் 166
#167
** கொம்பு
கோடும் இரலையும் வயிரும் கொம்பே
#168
** மற்றும் கொம்பு
ஆம்பலும் ஆம் என்று அறையப்படுமே
** 4 பெயர்கள் 168
#169
** பரணி
கோயே பரணி
** 1 பெயர் 169
#170
** கமண்டலம்
குண்டிகை காண்டகம் கரகம் கமண்டலம்
** 3 பெயர்கள் 170
#171
** கெண்டி
கடிப்பம் கோடிகம் கெண்டி ஆகும்
** 2 பெயர்கள்
** 5. ஆடை வகை
#172
** கூறை
ஆடை கோடி சூடி வட்டம்
காடகம் புட்டம் கலிங்கம் காழகம்
படம் தூசு புடைவை துகில் பரிவட்டம்
ஆவரணம் தானை உடை ஆசாரம்
அம்பரம் நீவி அறுவை உடுக்கை
சம்படம் பட்டி சாடி சேலை
மடியே சீரை வட்டுடை கோசிகம்
கலையே வாசனம் கூறை எனக் கருதுவார்
** 31 பெயர்கள் 172
#173
** சிறு துகில்
கந்தை விரிபம் கண்டை பிடியல்
வேதகம் புங்கம் பங்கம் கத்தியம்
தூரியம் சிற்றில் இவை சிறுதுகில் பெயர்
** 10 பெயர்கள் 173
#174
** நல் ஆடை
நாகம் பாரி நல் ஆடைப் பெயரே
** 2 பெயர்கள்
#175
** பட்டு வருக்கம்
பாளிதம் கோசிகம் பட்டு வருக்கம்
#176
** மற்றும் பட்டு வருக்கம்
காம்பும் நேத்திரமும் கருதுவர் அதற்கே
** 4 பெயர்கள்
#177
** பணித் தூசு
பாளி பணித்தூசு தேவாங்கு என்ப
** 3 பெயர்கள்
#178
** மயிர்ப் படாம்
மயிரகம் வயிரியம் மயிர்ப்படாம் ஆமே
** 2 பெயர்கள்
#179
** அத்தவாளம்
வடகம் உல்லாசம் அத்தவாளம்
** 2 பெயர்கள்
#180
** சித்திரப் படாம்
புத்தகம் சித்திரப்படாம் அது ஆகும்
** 1 பெயர்
#181
** உத்தரீயம்
உத்தராசங்கம் ஏகாசம் உத்தரீயம்
** 2 பெயர்கள்
#182
** கொய்சகம்
நீவி கொய்சகம்
** 1 பெயர்
#183
** போர்வை
மீக்கோள் போர்வை
** 1 பெயர்
#184
** உடுத்தல் இறுக்கல்
சுற்றல் உடுத்தல் இறுக்கல் தற்றல்
** 1, 1 பெயர்கள்
#185
** முன்தானை
முன்தானை தோகை
** 1 பெயர்
#186
** முகபடாம்
முகபடாம் சூழி
** 1 பெயர்
#187
** கம்பளிப் படாம்
கம்பலம் கம்பளம் கம்பளிப்படாமே
** 3 பெயர்கள்
#188
** செம்படாம்
சிம்புளி செம்படாம்
** 2 பெயர்கள்
#189
** முலைக் கச்சு
வம்பு வார் விசிகை பட்டிகை முலைக்கச்சே
** 4 பெயர்கள்
#190
** கச்சின் தலைப்பு
கஞ்சகம் சார்வாரம் கச்சின்தலையே
** 2 பெயர்கள்
#191
** மேல் கட்டி
விதானம் கம்பலம் படங்கு வானி மேல்கட்டி
** 4 பெயர்கள்
#192
** சட்டை
கஞ்சுகம் குப்பாயம் மெய்ப்பை காஞ்சுகி
அங்கி வாரணம் சட்டை ஆகும்
** 6 பெயர்கள்
#193
** இடு திரை
அவிடி கஞ்சிகை அவளிகை காண்டம்
எழினி கண்டம் பாரம் கழனி
படம் இடுதிரை மெய்ப் படாமும் ஆகும்
** 10 பெயர்கள்
#194
** மெத்தை
தவிசும் அணையும் தளிமமும் மெத்தை
#195
** மற்றும் மெத்தை
காகுளி என்பதும் கருதப்பெறுமே
** 2 பெயர்கள்
#196
** தலையணை
உபதானம் என்பது தலையணை ஆகும்
** 1 பெயர்
#197
** பெருங் கொடி
படமே வானி பதாகை கேதனம்
துவசம் சத்தி தோகை துகிலே படங்கு
விலோதனம் படாகை பெருங் கொடியே
#198
** மற்றும் கொடி
கிளத்தப்பெறுமே கேதுவும் இதன் பெயர்
** 12 பெயர்கள்
#199
** வீதியில் கட்டிய கொடி
விடங்கம் வீதியில் கட்டிய கொடியே
** 1 பெயர்
#200
** தேரில் கட்டும் கொடி
தேரிடைத் திகழ் கொடி கூவிரம் ஆகும்
** 1 பெயர்
#201
** சிறு கொடி
கத்திகை சிறு கொடி கட்டுரை ஆகும்
** 1 பெயர்
#202
** மரவுரி
வற்கலை இறைஞ்சி சீரை மரவுரி
** 3 பெயர்கள்
#203
** சும்மாடு
சுடுவு சுமடு சுமையடை சும்மாடு
** 3 பெயர்கள்
#204
** துணி
சிதரே சிதலை சீரை துணியே
** 3 பெயர்கள்
#205
** பரிவட்டம்
வத்திரம் ஆசாரம் வாசம் பரிவட்டம்
** 3 பெயர்கள்
** 6. பூச்சு வகை
#206
** சாந்தின் பொதுப் பெயர்
கலவைச் சேறும் காலேக வண்ணமும்
களபமும் விரையும் கலவையும் சாந்தே
** 5 பெயர்கள்
#207
** நால்வகைச் சாந்து
பீதம் கலவை வட்டிகை புலி என
நால்வகைச் சாந்தின் நாமம் ஆகும்
** 4 பெயர்கள்
#208
** கருப்பூரம்
பாளிதம் கருப்பூரம்
** 1 பெயர்
#209
** கத்தூரி
மான்மதம் கத்தூரி
** 1 பெயர்
#210
** புழுகு
வாசநெய் புழுகே
** 1 பெயர்
#211
** பூசுவன
அங்கராகம் பூசுவன ஆகும்
** 1 பெயர்
#212
** மயிர்ச் சாந்து
ஏலம் தகரம் காசறை மயிர்ச்சாந்தே
** 3 பெயர்கள்
#213
** செஞ்சாந்து
செஞ்சாந்து என்பது செங் குங்குமமே
#214
** மற்றும் செஞ்சாந்து
தளம் என்று உரைப்பதும் அதற்கே சாற்றும்
** 2 பெயர்கள்
#215
** வெண் சாந்து
தளம் என்று உரைப்பது வெண்சாந்து ஆகும்
** 1 பெயர்
#216
** சந்தனம்
சந்து சாந்தம் சந்தம் சந்தனம்
** 3 பெயர்கள் 216
#217
** கலவை
கலவை களபப் பெயரது ஆகும்
** 1 பெயர் 217
#218
** பனி நீர்
கந்தசாரம் இமசலம் பனிநீரே
** 2 பெயர்கள் 218
#219
** செறி குழம்பு
தேய்வையும் செச்சையும் செறி குழம்பு ஆகும்
** 2 பெயர்கள் 219
#220
** அப்புதல்
கொட்டல் அப்புதல்
** 1 பெயர் 220
#221
** பூசுதல்
புலர்த்தல் பூசுதல்
** 1 பெயர் 221
#222
** மகளிர் ஆகத்து எழுது கோலம்
மகளிர் கோலால் வன முலை ஆகத்துத்
தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும்
** 1 பெயர் 222
#223
** நுதல் குறி
புண்டரம் திலகம் நுதல் புனை குறியே
** 2 பெயர்கள் 223
#224
** அச்சுதம்
அச்சுதம் அறுகு அரிசி கூட்டியது ஆகும்
** 1 பெயர் 224
** 7. சூட்டு வகை
#225
** மாலை
சுக்கை தொடையல் தொங்கல் கத்திகை
அலங்கல் கண்ணி தெரியல் தாரே
அணியல் தாமம் ஒலியல் சூட்டு
கோதை மஞ்சரி மாலையின் கூற்றே
** 14 பெயர்கள் 225
#226
** நுதல் அணி மாலை
சூட்டே இலம்பகம் நுதல் அணி மாலை
** 2 பெயர்கள் 226
#227
** கோத்த மலர்
கோத்த மலரே மத்தக மாலை
** 1 பெயர் 227
#228
** பின்னிய மாலை
பிணையல் என்பது பின்னிய மாலை
** 1 பெயர்
#229
** கோத்த மாலை
சிகழிகை படலை வாசிகை தொடையல்
** 4 பெயர்கள் 229
#230
** வாகை மாலை
கல்வியில் கேள்வியில் கொடையில் படையில்
வெல்லுதர் அணிவது வாகை ஆகும்
** 4 பெயர்கள் 230
** 8. இயல் வகை
#231
** மூவகைத் தமிழ்
இயல் தமிழ் இசைத் தமிழ் நாடகத் தமிழ் என
வகைப்படச் சாற்றினர் மதி உணர்ந்தோரே
** 3 பெயர்கள்
#232
** எண் வகைக் கணம்
அறம் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின்
திறம்படச் செய்யுள் செப்புங்காலை
நீரின் கணமும் நிலத்தின் கணமும்
தேயுவின் கணமும் வாயுவின் கணமும்
அந்தர கணமும் இயமான கணமும்
சந்திர கணமும் சூரிய கணமும் என்று
எண்வகைக் கணமும் இயம்பல் வேண்டும்
** 8 பெயர்கள் 232
#233
** அவற்றுள் நீரின் கண வகை
நேர் முதல் ஆகி நிரையிணை பின் வரின்
நீரின்கணம் எனச் சீர் பெயர் பெறுமே
#234
** நிலத்தின் கண வகை
நிரை மூன்று உறு சீர் நிலக் கணம் ஆகும்
#235
** தேயுவின் கண வகை
நேர் நடு ஆகி நிரை இருபால் வரின்
தேயுவின் கணம் எனச் செப்புவர் புலவர்
#236
** மாருத கண வகை
இறுதி நிரையாய் இணை நேர் முன்னர்
வருவது மாருத கணம் என வைப்பார்
#237
** அந்தர கண வகை
முந்து நிரை இணை வந்து நேர் பின் வரின்
அந்தர கணம் என்று அறையல் வேண்டும்
#238
** இயமானன் கண வகை
நேர் மூன்று ஆகில் சீர் இயமானன்
#239
** மதியின் கண வகை
முதல் நிரை ஆகி இணை நேர் பின் வரின்
மதியின் கணம் என வகுத்தனர் புலவர்
#240
** எரி கதிர்க் கண வகை
நிரை நடு ஆகி நேர் இருபால் வரின்
எரி கதிர்க் கணம் என்று இயம்பினர் புலவர்
#241
** அவ் வெட்டினுள் நற்கண வகை
நிலனும் நீரும் மதியும் இயமானனும்
நல மிக முன் வரின் நன் கணம் ஆகும்
#242
** தீக் கண வகை
ஏனைய நான்கும் ஊனம் அது ஆகும்
#243
** நன் கண தீக் கண வரலாற்று வகை
** வெண்பா
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின்
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கிக் கொள் வாய்த்த
கனிச் சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும்
துணித்த கணம் எட்டினுக்கும் நூல்
#244
** எழுத்துப் பொருத்த வகை
சொல்லிய வகையால் எழுத்துப் பொருத்தம்
வல்லெழுத்து அல்லது மெல்லெழுத்து ஆகா
யாவகைச் செய்யுட்கும் இன்பமொடு புணர்ந்த
மூ வகைச் சீரே முதல் சீர் ஆகும்
#245
** தானப் பொருத்த வகை
** வெண்பா
தன் எழுத்துப் பாலன் குமரன் இரண்டு ஆகும்
மன்னவற்கு மூன்று ஆம் வகுக்குங்கால் துன்னிய
நஞ்சு ஆர் விருத்தம் ஆம் நான்கு ஆகில் ஐந்து ஆகில்
எஞ்சா மரணத்து இயல்பு
#246
** நல் தானம் தீத் தானம்
தலைவன் எழுத்தே முதலாய்ச் சாற்றின்
நலம் மிகும் மூன்றும் மற்று இரண்டும் ஊனம்
#247
** நாள் பொருத்த வகை
** வெண்பா
தன் நாட்குப் பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த
நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய்
எட்டினோடு ஒன்பானாம் இத்தனையும் என்பரே
ஒட்டாரை ஒட்டுவிக்கும் நாள்
#248
** இதுவும் அது
நீர்க் கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள்
பார்க்கில் பரணி படிக் கணத்துக்கு ஏற்கும் நாள்
கேட்டை மதியின் கண நாள் மகம் இங்குக்
கூட்டிய நாள் என்றே கூறு
#249
** இதுவும் அது
காற்றின் கண நாள் கடுஞ் சோதி கார்த்திகையாம்
ஏற்ற எரிக் கணத்துக்கு எண்ணுங்கால் தோற்று இரவி
பொங்கு கண நாள் புனர்பூசம் ஆகாயம்
தங்கு கண நாள் ஓணம் தான்
#250
** நற் கணத்தின் பயன்
நிலம் மதி நீர் இயமானன் எனும் நான்கும்
பெருக்கம் செய்தலில் வாழ்நாள் பயத்தலில்
தருக்கிய சீர்த்திதன்னைத் தருதலில்
மிகு திரு ஆக்கலில் வேந்தர்க்கும் பிறர்க்கும்
தகும் எனக் கழறினும் தகா மற்று அச் சீர்க்கு
உரியவர் நாளொடும் பொருந்தாக் காலே
#251
** தீக் கணத்தின் பயன்
அந்தரம் வாயு அளவுஇல் ஆதித்தன்
செந்தழல் என்னும் தீக் கணம் சேரின்
தேசம் போக்குதல் செல்வத்தைப் பிரித்தல்
சூனியம் ஆக்கல் சூழ் நோய் உறுத்தல்
ஊனம் பயக்கும் என்று உரைத்தனர் ஆய்ந்து
தெள்ளிதின் உணர்ந்த செந்தமிழ்க் கவிஞர்
#252
** உண்டிப் பொருத்த வகை
ஆதி அமுது எழுத்து ஆகிய அச் சீர்க்கு
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும்
பாடப்படூஉம் இயல்பு அன்றியும் இறைவன்
பிறந்த நாளினும் பெயர் நாள் தன்னினும்
இரண்டின் ஒன்றில் பொருந்தக் கூறிப்
பாதம் முதலே எடுப்பின் மற்று அவற்கு
ஏறு திரு ஆக்கும் என்மனார் புலவர்
#253
** புள் வகை
** வெண்பா
அகரமே வல்லூறு ஆம் ஆந்தை இகரம்
உகரமே காக்கை என ஓதும் எகரமே
வண்டானக் கோழி வளை வாய் மயில் என்னக்
கொண்டார் ஒகரக் குறி
#254
** கன்னல் வகை
ஐவகை எழுத்தில் அகரம் உதிப்ப
இகரம்தானே இன்புறும் என்ப
உகரம் அரசு ஆம் எகரம் துயிலும்
ஒகரம் தானே உயிர்ப்பு இன்று ஒடுங்கும்
#255
அவ்வவர் பெயர் முதல் எழுத்து வந்து உதிப்ப
அவ்வவர் பாடின் ஆக்கம் மிகுமே
#256
** பால் வகை
எழுத்து எனப்படுபவை ஆண் பெண் அலியே
** 3 பெயர்கள் 256
#257
** அவற்றுள்-ஆண் எழுத்து
உயிர் பன்னிரண்டும் ஆண் எனப்படுமே
#258
** பெண் எழுத்து
உயிர் மெய் எல்லாம் பெண் எழுத்து என்ப
#259
** அலி எழுத்து
ஒற்று எழுத்து எல்லாம் அலி எனப்படுமே
#260
** அவ் வெழுத்துக்களுள்
** முதல் சீரின் முதல் எழுத்து இன்னது எனல்
எழுத்தின் கிழத்தி நாமகள் ஆதலின்
பெண் எழுத்து அல்லது முன் வைத்து உரையார்
#261
** மங்கலச் சொல்
திருவே களிறே தேர் பரி கடலே
பொலிவே மணியே பூ புகழ் சீர் எனல்
வருத்தம் நீங்கிய மங்கலச்சொல்லே
** 10 பெயர்கள்
#262
** வேதியர்க்கு உரிய பா வகை
பிள்ளைப்பாட்டு வாயின் முன்னம்
வெள்ளைப்பாட்டு வேதியர்க்கு உரித்தே
#263
** அரசர்க்கு உரிய பாவகை
நேரிசை அகவலும் கொச்சகக்கலியும்
ஆராயுங்கால் அரசர்க்கு உரித்தே
#264
** வணிகர்க்கு உரிய பாவகை
வஞ்சியும் இன்னிசை வெள்ளையும் வணிகர்க்கு
எஞ்சல் இல்லா இயல்பு உடைத்து ஆகும்
#265
** சூத்திரர்க்கு உரிய பா வகை
நெடுவெண்பாட்டும் நேரிசை அகவலும்
கடிய சூத்திரர்க்குக் கட்டுரைத்தனரே
#266
** காப்புக்கு உரிய கடவுள்
காப்பு முதல் இசைக்கும் கடவுள்தானே
பூக் கமழ் தண் துழாய் புனைந்தவனாம் அவன்
காவல் கிழமையன் ஆதலானும்
பூவின் கிழத்தியைப் பொருந்துதலானும்
முடியும் கடகமும் மொய் பூந் தாரும்
குழையும் நூலும் குரு மணிப் பூணும்
அணியும் செம்மல் ஆதலானும்
மன் உறு பிரமனைத் தருதலானும்
முன்னுற மொழிதற்கு உரியன் ஆம் எனப்
பன்னி உரைத்தனர் பாவலர்தாமே
#267
** ஆண் பால் பிள்ளைப் பாட்டின் வகை
பிள்ளைப்பாட்டுத் தெள்ளிதின் கிளப்பின்
திங்கள் இரண்டில் தெய்வம் காக்கென
இன் தமிழ்ப் புலவர் இயம்பிய காப்பும்
ஐந்தாம் திங்களில் செங்கீரை ஆடலும்
ஆறாம் திங்களில் கூறுதல் கற்றலோடு
ஏழாம் திங்களில் இன்னமுது ஊட்டலும்
எட்டாம் திங்களில் இயல் தாலாட்டலும்
ஒன்பதாம் திங்களில் உயர் சப்பாணியும்
பத்தினோடு ஒன்றின் முத்தம் கூறலும்
ஆண்டு வரையின் ஈண்டு வருகென்றலும்
மதி ஈர் ஒன்பதின் மதியை அழைத்தலும்
இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும்
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும்
நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும்
பத்தில் பூண் அணி பன்னீர் ஆண்டினில்
கச்சொடு சுரிகை காமுறப் புனைதல் என்று
இன்னவை பிறவும் ஆகும் இவற்றுள்
முன்னர் மொழிந்த ஒழிந்தவற்றோடும்
பெற்ற ஆண்பால் பிள்ளைப் பாட்டாம்
முன்னுறக் கிளந்த ஆண்டின் நாள் வரை
இசைத்த பாடல் இருபாற்கும் உரித்தே
#268
** பெண் பால் பிள்ளைப் பாட்டு வகை
பேணும் சிறப்பில் பெண்மகவு ஆயின்
மூன்றாம் ஆண்டில் குழமணம் மொழிதலும்
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும்
அம்மனை கழங்கு பந்து அடித்து ஆடலும்
சிறுசோறு அடுதலும் சிற்றில் இழைத்தலும்
ஊசல் ஆடலும் என்று இவை உள்ளிட்டுப்
பேசிய பெண்பால் பிள்ளைப்பாட்டே
#269
** கவி அரங்கேற்றிய
** பாட்டுடைத் தலைவன் செய்யும் வழிபாடு
உருவகம் உவமை வழிநிலை மடக்கே
விரி சுடர் விளக்கு என விரவி வருநவும்
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே
நோக்கே உட்கோள் தொகை மொழி மிகை மொழி
வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு எனப்
பாற்படக் கிடந்த பகுதியின் வருநவும்
சிறப்பு மொழி சிலேடை மறுத்து மொழி நிலையே
உடனிலைக் கூட்டம் உவமான உருவகம்
நுவலா நுவற்சி தலைக் கட்டிய மொழி
நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என
எய்தும் இருபத்து எட்டு அலங்காரத்தாலும்
எழுத்து சொல் பொருள் யாப்பு நெறியாலும்
நவை அறச் செய்யுள் செய்யும் பாவலன்
அவையும் அரசும் அறியப் பாடுவோன்
முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன்
உத்தம சாதியில் தப்பாது உயர்ந்தோன்
உறுப்பில் குறையாது ஒழுக்கமொடு புணர்ந்தோன்
முப்பது கழிந்து அங்கு எழுபதுக்கு உளவாம்
பெற்றியின் அமைந்த பிராயம் அது உடையோன்
பாடும் கவிதை நாடுறக் கொள்ளின்
தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து
வார் முரசு இயம்ப மறையோர் வாழ்த்த
விழுத் தகு கோலத்து விரித்த பூங் கலிங்கத்துப்
பழிப்புஇல் பாலிகைப் பல் உணா முளையின்
விளக்கு நிறை குடத்து விதானப் பந்தரில்
துளக்கம்இல் பல்வகைத் தூண் நிரைப் பொதியில்
பல் களை நெருக்கில் பாவையர் பல்லாண்டின்
மல்கு வனப்பு அமைந்த வளமனை நாப்பண்
வெண் துகில் உடுத்து வெண் பூச் சூடி
தன் தவிசு இருத்தி தான் அயல் இருந்து
மங்கலச் செய்யுள் மகிழ்ந்து கேட்டு
பொன்னும் ஆடையும் பூணும் கடகமும்
இன்னவை பிறவும் கொடுத்து ஏழ் அடி நிலம்
புரவலன் பின் சென்று ஒழிகென நிற்றல்
பூ அலர் நறுந் தார்ப் புரவலன் கடனே
#270
** பரிசில் பெறா வகை
பாட்டுடைத் தலைவன் பரிசில் கொடானேல்
மீட்டு ஒரு பேரின் விரைந்து அதில் சேர்த்தி
ஊரும் பேரும் ஒருங்கே பறித்து
சீரும் தளையும் செவ்வதின் நாட்டின்
இங்கு இவன் திரு இழந்து இடர்ப்பட திருவும்
அங்கு அவற்கு ஆகும் ஆகாது இவற்கே
#271
** மற்றும் பாவலன் பரிசு பெறாக்கால்
** செய்யும் வகை
பரிசில் ஈயாப் பாவிதன் பனுவலைத்
தெரிதர எழுதி செம் பூச் சூடி
தன் மனைப் புறத்தினும் சாமுண்டி முன்றிலும்
பன்னகம் வாழும் பழம்பதிதன்னினும்
மயானத்து இடத்தினும் மறுகுதன்னினும்
தியானத்து இருந்து செந் தீக் கொளுத்த
ஈர் அறு திங்களின் இறுதியாம் என்பது
ஆதிப் புலவன் அறைந்த மொழியே
#272
** இதுவும் அது
பரிசில் பெறாது பாடிய புலவன்
தெருமரல் உள்ளமொடு கலங்கித் தீங்கு உறில்
பாட்டுடைத் தலைவன் அன்றி பாட்டுக்
கேட்டு இனிது இருந்த கிளைஞரும் கெடுவர்
** 9 இசை வகை
#273
** காமரப் பாட்டு
கானம் கொளையே வரி கந்தருவம்
கீதம் இராகம் கேயம் பாணி
நாதம் இசை பண் காமரப்பாட்டே
** 11 பெயர்கள்
#274
** நால் வகைப் பண்
பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என
நால் வகை யாழாம் நால் பெரும் பண்ணே
** 4 பெயர்கள் 274
#275
** பாலை யாழ்த் திறம்
அராகம் நேர்திறம் உறுப்பு குறுங்கலி
ஆசான் ஐந்தும் பாலையாழ்த் திறனே
** 5 பெயர்கள் 275
#276
** குறிஞ்சி யாழ்த் திறன்
நைவளம் காந்தாரம் படுமலை மருளொடு
அயிர்ப்பு பஞ்சுரம் அரற்று செந்திறம்
இவ்வகை எட்டும் குறிஞ்சியாழ்த் திறனே
** 8 பெயர்கள் 276
#277
** மருத யாழ்த் திறன்
நவிர் வடுகு வஞ்சி செய்திறம் நான்கும்
மருதயாழ்க்கு வரும் திறன் ஆகும்
** 4 பெயர்கள் 277
#278
** செவ்வழி யாழ்த் திறன்
நேர்திறம் பெயர்திறம் சாதாரி முல்லை என
நாலும் செவ்வழி நல் யாழ்த் திறனே
** 4 பெயர்கள் 278
#279
** பெரும் பண்ணின் வகை
ஈர் இரு பண்ணும் எழு மூன்று திறனும்
ஆகின்றன இவை இவற்றுள் பாலையாழ்
செந்து மண்டலி யாழ் பவுரி மருதயாழ்
தேவதாளி நிருபதுங்கராகம்
நாகராகம் இவற்றுள் குறிஞ்சியாழ்
ஆசாரி சாயவேளர்கொல்லி
கின்னராகம் செவ்வழி மெளசாளி சீராகம்
சந்தி இவை பதினாறும் பெரும்பண்
** 16 பெயர்கள் 279
#280
** பாலை யாழ்த் திறன் வகை
தக்கராகம் அந்தாளிபாடை
அந்தி மன்றல் நேர்திறம் வராடி
பெரியவராடி சாயரி பஞ்சமம்
திராடம் அழுங்கு தனாசி சோமராகம்
மேகராகம் துக்கராகம்
கொல்லிவராடி காந்தாரம் சிகண்டி
தேசாக்கிரி சுருதிகாந்தாரம் இவை
இருபதும் பாலை யாழ்த்திறம் என்ப
** 20 பெயர்கள்
#281
** குறிஞ்சி யாழ்த் திறன் வகை
நட்டபாடை அந்தாளி மலகரி
விபஞ்சு காந்தாரம் செருந்தி கெளடி
உதயகிரி பஞ்சுரம் பழம்பஞ்சுரம்
மேகராகக்குறிஞ்சி கேதாளி
குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராகம்
நாகம் மருள் பழந்தக்கராகம்
திவ்வியவராடி முதிர்ந்தஇந்தளம்
அனுத்திரபஞ்சமம் தமிழ்க்குச்சரி அருட்புரி
நாராயணி நட்டராகம்
இராமக்கிரி வியாழக்குறிஞ்சி
பஞ்சமம் தக்கணாதி சாவகக்குறிஞ்சி
ஆனந்தை என இவை முப்பத்திரண்டும்
குறிஞ்சியாழ்த்திறமாகக் கூறுவர்
** 32 பெயர்கள் 281
#282
** மருத யாழ்த் திறன் வகை
தக்கேசி கொல்லி ஆரியகுச்சரி
நாகதொனி சாதாளி இந்தளம் தமிழ்வேளர்
கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி
தந்தளபஞ்சமம் மாதுங்கராகம்
கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம்
என இவை பதினாறும் மருதயாழ்த்திறனே
** 16 பெயர்கள்
#283
** செவ்வழி யாழ்த் திறன் வகை
குறண்டி ஆரியவேளர்கொல்லி
தனுக்காஞ்சி இயந்தை யாழ்பதங்காளி
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர்
பாணி நாட்டம் தாணு முல்லை
சாதாரி பைரவம் காஞ்சு என இவை
பதினாறும் செவ்வழியாழ்த்திறம் என்ப
** 16 பெயர்கள்
#284
** மற்றும் பெரும் பண்ணின் திறத்தின் பெயர்
தாரப்பண்திறம் பையுள்காஞ்சி
படுமலை இவை நூற்றுமூன்று திறத்தன
** 103 பெயர்கள்
#285
** நேர்திறம்
துக்கராகம் நேர்திறம் ஆகும்
** 1 பெயர்
#286
** காந்தார பஞ்சமம்
உறழ்ப்பு காந்தாரபஞ்சமம் ஆகும்
** 1 பெயர்
#287
** சோமராகம்
குறுங்கலி என்பது சோமராகம்
** 1 பெயர்
#288
** காந்தாரம்
சாரல்திறம் எனின் அது காந்தாரம்
** 1 பெயர்
#289
** நட்ட பாடை
நைவளம் என்பது நட்டபாடை
** 1 பெயர்
#290
** பழம் பஞ்சுரம்
பஞ்சுரம் பழம்பஞ்சுரம் ஆகும்மே
** 1 பெயர்
#291
** கவ்வாணம்
படுமலை என்பது பகரில் கவ்வாணம்
** 1 பெயர்
#292
** அனுத்திர பஞ்சமம்
அயிர்ப்பு அனுத்திரபஞ்சமம் ஆகும்
** 1 பெயர்
#293
** குறிஞ்சி
அரற்று குறிஞ்சி
** 1 பெயர்
#294
** செந்துருதி
செந்திறம் செந்துருதி
** 1 பெயர்
#295
** தக்கேசி
நவிர் தக்கேசி
** 1 பெயர்
#296
** வடுகு
இந்தளம் வடுகு எனல்
** 1 பெயர்
#297
** பாக்கழி
வஞ்சி பாக்கழி
** 1 பெயர்
#298
** சிகண்டி
செய்திறம் சிகண்டி
** 1 பெயர்
#299
** சாதாரி நேர்திறம்
முல்லை சாதாரி புறநீர்மை நேர்திறம்
என ஆங்கு இசைப்பர் இசை வல்லுநரே
** 1, 1 பெயர்கள்
#300
** நால்வகை யாழ்
பேரியாழும் சகோடயாழும்
மகரயாழும் செங்கோட்டுயாழும் என
நால் வகை யாழின் நாமம் ஆகும்
** 4 பெயர்கள்
#301
** ஏழ் இசை
குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்று இவை
ஏழும் யாழின் இசை கெழு நரம்பே
** 7 பெயர்கள்
#302
** அவற்றுள் செம்பாலை வகை
குரல் குரல் ஆகில் செம்பாலை என்ப
#303
** படுமலைப் பாலை வகை
துத்தம் குரல் ஆகில் படுமலைப்பாலை
#304
** செவ்வழிப் பாலை வகை
கைக்கிளை குரலேல் செவ்வழிப்பாலை
#305
** அரும் பாலை வகை
உழை குரல் ஆகில் அரும்பாலை என்ப
#306
** கொடிப் பாலை வகை
இளி குரல் ஆகில் கொடிப்பாலை என்ப
#307
** விளரிப் பாலை
விளரி குரல் ஆகின் விளரிப்பாலை
#308
** மேற் செம்பாலையின் வகை
தாரம் குரலேல் மேற்செம்பாலை
#309
** ஏழ் பாலைகளுள் இதனின் இது வலிது எனல்
ஆயவை ஏழும் பாலை அவற்றுள்
செம்பாலைக்குப் படுமலைப்பாலை
படுமலைப்பாலைக்குச் செவ்வழிப்பாலை
செவ்வழிப்பாலைக்கு அரும்பாலை ஆகும்
அரும்பாலைக்குக் கொடிப்பாலை வலிதே
கொடிப்பாலைக்கு விளரிப்பாலை
விளரிப்பாலைக்கு மேற்செம்பாலை
வலிது என்று உரைத்தனர் வான் தமிழ்ப் புலவர்
#310
** ஏழ் இசை தம்மின் பிறக்கும் வகை
தாரத்துள் உழையும் உழையுள் குரலும்
குரலுள் இளியும் இளியுள் துத்தமும்
துத்தத்துள் விளரியும் விளரியுள் கைக்கிளையும்
தம்மில் பிறக்கும் தகுதிய என்ப
#311
** இவற்றின் பிறப்பிடம்
குரல் அது மிடற்றில் துத்தம் நாவினில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப
#312
** இவற்றின் மாத்திரைகள்
நான்கும் நாலும் மூன்றும் இரண்டும்
நான்கும் மூன்றும் இரண்டும் மாத்திரை
குரல் முதலாகக் கூறும் என்ப
#313
** ஏழ் இசை ஒசை
வேண்டிய வண்டும் மாண் தகு கிளியும்
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்று இவை ஏழ் இசை ஓசை
** 7 பெயர்கள்
#314
** இவற்றின் எழுத்து
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று
ஏழும் ஏழ் இசைக்கு எய்தும் அக்கரங்கள்
** 7 பெயர்கள் 314
#315
** ஏழ் இசைக்கு உரிய மணங்கள்
மெளவல் முல்லை செவ் இணர்க் கடம்பு
வஞ்சி நெய்தல் வனசம் புன்னை
எஞ்சல் இல்லா ஏழ் இசை மணமே
** 7 பெயர்கள் 315
#316
** இவைகளின் சுவை
பாலும் தேனும் கிழானும் நெய்யும்
ஏலமும் வாழையும் மாதுளங்கனியும்
ஆகும் ஏழ்இசைக்கு அமைந்த நன் சுவையே
** 7 பெயர்கள் 316
#317
** இவைகளுக்கு இறைவர்
விசுவாமித்திரன் இயமன் அங்கி
திங்கள் வெய்யோன் கெளதமன் காசிபன்
என்று இவர் ஏழ்இசைக்கு இறைவர் என்ப
** 7 பெயர்கள்
#318
** மந்த இசை
மந்தரம் காகுளி மந்தஇசையே
** 2 பெயர்கள்
#319
** சமன் இசை
மதுரம் துத்தம் மத்திமம் சமன் இசை
** 3 பெயர்கள்
#320
** வல் இசை
தாரமும் உச்சமும் வல்இசை ஆகும்
** 2 பெயர்கள்
#321
** இசை விகற்பம்
ஏனை ஓர் இசை விகற்பம் என்ப
** 1 பெயர்
#322
** குரற்கு உரிய திறம்
குரற்கு உரிய திறம் ஆசான் திறமே
** 1 பெயர்
#323
** இரு துறையின் வகை
இரு துறை செந்துறை வெண்துறை என்ப
** 2 பெயர்கள்
#324
** பண் என்பது
நிறைந்த நரம்பு நிகழும் பண் எனல்
** 1 பெயர்
#325
** திறம் என்பது
குறைந்த நரம்பு திறம் எனக் கொள்க
** 1 பெயர்
#326
** யாழ் எழும் இன்னிசை
எழாலே யாழ் எழும் இன்னிசை என்ப
** 1 பெயர்
#327
** இசைக் குழல்
வாரி வங்கியம் மற்று இவை இசைக்குழல்
** 2 பெயர்கள்
#328
** வீணை
வீணை கின்னரம் தண்டும் ஆகும்
** 2 பெயர்கள்
#329
** யாழ்
தந்தி வீணை கின்னரம் கோட்டம்
கோடவதி விவஞ்சி யாழ்ப் பெயர் கூறும்
#330
** மற்றும் யாழ்
அறி கலமும் கருவியும் அப் பெயர்க்கு உரித்தே
** 8 பெயர்கள்
#331
** யாழ் வலிக் கட்டு
வலிக்கட்டு திவவே
** 1 பெயர்
#332
** முறுக்கு ஆணி
முறுக்கு ஆணி மாடகம்
** 1 பெயர்
#333
** நரம்பு
கோலே தந்திரி குரல் இவை நரம்பே
** 3 பெயர்கள்
#334
** ஆதி யாழ்
ஆயிரம் நரம்பிற்று ஆதியாழ் ஆகும்
#335
** உள்ளோசை
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும்
விழைவும் நுணுக்கமும் உள்ளோசை என்ப
** 6 பெயர்கள்
#336
** பல்லியம் தழுவு பாடல்
சங்கீதம் பல்லியம் தழுவு பாடல்
** 1 பெயர்
#337
** ஆடற்கு ஏற்கும் பாட்டு
செந்துறைப்பாட்டே ஆடற்கு ஏற்பது
** 1 பெயர்
#338
** பாடற்கு ஏற்கும் பாட்டு
வெண்துறைப்பாட்டே பாடற்கு ஏற்பது
** 1 பெயர்
#339
** அக மார்க்கம்
அருமையில் பாடல் அமார்க்கம் ஆகும்
** 1 பெயர்
#340
** யாழ் நரம்பு ஒசை
கலித்தல் சும்மை கம்பலை அழுங்கல்
சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல்
இமிழ்தல் விம்மல் இரட்டல் ஏங்கல்
கனைத்தல் தழங்கல் கறங்கல் அரற்றல்
இசைத்தல் என்று இவை யாழ் நரம்பு ஓசை
** 17 பெயர்கள்
#341
** ஒலி
ஓதை நாதம் கம்பலை சும்மை
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம்
ஓகை கர்ச்சனை ஒலி ஆகும்மே
** 10 பெயர்கள்
#342
** திரட்டோசை
அலறல் கூப்பிடல் தெழித்தல் உரப்பல்
பிளிறல் என்று இவை திரட்டோசை ஆகும்
** 5 பெயர்கள்
** 10. நாடக வகை
#343
** கூத்து
நடமே நாடகம் நடனம் நட்டம்
படிதம் மண்டிலம் தாண்டவம் பரதம்
நிலையம் நிருத்தம் ஆடல் தூக்கு
ஆலுதல் துணங்கை அவிநயம் இலையம்
பாணி குரவை கூத்து எனப் பகர்வர்
** 18 பெயர்கள்
#344
** கூத்தின் விகற்பம்
கரணம் உப்பிதம் மலைப்பு புரியம்
பிரமரி வீரட்டானம் குனிப்பு
உள்ளானம் கடகம் இலையம் என்ப
ஒள்ளிய கூத்தின் விகற்பம் ஆகும்
** 10 பெயர்கள்
#345
** சிரமம் செய்தல்
பருமித்தல் சிரமம்செய்தல் என்ப
** 1 பெயர்
#346
** சிவன் ஆடல்
பாண்டரங்கம் காபாலம் கொடுகொட்டி
ஆண்ட சிவனது ஆடல் ஆகும்
** 3 பெயர்கள்
#347
** பதினோர் உருத்திரர் ஆடல்
கொட்டி குரவை குடம் குடை வெறியே
மல்லு பேடு பாவை கடையம் பாண்டரங்கம்
மரக்கால் ஈசர் பதினோர் ஆடல்
** 11 பெயர்கள்
#348
** மாயோன் ஆடல்
அல்லியம் குடமாடல் மல்லே மரக்கால்
அல் ஒளி மாயோன் ஆடல் ஆகும்
** 4 பெயர்கள்
#349
** திருமகள் ஆடல்
பாவை என்பது திருமகள் ஆடல்
** 1 பெயர்
#350
** முருகன் ஆடல்
கொட்டியும் குடையும் குமரன் ஆடல்
ஒட்டிய துடியும் உரித்து ஆகும்மே
** 3 பெயர்கள்
#351
** காமன் ஆடல்
பேடு ஆடல் காமனது ஆடல் ஆகும்
** 1 பெயர்
#352
** அயிராணி ஆடல்
அயிராணி ஆடல் பெயர் கடையம் ஆகும்
** 1 பெயர்
#353
** துர்க்கை ஆடல்
துர்க்கை ஆடல் மரக்கால் என்ப
** 1 பெயர்
#354
** சத்த மாதர் ஆடல்
எழு வகை நங்கைமார் ஆடலும் துடியே
** 1 பெயர்
#355
** கை கோத்து ஆடல்
குரவைக் கூத்தே கைகோத்துஆடல்
** 1 பெயர்
#356
** முடக்கிய இருகை பழுப் புடை ஒற்றி ஆடல்
முடக்கிய இரு கை பழுப் புடை ஒற்றித்
தொடக்கிய நடையது துணங்கை ஆகும்
** 1 பெயர்
#357
** வேலன் ஆடல்
அணங்கும் வெறியும் கழங்கும் வேலன் ஆடல்
** 3 பெயர்கள்
#358
** ஒத்து அறுத்தல்
வட்டித்தல் தட்டல் வட்டணை ஒத்துஅறுத்தல்
** 3 பெயர்கள்
#359
** கை குவித்துக் கொட்டல்
கொம்மைகொட்டல் கை குவித்துக் கொட்டல்
** 1 பெயர்
#360
** ஆர்த்து வாய் கொட்டல்
ஆவலம்கொட்டல் ஆர்த்து வாய் கொட்டல்
** 1 பெயர்
#361
** குந்தி நிற்றல்
குந்திய கால் நிலை குஞ்சித்தல் ஆகும்
** 1 பெயர்
#362
** கை கூப்பி மெய் கோட்டி நிற்றல்
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல்
** 1 பெயர்
#363
** கூத்தாடல்
அகவல் தாண்டல் ஆடுதல் நடித்தல்
அசைதல் பெயர்தல் அடுத்தல் கூத்து ஆடல்
#364
** மற்றும் கூத்து ஆடல்
மாறல் என்பதும் கூறல் ஆகும்
** 8 பெயர்கள்
#365
** தாள ஒத்து
சதியும் சீரும் தாளஒத்தின் பெயர்
** 2 பெயர்கள்
#366
** நாடகம்
அதினின் நடிக்கும் நடம் நாடகம் ஆகும்
** 1 பெயர்
** 11 மண்டில வகை
#367
** வில் தொடுத்து அம்பினை எய்வார்க்கு உரிய
** நால்வகை நிலை
நவை அறு பைசாசநிலையும் மண்டிலமும்
ஆலீடநிலையும் பிரத்தியாலீடமும்
எனக் கொளும் நிலையும் ஒரு நால் வகையே
** 4 பெயர்கள் 367
#368
** அவற்றுள் பைசாச நிலை வகை
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும்
பரிசாய நிலையது பைசாசநிலையே
#369
** மண்டில நிலை வகை
இரு கால் மண்டிலித்திடுதல் மண்டிலநிலை
#370
** ஆலீட நிலை வகை
வலக்கால் மண்டிலித்து இடக்கால் முந்துறில்
அதன் பெயர் ஆலீடநிலை அது ஆகும்
#371
** பிரத்தியாலீட நிலை
வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டிலித்திடல்
பெயர் பிரத்தியாலீடநிலையே
** 12. படை வகை
#372
** போர்
யுத்தம் ஆகவம் தும்பை சமரம்
கணையம் செரு சங்கிராமம் இகல் எதிர்
ஞாட்பு பூசல் ஆயோதனம் அடல் அமர்
இரணம் மலைதல் ஆம் இன்னவை போரே
** 16 பெயர்கள் 372
#373
** புறவகை
** வெண்பா
வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் உட்காது
எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகை ஆம்
** 8 பெயர்கள் 373
#374
** புறப் புற வகை
வாகை பாடாண் பொதுவியல் இணை எனப்
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும்
** 3 பெயர்கள் 374
#375
** நால் வகைப் படை
கோலத் தேர் சரி குதிரை காலாள்
நால் வகைப் படையின் நாமம் ஆகும்
** 4 பெயர்கள் 375
#376
** தேர்
குயவு வையம் கொடிஞ்சி சயந்தனம்
திகிரி யந்திரம் கவரி அரி இரதம் தேர்
#377
** மற்றும் தேர்
கூவிரம் என்பதும் ஒர் வழிக் கொளலே
** 10 பெயர்கள்
#378
** தேர் உருள்
உருளி கால் ஆழி பரிதி உந்தி
திகிரி சில்லி நேமி தேர்உருளே
** 8 பெயர்கள்
#379
** தேர் உருளின் அகத்தில் செறி கதிர்
அகத்தில் செறி கதிர் ஆர் எனலாகும்
** 1 பெயர்
#380
** தேர்க் கொடிஞ்சி
கூவிரம் கொடிஞ்சி
** 1 பெயர்
#381
** தேர் மொட்டு
கூம்பு தேர்மொட்டே
** 1 பெயர்
#382
** தோர் முட்டி
பிரம்பு தேர்முட்டி என்னப் பேசுவர்
** 1 பெயர்
#383
** தேர் நடு
நடுவண் தேர்ப் பெயர் நாப்பணும் தட்டும்
** 2 பெயர்கள்
#384
** தேர்மரச்சுற்று
கிடுகு என் கிளவி தேர்மரச்சுற்றே
** 1 பெயர்
#385
** தேர்ப் பலகைப் பா
பாரே பலகைப்பா எனலாகும்
** 1 பெயர்
#386
** தேர்ப் பரப்பு
பாரே தேரின்பரப்பும் ஆகும்
** 1 பெயர்
#387
** அச்சுருவாணி
அச்சே தேரின் அச்சுருவாணி
** 1 பெயர்
#388
** பரி பூண்ட தேர்
பாண்டில் கஞ்சிகை வையம் பரிபூண்டதேரே
** 3 பெயர்கள்
#389
** பண்டி
சகடம் ஒழுகை சாகாடு பண்டி
** 3 பெயர்கள்
#390
** பண்டி உள் இருசு
பண்டி உள் இருசு கந்து எனப் பகர்வர்
** 1 பெயர் 390
#391
** அரசுவாவின் இலக்கணம்
கால் ஓர் நான்கும் தனிக் கையும் கோசமும்
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும்
பாலும் சங்கும் போலும் கால் உகிர்
காலினும் தன் தனிக் கையினும் மெய்யினும்
வாலினும் மருப்பினும் கோறல் வல்லதுவாய்
ஏழ் முழம் உயர்ந்து ஒன்பான் முழம் நீண்டு
பதின்மூன்று முழம் சுற்று உடைத்தாகி
தீ உமிழ் சிறு கண்ணும் செம் புகரும் உடைத்தாய்
முன்ன்பு உயர்ந்து பின்ன் பணித்து ஆயது
யானை அரசுவா ஆகும் என்ப
#392
** அரசர்க்கு உரிய பரியின் இலக்கணம்
மாதர்தம் மணம் என மிக்க மணத்தது
வாழை மடல் என வளர்ந்த செவியது
நாலு தாளும் எருத்தும் முகனும்
வெந்நும் முன்னும் வெண்மை உடையதாய்
எண்பத்துஇரு விரல் உயரம் உயர்ந்தது
பண்புடை அரசர்க்கு ஆவது பரியே
#393
** புரியின் கதி வகை
மல்ல கதியே வானர கதியே
மயூர கதியே வல்லிய கதியே
மால் விடைக் கதி என வரும் கதி ஐந்தும் ‘
தோலாப் புரவிக்குச் சொல்லிய கதியே
** 5 பெயர்கள் 393
** 13. காலாள் வகை
#394
** பகைவர் மேல் செல்லல்
ஊராண்மை என்பது ஓங்கிச் செல்லல்
** 1 பெயர் 394
#395
** பகைவரிடத்தில் செய்யும் அரிய செயல்
பேராண்மை என்பது அரிய செயலே
** 1 பெயர் 395
#396
** புறங்கொடுத்தோர் மேல் ஆயுதம் எறியாமை
சாய்குநர் மேல் படை விடாமை தழிஞ்சி
** 1 பெயர் 396
#397
** வெற்றிப் பூ
பூளை வெற்றிப்பூ ஆகும்மே
** 1 பெயர் 397
#398
** கொள்ளை
சூறையும் கொண்டியும் கொள்ளை ஆகும்
** 2 பெயர்கள் 398
#399
** வாரல்
வாரல் கவரல் வெளவல் அது கொளல்
** 3 பெயர்கள் 399
#400
** படை
தானை பதாதி தண்டம் பதாகினி
வானி அனிகம் வாகினி தந்திரம்
சேனை பகுதி பாடி பலம் படை
#401
** மற்றும் படை
நிதானமும் ககனமும் தளமும் நிகழ்த்தும்
** 15 பெயர்கள்
#402
** படை வகுப்பு
ஒட்டும் யூகமும் உண்டையும் அணியும்
மற்று இவை படையின் வகுப்பு எனலாகும்
** 4 பெயர்கள்
#403
** படை உறுப்பு
தூசியும் கூழையும் நெற்றியும் கையும்
அணியும் என்பது அப் படைக்கு உறுப்பே
** 5 பெயர்கள் 403
#404
** பேர் அணி
கூழை என்பது பேர்அணி ஆகும்
** 1 பெயர் 404
#405
** கொடிப் படை
தாரே முன் செல் கொடிப்படை ஆகும்
** 1 பெயர் 405
#406
** கீழ் அறுத்தல்
அறைபோதல் கீழ்அறுத்தல் படைமறுத்தல் ஆகும்
** 2 பெயர்கள் 406
#407
** பொர அழைத்தல்
அறைகூவல் என்பது பொரஅழைத்தல் ஆகும்
** 1 பெயர் 407
** 14 தோல் கருவி வகை
#408
** முழவு
முழவு குளிரே
** 1 பெயர் 408
#409
** குடமுழா
மண்கணை முழவம் குடமுழா ஆகும்
** 2 பெயர்கள் 409
#410
** படகம்
பணவம் திண்டிமம் ஆனகம் படகம்
** 3 பெயர்கள் 410
#411
** கடிப்பு
குணிலே கடிப்பின் கூற்று ஆகும்மே
** 1 பெயர்
#412
** சிறு பறை
ஆகுளி சிறுபறை
** 1 பெயர்
#413
** திமிலை
சல்லரி திமிலை
** 1 பெயர்
#414
** ஒரு கண் பறை
ஒருகண் பறையே மொந்தை என்ப
** 1 பெயா
#415
** நிசாளம்
தண்ணுமை நிசாளம்
** 1 பெயர்
#416
** ஒருபறை விகற்பம்
ஒருபறை விகற்பம் தாழ் பீலி ஆகும்
** 1 பெயர்
#417
** பன்றிப்பறை
பன்றிப்பறையே குடப்பறை ஆகும்
** 1 பெயர்
#418
** கரடிப் பறை
கரடி நாமக் கட்டுரை தட்டை
** 1 பெயர்
#419
** ஒருகண் பகு வாய்ப் பறை
பதலை ஒருகண் பகுவாய்ப்பறையே
** 1 பெயர்
#420
** துந்துபி
சகண்டை முரசு பணையே சகடம்
துந்துபி என்ப தூரியமும் ஆகும்
#421
** மற்றும் துந்துபி
பேரி தகணிதம் என்னவும் பேசுவர்
** 7 பெயர்கள்
#422
** உவகைப் பறை
உவகைப்பறையே தூரியம் ஆகும்
** 1 பெயர்
#423
** உடுக்கை
துடியே உடுக்கை
** 1 பெயர்
#424
** பம்பைப் பறை
தடாரி பம்பைப்பறை
** 1 பெயர்
#425
** தம்பட்டம்
முரசு தம்பட்டம் முழவும் ஆகும்
** 2 பெயர்கள்
#426
** தலைவிரி பறை
குழை உடல் தலைவிரிபறை கத்திரியே
** 1 பெயர் 426
#427
** மரக்கால் பறை
மரக்கால்பறையே கோதை ஆகும்
** 1 பெயர் 427
#428
** பலவகைப் பறை
பணவம் திண்டிமம் தக்கை இடக்கை
திமிலை கண்டிகை கண்டை குறடு
பணை சிந்தூரம் பாண்டிகம் பீலி
கரடிகை துடிகை கடுவை ஊமை
சகடை கிடுகு பல்வகைப்பறையே
** 18 பெயர்கள் 428
#429
** வாச்சியப் பொதுப் பெயர்
தூரியம் முழவம் வைரம் கோடணை
முரசு பீலி முருடு தடாரி
இயம் பணை வாச்சியப் பொதுப் பெயர் என்ப
** 10 பெயர்கள் 429
** 15 குடை வகை
#430
** குடை
கவிகை சத்திரம் பிச்சம் கவிப்பு
குளிர் ஆதபத்திரம் தொங்கல் குடைப் பெயர்
** 6 பெயர்கள் 430
#431
** செங் குடை
செங்குடை மீயையும் சிந்தூரமும் ஆகும்
** 2 பெயர்கள் 431
#432
** பீலிக் குடை
துங்கப் பீலிக்குடை சுழல் ஆகும்
** 1 பெயர் 432
#433
** பீலிக் குஞ்சக் குடை
தழையே தொங்கல் சமாலம் பிச்சம்
குளிரி பீலிக்குஞ்சம் ஆகும்
** 5 பெயர்கள் 433
** 16 ஆயுத வகை
#434
** வில்
கோதண்டம் சிலை கொடுமரம் கார்முகம்
சாபம் துரோணம் தனு வில் ஆகும்
#435
** மற்றும் வில்
தடி முனி சிந்துவாரம் சராசனம்
தவரே வேணு சார்ங்கமும் ஆகும்
** 14 பெயர்கள் 435
#436
** நாண்
பூரி ஆவம் பூட்டு தொடை வடம்
நாரி நரம்பு குணம் நாணின் பெயரே
** 8 பெயர்கள்
#437
** நாண் ஒலி
நாணின் ஒலியே மருமராஞ்சம் ஆகும்
** 1 பெயர்
#438
** அம்பு
பகழி வாளி தோணி பாணம்
கதிரம் பல்லம் கணை கோல் சரமொடு
வண்டு பத்திரம் சிலீமுகம் விசிகம்
அம்பின் பெயர் உடு ஆகலும் உரித்தே
** 14 பெயர்கள்
#439
** அம்புத் தலை
உடு அம்புத்தலை
** 1 பெயர்
#440
** மொட்டம்பு
உதண் மொட்டம்பே
** 1 பெயர்
#441
** அம்புக் குப்பி
புழுகு குப்பி
** 1 பெயர்
#442
** அம்புக் கட்டு
புதை அம்புக்கட்டே
** 1 பெயர்
#443
** அம்புக் குதை
பகழி புங்கம் அம்புக்குதையே
** 2 பெயர்கள்
#444
** அம்புத் திரள் கட்டும் கயிறு
பகழித்திரளின் பெயர் பற்றாக்கை
** 1 பெயர்
#445
** அம்பறாத் தூணி
தூணி புட்டில் அம்பறாத்தூணி
#446
** மற்றும் அம்பறாத் தூணி
ஆவமும் ஆவநாழிகையும் ஆகும்
** 4 பெயர்கள்
#447
** குதை
குலையே வில்லில் இருதலைக் குதையே
** 2 பெயர்
#448
** அம்பின் இறகு
அம்பின்இறகு உடு என்று ஆகும்
** 1 பெயர்
#449
** பிண்டி பாலம்
பீலித்தண்டு எஃகம் பிண்டிபாலம்
** 2 பெயர்கள்
#450
** நாராசம்
சலாகை நாராசம்
** 1 பெயர்
#451
** இருப்பு முள்
தாறு இருப்புமுள்ளே
** 1 பெயர்
#452
** கழு முள்
கமுக்கடை கழுமுள் கட்டுரை ஆகும்
** 1 பெயர்
#453
** வாள்
நவிர் ஏதி நாட்டம் கடுத்தலை நாந்தகம்
வசியே கட்கம் வஞ்சம் வாளே
#454
** மற்றும் வாள்
மட்டாயுதம் தூவத்தியும் ஆகும்
** 10 பெயர்கள்
#455
** கூன் வாள்
கோணம் கூன்வாள்
** 1 பெயர்
#456
** சிறு வாள்
முசுண்டி சிறுவாள்
** 1 பெயர்
#457
** கொடுவாள்
குயமும் புள்ளமும் கொடுவாள் ஆகும்
** 2 பெயர்கள்
#458
** அரி வாள்
அரி கதிர் கத்திக்கும் அப் பெயர் ஆகும்
** 2 பெயர்கள்
#459
** சுழல் படை
சுழல்படை வட்டம் பாராவளையம்
** 2 பெயர்கள்
#460
** ஈர் வாள்
வேதினம் கரபத்திரமும் ஈர்வாள்
** 2 பெயர்கள்
#461
** உடைவாள்
சுரிகை பத்திரம் குறும்பிடி உடைவாள்
** 5 பெயர்கள்
#462
** கை வாள்
கண்டம் என்பது கைவாள் ஆகும்
** 1 பெயர்
#463
** கணையம்
எழுவும் பரிகமும் கணையம் என்ப
** 2 பெயர்கள்
#464
** சூலம்
காளம் நல்வசி சூலம் கழுமுள்
மூ இலை வேல் முத்தலை கழு எனல்
** 6 பெயர்கள்
#465
** பூங் கருவி
சன்னகம் பூங்கருவி ஆகச் சாற்றும்
** 1 பெயர்
#466
** மழு
பரசு கணிச்சி நவியமும் மழுவே
#467
** மற்றும் மழு
பாலம் தண்ணமும் மழுப்படை ஆகும்
** 5 பெயர்கள்
#468
** இலை மூக்கு அரி கத்தி
குளிர் இலை மூக்கு அரி கத்தி ஆகும்
கணிச்சியும் அதன்பால் கருதப்படுமே
** 2 பெயர்கள்
#469
** கோடாவி
குடாரமும் நவியமும் கோடாலி ஆகும்
** 2 பெயர்கள்
#470
** தோட்டி
சரணம் கணிச்சி அங்குசம் தோட்டி
#471
** மற்றும் தோட்டி
கோணம் என்றும் கூறப்படுமே
** 4 பெயர்கள்
#472
** வேல்
உடம்பிடி எஃகம் அயிலே சத்தி
விட்டேறு அரணம் ஞாங்கரும் வேலே
** 7 பெயர்கள்
#473
** வச்சிராயுதம்
வயிரப்படையே சம்பம் குலிசம்
அசனி வச்சிரப்படை ஆகும்மே
#474
** மற்றும் வச்சிராயுதம்
சதகோடி என்பதும் சாற்றப்பெறுமே
** 5 பெயர்கள்
#475
** தண்டாயுதம்
தடியும் கதையும் சீரும் தண்டு எனல்
#476
** மற்றும் தண்டாயுதம்
வயிரமும் முளையும் எறுழும் மற்று அதுவே
** 6 பெயர்கள்
#477
** கிளி கடி கருவி
தழலும் தட்டையும் கிளிகடிகருவி
** 2 பெயர்கள்
#478
** குறுந் தடி
குணிலே குறுந்தடி
** 1 பெயர்
#479
** ஈட்டி
இட்டி ஈட்டி
** 1 பெயர்
#480
** கவண்
கவணை ஒடிசில் குணில் குளிர் கவணே
** 4 பெயர்கள்
#481
** சிறு சவளம்
குந்தம் சிறுசவளம்
** 1 பெயர்
#482
** பெருஞ் சவளம்
குந்தம் தோமரம் பீலி பெருஞ்சவளம்
** 3 பெயர்கள்
#483
** சக்கரம்
திகிரி நேமி ஆழி எஃகம் வளை
பரிதி ஒளிவட்டம் சுதரிசனம் சக்கரம்
** 8 பெயர்கள்
#484
** கைக் கட்டி
கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும்
** 2 பெயர்கள்
#485
** கைவிடு படை
அத்திரம் விடுபடை
** 1 பெயர்
#486
** கை விடாப் படை
சத்திரம் விடாப்படை
** 1 பெயர்
#487
** சுவர் அகழ் கருவி
கன்னம் சுவர்அகழ்கருவி ஆகும்
** 1 பெயர்
#488
** தறிகை உளி
தறிகை கணிச்சி உளிக்கும் அதுவே
** 1 பெயர்
#489
** கை வேல்
கைவேல் விகற்பம் கப்பணம் தோமரம்
** 2 பெயர்கள்
#490
** கயிறு
பாசம் கச்சை நாண் வடம் பழுதை
தர்மம் இரச்சு தாம்பு கயிறே
** 8 பெயர்கள்
#491
** தாமணி
தாமணி கண்ணி தாம்பும் ஆகும்
** 2 பெயர்கள்
#492
** வலைக் கயிறு
சாலம் என்பது கயிற்று வலையே
** 1 பெயர்
#493
** அஞ்சனம் எழுதும் கருவி
கோலே அஞ்சனம் எழுதும் கருவி
** 1 பெயர்
#494
** எழுதும் கருவி
கண்டம் ஊசி ஆணி எழுதும் கருவி
** 3 பெயர்கள்
#495
** ஊசி
சூசி ஊசி என்ப
** 1 பெயர்
#496
** ஊசித் தொளை
பாசம் ஊசித்தொளை துன்னமும் பகரும்
** 2 பெயர்கள்
#497
** நுனி
நுதியும் நுனையும் நுனி ஆகும்மே
** 2 பெயர்கள்
#498
** முசுண்டி
தானை படையே முற்கரம் முசுண்டி
** 3 பெயர்கள்
#499
** இருப்பு உலக்கை
முசலம் இருப்பு உலக்கை
** 1 பெயர்
#500
** சங்கிலி
துவக்கு தொடர் சங்கிலியே இடங்கணி
** 3 பெயர்கள்
#501
** பற்று இரும்பு
கற்பொறி அள் வலி பற்று இரும்பு ஆகும்
** 3 பெயர்கள்
#502
** கூர்மை
வயிரமும் வள்ளும் வசியும் வையும்
அயிலும் நிசிதமும் அள்ளும் பூவும்
ஆரும் கூர்மையின் அபிதானம்மே
** 9 பெயர்கள்
#503
** ஆயுதப் பொதுப் பெயர்
தானை படையே படைக்கலம் கருவி
எஃகு இவை ஆயுதம் வேலும் இயம்புவர்
#504
** மற்றும் ஆயுதப் பொதுப் பெயர்
துப்பும் ஏதியும் சுதன்மமும் ஆகும்
** 9 பெயர்கள்
#505
** படை உறை
தடறும் கருவிப் புட்டிலும் உறை எனல்
** 2 பெயர்கள்
** 17 செயற்கை வகை
#506
** கவசம்
ஆசு தசனம் சடாரி அரணம்
பாசம் கண்டம் பருமம் கச்சை
சாலிகை மாடிகை கந்தளம் பாரம்
மேழகம் கசையே மெய்புகுகருவி
கவசப் பெயரே சுடாரியும் சொல்லும்
#507
** மற்றும் கவசம்
அந்தளமும் அபரமும் சுரிகையும் சொல்லும்
** 19 பெயர்கள் 507
#508
** கேடகம்
கேடயம் வட்டம் தட்டி கடகம்
வேதிகை கிடுகு பலகை கேடகம்
** 7 பெயர்கள் 508
#509
** மாவட்டணம்
தட்டியம் பலகை தட்டு மாவட்டணம்
** 3 பெயர்கள் 509
#510
** தோல் பலகை
தோற்பரம் தட்டு தோல்பலகை தோலும் ஆம்
** 3 பெயர்கள் 510
#511
** யானைப் புரசைக் கயிறு
தூசு கவடு புரசைக்கயிறு எனல்
** 2 பெயர்கள் 511
#512
** யானை முக படாம்
சூழி படமே வேழ முகபடாம்
#513
** மற்றும் யானை முக படாம்
மலையின் மந்தனம் என்றும் சொல்லும்
** 3 பெயர்கள் 513
#514
** யானை கட்டும் தறி
ஆளானம் வெளிலே யானை அணை தறி
** 2 பெயர்கள் 514
#515
** யானைக் கச்சை
கரியின் கச்சை கண்டம் ஆகும்
** 1 பெயர் 515
#516
** யானை மேல் தவிசு
இலகடம் பலகாரம் தவிசு எனலாகும்
#517
** மற்றும் யானை மேல் தவிசு
மணையும் பலகையும் அப் பெயர் கூறும்
** 4 பெயர்கள் 517
#518
** குதிரைக் கலணை
பருமமும் பண்ணும் படையும் பல்லணமும்
பரமும் என்று இவை பரிமாக் கலணை
#519
** மற்றும் குதிரைக் கலணை
சூழியும் பரிமாக் கலணை ஆகும்
** 6 பெயர்கள் 519
#520
** குதிரை அங்க அடி
கச்சமும் படியும் அங்க அடி என்ப
** 2 பெயர்கள் 520
#521
** குதிரைச் சம்மட்டி
மத்திகை கோலே மற்று இவை சம்மட்டி
** 2 பெயர்கள் 527
#522
** குதிரைக் கயிறு
வற்கம் வாய் வட்டம் குசை கயிறு என்ப
** 3 பெயர்கள் 522
#523
** குதிரைக் கடிவாளம்
கவியமும் மூட்டும் கிராமும் கலினமும்
கறுழும் என்று இவை கடிவாளப் பெயர்
** 5 பெயர்கள் 523
#524
** கடிவாளப் பூண்
மற்று அதற்கு அணியும் விருளை எனலாகும்
** 1 பெயர் 524
#525
** கலப்பை
படை அலம் தொடுப்பு படைவாள் நாஞ்சில்
இலாங்கலி ஆலம் உழுபடை கலப்பை
#526
** மற்றும் கலப்பை
கலனை என்பதும் கலப்பைப் பேரே
** 9 பெயர்கள் 526
#527
** மேழி
கொடுநுகம் மேழிக் கூற்று ஆகும்மே
** 1 பெயர் 527
#528
** குறுந்தறி
போதிகை குறுந்தறி
** 1 பெயர் 528
#529
** வேள்வித் தறி
யூபம் வேள்வித்தறி
** 1 பெயர் 529
#530
** தாண்
தாணுவும் காலும் கம்பமும் தம்பமும்
ஆளானம் மதலை எழு வெளிலே தறி
தூண் என்று உரைப்பர் கந்தும் சொல்லும்
** 10 பெயர்கள் 530
#531
** தொழு
தொழுவின் பெயரே தோழம் ஆகும்
** 1 பெயர்
#532
** யானைத் தோட்டி
யானையின் குடாரி அங்குசம் தோட்டி
கோணம் யானை வணக்கியும் கூறும்
** 4 பெயர்கள்
#533
** அடை குறடு
அடை குறட்டின் பெயர் பட்டடை ஆகும்
** 1 பெயர்
#534
** பெருங் குறடு
கூறின் முருடு பெருங்குறடு என்ப
** 1 பெயர்
#535
** சம்மட்டி
கொட்டும் சம்மட்டி கூடம் என்ப
** 1 பெயர்
#536
** சுட்டுக் கோல்
சுட்டுக்கோல் ஆணி
** 1 பெயர்
#537
** கொழு
கோல் கொழு என்ப
** 7 பெயர்
#538
** ஒண்டி
ஊற்றாணி ஒண்டி
** 1 பெயர்
#539
** பாரைக் கோல்
மீன்குத்தி பாரைக்கோல்
** 1 பெயர்
** 18 அக்குரோணி வகை
#540
** பதாதி
ஒரு பெருங் களிறும் ஒரு பெருந் தேரும்
புரவி மூன்றும் படைஞர் ஐவரும்
பதாதி என்று பகரப்படுமே
#541
** சேனாமுகம்
பதாதி மும்மடி சேனாமுகமே
#542
** குமுதம்
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம்
#543
** கணகம்
குமுதம் மும்மடி கொண்டது கணகம்
#544
** வாகினி
கணகம் மும்மடி கொண்டது வாகினி
#545
** பிரளயம்
வாகினி மும்மடி ஆகும் பிரளயம்
#546
** சமுத்திரம்
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம்
#547
** சங்கம்
சமுத்திரம் மும்மடி கொண்டது சங்கம்
#548
** அநீகம்
சங்கம் மும்மடி கொண்டது அநீகம்
#549
** அக்குரோணி
அநீகம் மும்மடி அக்குரோணி ஆகும்
** 19 வெள்ள வகை
#550
** அக்குரோணி எட்டுப் பங்கு கொண்டது
முந்தை எண் மடங்கு கொண்டது ஒன்று ஏகம்
#551
** ஏகம் எட்டுப் பங்கு கொண்டது
ஏகம் எண் மடங்கு கொண்டது கோடி
#552
** கோடி எட்டுப் பங்கு கொண்டது
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம்
#553
** சங்கம் எட்டுப் பங்கு கொண்டது
சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்
#554
** விந்தம் எட்டுப் பங்கு கொண்டது
விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம்
#555
** குமுதம் எட்டுப் பங்கு கொண்டது
குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம்
#556
** பதுமம் எட்டுப் பங்கு கொண்டது
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு
#557
** நாடு எட்டுப் பங்கு கொண்டது
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம்
#558
** சமுத்திரம் எட்டுப் பங்கு கொண்டது
சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம்
** 20. இல்லணி வகை
#559
** கரும பூமியின் இயல்
உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்று இத் திறத்து அறு தொழில்
கற்பனை உடையது கரும பூமி
#560
** போக பூமி இயல்
பதினாறு ஆட்டைக் குமரனும் சிறந்த
பன்னீர் ஆட்டைக் குமரியும் ஆகி
ஒத்த மரபினும் ஒத்த அன்பினும்
கற்பக நல் மரம் நல் பயன் உதவ
ஆகிய செய் தவத்து அளவும் அவ்வழிப்
போகம் நுகர்வது போக பூமி
#561
** ஆசிரியர் கூற்று
அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம்
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம்
பைசாசம் என்ன எண் வகைப்படூஉம்
வதுவை வகையின் மணம் ஒன்றாயினா
வாழ்க்கை என்னும் இல்லற நல் நெறிக்கு
ஏற்பவை நாமத்து எஞ்சிய கூறுவன்
#562
** கட்டில்
கட்டில் பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில்
** 4 பெயர்கள்
#563
** விசி
கட்டிலின் விசியே அரி எனக் கழறும்
** 1 பெயர்
#564
** பீடம்
பீடிகை தவிசு விட்டரம் பீடம்
** 3 பெயர்கள்
#565
** சிங்காதனம்
பத்திராதனம் சிங்காதனம் என்ப
** 1 பெயர்
#566
** உரல்
கறையும் உலூகலமும் திட்டையும் உரலே
** 3 பெயர்கள்
#567
** உலக்கை
முசலமும் தடியும் உரோங்கலும் உலக்கை
** 3 பெயர்கள்
#568
** உறி
சிமிலி தூக்கு சிக்கம் சிதர் உறி
** 4 பெயர்கள்
#569
** ஊஞ்சல்
ஊசல் ஊஞ்சல் தூரியும் ஆகும்
** 2 பெயர்கள்
#570
** ஏணி
இறைவையும் கடவையும் ஏணி ஆகும்
** 2 பெயர்கள்
#571
** கண் ஏணி
கண்ஏணிப் பெயர் மால்பு என்று ஆகும்
** 1 பெயர்
#572
** அளவை
கச்சமும் கடனும் அளவை ஆகும்
** 2 பெயர்கள்
#573
** மரக்கால்
அம்பணம் தூம்பு கால் ஆகலும் உரித்தே
** 2 பெயர்கள்
#574
** தூக்குக் கோல்
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான்
துலையே கோலொடு தூக்குக்கோலே
** 6 பெயர்கள்
#575
** கொத்தளிப் பாய்
ஆரை கொத்தளிப்பாய்
** 1 பெயர்
#576
** புல் பாய்
சாப்பை புல்பாய்
** 1 பெயர்
#577
** பிரப்பம் பாய்
சாதி பிரப்பம்பாய்
** 1 பெயர்
#578
** தோல் பாய்
சருமம் தோல்பாய்
** 1 பெயர்
#579
** தடுக்கு
தவிசு தடுக்கே
** 1 பெயர்
#580
** குழாய்
தண்டு குழாயே
** 1 பெயர்
#581
** பூந்தட்டு
பீடிகை படலிகை கோடிகம் பூந்தட்டு
** 3 பெயர்கள்
#582
** விளக்குத் தண்டு
கெளசிகம் மல்லிகை கம்பம் மத்திகை
சுடர் நிலைத் தண்டு எனத் தீபமும் அதற்கே
** 5 பெயர்கள்
#583
** முறம்
சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம்
** 4 பெயர்கள்
#584
** சுளகு
சூர்ப்பம் சுளகே
** 1 பெயர்
#585
** புட்டில்
இறைவை புட்டில்
** 1 பெயர்
#586
** கூடை
வட்டிகை கூடை
** 1 பெயர்
#587
** துடைப்பம்
துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல்
** 4 பெயர்கள்
#588
** நாழி
வட்டி குஞ்சம் படி நாழி ஆகும்
** 3 பெயர்கள்
#589
** தயிர்கடை தறி
தயிர்கடைதறி வெளில்
** 1 பெயர்
#590
** தயிர்க் கோல்
தயிர்க்கோல் மத்து ஆம்
** 1 பெயர்
#591
** காராம்பி
காராம்பி அம்பி
** 1 பெயர்
#592
** நீர்ப் பத்தல்
பத்தல் அம்பணம்
** 1 பெயர்
#593
** கரண்டி
கரண்டம் கரண்டி
** 1 பெயர்
#594
** அம்மி
அரைசிலை அம்மி ஆகலும் உரித்தே
** 1 பெயர்
#595
** அம்மிக் கல்
அம்மிக்கல் குழவி
** 1 பெயர்
#596
** சாணை
சிலாவட்டம் என்பது சாணை ஆகும்
** 1 பெயர்
#597
** சந்தனம் அரை கல்
சாணம் சிலாவட்டம் சந்தனம் அரைகல்
** 2 பெயர்கள்
#598
** நாடா
காருகர் நாடா நூனாழி ஆகும்
** 1 பெயர்
#599
** இறை கூடை
இடார் இறைகூடை
** 1 பெயர்
#600
** சும்மாடு
சுமடு சுடுவும் சுமையடைசும்மாடே
** 3 பெயர்கள்
#601
** பேர் ஆலவட்டம்
ஆலவட்டம் உக்கம் தாலவிருந்தம்
#602
** மற்றும் பேர் ஆலவட்டம்
கால் செய் வட்டமும் அப் பெயர் கழறும்
** 3 பெயர்கள்
#603
** சிற்றாலவட்டம்
சிவிறி என்பது சிற்றாலவட்டம்
** 1 பெயர்
#604
** சாந்தாற்றி
பீலி என்பது சாந்தாற்றி ஆகும்
** 1 பெயர்
#605
** சீப்பு
சிக்கம் மயிர்வாரி கங்கம் சீப்பு எனல்
** 3 பெயர்கள்
#606
** திரிகை
வட்டமும் பந்தும் தட்டும் திரிகை
** 3 பெயர்கள்
#607
** பந்து
கந்துகம் பந்து எனல்
** 1 பெயர்
#608
** அம்மானை
அம்மனை அம்மானை
** 1 பெயர்
#609
** மகளிர் விளையாட்டுக் கலம்
ஓரை என்பது விளையாட்டு ஒண்கலம்
** 1 பெயர்
#610
** கூத்தர் கருவி
கலப்பை கூத்தர் கருவி ஆகும்
** 1 பெயர்
#611
** நீர் சிதறும் துருத்தி
நீர் சிதறும் துருத்தி சிவிறி ஆகும்
** 1 பெயர்
#612
** செருப்பு
தொடுதோல் கழல் இவை தோல் செருப்பு ஆகும்
** 2 பெயர்கள்
#613
** மிதியடி
பாதுகை மிதியடி பாவலும் ஆகும்
** 2 பெயர்கள்
#614
** மிதியடியின் மேல் இட்ட கொட்டை
குடையே கல்லை கொட்டை அதன் பெயர்
** 2 பெயர்கள்
#615
** உலைத் துருத்தி
உதி அத்திரி சிவை உலைத் துருத்திப் பெயர்
** 3 பெயர்கள்
#616
** கொல் உலை மூக்கு
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே
** 2 பெயர்கள்
#617
** சுண்ணச் சாந்து
சுதையே களபம் சுடு சுண்ணச்சாந்தே
** 2 பெயர்கள்
#618
** நெருப்பு உறு விறகு
ஞெகிழி கொள்ளி நெருப்பு உறு விறகே
** 2 பெயர்கள்
#619
** விறகு
இந்தனம் காட்டம் துவர் இவை விறகே
** 3 பெயர்கள்
#620
** ஓம விறகு
சமிதை ஓம விறகு எனச் சாற்றும்
** 1 பெயர்
#621
** அரி வாள் மணை
புள்ளம் கூர் வாய் இரும்பு அரிவாள்மணை
** 2 பெயர்கள்
#622
** சுக்கு
நாகரம் சுண்டி சுக்கு ஆகும்மே
** 2 பெயர்கள்
#623
** மிளகு
திரங்கல் கலினை கோளகம் மிரியல்
காயம் மரீசம் கறி இவை மிளகே
** 7 பெயர்கள்
#624
** மஞ்சள்
நிசி அரிசனமே பீதம் காஞ்சனி
அரித்திரம் இன்னவை மஞ்சள் ஆகும்
** 5 பெயர்கள்
#625
** அரிசி
அரியே வீயம் தண்டுலம் அரிசி
** 3 பெயர்கள்
#626
** தவிடு
முட்டை தவிடே முடை பொதியும் ஆகும்
** 3 பெயர்கள்
#627
** பெருங்காயம்
இங்கு பெருங்காயம்
** 1 பெயர்
#628
** குங்குலியம்
குக்கில் குங்குலியம்
** 1 பெயர்
#629
** கடுகு
ஐயவி கடுகு
** 1 பெயர்
#630
**உப்பு
இலவணம் உப்பு ஆகும்
** 1 பெயர்
#631
** பருப்பு
முதிரை முற்கம் பருப்பு என மொழிப
** 2 பெயர்கள்
#632
** அரக்கு
அரத்தமும் துப்பும் அரக்கன் பெயரே
** 2 பெயர்கள்
#633
** செத்தை
காடும் துராலும் மயலும் செத்தை
** 3 பெயர்கள்
#634
** பாடை
பாடை வெள்ளில் ஆசந்தியும் ஆகும்
** 2 பெயர்கள்
#635
** தாழி
அகளமும் சாடியும் பதலையும் அன்றித்
தளமும் தாழியின் சாற்றிய பெயரே
** 4 பெயர்கள்
#636
** நீர்ச்சால்
நிறை வட்டம் இடங்கர் நீர்ச்சால் ஆகும்
** 3 பெயர்கள்
#637
** கொப்பரை
கொப்பரை கொப்பரி கடாரம் தசும்பு
** 3 பெயர்கள்
#638
** குடம்
கடமும் இடங்கரும் தாழியும் இறங்கரும்
குணமும் இரும்பையும் கும்பமும் குடங்கரும்
குடந்தமும் கலசமும் இடக்கரும் குடமே
** 11 பெயர்கள்
#639
** மிடா
கரீரம் குழிசி முகை தடா மிடாவே
** 4 பெயர்கள்
#640
** பானை
குண்டமும் மிடாவும் குழிசியும் பானை
** 3 பெயர்கள்
#641
** தயிர்கடை தாழி
குடாரும் மந்தினி வெண் தயிர்த்தாழி
** 2 பெயர்கள்
#642
** கரகம்
கர்க்கரி சிரகம் கன்னல் கரகம்
** 3 பெயர்கள்
#643
** மண்கலம்
கடிஞை பாத்திரம் மண்கலம் ஆகும்
** 2 பெயர்கள்
#644
** தகழி
இடிஞ்சில் பாண்டில் எரி சுடர்த தகழி
** 2 பெயர்கள் 644
#645
** குடுவை
குடுவை குண்டம்
** 1 பெயர்
#646
** சட்டி
விசளை சட்டி
** 1 பெயர்
#647
** அகல்
சராவம் சுத்திகை இடிஞ்சில் அகல் என்ப
** 3 பெயர்கள்
#648
**கொள்கலம்
இடும்கலம் கொள்கலம் பாண்டம் என்ப
** 2 பெயர்கள்
#649
** வெற்றிலை
நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை
** 2 பெயர்கள்
#650
** பாக்கு
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே
** 3 பெயர்கள்
#651
** சுண்ணாம்பு
சுண்ணமும் நீறும் சுண்ணாம்பு ஆகும்
** 2 பெயர்கள்
#652
** திருநீறு
பூதி ஓமப்பொடி விபூதி காப்பு
புண்ணிய சாந்தம் வெண்தாது திருநீறே
** 6 பெயர்கள்
#653
** சாணி
புண்ணிய சாந்தம் சாணி சாணாகம்
** 2 பெயர்கள்
#654
** சாம்பல்
அடலை வெண்பலி சாம்பல் ஆகும்
** 2 பெயர்கள்
#655
** பெட்டி
மஞ்சிகம் பெட்டி
** 1 பெயர்
#656
** பேழை
மஞ்சிகை பேழை
** 1 பெயர்
#657
** அணிகலச் செப்பு
கண்டிகை பீடிகை காண்டம் கடிப்பம்
அன்றியும் கோடிகம் அணிகலச் செப்பே
** 5 பெயர்கள்
** ஆறாவது அனுபோக வகை முற்றிற்று
@7 பண்பின் செயலின் பகுதி வகை
** 1 உள்ள நல் வகை
#1
** குணம்
உள்ள நல்வகை உரைக்கும் காலை
மாலையும் பெற்றியும் மரபும் கிழமையும்
பாலும் விதியும் பான்மையும் இயல்பும்
தகவும் தகுதியும் தகைமையும் தன்மையும்
பரிசும் படியும் முறையும் பண்பும்
நிலையும் வண்மையும் நீரும் சால்பும்
குணம் எனல் அதன் பெயர் கொள்கையும் ஆகும்
** 21 பெயர்கள் 1
#2
** உயர்வு
உவப்பு புரை சேண் உன்னதம் துங்கம்
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல்
ஏந்தல் ஒழுகல் போகல் ஓச்சல்
ஓங்கல் வார்தல் உறை உயர்வு என்ப
** 17 பெயர்கள் 2
#3
** வலி
முரணும் மறமும் முன்பும் நோன்மையும்
உரமும் பாழியும் ஊக்கமும் மதுகையும்
முடலையும் உம்பலும் மூரியும் தோற்றமும்
மிடலும் மள்ளமும் கூளியும் ஈடும்
திறமும் எழிலும் எறுழும் திண்மையும்
வயமும் விறலும் மைந்தும் துப்பும்
மீளியும் அடலும் தாவும் ஆண்மையும்
ஆற்றலும் கோளும் இகலும் மொய்ம்பும்
மதனும் கலியும் வலியின் பெயரே
** 34 பெயர்கள் 3
#4
** மாட்சிமை
மாணலும் மாணும் சால்பும் மதனும்
ஆன்றலும் வாய்த்தலும் மாட்சிமை ஆகும்
** 6 பெயர்கள் 4
#5
** கொழுமை
கொழுமையும் செழுமையும் வளமையும் கொழுப்பே
** 3 பெயர்கள் 5
#6
** குளிர்
நளி பனி சீதம் தண்ணே சீதளம்
குளிரின் பெயரே நளிரும் கூறும்
** 6 பெயர்கள்
#7
** செவ்விது
செவ்வையும் செப்பமும் செம்மையும் செவ்வனும்
இவ் வகை பிறவும் செவ்விதின் பெயரே
** 4 பெயர்கள் 7
#8
** அறிவு
உணர்வு காட்சி உரனே மேதை
தெளிவு புலனே தெருட்சி போதம்
புத்தி ஞானம் அறிவு எனப் புகல்வர்
** 10 பெயர்கள்
#9
** வெற்றி
வலனும் கொற்றமும் வாகையும் முல்லையும்
சயமும் ஆடும் புகலும் படினமும்
விசயமும் வெற்றமும் வென்றியும் வெற்றி
** 11 பெயர்கள்
#10
** செல்வம்
சீரும் வெறுக்கையும் விபவமும் திருவும்
மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும்
ஆகும் செல்வத்து அபிதானம்மே
** 8 பெயர்கள்
#11
** பற்று
பரிவும் ஆர்வமும் ஈரமும் பற்றே
** 3 பெயர்கள்
#12
** அன்பு
அளி நார் சங்கம் நேயம் அன்பே
#13
** மற்றும் அன்பு
பாசம் என்றும் பேசப் படுமே
** 5 பெயர்கள்
#14
** அருள்
தகவும் கருணையும் இரக்கமும் தயவும்
கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும்
** 6 பெயர்கள்
#15
** மனம்
முன்னமும் அகமும் உள்ளமும் உன்னமும்
இதயமும் நெஞ்சும் உள்ளும் மனமே
** 7 பெயர்கள்
#16
** குறிப்பு
சிந்தையும் நினைவும் தெளிவும் தியானமும்
இங்கிதமும் கருத்தும் எண்ணமும் குறிப்பே
#17
** மற்றும் குறிப்பு
அங்கு அது நாட்டியம் ஆகலும் உரித்தே
** 8 பெயர்கள்
#18
** குறித்தல்
கண்ணல் நுதலல் காணல் புகறல்
எண்ணல் பேணல் கருதல் சுட்டல்
உன்னல் என்று இவை குறித்தலை உரைக்கும்
** 9 பெயர்கள்
#19
** வரையறுத்தல்
குணித்தலும் கணித்தலும் குறித்தலும் அன்றி
மதித்தலும் வரையறுத்தல் பொருட்டு ஆமே
** 4 பெயர்கள் 19
#20
** தேடல்
நாடலும் நேடலும் தேடல் ஆகும்
#21
** மற்றும் தேடல்
கூடலும் கையரிக்கொளலும் அதற்கே
** 4 பெயர்கள் 21
#22
** நினைத்தல்
உன்னல் படர்தல் ஊழ்த்தல் கருதல்
முன்னல் அறிதல் வலித்தல் சிந்தித்தல்
எண்ணல் அனைத்தும் நினைப்பு என்று இசைப்பர்
** 9 பெயர்கள் 22
#23
** ஏமாப்பு
ஏமாப்பு செம்மாப்பு
** 1 பெயர்
#24
** இறுமாப்பு
ஏக்கழுத்தம் இறுமாப்பு
** 1 பெயர் 24
#25
** களிப்பு
மதர்ப்பு மதர்வை மதம் தருக்கு ஏமம்
பெருமிதம் செருக்கும் பேசில் களிப்பே
** 7 பெயர்கள் 25
#26
** இன்பம்
நகையும் ஏமமும் நயமும் மகிழ்ச்சியும்
சுகமும் கடியும் தொய்யலும் இன்பம்
** 7 பெயர்கள்
#27
** பேரின்பம்
அக மலர்ச்சி பேரின்பம் ஆனந்தம் ஆகும்
** 2 பெயர்கள்
#28
** சுகம்
சந்தமும் தருமமும் அழகும் மகிழ்வும் சுகம்
** 4 பெயர்கள்
#29
** தெளிவு
தெருளும் மானவும் உணர்வும் தேறலும்
தேற்றமும் துணிவும் தெளிவின் திறத்த
** 6 பெயர்கள் 29
#30
** நயம்
நறுமை விழுப்பம் நன்னர் நயமே
** 3 பெயர்கள்
#31
** நன்மை
உறுதி யாணர் ஒண்மை உத்தமம்
நன்றி சேடு நன்மை நன்று ஆகும்
** 7 பெயர்கள்
#32
** பொறுத்தல்
சமித்தலும் நோன்றலும் கமித்தலும் பொறுத்தல்
** 3 பெயர்கள்
#33
** முயற்சி
முயற்சி ஊக்கம் இயற்றி ஆள்வினை
உஞற்று தாள் துப்பு உற்சாகம்மே
** 7 பெயர்கள்
#34
** உற்சாகம்
உஞற்று தாள்வினை துப்பு ஊக்கம் உற்சாகம்
** 4 பெயர்கள்
#35
** இலாபம்
பலனும் ஊதியமும் பயனும் ஆக்கமும்
பேறும் பலித்தலும் இலாபப் பெயரே
** 6 பெயர்கள்
#36
** ஒற்றுமை
ஒருமை குறிப்போடு ஒற்றுமை ஆகும்
** 2 பெயர்கள்
#37
** துணை
இணையும் துப்பும் சகாயமும் என்று இவை
துணை என்ப புகலும் சொல்லுவர் புலவர்
** 4 பெயர்கள்
#38
** தவம்
நோன்பு என் கிளவி தான் தவம் ஆகும்
#39
** மற்றும் தவம்
உவ்வு என் கிளவியும் ஓதுவர் அதற்கே
** 2 பெயர்கள்
#40
** நல்வினை
தானமும் அறமும் தருமமும் சீலமும்
அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும்
புண்ணியமும் பாக்கியமும் நல்வினை ஆகும்
** 10 பெயர்கள்
#41
** அருச்சனை
ஆராதனையே வழிபாடு அருச்சனை
** 2 பெயர்கள்
#42
** பூசை
பூசனை என்ப பூசையின் பெயரே
** 1 பெயர்கள்
#43
** யாகம்
சித்து யாகம் வேள்வி கிருது ஆகும்
** 3 பெயர்கள் 43
#44
** வெறுப்பு
வெறுப்பு ஒல்லாமையும் வேண்டாமையும் முனிவும்
ஒறுத்தலும் உவர்த்தலும் உவர்ப்பும் ஆகும்
** 6 பெயர்கள் 44
#45
** துறவு
துறத்தல் நிவர்த்தி துறவு ஆகும்மே
** 2 பெயர்கள்
#46
** உறவு
உறவி விருப்பம் உறவு ஆகும்மே
** 2 பெயர்கள் 46
#47
** நாணம்
வெட்கம் இலச்சை வெள்கல் சமழ்த்தல்
வட்கல் இருளை மானமும் அன்றி
உட்கு நாணத்து உரை எனப்படுமே
** 8 பெயர்கள் 47
#48
** செல்வப் பகுதி
மல்லும் தடமும் வளமும் வாரியும்
செல்வப்பகுதிக்குச் செப்பிய பெயரே
** 4 பெயர்கள்
#49
** நிலை பேறு
துஞ்சல் மன்னல் இதி நிலைபேறே
#50
** மற்றும் நிலை பேறு
அங்கு அது திறமோடு ஏணம் தாணு
என்பன மூன்றும் இசைக்கப்பெறுமே
** 6 பெயர்கள்
#51
** மெய்
சாதம் வாய்மை சத்தியம் உண்மை
நீதி நிலைமை நியாயம் நிச்சயம்
வாய் திடம் ஆணை மன்றம் சரதம்
வேளாண்மை பட்டாங்கு மெய் என உரைப்பர்
** 15 பெயர்கள்
#52
** பிழைப்பு
இழுக்கம் வழுக்கு தப்பல் பிழைப்பு என்ப
உஞற்றும் பணைத்தலும் உள அப் பெயர்க்கே
** 5 பெயர்கள்
#53
** ஆதல்
ஆதல் நந்துதல்
** 1 பெயர் 53
#54
** ஏவல்
ஆணை ஏவல்
** 1 பெயர் 54
#55
** ஒற்று
வேய் என் கிளவி ஒற்று ஆகும்மே
** 1 பெயர் 55
#56
** செய்தி
செயல் செய்கை செய்தல் செய்தி ஆகும்
** 3 பெயர்கள் 56
#57
** ஒழுக்கம்
சரியை ஆசாரம் நடை இயல்பு ஒழுக்கம்
** 4 பெயர்கள் 57
#58
** நீதி
நெறியும் நியாயமும் தருமமும் நீதி
#59
** மற்றும் நீதி
விதியும் நிழலும் வரைவு இன்று என்ப
** 5பெயர்கள் 59
#60
** உள்
அகணி அகடே அகமே கோட்டை
உரை செயில் இன்னவை உள் ஆகும்மே
** 4 பெயர்கள் 60
#61
** சூழ்ச்சி
சூழ்ச்சி உசாவே தேர்ச்சி விசாரம்
யாப்பே எண்ணம் மந்திரம் நூலே
#62
** மற்றும் சூழ்ச்சி
ஆய்தலும் தேர்தலும் ஆகலும் உரித்தே
** 9 பெயர்கள் 62
#63
** உண்டாதல்
விளைதல் பூத்தல் படுதல் உண்டாதல்
** 3 பெயர்கள் 63
#64
** தோற்றுதல்
பிறப்பித்தலும் படைத்தலும் நாறலும் வெளிப்படலும்
தோற்றலும் உருத்தலும் தோற்றுதல் ஆகும்
** 6 பெயர்கள் 64
#65
** காத்தல்
நிலைபெறுத்தலும் புரத்தலும் அளித்தலும் காப்பும்
நோக்கலும் திதியும் காத்தல் என்ப
** 6 பெயர்கள் 65
#66
** பாதுகாத்தல்
போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல்
** 3 பெயர்கள் 66
#67
** காவல்
சிறையும் அரணும் சேமமும் செயலும்
காப்பும் வேலியும் கடியும் தட்டியும்
கட்டும் தட்டும் காவல் பெயரே
** 10 பெயர்கள் 67
#68
** கொள்கை
தெவ்வு வரைதல் தேர்தல் ஏற்றல் எனக்
கூறிய பிறவும் கொள்கை ஆகும்
** 4 பெயர்கள்
#69
** மேற்கோள்
பூட்கை என்பது மேற்கோள் ஆகும்
** 1 பெயர்
#70
** உய்தல்
ஆற்றுதல் வலிதல் உய்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#71
** தூய்மை செய்தல்
உவளித்தல் தூய்மை செய்தலை உரைக்கும்
** 1 பெயர்
#72
** உடன்பாடு
வலித்தல் ஒட்டல் நேர்தல் இசைதல் என்று
உரைத்த பலவும் உடன்பாடு ஆகும்
** 4 பெயர்கள்
#73
** விதி முறை
நியமம் என் கிளவி விதிமுறை ஆகும்
** 1 பெயர்
#74
** குற்றல்
நவித்தலும் துப்பலும் துற்றலும் குற்றல்
** 3 பெயர்கள்
#75
** அவியல்
அவைத்தலும் அவித்தலும் அவியல் ஆகும்
** 2 பெயர்கள்
#76
** ஒட்டுதல்
அணவல் ஒட்டுதல்
** 1 பெயர்
#77
** தெரிதல்
தெள்ளுதல் தெரிதல்
** 1 பெயர்
#78
** தெளிதல்
தேறுதல் தெளிதல் ஆகச் செப்புவர்
** 1 பெயர்
#79
** கேளா
வேளா என்பது கேளா என்றல்
** 1 பெயர்
#80
** தவிர்தல்
வாளா என் கிளவி தவிர்தல் ஆகும்
** 1 பெயர்
#81
** தேற்றம்
மன்ற தேறு தேற்றம் ஆகும்
** 2 பெயர்கள்
#82
** ஆம்
அன்று எனல் இன்று எனல் ஆம் எனலாகும்
** 2 பெயர்கள்
#83
** சரண் புகல்
மறை புகல் கிளவி சரண் புகல் ஆகும்
** 2 பெயர்கள்
#84
** எண்ணல்
கரணமும் கணிதமும் கணக்கும் எண்ணல்
** 3 பெயர்கள்
#85
** நிமித்தம்
சோதனம் சோதிடம் நிமித்தச் சொல்லே
** 2 பெயர்கள்
#86
** உடன் நிகழ்வு
ஒடு என் கிளவி உடன்நிகழ்வு ஆகும்
** 1 பெயர்
#87
** பெயர்
அபிதானம் ஆக்குவயம் நாமமும் பெயரே
** 3 பெயர்கள்
#88
** ஆதார நிலை
கந்தும் ஆலம்பமும் ஆலம்பனமும்
தஞ்சமும் தூவும் ஆதாரநிலையே
** 5 பெயர்கள்
#89
** பேரறிவு
முதுக்குறைவு பேரறிவு முகரிமையும் ஆகும்
** 2 பெயர்கள்
#90
** உள்ளது சிறத்தல்
கூர்ப்பும் களிப்பும் உள்ளதுசிறத்தல்
** 2 பெயர்கள்
** 2. உள்ளத்தின் தீய வகை
#91
** தீவினை
பவமும் பாவமும் பாதகமும் தீவினை
** 3 பெயர்கள்
#92
** தாழ்வு
சாய்ப்பும் இழிவும் தண்மையும் தஞ்சமும்
தாழ்வு என் கிளவித் தன்மையது ஆகும்
** 4 பெயர்கள்
#93
** கூம்புதல்
சாம்புதல் ஒடுங்குதல் கூம்புதல் ஆகும்
** 2 பெயர்கள்
#94
** அச்சம்
உருமும் உருவும் உட்கும் பனிப்பும்
வெருவும் புலம்பும் வெறியும் பயமும்
பிறப்பும் கொள்னும் பேமும் நாமும்
வெறுப்பும் சூரும் பீரும் வெடியும்
கவலையும் அடுப்பும் கலக்கமும் அச்சம்
** 19 பெயர்கள்
#95
** குலைதல்
ஓடல் வெய்துறல் உலமரல் தேங்கல்
கூசல் திட்கல் குலையல் துணுக்கெனல்
வெள்கல் துண்ணெனல் தெருமரல் அளுக்கல்
ஞொள்கல் பிறவும் குலைதலின் நுவல் பெயர்
** 13 பெயர்கள்
#96
** நடுக்கம்
விதிர்ப்பு பனிப்பு விதலை கம்பம்
அதிர்ப்பு பொதிர்ப்பு விதப்பு நடுக்கம்
** 7 பெயர்கள்
#97
** கலக்கம்
கதனமும் துரிதமும் பிரமமும் கலக்கம்
#98
** மற்றும் கலக்கம்
வெறி என்று உரைப்பதும் அப் பெயர் மேற்றே
** 4 பெயர்கள் 98
#99
** எளிமை
எண்மை பரிபவம் இழிதகவும் எளிமை
#100
** மற்றும் எளிமை
தண்மை என்பதும் அதன்பால் சாற்றும்
** 4 பெயர்கள் 100
#101
** பேதைமை
பேதைமை மடமை வெறியே மருட்சி
** 3 பெயர்கள் 101
#102
** மாசு
கசடும் மலினமும் கறையும் அழுக்கும்
மலமும் களங்கமும் மாசு ஆகும்மே
** 6 பெயர்கள் 102
#103
** குற்றம்
காசும் தவறும் கறையும் களங்கமும்
மாசும் வசையும் மறுவும் வடுவும்
ஆசும் புகரும் அரிலும் களையும்
ஏசும் பழியும் போக்கும் ஏதமும்
நறையும் வண்டும் கடவையும் நவையும்
மிறையும் பிழையும் விடலும் கரிலும்
தோமும் தப்பும் துகளும் புரையும்
கோதும் செயிரும் மையும் குற்றம்
#104
** மற்றும் குற்றம்
இழுக்கும் சோர்வும் புன்மையும் இகழ்ச்சியும்
வழுக்கும் கீழும் மறவியும் பொல்லாங்கும்
பொச்சாப்பு என்பதும் புகலும் அப் பெயர்க்கே
** 40 பெயர்கள் 104
#105
** வெம்மை
உருமமும் கருமமும் உருப்பமும் வெப்பமும்
அழனமும் கோரமும் அழலும் வெம்மை
** 7 பெயர்கள்
#106
** தோல்வி
நிலைஅழிவு ஓட்டம் பின்னிடல் தோல்வே
தொலைதல் தோற்றல் அஞ்சல் தோல்விப் பெயர்
** 7 பெயர்கள் 106
#107
** கொடுமை
கடுமை கோடணை சண்டம் கடினம்
கொடுமையின் பெயர் இவை கூரமும் ஆகும்
#108
** மற்றும் கொடுமை
உக்கிரம் கோரம் உறைப்பு பூதி
வக்கிரம் வஞ்சம் சடம் கரிலும் ஆமே
** 13 பெயர்கள் 108
#109
** மறப்பு
வழுக்கும் மறவியும் அயர்ப்பும் இவறலும்
மறப்பு என் கிளவி மறலும் ஆகும்
** 5 பெயர்கள் 109
#110
** வறுமை
மிசை குறை மிடியே தரித்திரம் ஒற்கம்
இலம்பாடு இலாமை நல்குரவும் வறுமை
#111
** மற்றும் வறுமை
மறலும் இன்மையும் நிரப்பும் மற்று அதன் பெயர்
** 11 பெயர்கள் 111
#112
** பகை
முனையும் முரணும் உறழ்வும் தூவும்
படியும் தெவ்வும் துப்பும் பகை என்ப
#113
** மற்றும் பகை
இகலும் செறலும் அதன் பெயர் என்ப
** 9 பெயர்கள் 113
#114
** வெகுளி
கறுவம் கோபம் கலாம் மறம் குரோதம்
வெகுளி என்பர் வேரமும் ஆகும்
** 6 பெயர்கள் 114
#115
** சினம்
முனிவும் செயிரும் சீற்றமும் வியர்ப்பும்
சினம் என் கிளவி தெரிக்குங்காலே
** 4 பெயர்கள் 115
#116
** சினக் குறிப்பு
கறுப்பும் செவப்பும் கஞறலும் கன்றலும்
வியர்ப்பும் வெதிர்ப்பும் புழுங்கலும் கொதித்தலும்
வெய்துறலும் புகைதலும் வயிரமும் இனைத்தும்
சினத்தின் குறிப்பினைத் தெரிக்கும் கிளவி
** 11 பெயர்கள் 116
#117
** தணியாக் கோபம்
கோம்பலும் கொந்தலும் கனிதலும் வெம்பலும்
வெதும்பலும் தணியாக் கோபம் என்ப
** 5 பெயர்கள் 117
#118
** பெருஞ் சினம்
உடற்றல் சீறல் உருத்தல் காய்தல்
முனைதல் விடைத்தல் பைத்தல் பெருஞ் சினம்
** 7 பெயர்கள் 118
#119
** தணியா முனிவு
சலமும் வயிரமும் செற்றமும் மற்று இவை
கறுவுகொள் நெஞ்சம் கடை முடிவு அளவும்
தணியா முனிவு தான் ஆகும்மே
** 3 பெயர்கள் 119
#120
** இகழ்தல்
எள்ளல் நகுதல் நிந்தை இகழ்தல்
** 3 பெயர்கள் 120
#121
** வருத்தம்
உயவே அனுக்கம் கவற்சி உயங்கல்
அயர்வே கசிவே ஆகுலம் அணங்கு
வயாவே அழுங்கல் வருத்தம் ஆகும்
** 10 பெயர்கள் 121
#122
** குணம் இன்மை
சீரணம் சிதம்பு சீத்தை செடி எனக்
கூடிய பலவும் குணம்இன்மை ஆகும்
** 4 பெயர்கள் 122
#123
** துக்கம்
அல்லல் பீடை அரந்தை கோட்டாலை
செல்லல் கலக்கம் சிறுமை உறுகண்
கவ்வை மம்மர் விழுமம் கவலை
எவ்வம் இன்னல் இடும்பை இடுக்கண்
படர் சூர் பைதல் பருவரல் பழங்கண்
இடர் அஞர் ஏதம் யாதனை இட்டளம்
கலக்கம் புன்கண் பனி நோய் கம்பலை
அலக்கண் வெய்துறல் அழுங்கல் பீழை
அலமரல் நடலை உறுவல் வெறுப்பே
கிலேசம் துயர் துனி துன்பம் துக்கம் ஆம்
#124
** மற்றும் துக்கம்
துரிசும் அல்லகண்டமும் துராலும்
சிலுகும் அலந்தலையும் செப்பற்கு உரித்தே
** 48 பெயர்கள் 124
#125
** சந்தேகம்
அனுமானமும் சங்கையும் சந்தேகம் ஆகும்
#126
** மற்றும் சந்தேகம்
ஐயுறல் கடுத்தலும் அப் பெயர்க்கு உரித்தே
** 4 பெயர்கள்
#127
** மயக்கம்
களிப்பும் மறமும் கழுமலும் பிறப்பும்
மாலும் மறலும் மையலும் மான்றலும்
இருளும் மைந்தும் ஏமமும் இளமையும்
மருளும் மயர்வும் மயக்கம் என்ப
#128
** மற்றும் மயக்கம்
மோகமும் உணராமையும் உன்மத்தமும்
களன் என் கிளவியும் அப் பெயர்க் கட்டுரை
** 18 பெயர்கள்
#129
** தீது
தீங்கும் கோளும் ஊறும் தீது எனல்
#130
** மற்றும் தீது
ஆங்கு அது மாயமும் அந்தரமும் என்ப
** 5 பெயர்கள்
#131
** பொய்
படிறும் மிச்சையும் பெட்டும் பழுதும்
வழுதும் தத்திகாரமும் மாயமும்
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே
** 10 பெயர்கள்
#132
** பொறாமை
நோனாமை வக்கிரம் அழுக்காறு அவ்வியம்
கூரம் என்பது பொறாமையின் கூற்றே
** 5 பெயர்கள்
#133
** சோம்பல்
தூங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே
#134
** மற்றும் சோம்பல்
சடம் மடி தள்ளாவாரமும் தகுமே
** 6 பெயர்கள்
#135
** வஞ்சனை
கூடம் புள்ளுவம் குத்திரம் கஞ்சம்
மாயை தொடு பட்டிமை வஞ்சனை ஆகும்
** 7 பெயர்கள்
#136
** வேறுபாடு
வீற்று விகிர்தம் விகடம் விரூபம்
வேற்றுமை விபரீதம் வேறுபாடு ஆகும்
#137
** மற்றும் வேறுபாடு
திரிபும் விள்ளலும் செப்பும் அப் பெயர்க்கே
** 8 பெயர்கள்
#138
** தளர்வு
எளிமை உடைதல் இட்டளம் தளர்வே
** 3 பெயர்கள் 138
#139
** தனிமை
கேவலமும் புலம்பும் தனிமையைக் கிளக்கும்
** 2 பெயர்கள் 139
#140
** பாவம்
தீவினை மறமே செடியே அகமே
துரிதம் கலுடம் பாவம் ஆமே
** 6 பெயர்கள் 140
#141
** விருப்பம்
மாதர் காதல் வயாவே வேட்கை
ஆதரவு ஆசை அவாவே ஆர்வம்
நச்சு நசை விழைவு நயப்பு காமம்
இச்சை பெட்பு மோகம் ஏட்டை
வெப்பம் பற்று விழுப்பம் வீழ்தல்
இவர்தல் கவர்தல் வேண்டல் பேணல்
வேட்டல் தாழ்தல் வெஃகலும் விருப்பம்
** 28 பெயர்கள் 141
#142
** வேட்கைப் பெருக்கம்
வேட்கைப்பெருக்கம் வேணவா ஆகும்
** 1 பெயர் 142
#143
** நோய்
மடங்கல் பிணி மடி மாரி பையுள்
அணங்கு வியாதி அவலம் நீழல்
உறுகண் புன்கண் உரோகம் சூர் நோய்
#144
** மற்றும் நோய்
சிறுமையும் குத்தும் அப் பெயர் தெரிக்கும்
** 15 பெயர்கள்
#145
** வேதனை நோய்
ஈதி வாதை வேதனை நோயே
** 2 பெயர்கள் 145
#146
** காமநோய்
விரகம் மதனம் காமக்கவலை
காமநோயின் கட்டுரை ஆகும்
** 3 பெயர்கள் 146
#147
** களவு
கரப்பு கட்டல் பட்டிமை சோர்வு
கயவு படிறு கரவடம் களவே
** 7 பெயர்கள் 147
#148
** பயன் இன்மை
வறிதும் கொன்னும் விழலும் விதாவும்
அல்லவை பயன்இல்சொல் ஆகும்மே
** 5 பெயர்கள் 148
#149
** மரணம்
முஞ்சலும் துவன்றலும் முடிதலும் விளிதலும்
துஞ்சலும் தவறலும் இறப்பும் பொன்றலும்
வீய்வும் உலப்பும் வீடலும் மாய்தலும்
மாண்டலும் மரித்தலும் சாவும் மரணம்
#150
** மற்றும் மரணம்
இல்லெனல் என்பதுவும் சொல்லப்படுமே
** 16 பெயர்கள் 150
#151
** சாய்தல்
இரிதல் நெரிதல் இடைதல் உடைதல்
கெடுதல் சரிதல் சாய்தல் ஆகும்
** 6 பெயர்கள் 151
#152
** பிணக்கு
அரில் மறல் அபரம் துவக்கு என அமைந்த
பெயர் இவை நான்கும் பிணக்கு என மொழிப
** 4 பெயர்கள் 152
#153
** முறிதல்
ஓடிதல் ஒசிதல் ஞெமிர்தல் இடிதல்
முரிதல் இறுதல் முறிதல் பெயரே
** 6 பெயர்கள் 153
#154
** கேடு
வழுவு சிதைவு மங்குதல் சேதம்
அழிவு சிந்துதல் நந்துதல் முரிதல்
இறுதல் சுதம் மடி ஒருங்கல் கேடு என்ப
** 12 பெயர்கள் 154
#155
** கொலை
கோளே அணங்கு வேட்டம் கொலை எனல்
** 3 பெயர்கள்
#156
** வெளிறு
வெண்மையும் தண்மையும் வெளிறு எனலாகும்
** 2 பெயர்கள் 156
#157
** புன்மை
நவிரம் என்பது புன்மை ஆகும்
** 1 பெயர் 157
#158
** இரங்குதல்
இனைதல் எற்றித்தல் இரங்குதல் ஆகும்
** 2 பெயர்கள்
#159
** அருவருப்பு
வாலாமை சூதகம் பயிர்ப்பு அருவருப்பே
** 3 பெயர்கள் 159
#160
** ஒழிதல்
ஓவும் மன்னும் ஒழிதல் சொல்லே
#161
** மற்றும் ஒழிதல்
ஏனையும் அப் பெயர் இயல்பு ஆகும்மே
** 3 பெயர்கள் 161
#162
** கலங்குதல்
கதுவே கலுழல் கலங்குதல் மலங்குதல்
** 3 பெயர்கள் 162
#163
** குலுங்குதல்
குலைதல் நடுங்குதல் குலுங்குதல் ஆகும்
** 2 பெயர்கள் 163
#164
** வாட்டம்
தேம்பலும் குழைதலும் அனுங்கலும் முளியும்
வாடலும் தளர்தலும் வாட்டம் எனலாகும்
** 6 பெயர்கள் 164
#165
** குழைதல்
சுனைதல் களைதல் குழைதல் ஆகும்
** 2 பெயர்கள் 165
#166
** மாறுபாடு
தெற்றே மாறுபாடு ஆகத் தெரிக்கும்
** 1 பெயர்
#167
** நிலை இன்மை
வம்பு என் கிளவி நிலைஇன்மையின் பெயர்
** 1 பெயர் 167
#168
** மேன்மை
கயவும் சாயலும் ஞெள்ளலும் மேன்மை
** 3 பெயர்கள் 168
#169
** மனக் கோட்டம்
அழுக்காறும் மனத்து அழுக்கும் அவ்வியமும் மனக்கோட்டம்
** 3 பெயர்கள் 169
** 3.மெய் வகை
#170
** பருமை
மெய் வகைக்கு இயன்றன விளம்புங்காலைப்
பரூஉம் பீனமும் தடித்தலும் பருமை
** 3 பெயர்கள் 170
#171
** இளைப்பு
தேம்பலும் பழங்கணும் சிங்கலும் தேய்வும்
நாம்பலும் ஞொள்கலும் மெலிவும் இளைப்பே
** 7 பெயர்கள் 171
#172
** வெண்மை
சுவேதம் தவளம் சுக்கிலம் குருத்து
விளர் வால் வெள்ளை நரை சிதம் வெண்மை
#173
** மற்றும் வெண்மை
குருகு பால் சுப்பிரம் என்னவும் கூறும்
** 12 பெயர்கள் 173
#174
** பொன்மை
பீதகம் பசப்பு பிங்கலம் அரிதம்
நாலும் காஞ்சனியும் பொன்மையின் பெயரே
** 5 பெயர்கள் 174
#175
** செவப்பு
அத்தும் அருணமும் அரத்தமும் சேப்பும்
சோணமும் குருதியும் துவரும் சிந்தூரமும்
பூவலும் படீரமும் சேத்தும் அரக்கும்
செக்கரும் செம்மையும் சேந்தும் பாடலமும்
கிஞ்சுகமும் குலிகமும் துப்பும் செவப்பே
** 19 பெயர்கள் 175
#176
** பச்சை
பாசும் பையும் அரியும் பசுமையும்
பலாசும் சாமமும் அரிதமும் பச்சை
** 7 பெயர்கள் 176
#177
** கருநிறம்
காளமும் காழகமும் காளிமமும் காரி மால்
மாவும் இருளும் நீலமும் அசிதமும்
காரும் அஞ்சனமும் நல்லமும் கருளும்
ஆகும் கருநிறத்து அபிதானம்மே
** 13 பெயர்கள் 177
#178
** புற்கெனும் நிறம்
கபிலம் குரால் புகர் புற்கெனும் நிறமே
** 3 பெயர்கள் 178
#179
** ஒளி
வெயிலும் நிலவும் வில்லும் வாளும்
நிழலும் எல்லும் நீமமும் நகையும்
கானலும் கரணமும் கதிரும் செடியும்
சோதியும் மின்னும் துணியும் அரியும்
கேழும் கரமும் தேசும் கிளர் ஒளி
#180
** மற்றும் ஒளி
ஆதவம் என்பதும் அதன்பாற்படும்
** 21 பெயர்கள் 180
#181
** ஒளி விடுதல்
விளங்குதல் நகுதல் மின்னல் மிளிர்தல்
துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல்
இரங்கல் வயங்கல் இலகுதல் இமைத்தல்
அலங்கல் தயங்கல் அவிர்தல் நிலவல்
ஒளிர்தல் என்று இவை ஒளிவிடல் ஆகும்
** 17 பெயர்கள் 181
#182
** ஒளி மழுங்குதல்
மட்கல் புல்லெனல் மழுங்குதல் அழுங்குதல்
ஒளிமழுங்குதல் என உரைத்தல் வேண்டும்
** 4 பெயர்கள் 182
#183
** அழகு
ஏரும் வனப்பும் எழிலும் இராமமும்
காரிகையும் மாவும் அம்மையும் கவினும்
செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும்
அணியும் அணங்கும் யாணரும் பாணியும்
மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும்
வண்ணமும் வளமும் பூவும் பொற்பும்
சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும்
மாமையும் தளிமமும் மயமும் மஞ்சும்
மதனும் பாங்கும் அம்மும் சொக்கும்
சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும்
அந்தமும் ஒண்மையும் விடங்கமும் அமலமும்
குழகும் கோலமும் வாமமும் காந்தியும்
அழகின் பெயர் அலங்காரமும் ஆகும்
#184
** மற்றும் அழகு
கொம்மையும் மனோகரமும் சாருவும் கூறுப
** 52 பெயர்கள்
#185
** கட்டழகு
சித்திரம் மனோகரம் சுந்தரம் கட்டழகே
** 3 பெயர்கள் 185
#186
** நிறம்
குருவும் கொழுமையும் குணமும் கெழுமையும்
அரியும் சாயலும் வருணமும் அன்றிப்
பயப்பும் கறையும் கருவும் நிறமே
** 10 பெயர்கள் 186
#187
** வடிவம்
செண்ணம் படிவம் வடிவம் என்ப
** 2 பெயர்கள் 187
#188
** வண்ணம்
வண்ணம் சந்தம்
** 1 பெயர் 188
#189
** வளைதல்
குடிலம் தடவு கூன் கோண் கோட்டம்
வசிவு கோணல் வாங்கல் குலாவல்
வளாவல் என்று இன்னவை வளைதல் ஆகும்
** 10 பெயர்கள் 189
#190
** இளைமை
மழவும் முருகும் தருணமும் மஞ்சும்
குழவும் விளரும் கொம்மையும் புருவையும்
கோமளமும் போதகமும் இளைமையின் கூற்றே
** 10 பெயர்கள் 190
#191
** முதுமை
முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல்
#192
** மற்றும் முதுமை
விளைவும் சாம்பலும் விதந்து கொளப்படுமே
** 5 பெயர்கள்
#193
** கலியாணம்
வதுவை மன்றல் மணம் கலியாணம்
#194
** மற்றும் கலியாணம்
கடியும் வேட்டலும் கைப்பற்றலும் ஆகும்
** 6 பெயர்கள்
#195
** கொண்டாடுதல்
குலாவல் பாராட்டு கொண்டாடுதலே
** 2 பெயர்கள்
#196
** அலங்கரித்தல்
புனைதலும் மண்ணலும் பொற்புறுத்துதலும்
அணிதலும் கைசெய்தலும் அலங்கரித்தல்
** 5 பெயர்கள்
#197
** சிங்காரம்
அணியே பொற்பு கை அலங்காரம்
தெரியின் ஒப்பனையும் சிங்காரம் ஆகும்
** 5 பெயர்கள்
#198
** புதுமை
புதை புணர் விருந்து புத்தேள் கடி நவம்
நூதனம் கோடகம் வம்பு இவை புதுமை
** 9 பெயர்கள்
#199
** மகளிர் விளையாட்டு
தொடலையும் தகுளமும் மகளிர்விளையாட்டே
** 2 பெயர்கள்
#200
** சூடுதல்
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல்
** 3 பெயர்கள்
#201
** இகுத்தல்
செகுத்தல் இகுத்தல்
** 1 பெயர்
#202
** மீளுதல்
திரிதல் மீளுதல்
** 1 பெயர்
#203
** புறம்
புறணியும் புடமும் புறம் எனலாகும்
** 2 பெயர்கள்
#204
** பதுங்கல்
பழகலும் ஒடுங்கலும் பாந்தலும் பதுங்கல்
** 3 பெயர்கள்
#205
** ஆர்தல்
அசைதல் தெவிட்டல் இறுத்தல் ஆர்தல்
#206
** மற்றும் ஆர்தல்
வதிதல் வைகல் இறையும் அப் பெயர்
** 6 பெயர்கள்
#207
** அடக்கம்
முடக்கமும் நொறிலும் மடங்கும் முணங்கும்
ஒடுக்கமும் அடக்கம் ஒருங்கும் ஆமே
** 6 பெயர்கள் 207
#208
** கூடல்
விழைச்சும் பிணைச்சும் விழைவும் மைதுனமும்
புணர்ச்சியும் கூடல் புகலும் கிளவி
அணைதல் கலவி சையோகமும் ஆகும்
#209
** மற்றும் கூடல்
மணத்தல் பயினி மற்று இவை கூடுதல்
** 10 பெயர்கள் 209
#210
** பிரிதல்
நீத்தல் தவிர்தல் அகலல் உணர்தல்
தணத்தல் வல்லி பகல் இவை பிரிதல்
** 7 பெயர்கள் 210
#211
** புலத்தல்
புலவி ஊடல் புலத்தல் ஆகும்
** 2 பெயர்கள் 211
#212
** புலவிநீடுதல்
துனி என் கிளவி புலவி நீடுதல்
** 1 பெயர் 212
#213
** கலத்தல்
புணர்தல் படிதல் தோய்தல் சார்தல்
கலவல் மேவல் கலத்தல் ஆகும்
** 6 பெயர்கள் 213
#214
** அளவளாவல்
கலாவலும் துழாவலும் வளாவலும் சிவணலும்
புணர்தலும் பொருந்தலும் அளவளாவல் பெயர்
** 6 பெயர்கள் 214
#215
** வணங்கல்
வந்தனை பணிதல் தண்டன் வணக்கம்
பரவல் இறைஞ்சல் தாழ்தல் காண்டல்
வந்தித்தல் போற்றல் வணங்கல் ஆகும்
** 10 பெயர்கள் 215
#216
** சிறைப் படல்
வலைப்படல் தளைப்படல் சிறைப்படல் ஆகும்
** 2 பெயர்கள் 216
#217
** சருச்சரை வடிவு
பிணரே சருச்சரை வடிவினது ஆகும்
** 1 பெயர் 217
#218
** தாழ்தல்
இறைஞ்சலும் குரங்கலும் தாழ்தலை இசைக்கும்
** 2 பெயர்கள்
#219
** அலைதல்
நடுங்கல் ஆஞ்சி ஞெகிழ்தல் ஞொள்கல்
அழுங்குதல் சோம்பு எனல் அலைதலும் ஆகும்
** 6 பெயர்கள்
#220
** சுமத்தல்
பரித்தல் பொறுத்தல் தரித்தல் சுமத்தல்
** 3 பெயர்கள்
#221
** ஏறுதல்
எக்கல் இவரல் மீக்கோள் ஏறுதல்
** 3 பெயர்கள் 221
#222
** எதிர்தல்
முட்டல் கிடைத்தல் முடுகல் நேர்தல்
ஏற்றல் தலைப்படல் எதிர்தல் ஆகும்
** 6 பெயர்கள்
#223
** மீதூரல்
இடங்கழி நெருங்குதல் மீதூரல் ஆகும்
** 2 பெயர்கள் 223
#224
** ஒருங்கு
உடங்கு ஒருங்கு ஆகும்
** 1 பெயர்
#225
** வடுப்படுத்தல்
கதுவாய் வடுப்படுத்தல் ஆகக் கருதுவர்
** 1 பெயர்
#226
** சொறி
கண்டூதி தினவு சொறி எனக் கழறும்
** 2 பெயர்கள் 226
#227
** பொங்குதல்
பூரித்தல் மிகுதல் பொங்குதல் ஆகும்
** 2 பெயர்கள் 227
#228
** வேர்த்தல்
வேர்த்தல் வியர்ப்பு
** 1 பெயர் 228
#229
** விடுதல்
விடுதல் உயிர்த்தல்
** 1 பெயர் 229
#230
** மூடுதல்
போர்வை மூய்தல் கவித்தல் மூடுதல்
** 3 பெயர்கள் 230
#231
** பூணல்
புனைதல் ஆர்த்தல் பூணல் ஆகும்
** 2 பெயர்கள்
#232
** இயைபு
இயைபே புணர்ச்சி இசைப்பு இவை ஆகும்
** 2 பெயர்கள்
#233
** மஞ்சனம்
நானம் என்பது மஞ்சனம் ஆகும்
** 1 பெயர்
#234
** குளித்தல்
தோய்தலும் படிதலும் ஆடலும் அன்றிக்
குடைதலும் மூழ்கலும் குளித்தலின் கூற்றே
** 5 பெயர்கள்
#235
** பிறகிடல்
பின்றல் பிறக்கிடல் பிறகிடல் ஆகும்
**2 பெயர்கள்
#236
** கருவுள்அமைப்பும் மெய்படு பருவமும்
பேறு இழவு இன்பம் பிணி மூப்பு சாக்காடு என்று
ஆறு உள அ நாள் அமைந்தன அறியக்
கூறிய புலவர் கோட்பாடு அன்றியும்
பாளை பாலன் காளை இளையோன்
முதியோன் என்ன விதி வழி வந்த
மெய்யே மெய்யின் மேம்படு குணமே
** 6, 5 பெயர்கள்
** 4 வாய் வகை
#237
** இன் சுவை
வாய் வகை இயல்பு வகுக்குங்காலை
தீம் என் கிளவியோடு இரதம் இன்சுவை
** 2 பெயர்கள்
#238
** அழைத்தல்
கேதல் உளைத்தல் இகுத்தல் விளித்தல்
மா எனல் கூவுதல் வா எனல் மத்தல்
கரைதல் ஆகருடணை இவையே அன்றி
அகவல் என்பதும் அழைத்தல் ஆகும்
** 11 பெயர்கள்
#239
** சிரிப்பு
மூரலும் இளியும் முறுவலும் நகையும்
ஆசமும் சிரிப்பு எனல் ஆர்ப்பும் ஆகும்
** 6 பெயர்கள்
#240
** உண்டல்
அயிறல் மிசைதல் அருந்துதல் நுகர்தல்
துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல்
ஆர்தல் மாந்தல் கைதொடல் உண்டல்
#241
** மற்றும் உண்டல்
பானகம் போனகம் பண்பொடு வருமே
** 13 பெயர்கள்
#242
** குடித்தல்
பருகல் மாந்தல் பானம் குடித்தல்
** 3 பெயர்கள்
#243
** விழுங்கல்
நுங்கல் நுகர்தல் விழுங்கல் என்று ஆகும்
** 2 பெயர்கள்
#244
** இயம்பல்
கதையும் நுவலும் காதையும் கிளவியும்
பனுவலும் அறையும் பறையும் வாணியும்
கூற்றும் மொழியும் குயிறலும் புகறலும்
மாற்றமும் மறையும் நொடியும் பரவலும்
இசையும் இயமும் பேச்சும் உரையும்
எதிர்ப்பும் என்று இவை இயம்பல் ஆகும்
** 21 பெயர்கள்
#245
** வாசகம்
வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம்
** 3 பெயர்கள்
#246
** பதம்
பாழியும் உரையும் பதம் எனலாகும்
** 2 பெயர்கள்
#247
** பேசுதல்
இசைத்தல் இறுத்தல் இயம்பல் புகறல்
பிதற்றல் என்று இவை பேசுதல் ஆகும்
** 5 பெயர்கள்
#248
** பல் கால் விளம்புதல்
மீதுரை பல் கால் விளம்புதல் ஆகும்
** 1 பெயர்
#249
** துதித்தல்
பரவல் வழுத்தல் ஏத்தல் போற்றல்
பழிச்சல் வாழ்த்தல் துதித்தல் ஆகும்
** 6 பெயர்கள்
#250
** வாழ்த்து
ஆசிடை ஆசி வாழ்த்து ஆகும்மே
** 2 பெயர்கள்
#251
** சொல்லுதல்
இயம்பல் விரித்தல் மொழிதல் விளம்பல்
பகர்தல் பன்னல் நவிறல் கத்துதல்
உரைத்தல் கூறல் வழங்கல் குயிலல்
புகலல் பேசல் நொடிதல் பிறழ்தல்
பறைதல் செப்பல் அதிர்த்தல் பணித்தல்
சொற்றல் ஆடல் சொல்லுதல் என்ப
** 22 பெயர்கள்
#252
** படித்தல்
பாடல் ஓதல் வாசித்தல் படித்தல்
** 3 பெயர்கள் 252
#253
** பெருஞ் சொல்
பெருஞ்சொல் பலர் அறி சொல் எனப் பெயர் பெறும்
** 1 பெயர் 253
#254
** சிறுசொல்
சிறுசொல் இழிச்சொல் தீச்சொல் பழிச்சொல்
** 3 பெயர்கள் 254
#255
** பழி மொழி
அம்பலும் கெளவையும் அலரும் பழிமொழி
** 3 பெயர்கள் 255
#256
** திசைச்சொல்
தேசிகம் என்பது திசைச்சொல் ஆகும்
** 1 பெயர் 256
#257
** மறைத்து மொழி கிளவி
இடக்கர் மறைமொழி எக்கரும் ஆகும்
** 2 பெயர்கள் 257
#258
** சிலர் அறிந்து தம்முள் தூற்றல்
அம்பல் சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல்
** 1 பெயர் 258
#259
** பலர் அறிந்து தூற்றல்
அலரே பலரும் அறிந்து அலர் தூற்றல்
**1 பெயர் 259
#260
** உறுதிக் கட்டுரை
கழறலும் இடித்தலும் நெருங்கலும் என்று இவை
உறுதிக்கட்டுரை என உரைத்தனரே
** 3 பெயர்கள் 260
#261
** நயச் சொல்
முகமன் சம்மானம் உபசாரம் நயச்சொல்
** 3 பெயர்கள் 261
#262
** குறளை மொழி
கொடுவாய் பிசுனம் தொடுப்பு குஞ்சம்
குறளைமொழி கொண்டியமும் ஆகும்
** 5 பெயர்கள் 262
#263
** அசதியாடல்
அசதி நகல் நயக்கிளவி ஆகும்
** 2 பெயர்கள் 262
#264
** நிரம்பா மென் மொழி
குதலை மழலை கொஞ்சல் உல்லாபம்
மிழலை நிரம்பா மென்மொழி ஆகும்
** 5 பெயர்கள் 264
#265
** சத்தியம்
ஆணை வஞ்சினம் சபதம் சத்தியம்
#266
** மற்றும் சத்தியம்
சூளே விரதம் சூளுறவும் ஆகும்
** 6 பெயர்கள் 266
#267
** முது சொல்
மொழிமை மூதுரை முன்சொல் பழஞ்சொல்
முதுசொல் என்பர் பழமொழியும் ஆமே
** 5 பெயர்கள் 267
#268
** நல் நிமித்தம்
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம்
** 2 பெயர்கள் 268
#269
** கதை
கதை என்று உரைப்பது காரணச்சொல் எனல்
** 1 பெயர் 269
#270
** வினாவல்
வினாவல் கடாவல்
** 1 பெயர்
#271
** எதிர் மொழி
விடை அதற்கு எதிர்மொழி
** 1 பெயர்
#272
** வினாவும் விடையும்
** கூடிய பொருள்
வினாவொடு விடையும் விளம்புதல் சல்லாபம்
** 1 பெயர் 272
#273
** பாயிரம்
அணிந்துரை பெய்துரை புனைந்துரை நூன்முகம்
முகவுரை தந்துரை புறவுரை பாயிரம்
** 7 பெயர்கள் 273
#274
** சத்தி பண்ணல்
உமிழ்தல் தெவிட்டல் கான்றல் ஓங்கல்
உக்காரம் சத்தி அன்றிக் கக்கல்
#275
** மற்றும் சத்தி பண்ணல்
அபனம் என்பதும் அதன் பெயர் ஆகும்
** 7 பெயர்கள் 275
#276
** எச்சில்
மிச்சில் பேளிகை உச்சிட்டம் விசதம்
எச்சில் என்றற்கு இழவும் ஆகும்
** 5 பெயர்கள் 276
#277
** கொட்டாவி
ஆவித்தல் கொட்டாவி ஆகும் என்ப
** 1 பெயர் 277
** 5. கண் வகை
#278
** கண்ணோட்டம்
கண்ணிற்கு அமைந்த கடன் நெறி கூறின்
கண்மை நாகரிகம் பார்வை கண்ணோட்டம்
#279
மற்றும் கண்ணோட்டம்
கண் என்பதும் அக் கட்டுரை ஆகும்
** 4 பெயர்கள்
#280
** உற்சவம்
சாறு முருகு துணங்கறல் விழாவுடன்
ஓதும் சேறும் உற்சவம் ஆகும்
** 5 பெயர்கள்
#281
** தூங்கல்
கனவு துயிலே கண்படை அனந்தல்
படலே நித்திரை பள்ளி உறக்கம்
துஞ்சல் உறங்கல் தூங்கல் ஆகும்
** 10 பெயர்கள்
#282
** நிரம்பாத் துயில்
தூங்கல் நிரம்பாத்துயிலும் ஆமே
** 1 பெயர்
#283
** அழுகை
கலக்கம் உரோதனம் கலுழ்ச்சி அழுகை
#284
** மற்றும் அழுகை
அரற்றல் இரங்கல் விம்மல் பொருமல்
ஏங்கல் இராவணம் ஆங்கு அதன் நிலையே
** 9 பெயர்கள்
#285
** துயில் ஒழிதல்
சாகரம் என்பது துயில்ஒழிதல் ஆகும்
** 1 பெயர்
#286
** கண் பார்வை
விழித்தல் கண்பார்வை
** 1 பெயர்
#287
** கண்மூடல்
சிமிழ்த்தல் கண் மூடல்
** 1 பெயர்
#288
** காண்டல்
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல்
** 3 பெயர்கள்
#289
** கண்ணுறல்
காட்சி என்பது கண்ணுறல் ஆகும்
** 1 பெயர்
#290
** கண் இமை
கண்இமை இதழ் விளிம்பு என்னவும் பெறுமே
** 2 பெயர்கள்
** 6 மூக்கின் வகை
#291
** கந்தித்தல்
மூக்கின் இயல்பு மொழியும்காலை
மணமும் முருகும் மன்றலும் வாசமும்
விரையும் வதுவையும் நானமும் வேரியும்
கடியும் தேனும் வம்பும் கானும்
நறையும் கந்தமும் மோதமும் நாற்றமும்
கமழலும் வெறியும் கந்தித்தல் ஆகும்
** 18 பெயர்கள்
#292
** நறு மணம்
சுகந்தம் நறுமணம்
** 1 பெயர்
#293
** பெருமணம்
பரிமளம் பெருமணம்
** 1 பெயர்
#294
** மூச்சு
தும்மல் மூச்சு சுவாதம் கொறுக்கை
இரேசகம் பூரகம் கும்பகம் அன்றிச்
சுவாசம் நிசுவாசம் சொல்லப்பெறுமே
** 8 பெயர்கள்
** 7 செவி வகை
#295
** கல்வி
செவியில் தேறும் திறன் இனிது உரைக்கில்
உறுதியும் கேள்வியும் ஓதியும் கலையும்
பனுவலும் கல்விப் பெயர் எனப் பகரும்
** 5 பெயர்கள்
#296
** சொல் மாலை
தோற்றம் சீர் ஒளி சுலோகம் சொல்மாலை
** 4 பெயர்கள்
#297
** புகழ்
ஏற்றம் கியாதம் இசை மெய்ப்பாடு
சீர்த்தி கீர்த்தி சொல் திகழ் புகழ் ஆகும்
#298
** மற்றும் புகழ்
மீக்கூற்று என்று விளம்பவும்பெறுமே
** 8 பெயர்கள்
#299
** நூல்
அதிகாரம் பிடகம் ஆரிடம் தந்திரம்
பனுவல் ஆகமம் சூத்திரம் நூலே
** 7 பெயர்கள்
#300
** நற்பொருள்
ஞாபகம் பிசி இவை நற்பொருள் ஆகும்
** 2 பெயர்கள்
#301
** வேதம்
இருக்கு சுருதி மறை எழுதாக்கிளவி
ஆதிநூல் சாகை ஆரணம் வேதம்
** 7 பெயர்கள்
#302
** முதல் வேதம்
பெளடிகம் இருக்கு முதல் வேதம் ஆகும்
** 2 பெயர்கள்
#303
** இரண்டாம் வேதம்
இரண்டாம் வேதம் யசு தைத்திரியம்
** 2 பெயர்கள்
#304
** மூன்றாம் வேதம்
மூன்றது சாமவேதம் கீதநடை
** 2 பெயர்கள்
#305
** நான்காம் வேதம்
நான்காம் வேதம் அதர்வணம் என்ப
** 1 பெயர்
#306
** வேதத்து உள் பொருள்
உபநிடதம் வேதத்தின் உட்பொருள் ஆகும்
** 1 பெயர்
#307
** வேத மார்க்கம்
வைதிகம் வேதமொழி மார்க்கம் ஆகும்
** 1 பெயர்
#308
** உதாரணம்
இதிகாசம் இலக்கியம் எடுத்துக்காட்டல்
உதாரணம் என உரைக்கப்படுமே
** 3 பெயர்கள்
#309
** ஆகமம்
ஆகமம் ஞானம்
** 1 பெயர்
#310
** அத்தியாயம்
படலம் இலம்பகம் சருக்கம் காண்டம்
பரிச்சேதம் அத்தியாயம் ஆகும்
** 5 பெயர்கள்
#311
** நூற்பா அகவல்
அடி வரை இன்றி விழுமிதின் நடக்கும்
நூற்பா அகவல் சூத்திரம் ஆகும்
** 1 பெயர்
#312
** ஓத்து
நிரல்பட வைப்பது ஒத்து என மொழிப
#313
** படலம்
பொதுமொழி தொடர்வது படலம் ஆகும்
#314
** பொழிப்புரை
பொழிப்புரை பிண்டப் பொருளது என்ப
#315
** விரித்துரை
விரித்துரை பதவுரை விரித்த சூரணை
தொகுதி பகுதிப் பொருளது ஆகும்
** 3 பெயர்கள்
#316
** கீர்த்தியின் ஏற்றம்
ஏற்றம் கியாதம் மிகைப்பாடு என்ப
** 2 பெயர்கள்
#317
** தன் மேம்பாடு தான் நிகழ்த்தல்
நெடுமொழி தன் மேம்பாட்டு உரை என்ப
** 1 பெயர்
#318
** சோபனம்
பல்லாண்டு சோபனம்
** 1 பெயர்
#319
** பழிச்சொல்
பழிச் சொல் பரிவாதம்
** 1 பெயர்
#320
** பிடித்து ஒன்றைப் பேசுதல்
பிடித்து ஒன்றைப் பேசுதல் பிதற்றுதல் ஆகும்
** 1 பெயர்
#321
** வெண்பா
முதற்பா வெண்பா
** 1 பெயர்
#322
** கலிப்பா
விகற்பம் கலிப்பா
** 1 பெயர்
#323
** ஆசிரியப்பா
அகவலும் தொகையும் ஆசிரியப்பா
** 2 பெயர்கள்
#324
** வஞ்சிப் பா
அதனின் விகற்பம் வஞ்சி ஆகும்
#325
** அராகம்
அராகம் முடுகியல் வண்ணம் ஆகும்
** 2 பெயர்கள்
#326
** குளகச் செய்யுள்
குற்றெழுத்துத்தொடரின் அது குளகச்செய்யுள்
#327
** கணக்கு
எழுத்தும் எண்ணும் கணக்கு என்று ஆகும்
** 2 பெயர்கள்
#328
** எண்
எண்ணே கரணமும் கணிதமும் என்ப
** 2 பெயர்கள்
#329
** நால் வகை எழுத்து
வடிவு பெயர் தன்மை முடிவு நான்கு எழுத்தே
** 4 பெயர்கள்
#330
** ஒற்று எழுத்து
விராமமும் புலுதமும் மெய்யும் ஒற்றுஎழுத்தே
** 3 பெயர்கள் 330
#331
** இரு வகைப் பாயிரம்
பாயிரம் பொது திறப்பு வம இரு பாற்றே
** 3 பெயர்கள் 331
#332
** முதல்வன் வாக்கு
ஆகமம் முதல்வன் வாக்கு அது ஆகும்
** 1 பெயர் 322
#333
** அந்தணர்க்கு உரிய மார்க்கம்
அந்தணர் அவர்க்கே வேதமார்க்கம்
** 2 பெயர் 249
#334
** தந்திரம்
மிருதி ஆரிடம் பனுவல் தந்திரம்
** 3 பெயர்கள் 334
#335
** பா
தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும்
பாட்டும் தொடர்பும் பா என்று ஆகும்
** 6 பெயர்கள் 335
#336
** உலக்கைப் பாட்டு
உலக்கைப்பாட்டே வள்ளைப்பாட்டு என்ப
** 1 பெயர் 336
#337
** இடத்தின் சந்தேகச் சொல்
யாண்டையும் யாங்கும் இடத்தின் ஐயுறல் சொல்
** 2 பெயர்கள் 337
#338
** ஐயச் சொல்
யாது எவன் என்னை ஏது கொல் ஐயம்
** 5 பெயர்கள் 338
#339
** இசை நிறை அசைச் சொல்
ஏயும் குரையும் இசைநிறை அசைச்சொல்
** 2 பெயர்கள் 339
#340
** முன்னிலை அசைச்சொல்
மியா இக மோ மதி இகும் சின் என்னும்
இன்னவை முன்னிலை அசைச்சொல் என்ப
** 6 பெயர்கள் 340
#341
** சுட்டு
அ இ உ அ மூன்றும் சுட்டே
** 3 பெயர்கள்
#342
** வினா
ஆ ஏ ஓ அ மூன்றும் வினாவே
** 3 பெயர்கள்
#343
** சாரியைச் சொல்
இன்னே வற்றே இக்கே அம்மே
ஒன்னே ஆனே அக்கே அன்னே
இன்னவை எல்லாம் சாரியைச் சொல்லே
** 8 பெயர்கள் 343
#344
** எழுத்தின் சாரியை
கரமும் கானும் காரமும் அகரமும்
ஏனமும் பிறவும் எழுத்தின் சாரியை
** 5 பெயர்கள் 344
#345
** இடைச் சொல்
அரோ போ மாது ஓ அல் ஆல் உறை கெழு
ஆங்கு தெய்ய என ஏ ஞான்று
அந்தில் ஓரும் இனைய இடைச்சொல்
** 15 பெயர்கள்
#346
** அதிசய மொழி
ஆஅ ஓஓ அத்தோ அந்தோ
அன்னோ ஐயோ அக்கோ அச்சோ
என்னோ எற்றே இவை அதிசயமொழி
** 10 பெயர்கள்
#347
** இகழ்ச்சிக் குறிப்பு
ஏஎ சீச்சீ எல் என் இகழ்மொழி
** 4 பெயர்கள்
#348
** வேற்றுமை உருபு
ஐ ஒடு கு இன் அது கண் என்னும்
அவ் ஆறு என்ப வேற்றுமைஉருபே
** 6 பெயர்கள் 348
#349
** ஒலி
ஆரவாரம் கம்பலை அரவம்
கோடணை புலம்பு கோசணை உளையே
நாதம் ஓதை ஆகுலம் துழனி
இடி இசை கம்மை ஓசை தொனியே
உரையே பாடு சத்தம் ஒலி எனல்
** 19 பெயர்கள் 349
#350
** ஆபரண ஓசை
சிஞ்சிதம் ஆபரணஓசை ஆகும்
** 1 பெயர் 350
#351
** எடுத்தல் ஒசை
முரல்வும் நரல்வும் முக்கலும் பயிறலும்
தெளிறலும் ஞெளிர்தலும் சிரற்றலும் பிரற்றலும்
குளிறலும் குமுறலும் குருமித்தலும் நெளிர்தலும்
அகவலும் எடுத்தல் ஒசைப் பெயரே
#352
** மற்றும் எடுத்தல் ஒசை
உளை என்று உரைத்தலும் அப் பெயர்க்கு உரித்தே
** 14 பெயர்கள் 352
#353
** தொனித்தல்
கலித்தல் கனைத்தல் கறங்கல் கதித்தல்
சிலைத்தல் சிலம்பல் இரைத்தல் இரட்டல்
இடித்தல் இசைத்தல் உளைத்தல் உரப்பல்
உரற்றல் உழம்பல் முரற்றல் இரற்றல்
முழங்கல் தழங்கல் கத்தல் புலம்பல்
அழுங்கல் இயம்பல் துவைத்தல் இரங்கல்
தெழித்தல் குரைத்தல் கொழித்தல் நரற்றல்
தெவிட்டல் ஆலித்தல் இமிழ்த்தல் குமுறல்
ஏங்கல் விம்மல் பிளிறல் தொனித்தல்
** 35 பெயர்கள் 353
#354
** பேரொலி
திமிலம் குமிலம் திமிர்தம் திமிதம்
களகளம் என்பன பேரொலிக் கட்டுரை
#355
** மற்றும் பேர் ஒலி
குமுதம் என்பதும் அப் பெயர்க் கூற்றே
** 6 பெயர்கள் 355
#356
** ஆரவாரம்
அலம்பல் உளறல் அரற்றல் ஏம்பல்
தழங்கல் பிளிறல் கலித்தல் குமுறல்
பூசல் தமரம் கோசணை உலம்பல்
ஆகுலம் கோலாகலம் ஆரவாரம் என்ப
** 14 பெயர்கள் 356
#357
** கதறல்
அரற்றலும் முரற்றலும் அழைத்தலும் கத்தலும்
கதறல் என்னும் கட்டுரை ஆகும்
** 4 பெயர்கள் 357
#358
** அனுகரண ஓசை
இம் எனல் கல் எனல் இழும் எனல் வல் எனல்
பொம் எனல் ஒர் எனல் பொள் எனல் ஞெரேல் எனல்
கொம் எனல் சரேல் எனல் ஞொள் எனல் கொல் எனல்
அம் எனல் பிறவும் அனுகரணஓசை
** 13 பெயர்கள் 358
#359
** அனுகரண உபய ஓசை
வெடுவெடு எனல் திடுதிடு எனல் களகளெனல்
கொள்கொளெனல் நெடுநெடு எனல் மொகமொக
எனல் நெறுநெறு எனல் படபடெனல்
மொடுமொடு எனல் சடசடெனல் சளசளெனல்
கலகலெனல் சலசலெனல் கிடுகிடு எனல் ஆம்
அன்ன பிறவும் அனுகரணஉபயஓசைப் பெயரே
** 14 பெயர்கள் 359
#360
** கலப்புக் கட்டோசை
உளறல் தெழித்தல் உலப்பல் அலப்பல்
பூசல் குமுறல் துவைவரல் துவைத்தல்
ஆகுலம் கோடணை கோலாகலமே
ஆர்ப்பு தமரம் கலப்புக்கட்டோசை
** 13 பெயர்கள் 360
#361
** அடர் ஒலி
அதிர்த்தல் தெழித்தல் அதட்டல் உறைத்தல்
உரப்பல் அடர்ஒலிப் பெயர் அது ஆகும்
** 5 பெயர்கள்
#362
** செவி அறிவு
சத்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்று
ஒத்த ஐம்புலனும் செவிஅறிவு என்ப
** 5 பெயர்கள்
** 8 கை வகை
#363
** பறித்தல்
கைக்கடன் ஆய காரணம் உரைப்பின்
பரூவும் குற்றலும் பறித்தல் மேற்றே
** 2 பெயர்கள் 363
#364
** கடைதல்
கடைதல் குடைதல் கவர்தல் அன்றி
மதனமும் துருவலும் மற்று அதன் பெயரே
** 4 பெயர்கள் 364
#365
** தேய்த்தல்
அரைத்தலும் அரக்கலும் சிரத்தலும் சிதைத்தலும்
தேய்த்தலின் பெயர் என்ன வழங்கும்
** 4 பெயர்கள் 365
#366
** எழுதல்
தெரித்தல் வரிதல் தீட்டல் பொறித்தல்
வரைதல் கீறல் கிறுக்குதல் எழுதல்
** 7 பெயர்கள்
#367
** எழுத்து
வரியும் பொறியும் அக்கரமும் அன்றி
இரேகையும் எழுத்தின் பெயர் ஆகும்மே
** 4 பெயர்கள்
#368
** கொல்லுதல்
காதுதல் தொலைத்தல் எற்றல் களைதல்
சவட்டல் கோறல் செறித்தல் செவிட்டல்
அடுதல் தெறுதல் செறுத்தல் முருக்குதல்
செகுத்தல் வதைத்தல் கொல்லுதல் செப்பும்
** 14 பெயர்கள் 368
#369
** எற்றல்
எறிதல் அள்ளல் எற்றலின் மேற்றே
** 2 பெயர்கள்
#370
** கொடை
ஈகை தானம் இடுகை கவிகை
வேள்வி வண்மை தியாகம் வேளாண்மை
உதாரம் கடப்பாடு உபகாரம் கொடை எனல்
** 11 பெயர்கள் 370
#371
** பெருங் கொடை
ஈதல் வீசல் இசைத்தல் நீட்டல்
புரத்தல் நல்கல் அருளல் பகுத்தல்
கொடுத்தல் வழங்கல் அளித்தல் பெருங் கொடை
** 11 பெயர்கள்
#372
** வரையாது கொடுத்தல்
கொடைமடம் என்பது வரையாது கொடுத்தல்
** 1 பெயர்
#373
** கொடாமை
மாற்றலும் கரத்தலும் மறுத்தலும் கொடாமை
** 3 பெயர்கள்
#374
** இரத்தல்
ஏற்றல் குறைகோள் இரத்தல் வேண்டுதல்
** 3 பெயர்கள்
#375
** பிச்சை
பலியும் படிகமும் பாகமும் பயிக்கமும்
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை
** 7 பெயர்கள்
#376
** கும்பிடுதல்
தொழுதல் அஞ்சலி சோத்தம் கும்பிடல்
** 3 பெயர்கள்
#377
** மெய் கோட்டிக் கை குவித்தல்
குடந்தம் மெய் கோட்டிக் கைகுவித்தல் என்ப
** 1 பெயர்
#378
** தொடுதல்
திவளல் ஊறு பரிசம் தீண்டல்
துவளல் தொட்டல் தொடுதல் ஆகும்
** 6 பெயர்கள்
#379
** அடித்தல்
புடைத்தல் எற்றல் எறிதல் மொக்கல்
குத்தல் மோதல் மொத்தல் அறைதல்
அடித்தல் என்ப அகைத்தலும் ஆகும்
#380
** மற்றும் அடித்தல்
வழுக்கலும் அப் பெயர் வரைவு இன்று ஆகும்
** 10 பெயர்கள்
#381
** குத்தல்
அவைத்தல் என் கிளவி குத்தல் ஆகும்
** 1 பெயர்
#382
** கட்டல்
விசித்தல் இசைத்தல் வீக்கல் கட்டல்
#383
** மற்றும் கட்டல்
அசைத்தல் இமிழ்த்தல் ஆர்த்தல் யாப்பு
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல்
கிட்டல் துவக்கல் கட்டுதல் ஆகும்
** 14 பெயர்கள்
#384
** தீட்டல்
தீட்டல் துலக்கல்
** 1 பெயர்
#385
** வெட்டல்
துழாவல் வெட்டல்
** 1 பெயர்
#386
** துணித்தல்
துமித்தலும் எற்றலும் துணித்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#387
** அறுத்தல்
கடிதல் தடிதல் பரிதல் கண்டித்தல்
சேதித்தல் கொய்தல் அறுத்தல் ஆகும்
** 6 பெயர்கள்
#388
** முகத்தல்
தோண்டல் முகத்தல்
** 1 பெயர்
#389
** நிறுத்தல்
தோன்றல் நிறுத்தல்
** 1 பெயர்
#390
** கிண்டல்
கிண்டல் கிளைத்தல்
** 1 பெயர்
#391
** கிளறுதல்
நோண்டல் கிளறுதல்
** 1 பெயர்
#392
** தெள்ளுதல்
வறண்டல் தெள்ளுதல்
** 1 பெயர்
#393
** கொழித்தல்
வரன்றல் கொழித்தல்
** 1 பெயர்
#394
** தொளைத்தல்
தொள்கலும் குயிறலும் தொளைத்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#395
** தோண்டல்
சூறல் சூன்றல் தொட்டல் தோண்டல்
ஆகும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே
** 5 பெயர்கள்
#396
** கிழித்தல்
கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல்
#397
** மற்றும் கிழித்தல்
பீறல் என்பதும் அப் பெயர் மேற்றே
** 4 பெயர்கள்
#398
** அடைக்கலம்
கையடை இல்லடை அபயம் அடைக்கலம்
** 3 பெயர்கள்
#399
** பிடுங்குதல்
புய்த்தலும் பறித்தலும் பிடுங்குதல் ஆகும்
** 2 பெயர்கள்
#400
** களைதல்
கட்டல் என்பது களைதல் ஆகும்
#401
** மற்றும் களைதல்
சிதைத்தல் குத்தல் சிந்துதல் விலங்கல்
** 5 பெயர்கள்
#402
** உருவுதல்
சிதகல் உருவுதல்
** 1 பெயர்
#403
** முடைதல்
வலத்தல் முடைதல் நிணத்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#404
** எறிதல்
விலகல் செலவிடல் வீசல் ஓச்சுதல்
விடுதல் எறிதல் ஆகும் என்ப
** 5 பெயர்கள்
#405
** மாற்றுதல்
மாற்றுதல் விலக்கல்
** 1 பெயர்
#406
** பிடித்தல்
தொடலும் பற்றலும் பிடித்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#407
** நெரித்தல்
தெறுத்தல் நெரித்தல்
** 1 பெயர்
#408
** கூட்டுதல்
அடுத்தல் பொருத்தல் கூட்டுதல் ஆகும்
** 2 பெயர்கள்
#409
** எழுப்புதல்
எடுத்தல் எற்றல் எழுப்புதல் ஆகும்
** 2 பெயர்கள்
#410
** தடுத்தல்
வாரித்தல் வாரணை தகைத்தல் தடுத்தல்
** 3 பெயர்கள்
#411
** பகுத்தல்
பகிர்தல் பாத்தி பகுத்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#412
** சிந்துதல்
சிதர்த்தல் சிந்துதல்
** 1 பெயர்
#413
** வாரல்
வாரல் கவரல் வெளவல் என்ப
** 2 பெயர்கள்
#414
** வகிர்தல்
வகிர்தல் துவர்தல்
** 1 பெயர்
#415
** தடவல்
தடவல் தைவரல் நீவல் வருடல்
** 3 பெயர்கள்
#416
** அசைதல்
துயல்வரல் அசைதல்
** 1 பெயர்
#417
** சொரிதல்
சொரிதல் பொழிதல்
** 1 பெயர்
#418
** மூட்டல்
மாட்டலும் பொருத்தலும் மூட்டல் ஆகும்
** 2 பெயர்கள்
#419
** தள்ளுதல்
நோன்றல் ஊன்றல் நூக்கல் தள்ளுதல்
** 3 பெயர்கள்
#420
** செறித்தல்
அளித்தலும் பெய்தலும் செறித்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#421
** பரப்புதல்
விரியல் விளம்பல் பாரித்தல் பரப்புதல்
** 3 பெயர்கள்
#422
** அடுக்குதல்
ஏற்றல் அடுக்குதல்
** 1 பெயர்
#423
** புதைத்தல்
பொத்தல் கனிதல் புதைத்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#424
** குட்டல்
குட்டல் புடைத்தல் தகர்த்தல் ஆகும்
** 2 பெயர்கள்
** 9 கால் வகை
#425
** கடத்தல்
காலிற்கு அமைந்த கடன் நெறி கூறில்
இறத்தலும் கழிதலும் இகத்தலும் கடத்தல்
நடத்தலும் மீளலும் அவ் இயல்பு ஆகும்
** 5 பெயர்கள்
#426
** சுழலல்
உழிதரல் கொட்புத் திரிதரல் உழலல்
பிரமரி அலமரல் தெருமரல் மறுகல்
சொரிதரல் கறங்கல் சுழலல் பெயரே
** 10 பெயர்கள்
#427
** தாண்டல்
தாண்டல் வாவலும் தாவலும் அன்றித்
தத்தலும் கடத்தலும் அப் பெயர் மேற்றே
** 4 பெயர்கள்
#428
** மற்றும் தாண்டல்
உறுக்கலும் பாய்தலும் உகளலும் அன்றித்
குதித்தலும் தவறலும் குப்புறலும் ஆமே
#429
** எழுச்சி
கஞறலும் கதித்தலும் உம்பலும் ஏர்பும்
பொலிவும் கலித்தலும் ஒழுக்கலும் பாச்சலும்
அறலும் ஓங்கலும் எழுச்சிப் பெயரே
** 10 பெயர்கள்
#430
** நடத்தல்
இல்லல் ஒடுங்கல் ஏகல் இவர்தல்
செல்லல் படர்தல் கழிதல் நடத்தல்
** 7 பெயர்கள்
#431
** செலவு
தாவும் கதியும் படரும் செலவு எனல்
** 3 பெயர்கள்
#432
** ஓடல்
நீளல் பாறல் நிமிர்தல் என்று இவை
ஓடலின் பெயருக்கு உரித்தாகும்மே
** 3 பெயர்கள்
#433
** இரிதல்
உடைதல் கெடுதல் இரிதல் ஆகும்
** 2 பெயர்கள்
#434
** நேர் ஓடுதல்
ஆதியும் வீதியும் நேர்ஓடுதலே
** 2 பெயர்கள்
#435
** மண்டிலமாய் ஓடல்
மாதி சுற்றுச் சாரிகை வாளி
ஆயவை மண்டில வரவு ஆகும்மே
** 4 பெயர்கள்
#436
** விரைவு
கதழ்வும் வல்லையும் ஒல்லையும் கடுப்பும்
கடுகலும் தாரையும் துனைவும் நொறிலும்
விசையும் முடுகலும் வேகமும் விரைவே
** 11 பெயர்கள்
#437
** இதுவுமது
கவனமும் துரிதமும் அப் பெயர்க் கட்டுரை
** 2 பெயர்கள்
#438
** விரைவுக் குறிப்பு
பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல்
வெய்தெனல் கதுமெனல் விரைவின் பண்பே
** 6 பெயர்கல்
#439
** உராய்தல்
உரோசல் உரிஞ்சல் உரோஞ்சல் உராய்தல்
** 3 பெயர்கள்
#440
** உலாப்போதல்
பவனி என்பது உலாப்போதல் ஆகும்
** 1 பெயர்
#441
** உலாவல்
அசைதலும் இயங்கலும் வழங்கலும் உலாவுதல்
** 3 பெயர்கள்
#442
** உழக்குதல்
உழுதல் மடித்தல் உழக்குதல் ஆகும்
** 2 பெயர்கள்
#443
** கொடுபோதல்
போதரல் கொடுபோதல்
** 1 பெயர்
#444
** மீளுதல்
மறிதரல் திரிதரல் மடங்கல் மீளுதல்
** 3 பெயர்கள்
#445
** ஒதுங்கல்
ஒடுங்கல் என் கிளவி ஒதுங்கல் ஆகும்
** 1 பெயர்
#446
** செலுத்துதல்
ஓயல் நடவல் கடவல் ஓச்சல்
ஏவுதல் தாண்டல் தூண்டல் உகைத்தல்
ஊர்தல் உய்த்தல் செலுத்தல் ஒரு பொருள்
** 10 பெயர்கள்
#447
** போதல்
படர்தல் சேறல் ஒடுங்கல் தீர்தல்
திரிதல் இயங்கல் நீங்கல் இறத்தல்
துரத்தல் ஏகல் செல்லல் விடுதல்
கடத்தல் நடத்தல் போதலின் பெயரே
** 14 பெயர்கள்
** 10. முறைமை வகை
#448
** முறைமை
முறைமையும் ஊழும் பாவமும் தன்மமும்
முறையும் வாழும் வழியும் ஆம் என்ப
** 6 பெயர்கள்
#449
** கோத்திரம்
குடியே உம்பல் கோத்திரம் ஆகும்
** 2 பெயர்கள்
#450
** பழைமை
ஒல்லை புராணம் முதுமை முறை ஊழ்
தொல்லை முந்தை தொன்று பண்டு
தொன்மை முன்னை புராதனம் பழைமை
** 12 பெயர்கள்
#451
** முன் பிறப்பு
உம்மை முன்பிறப்பு
** 1 பெயர்
#452
** இப் பிறப்பு
இம்மை இப் பிறப்பு
** 1 பெயர்
#453
** வரு பிறப்பு
அம்மையும் மறுமையும் வருபிறப்பு ஆகும்
** 2 பெயர்கள்
#454
** பிறப்பு
பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பு எனல்
#455
** மற்றும் பிறப்பு
சூதகம் என்ன ஓதவும் பெறுமே
** 4 பெயர்கள்
#456
** உரிமை
உரிமை கிழமை ஆட்சியும் ஆகும்
** 2 பெயர்கள்
#457
** பயிறல்
நவிறல் கெழுமல் பயிறல் ஆகும்
** 2 பெயர்கள்
#458
** அடைவு
ஆம்பல் அடைவே
** 1 பெயர்
** 11 அளவின் வகை
#459
** விரிவு
அளவின் வகையை அளந்து ஈங்கு உரைப்பின்
விசாலமும் விபுலமும் விரிவு எனலாகும்
** 2 பெயர்கள்
#460
** பரப்பு
பாய்தல் விரியல் பப்பு பரவை
தாவல் என்று இவை தாம் பரப்பு ஆகும்
** 5 பெயர்கள் 460
#461
** தூரம்
சேணும் நீளமும் சேய்மையும் தூரம்
** 3 பெயர்கள்
#462
** அகலம்
நனவே கண்ணறை வியல் இவை அகலம்
** 3 பெயர்கள் 462
#463
** கனம் ‘
கனமே அடையும் ஞாட்பும் ஆகும்
** 2 பெயர்கள் 463
#464
** எல்லை
அவதியும் சிம்மும் காடும் பரியந்தமும்
ஏணியும் வரைப்பும் கொத்தமும் எல்லை
** 7 பெயர்கள் 464
#465
** அளவு
தனையும் காறும் தாறும் துணையும்
வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும்
அளவின் பெயர் என்று அறைந்தனர் புலவர்
** 8 பெயர்கள் 465
#466
** அளவு இன்மை
அபரிமிதமும் அனந்தமும் அபாரமும்
எல்லைஇல் பொருளும் அளவுஇன்மை என்ப
** 4 பெயர்கள் 466
#467
** பெருமை
இருமையும் பொழிலும் ஏந்தலும் ஈடும்
கருமையும் தடவும் கயவும் அணியும்
பகடும் அண்ணலும் செம்மலும் பரியும்
இறையும் பேழும் கொன்னும் விபுலமும்
வியலும் தலையும் நெய்தையும் மாவும்
தகையும் முடலையும் மூரியும் வீறும்
நளியும் மீளியும் நன்றும் பாடும்
நனியும் பணையும் விறலும் சேடும்
பீடும் கதழ்வும் பெருமைப் பெயரே
** 34 பெயர்கள் 467
#468
** நுண்மை
ஐயும் நுணுக்கமும் அணுவும் முளரியும்
நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும்
நுணுகும் நுழையும் நுண்மைப் பெயரே
** 10 பெயர்கள் 468
#469
** சிறுமை
அற்பமும் கன்றும் தன்னமும் ஆசும்
பேடும் வறிதும் இறையும் சிறுமை
** 7 பெயர்கள் 469
#470
** நிறைவு
மலிதல் துவன்றல் மல்கல் ஆர்தல்
தெகுளல் ததும்பல் தேக்கல் கிளைத்தல்
நிரம்பல் பூரணம் கமமே நிறைவு
** 11 பெயர்கள் 470
#471
** பெருக்கம்
பிறங்கலும் பெருகலும் பெருக்கம் ஆகும்
** 2 பெயர்கள் 471
#472
** குறைபாடு
ஊனமும் நிரப்பும் விகலமும் தவலும்
ஈனமும் குறைபாடு என்று இயம்பல் வேண்டும்
** 5 பெயர்கள் 472
#473
** குறைதல்
சுருங்கலும் குறையும் அருகலும் குன்றலும்
எஞ்சலும் குறைதலின் இயன்ற பெயரே
** 5 பெயர்கள் 473
#474
** மிகுதி
அமலை நனியே ஆற்றல் இறப்பு
பெருகல் கழிவு சிறப்பு பிறங்கல்
உருப்பம் தவ மதர் ஊக்கம் அதிகம்
விதப்பு செறிதல் பொங்கல் மிகுதி
** 16 பெயர்கள் 474
#475
** பொலிவு
துப்பு கலிப்பு கஞறல் பொம்மல்
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும்
** 7 பெயர்கள் 475
#476
** செறிவு
துறுதல் உறுப்பு பிறப்பு துதைதல்
மிடைதல் துற்று எறிதல் ஓதி
செற்று வெறுப்பு கஞறல் அடர்தல்
நெருங்குதல் திணுங்குதல் செறிவின் பெயரே
** 14 பெயர்கள் 476
#477
** கூட்டம்
கூளியும் ஈட்டமும் குழுமலும் தோடும்
தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும்
துற்றும் நளியும் முகையும் மொய்யும்
கணமும் சரியும் ஈண்டலும் சங்கமும்
திரளையும் சவையும் அவையும் கூட்டம்
** 19 பெயர்கள் 477
#478
** திரள்
கொம்மையும் உண்டையும் குழியமும் குப்பையும்
முத்தையும் பூகமும் சோகமும் புஞ்சமும்
பந்தமும் மாழையும் வட்டும் பிண்டமும்
வழியும் சேடும் சேர்வும் திரளே
** 15 பெயர்கள் 478
#479
** ஐம்மை
அரியும் தகடும் அடரும் ஐம்மை
** 3 பெயர்கள் 479
#480
** எல்லாம்
அடையவும் அடங்கலும் அனைத்தும் யாவையும்
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும்
எவையும் எல்லாம் என்றலின் பெயரே
#481
** மற்றும் எல்லாம்
அகிலமும் அகண்டமும் அப் பெயர் ஆகும்
** 11 பெயர்கள் 481
#482
** பாதி
பாயல் பயல் அருத்தம் பங்கு பாதி
#483
** மற்றும் பாதி
கூறும் பாகமும் கூறும் அதற்கே
** 6 பெயர்கள்
#484
** பாரம்
சீரும் கனமும் குருவும் ஞாட்பும்
பாரம் ஆகும் பரமும் அதற்கே
** 5 பெயர்கள்
#485
** நொய்மை
நொய்வும் இலேசும் நொய்மை ஆகும்
** 2 பெயர்கள்
#486
** பொழுது போக்கல்
நெடித்தல் பாணித்தல் பொழுதுபோக்கல்
** 2 பெயர்கள் 486
#487
** மீறுதல்
திருகலும் முறுகலும் மீறுதல் என்ப
** 2 பெயர்கள் 487
#488
** குவிதல்
குவையும் குவாலும் இராசியும் குப்பையும்
குவவும் நூழிலும் குவிதல் பெயரே
** 6 பெயர்கள்
#489
** முதல்
ஆதி தலை தாள் அடி முன் எழுவாய்
மோனை பிராசயம் முதல் எனப்படுமே
** 8 பெயர்கள்
#490
** நடு
இடை சமம் மத்திமம் நாப்பண் பகல் நடு
#491
** மற்றும் நடு
நள் என் பெயரும் நனந்தலையும் ஆகும்
** 7 பெயர்கள்
#492
** கடை
இறுதி பின் எல்லை கடை ஈறு அந்தம்
முடிவு முற்று முடிதல் ஆகும்
** 8 பெயர்கள்
#493
** மிகுத்தல்
தெறுதல் உறுத்தல் மிகுத்தல் ஆகும்
** 2 பெயர்கள்
#494
** மிக்கது
மிஞ்சுதல் விஞ்சுதல் மீமிசை மிக்கது
** 3 பெயர்கள்
#495
** நெருக்கம்
எக்கல் குவித்தல் நளி நிபிடம் நெருக்கம்
** 4 பெயர்கள்
#496
** தூக்கு
தூக்கு துலாம் கா
** 2 பெயர்கள்
#497
** தூக்கின் நிறை
நூற்றுப்பலம் நிறை
** 1 பெயர்
#498
** ஒரு பலம்
தொடி என் கிளவி ஒரு பலம் ஆகும்
** 1 பெயர்
#499
** துலாம் இருபஃது
பாரம் என்பது துலாம் இருபஃதே
** 1 பெயர்
#500
** கால் பலம்
கஃசு கால் பலம்
** 1 பெயர்
#501
** மாகாணிப் பலம்
வீசம் மாகாணிப் பலம்
** 1 பெயர்
#502
** ஒன்று
ஏகம் ஒன்றே
** 1 பெயர்
#503
** பத்து
தசம் பத்து ஆகும்
** 1 பெயர்
#504
** நூறு
சதம் நாறு ஆகும்
** 1 பெயர்
#505
** ஆயிரம்
சகசிரம் ஆயிரம்
** 1 பெயர்
#506
** பதினாயிரம்
அயுதம் பதினாயிரம்
** 1 பெயர்
#507
** நூறு ஆயிரம்
நியுதம் நூறு ஆயிரம்
** 1 பெயர்
#508
** பத்து நூறு ஆயிரம்
பிரயுதம் பத்து நூறு ஆயிரம்
** 1 பெயர்
#509
** கோடி
பிரயுதம் பத்தே கோடி என்ப
** 1 பெயர்
#510
** அற்புதம்
கோடி பத்தே அற்புதம் ஆகும்
** 1 பெயர்
#511
** நிகர்ப்புதம்
அற்புதம் பத்தே நிகர்ப்புதம் ஆகும்
** 1 பெயர்
#512
** கும்பம்
நிகர்ப்புதம் பத்தே கும்பம் ஆகும்
** 1 பெயர்
#513
** கணகம்
கும்பம் பத்தே கணகம் ஆகும்
** 1 பெயர்
#514
** கற்பம்
கணகம் பத்தே கற்பம் ஆகும்
** 2 பெயர்
#515
** நிகற்பம்
கற்பம் பத்தே நிகற்பம் ஆகும்
** 1 பெயர்
#516
** பதுமம்
நிகற்பம் பத்தே பதுமம் ஆகும்
** 1 பெயர்
#517
** சங்கம்
பதுமம் பத்தே சங்கம் ஆகும்
** 1 பெயர்
#518
** சமுத்திரம்
சங்கம் பத்தே சமுத்திரம் ஆகும்
** 1 பெயர்
#519
** அந்தியம்
சமுத்திரம் பத்தே அந்தியம் ஆகும்
** 1 பெயர்
#520
** மத்தியம்
அந்தியம் பத்தே மத்தியம் ஆகும்
** 1 பெயர்
#521
** பரார்த்தம்
மத்தியம் பத்தே பரார்த்தம் ஆகும்
** 1 பெயர்
#522
** பூரியம்
பரார்த்தம் பத்தே பூரியம் ஆகும்
** 1 பெயர்
#523
** பிரமகற்பம்
பூரியம் பத்தே பிரமகற்பம் என்று
ஓதினர் எண்ணார் உறும் அப் பெயரே
** 1 பெயர் 523
** 12. காரண வகை
#524
** பல் பொருள் வகை
காரண வகையும் பல் பொருள் வகையும்
சேர உரைப்பன் தெள்ளிதின் தெரிந்தே
#525
** காரணம்
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும்
திறனும் வாயிலும் மூலமும் என்று இவை
கருதும்காலைக் காரணம் ஆகும்
** 7 பெயர்கள் 525
#526
** உள் தொளை
சுகர் குழல் நாழி தசிரம் தூம்பு
புழை புரை வேய் வேணு உள்தொளை புள்ளே
#527
**மற்றும் உள் தொளை
நாளமும் சுரையும் அதற்கு நாமம்
** 12 பெயர்கள்
#528
** வட்டம்
வலயம் நேமி கடகம் மண்டிலம்
பரிதி ஆழி பாண்டில் விருத்தம்
படலிகை கோளகை பாலிகை கொம்மை
திகிரி மல்லை வல்லை சக்கரம்
தட்டு வட்டணை என்று இவை பிறவும்
வட்ட வடிவிற்கு ஒட்டிய பெயரே
** 18 பெயர்கள் 528
#529
** அதிசயம்
வியப்பே இறும்பு விசித்திரம் விம்மிதம்
விபரீதம் இறும்பூது அதிசயம் ஆகும்
#530
** மற்றும் அதிசயம்
சித்திரம் என்பதும் மற்று அதற்கு உரித்தே
** 7 பெயர்கள் 530
#531
** உவமை
புரையும் மானும் பொருவும் கடுப்பும்
நிகரும் ஏய்வும் நேரும் போலும்
ஒப்பும் உவமும் ஏரும் ஆங்கும்
என எதிர் அன்னவும் இணையும் உறழ்வும்
சமமும் துல்லியமும் உவமைக்கு ஆகும்
** 19 பெயர்கள் 531
#532
** வினை
கருமமும் தொழிலும் விதியும் பணியும்
வினையமும் செயலும் வினையின் பெயரே
** 6 பெயர்கள் 532
#533
** செய்தல்
அயர்தலும் குயிறலும் பண்ணலும் வனைதலும்
புரிதலும் ஆடலும் செய்தல் ஆகும்
** 6 பெயர்கள்
#534
** விற்றல்
மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல்
** 3 பெயர்கள்
#535
** விலை
நொடை என் கிளவி விலை என நுவல்வர்
** 1 பெயர்
#536
** கூட்டுதல்
ஆற்றலும் போற்றலும் ஈட்டலும் கூட்டுதல்
#537
** மற்றும் கூட்டுதல்
ஓம்பல் என்பதும் ஆங்கு அதன் மேற்றே
** 4 பெயர்கள்
#538
** இலாஞ்சனை
ஆணை பொறி குறி அச்சு அடையாளம்
சாதனம் சினம் முத்திரை இலிங்கம் என்று
ஏயவை பலவும் இலாஞ்சனை ஆகும்
** 9 பெயர்கள்
#539
** தலைக் காவல்
இளையும் உக்கிரமும் இவை தலைக்காவல்
** 2 பெயர்கள்
#540
** படர்தல்
படலை படர்ச்சி பம்பல் படர்தல்
** 3 பெயர்கள்
#541
** அறியாமை
எய்யாமை அறியாமை
** 1 பெயர்
#542
** ஒழியாமை
ஓவாமை ஒழியாமை
** 1 பெயர்
#543
** வழிப் பறி
அதர்கோள் வழிப்பறி ஆறலையும் ஆகும்
** 2 பெயர்கள்
#544
** தைத்தல்
அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம்
** 3 பெயர்கள்
#545
** தண்டல்
தப்பல் என் கிளவி தண்டல் ஆகும்
** 1 பெயர்
#546
** காய்தல்
உலறுதல் காய்தல் வறளுதல் முளிதல்
** 3 பெயர்கள்
#547
** பில்குதல்
பிலிற்றல் தூவுதல் பில்குதல் என்ப
** 2 பெயர்கள்
#548
** குடியிறை
கறை வரி ஆயம் கடன் கரம் என்று இவை
குடியிறைப் பெயர் ஆம் இறுப்பும் அதற்கே
** 6 பெயர்கள்
#549
** சுங்க இறை
உல்கு சாரிகை சுங்க இறை ஆகும்
** 2 பெயர்கள்
#550
** தீர்தல்
ஓவல் தீர்தல்
** 1 பெயர்
#551
** முடிவு
முடிவு வீடே
** 1 பெயர்
#552
** கலத்தல்
கலவை கலப்பு கலத்தல் ஆகும்
** 2 பெயர்கள்
** ஏழாவது பண்பின் செயலின் பகுதி வகை முற்றிற்று
@8. மாப் பெயர் வகை
** 1 புள் வகை
#1
** அன்னம்
அன்னம் எகினம் அஞ்சம் ஓதிமம்
மென்னடை வக்கிராங்கம் விகங்கம்
#2
** மற்றும் அன்னம்
பிணிமுகம் மராளம் என்னவும் பேசுவர்
** 8 பெயர்கள்
#3
** அன்னத்து இறகு
தூவி அன்னத்து இறகு எனச் சொல்லும்
** 1 பெயர்
#4
** மயில்
சிகியே நவிரம் மஞ்ஞை பிணிமுகம்
சிகண்டி மயூரம் கேதாரம் ஒகரம்
சிகாவளம் ஞமலி கலாபி பீலி
தோகை கேகயம் மயில் எனச் சொல்லும்
** 14 பெயர்கள்
#5
** மயில் தோகை
சரணம் சிகண்டம் கூந்தல் சத்திரகம்
தொங்கல் தோகை தூவியும் ஆகும்
#6
** மற்றும் மயில் தோகை
பீலியும் கலாபமும் கூழையும் அதற்கே
** 9 பெயர்கள்
#7
** விரி தரு தோகை
மேசகம் என்பது விரி தரு தோகை
** 1 பெயர்
#8
** மயில் குரல்
அகவல் ஆலல் ஏங்கல் மயில் குரல்
** 3 பெயர்கள்
#9
** மயில் சிகை
அநந்தரம் மயூர விரி சிகை ஆகும்
** 1 பெயர்
#10
** இறகின் அடி முள்
முருந்தே இறகின் முதல் முள் ஆகும்
** 1 பெயர்
#11
** கருடன்
வைனன் உவணன் வைனதேயன்
பறவை வேந்தன் பன்னகவைரி
கலுழன் தார்க்கியன் செளரி கருடன்
#12
** மற்றும் கருடன்
இமையிலி எனவும் இயம்பப் பெறுமே
** 9 பெயர்கள்
#13
** கழுகு
பவணை உவணம் சகுந்தம் புண்டரம்
எருவை கங்கமும் கழுகு என இசைப்பர்
#14
** மற்றும் கழுகு
பூகம் என்பதும் அப் பெயர் புகலும்
** 7 பெயர்கள்
#15
** சக்கரவாகப் புள்
நேமிப் புள் சக்கரவாகப் புள் சகோரம்
** 2 பெயர்கள்
#16
** பெருங் குருகு
யானைஉண்குருகு பெருங்குருகு என்ப
** 1 பெயர்
#17
** எண் கால் புள்
சிம்புள் வாருண்டம் அம்பரவாணம்
சம்பரம் வருடை துரோணம் சரபம்
எண் கால் பறவைக்கு எய்தும் பெயரே
** 7 பெயர்கள்
#18
** பருந்து
பாறு சேனம் கங்கம் பருந்தே
#19
** மற்றும் பருந்து
கூறில் பாரசிகையும் கூறும்
** 4 பெயர்கள்
#20
** நிலாமுகி
சகோரம் பேராந்தை நிலாமுகி ஆகும்
** 2 பெயர்கள்
#21
** பொய்யாப்புள்
சலாங்கு என் கிளவி பொய்யாப்புள்ளே
** 1 பெயர்
#22
** அசுணமா
அசுணமா இசை அறி பறவை கேகயப் புள்
** 2 பெயர்கள்
#23
** சாதகப் புள்
நவில் சாரங்கம் சாதகப்புள் எனல்
** 1 பெயர்
#24
** வானம்பாடி
கலிங்கம் வானம்பாடி ஆகும்
#25
** மற்றும் வானம்பாடி
மேகப்புள் என்றும் விளம்பல் ஆகும்
** 2 பெயர்கள்
#26
** கிளி
சாரு வன்னி அவந்திகை தத்தை
கீரம் கிள்ளை கிளிப் பெயர் ஆகும்
#27
** மற்றும் கிளி
அரி சுவாகதம் சுகமும் ஆகும்
** 9 பெயர்கள்
#28
** குயில்
காளகண்டம் கோரகை பரபுட்டம்
கோகிலம் பிகத்தொடு குயிலின் பெயரே
** 5 பெயர்கள்
#29
** கோட்டான்
கூகை குடிஞை குராஅல் கெளசிகம்
ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான்
** 7 பெயர்கள்
#30
** பெருங் கோட்டான்
கெளசிகம் ஊமன் குடிஞை கூகை
பெரும்புள் என்ப பெருங்கோட்டான் பெயர்
** 6 பெயர்கள்
#31
** அன்றில்
கவுஞ்சம் அன்றில் கிரவுஞ்சமும் சாற்றும்
** 2 பெயர்கள்
#32
** காடை
கபிஞ்சலம் குறும்பூழ் காடை ஆகும்
** 2 பெயர்கள்
#33
** கரிக் குருவி
காரி பிள்ளை கபிலம் கஞ்சனம்
கயவாய் கரிக்குருவிப் பெயர் ஆகும்
** 5 பெயர்கள்
#34
** வலியன்
கஞ்சனம் கிகிணி கஞ்சரீடம்
வயவன் பாரத்துவாசம் வலியன்
** 5 பெயர்கள்
#35
** காரிப் பிள்ளை
வஞ்சுளன் வயவன் வயான் காரிப்பிள்ளை
** 3 பெயர்கள்
#36
** கோழி
குக்குடம் குருகு வாரணம் கோழி
#37
** மற்றும் கோழி
ஆண்தலைப்புள் காலாயுதம் ஆகும்
** 5 பெயர்கள்
#38
** சம்பங் கோழி
கம்புள் என்ப சம்பங்கோழி
** 1 பெயர்
#39
** நிலங்கு
நிலங்கு பூழ்
** 1 பெயர்
#40
** கானாங் கோழி
காதம்பம் கானாங்கோழி
** 1 பெயர்
#41
** கருங் கிளி
கீரம் கிள்ளை அரி கருங்கிளிக்கு ஏற்கும்
** 3 பெயர்கள்
#42
** கரும் புறா
கபோதம் பாராவதம் கரும்புறாவே
** 2 பெயர்கள்
#43
** புறாப் பொது
தூதுணம் கபோதம் களரவம் புறாவே
** 3 பெயர்கள்
#44
** கவுதாரி
சிரவம் கவுதாரி
** 1 பெயர்
#45
** பகண்டை
சில்லை பகண்டை
** 1 பெயர்
#46
** நாகணவாய்ப் புள்
பூவை சாரிகை நாகணவாய்ப்புள்
** 3 பெயர்கள்
#47
** கல் சிலை
பல்லி என்ப கல்சிலை ஆகும்
** 1 பெயர்
#48
** உள்ளான்
உள்ளல் என்பது உள்ளான் ஆகும்
** 1 பெயர்
#49
** மாடப்புறா
கல்மேய்வு காளபதம் மாடப்புறாவே
** 2 பெயர்கள்
#50
** தூக்கணங் குருவி
சிதகம் சிந்தன் தூக்கணங்குருவி
** 2 பெயர்கள்
#51
** இராகப் புள்
மிதுனம் கின்னரம் இராகப்புள்ளே
** 2 பெயர்கள்
#52
** தலை இலாக் குருவி
மழைக் குயில் தலை இலாக் குருவி ஆகும் ‘
** 1 பெயர்
#53
** சிச்சிலி
சிரல் கவுதம் பொன் வாய்ப் புள் தித்திரி சிச்சிலி
** 4 பெயர்கள்
#54
** மீன் எறி சிறு பறவை
சிரலே மீன் எறி சிறு பறவை ஆகும்
** 1 பெயர்
#55
** ஊர்க் குருவி
கலிங்கம் சகடம் குலிங்கம் ஊர்க்குருவி
#56
** மற்றும் ஊர்க் குருவி
புலிங்கம் என்றும் புகலப்பெறுமே
** 4 பெயர்கள்
#57
** காகம்
கரடம் கொடி பலிபுட்டம் காரி
வாயசம் கரும்பிள்ளை அரிட்டம் காகம்
** 7 பெயர்கள்
#58
** அண்டங் காக்கை
காலோலம் அண்டங்காக்கை ஆகும்
** 1 பெயர்
#59
** நீர்க்காக்கை
அர்க்கமும் கரண்டமும் நீர்க்காக்கை ஆகும்
** 2 பெயர்கள்
#60
** செம் போத்து
குக்கில் செம்போத்து சகோரமும் அதற்கே
** 2 பெயர்கள்
#61
** சிவல்
கோரசம் புல்லோடு இதல் சிவல் ஆகும்
** 3 பெயர்கள்
#62
** ஆந்தை
இருடி பிங்கலை கின்னரம் ஆந்தை
** 3 பெயர்கள்
#63
** பேராந்தை
சகோரம் பேராந்தைதனக்குப் பெயரே
** 1 பெயர்
#64
** கொய்யடி நாரை
குருகு வண்டானம் கொய்யடிநாரை
** 2 பெயர்கள்
#65
** பெரு நாரை
பெருநாரை போதா பிதாவும் ஆகும்
** 2 பெயர்கள்
#66
** கருநாரை
சிகரி கருநாரை எனச் செப்பினரே
** 1 பெயர்
#67
** வெண் நாரை
சாரசம் வெண்நாரை எனச் சாற்றுவரே
** 1 பெயர்
#68
** கொக்கு
குரண்டமும் வலாகமும் பகமும் கொக்கே
** 3 பெயர்கள்
#69
** நீர் வாழ் பறவை
உன்னம் கிராமம் உற்குரோசம்
கின்னரம் நீர்ப்பறவைப் பெயர் ஆகும்
** 4 பெயர்கள்
#70
** துருஞ்சில்
ஆலாலம் துருஞ்சில்
** 1 பெயர்
#71
** வாவல்
அஞ்சலிகை வாவல்
** 1 பெயர்
#72
** வண்டு
அறுபதம் ஞிமிறு அளி ஆர்பதம் பிரமரம்
சிதரம் தேனே மந்தி சிலீமுகம்
தும்பி கரும்புள் சஞ்சாலிகம் கழுது
புண்டரீகம் சுரும்பு சந்திரகம்
சூதம் கேசரம் மதுகரம் கீதம்
மா அரி சஞ்சரிகம் வடு வரி வண்டே
** 25 பெயர்கள்
#73
** ஆண் வண்டு
சுரும்பு மதுகரம் தும்பி ஆண்வண்டே
** 3 பெயர்கள்
#74
** தேனீ
பிரசம் மதுகரம் சரகம் தேனி
** 3 பெயர்கள் 74
#75
** ஈசல்
ஈசல் சிதல் ஆம்
** 1 பெயர் 75
#76
** மின் மினி
மின்மினி கச்சோதம்
** 1 பெயர் 76
#77
** சிள் வீடு
சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு
** 4 பெயர்கள்
#78
** விட்டில் பறவை
பதங்கமும் சலபமும் விட்டில் பறவை
** 2 பெயர்கள் 78
#79
** கொதுகு
நுளம்பே நிலம்பி உலங்கே கொதுகு எனல்
#80
** மற்றும் கொதுகு
அலகும் சகலும் நொள்ளலும் அதற்கே
** 6 பெயர்கள்
#81
** சல கொதுகு
மசகம் துள்ளல் சலகொதுகு ஆகும்
** 2 பெயர்கள் 81
#82
** நுளம்பு
அஞலமும் ஞலவலும் நொள்ளலும் நுளம்பே
** 3 பெயர்கள் 82
#83
** புள் பொது
பதங்கம் பக்கி பதகம் பத்திரி
விகங்கம் சகுந்தம் விகிரம் சகுனம்
குடிஞை பறவை குரீஇ வியமே
பிணிமுகம் ககமே போகில் புள் பொதுப் பெயர்
** 15 பெயர்கள்
#84
** இறகு
பறையும் சதனமும் பக்கமும் பிஞ்சமும்
சிறையும் தூவியும் சிறகும் தோகையும்
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும்
பத்திரமும் இறையும் இறகின் பெயர்
#85
** மற்றும் இறகு
ஈர் ஈ கச்சம் என்னல் ஆகும்
** 18 பெயர்கள்
#86
** முட்டை
அண்டம் சினை கோசம் அரிட்டம் முட்டை
** 4 பெயர்கள் 86
#87
** வாய் அலகு
துண்டமும் சுவவும் மூக்கும் வாய் அலகே
** 3 பெயர்கள் 87
#88
** புள்ளின் மூக்கு
புள்ளின் மூக்கு சுச்சு எனப் புகலும்
** 1 பெயர் 88
#89
** புள் சிறகு அடித்துப் புடைத்துக்
** கூப்பிடுதல்
புள் சிறகு அடித்துப் புடைத்துக் கூப்பிடல்
ஓசனித்தல் என்பது ஆகும்
** 1 பெயர் 89
#90
** எழாலும் மயிலும் ஒழிந்த
** பறவையின் ஆண்
எழால் மயில் ஒழிந்த ஏனைப் பறவைகள்
வழாஅ ஆணின் பெயர் சேவல் ஆகும்
** 1 பெயர்
#91
** மயில் எழால் என்னும்
** இரண்டின் ஆண்
மயிலும் எழாலும் ஆண் பெயர் மரபு
புகலுங்காலைப் போத்து எனலாகும்
** 1 பெயர்
#92
** கோழி கூகைகளின் பெண்
கோழியும் கூகையும் அல்லாப் பெண் பெயர்
ஆயுங்காலை அளகு எனற்கு அமையா
#93
** மற்றும் அவ் அளகு என்னும் பெயர்
அப் பெயர்க் கிளவி மயிற்கும் ஆகும்
#94
** புள்ளின் பெண்
பேடை பெடை பெட்டை புள்ளின் பெண் பெயர்
** 3 பெயர்கள் 94
#95
** பறவைக் குஞ்சு
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பெயரே
** 3 பெயர்கள் 95
#96
** பறவைக் குரல்
குரல் அது புகலில் பயிர் ஆகும்மே
** 1 பெயர் 96
#97
** புள் கூட்டம்
தொழுதி புள்கூட்டம்
** 1 பெயர் 97
#98
** புள் கூட்டத்து ஒசை
துழனி ஒசை
**1 பெயர் 98
** 2 விலங்கின் வகை
#99
** சிங்கம்
ஆளி வாளரி அரி மிருகாபதி
கோளரி கண்டீரவம் பஞ்சானனம்
சீயம் மடங்கல் கேசரி முடங்குளை
அரிமா வயப்போத்து பஞ்சநகாயுதம்
வயமா வயப்புலி சிங்கப் பெயரே
** 16 பெயர்கள் 99
#100
** யானை யாளி
அறுகை பூட்கை யானை யாளிப் பெயர்
** 2 பெயர்கள் 100
#101
** புலி
வியாக்கிரம் வேங்கை வியாளம் பாய்மா
தரக்கு சித்திரகாயம் சார்த்தூலம்
வயவரி புண்டரீகம் வல்லியம்
கொடுவரி உழுவை குயவரி வயமா
புல்லு தீவி புலியின் பெயரே
** 16 பெயர்கள்
#102
** யானை
தும்பி கரிணி தோல் சுண்டாலி
கும்பி கறைஅடி குஞ்சரம் பகடு
களிறு பூட்கை கரி மாதங்கம்
வழுவை வேழம் வாரணம் மொய்யே
உம்பல் எறும்பி உவாவே பொங்கடி
தந்தி அத்தி கடிவை கயமே
நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம்
புழைக்கை வல்விலங்கு நால்வாய் புகர்முகம்
மதாவளம் தந்தாவளம் மருண்மாவே
கைம்மா பெருமா மதமா வயமா
மந்தமாவே மதகயம் ஆம்பல்
இபமே போதகம் களபம் யானைப் பெயர்
** 45 பெயர்கள் 102
#103
** மத யானை
மதகரி தந்தி களிறு மதயானை
** 3 பெயர்கள் 103
#104
** உதவி செய் யானை
உதவி செய் யானை யூதநாதன்
** 1 பெயர் 104
#105
** பெண் யானை
அத்தினி கரிணி வடவை பிடி பெண்யானை
** 4 பெயர்கள் 105
#106
** யானைக்கன்று
கயந்தலை போதகம் துடியடி களபம்
கயமுனி யானைக்கன்று ஆகும்மே
** 5 பெயர்கள் 106
#107
** யானை நுதல்
மதகமும் கும்பமும் மத்தகமும் நுதலே
** 3 பெயர்கள்
#108
** யானைத் துதிக்கை
தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை
** 3 பெயர்கள்
#109
** யானைக் கைந் நுனி
கைந்நுனி புட்கரம்
** 1 பெயா
#110
** யானைக் கடைக் கண்
கடைக்கண் நிரியாணம்
** 1 பெயர்
#111
** யானைக் கொம்பு
தந்தம் எயிறு கோடு மருப்பு கொம்பே
** 4 பெயர்கள்
#112
** யானைக் கொம்பின் நடு
பிருதிமானம் கொம்பின்நடு என்ப
** 1 பெயர்
#113
** யானை முன் கால்
காத்திரம் முன்கால்
** 1 பெயர்
#114
** யானைப் பின் கால்
அபரம் பின்கால்
** 1 பெயர்
#115
** யானை முதுகு
முதுகு மஞ்சு ஆகும்
** 1 பெயர்
#116
** யானை மத்தகம்
மத்தகம் மதோற்கடம்
** 1 பெயர்
#117
** யானை வால்
வால் தாலவட்டம்
** 1 பெயர்
#118
** யானை வால் நுனி
வால்நுனி வேசகம்
** 1 பெயர்
#119
** யானை வால் கீழ் இடம்
வெருகம் வால்கீழ்இடம்
** 1 பெயர்
#120
** யானைச் செவி
செவி கன்னம் தாலம்
** 2 பெயர்கள்
#121
** யானை நடுச் செவி
வட்டம் நடுச்செவி
** 1 பெயர்
#122
** யானைச் செவி அடி
சூளிகை செவிஅடி
** 1 பெயர்
#123
** யானை வாய்
தளவு வாய் எனல்
** 1 பெயர்
#124
** யானை மதச்சுவடு
கடமே கொடிறு கரடம் மதச்சுவடு
** 3 பெயர்கள்
#125
** யானை உமிழ் நீர்
உமிழ்நீர் விலாழி
** 1 பெயர்
#126
** யானைப் பல் அடி
கரீரம் பல் அடி
** 1 பெயர்
#127
** யானை மதம்
மதம் கடம் தானம் கடாமும் ஆகும்
** 3 பெயர்கள்
#128
** யானைத் தோட்டி
அங்குசம் தோட்டி
** 1 பெயர்
#129
** யானைப் பிடர்
இயாதம் பிடரே
** 1 பெயர்
#130
** யானைப் புகர் முகம்
புகர்முகம் சிந்துரம்
** 1 பெயர்
#131
** யானை நுதல் அணி சிந்தூரம்
நுதல்அணி சிந்தூரம் சாமோற்பலமே
** 1 பெயர்
#132
** யானை மேல் தவிசு
யானை மேல் தவிசு இலகடம் ஆகும்
** 1 பெயர்
#133
** யானை நோய்
பாகலம் யானைநோய்
#134
** யானை படு குழி
படுகுழி பயம்பு
#135
** யானை படுக்கும் இடம்
படுக்கும் இடம் வாரி
** 1 பெயர்
#136
** யானைநுதல் பட்டம்
பட்டம் ஓடை
** 1 பெயர்
#137
** யானைத் திரள்
கடகம் யானைத்திரள் பெயர்க் கட்டுரை
** 1 பெயர்
#138
** பிறந்த நிலப் பெயரைப் பெற்ற யானை
** பெறும் பெயர்
கிரிசரம் வனசரம் நதிசரம் அடுத்துப்
பெறுமே யானை பிறந்த நிலப் பெயர்
** 3 பெயர்கள்
#139
** குதிரை
பரியே பாடலம் பாய்மா புரவி
அரி கனவட்டம் அத்திரி கோரம்
வாசி துரங்கம் மாவே கந்துகம்
தூசி இவுளி துரகம் துரகதம்
கோடகம் சயிந்தவம் கோணம் குரகதம்
கந்தருவம் கிள்ளை மண்டிலம் கற்கி
அச்சுவம் உன்னி அயமே கொக்கு
கொய்யுளை சடிலம் குந்தம் கண்ணுகம்
கோடை வயமா குதிரையின் பெயரே
** 34 பெயர்கள்
#140
** பாண்டியன் குதிரை
அவற்றுள்
கனவட்டம் என்பது வழுதிஊர்மா
** 1 பெயர்
#141
** சோழன் குதிரை
கோரம் என்பது சோழன்ஊர்மா
** 1 பெயர்
#142
** சேரன் குதிரை
பாடலம் என்பது சேரன்ஊர்மா
** 1 பெயர்
#143
** குறு நில மன்னர் குதிரை
கந்துகம் குறுநிலமன்னர்ஊர்மா
** 1 பெயர்
#144
** குதிரை மயிர்
சுவல் குசை கூந்தல் மேசகம் மயிரே
** 4 பெயர்கள்
#145
** குதிரைக் குளம்பு
குரமும் குரச்சையும் குரசும் குளம்பே
** 3 பெயர்கள்
#146
** குதிரை போம் மார்க்கம்
மாதிகம் அது போம் மார்க்கம் ஆகும்
** 1 பெயர்
#147
** குதிரை வால்
வாலதி தோகை வால் அது ஆகும்
** 2 பெயர்கள்
#148
** பசு
கோவே பெற்றம் நிரை குடம் சுட்டு
தேனு சுரை பத்திரை கபிலை சேதா
ஆவே சுரபி ஆன் பசு ஆகும்
** 13 பெயர்கள்
#149
** தெய்வப்பசு
தேனுவும் கபிலையும் தெய்வப்பசுவே
** 2 பெயர்கள்
#150
** நற் பசு
பத்திரை நற்பசு
**1 பெயர்
#151
** குணம் இல்லாப் பசு
சுதை குணம் இலாப் பசு
** 1 பெயர்
#152
** ஓர் ஈற்றுப் பசு
கிட்டி ஓர் ஈற்றுப் பசு
** 1 பெயர்
#153
**ன் மலட்டுப் பசு
வற்சை மலட்டுப்பசு
** 1 பெயர்
#154
** கன்றை வளர்க்கும் பசு
வற்சலம் கன்றை வளர்க்கும் பசு
** 7 பெயர்
#155
** பசுவின் முலை
சுரை முலை என்ப
** 1 பெயர்
#156
** பசுக் கோட்டம்
பசுநிலை கோட்டம்
** 1 பெயர்
#157
** மடி
செருத்தல் ஆபீனம் மடி என வகுப்பர்
** 2 பெயர்கள்
#158
** பசுவின்கன்று
தன்னம் வற்சம் தனம் பசுவின்கன்றே
** 3 பெயர்கள்
#159
** பசுக் கூட்டம்
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம்
** 5 பெயர்கள்
#160
** எருது
பாறல் சே விடை பாண்டில் பெற்றம்
பூணி குண்டை புல்லம் காளை
இறாலே கொட்டியம் மூரி எருது எனல்
** 12 பெயர்கள்
#161
** ஏறு
குத்தமும் விடபமும் கூளியும் நந்தியும்
உக்கமும் இடபமும் ஏறு என உரைப்பர்
** 6 பெயர்கள்
#162
** பேர் எருது
பகடு தூரியம் பாறல் பேர்எருதே
** 9 பெயர்கள்
#163
** பொதி எருது
தூரியம் தூர்வகம் பொதிஎருது ஆகும்
** 2 பெயர்கள்
#164
** எருத்தின் முரிப்பு
இமிலே ஏற்றின் திரள் முரிப்பு ஆகும்
** 1 பெயர்
#165
** பொலி எருது
ஏறு கூளி இடபம் பொலிஎருதே
** 3 பெயர்கள்
#166
** எருமை
காரான் மகிடம் கவரி காரா
காசா சைரிபம் வடவை கயவாய்
மேதி எருமை மூரியும் ஆகும்
** 10 பெயர்கள்
#167
** எருமைப் போத்து
பகடும் கடாவும் அவற்றின் போத்து ஆம்
** 2 பெயர்கள்
#168
** மலட்டு எருமை
மைம்மை என்பது மலட்டுஎருமைப் பெயர்
** 1 பெயர்
#169
** ஆட்டின் பொதுப் பெயர்
அருணம் கொச்சை துருவை மேழகம்
அசம் உதள் துள்ளல் மறி மை வெறி கொறி
புருவை சாகம் ஆட்டின் பொதுப் பெயர்
** 13 பெயர்கள்
#170
** செம்மறி ஆடு
உதள் கொறி துருவை ஒருவே புருவை
அருணம் மேடம் செம்மறிஆடு என்ப
** 7 பெயர்கள்
#171
** துரு ஆடு
துருவை கொறி மை துருஆடு ஆகும்
** 3 பெயர்கள்
#172
** துரு ஆட்டு ஏறு
மேழகம் கம்பளம் தகரே திண்ணகம்
ஏழகம் கடா துரு ஆட்டின் ஏறே
** 6 பெயர்கள்
#173
** ஆட்டுக் குட்டி
குட்டன் சோரன் மறி பறழ் குட்டி
** 4 பெயர்கள்
#174
** வெள்ளாடு
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாடே
** 3 பெயர்கள்
#175
** வெள்ளாட்டு ஏறு
மேடம் செச்சை சாகம் மோத்தை
அசம் மை கடா வெள்ளைஆட்டின்ஏறே
** 7 பெயர்கள்
#176
** வெள்ளாட்டு மறி
வெள்ளை என்பது மறிக்கும் ஆகும்
** 1 பெயர்
#177 பள்ளை ஆடு
வெள்ளை வற்காலி பள்ளைஆடே
** 2 பெயர்கள்
#178
** வரை ஆடு
வருடை சரபம் வரைஆடு ஆகும்
** 2 பெயர்கள்
#179
** காட்டு ஆ
ஆமா கவையமா காட்டுஆ ஆகும்
** 2 பெயர்கள்
#180
** மரை
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும்
** 2 பெயர்கள்
#181
** ஒட்டகம்
அத்திரி நெடுங்கழுத்தல் தாசேரகம் கனகதம்
அயவணம் இரவணம் ஒட்டகம் ஆகும்
** 6 பெயர்கள்
#182
** கழுதை
வேசரி கோகு கரம் வாலேபம்
காளவாயே கர்த்தபம் கழுதை
** 6 பெயர்கள்
#183
**கோவேறு கழுதை
வேசரி அத்திரி கோவேறுகழுதை
** 2 பெயர்கள்
#184
** கரடி
பல்லூகம் எண்கு உளியம் பல்லம்
மிளிறும் எலுவும் குடாவடியும் கரடி
** 7 பெயர்கள்
#185
** கவரிமா
எகினம் மானமா பட்டம் கவரிமா
** 3 பெயர்கள்
#186
** சவரி
ஆகு கவரி சீகரம் சவரி
#187
** மற்றும் சவரி
சாமரம் வெண்மயிரும் சவரி ஆகும்
** 5 பெயர்கள்
#188
** மான்
அரிணம் நவ்வி குரங்கம் சாரங்கம்
மறி உழை சூனம் ஏணம் பிணை மானின் பெயர்
** 9 பெயர்கள்
#189
** மான் ஏறு
இரலை வச்சயம் அவற்றின் ஏறே
#190
** மற்றும் மான் ஏறு
கலை கருமான் என வரும் மான்பெயர்கள் அதற்கே
** 4 பெயர்கள்
#191
** புல்வாய்
இரலை புல்வாய் என்னல் ஆகும்
** 1 பெயர்
#192
** பன்றி
கேழல் குரோடம் கிரி கிடி கிருட்டி
மோழல் வராகம் போத்திரி கோலம்
எறுழி வல்லுளி ஏனம் சூகரம்
கனலி இருளி கருமா கோணி
போழ்முகம் அரி மைம்மா களிறு பன்றி
** 21 பெயர்கள்
#193
** முட் பன்றி
சல்லியம் முளவும் எய்யே முள்மா
#194
** மற்றும் முள் பன்றி
சல்லகம் முள்பன்றி நாமம் ஆகும்
** 4 பெயர்கள்
#195
** முட் பன்றி முள்
சல்லமும் சலமும் அவற்றின் முள்ளின் பெயர்
** 2 பெயர்கள்
#196
** குரங்கு
வலிமுகம் கவியே மர்க்கடம் அரியே
வானரம் கோடரம் கீசகம் கோலம்
பிலவங்கம் தோரணம் மந்தி யூகம்
நிரந்தரம் நாகம் குரங்கின் பெயரே
** 14 பெயர்கள்
#197
** பெண் குரங்கு
மந்தி யூகம் மற்று அதன் பெண் பெயர்
** 2 பெயர்கள்
#198
** கருங் குரங்கு
காரூகம் யூகம் கருங்குருங்கின் பெயர்
** 2 பெயர்கள்
#199
** முசு
ஓரியும் கலையும் கள்வனும் முசுவே
#200
** மற்றும் முசு
கோலாங்கூலம் மைம்முகனும் அதற்கே
** 5 பெயர்கள்
#201
** நாய்
ஞமலி உச்சி எகினம் குக்கல்
கூரன் சூரன் சாரமேயன்
சுனகன் புரோகதி குரைமுகன் ஞாளி
சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே
பாசி இவை நாயின் பெயர் எனப் பகரும்
** 16 பெயர்கள்
#202
** பெண் நாய்
முடுவல் பெண்நாய் ஆக மொழிப
** 1 பெயர் 202
#203
** செந் நாய்
விருகமும் கொக்கும் அண்டிகமும் செந்நாய்
** 3 பெயர்கள் 203
#204
** முயல்
சசமும் வயமும் முயல் ஆகும்மே
** 2 பெயர்கள் 204
#205
** நரி
ஓரி இகலன் ஊளன் சம்பு
செந்து குரோட்டம் கோமாயு சிருகாலன்
ஒண்டன் பூரிமாயு நரியின் பெயரே
** 10 பெயர்கள் 205
#206
** முது நரி
முதுநரி இகலன் கோமாயு ஓரி
** 3 பெயர்கள் 206
#207
** கொம்பு இலா மிருகம்
குமரம் என்பது கொம்புஇலாமிருகம்
** 1 பெயர் 207
#208
** பூஞை
வெருகு மண்டலி இற்புலி விலாளம்
பவனம் ஓதி மார்ச்சாலம் பாக்கள்
பூசை அலவன் விடருகம் பூஞை
** 11 பெயர்கள் 208
#209
** காட்டுப் பூஞை
கான்புலி மண்டலி பாக்கன் கான்பூஞை
** 3 பெயர்கள் 209
#210
** ஆண் பூஞை
விலாளமும் கடுவனும் வெருகும் ஆண்பூஞை
** 3 பெயர்கள் 210
#211
** அழுங்கு
பளிங்கும் மறியும் அழுங்கு ஆகும்மே
** 2 பெயர்கள் 211
#212
** அழுங்கின் குருளை
மற்று இதன் குருளை மறி எனலாகும்
** 1 பெயர் 212
#213
** நாவி
மறுவி மிருகமதம் நாவி ஆகும்
** 2 பெயர்கள் 213
#214
** கத்தூரி
மான்மதம் துருக்கம் நரந்தம் நானம் கத்தூரி
** 4 பெயர்கள் 214
#215
** கீரி
நகுலம் காத்தரி தீர்வையும் கீரி
** 3 பெயர்கள் 215
#216
** உடும்பு
முசலிகை கோதா தடி உடும்பு ஆகும்
** 3 பெயர்கள் 216
#217
** அணில்
வரிப்புறம் வெளில் அணில் இலுதையும் ஆகும்
** 3பெயர்கள் 217
#218
** பச்சோந்தி
கோம்பி சாடம் சாயானதம் முசலி
ஓதி தண்டோடு ஒத்தி மயில்பகை
காமரூபி பச்சோந்தியும் ஆகும்
** 9 பெயர்கள் 218
#219
** ஓந்தி
ஓமான் ஓதி ஓத்தி ஓந்திப் பெயர்
** 3 பெயர்கள் 219
#220
** மூஞ்சூறு
சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூறு
ஆகும் சுவவும் அப் பெயர் ஆமே
** 4 பெயர்கள் 220
#221
** பெருச்சாளி
மூடிகம் களதம் உந்துரு பெருச்சாளி
** 3 பெயர்கள் 221
#222
** கார் எலி
கருப்பை கார் எலி
** 1 பெயர் 222
#223
** சீறெலி
சிகிரி சீறெலி
** 1 பெயர் 223
#224
** அகழ் எலி
இரும்பன் அகழ்எலி
** 1 பெயர் 224
#225
** இல் எலி
ஆகு இல் எலி
** 1 பெயர் 225
#226
** கெவுளி
புள்ளி கோகிலம் பொந்து மனைக்கோள்
பல்லி கெவுளி பெயர் ஆகும்மே
** 5 பெயர்கள்
#227
** எறும்பு
உறவி பிலஞ்சுலோபம் பிபீலிகை எறும்பே
** 3 பெயர்கள்
#228
** கறையான்
சிதலை ஆழல் செல்லே கறையான்
** 3 பெயர்கள்
#229
** தேள்
தெறுக்கால் விருச்சிகம் நலிவிடம் தேளே
** 3 பெயர்கள்
#230
** இதுவுமது
நளியே துட்டன் விடமுள் என்பதுமாம்
** 3 பெயர்கள்
#231
** இந்திரகோபம்
ஈயல் மூதா தம்பலம் இந்திரகோபம்
** 3 பெயர்கள்
#232
** விலங்கின் பொதுப்பெயர்
மாவும் மிருகமும் மானும் குரங்கும்
ஆகும் விலங்கின் பொதுப்பெயர் ஆகும்
** 4 பெயர்கள்
#233
** விலங்கின் வால்
தோகை வாலதி கூலம் வேசகம்
வால் அது என்ப இலாங்கூலமும் ஆகும்
** 5 பெயர்கள்
#234
** விலங்கின் வால் கீழ்
வாலின் கீழ் வெருகம்
** 1 பெயர்
#235
** விலங்கின் கொம்பு
கோடும் மருப்பும் உலவையும் கொம்பே
** 3 பெயர்கள்
#236
** இதுவுமது
சிருங்கமும் விடாணமும் அப் பெயர் தெரிக்கும்
** 2 பெயர்கள்
#237
** புலால்
புறணி புலாலே புலையும் ஆகும்
** 2 பெயர்கள்
#238
** இதுவுமது
ஊழ்த்தசை பூதி என்று உரைக்கப்படுமே
** 2 பெயர்கள்
#239
** இறைச்சி
ஊழ்த்தல் தசையும் தடி ஊன் வள்ளுரம்
பிசிதம் விடக்குத் தூவும் பூழ்தியும் இறைச்சி
** 9 பெயர்கள்
#240
** ஆவின் இறைச்சி
ஆவின் இறைச்சி வள்ளுரம் ஆகும்
** 1 பெயர்
#241
** முடைநாற்றம்
பூழ்தி ஊழ்த்தல் புலவும் முடையே
** 3 பெயர்கள்
#242
** தோல்
சருமம் கிருத்திமம் வடகம் துவக்கு
உரிவை உரி அதள் புறணி பச்சை
துருத்தி பத்தும் தோல் என்று ஆகும்
** 10 பெயர்கள்
#243
** இரத்தம்
செந்நீர் குருதி சோரி எருவை
புண்ணீர் சோணிதம் கறை சுடுவன் உதிரம்
இன்னவை இரத்தம் என்னல் ஆகும்
** 9 பெயர்கள்
#244
** சூல்
பீளும் சினையும் கருவும் சூல் என்ப
** 3 பெயர்கள்
** விலங்கின் ஆண் மரபு
#245
**விலங்கின் ஆண்
களிறும் போத்தும் கலையும் கடுவனும்
பகடும் சேவும் ஒருத்தலும் தகரும்
ஏறும் உம்பலும் ஏட்டையும் மாவும்
ஓரியும் சேவலும் விலங்கின் ஆண் பெயர்
** 14 பெயர்
#246
** அவற்றுள் களிறு
அவற்றுள்
கரியும் சுறவும் கேழலும் களிறே
** 3 பெயர்கள்
#247
** போத்து
மரை ஆன் காரான் காட்டாப் புல்வாய்
புலி சலசாதி அனைத்தும் போத்தே
** 7 பெயர்கள்
#248
** இதுவுமது
யானை வெருகு குதிரை போத்தே
** 3 பெயர்கள்
#249
** கலை
மானும் முசுவும் கலை என வருமே
** 2 பெயர்கள்
#250
** கடுவன் என்னும் பெயர்
கவியும் பூஞையும் கடுவன் என்ப
** 2 பெயர்கள் 250
#251
** பகடு என்னும் பெயர்
யானையும் எருமையும் பெற்றமும் மற்று இவை
பான்மையின் உரைக்கல் பகடு என்று ஆமே
** 3 பெயர்கள் 251
#252
** சே என்னும் பெயர்
குதிரை எருது புல்வாய் சே எனல்
** 3 பெயர்கள் 252
#253
** ஒருத்தல் என்னும் பெயர்
கவரி யானை பன்றி கரடி
உரிய ஆகும் ஒருத்தல் பெயர்க் கொடை
** 4 பெயர்கள் 253
#254
** தகர் என்னும் பெயர்
துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும்
தகர் எனும் நாமம் சாற்றப்பெறுமே
** 4 பெயர்கள் 254
#255
** ஏறு என்னும் பெயர்
புலி உழை மரை ஆ புல்வாய் எருமை
அரி சுறா சங்கே ஏறு எனலாகும்
** 9 பெயர்கள் 255
#256
** உம்பல் என்னும் பெயர்
யானையும் யாடும் உம்பல் என்ப
** 2 பெயர்கள் 256
#257
** ஏட்டை என்னும் பெயர்
எருமையும் வெருகும் ஏட்டை என்ப
** 8 பெயர்கள் 257
#258
** மா என்னும் பெயர்
குதிரை யானை பன்றி மாவே
** 3பெயர்கள் 258
#259
** ஓரி என்னும் பெயர்
முசுவும் நரியும் ஓரி ஆகும்
** 2 பெயர்கள் 259
#260
** சேவல் என்னும் பெயர்
கோழியும் அன்னமும் சேவல் ஆகும்
** 2 பெயர்கள் 260
** விலங்கின் பெண் மரபு
#261
** விலங்கின் பெண்பால் பொதுப் பெயர்
பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவும்
ஆவும் ஆனும் பிடியும் நாகும்
மந்தியும் மூடும் கடமையும் என்றவை
பிறவும் விலங்கின் பெண்பால் ஆமே
** 11 பெயர்கள்
#262
** பிணை என்னும் பெயர்
அவற்றுள்
உழையும் நாயும் பன்றியும் புல்வாயும்
பிணை எனும் பெயர்க் கொடை பேசப்படுமே
** 4 பெயர்கள் 262
#263
** பாட்டி என்னும் பெயர்
பன்றியும் நாயும் பாட்டி என்று ஆகும்
#264
** மற்றும் பாட்டி என்னும் பெயர்
நரியில் பாட்டி நடைபெற்று இயலும்
** 3 பெயர்கள்
#265
** பெட்டை என்னும் பெயர்
ஒட்டகம் குதிரை கழுதை மரை சிங்கம்
பெட்டை என்னும் பெயர்க் கொடை பெறுமே
** 5 பெயர்கள் 265
#266
** பிணா என்னும் பெயர்
பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
பின்றாக் காட்டிப் பிணாவொடு வருமே
** 3 பெயர்கள் 266
#267
** ஆ என்னும் பெயர்
எருமையும் பசுவும் மரையும் ஆ என்ப
** 3 பெயர்கள் 267
#268
** ஆன் என்னும் பெயர்
ஆவும் எருமையும் மரையும் ஆனே
** 3 பெயர்கள் 268
#269
** பிடி என்னும் பெயர்
கரியும் யூகமும் கவரியும் பிடியே
** 3 பெயர்கள் 269
#270
** நாகு என்னும் பெயர்
மரையும் பெற்றமும் எருமையும் நாகே
#271
** மற்றும் நாகு என்னும் பெயர்
நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே
** 5 பெயர்கள் 271
#272
** மந்தி என்னும் பெயர்
குரங்கும் யூகமும் முசுவும் என்று இவை
வருங்கால் பெண் பெயர் மந்தி என்று ஆகும்
** 3 பெயர்கள் 272
#273
** மூடு கடமை என்னும் பெயர்கள்
மூடும் கடமையும் ஆடு அல பெறாவே
** 1 பெயர்
#274
** பெண் பிணா என்னும் பெயர்கள்
பெண்பால் எவையும் பெண்ணும் பிணாவும் ஆம்
#275
** ஆண் என்னும் பெயர்
ஆண்பால் எவையும் ஆண் எனப்படுமே
** விலங்கின் பிள்ளை மரபு
#276
** விலங்கின் பிள்ளைப் பெயர்
குருளையும் குட்டியும் பறழும் பிள்ளையும்
மறியும் கன்றும் குழவியும் பார்ப்பும்
மகவும் விலங்கின் பிள்ளைப் பெயரே
** 9 பெயர்கள்
#277
** குருளை பறழ் குட்டி என்னும் பெயர்கள்
அவற்றுள்
புலி முயல் பன்றி நரி நாய் என்று இவை
குருளையும் பறமும் குட்டியும் ஆகும்
** 5 பெயர்கள்
#278
** பிள்ளை என்னும் பெயர்
பிள்ளைப் பெயர் நாய் ஒழியப் பெறுமே
#279
** மறி என்னும் பெயர்
ஆடும் குதிரையும் மான் அழுங்கு மறி எனல்
** 4 பெயர்கள்
#280
** கன்று என்னும் பெயர்
கலையும் மானும் கழுதையும் மரையும்
பசுவும் எருமையும் கடமையும் யானையும்
ஒட்டகமும் கவரியும் கராமும் கன்று என்ப
** 11 பெயர்கள்
#281
** குழவி மகவு குட்டி பிள்ளை பறழ் பார்ப்பு
** என்னும் பெயர்கள்
குரங்கு முதலாய்க் கோட்டில் வாழும்
விலங்கின் பிள்ளைப் பெயரினை விளம்பில்
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும்
பறழும் பார்ப்பும் அப் பண்பு ஆகும்மே
#282
** பறழ் குட்டி என்னும் பெயர்கள்
வெருகும் நரியும் முயலும் என்று இவை
பறமும் குட்டியும் ஆகும் பண்பே
** 3 பெயர்கள்
#283
** பிள்ளை பார்ப்பு பறழ்
பிள்ளையும் பார்ப்பும் பறமும் என் பெயர்கள்
தள்ளரும் சிறப்பில் தவழ்வன பெறுமே
#284
** குழவி என்னும் பெயர்
யானையும் கடமையும் மரையும் எருமையும்
மானும் குழவிப் பெயரோடு அடையும்
** 5 பெயர்கள்
#285
** குருளை கன்று என்னும் பெயர்கள்
குருளையும் கன்றும் மானில் கொளலே
#286
** குழவி என்னும் பெயர்
குழவி முசுவின் குண நடை பெறுமே
** 1 பெயர்
#287
** பிள்ளை என்னும் பெயர்
நந்தின் ஏற்றையும் மானின் குருளையும்
வந்துழி ஒரு சார் வழங்கும் பிள்ளைப் பெயர்
** 2 பெயர்கள்
#288
** பறழ் குட்டி என்னும் பெயர்கள்
பாக்கனும் அணிலும் பறழொடு குட்டி
** 2 பெயர்கள்
#289
** பார்ப்பு பிள்ளை என்னும் பெயர்கள்
பார்ப்பும் பிள்ளையும் தவழ் சாதிக்கு உரிய
** 1 பெயர்
#290
** விலங்கின் கூட்டத்தின் பெயர்
சாலம் வியூகம் யூதம் விருந்தம்
குலம் ஆர் கணமும் விலங்கின் கூட்டம்
** 6 பெயர்கள்
** 3 பாம்பின் வகை
#291
** பாம்பு
அரவு கட்செவி அங்கதம் வியாளம்
உரகம் பன்னகம் நாகம் சர்ப்பம்
அரியே மாசுணம் புயங்கம் பாந்தள்
பணி அகி தந்தசூகம் போகி
விடதரம் கும்பிநசம் காகோதரம்
மராளம் சக்கிரி அனைத்தும் பாம்பே
#292
** மற்றும் பாம்பு
வாகுவவகதம் கூட பதமும் பாம்பே
** 23 பெயர்கள்
#293
** சாரைப் பாம்பு
துண்டம் இலஞ்சி சாரைப் பாம்பே
** 2 பெயர்கள்
#294
** மண்டலிப் பாம்பு
மண்டலி யாவும் கோளகம் ஆகும்
** 1 பெயர்
#295
** கண் குத்திப் பாம்பு
மால் உதாசனன் மற்று அது கண்குத்தி
** 1 பெயர்
#296
** பாம்பின் படம்
பையும் பணமும் பாம்பின் படமே
** 2 பெயர்கள்
#297
** பாம்பின் படப் பொறி
உத்தியும் துத்தியும் உரக படப்பொறி
** 2 பெயர்கள்
#298
** பாம்பின் நஞ்சு
காளம் காரி கரளம் நீலம் கரம்
ஆலாலம் ஆலம் கடு விடம் நஞ்சே
** 9 பெயர்கள்
#299
** பாம்பின் நச்சுப் பல்
கட்செவி நஞ்சு காலும் பல் தட்டம்
** 1 பெயர்
#300
** நாகர வண்டு
நாகர வண்டின் நாமம் நொள்ளை
** 1 பெயர்
#301
** சிலந்தி
சிலம்பி உலூதை காவன் சிலந்தி
** 3 பெயர்கள்
#302
** உளு
உளு என் கிளவி உசு ஆகும் என்ப
** 1 பெயர்
#303
** நாங்கூழ்
நாங்கூழ்க் கிளவி பூநாகமும் ஆகும்
** 1 பெயர்
#304
** உலண்டு
கோற்புழு உலண்டு கீடம் ஆகும்
** 2 பெயர்கள்
#305
** புழு
கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே
** 3 பெயர்கள்
** 4. சல சா வகை
#306
** மகர மீன்
மானே சுறா கலை மகரமீனின் பெயர்
#307
** மற்றும் மகர மீன்
மீன் ஏறு என்பதும் விளம்பப்பெறுமே
** 4 பெயர்கள்
#308
** இறால் மீன்
இறவே இரால் மீன்
** 1 பெயர்
#309
** கெளிற்று மீன்
கெளிறு கெளிற்றுமீன்
**1 பெயர்
#310
** பெருமீன்
யானைமீன் பனைமீன் திமிலம் பெருமீன்
** 3 பெயர்கள்
#311
** யானை மீனை விழுங்கும் மீன்
யானையை விழுங்கும் மீன் திமிங்கிலம் ஆகும்
** 1 பெயர்
#312
** அம் மீனை விழுங்கும் மீன்
அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே
** 1 பெயர்
#313
** ஆரால் மீன்
ஆரல் ஆரால்மீன்
** 1 பெயர்
#314
** கெண்டை மீன்
சபரம் கெண்டைமீன்
** 1 பெயர்
#315
** மலங்கு மீன்
ஏனையும் நூறையும் மலங்கு என்று ஆகும்
** 2 பெயர்கள்
#316
** அயிரை
அயிரை நொய்ம்மீன் சிறுமீன் ஆகும்
** 2 பெயர்கள்
#317
** மீன் பொதுப் பெயர்
மயிலையும் மானும் மச்சமும் மீனமும்
புழலும் மீனின் பொதுப் பெயர் ஆகும்
** 5 பெயர்கள்
#318
** முதலை
சிஞ்சுமாரம் இடங்கர் வன்மீன்
இங்கு இவை கராவே கராமும் முதலை
** 5 பெயர்கள்
#319
** ஆண் முதலை
கரா அதன் ஆண் எனக் கருதல் வேண்டும்
** 1 பெயர்
#320
** சிப்பி
இப்பி சுத்தி சிப்பி ஆகும்
** 2 பெயர்கள்
#321
** பறவை என்னும் பெயர்
தோல் சிறகு எல்லாம் பறவை எனப்படும்
#322
** ஆமை
கமடம் கூர்மம் கச்சபம் உறுப்பு அடக்கி
கடிப்பும் ஆமைப் பெயர் ஆகும்மே
** 5 பெயர்கள்
#323
** பெண் ஆமை
துளி பெண்ஆமை ஆம் எனச் சொல்லுப
** 1 பெயர்
#324
** சங்கு
நந்து சுத்தி நாகு பணிலம்
வண்டு கோடு வளையே சுரிமுகம்
கம்பு வெள்ளை இடம்புரி சங்கே
#325
** மற்றும் சங்கு
தராவும் அதன் பெயர் சாற்றப்பெறுமே
** 12 பெயர்கள்
#326
** வலம்புரிச் சங்கு
வலம்புரி கொக்கரை
** 1 பெயர்
#327
** சலஞ்சலம்
சலஞ்சலம் பணிலம்
** 1 பெயர்
#328
** இடம்புரிச் சங்கு என்னும் பெயர்
இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி
#329
** வலம்புரிச் சங்கு என்னும் பெயர்
இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி
#330
** சலஞ்சலம் என்னும் பெயர்
வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம்
#331
** பாஞ்ச சன்னியம் என்னும் பெயர்
சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்சசன்னியம்
#332
** நத்தை
கரு நந்து நாகு சுரிமுகம் நத்தை
** 3 பெயர்கள்
#333
** கிளிஞ்சில்
ஏரலும் எருந்தும் ஊரலும் கிளிஞ்சில்
** 3 பெயர்கள்
#334
** தவளை
அரி மண்டூகம் தேரை தவளை
#335
** மற்றும் தவளை
நுணலையும் பேகமும் நுவல் பெயர் பெறுமே
** 5 பெயர்கள்
#336
** ஞெண்டு
கள்வன் அலவன் நள்ளி கர்க்கடகம்
குவிரே கவைத்தாள் ஞெண்டின் கூற்றே
** 6 பெயர்கள்
#337
** ஆண் ஞெண்டு
அலவன் ஆண்ஞெண்டு ஆகும் என்ப
** 1 பெயர்
#338
** பலகறை
பட்டி கவடி அலகு பலகறை
** 3 பெயர்கள்
#339
** அட்டை
உருவே சளுகம் அட்டை என மொழிப
** 2 பெயர்கள் 339
** எட்டாவது மாப் பெயர் வகை முற்றிற்று
@9 மரப் பெயா வகை
#1
** ஐந்தரு வருக்கம்
சந்தானம் தேவதாரம் கற்பகம்
மந்தாரம் பாரிசாதம் ஐந்தரு வருக்கம்
** 5 பெயர்கள் 1
#2
** இவ் ஐவகை மரத்தின் பெயர்
இ மரம் ஐந்தும் தெய்வ மரம் என்ப
#3
** கற்பகம் சேர் கொடி
கற்பகம் சேர் கொடி காமவல்லி
** 1 பெயர் 3
#4
** சந்தன மரம்
சாந்தம் மலயசம் சந்திர திலகம்
ஏய்ந்த ஆரம் சந்து இவை சந்தனம்
** 5 பெயர்கள் 4
#5
** செஞ் சந்தனம்
பிசனம் செஞ்சந்தனத்தின் பெயரே
** 1 பெயர் 5
#6
** அகில்
அகருவும் பூழிலும் காழ்வையும் அகலே
#7
** மற்றும் அகில்
பகரில் காக துண்டமும் ஆகும்
** 4 பெயர்கள் 7
#8
** குங்கும மரம்
மரவமும் துருக்கமும் குங்கும மரமே
** 2 பெயர்கள் 8
#9
** சண்பகம்
சம்பகம் செண்பகம் சண்பக மரமே
** 2 பெயர்கள் 9
#10
** சிறு சண்பகம்
சாதி மாலதி சிறுசண்பகமே
** 2 பெயர்கள் 10
#11
** செவ்வந்தி
பட்டிகை செவ்வந்தி
** 1 பெயர் 11
#12
** புரசை மரம்
பிரமதரு பலாசம் புரசை மரப் பெயர்
#13
** மற்றும் புரசை மரம்
புனமுருக்கு என்றும் புகலப் பெறுமே
** 3 பெயர்கள்
#14
** ஆல மரம்
வடமரம் தொன்மரம் பூதவம் கான்மரம்
பழுமரம் நியக்குரோதம் கோளி ஆல் என்ப
** 7 பெயர்கள்
#15
** தேக்கு
சாதி சாகம் தேக்கந் தருவே
** 2 பெயர்கள்
#16
** வேங்கை
பீதசாலம் கணி திமிசு திமில் வேங்கை
** 4 பெயர்கள்
#17
** கொன்றை
இதழி கடுக்கை தாமம் கொன்றை
#18
** மற்றும் கொன்றை
மதலை ஆர்க்குவதம் என்று ஆகும்
** 5 பெயர்கள்
#19
** அரசு
சுவலை அச்சுவத்தம் பிப்பலம் போதி
திருமரம் குஞ்சராசனம் பணை கணவம் அரசு
** 8 பெயர்கள்
#20
** ஆச்சா
சாலம் மராமரம் ஆவும் ஆச்சா
** 8 பெயர்கள்
#21
** மகிழம்
வகுளம் இலஞ்சி கேசரம் மகிழே
** 3 பெயர்கள்
#22
** அசோகு
பிண்டி செயலை காகோளி அசோகு
** 3 பெயர்கள்
#23
** மருது
அருச்சுனம் பூதவம் மருதம் ஆகும்
** 2 பெயர்கள்
#24
** இறலி
இரத்தி இறலி
** 1 பெயர்
#25
** தான்றி
கலித்துருமம் தான்றி
** 1 பெயர்
#26
** குரா
கோட்டம் குடிலம் குரா ஆகும்மே
#27
** மற்றும் குரா
கோபிதாரமும் குராமரம் ஆகும்
** 3 பெயர்கள்
#28
** நாவல்
நாவல் ஆருகதம் சம்பு நேரேடம்
** 3 பெயர்கள்
#29
** குழி நாவல்
சாதேவம் குழி நாவல் ஆகும்
** 1 பெயர்
#30
** வேம்பு
நிம்பம் வேம்பு பிசிதமும் ஆகும்
** 2 பெயர்கள்
#31
** அனிச்சம்
நவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம்
** 3 பெயர்கள்
#32
** பாதிரி
பாடலம் புன்காலி பாதிரி ஆகும்
** 2 பெயர்கள்
#33
** ஞாழல்
நாகம் பலினி ஞாழல் ஆகும்
** 2 பெயர்கள்
#34
** கோங்கு
கன்னிகாரம் துருமோற்பலமே
குயா கூன் பிணரே கோங்கு ஆகும்மே
** பெயர்கள்
#35
** நாரத்தை
நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை
** 3 பெயர்கள்
#36
** குமிழ்
கூம்பல் கடம்பல் குமிழ் எனக் கூறுப
** 2 பெயர்கள்
#37
** அதிமதுரம்
யட்டி மதுரம் மதுகம் அதிங்கம்
தட்டு இன்று உரைப்பில் சல்லியும் அதுவே
** 4 பெயர்கள்
#38
** மஞ்சாடி
திலகம் மஞ்சாடி
** 1 பெயர்
#39
** குடை வேல்
உடை குடைவேலே
** 1 பெயர்
#40
** புன்னை
புன்னை புன்னாகம்
** 1 பெயர்
#41
** சுரபுன்னை
வழை சுரபுன்னை
** 1 பெயர் 41
#42
** வெட்சி
சிந்தாரமும் குல்லையும் செச்சையும் வெட்சி
** 3 பெயர்கள் 42
#43
** செருந்தி
பஞ்சரம் செருந்தி செங்கோடும் ஆகும்
** 2 பெயர்கள் 43
#44
** அலரி
கவீரம் கணவீரம் கரவீரம் அலரி
#45
** மற்றும் அலரி
அயமரம் அடுக்கும் என்பது ஆகும்
** 5 பெயர்கள் 45
#46
** முள் முருக்கு
கவிரே கிஞ்சுகம் முள்முருக்கு ஆகும்
** 2 பெயர்கள் 46
#47
** பெருங் குறிஞ்சி
கோரண்டம் குரண்டகம் பெருங்குறிஞ்சி ஆகும்
** 2 பெயர்கள் 47
#48
** பொன் வண்ணக் குறிஞ்சி
பீதை பொன்வண்ணக்குறிஞ்சி ஆகும்
** 1 பெயர்
#49
** வாடாக் குறிஞ்சி
குரவகம் வாடாக்குறிஞ்சி ஆகும்
** 1 பெயர் 49
#50
** மழை வண்ணக் குறிஞ்சி
பாணம் நீலி மழைவண்ணக்குறிஞ்சி
** 2 பெயர்கள்
#51
** பவளக் குறிஞ்சி
நீடு சீண்டியம் பவளக்குறிஞ்சி
** 1 பெயர் 51
#52
** மகர வாழை
மருகும் தானமும் மகரவாழை
** 2 பெயர்கள் 52
#53
** இரு வேலி
வேரி பீதகம் மூலகந்தம் இருவேலி
** 3 பெயர்கள்
#54
** குருக்கத்தி
அதிகம் முத்தகம் மாதவி வாசந்தி
குருகு நாகரி இவை குருக்கத்தி ஆகும்
** 6 பெயர்கள்
#55
** பலா
பாகல் வருக்கை பனசம் பலாவே
** 3 பெயர்கள்
#56
** ஈரப் பலா
ஆசினி பலாசம் ஈரப்பலாவே
** 2 பெயர்கள்
#57
** மா
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும்
ஆமிரமும் மாழையும் மாமரம் ஆகும்
** 6 பெயர்கள்
#58
** புளிமா
நாளினி இபங்கம் மாழை சிஞ்சம்
ஆம்பிரம் எகினம் சூதம் புளிமா
** 7 பெயர்கள்
#59
** தேமா
ஆமிரம் சககாரம் சேதாரம் தேமா
** 3 பெயர்கள்
#60
** புளிய மரம்
சிந்தூரம் சிந்தகம் திந்திருணி எகினம்
சஞ்சீவகரணி ஆம்பிலம் புளியே
** 6 பெயர்கள்
#61
** இலவு
பொங்கர் சான்மலி பூரணி இலவே
** 3 பெயர்கள்
#62
** இலந்தை
குல்லரி குவலி கோற்கொடி கோலி
இரத்தி வதரி இலந்தை ஆகும்
** 6 பெயர்கள்
#63
** இலந்தைப் பழம்
அதன் பழம் கோலமும் கோண்டையும் ஆகும்
** 2 பெயர்கள்
#64
** அத்தி
அதவே கோளி உதும்பரம் அத்தி
** 3 பெயர்கள்
#65
** விளா
விளவு கபித்தம் வெள்ளில் விளாவே
** 3 பெயர்கள்
#66
** காயா
பூவை அஞ்சனி அல்லி புன்காலி
காசை வச்சி காயா ஆகும்
#67
** களா
களவம் களாவே
** 1 பெயர்
#68
** நுணா
தணக்கு நுணாவே
** 1 பெயர்
#69
** எலுமிச்சை
சம்பீரம் முருகு சதாபலம் சம்பளம்
அருணம் இலிகுசம் எலுமிச்சை ஆகும்
** 6 பெயர்கள்
#70
** நெல்லி
ஆமலகம் நெல்லி ஆகும் என்ப
** 1 பெயர்
#71
** கடுக்காய்
அரிதகி கடுவே பத்தியம் கடுக்காய்
** 3 பெயர்கள்
#72
** மாதுளை
மாதுளங்கம் மாதுளம் கழுமுள் மாதுளையே
** 3 பெயர்கள்
#73
** தாது மாதுளை
தாடிமம் தாதுமாதுளை என்ப
** 1 பெயர்
#74
** வில்வம்
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை
#75
** மற்றும் வில்வம்
மாவிளம் வில்லுவம் மற்று அதன் பெயரே
** 5 பெயர்கள்
#76
** வஞ்சி
வானீரம் பிசின் வஞ்சி ஆகும்
** 2 பெயர்கள்
#77
** செங்கருங்காலி
சிறுமாரோடம் செங்கருங்காலி
** 1 பெயர்
#78
** கருங்காலி
கதிரம் கருங்காலி
** 1 பெயர்
#79
** ஈந்து
கர்ச்சூரம் ஈந்தே
** 1 பெயர்
#80
** வெட்பாலை
குடசம் கிரி மல்லிகை வெட்பாலை
** 2 பெயர்கள்
#81
** அழிஞ்சில்
அழிஞ்சில் சேமரம் அங்கோலம் ஆகும்
** 2 பெயர்கள்
#82
** கடம்பு
கதம்பமும் விசாலமும் நீபமும் கடம்பே
#83
** மற்றும் கடம்பு
இந்துளம் மராவும் வந்துழிக் கொளலே
** 5 பெயர்கள்
#84
** குருந்தம்
குந்தம் குருந்தே
** 1 பெயர்
#85
** செம்பரத்தை
மந்தாரம் செம்பரத்தை ஆம் என வகுப்பர்
** 1 பெயர்
#86
** வெண்நொச்சி
சிந்துவாரம் நீர்க்குண்டி வெண்நொச்சி
** 2 பெயர்கள்
#87
** தேற்று மரம்
சில்லம் இல்லம் கதலிகம் தேற்றே
** 3 பெயர்கள்
#88
** ஆத்தி
ஆரே தாதகி சல்லகி ஆத்தி
** 3 பெயர்கள்
#89
** அகத்தி
அச்சம் முனியே கரீரம் அகத்தி
** 8 பெயர்கள்
#90
** பச்சிலை
பச்சிலை தமாலம் பசும்பிடி ஆகும்
** 2 பெயர்கள்
#91
** முருங்கை
கருஞ்சனம் சிக்குரு முருங்கை ஆகும்
** 2 பெயர்கள்
#92
** எட்டி
காளம் காஞ்சிரை கோடரம் எட்டி
** 3 பெயர்கள்
#93
** சதுரக் கள்ளி
வச்சிராங்கம் கண்டீர்வம் அயிலி
வச்சிரவிருக்கம் சதுரக்கள்ளி
** 4 பெயர்கள்
#94
** வாகை
சிரீடம் பாண்டில் வாகை ஆகும்
** 2 பெயர்கள்
#95
** ஓடை
உலவை ஓடை
** 7 பெயர்
#96
** உழிஞ்சில்
உன்னம் உழிஞ்சில்
** 1 பெயர்
#97
** சீக்கிரி
முன்னம் துரிஞ்சில் உசிலை சீக்கிரி
** 3 பெயர்கள்
#98
** இலுப்பை
குலிகம் இருப்பை மதூகம் இலுப்பை
#99
** மற்றும் இலுப்பை
சந்தானகரணி எனவும் சாற்றும்
** 4 பெயர்கள்
#100
** தெங்கு
தாழை இலாங்கலி தென்னையும் தெங்கே
#101
** மற்றும் தெங்கு
நாளிகேரம் என்பதும் நவிலும்
** 4 பெயர்கள் 101
#102
** பன்னாடை
நாரி நெய்யரி அதன் பன்னாடை
** 2 பெயர்கள் 102
#103
** கமுகு
கந்தி பூகம் பூக்கமும் கமுகே
** 3 பெயர்கள் 103
#104
** கூந்தல் கமுகு
தாலம் கூந்தல் கமுகு ஆகும்மே
** 1 பெயர் 104
#105
** பாக்கு
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே
** 3 பெயர்கள் 105
#106
** பனை
போந்து தாலம் பெண்ணை புற்பதி
தாளி கரும்புறம் புற்றானியும் பனை
** 7 பெயர்கள்
#107
** இளம் பனை
போந்தை இளம் பனை
** 1பெயர் 107
#108
** கூந்தல் பனை
தாளி கூந்தல் பனை
** 1 பெயர் 108
#109
** வாழை
கதலி அரம்பை கவரே சேகிலி
திரணபதி ஓசை வாழையின் பெயரே
** 6 பெயர்கள் 109
#110
** மூங்கில்
வெதிரும் வேயும் விண்டும் விண்டலும்
பணையும் நெடிலும் வரையும் அரியும்
தட்டையும் திகிரியும் தடமும் அமையும்
வேரலும் கழையும் தூம்பும் வேழமும்
காம்பும் கிளையும் கீசகமும் வேணும்
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும்
மூங்கிலின் பெயர் முந்தூழும் ஆகும்
#111
** மற்றும் மூங்கில்
சானகி திரிகண் நேமி பாதிரி
ஆம்பல் தொளையும் சபமும் அதன் பெயர்
** 32 பெயர்கள் 111
#112
** மூங்கில் அரிசி
வேரல் தோரை மூங்கில்அரிசிப் பெயர்
** 2 பெயர்கள் 112
#113
** தாழை
முண்டகம் மடியே கைதை முடங்கல்
கண்டல் கேதகை முசலி தாழை
** 7 பெயர்கள் 113
#114
** பட்டிகை
பறிவை பட்டிகை
** 1 பெயர்
#115
** கரும்பு
கழை வேழம் இக்கு கன்னல் கரும்பே
** 4 பெயர்கள் 115
#116
** பூவாது காய்க்கும் மரம்
கோளி பூவாது காய்க்கும் மரமே
#117
** மற்றும் பூவாது காய்க்கும் மரம்
வானப்பிரத்தி பத்தியமும் வரையார்
** 3 பெயர்கள் 117
#118
** வண்டு உணா மலர் மரம்
சண்பகமும் வேங்கையும் வண்டு உணா மலர் மரம்
**2 பெயர்கள் 118
#119
** வன்னி
கலிசம் சமியே குலிசம் வன்னி
** 3 பெயர்கள் 119
#120
** ஓமை
ஓமை உகாவே
** 1 பெயர் 120
#121
** புன முருங்கை
புன்கு புனமுருங்கை
** 1 பெயர் 121
#122
** ஒடு
ஒடுவே உடுப்பை
** 1 பெயர் 122
#123
** புன்கு
நத்தமாலம் புன்கு காஞ்சனமும் நவிலும்
** 2 பெயர்கள்
#124
** ஆண் மரம்
எகினே சேமரம் ஆண்மரம் என்ப
** 2 பெயர்கள் 124
#125
** பராய் மரம்
பசுநா விட்டில் புக்கு பராய்மரம்
** 3 பெயர்கள் 125
#126
** நறுவிலி
அலியும் செலுவும் வலியும் நறுவிலி
** 3 பெயர்கள்
#127
** செம்புளிச்சை
தேவதாரம் செம்புவிச்சை என்ப
** 1 பெயர்
#128
** புனஎலுமிச்சை
புனஎலுமிச்சை குருந்து எனப் புகலுவர்
** 1 பெயர்
#129
** எருக்கு
அருக்கம் சல்லியகரணி எருக்கே
** 2 பெயர்கள்
#130
** ஆமணக்கு
ஏரண்டம் சித்திரம் என்பது ஆமணக்கே
** 2 பெயர்கள்
#131
** பருத்தி
பரியே பன்னல் கார்ப்பாசம் பருத்தி
** 3 பெயர்கள்
#132
** மருந்து என்னும் பெயர்
புல்லும் மரனும் புதலும் பூடும்
வல்லியும் பெயர் பெறும் மருத்து சஞ்சீவி
** 6 பெயர்கள்
#133
** நால்வகை மருந்து
சல்லியகரணி சந்தானகரணி
சமனியகரணி முதலில் உதித்த
மிருத சஞ்சீவனி மருந்து நால்வகையே
** 4 பெயர்கள்
#134
** அத்திர சத்திரம் தைத்த புண் மாற்றும் மருந்து
தைத்த அத்திரம் சத்திரம் தணிக்கும்
மெய்த் தரு மருந்தே சல்லியகரணி
** 1 பெயர்
#135
** துணிபட்ட உறுப்பினைப் பொருத்தும் மருந்து
துண்டமான உறுப்புத் துணியினைச்
சந்துசெய் மருந்தே சந்தானகரணி
** 1 பெயர்
#136
** விரணம் தழும்புகளை நீக்கும் மருந்து
விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினைத்
தகைமைசெய் மருந்தே சமனியகரணி
** 1 பெயர்
#137
** உயிர்தரும் மருந்து
உயிர்தரும் மருந்தே மிருதசஞ்சீவனி
#138
** மற்றும் உயிர்தரும் மருந்து
அதகமும் அமுதும் சீவனியும் என்ன
உயிர்தரும் மருந்தின் உறு பெயர் ஆகும்
** 4 பெயர்கள்
#139
** நோய் தீர்க்கும் மருந்து
உறு நோய் தீர்க்கும் மருந்து உறை என்ப
** 1 பெயர்
#140
** மருந்து
உறையே குளியம் ஓடதி ஒளடதம்
அதகமும் யோகமும் மருந்து எனலாகும்
** 6 பெயர்கள்
#141
** மரப் பொதுவின் பெயர்
பாதபம் தாரு தருவே தாவரம்
ஓதிய மூலம் மரப் பொதுப் பெயரே
#142
** மற்றும் மரப் பொதுப் பெயர்
அகமே அங்கிரி விருக்கம் துருமம்
அகலியம் சாதி என்று அனைத்தும் அப் பெயரே
** 11 பெயர்கள்
#143
** மரக் கன்று
போதகம் பிள்ளை போத்து குழவி
கால் இள மரத்தின் கன்றின் பெயரே
** 5 பெயர்கள்
#144
** மர உரி
மரத்தோல் வற்கலை சீரை மரவுரி
#145
** மற்றும் மர உரி
இறைஞ்சியும் அதற்கு இயந்த பெயரே
** 4 பெயர்கள்
#146
** மரக் கொம்பு
கோடே விடபம் கோடரம் பொங்கர்
சாகை கவடு உலவை தாரு
சினை பணை கொம்பர் கவலை மரக்கொம்பே
** 12 பெயர்கள்
#147
** சேகு
சம்பம் ஆசினி காழே காழ்ப்பு
சாரம் வயிரம் கலை அரி சேகு எனல்
** 8 பெயர்கள்
#148
** தழை
உலவை தழையே
** 1 பெயர்
#149
** கப்பு
கவையும் கவரும் கப்பு எனலாகும்
** 2 பெயர்கள்
#150
** இளங் கொம்பு
வளாஅர் மெல்லியல் மற்று இளங்கொம்பே
** 2 பெயர்கள் 150
#151
** தளிர்
வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம்
பல்லவம் அலங்கல் கிளை பைந் தளிர் எனல்
** 8 பெயர்கள் 151
#152
** தளிர்த்தல்
இலிர்த்தலும் சிலிர்த்தலும் குழைத்தலும் தளிர்த்தல்
** 3 பெயர்கள் 152
#153
** அடி வெண்குருத்து
முருந்தே முதலில் செறி வெண் குருத்தே
** 1 பெயர்
#154
** மலர்க் கொத்து
தொத்து மஞ்சரி துணர் இணர் தொடர்ச்சி
மற்று இவை அனைத்தும் மலர்க்கொத்து என்ப
** 5 பெயர்கள்
#155
** இலை
பலாசம் பன்னம் பத்திரம் தகடு பாசடை
தண்ணடை சாகை தமாலம் ஓலை தழை
பச்சிலை உலவை அடை இலைப்பெயர்
#156
** மற்றும் இலை
சதனம் சதம் பத்திரி தலமும் ஆகும்
** 17 பெயர்கள் 156
#157
** பரலின் உட்படு குருத்து
பயினே பரலின் உட்படு குருத்தே
** 2 பெயர்
#158
** மொட்டு
கலுவடம் நனை முகை கன்னிகை அரும்பே
முகிளம் கவிகை சாலகம் கோரகம்
போகில் நகை மலரும் மொக்குள் மொட்டு என்ப
** 12 பெயர்கள் 158
#159
** மலா
தாமம் குசுமம் தாரே அலர் வீ
போது சுண்ணம் சுமனசம் பூவே
சுமம் துணர் அலரி ஆலம் நல் மலர்ப் பெயர்
** 13 பெயர்கள்
#160
** மலர்த் தாது
கோசரம் மகரம் சிதரே கொங்கு
கேசரம் துணர் இணர் கிளர் மலர்த் தாதே
** 8 பெயர்கள் 160
#161
** தாதின் தூள்
மகரந்தம் சுண்ணம் தாதின் தாளே
#162
** மற்றும் தாதின் தூள்
பராகம் என்றும் பகரப்பெறுமே
** 3 பெயர்கள்
#163
** மலர்த் தேன்
மகரந்தம் மலர்த் தேன்
** 1 பெயர்
#164
** பூ இதழ்
தாதும் அகதழும் தண்டும் தோடும்
ஏடும் பூவின் இதழ்ப் பெயர் என்ப
** 5 பெயர்கள்
#165
** அக இதழ்
அல்லி அகஇதழ்
** 1 பெயர்
#166
** புற இதழ்
புல்லி புறஇதழ்
** 1 பெயர்
#167
** மரத்தின் குலை
தாறும் படுவும் சாறும் குடும்பும்
கோடும் கொத்தும் மரத்தின் குலையே
** 6 பெயர்கள்
#168
** முளை
காலே அங்குரம் முளை எனலாகும்
** 2 பெயர்கள்
#169
** வேர்
தூரும் சடையும் சிவையும் வேரே
** 3 பெயர்கள்
#170
** கிழங்கு
மூலம் மூலகம் கந்தம் கிழங்கே
#171
** மற்றும் கிழங்கு
சகுனம் எனவும் சாற்றப்பெறுமே
** 2 பெயர்கள்
#172
** சிற்றரும்பு
முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே
** 4 பெயர்கள்
#173
** உலர்ந்த பூ
உணங்கல் சாம்பல் வாடல் உலர்ந்தபூ
** 3 பெயர்கள்
#174
** மலர்ச்சி
அலர்தல் அவிழ்தல் விள்ளல் நகுதல்
மலர்தல் விரிதல் மலர்ச்சிப் பெயரே
** 6 பெயர்கள்
#175
** விரிமலா
இகமலர் வெதிர் தொடர்ப்பூ விரிமலரே
** 3 பெயர்கள்
#176
** பழம் பூ
செம்மல் சாம்பல் தேம்பலும் பழம்பூ
** 3 பெயர்கள்
#177
** விதை
வீசம் பரலே விச்சு விரை விதை
#178
** மற்றும் விதை
காழும் கொட்டையும் ஆகும் என்ப
** 6 பெயர்கள்
#179
** பிஞ்சு
வடு எலு பிஞ்சு
** 2 பெயர்கள்
#180
** பசுங்காய்
தீவிளி பசுங்காய்
** 1 பெயர்
#181
** பழம்
பலமும் கனியும் பழம் என்று ஆகும்
** 2 பெயர்கள்
#182
** கனித் தோல்
கனித்தோல் செகிளும் காழும் ஆகும்
** 2 பெயர்கள்
#183
** காய் மரம்
பலினம் காய்மரம்
** 1 பெயர்
#184
** காயாத மரம்
அவகேசி அலாமரம்
** 1 பெயர்
#185
** தழை மரம்
மலினம் தழைமரம்
** 1 பெயர்
#186
** உலர் மரம்
வானம் உலர்மரம்
** 1 பெயர்
#187
** ஆண் மரம்
அகக்காழ் வன்மரம் ஆண்மரம் ஆகும்
** 2 பெயர்கள்
#186
** பெண்மரம்
புறக்காழ் புன்மரம் பெண்மரம் என்ப
** 2 பெயர்கள்
#189
** அலிமரம்
இரு திறத்து அலாதன மரம் அலி வெளிறே
** 1 பெயர்
#190
** இலைக் கறி
அடை சாகம் பன்னம் அடகும் இலைக்கறி
** 4 பெயர்கள்
#191
** சோலை
அரி நந்தனவனம் தண்டலை பொழிலே
ஆராமம் துடவை தோட்டம் உய்யானம்
உபவனம் உத்தியானம் செய்கால் மரச்செறிவு
சோலை இள மரக்கா எனச் சொல்லும்
** 13 பெயர்கள்
#192
** ஊரொடு சேர்ந்த சோலை
ஊரொடு சேர்ந்த சோலை வனம் என்ப
** 1 பெயர்
#193
** மலையொடு சேர்ந்த சோலை
மலையொடு சேர்ந்த சோலை ஆராமம்
** 1 பெயர்
#194
** கழிக்கரைச் சோலை
கானல் என்பது கழிக்கரைச் சோலை
** 1 பெயர்
#195
** செய்குன்று சேர்ந்த சோலை
செய்குன்று சேர்ந்த சோலை தோப்பு ஆகும்
** 1 பெயர்
#196
** வயல் சூழ் சோலை
வயல் சூழ் சோலை இளமரக்காவே
** 1 பெயர்
#187
** சிறு தூறு
அரிலும் அறலும் பதுக்கையும் சிறுதூறு
** 3 பெயர்கள்
#198
** குறுங் காடு
குறுங்காட்டின் பெயர் இறும்பு என மொழிப
** 1 பெயர்
#199
** பெருங் காடு
பெருங்காடு வல்லை எனப் பெயர் பெறுமே
** 1 பெயர்
#200
** காவற் காடு
கணையம் இளை அரண் காவற்காடே
** 3 பெயர்கள்
#201
** முது காடு
முதையே இலையுதிர்வு முதுகாடு என்ப
** 2 பெயர்கள்
#202
** கரி காடு
பொரச்சையும் சுரமும் பொதி கரிகாடே
** 3 பெயர்கள்
#203
** வேலி
அடைப்பும் காப்பும் வேலி ஆகும்
** 2 பெயர்கள்
#204
** மரப் பொந்து
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல்
பொந்து ஆம் மரம் எனப் புகன்றனர் புலவர்
** 5 பெயர்கள்
#205
** முள்
கண்டகம் முள்ளே கடுவும் ஆகும்
** 2 பெயர்கள்
#206
** தூறு
இறும்பே மிடை தூறு என விளம்பினரே
** 2 பெயர்கள்
#207
** மரச் செறிவு
பொதும்பர் கோடரம் உலவை மரச்செறிவே
** 3 பெயர்கள்
#208
** விறகு
முளரி கறலே முருடு காழ் காட்டம்
ஞெகிழி இந்தனம் சமிதை நீள் விறகே
** 8 பெயர்கள்
#209
** முட் செடிப் பொது
முளரி முண்டகம் முட்செடிப்பொதுவே
** 2 பெயர்கள்
#210
** விரி தூறு
அதிரல் விரிதூறே
** 1 பெயர்
#211
** சுண்டி
சுச்சு சுண்டி
** 1 பெயர்
#212
** வறட்சுண்டி
சுமங்கை வறட்சுண்டி
** 1 பெயர்
#213
** ஆவிரை
பகரி ஆவிரை
** 1 பெயர்
#214
** வஞ்சி
வானீரம் வஞ்சுளம் வஞ்சி ஆகும்
** 2 பெயர்கள்
#215
** துத்தி
கோளியம் துத்தி
** 1 பெயர்
#216
** ஆடா தோடை
ஆடாதோடை வாசை ஆகும்
** 1 பெயர்
#217
** சித்திர மூலம்
சித்திரமூலம் கொடிவேலி ஆகும்
** 1 பெயர்
#218
** தும்பை
துரோணம் தும்பை
#219
** ஆதொண்டை
தொண்டை ஆதொண்டை
** 1 பெயா
#220
** மரல்
அரலை மரல் ஆம்
** 1 பெயர்
#221
** கற்றாழை
குமரி கற்றாழை
** 1 பெயர்
#222
** நாயுருவி
கரமஞ்சரி நாயுருவி ஆகும்
** 1 பெயர்
#223
** கொழிஞ்சி
கொழிஞ்சியின் பெயர் கோளி என்று ஆகும்
** 1 பெயர்
#224
** ஊமத்தை
உன்மத்தம் ஊமத்தை
** 1 பெயர்
#225
** கஞ்சா
கஞ்சங்குல்லை கஞ்சா ஆகும்
** 1 பெயர்
#226
** பொன்னூமத்தை
மதமத்தை பொன்னூமத்தை ஆகும்
** 1 பெயர்
#227
** நீலி
அவுரி பத்தியம் நீலி ஆகும்
** பெயர்கள்
#228
** துழாய்
குல்லை முடி துளவம் வனமும் துழாய் எனல்
#229
** மற்றும் துழாய்
பிருந்தமும் அப் பெயர் பேசப்பெறுமே
** 5 பெயர்கள்
#230
** தூதுளை
தூதுளம் தூதுளை
** 1 பெயர்
#231
** வீழி
விழுமி வீழி
** 1 பெயர்
#232
** காஞ்சொறி
கண்டூதி காஞ்சொறி
** 1 பெயர்
#233
** கிலுகிலுப்பை
பகன்றை கிலுகிலுப்பை
** 1 பெயர்
#234
** தண்ணீர்க் குடம்
கானவாழை தண்ணீர்க்குடமே
** 1 பெயர்
#235
** பிரம்பு
சாதி வேத்திரம் சூரல் பிரம்பே
** 3 பெயர்கள்
#236
** கழற்கொடி
கழங்கு முழல் கர்ச்சூரம் கொடிக் கழல்
** 3 பெயர்கள்
#237
** கழற்காய்
கழற்காய் முழலும் கழங்கும் ஆகும்
** 2 பெயர்கள்
#238
** இண்டு
இண்டை புலிதொடக்கி ஈகை ஈங்கை இண்டு என்ப
** 4 பெயர்கள்
#239
** சூரி
விந்தம் சூரி
** 1 பெயர்
#240
** புனற்றுளசி
குல்லை புனற்றுளசி
** 1 பெயர்
#241
** சிறுபூளை
உழிஞை சிறுபூளை
** 1 பெயர்
#242
** பாற் சொற்றிச் செடி
பாற்சொற்றி பாயசம்
** 1 பெயர்
#243
** செங்காந்தள்
தோன்றி பற்றை இலாங்கலி செங்காந்தள்
** 3 பெயர்கள்
#244
** வெண்காந்தள்
கோடல் தோன்றி கோடை வெண்காந்தள்
** 3 பெயர்கள்
#245
** வெண் கிடை
கோடல் வெண்கிடை பூசை வெருகு ஆகும்
** 3 பெயர்கள்
#246
** காக்கணம்
கிகிணி கன்னி காக்கணம் கருவிளை
** 3 பெயர்கள்
#247
** வெண்காவிளை
உயவை வெண்காவிளை
** 1 பெயர்
#248
** தாளி
மஞ்சிகம் தாளி
** 1 பெயர்
#249
** சிவேதை
சிவேதை பகன்றை
** 1 பெயர்
#250
** குன்றி
குஞ்சம் குன்றி
** 1 பெயர்
#251
** கொத்தான்
நந்தை கொத்தான்
** 1 பெயர்
#252
** சத்திக் கொடி
தாடிமஞ்சம் சத்திக்கொடியே
** 1 பெயர்
#253
** சாறணை
திரிபுரி சாறடை சாறணை ஆகும்
** 2 பெயர்கள்
#254
** சீந்திற் கொடி
அமுதவல்லி சீந்தில் சீவந்தி ஆகும்
** 2 பெயர்கள்
#255
** பாலை
பாலை சீவந்தி சீவனி ஆகும்
** 2 பெயர்கள்
#256
** கூதாளி
துடி கூதாளம் கூதாளி என்ப
** 2 பெயர்கள்
#257
** கோவை
விம்பமும் தொண்டையும் கொவ்வையும் கோவை
** 3 பெயர்கள்
#258
** சிலந்திக் கொடி
தலைச்சுருள்வள்ளி சிலந்திக்கொடியே
** 1 பெயர்
#259
** வள்ளிக் கொடி
வள்ளி இலதை வள்ளிக்கொடியே
** 2 பெயர்கள்
#260
** பிரண்டை
வச்சிரவல்லி பிரண்டை ஆகும்
** 2 பெயர்
#261
** இசங்கு
இசங்கு குண்டலி முத்தாபலமே
** 2 பெயர்கள்
#262
** கக்கரி
கக்கரி வாலுங்கி
** 1 பெயர்
#263
** செங்கிடை
கந்தூரி செங்கிடை
#264
** மற்றும் செங்கிடை
முதலையும் அதன்பால் மொழியப்பெறுமே
** 2 பெயர்கள்
#265
** முந்திரிகை
மதுரசம் கோத்தனி முந்திரிகை ஆகும்
** 2 பெயர்கள்
#266
** முள்ளுடை மூலம் எல்லாவற்றிற்கும் பெயர்
முண்டகம் முள்ளுடை மூலம் என்ப
** 1 பெயர்
#267
** இஞ்சி
நல்லம் அல்லம் நறுமருப்பு இஞ்சி
** 3 பெயர்கள்
#268
** வழுதலை
வழுதுணை வங்கம் பிருகதி வழுதலை
** 3 பெயர்கள்
#269
** கையாந்தகரை
கோகணம் அறுபதம் கையாந்தகரை
** 2 பெயர்கள்
#270
** பொன்னாங்காணி
சீதை பொன்னாங்காணி ஆகும்
** 1 பெயர்
#271
** சிறுகீரை
சில்லி சாகினி மேகநாதம் சிறுகீரை
** 3 பெயர்கள்
#272
** சேம்பு
சாகினி சேம்பு சகுடம் ஆகும்
** 2 பெயர்கள்
#273
** வள்ளை
நாளிகம் வள்ளை
** 1 பெயர்
#274
** பசிரி
பசிரி பாவிரி
** 1 பெயர்
#275
** வெள்ளரி
உருவாரம் வெள்ளரி
** 1 பெயர்
#276
** சிறுகிழங்கு
சுரசம் சிறுகிழங்கு
** 1 பெயர்
#277
** கருணைக் கிழங்கு
கந்தம் சூரணம் கருணைப் பெயரே
** 2 பெயர்கள்
#278
** பாகல்
காரவல்லி கூலம் பாகல்
** 2 பெயர்கள்
#279
** பீர்க்கு
பீரம் பீர்க்கு
** 1 பெயர்
#280
** பெரும் பீர்க்கு
படலிகை பெரும்பீர்க்கு
** 1 பெயர்
#281
** கொடிக் கொத்தான்
நூழில் கொடிக்கொத்தான்
** 1 பெயர்
#282
** சுரை
தும்பியும் அலாபமும் சுரை ஆகும்மே
** 2 பெயர்கள்
#283
** பேய்ச்சுரை
புற்கொடி பேய்ச்சுரை
** 1 பெயர்
#284
** கொடியின் வகை
கோற்கொடி மென்கொடி கொடி என்று ஆகும்
** 2 பெயர்கள்
#285
** கொடி
இலதை வல்லி நூழில் கொடிப் பெயர்
** 3 பெயர்கள்
#286
** வெற்றிலை
நாகவல்லி மெல்லிலை தாம்பூலம்
மூலவல்லி இலைக்கொடி வெற்றிலை
** 5 பெயர்கள்
#287
** மிளகு
கறியும் மரீசியும் காயமும் கவினையும்
கோளகமும் திரங்கலும் மிரியலும் மிளகே
** 7 பெயர்கள்
#288
** ஏலம்
இலாஞ்சி துடியே ஏலம் ஆகும்
** 2 பெயர்கள்
#289
** மஞ்சள்
பீதம் காஞ்சனி நிசி அரிசனம் உடன்
ஓதும் அரித்திராபமும் மஞ்சட்கு உறு பெயர்
** 5 பெயர்கள்
#290
** வெண்சிறு கடுகு
அந்தில் கடிப்பகை ஐயவி சித்தார்த்தம்
வெண்சிறுகடுகு என விளம்பலாகும்
** 4 பெயர்கள்
#291
** திப்பிலி
பிப்பிலி காமன் சிறுமூலகமே
மாகதி கலினி திப்பிலி ஆகும்
** 5 பெயர்கள்
#292
** கொத்துமலி
உருளரிசி கொத்துமலி என்று உரைப்பர்
** 1 பெயர்
#293
** வெண்காயம்
காயம் உள்ளி வெண்காயம் ஆகும்
** 2 பெயர்கள்
#294
** வாசம் தரும் பல பண்டம்
தகரம் தக்கோலம் கோட்டம் சாதிக்காய்
இலவங்கம் ஏலம் கச்சோலம் மாஞ்சி
பகரும் வாசம் தரும் பண்டப் பெயரே
** 8 பெயர்கள்
#295
** மல்லிகை
மாலதி அனங்கம் பூருண்டி மல்லிகை
** 3 பெயர்கள்
#296
** வன மல்லிகை
மெளவல் என்பது வனமல்லிகையே
** 1 பெயர்
#297 இருவாட்சி
மயிலை அனங்கம் இருவாட்சி
** 2 பெயர்கள்
#298
** சாதிப்பூ
கருமுகை பித்திகை சாதி ஆகும்
** 2 பெயர்கள்
#299
** முல்லை
தளவம் முல்லை சாதி பிச்சி
** 3 பெயர்கள்
#300
** ஊசி முல்லை
தளவு மாகதி நைதிகை ஊசிமுல்லை
** 3 பெயர்கள்
#301
** கொடி மல்லிகை
விசலிகை என்ப கொடிமல்லிகையே
#302
** 1 பெயர்
#302
** நந்தியாவர்த்தம்
வலம்புரி நந்தியாவர்த்தம் ஆகும்
** 1 பெயர்
#303
** மருக் கொழுந்து
தமனகம் மருக்கொழுந்து
** 1 பெயர்
#304
** மலைப் பச்சை
குளவி மலைப்பச்சை
** 1 பெயர்
#305
** அடம்பு
அடம்பு பாலிகை
** 1 பெயர்
#306
** வெட்டு வேர்
முடிவாழை வெட்டுவேர்
** 1 பெயர்
#307
** துவரை
ஆடகி துவரை
** 1 பெயர்
#308
** அவரை
அவரை சிக்கடி
** 1 பெயர்
#309
** உழுந்து
மாடம் உழுந்து
** 1 பெயர்
#310
** கடலை
மஞ்சூரம் கடலை
** 1 பெயர்
#311
** காராமணி
காராமணி இதை கூலமும் ஆகும்
** 2 பெயர்கள்
#312
** பசும் பயறு
பாசி முற்கம் பசும்பயறு ஆகும்
** 2 பெயர்கள்
#313
** கொள்
காணம் குலுத்தம் கொள் எனக் கருதுவர்
** 2 பெயர்கள்
#314
** துவரை அவரை முதலியவை
இனையவை முதிரை என்னவும் ஆகும்
** 1 பெயர்
#315
** சோளம்
சொன்னலும் இறுங்கும் சோளம் ஆகும்
** 2 பெயர்கள்
#316
** வரகு
மருவு கோத்திரவம் வரகு எனலாகும்
** 1 பெயர்
#317
** கருந்தினை
இறடியும் கங்கும் கருந்தினை என்ப
** 2 பெயர்கள்
#318
** செந்தினை
கம்பும் கவலையும் செந்தினை என்ப
** 2 பெயர்கள்
#319
** பைந்தினை
ஏனல் குரல் நுவணை பைந்தினை என்ப
** 3 பெயர்கள்
#320
** தினைத் தாள்
அருவி தினைத்தாள் இருவியும் ஆகும்
** 2 பெயர்கள்
#321
** எள்
எண்ணும் திலமும் நூவும் எள் ஆகும்
** 3 பெயர்கள்
#322
** இளையெள்
குமிகை இளையெள்
** 1 பெயர்
#323
** எள் இளங்காய்
கவ்வை எள்இளங்காய் ஆகும்மே
** 2 பெயர்கள்
#324
** நெல்
சொல்லும் விரீகியும் வரியும் சாலியும்
யவமும் நெல்லின் பொதுப் பெயர் ஆகும்
** 5 பெயர்கள்
#325
** குள நெல்
நீர்வாரம் குளநெல் ஆகும்மே
** 1 பெயர்
#326
** மலைச் சாரல் விளை நெல்
ஐவனம் மலைச்சாரல் விளை நெல் ஆகும்
** 1 பெயர்
#327
** செஞ்சாலி
செந்நெல் நன்னெல் செஞ்சாலிப் பெயர்
** 2 பெயர்கள்
#328
** பயிர்
பயிரே பசும்புல் பைங்கூழ் ஆகும்
** 2 பெயர்கள்
#329
** பதர்
பதடி பதரே பொல்லும் ஆகும்
** 2 பெயர்கள்
#330
** இளஞ்சூல்
இளஞ்சூல் பீட்டை
** 1 பெயர்
#331
** இளங்கதிர்
பீள் இளங்கதிர்
** 1 பெயர்
#332
** கதிர்
ஏனலும் குரலும் கொழுங் கதிர் என்ப
** 2 பெயர்கள்
#333
** கோதுமை
கோதி கோதுமை
** 1 பெயர்
#334
** தோரை நெல்
இயவை தோரை
** 1 பெயர்
#335
** போர்
போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும்
** 3 பெயர்கள்
#336
** தூற்றா நெற் சூடு
பொலி பொங்கழி தூற்றாநெற்சூடு ஆகும்
** 2 பெயர்கள்
#337
** வைக்கோல்
வையே பலாலம் வழுது வைக்கோலே
** 3 பெயர்கள்
#338
** நெல்லின் நாற்று
நாறு நெல்லின் நாற்று ஆகும்மே
** 1 பெயர்
#339
** விழல்
விழலே விரணம் விளம்புங்காலே
** 1 பெயர்
#340
** வேய் அரிசி
வேரல் வேய்அரிசி தோரையும் ஆகும்
** 2 பெயர்கள்
#341
** தருப்பை
குசை குமுதம் கூர்ச்சம் குசமும் தருப்பை
** 4 பெயர்கள்
#342
** நாணல்
கானசரமே காமவேழம்
நவைஇல் சரவணம் நாணல் பெயரே
#343
** மற்றும் நாணல்
சிவேதை காசை நாணல் எனச் செப்புவர்
** 5 பெயர்கள்
#344
** கொறுக்கை
எருவை வேழம் கொறுக்கை கொறுக்கச்சி
** 3 பெயர்கள்
#345
** திரள் கோரை
எருவை சாய் பஞ்சாய் திரள்கோரை என்ப
** 3 பெயர்கள்
#346
** வாட் கோரை
செருந்தி வாட்கோரை என்னச் செப்புவர்
** 1 பெயர்
#347
** பச்சறுகு
பதமும் தூர்வையும் பச்சறுகு ஆகும்
** 2 பெயர்கள்
#348
** பசும்புல்
சட்பம் பசும்புல்
** 1 பெயர்
#349
** உலர்ந்த புல்
திரணம் உலர்ந்தபுல்
** 1 பெயர்
#350
** புற்பிடி
காசை புற்பிடி
** 1 பெயர்
#351
** இளம் புல்
இளம்புல் பதமே
** 1 பெயர்
#352
** ஒரு வகைப் புல்
புதவு ஒரு விகற்பப்புல் ஆகும்மே
** 1 பெயர்
#353
** நீர் முள்ளி
நீர்முள்ளி முண்டகம்
** 1 பெயர்
#354
** நீர்க்குளிரி
கல்லாரம் நீர்க்குளிரி
** 1 பெயர்
#355
** கத்தூரி மஞ்சள்
சுவாங்கி கத்தூரி
** 1 பெயர்
#356
** கிடை
சடையே கிடை எனல்
** 1 பெயர் 356
#357
** பாசி
நாரம் செவிரம் சடைச்சி சைவலம்
பாசி என்பர் பதியமும் ஆகும்
** 5 பெயர்கள் 357
#358
** தாமரை
அம்புயம் அம்போருகம் அரவிந்தம்
பங்கயம் புண்டரீகம் பதுமம்
முண்டகம் நளினம் முளரி சரோருகம்
சதபத்திரி கோகனதம் சலசம்
வனசம் கமலம் வாரிசம் கஞ்சம்
திருமால் கொப்பூழ் திருமலர் இண்டை
பங்கேருகம் தாமரைப் பெயர் ஆகும்
** 21 பெயர்கள் 358
#359
** தாமரை மலர்
இறும்பு இராசீவம் நறுந்தண் பூவே
** 2 பெயர்கள் 359
#360
** தாமரைக் கொட்டை
பூவினுள் கொட்டை பொகுட்டே கன்னிகை
** 2 பெயர்கள் 360
#361
** தாமரைச் சுருள்
விசியும் வளையமும் சுருள் எனப் பேசுவர்
** 2 பெயர்கள் 361
#362
** தாமரைக் காய்
வராடகம் வராண்டம் வண் காய் ஆகும்
** 2 பெயர்கள் 362
#363
** செங்குவளை
அரத்தம் உற்பலம் ஆம் செங்குவளை
#364
** மற்றும் செங்குவளை
எருமணம் கல்லாரம் செங்கழுநீரும் ஆமே
** 5 பெயர்கள் 364
#365
** கருங் குவளை
பானல் கருங்குவளை
#366
** மற்றும் கருங்குவளை
நீலம் உற்பலம் நீலோற்பலமும் ஆம்
** 4 பெயர்கள் 366
#367
** கரு நெய்தல்
நீலம் இந்தீவரம் கருநெய்தல்
#368
** மற்றும் கரு நெய்தல்
நீலோற்பலமும் நிகழ்த்தப்பெறுமே
** 3 பெயர்கள் 368
#369
** வெண்ணெய்தல்
வெள்ளாம்பல் குமுதம் வெண் நிற நெய்தல்
** 2 பெயர்கள் 369
#370
** செவ்வாம்பல்
சேதாம்பல் அரக்காம்பல் செவ்வாம்பல் செங்குமுதம்
#371
** மற்றும் செவ்வாம்பல்
செவ்வல்லி செவ்வாம்பல்
** 4 பெயர்கள்
#372
** வெள்ளாம்பல்
அல்லி வெள்ளாம்பல் கைரவம் ஆகும்
#373
** மற்றும் வெள்ளாம்பல்
வெள்ளல்லி வெள்ளாம்பல்
** 3 பெயர்கள் 373
#374
** குமுத வகை
வெள்ளாம்பல் சேதாம்பல் என்று இரு விகற்பம்
கொள்ப மன்னோ குமுதப் பெயரே
** 2 பெயர்கள் 374
#375
** குமுதம்
ஆம்பலும் நெய்தலும் அல்லியும் குமுதம்
** 3 பெயர்கள் 375
#376
** செங்கழுநீர்
கல்லாரம் உற்பலம் செங்கழுநீரே
** 2 பெயர்கள்
#377
** சிகை மாலை
சிகழிகை படலிகை வாசிகை சிகைமாலை
** 3 பெயர்கள் 377
#378
** மார்பில் அணி மாலை
மஞ்சரி இலம்பகம் மார்பில்அணிமாலை
** 2 பெயர்கள் 378
#379
** தோள் அணி மாலை
தொடையல் தாமம் தோள்அணிமாலை
** 2 பெயர்கள் 379
#380
** கொண்டை மாலை
கோதை தொங்கல் கொண்டைமாலை
** 2 பெயர்கள் 380
#381
** மயிர்ச் சூட்டு மாலை
வாசிகை அலங்கல் மயிர்ச்சூட்டுமாலை
** 2 பெயர்கள் 381
** ஒன்பதாவது மரப் பெயர் வகை முற்றிற்று
@10 ஒரு சொல் பல் பொருள் வகை
** 1. அகர வருக்கம்
#1
** அகப்பா
புரிசையும் உள் உயர் நிலமும் அகப்பா
** 2 பெயர்கள் 1
#2
** அகம்
மனமும் உள்ளும் மனையும் பாவமும்
புவியும் மரப் பொதுப் பெயரும் அகமே
** 6 பெயர்கள் 2
#3
** அகலுள்
ஊரும் நாடும் அகலுள் ஆகும்
** 2 பெயர்கள் 3
#4
** அகி
அரவும் இரும்பும் அகி எனலாகும்
** 2 பெயர்கள்
#5
** அக்காரம்
ஆடையும் சருக்கரையும் அக்காரம் ஆகும்
** 2 பெயர்கள் 5
#6
** அக்கு
வளைமணி ஏற்றின்முரிப்பு இவை அக்கு எனல்
** 2 பெயர்கள் 6
#7
** அங்கணம்
தூம்புவாயிலும் முன்றிலும் அங்கணம்
** 2 பெயர்கள் 7
#8
** அங்கதம்
அரவு தோள்அணி வசை இவை அங்கதம்
** 3 பெயர்கள் 8
#9
** அங்கம்
யாக்கையும் உறுப்பும் சயனமும் அங்கம்
** 3 பெயர்கள் 9
#10
** அங்கி
அனலும் சட்டையும் அங்கி ஆகும்
** 2 பெயர்கள் 10
#11
** அசனம்
பசியும் கொழுப்பும் பகுதியும் அளவும்
வேங்கைமரமும் உணவும் அசனம்
** 6 பெயர்கள் 1
#12
**அச்சம்
அகத்தியும் பயமும் அச்சம் ஆகும்
** 2 பெயர்கள் 12
#13
** அஞ்சலி
தொழுதலும் வாவல்பறவையும் அஞ்சலி
** 2 பெயர்கள்
#14
** அஞ்சனம்
காளநிறனும் மையும் திசைகளின்
யானையில் ஒன்றும் அஞ்சனம் ஆகும்
** 3 பெயர்கள்
#15
** அடல்
வலியும் செருவும் அடல் என்று ஆகும்
** 2 பெயர்கள்
#16
** அடி
முதலும் காலும் ஒறுத்தலும் அடி எனல்
** 3 பெயர்கள்
#17
** அடுப்பு
தருமநாளும் உத்தானமும் அன்றி
அச்சப் பெயரும் அடுப்பு எனலாகும்
** 3 பெயர்கள்
#18
** அடை
இலையும் கனமும் விலையும் வழியும்
அப்பமும் மற்று இவை அடை எனலாகும்
** 5 பெயர்கள்
#19
** அணங்கு
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதரும்
மையல்நோயும் வருத்தமும் கொலையும்
அழகும் ஆசையும் அணங்கு என்று ஆமே
** 7 பெயர்கள்
#20
** அணி
படையினதுஉறுப்பும் ஒப்பனையும் அழகும்
பெருமையும் கலனும் அன்பும் அணி எனல்
** 6 பெயர்கள்
#21
** அணு
உயிரும் நுண்மையும் அணு எனலாகும்
** 2 பெயர்கள்
#22
** அணை
விடயமும் சேதுவும் மெத்தையும் சயனமும்
அணை என மொழிப அறிந்திசினோரே
** 4 பெயர்கள்
#23
** அண்டசம்
அரவு தவளை முதலை ஆமை
யானை உடும்பு மீன் ஓந்தியும் பறவையும்
பல்லியும் இப்பியும் அண்டசம் என்ப
** 11 பெயர்கள்
#24
** அண்டம்
அண்டம் முட்டையும் ஆகாயமுமே
** 2 பெயர்கள்
#25
** அண்டர்
உயர்நிலை உம்பர் ஒன்னலருடனே
இடையர் அண்டர் என்னல் ஆகும்
** 4 பெயர்கள்
#26
** அத்தம்
ஒரு நாள்மீனும் ஒள்ளிய பொன்னும்
அருநெறியும் கண்ணாடியும் பாதியும்
கரமும் பகர் சொல் பொருளும் அத்தம்
** 7 பெயர்கள்
#27
** அத்தி
யானையும் ஒரு மரப் பெயரும் என்பும்
ஆர்கலிப் பெயரும் அத்தி என்று ஆகும்
** 4 பெயர்கள்
#28
** அத்து
அரைப்பட்டிகையும் துன்னமும் அசைச்சொலும்
செந்நிறமும் இவை தெரியில் அத்து என்ப
** 4 பெயர்கள்
#29
** அத்தை
அசைநிலைச் சொல்லும் குருவும் அத்தை
** 2 பெயர்கள்
#30
** அந்தம்
அழகும் ஈறும் அந்தம் என்ப
** 2 பெயர்கள்
#31
** அந்தரம்
அந்தரம் ஏகம் தளி ஆகாயம்
இறுதி திமிரம் கூட்டம் ஆகும்
** 6 பெயர்கள்
#32
** அந்தரி
அம்பிகைப் பெயரும் துர்க்கையும் அந்தரி
** 2 பெயர்கள்
#33
** அந்தி
பாலையாழ்த் திறத்து ஓர் இசைப் பெயரும்
மாலைக்காலமும் மற்று இவை அந்தி
** 2 பெயர்கள்
#34
** அபரம்
நரகமும் பொய்யும் பிறகும் அபரம்
** 3 பெயர்கள்
#35
** அமரர்
அடையலர் பெயரும் தேவரும் அமரர்
** 2 பெயர்கள்
#36
** அமலம்
அமலம் அழுக்குஇன்மையும் அறிவும் அழகும்
** 3 பெயர்கள்
#37
** அமுதம்
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு
நீர் மோக்கம் உப்பும் அமுதம்
** 8 பெயர்கள்
#38
** அமை
அழகும் மூங்கிலும் அமைவும் அமையே
** 3 பெயர்கள்
#39
** அம்பணம்
அளவை காராம்பி கதலி அம்பணம்
** 3 பெயர்கள்
#40
** அம்பரம்
அம்பரம் கடலும் ஆடையும் ஆகாயமும்
** 3 பெயர்கள்
#41
** அம்பல்
சிலர் அறிந்து புறங்கூறலும் பழிமொழியும் அம்பல்
** 2 பெயர்கள்
அம்மை
#42
** அழகும் வருபிறப்பும் தாயும் அம்மை
** 3 பெயர்கள்
#43
** அயம்
அயம் என் கிளவி ஆடும் இரும்பும்
குளமும் நீரும் குதிரையும் கூறுவர்
** 5 பெயர்கள்
#44
** அயிராவதம்
அயிராவதம் திசையானையில் ஒன்றும்
புரந்தரன் யானைப் பெயரும் புகலும்
** 2 பெயர்கள்
#45
** அயில்
வேலும் கூர்மையும் அயில் என விளம்புவர்
** 2 பெயர்கள்
#46
** அரணம்
காடும் எயிலும் கவசமும் அரணம்
** 3 பெயர்கள்
#47
** அரண்
காவல் வேல் காவற்காடு இவை அரணே
** 3 பெயர்கள்
#48
** அரத்தம்
கடம்பும் சுடுவனும் கழுநீர்ப் பெயரும்
அரக்கும் செந்நிறமும் அரத்தம் ஆகும்
** 5 பெயர்கள்
#49
** அரந்தை
குறிஞ்சியாழ் இசையும் துன்பமும் அரந்தை
** 2 பெயர்கள் 49
#50
** அரம்பை
அரம்பை தெய்வப்பெண் வாழையும் ஆகும்
** 2 பெயர்கள்
#51
** அரலை
கழலை வீசம் கற்றாழை அரலை
** 3 பெயர்கள் 51
#52
** அரவம்
அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும் ஆம்
** 3 பெயர்கள் 52
#53
** அரற்றல்
அழுகையும் ஒலித்தலும் அரற்றல் என்ப
** 2 பெயர்கள் 53
#54
** அராகம்
முடுகியல் செந்நிறம் பாலை யாழ்த்திறம்
ஆடகம் தக்கராகம் அராகம்
** 6 பெயர்கள் 54
#55
** அரி
கிண்கிணிப் பரலும் கிளர் ஒளியும் பன்றியும்
இந்திரனும் வண்டும் பாம்பும் குரங்கும்
குதிரையும் கிளியும் தவளையும் மூங்கிலும்
திகிரியும் நிறமும் சிங்கமும் தேரும்
சயனமும் கண்ணின்வரியும் துயிலும்
இயமனும் நெருப்பும் காற்றும் புகையும்
பகையும் சேகும் பறையும் மதுவும்
மதியும் ஞாயிறும் பஞ்சாயுதனும்
பொள்ளலும் பெளவமும் பொன்னும் பசுமையும்
வரையும் மைம்மையும் செந்நெற்கதிரும்
சோலையும் படைக்கலப் பெயரும் விசியும்
அரிசியும் வரியும் அரி எனலாகும்
** 41 பெயர்கள்
#56
** அரிட்டம்
காகமும் கள்ளும் பிறவியின்குற்றமும்
அரிட்டம் என்ப அறிந்திசினோரே
** 3 பெயர்கள்
#57
** அருணம்
ஆடும் மானும் அருணம் என்ப
** 2 பெயர்கள் 57
#58
** அருணன்
அருணன் அருக்கனும் அவன் தேர்ப்பாகனும்
புதனும் என்னப் புகலப்பெறுமே
** 3 பெயர்கள்
#59
** அருப்பம்
ஊர்ப் பொதுப் பெயரும் ஒரு பெரும் பிணியும்
அடவியின் பெயரும் அருப்பம் என்ப
** 3 பெயர்கள்
#60
** அருவி
மலையின் வீழ் புனலும் தினைத்தாளும் அருவி
** 2 பெயர்கள்
#61
** அலகு
பலகறையும் நுளம்பும் அளவும் அலகு எனல்
** 3 பெயர்கள்
#62
** அலங்கல்
பூவின் மாலையும் தளிரும் அசைவும்
இரங்கலும் ஒளிர்தலும் அலங்கல் ஆகும்
** 5 பெயர்கள்
#63
** அலரி
அலரி மலரும் தபனனும் அழகும்
கண்வரி ஒர் மரம் என்மனார் புலவர்
** 5 பெயர்கள்
#64
** அலர்
பழிமொழியும் பலர் அறிந்து அலர் தூற்றலும்
மலரும் மகிழ்வும் அலர் என்று ஆகும்
** 4 பெயர்கள்
#65
** அலை
அலையே கொலையும் இரையும் ஆகும்
** 2 பெயர்கள்
#66
** அல்
இரவும் இருளும் இவை அல் ஆகும்
** 2 பெயர்கள்
#67
** அல்கல்
அல்கல் என்பது தங்கலும் நாளும்
** 2 பெயர்கள்
#68
** அல்லி
வெண்நிறஆம்பலும் காயாமரமும்
அகஇதழும் இவை அல்லி என்று ஆகும்
**3 பெயர்கள்
#69
** அவந்தி
கிளியும் உஞ்சைப்பதியும் அவந்தி
** 2 பெயர்கள்
#70
அவலை
காடும் கடுப்பும் அவலையின் கண்ண
** 2 பெயர்கள்
#71
** அழனம்
அழலும் பிணமும் அழனம் என்ப
** 2 பெயர்கள்
#72
** அழுக்காறு
பொறாமையும் மனத்து அழுக்கும் அழுக்காறு என்ப
** 2 பெயர்கள்
#73
** அளகம்
அளகம் புனலும் மயிரும் ஆகும்
** 2 பெயர்கள்
#74
** அளக்கர்
கடலும் புவியும் கார்த்திகைநாளும்
அளமும் சேறும் அளக்கர் என்ப
** 5 பெயர்கள்
#75
** அளறு
நரகமும் சேறும் அளறு என நவில்வர்
** 2 பெயர்கள்
#76
** அளி
அறுபதமும் அன்பும் கள்ளும் அவளி எனல்
** 3 பெயர்கள்
#77
** அளித்தல்
கொடுத்தலும் காத்தலும் செறித்தலும் அவித்தல்
** 3 பெயர்கள்
#78
** அளை
வளை தயிர் புற்றும் அளை ஆகும்மே
** 3 பெயர்கள்
#79
** அறல்
அறுதியும் அப்பும் அறல் என மொழிப
** 2 பெயர்கள்
#80
** அறுவை
ஆடை சித்திரைநாள் இவை அறுவை
** 2 பெயர்கள்
#81
** அனந்தம்
அளவுஇல்பொருளும் பொன்னும் அனந்தம்
** 2 பெயர்கள்
#82
** அனந்தன்
நாலிரு தெய்வ அரவில் ஒன்றும்
நான்முகன் அருகன் ஆதி அரன் மால்
சேடன் அனந்தன் என்றிசினோரே
** 6 பெயர்கள்
#83
** அனலி
தினகரன் பெயரும் தீப் பெயரும் அனலி
** 2 பெயர்கள்
#84
** அன்றில்
அசுரநாளும் ஓர் பறவையும் அன்றில்
** 2 பெயர்கள்
#85
** அன்னம்
அடிசிலும் எகினமும் அன்னம் ஆகும்
** 2 பெயர்கள்
#86
** அன்னை
தாயும் முன்பிறந்தாளும் அன்னை
** 2 பெயர்கள்
#87
** ஆகம்
யாக்கையும் மார்பும் ஆகம் என்று உரைப்பர்
** 2 பெயர்கள்
#88
** ஆகாரம்
அசனமும் நெய்யும் படிவமும் ஆகாரம்
**3 பெயர்கள்
#89
** ஆகு
எலியும் பெருச்சாளியும் ஆகு ஆகும்
** 2 பெயர்கள்
#90
** ஆகுலம்
வருத்தமும் சத்தஒலியும் ஆகுலம்
** 2 பெயர்கள்
#91
** ஆக்கம்
ஆக்கம் செல்வமும் திருமகளும் ஆகும்
** 3 பெயர்கள்
#92
** ஆசாரம்
ஆடையும் ஒழுக்கமும் அறாப்பெருமழையும்
அரசர்வாழ்கூடமும் ஆசாரம் ஆகும்
** 4 பெயர்கள்
#93
** ஆசினி
ஈரப்பலா மரச்சேகு இவை ஆசினி
** 2 பெயர்கள்
#94
** ஆசு
மெய்புகுகருவியும் சடுதியும் குற்றமும்
அற்பமும் ஓர் கவியும் ஆசு எனலாகும்
** 5 பெயர்கள்
#95
** ஆசை
ஆர்வமும் பொன்னும் திசையும் ஆசை
** 3 பெயர்கள்
#96
** ஆடல்
உரையும் கூத்தும் வெற்றியும் ஆடல்
** 3 பெயர்கள்
#97
**ஆடவர்
ஆண்பெயர் இளையோர் என்று இவர் ஆடவர்
** 2 பெயர்கள்
#98
** ஆடி
வாய்ந்த கண்ணாடியும் மாதத்து ஒன்றும்
ஆய்ந்த உத்தராடமும் ஆடி ஆகும்
#99
** ஆடு
மேடமும் வெற்றியும் ஆடு ஆகும்மே
** 2 பெயர்கள்
#100
** ஆணை
ஏவல் மெய்ப்பாடே விறல்செயல் தடுத்தல்
சூளுறவும் இலாஞ்சனையும் ஆணை ஆகும்
** 6 பெயர்கள்
#101
** ஆண்மை
வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மை
** 3 பெயர்கள்
#102
** ஆதி
ஆதி பழமையும் அரனும் மாலும்
முதலும் நேர்ஓட்டமும் மொழியப் பெறுமே
** 5 பெயர்கள்
#103
** ஆம்பல்
இசையின் குழலும் கள்ளும் மூங்கிலும்
அல்லியும் யானையும் ஆம்பல் ஆகும்
** 5 பெயர்கள்
#104
** ஆரம்
சந்தனம் மணிவடம் தரளம் பதக்கம்
ஆபரணப் பொதுவும் ஆரம் ஆகும்
** 5 பெயர்கள்
#105
** ஆரல்
கார்த்திகைநாளும் ஒரு மீன் பெயரும்
அங்காரகனும் மதிலும் ஆரல்
** 1 பெயர்கள்
#106
** ஆரவாரம்
ஆகுலமும் துக்கமும் ஆரவாரம் ஆகும்
** 2 பெயர்கள்
#107
** ஆரை
புரிசை புல்பாய் ஓர் புதலும் ஆரை
** 3 பெயர்கள்
#108
** ஆர்
ஆர்வும் கூர்மையும் ஆத்தியும் ஆர் எனல்
** 3 பெயர்கள்
#109
** மற்றும் ஆர்
தேர் ஆழி அகத்தில் செறி உறுப்பும் ஆகும்
** 4 பெயர்கள்
#110
** ஆர்தல்
அணிதலும் நிறைதலும் உண்டலும் ஆர்தல்
** 3 பெயர்கள்
#111
** ஆர்ப்பு
அமரும் சிரிப்பும் ஆர்ப்பு எனலாகும்
** 2 பெயர்கள்
#112
** ஆர்வம்
ஆசையும் நரகத்து ஒன்றும் ஆர்வம்
** 2 பெயர்கள்
#113
** ஆர்வலர்
காதலர் வேட்டோர் கனிந்தோர் ஆர்வலர்
** 3 பெயர்கள்
#114
** ஆலம்
பூவும் நீரும் ஒரு மரப் பெயரும்
ஆழ் கடல் விடமும் ஆலம் ஆகும்
** 4 பெயர்கள்
#115
** ஆலவன்
அம்புலிப் பெயரும் ஆசையும் ஆலவன்
** 2 பெயர்கள்
#116
** ஆலாலம்
அலர்ந்தபூவும் நீரும் ஓர் மரமும்
அலை கடல் விடமும் வாவலும் ஆலாலம்
** 5 பெயர்கள்
#117
** ஆலி
துளியும் நீர் கொள் ஆலாங்கட்டியும்
மழையும் ஆலி என வகுத்தனரே
** 3 பெயர்கள்
#118
** ஆலயம்
யானைக்கூடமும் நகரமும் தேவர்
கோட்டமும் ஆலயம் என்னக் கூறும்
** 3 பெயர்கள்
#119
** ஆவணம்
உரிமை அங்காடி தெருவு புனர்பூசம்
இவை ஒரு நான்கும் ஆவணம் என்ப
** 4 பெயர்கள்
#120
** ஆவலர்
காதலர் வேட்டோர் ஆவலர் ஆகும்
** 2 பெயர்கள்
#121
** ஆழி நேமி
சாகரம் தேர்க்கால் சக்கரம் வட்டம்
மோதிரம் என்ன மொழிந்தவை ஐந்தும்
நேமியும் ஆழியும் என நிகழ்த்தினரே
** 5 பெயர்கள் 121
#122
** ஆறு
வழியும் நதியும் ஓர் எண்ணும் ஆறு எனல்
** 3 பெயர்கள் 122
#123
** ஆற்றல்
வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மையும்
மிகுதியும் பரித்தலும் ஞானமும் பொறையும்
கூட்டுதலும் இவை ஆற்றல் ஆகும்
** 9 பெயர்கள் 123
#124
** ஆனி
அழிவும் மூலமும் ஆனி என்று ஆகும்
** 2 பெயர்கள் 124
#125
** இகத்தல்
பொறுத்தலும் நடத்தலும் இகத்தல் ஆகும்
** 2 பெயர்கள் 125
#126
** இகல்
பகையும் வலியும் அமரும் இகல் எனல்
** 3 பெயர்கள் 126
#127
** இகுளை
சுற்றமும் தோழியும் இகுளை என்ப
** 2 பெயர்கள் 127
#128
** இசை
இசையே புகழும் மொழியும் நாதமும்
** 3 பெயர்கள் 128
#129
** இடக்கர்
குடத்தின் பெயரும் மறைமொழியும் இடக்கர்
** 2 பெயர்கள் 129
#130
** இடம்
வீடும் வலியும் படுப்பதும் இடம் எனல்
** 3 பெயர்கள் 130
#131
** இடி
உறுதிமொழி பிண்டி உருமும் இடியே
** 3 பெயர்கள் 131
#132
** இடை
இடமும் நுசுப்பும் நடுவும் இடை எனல்
** 3 பெயர்கள் 132
#133
** இந்தளம்
நெருப்பு இடு கலனும் இசையும் இந்தளம்
** 2 பெயர்கள் 133
#134
** இபம்
மரத்தின் கொம்பும் யானையும் இபம் எனல்
** 2 பெயர்கள் 134
#135
** இரசதம்
அரைப்பட்டிகையும் வெள்ளியும் இரசதம்
** 2 பெயர்கள் 135
#136
** இரதம்
புணர்ச்சியும் சூதமும் அளியும் தேரும்
அரைஞாணும் சுவையும் இரதம் என்ப
** 6 பெயர்கள் 136
#137
** இரலை
இரலைக் கிளவி மானின் ஏறும்
தலைநாளும் ஊதும்கொம்பும் ஆகும்
** 3 பெயர்கள் 137
#138
** இரவி
மலையும் அருக்கனும் வாணிகத்தொழிலும்
இரவி ஆம் என்று இசைக்கப்படுமே
** 3 பெயர்கள் 138
#139
** இராகம்
இசை நிறம் கீதம் செம்மையும் இராகம்
** 4 பெயர்கள் 139
#140
** இருள்
நரகமும் மயக்கமும் கருமையும் இருள் எனல்
** 3 பெயர்கள் 140
#141
** இரெளரவம்
ஆகமத்து ஒன்றும் நரகும் இரெளரவம்
** 2 பெயர்கள் 141
#142
** இலஞ்சி
மகிழ்மரம் கொப்பூழ் மடு இவை இலஞ்சி
** 3 பெயர்கள் 142
#143
** இலம்பகம்
நுதல்அணி அத்தியாயம் இலம்பகம்
** 2 பெயர்கள் 143
#144
** இலாங்கலி
நாளிகேரமும் செங்காந்தளும் இலாங்கலி
** 2 பெயர்கள் 144
#145
** இலையம்
கூத்தும் கூத்தின் விகற்பமும் இலையம்
** 2 பெயர்கள் 145
#146
** இல்
மனையும் குடியும் இல்லை என்றலும்
இடமும் இராசியும் இல் என்று ஆகும்
** 5 பெயர்கள் 146
#147
** இழுக்கு
பிழைத்தல் பொல்லாங்கு இவை இழுக்கு ஆகும்
** 2 பெயர்கள் 147
#148
** இளி
யாழின் ஓர் நரம்பும் சிரிப்பும் இளி எனல்
** 2 பெயர்கள் 148
#149
** இறப்பு
மிகுதியும் மரணமும் போக்கும் இறப்பே
** 3 பெயர்கள் 149
#150
** இறால்
எரிநாள் தேன்கூடு எருது மீன் இறாலே
** 4 பெயர்கள் 150
#151
** இறும்பு
குன்றும் காடும் மிடை தூறும் இறும்பே
#152
** மற்றும் இறும்பு
தாமரை நறுந்தண் பூவும் சாற்றும்
** 4 பெயர்கள் 152
#153
** இறை
சிறந்தோன் பெயரும் செம்மையும் சிறுமையும்
தலைவனும் தலைமையும் பெருமையும் தங்கலும்
அயனும் அரனும் ஆதியின் பெயரும்
புள்ளின் இறகும் கடனும் வரையும்
இல்லின் இறப்பும் கடமையும் இறையே
** 15 பெயர்கள் 153
#154
** இறைவை
ஏணியும் புட்டிலும் இறைவை ஆகும்
** 2 பெயர்கள் 154
#155
** ஈகை
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை
** 3 பெயர்கள் 155
#156
** ஈழம்
இரணியம் சிங்களம் ஈழம் ஆகும்
** 2 பெயர்கள்
#157
** உஞற்று
உற்சாகமும் தப்பும் உஞற்று என மொழிப
** 2 பெயர்கள் 157
#158
** உடல்
யாக்கையும் ஆடகமும் உடல் என்ப
** 2 பெயர்கள் 158
#159
** உடு
அம்பும் ஆடும் அம்புத்தலையும்
ஒளி வான் மீனும் கிடங்கும் நாவாய்
ஓட்டும் கோலும் உடு எனலாகும்
** 6 பெயர்கள் 159
#160
** உடை
உடுக்கையும் செல்வமும் குடை வேலும் உடையே
** 4 பெயர்கள் 160
#161
** உணர்வு
அறிவும் தெளிவும் ஒழிவும் உணர்வு எனல்
** 3 பெயர்கள் 161
#162
** உண்டை
படையின் வகுப்பும் திரட்சியும் உண்டை
** 2 பெயர்கள் 162
#163
** உத்தரம்
வடக்கு மேல் ஊழித்தீ வார்த்தையும் உத்தரம்
** 8 பெயர்கள் 163
#164
** உத்தி
உரகப் படப் பொறி சுணங்கு உரையாடல்
ஓர் திரு உறுப்பும் உத்தி ஆகும்
** 4 பெயர்கள் 164
#165
** உத்திரம்
உத்திரம் என்ப ஓர் நாளுடனே
சித்திரமாளிகை சேர்ந்தது ஓர் உறுப்பே
** 2 பெயர்கள் 165
#166
** உந்தி
பேதையர் விரும்பி ஆடலும் நீரும்
நீரின் சுழியும் தேரின் தட்டும்
நாபியும் கடலும் நதியும் யாழின்
ஓதும் உறுப்பும் உந்தி ஆகும்
** 8 பெயர்கள் 166
#167
** உப்பளம்
அளமும் கழிநிலமும் உப்பளம் ஆகும்
** 2 பெயர்கள் 167
#168
** உப்பு
வேலையும் அதனில் விளைவும் விளையாட்டும்
ஓதும் உவரும் இனிமையும் உப்பே
** 5 பெயர்கள் 168
#169
** உம்பர்
உயர்நிலையோரும் மிசையும் உம்பர்
** 2 பெயர்கள் 169
#170
** உம்பல்
யானையும் விலங்கின் ஆண்பால் பெயரும்
குடியும் வழித்தோன்றலும் உம்பல் ஆகும்
** 4 பெயர்கள் 170
#171
** உய்வை
கான்யாற்றுப் பெயர் கருவிளை உயவை
** 2 பெயர்கள் 171
#172
** உரம்
வலி மார்பு ஊக்கம் ஞானம் திடம் உரம்
** 5 பெயர்கள்
#173
** உரை
சத்தஓலி விருத்தி உரைத்தலும் உரையே
** 3 பெயர்கள்
#174
** உலகம்
உலகம் புவி திசை உயர்குணம் ஆமே
** 3 பெயர்கள்
#175
** உலகு
அவனி திசை ஆகாயம் உயர்ந்தோர்
குலம் இவை உலகு எனக் கூறல் ஆகும்
** 5 பெயர்கள்
#176
** உலக்கை
ஓண நாளும் உரோங்கலும் உலக்கை
** 2 பெயர்கள்
#177
** உலவை
மாக்களின் மருப்பும் மரமும் மரத்தின்
கோடும் காற்றும் உலவையின் கூற்றே
** 4 பெயர்கள்
#178
** உவளகம்
பிரிதலும் இடையர்சேரியும் மதிலும்
ஒரு சிறை இடமும் எயில் உறுப்பும் பள்ளமும்
வாலியும் விசாலமும் உவளகம் ஆகும்
** 8 பெயர்கள்
#179
** உவா
அநு மதி யானை இளையோன் உவா எனல்
** 3 பெயர்கள்
#180
** உழை
இடமும் மானும் யாழ்நரம்பும் உழை
** 3 பெயர்கள்
#181
** உளை
ஆண் பால் மயிரும் அஃறிணை மயிரும்
பரியின் கழுத்து அணி மயிரும் இசையும்
சத்த ஒலியும் உளை எனலாகும்
** 5 பெயர்கள்
#182
** உறுகண்
துக்கமும் நோயும் உறுகண் என்ப
** 2 பெயர்கள்
#183
** உறுவன்
அசோகு அமர்கடவுளும் முனிவனும் உறுவன்
** 2 பெயர்கள்
#184
** உறை
நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய்
போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும்
வெண்கலப் பெயரும் விழுமமும் பெருமையும்
எண் குறிப்பு எண்ணிப் பொலிந்துழி இடுவதும்
பால் உறு பிரையும் காரமும் உணவும்
குறை உவர்நீரும் படையின் கூடும்
ஓர் இடைச்சொல்லும் வாழ்நாளும் உறை எனல்
** 15 பெயர்கள்
#185
** உறையுள்
ஊர்ப் பொதுப் பெயரும் அகாரமும் உறையுள்
** 2 பெயர்கள்
#186
** உன்னல்
மனமும் நினைவும் உன்னல் ஆகும்
** 2 பெயர்கள்
#187
** ஊக்கம்
உற்சாகம் வலி மனமிகுதி ஊக்கம்
** 3 பெயர்கள்
#188
** ஊழ்
பழமையும் மரபும் பகையும் ஊழ் எனல்
** 3 பெயர்கள்
#189
** ஊறு
தீதும் கொலையும் தீண்டலும் ஊறு எனல்
** 3 பெயர்கள்
#190
** ஊனம்
பிணமும் கேடும் ஊனம் ஆகும்
** 2 பெயர்கள்
#191
** எகினம்
அன்னமும் கவரிமாவும் ஆண்மரமும் நாயும்
புளியும் புளிமாப்பெயரும் எகினம்
** 6 பெயர்கள்
#192
** எக்கல்
குவித்தலும் சொரிதலும் எக்கல் என்ப
** 2 பெயர்கள்
#193
** எருவை
கழுகும் செம்பும் கொறுக்கையும் எருவை
** 3 பெயர்கள்
#194
** எலி
ஆகுவும் மதுவும் பூரநாளும் எலி
** 3 பெயர்கள்
#195
** எல்
நல் ஒளிப் பெயரும் ஞாயிறும் பகலும்
எல்லியும் இகழ்ச்சியும் எல் என வைப்பர்
** 5 பெயர்கள்
#196
** எறுழ்
தண்டாயுதம் வலி எறுழ் ஆகும்மே
** 2 பெயர்கள்
#197
** என்றூழ்
விரி கதிரவனும் வெயிலும் என்றூழ்
** 2 பெயர்கள்
#198
** ஏதம்
குற்றமும் துன்பமும் ஏதம் ஆகும்
** 2 பெயர்கள்
#199
** ஏதி
ஆயுதமும் துண்டமும் வாளும் ஏதி
** 3 பெயர்கள்
#200
** ஏந்தல்
பெருமையும் உயர்வும் தலைவனும் ஏந்தல்
** 3 பெயர்கள்
#201
** ஏமம்
இன்பமும் நீறும் பொன்னும் காவலும்
இரவும் சேமமும் ஏமாப்பும் மயக்கமும்
என்பன ஏமப் பெயரன ஆகும்
** 8 பெயர்கள்
#202
** ஏரண்டம்
ஆமணக்கும் சித்திரமும் ஏரண்டம்
** 2 பெயர்கள்
#203
** ஏல்வை
மடுவும் பொழுதும் ஏல்வை என்று ஆகும்
** 2 பெயர்கள்
#204
** ஏறு
விடையும் எருதும் விலங்கின்ஆண் பெயரும்
இடியும் முதல்நாள் ஏறு எனப்படுமே
** 5 பெயர்கள்
#205
** ஏனல்
தினைப்புனமும் தினையும் ஏனல் ஆகும்
** 2 பெயர்கள்
#206
** ஏனாதியர்
மந்திரிப்பெயரும் சேனைகாப்போரும்
மறவரும் மயிர்வினைஞரும் ஏனாதியர்
** 2 பெயர்கள்
#207
** ஐயம்
பொழுதும் பிச்சையும் பிசசை கொள் கலனும்
அனுமானமும் இவை ஐயம் என்று ஆகும்
** 4 பெயர்கள்
#208
** ஐயன்
வானோர் முனிவர் மறையவர் ஆசான்
சாத்தன் மூத்தோன் தகப்பனும் ஐயன்
** 7 பெயர்கள் 208
#209
** ஐயை
ஆரியை விந்தை அலகைக்கொடியாள்
ஆசாரியன் பெருமாட்டியும் ஐயை
** 4 பெயர்கள் 209
#210
** ஒண்மை
அழகும் நன்றும் அறிவும் ஒண்மை
** 3 பெயர்கள் 210
#211
** ஒலி
ஓசையும் உருமும் காற்றும் ஒலியே
** 3 பெயர்கள் 211
#212
** ஒலியல்
அதழும் ஆடையும் மாலையும் ஆறும்
ஒலியல் என்னும் ஒண் பெயர் பெறுமே
** 4 பெயர்கள் 212
#213
** ஒழுக்கம்
வழியும் குலமும் ஆசாரமும் ஒழுக்கம்
** 3 பெயர்கள் 213
#214
** ஒளி
ஆதவன் மதி புகழ் விளக்குடன் ஒளிப்பீடம்
ஓதும் கனலும் கேட்டையும் ஒளி எனல்
** 7 பெயர்கள் 214
#215
** ஒளி வட்டம்
சக்கரம் கண்ணாடி தான் ஒளி வட்டம்
** 2 பெயர்கள் 215
#216
** ஓங்கல்
மலையும் தலைவனும் வலியோன் பெயரும்
உயர்வும் மேடும் மூங்கிலும் ஓங்கல்
** 6 பெயர்கள் 216
#217
** ஓடை
நீர்நிலைப் பெயரும் அகழும் கிரிநெறியும்
மரமும் பட்டமும் மற்று இவை ஓடை
** 5 பெயர்கள்
#218
** ஓட்டம்
ஓட்டம் மேல்உதடும் தோல்வியும் உரைக்கும்
** 2 பெயர்கள் 218
#219
** ஓணம்
மாயோன்நாளும் வரு புனல் ஆறும்
ஓணம் என்பர் உணர்ந்திசினோரே
** 2 பெயர்கள் 219
#220
** ஒதம்
ஈரமும் கடலின் திரையும் கடலும்
ஓதம் என்னும் பெயர்க்கு உரியனவே
** 3 பெயர்கள்
#221
** ஓதனம்
உணவும் சோறும் ஓதனம் என்ப
** 2 பெயர்கள்
#222
** ஓதி
மலையும் பெண்பால்மயிரும் பூசையும்
ஓதினவன் பெயரும் ஓதி என்று உரைப்பர்
** 4 பெயர்கள்
#223
** ஓதை
புரிசையும் உள் உயர் நிலமும் அகரம்
ஆதியின் சத்தமும் ஒலியும் ஓதை
** 4 பெயர்கள்
#224
** ஓரி
அரிவையர் மயிர் ஒழித்து எல்லா மயிரும்
முதுநரியும் முசுவும் விலங்கின்சேக்கையும்
ஓரி என்பர் ஓர் வள்ளலும் உரைக்கும்
** 5 பெயர்கள்
#225
** ஓரை
மகளிர் ஈட்டமும் மற்று அவர் ஆடலும்
அவர் விளையாடும் களமும் இராசியும்
ஒர் இடைச்சொல்லும் குரவையும் ஓரை
** 6 பெயர்கள்
#226
** ஓலம்
ஒலியும் பாம்பும் ஓலம் என்ப
** 2 பெயர்கள்
#227
** ஓவியர்
கண்ணாளரும் சித்திரரும் ஓவியர்
** 2 பெயர்கள்
** 2. ககரவருக்கம்
#228
** ககனம்
காடும் சேனையும் வெளியும் ககனம்
** 3 பெயர்கள்
#229
** கங்கம்
பருந்தும் சீப்பும் கங்கம் என்ப
** 2 பெயர்கள்
#230
** கங்கு
கருந்தினையும் வரம்பின்அருகும் கங்கு எனல்
** 2 பெயர்கள்
#231
** கசடு
குற்றமும் அழுக்கும் ஐயமும் கசடே
** 3 பெயர்கள்
#232
** கச்சம்
கவடும் அளவையும் காலும் கச்சம்
** 3 பெயர்கள்
#233
** கச்சை
கயிறும் மெய்புகுகருவியும் தழும்பும்
கச்சை என்று கருதப்படுமே
** 3 பெயர்கள்
#234
** கஞறல்
சிறுமையும் பொலிவும் கஞறல் என்ப
** 2 பெயர்கள்
#235
** கஞ்சம்
தாளம் வெண்கலம் தாமரை குல்லை
கஞ்சம் என்பர் அப்பமும் கழறுவர்
** 5 பெயர்கள்
#236
** கடகம்
வட்டமும் மதிலும் மலையின் பக்கமும்
சேனையும் ஊரும் ஓர் ஆறு எண்ணும்
கங்கணப் பெயரும் பலகையும் கடகம்
** 9 பெயர்கள்
#237
** கடம்
அருஞ்சுரப்பெயரும் யாக்கையும் கயிறும்
குடமும் கானமும் குஞ்சரத்திரளும்
மற்று அதன் கொடிறும் மதமும் கடமே
** 8 பெயர்கள்
#238
** கடல்
மகராலயமும் அளவையும் கடல் எனல்
** 2 பெயர்கள்
#239
** கடவை
கவர் இறுக்கு ஏணி குற்றமும் கடவை
** 3 பெயர்கள்
#240
** கடி
விரைவ கூர்மை வெருவுதல் காவல்
வரைவு சிறப்பு மணத்தொழில் விளக்கம்
புதுமை ஐயம் மிகுதி கரிப்பு
நாற்றம் காலம் பேய் இவை கடியே
** 15 பெயர்கள்
#241
** கடிகை
கடிகைக் கிளவி நாழிகை கபாடத்து
இடுதாள் கண்டமும் துண்டமும் இசைக்கும்
** 4 பெயர்கள்
#242
** கடிப்பம்
காதணி அணிகலச்செப்பு இவை கடிப்பம்
** 2 பெயர்கள்
#243
** கடு
ஒரு மரப் பெயரும் விடமும் கடு எனல்
** 2 பெயர்கள்
#244
** கடை
இடம் வாயில் ஆவணம் ஈறும் கடையே
** 4 பெயர்கள்
#245
** கட்சி
காடும் கூடும் கட்சி ஆகும்
** 2 பெயர்கள்
#246
** கட்டளை
கட்டளை துலாமும் நிறை அறி கருவியும்
உரை அறி கருவியும் அளவும் ஒப்பும் ஆம்
** 5 பெயர்கள்
#247
** கணம்
கணம் என் கிளவி காலநுட்பமும்
திரளும் பேயும் திப்பிலியும் நோயும்
உடுவும் வட்டமும் கணம் எனலாகும்
** 7 பெயர்கள்
#248
** கணி
வேங்கைமரமும் மருதமும் கணி எனல்
** 2 பெயர்கள்
#249
** கணிச்சி
தோட்டியும் மழுவும் தறிகையும் கணிச்சி
** 3 பெயர்கள்
#250
** கணை
அம்பும் இரட்சியும் பூரநாளும் கணை
** 3 பெயர்கள்
#251
** கண்டகம்
காடும் முள்ளும் கண்டகம் ஆகும்
** 2 பெயர்கள்
#252
** கண்டம்
கழுத்தும் மெய் புகு கருவியும் வாளும்
நாடும் இடுதிரையும் நவிலும் துண்டமும்
சருக்கரைப்பெயரும் வெல்லமும் கண்டம்
** 8 பெயர்கள்
#253
** கண்டிகை
அணிகலச்செப்பும் அக்கமணியும்
வாச்சியத்து ஒன்றும் பதக்கமும் கண்டிகை
** 4 பெயர்கள்
#254
** கண்டூதி
காஞ்சொறியும் சொறியும் கண்டூதி ஆகும்
** 2 பெயர்கள்
#255
** கதலி
வாழையும் தேறும் கதலி என்ப
** 2 பெயர்கள்
#256
** கதவு
காவலும் கபாடமும் கதவு எனலாகும்
** 2 பெயர்கள்
#257
** கதுப்பு
ஆண் பெண் மயிரும் ஆவின் திரளும்
கொடிறும் கதுப்பு எனக் கூறப்படுமே
** 4 பெயர்கள்
#258
** கதை
காரணம் தண்டாயுதம் மொழி கதை எனல்
** 3 பெயர்கள்
#259
** கந்தம்
நாற்றமும் கிழங்கும் அணுவின்கூட்டமும்
கழுத்துஅடியும் இந்திரியமும் கந்தம் என்ப
** 5 பெயர்கள்
#260
** கந்தரம்
கழுத்து மலைமுழை முகிலும் கந்தரம்
** 3 பெயர்கள்
#261
** கந்தருவம்
கானமும் குதிரையும் கந்தருவம் என்ப
** 2 பெயர்கள்
#262
** கந்து
யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும்
கம்பமும் பண்டியுள் இருசும் கந்து எனல்
** 4 பெயர்கள்
#263
** கந்துகம்
பந்தும் குதிரையும் கந்துகம் என்ப
** 2 பெயர்கள்
#264
** கமலம்
வனசமும் புனலும் கமலம் எனப்படும்
** 2 பெயர்கள்
#265
** கம்
சலமும் வெளுப்பும் தலையின் பெயரும்
ககனமும் விதியும் கம் எனலாகும்
** 5 பெயர்கள்
#266
** கம்பம்
நடுக்கமும் தூணும் நடுத்தறியும் கம்பம்
** 3 பெயர்கள்
#267
** கம்பலை
துன்பமும் சத்தஒலியும் கம்பலை
** 2 பெயர்கள் 267
#268
** கயம்
குளமும் ஆழமும் நீரும் குறையும் களிறும்
பெருமையும் மேன்மையும் கயம் எனல்
** 7 பெயர்கள் 268
#269
** கயில்
பிடர்த்தலை பூணின் கடைப் புணர்வு கயிலே
** 2 பெயர்கள் 269
#270
** கயினி
அத்தநாளும் விதவையும் கயினி
** 2 பெயர்கள் 270
#271
** கரகம்
துளியும் ஆலாங்கட்டியும் கங்கையும்
கமண்டலமும் நீரும் கரகம் ஆகும்
** 5 பெயர்கள் 271
#272
** கரணம்
காரணமும் கூத்தின் விகற்பமும் மனத்தின்
பகுதியும் கணிதமும் கரணம் எனலாகும்
** 4 பெயர்கள் 272
#273
** கரண்டம்
அணிகலச்செப்பும் நீர்க்காக்கையும் கரண்டம்
** 2 பெயர்கள் 273
#274
** கரம்
கழுதை கை கரணம் நஞ்சு இறை கரம் எனல்
** 5 பெயர்கள் 274
#275
** கரிணி
கரியும் பிடியும் கரிணி என்ப
** 2 பெயர்கள் 275
#276
** கரில்
காழ்த்தலும் குற்றமும் கொடுமையும் கரில் எனல்
** 3 பெயர்கள் 276
#277
** கரீரம்
அகத்தி மிடாவே யானைப்பல் அடி
கரீரம் என்று கருதப்படுமே
** 3 பெயர்கள் 277
#278
** கலாபம்
மேகலையும் மணிக்கோவையும் மயிலின்
தோகையும் கலாபம் எனச் சொல்லப்படுமே
** 3 பெயர்கள் 378
#279
** கலாம்
கொடுமையும் சினமும் கலாம் எனலாகும்
** 2 பெயர்கள்
#280
** கலி
வலியும் ஒலியும் கடலும் ஓர் பாவும்
கடையுகப்பெயரும் கலி என்று உரைப்பர்
** 5 பெயர்கள்
#281
** கலிங்கம்
வானம்பாடிப்புள்ளும் ஆடையும்
ஊர்க்குருவிப்பெயரும் ஓர் நாடும் கலிங்கம்
** 4 பெயர்கள்
#282
** கலை
மகரமும் துகிலும் மரத்தின்கவடும்
பிறைநிரம்புதலும் ஆண்முசுப்பெயரும்
மானின்ஏறும் கல்வியும் சேகும்
காலநுட்பமும் நூலும் கலை எனல்
** 10 பெயர்கள்
#283
** கல்
அருவியின்ஓசையும் சிலையும் கல் எனல்
** 2 பெயர்கள்
#284
** கவடு
புரோசைக்கயிறும் கப்பும் கவடு
** 2 பெயர்கள்
#285
** கவந்தம்
புனலும் செக்கும் புகன்றிடு கடியும்
தலைக் குறைப் பிணமும் கவந்தம் ஆகும்
** 4 பெயர்கள்
#286
** கவலை
கவர்நெறி அச்சம் செந்தினை கவலை
** 3 பெயர்கள்
#287
** கவனம்
காடும் விரைவும் கவனம் என்ப
** 2 பெயர்கள்
#288
** கவி
குதிரை வாய் பெய் கருவியும் குரங்கும்
புலமையில் ஒன்றும் வெள்ளியும் கவி எனல்
** 4 பெயர்கள்
#289
** கவிகை
குடையும் கொடுத்தலும் கூறுப கவிகை
** 2 பெயர்கள்
#290
** கவை
எள்இளங்காயும் ஆயிலியநாளும்
கவரும் காடும் கவை எனலாகும்
** 4 பெயர்கள்
#291
** கழி
நுகத்தொளை கோப்பதும் மிகுதிப்பெயரும்
கடல் புறத்து அமர்வதும் கழி என்று ஆகும்
** 3 பெயர்கள் 291
#292
** கழிவு
காலி மிகுதியும் கழிவு எனலாகும்
** 2 பெயர்கள் 292
#293
** கழுது
பேயும் வண்டும் பரணும் கழுதே
** 3 பெயர்கள் 293
#294
** கழை
கரும்பும் மூங்கிலும் புனர்தமும் கழை எனல்
** 3 பெயர்கள் 294
#295
** களபம்
களபமும் யானைக்கன்றும் களபம்
** 2 பெயர்கள் 295
#296
** களம்
கருநிறமும் செருக்களமும் கழுத்தும்
களரும் விடமும் இடமும் களமே
** 6 பெயர்கள் 296
#297
** களரி
காடும் செருச் செய் களமும் களரி
** 2 பெயர்கள் 297
#298
** களிறு
ஏனமும் சுறா முதல் இவற்றின் ஏறும்
யானையும் அத்தநாளும் கவிறே
** 4 பெயர்கள்
#299
** கள்
மதுவும் தேனும் சோர்வும் கள் ஆம்
** 3 பெயர்கள்
#300
** கள்வன்
கட கரிப் பெயரும் கருநிறமகனும்
கர்க்கடக இராசியும் ஞெண்டும் கள்வன்
** 2 பெயர்கள் 300
#301
** கறங்கு
சத்த ஒலியும் சுழலும் கறங்கே
** 2 பெயர்கள்
#302
** கறுப்பு
கருநிறமும் சினக்குறிப்பும் கறுப்பே
** 2 பெயர்கள் 302
#303
** கறை
உதிரமும் மாசும் உரலும் நிறமும்
கடுவும் இறையும் கருமையும் கறையே
** 7 பெயர்கள் 303
#304
** கனம்
பாரமும் மேகமும் கனம் எனப்படுமே
** 2 பெயர்கள் 304
#305
** கனலி
தினகரனும் அங்கியும் கனலி என்ப
** 2 பெயர்கள் 305
#306
** கன்று
ஆன் கன்று இனமும் சிறுமையும் கையின்
வளையும் இளைய மரமும் கன்றே
** 4 பெயர்கள் 306
#307
** கன்னல்
நாழிகையும் நாழிகைவட்டிலும் கட்டியும்
கரகமும் கரும்பும் கன்னல் என்று ஆகும்
** 5 பெயர்கள் 307
#308
** கன்னி
அழிவுஇல் மாதரும் அழிவுஇல் பொருளும்
இளைமையும் அத்தநாளும் இராசியும்
கவுரியும் துர்க்கையும் யாறும் கன்னி
** 8 பெயர்கள் 308
#309
** கா
சோலையும் தோள்சுமையும் துலாமும் கா எனல்
** 3 பெயர்கள் 309
#310
** காகுளி
இசை மிடற்றுஓசை தவிசு இவை காகுளி
** 3 பெயர்கள் 310
#311
** காசு
குற்றமும் மணியும் கோழையும் காசே
** 3 பெயர்கள் 311
#312
** காசை
நாணல் புல்பிடி காசை என்ப
** 2 பெயர்கள் 312
#313
** காஞ்சி
ஒரு மரப் பெயரும் ஓர் இசைப் பெயரும்
கச்சிப்பதியும் மேகலையும் காஞ்சி
** 4 பெயர்கள் 313
#314
** காடு
கானும் இடமும் காடு எனலாகும்
** 2 பெயர்கள் 318
#315
** காண்டம்
இடுதிரைப் பெயரும் படலமும் காண்டம்
** 2 பெயர்கள் 315
#316
** காண்டை
தவத்தோர்இடமும் கல்பாழியும் காண்டை
** 2 பெயர்கள் 316
#317
** காத்திரம்
யாக்கையும் உறுப்பும் யானைமுன்காலும்
சீற்றமும் கனத்தலும் காத்திரம் ஆகும்
** 5 பெயர்கள்
#318
** காந்தாரம்
காடும் ஒர் இசையும் காந்தாரம் ஆகும்
** 2 பெயர்கள்
#319
** காப்பு
புரிசையும் உள் உயர் நிலமும் காப்பு எனல்
** 2 பெயர்கள்
#320
** காமரம்
இசை இசைப்பொதுப்பெயர் அடுப்பும் காமரம்
** 3 பெயர்கள்
#321
** காயம்
காழ்த்தலும் யாக்கையும் காயம் என்ப
** 2 பெயர்கள்
#322
** காரி
வடுகக்கடவுளும் சனியும் சாத்தனும்
கருமையும் ஒரு புள்ளும் காரி ஆகும்
** 5 பெயர்கள்
#323
** கார்
கருதிய கருமம் கடை முடிவு அளவும்
தவிராச் சினமும் வெள்ளாடும் புனலும்
நாகமும் மேகமும் தமமும் மழைபடு
காலமும் கருமையும் கார் எனும் கட்டுரை
#324
** மற்றும் கார்
ஆகு மயிரும் அழகும் மற்று அதற்கே
** 10 பெயர்கள்
#325
** கார்த்திகை
கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை
** 3 பெயர்கள்
#326
** காலம்
காலையும் விடியலும் காலம் ஆகும்
** 2 பெயர்கள்
#327
** கால்
காலே வலிமையும் காற்றும் கூற்றும்
தாளும் பொழுதும் தறியும் வழியும்
அளவையும் தேரின் உருளும் ஆகும்
** 9 பெயர்கள்
#328
** காவி
கள்ளும் குவளையும் ஓர் கல்லும் காவி
** 3 பெயர்கள்
#329
** காழகம்
கருநிறமும் புடைவையும் கடாரமும் காழகம்
** 3 பெயர்கள்
#330
** காளம்
காளம் கழுவும் கறுப்பும் நஞ்சும்
வாத்தியத்து ஒன்றும் வகுக்கப்படுமே
** 4 பெயர்கள்
#331
** காளை
பாலைத்தலைவனும் சிறுவனும் காளை
** 2 பெயர்கள்
#332
** கானம்
காடும் இசையும் கானம் ஆகும்
** 2 பெயர்கள்
#333
** கானல்
கழிக் கரைச் சோலையும் மலைப் புறச் சோலையும்
கதிரவன் ஒளியும் கழியும் பேய்த்தேரும்
உவரும் முரம்பும் உப்பளமும் கானல்
** 8 பெயர்கள்
#334
** கான்
காடும் கந்தமும் கான் என மொழிப
** 2 பெயர்கள்
#335
** கிஞ்சுகம்
செந்நிறமும் முள்முருக்கும் கிஞ்சுகம்
** 2 பெயர்கள்
#336
** கிடக்கை
தராதலப் பெயரும் சயனமும் கிடக்கை
** 2 பெயர்கள்
#337
** கிடுகு
பலகையும் தேர் மரச் சுற்றும் கிடுகு எனல்
** 2 பெயர்கள்
#338
** கிட்டி
தாளமும் தலை ஈற்றுப் பசுவும் கிட்டி
** 2 பெயர்கள்
#339
** கிம்புரி
முடியினது உறுப்பும் தாங்கியும் கிம்புரி
** 2 பெயர்கள்
#340
** கிழமை
வாரமும் குணமும் காணியும் கிழமை
** 3 பெயர்கள்
#341
** கிளர்
ஒளியும் கோட்டின் மலர்த்தாதும் கிளர் ஆம்
** 2 பெயர்கள்
#342
** கிளை
கேளும் மூங்கிலும் யாழ்இசையும் கிளை
** 3 பெயர்கள் 342
#343
** கிள்ளை
கிளியும் குதிரையும் கிள்ளை எனப்படும்
** 3 பெயர்கள் 343
#344
** கின்னரம்
யாழின் பெயரும் நீர்ப்பறவையும் கின்னரம்
** 2 பெயர்கள் 344
#345
** கீசகம்
குரங்கும் மூங்கிலும் கீசகம் ஆகும்
** 2 பெயர்கள் 345
#346
** கீரம்
கிளியும் பாலும் கீரம் ஆகும்
** 2 பெயர்கள் 346
#347
**குக்குடம்
கோழியும் பறவைநாகமும் குக்குடம்
** 2 பெயர்கள் 347
#348
** குசலம்
குணமும் மாட்சிமையும் குசலம் என்ப
** 2 பெயர்கள் 348
#349
** குஞ்சம்
குறளும் நாழியும் குறளையும் குஞ்சம்
** 3 பெயர்கள் 349
#350
** குஞ்சி
குன்றியும் ஆண்பால்மயிரும் குஞ்சி
** 2 பெயர்கள் 350
#351
** குடம்
பதினொர் ஆடலில் ஒன்றும் கொட்டிக் கை குவித்தலும்
கும்பமும் பசுவும் நகரமும் கரும்பின்
கட்டியும் இடங்கரும் குடம் எனக் கழறும்
** 7 பெயர்கள் 351
#352
** குடம்பை
குடம்பை முட்டையும் கூடும் ஆகும்
** 2 பெயர்கள் 352
#353
** குடி
ஊர்ப்பொதுப்பெயரும் புருவமும் அன்றிக்
குலமும் கோத்திரமும் குடி என்று ஆகும்
** 4 பெயர்கள் 353
#354
** குடிஞை
கூகையும் புள்பொதுவும் யாறும் குடிஞை
** 3 பெயர்கள் 354
#355
** குடுமி
கொற்றமும் உச்சியும் மயிரும் குடுமி
** 3 பெயர்கள்
#356
** குணம்
குடமும் நிறமும் நூலும் குணம் எனல்
** 3 பெயர்கள்
#357
** குணில்
குறுந்தடியும் கடிப்பும் கவணும் குணிலே
** 3 பெயர்கள்
#358
** குணுங்கர்
தோல்கருவியோரும் புலைஞரும் குணுங்கர்
** 2 பெயர்கள்
#359
** குண்டலம்
குண்டலம் விசும்பும் குழையும் ஆகும்
** 2 பெயர்கள்
#360
** குண்டு
துலையும் குதிரையும் ஆழமும் குண்டு எனல்
** 3 பெயர்கள்
#361
** குத்திரம்
மலையின்பெயரும் வஞ்சனையும் குத்திரம்
** 2 பெயர்கள்
#362
** குமரி
யாமளை விந்தை அழிவுஇலாமாதர்
ஏழ் மாதர்களில் எண்ணும் ஓர் அணங்கு
ஓர் நதிப் பெயரும் கற்றாழையும் குமரி
** 6 பெயர்கள்
#363
** குமுதம்
நெடுந் திசையானையில் ஒன்றும் நெய்தலும்
அடுப்பும் ஒலியும் தருப்பையும் குமுதம்
** 5 பெயர்கள்
#364
** கும்பம்
வெங்கரி நெற்றியும் மிக்க நீர்க் குடமும்
கும்ப இராசியும் கும்பம் ஆகும்
** 3 பெயர்கள்
#365
** கும்பி
யானையும் நரகமும் சேறும் கும்பி
** 3 பெயர்கள்
#366
** குயம்
கொங்கையும் அரிவாளும் குயம் எனப்படுமே
** 2 பெயர்கள்
#367
** குயில்
குறித்திடும் உரையும் கோகிலமும் தொளையும்
எண்ணும் இ மூன்றும் குயில் என மொழிப
** 3 பெயர்கள் 367
#368
** குரல்
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும்
யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும்
புள்ளின்சிறகும் குரல் என மொழிப
** 5 பெயர்கள் 368
#369
** குரவை
கடலும் கைகோத்துஆடலும் குரவை
** 2 பெயர்கள் 369
#370
** குரு
குரவனும் நோயும் நிறமும் பாரமும்
அரசனும் குரு எனலாகும் என்ப
** 5 பெயர்கள் 370
#371
** குருகு
கொல் உலைமூக்கும் குருக்கத்திமரமும்
வெண்மையும் மூலநாளும் நாரையும்
கோழியும் கையின் வளையும் குருகு எனல்
** 7 பெயர்கள் 371
#372
** குருதி
செவப்பும் குசனும் உதிரமும் குருதி
** 3 பெயர்கள் 372
#373
** குருந்து
குருந்து முருந்தும் குருக்கத்தியும் பிள்ளையும்
** 3 பெயர்கள் 373
#374
** குலம்
இரேவதிநாளும் வருணமும் விலங்கின்
கூட்டமும் கோயிலும் குலம் என்று ஆகும்
** 4 பெயர்கள் 374
#375
** குவடு
மலையும் கணமும் கவடும் குவடே
** 3 பெயர்கள் 375
#376
** குவலயம்
குவளையும் புவியும் குவலயம் என்ப
** 2 பெயர்கள் 376
#377
** குழல்
இருபால் மயிரும் இசையின் கருவியும்
தொளையுடைப்பொருளும் குழல் என்று ஆகும்
** 4 பெயர்கள் 377
#378
** குழை
ககனமும் சங்கும் சேறும் காடும்
குண்டலமும் தளிரும் குழலும் குழையே
** 7 பெயர்கள் 378
#379
** குளகம்
குற்றெழுத்துச்செய்யுளும் மரக்காலும் குளகம்
** 2 பெயர்கள் 379
#380
** குளம்
குட்டமும் நுதலும் சருக்கரையும் குளம்
** 3 பெயர்கள் 380
#381
** குளிர்
இலை மூக்கு அரி கருவியும் சீதமும் கவணும்
குடமுழவும் ஞெண்டும் குளிர் எனலாகும்
** 5 பெயர்கள் 381
#382
** குறிஞ்சி
ஐவகை நிலத்தில் ஓர் நிலமும் ஒர் மரமும்
ஓர் இசையும் யாழும் ஓர் பண்ணும் குறிஞ்சி
** 5 பெயர்கள் 382
#383
** குறும்பொறை
குறிஞ்சி நிலத்து ஊரும் குன்றும் காடும்
குறும்பொறை என்று கூறப்படுமே
** 3 பெயர்கள் 383
#384
** குன்று
வருணநாளும் மலையும் குன்றே
** 2 பெயர்கள் 384
#385
** கூடம்
மனையும் மறைவும் கொல்லன் சம்மட்டியும்
குவட்டின் உச்சியும் கூடம் ஆகும்
** 4 பெயர்கள் 385
#386
** கூட்டம்
குழாமும் மலையின்முடியும் கூட்டம்
** 2 பெயர்கள் 386
#387
** கூந்தல்
கோதையர்மயிரும் மயில்தோகையும் கூந்தல்
** 2 பெயர்கள் 387
#388
** கூரல்
கோதையர்மயிர் புள்சிறகு இவை கூரல்
** 2 பெயர்கள் 388
#389
** கூலம்
அங்காடியும் வரம்பும் புனல்கரையும் பாகலும்
பசுவும் பண்ணிகாரமும் விலங்கின்
வாலும் கூலம் ஆகும் என்ப
** 7 பெயர்கள் 389
#390
** கூவிரம்
கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம்
** 3 பெயர்கள் 390
#391
** கூழை
பெண்ணின்மயிரும் புள்சிறகும் கூழை
** 2 பெயர்கள் 391
#392
** கூளி
ஏறும் பேயும் இடபமும் ஈட்டமும்
கூளி என்பர் குடும்பமும் அதற்கே
** 5 பெயர்கள் 392
#393
** கூளியர்
குறவரும் வீரரும் கூளியர் ஆகும்
** 2 பெயர்கள் 393
#394
** கூற்று
கூற்று என் கிளவி உரையும் காலனும்
** 2 பெயர்கள் 394
#395
** கேசம்
ஆண் பெண் அஃறிணை மயிர் இவை கேசம்
** 3 பெயர்கள் 395
#396
** கேசரம்
மலரின்தாதும் மகிழ்மரமும் கேசரம்
** 2 பெயர்கள் 396
#397
** கேடகம்
பலகையும் கேடுஇல்ஊரும் பரிசையும் கேடகம்
** 3 பெயர்கள் 397
#398
** கேழ்
ஒளியும் நிறமும் ஒப்பும் கேழே
** 3 பெயர்கள் 398
#399
** கை
ஒப்பனை படைஉறுப்பு ஒழுக்கம் சிறுமை
கரமும் பின்பிறந்தாளும் கையே
** 6 பெயர்கள் 399
#400
** கொக்கு
ஒரு மரப் பெயரும் மூலநாளும் குதிரையும்
விருகமும் குரண்டமும் கொக்கு எனல்
** 5 பெயர்கள்
#401
** கொடி
வல்லியும் கேதுவும் படமும் கொடி எனல்
** 3 பெயர்கள் 401
#402
** கொடிறு
கடைவாய்ப்புறமும் கருவிப்பற்றும்
குரு மகிழ் பூசமும் கொடிறு எனலாகும்
** 3 பெயர்கள் 402
#403
** கொண்டல்
குணக்கு எழு காற்றும் மேகமும் கொண்டல்
** 2 பெயர்கள் 403
#404
** கொண்டை
இலந்தைக்கனி மயிர்முடி இவை கொண்டை
** 2 பெயர்கள் 404
#405
** கொண்மூ
கொண்மூ மேகம் ஆகாயம் இரண்டே
** 3 பெயர்கள் 405
#406
** கொந்தளம்
மாதர்மயிரும் மற்றவர் சுருளும்
குழலின்கொத்தும் கொந்தளம் ஆகும்
** 3 பெயர்கள் 406
#407
** கொம்மை
“கொங்கையும் கை குவித்துக் கொட்டலும் அழகும்
வலியும் மார்பும் இடரும் கொம்மை
** 6 பெயர்கள் 407
#408
** கொற்றி
கோ இளங்கன்றும் மோடியும் கொற்றி
** 2 பெயர்கள் 408
#409
* கொள்
ஓர் இடைச்சொல்லும் வறிதும் பெருமையும்
காலமும் அச்சமும் கொள் எனும் கட்டுரை
** 5 பெயர்கள் 409
#410
** கோ
ஆவும் தலைவனும் ஒளியும் அண்டமும்
பாரும் சொல்லும் பகழியும் கண்ணும்
குலிசமும் திக்கும் சலமும் கோவே
** 11 பெயர்கள் 410
#411
** கோகிலம்
குயிலும் குரங்கும் கோகிலம் என்ப
** 2 பெயர்கள் 411
#412
** கோசம்
மதில்உறுப்பும் பண்டாரமும் முட்டையும்
ஆணின்குறியும் புத்தகமும் கோசம்
** 5 பெயர்கள் 412
#413
** கோசிகம்
பட்டும் புடைவையும் கோசிகம் ஆகும்
** 2 பெயர்கள் 413
#414
** கோடகம்
குதிரையும் புதுமையும் முடிஉறுப்பும் கோடகம்
** 3 பெயர்கள் 414
#415
** கோடரம்
எட்டியும் மரக்கொம்பும் பொதும்பரும்
குதிரையும் தேரின்மொட்டும் கோடரம்
#416
** மற்றும் கோடரம்
குரங்கின் பெயரும் கூறுவர் அதற்கே
** 6 பெயர்கள்
#417
** கோடிகம்
பூவின்தட்டும் புடையையும் கோடிகம்
** 2 பெயர்கள்
#418
** கோடு
மலை அதன் முகடும் வரம்பும் நீர்க்கரையும்
மாக்களின் மருப்பும் ஊதுகொம்பும்
சங்கும் மரத்தின்கொம்பும் கோடு எனல்
** 7 பெயர்கள்
#419
** கோடை
வெயிலும் காந்தளும் மேல்திசைக்காற்றும்
குதிரையும் வேனிலும் கோடை ஆகும்
** 5 பெயர்கள்
#420
** கோட்டம்
மருதநிலத்து ஊர் பாசறை இடமே
நாடு நகரம் ஆன்நிரை படப்பை
குரவு வளைவு கோவில் ஒளவியம்
நறும் புதலும் உண்பனவும் கோட்டம் ஆகும்
** 12 பெயர்கள்
#421
** கோட்டி
கோட்டமும் வாயிலும் அலைச்சலும் கோட்டி
** 3 பெயர்கள்
#422
** கோணம்
வளைவும் தோட்டியும் கூனிய வாளும்
குதிரையும் மூக்கும் கோணம் ஆகும்
** 5 பெயர்கள்
#423
** கோணல்
கூனும் வளைவும் கோணல் என்ப
** 2 பெயர்கள்
#424
** கோதை
மாலையும் மாதரும் கைத்தோல் கட்டியும்
உடும்பும் குழலும் காற்றும் சேரனும்
ஒழுங்கும் இயமும் கோதை என்ப
** 9 பெயர்கள்
#425
** கோத்திரம்
குடியும் மலையும் கோத்திரம் ஆகும்
** 2 பெயர்கள்
#426
** கோரம்
கொடுமையும் வட்டிலும் குதிரையும் கோரம்
** 3 பெயர்கள்
#427
** கோலம்
அழகும் இலந்தையும் ஆங்கு அதன் கனியும்
பன்றியும் பீர்க்கும் பாக்கும் நீர்ஓட்டமும்
கோலம் என்னும் குறியன ஆகும்
** 7 பெயர்கள்
#428
** கோளி
பூவாது காய்க்கும் மரமும் அத்தியும்
கொழிஞ்சியும் என்று இவை கோளி என்ப
** 3 பெயர்கள்
#429
** கோள்
அலர் கதிர் முதலிய கிரகம் ஒன்பதும்
வலியும் கொள்கையும் வல் இடையூறும்
கொலையும் பிசினமும் கோள் எனலாகும்
** 6 பெயர்கள்
#430
** கௌசிகம்
மருதயாழ் இசையும் கூகையும் பட்டும்
சுடர் நிலைத் தண்டும் சொல்லின் கெளசிகம்
** 4 பெயர்கள்
#431
** கெளவை
கள்ளும் துன்பமும் பழிமொழியும் கெளவை
** 3 பெயர்கள்
** 3. சகர வருக்கம்
#432
** சகடம்
சகடும் பண்டியும் சிகரமும் சகடம்
** 3 பெயர்கள்
#433
** சகுந்தம்
புள் பொதுப் பெயரும் கழுகும் சகுந்தம்
** 2 பெயர்கள்
#434
** சகுனம்
புள் பொதுவும் நிமித்தமும் கிழங்கும் சகுனம்
** 3 பெயர்கள்
#435
** சகுனி
பறவை நிமித்தம்பார்ப்பவன் சகுனி
** 2 பெயர்கள்
#436
** சங்கம்
சங்கும் ஓர் எண்ணும் கணைக்காலும் சவையும்
நுதலும் கவிஞரும் சங்கம் என்ப
** 6 பெயர்கள்
#437
** சசி
சசியே இந்திரன்தாரமும் மதியமும்
** 2 பெயர்கள் 437
#438
** சடம்
கொடுமையும் பொய்யும் மெய்யும் சடம் எனல்
** 3 பெயர்கள் 438
#439
** சடை
வேணியும் வேரும் கிடையும் சடை எனல்
** 3 பெயர்கள் 439
#440
** சதம்
எண்ணும் புள்ளின்இறகும் சதம் எனல்
** 2 பெயர்கள் 440
#441
** சதி
தாளஒத்தும் அயன்நாளும் வட்டமும்
கற்பாட்டியும் சோறும் சதி எனலாகும்
** 5 பெயர்கள் 441
#442
** சத்தி
ஒங்கிய உமையும் வேலும் குடையும்
கான்றலும் வலியும் சூலமும் சத்தி
** 6 பெயர்கள் 442
#443
** சத்திரம்
அதிசயம் விடாப்படை குடை இரும்பு ஊண்சாலை
வேள்வியும் வேலும் சத்திரம் ஆகும்
** 7 பெயர்கள் 443
#444
** சந்தி
அந்திப்பெயரும் கழையும் தெருவின்
சந்தியும் இசைப்பும் சந்தி ஆகும்
** 4 பெயர்கள் 444
#445
** சமன்
நடுவும் நமனும் சமன் ஆகும்மே
** 2 பெயர்கள் 445
#446
** சமித்தல்
பொறுத்தலும் நடத்தலும் சமித்தல் என்ப
** 2 பெயர்கள் 446
#447
** சம்பு
சங்கரனும் மாலும் அயனும் அருகனும்
நரியும் நாவலும் சம்பு ஆகும்
** 6 பெயர்கள் 447
#448
** சரகம்
தேனீப்பெயரும் வண்டும் சரகம்
** 2 பெயர்கள் 448
#449
** சரணம்
தாளும் நகரமும் அறை புகலும் சரணம்
** 3 பெயர்கள்
#450
** சரபம்
தனி வரை ஆடும் சிம்புள் சரபம்
** 2 பெயர்கள்
#451
** சரம்
மணிவடமும் கொறுக்கச்சியும் அம்பும்
தனிமையும் நடையும் ஒர் இருதுவும் சரமே
** 6 பெயர்கள்
#452
** சரி
வழி திரள் கைவளை சரி எனலாகும்
** 3 பெயர்கள்
#453
** சலாகை
நாராசமும் சவளமும் நன் மணியும் சலாகை
** 3 பெயர்கள்
#454
** சலாங்கு
பொய்யாப்புள்ளும் மசகமும் சலாங்கே
** 2 பெயர்கள்
#455
** சல்லியம்
சல்லியம் செஞ்சந்து எய் என்பு பாணம்
** 4 பெயர்கள்
#456
** சவட்டல்
சுவைத்தலும் கோறலும் சவட்டல் ஆகும்
** 2 பெயர்கள்
#457
** சவம்
பிணமும் மூங்கிலும் சவம் எனலாகும்
** 2 பெயர்கள்
#458
** சவி
அழகும் மணிக் கோவையும் சுவையும் செவ்வையும்
சாறுவும் காந்தியும் சவி எனலாகும்
** 6 பெயர்கள்
#459
** சாகம்
கொச்சை சிறுகீரை தேக்கு சாகம்
** 3 பெயர்கள்
#460
** சாகினி
கீரைத்திரளும் சேம்பும் சாகினி
** 2 பெயர்கள்
#461
** சாடி
சாடி கோள்மொழி தாழி புடைவை ஆம்
** 3 பெயர்கள்
#462
** சாதகம்
பூதமும் வானம்பாடிப்புள்ளும்
சாதகம் என்பர் சனனமும் அதற்கே
** 3 பெயர்கள்
#463
** சாதம்
சாதம் மெய்யும் சோறும் பிறப்பும் ஆம்
** 3 பெயர்கள்
#464
** சாதி
தேறலும் குலமும் சிறுசண்பகமும்
தேக்கும் பிரம்பும் சாதி என்ப
** 5 பெயர்கள்
#465
** சாபம்
சபித்தலும் வில்லும் சாபம் என்ப
** 2 பெயர்கள்
#466
** சாமம்
யாமமும் வேதமும் இரவும் பச்சையும்
சாமம் என்பர் கறுப்பும் சாற்றும்
** 5 பெயர்கள்
#467
** சாமி
குரவனும் பொன்னும் தலைவனும் முருகனும்
அருகனும் இளமையாட்டியும் சாமி
** 6 பெயர்கள்
#468
** சாம்பல்
அடலை ஒடுங்கல் பழம்பூ இவை சாம்பல்
** 3 பெயர்கள்
#469
** சாரங்கம்
சாதகப்புள்ளும் மானும் சாரங்கம்
** 2 பெயர்கள்
#470
** சாரம்
அதகம் இனிமை மரச்சேகும் சாரம்
** 3 பெயர்கள்
#471
** சாரல்
மலையின்பக்கமும் மருதயாழ்த்திறத்து
ஓர் இசைப்பெயரும் சாரல் என்ப
** 2 பெயர்கள்
#472
** சாரிகை
மண்டிலவரவும் நாகணவாய்ப்புள்ளும்
சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும்
** 4 பெயர்கள்
#473
** சார்ங்கம்
மாயோன் தனுவொடு வில்லும் சார்ங்கம்
** 2 பெயர்கள்
#474
** சாலம்
மதில் ஆச்சாமரம் வலை சாலேகம்
சவையும் குறளைமொழியும் சாலம்
** 6 பெயர்கள்
#475
** சாலி
நெல் பொது வேரி அருந்ததி சாலி
** 3 பெயர்கள்
#476
** சாலேகம்
வாதாயனமும் மலர்மொட்டும் சாலேகம்
** 2 பெயர்கள்
#477
** சாலை
கோயிலும் குதிரைப்பந்தியும் சாலை
** 2 பெயர்கள்
#478
** சாறு
விழவும் குலையும் வேரியும் சாறே
** 3 பெயர்கள்
#479
** சானகி
மூங்கிலும் திருவும் சானகி என்ப
** 2 பெயர்கள்
#480
** சானு
மலையும் மலைப்பக்கமும் முழந்தாளும் சானு
** 3 பெயர்கள்
#481
** சான்றோன்
மிருகசீரிடமும் மிக்கோன்பெயரும்
பெருகிய கதிரின் பெயரும் சான்றோன்
** 3 பெயர்கள்
#482
** சிகண்டி
மயிலும் பாலையாழ்த்திறத்து ஓர் ஓசையும்
அவியும் சிகண்டி ஆம் என விளம்புவர்
** 3 பெயர்கள்
#483
** சிகரி
எலியும் கருநாரையும் இவை சிகரி
** 2 பெயர்கள்
#484
** சிகழிகை
மயிர்முடி வாசிகை கோவை சிகழிகை
** 3 பெயர்கள்
#485
** சிகி
கேதுவும் மயிலும் நெருப்பும் சிகியே
** 3 பெயர்கள்
#486
** சிக்கம்
குடுமியும் உறியும் சீப்பும் சிக்கம்
** 3 பெயர்கள்
#487
** சிதடன்
குருடனும் அறிவில்லோனும் சிதடன்
** 2 பெயர்கள் 487
#488
** சிதம்
சிதம் வான்மீனும் வெளுப்பும் ஞானமும்
ஆகும் சயமுறப்படலும் ஆகும்
** 4 பெயர்கள்
#489
** சிதர்
துவலையும் வண்டும் துணியும் சிதரே
** 3 பெயர்கள்
#490
** சிதலை
செல்லும் துணியும் நோயும் சிதலை
** 3 பெயர்கள் 490
#491
** சித்திரம்
அழகும் காடும் ஆமணக்கும் செய்கோல்
வடிவும் பொய்யை மெய்யாப் புணர்த்தலும்
சிறப்பும் விம்மிதமும் ஓர் பாடலும் சித்திரம்
** 6 பெயர்கள்
#492
** சிந்து
நீரும் தேசமும் யாறும் கடலும்
கூறும் முச்சீரும் குறளும் சிந்து
** 6 பெயர்கள் 492
#493
** சிந்தூரம்
திலகமும் செந்நிறமும் செங்குடையும் புளியும்
யானையும் யானைமுகமும் சிந்தூரம்
** 6 பெயர்கள் 493
#494
** சிமிலி
சிள்வீடும் உறியும் குடுமியும் சிமிலி
** 3 பெயர்கள் 494
#495
** சிமையம்
சிகரமும் மலையும் சிமையம் ஆகும்
** 2 பெயர்கள் 495
#496
** சிரகம்
வட்டிலும் தலைத்திராணமும் சிரகம்
** 2 பெயர்கள் 496
#497
** சிலீமுகம்
அம்பும் முலைக்கண்ணும் அளியும் சிலீமுகம்
** 3 பெயர்கள் 497
#498
** சிலை
வில் மலை ஓர் மரம் சிராவணமும் சிலை
** 4 பெயர்கள் 498
#499
** சில்லி
தேர்உருளும் கீரையும் வட்டமும் சில்லி
** 3 பெயர்கள் 499
#500
** சில்லை
பகண்டையும் சிள்வீடும் கிலுகிலுப்பையும் சில்லை
** 3 பெயர்கள் 500
#501
** செவப்பு
சினமும் சினக்குறிப்பும் செந்நிறமும் செவப்பே
** 3 பெயர்கள் 501
#502
** சிவை
கொல் உலைமூக்கும் கோமான் இடத்து உறை
செல்வி பெயரும் வேரும் சிவை எனல்
** 3 பெயர்கள் 502
#503
** சிறுமை
துக்கமும் நோயும் அற்பமும் சிறுமை
** 3 பெயர்கள்
#504
** சிறை
புள்ளின்இறகும் கரையின்பக்கமும்
ஏரியும் இடமும் காவலும் சிறையே
** 5 பெயர்கள்
#505
** சினை
கருவின் பெயரும் முட்டையும் உறுப்பும்
செழு மரக்கோடும் சினை எனலாகும்
** 4 பெயர்கள் 505
#506
** சீகரம்
மலையும் அதன் சேண் முகடும் சிரமும்
திரையும் துவலையும் கரகமும் சீகரம்
** 6 பெயர்கள்
#507
** சீதம்
குளிரும் புனலும் மேகமும் சீதம்
** 3 பெயர்கள் 507
#508
** சீப்பு
கதவின்தாழும் கங்கமும் சீப்பே
** 2 பெயர்கள்
#509
** சீருள்
செம்பும் ஈயமும் ஆக்கமும் சீருள் ‘
** 3 பெயர்கள் 509
#510
** சீர்
தாளமும் செல்வமும் தண்டாயுதமும்
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல்
** 6 பெயர்கள் 510
#511
** சீவனி
செவ்வழி யாழ்த்திறத்து ஒர் இசைப் பெயரும்
உயிர் தரும் மருந்தும் சீவனி ஆகும்
** 2 பெயர்கள்
#512
** சீவன்
வியாழமும் உயிரும் சீவன் என்ப
** 2 பெயர்கள்
#513
** சுகம்
இன்பமும் கிளியும் சுகம் என விளம்புவர்
** 2 பெயர்கள்
#514
** சுக்கை
மாலையும் வானமீனும் சுக்கை
** 2 பெயர்கள்
#515
** சுசி
சுசியே சுத்தமும் கோடையும் அன்றி
அனலின் பெயர்க்கும் அபிதானம்மே
** 3 பெயர்கள்
#516
** சுடர்
தழலும் விளக்கும் சந்திராதித்தரும்
ஒளியும் சுடர் என்று உரைத்தனர் புலவர்
** 5 பெயர்கள்
#517
** சுடிகை
சுட்டி மணிமுடி உச்சி கடிகை
** 3 பெயர்கள்
#518
** சுண்டன்
சூரனும் சதயநாளும் சுண்டன்
** 2 பெயர்கள்
#519
** சுதை
சுடு சுண்ணச்சாந்தும் புதல்வியும் அமிழ்தும்
கறவாத் தேனும் சுதை எனலாகும்
** 4 பெயர்கள்
#520
** சுந்தரி
சூரனும் சசியும் துர்க்கையும் சுந்தரி
** 3 பெயர்கள்
#521
** சுபம்
தருமம் நன்மை மோக்கமும் சுபமே
** 3 பெயர்கள்
#522
** சும்மை
ஊர்ப் பொதுப் பெயரும் நாடும் சுமையும்
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை
** 5 பெயர்கள்
#523
** சுரிகை
மெய்புகுகருவி பத்திரம் சுரிகை
** 2 பெயர்கள்
#524
** சுரியல்
ஆண் பெண் மயிரும் சுழியும் சுரியல்
** 3 பெயர்கள்
#525
** சுருங்கை
நுழைவாயிலும் நீர்ப்போகியும் சுருங்கை
** 2 பெயர்கள்
#526
** சுருதி
ஒலியும் வேதமும் சுருதி என்ப
** 8 பெயர்கள்
#527
** சுரை
ஆவின்முலையும் அலாபும் தொண்டியும்
‘உள்தொளைப்பெயரும் சுரை என உரைப்பர்
** 4 பெயர்கள்
#528
** சுவர்க்கம்
தெய்வலோகமும் முலையும் சுவர்க்கம்
** 2 பெயர்கள்
#529
** சுவல்
மேடும் பிடரும் தோளின் மேலும்
குரகதக் குசையும் கூறும் சுவலே
** 4 பெயர்கள்
#530
** சுவவு
புத்தேள்நாடும் புள்ளின்மூக்கும்
சுண்டன் பெயரும் சுவவு என்று ஆகும்
** 3 பெயர்கள்
#531
** சூதகம்
தோற்றமும் வாலாமையும் முலைக்கண்ணும் சூதகம்
** 3 பெயர்கள்
#532
** சூரன்
சூரன் என் கிளவி சூரன் பெயரும்
தீரனும் நாயும் தெரிக்கப்படுமே
#533
** மற்றும் சூரன்
அருக்கனும் தீயும் ஆகும் மற்று அதற்கே
** 5 பெயர்கள்
#534
** சூர்
சூர் என் கிளவி அச்சமும் துன்பமும்
பிணியும் தெய்வப்பெயரும் ஆகும்
** 4 பெயர்கள்
#535
** சூழி
சுனையும் கரி முகபடாமும் சூழி
** 2 பெயர்கள்
#536
** செச்சை
வெட்சி வெள்ளாட்டு ஆண் பெயர் செச்சை
** 2 பெயர்கள்
#537
** செடி
பாவம் குணம்இன்மை நாற்றம் புதல் செடி
** 4 பெயர்கள்
#538
** செந்து
ஓசையும் நரகத்து ஒன்றும் நரியும்
சீவனும் அணுவும் செந்து ஆகும்
** 5 பெயர்கள்
#539
** செப்பம்
தெருவு நெஞ்சு நடு செம்மையும் செப்பம்
** 4 பெயர்கள்
#540
** செம்புலம்
பறந்தலை பாலைநிலம் செம்புலமே
** 2 பெயர்கள்
#541
** செம்மல்
பெருமையும் வலியும் பழம்பூவும் ஈசனும்
சிறுவனும் தலைவனும் செம்மல் என்ப
** 6 பெயர்கள்
#542
** செய்யல்
சேறும் ஒழுக்கமும் காவலும் செய்யல்
** 3 பெயர்கள்
#543
** செல்
இடியும் மேகமும் சிதலையும் செல் எனல்
** 3 பெயர்கள்
#544
** செவிவி
முன்பிறந்தாளும் கோள்தாயும் செவிலி
** 2 பெயர்கள்
#545
** செவ்வி
போதும் பருவமும் பொழுதும் செவ்வி
** 3 பெயர்கள்
#546
** செழுமை
வனப்பும் கொழுப்பும் மாட்சிமையும் செழுமை
** 3 பெயர்கள்
#547
** சேக்கை
சயனமும் முலையும் சேக்கை ஆகும்
#548
** மற்றும் சேக்கை
விலங்கின் துயில் இடப் பெயரும் விளம்புவர்
** 3 பெயர்கள்
#549
** சேடன்
இளையோன் பெயரும் அடிமையும் பாங்கனும்
அனந்தனும் ஓர் சாதிப் பெயரும் சேடன்
** 5 பெயர்கள்
#550
** சேடி
சிலதியும் விஞ்சையர் சேரியும் சேடி
** 2 பெயர்கள்
#551
** சேடு
திரட்சி அழகு நன்று பெருமையும் சேடே
** 4 பெயர்கள்
#552
** சேண்
உயரமும் நீளமும் அகலமும் சேணே
** 3 பெயர்கள்
#553
** சேதகம்
சேறும் செந்நிறமும் சேதகம் என்ப
** 2 பெயர்கள்
#554
** சேத்து
செந்நிறப் பெயரும் ஒப்பும் அசைச்சொலும்
உறுப்பும் கருத்தும் ஐயமும் சேத்து எனல்
** 6 பெயர்கள்
#555
** சேய்
குமரனும் செவ்வாய்க்கோளும் செவப்பும்
சிறுவனும் நீளமும் சேய் எனலாகும்
** 5 பெயர்கள்
#556
** சொல்
நெல்லும் புகழும் சொல்லும் சொல்லே
** 3 பெயர்கள்
#557
** சோதி
இரவியும் எனை ஆள் ஈசன் பெயரும்
ஒரு நாள்மீனும் ஒளியும் சோதி
** 4 பெயர்கள்
#558
** சோனை
ஓணமீனும் ஒழியாது சொரியும்
மாரியும் சோனை என்ன வகுப்பார்
** 2 பெயர்கள்
#559
** செளரி
கன்னன் பெயரும் கார்வண்ணன் பெயரும்
சனியின் பெயரும் இயமனும் செளரி
#560
** மற்றும் செளரி
கருதில் ஓர் நதிக்கும் கருதப்படுமே
** 5 பெயர்கள்
** 4. ஞகர வருக்கம்
#561
** ஞாட்பு
சமரும் பாரமும் களமும் ஞாட்பே
** 3 பெயர்கள்
#562
** ஞாளி
நாயும் கள்ளும் ஞாளி என்ப
** 2 பெயர்கள்
#563
** ஞெகிழி
நூபுரம் தீ உறு விறகு தீக்கடைகோல்
ஞெகிழி என்னும் நெறிய ஆகும்
** 3 பெயர்கள்
#564
** ஞெள்ளல்
பள்ளமும் தெருவும் மேன்மையும் ஞெள்ளல்
** 3 பெயர்கள்
** 5. தகர வருக்கம்
#565
** தகடு
ஐமையும் இலையும் தகடு எனலாகும்
** 2 பெயர்கள்
#566
** தகை
அருளும் குணமும் தளர்வும் தகையே
** 3 பெயர்கள்
#567
** தகைமை
அழகும் பண்பும் பெருமையும் தகைமை
** 3 பெயர்கள்
#568
** தடம்
தடாகப் பெயரும் மலைஅடியும் தடம்
** 2 பெயர்கள்
#569
** தடவு
பகுதியும் வளைவும் பெருமையும் தடவு எனல்
** 3 பெயர்கள் 569
#570
** தடி
தனுவும் உலக்கையும் தசையும் உடும்பும்
தண்டும் வயலும் மின்னலும் தடியே
** 7 பெயர்கள்
#571
** தட்டு
நடுவண்தேரும் ஒண் திரிகையும் பரிசையும்
வட்டப்பெயரும் தட்டு எனலாகும்
** 4 பெயர்கள்
#572
** தட்டை
கரடிகை கிளிகடிகருவி சின்னம்
தினைத்தாள் மூங்கில் என்று இவை தட்டை
** 5 பெயர்கள்
#573
** தண்டம்
தந்திரமும் கரிசெல்வழியும் தண்டம்
** 2 பெயர்கள்
#574
** தண்டு
தடியும் தானையும் குழாயும் வீளையும்
மிதுனமும் உலக்கையும் தண்டு எனலாகும்
** 6 பெயர்கள்
#575
** தண்ணடை
நாடும் மருதத்துஊரும் தண்ணடை
** 2 பெயர்கள்
#576
** தண்ணம்
மழுவும் ஒருகண்பறையும் தண்ணம்
** 2 பெயர்கள்
#577
** தண்மை
தாழ்வும் எளிமையும் தண்மை என்ப
** 2 பெயர்கள்
#578
** தத்தை
முன்பிறந்தாளும் கிளியும் தத்தை
** 2 பெயர்கள்
#579
** தமம்
இராகுவும் இருளும் தமம் என இசைப்பர்
** 2 பெயர்கள்
#580
** தமிழ்
இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்
** 2 பெயர்கள்
#581
** தம்பம்
கம்பமும் மெய்புகுகருவியும் தம்பம்
** 2 பெயர்கள்
#582
** தரணி
தலமும் மலையும் தபனனும் தரணி
** 3 பெயர்கள்
#583
** தவிசு
மெத்தையும் தடுக்கும் பீடமும் தவிசே
** 3 பெயர்கள்
#584
** தழல்
கிளிகடிகருவியும் நெருப்பும் தழலே
** 2 பெயர்கள்
#585
** தளம்
தாழியும் சாந்தும் தளம் ஆகும்மே
** 2 பெயர்கள் 585
#586
** தளிமம்
சயனமும் அழகும் மெத்தையும் தளிமம்
** 3 பெயர்கள் 586
#587
** தளை
ஆண்பால்மயிர் தொடர்பு சிலம்பும் தளையே
** 3 பெயர்கள் 587
#588
** தனஞ்சயன்
எவ்வம்இல் மாருதத்து ஒன்றும் நெருப்பும்
சவ்விய சாசியும் தனஞ்சயன் ஆகும்
** 3 பெயர்கள் 588
#589
** தனம்
கோ இளங்கன்றும் முத்திரையும் கொங்கையும்
சாந்தும் பொன்னும் தனம் எனலாகும்
** பெயர்கள் 54
#590
** தனு
யாக்கையும் வில்லும் சிறுமையும் தனுவே
** 3 பெயர்கள் 590
#591
** தன்மம்
புண்ணியமும் வேதமும் தன்மம் ஆகும்
** 2 பெயர்கள் 591
#592
** தன்மை
தன்மையும் பெருமையும் நன்மையும் தன்மை
** 3 பெயர்கள் 592
#593
** தாணு
துங்க மலையும் தூணும் நிலையும்
சங்கரன் பெயரும் தாணு ஆகும்
** 4 பெயர்கள் 593
#594
** தாண்டவம்
தாவலும் ஆடலும் செலுத்தலும் தாண்டவம்
** 3 பெயர்கள் 594
#595
** தாதி
அடிமையும் செவிலியும் பரணியும் தாதி
** 3 பெயர்கள் 595
#596
** தாமம்
மாலையும் மலரும் மணிவடப்பெயரும்
நகரமும் ஒளியும் கயிறும் கொன்றையும்
தாமம் ஆகச் சாற்றினர் புலவர்
** 7 பெயர்கள் 596
#597
** தாரம்
வல்இசைப்பெயரும் வாழ்க்கைத்துணைவியும்
யாழின் நரம்பும் அரும்பண்டமும் வெண்தாதும்
தராவும் நாவும் தாரம் என்ப
** 7 பெயர்கள் 597
#598
** தாரை
வழியும் கண்ணின்மணியும் சுவடும்
உடுவும் நேர்ஓடுதலும் கூர்மையும்
வாத்தியத்து ஒன்றும் வீழ் மழையும் தாரை
** 8 பெயர்கள் 598
#599
** தார்
மாலையும் மலரும் கொடிப்படைப்பெயரும்
கிண்கிணிமாலையும் தார் எனக் கிளத்துப
** 2 பெயர்கள் 599
#600
** தாலம்
ஞாலமும் கூந்தல்கமுகும் நாவும்
கோலிய கலமும் பனையும் தாலம்
** 5 பெயர்கள்
#601
** தாழை
நாளி கேரமும் கைதையும் தாழை
** 2 பெயர்கள் 601
#602
** தாழ்மை
இளிவும் கீழ்மையும் எண்மையும் தாழ்மை
** 3 பெயர்கள் 602
#603
** தாள்
காலின் பெயரும் முயற்சியும் கபாடத்
தாளும் நெல்அரி புல்லும் தாளே
** 4 பெயர்கள்
#604
** தாறு
அளவும் குலையும் தாறு எனலாகும்
** 2 பெயர்கள் 604
#605
** தானம்
தந்தியின் மதமும் வலியும் கொடுத்தலும்
சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம்
** 6 பெயர்கள் 605
#606
** தானை
ஆடையும் படையும் ஆயுதமும் தானை
** 3 பெயர்கள்
#607
** திகிரி
மலையும் சக்கரமும் வட்டப்பெயரும்
தேரும் உருளையும் மூங்கிலும் திகிரி
** 6 பெயர்கள் 607
#608
** திகை
திசையும் சுணங்கும் திகை எனலாகும்
** 2 பெயர்கள்
#609
** திங்கள், மதி
சந்திரன் பெயரும் மாதமும் சாற்றில்
திங்களும் மதியமும் இரண்டும் செப்பும்
** 2 பெயர்கள்
#610
** திட்டை
மேடும் உரலும் வேதிகையும் திட்டை
** 3 பெயர்கள்
#611
** திணை
குலமும் படம் ஒழுக்கமும் திணையே
** 3 பெயர்கள்
#612
** திதி
பக்கமும் காத்தலும் நிலைபேறும் திதியே
** 3 பெயர்கள்
#613
** திரு
திரு இலக்குமியும் செல்வமும் ஆகும்
** 2 பெயர்கள்
#614
** திலம்
எள்ளும் மஞ்சாடியும் திலம் எனப்படுமே
** 2 பெயர்கள்
#615
** தீ
தீங்கும் நெருப்பும் தீ எனலாகும்
** 2 பெயர்கள்
#616
** தீங்கு
தீமையும் குற்றமும் தீங்கு எனலாகும்
** 2 பெயர்கள்
#617
** துகள்
தோமும் நுண்பொடியும் துகள் எனலாகும்
** 2 பெயர்கள்
#618
** துங்கம்
அகலமும் பெருமையும் உயரமும் துங்கம்
** 3 பெயர்கள்
#619
** துஞ்சல்
துஞ்சல் மரணமும் நிலைபேறும் உறக்கமும்
** 3 பெயர்கள்
#620
** துடி
காலநுட்பமும் குமரன்ஆடலும்
ஏலமும் ஏழ்மாதர்நிருத்தமும் சிறுபறையும்
துடி என் கிளவி சொல்லுவர் புலவர்
** 5 பெயர்கள்
#621
** துணங்கறல்
இருளும் விழவும் துணங்கறல் என்ப
** 2 பெயர்கள்
#622
** துணி
சோதியும் சீரையும் துண்டமும் துணி எனல்
** 3 பெயர்கள்
#623
** துண்டம்
துணிபடல் வதனம் மூக்கு சாரை
துண்டம் புள்ளின்மூக்கும் ஆகும்
** 5 பெயர்கள்
#624
** துத்தம்
யாழின் நரம்பும் ஒரு கல் விகற்பமும்
பாலும் ஓர் இசையும் உதரமும் துத்தம்
** 5 பெயர்கள்
#625
** துத்தி
அரவின் பொறியும் ஆங்கு ஒரு புதலும்
துதை தரு சுணங்கும் துத்தி ஆகும்
** 3 பெயர்கள்
#626
** துப்பு
அரக்கும் பவளமும் ஆயுதப்பொதுவும்
துணையும் வலியும் பொலிவும் நெய்யும்
அனுபவமும் தூய்மையும் துப்பு எனலாகும்
** 9 பெயர்கள்
#627
** தும்பி
சுரையும் யானையும் வண்டும் தும்பி
** 3 பெயர்கள்
#628
** துருக்கம்
குங்குமமரமும் காடும் துருக்கம்
** 2 பெயர்கள்
#629
** துருத்தி
தோலும் யாற்றிடைக்குறையும் துருத்தி
** 2 பெயர்கள்
#630
** துரோணம்
சிம்புள்பறவையும் வில்லும் காக்கையும்
தும்பையும் பதக்கும் துரோணம் ஆகும்
** 5 பெயர்கள்
#631
** துவக்கு
தோலும் பிணக்கும் துவக்கு என ‘மொழிப
** 2 பெயர்கள்
#632
** துளி
மழையும் ஆலியும் சிதர்தலோடு
பெண் ஆமையும் துளி என்னப் பேசுவர்
** 4 பெயர்கள்
#633
** துனி
துன்பமும் புலவிநீட்டலும் துனி எனல்
** 2 பெயர்கள்
#634
** தூ
தூயது ஊற்றம் பகை தசையும் தூவே
** 4 பெயர்கள்
#635
** தூக்கு
துலாமும் உறியும் கூத்தும் பாட்டும்
உசாவுதலும் இவை தூக்கு எனலாகும்
** 5 பெயர்கள்
#636
** தூங்கல்
சோம்பும் நிரம்பாத்துயிலும் தூங்கல்
** 2 பெயர்கள்
#637
** தூசு
புடைவையும் யானைப் புரோசைக் கயிறும்
படையினது உறுப்பும் தூசு எனப் பகர்வா
** 3 பெயர்கள்
#638
** தூபம்
புகையின்பெயர் நீர்க்கடம்பு இவை தூபம்
** 2 பெயர்கள்
#639
** தூம்பு
வாயிலும் உள்தொளைப்பொருளும் மூங்கிலும்
மரக்காலும் மதகும் தூம்பு எனலாகும்
** 5 பெயர்கள்
#640
** தூரியம்
துகில் பறை முரசு பேர் எருதும் தூரியம்
#641
** மற்றும் தூரியம்
வாத்தியப்பெயர் பொதிஎருதும் வரையார்
** 6 பெயர்கள்
#642
** தெய்
தெய் என் கிளவி கோறலும் தெய்வமும்
** 2 பெயர்கள்
#643
** தெரிவை
காரிகைப்பெயரும் கன்னிஇராசியும்
தேருங்காலைத் தெரிவை ஆகும்
** 2 பெயர்கள்
#644
** தெவ்
கொள்கையும் பகையும் தெவ் எனலாகும்
** 2 பெயர்கள்
#645
** தென்
தென் இசை வனப்பும் தெற்கும் ஓர் பாடலும்
** 4 பெயர்கள்
#646
** தே
தே என் களவி கொளற்பாடும் தெய்வமும்
** 2 பெயர்கள் 646
#647
** தேசிகம்
திசைச்சொலும் அழகும் காந்தியும் பொன்னும்
ஓர் கூத்தின் பெயரும் தேசிகம் என்ப
** 5 பெயர்கள் 647
#648
** தேசிகன்
தேசாந்தரி குரு வணிகன் தேசிகன்
** 3 பெயர்கள்
#649
** தேம்
தித்திப்பும் தேசமும் நாற்றமும் தேம் எனல்
** 3 பெயர்கள் 649
#650
** தேயம்
காயமும் நாடும் தேயம் என்ப
** 2 பெயர்கள்
#651
** தேயு
அனலும் அருளும் தேயு ஆகும்
** 2 பெயர்கள் 651
#652
** தேர்தல்
ஆராய்தலும் கொள்கையும் தேர்தல் ஆகும்
** 2 பெயர்கள் 652
#653
** தேள்
விருச்சிகஇராசியும் அனுடநாளும்
தெறுக்கால் அதனொடு தேள் என்று ஆகும்
** 3 பெயர்கள் 653
#654
** தொங்கல்
மாலையும் பீலிக்குஞ்சமும் தூக்கமும்
மயிலின்தோகையும் மயிரும் தொங்கல்
** 5 பெயர்கள் 654
#655
** தொடி
கங்கணம் கைவளை ஒரு பலம் தொடியே
** 3 பெயர்கள் 655
#656
** தொடு
மருதநிலமும் வஞ்சனைப்பெயரும்
தோட்டமும் என்று இவை தொடு எனலாகும்
** 3 பெயர்கள் 656
#657
** தொண்டை
யானைத்துதிக்கையும் கோவையும் தொண்டை
** 2 பெயர்கள் 657
#658
** தொத்து
தொழும்பும் மலர்த்திரளும் தொத்து எனப்படுமே
** 2 பெயர்கள் 658
#659
** தொய்யல்
இன்பமும் சேறும் தொய்யல் என்ப
** 2 பெயர்கள் 659
#660
** தொழு
தொழுவமும் இரேவதிநாளும் தொழு எனல்
** 2 பெயர்கள் 660
#661
** தொறு
தொழுவும் ஆன்நிரையும் தொகுதியும் தொறு எனல்
** 3 பெயர்கள் 661
#662
** தோடு
திரளும் பூவின்இதழும் தோடு எனல்
** 2 பெயர்கள் 662
#663
** தோட்டி
கதவும் யானைக்கருவியும் தோட்டி
** 3 பெயர்கள் 663
#664
** தோணி
இரேவதியும் வங்கமும் எயிலினது உறுப்பும்
அம்பும் தோணியும் மிதவையும் ஆகும்
** 5 பெயர்கள் 664
#665
** தோல்
யானையும் வனப்பும் அதளும் தோல்வியும் தோல்
என்று உரைப்பர் தோல்பலகையும் ஆகும்
** 5 பெயர்கள் 665
#666
** தோள்
புயமும் கையும் தோள் எனப் புகல்வர்
** 2 பெயர்கள் 666
#667
** தோற்றம்
வலியும் பிறப்பும் காண்டலும் தோற்றம்
** 3 பெயர்கள் 667
#668
** தோன்றல்
சுதனும் தலைவனும் தோன்றல் ஆகும்
** 2 பெயர்கள் 668
** 6. நகர வருக்கம்
#669
** நகம்
உகிரும் மலையும் நகம் எனலாகும்
** 2 பெயர்கள் 669
#670
** நகை
எயிறும் சிரிப்பும் இன்பமும் ஒளியும்
நகை என் கிளவி நவிலப்பெறுமே
** 4 பெயர்கள் 670
#671
** நடை
வழியும் ஒழுக்கமும் போக்கும் நடையே
** 3 பெயர்கள்
#672
** நந்தி
ஏறும் ஈசனும் நந்தி என்ப
** 2 பெயர்கள்
#673
** நந்து
பறவையும் நத்தையும் சங்கும் நந்து எனல்
** 3 பெயர்கள்
#674
** நயந்தோர்
காதலரும் வேட்டோரும் நயந்தோர் ஆகும்
** 2 பெயர்கள்
#675
** நயம்
நன்றும் இன்பமும் நியாயமும் நயம் எனல்
** 3 பெயர்கள்
#676
** நரந்தம்
நாரத்தையும் கத்தூரியும் நரந்தம்
** 2 பெயர்கள்
#677
** நரை
வெண்ணிறமும் ஆன்ஏறும் கவரிமாவும்
பலிதமும் பறவையில் ஒன்றும் நரையே
** 5 பெயர்கள்
#678
** நலம்
சொல்லிய விருச்சிகஇராசியும் சுகமும்
நல் உபகாரமும் நலம் என்று ஆகும்
** 3 பெயர்கள்
#679
** நவம்
ஒன்பதும் புதுமையும் ஒண் கார்காலமும்
என்பன மூன்றும் நவம் ஆகும்மே
** 3 பெயர்கள்
#680
** நவியம்
மழுவும் கோடாலியும் நவியம் ஆகும்
** 2 பெயர்கள்
#681
** நவிரம்
மலையும் புன்மையும் மயிலும் உச்சியும்
மயிரும் நவிரம் என்ன வகுப்பர்
** 5 பெயர்கள்
#682
** நவிர்
ஆண்பால்மயிரும் தக்கேசிஇசையும்
மருதயாழ்த்திறனும் வாளும் நவிர் எனல்
** 4 பெயர்கள்
#683
** நளி
திரளும் பெருமையும் நளி எனச் சிறக்கும்
** 2 பெயர்கள்
#684
** நறவம்
அனிச்சமரமும் வேரியும் நறவம்
** 2 பெயர்கள்
#685
** நற்றுடி
நாகமரமும் வேரும் நற்றுடி
** 2பெயர்கள்
#686
** நனை
பூவின்மொட்டும் கள்ளும் நனையே
** 2 பெயர்கள்
#687
** நாகம்
நாகம் என் கிளவி நல் இழை ஆடையும்
வேழமும் ஒரு மரப் பெயரும் வெற்பும்
பாம்பும் குரங்கும் விசும்பும் புன்னையும்
கடவுளர் உலகும் காரீயமும் ஆகும்
** 10 பெயர்கள்
#688
** நாஞ்சில்
கலப்பைப்படை எயில்உறுப்பு இவை நாஞ்சில்
** 2 பெயர்கள்
#689
** நாட்டம்
நயனமும் பண்ணும் வாளும் நாட்டம்
** 3 பெயர்கள்
#690
** நாப்பண்
நடுவு நடுவண்தேரும் நாப்பண்
** 2 பெயர்கள்
#691
** நாரி
நறவு பெண் நாணி பன்னாடை நாரி
** 4 பெயர்கள்
#692
** நாவிதன்
கார்த்திகைநாளும் பூரமும் நாவிதன்
** 2 பெயர்கள்
#693
** நாழி
பூரட்டாதிநாளும் உள்தொளையும்
சேரும் கடிகையும் அளவையும் நாழி
** 2 பெயர்கள்
#694
** நானம்
அறிவும் பூசுவன யாவையும் நாற்றமும்
நரையும் நீராட்டும் கத்தூரியும் நானம்
** 6 பெயர்கள்
#695
** நிசி
காஞ்சனம் மஞ்சள் கங்குல் நிசியே
** 3 பெயர்கள்
#696
** நிதம்பம்
மலையின்பக்கமும் அல்குலும் நிதம்பம்
** 2 பெயர்கள்
#697
** நியமம்
நீதியும் கோவிலும் நிச்சயமும் தெருவும்
நகரமும் வீதியும் நியமம் ஆகும்
** 6 பெயர்கள்
#698
** நிரஞ்சனம்
நிரஞ்சனம் வெளியும் நிறைவும் மோக்கமும்
** 3 பெயர்கள்
#699
** நிரியாணம்
யானையின்கடைக்கணும் மரணமும் நிரியாணம்
** 2 பெயர்கள்
#700
** நிருமித்தல்
படைத்தலும் ஆராய்தலும் நிருமித்தல்
** 2 பெயர்கள்
#701
** நிறை
எடைபார்ப்பனவும் அரிவையர் கற்பும்
நிகழ் துலாஇராசியும் நிறை ஆகும்மே
** 3 பெயர்கள்
#702
** நீபம்
ஏதுவும் உத்திரட்டாதிநாளும்
நீர்க்கடம்பின்பெயரும் நீபம் என்ப
** 3 பெயர்கள்
#703
** நீர்
புனலும் குணமும் பூராடமும் நீரே
** 3 பெயர்கள்
#704
** நீலி
நீலி ஒரு மரமும் பாலைக்கிழத்தியும்
கருமைநிறமும் அவுரியும் ஆகும்
** 2 பெயர்கள்
#705
** நீவி
புடைவையும் கொய்சகப்பெயரும் நீவி
** 2 பெயர்கள்
#706
** நுதல்
புருவமும் நெற்றியும் நுதல் ஆகும்மே
** 2 பெயர்கள்
#707
** நெறி
நீதியும் வழியும் ஒழுக்கமும் நெறி எனல்
** 3 பெயர்கள்
#708
** நெற்றி
படையினது உறுப்பும் நுதலும் நெற்றி
** 2 பெயர்கள்
#709
** நேத்திரம்
பட்டும் நயனமும் நேத்திரம் ஆகும்
** 2 பெயர்கள்
#710
** நேயம்
நெய்யும் அன்பும் எண்ணெயும் நேயம்
** 3 பெயர்கள்
#711
** நொச்சி
எயிலும் ஓர் மரமும் சிற்றூரும் நொச்சி
** 3 பெயர்கள்
** 7. பகர வருக்கம்
#712
** பகடு
பெருமை யானை எருது இவை பகடு எனல்
** 3 பெயர்கள்
#713
** பகல்
பிரிவும் நடுவும் பெரும் பகல்பொழுதும்
பகரும் முகூர்த்தமும் பகலும் நாளும்
பாகும் நுகத்தாணியும் தேசும் பகல் என்ப
** 9 பெயர்கள்
#714
** பகவன்
பட்டாரகன் மால் பங்கயன் பரமன்
இரவி அருகன் புத்தனும் பகவன்
** 7 பெயர்கள்
#715
** பகழி
அம்புக்குதையும் அம்பும் பகழி
** 2 பெயர்கள்
#716
** பக்கம்
அருகும் திதியும் இறகும் பக்கம்
** 3 பெயர்கள்
#717
** பங்கம்
சேறும் துகிலும் இடரும் பங்கம்
** 3 பெயர்கள்
#718
** பங்கி
ஆண்பால் அஃறிணைமயிரும் பங்கி
** 2 பெயர்கள்
#719
** பங்கு
பகுதியும் சனியும் முடமும் பங்கே
** 3 பெயர்கள்
#720
** பசு
உயிரும் ஆவும் பசு என உரைப்பர்
** 2 பெயர்கள்
#721
** பச்சை
மரகதப்பெயரும் புதனும் தோலும்
பரிமளப்புதலும் மாலும் பச்சை
** 5 பெயர்கள்
#722
** படங்கு
பெருங்கொடி மேற்கட்டி வானி படங்கு எனல்
** 3 பெயர்கள்
#723
** படம்
கொடியும் கூரையும் கோலக்கிழியும்
பணமும் யானை முகபடாமும் படமே
** 5 பெயர்கள்
#724
** படலிகை
படலிகை என்ப பூந்தட்டும் கைம்மணியும்
வட்டமும் பெரும்பீர்க்கும் வகுக்கும்
** 4 பெயர்கள்
#725
** படலை
படர்தலும் வாசிகைக்கோவையும் படலை
** 2 பெயர்கள்
#726
** படி
அவனியும் அங்கஅடியும் சோபானமும்
பகையும் குணமும் நாழியும் படியே
** 6 பெயர்கள்
#727
** படிறு
பொய்யும் சூதும் களவும் படிறே
** 3 பெயர்கள்
#728
** படு
மரத்தின் குலையும் நீர்நிலையும் மதுவும்
முகரிமைப்பெயரும் படு என மொழிப
** 4 பெயர்கள்
#729
** படை
படைக்கலப்பெயரும் பரிமாக்கலணையும்
படுக்கையும் சேனையும் கலப்பையும் படையே
** 5 பெயர்கள்
#730
** பட்டம்
வழியும் நல்ல பதவியும் ஓடையும்
விலங்கு துயில் இடமும் கவரிமாவும்
பாரதி வகுப்பும் படங்கமும் பட்டம்
** 7 பெயர்கள்
#731
** பட்டி
இடமும் நாயும் தொழுவும் பட்டி
** 3 பெயர்கள்
#732
** பட்டு
சிற்றூர்ப்பெயரும் துகிலும் பட்டே
** 2 பெயர்கள்
#733
** பணவை
பரணும் கழுகும் பணவை என்ப
** 2 பெயர்கள்
#734
** பணி
தொழிலும் தொழில்படுகருவியும் சொல்லும்
பணிதலும் பாம்பும் அணியும் பணியே
** 6 பெயர்கள்
#735
** பணிலம்
சலஞ்சலமும் ஒளி சேர் சங்கும் பணிலம்
** 2 பெயர்கள்
#736
** பணை
முரசின்பெயரும் மூங்கிலின்பெயரும்
மரத்தின்கோடும் மருதநிலமும்
அந்நிலப் பறையும் புரவியின்பந்தியும்
பருத்தலும் வயலும் அரசும் பணை எனல்
** 9 பெயர்கள்
#737
** பண்
பாட்டின்பெயரும் பரிமாக்கலணையும்
நாட்டிய பண்ணும் பண் என நவில்வர்
** 3 பெயர்கள்
#738
** பண்டம்
பண்ணிகாரமும் ஆடகமும் பண்டம்
** 2 பெயர்கள்
#739
** பண்ணவன்
பட்டாரகன் முனி திறலோன் பண்ணவன்
** 3 பெயர்கள்
#740
** பண்ணை
மருதநிலமும் நீர்நிலையும் வயலும்
விலங்கின் துயில் இடமும் மகளிர்விளையாட்டும்
கூட்டமும் சவையும் புதலும் பண்ணை
** 8 பெயர்கள்
#741
** பதங்கம்
புள்பொதுப்பெயரும் விட்டில்பறவையும்
பதங்கம் என்று பகரப்படுமே
** 2 பெயர்கள்
#742
** பதம்
வரிசையும் சோறும் மொழியும் வழியும்
உணவும் செவ்வியும் மறையின் ஓர் உறுப்பும்
பாதமும் பொழுதும் அவிழும் பதம் எனல்
** 10 பெயர்கள்
#743
** பதலை
சைலப்பெயரும் தாழியும் ஓர்கண்
பகுவாய்ப் பறையும் பதலை ஆகும்
** 3 பெயர்கள்
#744
** பதி
தலைவனும் ஊரும் பதி எனத் தகுமே
** 2 பெயர்கள்
#745
** பதுக்கை
பாறையும் மேடும் சிறுதூறும் பதுக்கை
** 3 பெயர்கள்
#746
** பத்திரம்
எழிலும் புள்ளின்இறகும் இலையும்
பகழியும் சரிகையும் பத்திரம் என்ப
** 5 பெயர்கள்
#747
** பத்திரை
பசுவும் திதியும் காளியும் பத்திரை
** 3 பெயர்கள்
#748
** பந்தம்
அழகும் திரட்சியும் இழையும் கிளையும்
தளையும் கைத்தீபமும் பந்தம் என்ப
** 6 பெயர்கள்
#749
** பயசு
பயசு நீரும் பாலும் ஆகும்
** 2 பெயர்கள்
#750
** பயம்
பாலும் நீரும் பயம் எனலாகும்
** 2 பெயர்கள்
#751
** பயம்பு
பகடு படுங்குழி நீர்நிலை பயம்பு எனல்
** 2 பெயர்கள்
#752
** பயல்
பாதியும் சிற்றாளும் பள்ளமும் பயல் எனல்
** 3 பெயர்கள்
#753
** பயிர்
பைங்கூழும் புள்குரலும் பயிர் எனல்
** 2 பெயர்கள்
#754
** பயோதரம்
முலையும் மேகமும் பயோதரம் எனப்படும்
** 3 பெயர்கள்
#755
** பரசு
மழுவும் மூங்கிலும் பரசு என வகுப்பர்
** 2 பெயர்கள்
#756
** பரதர்
தனவைசியரும் கழியரும் பரதர்
** 2 பெயர்கள்
#757
** பரம்
மெய்யும் மெய்புகுகருவியும் பாரமும்
பரிமாக்கலணையும் முன்பும் பரம் எனல்
** 5 பெயர்கள்
#758
** பரவை
பரவைக் கிளவி பரப்பும் கடலும்
திருமகள்ஆடலும் உப்பும் செப்பும்
** 4 பெயர்கள்
#759
** பரி
துலையும் நொடியும் துரகதப்பெயரும்
பெருமையும் செலவும் மாயமும் பரி எனல்
** 6 பெயர்கள்
#760
** பரிகம்
புரிசையுள் உயர்ந்த நிலமும் கணையமும்
பரிகம் என்று பகரப்படுமே
** 2 பெயர்கள்
#761
** பரிதி
இரதஉருளும் இடு பரிவேடமும்
பகலவன்பெயரும் வட்டமும் பரிதி
** 4 பெயர்கள்
#762
** பருவம்
பக்குவமும் பொழுதும் பருவம் ஆகும்
** 2 பெயர்கள்
#763
** பலம்
பழமும் கிழங்கும் காயும் சேனையும்
நிறையும் பேறும் பலம் என்று உரைப்பர்
** 6 பெயர்கள்
#764
** பலாசம்
பச்சைநிறமும் புரசும் பலாசம்
** 2 பெயர்கள்
#765
** பலி
பலிதமும் காகமும் பலி எனப் பகர்வர்
** 2 பெயர்கள்
#766
** பலிதம்
நரையும் காய்க்கும்மரமும் பலிதம்
** 2 பெயர்கள்
#767
** பவனம்
பார் காற்று இராசி மனையும் பவனம்
** 4 பெயர்கள்
#768
** பழங்கண்
துன்பமும் மெலிவும் ஒலியும் பழங்கண்
** 3 பெயர்கள்
#769
** பளிங்கு
பளிங்கே கல்லும் புகரும் பகரும்
** 2 பெயர்கள்
#770
** பள்ளி
தவத்தோர்இடமும் சயனமும் துயிறலும்
நகரமும் சிற்றூரும் விலங்கு துயில் இடமும்
பள்ளி என்பர் கோயிலும் பகரும்
** 7 பெயர்கள் 770
#771
** பறம்பு
மலையும் மடந்தையர்முலையும் பறம்பு எனல்
** 2 பெயர்கள் 771
#772
** பறை
முரசு புள்இறகு மொழி இவை பறை எனல்
** 3 பெயர்கள் 772
#773
** பனி
துன்பமும் நோயும் துகினமும் சீதமும்
அச்சமும் நடுக்கமும் பனி என்று உரைப்பர்
** 6 பெயர்கள் 773
#774
** பாகம்
பாதியும் பிச்சையும் பாகம் என்ப
** 2 பெயர்கள் 774
#775
** பாகல்
பலாவும் காரவல்லியும் பாகல்
** 2 பெயர்கள் 775
#776
** பாகு
சருக்கரைப் பெயரும் குழம்பும் பாகே
** 2 பெயர்கள் 776
#777
** பாசம்
பசாசும் பற்றும் துன்னமும் பாசம்
** 3 பெயர்கள் 777
#778
** பாசனம்
தமரும் தளிகையும் பாசனம் என்ப
** 2 பெயர்கள் 778
#779
** பாடி
முல்லைநிலத்துஊரும் பாசறையும் படையும்
நாடும் நகரமும் பாடி ஆகும்
** 5 பெயர்கள் 779
#780
** பாடு
கேடும் சத்தஒலியும் அருகும்
பாடு என்று உரைக்கும் பெருமையும் பகரும்
** 4 பெயர்கள்ள்
#781
** பாணம்
மழைவண்ணக்குறிஞ்சியும் அம்பும் பாணம்
** 2 பெயர்கள் 781
#782
** பாணி
பதியொடு சேர்ந்த பைம்பொழில்பெயரும்
அழகும் கானமும் அப்பும் பண்டமும்
வழுஇல் பற்றும் நாடும் கையும்
பொழுதின்நீட்டமும் இயமும் பாணி
** 10 பெயர்கள்
#783
** பாண்டில்
வட்டம் தகழி மஞ்சம் ஊர்தி
கஞ்சம் சிரீடம் எருதும் பாண்டில்
** 7 பெயர்கள்
#784
** பாதிரி
ஒரு மரப் பெயரும் மூங்கிலும் பாதிரி
** 2 பெயர்கள்
#785
** பாத்தி
பகுத்தல் சிறுசெய் இல்லமும் பாத்தி
** 3 பெயர்கள்
#786
** பாம்பு
பன்னகப்பெயரும் வரம்பும் பாம்பு எனல்
** 2 பெயர்கள்
#787
** பாரதி
பாரதி வங்கமும் பனுவலாட்டியும் ஆம்
** 2 பெயர்கள்
#788
** பாராவாரம்
மகராலயமும் அதன் கரைப் பெயரும்
பகரில் பாராவாரம் ஆகும்
** 2 பெயர்கள்
#789
** பாரி
காதலிபெயரும் நல் ஆடையும் புவியும்
பரியங்கமும் வள்ளலும் பாரி என்ப
** 5 பெயர்கள்
#790
** பார்
தேரின்பரப்பும் புவியும் பார் எனல்
** 2 பெயர்கள்
#791
** பாலிகை
வதுவைமுளை வட்டம் வாய்இதழ் பாலிகை
** 3 பெயர்கள்
#792
** பால்
பாதியும் இடமும் பயசும் குணமும்
பக்கமும் திசையும் இயல்பும் பாலே
** 7 பெயர்கள்
#793
** பாழி
தாபதர்இருப்பும் விலங்குதுயில்இடமும்
அகலமும் வலியும் நகரும் பாழும்
கல்லின்முழையும் பாழி என்ப
** 7 பெயர்கள் 793
#794
** பாளிதம்
கண்டசருக்கரையும் சோறும் கர்ப்பூரமும்
பட்டுவருக்கமும் பாளிதம் என்ப
** 4 பெயர்கள் 794
#795
** பானல்
கருநிறக்குவளையும் வயலும் பானல்
** 2 பெயர்கள் 795
#796
** பானு
நல் ஒளிப் பெயரும் ஞாயிறும் பானு
** 2 பெயர்கள் 796
#797
** பிசி
பொய்யும் சோறும் அரும் பொருளும் பிசியே
** 3 பெயர்கள் 797
#798
** பிசிதம்
விடக்கும் நீறும் வேம்பும் பிசிதம்
** 2 பெயர்கள் 798
#799
** பிச்சம்
ஆண்பால்மயிரும் வெண்குடைப்பெயரும்
பீலிக்குடையும் பிச்சம் ஆகும்
** 3 பெயர்கள் 799
#800
பிணிமுகம்
புள்பொதுப்பெயரும் மயிலும் பிணிமுகம்
** 2 பெயர்கள் 600
#801
** பிணை
விருப்பம் மான் விலங்கின்பெண்தொடர்பும் பிணை
** 3 பெயர்கள் 801
#802
** பிண்டம்
பிச்சையும் இரட்சியும் பிண்டம் எனப்படும்
** 2 பெயர்கள் 802
#803
** பிண்டி
பிண்ணாக்கும் மாவும் அசோகமும் பிண்டி
** 3 பெயர்கள் 803
#804
** பிதா
சங்கரன்பெயரும் அயனும் தாதையும்
பெருநாரைப்பெயரும் பிதா ஆகும்மே
** 4 பெயர்கள் 804
#805
** பிதிர்
துவலையும் நொடியும் கதையும் பிதிரே
** 3 பெயர்கள்
#806
** பித்திகை
கருமுகையும் சுவர்த்டலமும் பித்திகை
** 2 பெயர்கள்
#807
** பிரசம்
தேனீப்பெயரும் தேனும் பிரசம்
** 2 பெயர்கள்
#808
** பிள்ளை
காரிப்புள்ளும் காரிக்கடவுளும்
பேசின் மகவும் பிள்ளை ஆகும்
** 2 பெயர்கள்
#809
** பிறங்கல்
மிகுதியும் உயர்வும் பெருகலும் பிறங்கல்
#810
** மற்றும் பிறங்கல்
மலையின்பெயரும் மன்னும் அதற்கே
** 4 பெயர்கள்
#811
** பிறப்பு
அச்சமும் பவமும் செறிவும் பிறப்பு எனல்
** 3 பெயர்கள்
#812
** பீடிகை
பீடமும் தட்டும் ஆவணமும் பீடிகை
** 3 பெயர்கள்
#813
** பீதகம்
பொன் இருவேலி பொன்மை பீதகம்
** 3 பெயர்கள்
#814
** பீதம்
பொன்மையும் சாந்தும் பொன்னும் பீதம்
** 3 பெயர்கள்
#815
** பீரு
அச்சம்உற்றோனும் புருவமும் பீரு
** 2 பெயர்கள்
#816
** பீலி
சயிலமும் மயிலின்கலாபமும் சவளமும்
சின்னமும் சிற்றாலவட்டமும் பீலி
** 5 பெயர்கள்
#817
** புகர்
புற்கெனும் நிறம் வெள்ளி குற்றமும் புகரே
** 3 பெயர்கள்
#818
** புகல்
யாக்கை சொல் வெற்றி குதிரும் புகலே
** 4 பெயர்கள்
#819
** புங்கம்
அம்புக்குதை துகில் உயர்ச்சியும் புங்கம்
** 3 பெயர்கள்
#820
** புட்டம்
புடவையும் காக்கையும் புட்டம் என்ப
** 2 பெயர்கள்
#821
** புணரி
புணரி கடலும் கடல்திரையும்மே
** 2 பெயர்கள்
#822
** புணர்ச்சி
கலவியும் இயைபும் புணர்ச்சி என்ப
** 2 பெயர்கள்
#823
** புண்டரீகம்
கமலமும் திசையின் கரிகளில் ஒன்றும்
புலியும் வண்டும் புண்டரீகம்மே
** 4 பெயர்கள்
#824
** புதவு
கதவும் ஒரு விகற்பப்புல்லும் புதவே
** 2 பெயர்கள்
#825
** புத்தன்
போதிக்குஇறைவனும் மாயனும் புத்தன்
** 2 பெயர்கள்
#826
** புத்தேள்
புதுமையும் தெய்வமும் புத்தேள் ஆகும்
** 2 பெயர்கள்
#827
** புந்தி
புதனும் அறிவும் சிந்தையும் புந்தி
** 3 பெயர்கள்
#828
** புரத்தல்
வண்மையும் காத்தலும் வணங்குதலும் புரத்தல்
** 3 பெயர்கள்
#829
** புரவலன்
பூபாலனும் கொடையோனும் புரவலன்
** 2 பெயர்கள்
#830
** புரை
உவமை குற்றம் உயர்வே உள்தொளைப்
பொருள் என்று இன்னவை புரை எனலாகும்
** 4 பெயர்கள்
#831
** புலம்பு
தனிமையும் அச்சமும் சத்தமும் புலம்பே
** 3 பெயர்கள்
#832
** புலவர்
அறிஞரும் சளுக்கியர்பெயரும் அண்டரும்
கவிஞரும் கூத்தரும் கலைவல்லாளரும்
புரந்தரரும் கண்ணாளரும் புலவர்
** 8 பெயர்கள்
#833
** புலி
சிங்கஇராசியும் நால் வகைச் சாந்தத்து
ஒன்றும் வியாக்கிரமும் உரைப்பர் புலியே
** 3 பெயர்கள்
#834
** புலிங்கம்
பொறியும் ஊர்க்குருவியும் புலிங்கம் ஆகும்
** 2 பெயர்கள்
#835
** புல்
அனுடம் ஓர் புதலும் புற்கெனும்நிறமும்
ஒருசார் மரமும் பனையும் புலியும்
புணர்ச்சியும் புல் எனப் புகலப்பெறுமே
** 7 பெயர்கள்
#836
** புவனம்
புவனமும் உலகும் புனலும் புவியும் ஆம்
** 3 பெயர்கள்
#837
** புளகம்
கண்ணாடியும் குமிழ்த்தலும் அன்னமும் புளகம்
** 3 பெயர்கள்
#838
** புள்
பகர் இசை வண்டும் பறவைப்பெயரும்
புகலும் அவிட்டநாளும் புள் எனல்
** 3 பெயர்கள்
#839
** புறணி
குறிஞ்சிநிலமும் முல்லையின்புறமும்
தோலும் மரப்பட்டையும் புறணி என்ப
** 4 பெயர்கள்
#840
** புறம்பணை
குறிஞ்சிநிலமும் முல்லையின்புறமும்
புறம்பணை என்று புகலப்பெறுமே
** 2 பெயர்கள்
#841
** புறவணி
குறிஞ்சிநிலமும் முல்லையும் புறவணி
** 2 பெயர்கள்
#842
** புறவம்
முல்லைநிலமும் காடும் புறவம்
** 2 பெயர்கள்
#843
** புனை
பொலிவும் அழகும் ஒப்பனையும் புனை எனல்
** 3 பெயர்கள்
#844
** புன்கண்
துன்பமும் நோயும் புன்கண் என்ப
** 2 பெயர்கள்
#845
** பூ
அவனியும் வனப்பும் மலரும் கூர்மையும்
பொலிவும் பிறப்பும் பூ எனலாகும்
** 6 பெயர்கள்
#846
** பூகம்
கமுகும் திரட்சியும் கழுகும் பூகம்
** 3 பெயர்கள்
#847
** பூக்கம்
பூகமும் மருதஊரும் பூக்கம்
** 2 பெயர்கள்
#848
** பூட்கை
யானையாளிப்பெயரும் யானையும்
மேற்கோளும் இவை பூட்கை என்ப
** 3 பெயர்கள்
#849
** பூதம்
பரணிநாளும் பல் உயிர்ப்பெயரும்
பாரிடமும் இறந்தகாலமும் ஆலும்
புனிதமும் புவி முதல் ஐந்தும் பூதம்
** 7 பெயர்கள்
#850
** பூதி
நீறும் செல்வமும் நிகழ் துர்க்கந்தமும்
பூதி என்பர் நரகும் புகலும்
** 4 பெயர்கள்
#851
** பூதியம்
புவியும் உடம்பும் செல்வமும் பூதியம்
** 3 பெயர்கள்
#852
** பூரணம்
நிறைவும் ஓர் திதியும் பூரணம் என்ப
** 2 பெயர்கள்
#853
** பூரூவம்
முதுமையும் கிழக்கும் முன்பும் பூருவம்
** 3 பெயர்கள்
#854
** பூவை
நாகணவாய்ப்புள்ளும் காயாவும் பூவை
** 2 பெயர்கள்
#855
** பூழ்தி
கொடுமையும் தசையும் நுண்பொடியும் பூழ்தி
** 3 பெயர்கள்
#856
** பூளை
பொருப்பின் கணவாயும் ஓர் புதலும் பூளை
** 2 பெயர்கள் 856
#857
** பேடு
அலியும் ஊரும் மதன்ஆடலும் பேடு
** 3 பெயர்கள் 857
#858
** பேதை
அறிவிலோனும் எளியனும் பேதை
** 2 பெயர்கள் 858
#859
** பேராளன்
மிக்கோன்பெயரும் மிருகசீரிடமும்
பெற்றி உரைக்கில் பேராளன்னே
** 2 பெயர்கள் 859
#860
** பை
படமும் பச்சையும் அழகும் பையே
** 3 பெயர்கள்
#861
** பொகுட்டு
சேற்று எழு மொக்குளும் மலையும் பங்கயப்
பொன்நிறக் கொட்டையும் பொகுட்டு எனலாகும்
** 3 பெயர்கள் 861
#862
** பொங்கர்
பொருப்பும் மரத்தின்கொம்பும் பொங்கர்
#863
** மற்றும் பொங்கர்
இலவின் பெயரும் இயம்பல் வேண்டும்
** 3 பெயர்கள் 863
#864
** பொங்கல்
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல்
** 3 பெயர்கள் 864
#865
** பொம்மல்
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல்
** 3 பெயர்கள் 865
#866
** பொருநன்
கொற்றவன்பெயரும் தலைவனும் கூத்தனும்
வீரனும் திண்ணியோனும் பொருநன்
** 5 பெயர்கள் 866
#867
** பொழில்
புவியும் சோலையும் பெருமையும் பொழிலே
** 3 பெயர்கள் 867
#868
** பொறி
எழுத்து செல்வம் இலாஞ்சனை திருமகள்
மரக்கலம் யந்திரம் வரி இந்திரியம்
பொடித்துஎழு நுண்சிறுகனல் இவை பொறியே
** 9 பெயர்கள் 868
#869
** பொறை
புவனமும் துறுகலும் பொருப்பும் பொறை எனல்
** 3 பெயர்கள் 869
#870
** பொற்பு
பொலிவும் அழகும் ஒப்பனையும் பொற்பு எனல்
** 3 பெயர்கள் 870
#871
** பொன்
அழகும் ஐவகைஉலோகமும் இரும்பும்
திருவும் வியாழமும் பொன் எனச் செப்புவர்
** 5 பெயர்கள் 871
#872
** போகி
பொன் உலகு ஆளியும் பாம்பும் போகி
** 2 பெயர்கள் 872
#873
** போகில்
பூமொட்டும் நாபியும் புள்பொதுவும் போகில்
** 3 பெயர்கள் 873
#874
** போக்கு
வழியும் இளமரக்கன்றும் குற்றமும்
புகலில் போதலும் நடையும் போக்கே
** 5 பெயர்கள் 874
#875
** போதகம்
அப்பவருக்கமும் யானைக்கன்றும்
இளமையும் மரத்தின்கன்றும் போதகம்
** 2 பெயர்கள் 875
#876
** போந்து
பல்லியும் பனையும் போந்து எனலாகும்
** 2 பெயர்கள் 876
#877
** போர்
சமரமும் நெல்முதல்சும்மையும் சதயமும்
புகலுங்காலைப் போர் எனலாகும்
** 3 பெயர்கள் 877
#878
** போர்வை
தோலும் மீக்கோளும் போர்வை ஆகும்
** 2 பெயர்கள் 878
** 8. மகர வருக்கம்
#879
** மகரம்
மலரின்தாதும் சுறவும் மகரம்
** 2 பெயர்கள் 879
#880
** மஞ்சரி
மலரின்திரளும் தளிரும் மஞ்சரி
** 2 பெயர்கள் 880
#881
** மஞ்சு
எழிலும் பனியும் இளமையும் மேகமும்
வலியும் யானையின்முதுகும் மஞ்சே
** 6 பெயர்கள் 881
#882
** மடங்கல்
மடங்கல் என் கிளவி மறலியும் இடியும்
மடங்கலும் நோயும் யாளியும் ஊழியும்
மடங்கலும் வடவையும் முடிவும் என்ப
** 9 பெயர்கள்
#883
** மடி
பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும்
புலம்பும் கேடும் அடக்கமும் தாழையும்
வயிறும் மடங்கலும் மடி எனலாகும்
** 10 பெயர்கள்
#884
** மடு
மடுவும் நீர்நிலையும் மடு என வகுப்பார்
** 2 பெயர்கள்
#885
** மடை
பூண்கடைப்புணர்வும் சோறும் மடையே
** 2 பெயர்கள் 885
#886
** மட்டு
மதுவும் அளவும் மட்டு எனலாகும்
** 2 பெயர்கள் 886
#887
** மணி
வனப்பும் நவமணியும் மெளத்திகமும் நீலமும்
கருநிறமும் நன்மையும் கண்டையும் மணியே
** 7 பெயர்கள் 887
#888
** மண்டலி
ஒரு பெரும் பாம்பும் பூசையும் மண்டலி
** 2 பெயர்கள் 888
#889
** மண்டிலம்
வட்டமும் நாடும் குதிரையும் மண்டிலம்
** 3 பெயர்கள் 889
#890
** மதலை
மைந்தனும் கொன்றைமரமும் தூணும்
மரக்கலமும் கொடுங்கையும் மதலை ஆகும்
** 5 பெயர்கள் 890
#891
** மதன்
வலியும் அழகும் மலர்க்கணை வேளும்
மாட்சிமைப்பெயரும் மதன் எனலாகும்
** 4 பெயர்கள் 891
#892
** மதி
முன்னிலை அசைச்சொலும் உடுபதியும் உணர்வும்
மன்னிய மாதமும் மதி எனலாகும்
** 4 பெயர்கள் 892
#893
** திங்கள் மதியம்
சந்திரன்பெயரும் மாதமும் சாற்றில்
திங்களும் மதியமும் எனச் சிறந்தனவே
** 3 பெயர்கள் 893
#894
** மது
மது இளவேனிலும் தேனும் கள்ளும் ஆம்
** 3 பெயர்கள் 894
#895
** மதுகம்
அட்டி மதுரமும் இருப்பையும் தராவும்
வண்டும் அழகும் மதுகம் ஆகும்
** 6 பெயர்கள் 895
#896
** மத்திகை
மாலையும் சம்மட்டியும் மத்திகை ஆகும்
** 2 பெயர்கள்
#897
** மந்தரம்
மந்தஓசையும் மேருவும் மந்தரம்
** 2 பெயர்கள்
#898
** மந்தாரம்
தெய்வமரத்தில் ஒன்றும் செம்பரத்தையும்
மந்தாரம் என்று வழங்கப்பெறுமே
** 2 பெயர்கள் 898
#899
** மந்தி
மந்தி பெண்குரங்கும் வண்டும் முசுவும் ஆம்
** 3 பெயர்கள் 899
#900
** மந்திரம்
கோயிலும் குதிரைப்பந்தியும் எண்ணமும்
மதுவும் வீடும் மறையும் மந்திரம்
** 6 பெயர்கள் 900
#901
** மயல்
அவாவின்பெயரும் அலகைப்பெயரும்
மயல் என்று அறைந்தனர் வாய் மொழிப் புலவர்
** 2 பெயர்கள் 901
#902
** மயிலை
மீனின்பொதுவும் மீனஇராசியும்
மலர் இருவாட்சியும் மயிலை ஆகும்
** 3 பெயர்கள் 902
#903
** மரக்கால்
அளவையும் மாயவன்ஆடலும் அன்றி
வளவிய சோதியும் மரக்கால் ஆகும்
** 3 பெயர்கள் 903
#904
** மருள்
பேயும் குறிஞ்சியாழின்திறனும்
மாலும் ஓர் புதலும் மருள் என்று ஆகும்
** 4 பெயர்கள்
#905
** மல்
மாயோன் ஆடலும் வலியும் மல் எனல்
** 2 பெயர்கள்
#906
** மல்லிகை
மாலதி சுடர்நிலைத்தண்டு இவை மல்லிகை
** 2 பெயர்கள்
#907
** மழை
மழையே குளிர்ச்சியும் வருடமும் மேகமும்
** 3 பெயர்கள்
#908
** மள்ளர்
செரு மலை வீரரும் திண்ணியோரும்
மருதநிலமாக்களும் மள்ளர் என்ப
** 3 பெயர்கள்
#909
** மறம்
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும்
வலியும் சேவகமும் வம்பும் மறமே
** 7 பெயர்கள்
#910
** மறலி
அயர்ப்பும் கூற்றும் அழுக்காறும் மறலி
** 3 பெயர்கள்
#911
** மறவர்
வேடர்தம்பெயரும் வீரரும் மறவர்
** 2 பெயர்கள்
#912
** மறவி
மறப்பும் அழுக்காறும் மறவி ஆகும்
** 2 பெயர்கள்
#913
** மனவு
மணிப்பெயரும் அக்குமணியும் மனவே
** 2 பெயர்கள்
#914
** மன்
மறையும் உத்திரட்டாதியும் அரசனும் நிலையும்
மிகுதியும் ஆக்கமும் ஒழிவும் உரைசெயில்
இடைச்சொலும் மன் என்று உரைக்கும்
** 8 பெயர்கள்
#915
** மன்றம்
வாய்மை வெளி வாசம் பொதுவும் மன்றம்
** 4 பெயர்கள்
#916
** மன்றல்
பாலையாழ்இசையும் கடிப் பரிமளமும்
வதுவையும் என்று இவை மன்றல் ஆகும்
** 3 பெயர்கள் 916
#917
** மன்னல்
பீடும் வலியும் அடுப்பதும் மன்னல்
** 3 பெயர்கள் 917
#918
** மன்னன்
அரசனும் உத்திரட்டாதியும் மன்னன்
** 2 பெயர்கள் 918
#919
** மா
ஒரு மரப்பெயரும் அழைத்தலும் கறுப்பும்
குதிரையும் விலங்கும் திருவும் வனப்பும்
வலியும் வண்டும் பிண்டியும் செல்வமும்
நிறனும் பெருமையும் நிலனும் ஓர் இலக்கமும்
மருவிய பெயரும் மா எனலாகும்
** 15 பெயர்கள் 919
#920
** குற்றமும் மேகமும் அழுக்கும் மாசே
** 3 பெயர்கள் 920
#921
** மாடம்
மனையும் உழுந்தும் மாடம் ஆகும்
** 2 பெயர்கள் 921
#922
** மாதா
அரிவையரும் அழகும் காதலும் மாதர்
** 3 பெயர்கள் 922
#923
** மாதவம்
மதுவும் நல் தவமும் இளவேனிலும் மாதவம்
** 3 பெயர்கள் 923
#924
** மாதா
வாணியும் கெளரியும் அன்னையும் மாதா
** 3 பெயர்கள் 924
#925
** மாதிரம்
மலையும் திசையும் யானையும் மாதிரம்
** 3 பெயர்கள் 928
#926
** மாந்தல்
உண்டலும் குடித்தலும் இறத்தலும் மாந்தல்
** 3 பெயர்கள் 926
#927
** மாரி
மழையும் முகிலும் மரணமும் மதுவும்
வடுகியும் நோயும் ஓர் புள்ளும் மாரி
** 7 பெயர்கள் 927
#928
** மார்க்கம்
வழியும் சமயமும் தெருவும் மார்க்கம்
** 3 பெயர்கள் 928
#929
** மாலதி
மாலதி சுடர்நிலைத்தண்டும் நிருவாணமும்
** 2 பெயர்கள் 929
#930
** மாலை
இரவும் தொடுத்த தொடையலும் அந்தியும்
வரன்முறை ஒழுக்கமும் இயல்பும் மாலை
** 6 பெயர்கள் 930
#931
** மால்
வாயு கருமை பெருமை மதிமகன்
மாயோன் மேகம் மயக்கம் வேட்கை
மால் என்று உரைப்பர் கண்ணேணியும் ஆகும்
** 9 பெயர்கள் 931
#932
** மாழை
அழகு திரட்சி ஆடகம் மாமரம்
ஓலை மடமை உலோகக்கட்டி
புளிமா மாழை ஆகும் என்ப
** 8 பெயர்கள் 932
#933
** மான்
விலங்கின்பெயரும் வெற்பும் குதிரையும்
மகரஇராசியும் உழையும் மான் எனல்
** 5 பெயர்கள் 933
#934
** மிசை
மேடும் மொழியும் மிசை என விளம்புவர்
** 2 பெயர்கள் 934
#935
** மிச்சை
மிச்சை பொய்த்தல் அஞ்ஞானமும் மிடித்தலும்
** 3 பெயர்கள் 935
#936
** மீளி
பெருமையும் வலியும் தலைவன்பெயரும்
விறலோன்பெயரும் மீளி ஆகும்
** 4 பெயர்கள் 936
#937
** மீன்
மச்சப்பெயரும் வானத்து உடுவும்
சித்திரைநாளும் மீன் எனச் செப்புவர்
** 3 பெயர்கள் 937
#938
** முகில்
திரளும் மேகமும் முகில் எனலாகும்
** 2 பெயர்கள்
#939
** முடங்கல்
மூங்கிலும் தாழையும் முடங்கல் என்ப
** 2 பெயர்கள் 939
#940
** முடலை
உண்டையும் திரட்சியும் பெருமையும் முடலை
** 3 பெயர்கள்
#941
** முண்டகம்
தாமரைப்பெயரும் தாழையும் கள்ளும்
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம்
** 5 பெயர்கள்
#942
** முதலை
முதலை செங்கிடையும் முருந்தும் இடங்கரும்
** 3 பெயர்கள்
#943
** முதுமை
முற்றுதல்பெயரும் பழமையும் முதுமை
** 2 பெயர்கள்
#944
** முரசு
உத்திரட்டாதியும் பறையும் முரசு எனல்
** 2 பெயர்கள்
#945
** முரண்
பகையும் வலியும் முரண் எனப் பகர்வர்
** 2 பெயர்கள்
#946
** முரம்பு
பரல் அடுத்த நிலமும் பாறையும் முரம்பே
** 2 பெயர்கள்
#947
** முருகு
இளமையும் நாற்றமும் கள்ளும் விழவும்
முருகவேளும் அழகும் முருகே
** 6 பெயர்கள்
#948
** முளரி
கமலமும் நுட்பமும் காடும் நெருப்பும்
முளரி என்ன மொழிதந்திசினோரே
** 4 பெயர்கள்
#949
** முளை
மூங்கிலும் சுதனும் அங்குரிப்பும் முளையே
** 3 பெயர்கள்
#950
** முறம்
விசாகமும் சுளகும் விளம்புவர் முறமே
** 2 பெயர்கள்
#951
** முறிகுளம்
அணை முறி குளமும் பூராடமும் முறிகுளம்
** 2 பெயர்கள்
#952
** முறுவல்
பல்லும் சிரிப்பும் முறுவல் என்ப
** 2 பெயர்கள்
#953
** முறை
கோசமும் பழமையும் ஊழும் கூட்டும்
ஆர்ப்பும் முறைமையும் முறை எனலாகும்
** 6 பெயர்கள்
#954
** முனி
இருடியும் வில்லும் யானைக்கன்றும்
முனி என்று உரைப்ப அகத்தியும் மொழிப
** 4 பெயர்கள்
#955
** முனை
பகையும் வேண்டாமையும் வினையும் முனையே
** 3 பெயர்கள்
#956
** முன்னம்
சீக்கிரி மரமும் முற்காலமும் சிங்கமும்
முன்னம் என்று மொழியப் பெறுமே
** 3 பெயர்கள்
#957
** மூசல்
மொய்த்தலும் மரணமும் மூசல் என்ப
** 2 பெயர்கள்
#958
** மூரல்
முறுவலும் பல்லும் சோறும் மூரல்
** 3 பெயர்கள்
#959
** மூரி
எருமையும் எருதும் பெருமையும் சோம்பும்
வலியும் முரணும் நெரிவும் மூரி
** 7 பெயர்கள்
#960
** மூலம்
ஒரு நாள்மீனும் ஏதுவும் கிழங்கும்
மூலம் என்று மொழியப்பெறுமே
** 3 பெயர்கள்
#961
** மெத்தை
சட்டை அணை இவை மெத்தை ஆகும்
** 3 பெயர்கள்
#962
** மெய்
யாக்கையும் வாய்மையும் மெய் எனலாகும்
** 2 பெயர்கள்
#963
** மேடம்
மெய்புகுகருவியும் யாடும் மேடம்
** 2 பெயர்கள்
#964
** மேடு
உயரமும் பெருமையும் வயிறும் மேடே
** 3 பெயர்கள்
#965
** மேதை
புதனும் அறிஞனும் நரம்பும் மேதை
** 3 பெயர்கள்
#966
** மேல்
மேற்கும் உம்பரும் மேன்மையும் மேலே
** 3 பெயர்கள்
#967
** மை
அஞ்சனம் குற்றம் கருநிறம் மலடு
மஞ்சும் யாடும் மை எனலாகும்
** 6 பெயர்கள்
#968
** மொக்குள்
பூவின்மொட்டும் குமிழியும் மொக்குள்
** 2 பெயர்கள்
#969
** மொய்
திரளும் யானையும் செருக்களமும் மொய்
** 3 பெயர்கள்
#970
** மொய்ம்பு
வலியும் தோளும் மொய்ம்பு எனலாகும்
** 2 பெயர்கள்
#971
** மோடு
உயரமும் பெருமையும் வயிறும் மோடு எனல்
** 3 பெயர்கள்
#972
** மெளவல்
வனமல்லிகையும் குளிர்வாரமும் மெளவல்
** 2 பெயர்கள்
** 9. யகர வருக்கம்
#973
** யாணா
கண்ணாளர்பெயரும் புதுமையும் அழகும்
நன்றும் யாணர் எனும் பெயர் நவில்வர்
** 4 பெயர்கள்
#974
** யாமம்
இரவும் சாமமும் தெற்கும் யாமம்
** 3 பெயர்கள்
#975
** யாழ்
மிதுனஇராசியும் வீணைக்கருவியும்
அசுபதிநாளும் யாழ் எனலாகும்
** 3 பெயர்கள்
#976
** யூகம்
உடற்குறை கருங்குரங்கு ஓர்தல் கோட்டான்
உட்பொருள் தருக்கம் யூகம் ஆகும்
** 6 பெயர்கள்
#977
** யூபம்
வேள்வித்தறி கவந்தம் படைஉறுப்பும் யூபம்
** 3 பெயர்கள்
** 10. வகர வருக்கம்
#978
** வங்கம்
வழுதுணைப்பெயரும் வெள்ளியும் ஈயமும்
வங்கம் என்ப நாவாயும் ஆகும்
** 4 பெயர்கள்
#979
** வசதி
நகரமும் மனையும் தாவும் வசதி
** 3 பெயர்கள்
#980
** வசந்தம்
வசந்தம் சல்லாபமும் சித்திரைமாதமும்
** 2 பெயர்கள்
#981
** வசி
வசியே கூர்மை வசி வாள் வடுவும் ஆம்
** 4 பெயர்கள்
#982
** வசு
தேவர் கோதனம் தீ பொன்னும் வசு
** 4 பெயர்கள்
#983
** வஞ்சம்
வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம்
** 3 பெயர்கள்
#984
** வஞ்சனை
மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை
** 3 பெயர்கள்
#985
** வஞ்சி
போரின் மேல் செலவும் புதலும் மங்கையரும்
பாவில் ஓர் பாவும் ஓர் பதிப்பெயரும்
மாற்றரும் குடையும் வஞ்சி ஆகும்
#986
** மற்றும் வஞ்சி
மருதயாழ்த்திறத்து ஓர் ஓசையும் வகுப்பர்
** 7 பெயர்கள்
#987
** வடகம்
அத்தவாளப்பட்டும் அதளும் வடகம்
** 2 பெயர்கள்
#988
** வடவை
வடவாஅனலும் மடநடைப் பிடியும்
எருமைப்பெயரும் குதிரையும் வடவை
** 4 பெயர்கள்
#989
** வடு
தழும்பும் செம்பும் தவறும் வண்டும்
வடு என உரைக்கும் மரபு ஆகும்மே
** 4 பெயர்கள் 989
#990
** வடுகு
மருதயாழ் ஒர் குலம் இந்தளமும் வடுகே
** 3 பெயர்கள் 990
#991
** வட்டம்
பரிசை பாராவளையம் கைம்மணி
திரிகை வலயம் சால் ஊர்கோள் வட்டம்
** 7 பெயர்கள் 991
#992
** வண்டு
குருநாளும் குற்றமும் அளியும் கைவளையும்
நூலும் அம்பும் சங்கும் வண்டு எனல்
** 7 பெயர்கள் 992
#993
** வண்ணம்
வனப்பும் சந்தமும் குணமும் வண்ணம்
** 3 பெயர்கள் 993
#994
** வண்மை
வலி வளம் கொடை வாய்மை வண்மை
** 4 பெயர்கள் 994
#995
** வதுவை
வதுவை கலியாணமும் மணமும் ஆகும்
** 2 பெயர்கள் 995
#996
** வம்பு
மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும்
முலையின்கச்சும் படிறும் வம்பே
** பெயர்கள் 996
#997
** வயம்
வலியும் நீரும் புள்ளும் வயம் எனல்
** 3 பெயர்கள் 997
#998
** வயல்
வெளியும் செய்யும் வயல் என்று ஆகும்
** 2 பெயர்கள் 998
#999
** வயவன்
திண்ணியோன்பெயரும் வேட்டோன்பெயரும்
வலியோன்பெயரும் வயவன் என்ப
** 3 பெயர்கள் 999
#1000
** வயா
வருத்தமும் கருவும் விருப்பமும் வயாவே
** 3 பெயர்கள் 1000
#1001
** வயிரம்
தணியா முனிவும் கூர்மையும் மணியும்
வச்சிரப்பெயரும் காழும் வயிரம்
** 5 பெயர்கள்
#!002
** வரி
இசையும் பாட்டும் எழுத்தும் இறையும்
நெல்லும் கடலும் நிறமும் சுணங்கும்
சந்தித்தெருவும் கடனும் வரியே
** 10 பெயர்கள்
#1003
** வருடம்
மழையும் ஆண்டும் வருடம் ஆகும்
** 2 பெயர்கள்
#1004
** வருணம்
குலமும் நீரும் அழகும் வருணம்
** 3 பெயர்கள்
#1005
** வரை
அளவும் கையிறையும் மலையும் மூங்கிலும்
வரைவும் எழுத்தும் வரை எனலாகும்
** 6 பெயர்கள்
#1006
** வலம்புரி
நந்தியாவர்த்தமும் சங்கும் வலம்புரி
** 2 பெயர்கள்
#1007
** வலவை
வஞ்சப்பெண்ணும் வல்லோனும் வலவை
** 2 பெயர்கள்
#1008
** வலி
வலியே ஒலியும் வலியோனும் வஞ்சமும்
** 3 பெயர்கள்
#1009
** வலித்தல்
வலித்தல் என்பது நிணத்தலும் பேசலும்
** 2 பெயர்கள்
#1010
** வழங்கல்
வண்மையும் உலாவுதலும் வழங்கல் என்ப
** 2 பெயர்கள்
#1011
** வழி
மரபும் ஒழுக்கமும் திரட்சியும் மகாரும்
இடமும் பின்னும் முறைமையும் வழியே
** 7 பெயர்கள்
#1012
** வளம்
மாட்சிமை கொழுப்பும் தகுதி வளம் எனல்
** 3 பெயர்கள்
#1013
** வள்
வலிப் பற்றிரும்பும் வாளும் காதும்
வலியும் கூர்மையும் வள் எனலாகும்
** 5 பெயர்கள்
#1014
** வறிது
சிறுமை பயன்இல்சொல் அறியாமை வறிதே
#1015
** மற்றும் வறிது
இளிமை இயலாமையும் வறிது எனலாகும்
** 5 பெயர்கள்
#1016
** வன்னி
ஒரு மரப் பெயரும் கிளியும் நெருப்பும்
பிரமசாரிப்பெயரும் வன்னி
** 4 பெயர்கள்
#1017
** வாசம்
வாசம் இருப்பிடமும் மலரின் மணமும்
புள்ளின்இறகும் புடைவையும் புகலும்
** 4 பெயர்கள்
#1018
** வாசி
வங்கியம் குதிரை வாசி என்ப
** 2 பெயர்கள்
#1019
** வாடை
வடகாற்றும் சேரியும் ஓர் மருந்தும் வாடை
** 3 பெயர்கள்
#1020
** வாணி
பாரதிப் பெயரும் பகழிப் பெயரும்
வார்த்தையும் ஓர் கூத்தும் வாணி ஆகும்
** 4 பெயர்கள்
#1021
** வாமனம்
குறளும் திசைநிலைக்குஞ்சரத்து ஒன்றும்
வரும் ஒரு நூலும் மாலும் வாமனம்
** 2 பெயர்கள்
#1022
** வாயில்
வாய்புலம் திறம் கரணம் துவாரமும் வாயில்
** 4 பெயர்கள்
#1023
** வாரணம்
யானையும் கோழியும் சங்கும் வாரணம்
#1024
** மற்றும் வாரணம்
தடை கடல் மெய்புகுகருவியும் சாற்றுவர்
** 6 பெயர்கள்
#1025
** வாரம்
ஆர்கலி கிழமைக்கூறுபாடு அன்பு
புனல்கரை மலைஅடிப்பகுதியும் வாரம்
** 5 பெயர்கள்
#1026
** வாரி
கடலும் வெள்ளமும் பகுதியும் விளைவும்
சுற்றும் கதவும் வருவாயும் நீரும்
வட்டையும் மதிலும் வாரி ஆமே
** 10 பெயர்கள் 1026
#1027
** வாருணம்
மறி கடல்பெயரும் மேற்கும் வாருணம்
** 2 பெயர்கள் 1027
#1028
** வால்
வெண்ணிறம் பெருமை தூய் தோகையும் வாலே
** 4 பெயர்கள் 1028
#1029
** வாள்
வசியும் ஒளியும் வாள் எனலாகும்
** 2 பெயர்கள் 1029
#1030
** வானம்
வானம் மழையும் மரத்தின் கனியும்
மாகமும் உலர்மரப்பெயரும் வரையார்
** 4 பெயர்கள் 1030
#1031
** வானி
வான் ஓர் நதியும் வளர் துகில்கொடியும்
சேனையும் மேற்கட்டியும் செப்பல் வேண்டும்
** 4 பெயர்கள் 1031
#1032
** வான்
வான் என் கிளவி வலியும் பெருமையும்
மேகமும் ஆகாயமும் பெருமழையும் இடைச்சொல்லும்
ஓர் மரம் என்றும் ஓதுவர் புலவர்
** 7 பெயர்கள் 1032
#1033
** விசும்பு
விண்ணும் சுவர்க்கமும் மேகமும் விசும்பே
#1034
** மற்றும் விசும்பு
திசையின்பெயரும் செப்புவர் அதற்கே
** 4 பெயர்கள் 1034
#1035
** விசையம்
சருக்கரைப்பெயரும் தபனமண்டிலமும்
வெற்றிப்பெயரும் விசையம் ஆகும்
** 3 பெயர்கள் 1035
#1036
** விடங்கம்
வீதிக்கொடியும் வீட்டின் முகடும்
அழகும் கொடுங்கையும் ஆண்மையும் விடங்கம்
** 5 பெயர்கள் 1036
#1037
** விடம்
மரப்பொதுப்பெயரும் நஞ்சும் தேளும் விடம்
** 3 பெயர்கள் 1037
#1038
** விடர்
கல்வளைப் பெயரும் கமரும் விடரே
** 2 பெயர்கள் 1038
#1039
** விடலை
திண்ணியோனும் தலைவனும் பாலைஇறைவனும்
காமத்துறைவனும் விடலை
** 4 பெயர்கள் 1039
#1040
** விடை
ஏறும் எருதும் எதிர்மொழியும் விடை
** 3 பெயர்கள் 1040
#1041
** விண்டு
மாயவன் காற்று மலையே மூங்கில்
மேகம் இவ் ஐந்தும் விண்டு எனலாகும்
** 5 பெயர்கள் 1041
#1042
** விதப்பு
விபரமும் நடுக்கமும் மிகுதியும் விதப்பே
** 3 பெயர்கள் 1042
#1043
** விதவை
சோறும் கைம்பெண்ணும் விதவை ஆகும்
** 2 பெயர்கள் 1043
#1044
** விதர்ப்பு
மிகுதியும் நடுக்கமும் விதர்ப்பு என விளம்புவர்
** 2 பெயர்கள் 1044
#1045
** விபுலம்
விரிவும் பெருமையும் விபுலம் என்ப
** 2 பெயர்கள் 1045
#1046
** விபூதி
நிரயத்தில் ஒன்றும் நீறும் கொடுமையும்
தசையும் குற்றமும் செல்வமும் விபூதி
** 6 பெயர்கள் 1046
#1047
** விம்மல்
பொருமலும் அழுதலும் ஒலித்தலும் விம்மல்
** 3 பெயர்கள் 1047
#1048
** வியப்பு
சினமும் சினக்குறிப்பும் அதிசயமும் வியப்பே
** 3 பெயர்கள் 1048
#1049
** வியல்
அகலமும் பெருமையும் காடும் வியலே
** 3 பெயர்கள் 1049
#1050
** விலோதம்
மங்கையர்மயிர்ச்சுருள் பதாகையும் விலோதம்
** 2 பெயர்கள் 1050
#1051
** வில்
மூலநாள் ஒளி கோதண்டம் வில் எனல்
** 3 பெயர்கள்
#1052
** விழவு
மிதுனஇராசியும் உற்சவமும் விழவே
** 2 பெயர்கள் 1052
#1053
** விழைச்சு
இளமையும் கலவியும் விழைச்சு எனலாகும்
** 2 பெயர்கள் 1053
#1054
** விழைந்தோர்
வேட்டோறும் காதலோரும் விழைந்தோர்
** 2 பெயர்கள் 1054
#1055
** விளர்
இளமையும் கொழுப்பும் விளர் என்று இசைக்கும்
** 2 பெயர்கள் 1055
#1056
** விள
விளாமரம் இளமை கமர் இவை விள எனல்
** 3 பெயர்கள் 1056
#1057
** விறப்பு
அச்சமும் பலமும் செறிவும் விறப்பு எனல்
** 3 பெயர்கள் 1057
#1058
** விறல்
வென்றியும் வலிமையும் விறல் ஆகும்மே
** 2 பெயர்கள் 1058
#1059
** வீ
பூவும் ஒழிவும் நீக்கமும் மடிவும்
புள்ளின்பெயரும் சாவும் வீயே
** 6 பெயர்கள் 1059
#1060
** வீசல்
கொடுத்தலும் எறிதலும் வீசல் என்ப
** 2 பெயர்கள் 1060
#1061
** வீதி
நேர்ஓடுதலும் தெருவும் வீதி
** 2 பெயர்கள்
#1062
** வீரை
ஒரு மரப்பெயரும் உறு துயர்ப்பெயரும்
விரி கடல்பெயரும் வீரை ஆகும்
** 3 பெயர்கள்
#1063
** வெடி
நறைபடு புகையும் அச்சமும் அன்றி
வெளியின்பெயரும் வெடி என்றாகும்
** 3 பெயர்கள் 1063
#1064
** வெதிர்
செவிடும் மூங்கிலும் வெதிர் என மொழிப
** 2 பெயர்கள் 1064
#1065
** வெளில்
யானைத்தறியும் அணிலும் பாடையும்
தயிர்கடைதறியும் வெளில் எனச் சாற்றும்
** 4 பெயர்கள் 1065
#1066
** வெள்ளம்
ஈரமும் கடலும் கடலின் திரையும்
நீரின் பெருக்கும் ஒர் எண்ணும் வெள்ளம்
** 5 பெயர்கள் 1066
#1067
** வெள்ளி
புகரும் இரசதமும் புகலும் வெள்ளி
** 2 பெயர்கள்
#1068
** வெள்ளை
பலதேவனும் வெண்பாவும் வெளிறும்
வெள்ளை வெள்ளாட்டுமறியும் மதுவும்
சங்கும் வெள்ளை என்றும் சாற்றும்
** 7 பெயர்கள் 1068
#1069
** வெறி
அணங்குஆட்டும் வட்டமும் அச்சமும் பேயும்
மணக்கும் நாற்றமும் மாற்றரும் கலக்கமும்
விளம்பிய நோயும் யாடும் வெறி எனல்
** 8 பெயர்கள் 1069
#1070
** வெறுக்கை
செல்வமும் பொன்னும் வெறுக்கை ஆகும்
** 2 பெயர்கள் 1070
#1071
** வேங்கை
புலியும் ஓர் மரமும் பொன்னும் வேங்கை
** 3 பெயர்கள் 1071
#1072
** வேசரி
கழுதையும் கோவேறுகழுதையும் வேசரி
** 2 பெயர்கள் 1072
#1073
** வேட்டுவன்
மகம் ஓர் குளவி மறவனும் வேட்டுவன்
** 3 பெயர்கள் 1073
#1074
** வேணி
வேணி சடையும் நதியும் விசும்பும் ஆம்
** 3 பெயர்கள் 1074
#1075
** வேணு
உள்தொளைப்பொருளும் மூங்கிலும் வேணு
** 2 பெயர்கள் 1075
#1076
** வேதிகை
பலகையும் குறடும் திண்ணையும் வேதிகை
** 3 பெயர்கள் 1076
#1077
** வேய்
ஒற்றும் மூங்கிலும் உள்தொளையும் வேயே
** 3 பெயர்கள் 1077
#1078
** வேய்தல்
வேயுளும் சூடுதலும் வேய்தல் என்ப
** 2 பெயர்கள் 1078
#1079
** வேலன்
வெறியாட்டாளனும் குமரனும் வேலன்
** 2 பெயர்கள் 1079
#1080
** வேலி
ஊரும் அரணும் காவலும் நிலமும்
மேவிய வயலும் வேலி ஆகும்
** 5 பெயர்கள் 1080
#1081
** வேலை
கடலும் கடலின்கரையும் பொழுதும்
வினையும் காலையும் வேலை என்று ஆகும்
** 5 பெயர்கள் 1081
#1082
** வேல்
படைக்கலமும் ஞாங்கரும் ஓர் மரமும் வேலே
** பெயர்கள் 1082
#1083
** வேழம்
குஞ்சரமும் கொறுக்கைச்சிப்பெயரும்
இசையும் கரும்பும் மூங்கிலும் வேழம்
** 5 பெயர்கள் 1083
#1084
** வேளாண்மை
மெய்ம்மையும் கொடையும் வேளாண்மை ஆகும்
** 2 பெயர்கள் 1084
#1085
** வேளாளர்
சதுர்த்தரும் கொடைவள்ளலும் வேளாளர்
** 2 பெயர்கள் 1085
#1086
** வேள்
தாரகாரியும் சளுக்கியர்வேந்தனும்
வேனிலாளனும் வேள் எனலாகும்
** 3 பெயர்கள் 1086
#1087
** வேள்வி
அருச்சனை அளித்தல் ஆதி எழும் சனி
வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி
** 5 பெயர்கள் 1087
#1088
** வேனில்
பொலிவும் கொடையும் ஓர் அழகும் ஒப்பனையும்
பேயின்தேரும் வேனில் ஆகும்
** 5 பெயர்கள் 1088
#1089
** வை
வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல்
** 3 பெயர்கள் 1089
#1090
** வைகல்
தினமும் தங்கலும் தெரியின் வைகல்
** 2 பெயர்கள் 1090
#1091
** வையம்
உரோகிணிநாளும் பாரும் தேரும்
ஏறும் ஊர்தியும் வையம் எனப்படும்
** 5 பெயர்கள் 1091
** பத்தாவது ஒரு சொல் பல் பொருள் வகை
** முற்றிற்று
**

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)